சனி, 6 ஜனவரி, 2018

ஓக்கி புயலுக்கு ஓடி ஒழிந்த சரவணா ஸ்டோர்ஸ் .. நடிகர்களுக்கு 2 கோடிகொடுத்த வஞ்சகம் .... புறக்கணியுங்கள் மக்கழே..

Shankar A :ஒக்கி புயலில் தமிழகத்தின் தென் பகுதி சீரழிந்தது.
மீனவர்கள் காணாமல் போனார்கள். மக்கள் பரிதவித்தார்கள். மத்திய அரசு மற்றும் மாநில அரசு இயந்திரங்கள் இரண்டும் செயலலிழந்தது. லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரும் தமிழர்தான். சென்னையில் மிகப்பெரிய வியாபார சாம்ராஜ்யத்தை நிறுவி வெற்றி பெற்றுள்ளார்.
அவரை நாம் மக்கள் பிரச்சினைகளுக்காக நிதி கொடு என்று வற்புறுத்த முடியாது. அவர் உழைப்பு. அவர் பணம். நாம் யார் கேள்வி கேட்க ?
ஆனால், நடிகர் சங்கத்துக்கு இரண்டரை கோடி செக் அளிப்பதற்காக மலேசியா சென்று, ரஜினிகாந்த் அருகில் அமர்வதற்கு தனித் தொகை கொடுத்து, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள இத்தனை செலவு செய்யும் இவர் ஏன் ஒக்கிப் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி அளிக்கவில்லை என்ற கேள்வி நியாயம்தானே ?

புத்தக கண்காட்சி : 704 அரங்குகள் அமைப்பு!

புத்தக கண்காட்சி : 704 அரங்குகள் அமைப்பு!மின்னம்பலம் : சென்னையில் 41ஆவது புத்தக கண்காட்சி ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின்(பபாசி) தலைவர் எஸ்.வைரவன் நேற்று, “சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மைதானத்தில் 41ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி வருகிற 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறவுள்ளது. அதில் தமிழ் அரங்குகள் 428, ஆங்கில அரங்குகள் 234, மல்டி மீடியா அரங்குகள் 22, பொது அரங்குகள் 24 என மொத்தம் 708 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. 236 தமிழ் பதிப்பாளர்கள், 102 ஆங்கில பதிப்பாளர்கள், 14 மல்டி மீடியா பதிப்பாளர்கள், 24 பொது பதிப்பாளர்கள் என மொத்தம் 376 பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். மேலும், வாசகர்கள், எழுத்தாளர்கள் சந்திப்புக்கு தனி அரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நீதிபதிகளுக்கு 200 % சம்பள உயர்வு.. MLAக்களுக்கு 100% சம்பள உயர்வும்.. பகல் கொள்ளை !

Shahul Hameed : MLAக்களுக்கு 100% சம்பள உயர்வும், நீதிபதிகளுக்கு 200 % சம்பள உயர்வும் கொடுத்த போது, யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை; போக்குவரத்து ஊழியர்களுக்கு சேரவேண்டிய 7000 கோடி ரூபாயை அரசு, ஏப்பம் விட்டதற்கும் யாரும் கவலைப்படவில்லை; ஒரு போக்குவரத்து தொழிலாளி ஓய்வு பெறும்போது சட்டப்படி கிடைக்க வேண்டிய பென்ஷன் கிடைக்கவில்லை என்றால், அதற்கும் யாரும் கவலைப்படுவதில்லை.
சட்டப்படி 15நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுத்த பின்னர்தான், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
தங்கள் சம்பளத்தை இழந்து, அரசு அறிவித்துள்ள, குறைந்த பட்ச ஊதியமான 18000 ரூபாய்க்கும் குறைவான ஊதியம் கேட்கும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், நியாயமான போராட்டம்! போக்குவரத்து ஊழியர்கள் ஒன்றும், செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல! நமது வீடுகளிலிருந்து வருபவர்கள்தான்!

திருமாவளவன் : மகாராஷ்டிராவில் தலித்துகள் மீதான தாக்குதல்! 8ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்!

மகாராஷ்டிராவில் தலித்துகள் மீதான தாக்குதல்!
8ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்!
விடுதலைச் சிறுத்தைகள் அறிவிப்பு
~~~~~~~~~~~
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மதவாத சக்திகளும் சாதிவெறி சக்திகளும் ஒன்றிணைந்து தலித் மக்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர். அதில் தலித் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்தாமல் மகாராஷ்டிராவை ஆளும் பாஜக அரசு வகுப்புவாதிகளுக்கு ஊக்கமளித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறையைக் கண்டித்து எதிர்வரும் 8ஆம் தேதி திங்கட்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

திராவிடத்தால் முன்னேறி செல்லும் தமிழகம் ,,, பந்தாட துடிக்கும் ஆரியம் .. இதுதான் உண்மை!

Ravi Raj : //திராவிடத்தால் தமிழகம் வீழ்ச்சியடைந்துவிட்டது.. மாற்றுக்கு மக்கள் ஏக்கம் -- அவாக்களின் இடைவிடா புலம்பல்//
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களின் பட்டியலில் முதல் இடங்களில் தமிழ்நாடு உள்ளது??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, சாப்ட்வேர் ஏற்றுமதியில் முதலிடங்களில் தமிழ்நாடு உள்ளது??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், மருத்துவ சுகாதார குறியீடுகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, மோட்டார் வாகன துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, சமூக பொருளாதார குறியீடுகளில் இந்தியாவில் தமிழகம் முன்னணியில் உள்ளது??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, கல்வித்துறையில் இந்தியாவில் தமிழகம் முன்னணியில் உள்ளது??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, GDP யில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, தொழில் வளர்ச்சியில் முன்னணியில் தமிழகம் உள்ளது???
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, இந்தியாவில் பணக்கார மாநிலங்களின் வரிசையில் முன்னணி இடத்தில் தமிழகம் உள்ளது??
திராவிடத்தால் வீழ்ச்சியடைந்தால், எப்படி, இந்தியாவில், தனி நபர் வருமானம் அதிகமாக உள்ள மாநிலங்களின் வரிசையில் முன்னணி இடத்தில் தமிழகம் உள்ளது??

கமல் தேர்தல் ஆணையத்தை விமர்சிக்க தயங்குவது ஏன்?: ஜவாஹிருல்லா

தினகரன் :சென்னை: ஆர்கே நகர் தேர்தல் முடிவு குறித்து ஆணையத்தை விமர்சிக்க கமல் தயங்குவது ஏன்? என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கேள்வியெழுப்பியுள்ளார். முன்னதாக ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மக்கள் ஓட்டுக்கு விலைபோகியதாக கமல் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது

குஜராத் .தமிழக தலித் மாணவர் தற்கொலை முயற்சி: பேராசிரியர்கள் மீது வழக்கு

தலித் மாணவர் தற்கொலை முயற்சி: பேராசிரியர்கள் மீது வழக்குப் பதிவு!மின்னம்பலம் :குஜராத்தில் தமிழக மாணவர் தற்கொலையில் ஈடுபட்டது தொடர்பாகப் பேராசிரியர்கள் உட்பட 13 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
குஜராத், அகமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியில் திருநெல்வேலி, கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாரி ராஜ் என்ற இளைஞர். 3ஆம் ஆண்டு மருத்துவ உயர் படிப்பு படித்துவருகிறார்.
மாரிராஜ் தலித் என்பதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளக் கல்லூரிப் பேராசிரியர்கள் அவருக்கு அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாரி ராஜ் கடந்த சில தினங்களாகவே மன உளைச்சலில் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று (ஜனவரி 5) மாரி ராஜ் விடுதி அறையில் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். நீண்ட நேரம் அவர் எழாததால் சந்தேகமடைந்த மாணவர்கள் அவரை எழுப்பியதில் தூக்க மாத்திரை அதிக அளவு உட்கொண்டது தெரியவந்தது.
மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம்- லாலு பிரசாத் யாதவ் மகன்

மாட்டுத் தீவன ஊழல் வழக்கு ராஞ்சி தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம்- லாலு பிரசாத் யாதவ் மகன்நக்கீரன் :மாட்டுத் தீவன ஊழல் வழக்கு ராஞ்சி தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம்- லாலு பிரசாத் யாதவ் மகன் Fமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம் என லாலு பிரசாத் யாதவ் மகன் மகன் தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார்.  ராஞ்சி ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் சிலர் மீது ரூ.89.27 லட்சம் கால்நடை தீவன ஊழல் வழக்கு தொடரப்பட்டது.

லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டு சிறை!

நக்கீரன் :லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு உள்ளிட்ட 17 பேரை குற்றவாளிகள் என டிசம்பர் 23ம் தேதி ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்தது இவர்களுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படுவதாக கூறியதை அடுத்து லாலு உள்ளிட்டோர் ராஞ்சி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காணொளியில் 2400 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசித்தார். அப்போது, லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ரஜினி கமல் மலேசியாவில் நட்சத்திர ஷோ . அங்கும் ஆன்மீக அரசியல் .. அங்கு அதன் பெயர் இஸ்லாமிய அரசியல் ..

தினபூமி : சென்னை, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நட்சத்திர கலைவிழா நடத்தப்படும் என்று நடிகர் சங்க பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மலேசியாவில் நட்சத்திர கலைவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்காக தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மலேசியா சென்றனர். இதையடுத்து மலேசியாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர், நிர்வாகிகள் கார்த்தி கருணாஸ், பூச்சி முருகன், குட்டி பத்மினி, ரோகினி, பசுபதி, ரமணா, நந்தா, உதயா, ஹேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மலேசியாவில் இன்று 6ம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். மலேசியாவில் உள்ள புக்கிஜாலி அரங்கத்தில் இன்று மாலை இந்த கலை விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடனம், நகைச்சுவை, நடிகர், நடிகைகள் கலந்துரையாடல், சில தமிழ் படங்களின் பாடல் வெளியீட்டு விழா ஆகியவை இடம்பெறுகின்றன. முன்னதாக 6 அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. விஷால், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம்ரவி, ஜீவா ஆகியோர் தலைமையில் இந்த அணிகள் மோதுகின்றன. இது 10 ஓவர் போட்டியாக நடக்கிறது.

முத்தலாக் சட்டம் ... பாஜக மீதுள்ள சந்தேகம் எழுப்பும் கேள்விகள் ....


சுப்பிரமணியசாமி கொடும்பாவி... புதிய தமிழகம் கட்சியினர் 60 பேர் கைது ! சாமிகளுக்குள் ஒரு நாடகம்!

நக்கீரன் : மதுரை விமானநிலையத்துக்கு தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரை வைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டதாக சுப்பிரமணியசாமியை கண்டித்து திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் கொடும்பாவி எரிப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டனர். திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். அப்போது கட்சியினர் கையில் பிடித்திருந்த சுப்பிரமணியசாமியின் முழு உருவப்படத்தை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு அந்த இடமே பரபரப்பு ஆனது.

இந்தியாவின் GDP வளர்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி!!! 6.5% (உண்மை நிலை 4-4.5%) - Link 2

Swathi K :"பஞ்ச் டயலாக்"க்கும், "போலியான விளம்பரத்துக்கும்" வோட்டு போட்டா "போட்டோஷாப் வளர்ச்சியை" மட்டும் தான் பார்க்க முடியும்.. உண்மையான வளர்ச்சியை பார்க்க முடியாது என்பதை பக்தாள்கள் புரிந்துகொள்ள வேண்டிய நேரம்.
கடந்த ஒரு வாரத்தில் வந்த செய்திகள்:😢😢😢
புதிய தொழில் தொடங்குவதற்கான முதலீடு 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி!! விவசாயம், சிறு, குறு மற்றும் சுய தொழில்கள் வரலாறு காணாத வீழ்ச்சி!!! வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு!! தொழில்கள் நஷ்டத்தில் நடக்கிறது. - Link 1
இந்தியாவின் GDP வளர்ச்சி 4 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி!!! 6.5% (உண்மை நிலை 4-4.5%) - Link 2
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாமல் அரசாங்கம் திணறல்.. வேலை இல்லாத மக்கள் சதவிகிதம் உயர்வு!! - Link 3
http://www.livemint.com/…/Fresh-investments-in-India-plunge…
https://www.google.co.in/…/gdp-expected-to-grow-at-6-5-in-2…
http://www.newindianexpress.com/…/indias-half-a-billion-job…
- சுவாதி, திருநெல்வேலி

குஜராத் தாயை மாடியில் இருந்து தள்ளி வீழ்த்தி கொன்ற பேராசிரியர்


உடல்நிலை சரியில்லாத தாயைச் சொந்த மகனே மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த கொடூர சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது. சந்தீப் நத்வானி என்பவர் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிப்புரிந்து வந்தார். இவரின் 64 வயது தாயார் ஜெயாஸ்ரீ பென் (Jayshreeben) பல நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஜெயாஸ்ரீ மாடியிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காவல்துறை சந்தீப்பிடம் விசாரித்தபோது தன் தாய் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.
 ஜெயாஸ்ரீயின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஜெயாஸ்ரீயின் உடல்நிலையைப் பார்க்கும்போது அவர் தானாக நடந்து சென்று மாடியிலிருந்து கீழே குதிக்க வாய்ப்பில்லை’ என்று மருத்துவர்கள் போலீஸிடம் தெரிவித்துள்ளனர். இதனால் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

திருமாவளவன் : கலைஞர் என்னைப் பெயர் சொல்லி அழைத்தார்!

tamilthehindu :கருணாநிதி தன்னை அடையாளங்கண்டு, பெயர் சொல்லி அழைத்ததாக திருமாவளவன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியை இன்று (05-01-2018) கோபாலபுரம் இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்து அவரது உடல்நலன் குறித்து விசாரித்தார். அப்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார்.
பின்னர் வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் நலமுடன் இருக்கிறார். எங்களை நன்றாக அடையாளம் கண்டார், என் பெயரை உச்சரித்தார். அந்த அளவுக்கு உடல் நலம் தேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

வேலை நிறுத்தம் 3-ஆவது நாளாக நீடிப்பு ,,, தமிழகத்தில் அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின்

தமிழகத்தில் அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 3-ஆவது நாளாக நீடிப்புதினத்தந்தி :தமிழகத்தில் அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 3-ஆவது நாளாக நீடித்து வருகிறது. சென்னை, ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தை தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன. இதனால் அந்த தொழிற்சங்கங்களை சேர்ந்

#THE #CASTE #LESS #COLLECTIVE எனும் இசைக்கூடல். இசையை அரசியல்ப் படுத்தும் பா.இரஞ்சித்

மிக பெரிய பொருட்செலவில் அண்ணன் பா ரஞ்சித அவர்கள் நமக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார் நாம் எந்த காரணமும் கூறாமல் அண்ணனின் இம்முயற்சி மாபெரும் வெற்றி அடைய சென்னை நோக்கி படையெடுப்போம் ...
அண்ணன் #பா_ரஞ்சித் அவர்களது முயற்சி மாபெரும் வெற்றியடைய அவருடன் கை கோர்ப்போம்..
#The_Casteless_Collective
// #மேடை_ரெடி #கலைஞர்கள்_ரெடி
உங்களை மகிழ்விக்க நாங்கள் ரெடி...!
மகிழ்ச்சியினுள் திளைத்தெழ நீங்க ரெடியா..!
சமூகநீதியற்ற சமூகத்தில், எல்லாத் தளங்களுக்குமான சமத்துவம் தேடி பயணிக்கும் நீலம் பண்பாட்டு மையத்தின் மற்றுமொரு புதியப்பயணம் தான் #THE #CASTE #LESS #COLLECTIVE எனும் இசைக்கூடல். இசையை அரசியல்ப்படுத்தும் இந் நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்க ஒரு முன்னெடுப்பு.

ஜூடோ ரத்தினம் ... உடம்பில் பல காயங்கள், அந்த ரணம் இன்னும் ஆறல

நக்கீரன் :சினிமாவில் பெரும் சண்டைக் கலைஞர். 1200 படங்களுக்குமேல் ஃபைட் மாஸ்டராக பணியாற்றியவர், இந்தியா முழுமைக்கும் அவரது சண்டைக்காட்சிகள் பேசப்பட்டன. சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார், கமல், ரஜினி என பலப்பல ஹீரோக்களை சண்டை போடவைத்தவர். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "தன்னால் மறக்க முடியாத சண்டைக் காட்சி' என இன்றளவும் குறிப்பிடுவது "முரட்டுக்காளை' திரைப்படத்தில் வரும் ரயில் சண்டைக்காட்சி. ஜப்பானின் சண்டையான ஜுடோ கலையை இந்திய சினிமாவில் புகுத்தியவர் மாஸ்டர் ரத்தினம். அதன்பின்பே ஜுடோ ரத்தினமானார்.
;அந்த ஜுடோ ரத்தினம் சினிமாவை விட்டு ஒதுங்கி வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் வசிப்பதாகக் கேள்விப்பட்டு அவரை சந்தித்தபோது... ""நான் ஒரு முடமானவன். என்னிடம் பேச வந்திருக்கீங்களே'' என சிரித்தபடி வரவேற்றார். அவர் வீடுமுழுக்க அவர் வாங்கிய பதக்கங்கள் நிரம்பியிருந்தன. அவரிடம் பேசியபோது, ""என் குடும்பம் நெசவுத்தொழில் செய்த குடும்பம். எனக்கு 2-வதுக்கு மேல படிப்பு வரல. குடியாத்தத்தில் பிரபலமான திருமகள் நூல் மில்லில் வேலைக்கு ஆள் எடுத்தாங்க. 18 வயதான நான் அந்த மில்லுக்கு வேலைக்கு போனப்ப, நான் ரொம்ப ஒல்லியா இருக்கேன்னு வேலைக்கு எடுக்கல. மேனேஜரோட கால்ல விழுந்து "வேலைக்கு எடுத்துக்குங்க, கஷ்டமான குடும்பம்'னு சொல்லி சேர்ந்தேன்.

வெள்ளி, 5 ஜனவரி, 2018

மம்தா ! வடக்கின் திராவிட சித்தாந்தமாய் வாழும் தீதீயின் பிறந்த தினம் இன்று..

Devi Somasundaram : மம்தா பானர்ஜி... எளிய மனிதர்களின் நம்பிக்கை என்று அறியபட்ட வங்கத்து புயல் மம்தா பானர்ஜி.
நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண். சின்ன வயதிலேயே தகப்பனை இழந்தவர். தன் முயற்சியால் உயர் கல்வியும் ,சட்ட கல்வியும் பயின்றவர். 15 வயதிலே காங்கிரஸ் ஸ்டூடண்ட் விங் ல் இணைந்து அரசியலுக்கு வந்தவர்.
இன்று வங்கத்து முதல்வராய் அறியப்படும் இந்த பெண்மணி .சேல்ஸ் கேர்ல் ,டீயூஷன் டீச்சர், ஸ்டெனோக்ராபராக வேலை பார்த்து ஆர்ம்பகாலத்தில் வாழ்க்கையோடு போராடி இந்த பதவி வரை வந்தவர்..
இப்பொழுதும் வெறும் வெள்ளை நிற காட்டன் புடவையில் எளிய வாழ்வை வாழ்பவர். கொல்கத்தாவில் வசித்தவர்களுக்கு தெரியும். மிக சாதாரணமா அவர் தெருகளில் நடமாடுவதை காணலாம்..தெற்கு கொல்கத்தாவில் ஹரிஷ் சாட்டர்ஜி தெருவில் அவர் வசிக்கும் வீடு சாதாரண செங்கல் தரை போட பட்ட எளிமையான வீடு .மிக தாழ் தளம்..எப்ப மழை வந்தாலும் அவர் வீடு முழுவதும் தண்ணிர் வந்து விடும்..அப்படியே அட்ஜஸ் செய்து கொண்டு வாழ்கிறார்.. திராவிட தலைமைகள் போல் அதிகாலை எழுந்து விடும் இன்னொரு அரசியல்வாதி .2 மணி நேரம் வாக்கிங் .செய்தி வாசிப்பு..

நீதிபதிகளின் சம்பளம் இரண்டு மூன்று மடங்காக உயர்வு ... .1,00,000-லிருந்து ரூ.2 ,80,000-.. நீதிபதிகள் காட்டில் மழை ! நடுத்தெருவில் மக்கள் !

விகடன் :நீதிபதிகளுக்கான 7 வது சம்பள கமிஷனின் சிபாரிசு இன்னும் அமல்படுத்தப்படவில்லை. 7வது சம்பள கமிஷனை அமல்படுத்தி, நீதிபதிகளுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான மசோதா, மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. அடுத்து குடியரசுத் தலைவரின் கையெழுத்தைப் பெற்று சட்டமாகிவிடும். இந்த மசோதாவின்படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சம்பளம், தற்போதைய ரூ.1,00,000-லிருந்து ரூ.2 ,80,000-மாக உயரும். உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சம்பளம் ரூ.90,000-லிருந்து ரூ.2,50,000-மாக உயருகிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.80,000-லிருந்து ரூ.2.25,000-மாக உயருகிறது.
2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் புதிய சம்பள உயர்வு அமலுக்கு 2016-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு தேவை என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தில் 31 நீதிபதிகளுக்குப் பதிலாக 25 பேரே பணியில் உள்ளனர். 24 உயர் நீதிமன்றங்களில் 1,095 நீதிபதிகள் தேவை. மாறாக 682 நீதிபதிகள்தான் பணியில் உள்ளனர்

கந்துவட்டியும் நட்சத்திர நடிகர்களும் கூட்டு களவாணிகள் ... நல்ல திரைப்படங்களின் எதிரிகள் இவர்கள்தான்

வட்டிக்குப் பணம் கொடுக்கிறவர், படத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் தேர்வு வரைக்கும் மூக்கை நுழைப்பார்..!’Ashok-kumar-22_11_12394 வட்டிக்குப் பணம் கொடுக்கிறவர், படத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் தேர்வு வரைக்கும் மூக்கை நுழைப்பார்..!’ வட்டிக்குப் பணம் கொடுக்கிறவர், படத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் தேர்வு வரைக்கும் மூக்கை நுழைப்பார்..!’ Ashok kumar 22 11 12394வட்டிக்குப் பணம் கொடுக்கிறவர், படத்துல நடிக்கிற நடிகர் நடிகைகள் தேர்வு வரைக்கும் மூக்கை நுழைப்பார்..!
 ‘பண ரீதியான’ பாதுகாப்பைப் பெறுவதுதான் ஒரு தயாரிப்பாளரின் முதல் திட்டமிடலாக இருக்க வேண்டும். ஆனால், இன்றைய தமிழ்சினிமா சூழலில் அது சாத்தியமே இல்லாத ஒன்றாக இருக்கிறது. புதிதாக வரும் தயாரிப்பாளருக்கு சினிமாவின் சந்தை தெரிவதில்லை, தமிழகத்தில் உள்ள மொத்த திரையரங்குகளும் குறிப்பிட்ட சிலரின் கன்ட்ரோலில் இயங்கிக்கொண்டிருக்கிறது, வெளியிடுவதில் பல பிரச்னைகளைச் சந்திக்கவேண்டியதாக இருக்கிறது… என நீளும் புகார் பட்டியலிலுக்கு இடையில்தான், தமிழ்சினிமா இயங்கிக்கொண்டிருக்கிறது, தயாரிப்பாளர்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
 ஒரு திரைப்பட உருவாக்கத்தின் ஆதாரமையமே தயாரிப்பாளர்தான். ஆனால், கந்துவட்டிப் பிரச்னையில் ஆரம்பப் புள்ளியே அவர்களிடம் இருந்துதான் தொடங்குகிறது’ என்கிறார், இயக்குநர் ஒருவர். “இங்கே இருக்கும் பல தயாரிப்பாளர்களிடம் பணம் இருப்பதில்லை. சினிமாவில் பல வருடம் நிர்வாகத் தயாரிப்பாளராக இருப்பவர்கள்தான், தயாரிப்பாளர்களாக உருவெடுக்கிறார்கள். அவர்களுக்குத்தான் சினிமா உத்திகள், வியாபாரம் எல்லாமே தெரியும். சிறு பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் சிலர் மட்டுமே இங்கே சொந்தமாக முதலீடு செய்து படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அண்ணா தொழிற்சங்கத்தைக் கொண்டு பேருந்துகளை ஓட்டுவோம் அரசின் வீண் முயற்சி ..

மின்னம்பலம்: புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து சேவை முடங்கியுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை நிறுத்த உடனடியாக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜனவரி 5) வெளியிட்ட அறிக்கையில், “பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். போக்குவரத்துத்துறை அமைச்சர் முன்னிலையிலும் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ‘நிதி இல்லை’ என்ற காரணத்தைக் காட்டி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிராகரித்ததின் விளைவாக, மாநிலம் முழுவதும் இன்றைக்குப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்கள்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருப்பதி : கூட்ட நெரிசலில் குழந்தை உயிரழப்பு

திருப்பதி : கூட்ட நெரிசலில் குழந்தை பலி!
மின்னம்பலம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள், கூட்ட நெரிசலில் சிக்கி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனகாபல்லி பகுதியைச் சேர்ந்தவர் அப்பாராவ். வைகுண்ட ஏகாதசியின் போது ஏழுமலையானை தரிசிக்க இவர் தனது மனைவி, மகன், 2 வயது மகள் நட்சத்திரா ஆகியோருடன் திருப்பதிக்கு சென்றுள்ளார். அங்குச் சென்ற பின்னரே, அவருக்கு கைக்குழந்தைகள் வைத்திருப்போருக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனால், அவர் எழுமலையானைத் தரிசிக்க காத்திருப்பு அறையில் காத்திருந்துள்ளார். அன்று இரவு கூட்டம் அதிகமாக இருந்ததால், கோயிலுக்குள் விரைவாகச் செல்லும்படி தேவஸ்தான ஊழியர்கள், அவர்களை இழுத்துத் தள்ளியுள்ளனர் .

குஜராத் மருத்துவக்கல்லூரியில் தமிழக மாணவர் தற்கொலை முயற்சி ! சாதி கொடுமை !

தினகரன் அகமதாபாத்: குஜராத்தில் தமிழக மாணவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். பிஜே கல்லூரியில் படித்து வரும் தமிழக மாணவர் மாரிராஜ் என்பவர் மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். சாதிக் கொடுமையால் மாணவர் மாரிராஜ் தற்கொலைக்கு முயன்றதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Devi Somasundaram :. . நீட் மூலம் நம்ம காலேஜ் சீட் டையும் அவனுக புடிச்சு கிறாங்க..கஷ்ட்ட பட்டு போராடி சீட் வாங்கி படிக்க அவஙக ஸ்டேட் போனா இப்டி டார்ச்சர் செய்து தற்கொலைக்கு தூண்டி சாவடிக்கிறாங்க. . தமிழ் நாட்டு மக்கள் இவனுங்க தின்ற சோத்துல மண் அள்ளியா வச்சோம்...ஏன் இப்டி செய்றாங்க

இந்திரா பானர்ஜி : ஊதியம் திருப்தி இல்லையென்றால் வேறு வேலை பாருங்க .... நீதிபதி சரியில்லை என்றால் .... கடாச வழி இருக்கா ?

தினமலர் :வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு சென்னை: தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், அரசின் ஊதிய ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து நேற்று இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாராகி என்ற வழக்கறிஞர் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ‘போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நோட்டீஸ் கொடுக்காமல் நடைபெறும் அந்த போராட்டத்தை தடுக்க வேண்டும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று பிற்பகல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

லாலுவிடம் கடுமையாக நடந்து கொள்ளும் நீதி துறை.... ரொம்பத்தான் நேர்மையோ?

 லாலு பிரசாத் யாதவ், Lalu Prasad Yadav,மாட்டு தீவன ஊழல், cow fodder scam, தபேலா ,Thapela, சி.பி.ஐ நீதிமன்றம், CBI court,  குற்றவாளி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ,Rashtriya Janata Dal, நீதிபதி சிவபால் சிங் ,udge Shivpal Singh, லாலு,Lalu,சிறை, jail,தினமலர் :ராஞ்சி : சிறையில் அதிகமாக குளிர்கிறது என கூறிய லாலுவிடம், குளிர்கிறது என்றால் தபோலாவோ, ஆர்மோனியமோ வாசியுங்கள் எனக் கடிந்து கொண்டார். கால்நடை தீவன ஊழல் வழக்கில், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள, பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிராத் யாதவ், 69, மற்றும், 15 பேருக்கு, நேற்று(டிச.,4) தண்டனை அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் அண்மையில் உயிரிழந்த வக்கீல் இருவருக்கு இரங்கல் தெரிவித்து கோர்ட் நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது.
 நேற்று கோர்ட் அறையிலிருந்து வழக்கு சம்பந்தப்பட்ட வக்கீல்களை நீதிபதி சிவபால் சிங் வெளியேற்றினார். பின், லாலுவிடம், அவருக்கு சாதமாக தீர்ப்பு வழங்கும்படி பல பேரிடம் இருந்து போன் அழைப்பு வந்ததாகவும், ஆனால் தான் சட்டப்படி தீர்ப்பளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும் போன் செய்தவர்கள் குறித்த விவரங்களை நீதிபதி வெளியிடவில்லை. உடல்நலப்பிரச்னைகள் இருப்பதால் தண்டனையில் கருணை காட்டும்படி அவரது வக்கீல் வாதிட்டார்.

தமிழகத்தில்18 சட்டசபை தொகுதிகள் காலி.. தினகரன் புது எம்எல்ஏ.. அரசு வெப்சைட்டில்


Mayura Akilan - Oneindia Tamil தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகள் இவைதான்!- வீடியோ சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளும் காலியாக உள்ளதாகவும், தினகரன் சுயேச்சை எம்எல்ஏ எனவும் அரசு வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சட்டசபை தலைவர் தனபாலிடம் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதனிடையே, கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாக திடீரென தெரிவித்து அணி மாறினார். இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் அரசிதழிலும் வெளியிடப்பட்டு அவர்கள் வகித்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவுக்கு 2 வது இடம் ...ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும் இடைவெளி.. மிகவும் ஆபத்தான கட்டம் ..

அதிகரித்து வரும் நிதி சமத்துவமின்மை: புதிய இந்தியா யாருக்காகப் பிறக்கும்?
இந்தியாவில் ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும் இடைவெளி உச்சத்தை தொட்டு நிற்கிறது என்றது கிரெடிட் சூயிஸ் நிறுவனத்தின் குளோபல் வெல்த் ஆய்வு. குறிப்பாக உலக அளவில் நிதி சமத்துவமில்லாத நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இது மிகவும் ஆபத்தான நிலைமை என்கிறது அந்த ஆய்வு.
பணக்காரர்களின் சொத்து மதிப்பு மேலும் அதிகரிக்க அதிகரிக்க, தராசின் மற்றொரு தட்டு அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. இந்திய பணக்காரர்கள் உலக பணக்காரர்கள் வரிசைப் பட்டியலில் இடம் பெறும் அதே நாட்டில்தான் கடன் சுமை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் அன்றாட நிகழ்வாக இருக்கிறது என்கிற உண்மை இதை உணர்த்துகிறது.

ஹார்வர்டு தமிழ் இருக்கை இன்னும் 5 கோடி தேவை ..... ரஜினி கமல் விஜய் விஷால் கொடுக்கலாமே?

tamilthehindu :ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியானது வேறுபல முக்கிய அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கைகள் அமைக்கும் செயல்பாட்டையும் தூண்டியிருக்கிறது.
நியூயார்க்கிலுள்ள ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஒப்புதல் பெற்றிருக்கிறார் மருத்துவர் பாலா சுவாமிநாதன். அதேபோல் கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை உருவாக்க இரண்டு மில்லியன் டாலர்கள் கொடுத்திருக்கிறார் புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழரான ரவி குகதாசன். இந்தப் புதிய முயற்சிகள் மூலம், ஹார்வர்டு தமிழ் இருக்கை உலகளாவிய தமிழர்களின் மொழி, பண்பாடு சார்ந்த ஒற்றுமை உணர்வாக மாறியிருப்பது தமிழ் பற்றாளர்களுக்கும், தமிழ்த் தொண்டர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் உற்சாகத்தைத் தந்திருக்கிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 6 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூபாய் 40 கோடி) ஆதார நிதி தேவை. அதைத் திரட்டும் முயற்சிகள் தற்போது இலக்கை வெற்றிகரமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

2.0 பிளாக் டிக்கெட் ... ரஜினி ரசிகர்கள் 1000 2000 3000 ரூபாய் கொடுத்து தானே படம் பார்க்கிறார்கள்

ரஜினி + அரசியல் + நேர்மை + கொள்கை = 2.0 பிளாக் டிக்கெட் கார்த்திக் 
thetimestamil : ரஜினி தனிக்கட்சி தொடங்கப்போகிறார், ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது அவர் விருப்பம். சீமான் சொல்வதைப்போல தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டுமென்றால், எடப்பாடி கூட தமிழன் தான், வைகுண்டராஜன் கூட தமிழன் தான், சின்னம்மா கூட தமிழச்சி தான் அந்த இனவாதத்திற்குள் இருந்து ரஜினியை எதிர்க்க முடியாது.காவிரி விடயத்தில் கர்நாடத்திடம் மன்னிப்பு கேட்டார் ரஜினி, அது அங்கு பிறந்ததால் அல்ல அவர் படம் அங்கும் ஓட வேண்டும் என்பதால் மட்டுமே. இங்கு இனவாதத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் பண்ண முடியாது. அதன் அரசியல் செல்வாக்கு ஓரளவு தான்.
ரஜினி பேசிய இரண்டு விடயங்கள் இங்கு முக்கியமானது
1) கொள்கை (கொளுக ) என்னனு கேட்டாங்க தல சுத்திடுச்சு
2) போராட்டம் பண்ணறதுக்கு நிறைய பேர் இருக்காங்க
முதலில் இரண்டாம் பாயிண்டில் இருந்து செல்வோம். அதாவது ரஜினியை இழிவுபடுத்துவதாக அவர் ரசிகர்கள் கொதிக்கிறார்கள் , இது போராட்டக்காரர்களை இழிவுபடுத்துவதாக இல்லையா. நீங்கள் மரத்தை சுற்றி ஐஸ்வர்யா ராயுடன் டூயட் பாடிக்கொண்டிருந்த பொழுது. தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியவர்கள் பார்த்து ஏளன பார்வை. நீங்கள் பத்து பேரை அடித்து திரையில் பறக்கவிட்டுக்கொண்டு இருந்த பொழுது, போராடி பத்து போலீஸ் நடுவில் தடியால் அடி வாங்குகிறானே அவனைப்பற்றி உங்களுக்கு தெரியுமா ஆன்மிக அரசியலே? எத்தனை விதமான அரசியல் போராட்டங்கள் களத்திலே உள்ளது என்பது தெரியுமா?

ஆர் எஸ் எஸ் நாட்டை பாதுகாக்கிறது... உச்ச நீதிமன்ற Ex நீதிபதி கே,டி,தாமஸ் ...

அரசியலமைப்பு, ஜனநாயகம், ராணுவம், ஆர்.எஸ்.எஸ். சேர்ந்துதான் நாட்டை பாதுகாக்கின்றன: ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸ்
thetimestamil :அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம், ராணுவம் ஆகியவற்றுடன் ஆர்.எஸ். எஸ்ஸும் சேர்ந்து நாட்டை பாதுகாக்கின்றன என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்.எஸ்.எஸ் பயிற்சியாளர்களுக்கான முகாமில் பேசும்போது அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
“அவசரநிலை வராமல் நாட்டை பாதுகாத்த முழுபெருமையும் ஆர். எஸ். எஸ் இயக்கத்தையே சாரும்” எனவும் அவர் பேசியுள்ளார்.
“பாம்புகளிடம் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் விஷம் இருப்பதுபோல, இவர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ளவே பயிற்சி செய்கிறார்கள்; மற்றவர்களை தாக்க அல்ல. ஆர்.எஸ்.எஸ். இயக்கும் உடலை மேம்படுத்தும் தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை சொல்லித்தருவதை நான் வரவேற்கிறேன்.  ஆர்.எஸ்.எஸ். எடுத்துக்கொள்ளும் பயிற்சிகள் சமூகத்தின் மீதான தாக்குதல் நடக்கும்போது நாட்டை பாதுகாக்க பயன்படும் என நான் நம்புகிறேன்.

அனில் அம்பானி : 2ஜி வழக்கில் சித்திரவதை, அதிர்ச்சி, மன வேதனை, மன அழுத்தம்......

Prasanna VK - GoodReturns Tamil :இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அனில் அம்பானி, தனது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறிய நிலையில் 43,000 கோடி ரூபாய் அளவிலான கடனை, தனது நிறுவன சொத்துகளை விற்பனை செய்து கடன் அளவை 6,000 கோடி ரூபாயாகக் குறைத்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் தான் அனுபவித்த டார்ச்சர்களை விளக்குகிறார் அனில் அம்பானி. 
கடன் நெருக்கடி கடன் நெருக்கடி ஆர்காம் நிறுவனத்தின் கடன் அளவு தலைக்கு மேல் அதிகரித்து நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது, அனில் அம்பானி தனது 84 வயதான தாய் கோகிலாபென் அம்பானியை சந்தித்தார். 
அப்போது கோகிலாபென் அம்பானி, அனில் அம்பானியிடம் கடன் கொடுத்தவர்களுக்கு ஒரு ரூபாய் கூட நஷ்டம் வரக்கூடாது எனத் தெரிவித்தார். அதிரடி முடிவுகள் அதிரடி முடிவுகள் இதன் பின்னரே ஆர்காம் நிறுவனத்தின் டவர் வர்த்தகம் மற்றும் டவர்கள், ரியல் எஸ்டேட் சொத்துக்கள் என அனைத்தையும் விற்கத் தயாராகினார் அனில் அம்பானி. ஆர்காம் நிறுவனத்தின் 4 வையர்லெஸ் இன்பராஸ்டக்சர் சொத்துக்களை 23,000 கோடி ரூபாய்க்கு தனது அண்ணன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவிற்கும், இதர சொத்துகளை விற்பனை செய்து கடன் அளவை 6,000 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளார். 

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்க தடை கோரும் புகார்கள் ... காவிஅரசு மீது ஏன் இந்த காய்ச்சல்?

மின்னம்பலம் :கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அளிக்கப்பட இருப்பதாகவும் அவருக்கு அளிக்கக்கூடாது என்றும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் ஞானபீட விருது அளிக்கும் நிர்வாகத்தினருக்குச் சென்றிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
புகார் பீடமாகும் ஞானபீடம்!இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஓர் உயரிய விருது ஞானபீட விருது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 16 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு இது வழங்கப்படுகிறது. இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் ஒப்புதல் மற்றும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளின்படி இவ்விருது அறிவிக்கப்படும். தமிழில் இதுவரை ஜெயகாந்தன், அகிலன் ஆகிய இருவர் மட்டுமே இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

மருந்து மாபியா! ஜெனரிக் மருந்துகள் விலை மலிவு ... ஆனால் அவை ஏன் கிடைப்பதில்லை?


சிறப்புக் கட்டுரை: ஏன் மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதில்லை?
மின்னம்பலம் ர.ரஞ்சிதா: மருந்துக் கடைக்குப் போய் மருந்துச் சீட்டை நீட்டுகிறீர்கள். மருந்துகளை எடுத்துக்கொடுக்கும் கடைக்காரர் 500 ரூபாய் என்கிறார். உங்களுக்கு அதிர்ச்சி. ‘ஐந்நூறா?’ என்று கேட்கிறீர்கள். கடைக்காரர் ஒரு நிமிடம் தயங்கி, ‘விலை மலிவாகவும் இதே மருந்துகள் இருக்கின்றன’ என்கிறார். ‘மருந்தில்கூடவா மலிவுப் பதிப்பு’ என்று உங்களுக்குக் குழப்பம். ‘டாக்டர் சொன்ன மருந்துகளை வாங்காவிட்டால் ஏதாவது ஏடாகூடமாகிவிடுமோ’ என்ற பயம். 500 ரூபாயைக் கொடுத்துவிட்டு மருந்துகளை வாங்கிக்கொண்டு பெருமூச்சுடன் நடையைக் கட்டுகிறீர்கள்.
ஒரே மருந்து இருவேறு விலைகளில் கிடைக்கிறது என்று கடைக்காரர் சொன்னது உண்மைதானா? உண்மை என்றால் அது எப்படிச் சாத்தியமாகிறது?
ஒரே மூலக்கூறு, பல தயாரிப்புகள்
மருந்துக் கடைக்காரர் குறிப்பிட்டது ‘ஜெனரிக்’வகை மருந்து. மருத்துவர் பரிந்துரைத்தது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்து. அதாவது பிராண்டட் மருந்து. இரண்டு மருந்துகளும் ஒரே மூலக்கூறுகள் கொண்டவைதான். ஆனால், நிறுவனத்தின் பிராண்டட் மருந்து விலை அதிகம். அந்த மருந்தின் மூலக்கூறுகளைக் கொண்ட ஜெனரிக் மருந்து விலை குறைவு. இந்த வித்தியாசத்தை ஏற்படுத்துவது பிராண்டட் மருந்தைத் தயாரிக்கும் நிறுவனத்தின் லாப விகிதம்தான்.

அவை முன்னவர்: எடப்பாடி அடித்த மூன்று மாங்காய்கள்!

அவை முன்னவர்: எடப்பாடி அடித்த  மூன்று  மாங்காய்கள்!சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 8ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், தினகரன் சுயேச்சையாக வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்திருக்கும் நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நேற்று வரை அவை முன்னவராக இருந்த அமைச்சர் செங்கோட்டையன் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கெனவே செங்கோட்டையன் பல வருத்தங்களில் இருக்க, இப்போது அவரது வருத்தங்களின் மீது இந்த வருத்தமும் ஏறி உட்கார்ந்துகொண்டிருக்கிறது.
ஓ.பன்னீரை அவை முன்னவராக நியமித்ததன் மூலம் எடப்பாடி பழனிசாமி ஒரே கல்லில் இரண்டல்ல, மூன்று மாங்காய்களை அடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர். அந்த மாங்காய்களைப் பற்றி அவர்களிடமே விசாரித்தோம்.
“2011 முதல் 2016 வரை முதல்வராக அம்மா இருந்தபோது பன்னீர்தான் அவை முன்னவராக இருந்தார். அவை முன்னவர் என்றால் அவையில் எந்த உறுப்பினர் பேசும்போதும் குறுக்கிட்டுப் பேசலாம். அரசின் தீர்மானங்களை முன்மொழியலாம். முதல்வர் என்பவர் சட்டமன்ற ஆளும் கட்சியின் தலைவர் என்றால், அவை முன்னவர் என்பவர் சபாநாயகருக்கு அடுத்து அவையில் முக்கியமானவர்.

போக்குவரத்து ஊழியர் பேச்சுவார்த்தை தோல்வி.. வேலை நிறுத்தம் தொடரும் ...

ஸ்தம்பிக்கும் தமிழகம்!மின்னம்பலம்: பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நேற்று இரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு, பணிக்கொடை மற்றும் ஓய்வூதியத்தை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்; ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஒப்பந்தப் பலன்களை ஓய்வூதியத்தோடு இணைந்து வழங்க வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். போக்குவரத்து ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உயர்வு அளிக்காவிட்டால் ஜனவரி 3ஆம் தேதிக்குப் பிறகு போராட்டம் அறிவிக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்திருந்தன.
இந்தச் சூழ்நிலையில் சென்னை குரோம்பேட்டை பணிமனையில் நேற்று (ஜனவரி 4) மீண்டும் 13ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாகப் போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 36 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

கமல் அரசியலுக்கு வருவது உறுதியாம் ... தேர்தல் தமிழக சட்ட மன்றத்துக்கா இல்ல நடிகர் சங்கத்துக்கா ?

Kollywood,Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்,போட்டி,கமல்,திட்டவட்டம்தினமலர்: நடிகர் ரஜினி, அரசியலில் நுழைந்துள்ள நிலையில், அவருக்கு முன், அரசியல் அறிவிப்பு வெளியிட்ட கமல், 'தன் முடிவில் மாற்றம் இல்லை' என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' மாநில அரசை விமர்சித்து, அரசியல் பதிவுகளை, கமல் வெளியிட்டு வந்தார். அதற்கு, அமைச்சர்கள் மற்றும், பா.ஜ.,வினரிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தனிக்கட்சி துவங்கி, அரசியலில் குதிக்கப் போவதாக, கமல்< அறிவித்தார். அதற்கு முன், திரைப்பட பணிகளை முடிப்பதற்காக, அமெரிக்கா சென்றுள்ளார்.

செங்கோட்டையன் பதவி பறிப்பு ... தினகரன் பக்கம் ....?

வெப்துனியா :தமிழக சட்டப்பேரவை அவை முன்னவராக இருந்த அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டு, அந்த பொறுப்பு மீண்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசம் கொடுக்கப்பட்டது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பதவிகள், பொறுப்புகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதால் செங்கோட்டையனும் அப்செட்டில், அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். தனது பேட்டியில் எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் துரோகிகள் என விமர்சித்த தினகரன் செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசினார். செங்கோட்டையன் வயதில் மூத்தவர், அனுபவம் வாய்ந்தவர். அவரை நீக்கிவிட்டு மீண்டும் அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டது பதவியை தக்க வைப்பதற்காக செய்யப்பட்ட செயல் என தெரிவித்தார்.

ஆதார் தகவல்கள் ரூபாய் 500 விற்கப்படுகிறது ? ஆணையம் மறுப்பு

ரூ.500க்கு ஆதார் தகவல்கள் விற்கப்படுகிறதா? தனித்துவ அடையாள ஆணையம்  மறுப்புதினத்தந்தி :ரூ.500க்கு ஆதார் தகவல்கள் விற்கப்படுகிறதா? தனித்துவ அடையாள ஆணையம் மறுப்பு Facebook Google+ Mail Text Size Print ரூ.500க்கு ஆதார் தகவல்கள் விற்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு தனித்துவ அடையாள ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. #Aadhaar #UIDAI ஜனவரி 05, 2018, 07:02 AM புதுடெல்லி, சிலர் ரூ.500 பெற்றுக்கொண்டு ஆதார் விவரங்களை கசியவிட்டு வருவதாக வெளியான ஊடகச் செய்திகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையமான உதாய் (யூஐடிஏஐ) மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “ஆதார் விவரங்கள் கசிவதற்கு வாய்ப்பில்லை. அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.பொதுமக்களின் ஆதார் விவரங்களைத் திருத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளுக்கும், மாநில அரசு அதிகாரிகளுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.