சனி, 2 மார்ச், 2019

முகிலனைக் காணாமல் போகச்செய்திருக்கிறார்கள். இன்று முகிலன், நாளை நீங்களும்... ?

Ravi Palette : முகிலன் யார்? மார்ச் 2 ஆம் தேதி முகிலன் எங்கே என்ற
கேள்வியை டிரெண்டிங் ஆக்க வேண்டும் என்று இரண்டு நாட்கள் முன் பதிவு எழுதியபோது, யாரோ ஒருவர் கமென்ட் போட்டார் – முகிலன் யார்? இத்தனைக்கும் அவர் தமிழ்நாட்டில் கோவையில் வசிப்பவர்.
காரணம் யார் அல்லது எது? தொலைக்காட்சி மீடியாவா? மீடியாக்களின் புறக்கணிப்பா? அரசியல் அல்லது சுற்றுச்சூழல் ஆர்வமின்மையா? பெரும்பான்மை மக்கள் வெறும் வாட்ஸ்அப் பார்வேர்டுகளில் மூழ்கிக் கிடப்பதா? சமூக அக்கறையின்மையா? அரசியலிலிருந்து ஒதுங்கி நிற்கும் மனப்போக்கின் விளைவா? எல்லாமும்தான்.
போகட்டும். இனியாவது தெரியட்டும் முகிலன் யார் என்பதை உலகம் அறியட்டும்.
பேஸ்புக்கிலும் வாட்ஸ்அப்பிலும் பகிருங்கள். என் பெயரை டேக் செய்யவோ குறிப்பிடவோ தேவையில்லை. காபி-பேஸ்டும் செய்யலாம்.
முகிலன் ஈரோடு பக்கம் சென்னிமலையைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். செங்குந்தர் மேநிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து, பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் என்ஜினியரிங் படித்தார்.

நடிகை ஹன்சிகா .. மகா படத்தில் சுருட்டு புகைத்து அழகு காட்டி .. இந்து மத அமைப்புக்களுக்கு பிடிக்கலயாம்.

மின்னம்பலம் : நடிகை ஹன்சிகா மற்றும் இயக்குநர் ஜமீல் மீது எடுக்கப்பட்ட
நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் ஜமீல் இயக்கி வரும் மஹா திரைப்படத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்து வருகிறார். இப்படம் ஹன்சிகாவின் 50ஆவது திரைப்படமாகும். இப்படத்தை எக்ஸ்ட்ரா எண்டர்டய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் ஹன்சிகா துறவி வேடமணிந்து சுருட்டு புகைப்பதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றாலும் சில இந்துமத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுபற்றி இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நாராயணன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார்.

முதுகலை மருத்துவப் படிப்புகள் தமிழகத்தில் அதிகம்!

முதுகலை மருத்துவப் படிப்புகள் தமிழகத்தில் அதிகம்!மின்னம்பலம் : முதுகலை பட்டயப் படிப்புகள் அனைத்தும் முதுகலை பட்டப் படிப்புகளாக மாற்றிக்கொள்ள, தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, நாட்டில் அதிக முதுகலை மருத்துவப் படிப்புகள் உள்ள மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது தமிழகம்.
2018-19 கல்வியாண்டில் தமிழகத்திலுள்ள மருத்துவ முதுகலை பட்டப் படிப்புக்கான 1,250 இடங்கள் நிரப்பப்பட்டன. கடந்த ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புகளை, பட்டப் படிப்புகளாக மாற்றுவதற்கான அனுமதியை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் கோரியது தமிழக அரசு. இந்திய மருத்துவ கவுன்சிலில் உள்ள ஆட்சிக்குழுவானது இதற்கு ஒப்புதல் வழங்கியது.

அபிநந்தன் உடலில் ரகசிய சிப் பொருத்தப்பட்டுள்ளதா ? – இந்திய மருத்துவர்கள் சோதனை !

வெப்துனியா : பாகிஸ்தான் ராணுவத்தால்
ஒப்படைக்கப்பட்ட இந்திய விங் கமாண்டர் அபிநந்தனின் உடலில் ரகசிய சிப்கள் எதுவும் பொறுத்தப்பட்டுள்ளதா என இந்திய மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அபிநந்தன் நேற்று (மார்ச் 1) அன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து இந்தியா வந்த அபிநந்தனுக்கு முழுமையான உடல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். 13 ஆம் தேதி ..பிரசார கூட்டங்கள்..

மின்னம்பலம் : தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும்
13ஆம் தேதி காங்கிரஸ்
தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலையில், தமிழகத்தில் கூட்டணிகளை இறுதி செய்யும் வேலைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு புதுச்சேரியையும் சேர்த்து 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முஸ்லீம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்துவிட்டன. தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்து இன்னும் சில நாட்களில் திமுக கூட்டணி இறுதி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிசிடிவி: தனது சேமிப்புப் பணத்தைக் கொடுத்த சிறுமி!

சிசிடிவி: தனது சேமிப்புப் பணத்தைக் கொடுத்த சிறுமி!மின்னம்பலம் : சென்னையில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்குத் தனது சேமிப்புப் பணத்தைக் கொடுத்த சிறுமிக்குக் காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மேற்கொண்டு வருகிறார். இதன்மூலம் பல்வேறு குற்றச் செயல்கள் குறைந்திருப்பதாகத் தெரிவித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, சிசிடிவி கேமரா பொருத்துவதற்குப் பலரும் உதவி வருகின்றனர். இத்திட்டத்திற்கு மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தூத்துக்குடியை கனிமொழிக்காக விட்டு கொடுத்த வைகோ... ராஜ்யசபாவுக்கு ....?

வைகோவின் தடைமத்தியில் சரியான ஆள் இல்லைகனிமொழியின் நெகிழ்ச்சிtamil.oneindia.com - koya-lekhaka: தூத்துக்குடியை வலம் வரும் கனிமொழி- வீடியோ சென்னை: கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடவிருப்பது உறுதியாகி விட்டதால் அந்தத் தொகுதியை கேட்க வேண்டாம் என்று கூறி விட்டாராம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக 2 தொகுதிகளை கேட்டு வந்தார். ஆனால் ஒரு தொகுதி மட்டுமே என்பது திமுகவின் நிலைப்பாடு. வேண்டுமானால் ராஜ்யசபா தருகிறோம் என்று கூறி விட்டது திமுக.
மதிமுக கேட்கும் மற்றொரு லோக்சபா தொகுதிக்கு பதில் வைகோவை ராஜ்யசபாவுக்கு அனுப்ப உள்ளாராம் ஸ்டாலின். நம்பமுடியவில்லையா.. ஒன் இந்தியா தமிழுக்கும் அப்படித்தான் இருந்தது, வேறு என்ன செய்வது சொல்லிய நபர் நம்பத்தகுந்தவர் ஆயிற்றே.

கூட்டணி கட்சிகளுக்கு அழைப்புவிடுத்த தி.மு.க.. தொகுதி பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தை

தொகுதிப் பங்கீடு: கூட்டணி கட்சிகளுக்கு அழைப்புவிடுத்த தி.மு.க!news18: தே.மு.தி.கவுடன் அ.தி.மு.க தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரையில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு: கூட்டணி கட்சிகளுக்கு அழைப்புவிடுத்த தி.மு.க! அறிவாலயம்  ST தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை செய்ய ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த நாளை வருமாறு தி.மு.க சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு நாள் நெருங்கிவரும் வேளையில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டிவருகின்றன. தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு வருகின்றன.

டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியில் .. ஒரு தொகுதி ..தனிசின்னம் ..

THE HINDU TAMIL : அதிமுக தலைமையிலான
கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று (சனிக்கிழமை) காலை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வந்தார். இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்துடன் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்பின், கூட்டணி இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தத்தில், கிருஷ்ணசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டனர். அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அத்தொகுதியில் தனிச்சின்னத்தில் அக்கட்சி போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் பின்னால் தமிழகம்: முதல்வர் பழனிசாமி புகழாரம்.. கன்னியாகுமரி

tamil.thehindu.com : பிரதமர் மோடியின் பின்னால் தமிழகம் இருக்கிறது என கன்னியா குமரி
கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத் தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: கன்னியா குமரி மாவட்டத்தில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத் தும் பணி மேற்கொள்ளப்படும். இங்கு கடலரிப்பு தடுப்புச் சுவர் நவீன முறையில் அமைக்கப்படும். தேங்காய்ப்பட்டினத்தில் ஒருங் கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.
ஆழ்கடல் மீன்பிடிப்பை உறுதி செய்யும் வகையில் மீனவர் குழு வினருக்கு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. செயற்கைகோள் போன் கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட் டம் முழுவதும் சிறு பாலங் கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கவிமணிக்கு ரூ.1 கோடியில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளோம்.

முகிலனை மறந்தனரா மக்கள் ? என்ன ஆனார்? இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்!


என்ன ஆனார் முகிலன்: இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்!மின்னம்பலம் : காணாமல் போன முகிலனைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று கோரி, இன்று (மார்ச் 2) சென்னையில் அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
கடந்த மே 22ஆம் தேதியன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டதாகக் கூறி போலீசாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது குறித்த வீடியோ ஆதாரங்களை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது வெளியிட்டார் சமூகச் செயற்பாட்டாளர் முகிலன். கடந்த 16ஆம் தேதியன்று அவர் சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயிலில் பயணித்ததாகவும், அதன்பின் அவரைக் காணவில்லை என்றும் புகார் எழுந்தது. சென்னை காவல் துறையிடம் இது பற்றிப் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் முகிலனின் நண்பர்கள். இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஹென்றி டிபேன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

ஸ்டெர்லைட் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!மின்னம்பலம் : ஸ்டெர்லைட் ஆலையைப் பராமரிக்க வேண்டுமென்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை ரத்து செய்தும், வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அறிவுரை கூறியது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று (மார்ச் 1) நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அமர்வு முன்பு நடைபெற்றது.

ஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது தாக்குதல்; 25 வீரர்கள் உயிரிழப்பு

25 Afghan soldiers killed in Taliban attack on military base where U.S. mission operates
தினத்தந்தி : :ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளின் தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் 23 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
கந்தஹார், ஆப்கானிஸ்தான் நாட்டில் செயல்பட்டு வரும் தலீபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்பட முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அமெரிக்கா மற்றும் தலீபான் தீவிரவாதிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதனிடையே தற்காலிக அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட தொடங்கினர். இந்த நிலையில், அந்நாட்டின் தென்மேற்கே அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் கூட்டு ராணுவ தளம் அமைந்து உள்ளது. இங்கு புகுந்த தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் படையினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். பல மணிநேர சண்டையில் 23 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். எனினும், படையினர் நடத்திய பதிலடியாக நடத்திய தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் என ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்கர்கள் யாரும் காயமோ அல்லது கொல்லப்படவோ இல்லை என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்

பெண் போலீசாரை எதிர்கொண்ட ஆண் போராட்ட ...வீரர்கள் ..தயக்கம் மயக்கம் என்னதான் நடக்கிறது இங்கே? ..இலங்கையில் வீடியோ


Mano Ganesan : இதயம் சிலிர்த்ததா? இரு கண்களை பார்த்து...
இந்த நொடியில் என் மனதில்… (01/03/19)
சமீபத்தில் ஒரு பெரும் போராட்டத்துக்குள் நடந்த ஒரு சிறு சம்பவத்தை நான் ரசித்தேன். பின் மனம் விட்டு சிரித்தேன்.
தினந்தோறும் நான் சந்திக்கும் என் பொது வாழ்வு நெருக்கடிகளிலிருந்து எனை மீட்டு சமநிலைக்கு கொணருவது என் கூடப்பிறந்த எனக்குள்ளே வாழும் ரசிகனும், நகைச்சுவை உணர்வாளனும்தான்!
பத்தரமுல்லையிலிருந்து கொழும்பு நோக்கி ஆயிரம் இளம் மாணவர்களின் போராட்ட நடை பவனி, பதாகைகள், முஷ்டியை உயர்த்திய பெரும்
புரட்சிகோஷங்களுடன் மாநகருக்குள் நுழைகிறது. ஒரு புள்ளியை கடந்து செல்ல அவர்களுக்கு அனுமதி இல்லை. அங்கே பொலிஸ் நீரடிப்பு, கண்ணீர் புகை வண்டிகள் காத்திருக்கின்றன.
ரசனையுள்ள ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவன் அல்லது சிலர் (என்னைப்போல் ரசிகன்ஸ்!) தீர்மானித்து, அழகிய இளம் பெண் போலீசாரை முதல் சுற்று மனித தடுப்பு சுவராக, பெரும்பாலும் ஆண் “மாணவன்களை” கொண்ட மாணவர் படைக்கு எதிராக நிறுத்துகிறார்கள்.

இம்ரான் கான் பாராளுமன்றத்தில் பேசியது .. தமிழில் ..வீடியோ

வெள்ளி, 1 மார்ச், 2019

மோடிக்கு பயந்து இம்ரான் கான் அபிநந்தனை விடுவித்துவிட்டார்.... ???

Adv Manoj Liyonzon : ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தீவிரவாதிகள் தாக்குதல்
நடத்தியது குற்றம், கண்டிக்கத்தக்கது, தண்டனைக்குரியது. உரிய அரசாங்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.
அதற்காக, உரிய அனுமதி இன்றி இந்தியா தனது விமானப்படை மூலம் பாகிஸ்தான் பகுதிக்குள் இரண்டு முறை அத்து மீறி எல்லை தாண்டி ஊடுருவினார்கள் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது
அதில் முதல் முறை நுழைந்தபோது பாகிஸ்தான் படை இந்திய போர் விமானத்தை வழிமறித்து திருப்பி அனுப்புகையில் ஆளில்லா பாகிஸ்தான் பகுதிக்குள் குண்டு போட்டுச் சென்றது இந்திய போர் விமானம். அதில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், எல்லை ஒப்பந்த உடன்படிக்கையின்படி குண்டு போட்டது குற்றமே
இதை சமாளிக்கத்தான், சைனாவில் நடைபெற்ற உலக வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தவே இல்லை, மாறாக தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட பகுதிக்குள் தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று சமாளித்தார்.
மேலும் இரண்டாவது முறை நுழைந்தபோது, தங்கள் பகுதிக்குள் வைத்து இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் படை சுட்டு வீழ்த்தியது. விமானி அபிநந்தனை காவலில் எடுத்தது.

தமிழகத்தில் பிற மாநிலத்தவர்கள் ஆதிக்கம் .. திராவிடர் கழக 15 வது தீர்மானம்!

அங்கே, இங்கே என்று இல்லாமல் எங்கும் வெளிமாநிலத்தவர்கள் வியாபித்து
இருக்கிறார்கள். மடிப் பாக்கம் பேருந்து நிலையத்தில் இரவு தோறும் ஏழெட்டு பேருந்துகள் வந்து நிற்கின்றன. அத்தனையும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பயணிப்பவை; அவர் களுக்கு என்று இங்கு தனி சிற்றூர்களே உருவாகி விட்டன.
பிற மாநிலத்தவர் ஆதிக்கம்
தஞ்சாவூரில் 23.2.2019 சனியன்று நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டின் 15ஆவது தீர்மானம் முக்கியமான ஒன்றாகும். பிற மாநிலத்தவர்தம் ஆதிக்கம் குறித்த எச்சரிக்கைத் தீர்மானம் அது.
சென்னையின் பொருளாதாரம் தொடர்ந்து ராஜஸ் தானியர்களிடமும், குஜராத்திகளிடமும்தான் இருக்கிறது. சென்னையில் எந்த ஒரு தொழிலிலும் மொத்த விற்பனை யாளர்கள் - முதலாளிகள் அவர்கள்தான். ஒருவேளை அவர்கள் நேரடியாக ஒரு தொழிலில் ஈடுபடவில்லை என்றால், வட்டித் தொழில் மூலம் அவர்களுடைய கரங்கள் அந்தத் தொழிலில் பிணைந்து இருக்கும். இப்போது தொழிலாளர்கள் நிலையிலும் வெளி மாநிலத்தவர்களின் - குறிப்பாக வட இந்தியர்களின் - கை ஓங்குகிறது. சென்னையின் மிகப் பெரிய மால்கள், மல்டிஃபிளக்ஸுகள், பெரிய - சிறிய கடைகள், உணவகங்கள், சாலைப் பணிகள், கட்டுமானப் பணிகள், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், தொழிற்சாலைகள், அழகு நிலையங்கள்... எங்கும் வேலைகளில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் வெளி மாநிலத்தவர்கள்தான்! எப்போதுமே வெளியூர்களில் இருந்து வேலை தேடி வருவோருக்குக் கிடைக்கும் முதல் வாய்ப்பு கட்டுமானப் பணியாகும். சென்னையின் வரலாற்றிலேயே அதிகமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் காலகட்டம் இது. ஆனால், கட்டுமானப் பணிகளில் தமிழர்களுக்கான வாய்ப் புகள் கிட்டத்தட்ட அடைபட்டுவிட்டதாகவே தோன்றுகிறது.

அதிமுக கூட்டணயில் தேமுதிக : 4 + 1 தொகுதி உடன்பாடு எட்டியது


500 கோடி 5 நாடாளுமன்ற தொகுதிகள்  .. வெப்துனியா :மாலைமலர் : நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் நிலையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் ஆளும், எதிர் கட்சிகள் தேமுதிகவை தம் கூட்டணிக்குள் இழுக்கப் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ஆனால்  விட்டுக்கொடுக்காத விஜயகாந்த் இன்னும் தொகுதி உடன்பாட்டில் இழுபறியாகவே இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது ஸ்டாலின் இதற்குமேல் பேரம் நடத்த முடியாது என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து அதிமுக தரப்பில் 5 தொகுதிகள் கொடுத்து தங்கள் மெகா கூட்டணிக்கு மற்றொரு பலமாக தேமுதிகவை இணைக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது தேமுதிக - அதிமுக இடையேயான கூட்டணி உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

வைகோ கருப்புக்கொடி போராட்டம்: மதிமுக - பாஜகவினர் மோதல் .. மோடி வருகைக்கு எதிராக ..

tamil.thehindu.com- அசோக் குமார் : பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட மதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி வருகை தருகிறார். இந்நிலையில், பிரதமரின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பில் திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் இன்று நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது பிரதமருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். இந்நிலையில், போராட்டம் நடந்து கொண்டிருந்த போது அப்பகுதியில் பாஜகவினர் திரண்டனர். அவர்கள் வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மதிமுகவினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். கற்களை வீசிய பாஜகவினரை விரட்டி அடித்தனர். இருதரப்பிலும் மோதலை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெய்யிலில் வேலை செய்பவர்களுக்கு கட்டாய ஒய்வு .. பினராயி விஜயன் அதிரடி!

ghjghjநக்கீரன் :கிருபாகர் வெயிலில் வேலை செய்யும் கட்டிட தொழிலாளர்கள் உள்பட பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கு வெயில் நேரங்களில் மயக்கம், மற்றும் பல்வேறு தொல்லைகள் ஏற்படுவதால், அதனை தடுக்கும் வகையில், அனைத்து தொழிலாளர்களுக்கும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை கட்டாய இடைவெளை அளிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசின், மாநில தொழிலாளர் துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கன்னியாகுமரியில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

கன்னியாகுமரியில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடிமாலைமலர் : கன்னியாகுமரியில் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி:< கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் குமரி மாவட்ட மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று குமரி மாவட்டம் வந்தார். இதற்கான விழா அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பங்கேற்றனர்.
முன்னதாக, திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை தந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் வரவேற்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தம்பிதுரை எம்.பி. ஆகியோரும் வரவேற்றனர்.

தாயகம் திரும்பிய அபிநந்தன்: மகிழ்ச்சியில் இந்தியா!

தாயகம் திரும்பிய அபிநந்தன்: மகிழ்ச்சியில் இந்தியா!மின்னம்பலம் : அபிநந்தன் இந்தியா திரும்பியுள்ளதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய விங் கமாண்டரான அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். அவரை விடுவிக்க கோரிக்கைகள் வலுத்ததையடுத்து, அவரை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிப்ரவரி 28ஆம் தேதி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து இன்று (மார்ச் 1) பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு அபிநந்தன் கொண்டு வரப்பட்டார். மதியம் 1 மணியளவில் ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து விமானம் மூலம் லாகூருக்கு வந்தடைந்தார். பின்னர் லாகூரிலிருந்து ஜாமர் கருவி பொருத்திய காரில் அட்டாரி வாகா எல்லைக்கு வந்துள்ளார். அவருடைய வாகனத்தின் முன்னும் பின்னும், பாகிஸ்தான் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து வந்தன.

வைகோ : தென்னக ரயில்வேயில் கொடிகட்டிப் பறக்கும் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம்; தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குக


tamil.thehindu.com : ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறையில் அதிக
அளவில் வடமாநிலத்தவர் பணி நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்தில்,
எலக்ட்ரிஷியன், ஃபிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழிற் பழகுநர் இடங்களுக்கு 1,765 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 1,600 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி தருகிறது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 52 மாத காலத்தில், தமிழ்நாட்டில் உள்ள என்எல்சி இந்தியா, பாரத் மிகுமின் நிறுவனம், வங்கிகள், வருமான வரித்துறை, சுங்க இலாகா, ரயில்வே துறை உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களையே 90 விழுக்காடு பணியில் அமர்த்தி இருக்கிறது.
குறிப்பாக தென்னக ரயில்வே நிர்வாகம் தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து வடமாநிலத்தவர்களையே பணி நியமனம் செய்து வருகிறது.

வேல்முருகன் :தமிழக அரசுப் பணிகள் 100% தமிழருக்கே: த.வா.க. பேரணி!

தமிழக அரசுப் பணிகள் 100%  தமிழருக்கே: த.வா.க. பேரணி!மின்னம்பலம் : தமிழக அரசுப் பணிகளில் தமிழர்களுக்கு 100 சதவிகித வேலைவாய்ப்பு வழங்க சட்டம் இயற்றக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி (த.வா.க) சார்பில் சென்னையில் நேற்று பேரணி நடைபெற்றது.
தமிழக அரசுப் பணிகளில் மண்ணின் மைந்தர்களுக்கு 100 சதவிகித வேலைவாய்ப்பும், மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனப் பணிகளில் 90 சதவிகித வேலைவாய்ப்பும் கிடைக்க வேண்டுமெனவும் அதற்காக தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்றக் கோரியும் த.வா.க. சார்பில் சென்னையில் நேற்று (பிப்ரவரி 28) பேரணி நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் மாலை 5 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி வாரிய கட்டடம் அருகிலிருந்து தொடங்கிய பேரணியானது, தலைமைச் செயலகம் அருகில் முடிந்தது.

கலைமாமணி விருது பெற்றவர்களின் விபரங்கள் .. பட்டியல்

வெப்துனியா :தமிழக அரசு ஒவ்வொரு துறையில் உள்ள கலைவித்தகர்களுக்கு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்து வரும் நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி இந்த ஆண்டுக்கான கலைமாமணி விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளார். மேலும் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சசிகுமார், சந்தானம், சூரி, நாட்டுப்புற பாடகர்கள் பரவை முனியம்மா, வேல்முருகன் ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது
கலைமாமணி விருது பெற்ற திரையுலகினர்கள் குறித்து தற்போது பார்ப்போம்:
2011 முதல் 2018 வரை 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை மொத்தமாக அறிவித்துள்ளது தமிழக அரசு.
விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:
நடிகர்கள்
விஜய் சேதுபதி
கார்த்தி
பிரசன்னா
ஆர்.பாண்டியராஜன்
சசிகுமார்
ஸ்ரீகாந்த்
எம்.எஸ்.பாஸ்கர்
தம்பி ராமையா

குமரியில் பிரதமரின் பொதுக்கூட்டம் ரத்து!

kமணிகண்டன் நக்கீரன் : பிரதமா் மோடி இன்று கன்னியாகுமாிக்கு வருகிறாா்.
விவேகானந்தா் பாலிடெக்னிக் கல்லூாி வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாா். முன்னதாக அவா் முதலில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய அரசின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு நடந்து முடிந்த திட்டங்களை நாட்டுக்கு அா்பணிக்கிறாா்.
 அதன்பிறகு கட்சி நிகழ்ச்சியான பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவா்களோடு கலந்து தோ்தல் பரப்புரை ஆற்றுவதாக நிகழ்ச்சி இருந்தது. இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதட்டமான சூழல் உருவாகியிருப்பதால் அதன் காரணமாக அவா் அரசு நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொள்கிறாா்.

பாஜகவின் 6,000 வாட்ஸ்அப் க்ரூப், 700 ஃபேஸ்புக் பக்கம், 45 யூடியூப் சேனல் .. நமோ வாரியர்ஸ் படை

6,000 வாட்ஸ்அப் க்ரூப், 700 ஃபேஸ்புக் பக்கம், 45 யூடியூப் சேனல்; `சோசியல் பி.ஜே.பி’ தயார்!
நிர்மல் குமார் - பி ஜே பி. ஐ.டி. விங்blogger.com: `நமோ வாரியர்ஸ்னு ஒரு படை உருவாகியிருக்கு. அமைச்சர் நிர்மலா சீதாராமன் வர்றதுக்குள்ள நமோ வாரியர்ஸ் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தொட்டுடும். இனிமே பாருங்க எங்க ஆட்டத்தை!’
தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, எல்லா அரசியல் கட்சிகளுமே தங்களை, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எல்லா தளங்களிலும் பலப்படுத்திக்கொண்டு வருகின்றன.
அவற்றில் முக்கிய அம்சமாகச் சமூக வலைதளங்களின் உதவியுடன், கட்சிகளின் ஐ.டி விங் எனப்படும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு,
அரசியல் கட்சிகளின் பிரசாரங்களை மக்களிடையே கொண்டுசெல்லும் களமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. இதற்காக எல்லாக் கட்சியிலும் ஐ.டி விங் கட்டாயமாக்கப்பட்டன. மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை சுமார் 6,000 பேரை சமூக வலைதளங்களின் மூலமாகத் தேர்ந்தெடுத்து, `நமோ வாரியர்ஸ்’ என்கிற பிரசாரப் படையை உருவாக்கி இருக்கிறது.
மார்ச் 10-ம் தேதி நடக்கவிருக்கும் பி.ஜே.பி-யின் இந்த ஐ.டி விங் அறிமுக விழாவை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்க இருக்கிறார். தேர்தலில் வெற்றிபெறுவதற்கு சமூகவலைதளங்களில் பயன்படுத்தும் பல்வேறு உத்திகள் குறித்த ஆலோசனைகளும் அன்றைய தினம் நடைபெறும் பி.ஜே.பி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. பி.ஜே.பி-யின் தகவல் தொழில்நுட்பம் மூலமான பிரசார வியூகம் குறித்து மேலும் அறிந்துகொள்ள அந்தக் கட்சியின் ஐ.டி விங் மாநிலச் செயலாளர் நிர்மல்குமாரிடம் பேசினேன்.

வியாழன், 28 பிப்ரவரி, 2019

இம்ரான் கான் : இந்துக்களான விடுதலை புலிகளே அதிக தற்கொலை தாக்குதல்களை நடந்தினர் . தற்கொலையை மதத்தோடு தொடர்பு படுத்த முடியாது

tamil.oneindia.com- hemavandhana: 'தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு மதம் கிடையாது'- இம்ரான் பேச்சு
ஜம்மு: "யாரும் மதத்தை காரணமாக வைத்து தற்கொலை படை தாக்குதல்களை நடத்துவதில்லை. அப்படிப் பார்த்தால் இந்துக்களான விடுதலை புலிகள்தான் அதிக அளவில் தற்கொலை படைத் தாக்குதல்களை நடத்தியவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேரை கொடூரமாகக் கொன்ற தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் முகாம்களை பாகிஸ்தானுக்குள் புகுந்து குண்டு வீசித் தகர்த்தது இந்தியா.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இந்திய, பாகிஸ்தானிய விமானப்படை போர் விமானங்கள் வானில் சண்டையில் குதித்தன.

குஷ்பு :இம்ரான் கானிடமிருந்து நம் பிரதமர் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்

tamilthehindu :அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தன் நாளை
விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்ததையடுத்து இம்ரான் கானுக்கு பல தரப்புகளிலிருந்தும் ஆதரவு அதிகரித்து வருகிறது.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக நேற்று, பாகிஸ்தான் இந்திய எல்லையில் தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கிடையே பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
விமானத்தில் இருந்த தமிழக விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். விமானி அபிநந்தனை இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்துவர வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல்கள் எழுந்தன. இதுதொடர்பான ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகின.

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தரமுடியாது. நிதியும் தரமுடியாது.. திமுக அதிரடி!

dmdkவெப்துனியா : நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் நிலையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றன.
இந்நிலையில் சமீபத்தில் ஆளும், எதிர் கட்சிகள் தேமுதிகவை தம் கூட்டணிக்குள் இழுக்கப் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.
dmdk
dmdkஆனால் ’தன் கெத்தை’ விட்டுக்கொடுக்காத விஜயகாந்த் இன்னும் தொகுதி உடன்பாட்டில் இழுபறியாகவே இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஸ்டாலின் இதற்குமேல் பேரம் நடத்த முடியாது என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
அதிமுக கூட்டணியில் பாஜக வுக்கு ஐந்து தொகுதிகளும் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  பாமகவுக்கு கூடுதலாக ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அதிமுக தேமுதிகவுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாமாவுக்கு கொடுத்ததுபோல் தங்களுக்கும் வழங்க வேண்டுமென அதிமுகவுடன் தேமுதிக கோரிக்கை வைத்துள்ளது. இதனை அதிமுக ஏற்க மறுத்துவிட்டது< இதனையடுத்து  4 தொகுதிகள் மற்றும் அத்துடன் ஒரு ராஜ்ய சபா சீட் மற்றும் நிதி வேண்டும் என பேரம் பேசப்பட்டது. இதில் சுமூக உடன்பாடு எட்டாத நிலையில் தேமுதிக சற்று தயக்கம் காட்டியது. அதன்பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் தேமுதிக வந்தால் மகிழ்ச்சி வராவிட்டால் கவலையில்லை என்றார்.

பழங்குடிகளை வெளியேற்றும் உத்தரவுக்கு இடைக்கால தடை!

பழங்குடிகளை வெளியேற்றும் உத்தரவு: நிறுத்தம்!
மின்னம்பலம்: இந்தியாவிலுள்ள அனைத்து வனப் பகுதியில் இருந்தும் பழங்குடியின மக்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இன்று அந்த உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காடுகள் அழிவதைத் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்பட்டிருந்தது. கடந்த 13ஆம் தேதியன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, இந்திய வனப் பகுதிகளில் பட்டா இல்லாமல் 11.8 லட்சம் பழங்குடியினர் இருப்பதாகவும் அவர்கள் அனைவரையும் உடனடியாக வனங்களில் இருந்து வெளியேற்ற வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவுக்குப் பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. மாநில அரசுகளும் இதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தன.
இதன் தொடர்ச்சியாக, இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியது மத்திய அரசு.

அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் ..பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு வீடியோ


இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் - இம்ரான்கான் அறிவிப்புமாலைமலர் : இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று அறிவித்துள்ளார். இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கி அழித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையும் பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. இந்திய வீரர் தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.

அதிமுகவுக்கே இரட்டை இலை சின்னம்: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு ..

THE HINDU TAMIL : இரட்டை இலை சின்னத்தைக் கோரி அதிமுகவும் டிடிவி தினகரனும் வழக்கு தொடுத்த நிலையில், சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கி டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதல்வராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி மறைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு இரு தரப்பும் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.

7 தொகுதிகளை பெறுவதில் தேமுதிக உறுதி- அதிமுக, பாஜக கடும் அதிருப்தி

/tamil.thehindu.com : அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7,
பாஜகவுக்கு 5, என்.ஆர்.காங்கிரஸுக்கு1 என 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவுடன் கூட்டணி பேசுவதற்கு முன்பே தேமுதிவுடன் பாஜக பேசி வந்தது. தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ்ஸுடம் பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர். இதனால் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை தர அதிமுக முன்வந்தது.
ஆனால், இதனை ஏற்க மறுத்த தேமுதிக, வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மட்டும் உள்ள பாமகவுக்கு 7 தொகுதிகள், 1 மாநிலங்களவை இடம் தரும்போது தமிழகம் முழுவதும் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்கு வங்கி உள்ள தேமுதிகவுக்கும் 7 தொகுதிகள், 1 மாநிலங்களவை இடம் வேண்டும் என கேட்டுள்ளது. ஆனால், 4 தொகுதிகளுக்கு மேல் தர வாய்ப்பில்லை என அதிமுக மறுத்துவிட்டது.
இந்தச் சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினர். இதனால் திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் எனக் கூறப்பட்டது.

ஒரு உடல் ... ஒரு உள்ளம் .. ஒரு உலகம் .. உயிர் = உன் இருப்பின் தொடர்ச்சி .

Radha Manohar: மனித வாழ்வின் மர்மங்களை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து பார்க்கும் முயற்சியை பொதுவில் யாரும் திறந்த மனதோடு
அதற்கு காரணம் அது பற்றி அவர்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளே.
அவை அவர்களின் அறிவுத்தாகத்தை தீர்த்து கொண்டிருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்!
அணுகுவதில்லை.
இந்த நம்பிக்கைதான் அறிவுக்கு மிகப்பெரும் தடை.
பிறப்பு, இறப்பு, மறுபிறவி , உயிர்,; கடவுள் போன்ற விடயங்களை பற்றி சிந்திக்க தொடங்கும் போதே மதங்கள் அவை பற்றி வகுப்பெடுத்த கதைகள் ஞாபகத்திற்கு வந்துவிடும் .
இந்த கதைகள் எமது ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவே விடாது.
இது ஒரு ஆபத்து என்றால் அடுத்த ஆபத்து இதை எல்லாம் பொத்தாம் பொதுவாக மூர்க்கமாக மறுத்து வேறொரு பக்கத்தில் இருந்து வாதங்கள் வந்துவிடும் .
இதுவும் உண்மையை அலசி ஆராயும் வாய்ப்புக்களை மறுத்து விடும் தடைதான்.
இந்த இருபகுதியினரின் கோட்பாடுகளையும் மீறித்தான் உண்மையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. .
இந்த வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தம் என்ற மிகப்பெரிய கேள்வி இருக்கிறது.
இதற்கு சரியான பதில் கூறக்கூடிய தகுதி அந்த கேள்வியை கேட்பவரை சுற்றி உள்ள பிரபஞ்சத்திற்கு மட்டுமே இருக்கிறது.;
ஆனால் கேள்விக்கு பதிலை ஒருவர் தேடும் முன்பே மதங்களும் இதர நம்பிக்கைகள் சார்ந்த கோட்பாடுகளும் அவருக்குள் வலிமையாக நுழைந்து விடுகிறது.

பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது!


aanthaireporter.com: சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக சேவை வழங்கி வரும் பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, 84 நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரத்துக்குப் பாம்பன் தூக்குப்பாலம் வழியாக இன்று மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
நம் தமிழகத்தின் பெரும் பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இந்த இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாலத்தின் வரலாறு முன்னரே நம் ஆந்தை ரிப்போர்ட்டரில் வெளியாகி உள்ளது.
நூற்றாண்டு பெருமைகொண்ட இந்தப் பாலத்தின் மீது சில நேரங்களில் காற்றின் வேகத்தில் இழுத்துவரப்பட்ட கப்பல் மற்றும் படகுகள் மோதிய சம்பவங்களால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவந்துள்ளது.

சிவசேனா : உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தானை அழிக்க வேண்டும்

tamil.webdunia.com: உலகில் தீவிரவாதம் இன்றி அமைதியாக அனைவரும் வாழ வேண்டும் என்றால் உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தான் அழிய வேண்டும் என்று சிவசேனா பத்திரிகை கட்டுரை ஒன்றை எழுதியுள்ளது சிவசேனா பத்திரிகை சாம்னாவில் எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில், பாகிஸ்தானில் கலாச்சார மையங்கள் என்ற போர்வையில் தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருவதாகவும், அந்த தீவிரவாதிகளை அழிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆதரவு கொடுத்து வருவதாகவும் தங்கள் மண்ணில் தீவிரவாதிகளே என்று கூறி வருவதாகவும் அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவே உலக வரைப்படத்தில் பாகிஸ்தான் இருக்கும் வரை அமைதி ஏற்பட வாய்ப்பு இல்லை இல்லை என்றும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்கும் ஆபத்தானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவர் - காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்


கல்லூரி முன்பு மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவர் - காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்மாலைமலர் : தெலுங்கானாவில் காதலிக்க மறுத்ததால் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவரை போலீசார் கைது செய்தனர். நகரி: தெலுங்கானா மாநிலம் வரங்கல்லை அடுத்த ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் ரவளி. இவர் வரங்கலில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதே கல்லூரியில் சங்கம் கிராமத்தை சேர்ந்த சாயி அன்வேஷ் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இவர் மாணவி ரவளியிடம் தன்னை காதலிக்குமாறு தெரிவித்தார். அதை அவர் ஏற்கவில்லை. ஆனால் சாயி அன்வேஷ் காதலிக்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். அதற்கு ரவளி மறுத்து விட்டார்.
இன்று காலை ரவளி கல்லூரி நுழைவாயில் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாயி அன்வேஷ் பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை ரவளி மீது திடீரென்று ஊற்றினார்.<
இதை பார்த்து சக மாணவர்கள் சாயி அன்வேஷ் ஆசிட் வீசுவதாக நினைத்துக் கொண்டு சிதறி ஓடினார்கள். அப்போது சிகரெட் லைட்டரை ரவளி மீது வீசிவிட்டு ஓடிவிட்டார்.