ந. சரவணன்: காலச்சுவடு இதழிலில் எழுத்தாளர் தொ.பத்திநாதன் அவர்களது கட்டுரை காலச்சூழலுக்கு ஏற்ற ஒன்றாகவே காண முடிகிறது.
Pathi Nathan : தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள், அவர்களின் நிலை, அவர்களுக்கு உள்ள வாய்ப்புகள், மாநில அரசு அனுகும் விதம்,
ஏற்கனவே இருந்த பார்வையில் இருந்து அகதிகளை தற்போது அனுகும் விதம். என்பது பற்றியும்,
அடுத்து மத்திய மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் தெளிவான ஒரு பார்வையினை முன் வைத்துள்ளார்.
குறிப்பாக தமிழக முகாம்களில் இருக்கும் மக்கள் வெவ்வேறு பின்புலங்களை கொண்டவர்களாக இருக்கிறார்கள்,
அதாவது இந்திய வம்சாவழி தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் என இருக்கின்றனர். இருவேறு பின்புலங்களை கொண்ட மக்களுக்கான வாய்ப்புகளை வெவ்வேறு வகையான அனுகுமுறையிலேயே அனுக இயலும். அதற்குத்தான் தற்போதைக்கு வாய்ப்பிருக்கிறது.
சனி, 5 பிப்ரவரி, 2022
நாடற்ற இந்தியர்களும் இலங்கை அகதிகளும் ! தொ.பத்திநாதன்
ஆளுநர் அல்லது NEET என்பதை மாநில உரிமை என்பதோடு சம்மந்தப் படுத்தி பாருங்கள்.!
Kandasamy Mariyappan : தனியார் மருத்துவ கல்லூரிகள் என்றாலே..,
அரசியல்வாதிகள் கொள்ளையடித்து கட்டிய கல்லூரிகள் அல்லது
அரசியல்வாதிகள் கொள்ளையடிக்க உருவாக்கப்பட்ட கல்லூரிகள் என்று நமது மனதில் ஆழமாக திணித்து விட்டனர்.!
ஒரு சீட்டுக்கு பல கோடிகளை வசூலிக்கின்றனர் என்று உளறிக் கொண்டே இருக்கிறோம்.!
ஒரு மருத்துவ கல்லூரி நடத்துவது என்பது பெட்டிக் கடை நடத்துவது இல்லை.!
உதாரணமாக, சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் ஏறத்தாழ 5000 நபர்கள் பணி புரிகின்றனர்.
ஏறத்தாழ 20 கோடி ரூபாய் மாத சம்பளமாக வழங்குகின்றனர்.!
இது போக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை, Maintenance, Lab Facility, Cadavar Facility etc.!
இதெல்லாம் யார் தருவது.!
நீட் தேர்வு விலக்கு - மறுபரிசீலனை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு கோரிக்கை!
zeenews.india.com : நீட் தேர்வில் இருந்து விலக்கு தொடர்பான சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஆளுநர் மூலம் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்கு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டுவது என முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பான சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்து ஆளுநர் அச்சட்ட முன்வடிவை திருப்பி அனுப்பியுள்ளார்.
face book - Meta பங்குச்சந்தை மதிப்பு 230 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ச்சி! ஒரே நாளில் ..
vikatan : பேஸ்புக்கின் உரிமையாளரான Meta நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 230 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன் பங்குகள் 26.4 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளன.
பேஸ்புக்கின் வழமையான பயனர்களின் பாவனை கடந்த 18 வருடங்களில் முதற்தடவையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக Meta நிறுவனம் தெரிவித்துள்ளது.
Meta நிறுவனத்தின் சிரேஷ்ட நிறைவேற்றதிகாரி Mark Zuckerberg இன் நிகர சொத்து மதிப்பு 31 பில்லியன் டொலரினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக Bloomberg செல்வந்தர்களுக்கான குறிக்காட்டி தெரிவித்துள்ளது.
இராவணனை வழிபடும் இடங்கள் மத்தியப் பிரதேசத்தில்
Muthu Selvan : இராவணனை வழிபடும் இடங்கள்
மத்தியப் பிரதேசத்தில் இரண்டு உள்ளன.
இராவணனை, குணமளிப்பவனாகவும் பாதுகாவலனாகவும் கொண்டாடுகிறார்கள்.
1. அந்த மாநிலத்தில் உள்ள மண்ட்சார் என்னும் ஊர் இராவணனின் மனைவி மண்டோதரியின் ஊராகக் கருதப்படுகிறது. எனவே அந்த ஊர் மக்கள் இராவணனை மருமகனாகக் கருதுகின்றனர்.
அந்த நகரத்தின் கான்பூர் பகுதியில் உள்ள 35 அடி உயர இராவணன் சிலையின் இடது காலில் ஒரு சிவப்புக் கயிற்றைக் கட்டுவதன் மூலம் நோய் நொடிகளிலிருந்து மக்கள் காப்பாற்றப்படுவதாக நம்புகின்றனர்.
பாகிஸ்தானில் இந்து தொழிலதிபர் சுட்டு கொலை
தினத்தந்தி : பாகிஸ்தானில் இந்து தொழிலதிபர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்கு கோட்கி மாவட்டத்தில் சத்தன் லால் என்ற இந்து தொழிலதிபருக்கு, 2 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை ஒப்படைத்து விட்டு இந்தியாவுக்கு ஓடும்படி, முஸ்லிம்கள், சத்தன் லாலுக்கு தொல்லை கொடுத்து வந்தனர்.
இதற்கு சத்தன் லால் மறுக்கவே, 8 ஆண்டுகளுக்கு முன் அவர் மீது துப்பாக்கி சூடு நடந்தது. அதில் படுகாயத்துடன் சத்தன் லால் உயிர் தப்பினார். இந்நிலையில், சத்தன் லால் நிலத்தில் பருத்தி ஆலை மற்றும் மாவு ஆலை அமைப்பதற்கான துவக்க விழா நடந்தது.
ஆங்கிலம் தெரிந்திருந்தும் தமிழக எம்பிக்களுக்கு இந்தியில் பதிலளித்த . ஜோதிராதித்ய சிந்தியா பிஜேபி எம்பி
மத்தியப் பிரதேசத்தின் குவாலியரை ஆட்சி செய்த சிந்தியா என்ற மராத்திய அரச குடும்பத்தின் வாரிசு இந்த ஜோதிராதித்ய சிந்தியா. இளம் வயதிலிருந்தே காங்கிரஸில் தீவிரமாக செயல்பட்ட அவருக்கு 2018ல் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டது.
அந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் முதல்வர் பதவியை எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கமல்நாத்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதால் காங்கிரஸிலிருந்து விலகினார். ஆட்சியைக் கவிழ்த்தார். பாஜக ஆட்சியைப் பிடிக்க அதற்குக் கைமாறாக மத்திய அமைச்சராக்கப்பட்டார்.
ஒரு காலத்தில் ஒரே கட்சியில் இருந்த சிந்தியாவை சசி தரூர் நேற்று சாடினார்.
வெளிநாட்டு திராவிடர் நலனுக்கான குழு! பேரறிஞர் அண்ணாவிடம் இ தி மு க.. (வரலாறு)
ராதா மனோகர் : 1951 ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழக மாநாட்டுக்கு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மூவரை அனுப்புவது என்று கழக தோழர்கள் முடிவு செய்தனர் கொடியோடு ஏ இளஞ்செழியன்
அம்மாநாட்டு நிதியை சேர்க்கும் பணியை தோழர் இளஞ்செழியன் ஏற்று கொண்டார்.
இந்த நிதியை சேர்க்கும் முகமாக கண்ணீர் என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்கள்
மலையக தோட்டங்களில் வாழ்வை தொலைத்து கொண்டிருக்கும் மலையக மக்களின் கண்ணீர் கதையையே ஒரு நாடகமாக தயாரித்திருந்தார்கள்
இந்நாடகத்தை தோழர் வி செம்பனூர் தோழர் கே கே இராமசாமி ஆகியோர் எழுதி இயக்கி இருந்தனர்
வெள்ளி, 4 பிப்ரவரி, 2022
ஒவைசியின் கார் மீது துப்பாக்கி சூடு .. உத்தர பிரதேசத்தில்
மின்னம்பலம் : உத்திரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கே ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசிக்கு ஒன்றிய உள்துறை இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க முன்வந்ததை ஓவைசி ஏற்க மறுத்திருக்கிறார்.
பிப்ரவரி 3 ஆம் தேதி மேற்கு உத்தரப் பிரதேச பகுதியில் உள்ள மீரட் நகரில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு, ஓவைசி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார்.
ஹபூர் மாவட்டம் பில் குவா பகுதியில் சாஜர்ஷி டோல்கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது ஓவைசியின் காரின் முன் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.
ஐ.எஸ். தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி குண்டை வெடிக்கவைத்து உயிரிழப்பு. அமெரிக்க படையால் சுற்றிவளைக்கப்பட்டார்
veerakesarai : அமெரிக்காவின் விசேட படைப்பிரிவினர் சிரியாவின் மேற்குபகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு விசேட நடவடிக்கையில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி கொல்லப்பட்டுள்ளார்.
தங்களது படைகளால் சுற்றிவளைக்கப்பட்டவேளை ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி குண்டைவெடிக்கவைத்ததாகவும், அவரும் அவரது குடும்பத்தினரும் இதன்போது கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019 இல் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்ட பின்னர் ஐ.எஸ். அமைப்பின் தலைவராக அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
கண்ணீர் விட்ட ரஜினி: கோபத்தில் கத்திய தனுஷ், அதிர்ந்த ஐஸ்வர்யா
Shameena Parveen - Samayam Tamil : மூத்த மகளின் வாழ்க்கையை நினைத்து ரஜினிகாந்த் கண்ணீர்விட்டாராம்.
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் திருமணம் செய்து கொண்டு 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். பிரிவை அறிவித்துவிட்டு அவரவர் வேலையை பார்க்கச் சென்றுவிட்டார்கள்.
தனுஷையும், ஐஸ்வர்யாவையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார் ரஜினி. ஐஸ்வர்யாவின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்கிற வேதனையில் ரஜினி அழுதுவிட்டாராம்.
இது தவறான முடிவு, 2 மகன்களை நினைத்து மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ் என்று கூறியும் ஐஸ்வர்யா கேட்கவில்லையாம். இதற்கிடையே ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக இருக்கிறாராம் தனுஷ்.
நீட் விலக்கு விவகாரம் - ஆளுநர் மாளிகையை முற்றுகையிட தயாராகும் கட்சியினர்+ கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு!
நக்கீரன் :நீட் விலக்கு மசோதாவை நிராகரிப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு பல்வேறு அமைப்பினரும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக அரசு இதுதொடர்பான விரிவான விளக்கத்தைத் தெரிவித்துள்ளது.
ஆளுநரின் முடிவைக் கடுமையாக எதிர்ப்பதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில்,
குறிப்பிட்ட சில அரசியல் கட்சியினர் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என்று அறிவித்துள்ளனர். நேற்று கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலிருந்து ஆளுநர் மாளிகையை நோக்கிச் செல்ல முயன்றனர்.
திருச்சி ராமஜெயம் (நேருவின் தம்பி) கொலை வழக்கு: சிபிசிஐடி - டிஜிபி - ஷகில் அக்தர் ஐபிஎஸ்ஸிடம்
மின்னம்பலம் : திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012 மார்ச் 29ஆம் தேதி அதிகாலை வாக்கிங் செய்ய சென்றவர் வீடு திரும்பவே இல்லை. அதற்கு பிறகுதான் அவர் மர்மமான முறையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட தகவல் தமிழகத்தை அதிர வைத்தது.
அந்த சம்பவம் நடந்து மிகச் சரியாக பத்து வருடங்கள் முடிய போகிற நிலையில், அவரை கொலை செய்தவர்கள் யார் என்ற கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை.
மறைந்த புதுக்கோட்டை (எம் எல் ஏ) திரு .பெரியண்ணன் .. இலங்கையில் ஆரம்பித்த திராவிட பயணம்.
ராதா மனோகர் : 1953 ஆம் ஆண்டு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் அழைப்பை ஏற்று தமிழ்நாட்டில் இருந்து சிந்தனை சிற்பி சி பி சிற்றரசு ,மற்றும் கிளர்ச்சி பத்திரிகையின் ஆசிரியரான இரா. சு.தங்கப்பழம் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்தனர் திரு ஏ. பெரியண்ணன்
இலங்கையில் 30 இற்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கு பற்றி சொற் பொழிவாற்றினார்கள்
(19 ஏப்பிரல் 1953 ) கொழும்பு மாவட்ட தி மு கழகத்தின் சார்பில் கொழும்பு நகரசபை மண்டபத்தில் தோழர் ஆர் ஆர் கே டெய்லர் தலைமையில் சிந்தனை சிற்பி சிற்றரசுவுக்கும் இரா சு தங்கப்பழம் அவர்களுக்கும் பெரும் வரவேற்பு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது
கூட்டம் ஆரம்பிக்க முன்பு ஆயிரக்கணக்கான கழக தொண்டர்கள் கறுப்பு சிவப்பு கொடிகளை உயர்த்தி பிடித்தவண்னம் ஊர்வலமாக சென்றனர்
அவர்களின் பதாகைகளில்
சாதி மதம் ஒழிக்க
கண்மூடி பழக்கம் மண்மூடி போக
சமத்துவம் ஓங்குக
மத்திய சர்கார் ஒரே ஒரு மொழியை மட்டுமே வளர்க்கிறது! அமரர் விடுதலை விரும்பி அய்யாவின் ஆழமான ஒரு உரை!
ராதா மனோகர் : தென்னிந்தியாவில் ஒரு ஆழமான கருத்து நிலவுகிறது . மத்திய சர்கார் ஒரே ஒரு மொழியை மட்டுமே வளர்க்கிறது அது உண்மையும் கூட .. சொல்லி விட்டு சொன்னேன் . If we go to the annual reports of the all ministries , we will find the chapter describing the actions taken or propose to be taken to develop the hindi language ..
இங்கே இருக்க கூடிய மந்திரிசபைகளின் ஆண்டறிக்கைகளில் பார்த்து சொன்னால் .
ஒவ்வொரு துறையில் உள்ள ஆண்டறிக்கையிலும் இந்தி மொழியை வளர்ப்பதற்காக திட்டங்கள் அல்லது இனி வளர்ப்பதற்கான திட்டங்கள் என்று ஒரு தனி அத்தியாயம் போட்டு எழுதுறான்..
but in a same time we do not find a single sentence to develop of other indian languages.
ஆனால் மற்றையை இந்திய மொழிகளின் வளர்ச்சி குறித்தது ஒரு வாக்கியம் கூட அந்த ஆண்டறிக்கையில் பார்க்க முடிவதில்லை.
there for எனவே I like to know from the honorable Prime Minister there were any proposal to develop other indian languages in a way it has done for the development of hindi language.
வியாழன், 3 பிப்ரவரி, 2022
அவர்கள் ஹிஜாப் போட்டா! நாங்கள் காவி துண்டு போடுவோம்! கர்நாடக மாணவர்களின் போராட்டம்.
கர்நாடகாவில் 10ம் வகுப்பிற்கு பின் பியுசி படிக்கும் நடைமுறை இப்போது உள்ளது. அதாவது +1, +2 கர்நாடகாவில் ஜூனியர் காலேஜ் அல்லது பியு காலேஜ் என்று அழைப்பார்கள்.
இந்த பியு கல்லூரிகளில்தான் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இத்தனை காலமாக அங்கு இருக்கும் மாணவிகள் ஹிஜாப் அணிந்துதான் பியு கல்லூரிக்கு வந்துள்ளனர். இதுவரை அங்கு எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை.
ஆனால் சமீப காலமாக இஸ்லாமிய மாணவிகள் இப்படி ஹிஜாப் அணிவதை இந்து மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தென்னாபிரிக்க தமிழர்களின் மதம் தமிழ்தான் இந்து அல்ல.. பர்மா - பிஜி - ரியூனியன் தமிழர்களின் மதமும் தமிழே .. இந்து அல்ல
Sundar P : நான் சில மாதங்களுக்கு முன் தாய்லாந்தில் உள்ள ஒரு காபி நிலையத்தில் ஒரு பெண்ணை சந்தித்தேன். அவர் கருப்பாய் தோற்றத்தில் இந்தியப் பெண் மாதிரி இருந்தார். சினேகமாய்ச் சிரித்தேன். அவரும் பதிலுக்கு சிரித்தார்
"இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?"
"இல்லை தென் ஆப்பிரிக்காவிலிருந்து" என்றார். எனக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது.
அவரது கையில் ஒரு காபி, எனது கையிலும் ஒரு காபி.
"இங்கு உக்காரலாமா?"
"ஓ" என்று தலையசைத்தார்
தானொரு கால்நடை மருத்துவர் என்றும், உயிரியல் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் சொன்னார்...
ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா? -முதல்வர் மு.க.ஸ்டாலின்
நக்கீரன் செய்திப்பிரிவு தமிழக அரசு நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கடந்த 7 மாதங்களாக கிடப்பில் வைத்திருந்தார் ஆளுநர் ரவி.
இந்த நிலையில், இன்று அந்த சட்ட மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பியிருக்கிறார்.
ஆளுநரின் இந்த செயல்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
நீட் விலக்கு மசோதா தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் அறிவித்திருக்கும் நிலையில், அண்ணா நினைவு நாளான இன்று ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் 'பேரறிஞர் அண்ணாவின் 53-ஆவது நினைவுநாளில், "ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையா?" என்று அண்ணா அவர்கள் அன்றே காரணத்தோடு எழுப்பிய கேள்வியை எண்ணிப் பார்க்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.
இரு மீனவர்கள் உயிரிழப்பு – கொந்தளிக்கும் யாழ். மீனவர்கள் – டக்ளஸ் தேவானந்தாவை முற்றுகையிட்டு வாக்குவாதம்
BBC : இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை தங்களுடைய கடற்படை தடுக்கத் தவறினால், அந்த மீனவர்களை நாங்களே தாக்குவோம் என்று இலங்கை யாழ்ப்பாணம் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர்களின் நிலைப்பாட்டை ஆமோதிக்கும் வகையில் இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஆனால், மீனவர்கள் கோரியபடி, அவர்களின் பிரச்னைக்கு எழுத்துபூர்வ உத்தரவாதத்தை தர அமைச்சர் மறுத்ததால் அவர் மீது யாழ்ப்பாணம் மீனவர்கள் அதிருப்தியுடன் காணப்படுகின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன்பிடிக்கும்போது பிடிபட்டதாகக் கூறி கைதாகி பின்னர் விடுவிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதுபோல, சமீபத்திலும் சில சம்பவங்கள் நடந்துள்ளன. இதேவேளை, இரண்டு இலங்கை மீனவர்களும் சமீபத்தில் நடுக்கடலில் தாக்கப்பட்டு பின்னர் இறந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி
மலைமலர் : நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகுதான், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்ப முடியும்.
இன்று பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாள்.. அண்ணாவின் குரலை ஒலித்த ராகுல் காந்தி
இன்று பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாள்
அவருக்கு நாம் நினைவேந்தலைச் செலுத்தும் இத்தருணத்தில், வேறு ஒருவர் ஒரு நாள் முன்னதாகவே அதைச் செலுத்திவிட்டார் என்று தோன்றுகிறது.
நேற்று நாடாளுமன்றத்தில் ராகுல் பேசியப் பேச்சைக் கேட்டேன். அவர் எப்போது திமுகவில் சேர்ந்தார்?
எந்த நாடாளுமன்றத்தில் அண்ணாவின் கூக்குரலுக்கு செவிமடுக்காமல், அவரது
அறிவுரையைக் கேட்காமல், அவரது எதிர்கால நோக்கை அறியாமல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் பிற காங்கிரஸ், ஜனசங்க, கம்யூனிஸ்ட் தலைவர்களும் அவரைப் புறக்கணித்தார்களோ. அலட்சியப் படுத்தினார்களோ, தோற்கடித்தார்களோ, அதே நாடாளுமன்றத்தில், அதே ஜவஹர்லாலின் வாரிசு, ராகுல் காந்தி நேற்று பேசியதெல்லாம், அண்ணா அன்று சொன்னதை இன்று வழிமொழிந்ததுதான்.
சென்னை மாநகராட்சியில் காங்.க்கு 17, விசிக-வுக்கு 6 வார்டுகள்! சிதம்பரம் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கும் ஒதுக்கீடு
நக்கீரன் : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகளுக்குச் சென்னை மாநகராட்சியில் 18-திருவெற்றியூர், 45-பெரம்பூர், 72-திருவிக நகர், 107-அண்ணா நகர், 135-அசோக்நகர், 190-பள்ளிக்கரணை ஆகிய ஆறு வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு திருமணத்தையும் வன்முறை என்றும், ஒவ்வொரு ஆணும் கற்பழிப்பவர் என்றும் கண்டிப்பது நல்லதல்ல: ஸ்மிருதி இரானி
tamil.indianexpress.com :" ஒவ்வொரு திருமணத்தையும் வன்முறை என்றும், ஒவ்வொரு ஆணும் கற்பழிப்பவர் என்றும் கண்டிப்பது நல்லதல்ல: ஸ்மிருதி இரானி
இந்த நாட்டில் நடக்கும் ஒவ்வொரு திருமணத்தையும் வன்முறைத் திருமணம் என்று கண்டிப்பதும், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆணையும் கற்பழிப்பாளர் என்று கண்டிப்பதும் நல்லதல்ல .
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தான் அனைவருக்கும் முன்னுரிமை,
ஆனால் ஒவ்வொரு திருமணத்தையும் வன்முறை என்றும், ஒவ்வொரு ஆணும் கற்பழிப்பவர் என்றும் கண்டிப்பது நல்லதல்ல என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி புதன்கிழமை ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முஸ்லிமோபோபியா!.. ரிஷ்வின் இஸ்மத்
Rishvin Ismath : சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முஸ்லிமோபோபியா!
ஹபாயா, ஹிஜாப் ஆகியவை பெண்கள் மீது இஸ்லாம் மதம் திணித்த பெண் அடிமைத்தனத்தின் சின்னங்களாக இருந்தாலும் கூட அவை இலங்கையில் தடை செயப்பட்ட ஆடைகள் அல்ல.
அத்துடன் ஹபாயா, ஹிஜாப் ஆகியவற்றை அரசாங்கப் பாடசாலை ஆசிரியர்கள் அணியக் கூடாது என்று சொல்கின்ற விதமாக கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்கள், சுற்றுநிரூபங்கள் எதுவும் கிடையாது.
இந்த நிலையில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் கல்லூரிச் சமூகத்தினர் ஹபாயா, ஹிஜாப் அணியும் முஸ்லிம் ஆசிரியைகள் தமது பாடசாலையில் கற்பிக்கக் கூடாது என்று வன்மத்துடன் செயலாற்றுவது அவர்களிடமுள்ள முஸ்லிமோபோபியாவின் வெளிப்பாடே என்பதில் சந்தேகமில்லை.
ஹபாயா என்கின்ற ஆடையும், ஹிஜாப் என்கின்ற துணியும் பெண்கள் மீது இஸ்லாம் மதம் திணித்த பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடுகள் என்பதில் சந்தேமில்லை,
என்றாலும் அவற்றினாலே அடுத்த மனிதர்களுக்கு எவ்வித இடையூறுகளுமே இல்லை,
நானும் ஒரு தமிழன்''-ராகுல் காந்தி பேட்டி!
கரோனா பரவல் காரணமாக, மக்களவை இந்த கூட்டத்தொடர் முழுவதும் மாலையிலேயே கூடுகிறது. இன்று மக்களவையில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, தமிழக மக்களைப் பாரதிய ஜனதா வாழ்நாளில் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது. நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை மத்திய அரசால் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது.
புதன், 2 பிப்ரவரி, 2022
சாமி சிலைகளை கடத்திய பா.ஜ.க நிர்வாகி உட்பட 4 பேர் கைது” :ரூ.5 கோடிக்கு விற்க முயற்சி.. ராமநாதபுரத்தில்
கலைஞர் செய்திகள் : ராமநாதபுரத்தில் சாமி சிலைகளை கடத்தி விற்பனையில் ஈடுபட முயன்ற பா.ஜ.க மாவட்ட நிர்வாகி, 2 காவலர்கள் உள்ளிட்ட 4 பேரை போலிஸார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பா.ஜ.க சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளரான முதுகுளத்துாரை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் என்பவர், சட்ட விரோதமாக தொன்மையான சுவாமி சிலைகளை விற்க முயற்சி செய்வதாக, மதுரை சிலை தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் இயக்குநர் ஜெயந்த் முரளி உத்தரவுப்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் தினகரன் மேற்பார்வையில், மதுரை சிலை தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை .. என்ன காரணம்?
Rayar A - Google Oneindia Tamil : சென்னை: தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன்
ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆக சான்ஸ்! இந்தியாவில் இருந்தபடியே USA Mega Millions டிக்கெட் வெல்ல வாய்ப்பு!
இந்த நிலையில்தான் தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அவருடைய குடும்பத்தினர் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
ஈரானில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்குத் தூக்குத் தண்டனை
தினமலர் : ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட ஆண்கள் இருவர் தூக்கில் இடப்பட்ட சம்பவம் ஈரானில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் ஓரினச்சேர்க்கை, திருநங்கையருடனான உறவு, விபசாரம் ஆகியவை பெரும் குற்றங்களாகக் கருதப்படுவதோடு, அவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மராகேவில் உள்ள சிறையில் சமீபத்தில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆண்கள் இருவர் தூக்கில் இடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் ராகுல் காந்தி பாய்ச்சல் : you will never ever in entire your life rule over the people of tamilnadu
மாலைமலர் : 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நிலவுவதாக ராகுல் காந்தி பேசினார்.
பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா உருவாகிவிட்டது- மக்களவையில் ராகுல் காந்தி பாய்ச்சல்
மக்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது:-
ஜனாதிபதியின் உரையில் எந்த பிரச்சினை பற்றியும் ஆழமாக குறிப்பிடப்படவில்லை. நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அந்த உரையில் எதுவும் இல்லை. வேலைவாய்ப்பின்மை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
பெரியண்ணன் பாணியில் நடக்குறாங்க.. திமுக மா.செக்கள் மீது கூட்டணி கட்சிகள் அதிருப்தி.. என்ன நடந்தது?
Shyamsundar - Oneindia Tamil : சென்னை: திமுக கூட்டணியில் உள்ள தனது தோழமைக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவதில் ஏக கெடுபிடிகளை திமுக மாவட்ட செயலாளர்கள் காட்டி வருவதாக கூட்டணி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது.
அதிமுக, பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில் இந்த முறை 9 முனை போட்டி நிலவ உள்ளது.
ஏற்கனவே பல மாவட்டங்களுக்கு திமுக, அதிமுக, விசிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது.
திமுக வலிமையான கூட்டணியோடு இந்த முறை தேர்தலை சந்திக்க உள்ளது.
பம்மல் சம்பந்த முதலியார் பிறந்த நாள்! தமிழ் நாடக தந்தை
தமிழ் நாடகங்களின் தந்தை என்று போற்றப்படுபவரும்,
வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத் தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவருமான பம்மல் விஜயரங்க சம்பந்த முதலியார் (Pammal Vijayaranga Sambandha Mudaliar) பிறந்த தினம் இன்று.
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் பிறந் தவர்.
இவரது அப்பா தமிழ் ஆசிரியராக, பிறகு பள்ளி ஆய்வாளராக இருந்தவர்.
புத்தகங்களையும் வெளி யிட்டுவந்தார்.
அவர்கள் வீட்டில் தமிழ், ஆங்கிலப் புத்தகங்கள் ஏராளமாக இருந்தன.
சிறு வயது முதலே, புத்தகங்களை ஆர்வத் துடன் படிப்பார். புராணக் கதைகளை அம்மா கூறு வார். கோவிந்தப்பர் உயர்நிலைப் பள்ளி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி, மாநிலக் கல்லூரியில் பயின்றார்.
பிறகு, சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். நீதிபதியாகவும் பணியாற்றினார்.
மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் (வேட்பாளர் )செல்வம் வெட்டிப் படுகொலை!..
Vigneshkumar - Oneindia Tamil : சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில் மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் செல்வம் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் செல்வம்.
இவர் அப்பகுதியின் திமுக வட்டச் செயலாளராகவும் உள்ளார்.
விரைவில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 188ஆவது வட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டிருந்தார்.
மடிப்பாக்கம் ராம் நகரில் உள்ள இவரது வீட்டிற்கு இரவு 9 மணியளவில் சிலர் மாலையுடன் வந்துள்ளனர். அவர்கள் செல்வத்தை வாழ்த்த வந்ததாக அனைவரும் கருதினர்.
செவ்வாய், 1 பிப்ரவரி, 2022
கதிர் ஆனந்துக்கு எதிராக முஸ்லீம்கள்? வாணியம்பாடி அரசியல் கேங் வார்?
மின்னம்பலம் : திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்தன் செயல்பாட்டால் வாணியம்பாடி நகரத்தில் முஸ்லிம்களின் ஆதரவை திமுக இழந்து விடுமோ என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து கொஞ்சம் விசாரித்து எழுதுங்கள் என்று மின்னம்பலத்துக்கு வாணியம்பாடியில் இருந்து சில தகவல்கள் வர அதுகுறித்து விசாரித்தோம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன.
21 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது.. நீண்டகால பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை தேவை.." முதல்வர் ஸ்டாலின் கடிதம்
Vigneshkumar - Oneindia Tamil : சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக கடல் எல்லையில் தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது என்பது நீண்ட காலமாக நிலவும் தொடர் பிரச்சினையாகவே இருந்து வருகிறது.
அப்படி தான் இப்போது எல்லையில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இதில் 21 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மக்களின் கையில் ஒரு பைசா கூட இருக்கக்கூடாது என்பதுதான் மோடி அரசின் எண்ணமா?” : முதல்வர் ஸ்டாலின் அறிக்கை!
கலைஞர் செய்திகள் : ஒன்றிய அரசின் பட்ஜெட்டை, ‘மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை’ என்று அடைமொழியிட்டு அழைப்பதே முற்றிலும் பொருத்தமானது!
“2022-23-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை “மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை” என்று அடைமொழியிட்டு அழைப்பதே முற்றிலும் பொருத்தமானது!” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசின் பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த ஒன்றிய பா.ஜ.க அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே இந்த 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும் அமைந்திருக்கிறது.
வரி மூலம் ஒரு பைசா கூட சம்பாதிக்க முயற்சிக்கவில்லை- நிர்மலா சீதாராமன்
மாலைமலர் : கிரிப்டோ மற்றும் கிரிப்டோ சொத்துக்கள் என்ன என்பது பற்றி இப்போது எந்த விவாதமும் தேவை இல்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புது டெல்லி: இந்த வருடம் வரியை உயர்த்தி ஒரு பைசா கூட சம்பாதிக்க முயற்சிக்கவில்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தில் 2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த வருடமும், இந்த வருடமும் வரியை உயர்த்தி நான் ஒரு பைசா கூட சம்பாதிக்க முயற்சிக்கவில்லை. பற்றாக்குறை இருந்தபோதிலும் கொரோனா சூழலில் மக்கள் மீது வரி சுமை ஏற்றக்கூடாது என பிரதமர் மோடி எங்களுக்கு தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.
. 13 வயது மகளை தீயிட்டுக் கொளுத்திய பெண்.. கற்பை நிரூபிக்குமாறு கணவன் கேட்டதால் . ‘பகீர்’ சம்பவம் - நடந்தது என்ன?
கலைஞர் செய்திகள் : சந்தேகப்பட்ட கணவன்... 13 வயது மகளை தீயிட்டுக் கொளுத்திய பெண்... ‘பகீர்’ சம்பவம் - நடந்தது என்ன?
மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவன் கற்பை நிரூபிக்க 13 வயது சிறுமியை தீயிட்டுக் கொளுத்தச் சொல்ல, மனைவியும் கொளுத்தியதில் சிறுமி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பத்மநாபன் (41). இவர் இந்தியன் ஆயில் கம்பெனியில் தற்காலிக ஊழியராக டேங்கர் லாரி ஓட்டி வந்தார். இவருக்கும் ஜெயலட்சுமி (40) என்பவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
நடிகை ராதிகா – பயில்வான் ரங்கநாதன் மோதல்: திருவான்மியூர் கடற்கரையில் நடந்தது என்ன?
tamil.indianexpress.com : நடிகர் பயில்வான் ரங்கநாதன் அண்மையில் நடிகை ராதிகா சரத்குமாரை சமீபத்தில் திருவான்மீயூர் கடற்கரையில் பார்த்ததாகவும் அப்பொது அவர் தன்னிடம் மிக மோசமாக பேசி சண்டை போட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகை ராதிகா பயில்வான் ரங்கநாதன் மோதல், திருவான்மியூர் கடற்கரையில் ராதிகா பயில்வான் ரங்கநாதன் இடையே நடந்தது என்ன, நடிகை ராதிகா, பயில்வான் ரங்கநாதன்,
நடிகர் பயில்வான் ரங்கநாதன் அண்மையில் நடிகை ராதிகா சரத்குமாரை சமீபத்ஹ்டில் திருவான்மீயூர் கடற்கரையில் பார்த்ததாகவும் அப்பொது அவர் தன்னிடம் மிக மோசமாக பேசி சண்டை போட்டதாகவும் தெரிவித்துள்ளார். நடிகை ராதிகாவுக்கும் நடிகரி பயில்வான் ரங்கநாதனுக்கும் ஏற்பட்ட மோதல் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது திரைக்கூத்து யூடியூப் சேனலில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடிகை ராதிகாவை திருவான்மியூரில் பார்த்ததாகவும் அப்போது அவர் தன்னிடம் தனது அம்மாவைப் பற்றி தவறாக பேசியுள்ளாயேமே என்று சண்டை போட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழர்களும் கலந்ததுதான் சிங்கள சமூகம்! சிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல! யாழ் பேராசிரியர் ந ரவீந்திரன்
Chandra Mohan : சிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல! சீமான் சொல்வது பொய்!
தமிழர்களும் கலந்ததுதான் சிங்கள சமூகம்
யாழ்ப்பாண பேராசிரியர் ந ரவீந்திரன்
அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பாக, இன்று சேலத்தில் "சாதியும் சமூக மாற்றமும் " எனும் தலைப்பில் இலங்கை யாழ்ப்பாண பேராசிரியர். ந.ரவீந்திரன் உரை நிகழ்த்தினார்.
சிங்களர்- தமிழர் இன முரண்பாடு, இலங்கையில் சிறுபான்மை தமிழர் மகாசபை, வர்க்கம் எதிர் சாதி, வருணங்கள், பிராமண மதம், தமிழர் நிலப்பரப்பில் தோன்றிய திணை அரசுகள், மார்க்சியம், ரஷ்யப் புரட்சியில் "ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுங்கள்" என்ற அணுகுமுறை எனப் பல்வேறு விசயங்கள் பற்றி விரிவாக பேசினார்.
"சிங்களர்கள் கண்டி நாய்க்கர்கள் என்று சொல்லப்படுவதால், தெலுங்கர்கள்/ வடுகர்கள் என சீமான் சொல்கிறாரே, சரியா ?" என்ற ஒரு கேள்விக்கு, அது பொய்! தமிழ்நாட்டில் உள்ள அவர்களது அரசியலுக்காக இப்படி பேசுகிறார்கள் " என்றதுடன், நாம் அறியாத பல்வேறு செய்திகளை தெரிவித்தார்.
மலிவாய் போன மனித உயிர்கள்! ஒரே வாரத்தில் 3 இளைஞர்கள் சாக்கடை சுத்திகரிப்பு கொலை
M S Rajagopal : கழிவு நீர் குழாய்களில் அடைப்புகளை நீக்கும் ஜெட்ராடர் இயந்திரம் ₹ 25 லட்சத்துக்குள்தான் இருக்கும்.
டாஸ்மாக்கால் தமிழக அரசுக்கு ஒருநாள் வருமானம் 80 கோடி.
மது அருந்தாமல் பாதாள சாக்கடைக்குளேயே செப்டிக் தொட்டிக்கு உள்ளேயோ இறங்கி சுத்தம் செய்ய முடியாது.
அவர்கள் மடியில் இருந்து பிடுங்கும் பணத்தில் அவர்களுக்காக அந்த இயந்திரங்களையாவது வாங்கலாமே!
ஆண்டுக்கு ஒரு நாள் துப்புரவு தொழிலாளர் தினமென்று அன்றைய டாஸ்மாக் கலெக்ஷனையாவது ஜெட்ராடர்கள் வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
திங்கள், 31 ஜனவரி, 2022
செந்தில் பாலாஜி கூட்டத்தில் இருந்து ஜோதிமணி ஆவேசமாக வெளியேறினார்
அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற தொகுதிப் பங்கீடு ஆலோசனைக் கூட்டத்தில் திடீரென ஏற்பட்ட கருத்து முரண் காரணமாக கரூர் எம்.பி ஜோதிமணி ஆவேசமாக வெளியேறினார்.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில்பாலாஜி, 'நடந்த சம்பவங்களுக்குள் போகவேண்டாம் என நினைக்கிறேன். நானும் அது சம்பந்தமாக பேச விரும்பவில்லை. இன்றைய நாளை பொறுத்தவரை தேர்தலுக்கான பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... திமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! விழுப்புரம், திருக்கோவிலூர், கோட்டக்குப்பம் நகராட்சி ..
காஞ்சிபுரம், கும்பகோணம், தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
கரூர் ஜோதிமணி - காங்கிரசோடு தகராறு திமுகவோடு தகராறு ... பாஜக அமைச்சர்களை தொடர்ந்து சந்திப்பு..
Venkat Ramanujam : முதல் பெண்ணாக தமிழ்நாடு #காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் ..,
அருமையாக
செயல்பட்டு வரும் கரூர் கலெகடர் உடன் தேவையில்லாத தகராறு ..
தான் மட்டும் தனியாக சென்று #பாஜக மந்திரிகளை ஒன்றன் பின் ஒன்றாக பார்த்தது மட்டுமில்லாமல் அவர்களை தேவையில்லாமல் புகழ்ந்ததால் வந்த சர்ச்சை ..
இன்றைக்கு இப்போது கூட்டணி பேச்சுவார்த்தையின்போது #திமுக உடன் மட்டுமல்லாமல் கரூர் காங்கிஸார் கூடவும் தகராறு ..
இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லாமல் பின்னோக்கி அழைத்துச் செல்லும் #RSS எனும் கொடூரனை ..
ஜனநாயக பாதையில் சென்று அழிப்பது அத்தனை இலகுவான பாதை அல்ல..
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டி
மாலைமலர் : தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை:: அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜனதா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இடப்பங்கீடு தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் அ.தி.மு.க.வினருடன் பேச்சு நடத்தினார்கள். அப்போது 20 சதவீத இடங்கள் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அ.தி.மு.க. தரப்பில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே வார்டுகள் ஒதுக்கீடு செய்ய முடியும் என்று கூறிவிட்டனர்.
இதனால் பா.ஜனதா அதிர்ச்சி அடைந்தது. நாகர்கோவில், கோவை மேயர் பதவிகளை ஒதுக்க வேண்டும். மேலும் வார்டுகளை பொறுத்தவரை தொகுதிக்கு ஒன்று வீதம் 21 வார்டுகள் தரவேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது.
கறார் காட்டும் திமுக! சென்னையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள்.. பரபர தகவல்
Vigneshkumar - Oneindia Tamil : சென்னை: தலைநகர் சென்னையில் 200 வார்டுகள் உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக தரப்பு ஒதுக்க முன்வந்துள்ள வார்டுகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
உதயநிதி ஆதரவாளருக்கு வாய்ப்பு மறுப்பு? திமுக சலசலப்பு!
இதன் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த வகையில் மற்ற மாநகராட்சிகளில் திமுகவிடம் தண்ணி குடித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 8-வார்டு களைப் பெற்று சந்தோஷமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் வேட்பாளர் பட்டியல்: பாஜக கூட்டணி முறிவு!
மின்னம்பலம் : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் நேற்று ஜனவரி 30 இரவு அதிமுக தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கடலூர் மாநகராட்சி, கடலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகராட்சி, தர்மபுரி நகராட்சி ஆகியவற்றுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.
அறுவை சிகிச்சையின் போது "முத்தே என் முத்தாரமே" பாடல் பாடிய பெண்: நெகிழ்ச்சியடைந்த மருத்துவர்கள்!
கலைஞர் செய்திகள் : சென்னைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. பாடலாசிரியரான இவர் சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.
அவரை பரிசோதித்தபோது, புற்றுநோய் கட்டி நுரையீரல் உட்படப் பல பகுதிகளில் பரவி இருந்தது தெரிந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என அவரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது அவருக்கு மயக்கமருந்து செலுத்தப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அந்த முன்கோபம் தான் திமுகவின் பலமும் கூட. .. திருவொற்றியூர் கே.பி.சங்கர் MLA
கண்ணதாசன் : தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை 37,661 வாக்குகளில் வென்ற திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர்.
தந்தை மிசா.கே.பரசுராமன்.
சகோதரர் கே.பி.பி.சாமி
சட்டமன்ற உறுப்பினராக,அமைச்சராக இருந்து மறைந்தவர்.
யார் எந்த உதவி கேட்டாலும் ஓடோடி சென்று உதவுபவர் திரு.சங்கர்.
அவரது பலவீனம் முன்கோபம்.
அந்த முன்கோபம் தான் திமுகவின் பலமும் கூட.
திருவொற்றியூரில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக 13 லாரிகளில் ஜல்லிக்கலவை கொண்டு வரப்பட்டது. அங்குள்ள நடராஜன் கார்டனில் உள்ள மூன்று தெருக்களில் கடந்த 27ஆம் தேதி சாலை அமைக்கும் பணிகள் நடந்தன. அப்போது அந்த இடத்துக்கு கே.பி.சங்கர் வந்துள்ளார்.
இணையத்தில் நீலசங்கி Vs திராவிட அரக்கர் சண்டைக்கு மூல காரணி எது? அல்லது யார்
Anthony Fernando : தற்பொழுது நீலசங்கி Vs திராவிட அரக்கர் என்று போய்க் கொண்டிருக்கிற. சண்டைக்கு மூல காரணி என்பது யார் தெரியுமா? ?
சாட்சாத் அவனே தான்
ஆரம்பத்தில் அவன் இருந்தது திமுக கூடாரத்தில் தான். அவனோட கோசமே நான் தந்தை பெரியார் மற்றும் புரட்சி கவி பாரதியின் பேரன் என்று தான்..
அறிஞர் அண்ணாவை தனது தந்தை என்றான்
கலைஞரை எனது உயிர் என்றான்..
நம்ம அரக்கர்களும் அவனை ஆகோ ஒகோ என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர் ..
ஆனால் அவன் பாரதி- பெரியார் பேரன் என்று சொன்னது எனது மூளையை உறுத்திக் கொண்டே இருந்தது. பாரதியாரும் பெரியாரும் இரு வேறு துருவங்கள் ஆச்சே..
இவன் வித்தியாசமாக பேசிட்டு திரியுறானே என்றளவில் அவனை பார்த்ததில் ஒரு ஒவ்வாமை ஏற்பட்டது நம்ம அரக்கர்களுக்கு வித்தியாசமாக பேசுகிறவனை கண்டால் இருக்க முடியாதே, தூக்கி தாங்கோ தாங்கு என்று தாங்கினாங்க...
ஞாயிறு, 30 ஜனவரி, 2022
பெரிய பட்ஜெட் படங்களின் ஒரே வார வசூல் வேட்டையால் காணாமல் போன திரை அரங்குகள்
சுகந்தன் டிவி : கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக திரை அரங்குகள் மூடப்பட்டு வருகின்றன என்பது எல்லோரும் அறிந்த உண்மை . அதற்கான காரணிகளாக கூறப்படுவது வீடியோக்கள் சிடிக்கள் வருகையும் தற்போதைய இணையதள வசதியும்தான் என்பதுவும் கூட ஓரளவு உண்மைதான்.
ஆனால் இவை எல்லாம் மேலெழுந்தமான உண்மைகள்.
திரை அரங்குகளின் மூடுவிழாக்களில் பெரும் பங்கை ஆற்றியது மிகப்பெரிய மாசாலா படங்கள்தான் . அதிலும் குறிப்பாக ரஜினியின் சிவாஜி படம்தான் திரை அரங்குகளுக்கு ஒரு சாபக்கேடாக அமைந்தது என்று கூறப்படுகிறது . குறிப்பாக இது பற்றி தோழர் மதிமாறன் ஒரு காணொளியில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.
அரங்குக்கு சென்று திரைப்படங்கள் பார்ப்பது ஒரு சுகானுபவம். வெறுமனே அந்த படங்களை மட்டும் பார்ப்பதல்ல ரசிக்கத்தன்மை என்பது.
பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த தலைமையாசிரியர் : வெளியான வைரல் வீடியோ!! கர்நாடக மாநிலம்
tamil.abplive.com : இதுதொடர்பான வீடியோவொன்று சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், பலதரப்பிலிருந்தும் இதுகுறித்த புகார்கள் எழுந்துவந்தன.
சம்பந்தப்பட்ட கிராம மக்களும், பள்ளியின் பிற மாணவர்களும் தலைமை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர்.
அதைத்தொடர்ந்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் அவர் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வீடியோவை, பள்ளியை சேர்ந்த பிற மாணவர்கள் தங்களின் மொபைலில் ஜன்னல் வழியாக பதிவு செய்திருக்கின்றனர்.
வைகோ செய்த சிபாரிசு! மறுப்பு சொல்லாமல் செய்து கொடுத்த அமைச்சர் சேகர்பாபு! பின்னணி விவரம்!
Arsath Kan - Oneindia Tamil : சென்னை: சாலையோர வியாபாரி ஒருவரின் மகனுக்கு அமைச்சர் சேகர்பாபுவிடம் சிபாரிசு செய்து,
திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் கடைநிலை ஊழியர் பணியை பெற்றுக் கொடுத்திருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
தமது தந்தையும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ பரிந்துரையை ஏற்று பணி ஆணை வழங்கியதற்காக அமைச்சர் சேகர்பாபுவுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் துரை வைகோ நன்றி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
சாலையோர வியாபாரியாக இருந்த போதும் தன்மானத்தோடும் தலைவர் மீதும் அளவு கடந்த பாசம் கொண்டவர். தலைவர் வைகோ அவர்கள்
ஒரே ஆண்டில் 31 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி இருக்கை! புதுக்கோட்டை மாவட்டத்தில்
Vigneshkumar - Oneindia Tamil : புதுக்கோட்டை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 31 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
நீட் தேர்வு அமலுக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, அரசு மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு என தனித்தனியாகத் தரவரிசை வெளியிடப்பட்டது.
வேட்பாளர் தேர்வு: ஸ்டாலின் எச்சரிக்கை!
மின்னம்பலம் :பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளர் அறிவிப்பு, கூட்டணி, ஆலோசனைக் கூட்டம் எனத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சியில், நாடே போற்றிடும் வகையில் வெல்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகக் கடந்த 27ஆம் நாளன்று மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம்.
இக்கூட்டத்தில் ஏறத்தாழ 50 மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிப்பதற்கும், அவர்களுடன் உரையாடுவதற்கும் நல்வாய்ப்பு அமைந்தது. காணொலிக் கூட்டத்திற்குப் பிறகும்கூட, கடந்த இரண்டு மூன்று நாட்களாக, மாவட்டச் செயலாளர்களைத் தொடர்ச்சியாகத் தொடர்புகொண்டு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆற்ற வேண்டிய அனைத்துப் பணிகள் குறித்தும் ஆலோசனைகள் நடத்தி வருகிறேன்.
கட்டாய தடுப்பூசிக்கு எதிராக கனடாவில் போராட்டம்- ரகசிய இடத்திற்கு தப்பிச் சென்ற பிரதமர்
மாலைமலர் : ஒட்டாவா ,கனடாவில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டாய தடுப்பூசி மற்றும் பிற கொரோனா விதிமுறைகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. மேலும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் கனடா அரசும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் உள்ளிட்ட பல விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மைக்கல் பட்டி - கோவை, கன்னியாகுமரியை போல தஞ்சாவூரில் ஒரு மினி உ.பி குஜராத்தை உருவாக்க முடியாது
Villavan Ramadoss : கோவை, கன்னியாகுமரியில் ஒரு மினி உ.பி குஜராத்தை உருவாக்க முடிவதைப்போல இலகுவாக தஞ்சாவூரை மாற்ற முடியாது.
இந்துவாக இரு இந்து கடையிலேயே பொருள் வாங்கு என்று தீவிர பிரச்சாரம் நடந்தது, நான் சிறுவனாக இருந்தபோது. தஞ்சாவூர் மக்கள் அதனை மயிருக்குக்கூட மதிக்கவில்லை.
தஞ்சாவூர் எம்.எல்.ஏவாக பலமுறை போட்டியிட்டவர்/வென்றவர் உபயதுல்லா.
பெரும்பான்மை மக்கள் இந்துக்கள்தான்.
அவரை முஸ்லீம் என்று அடையாளப்படுத்தியத்தையோ அல்லது பிரச்சாரம் செய்தோ நான் கண்டதில்லை. சொன்னால் என்ன நடக்கும் என்பதற்கு இந்து கடை மேட்டரில் டெமோ காட்டியாகிவிட்டது.
பாஜக அதிரவைக்கும் சொத்து 4847.47 கோடி ரூபாய்கள்
Chinniah Kasi : நாட்டிலேயே பணக்கார கட்சி பாஜக ரூ.4,847 கோடிக்கு சொத்து!
29 January 2022 தீக்கதிர்
புதுதில்லி, ஜன.29- தேசிய மற்றும் மாநிலக் கட்சி கள் தாமாகவே அளித்த சொத்து மதிப்பு தொடர்பான தக வல்களில் இருந்து, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப் பின் தேர்தல் கண்காணிப்பு கழ கம் ஆய்வறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளது. அதில், 2019-20 நிதியாண்டில், நாட்டிலேயே அதிகமான சொத்து மதிப்பு கொண்ட கட்சி பாஜகதான் என்று குறிப்பிடப் பிட்டு உள்ளது. 2019 - 2020 நிதியாண்டு கணக் குப் படி, நாட்டிலேயே பாஜக வுக்கு அதிகபட்சமாக 4 ஆயி ரத்து 847 கோடியே 78 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து உள் ளது. அதற்கு அடுத்தபடியாக பகுஜன் சமாஜ் கட்சிக்கு 698 கோடி ரூபாய்க்கும், காங்கி ரஸ் கட்சிக்கு 588 கோடி ரூபாய்க் கும் சொத்து உள்ளது.
திமுக பிரமுகர் வெட்டி படுகொலை! டாஸ்மார்க் பார் ஏலத்தில் தகராறு? .. பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் அருகிலேயே பயங்கரம்
Vigneshkumar -Oneindia Tamil : திருநெல்வேலி: பாளையங்கோட்டை காவல்நிலையம் அருகிலேயே திமுக பிரமுகர் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாநகர 24 வது வார்டு திமுக செயலாளராக இருப்பவர் பொன்னு தாஸ் என்ற அபே மணி.
இவர் அப்பகுதியில் ஆட்டோ ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்
செங்கல்பட்டில் அடுத்தடுத்து 2 பேர் வெட்டி படுகொலை..நாட்டு வெடிகுண்டு வீச்சு..
சாமாஜ்வாடி" உணவகம்! ரூ 10க்கு முழு சாப்பாட்டு.. உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் சரவெடி
Vigneshkumar - Oneindia Tamil : லக்னோ: உத்தரப் பிரதேச தேர்தல் நெருங்கும் நிலையில், அம்மாநில மக்களைக் கவரும் வகையில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் மார்ச் 10இல் அறிவிக்கப்பட உள்ளது.
இதில் பலரது கவனமும் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் தான் உள்ளது. அங்கு வரும் பிப். 10இல் தொடங்கி 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியில் உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் 4 மாநிலங்களிலும் வென்று ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். இதற்காகத் தேர்தல் பணிகளை அக்கட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இதில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு பாஜக கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது.
மோடி அரசின் பெகாசஸ் ஒப்பந்தம் குறித்து அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட The New York Times!
கலைஞர் செய்திகள் : பெகாசஸ் உளவு மென்பொருளை இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசு வாங்கியது என நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டதைத் தொடர்ந்து, மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.
பெகாசஸ் உளவு மென்பொருளை இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசு வாங்கியது என நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் மீண்டும் பெகாசஸ் சர்ச்சை வெடித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ (NSO) நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு (உளவு, ராணுவம்) விற்பனை செய்து வருகிறது.
விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு
மின்னம்பலம் : வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக, போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில்... இதுகுறித்த ஒரு முக்கியமான கூட்டம் நேற்று ஜனவரி 29ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் அமைந்திருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
சில தினங்களுக்கு முன் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய்யைச் சந்தித்து பேசினார். அதற்கு முன்னதாகவே விஜய்யும் தனக்கு நெருக்கமான தனிப்பட்ட நண்பர்களுடன் தற்போதைய அரசியல் சூழல் தொடர்பான ஆலோசனைகளை செய்துள்ளார். இந்தப் பின்னணியில் தன்னை சந்தித்த புஸ்ஸி ஆனந்திடம் தேர்தல் தொடர்பான முக்கியமான சில முடிவுகளை விஜய் தெரிவித்துள்ளார்.
இரு மௌலவிகளின் தூண்டுதலில் இளைஞர் சுட்டு கொலை .. இஸ்லாத்தை விமர்சித்தாராம்.. குஜராத்
Rishvin Ismath : அஹமதாபாத்தைச் சேர்ந்த கிஷன் பார்வத் எனும் 27 வயதான இளைஞன் இஸ்லாத்தை விமர்சித்ததற்காக இரண்டு மெளலவிகளின் கட்டளைப்படி சுட்டுக் கொல்லப் பட்டுள்ளான்.
இம்மாதம் 25 ஆம் திகதி இந்தக் கொலை நடந்து இருந்தாலும், இதுவரை இந்தக் கொலை தொடர்பில் போதிய செய்திகள் வெளியாகி இருக்கவில்லை.
இஸ்லாத்தை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக மேற்கொள்ளப் பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து கிஷன் பார்வத் இம்மாத முற்பகுதியில் கைது செய்யப்பட்டு,
பிணையில் விடுதலை செய்யப்பட்டு இருந்த நிலையிலேயே இஸ்லாமியவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். click link thehindu youth-murder -maulavi-detained