Karthikeyan Fastura :
கொரோனா
இறப்புக்கு அரசு கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை பற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமீபத்திய அறிக்கை பெரும் விவாதத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஒரு பொருளாதார ஆலோசகராக எனது பார்வையில் இதில் எந்த பிழையும் இருப்பதாக தெரியவில்லை. கொரோனாவை பொருத்தவரை மக்கள் மீது உள்ள தவறுகளை விட அரசாங்கத்தின் தவறுகள் அதிகமாகவும் முதன்மையாகவும் உள்ளது.
ஒரு அரசாங்கம் இப்படியான ஒரு வைரல் ஃபீவர் உலகமெங்கும் பரவி வருகிறது என்று அறியும்போது விமான நிலையங்களில் துறைமுகங்களில் தேசத்தின் எல்லைகளில் உள்ள சாவடிகளில் மக்களின் போக்குவரத்தை குறைத்து இருக்க வேண்டும். அல்லது சிறிது காலத்திற்கு முற்றிலுமாக போக்குவரத்தை இன்று செய்ததைப் போல தடை செய்திருக்க வேண்டும். மேலும் அங்கேயே ஒரு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்து கண்காணிக்க வேண்டும்.










































