சனி, 4 ஜூன், 2011

அம்பானியின் வீடு உலகிலேயே மிகப்பெரிய வீடு

அம்பானியின் ஆடம்பர வீடு!
க.ராஜ்குமார்
உலகிலேயே மிகப்பெரிய வீடு எங்கிருக் கிறது தெரியுமா? நமது இந்தியாவில்தான்! மும்பை, அல்ட்டா மவுன்ட் சாலையில் உள்ள இந்த வீட்டின் சொந்தக்காரர் முகேஷ் அம்பானி ஆவார். 2007-ல் ரூ.4,400 கோடி மதிப்பில் கட்டுமான வேலைகள் துவக்கப் பட்டு, 2010 இறுதியில் கட்டி முடிக்கப்பட்டுள் ளது. ஏசியன் கண்டெம்பொரரி எனும் அமெ ரிக்க நிறுவனம் இந்த வீட்டை கட்டித் தந் துள்ளது. இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.10,000 கோடியாகும். முகேஷ் அம் பானி 2011-ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் 9 வது இடத்தை பிடித்துள்ளார்.. இவரின் இன்றைய சொத்து மதிப்பு 27 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

மின் கட்டணம் ரூ.70 இலட்சம்

முகேஷ் அம்பானி தனது வீட்டிற்கு குடி யேறியவுடன், முதல் மாதம் மின்சாரக் கட்ட ணமாக ரூ.
70 இலட்சம் கட்டியுள்ளார். முதல் மாத மின்சார உபயோகக் கட்டணமாக ரூ.70 லட்சத்து 69 ஆயிரத்து 488 பில் வந்துள்ளது. இது 6 லட்சத்து 37 ஆயிரத்து 240 யூனிட் மின் சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தில் அதிகபட்சமாக பயன்படுத்தப் படும் சராசரி மின் அளவு 300 யூனிட் ஆகும். அம்பானியின் வீட்டு மின் பயன்பாட்டுடன் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவிற்கும் உள்ள இடைவெளியாகும். மின்சாரக் கட்டணத்தை சரியாக செலுத்திவிட்டதால் அம்பானிக்கு, ரூ.48 ஆயிரத்து 354 தள்ளுபடி செய்யப்பட் டுள்ளதாம். இதுபோகத்தான் அம்பானி ரூ.70 லட்சம் மின் கட்டணம் செலுத்தியுள்ளார்.

5 லட்சம் லிட்டர் தண்ணீர்

தினசரி இந்த வீட்டிற்கு மும்பை மாநக ராட்சி நிர்வாகம் 5 இலட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது.
முகேஷ் அம் பானியும் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அவரது தாயார் உள்பட 6 பேர் மட்டும் இந்த வீட்டில் வசித்து வரு கின்றனர். இவர்களுக்கு சேவை செய்ய சுமார் 600 பணியாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

இந்த வீட்டிற்குஆண்டிலாஎன்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 4532 சதுர அடி தரை பரப்பளவும், 4,00,000 சதுர அடி மொத்த பரப்பளவும் கொண்ட இந்த வீட்டின் உயரம் 570 அடியாகும். 60 தளங்களை அமைப்பதற் கான அடித்தளம் அமைக்கப்பட்டு, தற்போது 27 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கட் டிடத்தில் மூன்று ஹெலிகாப்டர் தளங்கள் உள்ளன. விலை உயர்ந்த, வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 168 கார்கள் உள்ளன. இவைகளை நிற்க வைப்பதற்கு இந்த வீட்டில் 6 தளங்கள் ஒதுக்கப்பட் டுள்ளன. எட்டாவது மாடியில் பொழுதுபோக் கிற்காக ஒரு மினி சினிமா தியேட்டரும் உள் ளது. மூன்று தளங்களில் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4-ம் மாடியில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் நுழைந்தால் குளிர்காலத்தில் சூடாகவும், வெயில்காலத் தில் குளிராகவும் இருக்குமாம். 9-வது தளம் அவசர காலத்திற்கு பயன்படுத்த ஒதுக்கப்பட் டுள்ளது. 10, 11-வது தளங்கள் விளையாடு வதற்காகவும் உடற்பயிற்சிக்காகவும் ஒதுக் கப்பட்டுள்ளது. இதில் ஒரு நீச்சல் குளமும் உள்ளது. விருந்தினர்கள் தங்குவதற்காக இரண்டு தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலே உள்ள நான்கு தளங்களில் முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீத்தா மற்றும் மூன்று குழந்தைகளுடன் தாயார் கோகில பென் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த தளங்களிலிருந்து அரபிக்கடலின் அழகிய தோற்றமும், மும்பை நகரத்தின் எழிலையும் கண்டு களிக்கலாம். அதற்கு மேல் உள்ள இரண்டு தளங்கள் ஹெலிகாப்டர் இயக்கு வதற்கான கட்டுப்பாட்டு அறைகளை கொண் டுள்ளது. மும்பை மாநகராட்சி நிர்வாகம் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு இன்னும் அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

முகேஷ் அம்பானியின் வீட்டின் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உலக பணக்காரர் பட்டி யலில் இரண்டாம் இடத்தில் உள்ள பில் கேட்ஸ் வீட்டின் மதிப்பு 100 மில்லியன் டாலர். இந்திய நாட்டின் இன்னொரு பணக்காரரும் உல பணக்காரர் பட்டியலில் இடம் பெற்ற வருமான லட்சுமி மிட்டல், கடந்த ஆண்டு லண்டனில் 60 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு வீடு வாங்கியுள்ளார். முகேஷ் அம்பானி இவ்வளவு செலவு செய்து இப்படி ஒரு வீட் டை கட்டியிருக்க வேண்டிய அவசிய மில்லை என்று இந்திய நாட்டின் பெரும் பணக்காரரான ரத்தன் டாடா கருத்து தெரி வித்துள்ளார். உலகம் முழுவதும் பேசப்படக் கூடிய ஒரு விஷயமாக இன்று அம்பானி யின் ஆடம்பர வீடு அமைந்துள்ளது

இந்த அம்பானிக்கும் அவரது குடும்பத் தினருக்கும்தான் இந்திய அரசு, பொருளாதார நெருக்கடி என்ற காரணத்தைக் காட்டி சில ஆண்டுகளுக்கு முன்னர் கோடிக்கணக்கான ரூபாயை மீட்புத் தொகையாக வழங்கியுள்ளது.

அம்பானியின் இந்த பிரம்மாண்டமான வீடு இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. மாறாக இந்திய நாட்டில், வறுமைக் கோட்டிற்கு கீழ், மக்கள் தொகையில் சரி பாதிக்கும் மேல் உள்ள மக்களின் வறுமைக்கு காரணமாக விளங்குகிறது.

முஸ்லிம் அழகு ராணி கல்லால் அடித்து கொலை

உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் கத்யா கொரேன் என்ற 19 வயதான முஸ்லிம் பெண். அந்த நாட்டில் நடந்த அழகுராணி போட்டியில் அவர் கலந்துகொண்டு 7வது இடத்தைப் பிடித்தார். இவர் நாகரிகமான உடைகளை உடுத்துவதில் ஆர்வம் உள்ளவர். அவர் திடீர் என்று காணாமல் போய்விட்டார்.
ஒரு வாரத்துக்குப் பின்னர் அவர் உடல் அவரது கிராமத்தில் கண்டு எடுக்கப்பட்டது. விசாரணையில் அவர் அழகிப் போட்டியில் கலந்து கொண்டது. அவரது சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் இதனால் அவர் 3 இளைஞர்களால் கல்லால் அடித்து கொல்லப்பட்டார் என்பதும் தெரியவந்தது.
கொலையில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். அவர் பெயர் பிகால் கசியேவ் வயது 16 தான்

சீமான்,விஜயலட்சுமியின் மறுபக்கம்,பின்னனியில் s.v. சேகர்?

மதுரை: நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமானின் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமி பற்றி பல அதிர்ச்சி தகவல்கள் சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இது குறித்து சின்னத்திரை வட்டாரங்களில் கூறப்படுவதாவது:

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பின்னர் டிவி பக்கம் வந்தார் விஜயலட்சுமி. நடிகை ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரித்த கேம் ஷோவான தங்கவேட்டை நிகழ்ச்சியை தொகுத்து அளித்தார். அப்போது, ஏன் லேட்டா வர்றீங்க..? என்று கேட்டால்கூட, ராடன் ஆபீஸுக்கு புகாரை அனுப்பி வைப்பார்.

இந்தத் தொல்லை தாங்காமலேயே அவரிடம் நேராகப் பேசாமல் இடைத்தரகராக இணை இயக்குநர் ஒருவரை வைத்துக் கொண்டுதான் அவரைப் பலரும் சமாளித்து வந்தனர்.

அவரைத் தவிர்த்துவிட்டு சீரியலை தொடர முடியாத சூழல் வந்தபோது தான், வேறு வழியில்லாமல் அனைத்து விவகாரங்களும் ராதிகா முன்பு வைக்கப்பட்டு பஞ்சாயத்து நடத்தப்பட்டதாகக் கூற சொல்லப்படுகிறது.

தங்கவேட்டை நிகழ்ச்சி இயக்குநர் ரமேஷ் தன்னை காதலித்து ஏமாற்றியதாக விஜயலட்சுமி போலீஸில் புகார் கொடுத்தார். அதனால் தான் அவரை அந்த இரண்டு தொடர்களிலிருந்தும் தூக்கினார்கள். பாவம் அந்த இயக்குநர் சில நாட்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். பெரும்பாடுபட்டு அந்த வழக்கை வாபஸ் பெற வைத்தார்கள்.

கன்னட நடிகருடன் காதல் வாழ்க்கை:

கடந்த 2008ம் ஆண்டு கன்னட நடிகர் லோகேஷின் மகன் ஸ்ரூஜன் லோகேஷுடன் விஜயலட்சுமி காதல் கொண்டு நிச்சயத்தார்த்தம் நடந்தது. பின்பு இந்தக் காதலும் 6 மாதத்தில் முறிந்து போய்விட்டது. ஸ்ரூஜன் வேறொரு சின்னத்திரை நடிகையை திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்.

இதனையடுத்து தான் விஜயலட்சுமி பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் தமிழில் ரீ எண்ட்ரீயானார்.

இப்போது திடீரென சீமான் மீது புகார் கூறியுள்ளார். இந்த விவகாரத்திற்கு பின்னனியில் திரைப்பட நாடக நடிகரும், காமெடி நடிருமான 'சே' என்பவர் பின்னணியில் உள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
  
English summary
Controvarsies on Actress Vijayalakhsmi is not new to Cinema and TV industry. Earlier she had complained about TV game show Thanga Vettai's director Ramesh. Later she fell in love with Kannada Actor Lokesh's son. They both got engaged too. But after 6 months their bond broken. Now Vijayalakshmi has come out with new issue.
சேகர் 

லாக்கப் மரணம்: பெண் எஸ்.ஐ., சஸ்பெண்ட்

: மதுரை ஊமச்சிகுளம் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 1ம் தேதி, விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட மார்கண்டேயன் என்பவர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக எஸ்.ஐ., ஜெயராமன், ஏட்டுகள் முருகன், சோலைமலை கண்ணன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ராதா மகேஸ் என்ற பெண் எஸ்.ஐ., யை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., அஸ்ரா கர்க் உத்தரவிட்டார்.

Dhayanithi 323 லைன்கள் ரகசிய புதைகேபிள் மூலம் சன் டிவி அலுவலகத்துடன் இணைப்பு

சென்னை, ஜூன் 3: "தூங்குகிறது சிபிஐ அறிக்கை' (தினமணி, ஜூன் 2, 2011) என்ற செய்தி முழுக்க முழுக்க தயாநிதி மாறனின் வீட்டு தொலைபேசி இணைப்பகம் குறித்த சிபிஐ-யின் ரகசிய அறிக்கையை பிரதானமாகக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில் முக்கியமானது சுமார் ரூ. 440 கோடி இழப்பானது திருட்டுத்தனமாக பயன்படுத்தப்பட்ட 323 ஐஎஸ்டிஎன் இணைப்புகளால் ஏற்பட்டது என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் மீது தயாநிதி மாறன் வெளிப்படுத்தியுள்ள கோபம் நகைப்புக்குரிய கேலிக்கூத்தாகும்.தயாநிதி மாறனின் தவறுகளைச் சுட்டிக்காட்டி சிபிஐ அளித்த அறிக்கையை யாருமே மறுக்க முடியாது. ஏனென்றால் சிபிஐ-யும் அரசு அமைப்புதான். இரண்டாவதாக இந்த விசாரணையை சிபிஐ தானாகவே மேற்கொண்டு நடத்தியுள்ளது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தயாநிதி மாறனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று இதைக் கூற முடியாது.மூன்றாவதாக, மத்திய அரசின் சிபிஐ அறிக்கைக்கு பதில் அளிக்காமல், அறிக்கையை பட்டவர்த்தனமாக வெளியிட்ட தினமணி மீது குற்றம் காண்கிறார் தயாநிதி மாறன்.தான் குற்றமற்றவர் என்பதற்கு ஆதாரமாக பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி பொதுமேலாளர் வி. மீனலோசனி 6-4-2009-ல் அளித்த கடிதத்தைக் காட்டுகிறார் தயாநிதி மாறன். இந்தக் கடிதம் தயாநிதி மாறன் எழுதி அனுப்பி பெறப்பட்ட பதில் கடிதமாகும். பிஎஸ்என்எல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரே ஒரு பிஎஸ்என்எல் இணைப்பு மட்டும் தயாநிதி மாறனின் போட் கிளப் வீட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது; அந்த தொலைபேசி எண் 24371500 ஐஎஸ்டிஎன்-பிஆர்ஏ என்றும் வேறு எந்த பிஎஸ்என்எல் இணைப்பும் இதுவரை அளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாவதாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 4,50,000 அலகுகள் வரை மூன்று ஆண்டுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்றும் அதில் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கே அவர் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது அவர் பயன்படுத்திய கோடிக்கணக்கான அழைப்புகளோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவானது. இந்த கடிதத்தின்படி ஒரு எம்.பி.-க்கு அனுமதிக்கப்படும் தொலைபேசி அழைப்புகளின் அளவுக்குக் குறைவாக அவர் பயன்படுத்தியுள்ளார் என்பதே அது. மீனலோசனியின் கடிதத்தின் அடிப்படையில் தினமணியில் குறிப்பிட்டபடி அவரது வீட்டில் நிறுவப்பட்ட 323 பிஎஸ்என்எல் இணைப்புகளும் தவறு என்பதாகும். அது தவறா, சரியா என்பதை இப்போது பார்க்கலாம்.சிபிஐ அறிக்கையின்படி குறிப்பிட்ட 323 பிஎஸ்என்எல், ஐஎஸ்டிஎன் இணைப்புகளும் தயாநிதி மாறனின் போட்கிளப் வீட்டில் நிறுவப்பட்டது. ஆனால் மீனலோசனியின் கடிதத்தில் ஒரே ஒரு இணைப்பு அதாவது 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. வேறெந்த இணைப்பும் வழங்கப்படவில்லை என அவர் கூறுவது உண்மையல்ல. இதைக் காட்டி தப்பிக்க நினைக்கும் தயாநிதி மாறனின் திட்டமும் இதனால் தகர்ந்துவிட்டது. மீனலோசனியின் கடிதமும் தவறானது.சென்னை தொலைபேசி டைரக்டரியில் விவரம் அறிய ட்ற்ற்ல்://210.212.240.244:8181/ஸ்ரீண்ல்க்வ்.ஹள்ல்ஷ் என்ற முகவரி உள்ள இணையதளத்திற்குச் சென்று தயாநிதி மாறன் எம்.பி. என்று டைப் செய்தாலே உங்களுக்கு பின்வரும் விவரங்கள் கிடைக்கும். தொலைபேசி எண் 24371515, தயாநிதி மாறன் எம்.பி., 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 028 என்ற முகவரி கிடைக்கும். தொலைபேசி டைரக்டரியில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண் 24371515 என்றிருப்பதைக் காணலாம். ஆனால் மீனலோசனி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது 24371500 என்ற தொலைபேசி எண்ணைப் பற்றிய விவரம்தான். ஆனால் அவர் 24371515 என்ற மாறன் வீட்டு தொலைபேசி எண்ணைப் பற்றி குறிப்பிடவில்லை. இதே இணைய பக்கத்தில் சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ் என்ற எண்ணுடன் தயாநிதி மாறனின் போட் கிளப் முகவரியைப் பதிவு செய்தால் உங்களுக்கு தொலைபேசி எண் 24371500, சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ், வீட்டு முகவரி 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணமலைபுரம், சென்னை - 600 028 என்ற விவரம் இருக்கும். இதிலிருந்தே ஒரே ஒரு பிஎஸ்என்எல் இணைப்புதான் மாறன் வீட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது தவறான தகவல் என்று தெரியவருகிறது. 24371500 என்ற தொலைபேசி எண் தயாநிதி மாறனின் வீட்டில் இல்லை, அது சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ் என்ற பெயரில் செயல்பட்டுள்ளது. இதன்படி தயாநிதி மாறனின் வீட்டில் இன்று வரை செயல்படும் தொலைபேசி எண் 24371515. இதுவே மீனலோசனி கடிதத்தில் குறிப்பிடும் 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டுமே தயாநிதி மாறனின் வீட்டில் செயல்படுவதாகக் குறிப்பிடும் கடித தகவல் தவறு என்பதை நிரூபிக்க போதுமானது.24371515 என்ற தொலைபேசி எண்ணானது சாதாரண தொலைபேசி எண் அல்ல. இந்த எண்ணிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளை சிபிஐ பட்டியலிட்டுள்ளது. சோதனை அடிப்படையில் சிபிஐ மேற்கொண்ட ஆய்வில் 48,72,027 அலகு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 24371515 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இத்தனை அலகுகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதிலிருந்தே எந்த அளவுக்கு மல்டி-மீடியா தகவல் பரிமாற்றம் இந்த இணைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை உணரலாம். 48 மணி நேரத்திற்குள் தயாநிதி மாறனுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாக கடிதம் தயாரித்த மீனலோசனி, தொலைபேசி எண் 24371515 என்ற எண்ணை முற்றிலுமாக மறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த எண்ணை சிபிஐ ஆய்வுக்குள்படுத்தியுள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டு அதை விட்டிருக்கலாம். மேலும் இந்த எண் புழக்கத்தில் உள்ளது என்ற விவரம் சென்னை டெலிபோன்ஸ் இணையதளத்தில் இன்றளவும் உள்ளது. இருப்பினும் இது விடுபட்டு போனது எப்படி? ஏனெனில் இந்த எண் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது என்பதாலா? மேலும் பார்க்கலாம்."2437' என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணில் தொடங்கும் தொலைபேசி இணைப்பகத்தை சிபிஐ முதலில் கண்டறிந்து, 323 லைன்களைக் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகமே தயாநிதி மாறனின் வீட்டில் ஏற்படுத்தப்பட்டு, ரகசிய புதைகேபிள் மூலம் சன் டிவி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தது.சென்னை டெலிபோன்ஸில் உள்ள மொத்த 323 இணைப்புகளும் மொத்தம் 2437 என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒருவேளை மீனலோசனியின் வாதம் சரி என்று ஏற்றுக் கொண்டால், சென்னை வட்டார தொலைபேசி எண்கள் அனைத்துமே 2437 என்ற எண்ணில் தொடங்குவதாக இருக்கும். தயாநிதி மாறனுக்கு மட்டும் ஏன் இப்படி பிரத்யேக, தனிப்பட்ட எண் வழங்கப்பட்டது? அதற்கான காரணத்தை மீனலோசனிதான் விளக்க வேண்டும்.அல்லது அவரது கடிதத்தை தனது வாதத்திற்கு வலுசேர்க்கும் தயாநிதி மாறன்தான் விளக்கி, தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.மேலும் மீனலோசனி இப்போது நிர்வாகப் பிரிவு பொதுமேலாளர் அல்ல, ஆனால் அவர் இன்னமும் சென்னை டெலிபோன்ஸில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தயாநிதி மாறனின் ஆலோசனையால் ஈடேறவில்லை. குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வீணாகிப்போனது.மேலும் சிபிஐ அறிக்கையில் 2437 எனத் தொடங்குவதில் 23 இணைப்புகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதல் நான்கு இலக்கங்கள் பின்வரும் எண்களில் அதாவது 2211 முதல் 2213 வரை (3 இணைப்புகள்); 2222; 2233; 2244 முதல் 2246 வரை (3 லைன்); 2255 முதல் 2257 வரை (3 லைன்); 2266 முதல் 2268 வரை (3 லைன்); 2277 முதல் 2279 வரை (3 லைன்); 2288 முதல் 2290 வரை (3 லைன்); 2290; 2299; 2300; 2301; இதன்படி மொத்தம் 300 தொலைபேசி எண்கள் 2437 என்ற முதல் நான்கு இலக்கங்களில் தொடங்கும். மேலும் இந்த நான்கு இலக்கங்களில் தொடரும் பிற எண்கள் 1500-ல் தொடங்கி 1799-ல் 300 இணைப்புகள் முடியும். இந்த எண்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தவில்லை. காரணம் அவை ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன.ஆனால் அவை எங்கே இருக்கின்றன? தயாநிதி மாறன் 24371515 என்ற தொலைபேசி எண்ணை மறந்தது எப்படி? அது தயாநிதி மாறன் எம்.பி. பெயரில்தானே போட்கிளப் வீட்டு முகவரியில் மார்ச் 2007 முதல் உள்ளது. இந்த இணைப்பு மூலம் 48 லட்சம் அலகுகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை அவர் பயன்படுத்தியிருக்க முடியாது. அதை சன் டிவி பயன்படுத்தியிருக்கிறது என சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இதை மாறன் கவனிக்கவும்.இனி, தயாநிதி மாறன் தாராளமாக "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் மீது வழக்குப் பதிவு செய்யலாம். ஆனால் அது அவரது பதவிக்கு சரியான படிப்பினையை அளிக்கும். உண்மையை மறைக்க முற்படாமல் மெளனமாக இருப்பதுதான் அவருக்கு நல்லது.

ஜெயலலிதா - கமல் சந்திப்பு

முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப்பேசினார்
முதல்வர் ஆனதற்காக மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது
இந்த சந்திப்பின்போது கமல், பிரபு, விஜய் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

பழம்பெரும் நடிகைகள் காஞ்சனா, சுகுமாரி, ராஜஸ்ரீ, பாடகி எல்.ஆர். ஈஸ்வரி ஆகியோரும் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Cable TV அரசுடமை: விநியோகஸ்தர் சங்கம் பாராட்டு


கேபிள் டி.வி. அரசுடமை: விநியோகஸ்தர் சங்கம் பாராட்டு

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’கடந்த சில ஆண்டுகளில் தமிழ் திரையுலகம் கடுமையான போட்டிகளை சந்தித்து திரைப்பட வசூல் களம் பெறும் இழப்பை பெற்றது. அதில் முக்கியமான ஒன்று கேபிள் டி.வி. வழியாக உரிமை இல்லாத படங்களை, அதுவும் புதிய படங்களை அந்த ஊர் திரையரங்குகளில் புதிய படங்கள் திரையிட்டு ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில், சில ஊர்களில் திரை யங்குகளில் படங்கள் திரையிடாத நிலையில் சட்டத்திற்கு எதிராக முறையற்ற வழியில் எங்கள் திரைபடங்களை சில கேபிள் ஆப்ரேட்டர்கள் திரையிட்டு எங்களை பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாக்கினர்.

இதை எதிர்த்து நாங்கள் போராடி, போராடி தோற்ற நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் “கேபிள் டி.வி. அரசுடமையாக்கம்” என்ற அறிவிப்பு எங்கள் இதயத்தை நெகிழ வைக்கிறது. தமிழக மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பான இத் திட்டம் அவர்களுக்கு பெறும் மகிழ்வை கொடுக்கும். வரம்பு மீறி மற்றவன் உழைப்பில் சுகம் கண்ட சில அத்துமீறல் கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு இது சரியான கடிவாளம். இத்திட்டம் தமிழ் திரையுலகின் புனர்வாழ்விற்கு ஒரு பிள்ளையார் சுழி’’ என்று தெரிவித்துள்ளார்.

மங்காத்தா vs வேலாயுதம்.இன்றைய முக்கிய பிரச்சனை

இன்றைய சினிமா உலகில் ஹாட் டாபிக் மங்காத்தா மற்றும் வேலாயுதம்தான்...பரபர இயக்குனர்கள்...பளிச் ஹீரோயின்கள்..பெரியபெரிய டெக்னீசியன்கள் என இரு படங்களும் யானை பலத்துடன் தயார் ஆகின்றன...

மங்காத்தா வை இயக்குனர் வெங்கட் அஜீத் ரசிகர்.கலக்கலான ஒரு மாஸ் படமாக மங்காத்தாவை உருவாக்கி வருகிறார்...திரிஷா ஜோடி.புகைப்படங்கள் கூட செம ரசனையாக இருக்கிறது...ஸ்டைலில் அஜீத் பின்னுவார் போல..கதை என பார்த்தால் பெட் புகழ் லலித் மோடியின் கதை என்கிறார்கள்..சூதாட்டம் மையமாக கொண்ட பல ஹாலிவுட் படங்களின் மசாலா..என்கிறார்கள்..

வேலாயுதம் நம்பித்தான் விஜய் இருக்கிறார்..வரிசையாக வந்த அனித்து படங்களும் சொம்பையாக போய்விட...இயக்குனர் ராஜாவின் தொடர் வெற்றிகளுக்கு ப்பின் முதன்முதலாக விஜய் படத்தை இயக்குகிறார்..ஒரு சரியான மசாலா படத்தை கொடுக்கும் வித்தை ராஜாவுக்கு தெரியும் என்பதால் விஜய் தைரியமாக இருக்கிறார்.....
வெற்றிப்பட நாயகி லேட்டஸ்ட் முண்ணனி நாயகி ஹன்ஷிகா இதில் வந்து காட்டி..போகிறார்..பின்னே நடிக்கவா போறார்?

இந்த படத்தின் கதை பற்றி கவலைப்படத்தேவையில்லை..வழக்கம்போல ராஜா தெலுங்குவில் இருந்து சுட்டுவிட்டார்.அதனால் முதலீடுக்கு கியாரண்டி.விநியோகஸ்தர்கள்,தயாரிப்பாளர்கள் தெம்பாக இருக்கலாம்.

ஆர்ப்பாட்டம் சமூக நீதியை நிலைநிறுத்தும் சமச்சீர் கல்வி திட்டத்தை அதிமுக அரசு ரத்துசெய்ததை கண்டித்து

சமச்சீர் கல்வியை ரத்து ஆர்ப்பாட்டம்

சமூக நீதியை நிலைநிறுத்தும் சமச்சீர் கல்வி திட்டத்தை அதிமுக அரசு ரத்து செய்துவிட்டதை கண்டித்து சென்னையில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஏழைகள் முதல் பணக்காரர்கள் குழந்தைகள் வரை அனைவருக்கும் ஒரே சீரான கல்வியை அளிக்க வகைசெய்யும் சமச்சீர் கல்வி திட்டத்தை அதிமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்பட ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன்தொடர்ச்சியாக திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் சென்னையில் உள்ள பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசின் தன்னிச்சையான முடிவால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதுடன், கல்விக் கொள்கைக்கு துணைபோகும் அவல சூழ்நிலையும் உருவாகி இருப்பதாக சுப.வீரபாண்டியன் கூறினார்.
மேலும் பேசிய அவர், மக்களுடைய வரிப்பணத்தை பாழடிக்கக் கூடாது. 200 கோடிக்கும் மேலாக செலவிடப்பட்டு, அச்சிடப்பட்டிருக்கிற புத்தகங்களை வீணாக்கக் கூடாது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு நினைக்குமேயானால், இந்த ஆண்டே அந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த பிறகு, அதைப்பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்றார்.

திமுக பாய்ச்சல்!குரேஷி,தினமணி தொடர்பு என்ன ?

ரூர்: இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி மற்றும் தினமணி நாளிதழ் மீது திமுக தனது அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடும் விமர்சனம் செய்துள்ளது.

முரெசாலியில் வெளியாகியுள்ள கட்டுரையில், நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது அ.தி.மு.க. அணி வெற்றி பெற அரும்பாடு பட்ட தமிழ் நாளேடு தினமணி. அந்தத் தினமணியின் டெல்லிப் பதிப்பு 3ம் தேதி தொடங்குகிறது.

தொடங்கி வைப்பவர் யார் தெரியுமா ?.

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி அவர்கள் தான்.

அ.தி.மு.கவின் ஆதரவு ஏடான தினமணி டெல்லிப் பதிப்பை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத் தேர்தலை மிகவும் கண்டிப்பாக- கறாராக- நடுநிலை தவறாமல் நடத்துவதற்கு முழு முதல் காரணமாக இருந்த அதிகாரிதான் தினமணி நாளிதழின் டெல்லிப் பதிப்பைத் தொடங்கி வைக்கிறார்?.

அப்படி எனறால், தினமணிக்கும் டெல்லி தேர்தல் ஆணையருக்கும் என்ன தொடர்பு?.

அவர் எப்படி இந்த விழாவில்?, கணக்கு எங்கேயோ இடிக்கிறதா?, ஏதாவது புரிகிறதா?, புரிந்தால் சரி!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரைவில் திருச்சி மேற்கு தொகுதிக்கு இடைத் தேர்தல்:

இந் நிலையில் அமைச்சர் மரியம் பிச்சையின் மரணத்தால் காலியாகியுள்ள திருச்சி மேற்கு தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.

இதேபோல புதுச்சேரியில் முதல்வர் என்.ரங்கசாமி ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள இந்திரா நகர் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், காலியாக உள்ள சட்டப் பேரவை தொகுதிகளுக்கு 6 மாதத்துக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. எனவே மாநில தேர்தல் அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும். தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையத்தில் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

தேர்தலின் போது புதிய வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளை வகுத்து தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. பிகார் தேர்தலில் தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை தந்தது என்றார் அவர்.

English summary
DMK official party newspaper has slammed Chief Election Commissioner SY Qureshi for inagurating Dinamani's Delhi edition

மாணவி: போர்ட்டரைப் பார்த்து நான் உங்களை காதலிக்கிறேன்

துண்டு போட்டு இடம் பிடித்துக் கொடுத்தவரிடம் இதயத்தைப் பறி கொடுத்த மாணவி

திருச்சி: ரயிலில் உட்கார துண்டு போட்டு இடம் கொடுத்த போர்ட்டர் மீது ஒரு தலைக் காதல் கொண்ட கல்லூரி மாணவி, வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறேன், ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டதால் அந்த போர்ட்டர் அதிர்ச்சியாகி போலீஸாரிடம் முறையிட்ட கதை திருச்சியில் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஏழைத் தம்பதியின் மகள் ரஞ்சிதா. 19 வயதான இவர்தான் அந்த வீட்டில் முதல் முதலில் பிளஸ்டூ பாஸ் செய்தவர். தற்போது திருச்சியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

தினசரி மணப்பாறையிலிருந்து ரயில் மூலம் திருச்சி வந்து கல்லூரிக்குப் போய் விட்டு மாலையில் ஊர் திரும்புவார் ரஞ்சிதா.

அவருக்கு கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த, திருச்சி ரயில் நிலையத்தில் போர்ட்டராக பணியாற்றும் ஒருவர், ஒரு நாள் ரயிலில் உட்கார துண்டு போட்டு இடம் பிடித்துக் கொடுத்தார். இதில் அவர்களுக்குள் நட்பு ஏற்படவே, தினசரி அவர் ரஞ்சிதாவுக்கு துண்டு போட்டு இடம் பிடித்துக் கொடுக்க ஆரம்பித்தார்.

தன் மீது அந்த போர்ட்டருக்கு தனிப் பிரியம் ஏற்பட்டதாக உணர்ந்த அந்தப் பெண், போர்ட்டரை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இது போர்ட்டருக்குத் தெரியாது.

தினசரி அந்த போர்ட்டரைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை ரஞ்சிதாவால். அவர் ஒரு நாள் வராவிட்டாலும் கூட மனசு ஒரு மாதிரி ஆகி விடுமாம். இந்த நிலையில், ரஞ்சிதா ஏழைப் பெண் என்பதால் அவ்வப்போது பேனா உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுப்பார் அந்த போர்ட்டர். இதை காதல் பரிசாக நினைத்துக் கொண்ட ரஞ்சிதா, போர்ட்டர் மீதான காதலை வலுவாக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் ஒரு நாள் போர்ட்டரைப் பார்த்து நான் உங்களை காதலிக்கிறேன் என்று கூற அவருக்கு ஒன்றும் புரியவில்லை. நான் உங்களைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். வீட்டை விட்டு வந்து விடுகிறேன். நாம் ஓடிப் போய் விடலாம் என்று கூற போர்ட்டருக்கு பெரும் அதிர்ச்சியாகி விட்டது.

இப்படிச் சொல்லிய அடுத்த நாள் இரவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து போர்ட்டருக்குப் போன் செய்து நான் வந்து விட்டேன் என்று அவர் கூற போர்ட்டர் விரைந்து வந்து தனது நிலையைக் கூறியுள்ளார். நான் ஒருபோதும் உன்னைக் காதலிக்கவில்லை என்று விளக்கியுள்ளார். இதைக் கேட்டதும் ரஞ்சிதா அழ ஆரம்பித்து விட்டார்.

இதைப் பார்த்த மகளிர் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து என்ன ஏது என்று விசாரித்துள்ளனர். போர்ட்டர் நடந்ததை விளக்கிக் கூற ரஞ்சிதாவின் ஒரு தலைக் காதல் குறித்து போலீஸாருக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து ரஞ்சிதாவின் குடும்பத்திற்குத் தகவல் தெரிவித்து பெற்றோரை வரவழைத்தனர். அவர்களும் அழுதபடி ஓடி வந்தனர்.

பின்னர் காவல் நிலையத்தில் வைத்து ரஞ்சிதாவுக்கு போலீஸார் புத்திமதி கூறினர். இதையடுத்து தனது பெற்றோருடன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

English summary
A gril from Manapparai ran away from her house to marry railway porter. But the porter shocked the girl by saying I never loved you. Police intervened in this fiasco and adviced the girl to return to her village.

ஊழலை ஒழிக்க கோடிகள் செலவில் உண்ணாவிரதம், இது மிகப்பெரிய ஊழல்


பல கோடி ரூபாய் செலவழித்து போராட்டம் நடத்துவது ஏன்? ராம்தேவுக்கு காங். கேள்வி

ராம்தேவ் உண்ணாவிரதம் அர்த்தமற்றது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான திக்விஜய் சிங் கூறியுள்ளார். எந்த நோக்கத்திற்காக இந்த போராட்டம் நடைபெறுகிறதோ, அதில் இருந்து அவர் விலகி நிற்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் ராம்தேவ், பல கோடி ரூபாய் பணம் செலவழித்து போராட்டம் நடத்துவது ஏன்? ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுவதுபோன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ராம்தேவ் உண்ணாவிரத்திற்குப் பின்னால் ஆர்எஸ்எஸ் இயக்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனால்தான் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் உண்ணாவிரத்தை கைவிட ராம்தேவ் மறுத்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
மேலும் பேசிய திக்விஜய் சிங், அன்னா ஹசாரே போன்றோர் ராம்தேவ் உண்ணாவிரத்துக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்றும் கூறினார்.

காவிப்பயங்கரவாதிகளின் உண்ணாவிரத நாடகம் ஆட்சியை பிடிக்க R S S சதி


ஊழலை ஒழிப்பதாகக் கூறி, காவி ஆட்சியை மத்தியில் கொண்டு வர சதித் திட்டம்! கி.வீரமணி
 

ஊழலை ஒழிப்பது என்ற பெயரால் காவியாட்சியை மீண்டும் கொண்டு வரும் சதித் திட்டத்தைப் புரிந்து கொள்ளாமல், காவிகளின் மிரட்டலுக்கு மத்திய அரசு அடி பணியலாமா என்று கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ஊழலை ஒழிக்கிறோம்’ என்ற புதிய முகமூடியுடன் இந்துத்துவா மதவாதி சக்திகள், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்ற ரூபத்தில் புதிய உண்ணாவிரத நாடகங்களை தலைநகர் டெல்லியில் அரங்கேற்றுகின்றன.
சுமார் 18 கோடி ரூபாய் செலவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மின்விசிறிகள், மேடைகள் முதலிய தடபுடல் ஏற்பாடுகள்.
அண்மைக் காலத்தில் உடற்பயிற்சிகளில் ஒன்றான மூச்சுப் பயிற்சியான யோகா வித்தைகளைப் பரப்பி, பல நவீனரக பாபாக்களும், காவிகளும் ஆண்டவன் ‘அவதாரங்களும்’, தத்துவார்த்த மழைபொழியும் நடிகர்களைத் தோற்கக் கூடிய ஒப்பனைக் குருமார்களும் புற்றீசல் போல கிளம்பி வருகின்றனர்!
தொலைக்காட்சி ஊடகங்கள், ஏடுகள் இவற்றுக்கு அபார விளம்பரங்கள் தருவதோடு, இப்படி இரட்டை வேடதாரிகள் “தூய யோவான்களாகவும் சித்திரித்து, படித்த பாமரர்களையும் ஏமாற்றிடத் துணை போகின்றன!
அரசியலில் ஊழலை ஒழிக்குமுன் ஆன்மீகத்தைச் சரி செய்யுங்கள்!
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பிற்படுத்தப்பட்டவர் திடீரென யோகா பயிற்சியில் முன்னணிக்கு வந்து, பாபா ராம்தேவ் ஆகி, பல அரசியல் தலைவர்கள் ஆதரவை ஆரம்பத்தில் பெற்று, பிறகு வெளிநாட்டுப் பணக்காரர்களையும் சீடர்களாக்கி, உலகப் பணக்கார ஆசிரமங்களையொத்த ராஜபோகத்தை எளிமை வாழ்வு எனக் கூறி நடத்துகின்றனர்!

அரசியலைத் தூய்மைப்படுத்தும் முன்பு இவர்கள் சார்ந்த ஆன்மீகம், மதங்களில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, மோசடிகளைத் தடுத்து நிறுத்த முதலில் உழைக்க வேண்டாமா?

அப்பாவி மக்களைக் கவருவதற்காக கறுப்புப் பணம், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை கொண்டு வருதல் போன்ற பல்வேறு திட்டங்களை முன் வைத்து மத்திய அரசாங்கத்தை “பயமுறுத்திட” இப்படி ஒரு உண்ணாவிரத நாடகத்தைத் துவக்கி, ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதால் நடத்திட முன் வந்துள்ளனர்; பாபா ராமதேவ், அன்னாஹசாரே போன்றவர்கள் புதிய அவதாரங்கள்!
காவி ஆட்சியைக் கொண்டு வரும் திட்டம்
மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி குறிப்பாக காங்கிரஸ் தலைமையில் உள்ள ஆட்சிக்கு எதிராக பா.ஜ.க. காவி ஆட்சியை மீண்டும் கொண்டு வரவே இப்படிப்பட்ட திடீர் ஊழல் ஒழிப்பு திடீர்க் காட்சிகள்!
டில்லியில் இதில் அரசியல்வாதிகள் மேடையில் இருக்க அமைதிக்கப்பட மாட்டார்களாம்! மாறாகக் கலந்து கொள்பவர்கள் யார் யார் தெரியுமா?
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால்.
2. சாத்வி ரிதம்பரா
3. ஆர்.எளி.எளி.அமைப்பினர்
4. இந்து அமைப்புகள்
பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள்
இதில் அசோக் சிங்கால், சாத்வி ரிதம்பரா போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள்; ஜளிடீளி லிபரான் கமிஷன் என்ற அறிக்கையை காங்கிரளி கட்சி செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதே! அதிலும் அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கிலும் இவர்கள் எல்லாம் உள்ளனர்!


இதை அய்க்கிய முற்போக்கு முன்னணி ஆட்சித் தலைமை, பிரதமர், அமைச்சர்கள் எவருமா புரிந்து கொள்ளவில்லை?

ஊழலை ஒழிக்க தயங்காது என்று கூறும் மத்திய அரசு தலைமை, இந்த சாமியார்களிடம் ஏன் கெஞ்ச வேண்டும் அமைச்சர்களை தூது அனுப்பி இதை நிறுத்திடும்படிக் கெஞ்சுதல், கொஞ்சுதல் செய்ய வேண்டும்? அவ்வளவு பலவீனமான அரசாக இயங்குவது நல்லதா?
மிரட்டுகிறவர்களுக்குப் பணிவதா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இதனைக் கூறி சட்டங்களைக் கொண்டு வருவதே அரசியல் சட்டப்படிக்கு உள்ள கடமையாகும்.

அதைவிடுத்து, மிரட்டுகிறவர்களைச் சேர்த்து புதுக்கமிட்டி போட்டு, சட்டத்தைத் தயாரிப்போம் என்று கூறும் மத்திய அரசின் செய்கை, அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஏன் முரண்பட்ட நடவடிக்கை அல்லவா?

இந்தி வந்து குதித்தது ஏன்?
அது மட்டுமல்ல,  “பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” என்பதுபோல பாபா ராம்தேவ் உண்ணாவிரத கோரிக்கைகளில் ஒன்று தற்போது ஆட்சியில் உள்ள ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு, இந்தியையே நாட்டு நிருவாகத்தில் முழுக்க முழுக்க பயன்படுத்தவும் வேண்டுமாம்! அது ஒரு முக்கிய பாபா திட்டம்! புரிந்து கொண்டீர்களா?

இது முழுக்க காவியமயமாக்கும், மத்திய ஆட்சிக்கு எதிரான திட்டமிட்ட மறைமுக முயற்சி. இதற்குப் போய் “மயிலே மயிலே இறகு போடு” என்று கூறி அவர்களுக்குப்பின் ஓடலாமா?
காங்கிரளி கட்சியில் ஒரே ஒரு திக் விஜய்சிங் தான் இதனை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார் என்பது சற்று ஆறுதல்!

ஆட்சித் தலைமைக்குத் தெரியாதா?

பாபா ராம்தேவ்வை ஒரு வியாபாரி என்று நன்றாக வர்ணித்து அறிக்கை கொடுத்ததோடு, அவரை நோக்கி அமைச்சர்களை அனுப்புவது ஏன் என்று கேட்டுள்ளார் திக் விஜய்சிங்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியவர்களுக்குத் தெரியாமலா இந்த இரண்டு அணுகுமுறைகள்?

ஒருபுறம் பேச்சு வார்த்தை காவிகளிடம்; இன்னொருபுறம் காங்கிரளி கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் அறிக்கை ஒன்றுமே புரியவில்லை நாட்டினருக்கு!
ஜனநாயகக்  கேலிக் கூத்து
இந்த அரசியல் அலங்கோலங்கள்பற்றி நினைத்தால் ஜனநாயகம் இப்படி கேலிக் கூத்தாக்கப்படுகிறதே என்று எண்ணி வேதனைப்பட வேண்டியுள்ளது!

மீண்டும் காவிகள் அரியணை ஏறவே இந்த ஆயத்தங்கள் என்பதை புரிய வைக்க வேண்டியது முற்போக்குச் சிந்தனை உடைய தலைவர்களின் கடமையாகும். இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


கலைஞர் வைரமுத்துவிடம்: உங்களுக்காவது 6 வது முறை கிடைத்ததே

தேர்தலில் தோல்வி அடைந்த நேரத்திலும் நகைச்சுவை ததும்ப பேசியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று கவியரசு வைரமுத்து கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 88வது பிறந்தநாள் விழா அக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் சென்னை காமராஜ் அரங்கில் கொண்டாடப்பட்டது. அதில் பேசிய வைரமுத்து,

திமுக தலைவர் கருணாநிதி கண்ணாடியை தூக்கி பார்த்து விட்டு பேசினால் கொஞ்சம் கவனமாகப் பேச வேண்டும். காபி அல்ல டீ சாப்பிடுகிறாயா? என்று அவர் கேட்டால் கொஞ்ச நேரம் பேச விரும்புகிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் தேர்தலில் தோல்வி அடைந்து இருந்த நேரத்தில் நான் 6வது முறை தேசிய விருது பெற்று விட்டு வாழ்த்து பெற சென்றேன். அப்போது அவர் என்னிடம் இது எத்தனையாவது விருது என்று கேட்டார்.

நான் 6வது விருது என்றேன். உடனே சட்டென்று “எனக்குதான் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்களுக்காவது 6வது முறையாக கிடைத்து இருக்கிறதே” என்று சொல்லிச் சிரித்தார்.

அந்த நேரத்தில் அந்த நகைச்சுவை யாருக்கு வரும்?. அவரது 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய போராளியாகவே வாழ்ந்து வருகிறார். இழிவு, அவமானம், துயரம் எல்லாவற்றையும் சந்தித்து விட்டார். அதிகமான அவமானங்களை சந்தித்தவர் அவர் மட்டும்தான். ஆனால், எந்த நிலையிலும் தான் தானாகவே இருப்பவர் கருணாநிதி என்றார்.

நிகழ்ச்சியில் சுப.வீரபாண்டியன், கவிஞர் அப்துல் காதர், குஷ்பு, திண்டுக்கல் லியோனி உள்ளி்ட்டோரும் பேசினர்.
 

English summary
Karunanidhi craked joke even just after the defat of DMK in the TN assembly polls, said poet Vairamuthu

நாங்க கூடா நட்பு இல்லை கலைஞருக்கு காங்கிரஸ் பதில்

சென்னை: கூடா நட்பு துன்பத்தில் போய் முடியும் என்று திமுக தலைவர் கருணாநிதி காங்கிரஸ் மீது மறைமுக தாக்குதல் தொடுத்தார்.

தனது பிறந்த நாளையொட்டி நேற்று அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, `கூடா நட்பு கேடாய் முடியும் என்ற பொன்மொழியை மறந்து விடாமல் திமுக உடன்பிறப்புகள் தங்கள் பயணத்தை தொடர வேண்டும்' என்றார்.

இது, பல விஷயங்களிலும் நம்ப வைத்து கழுத்தறுத்த தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே கருதப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியிடம் கேட்டபோது,
நேரடியாகவோ, மறைமுகமாகவோ திமுக எந்த அச்சுறுத்தலும் விடுக்கவில்லை. அதுபற்றிய கேள்விக்கே இடமில்லை. திமுகவும், காங்கிரசும் கூட்டணி கட்சிகள். எனவே, எந்த யூகத்துக்கும் இடமளிக்க வேண்டாம். மதிப்புமிக்க கூட்டாளி என்ற முறையில், கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டுகளும், மறுப்புகளும் வந்தவண்ணம் உள்ளன. இவை பற்றி காங்கிரஸ் கட்சி பதில் அளிப்பது பற்றிய கேள்விக்கே இடமில்லை. பதில் அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த குற்றச்சாட்டுகளுக்கு தயாநிதி மாறனோ அல்லது சி.பி.ஐயோதான் பதில் அளிக்க வேண்டும். எனவே, அவர்களிடம் கேளுங்கள்.

2ஜி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐயால் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வர வேண்டாம். சி.பி.ஐயின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்வரை பொறுத்திருங்கள். இந்த விவகாரத்தால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்றார்.
 

English summary
Congress had downplayed DMK chief Karunanidhi's bad friendship reference. Congress spokesperson Abhishek Manu Singhvi said, DMK has never threatened us directly or indirectly
 
 நாங்க கூடா நட்பு இல்லை கலைஞருக்கு காங்கிரஸ் பதில்

இது 5 ஸ்டார் உண்ணாவிரதம்-பின்னணியில் ஆர்எஸ்எஸ்'-திக்விஜய்

டெல்லி: கறுப்புப் பணத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் யோகா குரு ராம்தேவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த உண்ணாவிரதத்துக்கு ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளதோடு, தனது தொண்டர்களை பெருமளவில் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்பர் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது. ஆனால், தனக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று ராம்தேவ் கூறியுள்ளார்.

இந் நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், இப்போது பூனைக் குட்டி வெளியில் வந்துவிட்டது. ராம்தேவின் போராட்டத்துக்கு பந்தல் அமைப்பதில் ஆரம்பித்து, உண்ணாவிரத மையத்துக்கு ஆட்களைக் கூட்டி வருவது வரை எல்லா வேலைகளையும் ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் தான் பார்த்து வருகின்றனர்.

இதிலிருந்து என்ன தெரிகிறது, இந்த உண்ணாவிரதத்தின் பின்னணியே ஆர்எஸ்எஸ் தான். உண்ணாவிரத்ததில் எங்கும் எதிலும் ஆர்எஸ்எஸ் மயமாகவே உள்ளது.

பாபா யோகா கற்றுக் கொடுத்தால் அதில் எனக்கு பிரச்சனையில்லை. ஆனால், அரசியல் செய்தால்.. முதலில் அவர் அரசியலுக்கு வந்துவிட்டு அதைச் செய்ய வேண்டும்.

முதலில் அவர் ஒழுங்காக யோகா சொல்லித் தருகிறாரா என்பதிலேயே சந்தேகம் உள்ளது. அவரது யோகா முறைக்கு பல யோகா விற்பன்னர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதையும் நாம் மறக்கக் கூடாது.

இந்த உண்ணாவிரதத்துக்கு எவ்வளவு ஏற்பாடுகள் பாருங்கள், எவ்வளவு செலவு.. இந்த உண்ணாவிரத்தில் ஆடம்பரமே முன் நிற்கிறது. கிட்டத்தட்ட 'இது 5 ஸ்டார் உண்ணாவிரதம்'. இதனால் என்ன பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருக்கிறோம் என்பது கூட அவருக்கு சரியாகத் தெரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.

அன்னா ஹசாரே போன்ற உண்மையிலேயே மக்களுக்காக பாடுபடும் தலைவர்கள், ராம்தேவுடனான தொடர்பை துண்டிக்குக் கொள்ள வேண்டும் என்றார்.

ராம்தேவ் உண்ணாவிரதம் நடத்தலையே..மத்திய அரசு:

இதற்கிடையே டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராம்தேவ் உண்ணாவிரதம் நடத்த அனுமதி வாங்கவில்லை என்றும், அவர் யோகா கிளாஸ் நடத்தவே அனுமதி வாங்கியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் யோகாவுக்கு அனுமதி வாங்கிவிட்டு உண்ணாவிரதம் நடத்துவது ஏன் என்று கேட்டு டெல்லி போலீஸ் மூலம் ராம்தேவுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து ராம்தேவுடன் கேட்டதற்கு, யோகா என்றால் என்ன என்று போலீசார் புரிந்து கொள்ள வேண்டும். அகிம்சை, உண்மையை சொல்வது, திருடாமல் இருப்பதும் யோகாதான் என்றார்.

அதே நேரத்தில் ராம்தேவின் உண்ணாவிரதத்தைக் கைவிடச் செய்ய, அவரது தரப்புடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு:

இந் நிலையில் ராம்தேவ் விவகாரம், கறுப்புப் பணப் பிரச்சனையில் மத்திய அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஜனாதிபதி பிரதீபா பட்டீலை சந்தித்து விளக்கமளித்தார்.

40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது மன்மோகன் சிங் சமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயண விவரங்கள் குறித்தும் ஜனாதிபதியிடம் விளக்கினார்.

பின்வாங்கும் அன்னா ஹசாரே:

இந் நிலையில் ராம்தேவின் உண்ணாவிரதத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, அது குறித்து நாளை டெல்லிக்கு வந்த பின்னரே முடிவு செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் அவர் உண்ணாவிரதத்தில் பங்கேற்பாரா என்பது சந்தேகமாகியுள்ளது.

காஸ்ட்லி உண்ணாவிரதம்-மேதா பட்கர்:

இந் நிலையில் மக்கள் பிரச்சனைகளுக்கு அயராது உண்ணாவிரதப் போராட்டங்கள் பல நடத்திய சமூக சேவகி மேதா பட்கர் கூறுகையில், பாபா ராம்தேவின் போராட்டம் அதிக செலவிலான ஒன்று. இதுபோன்று செலவு பிடிக்கும் போராட்டங்கள், போராட்டத்தின் மற்றொரு முகத்தை காட்டுகிறது. நாம் ஊழலை எதிர்க்கிறோம். ஆனால் பல கோடிகளை செலவழித்து, இதுபோன்ற அதிக செலவாகும் போராட்டம் நடத்தப்படுகிறது.

பாபா ராம்தேவ் போராட்டம் வெறும் கூட்டத்தை திரட்டும் ஒன்றாக முடிந்து விடும் ஆபத்து இருக்கிறது. முதலாளித்துவ கொள்கைதான் கறுப்பு பணத்துக்கு காரணம் என்றார்.

English summary
Stepping up his attack on Baba Ramdev, Congress General Secretary Digvijay Singh alleged that RSS was behind the yoga guru's indefinite fast. Frowning upon the protest action by the Baba, Singh agreed with a questioner that the Yoga guru was playing politics. "If you want to teach yoga, I have no problem, but if you want to do politics, then join the fray".

அல்-கொய்தா இணையத்தளம் யாரால் எப்போது தொடர்பு கொள்ளப்படுகிறது

லண்டன்: வெடிகுண்டுகள் தயாரிப்பது குறித்த முழு விவரங்கள் அடங்கிய அல்-கொய்தாவின் இணையத் தளத்தை ஹேக் செய்த இங்கிலாந்து உளவுப் பிரிவினரான எம்ஐ6, அதில் கேக் செய்வது எப்படி என்ற விவரங்கள் அடங்கிய பைல்களை அப்லோட் செய்துள்ளது.

தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது ஆரம்பித்து, வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வேதிப் பொருட்கள், பேட்டரிகள், வயர்கள் விவரம், வெடிகுண்டுகளை வீட்டிலேயே தயாரிக்கும் முறைகள் ஆகிய விவரங்களுடன் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த இணையத் தளத்தை 2010ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்யவும் அல்-கொய்தா திட்டமிட்டிருந்தது. இது குறித்து விவரம் அறிந்த இங்கிலாந்து உளவுப் பிரிவான எம்ஐ6, இதை ஹேக் செய்தது. பின்னர் அதில் வெடிகுண்டுகளுக்குப் பதில் கேக் செய்வது குறித்த சமையல் குறிப்புகள் அடங்கிய பைல்களை அப்லோட் செய்து, பாஸ்வேர்டையும் மாற்றிவிட்டது.

மேலும் இதில் சில கோட்களையும் எம்ஐ6 சேர்த்தது. அதை வைத்து இந்த இணையத்தளம் யாரால் எப்போது தொடர்பு கொள்ளப்படுகிறது, அதில் தீவிரவாதத்துக்கு உதவியான விவரங்களை சேர்ப்பவர்கள் யார் யார் என்ற விவரங்களை அறிந்து, அவர்களை அமெரிக்க, இங்கிலாந்து உளவுப் பிரிவினர் கண்காணிக்கவும் ஆரம்பித்தனர்.

அதன்மூலம், இந்த 67 பக்க வெடிகுண்டு இணையத்தளத்தை உருவாக்கியது வளைகுடாவைச் சேர்ந்த அன்வர் அல்-அவ்லாக்கி என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த விவரங்கள் இப்போது தான் வெளியில் வந்துள்ளன.

English summary
Britain's cyberwar against al-Qaida took a sweet turn when intelligence officials hacked into a Web site, subbing bomb-making plans with a cupcake recipe. The cyber operation was undertaken by MI6 and and Britain's Government Communications Headquarters to disrupt efforts by al-Qaida in the Arabian Peninsula to recruit so-called lone wolf terrorists with the English-language online magazine

ஹரே கிருஷ்ணா'!.அடிதடியில் Iscon கோவில் நிர்வாகிகள் அடிதடி!

பெங்களூர் ஹரே கிருஷ்ணா கோவில் நிர்வாகிகள், நடுரோட்டில் அடிதடியில் ஈடுபட்டு பக்தர்களின் மனதை புண்ணாக்கினர்.

ஹரே கிருஷ்ணா அமைப்பின் (International Society for Krishna Consciousness-Iskcon-இஸ்கான்) மும்பை, பெங்களூர் நிர்வாகிகளிடையே யார் பெரியவர் என்ற மோதல் நீண்டகாலமாகவே நடந்து வருகிறது.

மும்பை ஹரே கிருஷ்ணா கோவிலின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் வரதகிருஷ்ண தாஸா, பெங்களூர் ஹரே கிருஷ்ணா கோவிலின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் மதுபண்டிட் தாஸா.

பெங்களூர் மகாலட்சுமி லே-அவுட்டில் மலை மீது அமைந்துள்ள கிருஷ்ணர் ஆலயத்தை நிர்வகிப்பது யார் என்பதில் இந்த சண்டை நடக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந் நிலையில் நீதிமன்ற அனுமதியோடு பெங்களூர் கோவிலை ஆய்வு செய்ய மும்பை இஸ்கான் அமைப்பினர் நேற்று வந்தனர். ஆனால், அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்து பெங்களூர் நிர்வாகிகள் கடும் மோதலில் ஈடுபட்டனர்.

15 கார்களில் வந்த வரதகிருஷ்ண தாஸா தலைமையிலான நிர்வாகிகளை, கார்களில் இருந்து இறங்க விடாமல் தடுத்து மதுபண்டிட் தாஸா தலைமையிலான நிர்வாகிகள் தடுத்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே அடிதடி நடந்தது. இதில் வேட்டிகளும் கூட கிழிந்தது தான் மிகவும் வருத்தமான விஷயம்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொது மக்களின் கண்ணெதிரே இந்த சண்டை நடுரோட்டில் நடந்தது. இதனால் மக்களும் பக்தர்களும் அதிர்ச்சியடைந்தனர். அமைதியாக பஜனை பாடி இறைவனின் நினைவில் மூழ்க வந்த பல பக்தர்கள், இந்த சண்டையைப் பார்த்து அதிர்ந்து கண்ணீரும் விட்டனர்.

குடும்பத்துடன் வந்த பலர், அதிர்ச்சியடைந்து வேகமாக வெளியேற முயன்றனர். ஆனால், மும்பை குழுவைத் தடுப்பதற்காக கோவிலின் முக்கிய கதவுகள் மூடப்பட்டிருந்ததால் வெளியேறவும் முடியாமல் தவித்தனர்.

கோவில் அமைந்துள்ள ராஜாஜி நகர் பகுதியின் வெஸ்ட் ஆப் கார்ட் ரோட்டில் ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிக்காக பாதி சாலை மூடப்பட்டுவிட்ட நிலையில் மீதியுள்ள சாலையில் தான் பெரும் நெரிசலுடன் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நடுரோட்டு சண்டையால், அந்தப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுவிட்ட, மக்கள் நெரிசலில் சிக்கித் தவித்தனர்.

எல்லா சண்டையும் முடிந்து மும்பை குழு தோல்வியுடன் திரும்பிச் சென்றபின் சினிமாவில் வரும் போலீஸ் மாதிரி, அந்த ஏரியா போலீசார் வந்து சேர்ந்தனர்.

English summary
The battle of Iskcons took an ugly turn as devotees of the Bangalore unit prevented the Mumbai bureau representatives from entering its premises. It affected the vehicular traffic on the West of Chord Road in front of the International Society for Krishna Consciousness (Iskcon) bureau.

Ha Ha Ha 1 லட்சம் பேர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈ

ராம்தேவுடன் சேர்ந்து ஏறத்தாழ 1 லட்சம் பேர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொண்டர்கள் மைதானத்திலேயே தொடர்ந்து தங்கி இருப்பதற்கு வசதியாக அங்கு 1300 கழிவறைகள் மற்றும் குளியல் அறைகளும் அமைக்கப்படுகின்றன.

உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முதல் நாளான நேற்றே, பாபா ராம்தேவின் ஆதரவாளர்கள் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ராம்லீலா மைதானத்தில் குவிந்து விட்டனர். மைதானம் முழுவதும் கொடிகள், ராம்தேவின் போஸ்டர்கள் மற்றும் தோரணங்களால் காவிமயமாக காட்சியளிக்கிறது.


பல தொண்டர்கள் டி.வி. கேமரா முன்பு தோன்றி பாரத் மாதா கி ஜெய்', வந்தே மாதரம்' என்பது போன்ற கோஷங்களை விண்ணதிர முழங்கியதையும் பார்க்க முடிந்தது.


அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது ஆதரித்த இந்தி திரையுலகம், பாபா ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்தை ஆதரிக்கவில்லை.

இதுபற்றி பிரபல நடிகர் சல்மான்கான் கூறுகையில்,

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துவது நல்ல விஷயம்தான். ஆனால், அதற்காக உண்ணாவிரதம் இருக்க தேவையில்லை. லஞ்சம் வாங்க வேண்டாம் என்று தனது ஆதரவாளர்களிடம் கூறினாலே போதும் என்றார்.

நடிகர் ஷாருக்கான் கூறுகையில்,

ஒருவர் உண்ணாவிரதம் இருந்து தலைவர் ஆனதால், ராம்தேவும் அதே வழிமுறையை பின்பற்றுகிறார். அவரை நான் ஆதரிக்க மாட்டேன் என்றார்.
நடிகை ஷபனா ஆஸ்மியும், பாபா ராம்தேவை ஆதரிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

அட கொய்யாலே  கடைசியாக பிஜேபி மீண்டும் பதவிக்கு வருவதற்கு சீரியசாக  முயற்சி எடுக்க தொடங்கி விட்டது. 
அயோத்தி ஆறின கஞ்சியாகி விட்டாலும் பரவாயில்லை அன்ன ஹசரேயும் ராம்தேவும் பிஜேபியை கரை சேர்கிறார்களா பார்ப்போம்.
காங்கிரஸ்சின் தளம்பலையும் புலம்பலையும் பார்க்கும்போது பிஜேபி கரை சேரத்தொடங்கி விட்டது போலத்தான் தெரிகிறது. 
அட டா முன்றாவது அணி இடது சாரி மாயாவதி நிதிஷ் குமார் போன்றோர் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லையே .

டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி : கதையல்ல... நிஜம்

கூலித் தொழிலாளியாக இருந்த ஆவடியை சேர்ந்த தேவேந்திரன், இன்று டாக்டராகி, திறமைக்கு வறுமை தடையில்லை என்பதற்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார். ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் கடும் உழைப்பால் இன்று டாக்டராகி இருக்கிறார். சினிமாவில் ஒரு பாடல் முடிவதற்குள் கோடீஸ்வரனாகும் காட்சிகள் வரும். ஆனால், தேவேந்திரனின் கதை நீண்ட கால கடும் உழைப்பில் உருவான ஒன்று. அது சினிமாவுக்கு பொருந்தாத கதை. "எங்க வீட்டு சூழ்நிலை எனக்கு நல்லா தெரியும். அப்பா கொண்டு வரும் பணத்துல, குடும்பத்தை நடத்துறதே ரொம்ப கஷ்டம். இதுல நான் என்னோட படிப்புக்காக அப்பாவ தொல்லைப்படுத்த விரும்பல. பத்தாவது வரைக்கும் வீட்டுல படிக்க வச்சாங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. அதனால பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே, நான் அப்பா கூட வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்' என்றார் தேவேந்திரன். வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, "அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன். அதனால பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கல்விச் செலவை அந்த பள்ளிக்கூடமே ஏத்துக்குச்சு. ஒரு வழியா என் படிப்பால, எங்க குடும்பத்துக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாத மாதிரி ஆகிருச்சு. அதனால ஓரளவுக்கு என்னோட தம்பியை நிம்மதியா படிக்க வச்சாங்க' என்று சொல்கிறார். "நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன். அதுக்கு பிறகு தான் எனக்கு பிரச்னைகளே ஆரம்பிச்சது' என, தன் சாதனை பயணத்திற்கு, "பிரேக்' போட்டார் தேவேந்திரன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய தேவேந்திரனுக்கு, மேற்படிப்பு விண்ணப்பத்திற்குக் கூட, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் உதவி இருக்கிறார். நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
ஆனால், கல்லூரி நுழைவுக்கட்டணம் கட்டுவதற்கு கூட, பணமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும், தனி மனிதர்களிடமும், உதவி கேட்டு கிடைக்காததால், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளையில் கல்விச் செலவிற்காக விண்ணப்பித்திருக்கிறார். செய்தித்தாள்களின் வழியாக, தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது. தேவேந்திரனின் கஷ்டத்தை உணர்ந்த பல பேர், அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். அந்த உதவிகளை எல்லாம் தன்னை போல, படிப்பிற்காக கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று, தேவேந்திரன் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் முதுகலை படிப்பதற்கு, நுழைவுத்தேர்வு எழுத சத்திஸ்கர் சென்று வந்திருக்கிறார்.
"மேற்படிப்பு படிப்பதற்கு நிறைய செலவாகுமே, எப்படி சமாளிக்க போறீங்க' என கேட்டால், அவரிடமிருந்து நம்பிக்கையுடன் வந்து விழுகிறது பதில், "மருத்துவ மேல்படிப்பு எல்லாத்துக்கும் அரசு ஊக்கத் தொகை கொடுக்கும்.
அதனால எனக்கு எந்த கவலையும் இல்ல. என் வாழ்க்கையில நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்றேன். கல்வி தான் என் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். வறுமையை காரணம் காட்டி யாரும் படிப்ப பாதியில நிறுத்திடாதீங்க. உங்கக்கிட்ட இருக்கிற வறுமையை விரட்டனும்னா கல்வியால தான் அது முடியும்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல்பீடம் அமைக்க இந்தியா 250 மில்லியன் ரூபா உதவி:அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க!


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஒன்றை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இந்தியா முதற்கட்டமாக 250 மில்லியன் ரூபாவினை இந்தத் திட்டத்துக்காக வழங்கவுள்ளது என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கான பொறியியல் பீடம் உருவாக்கம் தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஒன்றை அமைப்பது தொடர்பான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இதனை அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் இரண்டு கட்டங்களாக உதவிகளை வழங்கவுள்ளது. முதற்கட்டமாக இந்திய 250மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது. அந்த வகையில் நாங்கள் அதனைக்கொண்டு நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்போம்.
மேலும் இரண்டாம் கட்டமாகவும் இந்தியா 250 மில்லியன் ரூபாவை பொறியியல் பீடத்தை அமைப்பதற்கான உதவியாக வழங்கவுள்ளது. அத்துடன் இலங்கை அரசாங்கமும் 250 மில்லியன் ரூபாவை இதற்காக ஒதுக்கியுள்ளது.
அந்த வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கான பொறியியல் பீடம் விரைவில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்படும். இதற்கான காணியை அடையாளம் காணும் பணிகளும் இடம்பெற்றுவிட்டன.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. எனவே அதனை நிறைவேற்றி வைப்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.

யாழ்ப்பாண வீதி அகலிப்பும், அபிவிருத்தியும்.

karainager road
சிந்தனைக்கூடம்; - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பில் யாழ்ப்பாண குடாநாட்டின் வீதி அபிவிருத்தி தொடர்பாக சமீபத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் சிந்தனைக்கூடத்தின் பணிப்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் மேற்படி விடயம் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்தார்.
jaffna road-1  இன்று யாழ் மக்களிடையே வீதி அகலிப்பு தொடர்பாக பல பிரச்சினைகள் தோன்றி வாத பிரதிவாதங்களிற்கு உட்பட்டுள்ளன. உண்மையில் முறையாக இவை திட்டமிடப்பட்டிருந்தால் இப் பிரச்சினைகள் தோன்றியிருக்காது என்றே எண்ண தோன்றுகின்றது. கல்வியாளர்கள், அரச நிர்வாகிகள், நடைமுறைப்படுத்தும் நிபுணர்கள் ஆகிய முக்குழுவினர்; இணைந்து மக்கள் அபிப்பிராயத்திற்கு மதிப்பளித்தே எந்த திட்டங்களும்  தீட்டப்பட வேண்டும். ஏனெனில் எந்த அபிவிருத்தியும் மக்களுக்கானதே.
         யாழ்ப்பாண வீதி அபிவிருத்தியின் போது பல கட்டிடங்கள், குடிமனைகள், கோயில்கள் என்பன அழிவடையும் நிலையில் உள்ளன. உதாரணமாக காங்கேசன்துறை வீதி அகலிப்பின் போது யாழ்ப்பாண நகரிற்கு அண்மையில் உள்ள வண்ணார்பண்ணை சிவன் கோயிலின் முகப்பு பகுதியும், அக் கோயிலிற்கு உரித்தான   வீதியோரத்தில் உள்ள ஏனைய கோயில்களும், நாவலர் பாடசாலை, இந்துக்கல்லூரி ஆகியவற்றின் பகுதிகளும் இடிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. திட்டமிட்டோர் இவ் இடிபாட்டிற்கான நஷ்டஈடுகளை மக்களிற்கும், நிறுவனங்களிற்கும் வழங்க முன்வரவில்லை. இவை சட்ட சிக்கலை ஏற்படுத்தும். மேலும் 100 வருட பழமையான கட்டிடங்களோ, தாவரங்களோ அழிக்கப்பட வேண்டுமாயின் அவை மரபுரிமைச் சொத்துக்கள் என்ற சட்டத்தின் கீழ் தொல்பொருள் திணைக்களத்திடமும் சூழல் பேண் அதிகார சபையிடமும் அனுமதி பெற்றுக் கொள்ளவேண்டும். அரசு அமுலாக்கும் இத்திட்டத்தில்  அரசு இயற்றிய சட்டங்களே மீறப்படுவதை பார்க்கின்றோம். இலங்கையில் பொதுவாக எழுத்தில் உள்ள சட்டங்கள்  நடைமுறையில் மீறப்படுவதை எல்லா மட்டங்களிலும் பார்க்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறு ஏன் நடக்கின்றது என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை?
     மக்கள் விழிப்புணர்ச்சி அற்றிருப்பதே இவற்றுக்கு பிரதான காரணம் போல் தெரிகிறது. நாம் வீதியை அகலித்து அபிவிருத்தி செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் மேலே குறிப்பிட்ட மூன்று வகையினரும் இணைந்தே இத்திட்டம் பற்றி இறுதி முடிவை எடுத்திருக்கவேண்டும். அவ்வாறு நடைபெற்றதாக தெரியவில்லை. வீதியை  எந்த அளவிற்கு அகலமாக்குவது என்பதைத் தீர்மானிப்பதும் ஆராயப்பட வேண்டியதே.
    இவ்வாறான பிரச்சினைகள் தோன்றுவதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம். யு9 வீதியில் இன்று அதிக போக்குவரத்து இடம்பெற்று வருகிறது. உண்மையில் இவ் வீதி ஆனையிறவைக் கடந்து இயக்கச்சிச் சந்தியில் மேற்கு நோக்கி  திரும்பாது நேரே தொண்டைமனாறு கடல் நீரேரியை ஒட்டி அவ் வீதியை வடக்கு நோக்கி  விஸ்தரித்து  பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, பலாலி காங்கேசன்துறை, போன்ற நகரங்களை இணைக்க வைத்தால்; வடமராட்சி, வலிகாமம் வாழ் மக்கள் இதனூடாகவே பயணிப்பர். யாழ்ப்பாண நகரை அடைந்து அங்கிருந்து செல்ல வேண்டிய அவசியம் பெரும்பாலானவர்களிற்கு இல்லாமல் போகும். இவ் வீதி அபிவிருத்தித் திட்டமானது தொண்டைமானாற்று நன்னீர் ஏரித்திட்டத்துடன் 100 வருடங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்ட ஒன்றேயாகும்.  யாழ்ப்பாண வீதி அபிவிருத்தியில் ஈடுபடுவோர் இது பற்றித் தெரிந்துள்ளார்களா என்பது ஜயத்திற்குரியதே.
   யாழ்ப்பாணக் குடாநாட்டை கரையோரமாகச் சுற்றி சுற்றுப்பாதை அமைத்து, உள்ளேயுள்ள நகரங்களுடன் இணைக்கும் திட்டமும் ஏற்கனவே பலரால் சுட்டிக்காட்டப்பட்டது.  இவ்வாறான வீதி அமைப்புக்கள் இருப்பின்;; யாழ்ப்பாண நகரத்துடன் இணைக்கும் வீதியில்  போக்குவரத்து நெருக்கடி குறையும். எனவே பாரிய அளவில் அகலமான பிரதேசத்தை வீதி அபிவிருத்தியில் இழக்க வேண்டிய நிலை ஏற்படாது.
    இயக்கச்சி சந்தியிலிருந்து யு9 வீதியை வடமராட்சியுடன் இணைப்போமாயின்  யு9 பாதையூடாக வரும் 50 - 60 வீதமான வாகனங்கள் அதனூடாக சென்றுவிடும். மிகுதி 10 – 15 வீதமான வாகனங்கள் கொடிகாமம், பருத்தித்துறை ஊடாக செல்லும். மிகுதியான வாகனங்களே யாழ்ப்பாண நகரை அடையும். எனவே இவற்றை வைத்து வீதி அகலிப்புப் பற்றி மறுசிந்தனை செய்யப்படலாம். நகரத்தினுள்ளே வரும் சில வீதிகள் ஒருவழிப் பாதையாக மாற்றுவதன் மூலமும் நெருக்கடியை சமாளிக்க முடியும். இது பற்றி சிந்திக்க காலம் கடந்துவிடவில்லை என பேராசிரியர் அவர்கள் அபிப்பிராயம் தெரிவித்தார்.
   யாழ்ப்பாணக் குடாநாட்டின் வீதிஅமைப்பு, அகலிப்பு தொடர்பாக பல்துறை அறிஞர்களையும், நிபுணர்களும் பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று விரைவில் கூட்டப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Imelda Sukumar:புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக பிடித்து வைத்திருந்தமையே. வெளியேற துடித்த

பயங்கரவாத அச்சுறுத்தலுடன் வாழ்கிறேன்: யாழ். அரச அதிபர்
imelda sukumarஉண்மையை உலகிற்கு கூறிவருவதால் யுத்தம் நடைபெற்ற காலத்திலிருந்து இன்றுவரை பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறேன் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
யங்கரவாதத்தினை தோற்கடித்தமை மூலமாக இராணுவத்தினர் கற்றுக்கொண்ட அனுவபங்களை சர்வதேசத்துடன் பகிர்ந்துகொண்ட மூன்றுநாள் கருத்தரங்கு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. நேற்றைய இறுதிநாள் கருத்தரங்கில் தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கு தானாகவே அனுமதி கேட்டு உரையாற்றும்போதே யாழ். மாவட்ட அரச அதிபர் மேற்படி தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...'உண்மைகளை உள்ளபடி உலகுக்கு எடுத்துக் கூறுவதால் பல பிரச்சினைகளுக்கு நான் முகம் கொடுக்கிறேன். இப்பொழுதும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலின் மத்தியிலேயே நான் வாழ்கிறேன். இருந்தபோதிலும் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பின் மத்தியில் மக்கள் சேவை செய்யக்கிடைத்திருக்கின்றமையால் மகிழ்ச்சியடைகிறேன்.
2002ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டுவரை முல்லைத்தீவு அரச அதிபராக நான் கடமையாற்றியிருக்கிறேன். இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் நான் அங்குதான் கடமையாற்றினேன். புலிகளின் பிடிக்குள் மக்கள் சிக்கித்தவித்த காலத்திலும் மக்களின் நலனில் அரசு கவனம் செலுத்தி வந்தது. குறிப்பாக எங்களுக்கு உயர்மட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. குறைந்தது மூன்று மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டோம். அதுமட்டுமல்லாமல் ஆறு மாதங்களுக்கு தேவையாக மருந்துப் பொருட்களையும் சேமித்து வைக்குமாறு கேட்கப்பட்டிருந்தோம். யுத்தம் நடைபெற்ற காலத்திலும் மக்களின் நலனில் அரச அதிகாரிகளும் படைகளும் அக்கறை செலுத்தினார்கள் என்பதற்று இது நல்லதொரு எடுத்துக்காட்டு.
இறுதி யுத்த காலகட்டத்தில் மக்களை வெளியேற்றுமாறு படையதிகாரிகள் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் என்னால் அதனை செய்யமுடியவில்லை. காரணம் விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக பிடித்து வைத்திருந்தமையே. வெளியேற துடித்த அப்பாவி பொதுமக்களை விடுதலைப் புலிகள் வெளியேறாமல் தடுத்தனர்.
மக்களின் பயன்பாட்டுக்காக மனிதாபிமான அடிப்படையில் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட சீமெந்துகளையும் ஜெனரேற்றர்களையும் புலிகளே அதிகளவில் பயன்படுத்தினர். பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சீமெந்து பக்கெட்டுகளில் தங்களின் பாதுகாப்பிற்காக பதுங்கு குழிகளை புலிகள் அமைத்தனர். அதேபோல் ஜெனரேற்றர்களையும் அவர்களே பயன்படுத்தினார்கள்.
இருந்தபோதிலும் அமைதியாக இருந்து மக்கள் சேவையினை நாங்கள் செய்துவந்தோம். இதற்காக படையினருக்கு நான் நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இராணுவத்தினர் மிகவும் மனிதாபிமானத்துடனும் ஒழுக்கமாகவும் நடந்துகொண்டனர். இதனால் தான் மக்கள் சேவையினை எங்களால் தொடர்ந்து செய்ய முடிந்தது. நான் முல்லைத்தீவில் அரச அதிபராக கடமையாற்றிய எட்டு வருடங்களில் 7,000 குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுத்திருக்கிறேன். 22,000 குடும்பங்கள் வாழ்ந்த பிரதேசத்தில் குறிப்பிட்ட காலத்தில் 7,000 குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுத்தமை அரசாங்கத்தின் நல்லெண்ணத்துக்கு தக்க சான்றாக அமையும். அதுமட்டுமல்லாமல் பெருமளவிலான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் பாரியளவில் நிதியுதவி செய்திருந்தது. அந்த நிதியுதவியினைக் கொண்டு ஏராளமான அபிவிருத்தி நடவடிக்கைளை முன்னெடுத்தோம். இந்த அபிவிருத்திகள் தொடர்பாக மாதாந்த அறிக்கைகளை நான் அரசுக்கு வழங்கிவந்தேன். புலிகளின் மறைந்த தலைவர்களில் ஒருவரான தமிழ்ச்செல்வன் என்னை பலமுறை பயமுறுத்தியிருக்கிறார். எக்காரணம் கொண்டும் அபிவிருத்தி பற்றிய அறிக்கைகளை யாருக்கும் வழங்க வேண்டாம் என்று அவர் என்னை அச்சுறுத்தினார். அரசு செய்கின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்தால் தங்களின் இயக்கத்துக்கு அவப்பெயர் வரும் என அவர்கள் அஞ்சினார்கள்.
அன்றும் எனது சேவையினை சரிவர செய்யவிடாமல் அச்சுறுத்தினார்கள். இன்றும் என்னை அச்சுறுத்துகிறார்கள். ஆனால் படையினரின் உதவியுடன் இன்றும் என்னால் மக்கள் சேவையினை செய்யக்கூடியதாக இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் மக்கள் சேவகர்கள். ஆகையினால் எங்களால் முடிந்தளவு மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறோம்.
இப்பொழுதும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறோம். கல்வி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி வருகிறோம். இப்பொழுது சுமுகமான நிலை காணப்படுவதற்கு உதவிய படையினருக்கு நான் நன்றிசொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்...' என்று அவர் உரையாற்றினார்.

வெள்ளி, 3 ஜூன், 2011

குஷ்பூ சாபம் கொடுத்ததற்கு அதிமுக வழக்கு தாக்கல்

வாக்காளர்களை சபித்து பேச்சு-நடிகை குஷ்பு மீது கர்நாடகா அதிமுக வழக்கு

சென்னை: த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தேர்தல் முடிவு பற்றி விமர்சன‌ம் செ‌ய்த ‌நடிகை குஷ்பு மீது கர்நாடக அ.தி.மு.க அவதூறு வழக்கு தொடர்‌ந்து‌ள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு குறித்து கருத்து நடிகை கு‌ஷ்பு கருத்து தெரிவிக்கையில், இது தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல, மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. இதற்காக மக்கள் கஷ்டப்படுவார்கள் என்று கருத்து கூறியிருந்தார்.

நடிகை குஷ்புவின் இ‌ந்த பேச்சு வாக்குரிமைக்கு எதிரானது எனக் கூறி சென்னை எழும்பூர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் கர்நாடக மாநில அ.இ.அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு விசாரணை வரு‌ம் ஜூன் 16 ம் தேதி நீதிபதி கிள்ளிவளவன் முன்பு விசாரணைக்கு வருகிறது.

நடைபெற்ற சட்ட மனறத் தேர்தலில் நடிகை குஷ்பு திமுகவிற்கு ஆதரவாக பட்டி தொட்டி எங்கும் சென்றும் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

English summary
Karnataka ADMK state secretary Pugalendhi has sued Actress Kushboo for her comments on TN poll results. Kushboo had said that, TN poll defeat is not for the DMK, but for the people of Tamil Nadu.
 

Why Angadi Theru was overlooked by National Awards committee


Set against the backdrop of Madurai’s cock-fighting community, ‘Aadukalam’ can hardly be termed as a commercial success despite the fact that it was promoted to no end on the tele-media by Sun Pictures. The film was no doubt a good attempt by Vetrimaran but the fact of the matter is, was it really deserving as many as six awards?
It is felt by movie-goers that films like ‘Nandalala’, ‘Mynaa’, ‘Madarasapattinam’, ‘Kalavaani’ and ‘Angaadi Theru’ have been overlooked for some reasons by the awards selection committee. Even K. Balachander, who was recently awarded the Dada Saheb Phalke award for excellence in cinema, had appreciated Vimal’s acting in ‘Kalavaani’ and had observed that Tamil cinema had got another ‘very fine actor’.

‘Angaadi Theru’ stirred the souls in all the movie-goers who happened to watch it. The film was blatant, bold and yet practical as it set out to depict in graphic detail the seemingly ‘glossy’ but painful lives of the many salesmen and salesgirls working in superstores and malls. The film had power-house performances by Anjali and many others besides having top-class music, wonderful script and practical dialogues.
Even ‘Nandalala’ by Mysskin deserved a close-look which had amazing music by Ilaiyaraaja. Likewise, ‘Mynaa’, which was appreciated liberally by top-stars Kamal Haasan and Rajinikanth, was grossly ignored by the committed. Vijay’s ‘Madarasapattinam’ was another movie which deserved serious look-in by the committee, it is widely felt in the industry.
அங்காடித்தெரு ஏன் தேசிய விருதுகளில் தவிர்க்கப்பட்டது? அய்யா காரணம் தேடி அலைய தேவை இல்லை .எல்லோருக்கும் தெரிந்த காரணம்தான்.
அழகாக அற்புதமாக அமைந்த அங்காடித்தெரு பிராமண சமுகத்தின் குரூர முகத்தை நிர்வாணமாக காட்டிவிட்டத்தை அவாள் எப்படித் தாங்குவா?
வயது குறைந்த வேலைக்கார  சிறுமியிடம் பார்ப்பன  எஜமானி அம்மா  கொடூரமாக வேலை வாங்கும் காட்சிகள் மிகவும் தத்துருபமாக அமைந்துவிட்டன . அந்த காட்சிகள் ஒரு உயர்ந்த டாகுமெண்டரி போல்  அமைந்து விட்டன. அக்காட்சிகள் பிராமணர்களை மிகவும் பயமுறுத்தி வெட்கி தலை குனியுமாறு செய்து விட்டன. 
நிச்சயமாக அங்காடித்தெருவுக்கு மிகப்பெரிய பரிசுகள் கொடுக்க வேண்டிய கட்டாயம் தெரிவுக்குழுவுக்கு இருந்திருக்கும். எனவே வேறு தமிழ் படங்களுக்கு பரிசுகளை அள்ளி கொடுத்துவிட்டால் தமிழர்கள் மூச்சு விட மாட்டார்கள் அங்காடித்தெருவை மறந்து விடுவார்கள் என்று கணக்கு போட்டார்கள். அந்த கணக்கும் பலித்து விட்ட சோகமான காட்சிகளை தான் நாம் பார்கிறோமே ?

பார்பன சதியால் தேசிய விருதை  இழந்த அங்காடித்தெரு 

கஞ்சா கேஸ்’ கலாசாரம் (மீண்டும்) ஆரம்பமாகிவிட்டதா ?

திருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளரும் ஸ்ரீரங்கம் கோயிலின் முன்னாள் அறங்காவலருமான குடிமுருட்டி சேகர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். உண்மையிலேயே அவர் கஞ்சா கடத்தினாரா.. இல்லை ‘கஞ்சா கேஸ்’ கலாசாரம் (மீண்டும்) ஆரம்பமாகிவிட்டதா என்று தெரியவில்லை. ரொம்ப ஓவரா கஞ்சா கேஸ் போட்டு, ‘உலகத்திலேயே கஞ்சா அதிகம் நடமாடும் ஏரியா’ என்று தமிழ்நாட்டுக்குப் பெருமை வந்து விடப் போகிறது ஜாக்கிரதை!

புரோட்டாவை யார் முதலில் வாங்குவது என்பதில் ஏற்பட்ட தகராறில் மதுரையில் இரண்டு கும்பலுக்கு இடையில் வெட்டுக் குத்து நடந்திருக்கிறது. 25 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இரண்டு பேருமே ஆளுங்கட்சியினர் என்பது தான் ஹைலைட்! ஒருவேளை புரோட்டா சாப்பிட்டு காசு கொடுக்காமல் எஸ்கேப் ஆவதற்கு ஐடியா செய்திருப்பார்களோ?!

தேசிய விருதுகளை அள்ளிக் குவித்த ‘ஆடுகளம்’ திரைப்பட நாயகன் தனுஷ், தயாரிப்பாளர், இயக்குநர், படத்தொகுப்பாளர் ஆகிய நால்வரும் முதல்வரை சந்தித்து ஆசி வாங்கியிருக்கிறார்கள். ‘சன் டிவியின் ஆடுகளம்’ என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக் கொண்டே இருந்தார்களே. அவர்கள் சென்று ஆசி வாங்கவில்லையா?!

குன்னூர் நகரமன்றக் கூட்டத்தில் ‘புரட்சித் தலைவி, அம்மா’ ஆகிய வார்த்தைகளைச் சேர்த்து தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வர நகரமன்றத் தலைவர் (திமுக) மறுத்து விட்டாராம். கைகலப்பில் இறங்கியிருக்கிறார்கள் அதிமுக கவுன்சிலர்கள். பிறகு (வழக்கம் போல) வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

டாஸ்மாக்கில் ‘கார்ல்ஸ்பெர்க்’ ரக பீர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 80 ரூபாய் விலைக்கு கிடைக்கும் ப்ரீமியம் ரக பீரில் பாட்டிலுடன் கூடவே பாட்டில் ஓப்பனரும் இலவசமாக இணைந்து வருமாம்! அடடே… என்ன ஒரு add-on சர்வீஸ்! பல்லால் கடிக்கும் சிரமம் மிச்சம்! சினிமா வில்லன்கள் (ஹீரோக்களும்) தான் முதலில் அந்த ஓப்பனரை தூக்கி எறிந்து விட்டு பிறகு பல்லால் கடித்து திறக்க வேண்டும். பத்து விநாடிகள் எக்ஸ்ட்ரா ஷாட்!

இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் துவக்க விழா எந்தவிதமான கோலகலமும் இன்றி துவங்கியது! சூப்பர்! ஆனால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடையை முழுதும் பச்சை கலரில் பெயிண்ட் அடித்து பசுமைப் புரட்சியை உண்டு பண்ணியிருக்கிறார்கள் அதிகாரிகள். இதையெல்லாம் முதல்வர் ஆரம்பத்திலேயே கண்டிக்க வேண்டும். விட்டால் தமிழகமெங்கும் சாலைகளுக்கும் பச்சை கலர் பூசி விடுவார்கள் இவர்கள்!
இலவச அரிசி வழங்கும் பையில் பெரிதாக முதல்வரின் படம் அச்சிட்டிருக்கிறார்கள். முதல்வர் ஜெ. ஆணையில் தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று மக்களுக்குத் தெரியாதா என்ன? இதெல்லாம் வீண் ஆடம்பர வகையில் சேராதோ?! ஆனால் இந்த இலவச அரிசியுடன் வழங்கும் பை அந்த துவக்க விழா நடந்த ஆழ்வார்பேட்டையில் மட்டும் தானாம். மற்ற இடங்களில் பையே கிடையாதாம்!

”நான் நகை அணியாவிட்டால் தீக்குளிப்போம் என்று கழக உடன்பிறப்புகள் சொன்னார்கள். அதான் தோடு அணிந்திருக்கிறேன்” என்று புதுமையான விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார் அம்மா! ”பல்வேறு தவறுகளைச் செய்த கருணாநிதி குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் ஏன் நகை அணியாமல் இருக்கிறீர்கள்?” என்று தொண்டர்கள் கேட்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார். அப்போ, நகை அணிந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாமா?! புது லாஜிக்காக இருக்கிறதே!
தற்கொலை வழக்கு போட்டு அம்புட்டு பேரையும் உள்ளே தள்ளுவதை விட்டு விட்டு அவர்கள் மிரட்டலுக்கெல்லாம் அடி பணிந்து போகலாமா அம்மா? ‘தைரியமானவர்’ என்ற இமேஜ் என்னாவது?!

‘காக்கைக் கூட்டம்’ விழா நடத்துவதற்காக தேதி கேட்டு அம்மாவை அணுகியிருக்கிறார்கள். ’வந்த வழியே ஓடிப் போய்டுங்க’ என்று விரட்டிவிட்டார்களாம். உண்மையிலேயே அப்படி நடந்திருந்தால், இனிமேலும் அப்படியே தொடர்ந்தால்… பாராட்டுகள்!

தன்னுடைய செம்மொழி கவிதை பாடப்புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததால் தான் சமச்சீர் கல்வியையே ரத்து செய்திருக்கிறார் ஜெயலலிதா என்று கருணாநிதி அடித்த கமெண்ட் குழந்தைத்தனமானது என்று பதில் கமெண்ட் அடித்திருக்கிறார் ஜெ! கருணாநிதிக்கு இது தேவை தான். இன்னும் என்னென்ன தனமாகவெல்லாம் இருக்கிறார் என்று போகப் போக ஜெ. வாயிலிருந்து வரும்!

மாயவரத்தான்

சீமான் மீது கற்பழிப்பு உள்பட 6 பிரிவுகளில் வழக்கு-கைதாவாரா?

சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைதாவாரா என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை விஜயலட்சுமி இயக்குநர் சீமான் மீது திடீரென பரபரப்புப் புகாரைக் கொடுத்துள்ளார். அதில் தன்னைக் காதலித்ததாகவும், ஆனால் திருமணம் செய்யாமல் ஏமாற்ற முயல்வதாகவும் சீமான் மீது புகார் கூறியுள்ளார் விஜயலட்சுமி.

இதையடுத்து வளசரவாக்கம் போலீஸார் நேற்று விஜயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடமும், அவரது குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.

அப்போது, வாழ்த்துகள் படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் தனக்கும் சீமானுக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாகவும், இது பின்னர் காதலாக மாறியதாகவும் கூறினார் விஜயலட்சுமி.

மேலும், தொலைபேசி மூலமும், ஷூட்டிங் ஸ்பாட்டுகளிலும் தாங்கள் பேசி காதல் வளர்த்ததாகவும் கூறினார் விஜயலட்சுமி. தாங்கள் பழகியதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறிய விஜயலட்சுமி அதை போலீஸாரிடம் கொடுக்கவில்லை. மாறாக, உரிய நேரத்தில் தருவேன் என்று கூறினார்.

இதைப் பதிவு செய்து கொண்ட போலீஸார் தற்போது விஜயலட்சுமியின் புகாரின் அடிப்படையில் சீமான் மீது கற்பழிப்பு, பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் சீமானைக் கைது செய்யவும் போலீஸார் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Chennai police has booked Naam Tamilar party president Seeman in 6 sections based on Actress Vijayalakshmi's complaint. VIjayalakshmi has given a complaint against Seeman with the police of cheating. Police inquired Vijayalakshmi yesterday for 2 hours. After the probe they filed case against Seeman.