Thulakol Soma Natarajan : பல்கலைப்புலவர் கா.சுப்பிரமணிய பிள்ளை பிறந்த நாள் நவம்பர், 5 ( 1889 )
எம்.எல்.பிள்ளை என்றும் கா. சு.பிள்ளை என்றும் அறியப்பட்டவர்
நெல்லைச் சீமை' தமிழுக்களித்த நற்றமிழ் வளர்த்த கா.சு. பிள்ளை.
இந்திய அளவில் நடந்த சட்ட நூல் ஆய்வுப் போட்டியில் வெற்றி பெற்று தாகூர் சட்ட விரிவுரையாளர் பட்டத்தை வென்று 10 ஆயிரம் வெண் பொற்காசுகள் பரிசாகவும் பெற்றவர்.
இவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, திருக்குறள் பொழிப்புரை ஆகியவை,
பிற்கால வரலாற்று நூல்களும், திருக்குறள் உரைகளும் எழுதியவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தன.
இறுதிக் காலத்தில் உடல் நலிவுற்று வறுமையில் வாடிய இவரை செட்டிநாட்டரசர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியமர்த்தி ஆதரித்தார்.
சைவர். ஆனால் முற்போக்காளர் .
சனி, 4 நவம்பர், 2023
பல்கலைப்புலவர் கா.சுப்பிரமணிய பிள்ளை பிறந்த நாள் நவம்பர், 5 ( 1889 ) (எம்.எல்.பிள்ளை - கா. சு.பிள்ளை)
முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்?: வெளியான மருத்துவ அறிக்கை!
மின்னம்பலம் - Kavi : முதல்வர் ஸ்டாலினுக்கு என்னாச்சு?: வெளியான மருத்துவ அறிக்கை!
முதல்வர் ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மழை காரணமாக சமீப நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேசன் மருத்துவமனை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வருக்கு நேற்று முதல் இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அவரை பரிசோதித்ததில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
நடிகை ரஞ்சனா கைது! பேருந்து படியில் தொங்கிய மாணவர்களை தாக்கினார்
01 சென்னையில் அரசு பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி ரகளை செய்து வந்த மாணவர்களை அடித்து அலறவிட்ட நடிகை ரஞ்சனாவை போலீசார் கைது செய்தனர்.
02 சென்னை போரூரிலிருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியவாறு சென்றதை கண்டதும் கொதித்தெழுந்த ரஞ்சனா, பேருந்தை நிறுத்தச் சொல்லி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
‘நானும் உங்களில் ஒருவன்தான்’ - ஆ.ராசா; இந்திய அரசின் மீது அதிருப்தியில் மலையக மக்கள்.
tamil.indianexpress.com : இலங்கை தமிழர் விவகாரம் என்றாலே இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் வாழ்ந்த பூர்வீக இலங்கை தமிழர்கள் தனி ஈழம் கேட்டு போராடிய விவகாரம் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வருகிறது.
1823 இல் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இருந்து பல லட்சம் பேர் பிரிட்டிஷ் அரசால் இலங்கையின் தென்பகுதியில் உள்ள மலையக பகுதிகளுக்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக, அடிமைகளாக அழைத்து செல்லப்பட்டு அங்கே தேயிலை, காபி, ரப்பர் தோட்டங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டு, பிரிட்டிஷார் இலங்கைக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு போகும் போது அந்த நாட்டில் எந்த உரிமையும் இல்லாமல் விட்டுச் செல்லப்பட்டார்கள் என்கிற கொடுமையான வரலாற்றின் 200 வது ஆண்டை ஒட்டி பன்னாட்டு மாநாட்டை மலையக தாயகம் திரும்பிய தமிழருக்கான இயக்கம் கோவையில் நடத்தியது.
அண்ணாமலையின் இலங்கை விசிட்: பின்னணியில் நீலகிரி தேர்தல்!
minnambalam.com - Aara : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்று அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று (நவம்பர் 2) இலங்கையில் மலையக தமிழர்களை கவுரவப்படுத்தும் வகையில் ‘நாம் 200’ என்ற நிகழ்ச்சி கொழும்புவில் நடைபெற்றது.
இதில் அவர் கலந்து கொண்டு இந்தியா-இலங்கை இடையேயான உறவு குறித்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பின் பேரில் இலங்கை சென்ற தமிழக பாஜக கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில் அவர் பேசுகையில், “இந்த நாம் 200 நிகழ்ச்சி மிகவும் முக்கியமான ஒன்று.
நம்முடைய அனைவரின் கடுமையான உழைப்பை இது நினைவுபடுத்துகிறது.
6.4 magnitude hit Nepal டெல்லியில் நில அதிர்வு.. கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சம்.. வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள்
தலைநகர் டெல்லியில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது.
டெல்லிக்கு அருகில் உள்ள நகரங்கள் மற்றும் சண்டிகாரிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாவே அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது.
Strong tremor felt in Delhi and nearby cities after an earthquake of 6.4 magnitude hit Nepal
கடந்த மாதம் 3 ஆம் தேதி டெல்லியில் ஏற்பட்ட நில அதிர்வால் கட்டிடங்கள் குலுங்கின.
வெள்ளி, 3 நவம்பர், 2023
தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட புதுமண காதல் தம்பதி!
dhinakaran : தூத்துக்குடி: தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்ட புதுமண காதல் தம்பதிகளின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.
பிரேதப் பரிசோதனைக்கு பிறகு இரு குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தகனம் செய்யப்பட்டது.
விவிடி சிக்னல் அருகே உள்ள மின் மயானத்தில் இருவரின் உடல்களும் உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டன.
5 நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட மாரிச்செல்வம், கார்த்திகா வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
பைக்கில் வந்த மர்ம கும்பல், வீட்டில் இருந்த மாரிச்செல்வம், கார்த்திகாவை வெட்டிக் கொன்று தப்பி ஓடினர்.
அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகம், கல்லூரிகள் உள்ளிட்ட 80 இடங்களில் ஐ.டி. அதிகாரிகள் சோதனை
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமாக திருவண்ணாமலையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அருணை என்ஜினீயரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, கம்பன் கலைக் கல்லூரி ஆகியவை ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன.
இந்த கல்லூரிகள் செயல்பட்டு வரும் வளாகத்திலேயே எ.வ. வேலுவின் வீடு மற்றும் முகாம் அலுவலகம் ஆகியவையும் உள்ளன. இந்த நிலையில் அருணை என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள 3 கல்வி நிறுவனங்கள், அமைச்சர் எ.வ. வேலுவின் வீடு, அலுவலகம் என 5 இடங்களிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சி சூர்யா சிவா அதிமுகவில் இணைகிறார்
இந்த விவகாரம் தொடர்பாக, டெய்சி சரண், சூர்யா சிவா ஆகியோரிடம் திருப்பூரில் வைத்து பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து, சூர்யா சிவாவை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி பாஜக அறிவித்தது.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் 2024 பிப்ரவரி 11 ..தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மாலை மலர் : கடந்த 2022 ஏப்ரலில், பாகிஸ்தானில் அதுவரை நடைபெற்று வந்த பிரதமர் இம்ரான்கானின் ஆட்சி கூட்டணி கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் ஒரு இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்றது.
இவ்வருடம் ஆகஸ்ட் 10 அன்று அந்நாட்டின் பாராளுமன்றத்தை, அதன் காலம் முடிவடையும் 3 நாட்களுக்கு முன்பாகவே, பிரதமர் ஷாபாஸ் அளித்த பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி அரிஃப் ஆல்வி கலைத்தார்.
அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தின்படி அன்றிலிருந்து 90 நாட்களில் (நவம்பர் 7) பொதுத்தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்நாட்டின் புதிய மக்கள்தொகை விகிதாசார தரவுகளுக்கு ஏற்ப புதிய பாராளுமன்ற எல்லைகளை நிர்ணயிக்கும் மறுசீரமைப்பில், தேர்தல் ஆணையம் தீவிரமாக இருந்ததால், தேர்தல் தள்ளி போடப்பட்டது.
வியாழன், 2 நவம்பர், 2023
யாழ் பல்கலை கழகத்தில் மனித உரிமையாளர் செல்வி சுவஸ்திகா அருள்லிங்கத்திற்கு தடை ..சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம்
Poornima Karunaharan : பாசிசம் வளர்க்க பல்கலைக்கழகங்கள் தேவையில்லை. ஜனநாயக உரிமை கோரி கறுப்புப்பட்டி அணிந்து போராடுவோர், எதிரணிக்கும் அதே ஜனநாயக உரிமை உண்டு என்பதை மறந்து விடுகிறார்கள். இதற்குப் பெயர் தான் திமிர் என்பது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் வன்முறைகளை வளர்க்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதில் யாழ் பல்கலைக்கழகம் முதலாவது இடத்தை தொடர்ந்து தக்க வைக்கிறது.
Mahatheva Puspatheva : கருத்தை எதிர் கொள்ள முடியாத விவாதிக்க முடியாத ஆட்க்கள். அந்த காலத்தில் கொலை செயது கருத்து சுதந்திரத்தை அடக்கினார்கள். இன்று இப்படியான செயற்பாடுகளும் முக நூல் ஊடாக கேவலமான பேச்சுக்கள் தூசணங்களால் அட்க்க முற்படுகிறார்கள். அந்தளவுமே.
Joshanth Terence : புலிகள் பாசிசவாதிகளாகவே இருக்கட்டும் அதே சமயத்தில் அருண் சித்தார்த் சுவஸ்திகா போன்றோர் சிங்கள பேரினவாத்த்தை எதிர்த்து கேள்வி கேட்பார்களா , இதில் இருந்து தெரிகிறது அவர்களின் கைக்கூலிகள் தான் இவர்கள் என்டு
ஆப்கானியர்கள் வெளியேற பாகிஸ்தான் அறிவிப்பு! கூடுதல் அவகாசம் வேண்டும்: தலிபான் கோரிக்கை |
காபூல்: பாகிஸ்தானில் சட்டவிரோதமாக 17 லட்சம் ஆப்கானியர்கள் தங்கியிருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவிக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் ஆப்கானியர்கள் அனைவரும் நவம்பர் 1-ம் தேதிக் குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில் கட்டா யமாக வெளியேற்றப்படுவார்கள் என பாகிஸ்தான் அரசு அறிவித்தது.
கடந்த மாத தொடக்கத்தில் வெளியான இந்த அறிவிப்புக்கு பிறகு 1 லட்சத்து 30 ஆயிரம் ஆப்கானியர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளதாக டோர்காம் மற்றும் சாமன் எல்லைச்சாவடி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி
கோயம்புத்தூர் எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
ராகுல் காந்தி நடந்தாலும், ஓடினாலும் காங்கிரசை காப்பாற்ற முடியாது: வானதி சீனிவாசன்
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Vanathi Srinivasan | corona infection | பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி தேசியத் தலைவியும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசனுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தோற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதன், 1 நவம்பர், 2023
அமைச்சர் பொன்முடி ஆளுநரின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க தீர்மானம்
Minister Ponmudi: சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,"மதுரையில் நாளை (நவ. 2) நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவை துணைவேந்தர் என்ற முறையில் புறக்கணிப்பதாக முடிவு எடுத்து இருக்கிறேன்.
சங்கரய்யாவிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என அந்த பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றம் இரண்டுமே தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருந்தது.
சட்டத்தை மதிக்காத ஆளுநர் சங்கரய்யாவை பற்றி ஆளுநருக்கு தெரியவில்லை என்றாலும் யாரிடமாவது கேட்டிருக்க வேண்டும்.
நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து நிர்வாணப்படுத்தி தாக்குதல்
திருநெல்வேலி மாநகர் மணி மூர்த்தீஸ்வரர் பகுதியில் கடந்த 30ஆம் தேதி மாலை வேலையில் பகுதியைச் சேர்ந்த மனோஜ் மற்றும் மாரியப்பன் ஆகிய இரண்டு இளைஞர்களும் குளிக்க சென்றுள்ளனர்.
குளித்துவிட்டு வீடு திரும்பிய போது அப்பகுதியில் மது அருந்தி கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று இரண்டு இளைஞர்களையும் வழிமறித்து தாக்கியுள்ளது.
அத்தோடு அவர்களின் ஜாதியை கேட்டவுடன் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்று தெரிந்ததும் இரண்டு பேரையும் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கி உள்ளது.
கையில் வைத்திருந்த வால் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதுடன் இரண்டு பேரையும் நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்து இருக்கிறது.
இலங்கையில் நிர்மலா சீதாராமன் .. மலையகத்தின் “நாம் 200” நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்
hirunews.lk : “நாம் 200” நிகழ்வில் பங்கேற்கவுள்ளார் இந்திய நிதியமைச்சர்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இலங்கை வந்துள்ளார்.
அவரை, வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இதன்போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டதாக விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.
உடலுறவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவு குறைகிறதா? ஏன் அப்படி நடக்கிறது? நிபுணர்கள் சொல்லும் உண்மை!
உடலுறவு ஏன் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது என்பதை இப்போது கண்டுபிடிப்போம்.
Do Blood Sugar level goes down after having sex what experts say about this factor ans
உடலுறவு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இது ஆச்சரியமாகத் தெரிந்தாலும், இது உண்மைதான் என்கின்றனர் நிபுணர்கள். உடலுறவு இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன,
மேலும் இது நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இப்போது உடலுறவு இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பார்ப்போம்.
மகாராஷ்டிராவின் கடைசி பத்மினி டாக்சி .. Mumbai’s iconic ‘kaali peeli’ taxis to go off roads after almost 6 decades
1960களில் இருந்து அங்கு பிரிமியர் ஆட்டோமொபைல் லிமிடெட் (PAL) நிறுவனத்தின் "பிரிமியர் பத்மினி" (Premier Padmini) டாக்சிகள் மிகவும் பிரபலம்.
கருப்பு-மஞ்சள் என இரு நிறங்கள் மட்டுமே தீட்டப்பட்டதால் காலி-பீலி என மக்களிடையே பிரபலமடைந்த இந்த வாடகை கார்களின் ஓட்டுனர்கள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெற்றுக் கொண்டு மிக சரியாகவும், பாதுகாப்பாகவும் பயணிகளை கொண்டு சேர்ப்பதில் பெருமை பெற்றவர்கள். இதனால் மும்பைவாசிகள் மட்டுமல்லாது பிற மாநிலத்தில் இருந்து அங்கு வருபவர்களுக்கும் எளிதான போக்குவரத்தாக காலி-பீலி அமைந்தது.
செவ்வாய், 31 அக்டோபர், 2023
கட்டாரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள்!
Vimalaadhithan Mani : கட்டாரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உளவாளிகளா?
இந்தியாவின் கௌரவத்திற்கு உரியவர்களா?
அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்று செல்பவர்கள் இப்படி உடல் உழைப்பில் ஈடுபடுவது இரண்டாம் பட்சமானது. இவர்களின் வேறு சில தகுதி, திறமைக்காகவே வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் தனது நாட்டு கடற்படையின் நீர்மூழ்கி ரகசியங்களை இஸ்ரேலுக்காக வேவு பார்த்ததாக 8 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
இவர்கள் அனைவரும் நம் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.
சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்!
2014 – 2018 காலகட்டத்தில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். அப்போது இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தில் ரூ.118 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் இதில் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பிருப்பதாகவும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இதுகுறித்து 2021-ஆம் ஆண்டு ஆந்திர மாநில சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் செப்டம்பர் 9-ஆம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
வாட்சப் யூனிவர்சிட்டியில் சங்க பரிவார கும்பல்
malaadhithan Mani : கண்மூடித்தனமான மதவெறி, ஜாதிவெறி பிடித்து சங்கபரிவாரங்களுக்கு கூஜா தூக்கி திரியும் சங்கி மூடர்களுக்கு வாட்சப் யூனிவர்சிட்டியில் சங்க பரிவார கும்பலால் வாந்தி எடுக்கப்படும் பொய் ,புரட்டுகளுக்கு அப்பால் உண்மையின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல்களை வாசிக்கும் அறிவு, உலக ஞானம், திராணி இருந்தால், கீழ்கண்ட புத்தகங்களை வாசித்து விட்டு அப்பாலே சண்டைக்கு வரவும் . வாட்சப் யூனிவர்சிட்டியில் சங்க பரிவார கும்பலால் எடுக்கப்படும் நாற்றமிகு வாந்தியை தின்று மறு வாந்தி எடுக்கும் ஈனச்செயலை நிறுத்திவிட்டு உண்மையை உரைக்கும் கீழ்கண்ட நூல்களை வாசிக்க ஆரம்பித்து விட்டாலே சங்கபரிவாரங்களுக்கு கண்மூடித்தனமாக காவடி தூக்கும் முட்டாள் கும்பல் வெகுவாக குறைந்து விடும்.
1. Demonetisation - A means to and end - By Ramgopal Agarwala
2. Quantum Leap in Wrong Direction and BJP Govt - By Rohit Azad, Shouvik Chakraborty, Srinivasan Ramani, Dipa Sinha
3. How Demonetization knocked india out - By Meera H Sanyal
4. How India’s Growth Story Devolved into Growth without a Story (2008 -2018) - By Puha Mehra
5. Modi Stole My Mask The Truth About India's Covid Crisis - By Amit Bagaria & Savio Rodrigues
ரஜினி புலம்புகிறார்.. விஜய் காமெடி செய்கிறார்.. சகட்டுமேனிக்கு விளாசிய ப்ளூ சட்டை மாறன்
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக ரஜினிக்கும் விஜய்க்கும்தான் போட்டி என்ற நிலையை இருதரப்பு ரசிகர்களுமே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
அதற்கு காரணம் ரஜினி கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கி கொண்டிருந்தார். குறிப்பாக அவரது நடிப்பில் வெளியான தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியடைந்து சொல்லிக்கொள்ளும்படி வசூலும் செய்யவில்லை.
கனடா விசா: தமிழக மாணவர்களுக்கு புதிய மாற்றங்களால் பாதிப்பா?
BBC News தமிழ் : மாணவர்களுக்கான விசா திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்த கனடா
மாணவர் விசாவில் வரும் மாணவர்களிடம் ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளைத் தடுக்க கனடா அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்பது இந்திய மாணவர்களின் கனவாக இருக்கிறது.
குறிப்பாக கனடாவில் கல்வி கற்க இந்திய மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பிக்கின்றன. இதற்கான முயற்சிகளில் ஈடுபடும்போது சில நேரங்களில் முகவர்கள் மூலம் மாணவர்கள் ஏமாற்றப்படுவதும் நடக்கிறது.
சமீபத்தில், போலி ஆவணங்களுடன் கனடா சென்ற இந்திய மாணவர்களை நாடு கடத்தும் அரசின் நடவடிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்தியாவைச் சேர்ந்த 700 மாணவர்கள் வரை இந்த மோசடியில் பாதிக்கப்பட்டனர்.
திங்கள், 30 அக்டோபர், 2023
பிரியங்கா காந்தி ; இந்தியாவின் முடிவிற்கு நான் வெட்கப்படுகிறேன்!
உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகள், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
இந்நிலையில், ஐ.நா. கூட்டமைப்பின் பொதுச்சபையில் (UNGA) நேற்று முன் தினம் ஜோர்டான், "காசாவில் நிலையான அமைதிக்கு வழிவகுக்க உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அனைத்து அத்தியாவசியமான தேவைகளும் தங்கு தடையற்று கிடைக்க வேண்டும்," என்றும் கோரிக்கை வைத்து ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தது.
ஞாயிறு, 29 அக்டோபர், 2023
கேரளா ஜெஹோவா வழிபாட்டு கட்டிடத்தில் குண்டு வைத்த டொமினிக் மார்ட்டின் ஒப்புதல் வாக்குமூலம்
கேரளா ஜெஹோவா சாட்சிகளின் வழிபாட்டு கட்டிடத்தில் குண்டு வைத்த டொமினிக் மார்ட்டின் என்பவரின் ஒப்புதல் வாக்குமூலம்
Mr. Domenic Martin, who has dropped Bomb in the Jehovah Witness convention center in Kerala is sharing the reasons behind the bombing!
Raj Dev : கேரளத்தில் குண்டு வெடித்துள்ளது கிறிஸ்தவ ஜெபக்கூடத்தில் அல்ல;
ஜெகோவா சாட்சிகள் ஜெபக்கூடம் ஒன்றில்.
ஆனால் ஊடகங்கள் அனைத்தும் கிறிஸ்தவ ஜெபக்கூடம் என்றே எழுதி வருகின்றன.
ஜெகோவா சாட்சிகள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைப்பதை விரும்பாதவர்கள்.
குண்டு வைத்ததாக சரணடைந்துள்ள டொமினிக் மார்ட்டின் ஒரு முன்னாள் ஜெகோவா சாட்சி.
குண்டு வைத்ததை விளக்கி அந்த நபர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் ஆபத்தான ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பேசியுள்ளான்.
ஜெகோவா சாட்சிகள் தேசிய கீதத்தை ஏற்காதவர்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டு உள்ளது.