நக்கீரன் :சி.என்.ராமகிருஷ்ணன்
நடிகை ஸ்ரீரெட்டிக்கு துணிச்சல் ரொம்ப அதிகம்தான்! தெலுங்குத் திரையுலகத்தை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார் போல!
திரைக்குப் பின்னால், சினிமாக்காரர்களுக்கு ஒரு இருட்டு உலகம் இருப்பது
அறிந்த ஒன்றுதான்! ஆனாலும், அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு யாரும்
முன்வருவதில்லை. ஏனென்றால், கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறிவது
போன்ற செயலில் யாரும் இறங்க மாட்டார்கள். விதிவிலக்காக, ஏதோ ஒரு
பேட்டியில், யாராவது ஒரு சினிமா பிரபலம், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை
குறித்தெல்லாம் பேசிவிடுவார். அல்லது, வலைத்தளங்களில் நடிகர், நடிகைகளின்
ஆபாச படங்களை, சினிமா சம்பந்தப்பட்டவர்களே, வேண்டுமென்று லீக்
செய்துவிடுவர். இவையெல்லாம் அவ்வப்போது பரபரப்பு செய்தியாகி, பின்னர்
அடங்கிவிடும்.
அந்த வகையில், இப்போது சர்ச்சையைக் கிளப்பி வருகிறார் நடிகை
ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலக உள் விவகாரங்களை அம்பலப்படுத்துவேன்
என்பதில் தீவிரம் காட்டுகிறார்.
சனி, 7 ஏப்ரல், 2018
ஆந்திரா ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசைச் சேர்ந்த, ஐந்து, எம்.பி.,க்கள் பதவியை ராஜினமா செய்தனர்
தினமலர்: ஐதராபாத் : ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததை
கண்டித்து, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசைச் சேர்ந்த, ஐந்து, எம்.பி.,க்கள், தங்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்."ஜெகன்,ஜெகன் கட்சி,எம்.பி.,ராஜினாமா,
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. ஆந்திராவில் இருந்து, தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட போது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்படி, கோரிக்கை வைக்கப்பட்டது. இதை, மத்திய அரசு நிறைவேற்றாததை கண்டித்து, தே.ஜ., கூட்டணியில் இருந்து, தெலுங்கு தேசம் விலகியது. பார்லி., பட்ஜெட் கூட்டத் தொடரில், ஆந்திர, எம்.பி.,க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், 23 நாட்கள், இரு சபைகளும் முடங்கின. இந்நிலையில், ஆந்திர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, ராஜசேகர ரெட்டியின் மகன், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசைச் சேர்ந்த, ஐந்து எம்.பி.,க்கள், தங்கள் பதவியை நேற்று ராஜினாமா செய்தனர்.< தங்கள் ராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் வழங்கினர். இதன்பின், பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், டில்லியில் உள்ள ஆந்திரா பவனில், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்து உள்ளனர்.

ஸ்டாலின் : கறுப்பு கொடியோடுதான் எதிர் கொள்ளுவோம் ... காவிரிக்காக வாயே திறக்காத மோடியை ..
மின்னம்பலம்: காவிரி
விவகாரத்தில் யாரையும் சந்திக்காத பிரதமரைக் கறுப்புக் கொடியுடன்
சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கடந்த 5ஆம் தேதி திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது கட்டப் போராட்டமாக இரு குழுக்களாகப் பிரிந்து காவிரி உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் பயணம் இன்று முக்கொம்புவிலிருந்தும், இரண்டாவது பயணம் 9ஆம் தேதி அரியலூரிலிருந்தும் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஐபிஎல் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றுங்கள் .IPL க்கு திருமாவளவன் கடிதம்!
மின்னம்பலம்: காவிரி
விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சென்னையில்
நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை
விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத நிலையில், மத்திய அரசைக் கண்டித்தும் மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 7) மும்பையில் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பிக்கவுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அப்படி நடத்தப்பட்டால் மைதானத்துக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் கடலில் முற்றுகை! சரக்குப் பெட்டகத் துறைமுகம்.. கன்யாகுமரியில்
மின்னம்பலம்: கன்னியாகுமரி
மாவட்டத்தில் அமையவுள்ள சரக்குப்
பெட்டகத் துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவளம் முதல் மணக்குடி வரையிலான கடல்பகுதியில் மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இனயம் பகுதியில் சரக்குப் பெட்டகத் துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் துறைமுகம் அமைக்கப்பட்டால் 12 கிமீ சுற்றளவிலான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதனால் இனயம் சரக்குப் பெட்டகத் துறைமுகத்தை அமைக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். தற்போது, 40க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
சரக்குப் பெட்டகத் துறைமுகம் அமைப்பதற்கு எதிராக கோவளம் முதல் மணக்குடி வரையிலான கடற்பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல், கையில் கறுப்பு கொடி ஏந்தியும் கடலில் இறங்கியும் இன்று (ஏப்ரல் 7) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

சல்மான்கானுக்கு ஜாமீன் ... ஜோத்பூர் நீதிமன்றத்தினால் அவசர அவசரமாக வழங்கப்பட்டது ..
மாலைமலர்: மான்வேட்டை வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சல்மான்
கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
ஜோத்பூர்: அரியவகை மான்களை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்பட 5 பேர் மீது ஜோத்பூர் முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் துஷ்யந்த் சிங் என்ற உள்ளூர்வாசியும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

சந்தையூர் சுவர் இடிப்பு ! எதிர்த்து தீக்குளிக்க முயன்ற 2 பேர் உட்பட 70 பேர் கைது
tamilthehindu :மதுரை அருகே சந்தையூரில் உள்ள சர்ச்சைக்குரிய சுவர் நேற்று
இடிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து 66 நாட்களாக மலையடிவாரத்தில்
குடியேறி நடத்தி வந்த போராட்டத்தை ஒரு தரப்பினர் விலக்கிக் கொண்டனர். சுவரை
இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற 2 பேர் உட்பட 70 பேரை
போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது சந்தையூர். இவ்வூர் ராஜகாளியம்மன் கோயிலைச் சுற்றி ஒரு சமூகத்தைச் சேர்ந்த இருபிரிவினர் வசிக்கின்றனர். கோயிலை சுற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு சுவர் எழுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த சுவரை கடந்து தங்கள் பகுதிக்கு வரக்கூடாது என ஒரு தரப்பினர் கட்டுப்பாடு விதிப்பதாக மற்றொரு தரப்பினர் 3 மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவித்தனர். எனவே, அந்த தீண்டாமை சுவரை இடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி திடீர் இடமாற்றம்
தினத்தந்தி: பாலிவுட் நட்சத்திரம் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை
தண்டனை விதித்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஜோத்பூர்,
பாலிவுட் திரையுலகில்
முன்னணி நடிகராக விளங்கி வரும் சல்மான்கான், ‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற
இந்திப்படத்தில் நடிப்பதற்காக கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம்
ஜோத்பூர் சென்றிருந்தார். அக்டோபர் 1-ந்தேதி இரவு இவர் வாகனம் ஒன்றில்
அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.அவருடன் நடிகர் சயீப் அலிகான்,
நடிகைகள் தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோரும் வாகனத்தில் இருந்தனர்.
அவர்கள் கங்காணி கிராமப்பகுதியில் சென்ற போது ‘பிளாக்பக்’ எனப்படும் அரிய
வகை மான்கூட்டம் தென்பட்டது. அதில் 2 மான்களை சல்மான்கான் வேட்டையாடியதாக
போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.
காமன்வெல்த் 2018: தமிழகத்தைச்சேர்ந்த சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
தினத்தந்தி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில்
பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.
கோல்டுகோஸ்ட்,
உலகின் 3-வது
மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி
ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் நேற்று தொடங்கியது.
இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து
நடத்தப்படும் இந்த போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்,
வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையர் உத்தரவு
dinakaran :சென்னை: தமிழகத்தில் 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை ரத்து செய்து
தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கூட்டுறவு தேர்தலில் முறைகேடு நடப்பதாக
வந்த புகாரை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க
தேர்தலில் முறைகேடு நடப்பதாக 31 சங்கங்கள் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு
தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராஜபாளையம் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து.. 7 பேர் உயிரிழந்தனர்
Kalai Mathi- Oneindia Tamil
விருதுநகர்: ராஜபாளையம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
கார்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சங்கனகொடா என்பர் தனது கும்பத்தினருடன் சுற்றுலா சென்று விட்டு சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது எதிரே திருச்சி மாவட்டம் கள்ளிக்குறிச்சியில் இருந்து தென்காசி நோக்கி சீனி லோடு ஏற்றி வந்த லாரி தேவதானம் விதைப்பண்ணை அருகே சங்கனகொடாவின் கார் மீது மோதியது.
இந்த விபத்தில சம்பவ இடத்திலேயே சிறுமி உள்பட ஏழு பேர் பலியாயினர். ஆபத்தான நிலையில் இருவர் மதுரை அரசு மருத்துவமணையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து சேத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்து நடத்த இடத்தில் மாவட்ட காவல் துணைக்கண் காணிப்பாளர் ராஜராஜன் நேரில் விசாரணைநடத்தினார்.

நடிகர்-நடிகைகள் சென்னையில் நாளை போராட்டம் ,, நடிகர்-நடிகைகள் 3 ஆயிரம் பேருக்கு சங்கம் அழைப்பு
maalaimalar :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர்-நடிகைகள்
சென்னையில் நாளை போராட்டம் நடத்துகிறார்கள். இதில் தவறாமல் கலந்து
கொள்ளும்படி ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட நடிகர்-நடிகைகள் 3 ஆயிரம்
பேருக்கு நடிகர் சங்கம் அழைப்பு விடுத்து உள்ளது.
சென்னை,
மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம்
முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியல் கட்சியினரும்,
இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் சாலை மறியல், ரெயில் மறியல்களில் அணி,
அணியாக பங்கேற்று கைதாகி வருகிறார்கள். வணிகர்கள் கடைகளை மூடி முழு
அடைப்பிலும் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் பொதுமக்கள் கண்டன
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தமிழகம் ஸ்தம்பித்து
மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
நடிகர்-நடிகைகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும்,
ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரியும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில்
ஈடுபடுகிறார்கள்.
ம.பி. வியாபம் ஊழல் ... 47 சாட்சிகள் படுகொலை. 2100 பேர் கைது, 20 ஆண்டுகளாக ஊழல். சி.பி.அய் 1500 கிலோ தங்கம், 2000 கோடி ஊழல்
AThi Asuran : 47 சாட்சிகள் மர்ம மரணம், படுகொலை. 2100 பேர் கைது,
கோடிக்கணக்கில் ஊழல், 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக நடந்த ஊழல். கையும் களவுமாக சி.பி.அய் 1500 கிலோ தங்கம், 2000 கோடி ரூபாய் ஊழல் பணத்தைக் கைப்பற்றியது. இதையெல்லாம் செய்த யோக்கியர்கள் தான் இப்போது தமிழ்நாட்டுத் துணைவேந்தர்களைக் குற்றம்கூறியுள்ளார்கள்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில், மருத்துவக்கல்வி, தொழிற்கல்வி, கல்லூரி, பல்கலைக்கழகப் போராசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிர்வகிக்கும் அமைப்பு வியாபம். ("Vyapam" Vyavsayik Pariksha Mandal). பா.ஜ.க ஆட்சியில் நடந்த இந்த வியாபம் ஊழல் தொடர்பாக, சாட்சியம் அளித்தவர்கள்
47 பேர் தொடர்ச்சியாக மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர். 2009 இல் தொடங்கிய வழக்கு விசாரணையில் இதுவரை சுமார் 2100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநில
பா.ஜ.க முதல்வர் சிவராஜ்சிங் சவ்கான், ஆர்.எஸ்.எஸ். காரரான மாநில ஆளுநர்
ராம் நரேஷ் யாதவ், மாநிலக் காவல் துறைத் தலைவர், பா.ஜ.க வின் மாநிலத்
தலைவர் லட்சுமிகாந்த் சர்மா, ஆர்.எஸ்.எஸ் அகில இந்தியத் தலைவர் சுதர்சன்
உட்பட ஏராளமான சர்மா, த்ரிவேதி, த்விவேதி, சதுர்வேதி, பாண்டேக்களாகிய
பார்ப்பன யோக்கியர்கள் இந்த தொடர் ஊழலைத் திட்டமிட்டு நடத்தியுள்ளனர்.
ஈழ விவகாரத்தில் சீமானின் உண்மையான பங்களிப்புகள் .. வைகோவின் குற்றச்சாட்டுகள்
Karl Max Ganapathy ஈழ விவகாரத்தில் சீமான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொய்கள்
அம்பலமாகத் தொடங்குகின்றன, ஆனால் நாம் கவனிக்கத் தவறும் ஒரு விஷயம் இதில் இருக்கிறது.
அது சீமானின் பொய்களுக்குக் களம் அமைத்துக்கொடுத்ததில் வைகோ நெடுமாறன் ஆகியோருக்கும் பங்கு உண்டு என்பதுதான்.
ஏனெனில் உணர்வுத்தளத்தில் நின்று மக்களிடம் நிறைய பொய் சொன்னவர்கள் இந்த இரண்டு பேரும். அவர்கள் இருவரும் அமைத்துக் கொடுத்த மேடையில் நின்றுகொண்டுதான் சீமான் ஈழ வியாபாரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார்.
ஆனால் இன்று சீமான் மட்டும்தான் பொய்யர் போலவும் இந்த இரண்டு பேரும் உத்தமர்கள் போலவும் கருத்துகள் உருவாக்கப்படுகின்றன.
வைகோவைக் கூட பொய்யர் என்பதை ஒரு பகுதி மக்கள் ஒத்துக்கொள்வார்கள். ஆனால் நெடுமாறன் பொய்யர் என்றால் துணுக்குறுவார்கள்.
ஏனெனில் பொய் என்பதன் வரையறை, இங்கு எல்லாரும் நினைப்பதைப் போல “உண்மைக்கு மாறான ஒன்றை உரைப்பது” என்பதாக அறியப்பட்டிருக்கிறது. அல்ல. அரசியலில் பொய்யின் பரிமாணம் என்பது வேறு.

துணைவேந்தர் சூரப்பா வேண்டாம் .. தந்தை பெரியார் திராவிடர் கழகம் போர்க்கொடி
தமிழிசை மாரிமுத்து: சூரப்பாவை திரும்பப் பெறு !!!!!
அண்ணா
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு கர்நாடகத்தை ச் சேர்ந்த சூரப்பாவை நியமித்த மய்ய அரசை க் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் கோவை காந்திபுரம் பெரியார் சிலை முன் நடைபெற்றது எனது இரு மகள்களும், துணைவியாரும் பங்கேற்றனர்.

கோவில் பிரசாதம் உண்ட இரு பெண்கள் உயிரழப்பு .42 பேர் மருத்துவமனையில் ... ஸ்ரீ செல்வ விநாயக மாரியம்மன் கோவில்
என்னங்கடா கொடுமை!
மனுசன் மாத்தி ஊத்திட்டா தெய்வம் விசத்தை
அமுதமா மாத்துமுனு சொல்லுவாங்களே! கோயில் பிரசாதம் சாப்பிட்ட 2 பெண்கள் பலி..! 42 பேருக்கு உடல்நலக்குறைவு..! கோவையில் அதிர்ச்சி!இரா. குருபிரசாத், விகடன் செய்தியில் கோவை, மேட்டுப்பாளையத்தில், கோயில் பிரசாதம் சாப்பிட்ட இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், நாடார் காலனியில் ஸ்ரீ செல்வவிநாயகர் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. இதையடுத்து, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

வெள்ளி, 6 ஏப்ரல், 2018
மத்திய கிழக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கருத்தடை ?
வீரகேசரி : மத்திய கிழக்கிற்கு வேலைவாய்ப்பிற்காக
செல்லும் இலங்கை
பெண்களை கருத்தடைமாத்திரைகளை பயன்படுத்துமாறு வேலைவாய்பு முகவர் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வற்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட பெண்களை மேற்கோள்காட்டி ”கார்டியன்” இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.</ இது தொடர்பாக கார்டியன் மேலும்
தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து மத்திய கிழக்கிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்லும் பெண்களை இலக்குவைக்கும் முகவர்கள் அவர்களை கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.</ நாங்கள் அனுப்பும் பெண் மூன்று மாத காலத்திற்கு கர்ப்பம்தரிக்கமாட்டார் என்ற உத்தரவாதத்தை தாங்கள் வழங்குவதாக இலங்கை வேலைவாய்பபு பணியகத்தினால் அனுமதி வழங்கப்பட்ட ஆறு முகவர் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கார்டியனிடம் தெரிவித்தனர்.

மோடியா நாமளா ரெண்டுல ஒண்ணு பாப்போம் ! மக்கள் கருத்து – படங்கள் !
வினவு :காவிரிக்காக தமிழகம் கொதித்தெழுந்து போராடுகிறது. சென்னை செனாய் நகர் மக்கள் என்ன கருதுகிறார்கள்? வினவு செய்தியாளர்களின் நேர்காணல்
காவிரி உரிமைக்காக நேற்று 05.04.2018 நடந்த வேலை நிறுத்தத்தை ஒட்டி சென்னை செனாய் நகர மக்கள் என்ன கருதுகிறார்கள்? வினவு செய்தியாளர்கள் நடத்திய நேர்காணல்!
ராஜேஸ்வரி, குப்பம்மாள் – பாதையோர வியாபாரிகள், சொந்த ஊர் செய்யாறு.
மெட்ராஸ் வந்து பல வருசமாயிருச்சு. காய்கறி மார்கெட்டிலிருந்து தள்ளு (கழிவு) காயி வாங்கி வந்து கூறுகட்டி விப்போம். ஒரு நாளைக்கு 100, 150 ரூபாய் கிடைப்பதே கஷ்டம். இன்னிக்கு அதுகூட இல்ல. எங்களுக்கு வியாபாரம் போனாலும் பரவாயில்லை. காவிரிக்காக போராட்டம் நடத்துறது சரிதானே. நமக்கெல்லாம் சோறு போடுறது அந்த விவசாயிங்கதானே?
அம்பிகா.
மோடி ஆட்சியில ஒவ்வொரு பிரச்சினையா வருது. பணம் செல்லாதுன்னு சொன்னப்போ, இருந்த வியாபாரமும் போச்சு. இப்ப தண்ணியும் இல்லங்கிறாய்ங்க. இனி, எங்கேதான் போறதுன்னே தெரியல.

அரசியல் அனாதையல்ல தமிழகம் ! காவிரி போராட்ட செய்திகள் !
வினவு :தமிழகத்தில் நேற்று நடைபெற்ற பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் பங்கேற்றதோடு, சென்னையில் மெரினாவை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தியது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 05-04-2018 அன்று தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை உள்ளிட்ட வியாபாரிகள் சங்கமும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். இந்தப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் கலந்து கொண்டது. நேற்று நடைபெற்ற பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்ததுடன், தமிழகம் தழுவிய அளவில் பரவலாக சாலைமறியல், ஆர்ப்பாட்டம், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்கள் என தமிழகமே போர்க்கோலம் பூண்டது. இதில் மக்கள் அதிகாரம் பங்கேற்றதோடு, சென்னை மெரினாவை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தியது. சென்னை மட்டுமல்லாது, தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் மற்றும் ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு., பெ.வி.மு. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டப் பதிவுகளை இங்கே தொகுத்து தருகிறோம்.

துணைவேந்தர்களாக வெளிமாநிலத்தவர்... தமிழக கல்வி தரத்தை சர்வதேச அளவில் தகர்க்க ஆர் எஸ் எஸ் சதி!
Mathi - Tamiloneindia :தமிழகத்தில் தொடர்ந்து
நியமிக்கப்படும் வெளிமாநில துணைவேந்தர்கள் சென்னை: தமிழக பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களாக வெளிமாநிலத்தவர் தொடர்ந்து நியமிக்கப்படுவது மிகப் பெரும் சதியோ என சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச அளவில் தமிழகக் கல்வியாளர்களின் தரத்தை திட்டமிட்டு சிதைக்கும் சதித் திட்டம்தானா? இது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனத்துக்குப் பின் வட மாநிலங்களைப் போல இந்துத்துவா சக்திகள் தலையெடுப்பதும் ஊர்வலம் நடத்துவம் தொடர்கிறது. இதற்கு வழக்கம்போல தமிழகம் எதிர்வினையாற்றி வருகிறது.< இதன் அடுத்த கட்டமாக தமிழக பல்கலைக் கழகங்களை காவிமயமாக்கும் வகையில் வெளிமாநில இந்துத்துவா ஆதரவாளர்களை அடுத்தடுத்து தமிழகப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களாக நியமித்து வருகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். தமிழ்நாடு இசை பல்கலைக் கழகத்துக்கு கேரளாவின் பிரமீளா குருமூர்த்தியை இறக்குமதி செய்தார் பன்வாரிலால் புரோஹித்.
இதற்கு நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி போன்றவர்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு தட்டிப் பறிக்கப்படுகிறது என பொங்கினார் புஷ்பவனம் குப்புசாமி.
இதையடுத்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு ஆந்திராவின் சாஸ்திரி நியமிக்கப்பட்டார். பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான, படுதீவிரமான இந்துத்துவாவாதியான சாஸ்திரியை நியமித்தது பெரும் சர்ச்சையானது.

ராஜராஜ சோழனின் பிரான்ஸ் மற்றும் சீன தேச தொடர்புகள்.. அசைக்க முடியாத ஆதாரங்கள்
Krishnavel T S :
ராஜராஜ சோழனின் பிரான்ஸ் மற்றும் சீன தேச தொடர்புகள்
சிலநாட்களுக்கு முன் ஒரு யூ-டியுப் வீடியோ ஒன்றை பார்த்து பொறி கலங்கிவிட்டது எனக்கு.
ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரியகோயிலில், ஒரு ஐரோப்பியனின் சிலை, தொப்பி அணிந்து, காலர் வைத்த சட்டை போட்டுக்கொண்டு இருக்கிறது பாருங்கள், அது மட்டுமல்ல, மேலும் ஒரு நீண்ட மீசையுடன் ஒரு சீனதேசத்து மனிதரின் சிலையும் பாருங்கள்.
வேத சாஸ்திரப்படி, கோயில் கோபுரத்தில் மனிதர்கள் சிலையை வைக்க கூடாது, அரசர்களின் சிலை மற்றும் தெய்வங்களின் சிலையை மட்டுமே வைக்கலாம்.
அந்த ஐரோப்பியனின் சிலை அதே காலகட்டத்தில் வாழ்ந்த பிரான்ஸ் தேச மன்னனான இரண்டாம் ராபர்ட்டின் சிலை, அந்த சீன தேசத்தவர் டாங் அரசவம்சத்தி சேர்ந்த சீன மன்னரின் சிலை.
கிமு.1000 வருடத்திலேயே மேற்கிலும் கிழக்கிலும் கடல் கடந்து தமிழனின் தொடர்புகளை பாருங்கள் என்று கதறியிருந்தார்.
சோழர்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் அவர்கள் யாருமே ஐரோப்பிய தேசங்கள் பக்கம் தலைவைத்து கூட படுக்கவில்லை, என்பதே வரலாற்று உண்மை,

சந்தையூர் சுவர் 2 மீட்டர் அளவு இடிக்கப்பட்டது . இரு பகுதியினரும் சமரசம்
மதுரை மாவட்டம் சந்தையூரில் இரு பிரிவினரின் பிரச்னைக்குக் காரணமான சந்தையூர் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு வருகிறது. கோட்டாட்சியர் தலைமையில் சுவரின் 2 மீட்டர் அளக்கப்பட்டு இடிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சந்தையூரில் இரு பிரிவு இன மக்கள் வசித்து வருகின்றனர்.
மாலைமலர்: மதுரை சந்தையூர் சுவர் இரண்டு மீட்டர் அளவுக்கு இடிக்கப்பட்டது .
பேரையூர்:
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது சந்தையூர் கிராமம். இங்கு இருபிரிவை சேர்ந்த சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.
இதில் ஒரு தரப்பினர் சுவர் எழுப்பினர். இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு
தெரிவித்தனர். தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அவர்கள்
மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்தனர்.
ஆனால் தீண்டாமை சுவர் அகற்றப்படவில்லை. இந்த சுவற்றை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கு எந்த பலனும் கிடைக்காததால் சுவற்றை அகற்ற வலியுறுத்திய மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டை காலி செய்து விட்டு அருகில் உள்ள மலைக்கு சென்று குடியேறினர். அங்கு சென்று கலெக்டர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். தீண்டாமை சுவரை அகற்றும் வரை வீடுகளுக்கு திரும்ப மாட்டோம் என போராட்டக்குழு தெரிவித்தது.

தஞ்சையில் மாணவர்கள் - போலீஸ் மோதல்!
மின்னம்பலம் :காவிரி
மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தஞ்சையில் மாணவர்கள் இரண்டாவது நாளாக
இன்று (ஏப்ரல் 6) வகுப்புகளைப் புறக்கணித்துச் சாலை மறியலில் ஈடுபட்டபோது
காவல் துறைக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு
பரபரப்பு ஏற்பட்டது..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதததைக் கண்டித்து நேற்று (ஏப்ரல் 5) தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்றன.. பல்வேறு கட்சியினர், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மாணவர்களும் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்த சாமி தலைமையில் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களது போராட்டம் இன்றும் தொடர்கிறது சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வாசலிலும், 300கும் மேற்பட்ட மாணவர்கள் தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் மற்றும் கல்லணை கால்வாய் பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

எதிர்க்கட்சிகள்: இரு குழுக்களாகப் பயணம்!
மின்னம்பலம் :அனைத்துக்
கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், இரண்டு
குழுக்களாகப் பிரிந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ள உள்ளோம்
என்று தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடைபெற்ற நிலையில், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது பேசிய ஸ்டாலின், தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை நடைபெறும் என்றும், அதில் காவிரி உரிமை மீட்புப் பயணத்தை எவ்வகையில் நடத்துவது என்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

சென்னையில் 2 நாட்கள் மின்சார ரயில்கள் ரத்து!
நக்கீரன்: சென்னை - திருத்தணி மார்க்கத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் 24 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. &
வியாசர்பாடி - ஆவடி இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை
ரத்து செய்யப்படுகின்றன. நாளை காலை 9.50 மணி முதல் மாலை 4 மணி வரை
மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகின்றன. நாளை மறுநாள் காலை 9.50 மணி
முதல் மாலை 4.20 மணி வரை ரயில்சேவை ரத்து ஆகின்றன.
இதே போல் சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் பராமரிப்பு பணி
காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் மின்சார ரயில் சேவை ரத்து
செய்யப்பட்டுள்ளன.
அவ்வப்போது சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 தொழிலாளிகள் உயிரழப்பு
மாலைமலர் :முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின்
தம்பிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர்
படுகாயம் அடைந்தனர்.
சிவகாசி:
சிவகாசியைச்
சேர்ந்தவர் ஹரிச்சந்திரன். இவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி
ஆவார். இவருக்கு சொந்த மான பட்டாசு ஆலை சிவகாசி அருகே உள்ள
ராமுத்தேவன்பட்டியில் உள்ளது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த
ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.
இன்று காலை தரைச் சக்கரத்திற்கு மருந்து கலவை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை இடிந்து தரைமட்டமானது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 2 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ரஜினியை கன்னடர் என சீண்டும் கமல் .. கமலும் கன்னடர்தான் .. ஹசன் மாவட்டம் கர்நாடகம் ..Hassan District Karnataka
dinamani ; ரஜினிகாந்தை கன்னடராக பட்டியலிட்டு
கமல்ஹாசன் போட்ட ட்வீட், பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ரஜினிகாந்த்
ரசிகர்கள் ஆவேசம் அடைந்திருக்கிறார்கள்.
மக்கள் நீதி மய்யம் தலைவரான கமல்ஹாசன்
இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா நியமனம்
குறித்து ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது,
‘கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி
வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா?
இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச்
சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?’ என்று பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனது அடுத்த ட்விட்டரை
ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார் கமல். அதில் அவர் ‘திரு நாகேஷ் என்
குருமார்களில் ஒருவர். திருமதி ராஜ்குமார், ராஜ்குமார் அண்ணா, திருமதி
சரோஜாதேவி ஆகியோர் என் நண்பர்கள். திரு ரஜினிகாந்த் மற்றும் திரு அம்பரீஷ்
எனக்கு உரியவர்கள். துணைவேந்தர் விஷயத்தில் இப்படி மத்திய மாநில அரசுகள்
ஒன்றை கேட்டால் இன்னொன்றை தருவது நகைப்புக்குரியது. தமிழகத்துக்கு தண்ணீர்
தேவை.’ என்றூ பதிவிட்டிருந்தார். இவர்கள் எல்லாம் கன்னடர்கள் என்று எதற்கு
கமல் தற்போது ஒரு பட்டியலை வெளியிட்டு அதில் ரஜினிகாந்த் பெயரை குறிப்பிட
வேண்டிய அவசியம் என்ன என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். கமல்
நேர்மறையாக சொன்னாலும் எதிர்மறையாகவே எடுத்துக் கொள்ளும் போக்குத் தான்
கண்டனத்துக்குரியது என்கின்றனர் கமல் ரசிகர்கள்.
ஆட்டுக்குட்டியை காப்பாற்ற புலியோடு போராடிய இளம்பெண் -
வெப்துனியா: தான் வளர்த்த செல்ல ஆட்டுக்குட்டியை உண்ண வந்த புலியுடன் போராடி மீட்ட இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீர தமிழச்சி என நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால், அது உண்மையாக நடந்துள்ளது. ஆனால், அது தமிழகத்தில் அல்ல. அந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
அந்த மாநிலத்தில் உள்ள பண்டாரா மாவட்டத்தில், சகோலி அருகேயுள்ள உஸ்கான் எனும் கிராமத்தில் வசிப்பவர் ரூபாலி மெஸ்ராம். இவர் ஒரு ஆட்டுக்குட்டியை பாசமாக வளர்ந்து வந்தார். வாசலில் கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த ஆட்டுக்குடியை சாப்பிட ஒரு புலி ஒன்று வந்துள்ளது. ஆட்டுக்குட்டியின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த ரூபாலி பார்த்த போது, ஆட்டுக்குட்டி புலியின் பிடியில் இருந்தது.
பக்கவாத நோயிலிருந்து விடுபட முட்டைகோஸ், காலிஃப்ளவர்!
மின்னம்பலம்: வயது
முதிர்ந்த பெண்கள் முட்டைகோஸ், காலிஃப்ளவர் உள்ளிட்ட சத்தான காய்கறிகளைச்
சாப்பிட்டுவருவதால், அவர்களுக்குப் பக்கவாதம் நோய் தாக்குவது குறைகிறது என
ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் பக்கவாதம் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். சுமார் 70 வயதான 954 பெண்களிடம் ஆராய்ச்சியாளர்கள், இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வில் வெளிவந்த முடிவுகளின் விவரம், “வயதில் முதிர்ந்த பெண்கள் முட்டைகோஸ், காலிஃப்ளவர் உள்ளிட்ட காய்களைச் சாப்பிட்டு வருவதால் பக்கவாதம் நோயில் இருந்து விடுபடுகிறார்கள்.

காவிரியை தடுக்கும் டெல்லியை முடக்கு ! போராட்டச் செய்தி
காவிரியை
மறுக்கும் டெல்லியின் அதிகாரத்தை முடக்கு!” என்ற
முழக்கத்தின் கீழ் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக காவிரியை மறுக்கும் பா.ஜ.க வை கண்டித்து கும்மிடிப்பூண்டி தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் கடந்த 03-04-2018 அன்று நடத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர் தோழர் விகந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முற்றுகையில் ஈடுபட்ட தோழர்களைக் கைது செய்தது போலீசு.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
தொடர்புக்கு: 94444 61480
*****************
“டெல்லி அதிகாரத்தை முடக்கு” என்ற முழக்கத்தின் கீழ் கடந்த 04-04-2018 அன்று கடலூர் மக்கள் அதிகாரம் தோழர்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் போராட்டம் மற்றும் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். காலை 6.00 மணிக்கு விழுப்புரம் பேசஞ்சர் ரயிலில் கடலூர் மக்கள் அதிகாரம் தோழர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

காவிரி இறுதித் தீர்ப்பு: ஒருமைப்பாட்டைப் பிளக்கவிருக்கும் கோடரி!
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்தியாவில் தண்ணீர் தனியார்மயத்தை உந்தித் தள்ளக்கூடியதாகவும், பல்வேறு மாநிலங்களில் நதிநீர்த் தகராறை மீண்டும் எழச் செய்வதாகவும், இந்நாட்டை பிளக்கும் கோடரியாகவும் இருக்கிறது
தண்ணீரைக் குடிக்கும் பெங்களூரு தீம் பார்க்குகள்.உச்ச நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு தமிழகத்தின் தண்ணீர் அளவைக் குறைத்து விட்டது, மேலாண்மை வாரியம் குறித்து நேர்படக் கூறவில்லை, பற்றாக்குறை காலத்தில் தண்ணீர்ப் பகிர்வு குறித்து மவுனம் சாதிக்கிறது” – என்பன போன்ற விசயங்களெல்லாம் தீர்ப்பில் நமக்குப் பளிச்சென்று தெரிகின்ற அநீதிகள்.
இந்தியாவின் நதிநீர் வழக்குகளிலேயே இவ்வளவு அநீதியான தீர்ப்பு வந்ததில்லை என்பது ஒருபுறமிருக்க, இத்தீர்ப்பு மற்ற மாநிலங்களின் நதிநீர் சிக்கல்கள் மீது தோற்றுவிக்கக் கூடிய விளைவைப் பார்ப்போம்.

மாண்டவி காயத்திரி ஷர்மா .. கமலஹாசனின் தற்போதைய ஆலோசகர் ....
A.Shankar :மக்கள் நீதி மைய்த்தின், ச்சே ஸ்பெல்லிங் மிஸ்டேக். மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பது, மாண்ட்வி காயத்ரி ஷர்மா.
இவர் மக்கள் தொடர்பு மேலாளர். இதற்கு முன், ஷா ரூக் கானுக்கும், அவரது ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கும் செய்தித் தொடர்பாளராக இருந்தார்.
கமல் கட்சியில் பெரும்பாலான முடிவுகளையும், கமல் எதை பேச வேண்டும், எதை பேசக் கூடாது என்பதையும் முடிவு செய்வது இவர்தான்.
கமல் மோடியை விமர்சிக்காமல் இருப்பதன் பின்னணியில் இருப்பதும் இந்த மாண்ட்வி காயத்ரி ஷர்மாதான்.
தமிழ் எங்கள் மூச்சு. ஆனா பொழப்புக்கு இந்திதான் ஆச்சு

வியாழன், 5 ஏப்ரல், 2018
530 ஏக்கர் நிலத்தை விடுவிக்க இராணுவத்துக்கு 880 மில்லியன் ரூபாய்களை கொடுக்க அரசு முடிவு ..
வடக்கில் இராணுவத்தினரின் வசமுள்ள 530
ஏக்கர் காணிகளில் இருந்து
இராணுவம் வெளியேறுவதுக்கு 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ள நிலையில், அதனைக் கொடுத்து அக் காணிகளை மீட்பதுக்கு அமைச்சரவைப்; பத்திரங்களை தமது அமைச்சு தயாரித்து வருவதாக மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்துள்ளார். யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் மீளக் குடியேறிய கடற்தொழிலாளர்களுக்கு உதவித் திட்டங்கள் இன்று (05) வழங்கப்பட்டது.< இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.< அவர் மேலும் தெரிவிக்கையில்,< வடக்கு கிழக்கில் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டியுள்ளது. இவ் யுத்தத்தால் இந்தியாவுக்குச் சென்ற மக்களில் 60 ஆயிரம் மக்கள் மீண்டும் இங்கு குடியேறுவதுக்காக பதிவு செய்துள்ளனர்.

தமிழக பல்கலைகழக துணை வேந்தர்களாக கர்நாடக ,ஆந்திரா ,கேரளத்தவர்கள் ... ஆர் எஸ் எஸ் பின்னணி உள்ளவர்கள் .
Sivasankaran Saravanan :
சென்னை
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட
கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா என்பவரை நியமித்த ஆளுநர் பன்வாரிலால் செயல்
கண்டிக்கத்தக்கது!
ஏற்கெனவே இசைப்பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம் போன்றவற்றின் துணைவேந்தர்களாக ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட நபர்களை நியமித்த நிலையில் தற்போது தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளின் தலைமையிடமான அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஆளுநர் வரம்பு மீறியிருக்கிறார்!
தேர்வுக் குழு தேர்ந்தெடுத்த பட்டியலில் இல்லாதவர் இந்த சூரப்பா! சென்னை ஐஐடி பேராசிரியரும் உலகளவில் ஆயிரக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டவருமான தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற நிலையில் பட்டியலிலேயே இடம்பெறாத ஒரு நபரை ஆளுநர் துணைவேந்தராக நியமித்திருப்பது மாநில உரிமைகளுக்கெதிரான அடாவடியான செயல்! இதிலே பெருஞ்சோகம் என்னவென்றால், இதையெல்லாம் தட்டிக்கேட்கவேண்டிய எடப்பாடி அரசு, பன்வாரிலால் ன் கொத்தடிமை போல கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறது!

தலித் பாஜக எம்.பி.யைத் தூக்கி வெளியே எறிந்த யோகி ஆதித்யநாத்:
சுசிலா :
·
பாஜகவை சேர்ந்தவராக இருந்தாலும், எம்.பி.யாக இருந்தாலும், தலித் ஆயிற்றே ... மதிக்கப்படுவார்களா...? “எனக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றி நான் பலமுறை கதவைத் தட்டிவிட்டேன், ஒருவரும் செவிசாய்க்கவில்லை அதனால்தான் தேசிய தாழ்த்தப்பட்ட சாதி ஆணையத்தை நாடினேன். உள்ளூர் மட்டத்தில் என்னைப் பற்றி விசாரியுங்கள் நான் ஏதாவது தவறு செய்திருக்கிறேனா என்று பின் ஏன் என்னை மட்டும் இப்படி நடத்த வேண்டும்?” என்று இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கேள்வி எழுப்பினார்.
tamilthehindu : யோகி, தலித் எம்.பி. சோட்டேலால், பிரதமருக்கு எழுதிய கடிதம் உ.பி.மாநிலத்தின் ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதி எம்.பி.சோட்டே லால் கர்வார் தன்னை முதல்வர் யோகி ஆதித்யநாத் தூக்கி வெளியே எறிந்தார் என்று பகீர் குற்றச்சாட்டைக் கூறியிருப்பது உ.பி.அரசியலில் பரபரப்பாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து நாடு முழுதும் தலித் போராட்டங்கள் போர்க்களமாக எழுச்சி பெற 10 பேர் பலியானதையடுத்து கடும் சர்ச்சை எழும்பியுள்ள நிலையில் தலித் எம்.பி. சோட்டேலால் கர்வார் பகீர் குற்றச்சாட்டை எழுப்பி பிரதமரிடம் புகார் அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

50 லட்சம் ஓய்வு பெற்ற ராணுவத்தினரின் டேட்டாக்களை காணவில்லை ... காசுக்கு வித்திருப்பாய்ங்க..
மின்னம்பலம்: ஒய்வு
பெற்ற ராணுவத்தினர் 50 லட்சம் பேர் குறித்த தகவல்கள் தனியார்
நிறுவனத்தினால் திருடப்பட்டதா என்று மத்தியஅரசின் பாதுகாப்புத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த மார்ச் 23ம் தேதியன்று ஓய்வு பெற்ற ராணுவத்தினரின் பங்களிப்பு சுகாதாரத் திட்ட அமைப்பிடமிருந்து தனியார் நிறுவனம் ஒன்று 50 லட்சம் ஓய்வு பெற்ற ராணுவத்தினர் குறித்த தகவல்களை பெற்று விட்டு அவற்றை திரும்பித்தரவில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்படி லோகேஷ் கே.பாத்ரா என்பவர் மத்திய அரசின் பாதுகாப்புத்துறையிடம் ஓய்வு பெற்ற ராணுவத்தினர் குறித்து தகவல் கேட்டிருந்தார். அதற்கு பின்னா் அவருக்கு தகவல் அளித்தபோது அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டது.

தமிழகத்தின் முதல்தர 10 கல்வி நிறுவனங்கள்!
மின்னம்பலம் :தமிழகத்தின் டாப் 10 கல்வி நிறுவனங்களில் முதலிடத்தில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி இடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரநிலை கட்டமைப்பு தேசிய அளவில் சிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலை நேற்று(ஏப்ரல் 4) வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் கல்வி, கற்றல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி,பட்டப்படிப்பு முடிவுகள் மற்றும் கண்ணோட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், தமிழகத்திலிருந்து 37 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன.
அவற்றில் முதல் 10 தமிழக கல்லூரிகள்:
1. திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி (இடம் 3).
2. சென்னை மாநில கல்லூரி (இடம் 5).
3.சென்னை லயோலா கல்லூரி (இடம் 6).
4.சென்னை மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி (இடம் 10).

கத்தினேன் கதறினேன்; ஒருவரும் உதவிக்கு வரவில்லை: டிராபிக் போலீஸாரால் தாக்கப்பட்ட பிரகாஷின் தாயார் கண்ணீர்
tamilthehindu :சம்பவம் நடந்தபோது போலீஸார் சுற்றி நின்று எங்கள் அனைவரையும்
தாக்கியபோது உதவி கேட்டு கத்தினேன் கதறினேன். யாரும் உதவிக்கு வரவில்லை என
பிரகாஷின் தாயார் உருக்கமாக பேட்டி அளித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் தி.நகர் போத்தீஸ் அருகே நடந்த சம்பவம் பொதுமக்களை உலுக்கியது. ஒரு இளைஞரை மூன்று காவல் அதிகாரிகள் பொதும்க்கள் முன்னிலையில் கம்பத்தில் பிடித்து வைத்து தாக்கியதும், இதைப்பார்த்து கதறும் தாயாரை போலீஸார் தாக்கியதும் வீடியோ காட்சிகளாக வெளிவந்து வைரலானது.

மகராஷ்டிரா தேர்தல் வேறு கட்சிகளின் வாக்குகளும் பாஜகவுக்கே அம்பலம் ..EVM தேர்தல் ஆணையமும் சேர்ந்து மோசடி ..
வெப்துனியா :மஹாராஷ்டிராவில் நடந்த சில தேர்தல்களில் முறைகேடு
நடந்திருப்பது தற்போது ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை தகவல் அறியும் உரிமை சட்டம் வெளியிட்டுள்ளது. தேர்தலில் வாக்களிக்கும் எந்திரத்தில் முறைகேடு செய்துதான் பாஜக வெற்றிபெறுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியது.
குஜராத் தேர்தலிலும், திரிபுரா தேர்தலிலும் பாஜக அப்படித்தான் வெற்றிபெற்றது என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தது. இந்நிலையில் மஹாராஷ்டிராவில் நடந்த தேர்தல் ஒன்றில் பாஜக முறைகேடு செய்தது அம்பலம் ஆகியுள்ளது.
இந்த முறைகேட்டை தேர்தல் ஆணையம் மூடி மறைத்த சம்பவமும் தற்போது வெளியாகியுள்ளது. மஹாராஷ்டிராவில் சிலா பரிசத் என்ற தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் சுயேச்சை வேட்பாளர் ஆஷா அருண் தேங்காய் சின்னத்திற்கு வாக்களித்தால் பாஜக கட்சி வேட்பாளரின் தாமரை சின்னத்திற்கு ஓட்டு விழுந்து இருக்கிறது. இதனால் வாக்களிக்கும் எந்திரத்தில் கோளாறு என்று காரணம் கூறி தேர்தலை நிறுத்தியது தேர்தல் ஆணையம். ஆனால், அணில் கல்காளி எதற்காக தேர்தல் நிறுத்தப்பட்டது என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)