சனி, 28 ஏப்ரல், 2012

பிரபல நடிகர்விக்னேஷ். ரூ 20 கோடி நில மோசடி

Vignesh ரூ 20 கோடி நில மோசடி: உயிரோடு இருக்கும் மூதாட்டி இறந்ததாக சான்றிதழ் வாங்கிய பிரபல நடிகர்!

 
சென்னை: ரூ 20 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க, உயிரோடு இருக்கும் 85 வயது மூதாட்டியை இறந்துவிட்டதாக சான்றிதழ் பெற்று மோசடி செய்துள்ளார் நடிகர் விக்னேஷ்.
சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வீரம்மாள் (85). இவருக்கு கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் 5 கிரவுண்ட் நிலம் உள்ளது. அதன் இன்றைய சந்தை மதிப்பு 20 கோடி ரூபாய். வீரம்மாளுக்கு சின்னத்தம்பி என்ற மகன் இருந்தார். அவர் இறந்து விட்டார்.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தாவை சம்பந்தப்படுத்துவது

Nithyanandaமீனாட்சி அம்மன் கோயிலை மதுரை ஆதீனத்துக்குள் கொண்டு வருவார் நித்யானந்தா! - மதுரை ஆதீனம்

மதுரை: இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள நித்தியானந்தா, மதுரை மீனாட்சியம்மன் கோயிலை மதுரை ஆதீன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார், என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக நித்யானந்தாவை நேற்று பெங்களூரில் நடந்த விழாவில், மதுரை ஆதீனம் பட்டம் சூட்டினார்.
பல்வேறு குற்றச்சாட்டுகள், வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்தது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பந்தா பரமசிவம் படத்தின் Hindi ரீமேக் ஹவுஸ்புல் 2 House full

இந்தியில் 100 கோடி! தமிழில் 2 கோடி!தமிழில் ரிலீஸாகி சரவெடி வெடித்த படங்கள், ஒரு சில சமயங்களில் இந்தியில் ரிலீஸாகும் போது புஸ்வானம் ஆகிவிடுகின்றன.தற்போது இந்தியில் ரிலீஸாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் “ஹவுஸ்புல் 2”. 
இந்த படம் ரிலீஸான சில நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டதாம். இதற்கும் தமிழ் சினிமாவிற்கும் என்ன தொடர்பு என்றால், இந்த படம் 2003ல் தமிழில் வெளியான “பந்தா பரமசிவம்” என்ற படத்தின் ரீமேக் என்கிறார்கள். பந்தா பரமசிவம் ஒரு காமெடி படம். பந்தாபரமசிவம் படத்தின் பட்ஜெட் 2 கோடி ரூபாய் தான். அந்த படத்தை இந்தியில் 79 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்து 130 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்து விட்டார்கள். ஆனால் ’பந்தா பரமசிவம்’ படமும் ’மாட்டுப்பெட்டி மச்சான்’ என்ற மலையாள படத்தின்ரீமேக்காம்.;"வெளிநாடுகளில் அதிக அளவில் திரையிடப்பட்ட நான்காவது பெரிய படம் என்ற அந்தஸ்தத்தை ஹவுஸ்புல் 2 பெற்றுள்ளது.

சுயமரியாதைத் திருமணம் அற்புதமான வாழ்வியல் சிந்தனை

தஞ்சையில் உலக புத்தக நாளை முன்னிட்டு சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும் நூல் அறிமுக விழா!

எஸ்.எஸ்.இராஜ்குமார் சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும் நூல் வெளியிட முனைவர் ரெ.கணேசன், நூலகர் வி.சிவகாமி, ஆசிரியர் ந.கலைச்செல்வி, கண்ணன், தி.மு.க. தொ.அருளானந்தசாமி, சி.அமர்சிங் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உடன் பதவாளர் முனைவர் மு.அய்யாவுதஞ்சை, ஏப். 27-உலக புத்தகநாள் விழாவை முன்னிட்டு தஞ்சையில் 23.4.2012 அன்று மாலை 6.30 மணியளவில் ந.பூபதி நினைவு பெரியார் படிப் பகம் சார்பில், படிப்ப கத்தில் சுயமரியாதைத் திருமணம் தத்துவதும் வரலாறும் நூல் அறிமுக விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மீண்டும் மோடிக்கு விசா இல்லை; அமெரிக்கா அறிவிப்பு


வாசிங்டன், ஏப். 26- குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதில்லை என்ற கொள்கை முடிவில் மாற்றம் இல்லை என்று அமெரிக்கா மீண்டும் திட்டவட்டமாகத் தெரி வித்துள்ளது.
மோடிக்கு விசா வழங்க வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு அமெரிக்க எம்.பி. வால்ஸ் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப் பிய கேள்விக்குப் பதி லளித்த அமெரிக்க வெளி யுறவுத்துறைச் செய லாளர் விக்டோரியா நுலந்த் கூறுகையில், நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்பது 2005 ஆம் ஆண்டே முடிவெடுக்கப்பட்டது. அதில் எந்த ஒரு மாற்ற மும் இல்லை என்றார்.

8 வயது மாணவியை 35 வயது பேராசிரியர் திருமணம் செய்தார் சட்டம் தூக்கம்

8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த பேராசிரியர்ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெத்தமானியம் மண்டலம் தாடிமாகுலப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சுனில்ரெட்டி என்பவரது 13 வயது மகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.இந்த பெண் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது திருமணத்திற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ரமேஷிடம் சென்றும் அறிவுரை கூறினர். இதை ஏற்க அவர் மறுத்துவிட்டார். ரமேஷூக்கு, தங்களது மகளை திருமணம் செய்து வைப்பதில் மாணவியின் பெற்றோர் பெரிதும் விரும்பினர்.

வீரபாண்டியார்: திமுக தலைவராக யார் வந்தாலும் ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன்

சேலத்தில், செவ்வாய்ப்பேட்டை, அஸ்தம்பட்டி பகுதி, தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசினார். அப்போது அவர், தி.மு.க., தலைவராக யார் வந்தாலும் நான் ஆதரிக்கத் தயாராகவே உள்ளேன். ஆனால், உள்ளூரில் எனக்கு எதிராக சதி வலை பின்னுகின்றனர்.

லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சித் தேர்தலின்போது, பதவி வேண்டி என்னைச் சந்திக்க வருபவர்களைக் காட்டிலும், கட்சிக்காக உண்மையாகத் தொண்டாற்றக்கூடிய நீங்கள் தான் எனக்கு முக்கியம்.நான் மாவட்டச் செயலராக வந்தால் தான், இங்கு மேடையில் அமர்ந்து இருப்ப வர்கள், மீண்டும் மேடையில் அமர முடியும். வேறு யாராவது வந்தால், வேறு யாராவது தான் மேடையில் அமருவர்’’என்று கூறினார்

தி.மு.க.,வில் முடிவுக்கு வந்தது "நோட்டீஸ்' பிரச்னை: தயாளுவால்

தி.மு.க.,வில் அனைவரும் கருணாநிதி ஆட்கள் தான்,'' என மத்திய அமைச்சர் அழகிரி கூறியதன் மூலம் "சகோதர யுத்தத்தால்' சர்ச்சையை ஏற்படுத்திய "நோட்டீஸ்' விவகாரம் முடிவுக்கு வந்தது.

கட்சி பொருளாளர் ஸ்டாலின் ஏப்.,14, 15ல், மதுரை மாவட்டத்தில் நடத்திய இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வு, பொதுக்கூட்டத்தில் அழகிரி ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை என, சர்ச்சை எழுந்தது. அழகிரி ஆதரவு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க, ஸ்டாலின் வலியுறுத்தியதால், 17 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு, "அழகிரி ஊரில் இல்லாதபோது, அவருக்கு தகவல் தெரிவிக்காமல், ஸ்டாலின் வந்ததால் நாங்கள் பங்கேற்கவில்லை' என தலைமைக்கு விளக்கம் அளித்தனர்.

Stink ஆயுத பேர ஊழல் வழக்கில் BJP பங்காரு லட்சுமண் குற்றவாளி

புதுடில்லி: தெகல்ஹா இணையதளம் அம்பலப்படுத்திய, போலி ராணுவ ஆயுத பேர ஊழல் வழக்கில், பா.ஜ., முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமண் குற்றவாளி என, டில்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த 2001ல் பா.ஜ., தலைவராக இருந்தவர் பங்காரு லட்சுமண், 72. தெகல்ஹா என்ற இணையதளத்தைச் சேர்ந்த சிலர், தங்களை பிரிட்டனின் ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான, "வெஸ்ட் என்ட் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் பிரதிநிதிகள் எனக் கூறி, அப்போது பங்காரு லட்சுமணை அணுகினர். டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், பங்காருவை இவர்கள் சந்தித்தனர். அப்போது, "எங்கள் நிறுவனத்தால் அதிநவீன பைனாகுலர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை இந்திய ராணுவப் பயன்பாட்டுக்கு வாங்கும்படி, ராணுவ அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க வேண்டும்' என, பொய்யாகக் கூறினார். இதை நம்பிய பங்காரு லட்சுமண், இதற்காக அவர்களிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக் கொண்டார்.

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

Automatic கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரிப்பு

Automatic Cars
 
ஆட்டோமேட்டிக் கார்கள் என்றால் அலர்ஜியாக இருந்த இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது தங்களது விருப்பதை மாற்றிக்கொண்டுள்ளனர். தற்போது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார்களை வாங்குவதில் இந்திய வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில்தான் ஆட்டோமேட்டிக் கார்கள் அதிக வரவேற்பை பெற்றிருந்தன. இந்த நிலையில், இந்தியாவிலும் தற்போது ஆட்டோமேட்டிக் கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதிக மைலேஜ் தராது என்பதால், இந்தியாவில் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களே விற்பனையில் சாதித்து வந்தன. ஆனால், நிலைமை தற்போது வேகமாக மாறி வருகிறது.

50 ஆண்டுகளில் ஆண் மலடு அதிகமாகும்: எச்சரிக்கை

Sperm
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் மாறிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.

கிரிமினல் கும்பல்கள் சட்டபூர்வமான பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர்

மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அள்ளப்பட்ட கனிமங்களையும் இரும்புத்தாதுவையும் ஏற்றிவந்த டிராக்டரைத் தடுத்து நிறுத்திய நரேந்திரகுமார் எனும் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியின் மீது சுரங்க மாஃபியாக் கும்பல் டிராக்டரை ஏற்றிக் கொன்றுள்ளது. சுரங்க முறைகேட்டைத் தடுக்க உயரதிகாரிகளிடம் நரேந்திரகுமார் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. கொள்ளையர்கள் பா.ஜ.க. ஆட்சியின் பாதுகாப்பின் கீழ் அஞ்சாமல் கொள்ளையைத் தொடர்ந்துள்ளனர். மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முதல் அமைச்சர்கள், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வரை அனைவரும் சட்டவிரோத சுரங்கக்கொள்ளை நடத்துவதாக முன்னாள் காங்கிரசு முதல்வர்  திக்விஜய் சிங் குற்றம் சாட்டியிருக்கிறார்.

மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் நித்தியானந்தா 1250 ஏக்கர் நிலம் அனைத்து சொத்துக்களையும் நித்தி



பெங்களூர்: தமிழகத்தின் மிகப் பெரிய ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் நித்தியானந்தாவுக்கு முடி சூட்டப்பட்டுள்ளது.
மதுரைக்கு சமீபத்தில் நித்தியானந்தா வந்தார். அங்கு மதுரை ஆதீனகர்த்தரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவரிடம் 6 அடி உயரம் கொண்ட தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், நித்தியானந்தாவை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
நித்தியானந்தாவின் மதுரை ஆதீன மட வருகை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில்தான் மதுரை ஆதீனகர்த்தராக அவருக்கு முடி சூட்டப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ரேகாவும் ராஜ்யசபா எம்.பியானார்!

சச்சின் டெண்டுல்கரைப் போலவே மாஜி நடிகை ரேகாவும் ராஜ்யசபா எம்.பியாகியுள்ளார். அவரது பெயரையும் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் அனு ஆகா ஆகியோரை ராஜ்யசபா எம்.பியாக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. இவர்களைப் போலவே பழம்பெரும் இந்தி நடிகை ரேகாவையும் அக்கட்சி ராஜ்யசபை எம்.பியாக்கியுள்ளது.

கனிமொழியின் income list அமலாக்கப் பிரிவிடம் தாக்கல்!

டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பியின் சொத்து விவரங்கள் என்ன என்பது குறித்த பட்டியல் டெல்லியில் உள்ள அமலாக்கப் பிரிவு இயக்குநர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் கனிமொழியின் வங்கிக் கணக்கு அறிக்கைகள், கடந்த 3 ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கு விவரம், முதலீடு விவரம், பங்குப் பத்திரம், நிதி ஆதார ஆவணம் உள்ளிட்டவை இதில் அடக்கம்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இணை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி கைதாகி, திஹார் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவு திட்டமிட்டு சம்மனும் அனுப்பியது.
இந்த நிலையில் நேற்று கனிமொழி சார்பில் அவரது சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.கனிமொழியை இயக்குநராக கொண்டுள்ள கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி கடன் தொகை வந்தது குறித்த சர்ச்சையில்தான் கனிமொழி கைது செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். இந்ததப் பணம் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு. ஆனால் இது கடன் தொகை மட்டுமே, இதையும் கூட திருப்பிக் கொடுத்து விட்டோம் என்பது கனிமொழி தரப்பிலன் வாதமாகும்

மூத்த நிர்வாகிகள் குற்றச்சாட்டு! தா.பாண்டியன் இ.கம்யூ., கட்சியை dismantle

தா.பாண்டியன் இ.கம்யூ., கட்சியை காப்பாற்ற முயற்சிக்கவில்லை! மூத்த நிர்வாகிகள் குற்றச்சாட்டு! புதுக்கோட்டை தொகுதியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரன் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். அவர் கார் விபத்தில் மரணமடைந்ததையடுத்து இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அதிமுக திடீரென தனது வேட்பாளரை அறிவித்தது. இதையடுத்து புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறுகையில், விபத்தில் உயிரிழந்த முத்துக்குமரனுக்கு அந்த தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இடைத்தேர்தலில் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரையோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரையோ போட்டியிட வைத்திருக்கலாம்.

மக்கள் நலப் பணியாளர் வழக்குகள் முடிவுக்கு வந்தன

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்ட ஏறத்தாழ 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்பான வழக்குக்கள் முடிவுக்கு வந்துவிட்டன. அவர்கள் அனைவர்க்கும் ஐந்து மாத கால ஊதியம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் உத்திரவாதத்துடன் வழக்குக்களை முடித்துக்கொள்ள பணியாளர்கள் ஒத்துக்கொண்டனர்.
எதிர்வரும் மே மாதத்துடன் அவர்கள் பணிக்காலம் முடிவடையவிருக்கும் நிலையில் அவர்களை நீக்கியது சரியா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல், பணிக்காலம் முடிவடைந்த பிறகு அவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பினையும் அரசிடமே விட்டுவிடுவதாகக் கூறி தீர்ப்பளித்தனர் நீதிபதிகள் இலிபி தர்மாராவ் மற்றும் எம்.வேணுகோபால்.

வியாழன், 26 ஏப்ரல், 2012

Ajith:நான் கை கால் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார்!

நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு! 
 என் நடிப்பு, முயற்சியைப் பாராட்ட மனமில்லாதவர்கள், என் தோற்றத்தையும் உடல் அமைப்பையும் கிண்டல் செய்கிறார்கள். 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு நான் நடப்பதே பெரிய விஷயம், என்கிறார் அஜீத் குமார்.
சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்...
செல்ப் புரமோஷன் கிடையாது...
"நான் 'மங்காத்தா’வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2’-வுக்கும் பொருந்தும்.

நடிகை புவனாவின் தியேட்டரைப் பறிக்கப் பார்த்த கோஷ்டி-போலீஸ் வலைவீச்சு!

Bhuvana
கோவையைச் சேர்ந்த சினிமா நடிகை ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாங்கிய சிலர், அந்த வீட்டோடு இணைந்துள்ள நடிகையின் தியேட்டரையும் அபகரிக்க முயன்றனர். அதைத் தட்டிக் கேட்க முயன்ற நடிகைக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் இதுதொடர்பாக ஐந்து பேரைத் தேடி வருகின்றனர்.
கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் புவனா என்கிற புவனேஸ்வரி.

நடராஜனா? சொக்கத் தங்கமாச்சே!சிக்னல்’ வந்துவிட்டதா?

தஞ்சை போலீஸை வெலவெலக்க வைத்த ரங்கா!

நடராஜன் விவகாரத்தில் சென்னையில் இருந்து ‘சிக்னல்’ வந்துவிட்டதா என்ற குழப்பம் திடீரென ஏற்பட்டுள்ளது. காரணம், நடராஜன்மீது புகார் கொடுத்த ஒருவர் திடீரென, “நடராஜன் மீது தவறு ஏதுமில்லை என்று இப்போதுதான் புரிந்து கொண்டேன். எனது பழைய மனுவை வாபஸ் பெற்றுக்  கொள்கிறேன்” என்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துவிட்டு போயிருக்கிறார். இவருக்கு இந்தி திடீர் ஜானோதயம், சும்மா வந்திருக்க முடியாதே ?

உறவுக்கு அழைத்த புருஷன் மார்பில் குத்தி 'விளையாடிய' மனைவி கைது!

திருச்சி: புதிதாக திருமணமான ஜோடிகள் காதல் களியாட்டத்தில் ஈடுபடுவதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் திருச்சி அருகே ஒரு ஊரில், கணவன் அடிக்கடி தன்னுடன் கூட நினைத்ததால் எரிச்சலைடந்த ஒரு பெண் கணவன் கண்ணைக் கட்டி விட்டு அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றுள்ளார்.
உப்பிலியாபுரம் ஒக்கரை என்ற ஊரைச் சேர்ந்தவர் 30 வயதான நடராஜன். இவர் வாத்தியாராக இருக்கிறார். இவருக்கும் 23 வயதேயான சுபா என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
புதிதாக திருமணமானவர் என்பதால் மனைவியைச் சுற்றிச் சுற்றியே வந்துள்ளார் நடராஜன். இது அவரது மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

Chithra Subramaniam:போபர்ஸ்: குவாத்ராச்சிக்கு லஞ்சம் தரப்பட்டது ஏன்?

டெல்லி: போபர்ஸ் நிறுவனம் குவாத்ராச்சிக்கு ஏன் ரூ. 64 கோடி லஞ்சம் தர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது என்ற விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். அது தொடர்பாக சோனியா காந்தியையும் விசாரித்திருக்க வேண்டும் என்று இந்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த முன்னாள் இந்து பத்திரிக்கையாளர் சித்ரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
போபர்ஸ் ஊழலை வெளியே கொண்டு வர சித்ரா சுப்பிரமணியத்துக்கு உதவியாக இருந்த ஸ்வீடன் நாட்டு காவல் துறையின் முன்னாள் தலைவர் ஸ்டென் லின்ட்ஸ்ட்ராம் 25 ஆண்டுகளுக்கு முன் முதன் முறையாக வாய் திறந்துள்ளார்
Veteran journalist Chitra Subramaniam -- who blew the whistle on the infamous kickback deal on the Bofors guns, leading to the defeat of the Congress party in the 1989 general elections, and won her the 1990 Asian award for excellence in journalism -- at her office in New Delhi on March 30, 1990.

ஸ்டாலின் Predict: அதிமுக அரசு நீடிக்காது!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் உதகையில் 28.04.2012 அன்று நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
இதற்காக நீலகிரி மாவட்டம் சென்ற அவருக்கு அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர். ன்னர் பேசிய அவர், தலைவர் கலைஞர் 5 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்து சொன்னதையும் செய்து, சொல்லாததையும் செய்து, இந்தியாவில் இருக்கக் கூடிய மற்ற மாநிலங்களும், மத்தியில் இருக்கக் கூடிய ஆட்சியும் நிறைவேற்றப்பட முடியாத சாதனைகளையெல்லாம் நிறைவேற்றினார். 50 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களை கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. 5 வருடத்திற்கு ஒருமுறைதான் தேர்தல் வரும். ஆக தேர்தல் நடந்தது 2011. மீண்டும் எப்போது தேர்தல் வரும் என்று கேட்டால், 5 ஆண்டுகள் கழித்து 2016ல் தான் வரும்.ஆனால் இப்போது இருக்கக்கூடிய ஆட்சியின் அக்கிரமத்தை பார்க்கிறபோது, 2015ல் வருமா, 2014ல் வருமா அல்லது 2013ம் ஆண்டே வந்துவிடுமா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது என்றார்.

முல்லைப் பெரியாறு அணை அபார பலத்துடன் உள்ளது ஐவர் குழு அறிக்கை

டெல்லி: தமிழகத்திற்கு மிகப் பெரிய நற்செய்தியை உச்சநீதிமன்ற ஐவர் குழு தனது அறிக்கை மூலம் கொடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலத்துடன் உள்ளது. அதில் நீர் இருப்பு அளவை தாராளமாக அதிகரிக்கலாம் என்பதே அந்த நற்செய்தியாகும்.
முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு மாற்றுத் திட்டமாக புதிய அணை கட்டுவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றும் ஐவர் குழு கூறியுள்ளது.

Prasanna Sneha ஜோடியின் உன்னத தானம்


நடிகர் பிரசன்னாவிற்கும் நடிகை சினேகாவிற்கும் மே மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணம் செய்து கொள்ளப் போகும் இந்த ஜோடி கலை நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாகவே சென்று வருகின்றனர்.சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த பென்னிதயாளின் இசை கச்சேரிக்கு இருவரும் வருகை தந்தனர். கச்சேரி முடிந்ததும் மேடையில் பேசும்போது சினேகா “நானும் பிரசன்னாவும் எங்கள் உடல் உறுப்புக்களை தானம் செய்யப்போகிறோம். இறந்த பின்பு உடலை மண்ணிற்கும், நெருப்பிற்கும் கொடுப்பதை விட மனிதர்களுக்கு கொடுத்தால் அவர்களது குறை தீர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள்

விஜயகாந்தின் சினிமா ஸ்டைல் அதிரடி அப்ரோச், ஸ்கோர்

சட்டசபையில் தீர்மானங்கள், அறிவித்தல்கள் என்று சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்க, சட்டசபை பக்கம் தலைவைத்தும் படுக்காமல் தொகுதி தொகுதியாக சுற்றி வந்துகொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்.
அவர் விசிட் அடித்த தொகுதிகளில் இந்த புதிய அணுகுமுறை அவருக்கு மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கை ஏற்படுத்தவே செய்கிறது.
அவர் செல்லும் ஒவ்வொரு தொகுதியிலும், “சட்டசபையில் என்னை பேச விடுகிறார்கள் இல்லை. அதுதான் மக்களாகிய உங்களிடம் நேரில் வந்துவிட்டேன்” என்று கூறுவது நன்றாக எடுபடுகிறது.

முல்லை பெரியாறு: உயர்மட்டக்குழு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு நேற்று தன் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை மே 4ம் தேதி உச்சநீதிமன்றம் பரிசீலிக்கும்.
தமிழக - கேரள எல்லையில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை 116 ஆண்டு பழமையானது. இந்த அணை பலவீனமடைந்து விட்டதாகவும், அதற்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என, கேரளா கூறி வந்தது. அதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.

ஒடிசாவில் கடத்தப்பட்ட ஆளும் கட்சி எம்.எல்.ஏ., இன்று விடுதலை: உடனே பதவி விலகும்படி நிபந்தனை

புவனேஸ்வர்: ஒடிசாவில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட ஆளும் பிஜூ ஜனதா தளம் எம்.எல்.ஏ., ஜினா ஹிகாகா இன்று விடுவிக்கப்படுகிறார். விடுவிக்கப்பட்டதும், அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, மாவோயிஸ்ட்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
ஒடிசாவை சேர்ந்த ஆளும் பிஜூ ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ., ஜினா ஹிகாகா. இவர் கடந்த மாதம் 24ம் தேதி, கோராபுட் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டார். இவரை விடுவிக்க வேண்டும் எனில், சிறையில் உள்ள, 29 பேரை ஒடிசா அரசு விடுதலை செய்ய வேண்டும் என, நிபந்தனை விதித்தனர்.

புதன், 25 ஏப்ரல், 2012

ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் தலைவருக்கு நல்லெண்ண சிக்னல்!

Viruvirupu,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வீணாக அலையக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், புதுக்கோட்டை தொகுதிக்கு தமது கட்சி வேட்பாளரை அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
தேர்தல் கமிஷனே தேர்தல் தேதியை நேற்று (செய்வாய்க்கிழமை) மாலைதான் அறிவித்தது. தமிழகத்தின் மற்றைய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்ற முடிவைக்கூட இன்னமும் எடுக்கவில்லை. அப்படியான நிலையில் முதல்வர் ஜெயலலிதா நினைத்திருந்தால், தமது கட்சியின் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் தாமதம் செய்திருக்க முடியும்.
வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வேண்டிய இறுதி நாளில்கூட வேட்பாளரின் பெயரை ஜெயலலிதா அறிவித்திருக்க முடியும்.
அப்படிச் செய்திருந்தால் பாதிப்பு யாருக்கு?

சன்னி லியோனிடம் 'அதை' எதிர்பார்த்த தயாரிப்பாளர்கள்!

செக்ஸ் இல்லாவிட்டால் சான்ஸ் இல்லை ... இது திரையுலகில் மிகச் சாதாரணமாக உலா வரும் ஒரு வார்த்தை. இதை அவர்களே கூட மறுக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு செக்ஸுக்கும், சினிமா வாய்ப்புகளுக்கும் நிறைய உறவு உண்டு.
ஒரு பெண் நடிகையாக வேண்டும் என்றால் நிறைய 'முதலீடு' செய்தாக வேண்டும். பல 'முதலாளிகளைப்' பார்த்தாக வேண்டும். அவர்களின் 'நிபந்தனைகளுக்கு' உட்பட்டாக வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு சின்ன பிட்டு வேடமாவது கிடைக்கும்.

ஜனாதிபதி தேர்தல்: கருணாநிதியிடம் தூதுவரை அனுப்பிய சோனியா!

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து கூட்டணி கட்சியான திமுகவின் தலைவர் கருணாநிதியுடன் பேச காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிறப்பு தூதுவரை அனுப்பியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் கூட இல்லை. இந்நிலையில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதில் அனைத்து அரசியல் கட்சிகளும் முனைப்பாக உள்ளன. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் தீவிரமாக உள்ளது. மேலும் இது தொடர்பாக கூட்டணி கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறது.

இப்பவே பார்வதி இப்படின்னா!பில்லா-2 !


பில்லா-2 படத்தின் டிரெய்லரும், போஸ்டர்களுமே ரசிகர்களை சூடாக்கிக் கொண்டிருக்க வருகிற மே-1ஆம் தேதி பில்லா-2 படத்தின் பாடல்களை வெளியிட இருக்கும் படக்குழுவினர் இசையுடன் கொஞ்சம் கிளுகிளுப்பையும்வெளியிடுகின்றனர்.பில்லா-2 படத்தில் நடிக்கும் நடிகைகள் பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா ஆகியோர் சினிமவிற்கு வருவதற்கு முன் மாடல் அழகிகளாக இருந்தனர். இந்த இரு நடிகைகளையும் எடக்குமுடக்காக போஸ் கொடுக்க வைத்து ஒரு காலண்டர் தயாரித்துள்ளனர். இந்த காலண்டருக்கான போட்டோ ஷூட் கோவாவில் நடந்ததாம். கோவா கடற்பரப்பில் உள்ள மணல்களிலும், கடல்நீரிலும் புரண்டு புரண்டு போஸ் கொடுத்தார்களாம்.  இசை வெளியீடு 

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஜாதி விவரத்தைக் கூறத் தயங்க வேண்டாம்!

ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அலுவலர்கள் வரும் பொழுது ஜாதிபற்றிய விவரங்களை (உள் ஜாதி உட்பட) சொல்லத் தயங்க வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியா முழுமையும் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தொடங்கப்பட்டு விட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப் போடு இந்தத் தகவலும் சேகரிக்கப்பட வேண்டும் என்று சமூக நீதியாளர்கள் தரப்பிலிருந்து குரல் ஓங்கியது.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஜாதி ஒழிய வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவை  என்று ஓங்கி ஒலித்தனர்.

ஜெயலலிதா: கொலைகள் குறைந்துள்ளன Today Special

சென்னை:""தி.மு.க., ஆட்சியை விட அ.தி.மு.க., ஆட்சியில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளன,'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அளித்த பதிலுரை:இங்கு பேசிய சில உறுப்பினர்கள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலையை குறைகூறி பேசியுள்ளனர். கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். பொதுவாக வழக்குகளின் எண்ணிக்கை மக்கள் தொகைக்கு ஏற்ப கூடி வருவது வாடிக்கை தான்.

புட்டபர்த்தியில் விழா பக்தர்கள் குவிந்தனர் சத்ய சாய்பாபா முதலாமாண்டு

சத்ய சாய்பாபா சித்தியடைந்த முதலாமாண்டு நிறைவு நாள், நேற்று புட்டபர்த்தியில் மகா ஆராதனை விழாவாக நடைபெற்றது. உலகின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள், பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர்.

புத்தகம்: டாக்டர் பத்மஸ்ரீ வெங்கட்ராமன் எழுதிய சாய்பாபா பற்றிய புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆந்திரா மாநில கவர்னர் நரசிம்மன், சாய்பாபா பற்றிய புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

மம்தாவின் அரசியல் தேவை ஒரு ஸ்பீட் பிரேக்

இன்று வரை, நம் நாட்டு பெண் அரசியல்வாதிகளில், எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லாமல், ஒருவர் முதல்வராக இருக்கின்றார் எனில், அது நிச்சயம் மம்தா பானர்ஜி என்று, நாம் அனைவரும் எளிதாக சொல்லி விடலாம்.அந்த வகையில், எளிமை, நேர்மை! போராட்டக் குணத்தில் அவருக்கு நிகர் அவரே. ஆனால், மேற்கு வங்கத்தை தொடர்ந்து, 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வந்த இடதுசாரிகளை ஓரம் கட்டிவிட்டு, என்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாரோ, அன்று முதல், அவரிடம் பல மாற்றங்கள் உண்டாகிவிட்டன.

உதாரணமாக, மேற்கு வங்கத்தில் ஒரு கற்பழிப்பு சம்பவத்தை அரசியலாக்கி, மூடி மறைக்கப் பார்த்தார். பின், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்; அதனால், தம் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக, பொய்யாக கொடுக்கப்பட்ட புகார் என்று கூறினார்.பின், எப்போதும், "மீடியா'க்களிடம் அன்பு காட்டி வந்த அவர், ஒரு முறை அரசு மருத்துவமனையில், சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் குழந்தைகள் இறந்ததை விசாரிக்கச் சென்ற போது, "மீடியா'க்கள் அவர் பின்னால் படையெடுத்ததை, பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபப்பட்டது, பெரும் வியப்பளித்தது.

அழகிரி கை ஓங்கியது? தி.மு.க., நோட்டீஸ் விவகாரம் முடிந்தது

மதுரையைச் சேர்ந்த தி.மு.க.,வினர் 17 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் முடிவுக்கு வந்து விட்டதாக தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"கடந்த 15ம் தேதி மதுரையில் நடந்த இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற ஸ்டாலினை வரவேற்கவில்லை' என்ற குற்றச்சாட்டின் பேரில், அழகிரி ஆதரவாளர்கள் 17 பேருக்கு தி.மு.க., மேலிடம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதற்கு, 17 பேரும் பதில் அனுப்பி இருந்தனர். அவைத்தலைவர் இசக்கிமுத்து மட்டும், நோட்டீஸ் அனுப்பிய அமைப்புச் செயலர் டி.கே.எஸ்.இளங்கோவனின் அதிகாரத்தை கேள்வி எழுப்பி இருந்தார்.
இதனால், அவரை மட்டும் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்தது

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

ஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில்லனான கதை!

ஜேம்ஸ்-பாண்ட்கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் போர் மூண்டு எல்லா வகைப் படைகளோடும் குருஷேத்திரத்தில் சந்திக்கிறார்கள். கண்ணில்லாத திருதராஷ்டிரன் போர்க்களத்திற்கு செல்ல முடியாது என்பதால் போரின் நேரடி வர்ணனையை விவரிக்குமாறு சஞ்ஜயன் என்ற அமைச்சரை நியமிக்கிறான். வியாசரால் ஞானதிருஷ்டி பெற்றவனான சஞ்ஜயன் அப்படியே அட்சரம் பிசகாமல் வர்ணிக்கிறான். போரின் துவக்கமாக அர்ஜுனனின் தடுமாற்றம் வருகிறது. கீதை பிறக்கிறது.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு சாகசங்களை நேரில் கண்டுணர முடியாத நம்மைப் போன்றோருக்கு, ஏகாதிபத்தியங்களால் ஊக்குவிக்கப்படும் ஹாலிவுட் உலகம் அதன் நேரடி வர்ணனையைக் காட்சியாக, விறுவிறுப்பான திரைப்படமாகத் தருகின்றது. ஜேம்ஸ்பாண்ட் பிறக்கிறான்.

மகளை களமிறக்கிக் கலக்கும் ராதா-கேரளாவுக்கே 'ஷிப்ட்' ஆன அம்பிகா!

Ambika, karthika and Radha
 
இப்போது 40 முதல் 45 வயது ஆகும் 'இளைஞர்களின்' அந்தக் கால 'கனவுக் கன்னி'களாக விளங்கிய அம்பிகா மற்றும் ராதாவின் வாழ்க்கையில் சமீப காலமாக சில திருப்பங்கள்.
அம்பிகாவையும், ராதாவையும் அவ்வளவு சீக்கிரம் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாது
. அந்த அளவுக்கு அவர்களின் 'நடிப்பு வீச்சு' ரசிகர்களை ஒரு காலத்தில் கட்டிப் போட்டு வைத்திருந்தது.
இருவரும், அந்த நாள் ஸ்டார் நடிகர்கள் ஒருவர் விடாமல் அத்தனை பேருடனும் சேர்ந்து ஜோடி போட்டுப் பட்டையைக் கிளப்பியவர்கள்.

உங்கள் இச்சைக்கு மாணவனைப் பயன்படுத்துவதா?-குமுதுவுக்கு கோர்ட் கண்டனம்!



Teacher Kumuthu

சென்னை: 17 வயது மாணவனுடன் ஓடிப் போன ஆசிரியை குமுது தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. மேலும் தனது இச்சைக்கு மாணவனைப் பயன்படுத்திக் கொண்ட ஆசிரியையின் செயலை ஏற்க முடியாது என்றும் அது கூறியுள்ளது.
சென்னை செளகார்பேட்டையைச் சேர்ந்த 17 வயது பிளஸ் ஒன் மாணவனுடன் தகாத நட்பை ஏற்படுத்திக் கொண்டார் 37 வயது ஆசிரியை குமுது. இந்த நட்பின் விளைவாக இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். நீண்ட தேடுதலுக்குப் பின்னர் இருவரையும் டெல்லி அருகே வைத்து போலீஸார் கண்டுபிடித்தனர்.
ஆசிரியை குமுது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Priyanka Chopra 9C,Vidhya Balan 7C,kareena Kapoor 5C கதாநாயகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்

பிரியங்கா சோப்ரா இதுவரை ஒரு படத்துக்கு ரூ. 3 கோடி சம்பளம் வாங்கி வந்தார். அடுத்து நடிக்க உள்ள புதிய படத்துக்கு ரூ. 9 கோடி வாங்குகிறார். வித்யபாலனுக்கு இது வரை ரூ. 1 1/2 கோடியில் இருந்து ரூ. 2 கோடி வரை சம்பளம் நிர்ணயித்து இருந்தனர். கடந்த வருடம் அவர் நடித்து ரிலீசான “டர்டி பிக்சர்” படம் வெற்றிகரமாக ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது சம்பளத்தை ரூ. 7 கோடியாக உயர்த்தி உள்ளார்.
 கரீனா கபூர் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அத்துடன் படத்தின் லாபத்திலும் பங்கு கேட்கிறார். கதாநாயகர்கள்தான் லாபத்தில் பங்கு வாங்கி வந்தனர். ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான், அக்ஷய்குமார் போன்றோர் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை வாங்குகின்றனர். அதனை கரீனா கபூரும் பின்பற்றுகிறார்.

செல்வலட்சுமி வீட்டில் தாண்டவமாடுவாளாம்.பார்ப்பனர்களின் கிறுக்கல்

பக்தி வியாபாரம் செய்து மக்களைச் சுரண்டும் பார்ப்பன சதி
அட்சய திருதியை என்ற ஒன்று சமீப காலங்களில் ஒரே களேபரம்.
ஜோதிட சாத்திரப்படி - 15 திதிகளில் இந்த அட்சய திருதியைக்கு விசேஷமான பலன்கள் உண்டாம்.
சித்திரை மாதத்தில் சுக்லபட்சத்தில் சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் ரிஷப ராசியிலும் அமையும் நாள் இதுவாம்.
இவை எல்லாம் எந்த விஞ்ஞானத்தில், வானியலில் சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளன? சூரியன் என்ற நட்சத்திரத்தை கோள்களின் பட்டியலில் வைத்தபோதே ஜோதிட சாஸ்திரத்தின் அஸ்திவாரம் நொறுங்கிப் போய்விட்டதே!
சென்னை - கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் ஆய்வகத்தின் ஒரு பிரிவான பிர்லா கோளரங்கத்திற்குச் சென்று இந்த அட்சய திருதியைக்குச் சான்று பெற்றுவரத் தயாரா?
இவர்கள் குறிப்பிடும் திதிகளும் சரி, நட்சத்திரங்களும் சரி இவை ஒன்றிலாவது தமிழ்ப் பெயர் உண்டா?

INDIA தண்ணீருக்காக அலைந்து தாகத்தில் இறந்த பெண்!

தாணே, ஏப்.23: காலி குடத்துடன் மணிக்கணக்காக அலைந்தும் குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல் பசியாலும் தாகத்தாலும் வாடிய பார்வதி ராமு ஜாதவ் (37) என்ற பழங்குடிப் பெண், வீடு திரும்பும் வழியில் களைப்பாலும் நீர்ச்சத்து குறைந்ததாலும் உயிரிழந்தார்.  மகாராஷ்டிர மாநிலத்தின் மொக்காடா வட்டத்தில் டோலாரா என்ற கிராமத்தில் இத்துயரச் சம்பவம் நடந்தது. மாவட்டத் தலைநகர் தாணேவுக்கு திங்கள்கிழமை காலைதான் இத் தகவல் கிடைத்தது.  பார்வதியும் இதர பழங்குடிப் பெண்களும் வசிக்கும் இந்தக் கிராமப் பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. கிராமப் பொதுக்கிணற்றில் தண்ணீர் பிடிக்க நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும்.  மாவட்ட நிர்வாகம் தண்ணீர் லாரிகளை அனுப்புகிறது. அவை 4 நாள்களுக்கு ஒரு முறைதான் ஒவ்வொரு கிராமத்துக்கும் வருகின்றன. இப்போது கடுமையான வெயில் காலமாக இருக்கிறது. குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாமல் ஆறு, குளங்கள், ஓடைகள் வற்றிவிட்டதால் மக்கள் அரசு தரும் தண்ணீரையே நம்பியிருக்கின்றனர்.  லாரியில் தண்ணீர் பிடிப்பதற்காக காலி குடத்துடன் நீண்ட நேரம் காத்திருந்தார் பார்வதி. அவருடைய முறை வரும்போது டேங்கர் லாரியில் தண்ணீர் தீர்ந்துவிட்டது. மிகுந்த ஏமாற்றத்துடன் அவர் கிராமத்திலிருந்த கிணற்றில் தண்ணீர் பிடிக்கச் சென்றார். அங்கு மிகநீண்ட வரிசையில் ஏராளமானோர் காத்திருந்தனர். அங்கும் மணிக்கணக்காக கால்கடுக்க நின்றார். அப்போது தண்ணீர் பிடிக்க வந்தவர்களிடையே தள்ளுமுள்ளும் சண்டையும் ஏற்பட்டது. அதில் அவர் கீழே தள்ளப்பட்டார். இனியும் இங்கு நின்றால் தண்ணீர் கிடைக்காது என்று மன வேதனையுடன் அவர் வீட்டுக்குப் புறப்பட்டார். வழியில் தாகம் மேலிட, நாக்கு வறண்டு நெஞ்சு உலர்ந்து சுருண்டு விழுந்தார். மற்றவர்கள் ஓடிவந்து தூக்கியபோது அவர் இறந்துவிட்டிருந்தார்.  இதை நிருபர்களிடம் தெரிவித்த வசாய் சட்டப் பேரவை உறுப்பினர் விவேக் பண்டிட், இனியாவது கிராமங்களுக்கு அதிக அளவு தண்ணீர்விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்

விருமாண்டி : கமல் கையில் சிக்கிய பூமாலை


www.tamilpaper.net
மரண தண்டனைக்கு எதிராக உரத்த குரலில் பேசும் படம்… தமிழகத்தின் தென் மாவட்ட வாழ்வைக் கண் முன் கொண்டுவந்து நிறுத்தும் படம். வழக்கம்போல் கமல்ஹாசன் தன் நடிப்பின் உச்சத்தை எட்டிய படம் என்று பலவிதங்களில் புகழப்படும் படம் விருமாண்டி.
பொதுவாகவே, தமிழ் படங்களில் கதாபாத்திரங்களின் சாதி அடையாளம் மிகவும் மேலோட்டமாகவேதான் சித்திரிக்கப்படும். ஏதாவது ஒரு சாதியை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாக இருந்தாலும் அதன் சாதகமான அம்சங்கள் மட்டுமே காட்டப்படும். மக்களை எளிதில் உணர்ச்சிவசப்படவைக்கும் ஓர் அடையாளமாக இன்றும் சாதியே இருந்துவருவதனால் அந்த உணர்வுகள் சார்ந்து உண்மை நிலையைச் சித்திரிக்க யாருக்கும் தைரியம் இருப்பதில்லை.

சசிகலாவுக்கு ஆச்சார்யா கொடுத்த ‘மருந்து’ அட்டகாசமாக வேலை செய்தது

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தோழி சசிகலா, நேற்று (திங்கட்கிழமை) பெங்களூரு கோர்ட்டில் ஆஜராவாரா என்ற கேள்விக்கு பதில் தெரிய பெங்களூரு கோர்ட்டில் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள்.
காரணம்,நேற்றைய விசாரணையில் சசிகலா ஆஜராகாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, அவரது வழக்கறிஞரிடம் எச்சரிக்கை விடுத்திருந்தார் நீதிபதி மல்லிகார்ஜூனையா.
நீதிபதி மல்லிகார்ஜூனையா, அரசு வக்கீல் ஆச்சார்யா ஆகிய இருவரும் கொடுத்த ‘மருந்து’ காரணமாக, கோர்ட்டில் ஒழுங்காக ஆஜரானார். வழக்கத்தைவிட சற்று வேகமாக 87 கேள்விகளுக்கு பதில் கூறினார்.

யார், எங்கே "பட்டுவாடா' என்பது முடிவாகி விட்டது புதுக்கோட்டை தொகுதியில்

சென்னை: "புதுக்கோட்டை தொகுதியில் அமைச்சர்கள் கூட்டம் போட்டு, யார் எங்கே, "பட்டுவாடா' செய்வது என்பதெல்லாம் பேசி முடிவாகி விட்டது' என்று, கருணாநிதி ஆவேசமாகக் கூறியுள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள, "கேள்வி - பதில்' அறிக்கை:
* புதுக்கோட்டை இடைத்தேர்தல் தேதி எப்போது அறிவிப்பார்கள்?
புதுக்கோட்டைக்கு இப்போது தான், தமிழக அரசு 50 கோடி ரூபாய் ஒதுக்கி, அங்கு பராமரிப்புப் பணிகள் எல்லாம் வேகமாக நடைபெறுகிறதாம். தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ளன. அதில் ஒரு தொகுதி, விரைவில் இடைத்தேர்தல் நடக்கப்போகும் தொகுதி. அந்த ஒரு தொகுதிக்கு மட்டும் அ.தி.மு.க., அரசு, 50 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை எவ்வித டெண்டரும் இல்லாமல் அங்கு செலவழிக்கப்படுகிறதாம். அவசர அவசரமாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரை மாற்றிவிட்டு, இவா இழுத்த இழுப்பிற்கு வரக்கூடிய ஒருவரை அங்கு நியமனம்

அடுத்த ஜனாதிபதியாக கலாமுக்கு வாய்ப்பு சமாஜ்வாடி சாமர்த்தியமாக

புதுடில்லி: ""நாட்டின் அடுத்த ஜனாதிபதி, அரசியல் சார்பில்லாதவராக இருக்க வேண்டும்' என, தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் கூறியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து, அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக, பேச்சு எழுந்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி பிரதிபாவின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ளது. இந்நிலையில், "ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கோ, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கோ, தங்கள் விருப்பப்படி, ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு, போதிய உறுப்பினர்கள் பலம் இல்லை.

திங்கள், 23 ஏப்ரல், 2012

வடிவேலு - சிம்புதேவன் சந்திப்பு: இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் இரண்டாம் பாகம் தயாராகிறது?

தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத காமெடிப் படங்களில் ஒன்றான இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் அடுத்த பாகத்துக்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.
முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இப்போது திரைக்கதை உருவாக்கும் பணியில் அவர் மும்முரமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமலிருக்கும் வடிவேலு, தனது புதிய இன்னிங்ஸை இந்தப் படம் மூலம், அதுவும் ஹீரோவாகத் தொடங்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படம் குறித்து சிம்புதேவனும் வடிவேலுவும் சந்தித்துப் பேசியதாகவும், இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் தொடர்ச்சியாக ஒரு படத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தனது பேட்டியிலும் கூட, இத்தனை மாத இடைவெளிக்குப் பிறகு தான் நடிக்கும் நடிக்கும் புதிய படம் அதிரடியாக இருக்கும். ஹீரோவாக நடிக்க பேசிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்

ரஜினியே கேட்டும் கோச்சடையானை வேண்டாம் என்று சொன்ன ஏவிஎம்?

மகள் சௌந்தர்யா இயக்கும் கோச்சடையானில் ரஜினி தீவிரம் காட்டி வருகிறார். நடிப்பதிலும் அந்தப் படத்தின் தொழில் நுட்பம் குறித்த விஷயங்களிலும் மிக ஆர்வமாகப் பங்கெடுத்து வரும் சூப்பர் ஸ்டாருக்கு, ஒரு விஷயம் மட்டும் பிடிக்கவில்லையாம்.
அது, இந்தப் படத்தை சௌந்தர்யாவும் சேர்ந்து தயாரிப்பது!
காரணம் சுல்தானில் சௌந்தர்யா அண்ட் கோ செய்த குழப்படி & குளறுபடியால், தேவையின்றி நீதிமன்ற வழக்கு, பத்திரிகைகளில் தாறுமாறான செய்திகள் என ரஜினிக்கு மனவருத்தம் அடையும் நிலையை ஏற்படுத்தின. கோவா தயாரிப்பிலும் சௌந்தர்யா கையைச் சுட்டுக் கொண்டதுதான் மிச்சம்!

சசிகலா: “பெங்களூருல அந்தாள் மிரட்டுராரு.. ஆளை த்ரட்ல விடுவோமா?”


தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டனில் வசிக்கும் தோழி சசிகலா, இன்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜராவாரா? இந்தக் கேள்விக்கு பதில் தெரிய பெங்களூரு கோர்ட்டில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.
காரணம், இன்றைய விசாரணையில் சசிகலா ஆஜராகாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, அவரது வழக்கறிஞரிடம் எச்சரிக்கை விடுத்திருந்தார் நீதிபதி மல்லிகார்ஜூனையா.
பெங்களூரு கோர்ட்டில் ‘ஆயுள் சந்தா’ போல வருடக்கணக்கில் நடைபெற்றுவரும் சொத்துக் குவிப்பு வழக்கை தமது ஆயுள்வரை நீடிக்கும் உத்தேசம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு உள்ளது ஒன்றும் ரகசியமல்ல.

இப்போதைக்கு ஜாமீனே கிடையாது... ராசா திட்டவட்டம்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் என்னை நிரபராதி என்பதை நிரூபித்து விட்டுத்தான் வெளியே வருவேன். அதுவரை நான் ஜாமீன் கோரப் போவதில்லை என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதான அத்தனை பேருமே ஜாமீனில் வெளியே வந்து ஹாயாக உலா வந்து கொண்டுள்ளனர். ராசா மட்டுமே இன்னும் சிறையில் வாடி வருகிறார். அவர் சிறையில் இருப்பதுதான் நல்லது, வெளியில் வந்தால் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று சுப்பிரமணியம் சாமி கூட அடிக்கடி கூறி வருகிறார்.

தன்னைக் கொன்றவர்களை ராமஜெயமே வந்து சொன்னால்தான் உண்டு?

Ramajayam murder
திருச்சி: ராமஜெயத்தைக் கொன்றது யார் என்பது பெரிய மர்மமாக மாறியுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை வழக்கில் சின்னத் துப்பு கூட கிடைக்காமல் தட்டுத் தடுமாறி வருகிறதாம் திருச்சி போலீஸ். இதையடுத்து கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பிதான் ராமஜெயம். இவர் கடந்த மார்ச் 29ம் தேதி கொலை செய்யப்பட்டார். கொலை நடந்து முடிந்து ஒரு மாதத்தை நெருங்கப் போகிறது. ஆனால் இதுவரை கொலைக்கான காரணமோ அல்லது கொலையாளிகள் யார் என்ற விவரமோ தெரியவில்லை. பெரும் மர்மாக உள்ளது.

சசிகலா, கட்சி பற்றி அறியாமலிருந்த ஜெயலலிதா மக்களை பற்றி எப்படி அறிவார்: விஜயகாந்த் பேச்சு


சேலத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த அவர் செவ்வாய்ப்பேட்டை, அம்மாப்பேட்டை ஆகிய இடங்களில் பேசியது: ஆட்சியில் இல்லாவிட்டாலும் எங்களால் ஆன உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறோம்.
நாங்கள் தேர்தலின்போது பணத்தையும், அதன்பின் இலவசங்களையும் கொடுத்து ஏமாற்ற மாட்டோம். அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் ஏழை மக்கள் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளிலும் சரியான சாலை வசதி இல்லை. கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. தினமும் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு நிலவுகிறது. இதனால், வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப் பேரவையில் கேள்வி எழுப்ப முற்பட்டால் எங்களுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தனது தோழி சசிகலா விவகாரத்தில், கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதையே அறியாமலிருந்த முதல்வர் ஜெயலலிதா, மக்களை பற்றி எப்படி அறிவார் என்றார் விஜயகாந்த்

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்

நுகர்வோர் அமைப்பினர் பிரச்சாரம்!

துச்சேரியில் நுகர்வோர் அமைப்பினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அட்சய திருதியை (24.04.2012) நாளில் எல்லோரும் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், நுகர்வோர் அமைப்பினரின் பிரச்சாரம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வம் பெருகும் என மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி, தரமற்ற தங்க நகைகளை பலரும் விற்பனை செய்வதாக அவர்கள் பிரச்சாரம் செய்தனர்.

அழகிரி ஆதரவாளர் இசக்கிமுத்து திமுகவில்லிருந்து நீக்கம்

சென்னை: மதுரையில் மு.க.ஸ்டாலின் வருகையின்போது பங்கேற்காத மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை தொடங்கியுள்ளது. முதல் நபராக, மதுரை மாநகர் மாவட்ட திமுக அவைத் தலைவர் இசக்கிமுத்துவை நீக்கியுள்ளனர்.
மனப்பால் குடிக்கும் மதோன்மத்தர்கள்
இதுதொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை மாநகர் மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்ய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை தலைமைக்கழகம் அனுப்பி வைத்தபோதும், அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஏற்கனவே தலைமைக் கழகத்தின் அறிவிப்பின்படி நடைபெறவிருந்த மதுரை பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டபோதும், மதுரை மாநகர கழக நிர்வாகிகள் சிலர் அவற்றிலே கலந்துகொள்ளவில்லை என்பதை பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தனர்.

அதைப்பற்றி விவரம் கேட்டு அந்த நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகத்தின் சார்பில், தலைமைக் கழக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. இதற்குள்ளாக தி.மு.கழகத்தை ஏதேதோ காரணங்கள் சொல்லி அழித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கின்ற சில மதோன்மத்தர்களும், அவர்களுக்குத் துணையாக வெளியிடப்படுகின்ற ஏடுகளும் கற்பனைச் செய்திகளை வெளியிடுவதன் மூலம் தி.மு.கழகத்தில் பெரும் குழப்பம் இருப்பதை போல பாவனை செய்திருப்பதைக் கண்டு இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

2,56,913 விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும்

தனியார்மயம் தாராளமயம் எந்தளவிற்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அந்தளவிற்கு விவசாயிகள் கந்துவட்டிக் கடனில் சிக்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்திருக்கிறது
நுண்கடன் என்ற நவீன கந்துவட்டிக் கடன் சுரண்டலுக்குப் பலியான ஒரு இளம் விவசாயி நுண்கடன் என்ற நவீன கந்துவட்டிக் கடன் சுரண்டலுக்குப் பலியான ஒரு இளம் விவசாயி
1995ஆம் ஆண்டு தொடங்கி 2010ஆம் ஆண்டு முடியவுள்ள 16 ஆண்டுகளில் இந்தியாவெங்கிலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2,56,913 என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது, தேசியக் குற்ற ஆவண ஆணையம்.  இப்பதினாறு ஆண்டுகளில், முதல் எட்டு ஆண்டுகளில் (1995-2002) தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,21,157;  அடுத்த எட்டு ஆண்டுகளில் (2003-2010) விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது முந்தையை எட்டு ஆண்டுகளை ஒப்பிடும்பொழுது, ஆண்டொன்றுக்குச் சராசரியாக 1,825 என்ற வீதத்தில் அதிகரித்து, 1,35,756ஐத் தொட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது, அந்த ஆணையம்.  இப்புள்ளிவிவரத்தை நுணுகிப் பார்த்தோமானால், இப்பதினாறு ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 44 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயிருக்கும் அதிர்ச்சிகரமான உண்மை புலப்படும்.

அழகிரி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி ஒரு கட்சி


உதயநிதி Stalin: ஆங்கில பெயர் தான் மக்களிடம் போய் சேரும்

மதுரை :""சினிமா படங்களை பொறுத்தவரை ஆங்கிலப் பெயர் தான் மக்களிடம் "ரீச்' (போய்ச்சேரும்) ஆகும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மகன் உதயநிதி தெரிவித்தார்.

மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என் படத்தில் சில குறைகள் உள்ளன. முதல் படம் என்பதால், அடுத்து திருத்திக் கொள்வேன். மதுரையில் கூடுதல் கட்டணம் வசூலித்த தி.மு.க., பிரமுகரின் தியேட்டர் பிடிபட்டதாக கேள்விப்பட்டேன். கூடுதலாக வசூலிப்பது தவறு தான். படத்தின் தலைப்பான "ஒருகல் ஒரு கண்ணாடி'யை, "ஓகே, ஓகே' என, ஆங்கிலத்தில் சுருக்கியதால், மக்களிடம் எளிதில் "ரீச்' ஆனது. கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்பதை தகுதியாக வைத்து, என்னை அரசியலில் முடிச்சு போடுகின்றனர்.நான் அரசியலுக்கு வருவது, தி.மு.க., இளைஞரணிக்கும், கட்சிக்கும் நல்லதல்ல. பொறுப்புகள் பெற, கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்த எத்தனையோ பேர் உள்ளனர், என்றார்.

இந்தியாவின் தேசிய பானமாகிறது டீ!!

ஜோர்கத்: அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவின் தேசிய பானமாக டீ அறிவிக்கப்படும் என திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் ஜோர்கத்தில் நடைபெற்ற தேயிலை உற்பத்தியாளர்களின் 75வது ஆண்டு விழாவில் கலந்துக் கொண்ட திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறியதாவது:
அசாமின் முதல் தேயிலை உற்பத்தியாளரான மணிராம் திவானின் 212வது பிறந்த நாளை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டீ இந்தியாவின் தேசிய பானமாக அறிவிக்கப்படும். தேயிலை உற்பத்தியில் ஈடுபடுவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள் என்பதும், தேயிலை தேசிய பானமாக அறிவிக்கப்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணம். பிளாக் டீ உற்பத்தியில் இந்தியா உலகளவில் முதலிடத்தில் உள்ளது என்றும், 83 சதவிகித இந்திய குடும்பங்களில் டீ தான் அருந்தப்படுகிறது என்றும் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: சர்கோஸியை மிரட்டும் இரு பிரச்னைகள்!

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு துவங்கிவிட்டது. ஜனாதிபதி தேர்தலுக்கான 1-வது ரவுன்ட் தேர்தல் இன்று நடைபெறுகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி Nicolas Sarkozy மீண்டும் 5 ஆண்டுகளுக்கு நாட்டின் தலைவராக வர விரும்பும் தேர்தலில், அவருடன் சேர்த்து 10 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
உங்கள் பூத் ஸ்லிப்பை நீங்களே தேடி எடுத்துக்கொள்ள வேண்டும்.. நம்மூராக இருந்தால் புகுந்து விளையாடிடலாம்.. இல்லிங்களா?
இவர்களில் இரு பிரதான வேட்பாளர்களான, Nicolas Sarkozy, மற்றும் Francois Hollande ஆகியோர் 2-வது ரவுன்ட் தேர்தலுக்கு செல்வார்கள்.

அழகிரி மோதலில், அன்பழகனை ஒருமையில் திட்டிய ஸ்டாலின்!

Viruvirupu,
ஜெயிக்கப்போவது யார்? இந்தக் கேள்விதான் இன்று தி.மு.க.-வினரிடையே அடிபடும் மில்லியன் டாலர் கேள்வி. ஸ்டாலின் – அழகிரி இடையே எழுந்துள்ள மோதல், முன்பு போல இல்லாமல் இம்முறை ஆக்ரோஷமாகத்தான் உள்ளது என்பதை தி.மு.க. தலைமையுடன் நெருக்கமானவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.
ஸ்டாலின் இம்முறை எந்த சமாதானத்துக்கும் மசியப் போவதில்லை என்கிறார்கள் அவரது ஆதரவு வட்டத்தில். “தளபதி அழகிரி மீது மட்டுமல்ல, கருணாநிதி மற்றும் அன்பழகன் மீதும் கடும் கோபத்தில் உள்ளார்” என்கிறார்கள் அவர்கள். இதற்குக் காரணம் முதலில் கருணாநிதி நேரிலும், பின்னர் அன்பழகனை தூதுவிட்டும், ஸ்டாலினை கொஞ்சம் இறங்கிப் போகும்படி அட்வைஸ் பண்ணியதுதான் என்றும் சொல்கிறார்கள்.

எரிமைலயாக வெடிக்கும் அழகிரி, ஸ்டாலின் மோதல்

சென்னை: மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் இடையிலான பதவிப் போர் பெரும் உச்சத்தை எட்டியுள்ளது. இவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு இரு தலைக் கொள்ளி எறும்பு போல தத்தளித்து வருகிறார் கருணாநிதி.
எத்தனையோ பெரிய பெரிய எதிரிகளை, சவால்களை, சங்கடங்களை, சஞ்சலங்களை, சலசலப்புகளைப் பார்த்தவர் கருணாநிதி. ஆனால் இன்று அவரது பிள்ளைகள் ரூபத்தில் எழுந்து நிற்கும் சவாலை சந்திக்க முடியாமல், முடிவு காண முடியாமல் பெரும் குழப்பத்திலும், கலக்கத்திலும் இருக்கிறார் கருணாநிதி.
தற்போது இந்தப் பிரச்சினை மேலும் ஒரு புதிய மெருகோடு வெடிக்க ஆரம்பித்துள்ளது.

சந்தானம், உதயநிதி ஸ்டாலின் மீது மோசடி புகார்...!

நடிகர் சந்தானம் மற்றும் உதயநிதிஸ்டாலின் ஆகியோர் தன்னிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும், பணத்தை கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுவதாக சென்னையை சேர்ந்த ஐஸ் கம்பெனி அதிபர் ரவி கிஷன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார்.

சென்னை உத்தண்டியை சேர்ந்தவர் ரவி கிஷன். இவர் ‌சொந்தமாக ஏஞ்சல் என்ற பெயரில் ஐஸ் கம்பெனி நடத்தி வருகிறார். ரவிகிஷனுக்கு விருகம்பாக்கம் அருகே  2 கிரண்வுட் இடத்தில் பங்களா ஒன்று உள்ளது. இதனை வாங்க நடிகர் சந்தானம் முயற்சி செய்துள்ளார். பங்களாவின் மதிப்பு ரூ.2.25 கோடி. ஆனால் சந்தானம், உதயநிதி ஸ்டாலின் உதவியோடு ரூ1.85 கோடிக்கு விலை பேசி, கடந்த 2010-ம் ஆண்டு பத்திரபதிவும் நடந்தது.

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

நியூயார்க்,ஏப்.21: அமெரிக்காவில் படித்துவந்த இந்திய மாணவர், ஏப்ரல் 19-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  ஒடிசாவைச் சேர்ந்த சேஷாத்ரி ராவ்(24) அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் நிர்வாகவியல் படித்து வந்தார். இவர் கடந்த 19-ம் தேதி அதிகாலையில் பல்கலைக்கழகத்துக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் போலீஸôர் தெரிவித்தனர்.  இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை

ஒபாமா-ரோம்னி இடையே கடும் போட்டி நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல்

வாஷிங்டன், ஏப். 21-   அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 6ஆம் தேதி நடக்கிறது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஒபாமா போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி சார்பில் குடியரசு கட்சி வேட்பாளராக மிட் ரோமினி களம் இறக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த தேர்வு போட்டியில் கட்சி நிர்வாகிகளால் மிட்ரோம்னி வேட்பாளராக தேர்ந் தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இருவரும் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள் ளனர்.   இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகைகளான நியூயார்க் டைம்ஸ், சி.பி.எஸ். நியூஸ் ஆகியவை தங்களது வாசகர் இடையே தேர்தல் குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்தியது. அதில் ஒபாமாவுக்கும், மிட்ரோம்னிக்கும் இடையே கடும் போட்டி இருப்பது தெரிய வந்தது. அதில் ஒபாமாவுக்கு 47 சதவிகிதமும், ரோம்னிக்கு 44 சதவிகிதமும் ஆதரவு இருந்தது.