Veera Kumar - Oneindia Tamil
ஸ்டாலின் செய்ய தவறியது இதுதான்!- வீடியோ
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக வாக்குகள் இரண்டாக பிரியும் என
நினைத்திருந்தபோதிலும், திமுகவால் 3வது இடத்திற்கே வர முடிந்தது.
கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா அரசுக்கு எதிராக தீவிர
எதிர்ப்பலை இருந்தபோதிலும், அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் திமுக வெற்றி
வாய்ப்பை இழந்தது.
இதற்கு முன்பாக நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் திமுக ஒரு சீட்டை கூட வெல்ல
முடியவில்லை. ஆனால் பாஜக கன்னியாகுமரியிலும், பாமக தருமபுரியிலும் வெற்றி
பெற்று திமுகவுக்கு கூடுதல் ஷாக்.
தகராறுகள் நடுவே அதிமுக
தகராறுகள் நடுவே அதிமுக
இது பரவாயில்லை. அப்போதாவது ஜெயலலிதா என்ற ஆளுமை திமுக தோல்விக்கு காரணமாக
இருந்தது. ஆனால் இப்போது அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் என பிரிந்து பிறகு
சேர்ந்து, தினகரன் தரப்பு ஒருபக்கம் தனி ஆவர்த்தனம் பாடி.. சொல்லும்போதே
மூச்சு முச்சு முட்டும் இத்தனை தகராறுகளுக்கு நடுவே நடந்த ஒரு இடைத்
தேர்தலில் திமுக 3வது இடத்திற்கு போயுள்ளது.