சனி, 13 அக்டோபர், 2018

தாலி அணியாத கிராமம் .. 1000 குடும்பங்கள் திருமணம் ஒப்பந்தம் மட்டும்

Isai Inban : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செக்கடி குப்பம் மற்றும் அதை
சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் தாலி அணிவதில்லை. பெரியாரின் திராவிட கொள்கையை வழிவழியாக இந்த கிராம மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார், மேல்மலையனூருக்கு வந்தபோது பெண்களின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார். சுயமரியாதை திருமணம் குறித்தும், பெண்களை தாலி அணியச்சொல்வது அவர்களை அடிமைப்படுத்தும் செயல் என்றும் உணர்ச்சி பொங்க பெரியார் பேசியது கிராமத்தினடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அன்றுமுதல் இன்றுவரைஇந்த கிராமத்தில் சுயமரியாதை திருமணம் நடைபெற்று வருகிறது. திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவது இல்லை. சாதி பாகுபாடு பார்ப்பதில்லை. மணப்பெண்ணுக்கு தாலி அணிவிப்பது இல்லை. மேலும் திருமணத்தின்போது திருமணம் ஒப்பந்தம் மட்டும் செய்து கொள்கின்றனர்.

டெல்லி வங்கி காசாளரைக் கொன்று 3லட்சம் கொள்ளை! CCTV விடியோ


CCTV footage of a corporation bank being robbed in Delhi's Khaira yesterday by armed assailants. Cashier was shot dead. Investigation underway.
NDTV : மேற்கு டெல்லியில் உள்ள சாவ்லா நகரில் இருக்கும் கார்பரேஷன் வங்கியில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. New Delhi: புதுடெல்லி: நேற்று ஆயுதம் ஏந்திய ஆறு முகமூடி கொள்ளையர்கள் டெல்லியில் உள்ள வங்கியில் காசாளரைக் கொன்று ரூ.3 லட்சத்தை கொள்ளையைடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் வங்கியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 90 நொடிகள் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சியில், வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வங்கி காவலரை தாக்கி அவரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கி காசளரை சுட்டுவிட்டு பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம், மேற்கு டெல்லியில் உள்ள சாவ்லா நகரில் இருக்கும் கார்பரேஷன் வங்கியில் நிகழ்ந்துள்ளது.
; இதுகுறித்து போலீசார் கூறுகையில், கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில், 16 பொது மக்களையும், 6 வங்கி ஊழியர்களையும் பிடித்து வைத்திருந்தனர். கொள்ளையர்கள் முதலில் காசாளர் சந்தோஷிடமிருந்து பணத்தை பறித்து செல்லவே முற்பட்டனர். அவர் தடுத்ததும் துப்பாக்கியால் சுடப்பட்டார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சந்தோஷ் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

வண்டலூரில் பார்வையற்ற இளம்பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை

வெப்துனியா :சென்னைக்கு அடுத்துள்ள வண்டலூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் கற்பழித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வண்டலூர் ரயில் நிலையம் பகுதியில் வசித்து வந்தவர் விஜயலட்சுமி(25). இவர் அந்த பகுதியில் குப்பை தொட்டிகளில் உள்ள பொருட்களை சேகரித்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.
ந்நிலையில், நேற்று காலை வண்டலூர் மேம்பாலத்தின் கீழ் விஜயலட்சுமி ஆடை இல்லாமல் உயிருக்கு போராட்டிக்கொண்டிருந்தார்.  இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் மரணமடைந்தார்.
முதல் கட்ட விசாரணையில் அவரது பிறப்புறுப்பில் இரும்பு கம்பியால் யாரோ குத்தியுள்ளனர்.எனவே, மர்ம நபர்கள் அவரை கற்பழித்துவிட்டு கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜயலட்சுமிக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், அவரது கணவருடன் அவர் சாலையில் தூங்கியபோது, மதுபோதையில் வந்த ஒருவர் கத்தியை காட்டி அவரை இழுத்து சென்று கற்பழித்து கொலை செய்து விட்டதாகவும் செய்திகள் பரவி வருகிறது.

நெடுஞ்சாலை துறையில் 4500 கோடிக்கும் மேல் ஊழல் செய்த எடப்பாடி பழனிச்சாமி .. கலங்கரை விளக்கம்


Savukku · : தமிழ்நாடு இன்று அவலமானதொரு சூழலில் இருக்கிறது.   இது  போன்ற சூழல் தமிழகத்துக்கு என்றுமே நேர்ந்தது கிடையாது. ஊழலும், கொள்ளையும் எல்லா காலங்களிலும் நடந்துதான் வந்தது என்றாலும், இது போன்ற முடைநாற்றமெடுக்கும் ஊழலும், அலங்கோலமும் எப்போதும் இருந்தது கிடையாது.  எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று தமிழகத்தை ஆண்டவர்களில் ஊழல் செய்யாதவர்களே கிடையாது.
ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் நடக்கும் ஆட்சியில் நடைபெறுவது போன்ற கொள்ளை  எப்போதும் நடைபெற்றது இல்லை.   ஒவ்வொரு அமைச்சரும், எம்எல்ஏவும், அதிகாரிகளும் கட்டற்ற முறையில் ஊழல் புரிகிறார்கள்.  தங்கு தடையின்றி ஊழல் செய்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கோ சீர்கெட்டுப் போய் இருக்கிறது.  நாட்டில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுப்போரை, குண்டர் சட்டத்தில் அடைக்கிறது அரசு.   ஒரு மாசுபடுத்தும் தொழிற்சாலைக்கு எதிராக போராடினால், துப்பாக்கிச் சூடு நடத்தி சொந்த மக்களையே கொலை செய்கிறது இந்த அரசு.

சிவசேனா : சபரிமலைக்கு பெண்கள் வந்தால் தற்கொலை செய்வோம்! ..செய்யுங்கோ செய்யுங்கோ .


தற்கொலை செய்வோம்: சிவசேனா!மின்னம்பலம் : சபரிமலை ஆலயத்திற்குள் இளம் பெண்கள் நுழைந்தால், தங்கள் கட்சியைச் சேர்ந்த பெண்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்று சிவ சேனா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பும், ஆதரவும் சம அளவில் இருந்து வருகிறது. பெண்களை அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள போதிலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை தசரா முடிந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நவம்பர் 16ஆம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. அன்று முதல் 42 நாட்கள் வரை, அங்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்.

ஆந்திராவில் தமிழக காவலர் நீலமேக அமரன் கொலை!

ஆந்திராவில் தமிழகக் காவலர் கொலை!மின்னம்பலம் : தமிழக ஆயுதப்படைப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த நீலமேக அமரன் விசாகப்பட்டினத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நீலமேக அமரன். இவர், ஆயுதப்படைத் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இன்று (அக்டோபர் 13), ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நக்கப்பள்ளி மண்டலம் வேம்பள்ளி சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தார் நீலமேக அமரன். அப்போது, அங்கு காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பலொன்று நீலமேக அமரனைச் சாலையில் ஓட ஓட விரட்டி சென்று கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்தது.

BBC : ரிலையன்சிடம் ரபேல் .. இந்துஸ்தான் நிறுவனத்தில் 3000 பேர் வேலை இழக்கிறார்கள்?

இந்திய பாதுகாப்பு அமைச்சராக ஒரு சொர்ணக்கா

ரஃபேல் ஒப்பந்தத்தை, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு
வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதையடுத்து, பொதுத்துறை
நிறுவனமான இந்துஸ்தான் ஏரனோட்டிக்ஸ் (HAL) நிறுவனத்தில் சுமார் 3000 பேர் வேலை இழக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் உள்ள விமானியவியல் நிறுவனத்தில் எத்தனை பேர் தங்கள் வேலையை தொடர்கிறார்கள் என்பதை பொருத்தும், தொழிற்சங்க தலைவர்களை பொருத்தும், எத்தனை பேர் வேலை இழப்பார்கள் என்று தெரியவரும்.
"இந்துஸ்தான் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் கிடைத்தால், ரஃபேல் திட்டத்திற்கு 3,000 ஊழியர்கள் ஈடுபடுவார்கள். ஆனால் இது மூடப்படாது" என்கிறார் பிபிசி இந்தியிடம் பேசிய அந்நிறுவன தொழிற்சங்கத்தின் முன்னாள் பொது செயலாளர் மற்றும் முன்னாள் ஊழியரான அனந்த பத்மனாபா.

வைகோ :சிபிஐ விசாரணைக்குள்ளான பழனிசாமிக்கு முதல்வர் பொறுப்பில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை... திமுக கேவியட் மனு தாக்கல் ..




tamilthehindu : தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஊழல் குற்றச்சாட்டை, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளதை மதிமுக சார்பில் வரவேற்கிறேன்.
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் நடந்த ஒப்பந்தப் பணிகள் ஒதுக்கீட்டு ஊழல் குறித்து திமுக தொடர்ந்த வழக்கில் விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலைத்துறையும், லஞ்ச ஒழிப்புத் துறையும் முதல்வருக்கு நற்சான்று அளித்ததை ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த ஜூலை 16 மற்றும் 17 தேதிகளில் வருமான வரித்துறையினர் தமிழக நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் நாகராஜன், செய்யாதுரை ஆகியோர்கள் தொடர்புடைய எஸ்பிகே ஸ்பின்னர்ஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்பிகே ஹோட்டல்ஸ், எஸ்பிகே அண்ட் கோ எக்ஸ்பிரஸ்வே பிரைவேட் லிமிடெட், ஸ்ரீபாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றில் சோதனைகள் நடத்தினர்.

மலேசியா இடைத்தேர்தலில் அன்வர் இப்ராஹிம் வெற்றி - விரைவில் பிரதமராக பதவி ஏற்கிறார்

மலேசியா இடைத்தேர்தலில் அன்வர் இப்ராஹிம் வெற்றி - விரைவில் பிரதமராக பதவி ஏற்கிறார்மாலைமலர் :மலேசியாவின் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் 71 சதவீதம் வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர்:
மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஜாக் மீது அவரது ஆட்சிக்காலத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான மஹதிர் முஹம்மது வலியுறுத்தி வந்தார்.
 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நஜிப் ரஜாக் மீதான மக்களின் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக மாற்றி விடலாம் என முன்னர் 22 ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்த மஹதிர் முஹம்மது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி தீர்மானித்தது.

கமலஹாசனுக்கு மாரி செல்வராஜ் சாட்டை அடி .. வாழ்க உங்கள் ஆரிய ஜனநாயகம் .. தேவர் அருவாளை தூக்கி பிடியுங்க


நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு..........
........... இன்னும் சேரி என்ற சொல்லும் வாழ்வும்
உங்கள் நாட்டில் இருப்பதால் சேரிப்பையன்
- மாரிசெல்வராஜ்: நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு
ஒரு சேரிப்பையனின் பகிரங்க கடிதம்:
வணக்கம் எனக்கு எட்டு வயசாகும்போது என் கண்முன்னே எங்கள் வீடு எரிந்துகொண்டிருந்த நடு இராத்திரி ஒன்றில் எழுத நினைத்த கடிதம் .வெகு காலதாமதம் ஆகிவிட்டது இந்த இருக்கையும் கணிப்பொறியும் எனக்கு கிடைப்பதற்கு .
தேவர்மகனில் தொடங்கி உன்னைபோல் ஒருவன் வரை பார்த்தாகிவிட்டது உங்கள் பூனூல் முற்போக்குதனத்தையும் அதிகார அறிவின் அட்டகாசத்தையும் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க நான் ஒன்றும் என் அப்பன் செல்வராஜோ என் தாத்தன் நொண்டிபெருமாளோ இல்லை மூன்றாம் தலைமுறை நான்…
சமீபத்தில் நண்பர் ஒருவர் மூலம் இணையதளத்தில் சண்டியர்க்கு ஆதரவாக நீங்கள் போதையில் ஆற்றிய முற்போக்கு உரையை பார்த்தேன் சரி அதற்கு அப்புறம் வருவோம். முதலில்

சின்மயி போன்றவர்களின் ஆள்சேர்க்கும் பின்னணி அம்பலம்! மற்றுமொரு ஆர் எஸ் எஸ் சதி


Shivakumar.TD : சின்மயி போன்ற நம்பகத்தன்மை இல்லாத பெண்களால் முன்னெடுக்கப்படும்
அவருடைய தலைமையின் கீழ் ஒன்று திரட்டப்படும் #Metoo இயக்கத்தால் சமூகத்தில் அடித்தட்டு பெண்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்த நன்மையும் விளையாது
உதாரணம் : ஆளுநர் நிர்மலா தேவி மூலம் பாதிக்கப்பட்டஅருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகள் அவர்களுக்காக இவர் ஏன் குரல் எழுப்ப வில்லை?
தேனி ராகவி என்ற பனிரெண்டு வயது பெண் பாலியல் வன்முறையால் கொலை செய்ய பட்டாள் அப்போது சின்மயி எங்கே இருந்தார்?
மேலும் சமூகத்தில் பின்தங்கிய இனத்தைச் சேர்ந்த எத்தனையோ பெண்கள் இத்தகைய துன்பங்களை அனுபவிக்கிறார்கள் அவர்களுக்காக எல்லாம் போராடினாரா ?
தங்கள் துறை சேர்ந்த பெண்ணின் (சுருதி லீக்ஸ்) குற்றச்சாட்டையே மறுத்து அவருக்கு பைத்தியம் என்று பட்டம் சூட்டிய கல் நெஞ்சம் கொண்டவர்,
உயர்குடியில் இருந்து கொண்டே காலங்காலமாக இன ரீதியாக/சாதி ரீதியாக பாலியல் ரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்காக பெண்களுக்காக எந்த குரலும் எழுப்பாமல்,
தங்கள் பிரச்சினைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கொள்வதோடு அதற்கு எளிய மக்களை துணைக்கு அழைத்துக் கொண்டு சுயநலத்திற்கு ஆள் சேர்ப்பவர்கள்  சின்மயி போன்றவர்கள்,

தேவர் ஜாதி ஒட்டு வங்கியை குறிவைக்கும் கமலஹாசன் .. தேவர் மகன் 2 படப்பிடிப்பு விரைவில்

வெப்துனியா :கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'விஸ்வரூபம் 2' திரைப்படம் பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும், வசூல் அளவில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் 'இந்தியன் 2' படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இன்று சேலத்தில் நடந்த கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் 'தேவர் மகன் 2' படத்தை அதிகாரபூர்வமாக கமல்ஹாசன் அறிவித்தார். 'இந்தியன் 2' படம் முடிந்த பின்னர் 'தேவர் மகன் 2' படத்தை அவர் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்
ஏற்கனவே கமல்ஹாசன் நடித்து இயக்கி வரும் 'சபாஷ் நாயுடு' திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக முடிவுக்கு வராமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 'சபாஷ் நாயுடு', 'இந்தியன் 2' ஆகிய படங்களை முடித்துவிட்டு 'தேவர் மகன் 2' படத்தை கமல்ஹாசன் வரும் 2020ஆம் ஆண்டுதான் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.<

மும்பை மொரிசியஸ் வங்கியில் சைபர் கொள்ளை 143 கோடி ரூபாய் சர்வரை முடக்கி ..

தினமலர் :மும்பை : மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள, 'ஸ்டேட் பேங்க் ஆப் மொரீஷியஸ்' வங்கியின் பிரதான, 'சர்வரை' முடக்கி, 143 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மொரீஷியஸ் நாட்டு வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து, 'ஸ்டேட் பேங்க் ஆப் மொரீஷியஸ்' என்ற பெயரில் இயங்குகிறது. மும்பையில் உள்ள, ஸ்டேட் பேங்க் ஆப் மொரீஷியஸ் வங்கியின் கிளையில், இணையம் மூலம், 143 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக, மும்பை பொருளாதார குற்றப் பிரிவில், புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதிமுக, திமுக.வை தமிழக அரசியலில் இருந்து அகற்றுவோம் - கமல்ஹாசன்

அதிமுக, திமுக.வை தமிழக அரசியலில் இருந்து அகற்றுவோம் - கமல்ஹாசன்maalaimalar : தமிழக அரசியலில் இருந்து, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை அகற்றுவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 சேலம் : ; மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்களுடனான பயணம் என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாற்றி வருகிறார். கன்னியாகுமாரி, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
மேலும், கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து உரையாற்றி வருகிறார்.
இதில் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கமல்ஹாசன் பேசுகையில், ‘மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது.

சு.சாமி உச்ச நீதிமன்றத்தில் மனு :ஐயப்பன் கோயில் தேவசம் ஆணையத்தை கலைக்கவேண்டும்

tamil.news18.com :சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் தேவசம்
போர்டை கலைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.< சபரிமலை ஐயப்பன் கோவிலில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சமீபத்தில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும் அதே சமயத்தில் எதிர்ப்பும் ஒருசேர கிளம்பியது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என கேரள அரசும், கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டும் கூறின.
தீர்ப்புக்கு எதிராக கேரளா மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டை கலைக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி மற்றும் டிஜி மோகன் தாஸ் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனுவை தாக்கல் செய்தனர்.

பரிதி இளம் வழுதி காலமானார்... திமுகவில் முன்னாள் அமைச்சர் .. ஆறு முறை எம் எல் ஏவாக இருந்தவர் பின்பு அதிமுகவில் சேர்ந்தார்

மாஜி அமைச்சர் பரிதி இளம் வழுதி காலமானார்விகடன் :முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். 58 வயதான அவர் ஆறு முறை தமிழக சட்ட மன்ற உறுப்பினராக இருந்த பெருமைக்குரியவர். 2006 11ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்தவர். அதற்கு முன்னதாக 1996 - 2001 காலகட்டத்தில் தமிழக சட்டப்பேரவையில் துணை சபாநாயகராகப் பதவி வகித்தார். பின்னாளில் 2013ம் ஆண்டு திமுகவில் இருந்த விலகிய அவர், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

கே.டானியல் .. தமிழின் தலித் இலக்கிய முன்னோடி

keetru.com : கே.டானியல் மார்க்சியக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட
மகத்தான மனிதன்; கம்யூனிச இயக்கத்தின் நீண்டகால தொண்டன்; தாழ்த்தப்பட்ட மக்களின் தன்னிகரில்லாத் தலைவன்; அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் சஞ்சலங்களையும், வெஞ்சமரையும் சித்தரித்த சிறப்பானதோர் இலக்கியவாதி! களம் பல கண்ட புரட்சிப் போராளி; அவரது வாழ்க்கை ஒரு போராட்ட வாழ்க்கை; பாட்டாளி வர்க்க இலட்சியத்தின் வெற்றிக்குத் தன்னை அர்ப்பணித்த வாழ்க்கை; மக்களின் நல்வாழ்வுக்காக அவர் தன்னையே எரித்துக் கொண்டு அரசியல், சமூக, இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார். கே.டானியல் தாழ்த்தப்பட்ட மக்களின் சுகதுக்கங்கள், போராட்டங்களின் வெற்றி, தோல்விகள் ஆகியவற்றையே தமது இலக்கியப் படைப்புக்களின் கருப்பொருளாகக் கொண்டார். மக்கள் பல்கலைக்கழகத்தில் கற்றுப் பயிற்சி பெற்ற எழுத்தாளர். ‘மக்களிடமிருந்து மக்களுக்கு மக்கள் மொழியில் ’ என்பதைத் தாரகமாகக் கொண்டவர்.
மக்களுக்கு வழிகாட்டும் போராட்ட இலக்கியங்களைப் படைக்க வேண்டும்; இலக்கியம் பாட்டாளி வர்க்க அரசியலுக்கு சேவை செய்ய வேண்டும். இந்த வழியில் நெறி பிறழாது நின்று பல சிறுகதைகளையும், குறுநாவல்களையும், நாடகங்ளையும், நாவல்களையும் எழுதியுள்ளார் என ‘மக்கள் எழுத்தாளர்’ கே.டானியலை விமர்சகர் வட்டுக்கோட்டை வீ. சின்னத்தம்பி புகழ்ந்துரைத்துள்ளார்.

தாத்தாவின் .. அரண்மனை ஊழியர்கள் கிசு கிசு .. ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு தாத்தாவும்

keetru.com : நாம் எப்போதும் தாத்தாக்களை தாத்தாக்களாகவே நினைத்துக்
கொண்டிருக்கின்றோம். ஆனால் எல்லா தாத்தாக்களும் எப்போதும் தாத்தாக்களாக இருப்பதில்லை. அவர்களில் சிலர் சில நேரம் தாதாக்களாகவும் இருக்கின்றார்கள். தாதாக்கள் என்றால் சாதாரண தாதாக்கள் கிடையாது, அவர்கள் காமசூத்திராவையும், செளந்தர்ய லகிரியையும் வரிக்கு வரி தங்கள் முன்னோர்களைப் போலவே வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த விரும்பும் லட்சியவாத தாதா தாத்தாக்கள். அவர்கள் அவ்வாறு இருப்பது ஒன்றும் வியப்பில்லை. ஏனெனில் தாத்தாவின் தாத்தாவும், அவரது தாத்தாவும் அப்படித்தான் இருந்தார்கள். ஏன் இந்த தாதா தாத்தாக்கள் அப்படி இருந்தர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? தாதா தாத்தாக்கள் எப்பொழுதும் உழைத்து சோறு தின்ன விரும்பாதவர்கள். அதனால் உண்டு கொழுத்துப் போய் தினவெடுத்த தனது உடலை ஊர்மேய்வதற்காகவே வரலாற்றில் கடவுளின் பெயரால் அர்ப்பணித்தவர்கள். அவர்கள் உழைத்ததாக ஏதேனும் சில குறிப்புகள் ஆங்காங்கே இருந்தாலும் அதுவும் காட்டிக் கொடுத்ததும், கூட்டிக் கொடுத்ததுமாகவே இருக்கின்றது. அதனால்தான் இப்படிப்பட்ட அரிய சேவையாற்றிய இந்த தாதா தாத்தாக்களை அதிகார வர்க்கம் தங்கள் பக்கத்திலேயே எப்போதும் வைத்துக் கொண்டது.

சிறுநீர்த் தொற்றை சரி செய்த ஒரு பழக்க மாற்றம் !

பல நோய்களுக்கு காரணமாக இருப்பது பழக்க வழக்கம்தான், ஒரு சிறு பழக்கத்தை மாற்றியதன் மூலம் எப்படி சிறுநீர்த் தொற்று சரியானது என கூறுகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
vinavu.com: கிளினிக்கில் ஐம்பதுகளில் ஒரு பெண்மணி, தனக்கு சிறுநீர்ப்பாதை கிருமித்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் சிறுநீர்ப்பாதை எரிச்சல்,  அடிக்கடி வருவது குறித்து என்னை சந்தித்தார்.
மாதம் ஒரு முறை மீண்டும் மீண்டும் சிறுநீர்த்தொற்று ஏற்பட்டுக்கொண்டிருக்கவே, அவரது சிறுநீர் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிறுநீரில் சராசரியாக இருக்க வேண்டிய கிருமி தாக்கிய செல்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிக கிருமி பிடிகொண்ட செல்கள் இருந்தன.

விமானம் சுவரை இடித்ததை தெரியாமலேயே ஓட்டிய விமானி : திருச்சி விபத்து


tamilthehindu :புதுடெல்லி ; திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் , சுற்றுச்சுவர் மற்றும் டவரில் உரசிச் சென்ற விபத்து குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம் சுவரை இடித்துச் சென்றது விமானிக்கு தெரியாத நிலையில் பின்னர் அவருக்கு தகவல் தரப்பட்டுள்ளது. ஆனால் விமானம் சமூகமாக சென்று கொண்டிருப்பதாக அவர் தகவல் அளித்துள்ளார். இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து மும்பை வழியாக துபாய்க்கு 136 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இன்று அதிகாலை புறப்பட்டது. புறப்பட்ட உடனேயே, விமானம் தொழில்நுட்பகோளாறு காரணமாக குறைந்த உயரத்தில் பறந்தது. இதனால் விமானத்தின் சக்கரங்கள் 5 அடி உயர சுற்றுச்சுவர் மற்றும் அருகே இருந்த வான் கட்டுப்பாட்டு கோபுரத்திலும் விமானம் உரசி சென்றது.
விமானத்தில் பயணித்த 136 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அந்த விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் அங்கு விமானம் சோதனை செய்யப்பட்டது. சுவரில் உரசியதால் விமானத்தின் பின் பகுதியில் சிராய்ப்பு மற்றும் சேதம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் துபாய் செல்ல வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கங்கையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சதானந்த்தின் மறைவு ..111 நாட்கள் உண்ணாவிரதம் .


Savithri Kannan : பறி கொடுத்துவிட்டோம் சுற்றுச் சூழல் போராளி ஜி டி அகர்வால் எனப்படும்  சுவாமி கியான் ஸ்வரூப் சதானனந்த் அவர்களை!
இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாகத் திகழும்
இயற்கை அன்னையான கங்கை நதி மிக மோசமாக மாசுபடுவதை தடுக்க வலியுறுத்தியும்,குறிப்பாக கங்கை படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடக் கோரி போராடிய, சதானந்த்தின் 111 நாட்கள் உண்ணாவிரதம் அவரது மரணத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.
நேற்று முன் தினம் வரை தண்ணீரும்,சிறிதளவு தேனும் மட்டுமே உட்கொண்டுவந்த சுவாமி சதானந்த்,’’பல முறை பிரதமருக்கும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கும் நினைவூட்டல் கடிதம் எழுதியும் சிறிதளவு கூட ரெஸ்பான்ஸ் இல்லை.ஆகவே இனி எதையும் உட்கொள்ளமாட்டேன்.என் மரணத்திற்கு பின் இளைய தலைமுறை இந்த போராட்டத்தை நிச்சயம் கையில் எடுப்பார்கள்’’ என அறிவித்தார்!
அப்போதும் அதிகார மையம் அசைந்து கொடுக்காத நிலையில் தான் அவர் உயிர் துறக்க நேரிட்டுள்ளது.
2009 ல் இவர் இதே போல் உண்ணவிரதம் இருந்த போது, 38 வது நாளில், மன்மோகன் சிங்,பகிராதி நதியில் கட்டவுள்ள அணைதிட்டத்தை வாபஸ் பெற்றார் என்பது கவனத்திற்குரியது.

கமலஹாசனின் கொள்கை: திமுக ஒழியணும் .. . இட ஒதுக்கீடு ஒழியணும்... நீட் நல்லது ..

Steephanraj Thirungannam : இலக்கற்ற பயணம் மாலுமி இல்லாத கப்பல் !
21 feb 2018 கட்சி தொடங்கி ஏறத்தாழ 8 மாதங்கள் ஆகிவிட்டன, இன்னும் இந்த மனிதரால் இது தான் கொள்கை என்று மருந்துக்கேனும் எதையாவது காட்ட முடிந்ததா ? கொள்கைக்கு தலைவன் தேவை, கொள்கையே இல்லாமல் தலைவன் எதற்கு ?
கட்சி தொடங்கும் முன்பே கொள்கையை பற்றி சிந்திக்காத மனிதனை தலைவனாக ஏற்பதே அவமானம், அதிலும் கட்சி தொடங்கி மாமாங்கம் ஆன பின்பும் கொள்கையை கூட முடிவு செய்யமுடியாத ஆள் இந்த சமூகத்திற்காக வேறு என்ன கழட்டி விட போகிறார் ?
இது போன்ற தனி மனிதர்களை நம்பி இயங்கும் கட்சிகள் இறுதியாக சர்வாதிகாரத்தை நோக்கியே செல்லும். ஒரு கொள்கையை அடித்தளமாக கொண்டு இயங்கும் கட்சிகளில் சேரும் தொண்டர்களுக்கு பின்பற்றவென கொள்கைகள் இருக்கும் , அதன் வழி நடப்பதும் அந்த லட்சிய கொள்கைகளை நிறைவேற்றுவதும் அந்த தொண்டனின் கடமையாகும், அப்படி இயங்கும் ஆட்களே வழி தவறும் மனித இயல்பு இருக்கும் நிலையில், இது போன்ற தனி மனித பிம்பத்தில் இயங்கும் இயக்கங்களின் தொண்டர்கள் எதை பார்த்து செருகின்றனர் என்பதே கேள்வி குறி இதனுடன் மனித இயல்புகளும் சேர்ந்தால் ? நிலைமை மேலும் மோசம் தான் ஆகும் !

வெள்ளி, 12 அக்டோபர், 2018

மூவாலூர் ராமாமிர்தம் அம்மையாரே தேவதாசி ஒழிப்பில் முன்னின்றார் முத்துலட்சுமி ரெட்டியை அதற்கு பெரியார் பயன்படுத்தினர்

டாக்டர். முத்து லட்சுமி ரெட்டி அவர்களின் தாய் தேவதாசி குலத்தில்
பிறந்தவர். தந்தை பார்ப்பனர். அவர் கல்வி கற்று இந்தியாவில் முதல் பெண் மருத்துவர் மற்றும் முதல் சட்ட மன்ற உறுப்பினர் என்று நியமனம் செய்யப் படும் வரை அவர் ஒரு பார்ப்பனப் பெண்ணாக வளர்க்கப்பட்டு, பார்ப்பன உள நிலையிலேயே வளர்ந்தார். அவருக்கு பார்ப்பனியத்துக்கான உயர் சாதிய எண்ணம் மற்றும் இந்திய தேசிய சித்தாந்தம் ஆகியவற்றில் ஈர்ப்பு அதிகம். 1926 இல் அவர் ச. ம. உ. நியமிக்கப் பட்ட பொழுது, பெண்களுகளுக்கு சட்டமன்ற உருப்பினராகும் தகுதி கிடையாது என்று இருந்த விதியை 1924 இல் மாற்றியமைத்து பெண்களுக்கு முழு உறிமை உண்டு என்று சட்டம் இயற்றி, முத்துலட்சுமி ரெட்டி ச. ம. உ. ஆக வழிவகுத்த நீதிக்கட்சியினருடன் மல்லுக் கட்டினார். காரணம் அவர்கள் பார்ப்பனிய விரோதிகள் என்பதால். அதனால் நீதிக் கட்சிக்கு எதிரணியில் செயலாற்றினார். இந்திய தேசியத்துக்காக முழு மூச்சுடன் வக்காலத்து வாங்கினார். இந்தக் காலக் கட்டத்தில் மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் தேவ தாசி ஒழிப்பிற்காக வீதியில் இரங்கி போராடிக் கொண்டிருந்தார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு அப்பொழுது தேவதாசி ஒழிப்பு பற்றி எந்தத் தாக்கமும் கிடையாது.மூவாலூர் அம்மையாருடன் எந்தத் தொடர்பும் கிடையாது. மறு தேர்தலில் நீதிக் கட்சி தோல்வியுற்றது. காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதில் பார்பனர்கள் பெரும்பான்மை பெற்றிருந்தனர். ஆனால் அது ஆட்சியமைக்க விரும்பவில்லை. சுப்புராமன் என்பவர் பொது முதல்வராக நியமிக்கப் பட்டார். மறுபடியும் முத்துலட்சுமி ரெட்டி ச. ம. உ. ஆக்கப் பட்டார்.
இப்பொழுது காங்கிரஸ் வெற்றி பெற்றதால் முத்துலட்சுமி ரெட்டிக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் காங்கிரஸில் உள்ள பார்ப்பனர்கள் முத்துலட்சுமி ரெட்டியை ஒரு பார்ப்பனராக அங்கிகறிக்க மறுத்தனர். மனமுடைந்த முத்து லட்சுமி ரெட்டிக்கு தேவதாசி பற்றிய சிந்தனை எழுந்தது.

சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும்.. மலையாள நடிகர் கொல்லம் துளசி நாயர் வெறி ...

வெப்துனியா :சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும் என பிரபல மலையாள நடிகர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அளித்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லம் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல மலையாள குணச்சித்திர நடிகரான கொல்லம் துளசி என்பவர், ‘சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும்'  என்று குறிப்பிட்டுள்ளார். வெட்டப்பட்ட உடலின் ஒரு துண்டை டெல்லிக்கும் மற்றொரு துண்டை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல் மந்திரியின் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என இவர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் இரண்டுமுறை கட்சி தாவிய பத்மினி ரெட்டி ...


ஒரே நாளில் இருமுறை கட்சித்தாவல்!மின்னம்பலம்: தெலங்கானாவில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த பெண், மாலையே மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
தெலங்கானா சட்டப்பேரவையை முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த மாதம் கலைத்தார். அம்மாநிலத்திற்கு டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரங்களும், எதிர் அணியின் முக்கியத் தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளிலும் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

எடப்பாடிக்கு எதிரான வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!

மின்னம்பலம் :தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை மீது கடுமையான
முதல்வருக்கு எதிரான வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!
விமர்சனங்களை வைத்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று, இன்று (அக்டோபர் 12) தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டு அரசியல் போக்கையே மாற்றி எழுதக் கூடிய தீர்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதலில் புகார், பின் வழக்கு
திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். அந்த புகாரில், தமிழகத்தின் பெரும்பாலான நெடுஞ்சாலைத்துறை கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகள், திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த திட்டங்களை முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி பி. சுப்பிரமணியம், உறவினர் நாகராஜன், செய்யாத்துரை, நண்பர் சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் வெங்கடாஜலபதி அண்ட் கோ, ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.பி.கே. அண்ட் கோ நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியுள்ளதாகக் கூறினார் ஆர்.எஸ்.பாரதி.

பொய் வழக்கு போட்ட சின்மயி... 5 ஆண்டுகளுக்கு முன் ஜெயா மூலம் செய்தியாளர்களை சிறைக்கு அனுப்பிய,,

Yuva Krishna : ஐந்து ஆண்டுகளுக்கு த வழக்கு இன்றுவரை கிணற்றில் போடப்பட்ட கல்தான். அப்பாவிகளின் வாழ்க்கை திசைமாறியது ஒன்றே அந்த வழக்கின் பலன். சின்மயி ட்விட்டரில் வெளிப்படுத்திய சாதிவெறியை எதிர்த்தவர்களே செக்ஸ் சீண்டல் செய்தவர்களாக ‘தினத்தந்தி’ செய்தியானார்கள். என்ன ஏதுவென்று விசாரிக்காமல் பிரபலங்கள் பலரும் Stand with Chinmayi என்று கூட்டுப்பஜனை செய்தார்கள். அவர்களில் ஒருவர் வைரமுத்துவின் மகனும்கூட. இப்போதைய நிலையில் தோழர் மதன் கார்க்கியின் மனநிலை எப்படியிருக்குமென்று தெரியவில்லை. எங்கள் நண்பர்கள் சிறையில் இருந்த அந்த இருண்டநாட்களை நாங்கள் இன்னும் மறக்கவில்லை. காவல்துறை நண்பர்கள் சிலர் சொன்னது, “புகார் கொடுத்த அந்தம்மா செலபிரிட்டி என்பதாலே, நிறைய மீடியா நியூஸ் ஆயிடிச்சிப்பா. சிஎம்மே கேட்குறாங்க. எங்களுக்கும் தெரியும் பொய்ப்புகார்னுதான். ஆனா அரெஸ்ட்டுன்னு கணக்கு காமிச்சே ஆவணும்”
முன்பு ‘செக்ஸ் சீண்டல்’ என்று
ஊடகங்களுக்கு செய்தி வழங்கப்பட்டு, பாடகி சின்மயி கொடுத்த பொய்ப்புகாரால் சில அப்பாவிகள் சிறை செல்ல நேர்ந்தது. அந் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பழைய பகை காரணமாக, ஆதாரம் எதுவும் காட்ட அவசியமின்றி பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகள் மூலம் இழிவுப்படுத்தலாம், ஒட்டுமொத்த சமூகத்தையும் அவரை அடிக்கவைக்கலாம் என்கிற பாசிஸ்டுத்தனமான நடவடிக்கைகளுக்கு லைசென்ஸ் கொடுத்திருக்கிறது

அருந்ததி ராய் :பொய்கள் வரலாறாக்கப்படும் காலம்

சவுக்கு : இந்தியாவில் வரலாற்று உண்மைகள் திரிக்கப்பட்டு, போலிச் செய்திகள் என்றொரு வடிவம் உருவாக்கப்படுவது பற்றிய தனது அச்சத்தைப் பகிர்ந்துகொண்டார் புக்கர் விருது பெற்ற எழுத்தாளரும் களச் செயல்பாட்டாளருமான அருந்ததி ராய். சுதந்திரம் பற்றிக் குறிப்பிட்ட அவர், தனது எழுத்துகளில் ஏற்பட்ட பல்வேறு தாக்கங்களை வெளிப்படுத்தினார். சிந்தனைக்கும் மொழிக்கும் ஊடான இடைவெளியை நிரப்புகிற விழைவாக எழுத்துச் செயல்பாட்டைப் பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
அருந்ததி ராய் புதிதாக எழுதிய The Ministry of Utmost Happiness என்ற நாவல் அண்மையில் வெளியாகியுள்ளது. இந்தத் தலைப்பைத் தழுவி ‘உச்சநிலை மகிழ்ச்சியும் உச்சநிலைத் துயரமும்: இன்றைய இந்தியாவின் நாட்குறிப்பு’ (Utmost Happiness and Utmost Sadness: Diary of India Nowadays) என்ற தலைப்பில் லண்டன் நகரில் அக்டோபர் 6 அன்று நடைபெற்ற ஒரு உரையரங்கில் பேசிய அவர், “நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிற காலகட்டத்தை, போலிச் செய்திகள் வரலாறாக்கப்படும் காலம் என்று சொல்லலாம். கல்வியும் வரலாறும் ஒருவகையில் இந்துமயமாக்கப்படுகிற,

சங்கர் மறைவு: பல ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கியவர்; ஸ்டாலின் இரங்கல்

tamilthehindu : சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் மறைவு கிராமங்களில் இருந்து அகில இந்திய தேர்வுகளை எழுத விரும்பிய ஏழை-எளிய மாணவர்களுக்கும் பேரிழப்பு என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக நினைக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்த சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் திடீரென்று மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கும், அவரை நம்பியிருந்த எண்ணற்ற இளைஞர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதாவின் மகள் அம்ருதாவின் DNA டி என் ஏ பரிசோதனைக்கு நீதிமன்றம் மறுப்பு .. வழக்கு ஊத்தி மூடப்பட்டது

விகடன் :அம்ருதாவின் உண்மையான பெயர் மஞ்சுளா. 2010-ல்தான் அம்ருதா
என்ற பெயர் மாற்றப்பட்டது. 2003-ம் ஆண்டு, போயஸ்கார்டனுக்கு மஞ்சுளா என்ற பெயரில் போன்கால் வந்தது. அதில், ஜெயலலிதா 242 செகண்டு பேசியுள்ளார்' என்று வாதிட்டார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், 'அது ராங்கால் என்று பதிலளித்தார். இடைமறித்த நீதிபதி, ராங் நம்பரில் ஏன் ஜெயலலிதா அவ்வளவு நேரம் பேசவேண்டும்' என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்துப் பரிசோதனை செய்யமுடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார். அதையடுத்து, அம்ருதா தரப்பில் 'ஜெயலலிதா, தீபா, சந்தியா ஆகியோருக்கு ஒரே ரத்தம்தான். அதனால், தீபா ரத்த மாதிரியைக் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார்.
வெப்துனியா :ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனை கோரி அம்ருதா தாக்கல் செய்த மனுவினை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் தன்னைப் பெற்ற தாய் என்பதை டி.என்.ஏ மாதிரி மூலம் உறுதிப்படுத்தி, அவரது உடலை மீண்டும் சடங்குகள் செய்ய தம்மிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை தமிழக அரசு தாக்கல் செய்தது.
 1980 ஆகஸ்ட் 14-ம் தேதி அம்ருதா பிறந்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அதே சமயத்தில் அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அதாவது 1980-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜெயலலிதா பங்கேற்ற சினிமா நிகழ்ச்சி வீடியோவில் அவர் கர்ப்பிணியாக இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது உறுதியாகி இருப்பதாக தமிழக அரசின் வழக்கறிஞர் வாதிட்டார்.

MeToo: பாத்திமா பாபுவை கோபப்படுத்திய மீம்ஸ்

வெப்துனியா"  MeToo என்னும் ஹேஸ்டேக் தற்போது இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒன்றாக உள்ளது. பாடகி சின்மயி, வைரமுத்து பற்றி அதிர்ச்சி செய்திகளை வெளியிட்டதில் இருந்து அடுத்தடுத்து பல நடிகைகள் இந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து கருத்து வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில், இணையத்தில் உலாவும் ஒரு மீம்மால் பாத்திமா பாபு மீம் கிரியேட்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த மீம் கூறுவது என்னவென்றால், #MeToo ஹேஷ்டேட்கை பயன்படுத்தி பாத்திமா பாபு ஒரு போஸ்ட் போட்டால், என்னவாகும் எனவும், எத்தனை ஆண்டுகள் கழித்து புகார் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள ரெடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதை கண்டு கடும் கோபமான பாத்திமா பாபு அந்த மீம்களை பகிர்ந்து எச்சரிக்கையும் விடுத்துள்ளார். பாத்திமா பாபு குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு,

மனுசங்கடா ,, யதார்த்தத்தைச் சிதைக்காத சித்திரிப்பின் வெற்றி.

அரவிந்தன்:மின்னம்பலம் : ;மனுசங்கடா படம் குறித்த பார்வை
தன் தந்தை இறந்த அடுத்த நாள் அவருக்குப் பால் ஊற்றுவதற்காக அவரைப் புதைத்த இடத்துக்குச் செல்லும் கோலப்பனால் தன் தந்தையைப் புதைத்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கைந்து இடங்களில் சடலத்தைப் புதைத்த தடம் காணப்படுவதால் அவனால் எந்தக் குழியில் தன் தந்தை மீளாத் துயிலில் ஆழ்ந்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
தந்தையைப் புதைத்த அடுத்த நாளே அவரைப் புதைத்த இடம் மகனுக்கு எப்படி அடையாளம் தெரியாமல் போகும்? கோலப்பனுக்கு அப்படித்தான் ஆயிற்று. காரணம், அவன் தந்தையைப் புதைத்தது அவன் அல்ல. தன் அப்பாவைப் புதைக்கும்போது அவனால் அருகில் இருக்கக்கூட முடியவில்லை.
கோலப்பன் ஏன் தன் அப்பாவின் உயிரற்ற உடலைப் புதைக்க முடியவில்லை என்பதற்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான யதார்த்தத்தின் கூர்மையான பதிவுதான் ‘மனுசங்கடா’. எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான அம்ஷன் குமார் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள இந்தப் படம், சமத்துவமற்ற நமது சமுதாயத்தின் அசிங்கமான முகத்தினைத் திரை விலக்கிக் காட்டுகிறது.

கர்நாடக மாயாவதி கட்சி அமைச்சர் மகேஷ் விலகல் .. பாஜகவுடன் ரகசிய உடன்பாடு?

கர்நாடக கல்வி அமைச்சர் திடீர் ராஜினாமா:  குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல்: தினமலர் :  பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி அரசின் கூட்டணி கட்சியில் பகுஜன் சமாஜ் கட்சி யைச் சேர்ந்த கல்வி அமைச்சர் மகேஷ் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடகவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங். கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக குமாரசாமி உள்ளார். இந்நிலையில் கூட்டணியில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த .மகேஷ் என்பவருக்கு கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் மகஷ் அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். சொந்த காரணங்களால் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக தனது கடிதத்தில் மகேஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த 4 மாதங்கள் தனக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக குமாரசாமிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த திடீர் ராஜினாமா குறித்து முதல்வர் குமாரசாமி கூறியது, ராஜினாமா முடிவுக்கு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். என்றார்.

தளபதி பட்டத்தை நடிகர் விஜய்க்கு தள்ளிவிட மாறன் பிறதேர்ஸ் உள்ளடி வேலை ? தமிழ்நாட்டுக்கு ஒரே ஒரு தளபதி ஸ்டாலின்தான் .. மதிமாறன் முழக்கம்

யார் தளபதி?
மின்னம்பலம் :அண்மையில் சென்னையில் நடந்த ‘சர்கார்’ பட ஆடியோ வெளியீட்டில் விஜய் மேடையேறும்போது தளபதி, தளபதி என்று தொடர்ந்து அழைக்கவைத்து மேடையேற்றினார்கள். அப்போதே இது திமுகவினருக்கு உறுத்தியது.
கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்யை முழுக்க முழுக்க தளபதி என்றே அழைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அதை ஒட்டியே புரமோஷன் வேலைகள் நடைபெறுவதையும் நாம் ஏற்கெனவே டிஜிட்டல் திண்ணை பகுதியில் எழுதியிருந்தோம்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் நடந்த கலைஞர் வீரவணக்க நிகழ்ச்சியில் பெரியாரியவாதி வே.மதிமாறன் பேசிய பேச்சும், அந்தப் பேச்சைப் பதிவு செய்து ஒளிபரப்பிய யூடியூப் சேனல்களில் இருந்து அந்த பேச்சின் வீடியோ அகற்றப்பட்டிருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல் வரிசையில் ஸ்டாலின், ஆ.ராசா, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் அமர்ந்திருக்கையில் அந்த மேடையில் பேசிய வே.மதிமாறன்,

“உலகத்தில் புரட்சித் தலைவர் என்றால் அது ஒரே புரட்சித் தலைவர் லெனின் தான். அதுபோல தமிழ்நாட்டில் தளபதி என்றால் ஒரே தளபதிதான். அது நம் ஸ்டாலின் அவர்கள்தான். இப்போது ஷூட்டிங்கல மிச்சம் இருக்கிற டயலாக்கை எல்லாம் மேடைக்கு எடுத்துட்டு வந்துடறாங்க.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை ,, குடும்ப பிரச்சனை ...

நக்கீரன் : சென்னை மயிலாப்பூரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
அண்ணாநகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் ஐஏஎஸ் பயிற்சி மையம் நடத்தி வந்தவர் சங்கர் சென்னை அண்ணா நகரில் பிரபல ஐ.ஏ.எஸ் போட்டி தேர்வு உட்பட பல போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி வழங்கும் பிரபல பயிற்சி நிறுவனமான சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வந்துள்ளன. குடும்ப பிரச்சனை காரணமாக சென்னை

Chelliah Muthusamy : சமூகநீதி பார்வைகொண்ட சங்கர் (Aankar Ias Academy) அவர்களின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இடஒதுக்கீட்டில் தற்போது நடக்கும் மோசடிகளையும் அடுத்த பத்தாண்டுகளில் நிலைமை என்னவாகப்போகிறது என்ற தொலைநோக்குடனும் இந்த உரையை சங்கர் ஆற்றி இரண்டாண்டுகள் ஆகிறது. இந்த அறிவியக்கவாதியின் இழப்பு திராவிடர் இயக்கத்துக்கு பேரிழப்பு. அவரின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்வோம். அவரது உள்ளக்கொதிப்பை நெஞ்சில் ஏந்துவோம்.

கங்கையில் 114 நாள் உண்ணாவிரதம் இருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மரணம்.. ஆக்கிரமிப்புகளை அகற்ற சுவாமி ஞானஸ்வரூப் சனந் உண்ணா விரதம்

Splco Media :கங்கை நதியின் குறுக்கே உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் 114 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த முன்னாள் ஐஐடி பேராசிரியரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான அகர்வால் (எ) சுவாமி ஞானஸ்வரூப் சனந்த் இன்று உயிரிழந்தார்.
ஐஐடியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவரான சுவாமி ஞானஸ்வரூப் சனந்த் கங்கை நதியை தூய்மைபடுத்த வேண்டும், நதியின் பாதையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மைத்ரி சதான் ஆசிரமத்தில் கடந்த 114 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருந்தார்.
நேற்று அவர் வலுக்கட்டாயமாக ஆசிரமத்தில் இருந்து தூக்கிவரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று பிற்பகலில் ஞானஸ்வரூப் சனந்த் உயிரிழந்தார்.

காமிரா.. நீங்களும் ஒரு ஒளிப்பதிவாளர்தான்! நவீன படப்படிப்பு கருவிகள் .. சில விளக்கங்கள்

ஹெரிட்டேஜர் தமிழ் மரபுசார் இதழ் : ஊர் சுற்றும் பயண விரும்பிகளுக்கும்,
புகைப்பட விரும்பிகளுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும், வலைதள வாசிகளுக்கும் நவீன ஸ்மார்ட் போன்களே தற்போது போதுமான ஒன்றாக உள்ளது.
இருப்பினும் அப்படங்கள் சிறிய அளவுகொண்ட ஸ்மார்ட் போன் திரைகளில் மட்டுமே பார்க்கச் சிறந்தது போலத் தோன்றும். அப்படங்களைப் பிரிண்ட்
எடுகத்தால், தேவையானப் பிக்ஸல் தகவல்கள் இல்லாமல் தரம்
குறைந்ததாகத் தெளிவற்று இருக்கும்.
அவ்வாறு எடுத்தப் புகைப்படங்களை மாத இதழ்கள், செய்தி நாளிதழ்களில் போன்றவற்றிக்கு அளிக்கும் போது அவர்களால் அதனைப் பயன்படுத்துவது இயலாதத் தரத்தில் இருக்கும்.
ஆனால் புகைப்படக் கருவிகளில், ஸ்மார்ட் போன்களில் உள்ள சென்சர்களை விடப் பெரிய சென்சர் உள்ளதால் அதிகத் தரத்தில் புகைப்படத்தை எடுக்கும் வல்லமைக் கொண்டது. மேலும் இப்புகைப்படக் கருவிகள் ஸ்மார்ட் போன்களை விட அதிக வருடங்கள் உழைக்கக் கூடியவை.

சின்மயி by Savukku · 23/10/2012 .. அன்று ஜெயலலிதாவின் உதவியோடு பொய்வழக்கு போட்ட கதை

savukkuonline.com : இன்று சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசாரால், தேசிய
ஆடை வடிவமைப்புக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் சரவணக்குமார் என்பவர், கைது செய்யப்பட்டுள்ளார்.  ராஜன்லீக்ஸ் என்ற பெயரில் இணையத்தில் எழுதிவரும் ராஜன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர்கள் இருவரைத் தவிர செந்தில்குமார்,  மந்திரமூர்த்தி, சரவணக்குமார், ராமநாதன் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.    பெண்கள் மீதான வன்கொடுமைச் சட்டப் பிரிவு 4, தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66 A மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு  செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மீது புகார் அளித்தவர், பிரபல பின்னணிப் பாடகி சின்மயி. சின்மயி புகார் அளித்ததற்கு காரணம், சின்மயியின் தாயாரைப் பற்றி அவதூறாக சில ட்விட்டுகள் இட்டிருந்தார்கள் என்பதே. இதைத் தவிரவும், புகாருக்கு ஆளானவர்கள், தமிழக மீனவர்கள் மற்றும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் தொடர்பாக ட்விட்டரில் நடந்த விவாதங்களின்போது சின்மயியோடு இணையத்திலேயே மோதல் ஏற்பட்டு சின்மயிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்பதும் புகாரில் உள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையிலேயே இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

வியாழன், 11 அக்டோபர், 2018

நக்கீரன் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

mdnakkheeran.in - jeeva : ஆளுநர் புகார் தொடர்பாக நக்கீரன் ஊழியர்கள் 35 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி குறித்து தொடர்ந்து நக்கீரன் பத்திரிகையில் செய்திக் கட்டுரைகள் வெளியாகின. இக்கட்டுரைகள் ஆளுநர் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியரை ஒருமணி நேர விசாரணைக்குப் பிறகு, அடையாறு சரக போலீஸார் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால கொலை முயற்சி சதி- விமலின் மனைவிக்கு தொடர்பு


ஜனாதிபதி கொலை சதி- விமலின் மனைவிக்கு தொடர்புவீரகேசரி :ஜனாதிபதி கொலை சதி-
விமலின் மனைவிக்கு தொடர்பு ஜனாதிபதி கொலை சதி முயற்சி தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்சவின் மளைவியை சிஐடியினர் விசாரணைக்குட்படுத்தவுள்ளனர்
 ஜனாதிபதி கொலை சதி முயற்சியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் சசி வீரவன்சவை சந்தித்துள்ளமை சிஐடியினரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியர் தான் விமல்வீரவன்சவின் வீட்டிற்கு சென்றதாக தெரிவித்துள்ளார் விமல்வீரவன்சவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்தே தான் அவரது வீட்டிற்கு சென்றதாகவும் அவ்வேளை விமல்வீரவன்சவின் மனைவியை சந்தித்து பேசியதாகவும் கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தவர்களின் உயிர்களிற்கு ஆபத்து உள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் தெரிவித்துள்ளார்.