இந்த மொழி பேசும் மக்கள் எல்லாம் இந்தி மொழியை பின்பற்றயதால் இவர்களின் சினிமா தொழில் அடியோடு காணாமல் போய் விட்டது. சென்னையை மையமாக கொண்டு தென்னிந்திய சினிமா கருக்கொண்டதால் சகல தென்னிந்திய மொழி சினிமாக்களும் இந்தி ஆதிக்கத்தில் இருந்து தப்பி பிழைத்தது . அதுமட்டுமல்ல இவை இன்று இந்தி சினிமாவை பல வழிகளிலும் முந்துக்கொண்டுதான் செல்கிறது . தென்னிந்திய சினிமாவின் பல துறைகளும் இந்தி சினிமா வியாபாரத்தையும் கவனித்து கொள்கிறது . பல ஆயிரக்கணக்கான கோடிகளில் வர்த்தகமும் இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பும் மாநில மொழி சினிமா துறை வழங்குகிறது.
இந்தி ஆதிக்கத்தின் பின்னணியில் வெறும் பார்ப்பனர்கள் மட்டுமல்ல வடஇந்திய முதலாளிகளும் உள்ளார்கள்.


dinakaran:
சென்னை: திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்
தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 13
உயிர்களைக் காவு வாங்கிய நீட் தேர்வைத் தமிழகத்தில் ரத்து செய்ய
வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும்
நிலையில், மக்கள் பாதை இயக்கத்தினர் கடந்த 14ம் தேதி முதல் சாகும்வரை
காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கையெழுத்து இயக்கப்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்
கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யக் கோரி மக்கள் பாதை
இயக்கத்தின் தலைமையகமான, சென்னை சின்மயா நகரில் அமைந்துள்ள அலுவலகத்தில்
நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.


.hindutamil.in :பேரவை
உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட
18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்குகளை விசாரிப்பதிலிருந்து விலகுவதாக சென்னை
உயர் நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு அறிவித்துள்ளார்.












BBC :இந்திய
பிரதமர் நரேந்திர மோதி அமைச்சரவையில் மத்திய உணவு பதப்படுத்துதல் மற்றும்
தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது பதவியில்
இருந்து வியாழக்கிழமை மாலை விலகியிருக்கிறார். இது தொடர்பான கடிதத்தை
பிரதமர் நரேந்திர மோதியின் நாடாளுமன்ற அலுவலகத்தில் அவர் அளித்துள்ளார். மத்தியில்
ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஹர்சிம்ரத்
பாதல் அங்கம் வகிக்கும் ஷிரோமணி அகாலி தளம் கட்சி உள்ளது. 





பெங்களூரு: சொத்து
குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட
நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதியில் இருந்து
அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிறார். அவரது தண்டனை
காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில் சசிகலா விடுதலை
குறித்து செய்திகள் வெளியாகி வந்தன.
dinamani : பிகாா் மாநிலத்தில் காணொலி முறையில் நலத்திட்டங்களை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த பிரதமா் மோடி. உடன் மாநில முதல்வா் நிதீஷ்குமாா்.
பிகாரின் நகரப்பகுதிகளில் ரூ.541 கோடி
செலவில் மேற்கொள்ளப்படவுள்ள 7 கட்டுமானப் பணிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி
செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா்.




dhinakaran :சென்னை: இந்தி மொழியை காப்பாற்றுவதை விட இந்திய
மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும் என்று
மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது
முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டின் உள்துறை அமைச்சராக
இருக்கும் அமித்ஷா, இந்தி மொழி இந்நாட்டை ஒருங்கிணைப்பதாகச் சொல்லி
இருக்கிறார். பன்முகத் தன்மையுடன் பரந்து விரிந்திருக்கும் இந்நாட்டை, ஒரு
சில மாநில மக்கள் மட்டுமே பேசும் மொழி எப்படி ஒருங்கிணைக்க முடியும்?.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் கெடுக்கும்
ஒன்றாகத்தான் இந்தி இருக்கிறது என்பதை அமித்ஷா உணர வேண்டும். இந்தியை
காப்பாற்றுவதை விட, கொரோனாவில் இருந்து இந்தியரை காப்பாற்றுவதில் மத்திய
உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்
கூறியுள்ளார்








BBC :”நீட் போன்ற ’மனுநீதி’ தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நீட் தேர்வுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வரும் நடிகர் சூர்யா, தற்போது தமிழகத்தில் நீட் அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.அனைவருக்கும்
சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை
உருவாக்குகிற கல்வி முறையை சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின்
நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்.