சனி, 2 நவம்பர், 2024

கனடா அமைச்சர் அமித்ஷா மீது கொலை குற்றச்சாட்டு: கனடா தூதரிடம் கண்டனம் தெரிவித்த இந்தியா

 மாலை மலர்  : புதுடெல்லி கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.
இதற்கிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவிட்டதாக கனடா வெளியுறவுத்துறை துணை மந்திரி டேவிட் மாரிசன் குற்றம்சாட்டினார்.

பதுளையில் பேருந்து விபத்து! இரு மாணவர்கள் உயிரிழப்பு 40 பேர் படுகாயம்

 அதிரடி .காம் : பதுளை பேருந்து விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலையை கடந்துள்ளதாக வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
துன்ஹிந்த – பதுளை வீதியில் நேற்று (1) காலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களின் தற்போதைய நிலை குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,
40 பேர் வைத்தியசாலையில் அனுமதி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் தற்போது நலமுடன் உள்ளதாக அவர் தெரிவித்தார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பத்து பேரில் சிலர் இன்று பொது வார்டுக்கு மாற்றப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

களவாடப்பட்ட இந்திய மாநிலங்களின் தேசிய மொழிகள்!

 ராதா மனோகர் : கடந்த நூற்றாண்டில் திராவிடம் சாதித்த சாதனைகளில் தலையாயது என்று எதை கூறுவது என்ற தடுமாற்றம் ஏற்படுவது இயற்கை!
அந்த அளவுக்கு பலதுறைகளில் சாதனைகள் அரங்கேறியுள்ளன.
இன்று தென்னிந்திய மாநில திரையுலகம் கோடிக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்பாகவும் மொழிபரம்பலுக்கு உறுதுணையாகவும் விளங்குகிறது.
வடமாநிலங்கள் இந்தி ஆதிக்கத்தை கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவாக தங்கள் மாநில மொழி அடையாளங்களை மட்டுமல்ல அவற்றோடு சேர்ந்த தொழில்களையும் இந்தி பேயிடம் பறிகொடுத்து விட்டு நிற்கின்றன!
மீள்பதிவு  :  
களவாடப்பட்ட இந்திய மாநிலங்களின்  தேசிய மொழிகள்!
வடஇந்திய மாநில மொழிகள் மீது நடத்தப்பட்ட பாரிய மொழிச்சுத்திகரிப்பு!   
மீள் பதிவு ராஜஸ்தான் குஜராத் மகாராஷ்டிரம் பஞ்சாப் வங்காளம் ஒடிஷா மேலும் பல மொழி பேசும் மாநில மொழி திரைப்படங்கள் பாடல்கள் பெரும்பாலும் அழிந்தே விட்டன.
தமிழ்நாடு முன்னெடுத்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள திரைப்படங்களும் பாடல்களும் இன்றும் உயிரோடு உள்ளன.

ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தல்” : இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு!

 கலைஞர் செய்திகள் -Lenin :  ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பிரதமர் மோடியின் பேச்சுக்கு இந்தியா கூட்டணி தலைவைர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் 'ஒரே நாடு -ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டுவருவதில் வெகு மும்முரமாக இருந்து வருகிறது.
இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நாட்டில் இருந்த அனைத்து சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறும்.

வெள்ளி, 1 நவம்பர், 2024

Mr and Mrs Iyyar - அதிர்ச்சி வெள்ளத்தில் அள்ளுப்பட்டு கரை ஒதுங்கிய இரு மீன்கள்!

ராதா மனோகர்  Mr. and Mrs. Iyer வெளியான தேதி 19 July 2002!
இதை ஆஸ்கார் தெரிவுக்கு அனுப்பி இருக்கவேண்டும் என்று புகழ் பெற்ற இயக்குனர் கோவிந்த் நிஹலானி (Govind Nihalani wondered if Mr. and Mrs. Iyer could have been sent to the Oscars instead of the regular song-and-dance entries. Eventually, Film Federation of India, the apex organisation that sends the nation's official entries to the Oscars, did not find any film worth sending for the 76th Academy Awards)  இந்த படம் பற்றி கூறியிருக்கிறார்!
பிரபல டைம் பத்திரிகை உட்பட பல பத்திரிகைகளும் உலக திரைப்பட விமர்சகர்களும் மிஸ்டர் அன்ட் மிஸிஸ் அய்யர் பற்றி மிகவும் உயர்வாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஒன்றிய அரசின் ஆஸ்கார் தெரிவு குழுவின் பார்வையில் இது ஆஸ்கர் தெரிவுக்கு உரிய படமாக தெரியவில்லை
இது ஆங்கில படமாக இருப்பதை விட அதிகமாக தமிழ் வங்காளம் போன்ற மொழிகளை உள்ளடக்கிய பல் மொழித்திரைப்படமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவது உண்மைதான்.

வியாழன், 31 அக்டோபர், 2024

இந்தியா - கனடா - அமித்ஷா - நிஜ்ஜார் கொலை! கனடா அமைச்சர் தகவல்

 BBC News தமிழ் :   நிஜ்ஜார் கொலை வழக்கு: அமெரிக்க பத்திரிகையிடம் இந்திய அமைச்சர் அமித்ஷா பெயரை கூறியதாக கனடா அமைச்சர் ஒப்புதல்
கனடா குடிமக்களை அச்சுறுத்தும் அல்லது கொல்லும் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் ஒப்புதல் அளித்ததாக அந்நாட்டின் குடிமைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவிடம் கனடாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை (அக்டோபர் 29) அன்று கனடாவில் குடிமைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவின் விசாரணை ஒன்று நடந்தது.

புதன், 30 அக்டோபர், 2024

விஜய்யை வீழ்த்த திண்டுக்கல்லில் ரகசிய பூஜை நடத்திய சீமான்!ஆதாரத்துடன் அம்பலம்!

துரை வைகோ MP : ”விஜய்யின் சேவை... கண்டிப்பாக தேவை”

 மின்னம்பலம் - christopher :  மதச்சார்பின்மை, எல்லோருக்கும் எல்லாம், சமூக நீதி என நல்ல விஷயங்களை தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் அழுத்தமாக பேசியிருப்பதாக துரை வைகோ எம்.பி இன்று (அக்டோபர் 29) பாராட்டு தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27ஆம் தேதி விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதில் கட்சியின் கொள்கைகள், செயல்திட்டங்கள் குறித்த விஜய்யின் பேச்சு தற்போது தமிழக அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

நடிகர் விஜய் 15 கோடி கணக்கில் வராத பணம் IT ரெயிடுல கையும் களவுமா மாட்டிக்கிட்டார்

May be an image of text

Vimalaadhithan Mani :  IT ரெயிடுல கையும் களவுமா மாட்டிக்கிட்ட பின்னாடிதான் விஜய் 15 கோடி கணக்குல வராத பணம் வாங்கினதை ஒத்துக்கிட்டாரு. அது அரசு ஆவணத்துல தெள்ளத் தெளிவா இருக்கு.
வேறு வழியில்லாமல் அந்த 15 கோடி ரூபாய் பணத்துக்காக வருமான வரியை செலுத்தினார். இருந்தும், வருமானத்தை மறைத்த குற்றத்துக்காக அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அபராதம்  காலதாமதாக விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த அபராதத்துக்கு இடைக்கால தடை விதித்தார்.

செவ்வாய், 29 அக்டோபர், 2024

கேரளா கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து; 8 பேர் சீரியஸ்; 150 பேர் காயம்

 தினமலர் : கேரளாவில், காசர்கோடில் நீலேஸ்வரம் அருகே வீரர்காவு கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.
திருவிழாவில் வாணவேடிக்கை களியாட்டம் நிகழ்ச்சியின் போது, ஏராளமானோர் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர்.
அப்போது பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
திருவிழாவில் கூடியிருந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். சிலர் தீயில் சிக்கி கொண்டனர். 150 பேர் பலத்த காயமுற்றனர்.
பலத்த காயம் அடைந்த, 8 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கனடா வால்மார்ட் பேக்கரியில் எரிந்த நிலையில் இந்திய சீக்கிய பெண்

 தினமணி : கனடாவில் பணிபுரிந்து வந்த இந்திய சீக்கிய பெண் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 19 வயதான சீக்கிய பெண் ஒருவர், கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியின் பேக்கரியில் இருந்த அடுப்பிலிருந்து சடலமாக சனிக்கிழமை (அக். 19) இரவு 9.30 மணியளவில் மீட்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கான காரணத்தை விரைவில் கண்டறியுமாறு வலியுறுத்தி, மரிட்டைம் சீக்கிய சமூக அமைப்பினர் உள்பட பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கனடா Tesla EV கார் தீப்பிடித்து எரிந்து 4 இந்தியர்கள் உயிரிழப்பு

 மாலைமலர் : கனடாவில் நடத்த கார் விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டொரன்டோ நகரில் கடந்த வியாழக்கிழமை அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதி பின்னர் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரிந்த நிலையில் காரில் இருந்த 4 இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஒரு பெண்ணை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

திங்கள், 28 அக்டோபர், 2024

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 75 படுக்கைகளுடன் தீக்காய சிறப்பு பிரிவு

 மாலைமலர் : சென்னை தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விபத்துக்களில் தீக்காயம் ஏற்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளித்து பாதுகாக்க சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ராஜீவ்காந்தி, ஸ்டான்லி மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீயினால் ஏற்படும் விபத்து மற்றும் அதன் பின் விளைவுகளுக்கு சிகிச்சை அளிக்க தீக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவு 1981-ம் ஆண்டு 10 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டது.

ஞாயிறு, 27 அக்டோபர், 2024

கல்விக்காக குழந்தைகளை கனடாவுக்கு அனுப்ப வேண்டாம்! அங்கு காலிஸ்தான் பிரசாரமாம் இந்திய தூதர் வர்மா அச்சம்

 மின்னம்பலம் -Kavi:   உயர்கல்விக்காக உங்கள் குழந்தைகளை கனடாவுக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோருக்கு கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவில் கடந்த ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார்.
 அதில் சஞ்சய் வர்மாவையும், பிற இந்திய தூதரக அதிகாரிகளையும் கனடா தொடர்புபடுத்தியது.
இந்தக் குற்றச்சாட்டுகளால் கடும் அதிருப்தி அடைந்த மத்திய அரசு,
இந்தியாவில் இருந்து கனடா தூதர் மற்றும் அந்நாட்டின் ஐந்து தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டதுடன்,
 கனடாவில் இருந்து சஞ்சய் வர்மா மற்றும் ஐந்து இந்திய தூதரக அதிகாரிகளை தாயகத்துக்கு திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் அறிவித்தது.

விஜய் : திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் - த.வெ.க. தலைவர் சூளுரை

 மாலை மலர்  : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை நடைபெற உள்ளது.
விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
வி.சாலை விஜய்யின் வியூகச் சாலையாக மாறி, மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வந்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் மாநாடு தொடங்க இருக்கிறது. த.வெ.க. முதல் மாநில மாநாடு தொடங்குவதை அடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. தலைவர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுவை எனும் நஞ்சு* - பெருகி வரும் போலி உணவுகள் . புற்றுநோய்களின் ஊற்றுக்கள்

 Esther Vijithnandakumar  :  *சுவை எனும் நஞ்சு*
தமிழகம் முழுவதும் சுற்றிப் பார்த்த நண்பர் ஒருவர்,  அவர் பார்த்து மிகவும் அஞ்சிய ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அது வேறொன்றும் இல்லை எங்கு நோக்கிலும் உணவு .. உணவு ..உணவு.. ..
தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது. எல்லோரும் எதையாவது  தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது .
அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது.
உதாரணமாகச் சோறு, இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்றவை ஏளன உணவு பொருளாகப் பார்க்கப்படுகிறது.
பல உணவகங்களில் இவை இல்லை.
ரொட்டி வகைகளும், கறி வகைகளும் மட்டுமே இரவு உணவில் பெரிதும் பரிமாறப்படுகிறது.

ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள பொருளை இறக்க 25 ஆயிரம்... கேரளா நோக்கு கூலியால் நாக்கு தள்ளிய காண்டிரக்டர்


மின்னம்பலம் -Kumaresan M :  கேரளாவில் ஒருவர் தனக்கு சொந்தமான சரக்குகளை அவரது பணியாளர்களைக் கொண்டு ஏற்றி, இறக்கிவிட முடியாது.
இதற்கு சுமை தூக்கும் தொழிலாளர்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என எழுதப்படாத சட்டம் உள்ளது. அப்படி தொழிலாளர்களை பயன்படுத்தாதவர்களிடம் ‘நோக்கு கூலி’ என்ற பெயரில் கட்டாயமாகவும் கூலி வசூலிப்பார்கள்.
மற்றவர்கள் வேலை செய்வதை பார்த்து கொண்டு இருந்து விட்டு சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி வாங்கிச் செல்வதே நோக்குகூலி. அவர்களைக்கொண்டே அந்தப் பணியைச் செய்தால் எவ்வளவு கூலி வாங்குவார்களோ, அதைவிடக் கூடுதலாக நோக்குக் கூலி வாங்குவதும், தராதவர்களைத் தாக்குவதும் கேரளாவில் வாடிக்கை.