சனி, 12 நவம்பர், 2011

பாரதிராஜா பட விவகாரம் .பார்த்திபனுக்கு பதிலாக அமீர் நடிக்கிறார்


Parthiban and Bharathiraja

"பாரதிராஜாவின் 'அன்னக்கொடியும் கொடி வீரனும்' படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனாலும் என் 20 வருட சினிமா வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு அனுபவம் நேர்ந்ததில்லை,'' என்று வருத்தப்பட்டுள்ளார் பார்த்திபன்.
சாதனை இயக்குநர் பாரதிராஜா தனது லட்சிய படைப்பாக, 'அன்னக்கொடியும் கொடி வீரனும்' என்ற படத்தை உருவாக்குகிறார். இந்த படத்தின் கதாநாயகனாக பார்த்திபன் நடிப்பார் என்றும், படப்பிடிப்பு 17-ந் தேதி தேனியில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. பட பூஜையும் தேனியிலேயே நடக்கிறது.
இந்த நிலையில், திடீரென்று 'அன்னக்கொடியும் கொடி வீரனும்' படத்தில் இருந்து பார்த்திபன் நீக்கப்பட்டுள்ளார். இதனை பார்த்திபனும் உறுதிப்படுத்தி, ட்விட்டரில் எழுதியிருந்தார்
'அவ்வளவு சம்பளம் கொடுக்க மாட்டார் பாரதிராஜா'

இரு பெரிய கட்சிகளில் ஒன்றுதான் வேல்முருகனின் பின்னணியில்!”

Viruvirupu
Chennai, India: PMK leader Ramadoss believes Velmurugan factor has outside push to break the party. To gain support against Velmurugan, PMK leadership has been conducting small group meetings across the region.பா.ம.க.வுக்குள் ஏற்பட்ட உட்கட்சி சிதறல்கள் கடந்த சில தினங்களாக அமைதியாக இருப்பதுபோல தோன்றினாலும், உள்ளே நெருப்பு புகைந்து கொண்டுதான் இருக்கின்றது. வேல்முருகன் தரப்பு தனிக்கட்சியை நோக்கிச் சென்றுகொண்டு இருப்பதாகவே தகவல்கள் கிடைக்கின்றன.
பா.ம.க.வுக்குள் அவருக்கு உள்ள ஆதரவு வட்டமும் சுருங்காமல் உள்ளது. அத்துடன் புதிதாக சிலரையும் தன்பக்கம் இழுக்கத் தொடங்கியுள்ளார் என்கிறார்கள்.
வேல்முருகன் கட்சிக்குள் ஊடுருவுவதை தடுக்க டாக்டர் ராமதாஸ் தன்பங்குக்கு முயற்சிகளைச் செய்து கொண்டுதான் உள்ளார். ஆனால் டாக்டரால் முன்புபோல கட்சியை முழுவீச்சில் கன்ட்ரோல் பண்ண முடியவில்லை என கட்சியிலுள்ள அவரது விசுவாசிகளே ஒப்புக் கொள்கின்றனர்.
வேல்முருகன் திடீரென புரட்சி செய்து புறப்பட்டது போன்று தோன்றினாலும், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பிருந்தே அதற்கான ஏற்பாடுகளில் வேல்முருகன் இறங்கியிருந்ததாக டாக்டர் நினைக்கிறார் என்கிறார்கள். கட்சிக்குள் புரட்சி செய்வதற்கு அவருக்கு சில வெளித் தூண்டல்களும் இருந்தன என்கிறாராம் டாக்டர் இப்போது.

பாக்கியராஜ் மகன் சாந்தனுவுடன் காதலா? சந்தியா




நடிகை சந்தியாவும், பாக்யராஜ் மகன் நடிகர்  சாந்தனுவும் காதலிப்பதாக கிசுகிசுககள் பரவியது. விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. < இது குறித்து நடிகை சந்தியா, எனக்கும், சாந்தனுக்கும் காதல் என்று தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகிறது. நாங்கள் இருவரும் நண்பர்கள். எங்களுக்குள் காதல் இல்லை. நேரம் வரும்போது திருமணம் பற்றி எனது பெற்றோர் முடிவு எடுப்பார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

முதல் தமிழ் பட நாயகியின் நூற்றாண்டு தினம் இன்று 11.11.1911


தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி
குடும்பம் வறுமையில் வாடுகிறது
தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகியான மறைந்த டி.பி.ராஜலட்சுமிக்கு நேற்று 100வது பிறந்த நாள். தமிழ் சினிமாவில் பல சாதனைகள் படைத்தவர். ஆனால் இன்று அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது.
இது பற்றி அவரது மகள் கமலா மோனி,   ’’எனது தாயார் ராஜலட்சுமி, 1911ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பிறந்தார். வறுமையில் வாடியே தனது 55 வயதில் அவர் இறந்தார்.

முதல் பெண் இயக்குனரான அவர், பாடல், கதை, படம் தயாரிப்பு, நடிப்பு என பல துறையில் சிறந்து விளங்கினார். முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ படத்தில் ஹீரோயினாக நடித்தார். ‘மிஸ் மாலினி’, ‘மதுரை வீரன்’ படங்களில் அவரது திறமை பாராட்டப்பெற்றது.
தாத்தா திருவையாறு பஞ்சாபிகேச சாஸ்திரிகள் இறந்த பிறகு, குடும்பம் வறுமையில் வாடியது. குடும்பத்தை காப்பாற்ற நாடகத்தில் நடித்தார். இது அவரது கணவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். சங்கரதாஸ் சுவாமிகள்தான் அம்மாவை நாடக மேடை நடிகையாக அறிமுகப்படுத்தினார்.
தேச பக்தி பாடல்களை அம்மா மேடைகளில் பாடுவார். இதனால் அவரை வெள்ளையர்கள் சிறையில் அடைத்தனர்.

கட்டண கொள்ளை... 6 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து!

1. அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி
2. கில் ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளி
3. அழகப்பா மெட்ரிகுலேஷன் பள்ளி
4. லயோலா மெட்ரிகுலேஷன் பள்ளி
5. ஹோலி ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி
6. ஹோலி ஃபேமிலி மெட்ரிகுலேஷன் பள்ளி.
சென்னை: பெற்றோரிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்து துன்புறுத்திய 6 பெரிய தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை அங்கீகாரத்தை ரத்து செய்து நீதிபதி சிங்காரவேலு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தாறுமாறாக கல்வி கட்டணம் வசூலிப்பதாக தமிழக அரசுக்கு புகார் வந்த வண்ணம் உள்ளது. இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கட்டணத்தை நிர்ணயிக்க கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவித்தது.
பின்னர், நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜபாண்டியன் நியமிக்கப்பட்டு, அவரும் புதிதாக கல்வி கட்டணத்தை நிர்ணயித்தார்.

அங்காடி தெருவில் கண்ணீர்!தொழிலாளர் நலத்துறை என்ன செய்கிறது???

ம.மோகன்என்ன செய்கிறது?
படங்கள்: ப.சரவணகுமார்
அடைமழை கொட்டித் தீர்த்தாலும்... சில துளிகளே மண்ணை எட்டும். அந்த அளவுக்கு மக்கள் நெரிசல் கொண்டது சென்னை, தி.நகரின் ரங்கநாதன் தெரு மற்றும் வடக்கு உஸ்மான் சாலை! அப்படி மக்கள் கூட்டத்தால் தினம் தினம் திருவிழாவாக இருக்கும் அந்த இடங்கள், சமீபகாலமாக வெறிச்சோடிக் கிடக்கின்றன!

''விதிமுறைகளை மீறி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் எழுப்பப்பட்டுள்ளன. இவற்றால் பொதுமக்களுக்கு எந்தத் தருணத்திலும் பேராபத்து காத்திருக்கிறது'' என்று சொல்லி, கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களுக்கு 'சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும'த்தின் அதிகாரிகள் சீல் வைத்திருக்கின்றனர்! சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர், ரத்னா ஸ்டோர், ஜெயச்சந்திரன் ஸ்டோர் என்று பிரபல கடைகள் பலவும் இதில் அடக்கம்!

நியாயமான காரணத்துக்காக, நீதிமன்றத்தின் அழுத்தமான உத்தரவுகளுக்கு இணங்க... அந்தக் கட்டடங்களை நிரந்தரமாக அப்புறப்படுத்தும் வேலை விரைவிலேயே தொடங்க இருக்கிறது! ஆனால், எதிர்விளைவாக, தமிழகம் தழுவிய அளவில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் அடுத்தவேளை உணவில் மண் விழுந்திருப்பதுதான் சோகம்!

கூடங்குளம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?- மத்திய அரசு விசாரணை


Koodankulam Protest
தூத்துக்குடி: கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவோருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் அணு உலை பிரச்சனை தொடர்பாக மத்திய- மாநிலக் குழுக்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் சுமுகத் தீர்வை எட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்துவோருக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.

ரகிகர் மன்ற கொடியா? அப்படி ஒரு ஐடியாவே இல்லை... சூர்யா

7ஆம் அறிவு படத்தின் வெற்றி உற்சாகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சூர்யா.  பல்வேறு கேள்விகளுக்கு சிரித்த முகமாக பதில் கூறினார். தனது படங்களின் கதைகளை யாருடனும் பகிர்ந்துகொள்வதில்லை, யார்கிட்ட சொன்னானும் தகவல் எப்படியாவது வெளியே வந்துவிடுகிறது என்றார்.
தன் அப்பா சிவகுமார் படம் பார்த்து விட்டு பெசன்ட் நகரில் இருக்கும் தன் வீட்டிற்கு வந்து கட்டியணைத்து கண்கலங்கினார், இந்த மாதிரி அனுபவத்தை தன் தந்தையிடம் இருந்து முதல் முறை பெறுவதாக கூறினார். 

கொல்கத்தா பட விழாவில் தமிழ் படங்களையும் சேர்க்க மம்தா பானர்ஜிக்கு கோரிக்கை


கொல்கத்தாவில் சினிமா படவிழாவில் நடந்து வருகிறது.    கவர்னர் எம்.கே.நாராயணன், பட விழாவை தொடங்கி வைத்து அவர் பேசினார்.
அவர் பேசுகையில், ``இந்த படவிழாவில் வெளிநாட்டு படங்களும், இந்தி படங்களும், தெலுங்கு படங்களும் இடம் பெற்று இருக்கின்றன.
ஆனால் தமிழ் படங்கள் இடம் பெற வில்லை. அந்த படங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் வங்காள மொழிப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’ என்று முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவர் ஞானதேசிகன்


சென்னை, நவ. 11: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாநிலங்களவை உறுப்பினர் பி.எஸ்.ஞானதேசிகன் (62) நியமிக்கப்பட்டுள்ளார்.ஏற்கெனவே தலைவராக இருந்த கே.வீ.தங்கபாலுவின் ராஜிநாமாவை ஏற்று, புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, வெள்ளிக்கிழமை அறிவித்தார்.ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததை அடுத்து, மே 14-ல் தங்கபாலு தனது பதவியை ராஜிநாமா செய்தார். ஏறத்தாழ 6 மாதங்களுக்குப் பிறகு அவரது ராஜிநாமாவை ஏற்று புதிய தலைவரை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது.ஜி.கே. வாசனின் ஆதரவாளர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 1949 ஜனவரி 20-ல் பிறந்தவர் ஞானதேசிகன்.

“குடி”மக்களுக்கு ஓர் நற்செய்தி : பிரம்மாண்டமான ‘எலைட் ஷாப்’ மது பார்களை திறக்கிறது தமிழக அரசு

வீதிகள் தோறும் நமது அரசு மதுபானகடைகளை திறந்து வைத்துள்ளது.   இப்போது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலமாக கடந்த ஆண்டு 14,965 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும்.     இந்த வருமானத்தை அடுத்த அண்டில் 20 ஆயிரம் கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.

இதையடுத்து  வியாபாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும், நவீன வசதிகளுடன், குளிரூட்டப்பட்ட பிரமாண்டமான அளவில் இருக்கும் “எலைட் ஷாப்” என்ற பெயரில் மதுபான கடைகளை திறக்கவும், அது தவிர மாவட்டம் தோறும் ஐந்து இடங்களில் சாதாரண மதுபானகடைகளை திறக்கவும் கோட்ட முதுநிலை மேலாளருக்கு அதிகாரம் அளித்துள்ளது தமிழக அரசு.

உத்தப்புரம் கோவில் நுழைவு: மகிழ்ச்சியும் அதிர்ச்சியும்


இன்று காலை தி ஹிந்து செய்தித்தாளில் பார்த்த ஒரு செய்தி மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் அதிர்ச்சியையும் அளித்தது. செய்தியைவிட இரண்டு படங்கள் கதையைத் தெளிவாகச் சொல்கின்றன.

உத்தப்புரம் கிராமத்தில் தலித்துகள் தங்கள் பகுதிகளுக்குள் நுழையக்கூடாது என்பதற்காக ஒரு சுவரையே எழுப்பியிருந்தனர் ஆதிக்க சாதியினர். கம்யூனிஸ்டுகள் முன்னின்று நடத்திய பலத்த போராட்டங்களுக்குப் பின், நிர்வாகம் தலையிட்டு அந்தச் சுவரை உடைத்துத் தள்ளியது. இப்போது அதே கிராமத்தில் முத்தாலம்மன் கோவிலில் தலித்துகள் நுழைந்து வழிபாடு நடத்தியுள்ளனர். அப்படி உள்ளே நுழைந்த தலித்துக் குடும்பங்களின் முகத்தில் தென்பட்ட மகிழ்ச்சிதான் முதல் படம்.

அதே செய்தியில் தென்பட்ட அடுத்த படம்தான் அதிர்ச்சியைக் காண்பிக்கிறது. ஆதிக்க சாதி மக்களின் முகத்தில் தென்படும் அதிர்ச்சி, பதட்டம் இரண்டையும் அந்தப் படம் பயங்கரமாகக் காட்டுகிறது.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் தலித்துகளின் நிலை எப்படி இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக்கூடாதே என்று பயமாகவும் இருக்கிறது.

கனடிய “சுப்பர் விசா” திட்டமானது எண்ணிக்கையை குறைப்பதற்கே!

கனடிய “சுப்பர் விசா” திட்டமானது தேங்கியுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கே! குடிவரவு அமைச்சர் ஜெய்சன் கென்னி

கடந்த வாரம் கனடிய அரசு அறிவித்துள்ள “சுப்பர் விசா” திட்டமானது ஏற்கெனவே தேங்கிக் கிடக்கும் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கே ஆகும். இவ்வாறு கடந்த சனிக்கிழமையன்று கனடிய தமிழ் பத்திரிகைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் ஜெய்சன் கென்னி தெரிவித்தார்.இந்த புதிய முறையை நாம் அறிமுகம் செய்யாவிட்டால் இன்னும் சில வருடங்களில் பெற்றோர் மற்றும் உறவினர்களை “ஸ்பொன்சர்” செய்யும் விண்ணப்பங்கள் மூன்று இலட்சத்திற்கும் அதிகமாக தேங்கிக் கிடக்கும் நிலை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

அப்துல் கலாம் சாதூர்யமாக அரசால் இறக்கப் பட்டிருக்கிறார்

அழிவிற் சிறந்தது – அப்துல் கலாம் கட்டுரைகளை முன்வைத்து


அப்துல் கலாம் கூடன்குளம் விவகாரத்தில் நுழைந்து புதுக் குமிழிகளை உருவாக்கியிருக்கிறார். அணு உலைக்கு எதிரான போராட்டத்தை சாதூர்யமாக சமாளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, அப்துல் கலாம் அரசால் இறக்கப் பட்டிருக்கிறார் என்பதில் ஐயம் கொள்ள எதுவும் இல்லை. சில வாரங்கள் முன்பு ‘கூடன்குளம் அணுமின் நிலையப் பிரச்சினையில் அப்துல் கலாமின் ஆலோசனை பெறப்படும்’ என்று மத்திய அமைச்சர் சொன்னார். அரசுக்கு கலாமின் ஆலோசனை எதுவும் (குறைந்த பட்சம் புதிதாக) இப்போது தேவையில்லை; இங்கே ஆலோசனை என்பதன் அர்த்தம், அவர் கருத்து சொல்லி, அது பரவாலான மக்கள் மற்றும் ஊடக கவனம் பெறுவது; அவர் என்ன கருத்து சொல்வார் என்பது அணு உலை ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் மட்டுமின்றி, கலாமிற்கு பிடித்த குழந்தைகளுக்கும்கூட தெரியும்.
ஆகையால் கலாம் கூடன்குளம் சென்று, ‘ஆய்வு செய்து’, கருத்து சொல்வது என்பது விவாதத்திற்காகவோ, நம் அறிவுப்பரிசீலனைக்காக உதிர்க்கப்படுவதோ அல்ல. ஒரு பிரபலமாக, முன்னாள் குடியரசு தலைவராக அவர் கருத்து சொல்கிறார்; அக்கருத்து அரசியல் காரணங்களால் முன்வைக்கப்பட்டது; இன்று ஒரு நிறுவப்பட்ட உண்மையாக மாறிவிட்டது. பொதுமக்கள் எல்லார் மனங்களிலும் படிந்துவிட்ட பிம்பமான, ‘இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி‘யின் கூற்றாக, அவர் கருத்து அரசாலும் ஊடகங்களாலும் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகிறது. அணு அறிவியல் மற்றும் அணுவியல் சார்ந்த தொழில்நுட்ப அறிவு கொண்ட, விண்கலப் பொறியியலாளரான கலாம் என்பவர், வேறு பல காரணங்களால் அடையும் அதிகாரத்தின் அங்கீகாரத்துடன், அணு உலைக்கு ஆதரவான பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்க கருத்து சொல்கிறார்.

தாதா' தாவூத் இப்ராகிமுக்கு கடும் மாரடைரப்பு- இறந்தால் மும்பையில் உடலைப் புதைக்க விருப்பம்!

கராச்சி: பல காலமாக பாகிஸ்தானில் முகாமிட்டபடி சொந்த நாடான இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பல்வேறு தீவரவாத செயல்கள், கடத்தல், மிரட்டல், பணம் பறித்தல், கொலை என சகலவிதமான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்த தாவூத் இப்ராகிம் தற்போது மரணப் படுக்கையில் இருக்கிறார். 2வது முறையாக அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் மரணமடைந்தால் தனது உடலை மும்பையிலோ அல்லது அதற்கு அருகில் உள்ள தனது சொந்த ஊரிலோ அடக்கம் செய்யுமாறு தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளாராம் தாவூத்.

மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கத்திற்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை

மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு நவம்பர் 21ம் தேதி வரை செல்லும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் நியமனம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 13,000 பேர் பணி நீக்கம் செய்யப்படுவதாக கடந்த புதன்கிழமை அன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் அந்த வேலையில் உடனடியாக நீக்கப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக எதிர்கட்சியினரும் குற்றம் சாட்டினர்.

வெள்ளி, 11 நவம்பர், 2011

Pub பப்'பில் இளம்பெண்ணை கிண்டல் செய்த, நடிகர் சிம்புவின் நண்பர்கள் கைது!

சென்னை: 'பப்' பில் கணவருடன் வந்த -இளம்பெண்ணை கிண்டல் செய்ததோடு அல்லாமல் அவரது கணவரை தாக்கிய, நடிகர் சிம்புவின் நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் நீலாங்கரையில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

அடிக்கடி பரபரப்பில் சிக்குபவர் நடிகர் சிம்பு. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நீலாங்கரை கடற்கரை அருகே உள்ள 'பப்'புக்கு நண்பர்களுடன் சென்றார் சிம்பு. வசதி படைத்தவர்கள் ஜாலியாக இங்கு வந்துபோவது வழக்கம். இப்போது சினிமா நட்சத்திரங்களும் வர ஆரம்பித்திருக்கின்றனர். வழக்கமாக இரவு 10 மணிக்கெல்லாம் மூடப்படும் இந்த பப், சினிமா நட்சத்திரங்கள் வருகைக்கு பிறகு நள்ளிரவு வரை இயங்குவதாக கூறப்படுகிறது. தனியார் நிறுவன மேலாளர் நவீன் என்பவர், தன் மனைவியுடன் அதே பப்புக்கு சென்றிருக்கிறார்.

தயாளு அம்மாள் எப்போது கூண்டில் ஏறுவார் தெரியுமா?

Viruvirupu< ew Delhi, dia: Dayalu Ammal would come to court to witness the case. But, when? Now she has been named as the 143rd prosecution witness by the CBI.
மிகவும் பரபரப்பான எதிர்பார்க்கப்பட்ட 2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கு விசாரணை முழுவதுமே விறுவிறுப்பாக இருக்கும் என்றாலும், தமிழகத்தில் பலரும் உச்சக்கட்ட ஆவலில் இருப்பது, ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகிய இருவருக்கும் என்ன நடக்கப் போகின்றது என்பதைக் காண்பதற்கே!
இந்த இருவரும் வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் விசாரிக்கப் படுவார்கள்.
சாட்சிகள் பட்டியலில் விசாரணைக்காக அழைக்கப்பட உள்ளவர்களில் தமிழகத்தில் பிரபலமானவர், தயாளு அம்மாள்.

ராசா கோர்ட்டில் அடித்த தடாலடி! நிஜமாக நடந்தது என்ன?

Viruvirupu
New Delhi, India: Prime accused A.Rasa’s application for no cross-examination of witnesses with valid reason was dismissed by the court. This will give him an advantage in the future, if the case turns out as non favorable to him!
தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நிலைமை எப்படியும் இருக்கட்டும், ஸ்பெக்ட்ரம் வழக்கின் 1-ம் நாள் விசாரணையின் முடிவில் சில தமிழ் மீடியாக்களில் அவரைப் பற்றி வெளியான செய்திகளின் நிலைமைதான் ரொம்ப பரிதாபம். ராசா தொடர்பாக இன்று கோர்ட்டில் நடந்தது வேறு, சில ஊடகங்கள் வெளியிட்ட நியூஸ் அதற்கு தலைகீழ்.
“விசார‌ணையில் தன்னை குறுக்கு விசாரணை செய்யக் கூடாது என்று ராசா ஒரு மனு தாக்கல் செய்தார். ராசாவின் மனுவை பாட்டியாலா கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது” என்ற ரீதியில் தமிழில் வெளியாகியுள்ள செய்தியை நீங்கள் பார்த்திருக்கலாம். இன்று கோர்ட்டில் நடந்தது அதுவல்ல.
நிஜமாக நடந்தது என்ன? இதோ இப்படித்தான்:

சங்கப் பரிவாரம் வழங்கும் “”இதுதான்டா ராமாயணம்!”

வரலாறு  சொல்லித்தர வாரியாரு வருவாரு”  இது, இந்து மதவெறிக் கும்பல் அதிகாரத்தில் இருந்தால் கல்வித்துறையில் என்ன நடக்கும் என்பதை நையாண்டி செய்யும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடல் வரி.  இந்த நையாண்டி வெறும் கற்பனையல்ல, உண்மை என்பதை அண்மையில் டெல்லியிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகமான டெல்லிப் பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.

மூவர் தூக்கு: கிழிந்தது அம்மாவின் கருணைமுகம்!

ஜெயலலிதாவே தமிழினத்தின் மீட்பர்’  என்று உடுக்கடித்துத் தமிழக மக்களை நம்பவைத்ததும், சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றியவுடனே விழா எடுத்து புகழ்பாடியதும் தமிழின உணர்வாளர்கள் எனப்படுவோர்தான். இப்படியெல்லாம் தமிழ் மக்களை நம்பவைத்த பூசாரிகள் என்ற முறையில்தான், நெடுமாறன், சீமான், வைகோ, பெரியார் தி.க உள்ளிட்டோர், இப்போது ஜெ அரசின் கருத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர்கள் போல முகத்தை வைத்துக் கொள்கிறார்களேயன்றி, ஜெயலலிதா ஒரு பார்ப்பன பாசிஸ்டு என்பது பூசாரிகள் அறியாத உண்மையல்ல. “கேழ்வரகில் நெய் வடியும்’ என்று தெரிந்தேதான் இவர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். by வினவு"

தமக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனைக்கு எதிராக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு அக்டோபர் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் வழக்குரைஞர் மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்யவேண்டுமென்றும்,  தூக்குத் தண்டனையை நிறைவேற்றவேண்டுமென்றும் வாதாடினார். இது அனைவரும் எதிர்பார்த்ததுதான்.
ஆனால் “”தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் மூவரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும்” என்று ஒரு தீர்மானத்தை ஆகஸ்டு 30ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் முன்மொழிந்த ஜெயலலிவின் அரசு, தற்போது அதற்கு நேர் எதிராகப் பேசியிருக்கிறது. “”கருணையை நியாயப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் எதுவும் தோன்றிவிடவில்லை” என்று கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் கருணை மனுவை நிராகரிப்பதற்கு ஆளுநர் கூறிய வார்த்தைகளை அப்படியே வழிமொழிந்திருக்கிறது. எந்தத் தமிழ் மக்களின் பெயரால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்  பட்டதோ, “”அந்த மக்களின் உணர்வு குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை” என்று அலட்சியமாகச் சொல்லியிருக்கிறது

மக்கள் நலப்பணியாளர் நீக்கத்திற்கு கோர்ட் தடை - தமிழக அரசு நடவடிக்கைக்கு எதிரான உத்தரவு

சென்னை: அ.தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு தி.மு.க., ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் 13 ஆயிரம் பேரை அதிரடியாக நீக்கியது. இதனால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த உத்தரவுக்கு எதிராக சங்க நிர்வாகி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 1990ம் ஆண்டில் திமுக ஆட்சியில் 25 ஆயிரம் மக்கள் நல பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து 1991ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் இவர்கள் நீக்கப்பட்டனர். பிறகு 1996ம் ஆண்டில் மீண்டும் திமுக ஆட்சியில் இவர்கள் மறு நியமனம் செய்யப்பட்டனர். பின்னர் 2001ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் 2ம் முறையாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில கடந்த 2006ம் ஆண்டில் திமுக ஆட்சியில் 13 ஆயிரம் மக்கள் நல பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு சிறப்பு ஊதிய விகிதமாக 2,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.

கோயில் வாசலில் இளம்பெண் எரித்துக் கொலை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் காவிரி ஆற்றங்கரையில் தான்தோன்றி விநாயகர் கோயில் உள்ளது. காலையில் ஆற்றில் குளிக்க நிறைய பேர் அங்கு செல்வர். இன்று காலை வழக்கம் போல் சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோயில் வாசலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கருகிய நிலையில் இன்று காலை கிடந்தது.
இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசுக்கு தக வல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு டிஎஸ்பி சுஜாதா, இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
கோயில் வாசலில் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த பெண் சடலத்தை பார்வையிட்டனர்.
அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் கருகிய நிலையில் இருந்தது.
நள்ளிரவில் சம்பவம் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை.
பெண் உடல் மீது ஊற்றி எரிப்பதற்காக மண்எண்ணெயை ஒரு கேனில் கொண்டு வந்துள்ளனர். அந்த கேன் கோயில் அருகில் கிடந்தது.
இதை போலீசார் கைப்பற்றியுள்ளனர். பெண்ணின் உடல் முழுவதும் எரிந்து விட்டாலும், அவர் அணிந்திருந்த பாவாடையின் நிறம் மட்டும் பச்சை நிறத்தில் இருந்தது.
கோயில் வாட்ச்மேன் பணியில் இருந்துள்ளார். கோயிலுக்குள் படுத்து அவர் உறங்கி கொண்டிருந்தார். ஆனால் தனக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை என்று போலீஸ் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். மோப்ப நாய் சோதனையும் நடந்தது.

ஸ்னேகாவின் 'காதலில் விழுந்தது' எப்படி?- பிரசன்னா


ஸ்னேகா பழக இனிமையானவர். அவரது எளிமையும் யதார்த்தமும் அவரை என் மனைவியாக்கிக் கொள்ளத் தூண்டியது. அதனால்தான் காதலித்தேன், என நடிகர் பிரசன்னா கூறினார்.
ஸ்னேகாவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து பிரசன்னா அளித்த பேட்டி:
அச்சமுண்டு அச்சமுண்டு படம பண்ண போது ஸ்னேகாவுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் தொழில் ரீதியான நட்புதான் இருந்தது. நாளடைவில் ஸ்னேகா நடவடிக்கையில் ஈர்ப்பானேன். அவர் பெரிய நடிகை. ஆனாலும் அந்த தலைக்கனம் கொஞ்சமும் இல்லை. பந்தா இல்லாமல் பழகுவார். எளிமையாக நடந்து கொள்வார். அந்த குணங்கள் எனக்கு பிடித்தது.
ஸ்னேகா என் மனைவியாக வாழ்க்கை முழுக்க என்னுடன் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

ஆப்கானிஸ்தான்: இளம் விதவைத் தாய், மகள் நடுத்தெருவில் கல்லால் அடித்து கொலை

காபூல்: ஆப்கானிஸ்தானின் கஸ்னி மாகாணத்தில் ஆயுதம் ஏந்திய 2 ஆண்கள் ஒரு இளம் விதவைத் தாயையும், அவரது மகளையும் நடுத்தெருவில் நிற்கவைத்து கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பெண்களை தாலிபான்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கஸ்னி நகரின் க்வாஜா ஹக்கீம் பகுதியைச் சேர்ந்த இளம் விதவைத் தாயையும், அவரது மகளையும் ஆயுதம் ஏந்திய 2 ஆண்கள் கல்லால் அடித்தே கொலை செய்துள்ளனர். அந்த விதவைத் தாயும், மகளும் ஒழுக்கமில்லாமல் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி கொன்றுள்ளனர்.

தி.நகர் கடைகளுக்கு சீல் வைத்தது செல்லும்- புதிதாக சீல் வைக்க, நவ. 30 வரை இடிக்க சுப்ரீம் கோர்ட் தடை



T Nagar Shops
டெல்லி: சென்னை தி.நகரில் உள்ள விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
அதேசமயம், புதிதாக கடைகளுக்கு சீல் வைக்கவும், நவம்பர் 30ம் தேதி வரை கடைகளை இடிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தையே மீண்டும் அணுகுமாறும் வர்த்தகர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
தி.நகர், வடக்கு உஸ்மான் ரோடு, பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வந்த விதிமுறைகளுக்குப் புறம்பான முறையில் கட்டப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சிறிய நிறுவனங்களை சமீபத்தில் சி்எம்டிஏ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இழுத்து மூடி சீல் வைத்தனர்.

கிங்ஃபிஷர் (பீர்) அடிக்காமலேயே தள்ளாடும் கிங்ஃபிஷர் (ஏர்லைன்ஸ்)

ViruvirupuBangalore, India: Vijay Mallya-owned carrier Kingfisher Airlines is in real mess! Effective today, 100 pilots quit the company. Cancellation of 80 flights in the past two days left thousands of passengers stranded at airports!
தமது வியாபாரத்தில் இதுவரை கண்டிராத தள்ளாட்டத்தைச் சந்தித்திருக்கிறது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ். நிறுவனத்தின் 100 பைலட்டுகள் இன்று (வியாழக்கிழமை) திடீரென ராஜினாமா செய்து, நிர்வாகத்தை அதிர வைத்திருக்கின்றனர். தமது அக்டோபர் மாத ஊதியம் இன்னமும் வழங்கப்படவில்லை என்கிறார்கள் அவர்கள்!
இவர்களது ராஜினாமா கடிதங்கள் கொடுக்கப்படுவதற்கு முன்னரே, கிங“ஃபிஷரின் தள்ளாட்டம் தொடங்கிவிட்டது. கடந்த இரு தினங்களாக கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் சுமார் 80 விமான ரூட்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கேன்ஸல் பண்ணி, ஆயிரக் கணக்கான பயணிகளை திணற வைத்தார்கள்.

விஸ்வரூபம்' படத்தில் நியூயார்க் நடிகை பூஜா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கமல் உழைப்பு : நடிகை பூரிப்பு!
கமல் இயக்கி நடிக்கும் ‘விஸ்வரூபம்' படத்தில் நியூயார்க் நடிகை பூஜா குமார் நடிக்கிறார். அவர் கூறியது: நியூயார்க்கில் நான் வளர்ந்திருந்தாலும் ஒவ்வொரு கோடை காலத்திற்கும் இந்தியா வருவேன். இந்தியா மீது எனக்கு மிகுந்த நேசம் உண்டு. கமல் ஆபீசிலிருந்து என்னை தொடர்பு கொண்டார்கள். ஹாலிவுட் ஸ்டார் டாம் குரூஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் இருந்தது. ‘எதற்காக என்னை தேர்வு செய்தீர்கள்Õ என்பது உள்பட தனிப்பட்ட முறையிலும் எந்த கேள்வியும் நான் கமலிடம் கேட்கவில்லை. அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது என்னுடைய அதிர்ஷ்டம்தான். ஏற்றுக்கொண்ட வேலையை முடிக்க ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணிநேரம் வரை கமல் உழைக்கிறார்.

தனி மாநிலம் இல்லை; தெலுங்கானா தன்னாட்சி கவுன்சில் தான் : விரைவில் வருகிறது அறிவிப்பு

ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி மாநிலம் உருவாக்குவதற்கு பதிலாக, தெலுங்கானா தன்னாட்சி கவுன்சிலை அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஐதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களை ஒன்றிணைத்து தனி மாநிலம் உருவாக்கக்கோரி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதே நேரத்தில், கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதி மக்கள், ஆந்திராவை இரண்டாக பிரிக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த பிரச்னை குறித்து ஆராய மத்திய அரசு, ஸ்ரீகிருஷ்ணா கமிஷனை அமைத்தது. இந்த கமிஷன், ஆந்திராவின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று நிலைமையை ஆராய்ந்து அறிக்கை அளித்தது. ஆந்திராவை பிரிப்பதால், சாதகத்தை விட பாதகங்கள் தான் அதிகம் என, இந்த கமிஷன் தன் அறிக்கையில் தெரிவித்தது. இதனால், தெலுங்கானாவை உருவாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கிடப்பில் போட்டது.

அவர்களை இந்த வழக்கில் சாட்சிகளாகக் கூட விசாரிக்க சி.பி.ஐ. தயாராக இல் லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் லாபம் அடைந்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு, கனிமொழியை மட்டும் ஆறு மாதங்கள் சிறையில் வைத்திருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. அதேசமயம், ‘கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வருவதில் அரசியல் பின்னணி ஏதும் இருக்குமா?’ என்றும் தி.மு.க. தரப்பில் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
சரத்குமாரும், கனிமொழியும் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் புனையப்பட்ட பிறகு, ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்’ என்று தீர்ப்பளித்தது. இது, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பிறகு கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது.
அதற்கு அடுத்து, ஜாமீன் மனு விசாரணையின் போது, கனிமொழியின் ஜாமீனுக்கு சி.பி.ஐ.யும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதனால், நிச்சயம் ஜாமீன் கிடைத்து விடும் என்று நம்பிய தி.மு.க. தலைமை, தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் அனைவரையும் டெல்லிக்கு அனுப்பியது.

அன்று எம்.ஜி.ஆர். சொன்னது இன்று அப்படியே நடக்கிறது!

மனம் திறக்கும் ராஜாத்தி அம்மாள்
இரா.சரவணன்
கனிமொழியின் சிறைப் படலத்துக்குப் பிறகு முதன்முறையாக இங்கே மனம் திறக்கிறார் ராஜாத்தி அம்மாள்...
''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தப்ப, கனிமொழி தீவிர அரசியலில் இல்லை. அது எப்போ எம்.பி. ஆச்சு, எப்போ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்ததுனு ஒப்பிட்டுப் பார்த்தாலே... கனிமொழிக்கு இதில் எள்முனை அளவுகூடச் சம்பந்தம் இல்லைங்கிறது தெரியும். ஆனா, திட்டமிட்டு கனிமொழியை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இழுத்துவிட்டுட்டாங்க. கனிமொழியை விசாரிச்ச சி.பி.ஐ. அதிகாரிகளுக்கே எங்கள் தரப்பில் இருக்கும் அடிப்படை நியாயம் புரியும். இருந்தும் 150 நாட்களுக்கும் மேலா கனிமொழி சிறையில் இருக்குது. ஜாமீன் மனுவுக்கு ஆட்சேபணை தெரிவிக்க மாட்டோம்னு சி.பி.ஐ. தரப்பே சொன்ன பிறகும், கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு இருக்கு. கோர்ட்டுக்கு கனிமொழி வந்தப்ப, 'கவலைப்படாதம்மா... உன்னோட கஷ்டங்களுக்கு எல்லாம் இன்னிக்கு விடிவு கிடைச்சிடும்’னு ஆறுதல் சொன்னேன். எப்பவும் சிரிக்கிற மாதிரியே மென்மையா சிரிச்சது. ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரிச்சப்பவும் அதே மாதிரி சிரிச்சது. அந்த சிரிப்பில் இருக்கிற துயரம் எனக்கு மட்டும்தான் தெரியும். ஒரே ஒரு பெண்ணைப் பெத்தெடுத்து, இப்படி அல்லாடவிட்டுட்டோமேனு என் மனசு கொதிக்குது!'' என்றபடியே கண் கலங்கியவரிடம் சற்று இடைவெளிக்குப் பின் நம் கேள்விகளை வைத்தோம்.
''ஜாமீன் நிராகரிப்புக்குப் பிறகு கனிமொழி என்ன மன நிலையில் இருக்கிறார்?''

தமிழ் ஒன்றும் செம்மொழி அல்ல. அது சாதா மொழிதான்!’ என்று சொல்லாமல் விட்டதுதான் பாக்கி!

சுழற்றி அடித்த மழையின் விளைவால் தமிழகம் தத்தளித்துக்கிடக்கிறது. வீடுகள், விளைநிலங்கள், அலுவலகங்கள் என்று எதுவுமே வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பவில்லை. நிரம்பித் தளும்பும் ஏரி-குளங்கள் எப்போது உடைப்பு எடுக்குமோ என்ற அச்சம் வாட்டி எடுக்கிறது. குவிந்துவிட்ட குப்பைக்கூளங்களும் தேங்கி நிற்கும் சகதி நீரும் சேர்ந்து என்னென்ன வியாதிகளை உற்பத்திசெய்யுமோ என்ற பீதியும் மக்களை ஆட்டிப்படைக்கிறது.
மொத்தத்தில், தமிழகத்தைப் பொறுத்தவரை மழைக் காலம் என்பது, அரசாங்கத்தின் போர்க்கால நடவடிக்கைக்கு உரியதாகவே இருக்கிறது. 'மாற்றம்’ வேண்டி வாக்களித்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதில் தன் கவனத்தைச் செலுத்த வேண்டிய முதல்வர் என்ன செய்கிறார்? கடந்த ஆட்சியாளர்கள் தங்கள் சாதனைகளாகக் கருதியவற்றின் சுவடுகளை அழிப்பதே தன் தலையாய கடமை என்பதுபோல் செயல்படுகிறார்!

தலைமைச் செயலகம், சமச்சீர்க் கல்வி என்ற தொடர் மாற்ற வரிசையில் இப்போது, 'அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுகிறேன்',.. 'மந்திரியை எந்திரியாக மாற்றுகிறேன்...

இதற்குத்தானா ஜெயித்தார் ஜெயலலிதா?


ஓவியம் : ஹாசிப்கான், படம் : வீ.நாகமணி
நூலகங்களை அழிப்பது போர் வியூகங்களில் ஒன்று. அழிக்கப்பட்ட நூலகங்கள் பட்டியலைப் பண்டைய எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தில் இருந்து ஆரம் பிக்கலாம். பாரசீகத்தின் டெஸிஃபோன் நூலகம், சீனாவின் சிங் ஹுவா நூலகம், பர்மாவின் ராயல் நூலகம், யூகோஸ்லோவேகியாவின் செர்பிய நூலகம், இராக்கின் பாக்தாத் நூலகம்... நூலகங்களைத் தீயிட்டுக் கொளுத்துவதும், சூறையாடு வதும், குண்டு வீசித் தகர்ப்பதுமே உலகம் இதுவரை கண்டிருக்கும் முறைகள்.
ஜெயலலிதா இப்போது 'அஹிம்சா’ வழியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்... இடம் மாற்றி அழிப்பது!

ஏற்கெனவே ஜெயலலிதா ஒரு நூலகத்தை அழித்துவிட்டார். ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நாளே அவர் நடத்திய தலைமைச் செயலக மாற்றத்தால் அங்கு செயல்பட்ட பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தில் இருந்த அரிய ஓலைச்சுவடிகள், செம்மொழி நூல்கள், சங்க இலக்கியப் பழைய பதிப்புகள், பழைய இதழ்கள் தொகுப்புகள் யாவும் செல்லரித்துக்கொண்டு இருக்கின்றன. உலகின் பெரிய நூலகங்களில் ஒன்றான அண்ணா நூற்றாண்டு நூலகம் மீது இப்போது அவர் கை வைத்திருப்பது தமிழ் அறிவுலகின் நூற்றாண்டுக் கனவு மீதான குரூரமான தாக்குதல்.


தமிழகத்தில் 4,028 பொது நூலகங்களும் 12,620 ஊராட்சி நூலகங்களும் இருக்கின்றன. ஆனால், இன்றைய நவீன உலகில் 'நூலகம்’ என்ற சொல்லுக்கு உள்ள விரிவான அர்த்தத்தைக்கொண்டு இருப்பது அண்ணா நூலகம் மட்டும்தான். 172 கோடியில், 3.75 லட்சம் சதுர அடிகள் பரப்பளவில், 9 தளங்களில் அமைந்து இருக்கும் இது ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகம். ஏறத்தாழ 12 லட்சம் புத்தகங்களைவைக்கும் கொள்ளள வைக்கொண்ட இதில், இப்போது 5.5 லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றில் தமிழ்ப் புத்தகங்களின் எண்ணிக்கை மட்டும் 1.5 லட்சம். இங்கு உள்ள புத்தகங்களின் மதிப்புக்கு ஓர் உதாரணம் 'என்சைக்ளோபீடியா ஆஃப் ஹ்யூமன் பயாலஜி’. மருத்துவம் தொடர்பான இந்த நூல் தொகுதியின் விலை எவ்வளவு தெரியுமா? 1,99,545.

கசாப் ஒரு தீவிரவாதி.. தூக்கில் போடுங்கள்: இப்போது சொல்கிறது பாகிஸ்தான்!


Kasab
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் ஒரு தீவிரவாதி, அவனை தூக்கில் போட வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.
கசாப் பாகிஸ்தானைச் சேர்ந்தவனே இல்லை என்று கூறி வந்தது பாகிஸ்தான். கடந்த 2009ம் ஆண்டு தான் அவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் என்று ஒப்புக் கொண்டது.
இந் நிலையில் கசாப் ஒரு தீவிரவாதி தான் என்று திடீரென அந்த நாடு 'கண்டுபிடித்துள்ளது'.

கூடங்குளத்தில் மின் உற்பத்தி தள்ளிவைப்பு: ரஷ்யாவுக்கு திரும்பும் வி்ஞ்ஞானிகள்


Kudankulam Nuclear Plant
கூடங்குளம்: கூடங்குளத்தில் அடுத்த மாதம் தொடங்கவிருந்த மின் உற்பத்தியை மத்திய அரசு 3 மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது. இதனால் ரஷ்ய விஞ்ஞானிகள் பலர் நாடு திரும்ப முடிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம்,கூடங்குளத்தில் ரூ.13,500 கோடி செலவில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முதல் அணு உலைக்கான பணிகள் முடிவடைந்து வரும் டிசம்பரில் மின் உற்பத்தி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இவற்றில் 50 சதவீத மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

வியாழன், 10 நவம்பர், 2011

நூலகத்தை இடம் மாற்றும் ‘ஜெயா’வின் பார்ப்பன பாசிச நடவடிக்கை



அண்ணா நூலகத்தை இடம் மாற்றும் ‘ஜெயா’வின் பார்ப்பன பாசிச நடவடிக்கைக்கு எதிராக பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் – 120 பேர் கைது!

நவம்பர் புரட்சி தினத்தை ஏழாம் தேதி கொண்டாடிய கையோடு எட்டாம் தேதி போராட்டத்திற்கு தயாரானார்கள் தோழர்கள்.
கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை இடமாற்றம் என்ற பெயரில் முடக்க  முயலும் பாசிச ஜெயாவின் செயலைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணி சார்பில் 09.11.11 அன்று காலை 10.30 மணியளவில் பனகல் மாளிகை அருகில் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்டூர்புரம் அண்ணா நூலகம் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் அங்கு குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் பராமரிப்பின்றி பாழடைந்து, சீரழிந்து போன சூழலில் அதை மேம்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. இந்நிலையில் இந்த அறிவிப்பு ஒரு பச்சையான ஏமாற்று.
சமச்சீர் பொதுப்பாடத்திட்டம் மற்றும் தாய்மொழிக் கல்வியினை தடுக்க தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா அதன் தொடர்ச்சியாகவே தரமான நூலகத்தை முடக்குகிறார்.

ராஜா-கனிமொழியின் 2G Case: நாளை ஆரம்பம்

ViruvirupuNew Delhi, India: 2G-Spectrum main case likely to commence from Tomorrow. CBI special court Judge O.P. Saini confirmed the ability of framing charges against all accused. Judge accepted there is sufficient evidence against all 17 accused including 3 telecom firms.
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகும் என்று தெரிகின்றது. அப்படியானால் இவ்வளவு காலமும் நடைபெற்றது என்ன?
நடைபெற்ற மோசடி பற்றிய குற்றப் பத்திரிகை தாக்கல், அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தல் ஆகிய ஆரம்பகட்ட வேலைகளே இவ்வளவு காலமும் நடைபெற்றன.
சுருக்கமாகச் சொன்னால், இவ்வளவு காலமும் காண்பிக்கப்பட்டது வெறும் ட்ரெயிலர்தான்.  நாளை வெள்ளி முதல் திரையிடப்படுகிறது மெயின் பிலிம்!
கடந்த மாதம் (அக்டோபர்) 22-ம் தேதிதான், இந்த விசாரணைக்கான முறையான அடித்தளம் சரி செய்யப்பட்டுள்ளது. அதுவரை, பிட், பிட்டாக இருந்த வெவ்வேறு சம்பவங்கள், மற்றும் வெவ்வேறு நபர்களை ஒரே வழக்குக்குள் தொகுத்து, விசாரணை ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நடவடிக்கை முடிந்து விட்டாலே, பிரதான வழக்கை ஆரம்பிக்க பிராசிகியூஷன் தரப்பு தயார் என்று அர்த்தம்.

ஜெ. பார்சல் பண்ணிய அமைச்சர்!கலைஞர் கிளருவாரா?

ViruvirupuChennai, India: Jayalalitha’s minister made a private deal in conjunction with a deal already in place. A source says the file is with Karunanidhi now.
முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதற்காக கல்தா கொடுக்கப்பட்டது என்ற கதைகள் ஒருபுறமாக அடிபட்டுக் கொண்டிருக்க, இவர் தொடர்புடைய குற்றச்சாட்டு ஒன்று விரைவில் எதிர்க் கட்சிகளால் கிளப்பப்படலாம் என்று கூறப்படுகின்றது.
அதனால்தான் அவசர அவசரமாக ஆள் அமைச்சரவையில் இருந்து பார்சல் பண்ணப்பட்டார் என்கிறார்கள்.
தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கிய இலவச கம்ப்யூட்டர் திட்டத்தில் இவர் ஒரு வில்லங்கத்தில் சிக்கியுள்ளதாக தெரிகின்றது. விவகாரத்தை யாராவது கோர்ட்டுக்கு கொண்டுபோனால், இந்த முன்னாள் மாண்புமிகு மாட்டிக்கொள்ள சான்ஸ் அதிகம் என்றும் சொல்கிறார்கள்.
இதிலுள்ள கேட்ச் என்ன? ஒருவேளை கோர்ட்டு கேஸ் என்று வந்துவிட்டால், அதில் கூறப்போகும் பணத் தொகைக்கும், இவர் கண்ணால் பார்த்த தொகைக்கும் இடையே வித்தியாசம், மலையும் மடுவுமாக இருக்குமாம்!

ராஜரட்ணத்திற்கு வரலாறு காணாத அபராதம்!

இலங்கையில் பிறந்த ராஜரட்ணத்திற்கு வரலாறு காணாத அபராதம்!

நிறுவனங்களின் ரகசிய தகவல்களை பெற்று சட்ட விரோதமாக வணிகத்தில் ஈடுபட்டதற்காக 11 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட இலங்கையில் பிறந்த அமெரிக்காவில் முன்னாள் ஊக வணிக முகாமையாளரான ராஜ் ராஜரட்ணத்திற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 9 கோடியே 28 லட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான அளவு அபராதம் அமெரிக்க நிதி ஒருங்குபடுத்துனர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகிகளில் கலாநிதி மாறன் மனைவி முதலிடம்!


Kalanidhi with Kavery Maran
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகிகள் பட்டியலில் சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறன் முதலிடத்தில் இருக்கிறார். இவரது ஆண்டு சம்பளம் ரூ. 64.4 கோடியாகும்.

ஆண் நிர்வாகிகளில் முதலிடத்தில் இருப்பவர் நவீன் ஜின்டால். 2வது இடத்தில் கலாநிதி மாறன் இருக்கிறார்.
பார்ச்சூன் இதழ், இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓக்கள், நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் நவீன் ஜின்டாலும், பெண்கள் பிரிவில் காவேரி கலாநிதி மாறனும் முதலிடத்தில் உள்ளனர்.

டிஸ்மிஸ் செய்யப்பட்ட மக்கள்நல பணியாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம்

சென்னை : மக்கள் நலப்பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக இளைஞர் அணி சார்பில் 15 ம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மக்கள் நலப் பணியாளர்கள் திமுக ஆட்சியின்போது நியமிக்கப்பட்டனர். இவர்கள், பஞ்சாயத்துகளில் வரி வசூலிப்பது, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கண்காணிப்பது, எவ்வளவு ஆட்கள் பணியாற்றுகிறார்கள் என்ற வருகை பதிவேட்டை கவனிப்பது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர்.
 நேற்று முன்தினம் திடீரென்று மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.  

ஹாலிவூட்டில் கையைச் சுட்டுக் கொண்டு இந்தியா திரும்புகிறது ரிலையன்ஸ்!

ViruvirupuLos Angeles, USA: 3 years ago, Reliance entered Hollywood with hundreds of millions of dollars in cash. Where are they now?  Terminating all those movie productions that didn’t work out for them. Indian money down the Hollywood drain!
ஹாலிவூட் சினிமா இன்டஸ்ட்ரியில் வர்த்தக ரீதியாக இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துவது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. 3 வருடங்களுக்கு முன் மில்லியன் கணக்கான டாலர் முதலீட்டுடன் ஹாலிவூட்டுக்குள் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ் புகுந்த போது, இந்தியர்களின் ஆதிக்கம் ஹாவிவூட் சினிமா வர்த்தகத்தில் ஏற்படப்போகின்றது என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
3 வருடங்களின்பின் இன்று, ரிலையன்ஸ் முதலீடு செய்த மில்லியன் கணக்கான டாலர் தொகை, வெள்ளம் வடிந்ததுபோல மாயமாகி விட்டது. இதற்கு மேலும் ஹாலிவூட் சினிமா வியாபாரத்தில் ஈடுபடத்தான் வேண்டுமா என்று ரிலையன்ஸ் எண்ணத் தொடங்கியுள்ளது.
ரிலையன்ஸ் தனது பணத்தை ஹாலிவூட்டின் வெவ்வேறு செக்டர்களில் முதலீடு செய்திருந்த போதிலும், அவர்களது மிகப்பெரிய முதலீடு செய்யப்பட்டது DreamWorks ஸ்டூடியோ சினிமா தயாரிப்புகளில்தான். ட்ரீம்ஸ் ஒர்க்ஸில் ரிலையன்ஸின் முதலீடு 325 மில்லியன் டாலர்.
ட்ரீம்ஸ் ஒர்க்ஸ் ஸ்டூடியோ சமீபத்தில் இறங்கிய எந்த தயாரிப்பு முயற்சியும் பொருளாதார ரீதியில் ஆஹா-ஓஹோ லாபத்தைக் கொடுக்கவில்லை. லாபத்தைக் கொடுக்கும் என அவர்களது தயாரிப்பான Real Steel (Science fiction film), போட்ட முதலீட்டை திருப்பி எடுக்கவே திணற வேண்டியிருந்தது. Cowboys and Aliens (Science fiction Western film), லாபத்தைக் கொடுக்கவில்லை, 30 மில்லியன் டாலர் நஷ்டத்தைக் கொடுத்தது.

வட இந்தியாவில் 39 பெண்களை மணந்து 160 பேருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்

அய்ஸ்வால் : மிசோரம் மாநிலத்தில், 39 பெண்களை மணந்து, 160 குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக வசித்து வருகிறார், ஒரு அதிசய மனிதர். வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் உள்ளது பக்தவாங் டியாங்னுவாம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சையோனா, 67. விவசாயம், மரச்சாமான் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வரும் சையோனாவுக்கு, 39 மனைவிகள்.
முதல் மனைவியின் பெயர் ஜதியாங்கி, 71. இவருக்கு ஏழு குழந்தைகள். கடைசி மனைவி பெயர் வன்லால்சியாமி, 31. இவருக்கு, ஐந்து வயது மகள் இருக்கிறாள். சையோனாவுக்கு, 15 மருமகள்கள் உள் ளனர். 29 மகள்கள் திருமணமாகி, கணவருடன் தனியாக வசிக்கின்றனர்.

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம்: நரியைப் பரியாக்கும்

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமது நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளும், பழங்குடியின மக்களும் போராடி வரும் வேளையில், 1894ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது, மைய அரசு. இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்வதோடு, நிலத்தை இழக்கும் விவசாயிகளை மீளக் குடியமர்த்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான சட்டத்தையும் இம்மழைக்கால கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் போவதாகவும் மைய அரசு கூறியிருக்கிறது.
நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம் : நரியைப் பரியாக்கும் காங்கிரசின் மோசடி !
ஆங்கில ஏகாதிபத்திய எஜமானர்களால் 117 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு, இன்று வரை நடைமுறையில் இருந்துவரும் இந்நிலக் கையகப்படுத்தும் சட்டம், விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலங்கள் அபகரிக்கப்படுவதைப் பொது நோக்கம் என்ற அடிப்படையில் நியாயப்படுத்துகிறது. மைய அரசு கொண்டுவரவுள்ள திருத்தங்கள் இப்‘பொது நோக்கத்தை’க் கைகழுவவில்லை. கிராமப்புறங்களை மேம்படுத்துவது, பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது, ஏழைகள் மற்றும் நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பது, அரசின் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவது முதலானவற்றுக்காக நிலங்களைக் கையகப்படுத்தலாம் என வரையறுக்கப்பட்டிருந்த இடத்தில், அவற்றுக்குப் பதிலாக, தந்திரோபாய நோக்கங்களுக்காகவும் (Strategic purpose), பொது மக்களின் பயன்பாட்டிற்கான அடிக்கட்டுமானத் திட்டங்களுக்காகவும் நிலங்களைக் கையகப்படுத்தலாம் என இரண்டு பூடகமான திருத்தங்களை முன்மொழிந்துள்ளது, காங்கிரசு கூட்டணி அரசு.

நட்சத்திர ஹோட்டல்களுக்கு சி.எம்.டி.ஏ நோட்டீஸ்

கடற்கரை ஓரம் விதிமுறைகளை மீறி பாதி அளவு கட்டப்பட்ட 2 நட்டத்திர ஹோட்டல்களுக்கு சி.எம்.டி.ஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி நகரில் கூவம் ஆறு கடலில் கலக்கும் இடம் அருகே இரண்டு நட்சத்திர ஹோட்டல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் ஒரு நட்சத்திர ஹோட்டல்  300 அறைகளுடன் கட்டுமான பணி நடந்து வருகிறது. மற்றொரு ஹோட்டல் 250 அறைகளுடன் கட்டப்பட்டு வருகிறது.  கட்டுமான பணி பாதி அளவு முடிந்த நிலையில் இந்த 2 நட்சத்திர ஹோட்டல்களும் விதிமுறை மீறி கட்டப்பட்டு வருவதாக சி.எம்.டி.ஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது

பெரிய படங்கள் சிறிய படங்களை நசுக்குகின்றன..

பெரிய படங்களை எடுக்காமல் நிறுத்திவிடுவதுதானே!' - ஒரு புலம்பலும் கோபமும்

தமிழ் சினிமாவில் அடிக்கடி கேட்கும் முணுமுணுப்பு, 'சிறிய படங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. பெரிய படங்கள் சிறிய படங்களை நசுக்குகின்றன...' என்பதுதான்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைப் பற்றி பேசத் தவறுவதில்லை.
சமீபத்தில் நடந்த 'படம் பார்த்து கதை சொல்' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன் இதுகுறித்து ஒப்பாரியே வைத்துவிட்டார். அவ்வளவு புலம்பல்!
"இன்று நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் எடுக்கப்பட்டு, தியேட்டர் கிடைக்காமல் தவிக்கின்றன. பெரிய பெரிய படங்களை ஒப்பந்தம் செய்யும் தியேட்டர் உரிமையாளர்கள், சிறிய படங்களை கண்டுகொள்வதில்லை. படத்தை ரிலீஸ் செய்ய முடியாத பரிதாப நிலையில், சிறு பட தயாரிப்பாளர்கள் உள்ளனர்.

புதன், 9 நவம்பர், 2011

மராட்டியத்தில் துப்பாக்கி சூடு: காக்கை குருவிகளா விவசாயிகள்?

போலீசின் திட்டமிட்ட தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்
கடந்த ஆகஸ்டு மாதம் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மாவல் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மீது மிகவும் கொடூரமான முறையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தி, ஒரு பெண் உள்ளிட்டு மூன்று விவசாயிகளைத் துடிதுடிக்கப் படுகொலை செய்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு.  அரசின் நில அபகரிப்புக்கு எதிராக நடந்த விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக நடத்தப்பட்ட இத்துப்பாக்கிச் சூட்டில், 18 விவசாயிகளும் படுகாயமடைந்தனர்.
மகாராஷ்டிராவின் புனே பகுதியில் அமைந்திருக்கும் மாவல் வட்டம் மழை வளமும் நீர் ஆதாரங்களும் நிறைந்த வளமான பூமி.  விவசாயம்தான் இந்தப் பகுதி மக்களின் ஒரே வாழ்வாதாரம்.  இப்பகுதியில் அமைந்துள்ள பாவ்னா அணைக்கட்டைதான் விவசாயிகள் பாசனத்திற்கு பெரிதும் நம்பியுள்ளனர்.  இந்த அணைக்கட்டிலுள்ள நீரை, பிம்ப்ரி  சிஞ்ச்வாட் தொழிற்பேட்டை நகருக்கு எடுத்துச் செல்லவும், அதற்குத் தேவையான குழாய்களைப் பதிப்பதற்காக மாவல் பகுதியைச் சேர்ந்த விவசாய நிலங்களைக் கையகப்படுத்தவும் மகாராஷ்டிரா அரசு முனைந்து வருகிறது.

ஸ்பாட் ஃபிக்ஸிங் - பாகிஸ்தான் கிரிக்கெட்

மூன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஒன்று சிறைத்தண்டனை அளித்துள்ளது. சல்மான் பட், அப்போது பாகிஸ்தான் கேப்டனாக இருந்தார். அவருக்கு 30 மாதம் சிறைத்தண்டனை. முகமது ஆசீஃபுக்கு 12 மாதம். முகமது ஆமீருக்கு 6 மாதம்.
கிரிக்கெட்டைத் தீவிரமாகப் பார்த்து வருவோருக்கு இந்த வழக்கு ஆதியோடு அந்தமாகப் புரிந்திருக்கும். நான் ஒன்றும் புதிதாகச் சொல்லப்போவதில்லை.
ஆகஸ்ட் 2010-ல் இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தது பாகிஸ்தான் அணி. லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒரு டெஸ்ட் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங் என்ற கெட்ட காரியத்தைச் செய்தார்கள் என்பதுதான் இவர்கள்மீதான குற்றச்சாட்டு. அது என்ன கெட்ட காரியம்?

சன் பிக்சர்ஸ் திரைப்படங்களை திரையிட தடை

சன் பி்க்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றும் வெளியிடும் திரைப்படங்களை இனி திரையிடப் போவதில்லை என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் அவசரக்கூட்டம் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
பெற்றுக்கொண்ட டெபாசிட் தொகையை திரும்பச் செலுத்தாத காரணத்தினாலும்,
இதுகுறித்த பேச்சுவார்‌த்தையில் சரியான பதில் அளிக்காததாலும் இம்முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக சங்க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஏன் தியேட்டர்களை மூடி விட போகிறீர்களா? சன் பிக்சர்ஸ் ஒதுங்கி இருந்தாலும், திரைப்பட துறையினர்தான் அவர்கள் பின்னால் செல்கிறீர்கள் - படத்தை தயாரியுங்கள் அல்லது படத்தை வாங்கி வெளியிடுங்கள் என்று.

நடிகர் ஷாருக்கானிடம் 6 மணி நேரம் விசாரணை பணம் எப்படி வந்தது?

நடிகர் ஷாருக்கான் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டிக்கான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார்.   ஷாருக்கான் அவரது அணிக்கான கிரிக்கெட் வீரர்களுக்கு பலகோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார்.
அணி வீரர்களின் பயிற்சி, பராமரிப்புக்காகவும் பெருந்தொகை செலவு செய்துள்ளார். கோடிக்கணக்கில் முதலீடு செய்து அமைத்துள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐ.பி.எல். போட்டியிலும் கலந்து கொண்டது. இதற்கும் கோடிக்கணக்கில் பண பரிமாற்றம் நடந்துள்ளது.

கனிமொழி ஜாமீன்: டில்லி ஹை கோர்டின் யாரும் எதிர்பாராத முடிவு!

Viruvirupu New Delhi, India: Kanimzhi bail – Delhi High court put the ball on CBI’s court! Not an easy task for CBI to decide!!
கனிமொழி ஜாமீன் மனு இன்று டில்லி ஹைகோர்ட்டுக்கு வந்தபோது, யாரும் எதிர்பாராத முடிவு ஒன்று ஏற்பட்டிருக்கின்றது. இந்த வழக்கில் லேசாக டபுள்-கேம் ஆடத் தொடங்கியுள்ள சி.பி.ஐ.க்கு கிடுக்கிப்படி போட்டுள்ளது ஹைகோர்ட். “கனிமொழிக்கு ஜாமீன் கொடுப்பது தொடர்பாக ஆட்சேபணை கிடையாது என்று சொல்ல முடியாது. ஜாமீன்“கொடுக்கலாமா? கூடாதா? என்று கூறவேண்டும். Yes or No!”
பட்டியாலா கோர்ட்டில் கனிமொஜி ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, அதில் தமக்கு ஆட்சேபணை கிடையாது என்று கூறியிருந்த சி.பி.ஐ., இன்றும் அதே நிலைப்பாட்டையே எடுப்பதாகக் கூறியிருந்தது.
ஆனால் ஹைகோர்ட், இந்த விளையாட்டை வேறு விதமாக விளையாடி விட்டது. கனிமொழி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு குறித்து பதிலளிக்குமாறு சி.பி.ஐ-க்கு ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இப்போது பந்து சி.பி.ஐ. மைதானத்தில்! இவர்கள் சாதகமாக முடிவு செய்தாலும் சிக்கல். பாதகமாக பதில் சொன்னாலும் சிக்கல்.

நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா திருமணம்


நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர் பிரசன்னாவே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
விரும்புகிறேன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சினேகா. பைவ் ஸ்டார் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரசன்னா.ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஷாம், சினேகாவின் உதட்டை கடித்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது. அதே ஷாமுடன் சினேகா இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

பின்னர் சினேகா, நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைத்து பேசப்பட்டார்.இவர்கள் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் வந்தன.
சிங்கப்பூர் தொழிலதிபர் நாக்ரவி, பெங்களூர் தொழிலதிபர் ராகவேந்திரா இருவரும்,  சினேகா தங்களை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துவிட்டு ஏமாற்றி விட்டதாக சர்ச்சையை கிளப்பினர்.
இதையெல்லாம் பொய் என்று மறுத்துவந்த சினேகா, பிரசன்னாவை கைப்பிடிக்கிறார்.

லக்னோவில் இறந்தவர் மீண்டும் உயிர் பிழைத்தார்.அதிர்ச்சியில் டாக்டர்கள்


Boy declared dead wakes up in mortuary, doctor suspendedLucknow: The Uttar Pradesh government Monday suspended a doctor in a case of medical negligence in which a teenager declared dead by him regained consciousness in a mortuary in Muzaffarnagar district.லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முஸாபர்நகர் மாவட்ட மருத்துவமனையின் பிணவறையில், இறந்துவிட்டார் என்று நினைத்தவர் உயிர்த்தெழுந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தவறான இறப்பு சான்றிதழ் வழங்கிய மருத்துவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரத்தே (17). அவர் விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்தார். உடனே முஸாபர்நகர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் பிரதீப் மிட்டல் தெரிவித்தார். இறப்புச் சான்றிதழும் வழங்கினார்.
இரவு நேரமாகிவிட்டதால் மறுநாள் காலையில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டு ரத்தேயின் உடல் பிண கிடங்கில் வைக்கப்பட்டது. இதற்கிடையே மருத்துவமனைக்கு வந்த போலீசார் சில விவரங்களை சேகரித்தனர்.
மறுநாள் காலையில் பிரதே பரிசோதனை செய்ய மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வந்தனர். அப்போது ரத்தே உயிர்த்தெழுந்தார். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ரத்தே சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஒருவர் இறந்துவிட்டாரா, இல்லையா என்று கூட பார்க்கத் தெரியாத மருத்துவர் பிரதீப் மிட்டல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சீல்வைப்பு நடவடிக்கை: தி.நகரில் நாளை கடைகள் அடைப்பு; வியாபாரிகள் அறிவிப்பு!

சென்னை: ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்க தலைவர் சித்திரைபாண்டியன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.நகர் ரங்கநாதன் தெருவில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டதாக கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் அங்குள்ள வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
10 நாட்களாக கடைகள் மூடிக் கிடப்பதால் வியாபாரிகள் பெரிய நஷ்டம் அடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் முதல்-அமைச்சரை சந்தித்து பேச வாய்ப்பு தருமாறு மனு கொடுத்திருக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டையும் அணுகி உள்ளோம்.

அமீர்கானுடன் கைகோர்க்கிறார் ரஜினிகாந்த்


கடந்த சில நாட்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக தனது நடிப்பை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்தார். உடல்நலம் தேறியவுடன் வெளிஉலகுக்கு வந்ததும், தான் நடித்து கொண்டிருக்கும் படமான ரா ஒன்-இல் இணைந்து நடிக்க ஷாருக்கான் கேட்டுக் கொண்டதால், அந்த ஒரு காட்சியை ரஜினி நடித்து கொடுத்தார். 
இதனையடுத்து தற்போது ரஜினி அமீர்கானுடன் விளம்பரப் படத்தில் நடிக்கப் போவதாக தெரிகிறது. இது ஒரு அரசு விளம்பரப்படமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த விளம்பரப்படமாகவும் இருக்கலாம். 
இவர்கள் போன்ற பிரபலமான நடிகர்கள் நடிப்பதன் மூலம், விளம்பரம் மக்கள் மத்தியில் வேகமாக பரவும் என்பது அரசின் நோக்காமாக இருக்கிறது.  இதற்கு முன்பு  80-களில் ரஜினிகாந்த் இதுபோன்ற போலியோ ஒழிப்பு விழிப்புணர்வுகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவிடம் இன்னும் 775 கேள்விகள் கேட்கப்பட வேண்டும்: வழக்கறிஞர்


சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக வரும் 22.11.2011 அன்று ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் அதற்கு மறுநாளும் விசாரணை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
வருவாய்க்கு அதிகமாக 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்குள் குவித்தது தொடர்பான வழக்கில், விசாணைக்கு 08.11.2011 அன்று மீண்டும் விசாணைக்கு ஆஜராக வேண்டும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தவிர்ப்பதற்காக ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த வழக்கில் ஜெயலலிதா ஆஜராகவில்லை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மட்டு:ம ஆஜரானார்கள். ஜெயலலிதா தரப்பில் நீதிமன்றத்தில் வேறு தேதியில் ஆஜராக அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், ஜெயலலிதா வரும் 22ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

திமுக அரசு நியமித்த மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேர் அதிரடி நீக்கம்


சென்னை : மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேரை டிஸ்மிஸ் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. அரசின் உத்தரவுக்கு அரசு ஊழியர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் உள்ளாட்சித் துறையின் கீழ் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 13,500 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், பஞ்சாயத்தில் செய்யப்படும் அனைத்து வேலைகளையும் கவனிப்பார்கள்.
மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரும் தற்காலிக ஊழியர்கள். அடுத்த ஆண்டு மே 31ம் தேதி வரை அரசு அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று இரவு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், தமிழகத்தில் பணியாற்றி வரும் மக்கள் நலப் பணியாளர்களின் பதவிகள் கலைக்கப்படுகின்றன. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகின்றன.

என்ன ஆகும் அண்ணா நூற்றாண்டு நூலகம்?

சுகுமாரன்
I have always imagined that Paradise will be a kind of library.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, சரியாகச் சொன்னால் 1964 முதல் திருவனந்தபுரத்தில் இயங்கி வந்த பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடினார்கள். இந்தியாவில் மிகச் சிறப்பாக மேலாண்மை செய்யப்பட்ட நூலகங்களில் ஒன்று என்ற புகழும் அந்த நூலகத்துக்கு இருந்தது. நகரத்தின் மிகப் பிரபலமான கல்வியாளர்களையும் அறிவியலாளர்களையும் சிந்தனையாளர்களையும் எழுத்தாளர்களையும் உருவாக்கியதில் பி.சி.எல். நூலகத்தின் பங்கு கணிசமானது. எனினும் பிரித்தானிய அரசு நூலகத்தைக் கைவிடத் தீர்மானம் செய்தது. இந்தியாவில் தனது பௌதிக இருப்பைக் (physical presence) குறைக்கும் நடவடிக்கையின் பாகமாக இந்த முடிவு என்றும் நூலக வடிவில் தங்களுடைய சேவையை நிறுத்திவிட்டு அந்த நிதியை வேறு கல்வி, கலாச்சாரப் பணிகளுக்குச் செலவிட இருப்பதாகவும் தூதரகம் அறிவித்தது. நூலகத்தில் இருந்த சுமார் 27,000 புத்தகங்கள் சென்னை உட்படப் பிற நகரங்களில் செயல்பட்டுவரும் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகங்களுக்கு மாற்றப்படும் என்றும் அறிவித்தது.

செவ்வாய், 8 நவம்பர், 2011

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை 27இல் திறப்பு


எதிர்வரும் 27ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டதன் பின் அதில் பயணிக்க ஆகக்குறைந்த கட்டணமாக 100 ரூபாவும் முழு தூரமும் செல்ல கார் ஒன்றுக்கு 400 ரூபாவும் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.130.9 கிலோமீற்றர் வீதி அமைக்கும் இத்திட்டத்தின் ஒரு கட்டமாக 126 கிலோ மீற்றர் நீளமான அதிவேக வீதி அமைக்கப்படுகின்றது. இவ்வீதியானது கொழும்பிலிருந்து மாத்தறை வரை நீண்டு செல்கின்றது. பல பாதுகாப்பு வசதிகளைக் கொண்டு அமைக்கப்படும் இதன் நிர்மாணப்பணிகள் 2003 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது பூரத்தியடைந்துள்ளன.
இந்த வீதியினூடாக ஆகக் குறைந்த வேகமாக 60 கி.மீ வேகத்திலும், ஆகக் கூடியதாக 120 கி.மீ வேகத்திலும் பயணிக்கலாம் எனவும் முச்சக்கர வண்டிகளும், மோட்டார் சைக்கிள்களும் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியின் நிர்மாணத்திற்கான நிதி உதவிகளை சர்வதேச ஜப்பான் வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியன வழங்கியுள்ளன.
நான்கு கட்டமாக அமைந்து காணப்படும் இவ்வீதியில் கொழும்பிலிருந்து மாத்தறைக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லக் கூடியதாக இருப்பதோடு, ஒன்றரை மணித்தியாலங்களில் பயணத்தை முடித்துக் கொள்ளலாமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வீதியில் 22 பாலங்கள் காணப்படுகின்றன.
திறக்கப்படவுள்ள தெற்கு அதிவேக வீதியின் வாகன போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நியமிக்கவுள்ளதாக

தினமணி’ ஆசிரியர் மீது அவதூறு வழக்கு : கருணாநிதி

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, எழும்பூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 4-ம் தேதி ‘தினமணி’ தலையங்கத்தில் ஒரு செய்தி வெளியானது. அதில், ‘அண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாள சின்னம் என்பதை முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டி காட்டாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா, அவரது ஆட்சிக்கு வந்து இன்னொரு தலைமை செயலகத்தை கட்டி விடக்கூடாது என்பதற்காக மட்டும் இந்த நூலகம் கட்டப்படவில்லை’ என கூறப்பட்டுள்ளது.
அண்ணா நூலகம், அறிஞர் அண்ணாவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு கட்டப்பட்டது. அனைத்து மக்களும் அதிகம் விரும்பும் நூல்கள் அடங்கிய இந்த நூலகம் பொதுப்பணித்துறையின் நேரடி பார்வையில் கட்டப்பட்டது. அந்த நூலகம் கட்டுவதற்கான டெண்டர் வெளிப்படையானது. இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. கட்டிடம் கட்டப்பட்டபின் அதற்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் என பெயரிடப்பட்டது. இந்நிலையில் வேண்டும் என்றே ‘தினமணி’ ஒரு அவதூறான செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த செய்தி கற்பனையாக எழுதப்பட்டது.
எந்தவித விசாரணையும் இல்லாமல், ஆதாரமும் இல்லாமல் உண்மைக்கு புறம்பாக இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மோடிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு!


குஜராத் மாநிலத்தில் 2002-ஆம் ஆண்டு இந்து மதவெறிக் கும்பல் கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலையின்பொழுது கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியும், இவ்வினப்படுகொலைகளுக்கு நீதி வேண்டிப் போராடி வரும் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பும் இணைந்து, “இவ்வினப்படுகொலை தொடர்பான வழக்கில் மோடியையும் மற்றும் அவரது சக அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும்; இவ்வழக்கை மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்’’ எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த நான்காண்டுகளாக இம்மனு மீதான விசாரணையை நடத்தி வந்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு மன்றம், “இது நாள்வரை தமது கண்காணிப்பின் கீழ் நடந்துவந்த விசாரணை முடிவுகளின் அடிப்படையில் ஜாகியா ஜாஃப்ரியின் புகார் மீதான இறுதி முடிவை விசாரணை நீதிமன்றம் எடுக்க வேண்டும்; சிறப்புப் புலனாய்வுக் குழு தனது இறுதி அறிக்கையையும், இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விசாரணை நீதிமன்றத்திடம் அளிக்க வேண்டும்; இனி, இந்த வழக்கைத் தாம் கண்காணிக்கப் போவதில்லை’ எனத் தீர்ப்பளித்து, இவ்வழக்கைத் தொடங்கிய இடத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டது.  இத்தீர்ப்பின் சாதக  பாதக அம்சங்களுக்குள் புகுவதற்கு முன், ஜாகியா ஜாஃப்ரியின் புகார் மனுவின் பின்னணியையும், அவர் எந்த நிலையில் நீதி வேண்டி உச்ச நீதிமன்றத்தை அணுகினார் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது.
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இனப்படுகொலைகளுள் ஒன்று, குஜராத் படுகொலை.

ஒளிந்திருந்த நாட்களில் கடாபி சாப்பாட்டுக்குக் கூட கஷ்டப்பட்டார்


Gaddafi
த்ரிபோலி: கொல்லப்பட்ட முன்னாள் லிபிய அதிபர் கடாபி யாருக்கும் தெரியாமல் ஒளிந்திருந்த நாட்களில் உணவு கூட இல்லாமல் கஷ்டப்பட்டார் என்று அவரது பாதுகாப்பு படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கடாபியின் உயர் பாதுகாப்பு அதிகாரி மசூர் தாவ் சிஎன்என்-இடம் கூறியதாவது,
சிர்டே நகரில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்தபோது கடாபி உணவுக்கு கூட கஷ்டப்பட்டார். ஏதோ கிடைத்ததை வைத்து வாழ்ந்தார். அங்கு தன் பெட்டியில் வைத்திருந்த புத்தகங்களை வாசித்து பொழுதைப் போக்கினார்.மாட மாளிகையில் சகல வசதியுடன் வாழ்ந்த கடாபி கடைசி காலத்தில் மின்சார வசதி இன்றி ஒரு டிவி கூட இல்லாமல் இருந்தார்.
போராளிகள் தான் இருக்கும் இடத்தை நோக்கி வருகிறார்கள் என்று தெரிந்ததும் அவர் பதட்டமாக இருந்தார். அவருக்கு பயம் வந்துவிட்டது என்று தெரிந்தது.

பா.ம.க.-வின் பெரிய-சின்ன ஐயாக்களும் ‘திகார்’ பக்கம் ஒதுங்க வேண்டுமோ!


Viruvirupu
சென்னை, இந்தியா: பா.ம.க. சார்பில் மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி, பெட்டி படுக்கைகளுடன் திண்டிவனத்தில் வந்து இறங்கியபின், பா.ம.க.வுககு டில்லியில் பெரிதாக அலுவல் ஏதும் இல்லாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக டில்லியில், பா.ம.க. குரல்கள் சில ‘கிசுகிசுப்பாக’ ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
‘கிசுகிசுப்பாக’ என்று எழுதியதால் அதெல்லாம் அரசியல் விவகாரம் அல்ல என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இது ஒரு கிரிமினல் கேஸ் தொடர்பான விவகாரம். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ஆகியோரின் பெயர்களும் சார்ஜ்-ஷீட்டில் உள்ள கொலை வழக்கு இது.

மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்த வழக்கு: மருத்துவர் முர்ரே குற்றவாளி


மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்த வழக்கில், அவரது மருத்துவர் முர்ரே குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற இந்த வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 வாரங்களாக நடந்த விசாரணையில் மருத்துவர் எதிராக 300 ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 49 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். போதைக்கு அடிமையான ஜாக்சன், மயக்க மருந்தை தனக்கு தானே செலுத்திக்கொண்டதால், உயிரிழந்ததாக மருத்துவர் முர்ரே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்த வழக்கில், அவரது மருத்துவர் முர்ரே குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட 17.34 மெற்றிக்தொன் தங்கம்


புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட 17.34 மெற்றிக்தொன் தங்கம் எங்கே-அனுர குமார திசாநாயக்க!
இலங்கை மத்திய வங்கியில் கையிருப்பில் இருக்கும் தங்கங்களுக்குள் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்கமும் சேர்க்கப்பட்டிருக்கின்றதா என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. அனுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் மத்திய வங்கியின் இருப்பிலுள்ள தங்கத்தின் அளவு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, தற்போது 17.34 மெற்றிக்தொன் தங்கமும் இருப்பதாகக் கூறினார்.

தோழிகள் தாலி கட்டி திருமணம்: மணக்கோலத்தில் வந்தவர்களுக்கு அடி


ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த காத்தாயகுண்டா பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் பிரசன்னா (21), ஜீனா (25). ஆரம்பப்பள்ளியில் ஒன்றாக படிப்பை தொடங்கிய இருவரும் 10ம் வகுப்பு வரை ஒன்றாகவே படித்துள்ளனர். பின்னர், படிப்பை நிறுத்திவிட்டு அங்குள்ள பால் டிப்போவில் வேலை செய்து வருகின்றனர்.
இருவரும் நெருங்கிய தோழிகள். எப்போதும் இணைபிரியாமல் இருப்பார்களாம். ஒன்றாகவே வேலைக்கு வருவார்கள். ஒன்றாகவே திரும்பி செல்வார்கள். வெளியில் போவதென்றாலும் சேர்ந்தே சென்று வருவார்கள்.<
சமீபத்தில் ஒருநாள், அவர்கள் பேசும்போது, திருமணம் நடந்தால் வேறு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்குமே என்று கூறி வருத்தப்பட்டுள்ளனர். வேறொருவரை திருமணம் செய்தால்தானே பிரிய வேண்டும். நாம் இருவருமே திருமணம் செய்துகொள்ளலாமே என்றும் பேசியிருக்கின்றனர்.
07.11.2011 அன்று காலை இருவரும் வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறினர். திருப்பதியில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றனர். அங்கு மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர், பிரசன்னாவின் கழுத்தில் ஜீனா தாலி கட்டியுள்ளார்.