வீரகேசரி : இலங்கை தவிர 80 நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவுகளை கட்டார் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.: குறிப்பிட்ட பட்டியலில் இலங்கை, சவுதி, குவைட், அமீரகம், யெமென் போன்ற பல நாடுகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.>இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளது. கட்டாருக்கு வரவிரும்பும் இந்த 80 நாடுகளை சேர்ந்த பிரஜைகள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, பணம் கட்டவோ தேவையில்லை. கட்டாருக்கு விஜயம் செய்ய இந்த சலுகையைபெற வரையறை கிடையாது, பல முறை பயணம் மேற்கொள்ளவும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் திரும்பச் செல்லும் டிக்கெட்டை உறுதிசெய்து இந்த பயண சலுகையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகை தரும் பயணிகளின் நாடுகளை பொறுத்து பலமுறை பயணம் தொடர்பான காலவரையறையானது (30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில்) மாறுபடுகிறது.
குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் திரும்பச் செல்லும் டிக்கெட்டை உறுதிசெய்து இந்த பயண சலுகையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகை தரும் பயணிகளின் நாடுகளை பொறுத்து பலமுறை பயணம் தொடர்பான காலவரையறையானது (30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில்) மாறுபடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக