கலைஞர் செய்திகள் - லெனின் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (12-11-2022) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து,
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்திட, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன்,
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் கு. செல்வப்பெருந்தகை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா,
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எஸ்.பி. வெங்கடேஷ்வரன் மற்றும் வழக்கறிஞர் பாலு,
சனி, 12 நவம்பர், 2022
10% இடஒதுக்கீட்டால் என்னென்ன ஆபத்து?.. அனைத்து கட்சி கூட்டத்தில் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
செங்காந்தள் கிழங்கை சாப்பிட்டவர் மரணம்... வாட்ஸ்அப் தகவலை நம்பியதால் பறிபோன உயிர்
இந்நிலையில், செங்காந்தள் செடியின் கிழங்கை பச்சையாக சாப்பிட்டால் மினுமினுக்கும் சருமத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பெறலாம் என வாட்ஸ் அப்பில் வந்த தகவலை இருவரும் பார்த்துள்ளனர். மருத்துவரின் ஆலோசனை எதுவும் கேட்காமல் வாட்ஸ்அப் தகவலை அப்படியே நம்பிய இருவரும், செங்காந்தள் செடியை கண்டுபிடித்து பிடுங்கி கிழங்கை பச்சையாக சாப்பிட்டுள்ளனர்.
ஜார்கண்ட்: அரசு வேலைகளில் 77% இடஒதுக்கீடு! ஜார்கண்ட் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
ஜார்கண்ட் மாநிலத்தில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் இணைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது.
கடந்த சட்டசபை தேர்தலின் போது மாநிலத்தில் இடஒதுக்கீட்டை 77 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் எஸ்.சிக்கான இடஒதுக்கீடு 10 சதவீதமாகவும், எஸ்.டிக்கான இடஒதுக்கீடு 26 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு 14 சதவீதமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநில அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை 77 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா ஜார்க்கண்ட் சட்டசபையில் நிறைவேறி உள்ளது.
Assembly clears bill to raise quota to 77 percentage in govt jobs
ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்?; தமிழக அரசியலில் பரபரப்பு!
tamil.samayam.com : தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதனால், தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு, பழிவாங்கும் விதமாக செயல்படுவதாக திமுக அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இந்தச் சூழலில் பல்கலைக்கழக வேந்தராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனம் பற்றி பேசி வருவது தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது.
மருத்துவக் கல்லூரிகள் ஷாக்; தமிழ்நாடு அரசு திடீர் அதிரடி!
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒருப்படி மேலே போய், ‘தமிழகத்தில் ஆளுநர் என்கிற பொறுப்பை மறந்து ஆர்.எஸ்.எஸ் தொண்டராக ஆர்.என்.ரவி செயல்படுகிறார்’ என கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
மின்சாரத்துறையில் தமிழ்நாடு சாதித்தது என்ன?
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பில் தமிழக விவசாயிகளின் வாழ்வு மலர்ந்திட உணவு உற்பத்தி பெருகிட மேலும் 50,000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வெள்ளி, 11 நவம்பர், 2022
கேரளா பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கேரளா ஆளுநர் நீக்கம்!
Chinniah Kasi : கேரளாவில் கலாமண்டலம் பல்கலைக்கழக வேந்தர் பதிவியிலிருந்து ஆளுநர் ஆரிப் முகமது கானை கேரள அரசு அதிரடியாக நீக்கியது.
பாஜக ஆட்சி அல்லாத கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்களாக இருப்பவர்கள் ஒன்றிய பாஜக அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் இன் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பல அடாவடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கேரளத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான், ஒரு முழு மையான ஆர்எஸ்எஸ் அடிவருடியாகவே மாறிசெயல்படுகிறார். ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக பல்வேறு பித்தலாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் ஒட்டு மொத்த கேரள மக்களையும் அவமதிக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
சவுக்கு சங்கர்: 6 மாத சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை; புதிதாக 4 வழக்குகளில் கைது!
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த ஆறு மாதகால சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் சவுக்கு சங்கரின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா, சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை வரும்வரை, வழக்கு குறித்து எந்தவிதக் கருத்தையும் அவர் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையையும் நீதிபதி விதித்திருக்கிறார்.
உச்சநீதிமன்றம் 6 பேரை விடுதலை செய்தது ஏற்கத்தக்கது அல்ல - ஜெய்ராம் ரமேஷ!
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற எஞ்சிய 6 பேரையும் உச்சநீதிமன்றம் விடுவிப்பதாக அறிவித்துள்ளது.
6 பேர் விடுதலை : சட்ட போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி - முதல்வர்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேரை உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 11) விடுதலை செய்து உத்தரவிட்டது.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. தொடர்ந்து நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டதற்குப் பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை - நளினி உட்பட 6 பேர் விடுதலை! உச்சநீதிமன்றம் அறிவிப்பு
இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் கடந்த மே 18-ம் தேதி விடுதலை செய்யப்பட்டதை அடிப்படையாக வைத்து தங்களையும் அதே அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று கோரி, நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் மனுச் செய்திருந்தனர்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தினா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரும் இந்த தீர்ப்பினால், விடுதலை பெற இருக்கிறார்கள்.
கனமழை எதிரொலி… 10 மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!
கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிங்க: தமிழகம் வரும் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்போம்… அண்ணாமலை அறிவுறுத்தல்!!
அன்மையில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மாலத்தீவில் தீ விபத்து; குமரியைச் சேர்ந்த தம்பதி உட்பட 11 பேர் உயிரிழப்பு
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி 9 இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சன்னி லியோன், தர்ஷா என்ன ஆடை அணியவேண்டும் .. நகைச்சுவை என்ற பெயரில் மேடையில் நடிகர் சதிஷ்!
tamil.filmibeat.com : சென்னை: காமெடியாக பேசுகிறோம் என்கிற பெயரில் என்ன பேசுவதென்றே தெரியாமல் நடிகர் சதீஷ் தப்புத் தப்பாக பேசுகிறார் என மூடர்கூடம் படத்தின் நடிகரும் இயக்குநருமான நவீன் விளாசித் தள்ளி உள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஓ மை கடவுளே நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ் பேசிய பேச்சுக்கள் சில எல்லை மீறி இருந்ததாக நெட்டிசன்கள் விளாசி வந்த நிலையில், தர்ஷா குப்தாவின் ஆடை குறித்து அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
சூட்டிங் ஸ்பாட்டில் நடிகையுடன் ஜாலியாக பேசுவதை போல நினைத்துக் கொண்டு பொதுவெளியில் பேசி மாட்டிக் கொண்டார் சதீஷ் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
பாலியல் வன்முறை - இலங்கை வீரர் செய்த ஏமாற்று வேலை.. ஆஸி, பெண் பரபரப்பு வாக்குமூலம்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. 5 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்ததால் அரையிறுதிக்கு தகுதிப்பெறாமல் சென்றது.
இந்த அதிர்ச்சியில் இருந்தே இலங்கை அணி ரசிகர்கள் மீளாத சூழலில், அந்த அணி வீரர் தனுஷ்கா குறித்து வெளியாகும் தகவல்கள் மேலும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
பாலியல் வன்கொடுமை வழக்கு.. தனுஷ்கா குணதிலகாவுக்கு பெரும் அடி.. நீதிமன்றம், இலங்கை வாரியம் அதிரடி!! பாலியல் வன்கொடுமை வழக்கு.. தனுஷ்கா குணதிலகாவுக்கு பெரும் அடி.. நீதிமன்றம், இலங்கை வாரியம் அதிரடி!!
வியாழன், 10 நவம்பர், 2022
நடிகை பார்வதி நாயர் "எச்சில் துப்பி, அடித்து அசிங்கப்படுத்தினார்" - பணியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு !
கடந்த அக்டோபர் மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயர் வீட்டில் இருந்து ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்கள், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள லேப்டாப் திருடுபோனதாகக் கூறப்பட்டது.
இதனை வீட்டில் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவர் திருடி சென்று விட்டதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி நாயர் புகார் அளித்திருந்தார்.
மதுரை பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: ரூ.5 லட்சம் நிதியுதவி!
கலைஞர் செய்திகள் . லெனினி : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகு சிறை என்ற கிராமம் உள்ளது. இங்கு உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் வேலைபார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இந்த தொழிற்சாலையில் வழக்கம்போல் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது தொழிற்சாலைக்குள் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அம்மாசி, அல்லரசு, கோபி, விக்கி, பிரேமா ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் 10க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மைதானத்தை சுற்றி ஓடியபோது சுருண்டு விழுந்த வேலூர் மாணவன் உயிரிழப்பு! தலைமை ஆசிரியர் கொடுத்த தண்டனையாம் -
மாலை மலர் : வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் 9ம் வகுப்புக்கு ஆசிரியர் யாரும் வராததால் மாணவர்கள் சத்தமாக பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர், மாணவர்களை கண்டித்துள்ளார்.
அத்துடன், சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்த மாணவர்களை, பள்ளியின் மைதானத்தை சுற்றி 4 முறை ஓடி வரும்படி உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத் தோ்தலில் ராஜா கிருஷ்ணமூா்த்தி, பிரமீளா ஜெயபால் , ரோ கன்னா, அருணா மில்லா் வெற்றி.
தினமணி : அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைக்கான இடைக்கால தோ்தலில் ஆளும் ஜனநாயக கட்சியைச் சோ்ந்த நான்கு இந்திய அமெரிக்கா்கள் வெற்றி பெற்றனா்.
நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைக்கான இடைக்கால செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.
தொழிலதிபா் ஸ்ரீ தனேதா் (67), மிசிகன் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளாா். அந்தத் தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெறும் இந்திய அமெரிக்கா் இவராவாா்.
இலினாய்ஸில் ராஜா கிருஷ்ணமூா்த்தி (49), சிலிகான் வேலியில் ரோ கன்னா (46), வாஷிங்டனில் பிரமீளா ஜெயபால் (57) ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். இவா்களில் ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூா்த்தி, பிரமீளா ஜெயபால் ஆகியோா் தொடா்ந்து நான்காவது முறையாக அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனா்.
பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை விடுவித்த உச்சநீதிமன்றம்: இந்திய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய உத்தரவு
BBC எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி : பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஹரியாணாவின் வயல்களில் 19 வயது டெல்லி பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு “அரிதிலும் அரிதான” வழக்கு என அழைக்கப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட அந்த இளம்பெண்ணின் உண்மையான பெயரை இந்திய சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது என்று விவரிக்கப்படும் அளவுக்கு இருந்த கொடூரமான செய்தியால் இந்திய மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கைது செய்யப்பட்ட மூன்று ஆண்கள்,
2014ஆம் ஆண்டில் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டது.
அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கார் வெடிப்பு சம்பவம் - கோவையில் 20 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
விசாரணையில் முபின் கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்து கார் வெடிப்பு நடந்த இடம், கார் இருந்த நிலை, வெடிவிபத்தால் பாதிக்கப்பட்ட கோவிலின் முன்புறம் உள்ளிட்ட இடங்கள், காரின் உதிரி பாகங்கள், சிலிண்டர்கள் கிடந்த இடம், முபின் உயிரிழந்து கிடந்த இடம், கோவில் வளாகம், சுற்றுப்புற பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
55,000 மி.லி தாய்ப்பால் தானம் செய்த கோவை அமைப்பு . பயனடைந்த 1,500 குழந்தைகள்.. குவியும் பாராட்டு !
kalaignarseithigal.com - KL Reshma : தமிழ்நாடு ஒரு ஆண்டில் 55,000 மி.லி தாய்ப்பாலை தானம் செய்த கோவை பெண்ணால் சுமார் 1,500 குழந்தைகள் பயனடைந்துள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.
ஒரு ஆண்டில் 55,000 மி.லி தாய்ப்பாலை தானம் செய்த கோவை பெண்ணால் சுமார் 1,500 குழந்தைகள் பயனடைந்துள்ள நிகழ்வு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.
தானத்தில் சிறந்த தானம், 'அன்னதானம்; இரத்த தானம்; உடல் உறுப்பு தானம் என்பதையும் கடந்து தற்போது 'தாய்ப்பால் தானம்' என்று உருமாறி வருகிறது. தாய்ப்பால் தானம் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலமுடன் வாழ வழிவகை செய்ய முடிகிறது.
புதன், 9 நவம்பர், 2022
ஓய்வுபெற்ற டிஜிபி ஜாஃபர் சேட் மனைவி (14.23 கோடி) சொத்துக்கள் முடக்கம்!
மின்னம்பலம் - Prakash : சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் மனைவியின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டுக்கு சொந்தமான சொத்துக்கள் உள்பட ரூ.14.23 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடாக நிலம் ஒதுக்கீடு செய்த விவகாரத்தில், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் மற்றும் லேண்ட் மார்க் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த உதயகுமார் ஆகியோருக்கு சொந்தமான மொத்தம் ரூ.14.23 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மூழ்கிய படகிலிருந்து மீட்கப்பட்ட 303 தமிழ் அகதிகள் வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனா்
BBC : இலங்கைத் தமிழ் அகதிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்தவா்கள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு இன்று (08) வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கப்பலில் இருந்த 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 சிறுவர்கள் உட்பட 303 போ் இருந்ததாகவும் சீரான உடல்நிலையில் இருக்கும் அவா்கள் தற்போது வியட்நாமின் ஹீலியோஸ் லீடருக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
படகில் இருந்த இலங்கை பிரஜை ஒருவர், தாம் பிரச்சினையில் சிக்கியியுள்ளதாக கடற்படையை தொடர்பு கொண்டு அறிவித்தனையடுத்து கொழும்பிலுள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸிடமிருந்து உதவியைக் கோரியிருந்தது.
இதனை அடுத்து, படகிலிருந்தவர்களை மீட்டு வியட்நாம் நோக்கி கொண்டு செல்வதாக சிங்கப்பூர் அதிகாரிகள், இலங்கைக்கு அறிவித்துள்ளதாக டற்படை தெரிவித்துள்ள.
படகிலிருந்த இலங்கையரொருவரின் பிரசன்னத்தை மாத்திரமே உத்தியோகபூர்வமாக கடற்படை அறிந்துள்ளதாகத் தெரிவித்த கடற்படைப் பேச்சாளர்,
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல- அமைச்சர் சேகர்பாபு!
மாலைமலர் : சென்னை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, கீழ்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கேள்வி: அறநிலையத்துறையின் மூலம் தொடங்கப்படவுள்ள கல்லூரிகளின் தற்போதைய நிலை மற்றும் புதிய பள்ளிகள் தொடங்கப்படுமா?
பதில்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிப்பு கொடுத்திருந்தோம். அதில் 4 கல்லூரிகளை தற்போது செயல்பாட்டில் உள்ளது. மீதம் 6 கல்லூரிகளை தொடங்குவதற்கு அந்தந்த கோவில்களில் அறங்காவலர்களை நியமித்து, கல்லூரி கல்வி இயக்ககத்தில் அனுமதி பெற்று, நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்து மற்ற கல்லூரிகளை தொடங்கலாம் என நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உயர்ஜாதி ஏழைகளின் 10% இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக திமுக சீராய்வு மனு: துரைமுருகன்
மத்திய பாஜக அரசின் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடுக்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 10% இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள், 10% இடஒதுக்கீடு செல்லும் என்றும் 2 நீதிபதிகள் செல்லும் எனவும் தீர்ப்பளித்தனர்.
திலகவதி மருமகள் ஸ்ருதி திலக் கொடுமைப்படுத்தப்பட்டாரா..? சாவித்திரி கண்ணன் - அறம் இணைய இதழ்
aramonline.in : முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதி பெண்ணுரிமையாளராக அறியப்பட்டவர். ஆனால், தற்போது அவரது மருமகள் ஸ்ருதி என் 170 பவுன் நகைகளையும், ஒரு கோடி பணத்தையும் பிடுங்கி கொண்டனர். என் உயிருக்கே ஆபத்து எனக் கூறியுள்ளார். இந்தச் சூழலில் ஸ்ருதி கைதாகி, அவர் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டு உள்ளது.
திலகவதி இலக்கியவாதியாக அறியப்பட்டவர். அவர் போலீஸ் அதிகாரியாக இருந்த காலத்திலேயே 12 நாவல்கள், மொழிபெயர்ப்பு நாவல்கள், ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதி குவித்தவர்! ஒரு முழு நேர இலக்கியவாதியாலேயே கூட இவ்வளவு எழுத முடியுமா? என வியக்கும் அளவுக்கு எழுதிக் குவித்தவர்! போதாக்குறைக்கு பணியில் இருக்கும் போதே அம்ருதா என்ற இலக்கிய இதழை தன் மகனை ஆசிரியராக வைத்து நடத்தினார்! அந்த அளவுக்கு காவல்துறை பணியைக் காட்டிலும் இலக்கியத்திற்கு முக்கியத்துவம் தந்தவர். இப்போதும் அந்த இலக்கிய இதழ் வந்து கொண்டுள்ளது.
செவ்வாய், 8 நவம்பர், 2022
தமிழ்நாடு புதிய விண்வெளி பாதுகாப்பு தொழிற்கொள்கையில் சாதிக்குமா? - BBC News தமிழ்
bbc.com - முரளிதரன் காசி விஸ்நாதன் -நாளையை நோக்கி இன்று - தலைநிமிர்ந்த தமிழ்நாடு எனும் தொழில் வளர்ச்சி 4.0 மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு.
வானூர்தித் துறையிலும் பாதுகாப்புத் தளவாடத் துறையிலும் முதலீடுகளை ஈர்ப்பதையும் உற்பத்தியைப் பெருக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் துறைகளுக்கான பிரத்யேகமான தொழிற்கொள்கையை இரண்டாவது முறையாக வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்தக் கொள்கைகள் எப்படிப் பலனளிக்கும்?
306 பேருடன் நடுக்கடலில் தத்தளித்த கப்பல் .. ஜப்பான் கடற்படை கப்பல் மீட்டது .. இலங்கைக்கு அழைத்துவர இலங்கை அரசு நடவடிக்கை
பிபிசி : 300 அகதிகளுடன் பயணித்த கப்பல் ஒன்று மூழ்கும் தறுவாயில் இருந்த நிலையில், அந்த கப்பலில் பயணித்த அகதிகளை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.
இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா இதனை பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.
வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை அண்மித்த கடற்பரப்பில், தாம் பயணிக்கும் கப்பல் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக, அந்த கப்பலிலிருந்து தமது கடற்படையின் மீட்பு நிலையத்திற்கு நேற்றைய தினம் தகவலொன்று கிடைத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
இதையடுத்து, இலங்கை அதிகாரிகள் வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கடற்படையின் மீட்பு நிலையங்களுக்கு தகவலை பரிமாறியுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் மூன்றரை மணி நேரம்தான் தூங்குகிறார் . முதுகு வலி வேறு.. அமைச்சரவை அதிரடி மாற்றம்?
tamil.oneindia.com - Shyamsundar : சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரலாம், இதற்கான பேச்சுக்கள் தொடங்கி உள்ளதாக செய்தி ஒன்று கோட்டை வட்டாரங்களில் வட்டமடிக்க தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுக்கள் இந்த வருட தொடக்கத்தில் தீவிரமாக இருந்தன. அதன்பின் கடந்த மே மாதம் திமுகவின் ஒரு வருட ஆட்சி முடிந்ததும்,
அந்த பேச்சுக்கள் மீண்டும் தீவிரம் அடைந்தன. கடந்த 2 -3 மாதங்களாக தமிழ்நாடு அரசியலில் தீவிரமாக வட்டமடித்து செய்தி என்றால் அது அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்திதான்.
அமைச்சரவையில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட போவதாக செய்திகள் வட்டமடித்தன.
முக்கியமாக மூத்த - செயல்படாத அமைச்சர்கள் சிலரின் (2 பேரின்) பதவி பறிக்கப்படலாம் என்று செய்திகள் வேகமாக பரவின.
இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தன. இதில் பல விதமாக யுகங்களும் வட்டமடித்து வந்தன. அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்பட்டது.
Singapore rescues 300 suspected migrants from sinking boat மூழ்கிய கப்பலில் இருந்து 306 இலங்கையர்கள் காப்பாற்றப்பட்டனர்!
லங்காசிறி : சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 305 இலங்கை அகதிகள் உள்ள கப்பல் மூழ்கிக் கொண்டிப்பதாக இன்று காலையில் அக்கப்பலில் இருந்தவரொருவர் தெரிவித்த ஒலிப்பதிவு வெளியான நிலையில், அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 300 பேர், அவர்களின் படகு மூழ்க ஆரம்பித்த நிலையில் சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை இன்று தெரிவித்துள்ளது.
படகிலிருந்த இலங்கைப் பிரஜையொருவர் கடற்படையை இன்று தொடர்பு கொண்டதாகவும், தாங்கள் ஆபத்திலிருப்பதாகவும் கூறியதாகத் தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்
இந்நிலையில், கொழும்பிலுள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸிடமிருந்து உதவியைக் கோரியிருந்தது.
அந்தவகையில், படகிலிருந்தவர்கள் மீட்கப்பட்டதாகவும், வியட்நாம் நோக்கிச் செல்வதாகவும் இலங்கைக்கு சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
திங்கள், 7 நவம்பர், 2022
கனடாவிற்கு 300 இற்கும் அதிகமான இலங்கையர்களுடன் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்!
canadamirror.com - Sulokshi : சட்டவிரோதமாக கனடா செல்ல முயன்ற 306 இலங்கையர்களை ஏற்றிய கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரியவந்துள்ளது.
குறித்த கப்பலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 306 பேர் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த கப்பல் பிலிப்பைன்ஸ் இற்கும் வியட்நாமிற்கும் இடையில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவிற்கு சட்டவிரோத பயணம்; 300 இற்கும் அதிகமான இலங்கையர்களுடன் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்! | A Ship With 317 Sri Lankans Middle Sea
ராமஜெயம் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கும் காவல்துறை.. சிக்குவார்களா ?
tamil.asianetnews.com - Raghupati R : திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு நடைபயிற்சி சென்ற போது கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டார்.
ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 01. 11. 2022-ம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் 6ல் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிபதியிடம் அனுமதி பெற 13 ரவுடிகள் ஆஜர்படுத்தபட்டனர்.
'10% இடஒதுக்கீடு; நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு': சட்டப்போராட்டத்தை முன்னெடுக்கும் முதல்வர்!
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நிறைவேற்றியது.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் முறை அரசியலமைப்பில் இல்லை என்றும், இது சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கை என்றும் கூறி தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன.
பின்னர் இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி யு.யு.லலித், தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டன.
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் மர்ம மரணம்; கரூரில் உறவினர்கள் போராட்டம்
நக்கீரன் : கரூரில் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசி செலுத்திக்கொண்ட பெண் உயிரிழந்ததால் அந்தப் பெண்ணின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் கல்லுமடையை அடுத்துள்ளது மருதம்பட்டி. அந்தப் பகுதியில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தவர் முகேஷ் குமார்.
உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும்! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி எஸ். ரவீந்திர பாட் ஆகியோர் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
1980களின் இறுதியில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. இதனாலேயே அப்போதைய பிரதமர் மறைந்த வி.பி.சிங், சமூக நீதி காவலராக இன்றும் கொண்டாடப்படுகிறார்.
150 இலங்கை பெண்கள் ஓமானில் அடிமைகளாக விற்பனை
JVP news : இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ளனர்.
இந்த விடயம் சம்பந்தமாக பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையில் உள்ளதாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண்கள் அங்கிருந்து தகவல்களை அனுப்பி வைத்துள்ளதுடன், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அவர்களால் வெளியிடப்பட்ட தகவல்களில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் ஜனாதிபதியிடம் உருக்கமாக இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
கென்யா - வறட்சியால் 205 யானைகள் உயிரிழந்துள்ளது அந்நாட்டு அரசு அறிவிப்பு
வறட்சி காரணமாக கென்ய காடுகளில் உள்ள 205 யானைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் பெருமழை பெய்து கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது.
அதிலும் ஆப்ரிக்க நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பொழியாத சூழலில் இந்தாண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. அதன் தாக்கம் உலகின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரி அமைந்துள்ள கென்யாவையும் விட்டுவைக்கவில்லை.
தான்சானியாவில் பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து 19 பேர் உயிரிழப்பு
நக்கீரன் : 40 பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானமானது ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தான்சானியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பயணிகள் சிறிய பயணிகள் விமானம் மோசமான வானிலை காரணமாக விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் சுமார் 328 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானத்தின் எஞ்சின் பழுதடைந்து எதிர்பாராத விதமாக ஏரிக்குள் பாய்ந்தது.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஞாயிறு, 6 நவம்பர், 2022
மனநலம் பாதிக்கப்பட்டவரை சித்தராக மாற்றிய கும்பல் - உண்டியல் வைத்து பணம் வசூல்
ரெகுலரா உண்டிய வக்கிரத்தில் எப்பெப்போ பணம் தேவையோ அப்போ மட்டும் வச்சுக்குவோம்
சித்தரை இப்படி பொது இடத்தில் வச்சிருக்கிறது நல்லா இல்ல
அதனால என் தோட்டத்தில் பெரிசா ஒரு ஆஸ்ரமம் கட்டி அதில சித்தரை வைக்கப்போறோம் .தாசில்தாரிடம் சொல்லிட்டேன்
அப்புறம் சித்தர் என் கஸ்டடியில் வந்துடுவார்
பழனி அருகே அழுக்கு மூட்டை சாமியார் பெரிய சித்தராக பாப்புலர் ஆகிட்டார் அவர் பேரில் ட்ரஸ்ட்டி இயங்குகிறது
அவுஸ்திரேலியாவில் பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ் குணாதிலக கைது!
ஆனால் ஆஸ்திரேலியாவில் அணியில் இருந்தார். அவர் நவம்பர் 2015இல் தனது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து இலங்கைக்காக 8 டெஸ்ட், 47 ஒருநாள் மற்றும் 46 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
நேற்று (நவ.5) நடைபெற்ற முக்கியமான போட்டியில் இங்கிலாந்திடம் தோற்ற இலங்கை அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.
"ஆன்லைன் டேட்டிங் செயலியின் மூலம் பல நாட்கள் அவருடன் தொடர்பு கொண்ட பிறகு அந்தப் பெண் அவரைச் சந்தித்துள்ளார்.
வீட்டின் கேட்டை மூட சென்ற கணவன் மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு... சென்னை கோடம்பாக்கம் அடுக்கு மாடியில்
இவர் வருமானவரித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
இவரது மனைவி பானுமதியும் தடய அறிவியல் துறையில் துணை கண்காணிப்பாராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இவர்களுக்கு குழந்தை கிடையாது. எனவே கோடம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இதனிடையே நேற்று நள்ளிரவு மூர்த்தி வீட்டின் கேட்டை மூட சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கேட்டில் பாய்ந்து இருந்த மின்சாரம் மூர்த்தியையும் தாக்கியுள்ளது. இதன் காரணமாக அந்த இடத்திலேயை ஷாக் அடித்து நின்றுள்ளார்.
சமஸ்கிருதமாக்கி உருத்தெரியாமல் மறைக்கப்பட்ட தூய தமிழ்ச் சொற்கள்..
கழுவி கழுவி ஊத்துவோம் ; ·
*சமஸ்கிருதமாக்கி அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்..*.
பூவை புஷ்பமாக்கி
அழகை சுந்தராக்கி
முடியை கேசமாக்கி
தீயை அக்னியாக்கி
காற்றை வாயுவாக்கி
பிணத்தை சவமாக்கி
கெட்டதை பாவமாக்கி
முகத்தை வதனமாக்கி
அறிவைப் புத்தியாக்கி
அவையை சபையாக்கி
ஆசானைக் குருவாக்கி
இசையை சங்கீதமாக்கி
குண்டத்தை யாகமாக்கி
பெரியதை மஹாவாக்கி
கோயில் மக்களுக்கானதல்ல மக்கள் கோயிலடிமைகள்... ஸ்ரீ முன்னேஸ்வர மகாத்மியம் .. ஸ்ரீ லங்கா
Dhinakaran Chelliah : கோயில் மக்களுக்கானதல்ல மக்கள் கோயிலடிமைகள்
கோயில்கள் மக்களுக்காக எழுப்பப் பட்டவை அல்ல, அது மன்னர்களுக்காக மன்னரின் நலன் சார்ந்து எழுப்பப் பட்டவை என்பதை ஆகம நூல்களை வாசிக்கிறவர்கள் அறியும் உண்மை ஆகும்.
மன்னனுக்கு எதிராக பொதுமக்கள் புரட்சியோ,போராட்டமோ,கிளர்ச்சியோ செய்யாமல் அடிமைகளாக வாழ்வதற்கு கண்டுபிடிக்கப்பட்ட உபாயம்தான் “கோயில்கள்”.
அதனால்தான் ஐரோப்பா போல் அல்லாமல்,நம் மண்ணில் மன்னர்களுக்கு எதிராக ஒரு போதும் புரட்சி வெடித்ததில்லை.
மேலுள்ள கருத்தை வலியுறுத்தும் நூல்களில் ஒன்றுதான் “ஶ்ரீ முன்னேஸ்வர மான்மியம்” எனும் தல புராண நூல். முன்னேஸ்வரம் என்பது ஶ்ரீலங்காவிலுள்ள முக்கியமான சிவஸ்தலம் ஆகும்.
மன்னர்களின் ஆட்சி காலங்களில்,
கோயில்களைச் சார்ந்தே பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் அதைச் சுற்றியே அமைந்திருந்தது.
குஜராத் மும்முனை போட்டி .. காங்கிரசின் முஸ்லீம் வாக்குகளை பிரிக்க ஆம் ஆத்மீ முஸ்லீம் முதல்வர் வேட்பாளரை நிறுத்தியுள்ளது
2022 உத்தரப்பிரதேசத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, 2024ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை அரசியல் ஆர்வலர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
உ.பி.யில் ஆட்சி அமைக்கும் கட்சி அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர் கதையாக உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இருக்கும் எதிர்பார்ப்பைப் போல் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் தேர்தலும் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளது.
குஜராத் வரலாற்றில் இதுவரை காங்கிரஸ், பாஜக என இருமுனைப் போட்டியே நிலவி வந்தது.
தற்போது ஆம் ஆத்மியின் வருகையால் குஜராத் களம் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.
குஜராத் - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஹிமான்ஷு வியாஸ் பா.ஜ.க.வில் சேர்ந்தார்
மாலைமலர் : பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 என இரு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரதமர் மோடி சொந்த மாநிலத்திற்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.
அகமதாபாத்: பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.
8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து