மாலை மலர் : பல்வேறு காரணங்களால் மத்திய அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில் புழக்கத்தில் இருந்த '500 ரூபாய்' மற்றும் '1000 ரூபாய்' நோட்டுக்கள் தடை செய்யப்பட்ட 2016 நவம்பர் மாதமே, மத்திய ரிசர்வ் வங்கியால் '2000 ரூபாய்' நோட்டுக்கள் புதியதாக புழக்கத்தில் விடப்பட்டன.
அந்த புதிய நோட்டுக்களை அச்சிடும் பணியும் 2018-19 காலகட்டத்தில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், புழக்கத்தில் உள்ள '2000 ரூபாய்' நோட்டுக்களை திரும்ப பெற்று கொள்ள போவதாக கடந்த மே 10 அன்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதற்கு இறுதி நாளாக செப்டம்பர் 30 வரை காலக்கெடு வைத்திருந்தது.
சனி, 30 செப்டம்பர், 2023
2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற கடைசி தேதி நீட்டிப்பு: ஆர்.பி.ஐ.
100 நாள் வேலை திட்டத்தை 'கருணை கொலை' செய்யும் ஒன்றிய அரசு!
2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்).
இந்த திட்டத்தின் மூலமாகத் தான் இந்தியாவில் வறட்சியில் தவித்து வந்த விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் ஓரளவு தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ளமுடிந்தது.
மேலும் வறட்சி காலத்தில் வறண்ட நீர்நிலைப் பகுதிகளை தூர்வாருவதால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக நாட்டை விட்டு தப்பி ஓட்டம்
மாலைமலர் : முல்லைத்தீவு இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தவர் சரவணராஜா. இலங்கை தமிழரான இவர் மிகவும் சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்தார்.
சமீபத்தில் 42 ஆண்டுகளாக நடந்து வரும் மதம் பிரச்சினை சார்ந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்புக்கு பிறகு அவருக்கு பல வகைகளில் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்குமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. மேலும் மிரட்டல்களும் வந்தது.
உஜ்ஜைனில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ரத்தம் வழிய சாலையில் உதவிக்கு அலைந்த கொடுமை
bbc.com - ஷுரைஹ் நியாஸி : மத்திய பிரதேச மாநிலத்தில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அவர் இரண்டரை மணிநேரமாக கிழிந்த ஆடைகள் மற்றும் ரத்தக் கறைகளுடன் உதவி கேட்டு அலைந்து திரிந்துள்ளார்.
இருப்பினும் அவருக்கு உதவ யாரும் முன்வராத அவல நிலை இருந்துள்ளது. சாலையில் கிடந்த அவரைப் பார்த்த ஒரு நபர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் சமய நகரமான உஜ்ஜைனில் ஒரு சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் வியாழக்கிழமை தடுப்புக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த மறுநாளே ஆட்டோ டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தற்போது இதுதொடர்பாக மொத்தம் 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்திற்கு அக். 15 வரை 3000 கனஅடி நீர் திறக்க காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
மேலும் கர்நாடக மாநிலத்தில் இன்று முழு அழைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், காவேரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று கூடியது. இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு அக்டோபர் 15-ம் தேதி வரை தினமும் விநாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நம்மாழ்வாரையும் சுவாமிநாதனையும் ஒரு சேர பாராட்ட முடியாது, பாராட்டவும் கூடாது.
Jaganathan Sekar : எம்.எஸ்.சுவாமிநாதனும் நம்மாழ்வாரும்:
சுவாமிநாதனையும் நம்மாழ்வாரையும் எதிரெதிர் துருவங்களில் நிறுத்தி ஒரு பக்கம் நின்று இன்னொருவரை சாடுதல் கூடாது இருவரும் தேவை, இருவரையும் போற்றுவோம் என்கிறார் சமஸ்.
அப்பதிவில் சிறு கமெண்ட் எழுதினேன். சற்றே விரிவாக இங்கு.
இல்லை நம்மாழ்வாரையும் சுவாமிநாதனையும் ஒரு சேர பாராட்ட முடியாது, கூடாது.
நம்மாழ்வார் அறிவியலுக்கு எதிர்புறம் நின்று அறிவியல் சம்பந்தமில்லாத கருத்துகளைக் கொண்டு அறிவியலை எதிர்த்தவர்.
அப்படியான எதிர்ப்பில் நின்று போன கடிகாரம் ஒரு நாளில் இரண்டு முறையாவது சரியான நேரத்தை காட்டுவதைப் போல் இரண்டு கருத்துகளாவது பொருந்தும்
அதற்காக அத்தரப்புக்கு அறிவியல் தரப்புக்கு நிகரான மதிப்பளிக்கக் கூடாது.
வெள்ளி, 29 செப்டம்பர், 2023
ஒண்ணே ஒண்ணுதான்?! வைகோ, திருமாவை அதிர வைத்த ஸ்டாலின்
மின்னம்பலம் - Aara : திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி பற்றிய விவாதங்களும், அதிமுகவின் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற புகைப்படங்களும் இன்பாக்சில் வந்து விழுந்தன.
“அதிமுக-பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டு அதிமுக தனி அணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திமுக கூட்டணித் தலைவர்கள் ஒவ்வொருவரும் அதிமுக-பாஜக கூட்டணி நாடகம் என்றும், திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது என்றும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.
தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக -பாஜக கூட்டணி முறிந்த நிலையில் ஏற்கனவே அந்த அணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகள் தங்களின் ஆதரவு அதிமுகவுக்கா, பாஜகவுக்கா என்று இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இதனால் அதிமுக கூட்டணியிலும் குழப்பமே நிலவி வருகிறது.
இதேநேரம் திமுக கூட்டணி தலைவர்கள் வரிசையாக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து வருகிறார்கள். கடந்த 25 ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஸ்டாலினை சந்தித்தார்.
ரிஷி சுனக் - அக்ஷதா மூர்த்தியின் விவகாரத்தில் சிக்கிய ரூ.8,320 கோடி நிறுவனம் மூடுவிழா
news.lankasri.com :பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி இணைந்து தொடங்கிய Catamaran Ventures என்ற நிறுவனம் தற்போது மூடுவிழா காண இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய நிறுவனமானது பால ஆண்டுகளாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. Infosys நிறுவனர் நாராண மூர்த்தியின் ஆதரவுடன் அவரது மகள் அக்ஷதா மூர்த்தி மற்றும் கணவர் ரிஷி சுனக் ஆகியோர் இணைந்து பிரித்தானியாவில் Catamaran Ventures என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
ரிஷி சுனக் - அக்ஷதா மூர்த்தியின் விவாதத்தில் சிக்கிய ரூ.8,320 கோடி நிறுவனம் மூடுவிழா | Akshata Murty Catamaran Ventures Shut Down @getty
வளர்ந்து வரும் சிறு நிறுவனங்களுக்கு முதலீடு செய்து, அந்த நிறுவனங்களை பெரும் லாபம் ஈட்டச் செய்வதே Catamaran Ventures என்ற நிறுவனத்தின் நோக்கம். இந்த நிறுவனமானது தற்போது சுமார் ரூ.8,320 கோடி மதிப்பிலான சொத்துக்களை கையாள்வதாக கூறப்படுகிறது.
குடிவரவாளர்களின் குழந்தைகளின் குடியுரிமைக்கு வேட்டுவைக்க அய்யர்வாள் பேசுகிறார்
ராதா மனோகர் : பொதுவில் பன்னாட்டு காப்பரேட்டுக்களில் உச்ச பதவிகளை வகிக்கும் நம்மவர்கள் பற்றி பெரிதாக நல்ல அபிப்பிராயம் எனக்கில்லை
பலரும் நமக்கு வாய்த்த அடிமைகள் புத்திசாலிகள் என்பது போலத்தான் உள்ளார்கள்.
வெறும் எலும்பு துண்டுகளுக்காக மக்களை வாட்டிவதைத்து பன்னாட்டு முதலாளிகளுக்கு இலாபம் சம்பாதித்து கொடுபதில் வல்லவர்கள்.
ஒரு மோசமான கங்காணிதன்மை என்பது நம்மவர்களிடம் தாராளமாக உண்டு.
இவர்களுக்கு மிக உயர்ந்த பொறுப்பினை கொடுக்கும் முதலாளிகள் முட்டாள்கள் அல்ல.
உள்ளூர்காரனை பிடித்தால் அவன் மனிதாபிமானம் எதிக்ஸ் மாரால் கிரௌண்ட் என்றெல்லாம் நமக்கே வகுப்பெடுப்பான்
ஆனால் தெற்காசிய அடியாட்கள் அப்படி அல்ல
இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பிரபு தேவா
மாலை மலர் : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் , நடன இயக்குனருமான பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'முசாசி'. அறிமுக இயக்குனர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பிரபுதேவா கம்பீரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.
இவருடன் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், ஜார்ஜ் மரியான், தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். ஆக்ஷன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜாய் பிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
வாச்சாத்தி வன்கொடுமை: 215 பேருக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் – தீர்ப்பு விவரம்
பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட 17 பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்து வந்தார்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், சுய தொழில் செய்ய உதவி செய்ய வேண்டும் என்று அரசுக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டிருக்கிறார்.
வந்தே பாரத். .கொண்டாட ஒண்ணு மில்லை - ரயில்வேயின் NEET
DrMohamed Kizhar ; வந்தே பாரத். .கொண்டாட ஒண்ணு மில்லை..ஒரு திணிப்பே ...
ரயில்வேயின் NEET
திருநெல்வேலி to சென்னை வந்தே பாரத் ரயில்..
என்னை பொருத்தவரை , இது தென் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் , பெரும் பாக்கியம் அப்படி யெல்லாம் ஒன்னும் இல்லை..
மற்ற ரயில்களில் குறைந்த கட்டணம் 215 ( உட்காரும் வசதி ) , 365
( 3 tier தூங்கும் வசதி) ..ஆக இந்த கட்டணத்தில் சென்னை போக முடியும். .
வந்தே பாரத் ரயிலில் குறைந்த கட்டணம் 1350 ( வசதிகள் உண்டு என்பது வேறு )..ஆக கட்டணம் தான் இங்க மேட்டர்..
மாற்றுத்திறனாளியின் வயிற்றுக்குள் குளிர்பான பாட்டிலை செருகிய கொடியவர்கள் - புதுக்கோட்டை
nakkheeran.in : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடுமையான வயிற்றுவலி என்று புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்து வயிற்றை எக்ஸ்ரே, ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.
வாச்சாத்தி வன்கொடுமை: 215 பேருக்கு தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்துமா?
bbc.com : தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் அரசு அதிகாரிகளால் 18 இளம்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.
வாச்சாத்தி கிராமத்தில் நடந்தது என்ன?
சந்தனமரக்கடத்தல் வீரப்பன் நடமாடிவந்த தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்தனமரங்களை வெட்டி கடத்துவதாக புகார் தெரிவித்த தமிழக வனத்துறையினர், இது குறித்து விசாரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதியன்று ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றிவளைத்து பலமணி நேர தேடுதல் நடத்தினர். இதன் முடிவில், வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 133 பேரை கைதுசெய்தனர். அவர்களில் 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள்.
தமிழ்நாட்டில் நிலவிய கடும் பஞ்சங்கள் .. சாப்பிட்டாச்சா என்ற கேள்வி பிறந்த கதை இது.
பாண்டியன் சுந்தரம் : தமிழ்நாட்டில் நிலவிய கடும் பஞ்சங்கள் .. சாப்பிட்டாச்சா என்ற கேள்வி பிறந்த கதை இது.
: நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது
"சாப்பிட்டாச்சா?" என்று இன்று கேட்கிறோமே, இது எப்போது துவங்கியது தெரியுமா?
தமிழகத்தில் பல்வேறு பஞ்சங்கள் தோன்றியுள்ளன. அவற்றில் முக்கியமானது 1876 ஆம் ஆண்டின் தாது வருஷப் பஞ்சம். இன்னொரு பஞ்சம்1896இல் தமிழகத்தைத் தாக்கியது. இந்தப் பஞ்சங்களுக்கு முக்கியக் காரணம் ஆங்கிலேயர்களின் அடக்குமுறை கொண்ட ஆட்சி முறையே. கிழக்கிந்தியக் கம்பெனிதான் சென்னை நகரை உருவாக்கியதென்பது நாம் அறிந்ததே. அதன் ஆட்சியில் 1640 இல் துவங்கி 1907 வரை சுமார் 17 முறை அன்றைய சென்னை மாகாணத்தை உணவுப் பஞ்சங்கள் தாக்கின.
துவாதசப் பஞ்சம், தாதுப் பஞ்சம், குண்டூர்ப் பஞ்சம், ஒரிஸ்ஸா பஞ்சம் என்று பஞ்சங்களுக்குப் பெயர் வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை இந்தப் பஞ்சங்கள் காவு வாங்கின.
வியாழன், 28 செப்டம்பர், 2023
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்
மாலை மலர் : இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தையான எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பசிப்பிணி ஒழிப்பு - உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் சுவாமிநாதன் அவர்கள் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார். ஒன்றிய வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராக இருந்த அவர் பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
மீண்டும் மன்னிப்பு கேட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் VHP மணியன் : காவல் நீட்டிப்பு!
minnambalam.com - Kavi : அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோரை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு நீதிமன்ற காவலை நீதிபதி அல்லி நீட்டித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன், அம்பேத்கர், திருவள்ளுவர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் பற்றி இழிவாக பேசியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா. செல்வம் அளித்த புகாரின் பேரில் மணியன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதன், 27 செப்டம்பர், 2023
உட்கார வைத்து பேசுங்கள்.. அதுதான் சக மனிதருடைய சுயமரியாதை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
Kalaignar Seithigal - prem Kumar : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27.9.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தொகுதி-4 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 10,205 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 12 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.
பின்னர் விழாவில் முதலமைச்சர் ஆற்றிய உரை பின்வருமாறு :- “அரையணா காசாக இருந்தாலும் அரசாங்க காசு”- என்று கிராமங்களில் சொல்வார்கள். ஏனென்றால், அரசாங்க வேலைக்கு இருக்கின்ற மவுசு, எந்தக் காலத்திலும் குறையாது.
போட்டித் தேர்வுகளில் தேர்வு பெற்று, எப்படியாவது ஒரு அரசுப் பணியை வாங்கிவிட வேண்டும் என்பது, படித்த இளைஞர்களுடைய ஒரு பெரிய கனவு!
உச்ச நீதிமன்ற அமைப்பை சிதைத்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு”.. ப.சிதம்பரம் கடும் தாக்கு
Kalaignar Seithigal - ”உச்ச நீதிமன்ற அமைப்பை சிதைத்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு”.. ப.சிதம்பரம் கடும் தாக்கு!
நீதித்துறையின் சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் அரசாங்கம் அழித்து வருகிறது என ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களுக்கு 70 பெயர்களை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு இவர்களை நியமிப்பதில் அமைதியாக இருக்கிறது.
இதனால் வழக்குகளை முடிக்க முடியாமல் உயர் நீதிமன்றங்களில் காத்துக்கிடக்கின்றன.
இதற்கிடையில், நீதிபதிகள் நியமனம் தொடர்பாகப் பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை நியமிக்காதது ஏன்? என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
ஹரே கிருஷ்ணா இயக்கம் பசுக்களை கசாப்பு கடைக்காரர்களுக்கு விற்று விடுகிறார்கள்! மேனகா காந்தி அதிரடி
மாலை மலர் : மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் மறைந்த மூத்த மகனான சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி. இவர் தீவிர வனவிலங்கு உரிமை ஆர்வலராகவும் சுற்றுபுற சூழல் ஆர்வலராகவும் செயல்படுபவர்.
தற்போது ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த மக்களவை உறுப்பினராக இருக்கும் இவர் பல முறை மக்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இந்துக்கள் வழிபடும் தெய்வமான பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரால் இந்தியாவை சேர்ந்த இந்து மதகுரு 'ஸ்ரீபக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதர்' என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கம், இஸ்கான் எனும் "சர்வதேச கிருஷ்ணர் விழிப்புணர்வுக்கான சமூக அமைப்பு" (ISKCON). "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" இயக்கம் எனவும் வழங்கப்படும்
மணிப்பூரில் மாணவர்கள் கடத்தி படுகொலை! மீண்டும் பதற்றம் - பள்ளிகளை மூட அரசு உத்தரவு
தினத்தந்தி : மணிப்பூரில் மாணவர்கள் 2 பேர் கடத்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இம்பால்,
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே நீடித்து வந்த மோதல் கடந்த மே மாதம் 3-ந்தேதி பெரும் கலவரமாக வெடித்தது.
4 மாதங்களை கடந்தும் கலவரம் முடிவின்றி தொடர்ந்து வருகிறது. இந்த கலவரத்தில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
விஜயலட்சுமி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏமாற்றிவிட்டதாக கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரை அப்போதே வாபஸ் வாங்கிய நிலையில் தற்போது மீண்டும் சீமான் மீது புகார் கொடுத்து இந்த புகாரையும் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி இரவோடு இரவாக வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இதனிடையே விஜயலட்சுமி தன் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
2024 தேர்தல் ஸ்டன்டாக கனடாவோடு மோதும் பாஜக அரசு
இந்தியாவின் மிக பெரிய எதிரி கனடா என்பது போன்ற பிரசாரங்களை வடஇந்திய ஊடகங்கள் மேற்கொள்கின்ற்ன
எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்து ஏராளமான ஊழல் மோசடிகளில் சிக்கி உள்ள பாஜக அரசு, எதிர்க்கட்சிகளின் கேள்விக்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் கவனத்தை திசை திருப்ப கனடாவை காட்டி மடை மாற்ற முயற்சிக்கிறது
.மேலும் கனடாவில் நடக்கும் பிரச்சனை குஜராத்திகளுக்கும் பஞ்சாபியர்களுக்கும் இடையேயான பிரச்சனைதான்
பஞ்சாப் விவசாயிகள் பிரச்சனையில் அவர்கள் கொதித்து போய் இருப்பது என்னவோ உண்மைதான்,
மறுபுறத்தில் குஜராத்திகள் மொத்த நாடடையும் சூறையாடி வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார்கள்
குஜராத்தி பஞ்சாபி பிரச்சனைதான் இது
தமிழக அரசு மானியத்துடன் கடன் தருகிறது.. ரூ.3.75 லட்சத்தை கட்டத் தேவையில்லை
tamil.oneindia.com - Velmurugan P : திருவாரூர்: நீங்கள் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞராக இருந்தால் உங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், நீங்கள் தொழில் துவங்கவும் தமிழக அரசின் சார்பில் கடன் வழங்கப்படுகிறது.
15 இலட்சம் வரை வங்கிகள் மூலமாக வழங்கப்படும் கடன் உதவிக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமானியம் ரூ.3.75 இலட்சம் மானியமாக பெற்று பயன் பெற முடியும்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஶ்ரீ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
"குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை கொள்கை 2008ன் கீழ் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கும் நோக்குடன் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
செவ்வாய், 26 செப்டம்பர், 2023
யார் இந்தத் திலீபன்? சகோதர படுகொலைகளில் முன்னின்ற கொலைகாரன்.
tamilcircle.net - சமர் பிரிவு: பி.இரயாகரன் : எழுதப்பட்ட, எழுதப்படும் வரலாறுகளில் அரசியலை நீக்கம் செய்துவிட்டு, திரிக்கப்பட்ட வரலாற்றைக் கட்டமைக்கின்றனர். ஒடுக்குவோர் ஒடுக்கப்பட்டோர் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வரலாற்றை காண்பதுமில்லை, கூறுவதுமில்லை.
ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வரலாற்றை கூறுவதற்கும், காண்பதற்கும் ஒடுக்கப்பட்டோர் சிந்தனையும் - அதற்கான அரசியல் நடைமுறையும் இருக்கவேண்டும். இல்லாதபோது ஒடுக்குவோர் கண்ணோட்டங்களிலேயே வரலாறுகள் கூறப்படுகின்றது.
ஒடுக்குவோரின் அரசியல் பின்னணியிலேயே சிவகுமாரன், திலீபன்.. போன்றவர்கள் முன்னிறுத்தப்படுகின்றனர். இந்தவகையில் வரலாறாக இருப்பதெல்லாம், ஒடுக்குவோரின் சிந்தனையும் - ஒடுக்குவோரின் அக முரண்பாடுகளுமே. தமிழனைத் தமிழன் ஒடுக்குகின்ற சிந்தனையை யார் கொண்டுள்ளனரோ, அவர்கள் திலீபனைக் கொண்டாடுகின்றனர்.
மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி: கனிமொழி அறிவிப்பு!
இதுகுறித்து திமுக துணைப்பொதுச்செயலாளர், எம்.பி., மற்றும் நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவருமான கனிமொழி இன்று (செப்டம்பர் 26) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ”அனைத்துத் துறைகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்ணுரிமைக்காகவும் தமிழினத் தலைவர் கலைஞர் மகத்தான பணிகளை ஆற்றியுள்ளார். அவர்தான், அரசு
வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளிட்டவற்றை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் முதலமைச்சராக இருந்து சட்டமாக்கினார்.
சீனா - நேபாளம் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து: இந்தியா பற்றி நேபாள பிரதமர் கூறியது என்ன?
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா ஏழு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார்.
சீனப் பிரதமர் லீ சியாங்கின் அழைப்பின் பேரில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், செப்டம்பர் 23 ஆம் தேதி, தலைநகர் பெய்ஜிங் சென்றடைந்தார்.செப்டம்பர் 30 வரை பிரசந்தாவின் சீனப் பயணம் தொடரும்.
நேபாளத்தின் பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு பிரசந்தா சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
50 முறை துப்பாக்கிச்சூடு.. காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலை குறித்த சிசிடிவி காட்சிகள்? பரபர தகவல்
tamil.oneindia.com - Mani Singh S : ஒட்டாவா: காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட காட்சிகள் அங்குள்ள குருத்வாராவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதாகவும் அதை வைத்து கனடா அதிகாரிகள் விசாரணை நடத்துவதாகவும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
காலிஸ்தான் புலிகள் படையின் தலைவரும், காலிஸ்தான் பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்டப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கலாம். இந்தியாவின் ஏஜென்சிகள் இதனை செய்திருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதனை இந்தியா முழுவதுமாக மறுத்தது.
பிரியங்கா காந்தி : மணிப்பூர் மாணவர்கள் கொலை: மத்திய அரசு வெட்கப்பட வேண்டும்!
மாலை மலர் : மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. தற்போது நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது. அங்கு நடைபெற்ற கலவரத்தில் காணாமல் போனவர்களை கண்டறிய சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. காவல்துறையும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது.
கடந்த ஜூலை மாதம் முதல் மணிப்பூரில் ஃபிஜாம் ஹெம்ஜித் (20) மற்றும் ஹிஜாம் லிந்தோயின்காம்பி (17) எனும் இரண்டு மாணவர்கள் காணாமல் போனார்கள். இவர்கள் இருவரும் கொல்லப்பட்டு, இவர்கள் இருவரின் உடல்கள் காணப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.
அனைவரையும் அதிர்ச்சியுற செய்திருக்கும் இந்த படுகொலை குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
பாஜகவுக்கு தேர்தலை சந்திக்க புல்வாமாக்கள் தேவையா?
இவை எல்லாம் ஆர் எஸ் எஸ் பிரசார தந்திரம் போல் தெரிகிறது
கனடாவில் பாதுகாப்பு இல்லை என்று கூறும் இந்த ஹாஷ்டக்குகள் எல்லாமே ஏறக்குறைய நாக்பூர் ஏஜெண்டுகளிடம் இருந்து வந்தவை போல தெரிகிறது
கனடாவில் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கு ஒரு மோதல் உருவாக வேண்டும் என்று சங்கிகள் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது
பாஜகவுக்கு தேர்தல்களில் வெல்வதற்கு புல்வாமாக்கள் தேவையாக இருக்கிறது.
இரண்டு மூன்று நாட்களாக வடஇந்திய தொலைக்காட்சிகளில் போடும் ஓவர் கூச்சல் ஒரு திட்டமிட்ட ஒரு கலவரத்திற்கு தூபம் போடுவது போல் தெரிகிறது
இது தெரிந்துதான் ஜஸ்டின் இன்று ஐ நாவிலும் இது பற்றி பேசியுள்ளாரோ என்றும் கருத தோன்றுகிறது.
தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதற்கு எதிர்ப்பு: பெங்களூருவில் இன்று முழுஅடைப்பு
தினத்தந்தி : பெங்களூருவில் இன்று முழுஅடைப்பு நடைபெற உள்ளநிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18-ந் தேதி உத்தரவிட்டது.
வேலை தேடி சவூதி சென்று வயிற்றில் ஆணியுடன் வந்த செல்வி..
வீரகேசரி : பொருளாதாரச் சிக்கல் காரணமாக, பணமின்றி தவிக்கும் பல பெண்கள் வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்கின்றனர்.
இவ்வாறு சவூதி அரேபியாவிற்கு வீட்டுச் சேவைக்காகச் சென்ற இந்நாட்டு வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உணவுக்கு பதிலாக ஐந்து இரும்பு கொங்கிரீட் ஆணிகள் மற்றும் துணி உலர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் இரும்பு ஸ்பிரிங் ஒன்றை விழுங்கி, வயிற்றில் ஆணியுடன் இலங்கைக்கு வந்துள்ள சம்பவமொன்று மாத்தளை எல்கடுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சவூதி அரேபியாவின் தைட் பிரதேசத்தில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்த, மாத்தளை எல்கடுவ தேயிலைத் தோட்டத்தில் வசித்து வந்த எம்.எஸ் தியாகா செல்வி என்ற 21 வயதான ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு ஆணிகளை விழுங்கியுள்ளார்.
திங்கள், 25 செப்டம்பர், 2023
அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது! அதிமுக தலைமையில் புதிய மெகா கூட்டணி- அதிகாரப்பூர்வ அறிவிப்
tamil.oneindia.com - Mathivanan Maran : சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக அதிமுக விலகுவதாக அறிவித்துள்ளது. சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிரைவேற்றப்பட்டது.
அதிமுக தலைவர்களை சீண்டும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி வந்தார். இதனால் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என செப்டம்பர் 18-ந் தேதியும் நேற்றும் அதிமுக இரு முறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனையடுத்து சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணா திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பொதுச் செயலாளர் எடபபாடி பழனிசாமி தலைமை வகித்தார்.
உதயநிதியை கண்டித்து டெல்லியில் சாமியார்கள் போராட்டம்.. சனாதன - டெங்கு எதிரொலி
maalaimalar : புதுடெல்லி: சென்னையில் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா ஆகியவற்றுடன் சனாதன தர்மத்தை ஒப்பிட்டு அவர் பேசிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக பாரதிய ஜனதா. இந்து முன்னணியினர் போராட்டமும் நடத்தினார்கள். உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு மாநில போலீஸ் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெல்லியில் இன்று இந்து அமைப்பினர் சார்பில் போராட்டம் நடந்தது.
பாக்சிங்... ஒரே நாளில் சீமான் தோத்துட்டாரு’: வீரலட்சுமி அறிவிப்பு!
மின்னம்பலம் -christopher : பாக்சிங் சண்டை குறித்து சீமான் கூறிய பதிலால் அவர் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், இது தனது தமிழர் முன்னேற்ற படைக்கு கிடைத்த வெற்றி என்றும் வீரலட்சுமி இன்று (செப்டம்பர் 24) அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரால் பரபரப்பு நிலவியது. எனினும் அவர் கடந்த வாரம் தனது புகாரை வாபஸ் பெற்று பெங்களூர் சென்று விட்டார்.
சீமான் – வீரலட்சுமி மோதல்!
ஆனால் விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருந்த வீரலட்சுமிக்கும் சீமானுக்கும் இடையே மோதல் வெடித்து ‘இதுக்கு ஒரு எண்டே இல்லையா?’ என்ற ரீதியில் நீண்டு வருகிறது.
குட்டிமணி - தங்கதுரை வரலாற்றில் சில சொல்லப்படாத செய்திகள்
எல்லா போராளி குழுக்களுக்கும் தமிழர் விடுதலை கூட்டணி போன்ற மிதவாத தலைவர்களுக்கும் ஒட்டு மொத்த தமிழ்நாடும் அளவு கணக்கில்லாத ஆதரவை நல்கிய காலக்கட்டம் அது.
இன்னும் சரியாக சொல்லப்போனால் அனைத்து இந்தியாவே பெரும் எழுச்சியோடு ஆதரவை நல்கியது.
அப்போது இலங்கையில் நடந்து கொண்டிருந்த கலவரம் பற்றிய ஏராளமான செய்திகள் புயல் வேகத்தில் பரவியது
அவற்றில் பல பொய் செய்திகளும் கூடவே அரங்கேறியது.
பொதுவில் கலவரங்களின் போது பரவும் செய்திகளில் உண்மை எது பொய் எது என்று கண்டுபிடிப்பது இலகுவல்ல.
ஆனால் காலம்தான் பல உண்மைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டும்
அந்த உண்மைகள் வெளிவரும்போது . பல சமயங்களில் காலம் கடந்து விட்டிருக்ககூடும்
ஆனாலும் எவ்வளவு காலம் கடந்தாலும் உண்மை வெளிவந்தே தீரவேண்டும்
அதுதான் மக்களுக்கு நன்மை பயக்கும்.
திரு குட்டிமணி திரு தங்கதுரை திரு ஜெகன் போன்ற போராளிகளின் வழக்கில் தோன்றிய பல வழக்கறிஞர்கள் காலப்போக்கில் ஒதுங்கி கொண்டனர்.
அந்த வழக்கில் தீர்ப்பின் போது போராளிகள் தாங்கள் இறந்தாலும் தங்களின் கண்களை தானமாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்
அந்த கண்கள் மூலம் தாங்கள் தமிழ் ஈழத்தை பார்ப்போம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்கள்
போராளிகளின் இந்த கோரிக்கையை அவர்களுக்கு எழுதி கொடுத்தது வழக்கறிஞர் கரிகாலன் என்பது பின்பு தெரியவந்தது
ஞாயிறு, 24 செப்டம்பர், 2023
பாரதியின் ஆரியப்பற்றும் திராவிட வெறுப்பும்
தமிழ் மறவன் : பாரதியின் ஆரியப்பற்று குறித்து சில பாடல்களை காண்போம்..
"இன்னல்வந் துற்றிடும் போததற்கஞ்சோம்
ஏழையராகி இனிமண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும் இன்பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கிலைஈடே."
இப்பாடலில் ஆரியத்தை "உன்னத ஆரியம்" எனக் குறிப்பிடுகிறார்.
மிக முக்கியமான செய்தி இந்தியத் துணை கண்டத்தையே "ஆரிய நாடு" என்றே எப்போதும் குறிப்பிடுகிறார் பார்ப்பன பாரதி
மேலும் பிரிதோர் பாடலில்..
"தேனார் மொழிக்கிள்ளாய்! தேவியெனக் கானந்த
மானாள்பொன் னாட்டை அறிவிப்பாய் -- வானாடு
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி." என இம்மண்ணை பார்ப்பன நாடாக அறிவிக்கிறார் பாரதி!
இன்னுமோர் பாடலில்...
"என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.
ஒவ்வொருவர் குடும்பத்திலும் நீங்கள் அங்கமாக மாற வேண்டும்''-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
nakkheeran.in : மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், ''இது திருப்பூர். திராவிட இயக்கம் கருவான ஊர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் முதன்முதலில் சந்தித்துக் கொண்ட ஊர் தான் திருப்பூர்.
அந்த வகையில் பல்வேறு அரசியல் திட்டங்களுக்கு அடித்தளமிட்ட ஊர் தான் திருப்பூர்.
அமெரிக்க தூதர் : இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டிற்கு ஃபை ஐஸ் FIVE EYES தகவல்களும் அடிப்படை
மாலை மலர் : அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய உளவுத்துறை கூட்டமைப்பு, ஃபை ஐஸ் (Five Eyes). உலகளாவிய தீவிரவாத, பயங்கரவாத மற்றும் நாசவேலைகள் குறித்து கண்காணிப்பின் மூலமாகவும் சமிக்ஞைகளை உள்ளடக்கியும் பெறப்படும் தகவல்கள், இந்த 5 நாடுகளுக்கிடையே பரிமாறி கொள்ளப்பட்டு அதன் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
2020ல் இந்தியாவால் தீவிரவாதி என பிரகடனப்படுத்தப்பட்ட ஹர்திப் சிங் நிஜ்ஜார் எனும் காலிஸ்தான் தீவிரவாதி கடந்த 18 அன்று கனடாவில் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்தியாவிற்கு பெரும்பங்கு உண்டு என கனடாவின் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை ஆதாரமற்றது என இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இரு நாடுகளும் தங்கள் நாட்டு தூதர்களை திரும்ப அழைத்து கொள்ளும் அளவிற்கு இரு நாட்டு உறவு நலிவடைந்தது.
ரஷியாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு இராணுவ பயிற்சி .. பாசிசப்பாதையில் புட்டின்?
மாலை மலர் : கடந்த பிப்ரவரியில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது.
இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தீவிரமாக போரிட்டு வருகிறது. போர் 575 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போரில் வெற்றி பெற இரு தரப்பும் பல்வேறு வழிகளை கடைபிடித்து வருகிறது.
இதில் ஒன்றாக ரஷியா, தன் நாட்டு பள்ளிகளில் குழந்தைகளையும் மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உறுப்பு தானம் வழங்குவோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்.. இன்று முதல் அமல்
பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அரசு மரியாதை செய்யும் பணி இன்று முதல் அமலுக்கு வருகிறது என மருத்துவம் மற்றம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை
மாலைமுரசு : மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை – ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்பு- சந்தேகநபர்களும் இலங்கையர்கள்
மலேசியாவில் இலங்கை பிரஜைகள் மூவர் கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கையர் இருவரை தேடிவருவதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செந்துலில் உள்ள பெரெஹென்டயன் வீதியில் நேற்றிரவு இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும்; வீடொன்றில் வீட்டில் தங்கியிருந்தனர் அதன் பின்னரே அந்த வீட்டில் கொலைகள் இடம்பெற்றன என மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊடக கருவிகள் இன்று எல்லோர் கைகளிலும் இருக்கிறது
ராதா மனோகர் : ஊடகவியலாளர் ஆவது எப்படி என்பது மிகவும் முக்கியமான ஒரு கேள்வி.
நகைச்சுவையாக கடந்து போவதும் தவறில்ல்லை
எல்லாவிதமான சுதந்திர கருத்துக்களுக்கும் சமூக ஊடகங்களில் இடம்பெறுவது நல்லதுதான்
இந்த கேள்வியை ஒரு ஆக்கபூர்வகமாக அணுகவேண்டும் என்று நான் கருதுகிறேன்
எனக்கு தெரிந்த அளவில் பல பெரிய சிறிய பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் எந்த செய்தி கிடைத்தாலும் அது சரியா தவறா என்று சமூக ஊடகங்கள் மூலமும் நிச்சயப்படுத்தி கொள்கிறார்கள்.
ஊடகவியலை சமூக ஊடகங்கள்தான் ஜனநாயக படுத்தி உள்ளன
நான் சொல்வதே செய்தி
நீ இதை கேட்டுத்தான் ஆகவேண்டும் உனக்கு வேறு வழியில்லை என்ற ஆதிக்க பொறிமுறையை சமூக ஊடகங்களில் களமாடும் சாதாரண மனிதர்கள் உடைத்து எறிந்திருக்கிறார்கள்
நாம் நம்புவதை அல்லது