தினமணி :
கர்னாடக இசைப்பாடகரான டி எம் கிருஷ்ணா
சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். கர்னாடக இசை 'எலைட்' மக்களுக்கும்,
ரசிகர்களுக்கும் மட்டுமே சொந்தமானதில்லை. சேரிப்புறத்து இளைஞர்களும்,
சிறுவர், சிறுமியரும் கூட கர்நாடக இசை கற்றுக் கொண்டு அதை ரசிக்கவும்,
பாடவும் முடியும் என்று ஆணித்தரமாக நம்பக் கூடியவர் டி எம் கிருஷ்ணா.
நம்புவதோடு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சென்னையில் மீனவக்
குப்பங்களுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கர்னாடக இசையை அறிமுகம்
செய்யவும் அவர் தவறுவதில்லை. இதனால் அவர் மீது சிலருக்கு அதிருப்தி
இருந்தாலும் அதை கிருஷ்ணா பொருட்படுத்துவதாக இல்லை.
சனி, 11 ஆகஸ்ட், 2018
BBC : கலைஞரைப் பறித்த தமிழகம், ஆன்மாவை இழந்த தமிழகம்"
கலைஞரைப் பறித்த தமிழகம், அதன் ஆன்மாவை இழந்தது போல
தோன்றுகிறது.கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, குறைந்தபட்சம் எழுபது ஆண்டுகள் என்று கூட கூறலாம், தமிழக மக்களால் மிகவும் ஆழமாக நேசிக்கப்பட்ட தலைவராக விளங்கினார் கலைஞர் கருணாநிதி.
நிச்சயமாக, திராவிட இயக்கத்தைத் தொடங்கியதற்காக தந்தை பெரியாருக்கும், அதற்கு அரசியல் வடிவம் மற்றும் பொருளாக்கத்தை வழங்கிய "அண்ணா"-வுக்கும் கூட அந்தப் பெருமை சேரும். ஆனால், முதல்வரான இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே அண்ணா மறைந்த பிறகு, திராவிட சித்தாந்தத்தை அது தொடங்கிய நோக்கத்தை மனதில் வைத்துக் கொண்டு, அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தாங்கிப்பிடித்தவர் கலைஞர் .
தான் ஒரு சிறந்த சொற்பொழிவாளர் என்பதையும் கடந்து அல்லது, வார்த்தைகளால் ஜாலம் செய்யக் கூடியவர் என்பதையும் கிட்டத்தட்ட தமது தினசரி எழுத்துகள், புத்தகங்கள், கவிதைகள் மூலம் அவர் நிரூபித்து வந்தார். ஏராளமான மேடை நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு அவர் எழுதிய கதை வசனங்கள் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருக்கு சகாப்த நாயகனுக்கான தகுதியைப் பெற்றுத் தந்தது.

சென்னையில் எளிமையாக வலம் வந்த ராகுல் காந்தி
tamilthehindu : சென்னை ராஜாஜி அரங்கில் திமுக தலைவர் கலைஞர்
உடலுக்கு அஞ்சலி செலுத்த கூட்டத்தோடு கூட்டமாக வரும் காங்கிரஸ் தலைவர்
ராகுல்காந்தி. கைப்பிடிச் சுவர் மீது ஏறி பாதுகாப்பு கொடுக்க வருகின்றனர்
பாதுகாப்புப் படை வீரர்கள்.படங்கள்: எஸ்.விஜயகுமார்
காங்கிரஸ் தலைவர், பிரதமர் வேட்பாளராக இருந்தும் சென்னை யில் மிக எளிமையாக ராகுல் காந்தி வலம் வந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளர், துணைத் தலைவர் என முக்கியப் பொறுப்புகளை வகித்த ராகுல் காந்தி, கடந்த 2017 டிசம்பர் 16-ம் தேதி அக்கட்சியின் தலைவராக பதவியேற்றார். மிக எளிமையாக உடையணியும் ராகுல் காந்தி, எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாக பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்தி, சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அமர்ந்து இறுதி நிகழ்வுகளில் கடைசி வரை பங்கேற்றார்.
</ அதுபோல திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்தி, அண்ணா நினைவிட வளாகத்தில் சுமார் 2 மணி நேரம் பொறுமையுடன் அமர்ந்து இறுதி நிகழ்வுகளில் முழுமையாகப் பங்கேற்றார்.
ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகியோர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதால் அவர்களது குடும்பத்தினருக்கு எப்போதும் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு உண்டு. ராகுல் காந்தி தற்போது காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். வரும் 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்றால் அவர்தான் பிரதமர்.

`பராசக்தி` ஒரு சிந்தனையாளரின் சினிமாவா.. அகில இந்திய அளவில் பெரும் மரியாதையைப் பெற்றுத்தந்தது.
மின்னம்பலம் :சிறப்புக் கட்டுரை: திராவிடப் போராளி
அம்ஷன் குமார்
படம் ஆரம்பித்துவிட்டது. சற்றே கரகரப்பான ஒரு வர்ணனைக் குரல் கடற்காட்சிகள் மீது ஒலிக்கிறது. அக்காட்சிகள் முடிவுற்று அதன் தொடர்ச்சியாக இப்போது அக்குரலுக்குரியவர் புத்தகங்கள் நிரம்பிய அறையில் தோன்றுகிறார். உரக்க வாசித்துக்கொண்டிருந்த ஒரு புத்தகத்தினை மூடிவிட்ட பின் தான் அணிந்துகொண்டிருந்த கண்ணாடியை லாவகத்துடன் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு நாற்காலியிலிருந்து எழுந்து மேஜை முன் வந்து நின்றுகொள்கிறார். தன் தோள் மீது கிடக்கும் சால்வையைத் எடுத்து தன் மார்பின் குறுக்காகச் சாத்துகிறார். அலங்காரமான வார்த்தைகளுடன் எழுதுகிற தமிழில் தமிழரின் பெருமையை தமிழ் இலக்கியத்தினூடாக அவர் மக்களைப் பார்த்து ஆற்றும் உரையை, தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் கட்டுண்ட மனோபாவத்துடன் ரசிக்கிறார்கள்.
படம் ஆரம்பித்தவுடன் நேரடியாகக் கதையை மட்டுமே பார்க்க பழக்கப்பட்டிருந்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு அவரைப் பார்த்துக்கொண்டும் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டும் இருந்தார்கள். அவர் சொல்லியிருந்த அனைத்தையும் அந்த படத்திலேயே கதையில் சொல்லியிருந்தார்கள். அவர்தான் அப்படத்தின் வசனகர்த்தா. இருந்தும்கூட அவரும் நேரடியாகத் தன் பங்கிற்கு அவற்றைக் கூறியிருந்தார். கிடைத்த சந்தர்ப்பம் எதையும் விடக் கூடாதல்லவா?

யானைகளின் வழித்தடம் யானைகளுக்கே! ... ஜாகி வாசுதேவ் போன்ற திருடர்களுக்கு அல்ல ..
மின்னம்பலம் : யானைகளின் வழித்தடம் யானைகளுக்கே!
இந்தியாவில்
அரசாங்கக் கணக்குகளின்படி, வழித்தட ஆக்கிரமிப்புகளால் ஓர் ஆண்டிற்கு 973
யானைகள் இறக்கின்றன. இந்தியாவின் மொத்த யானைகளின் எண்ணிக்கையைப்
பார்த்தால், இது அந்த இனத்தின் பேரழிவு என்பது புரியும். இந்நிலையில் உச்ச
நீதிமன்றத்தில் யானை வழித்தட ஆக்கிரமிப்பு வழக்கிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு
அபாரமான சாதனை. ஆனால் அதை அரசாங்கம் நடைமுறைப்படுத்துமா என்பது மிகப்பெரிய
கேள்விக்குறி.
நீலகிரி மாவட்டத்தின் சூழ்நிலையே சுற்றுலாப் பயணிகளால் சீர்குலைந்துவருகிறது. காட்டுப் பகுதியில் விடுதிகள் கட்டி ‘அட்வெஞ்சர் ட்ரிப்ஸ்’ எனும் பெயரில் மேற்கொள்ளப்படும் பயணங்களால் காட்டுயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த ஆக்கிரமிப்புக் கட்டிடங்களால் உயிரிழக்கும் காட்டுயிர்களின் எண்ணிக்கையைவிட அவர்கள் விட்டுச் செல்லும் குப்பைகளால் உயிரிழக்கும் காட்டுயிர்களின் எண்ணிக்கை அதிகம்.
இச்செய்தியை முன்வைத்து, 2011 ஆண்டு யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடங்கள் மற்றும் விடுதிகளைக் சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இதனை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர். 7 ஆண்டுகள் நடந்த விசாரணைக்குப் பிறகு வரலாற்றுத் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

விஸ்வரூபம் 2 தோல்வி ..தயாரிப்பாளர் கடும் அதிர்ச்சி !
வினவு :மெரினாவில் கருணாதியை புதைச்சுண்டாளாமே, இனி எப்படி
அங்கே காத்தாடறது என்று மயிலாப்பூர் ஆத்துல ‘மகா ஜனங்கள்’ சீதபேதியில்
அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்நேரம் பார்த்து ஆழ்வார்பேட்டை
‘ஆண்டவனுக்கு’ சோதனை மேல் சோதனை!<
விஸ்வரூபம் 2 படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்று இந்திய வெண் திரை
வர்த்தக நிபுணர்களிடம் கேட்ட போது பலரும் உதட்டை பிதுக்குகிறார்களாம்.
கலைஞரின் மரணத்தை ஒட்டி தென்னிந்தியாவில் வசூல் எப்படியிருக்கும்? கணிக்க
முடியாது என்கிறார்கள். இந்தி மொழியில் ஏதோ முதல் நாள் ஓரிரண்டு கோடி
ரூபாய் வந்தால் அதிகம் என்கிறார்கள்.
கடைசியில் கருணாநிதியின் மரணம் இந்திய அரசு உளவுத் துறையான “ரா”-வில் பணிபுரியும் ஒரு தேசபக்தனான புலனாய்வு ஏஜெண்டை இப்படி சோதிக்க வேண்டுமா? ஒருவேளை இதுவும் திராவிட – பாகிஸ்தான் சதியாக இருக்குமோ?
மும்பை – இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை உண்மையிலேயே எக்ஸ்பிரஸ் வேகத்தில் “விஸ்வரூபம் – 2” விமர்சனத்தை இன்று மங்களகரமான வெள்ளிக்கிழமை ஆகஸ்டு 10 காலை 9:55:32-க்கு வெளியிட்டு விட்டது. என்னவென்று பார்த்தால் அது வெளியே – உள்ளே மற்றும் உள்ளுள்ளே எங்கு சொன்னாலும் கிசுகிசுத்தாலும் வெட்கக் கேடு!

தி.மு.க.வில் முக்கிய பதவி கேட்கும் மு.க.அழகிரி
மாலைமலர் :தி.மு.க.வில் மாநில அளவிலான பதவி வேண்டும் என்று மு.க. அழகிரி கேட்பதாகவும், இது குறித்து பொதுக்குழுவில் இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை: தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது பற்றி ஆலோசனை நடத்த தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது. தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு மீண்டும் பதவி அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அவர் ஏற்கனவே கட்சி பொறுப்பில் இருந்தும் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு மீண்டும் கட்சி பொறுப்பு வழங்க வேண்டும் என்று தி.மு.க.வின் ஒரு பிரிவினர் விரும்புகிறார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு போல தி.மு.க.வில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று தி.மு.க. மேலிடத் தலைவர்களும், கருணாநிதியின் குடும்பத்தினரும் விரும்புகிறார்கள். அதனால் மு.க.அழகிரியை மீண்டும் கட்சி பணிக்கு கொண்டு வரவும், அவருக்கு ஏற்கனவே வழங்கிய தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை மீண்டும் கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார்கள்.
ஆனால் மு.க.அழகிரி அந்த பொறுப்பை பெற விரும்பவில்லை என்றும், மாநில அளவிலான பதவி வேண்டும் என்று கேட்பதாகவும் தெரிகிறது.

கலைஞரின் உதவியாளர் நித்தியா .. 24 மணி நேரமும் கலைஞரை பார்த்து கொண்டவர்..
விகடன் :மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார். .
அப்போது அவருடைய குடும்பத்தினர் பலரும் இறுதி மரியாதை செலுத்த கடைசியாக வந்து அஞ்சலி செலுத்தியவர் நித்யா.
இவர்தான் சில வருடங்களாக கலைஞர் கருணாநிதிக்கு மிக நெருக்கமான உதவியாளராக இருந்த கவனித்துக்கொண்ட உதவியாளர்,
கலைஞரின் கோபாலபுரம் வீட்டிலேயே தங்கி இருந்து அவருக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்தது நித்யா தான்.
விகடன் 90 இதழில் கலைஞர் அளித்த பேட்டியில், ‘எனக்குத் தனியாக செல்போன் இல்லை; யாரிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறேனோ அவர்களுக்கு என்னுடைய உதவியாளர் நித்யாவின் போனில் இருந்து தான் பேசுவேன்’ என்று கூறி இருந்தார். முன்னாள் முதல்வராக இருந்த கலைஞருக்கு எல்லாமுமாக இருக்கும் அந்த நித்யா யார் என்ற கேள்வி எல்லோருக்கும் எழுகிறது. அதற்கு விடை காணவே இந்தக் கட்டுரை.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018
N.Ram :பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது என்பதே உண்மை
கேள்வி :இலங்கை தமிழர்கள் - விடுதலை புலிகள் மீதான கலைஞர் கருணாநிதியின் நிலைப்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன?
என். ராம்: ''விடுதலை புலிகள் எப்போதுமே கலைஞர் கருணாநிதியை விட எம்.ஜி.ஆர் ஆட்சியை விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொலை செய்யப்பட்டதிலிருந்து அவருக்கு விடுதலை புலிகள் மீதிருந்த மரியாதை தகர்ந்தது .
ராஜிவ் காந்தியை விடுதலை புலிகள் கொன்றது மன்னிக்க முடியாதது என ஒரு பேட்டியில் கூட கூறியிருந்தார் கலைஞர் கருணாநிதி.
அவர் முதல்வராக இருந்தபோது ஆக்கப்பூர்வமாகவே செயல்பட்டார்.
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது கூட அவரால் முடிந்த அளவு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தார்.
அப்போது கூட அவர் விடுதலை புலிகளை நேரடியாக ஆதரிக்கவில்லை. இறுதிக்கட்ட போருக்கு பிறகு கலைஞர் மீதே வசவுகள் விழுந்தன''.
''இலங்கை விஷயத்தை பொருத்தவரையில், அவருடன் நான் பலமுறை பேசியிருக்கிறேன். அதனால்தான் சொல்கிறேன் அவர் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கொண்டவர்.
ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்..
தினமலர் :புதுடில்லி: ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க முடியாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.
முன்னாள்
பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன்,
பேரறிவாளன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்
ஆகியோர் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய தமிழக
அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில்
முறையீடுசெய்தது.
;தவறான முன்னுதாரணம் : இந்த வழக்கில், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்; ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. ராஜிவ் கொலையாளிகள் விவகாரத்தில் பலக்கட்ட விசாரணை முடிந்து அவர்கள் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு பல கட்ட பணிகளுக்கு பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக நிர்வாகி மோகன் கலைஞர் இறுதி நிகழ்வு கூட்ட நெரிசல் உயிரழந்தார்!
உயிரிழந்த அதிமுக பிரமுகர் மோகன் |
கலைஞரின் முகத்தை பார்த்துவிட வேண்டும் என்கிற வேட்கையில்
பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். பிரதமர் வந்துச்சென்ற பின்னர்
தடுப்புகளை தாண்டி முண்டியடித்துக்கொண்டு பொதுமக்கள் முன்னேறியதால் கடும்
நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 4 பேர் பலியானார்கள். 20-க்கும்
மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த 4 பேரில் 3 பேர் அடையாளம் தெரிந்தது. ஒருவர் அடையாளம் மட்டும் தெரியாமல் இருந்தது. அவரது புகைப்படத்தை போலீஸார் பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தனர்.
இதற்கிடையே வேலூர், கஸ்பா பகுதியை சேர்ந்த மோகன்(65) என்பவர் திரும்பி வரவில்லை. அவர் என்ன ஆனார் என்று உறவினர்கள் தேடி வந்த நிலையில் பத்திரிகைகளில் வந்த புகைப்படத்தை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மோகனின் படம் தான் அது.

மல்லையாவுக்கு எதிரான லண்டன் வழக்கை பலவீனமாக்குகிறதா சிபிஐ...
Savukku : தலைமறைவான
கோடீஸ்வரரான விஜய் மல்லையா, நாட்டை விட்டு வெளியேற அரசு நடவடிக்கை
எடுப்பதற்கு முன், 2016 மார்ச் 2 ம் தேதி 36 சூட்கேஸ்களுடன் இந்தியாவை
விட்டு பறந்த போது, கண்ணுக்குத்தெரியாத கை அவருக்கு உதவியதா?
சிபிஐ அவரை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவந்து இங்குள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இந்தப் புலனாய்வு அமைப்பு தனது வழக்கைத் தானே பலவீனப்படுத்தியிருக்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.
மல்லையாவை ஒப்படைக்கவைப்பதற்கான வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த, மல்லையாவுக்கு எதிரான ஏழு முக்கிய சாட்சியங்களின் வாக்குமூலம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 161ஆவது பிரிவின் கீழ், காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர, 164ஆவது பிரிவின் கீழ் அல்ல. இந்தப் பிரிவின் கீழ், மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இது வேண்டுமென்றே செய்யப்பட்ட விடுபடல் என்று சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர். மல்லையா வழக்கறிஞர் இதைக் ‘கப்’பென்று பிடித்துக்கொண்டிருக்கிறார்.

சமுகநீதியின் பொற்காலம் . 1989 -1991 வரை இரண்டு வருடங்கள் மட்டுமே கலைஞர் ஆட்சியில் இருந்தார்
Don Vetrio Selvini :
1989
-1991 வரை இரண்டு வருடங்கள் தான் கலைஞர்
தலைமையிலான திமுக அரசு ஆட்சியில் இருந்தது. இந்த இரண்டு வருடகாலம் தான் தமிழக சமூக நீதியின் வரலாற்றில் பொற்காலம் என்று சொல்லலாம்.
1) மகளிருக்கு சொத்துரிமை
2) பெண்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் 30% இட ஒதுக்கீடு
3) முதல் தலைமுறை , தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி
4) ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம் தொடக்கம்.
5) கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை
6) ஏழை எளிய பெண்களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டம் (இது குறித்து விரிவாக எழுதுகிறேன்)
7) கைம்பெண் மறுமணம் , சாதி மறுப்பு திருமணம் , கைம்பெண்ணின் மகள் திருமணம் , போன்ற நிகழ்வுகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ..
போன்றவை இன்றும் அனைவராலும் பாராட்டப்படும் சமூக நீதி திட்டங்கள்.

இரு இராணுவத்தினருக்கு மரண தண்டனை .. திருகோணமலை நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு!
யாழ்ப்பாணம், குறுநகர் பகுதியில் விசாரணை
என்ற பெயரில் ஒருவரை
அழைத்துச்சென்று கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்து இன்று (08) திருகோணமலை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்றைய தினம் திருகோணமலை மேல் நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட திருநெல்வேலியில் கடந்த 1998/09/10 ஆம் திகதி ஞானசிங்கம் என்டன் குணசேகரம் என்ற நபரை பயங்கரவாதி என குறிப்பிட்டு விசாரணைக்காக அழைத்துச் சென்று இராணுவத்தினர் அவரை அடித்து கொலை செய்துள்ளனர்.

திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப நீதிமன்றம் மறுப்பு ,, சைதாப்பேட்டை
Shyamsundar
ONEINDIA TAMIL
சென்னை: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்பக் கூடாது என்று சைதாப்பேட்டை கோர்ட் நீதிபதி பிரகாஷ் தீர்ப்பளித்துள்ளார். திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன், அவர் தேச விரோதமாக என்ன பேசினார் என்று தமிழக போலீசிடம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஐரோப்பாவில் இருந்து திரும்பியதும் அவர் கைது செய்யப்பட்டார். பெங்களூர் போலீசார் அவரை நேற்று முழுக்க விசாரித்தனர். பிரிவு பிரிவு அவரை தேச துரோக வழக்கில் கீழ் கைது செய்தனர்.

BBC :வெள்ளத்தில் மூழ்கும் கேரளா ... பேரிடம் மீட்பு குழு திணறல்
மலைகளுக்கும், கடற்கரைகளுக்கும் பெயர்பெற்ற
கேரள மாநிலம் தற்போது
நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் தத்தளித்துவருகிறது. மலைப்பகுதிகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் உண்டான நிலச்சரிக்கு இதுவரை குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு அதிக அளவில் பெய்த மழையால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உண்டான வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காரணங்களால் 700க்கும் மேலானவர்கள் இறந்துள்ளதாக பிபிசி செய்தியாளர் நிக் பீக் தெரிவிக்கிறார்.
அங்கு பெய்து வரும் கனமழையால், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் 20,000க்கும் மேலானவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் அல்லது அவர்களாகவே, உறவினர்கள் வீடு, மலையின் மேல் வெள்ளம் உண்டாகாத பகுதிகள் போன்ற வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இடுக்கி அணையின் முழு மதகுகளும் திறப்பு ,, மக்கள் பதட்டத்தில்
மாலைமலர் :திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை பொழிவு இருக்கும்.
இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கேரளத்தின் 22 அணைகள் நிரம்பி விட்டது. முழு கொள்ளளவை எட்டியதால் அவற்றை ஒரே நேரத்தில் திறக்கும் நிலை ஏற்பட்டது.
அணைகள் திறக்கப்பட்டதால் பெரியாறு, வைக்கம், பம்பை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது போல 2403 அடி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையும் நிரம்பி வருகிறது. இன்னும் 2 அடி தண்ணீர் பெருகினால் அணை முழு கொள்ளவை எட்டி விடும்.
இன்று அதிகாலையில் அணையின் நீர் மட்டம் 2401 அடியை எட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி அணையின் மதகுகளை திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். நேற்று மாலை அணையின் ஒரு மதகு திறக்கப்பட்டு வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இன்று அதிகாலையில் அணையின் மேலும் 5 மதகுகள் திறக்கப்பட்டு கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இடுக்கி அணையில் கடந்த 1992-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதகுகள் திறக்கப்பட்டது. அதன் பிறகு 26 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அணையை திறக்கும் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

அ.தி.மு.க. அலுவலகத்தில் கலைஞருக்கு மவுன அஞ்சலி: ஆறுகுட்டி எம்.எல்.ஏ. பேட்டி
nakkheeran.in/;வே.ராஜவேல் :
கோவை மாவட்டம் கள்ளிமடையில் அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி
அலுவலகத்தில் வைத்து, திமுக தலைவர் கலைஞர் உருவப்படம் உள்ள அஞ்சலி
போஸ்டருக்கு மாலை அணிவித்து, கருப்பு சட்டை அணிந்து இரங்கல் தெரிவித்தனர்.
பின்னர் மவுன அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
இதுகுறித்து கவுண்டம்பாளையம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுகுட்டி நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில்,
தமிழகத்தின் கலாச்சாரப்படி ஒருவர் இறந்துவிட்டால் யாராக இருந்தாலும் எதிரியாக நினைக்கக்கூடாது. பக்கத்து வீட்டுக்காரராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி. அதிமுக சார்பில் முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர், அமைச்சர்கள் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். நாங்கள் யாரும் போகவில்லை. ஆனால் எங்களுக்கும் அதில் அனுதாபம் உண்டு. அதிமுக உருவாவதற்கு முன்பு கலைஞர் முக்கிய தலைவராக இருந்தவர். அந்த வகையில் கள்ளிமடையில் இளைஞர் அணி சார்பில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மெரினா விவகாரத்தில் காட்டிய முனைப்பை ஸ்டெர்லைட் வழக்கில் காட்டியிருக்க வேண்டும்: கனிமொழி ட்வீட்
tamil.thehindu.com :
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது என
முனைப்புடன் வாதாடிய தமிழக அரசு, வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்து
முனைப்புடன் வாதாடியிருந்தால் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தோல்வி
ஏற்பட்டிருக்காது என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி
தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மே 22 ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

திமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: கனிமொழி, அழகிரிக்கு புதிய பதவி?
வெப்துனியா : திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி காலமானதை
அடுத்து அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் விரைவில் திமுக தலைவராக பதவியேற்க உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் கனிமொழி மற்றும் அழகிரியை சமாளிக்க இருவருக்கும் திமுகவில் முக்கிய பதவிகள் வழங்கவும் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட அழகிரி, மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவார் என்றும், அவருக்கு கட்சியில் முக்கிய பதவி கொடுப்பதோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை ஸ்டாலின் கொடுக்கும் பதவியை அழகிரி விரும்பாவிட்டால் அவருக்கு பதிலாக அவருடைய மகன் தயாநிதி அழகிரிக்கு கட்சியில் முக்கியத்துவம் தரும் வகையில் ஒரு பதவியும், முரசொலி அறக்கட்டளையில் ஒரு பதவியும் வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

முதல் முறையாக குழிக்குள் பேழையை இறக்க நவீன கருவி: 5 மணி நேரத்தில் கலைஞர் நினைவிடத்தில்
தினத்தந்தி : சென்னையில் அண்ணா சமாதியின் அருகே 5 மணி நேரத்தில்
கருணாநிதியின் சமாதியை பொதுப்பணித்துறையினர் அமைத்தனர். குழிக்குள் பேழையை
இறக்க நாட்டிலேயே முதல் முறையாக நவீன கருவி பயன்படுத்தப்பட்டது.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் உடல்
ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த போது, எந்த இடத்தில்
நல்லடக்கம் செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இறுதியாக மெரினாவில் உள்ள
அண்ணா சமாதியின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய நீதிமன்றம்
உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து பணியை விரைவாக செயல்படுத்த தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு
உத்தரவிட்டதுடன், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.அமுதாவை பணியை
மேற்பார்வையிடவும், ஒருங்கிணைப்பதற்காகவும் நியமித்தது.
பழ .நெடுமாறன் : காமராஜரை கவுரவப்படுத்தினார் கலைஞர் .. இளைய தலைமுறை புரிந்துக்கொள்ளுங்கள்:
மு.அப்துல் முத்தலீஃப் tamilthehindu :
முகநூல், வலைதளங்களில் காமராஜருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய கருணாநிதி அனுமதி மறுத்ததாக வரும் செய்திகளை இளைய
தலைமுறையினர் நம்பி ஷேர் செய்கின்றனர். உண்மை என்ன என்று அப்போதைய காங்கிரஸ் செயலாளர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கை பிரச்சினை, தமிழனப்பிரச்சினை முதல் அனைத்திலும் முன்னிற்கும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ஒரு காலத்தில் காங்கிரஸ் தலைவர் என்பது இன்றைய இளம் தலைமுறை அறியாத ஒன்று. காமராஜர்பால் பற்றுக்கொண்டு தீவிர காங்கிரஸ்காரராக இருந்தவர் பழ.நெடுமாறன். இந்திரா காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தார்.
1973 முதல் 1979 வரை காமராஜர் மறைவின்போதும், இந்திரா தமிழகம் வந்தபோது
மதுரையில் திமுக கருப்புக்கொடி காட்டி நடந்த கல்லெறி சம்பவத்திலும்,
கல்லெறியிலிருந்து இந்திரா காந்தியை தலையணையால் மூடி காத்தபோது மண்டை
உடைந்து ரத்தம் ஆறாக பெருகிய நிலையிலும் அகலாது நின்றார். பின்னர் கருத்து
வேறுபாடு காரணமாக 1979-ல் காங்கிரசிலிருந்து விலகினார்.
சிலை கடத்தல் வழக்கில் .. டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமின் மனு
tamil.oneindia.com -veerakumaran.
:
சென்னை: சிலைக் கடத்தல் வழக்கில் டிவிஎஸ் குழும நிறுவனத்தின் தலைவரான வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஹைகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளது என்றும், பெரிய பெருமாள் சிலையில் சாலிக்ராம கற்களை காணவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் கோயில் புனரமைப்பு பணியிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
இது குறித்து காவல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ரங்கராஜன் குற்றம் சாட்டியிருந்தார்.
இன்று இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் செயல்படும் சிலைக் கடத்தல் பிரிவு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆறு வார காலத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.
இந்த வழக்கு தொடர்பாக சிலைக் கடத்தல் பிரிவு நாளை விசாரணையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞரும் கோபாலும் .. நெஞ்சம் கலங்குகிறது! – நக்கீரன்
இந்திய அரசியலில் தவிர்க்க
முடியாத தனிப்பெருந்தலைவர் கலைஞர். கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத்
தரப்பு மக்களாலும் மனதார ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் அவர். அவருக்காக
எட்டுத்திசையும் மனம்கலங்கி நிற்கிறது.
நாட்டின் குடியரசுத் தலைவரே, அவர் சிகிச்சைபெறும் மருத்துவமனைக்கு வந்து
அக்கறையோடு விசாரித்துச் சென்றதை நாடே உற்றுநோக்குகிறது. இது கலைஞரின்
உயரத்திற்கான உயரிய அங்கீகாரம் ஆகும். 5 முறை முதல்வராக இருந்தவர் கலைஞர்.
பலமுறை எதிர்க்கட்சித் தலைவராக மக்களுக்கான குரலை சட்டமன்றத்தில்
எதிரொலித்தவர். கலைஞருக்கு நிகரான ஒரு தலைவரை, வரலாற்றின் எந்தத் திசையில்
தேடினாலும் கண்டறிவது கடினம்.
நக்கீரனுக்கும் கலைஞருக்குமான உறவு, மிக நீண்டநெடிய, நெகிழ்வான உறவாகும்.
1991 மே 21-ல் ராஜீவ்காந்தி, படுகொலையான போது நாடே பதற்றத்தில்
மூழ்கியிருந்தது. அப்போது எங்கு பார்த்தாலும் கலவரம் வெடித்தது. இதை
சாக்காக்கி “நக்கீரன்’ அலுவலகம் கடுமையாகத் தாக்கப்பட்டது. அதேபோல் ஒரு
கலவரக் கும்பல், “முரசொலி’ அலுவலகத்தைக் கடுமையாகத் தாக்கியதோடு,
தீவைத்தும் எரித்தது. அப்போது கலைஞரைப் பார்க்க ஓடினோம். கலைஞர், வேதனையில்
துடித்துக்கொண்டிருந்தார். வியாழன், 9 ஆகஸ்ட், 2018
Amutha IAS ..கலைஞர் இறுதி அடக்க நிகழ்வுகளை முன்னின்று திறம்பட .... இவர் பிலிம் காட்டும் ரோஹினி ரக ஐ எ எஸ் அல்ல
Devi Somasundaram :
மேக்கப்
கலையாம ,புடவை மடிப்பு கலையாம சீன் போட்ற
ரோஹினி ஐ ஏ எஸ் இல்ல.,..களத்தில் நிற்கும் அமுதா ஐ ஏ எஸ்..( கலைஞர் இறுதி அடக்கத்தின் வேலைகளை மேற்பார்வை இடுகிறார் ) .
சுனாமியின் போதும் சிறப்பா செயல்பட்டவர்..
ஏன் நீட் வேண்டாம்னு சொல்றோம்...
நம் மண்ணில் பிறந்தவர்க்கு நம் மண்ணின் சூழல் தெரியும்....நம்ம ஊர் மக்கள் சூழல் தெரியும்....கால நேரம் , கடின சூழல் பாக்காம மக்கள் சேவைக்கு வருவார்கள்..
வெளி மாநில டாக்டர் நம்மூர் மலைல போய் டாக்டரா வேலை பார்ன்னா பாக்க மாட்டார்...அனிதாவா இருந்தா இரவு 2 மணி ஆனாலும் அவசரம்ன்னா எழுந்து வருவார்....
பதவி என்பது சட்டம், புரோட்டோகால் , விதி முறை தாண்டி மனித நேசிப்பு கொண்டதா இருக்கனும்...
அது அந்த மண்ணில் பிறந்தவருக்கு தான் வரும்... .அமுதா போன்று களத்தில் இறங்கி நிற்பவர்களை ஒதுக்கி விட்டு ரோஹினிகளை பதவிக்கு கொண்டு வருவது மக்களுக்கு எந்த வகையிலும் நல்ல தில்லை

கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின், அழகிரி உள்ளிட்ட குடும்பத்தினர் அஞ்சலி
மாலைமலர் :மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி
நினைவிடத்தில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மற்றும் கருணாநிதியின் குடும்ப
உறுப்பினர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். #KarunanidhiDeath #DMK
#MKStalin
சென்னை:
தி.மு.க.
தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா
சமாதியின் பின்புறம் நேற்று அடக்கம் செய்யப்படது. சமாதியின் அருகில்
கருணாநிதியின் மிகப்பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு தி.மு.க. கொடி நடப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், சமாதிக்கு மேலே தற்காலிகமாக கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று இரவு 8 மணியளவில் கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்த ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அவரது சமாதியில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அவர்கள் அஞ்சலி செலுத்தும் நேரத்தில் கனமழை பெய்து கொண்டிருந்தது. மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12 மணியளவில் கருணாநிதி சமாதிக்கு வந்து சமாதியில் மாலை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்து என்.ராம் : கலைஞர் பார்ப்பனர்கள் மீது பாரபட்சம் காட்டியதே இல்லை... BBC
இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தியவராக அறியப்படும் கருணாநிதி
கடந்த செவ்வாய்க்கிழமையன்று (07.08.2018) காலமானார். இந்நிலையில் மூத்த ஊடகவியலாளரான 'தி இந்து' குழுமத்தின் பதிப்பாளர் என்.ராம் பிபிசி தமிழிடம் பேசியபோது கருணாநிதியின் அரசியல் ஆதிக்கம், தனிச்சிறப்புகள், இலங்கை விவகாரம் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு தனது பதிலை பகிர்ந்துகொண்டார். t;சமூக நீதிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்தவரா கருணாநிதி?
சமூக நீதிதான் கருணாநிதியின் உயிர். 80 வருட காலம் அவர் சமூக நீதிக்காக செயல்பட்டிருக்கிறார். முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா இறந்தபிறகு திமுக தலைவராக பொறுப்பேற்று 50 ஆண்டுகளாக செயல்பட்டிருக்கிறார் கருணாநிதி. இது மிகப்பெரும் சாதனை. ஐம்பது ஆண்டுகாலம் ஒரு கட்சி தலைவராக இருந்திருப்பதே ஒரு வித்தியாசமான அனுபவம்!
13 முறை அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். ஜெயலலிதா ஒரு முறை தேர்தலில் தோல்வி கண்டவர். ஆனால் கருணாநிதி சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்ததே இல்லை.
அவர் ஆட்சியில் இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் சரி சமூக நீதி குறித்துச் செயல்படுவதில் அவருக்கு முழு அர்ப்பணிப்பு இருந்தது.
எந்த ஒரு விவகாரத்திலும் அவர் சமூக நீதி குறித்து சிந்திப்பவராக இருந்தார். பிராமணரல்லாதோர் இயக்கத்தின் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், அவருக்கு பிராமணர்கள் மீது பாரபட்சம் காட்டும் பழக்கம் இருந்ததே இல்லை.
அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும். மூத்த நண்பர் என்றே கருதவேண்டும். அவர் சித்தாந்த ரீதியாக எதிர்த்தாரே தவிர பிராமணர்கள் மீதும் சரி எந்தவொரு குழு மீதும் சரி பாரபட்சம் காட்டியதே கிடையாது.
பகுத்தறிவு பகலவன் கலைஞர் மீது பால் ஊற்றி பார்ப்பனீயத்திற்கு பால் வார்த்த வைரமுத்து
வெப்துனியா : திமுக தலைவர் கருணாநிதி உடல் அடக்க செய்யப்பட்ட இடத்தில் வைரமுத்து பால் ஊற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய கோரிக்கை விடப்பட்டபோது தமிழக அரசு நிராகரித்தது.
பின்னர் உயர்நீதிமன்றத்தை நாடி திமுக அனுமதி பெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை திமுக தலைவர் கருணாநிதியின் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.
;இன்று கவிஞர் வைரமுத்து கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பால் ஊற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சமூக வலைதளங்களில் பலரும் வைரமுத்துவை விமர்சித்து வருகின்றனர். மூட நம்பிக்கை இல்லாத தலைவர் நினைவிடத்தில் பால் ஊற்றுவதா? என பலரும் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர்.

கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தியவர்களுக்கு நன்றி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
விடுதலை : சென்னை, ஆக.9 கலைஞருக்கு இறுதி மரியாதை செலுத்தியவர்களுக்கு நன்றி
தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு (8.8.2018) வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது:- ஓய்வறியா சூரியனாகத் திகழ்ந்த தலைவர் கலைஞரை அவரது உயிரினும் மேலான உடன்பிறப்புகளான நீங்களும், நானும் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் இழந்து கண் கலங்கி நிற்கிறோம். தலைவர் நம்மை விட்டுப் பிரிந்த வேதனை மிகுந்த நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவே அவரது மரணத்தினால் கலங்கி நின்று இரங்கல் தெரிவித்தபோது, 95 வயதில், 81 வயது பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான தலைவரின் பேராற்றலும் பெரும் சாதனைகளும் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்திய திருநாட்டுக்கே எந்த அளவு பயன் தந்திருக்கிறது என்பதை உணர்த்தியது. ஜனநாயகத்தின் அணையா தீபமாக வும், சுயமரியாதைக் கொள்கையின் குன் றாகவும், நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் போர்ப்படை தளபதியாகவும், தமிழர்களின் அழுத குரலுக்கு ஓடி வரும் உத்தம தலைவராகவும் திகழ்ந்த கலைஞர் திராவிட இயக்கத்தின் தன்மான உணர்வு களை போற்றிப் பாதுகாத்தவர்.

பேராசிரியர் அன்பழகன் : போய்வாருங்கள் நண்பரே!
tamil.thehindu.com " 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த நட்புடன் விளங்கியவர்கள்
கருணாநிதியும்,பேராசிரியர் அன்பழகனும். கருணாநிதியுடன் வாழ்வில் பல
நிகழ்வுகளில் ஒன்றாக இருந்த அவர் தனது நண்பரின் இறுதி நிகழ்வில் அவரையே
வெகு நேரம் வெறித்து பார்த்தபடி நின்றுவிட்டு சென்றார்.
கருணாநிதி
தன்னுடைய 18-வது வயதில் 1942-ம் முதன்முதலாக க.அன்பழகனை சந்தித்தார். அண்ணா
பல்கலைகழகத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர் தலைவராக இருந்த அவரை
தன்னுடைய இளைஞர் பெருமன்றத்துக்கு பேச அழைத்தபோது முதன்முதலாக சந்தித்தார்.
அதன் பின்னர் திமுக ஆரம்பிக்கப்பட்டு, 15 எம்.எல்.ஏக்கள் முதன் முதலாக
சட்டப்பேரவைக்குள் சென்றபோது இவர்கள் நட்பு இறுகியது. அதன் பின்னர்
எம்ஜிஆர் நீக்கம், நெடுஞ்செழியன் போன்றோர் வெளியேற்றத்துக்கு பின்
பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற அன்பழகன் தலைவரான கருணாநிதியின் நட்பு
தொடர்ந்தது.
76 ஆண்டுகால
நட்பு, இதில் வெற்றி, தோல்வி, அவமானம், சிறைவாசம், நெருக்கடிநிலை, இரண்டு
முறை கட்சி பிளவு பட்டது, ஒன்றாக பதவியை துறந்தது, குடும்ப விழாக்கள்,
கருணாநிதியின் திருமணம், அவரது பிள்ளைகளின் திருமணம், பேரன் பேத்திகளின்
திருமணம், ஓய்வில் ஒதுங்கி நோயுற்ற காலம் என அனைத்திலும் ஒன்றாக
இருந்துள்ளார் அன்பழகன்.
மீண்டும் காவிரியில் வெள்ள அபாயம்? வருகிறது 1.50 லட்சம் கன அடி..!
நக்கீரன் :கர்நாடகா மாநிலத்தில் குடகு மற்றும் மேற்குப் பகுதிகளில் கனமழை பெய்து
வருகிறது. ஏற்கனவே கடந்த மூன்று வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால்
கர்நாடகாவின் முக்கிய அணைகளான கபினி, கே.ஆர்.எஸ் மற்றும் ஹேரங்கி ஆகியவை
முழு கொள்ளவை அடைந்தது. இதனால் அணைகளுக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக
தமிழக மேட்டுர் அணைக்கு திறந்துவிடப்பட்டது.
ஏறக்குறைய ஒரு லட்சம் கன அடி வரை நீர் வந்ததால் மேட்டூர் அணை முழுமையாக 120 அடியும் நிரம்பியது. இதனால் உபரி நீர் 16 கண் மதகுமூலம் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தற்போது மேட்டுர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உள்ளது. தமிழகத்தின் பாசனத்திற்காக 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அங்குள்ள அணைகளுக்கு வரும் நீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.

திருமுருகன் காந்தி கைது. பெங்களூரு விமான நிலையத்தில் ... ஜெர்மனியில் இருந்து ...
நக்கீரன் :ஜெர்மனியிலிருந்து பெங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மே பதினெழு இயக்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கினார்.
இந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் இந்த அடக்கு முறையினை வன்மையாக கண்டிப்போம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 மாநிலங்கள் கலைஞர் மறைவை மாநில துக்க தினமாக அறிவித்தன..
ஆனந்த்குமார் சித்தன் :
26 மாநிலங்கள் கலைஞர் மறைவை மாநில துக்க
தினமாக அறிவித்தன..
தமிழ்நாடு அல்லாத தென் மாநிலங்கள் அனைத்தும் விடுமுறை நாளாக அறிவித்தன..
பீகார் அரசு கலைஞருக்காக இரண்டு நாள் துக்கம், விடுமுறையோடு அறிவித்தது..
இந்திய தேசிய வரலாற்றில் இப்படி ஒரு துக்க தினம் இவ்வளவு மாநிலங்களால் அறிவிக்கப்பட்டது முதல் முறை கலைஞருக்கு மட்டும்தான்..
இவ்வளவு அண்டை மாநிலங்கள் , வடமாநிலங்கள
ஒரு மாநில அரசியல் கட்சி தலைவனுக்கு அஞ்சலி மரியாதை செலுத்துவது சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும்
இந்தியா வரலாற்றில் இதுவே முதல் முறை..
14 வயதில் தொடங்கி கலைஞரின் வாழ்வு எல்லாமே சாதனை என்றால்..
மாநிலம் தாண்டி தேசியத்தையே வருந்த வைத்து,
சாவிலும் சாதனை படைத்திருக்கிறாய் தலைவா

கலைஞர் – வரலாறு தந்த வரம்... சவுக்கு ..
savukkuonline.com :
அப்போது
எனக்கு வயது 10. என்
தாய் என்னையும் என் தங்கையையும், போப் ஆண்டவர் வருகிறார் என்ற தகவல் தெரிந்து திருவிழா பார்ப்பதற்கு செல்வது போல, அழைத்துச் சென்றார். முதன் முதலாக அப்போதுதான் எம்ஜிஆரை பார்த்தேன். அப்போது கவர்னராக இருந்தவர் குரானா, குரானா ஒரு நீல நிற கோட் அணிந்து போப் ஆண்டவரோடு வந்தார்.
எம்ஜிஆர் எப்படிப்பட்ட மக்களை வசீகரிக்கக் கூடிய தலைவர் என்பதை நாம் அறிவோம். ஆனால் என்னை எம்ஜிஆர் வசீகரிக்கவில்லை. நான் நேரில் பார்த்திராத, கலைஞர்தான் என்னை வசீகரித்தார். என் தந்தை அவர் அலுவலகம் சென்று வரும் சைக்கிளின் கேரியரில் அந்தந்த கிழமைகளுக்கு ஏற்ப, விகடன், குமுதம் மற்றும் கல்கி இதழ்களை வைத்து வருவார். நான் வெளியே வந்து பார்ப்பேனோ என்று எதிர்பார்த்தபடியே, அந்த ஒண்டு குடித்தன காம்ப்பவுண்டுக்குள் நுழைந்ததும் பெல் அடிப்பார். நான் மிகவும் ஆர்வமாக ஓடி வந்து, அவர் சைக்கிள் கேரியரில் இருக்கும் அந்த வாரத்து வார இதழ்களை எடுத்துக் கொண்டு, படிப்பேன்.
அந்த இதழ்களை படித்துதான் நான் கலைஞரை கண்டு கொண்டேன்.

மெரீனா கலைஞர் துயிலும் இல்லம் ... நீதிபதிகளின் பங்களிப்பு ..
நீதியரசர் ஹுளுவாடி ரமேஷ் ,நீதியரசர் எஸ் எஸ் சுந்தர்.. கலைஞர் |
Bilal Aliyar : பதினான்கு வயது முதல் பொது வாழ்விலும், சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, எதிர்கட்சி தலைவராக, ஐந்து முறை தமிழக முதல்வராகவும் இருந்த சமூக நீதி போராளியின் இறுதி அஞ்சலிக்கு ஆரியத்தின் சூழ்ச்சியால் இடம் மறுக்கப்பட்ட போது, திமுக வழக்கறிஞர்களின் உரிமை போராட்டத்திற்கான சட்ட மனுவை உடனடியாக ஏற்றுக் கொண்டு, இரவோடு இரவாக தங்கள் இல்லத்திலேயே விசாரணையை ஆரம்பித்து, மறுநாள் காலை அரசு வழக்கறிஞரின் பொய்யான வாதங்களை எதிர்தரப்பு வக்கீலாகவே மாறி கேள்விகளை தொடுத்து, தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற அண்ணல் அம்பேத்கரின் கூற்றை மனதில் ஏந்தி, அண்ணலின் கனவுகளை நனவாக்க்கிய அவரின் தம்பி கலைஞருக்கு மெரினாவில் தான் நல்லடக்கம் என்ற நீதியை தங்கள் தீர்ப்பின் மூலம் உலகுக்கு விரைவாக வழங்கிய நீதியரசர்கள் குலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் அவர்களுக்கு மகிழ்வுடன் நன்றிகள் பல
புதன், 8 ஆகஸ்ட், 2018
கடமை கண்ணியம் கட்டுப்பாடு... திராவிட தொண்டர்களின் எடுத்துகாட்டு
Muralidharan Pb :
பசுமையாய் நினைவு இருக்கிறது. இந்திராகாந்தி மரணம்,
அதைவிட எம்ஜிஆர் மரணம். மறக்கவே முடியாத நாட்கள் அது.
எம்ஜிஆர் மரணமடைந்த போது எங்கள் தெருவில் சென்னை பொது மருத்துவமனைக்கு ரொட்டி எடுத்துச் செல்லும் ஒரு வேன் அடித்து நொறுக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டது. அன்று அரசியல்வாதிகள் இறந்தால் இப்படித்தான் என்று ஆழமாக பதிந்து போனது. கலைஞர் சிலையை உடைப்பு, அண்ணா சாலையில் கடைகளில் பொருட்கள் சூரையாடல் இன்னும் ஏராளமானவை.
அப்போதைய பேச்சு 'கருணாநிதி செத்தா திமுக காரனுங்க பெரிய ரௌடிப் பசங்க தமிழ்நாட்டை ஒரு வழி பண்ணுவானுங்க என்று பேசியது.

ஆனால் இன்று எந்த பெரிய உயிர் பலியோ, கடைகள் சூறையாடல், அராஜகம் என்று
எந்த செய்தியும் வரவில்லை. இத்தனைக்கும் ஆளும் அரசு பொறுமையை காலையில்
ரொம்பவே சோதித்து.
இத்தனைக்கும் இன்று மோடி வந்து போன பிறகு போலீசார் நடந்த கொண்ட விதமே அவ்வளவு திருப்தியாக தெரியவில்லை.

மெரினாவில் காத்திருக்கும் அழகிரி... கலைஞர் உடலுடன் ஸ்டாலின்... இறுதி ஊர்வல நிமிடங்கள்
நக்கீரன் :சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்திற்கு அருகே திமுக தலைவர் கலைஞரின் உடல் அடக்கம் செய்வதற்கான பணிகள் நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் துரிதமாக நடைப்பெற்றது. ராஜாஜி ஹாலில் திமுக தலைவர் கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டபின், மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
குண்டுகள் முழங்கின! வானம் அதிர்ந்தது! சூரியன் உறங்கியது! அண்ணா சதுக்கத்தில் கலைஞரின் உடல் அடக்கம்
கதிரவன் :
ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மறைந்த முதல்வர்
கலைஞரின் உடல் மாலை 4 மணிக்கு மேல் மெரினாவை நோக்கி இறுதி ஊர்வலமாக
எடுத்துச்செல்லப்பட்டது. 6.30 மணியளவில் அண்ணாசதுக்கத்திற்குள் உடல்
கொண்டு வரப்பட்டது. கலைஞரின் உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கும் நிகழ்வு
தொடங்கியது. முப்படை தளபதிகளின் மரியாதைக்கு பிறகு காங்கிரஸ் தலைவர்
ராகுல்காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளுநர் பன்வாரிலால்
புரோஹித், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார்
உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் கலைஞர் உடலின் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி அகற்றப்பட்டு ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர், மு.க.அழகிரி, ராஜாத்திஅம்மாள், செல்வி, துர்கா, கனிமொழி, தமிழரசு, துரைதயாநிதி, அருள்நிதி உள்ளிட்ட குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர். இறுதியாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இறுதி மரியாதை செலுத்தினார்.
இறுதி மரியாதைக்குப்பிறகு 6.50 மணிக்கு கலைஞரின் உடல் ''ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’’ என்று பொறிக்கப்பட்ட சந்தைனப்பேழைக்குள் எடுத்து வைக்கப்பட்டது.
பின்னர் சந்தனப்பேழைக்குள் குடும்பத்தினர் ஒவ்வொருவராக வந்து உப்பு போட்டுச்சென்றனர். அப்போது ஸ்டாலின் கதறி அழுதார்.

21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அண்ணா நினைவிடம் அருகே மீளாத்துயில் கொண்டார்
/tamil.oneindia.com - /kalai :
"-ராணுவ வாகனத்தில்
சென்னை: மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியின் உடல் முப்படை வீரர்களின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியின் உடல் முப்படை வீரர்களின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
முப்படை வீரர்களின் மரியாதையுடன் கருணாநிதியின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
அவரது இறுதிச்சடங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் பிரதமர் தேவ கவுடா உள்ளிட்டோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)