சனி, 14 ஜனவரி, 2023
வேங்கைவயல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு.. குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு சம்பவம்..
வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது டிச.26-ம் தேதி தெரியவந்தது.
அன்றிலிருந்து அந்தக் குடிநீர்த் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, மாற்றுத் தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதுகுறித்து ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேரை உள்ளடக்கிய விசாரணைக் குழு விசாரித்து வந்தது.
காயத்திரி ரகுராம் : என்னை மானபங்கப்படுத்திய பாஜகவுக்கு நன்றி”
நக்கீரன் : மத்திய உளவுத்துறையினர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதன்படி உளவுத்துறை மத்திய உள்துறைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
அதில், அண்ணாமலையின் பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும் என்றும் அவருக்கு z பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அதன்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அண்ணாமலைக்கு ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம், அண்ணாமலைக்கு z பிரிவு பாதுகாப்பு வழங்கியது குறித்து விமர்சித்துள்ளார்.
ராகுல் யாத்திரையில் பஞ்சாப் (ஜலந்தர்) எம்.பி. சந்தோக்சிங் சவுத்ரி மாரடைப்பால் உயிரிழப்பு
மாலைமலர் : லூதியானா - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த செப்டம்பர் 7-ந்தேதி அவர் கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய 11 மாநிலங்களில் நடைபயணம் செய்த பிறகு ராகுல் காந்தி கடந்த 10-ந்தேதி பஞ்சாப்பை சென்றடைந்தார்.
அவரது நடைபயணத்தின் போது ஏராளமானவர்கள் உடன் சென்றனர்.
சோனியா காந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நடைபயணத்தின் போது உடன் சென்றனர். முக்கிய பிரமுகர்களும் அவருடன் சென்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.
: இலங்கை ராணுவத்தை ஒரு இலட்சமாக குறைக்கப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டளவில் இராணுவ உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட 2,00,783 பேர் கொண்ட இராணுவப் படையை அடுத்த வருடத்தில் இருந்து 1,35,000 வரை குறைக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையை 2030 ஆம் ஆண்டாகும் போது ஒரு இலட்சமாக குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
ஆயுதம் தாங்கிய இராணுவப் படைக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவைக் குறைத்து அதனை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கோகுல்ஸ்ரீ அடித்து கொலை.. விசாரணையில் தெரியவந்துள்ளது
தினத்தந்தி : செங்கல்பட்ட சீர்திருத்த பள்ளியில் சிறுவன் உயிரிழந்த விவகாரம்: விசாரணையில் கொலை செய்யப்பட்டது அம்பலம் - காவலர்கள் 6 பேர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் கடந்த மாதம் தாம்பரம் ரெயில்வே குடியிருப்பில் ரெயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரி ஒன்றை திருடியதாக கூறி ரெயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து கடந்த 29-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவனை செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பாஜக அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு கொலை மிரட்டலாம்! ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
நக்கீரன் : உளவுத்துறையின் ஷாக் ரிப்போர்ட்; அண்ணாமலை குறித்து அமித்ஷா எடுத்த முடிவு
மத்திய உளவுத்துறையினர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
அதன்படி உளவுத்துறை மத்திய உள்துறைக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.
அதில், அண்ணாமலையின் பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும் என்றும் அவருக்கு z பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அதன்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அண்ணாமலைக்கு ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி, 13 ஜனவரி, 2023
தமிழில் தேர்ச்சி (பாஸ்) என்றால் மட்டுமே அரசு வேலை!
தமிழில் தேர்ச்சி பெறாமல் இனி அரசுப் பணிகளில் சேர முடியாது என்ற சட்டத்திருத்த மசோதாவை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று(ஜனவரி 13) சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு : தம்பி உன் இருப்பிற்கே சவால் விடுகிறான் அவன்!
உனக்கு இன்னும் உணர்வு துடிக்கவில்லை!
சினிமாக்காரர்களுக்கு விளக்கு பிடிக்கவே உனக்கு நேரம் போதாது!
தமிழ்நாடு என்ற உன் தேசத்தின் பெயரை அவன் சிதைத்தால் கூட உனக்கு கவலை இல்லை!
சினிமாவினாலும் சூதினாலும் உன் மக்கள் அழிந்தால் என்ன
உன் வேடிக்கைகள்தான் உனக்கு முக்கியம்.!
ஆரிய முதலைகள் உன்னை விழுங்கி கொண்டிருப்பது கூட அறியாத வெற்று பொருளாகி விட்டாயா நீ?
நீ விழுங்கப்பட்டு கொண்டிருப்பது கூட உனக்கு தெரியவில்லையே?
இதுதான் தம்பி ஆரிய மாயை என்று கூறுவது!
உன் இருப்பு கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது!
மயக்கம் தெளிந்து கண்ணை விழித்து பார்!
உன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்!
திராவிடன் சிந்திக்க தெரிந்தவன்!
எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல கருதுபவன்!
மனித மாண்புகள் உடையவன்!
திராவிட கோட்பாட்டை சிதைப்பதற்குதான் அவன் வருகிறான்
உன் மாண்புகள் அவன் கண்ணை உறுத்துகிறது!
சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முதல்வர் மு க ஸ்டாலின்
மாலை மலர் : கலைஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.
நாளை முதல் 17ம் தேதி வரை சென்னையில் 18 இடங்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
சென்னை: சென்னை தீவுத்திடலில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும்
"சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை" முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த சுமார் 600 கலைஞர்கள், நம்ம ஊரு திருவிழா துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.
100 மில்லியன் ரூபாய் (10 கோடி) நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
tamilmirror.lk : 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல், தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சுமத்தி, உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று (12) அறிவிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளதாக, கடந்த 5ஆம் திகதி உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.
சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
hirunews.lk : சேது சமுத்திரத் திட்டத்தை இந்திய மத்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் நேற்று விசேட தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளார்.
சேதுசமுத்திரத் திட்டம் 1860 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு கப்பல் கால்வாயை உருவாக்குவதற்காக முதன் முதலில் வரையப்பட்டது.
இந்த திட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்குநீரிணையை இணைக்கும் கால்வாயை தோண்டுவதுடன் தொடர்புடையது.
சேது சமுத்திரத் திட்டம் செயற்படுத்தப்பட்டால், தமிழகத்தின் பொருளாதாரம் மேம்படும் என இந்த தீர்மானத்தை வாசிக்கும் போது தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தியேட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள்.. அடித்து துரத்திய நிர்வாகம்.. ஆடிப்போன தெலுங்கு திரையுலகம் !
பொதுவாக இந்தியாவில் பண்டிகை காலங்களை முன்னிட்டு அணைத்து மொழிகளிலும் ஒரு படமாவது வெளியாவது வழக்கம்.
அந்த வகையில் தமிழில் அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு வெளியாகி இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
நேற்று திரையரங்கில் வெளியான இப்படங்கள் பல்வேறு நாடுகளில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் தெலுங்கு மொழி படமான பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்ஹா ரெட்டி' படம் இன்று வெளியாகியுள்ளது.
வியாழன், 12 ஜனவரி, 2023
அயல்நாடுகளில் பணிக்கு சென்று இறக்கும் தமிழர்களின் குடும்பங்களுக்கு மாத ஓய்வூதிய திட்டம் அறிமுகம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மாலைமலர் : சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் 2023 விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-
அயலக மண்ணில் வசிக்கும் நம் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களுக்குத் தேவை ஏற்படக்கூடிய நிலைகளில் உதவி புரிந்து வரும் தமிழ்ச் சங்கங்களின் பணிகளை அங்கீகரிக்கவும்,
அடுத்த தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, தமிழ்மொழி கற்றல், கற்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையிலும்,
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் நாள் "அயலகத் தமிழர் நாள்" கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது வெறும் அறிவிப்பல்ல என்பதைத்தான் இங்கே திரண்டிருக்கின்ற நீங்களும் உங்களோடு கலந்து நானும் சேர்ந்து இங்கே நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.
இசையமைப்பாளர் கீரவாணிக்கு கோல்டன் குளோப் விருது! (ஆஸ்கருக்கு அடுத்த புகழ் பெற்ற விருது)
மாலைமலர் புதுடெல்லி : தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூலை வாரிக்குவித்த 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு 'கோல்டன் குளோப்' விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக பெருமைக்குரியதாக கருதப்படும் 'கோல்டன் குளோப்' விருது கிடைத்திருப்பது, 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதன், 11 ஜனவரி, 2023
தமிழ்நாடு ஆளுநர் விலகக் கோரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டம். கடும் எதிர்ப்பு:
tamilmurasu.com : தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்என் ரவிக்கும் மாநில அரசுக்கும் இடையிலான பனிப்போர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
தமிழ்நாடு என்று சொல்வதைக் காட்டிலும் தமிழகம் என்று அழைப்பதே சரி என்று அண்மையில் ஆளுநர் ரவி பேசியது தமிழகம் முழுவதும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியது.
அந்த எதிர்ப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் சட்டமன்றக் கூட்டத்தைப் பாதியில் புறக்
கணித்துவிட்டு அவர் வெளியேறினார்.
புத்தாண்டு தொடங்கியதும், மாநில அரசு நிறைவேற்றவிருக்கும் திட்டங்களையும் கடைப்
பிடிக்க இருக்கும் கொள்கைகளையும் சட்டமன்றத்தில் ஆளுநர் வாசிப்பது வழக்கம்.
தொடர்கொலைகளின் களம்! ஜக்கியின் ஈஷாவை தடை செய்துஅரசுடமையாக்க வேண்டும்- மக்களின் வேண்டுகோள்
யோகா கற்றுத் தருகிறோம் என்கிற பெயரில் ஜக்கியின் ஈஷா மையத்தில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன.
அதிலும் சைலன்ஸ் ஹவர் நிகழ்ச்சியால் பலரும் இறந்துள்ளனர்.
உண்மையில் சைலன்ஸ் ஹவர் நிகழ்ச்சியில் நடப்பது என்ன?
என ஆராய்ந்தால் அத்தனையும் அதிர்ச்சியே! முதுகுத்தண்டு ஜில்லிட வைக்கும் சைலன்ஸ் ஹவர் குறித்தான டீடெய்ல்ஸ் ரிப்போர்ட் இதோ!
“மன அழுத்தத்தால் ஏற்படும் நோய்கள், நீரிழிவு, இருதய நோய் மற்றும் ஒவ்வாமை போன்ற அத்தனை நோய்களையும் குணப்படுத்தவும்,
வாழ்க்கையை எளிதாக வாழ்ந்திடவும் யோகா பயிற்சிகள் எங்களால் வழங்கப்படுகின்றது.
இதனைக் கற்றுக்கொண்டால் அத்தனை நோய்களும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் மனம் அமைதியாகி, சக்தி பெருகி தன்னம்பிக்கை அதிகமாகும் என கவன ஈர்ப்பு விளம்பரங்களால் கல்லாக் கட்டி வருகின்றது ஜக்கியின் ஈஷா யோகா மையம்.
அமெரிக்கா- அனைத்து விமானங்களும் தரையிறக்கம்! கம்பியூட்டர் சர்வரில் ஏற்பட்ட கோளாறு
மாலைமலர் : அமெரிக்கா முழுவதும் விமான சேவை பாதிப்பு- அனைத்து விமானங்களும் தரையிறக்கம்!
கம்பியூட்டர் சர்வரில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் விமான சேவை முடங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். வாஷிங்டன்: அமெரிக்கா முழுவதும் இன்று விமான சேவை திடீரென முடங்கியது.
விமானங்கள் அனைத்தும் அவசரமாக ஆங்காங்கே தரையிறக்கப்பட்டன.
முன்னெப்போதும் இல்லாத வகையில் விமான போக்குவரத்து துறையின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானங்களை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் என்ன விளைவை உண்டாக்கும் ..ஹிந்து ராம் பேட்டி
BBC News தமிழ் : தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் சில பகுதிகளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்துவிட்டு வாசித்ததும், அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானமும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆளுநரின் செயல்பாடுகள், அவரது நோக்கம், மாநில அரசியலில் ஆளுநரின் செயல் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை குறித்து தி இந்து குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான என். ராம், பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். அவர் பேசியதிலிருந்து:
கே. திங்கட்கிழமை தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசித்த ஆர்.என். ரவி, அதில் சில பகுதிகளை விட்டுவிட்டு வாசித்தது சர்ச்சையாகியிருக்கிறது. இது மரபு மீறலா?
ப. இந்த ஆளுநரின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். மிகவும் அத்துமீறி, அரசியல் சாஸனத்திற்கு எதிராகச் செயல்படுகிறார். ஆளுநர் இப்படிச் செயல்பட அதிகாரம் கிடையாது. இவர் ஏதேதோ பேசுகிறார்.
“ராகுலை நான் கொன்றுவிட்டேன்” - ராகுல்காந்தியின் விநோத பதில்
நக்கீரன் : கடந்த வெள்ளியன்று உத்தரப்பிரதேசத்திலிருந்து ஹரியானாவை எட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் ஹரியானாவில் நேற்றுடன் நிறைவுக்கு வந்தது.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல்காந்தி, “நான் டீசர்ட் அணிவதைக் குறித்து பலரும் கேள்வி கேட்கின்றனர்.
நான் மத்தியப்பிரதேசத்தில் ஒற்றுமை பயணம் மேற்கொண்ட போது அங்கு குளிர் அதிகமாக இருந்தது. அங்கு வேலை பார்க்கும் சிறுவர்கள் உடை கிழிந்த நிலையில் என்னை பார்க்க வரும் பொழுது அவர்கள் படும் கஷ்டத்தை நான் கண்டேன்.
குளிரில் எனது உடல் நடுங்கும் நிலை வரும் வரையில் டீசர்ட் மட்டுமே அணிவது என்று அப்போது நான் முடிவு செய்தேன்.
என்னால் தாங்க முடியாத குளிரை நான் எதிர்கொள்ளும் போது ஸ்வெட்டர் அணிவேன்.
மகிந்தா ராஜபக்ச கோத்தபாயா ராஜபக்ச உட்பட நால்வருக்கு எதிராக தடை – கனடா அறிவிப்பு !
வீரகேசரி : கனடா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.
சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க லெப்கொமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராகவும் கனடா தடைகளை அறிவித்துள்ளது.
இலங்கையில் 1983 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை இடம்பெற்ற ஆயுதமோதலின் போது மனித உரிமைகளை பாரியளவில் திட்டமிட்டு மீறியமைக்காக நான்கு இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக சிறப்பு பொருளாதாரநடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கனடா இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளது என கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொய் தெரிவித்துள்ளார்.
சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் பட்டியலிப்பட்ட நபர்களிற்கு பரிவர்த்தன தடையை விதிக்கின்றன,இது கனடாவில் அவர்கள் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களையும் திறம்பட முடக்கி கனடாவின் குடிவரவு சட்டத்தின் கீழ் அவர்கள் கனடாவிற்குள் நுழைய முடியாதவர்களாக்குகின்றது.
செவ்வாய், 10 ஜனவரி, 2023
ஓவியர் ராஜா ரவிவர்மா கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட மக்களுக்காகவே கடவுள் ஓவியங்களை தீட்டினார்
19ஆம் நூற்றாண்டில் கோயில்களில் இருந்த இந்துக் கடவுள்களை எல்லோரும் சென்று தரிசிக்க முடியாதபடி ஆலயங்களின் கதவுகள் கீழ்சாதியினருக்கு மூடப்பட்டு இருந்தன.
அப்போது கேரளத்து ஓவியர் ராஜா ரவிவர்மாவின் லஷ்மி, சரஸ்வதி, ராமர் பட்டாபிஷேகம், சிவன், பார்வதி, விநாயகர், முருகன் மயில்மேல் குடும்பமாக இருப்பது போன்ற ஓவியங்களின் ஓலியோகிராஃப் அச்சுப் பதிவுத் தொழில்நுட்பம் அந்த புனிதமான கடவுள்களை காலண்டர்களிலும்,
சோப்பு விளம்பரங்களிலும் அச்சிட்டு அவர்களை மத்தியதர வர்க்க கீழ்சாதியினரின் வீடுகளுக்குள்ளும் குடிசைகளுக்குள்ளும் நுழைய வைத்தது. 1936இல் திருவனந்தபுரம் ஆலய நுழைவுப் போராட்டம் சாதிக்க முடியாததை ரவிவர்மாவின் ஓவியங்கள் சாதித்தன. கான்வஸில் மேல்நாட்டுக் கலைசாதனமாகிய தைல வண்ணத்தால் தீட்டப்பட்ட ஓவியங்களை அப்படியே காகிதத்தில் அச்சிடமுடியும் எனும் ஓலியோகிராஃப் தொழில்நுட்பம் ஜெர்மானியர்களால் பிரிட்டீஷ் இந்தியாவின் உள் நுழைந்து சாதித்துக் காட்டியது.
ரணில் - ராஜபக்ச கூட்டணி! உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யானை தாமைரை மொட்டு சின்னங்களில் போட்டி
hirunews.lk : எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன மீண்டும் பேச்சுவார்த்தைக்காக இன்று (10) ஜனாதிபதி செலகத்தில் சந்தித்தன.
அதன்போது, உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட தலைவர்களுடனும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஆளுநர் விவகாரம்: எம்எல்ஏ-க்களை எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்
minnambalam.com - Selvam : ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் யாரும் எந்தவிதமான கருத்துக்களும் தெரிவிக்கக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் துவங்கியது. ஆளுநர் ரவி சட்டமன்ற கூட்டத்தொடரில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே வெளிநடப்பு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதனை தொடர்ந்து நேற்று மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அஜீத் ரசிகர்களின் டிக்கெட் திருட்டு! வேலூர் ..மொத்த டிக்கெட்டுகளும் கோவிந்தா
நக்கீரன் : தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் 9 வருடங்கள் கழித்து ஒரே தேதியில் வெளியாகவுள்ளன.
இதனால் அவர்களது ரசிகர்களைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் பார்வையும் தற்போது 'வாரிசு' மற்றும் 'துணிவு' பட ரிலீஸை நோக்கி உள்ளது.
இருவரின் ரசிகர்களும் அவர்களது விருப்ப நடிகர்களின் படங்கள் தனித்தனியே வெளியானாலே பேனர், பட்டாசு என்று திருவிழாவாகவே மாற்றிவிடுவார்கள்.
இப்போது இருவரின் படங்களும் பொங்கலை முன்னிட்டு ஒன்றாக வருவதால் திரையரங்கம் மற்றும் முக்கியமான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பேனர், போஸ்டர், பட்டாசு என்று போட்டிப் போட்டு பட்டையைக் கிளப்பி வருகின்றனர்.
மரத்திலிருந்து உருவான பேட்டரியால் எட்டு நிமிடத்தில் சார்ஜ் ஆகும் கார்கள் - சாத்தியமா? - BBC News தமிழ்
bbc.com - கிறிஸ் பரனியுக் : மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், விஞ்ஞானிகள் நிலையான பேட்டரிகளை தயாரிப்பதற்கான பொருட்களைத் தேடுகின்றனர். மரங்களில் காணப்படும் லிக்னின் என்ற பொருள், ஒரு வலுவான போட்டியாளராக உருவெடுத்து இருக்கிறது
சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பின்லாந்தின் ஒரு பெரிய காகித உற்பத்தியாளர் உலகம் மாறி வருவதை உணர்ந்தார். டிஜிட்டல் ஊடகங்களின் எழுச்சியால் அச்சுத்தொழில் வீழ்ச்சி கண்டு இருந்தது. இதனால் காகிதங்களின் பயன்பாடு குறையத் தொடங்கி இருந்தது.
பாகிஸ்தான் நிதி நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் .. அந்நிய செலாவணி கையிருப்பு 3 மாதம் மட்டுமே உள்ளது..!
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் வெளியிட்டுள்ள தகவல் படி அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.
பாகிஸ்தான் அரசும், மத்திய வங்கியும் அந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகள் அதிகளவில் மேற்கொண்டு வரும் நிலையிலும் மோசமான இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
கயானா, சுரினாம் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு புலம்பெயர் இந்தியர்கள் மாநாடு
இந்த மாநாட்டுக்கு வந்துள்ள சுரிநாம் அதிபர் சந்திரிகாபிரசாத் சந்தோகி, கயானா அதிபர் முகமது இம்ரான் அலி ஆகியோருடன் பிரதமர் மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
திங்கள், 9 ஜனவரி, 2023
மாமல்லபுரத்தில் துணை நகரம் - 500 மின்சாரப் பேருந்துகள் : ஆளுநர் உரையில் இடம் பெற்ற புதிய அறிவிப்புகள்!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் உரையில் மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம், 500 மின்சார பேருந்துகள் போன்ற புதிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
சென்னை அருகே மாடம்பாக்கத்தில் 600 ஏக்கர் பரப்பளவில், நிலத்திரட்டு முறையில் புதிய வளர்ச்சிப் பகுதியை உருவாக்குவதற்கான ஒரு முன்னோடி முயற்சி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கெட் அவுட் ரவி... தமிழக ஆளுநருக்கு எதிராக ட்ரெண்ட் ஆகும் #GetOutRavi hashtag ஹேஷ்டேக்
மாலை மலர் : சென்னை தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன.
தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநருக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆளுநருக்கு எதிராக டுவிட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் திமுகவினர் அனல் பறக்கும் விமர்சனங்கள் மற்றும் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
"சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், திராவிட மாடல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர்... இந்த வார்த்தைகளை படிக்க மறுக்கும் ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை" என திமுக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
ஆளுநர் உரையை விமர்சித்த முதல்வர், பாதியில் வெளியேறிய ஆளுநர்- தமிழ்நாடு சட்டப்பேரவையில் என்ன நடந்தது?
BBC News தமிழ் : "ஆளுநர் உயர் பதவி ஆசையால் இப்படி பேசுகிறாரா எனத் தெரியவில்லை" - சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி முழுமையாகப் படிக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதைத் தொடர்ந்து பேரவை முடிவதற்கு முன்பே ஆளுநர் அவையை விட்டு வெளியேறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்து ஆளுநர் தனது உரையைத் தொடங்க முயன்றபோது, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் என்று திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
உத்தரகாண்ட் ஜோஷிமத் நகரம் மண்ணுக்குள் புதைகிறது... வீடுகளை விட்டு ஓடும் மக்கள்
BBC News தமிழ் : உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமட் பகுதியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவ்வாறு செய்ய முடியாதவர்கள், தங்கள் வீட்டிற்கு வெளியே வானமே கூரையாகத் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
வியாழக்கிழமையன்று பத்ரிநாத் நெடுஞ்சாலையைப் பொதுமக்கள் மறித்து மாலையில் எரியும் தீப்பந்தங்களுடன் ஊர்வலம் செல்லும் அளவுக்கு மாநில அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.
ஜோஷிமட்டில் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றி வேறு இடங்களுக்கு இடம் பெயரும் அளவுக்குத் திடீரென என்ன நடந்தது?
அங்கு நிலமே புதைந்து இடிந்து விழும் நிலை வரைக்கும் அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலைக்கு வந்த பிறகுதான் அரசு கட்டுமானப் பணிகளை நிறுத்தியுள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொங்கல் பரிசு ரூ.1000 இன்று முதல் வினியோகம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
இதற்காக அரசு ரூ.2,429 கோடி ஒதுக்கியுள்ளது.
இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
உணவு மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் இதற்கான வழிகாட்டுதல்கள் ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா தேர்தல்: உச்சம் தொடும் காங்கிரஸ்.. பாஜகவுக்கு பெரிய அதிர்ச்சி . முதல் சர்வே முடிவில் ட்விஸ்ட்!
tamil.oneindia.com - Nantha Kumar R : பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான முதல் சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த சர்வே கர்நாடகாவை ஆட்சி செய்யும் பாஜகவுக்கு ஷாக் அளிப்பதுடன்,
தற்போது எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி வெற்றியின் விளிம்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் கூட முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் ஜனதாதளம் (எஸ்) கட்சி தான் ஆட்சியை நிர்ணயம் செய்யும் கிங்மேக்கராக மாற வாய்ப்புள்ளது என சர்வே தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்துக்கு கடந்த 2018 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, ஜனதாதளம் (எஸ்) என எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்களில் எந்த கட்சிகளும் வெற்றி பெறவில்லை. இதனால் தொங்கு சட்டசபை உருவானது.
வானூட்டு தீவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை விடுப்பு
மாலைமலர் : தென் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடு வானூட்டு. சுமார் 80 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாட்டில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். உடனடியாக சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் மக்கள் மேடான பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக அந்த நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு, 8 ஜனவரி, 2023
சாதி மறுப்பாளர் சங்கமம் .. 4 வது மாநில மாநாடு! கேரளா அறநிலைய அமைச்சர் கே .ராதாகிருஷ்ணன்
கேரள அறநிலைய துறை அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன்: ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரே வகுப்பு அறையில் படிக்கும் வெவ்வேறு ஜாதிகளை சேர்ந்த குழந்தைகளுக்கு தண்ணீர் குடிப்பதற்கு வைத்திருக்கும் வெவ்வேறு குவளைகள் உள்ளன
ஒன்பது வயதே உள்ள ஒரு குழந்தைக்கு ஜாதியும் மதமும் தெரியாது . தாகத்திற்கு ஒரு குவளையை எடுத்து தண்ணீர் குடித்தது . அந்த குழந்தை எடுத்த குவளை அதன் ஜாதிக்கு உரிய குவளை அல்ல . உயர்ந்த ஜாதிக்கு உரிய குவளை.
அந்த குழந்தையை கடுமையாக தாக்கினார் ஆசிரியர் . அந்த குழந்தை அடுத்த நாள் இறந்தது
தமிழ்நாட்டில் சமூக புரட்சியை முன்னெடுத்து கொண்டிருந்த தந்தை பெரியார் கேரளத்திற்கு வந்தார் . தமிழ்நாட்டில் உள்ள சமூக ஒடுக்குமுறைகளை ஒழிக்கவேண்டும் என்றால் கேரளத்தில் இருக்கின்ற அந்த கொடுமைகளின் உச்சத்தில் அடிக்கவேண்டும் என்று கேரளத்திற்கு வந்தார்.
அவரின் தலைமையில் 1924 இல் வைக்கம் சத்தியா கிரகம் ஆரம்பித்தது
தமிழ்நாடு, தமிழகம் வேறுபாடு கிடையாது.! பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்? திருமாவளவன் விளக்கம்
தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” எனப் பேசியிருந்தார்.
இது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்தக் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தங்களது கருத்துகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “சென்னை இலக்கியத் திருவிழா - 2023’ சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த இவ்விழா மூன்று நாட்கள் நடைபெற்று இன்றுடன் முடிவடைகிறது.
போலீஸ் நிலையத்தில் 19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றதாக பரபரப்பு- குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாததால் 3 பெண்கள் விடுதலை
மாலைமலர் : சென்னை - சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3 பெண்கள் கஞ்சாவை கடத்தி வந்து மறைத்து வைத்து விற்றுக் கொண்டிருந்தனர்.
அந்த 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 3 பெண்களிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சாவை போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.