சனி, 15 செப்டம்பர், 2018

கனிமொழி யாரை தாக்குகிறார்? அந்த புதிய முக மூடிகள் யார் யார்?

கனிமொழி எதிர்ப்பு யாரை குத்தி காண்பித்து tamil.oneindia.com -lakshmi-: யார் அந்த முகமூடிகள்?...யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி? சென்னை: "நீங்கள் இல்லாத நாட்களில் புதிய முகமூடிகளை பார்த்துவிட்டேன்" என்று கனிமொழி தனது ஆதங்கத்தை குறிப்பிட்டு ஒரு கவிதை எழுதியுள்ளார். சர்ச்சைக்குரிய இந்த கவிதைதான் தற்போது டாக் ஆப் தி டவுனாக உள்ளது.
கருணாநிதி இறப்புக்கு பிறகு ஏற்பட்ட அனுபவம் குறித்து ஒரு இதழுக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி கவிதை எழுதியுள்ளார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கருணாநிதிக்கு பிறகு தான் எத்தகைய வேதனையில் இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தும் விதமாக உள்ள இந்த கவிதையில் சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளை கனி குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக மாநாட்டில் வடமாநில தலைவர்கள் வருவதால்.. ஸ்டாலின் வர மறுத்தாரா?

`ம.தி.மு.க. மாநாட்டுக்குப் போக வேண்டாம்!’ - ஸ்டாலினைத் தடுத்த தலைவர்கள்vikatan.com -rames:
வைகோதந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா மற்றும் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் பொதுவாழ்வு பொன் விழா என மூன்றும் சேர்த்து, முப்பெரும் விழா மாநில மாநாடு வருகிற செப்டம்பர் 15-ம் தேதி ஈரோட்டில் நடைபெறவிருக்கிறது. ஈரோடு – பெருந்துறை சாலையில் மூலக்கரை என்னுமிடத்தில் இதற்கான ஏற்பாடுகள் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றன. பி.ஜே.பி. எதிர்ப்பு மனநிலையில் உள்ள தலைவர்களை, ஒரே மேடையில் ஏற்றி மாஸ் காட்டும் நோக்கில் வைகோ இந்த மாநாட்டினை டிசைன் செய்துள்ளார்.

வைகோவின் தியாகம் வீண் போகாது: துரைமுருகன்

வைகோவின் தியாகம் வீண் போகாது: துரைமுருகன்மின்னம்பலம்: பெரியார் பிறந்த நாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா - வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, மதிமுக சார்பாக இன்று (செப்டம்பர் 15) முப்பெரும் விழா மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற்று வருகிறது.
திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுடன் இணைந்து பாஜக, அதிமுக அரசை வீழ்த்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பை மத்திய அரசு நிறுத்த வேண்டும், மாநில ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதை நிறுத்த வேண்டும் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மொத்தம் 35 தீர்மானங்களும் கலைஞர் மற்றும் வாஜ்பாயிக்கு இரங்கல் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் மாநாட்டில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “இந்தப் பொன்விழாவிற்குப் பிறகுதான் வைகோவின் தியாக வாழ்க்கைக்கான பலனை இந்த இனம் அறுவடை செய்யவுள்ளது.

திராவிடர்கள் ஒற்றுமை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

திராவிடர்கள் ஒற்றுமை: முதல்வர் வலியுறுத்தல்!மின்னம்பலம்: தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் திராவிடம் என்ற ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை ஒற்றுமையின் மூலமே உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ் உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திராவிட இயல் ஆய்வு நிறுவன துவக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று(செப்டம்பர் 145) நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”இனமும், மொழியும் காக்கப்படுவதற்காக பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய அரும்பணிகளைப் பற்றிய ஆய்வுகளையும் திராவிட இயல் ஆய்வு நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
திராவிடம் என்றால் ‘திரவம்’ மற்றும் ‘விடா’ என்ற சொற்களின் சங்கமம் எனவும், அது மூன்று கடல்கள், அதாவது- வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் சந்திக்கும் இடம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ரசிகர் திருமணத்தில் அடிதடி நடிகர் விஜய் மனைவியுடன் தப்பி ஓட்டம்

வெப்துனியா : நடிகர் விஜய் புதுச்சேரியில் தனது ரசிகர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்ள நேற்று சென்றிருந்தார். விஜய்யை பார்க்கவும் அவரை புகைப்படம் வீடியோ எடுக்கவும் ரசிகர்கள் குவிந்ததால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பின்னர் அடிதடியாக மாறியதால் அந்த இடத்தில் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து விஜய் தனது மனைவியுடன் அந்த திருமண மண்டபத்தில் இருந்து தப்பி ஓடினார். இதுகுறித்த வீடியோ, புகைப்படங்கள் இணையதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நேரடியாக திருமண மண்டபத்திற்கு செல்வதை தவிர்த்து திருமணம் முடிந்தவுடன் மணமக்களை தனது வீட்டிற்கு வரவழைத்து ஆசி வழங்கினால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கலாம் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை - ஆளுநர் மாளிகை மறுப்பு

7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை - கவர்னர் மாளிகை மறுப்புமாலைமலர் :பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக உள்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக வெளியான தகவலை கவர்னர் மாளிகை மறுத்துள்ளது.
சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிக்குமார் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதற்கிடையே தண்டனை பெற்ற 7 பேரும் கடந்த 27 ஆண்டுகளாக ஜெயிலில் இருப்பதை சுட்டிக்காட்டி தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஜனாதிபதி தங்களது கருணை மனுவை தாமதமாக பரிசீலனை செய்ததை காரணம் காண்பித்து அவர்கள் விடுதலை கோரி இருந்தனர்.

நடிகை ஓவியாவுக்கு இலங்கையில் சிவப்பு கம்பள வரவேற்பு

Arul Rathinam :  ஈழத்தமிழர் அவலநிலை: செங்குருதி மண்ணில் ஓவியாவுக்கு
சிவப்புக்கம்பள வரவேற்பு!"
தமிழீழ விடுதலைப் போரில் சுமார் ஒன்றரை லட்சம் உயிர்களை இழந்து, இப்போதும் தொடரும் திட்டமிட்ட இனஅழிப்பு சவாலை எதிர்க்கொண்டுள்ள நிலையில் - ஈழத்தமிழர்கள் நடிகை ஓவியாவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளித்துள்ளனர். கொழும்பு மாநகரின் செட்டித்தெருவில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை ஓவியாவை காண பெரும் கூட்டம் திரண்டுள்ளது. நகை வாங்கினால் குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்படுவோர் நடிகை ஓவியாவுடன் சாப்பிடலாம் என்பதற்காகவும் பலர் நகை வாங்க முட்டிமோதியுள்ளனர்!
சிங்கள பேரினவாதிகளுடனான 30 வருட போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து, கண், கை கால்களை இழந்து ஒரு நேர உணவுக்கு முன்னாள் போராளிகளும் மக்களும் அவதிப்படும் நிலையில் ஓவியாவுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை அங்குள்ள சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழக தம்பதிகள் அமெரிக்காவில் கைது ..குழந்தைக்கு தகுந்த சிகிச்சை அளிக்காததால்

வெப்துனியா :குழந்தைக்கு உயர்தர சிகிச்சை அளிக்காத தமிழகத்தை சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் அமெரிக்காவில் மனைவியுடன் கைது செய்யப்பட்டார். இந்த தம்பதியின் இரண்டு குழந்தைகள் தற்போது காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்
தமிழகத்தை சேர்ந்த பிரகாஷ் என்ற சாப்ட்வேர் எஞ்சினியர் அமெரிக்காவில் மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இந்த தம்பதியின் இரட்டை குழந்தைகளில் ஒன்றுக்கு
இடது கையில் வீக்கம் இருந்ததால் அந்த குழந்தையை ப்ரோவர்டு கௌண்டியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர்.மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்து உயர்தர சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.

சீமராஜா முதல் நாள் வசூல் அபாரம்

வெப்துனியா :பொன்ராம் இயக்கத்தில்
சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' திரைப்படம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இவர்களுடன் சிம்ரன், சூரி, நெப்போலியன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் காலை 5 மணி சிறப்பு காட்சிகள் வியாழக்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டது. படத்தை காண ஆர்வத்துடன் வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் ஆனால் திட்டமிட்டபடியே மற்ற 550 காட்சிகளும் திரையிடப்பட்டன. இந்நிலையில் படம் வெளியான முதல் நாளில் ரூ.13.5 கோடி வசூல் செய்து 'சீமராஜா' சாதனை படைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். சீமராஜா நல்ல காமெடியாக இருப்பதாக விமனர்சனங்கள் வருகின்றன. இதனால் இன்னும் சில நாட்களுக்கு பல திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சியாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சிரிபபு

18 எம் எல் ஏக்கள் தகுதி நீக்க வழக்கு .. ஆட்சிக்கு ஆபத்து?

MLA,எம்.எல்.ஏ.,தகுதி நீக்க வழக்கு,அடுத்த வாரம்,தீர்ப்பு?
தினமலர் :
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகலாம் எனஆளும் கட்சி வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் பழனிசாமியை மாற்றக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்து பதவிகளை பறித்து சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார்.>
இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. 'தகுதி நீக்கம் செல்லும்' என தலைமை நீதிபதியும் 'செல்லாது' என மற்றொரு நீதிபதியும் தீர்ப்பு கூறினர்.

சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிடி ஆணை: மஹாராஷ்டிரா நீதிமன்றம் உத்தரவு

ஆந்திர முதல்வருக்கு எதிராக பிடி ஆணை: மஹாராஷ்டிரா நீதிமன்றம் உத்தரவுtamil.news18.com: ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு  நாயுடு உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் பிணையில் வெளி வரமுடியாத பிடி ஆணையை பிறப்பித்துள்ளது. கோதாவரி ஆற்றின் குறுக்கே நான்தெட் பகுதியில் மகாராஷ்டிரா அரசு பாப்லி என்ற அணையை கட்டியது. 2010-ம் ஆண்டு இந்த அணை கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் அணையை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, அப்பகுதியில் மகாராஷ்டிரா அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்தது.

கலைஞர் பாணியில் அழகிரி அதிர்வெடி பதில் ... செய்தியாளர் கேள்விக்கு ...

இணைந்து பணியாற்ற ரெடி ONEINDIA TAMIL O கலைஞர்  பாணியில் அப்படி ஒரு பதில் சொன்ன அழகிரி
சென்னை: கலைஞர்  பாணியில் செய்தியாளர் கேள்விக்கு ஒரு நச் பதிலை அளித்து நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தினார், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.
ஆங்கில தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு அழகிரி சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் ரொம்பவே ரிலாக்ஸ்சாக பதில் அளித்தார் அழிகரி.
தன்னை சேர்க்காவிட்டால் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில், திமுக 4வது இடத்திற்குத்தான் செல்லும் என்று உறுதியாக தெரிவித்தார் அவர். இணைந்து பணியாற்ற ரெடி:
அப்போது, கேள்வி கேட்ட பெண் நிருபர், ஸ்டாலினுடன், நீங்கள் இணைந்து பணியாற்ற தயாரா என்றார். அதற்கு அழகிரி, "ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நான் தயாராக இருப்பதால்தான் திமுகவில் சேர்த்துக்கொள்ள கேட்டுக்கொண்டேன். இதற்கு முன்பு எத்தனையோ முறை இருவரும், இணைந்து பணியாற்றி உள்ளோம்.

முதுகை படிக்கட்டாக மாற்றி உதவிய மீனவர் ஜெய்சலுக்கு கார் - வீடு பரிசு!

keralanakkheeran.in - kathiravan": முதுகை படிக்கட்டாக மாற்றி உதவிய மீனவர் ஜெய்சலின்  மீட்பு பணியை பாராட்டி மகேந்திரா நிறுவனத்தின் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.   இதைத்தொடர்ந்து தற்போது இஸ்லாமிய அமைப்பு ஒன்று அவருக்கு வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது.<
கேரளாவின் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பு பணி நடந்து கொண்டிருந்தபோது,  ஜெய்சல் என்ற மீனவர் மீட்புப் படையினருடன் சேர்ந்து வெள்ளத்தில் சிக்கிய முதியவர்கள், பெண்கள், குழந்தைகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.  அப்போது பெண்கள், முதியவர்கள் மீட்பு படகில் ஏறுவதற்கு சிரமப்பட்டனர். இதையடுத்து ஜெய்சல் படகிற்கு பக்கத்தில் படுத்து கொண்டு தனது முதுகை படிக்கட்டாக மாற்றி பெண்களை தனது முதுகின் மேல் ஏறி படகிற்கு செல்லுமாறு கூறினார்.

தி.மு.க., - ம.தி.மு.க., முப்பெரும் விழா ஸ்டாலின், வைகோ முக்கிய அறிவிப்பு?

D.M.K,DMK,MDMK,Vaiko,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்,ம.தி.மு.க,வைகோதினமலர் :விழுப்புரத்தில் இன்று நடக்கவுள்ள, தி.மு.க., முப்பெரும் விழாவில், ஸ்டாலி னும்; ஈரோட்டில் நடக்கஉள்ள மாநாட்டில், ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோவும், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, முக்கிய அறிவிப்பை வெளியிடுவர் என்ற எதிர்பார்ப்பு, இரு கட்சி வட்டாரங்களிலும் எழுந்துள்ளது.
ம.தி.மு.க., சார்பில், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை பிறந்த நாள் விழா, ம.தி.மு.க., வெள்ளி விழா, வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, முப்பெரும் விழா மாநாடு, இன்று காலை, 9:00 மணிக்கு, ஈரோட்டில் துவங்குகிறது. அழைப்பு மதியம், 12:00 மணிக்கு, மறைந்த கருணாநிதியின் படத்தை, தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் திறந்து வைத்து பேசுகிறார். பொது வாழ்வு பொன் விழா மலரை, தேசிய மாநாட்டு கட்சி தலைவர், பரூக் அப்துல்லா
வெளியிடுகிறார். மாலை, 5:00 மணிக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர், சரத் பவார், முன்னாள் மத்திய அமைச்சர், யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் பேசுகின்றனர்.

நம்பி நாராயணன் .. அப்துல் கலாமுக்கு அடுத்த இடத்தில் இருந்தவருக்கு நேர்ந்த கொடுமை

:
Diwakar Singh : அப்துல் கலாமுக்கு அடுத்த இடத்தில் விஞ்ஞானியாக இருந்தவரின் குடும்பம் தனக்கு தானே தண்டனை வழங்கிகொண்டு, கூனி குறுகிப் போய் வழக்கிலிருந்து விடுபடும்வரை தன் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்த மிக கொடுமையான நாட்கள் உங்களுக்கு தெரியுமா?
ஆம் நம் இந்திய தேசத்தில்தான் இந்த கொடுமை நடந்தது,,
நாம் பெரிதும் மதிக்கிற "ISRO " வின்தலைமை விஞ்ஞானியாக இருந்தவரும் அப்துல்காலமுக்கு அடுத்த இடத்தில் இருந்து பணியாற்றிய விஞ்ஞானி
திரு நம்பி நாரயணணுக்குதான் இந்த கதி,
1994 ராக்கெட் தொழில் நுட்ப ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்றார் என்பதுதான் குற்றாச்சாட்டு,
அந்த வழக்கில் தனக்குதானே, தன் குடும்பத்துக்கே தானே தனிமை சிறை விதித்துத்கொண்டு, வழக்கில் வாதாடி வெற்றி பெற்று, தன் மீதான வழக்கு பொய்யென நிறுபித்து வெளிவரும்வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை ,
வழக்கில் நிராதிபதியாகி வெளியே வந்தவுடன் நடந்த சம்பவங்கள்தான் உச்சகட்டம்,

போலீஸ் அதிகாரியின் மகன் கால் செண்டர் பெண்ணை அடித்து பாலியல் பலாத்காரம் .. விடியோ


மின்னம்பலம் :டெல்லியில் பெண் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் மத்திய உள் துறை அமைச்சகம். .
டெல்லி உத்தம் நகர் பகுதியிலுள்ள தனியார் கால் சென்டர் பெண் ஊழியர் ஒருவரை, வாலிபர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதாகத் தகவல் வெளியானது. இதனை அவரது நண்பர் வீடியோ எடுத்து சமூக வலைதளமொன்றில் வெளியிட்டார்.
இந்த வீடியோ வைரலாக பரவியது இதையடுத்து, கடந்த செப்டம்பர் 2ஆம் தேதியன்று பெண் ஒருவர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், அந்த வீடியோவில் இடம்பெற்ற வாலிபர் போலீஸ் அதிகாரி ஒருவரின் மகன் என்பதால், இந்த வழக்கில் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.இதனையடுத்து, ரோஹித் சிங் டோமர் எனும் அந்த வாலிபர், இன்று (செப்டம்பர் 14) கைது செய்யப்பட்டார்.

டி ஆர் பாலு திமுகவின் முதன்மை செயலாளராகினார் ..


மின்னம்பலம் :"ஆகஸ்ட் 21ஆம் தேதி டிஜிட்டல் திண்ணை நினைவில்
இருக்கிறதா?
‘துரைமுருகன் தற்போது முதன்மைச் செயலாளர் என்ற பொறுப்பில் இருக்கிறார். அது துரைமுருகனுக்காக உருவாக்கப்பட்டதுதான். எப்படிச் செயல் தலைவர் என்ற நிலைக்கு ஸ்டாலினுக்குப் பிறகு யாரும் கிடையாதோ அதேபோல முதன்மைச் செயலாளர் பதவியையும் அப்படியே விட்டுவிடலாம் என்பதுதான் முதலில் பேசப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அந்தப் பதவியை டி.ஆர்.பாலுவுக்குக் கொடுக்கலாம் என்ற ஆலோசனையும் நடந்துவருகிறது.
‘எல்லோரையும் சமாதானப்படுத்தி அரவணைத்துப் போயிடலாம். எந்தச் சிக்கலும் கட்சிக்குள் வரக் கூடாது...’ என்று ஸ்டாலின் சொல்லிவருவதுடன், ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்துவருகிறார்.'' இதுதான் அன்று மின்னம்பலம்  சொன்னது. அது இன்று நடந்திருக்கிறது.

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

புதுசேரி கலப்புத் திருமணம்: ஊக்கத்தொகை 2.5 லட்சம்! முதல்வர் நாராயணசாமி அதிரடி!

கலப்புத் திருமணம்: ஊக்கத்தொகை 2.5 லட்சம்!
மின்னம்பலம் :புதுச்சேரியில் கலப்புத் திருமணம்
செய்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை 1 லட்ச ரூபாயில் இருந்து 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு, ரூ.1லட்சம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது புதுச்சேரி அரசு. சமீபத்தில் நடந்த அம்மாநில நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது, இந்த ஊக்கத்தொகையை 2.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தார் முதலமைச்சர் நாராயணசாமி. இது தொடர்பான அரசாணை, தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு ஆதி திராவிடர் நலத் துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
“புதுவை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செயல்படுத்தி வரும் கலப்பு திருமண ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்து- ஆதிதிராவிடர் இந்து- ஆதிதிராவிடர் அல்லாதாருடன் கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி 2018-19-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்து இருந்தார்.

நிக்காஹ் ஹலாலாவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெண் மீது ஆசிட் வீச்சு - பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றில் மனு


மாலைமலர் :விவாகரத்து செய்த கணவரை மீண்டும் திருமணம் செய்வதில் உள்ள நிக்காஹ் ஹலாலா முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெண் பாதுகாப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார். புதுடெல்லி: இஸ்லாமிய பழக்கவழக்கங்களின்படி பழங்காலத்தில் இருந்து ஒரு நடைமுறை வழக்கில் இருந்து வருகிறது. அதாவது, இஸ்லாமிய தம்பதியர் ஒருவரை ஒருவர் விவாகரத்து செய்த பின்னர், மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால் ‘ஷரீஅத்’ சட்டத்தின்படி அதற்கென தனி வழிமுறை இருப்பதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, விவாகரத்தான பெண் தனது முன்னாள் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால், நேரடியாக அவருடன் சேர்ந்து வாழ முடியாது.
அதற்கு முன்னதாக, இன்னொரு நபரை திருமணம் செய்துகொண்டு, அவருடன் தாம்பத்திய சுகத்தை அனுபவித்துவிட்டு, பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு, விவாகரத்துக்கு பின்னர் 40 நாட்கள் ‘இத்தாத்’ என்னும் விதவைக்கோலம் பூண்டு, அதன் பின்னரே தான் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பும் முன்னாள் கணவரை முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்.

கேரளாவில் திடீர் வறட்சி? - கிணறுகள், குளங்களில் நீர்மட்டம் மளமளவென சரிவு.. பெருவெள்ளம் எங்கே போனது?

tamilthehindu :கேரளாவில ஒரு மாத காலமாக பெருவெள்ளம் ஏற்பட்டு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அங்கு வரலாறு காணாத அளவு வெயில் காணப்படுகிறது. இதுமட்டுமின்றி கிணறுகள், ஆறுகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் கடந்த மாதம் 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் பெருமழை பெய்தது. இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகள், உடைமைகளை இழந்தனர். கடந்த சில வாரங்களாக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.

8 வழிச்சாலைகு நிலம் கையகப்படுத்த உயர் நீதிமன்றம் தடை

தினத்தந்தி :சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை, ரூ.10 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்தன.
இந்த திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டபோது, கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 8 வழிச்சாலை திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறது.
இந்த் நிலையில் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னைஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி ராஜனுக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு .. பொய் வழக்கியல் சிக்கவைத்த போலீஸ்

நம்பி நாராயணன், சுப்ரீம் கோர்ட், செயற்கைகாள் தொழில்நுட்பம் ,இஸ்ரோ விஞ்ஞானி, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி, விஞ்ஞான ரகசியங்கள், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், விஞ்ஞானி நம்பி நாராயணன்,  ராக்கெட் தொழில்நுட்பம்,  
Nambi Narayanan, Sub-court, artificial technology, ISRO scientist, former scientist of ISRO, scientific secrets, former scientist Nambi Narayanan, scientist Nambi Narayanan, rocket technology,dinamalar.com :
இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் , வெளிநாட்டிற்கு உளவு பார்த்ததாக 1994 ல் குற்றம்சாட்டப்பட்டது. ராக்கெட், செயற்கைகாள் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை உளவுபார்த்து, மாலத்தீவை சேர்ந்த 2 பேருக்கு வழங்கியதாக அவர், கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்த போது, கடும் சித்ரவதைகளுக்கு ஆளானதாக புகார் கூறியிருந்தார்.
கேரள போலீசாரிடம் இருந்த இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில் நம்பி நாராயணன் மீதான குற்றச்சாட்டு பொய் என கண்டறியப்பட்டு, 1996 ல் வழக்கு முடிவுக்குவந்தது. சுப்ரீம் கோர்ட் அவரை குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்தது.

மாதவராவின் குடோனில் டன் கணக்கில் குட்கா, 53 எந்திரங்கள் பறிமுதல்

மாதவராவுக்கு சொந்தமான குடோனில் இருந்து டன் கணக்கில் குட்கா, 53 எந்திரங்கள் பறிமுதல்மாலைமலர் :குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னையில் நேற்று சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் டன் கணக்கில் குட்கா பொருட்களும் 53 எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர்.
சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், சீனிவாச ராவ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காவலில் உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைக்காவல் முடிந்த நிலையில், அவர்கள் மீண்டும் இன்று சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களின் விசாரணை காவலை மேலும் மூன்று நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை பாரீஸ் கார்னர் : இதோ பாக்குறியே இந்த ரோடு தான் எங்க வீடு !

vinavu.com :சென்னை பாரீஸ் கார்னர்.. சென்னையின் பழமையான அடையாளங்களில் முக்கியமான ஒன்று…. பாரீஸ் என்றாலே விதவிதமான சந்தைகளைக் கொண்ட பஜார் தான். எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் ஒவ்வொரு பஜாருக்கும் ஒரு குறிப்பிட்ட தொழில்… பாரிமுனையிலிருந்து வால்டாக்ஸ் சாலை வரை பரந்து விரிந்த சாம்ராஜ்யம்.
1788-ல் சென்னை வந்த இங்கிலாந்தின் தாமஸ் பாரி, வணிகராக உரிமம் பெற்று தொழிலை ஆரம்பித்தார். 1795ல் ‘தாமஸ் பாரி அண்ட் கோ’வாக உருவானது. 1819-ல் ஜான் வில்லியம் டேர் என்பவருடன் இணைய ‘பாரி அண்ட் டேர்’ நிறுவனமாக மாறியது.
1824ல் காலரா நோயால் பாதிக்கப்பட்டு பாரி மரணமடைகிறார். இவருடைய வணிக பங்குதாரர் டேர் தலைமையில் பாரி நிறுவனம் வளர ஆரம்பித்த பிறகு, ‘ஈஸ்ட் இந்தியா டிஸ்டில்லரி (EID) அண்ட் சுகர் ஃபேக்டரி’ உருவானது. 1939ல் டேர் ஹவுஸ், ‘ஆர்ட் டிகோ’ என்ற கட்டட பாணியில் உருவாக்கப்பட்டது. அன்று தாமஸ் நிறுவிய வணிகக் கட்டடம் இன்று, ‘ஈ.ஐ.டி.பாரி இந்தியா லிட்’ என அழைக்கப்படுகிறது.
அந்தக் கட்டடம் இருக்கும் வரிசையில், நூற்றுக்கணக்கான கடைகள், பல்லாயிரக்கனக்கான தொழிலாளர்கள், வீடற்ற – முகவரியற்ற மக்களுக்கு நிரந்தர முகவரியாக  இருக்கும் அந்த இடம் தான் பாரீஸ் கார்னர்.

சுயநிர்ணய உரிமை கோருவதே குற்றமா ?

தனிநாடு வேண்டும் எனக் கோருவது அரசியல்சாசனத்தின்படி குற்றம் என்றால், இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைக்கவேண்டும் என்பது குற்றமாகாதா?
ஆழி செந்தில்நாதன்vinavu.com :திருவண்ணாமலையைச் சேர்ந்த திரு. கண்ணதாசன் என்பவர் தனிநாடு கேட்டு முகநூலில் எழுதினார் என்பதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டு அரசும் அதன் காவல்துறையும் இன்னும் எந்த அளவுக்கெல்லாம் இறங்கப்போகிறார்கள் என்றுதெரியவில்லை.
ஒரு கருத்துரிமை என்கிற அளவில் தனிநாடு கேட்டு எழுதுவது பேசுவது குற்றமல்ல. இது குறித்து ஏற்கனவே பல முறை நீதிமன்றங்கள் கூறியிருக்கின்றன.
இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் எத்தனையோ தலைவர்கள், எழுத்தாளர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் தங்களுடைய இனத்துக்கு விடுதலை வேண்டும் என்று கூறியதுண்டு. எழுதுவதுண்டு.
தனிநாடு வேண்டும் எனக் கோருவது அரசியல்சாசனத்தின்படி குற்றம் என்றால், இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைக்கவேண்டும் என்றோ இந்தியாவில் ராணுவ ஆட்சி வரவேண்டும் என்றோ இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சி வரவேண்டும் என்றோ கூறுவதுகூட அரசியல்சாசன ரீதியில் குற்றம்தான். இந்தியா என்பது இறையாண்மையுள்ள, ஜனநாயக, சோஷலிச, மதச்சார்பற்றக் குடியரசு. இந்த நாட்டில் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பு எந்த அடிப்படையில் இயங்கமுடியும்? அல்லது வேறு எந்த மதவாத அமைப்பாவது இயங்கமுடியுமா?

புழல் சிறையை சொர்க்கபுரியாக்கிய அதிகாரிகள்; புகைப்படங்கள் ..: ஏடிஜிபி திடீர் ஆய்வு


tamilthehindu : தமிழகத்தில் சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகளின் உச்சக்கட்டமாக சென்னை புழல் சிறையில் கைதிகளின் அறையை ஓட்டல் அறைபோல் மாற்றி சொகுசாக வைத்துள்ள புகைப்படங்கள் வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக சிறைச்சாலைகளில் செல்போன் புழக்கம், கஞ்சா புழக்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பணம் கொடுத்தால் கிடைக்கும் என்பது ஊரறிந்த விஷயமாகி போனது. அதிகாரிகளே இவற்றை சிறைக்குள் கடத்திச் சென்று கொடுப்பது வாடிக்கையான விஷயமாக மாறிப்போனது. இதில் சில அதிகாரிகள் அவ்வப்போது சிக்கி நடவடிக்கைக்கு உள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

கரும்புதான் சர்க்கரை நோய்க்கு காரணம் “.. யோகியின் புது கண்டுபிடிப்பு

splco.me :  கரும்புதான் சர்க்கரை நோய் வரக்
காரணமாகிறது என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.
உத்தரப்  பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதனன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறிய விவரம் ” நமது விவசாயிகள் வெறும் கரும்பு மட்டுமே உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தக் கூடாது. வேறு பயிர்களையும் பயிரிடவேண்டும். அதிகமான கரும்பு விளைச்சலின் காரணமாக அதன் பயன்பாடு அதிகமாகும். அது சர்க்கரை நோய்க்கு காரணமாக அமையும்.
எனவே விவசாயிகள் காய்கறிகளை விளைவிப்பதிலும் அதிகமான கவனம் செலுத்த வேண்டும், காய்கறிகளுக்கு தற்போது தில்லி மார்க்கெட்டில் அதிக விலை கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

மீண்டும் இரட்டைஇலை முடங்குமா அதிமுக அதிர்ச்சி.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

Splco Media : அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா இறந்த பிறகு, அக்கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி இல்லை எனவும், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே உள்ளது எனவும் கட்சி முடிவு செய்தது. மேலும், அதிமுக சட்டதிட்டங்களில் சில திருத்தங்களும் செய்யப்பட்டன.
இதை எதிர்த்து கே.சி. பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, அதிமுகவில் சட்டவிதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், மற்றும் சசிகலா உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் 3 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

வியாழன், 13 செப்டம்பர், 2018

கலைஞர் எழுச்சி பேரவை .. அழகிரி புதிய அமைப்பை தொடங்குகிறார் ...

மாலைமலர் : கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை
மு.க அழகிரி தொடங்க இருப்பதாகவும், அது தொடர்பாக மாவட்ட வாரியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரை: திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவுக்கு பின்னர் மு.க ஸ்டாலின் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். ஆனால், கருணாநிதி இருக்கும் போதே திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, அவரது மறைவுக்கு பின்னர் தனது ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தினார். இந்நிலையில், கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை மு.க அழகிரி தொடங்க இருப்பதாக அவரது ஆதரவாளர் இசக்கி முத்து தெரிவித்துள்ளார். இதற்காக, மாவட்ட வாரியாக ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

ராகுல் : அருண் ஜெட்லி விஜய் மல்லியா ரகசிய பேச்சுக்களை நேரில் பார்த்த சாட்சி .. காங்கிரஸ் பிரமுகர் பி.எல் .புனியா

Veerakumar ONEINDIA TAMIL ON டெல்லி: அருண் ஜேட்லியை, விஜய் மல்லையா
சந்தித்து பேசியதை காங்கிரஸ் தலைவர் ஒருவர் நேரில் பார்த்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  தெரிவித்தார்.
 டெல்லியில் நிருபர்களிடம் பேசிய ராகுல் காந்தி மேலும் கூறியதாவது: மல்லையாவை சந்திக்கவில்லை என்று அருண் ஜேட்லி பொய் சொல்கிறார். இருவரும் சந்தித்து பேசியதை காங்கிரஸ் தலைவர் பி.எல்.புனியா பார்த்துள்ளார்.
அது 15-20 நிமிட நேர சந்திப்பு. அமர்ந்தபடி பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதுபற்றி நாட்டு மக்களுக்கு அருண் ஜெட்லி விளக்கம் தெரிவிக்க வேண்டும்.  கிரிமினலுடன் நிதி அமைச்சர் ஆலோசனை செய்தது ஏன், என்ன விவாதிக்கப்பட்டது?
ஏன் சிபிஐயிடமோ, போலீசிடமோ தெரிவிக்கவில்லை.
அப்படியானால், அங்கே ஒரு டீல் நடந்துள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
 இதையடுத்து காங்கிரஸ் எம்.பி., பி.எல்.புனியா நிருபர்களிடம் கூறுகையில், 2016ம் ஆண்டு மார்ச் மாதம், நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் விஜய் மல்லையா மற்றும் அருண் ஜேட்லி பேசிக்கொண்டிருந்தனர். நானும் அந்த பகுதியில் இருந்தேன். ஒரு மூலையில் இருவரும் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். சுமார் ஐன்தாறு நிமிடங்கள் பிறகு, அவர்கள் அமர்ந்தபடி பேசினர்.

விகடன் ! சைபர் திருட்டில் இது ஒரு கேவலமான ரகம்

LR Jagadheesan : விகடன் விளக்குமா?
விகடன் குழுமத்தின் செயலியை பயன்படுத்தும் பயனாளர்களின் செல்பேசி அல்லது கைக்கணினிகளில் இருக்கும் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்களை பார்க்க அனுமதித்தால் மட்டுமே கட்டுரைகளையும் செய்திகளையும் படிக்க முடிவதாகவும் அனுமதிக்க மறுத்தால் விகடன் செயலியில் செய்திகள் கட்டுரைகளை படிக்க முடியவில்லை என்றும் இவர் புகார் கூறுகிறார். ஏற்கனவே சந்தா செலுத்திவிட்ட நிலையில் இந்த பிரச்சனையால் இவரால் தன் சந்தாவை பயன்படுத்த முடியாத நிலை. விகடன் நிறுவனத்திடம் புகார் அளித்தும் உரிய பதில் இல்லை என்கிறார்.
விகடன் இந்த பிரச்சனையை தீர்க்குமா? அல்லது விகடன் சந்தாதாரர்கள் யாராவது இதற்கான தீர்வை சொல்வார்களா??

அழகிரி அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டுக்கு ... ராஜுவின் தாயார் இழப்புக்கு ஆறுதல் கூற சென்றார் ...

அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டுக்கு சென்ற முக அழகிரிமாலைமலர் : முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்டுக்கு சென்று அவரது தாயார் மறைவுக்கு ஆறுதல் கூறினார்.
மதுரை: தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு தி.மு.க.வில் தன்னை இணைக்க வற்புறுத்தி வந்தார் மு.க. அழகிரி. ஆனால் கட்சி மேலிடம் மு.க.அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க மறுத்து வந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ மு.க.அழகிரியை பாராட்டி பேசினார். மதுரையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் மு.க. அழகிரியின் தேர்தல் வியூகம் சிறப்பாக இருந்தது என்றும், அவர் தி.மு.க. தொண்டர்களை அரவணைத்து செல்பவர் என்றும் கூறி அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பை ஏற்படுத்தினார்.

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம்; வழக்கை மீளப்பெற ரூ.5 பாதிரியார் கோடி பேரம்!


தினமலர் : கொச்சி : கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் பெற, பாதிரியார் தரப்பில் இருந்து, 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில், கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த, பிராங்கோ என்ற பாதிரியார், அவரது கட்டுப்பாட்டில் பணியாற்றி வந்த கன்னியாஸ்திரியை, 2014 - 2016 வரை, 13 முறை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து, ஐந்து கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, 'இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும்' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராஜபக்சே :இலங்கை போர் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படவில்லை!

 ராஜபக்சே,  மன்மோகன் சிங், ராகுல்காந்தி, பயங்கரவாதம், இலங்கை போர் , பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழ் மக்கள், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, ராகுல்,காங்கிரஸ்,  
Rajapaksa, Manmohan Singh, Rahul Gandhi, terrorism, war in Sri Lanka, Prime Minister Modi, Congress leader Rahul, former PM Manmohan Singh, Tamil people, former Sri Lankan president Rajapaksa, Rahul, Congress,தினமலர் :புதுடில்லி: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, டில்லி வந்துள்ளார். நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய நிலையில், இன்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, தனது மகன் நமலுடன் சென்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா உடனிருந்தார். ஆச்சர்யம் முன்னதாக டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், நாங்கள் இனரீதியிலான போரை நடத்தவில்லை. ராணுவ நடவடிக்கைகள், தமிழ் மக்களுக்கு எதிராக எடுக்கப்படவில்லை. பயங்கரவாத அமைப்பு, இலங்கையில் மட்டும் பரவியிருக்கவில்லை. அது தான் முன்னாள் பிரதமர் ராஜிவை கொன்றது. 2009 ல் இலங்கையில் பயங்கரவாதம் முற்றிலும் வீழ்த்தப்பட்டது அனைத்து நாடுகளையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது. பல நாடுகள், ஏராளமான பணம் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் வைத்திருந்தும் பயங்கரவாதிகளை ஒழிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

பெண்ணை உதைத்து துவைத்த திமுக நிர்வாகி செல்வகுமார் கழகத்தை விட்டு நீக்கம்!

dailythanthi.com : பெண்ணை காலால் எட்டி உதைத்த திமுக நிர்வாகி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.
சென்னை பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் பிரபல தனியார் கல்லூரிக்கு செல்லும் வழியில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா (வயது 35). இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த  தி.மு.க. பிரமுகர் செல்வகுமார் (52) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
செல்வக்குமார் தற்போது சத்தியா பியூட்டி பார்லர் நடத்தி வரும் பாரதிதாசன் நகரில் குடியிருந்துகொண்டு பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் செல்வகுமார் சத்தியாவின் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அவரை சரமாரியாக காலால் உதைத்து தாக்கினார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது. இந்த சம்பவத்தை வாட்ஸ்அப் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ராம்குமாரை கைதுசெய்யும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம்... மாணவர்கள் போராட்டம்!!

lovenakkheeran.in -kalaimohan : காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் உடலை வாங்க மறுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், திருவாதவூரைச் சேர்ந்த சிந்துஜா தனியார் கல்லூரி ஒன்றில் பி.இ., இறுதி ஆண்டு படித்து வந்தார். +2 தேர்வு முடிந்தவுடன் நுழைவுத் தேர்வுக்காக பயிற்சிக்கு சென்றபோது சிவகாசியை அடுத்த திருத்தங்கலைச் சேர்ந்த ராம்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. ஒரு மாதம் பயிற்சி முடிவதற்குள்ளாகவே இவர்களின் நட்பு காதலாக மாறியது.
 இருவரும் வெவ்வேறு கல்லூரிகளில் பி.இ. படிப்புக்கு சேர்ந்தனர். படிப்பதாக கூறி கடந்த 4 வருடங்களாக மதுரையில் பல இடங்களில் இவர்கள் இருவரும் சுற்றியுள்ளனர். மேலும் வாட்ஸ் அப் மற்றும் முகநூலிலும் இவர்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

7 பேர் விடுதலை - ஆளுநர் புரோகித் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை

7 பேர் விடுதலை விவகாரம் - பன்வாரிலால் புரோகித் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கைமாலைமலர் :பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்துள்ளார்.
 சென்னை:  ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கவர்னருக்கு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக முடிவெடுக்க கவர்னர் பன்வாரிலால் புரோகித் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பன்வாரிலால் புரோகித் அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மல்லையாவும் ஜெட்லியும் அமர்ந்து 20 நிமிடங்கள் பேசினர், சிசிடிவியை சோதிக்கலாம் - காங். எம்பி

மல்லையாவும் ஜெட்லியும் அமர்ந்து 20 நிமிடங்கள் பேசினர், சிசிடிவியை சோதிக்கலாம் - காங். எம்பிமாலைமலர் : நாட்டை விட்டு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் மல்லையாவும், அருண் ஜெட்லியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிசிடிவி கேமராவை பரிசோதித்து பார்க்கலாம் என காங்கிரஸ் எம்.பி புனியா கூறியுள்ளார்.
புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, கடனை செலுத்தாமல் லண்டனில் தஞ்சமடைந்தார். அவரை நாடு கடத்தக்கோரி இந்தியா தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.
நேற்று கோர்ட்டில் ஆஜரான விஜய் மல்லையா, தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறினார். ஆனால், அருண் ஜெட்லி இதனை மறுத்திருந்தார். மல்லையாவின் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து பதிவிட்டதால் இந்த விவகாரம் பரபரப்பு அடைந்தது.

சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே

வினவு :இந்தியா டுடேவின் 2018 செப்டம்பர் 10ஆம் தேதியிட்ட ஆங்கிலப் பதிப்பு “An Inconvenient Truth”  என்ற பெயரில் ஒரு கவர் ஸ்டோரியை வெளியிட்டிருக்கிறது. அதன் சுருக்கமான தமிழாக்கத்தை ஃபேஸ்புக்கில் பத்திரிகையாளர் முரளிதரன் விஸ்வநாதன் வெளியிட்டிருக்கிறார். அத்தொடரின் முதல் இரண்டு பகுதிகள் இங்கே இடம்பெறுகின்றன.

புனேவின் டெக்கான் கல்லூரியின் துணை வேந்தரான டாக்டர் வசந்த் ஷிண்டே ஒரு அகழ்வாராய்ச்சியாளர். இவரும் இவரது அணியினரும் ஹரியானாவின் ராகிகரி என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சியை 2015ல் மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகள் பெரும் தயக்கத்திற்குப் பிறகு இப்போது வெளியாகியிருக்கின்றன. இந்த முடிவை இந்துத்துவவாதிகள் எப்படி எதிர்கொள்வார்களோ என்பதுதான் தயக்கத்திற்குக் காரணம்.

குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்

அபிராமி விவகாரத்தில் இருக்கும் அக்கறை ஆர்வம், வறுமை தாளாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை கொண்ட சம்பவங்களின் போது இல்லாமல் போனதன் காரணமென்ன?
vinavu.com/- வில்லவன்: <: b="">குன்றத்தூர் அபிராமி எனும் இளம்பெண் தனது இரு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தன் காதலரோடு வாழும் நோக்கத்தோடு தப்பி ஓடிய செய்தி கடந்த 10 நாட்களாக சமூக ஊடகங்களில் பல வடிவங்களில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவருக்கு பிரியாணி பிடிக்கும் என்பது துவங்கி அவர் செய்த டப்ஸ்மாஷ் வீடியோக்கள் எல்லாமே கிரிமினல் கன்ஸ்பைரசி பட்டியலில் சேர்க்கப்பட்டாயிற்று. அவரது ஒப்பனைகளே அவர் தரத்தைக் காட்டுவதாக சொல்கிறார் ஒருவர். ’சும்மா இருந்தவளுக்கு வண்டி வாங்கிக் கொடுத்த ஊட்டுக்காரனை சொல்லணும்’ என்கிறார் இன்னொருவர். பலரது கருத்துக்களைப் பார்க்கையில் அவர்கள் ஒரு கொடூரமான கள்ளக்காதல் கொலைக்காக காத்திருந்தார்களோ என எண்ண வைக்கிறது. ஒரு தாய் தமது இரு பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தப்பிவிட்டார் எனும் செய்தி சீரணிக்க இயலாததாக இருந்தாலும் எனக்கு அதில் எந்தக் கலாச்சார அதிர்ச்சியும் ஏற்படவில்லை. மாறாக நமது மிகை எதிர்வினையின் மீது கொஞ்சம் சலிப்பும் பயமும் மேலிடுகிறது.

இலங்கை கோயிலில் விலங்குகளை பலியிட தடை: அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்


tamilthehindu :இலங்கையில் இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடும் வழக் கத்தை தடை செய்வதற்கு அந் நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இலங்கையில் இந்து மற்றும் முஸ்லிம் மத விழாக்களின்போது ஆடு, கோழி போன்ற விலங்கு களை பலியிடுவதற்கு அந்நாட்டு விலங்குகள் உரிமை செயற்பாட்டா ளர்களும், புத்தமத அமைப்புகளும் தொடர்ந்து பல ஆண்டுகளாக எதிர்த்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இலங்கை நாடாளுமன்றத்தில் நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத் தில் அந்நாட்டு இந்து சமய விவகாரத் துறை அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன், இலங்கையில் உள்ள இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடும் வழக்கத்துக்கு தடை விதிக்க பரிந்துரை செய்தார்.
பெரும்பான்மை ஆதரவு
இதற்கு இந்து மதத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் உட்பட இலங்கையின் பெரும்பான்மையான நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆதரவளித் தனர். இதையடுத்து கோயில்களில் விலங்குகளை பலியிடுவதற்கு தடை விதிக்க அமைச்சரவை ஒப்பு தல் வழங்கியது.

தமிழகம் மார்வாடிகள் கையில்? .. கோவை நாளேட்டில், இந்தியில் முழுப்பக்க விளம்பரம்

கோவை இந்து நாளேட்டில் இந்தி விளம்பரம் முழுப்பக்கம்
அக்சயமணி பதிப்பகம்  : தமிழக மாவட்டங்களின் வியாபாரம்... ஓர் அலசல்
பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சமூகத்திடமும், முஸ்லிம்கள் வசமுமிருந்த சிறு, குறு வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக வடநாட்டு மார்வாடிகள் கைப்பற்றி வருகின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
அன்று வட்டிக் கடையில் ஆரம்பித்து இன்று அனைத்து துறையிலும் வேகமாக வளர்ந்து வரும் வட மாநிலத்தவர்கள், முன்பு சென்னை, மதுரை, கோவையை மையமாக வைத்து மொத்த வியாபாரம் செய்து வந்த வட மாநிலத்தவர்கள் தற்போது அனைத்து மாவட்டங்களில், நேரடியாக சில்லறை வணிகத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரும்பாலான கடைகளை விலைக்கு வாங்கி விடுகின்றனர்,
தற்பொழுது முக்கிய சாலைகளில் உள்ள ரோட்டின் பெரும்பாலான வியாபாரம் மார்வாடிகள் கையில். பேல்பூரி, பானிபூரி தொடங்கி, பனியன் கம்பனி, கட்டிட வேலை, தொழிற்சாலை வேலையில் அதிக பேர் உள்ளார்கள், முன்பு ஜவுளி வியாபாரத்தில் கவனம் செலுத்திய குஜராத்திகள் கையில் தற்போது நகரின் பிளைவுட் வியாபாரம், செருப்பு மற்றும் பேக்ஸ் வியாபாரம், எலக்டிரிக்கல், சானிடரி மற்றும் பிளம்பிங் வியாபாரம், செல்போன் உதிரி பாகங்கள் மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் வியாபாரம்,
பிரமாண்டமாக ஸ்டேசனரி வியாபாரம், பரிசு பொருட்கள் வியாபாரம் டிஸ்போசபிள் கப் பிளேட் வியாபாரம் என்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி .... பகுத்தறிவு திமுகவினர் தடுமாறுவதும், தடம் மாறுவதும்

Palanivel Manickam : கனேஷ் பூஜா = கணபதி பூஜை = விநாயகர் சதுர்த்தி =
பிள்ளையார் சதுர்த்தி அதனை ஒட்டிய ஊர்வலம் என்பது ஒரு அரசியல் நிகழ்ச்சி.
இந்த அரசியல் நிகழ்ச்சியை தொடங்கியவர் திலகர் என்ற மராட்டிய பார்ப்பனர். கணபதி ஊர்வலத்தின் தாக்கம் அது தந்த வெற்றியை அனுபவித்த வட நாட்டு இந்துத்துவ செயல்பாட்டாளர்கள் அதனை மகாராஷ்டிராவில் தொடர்ந்து நடத்த தொடங்கினர். அங்கிருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு மெல்ல கொண்டு செல்ல தொடங்கினர்.
தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு என்பது தொன்மையானதொன்று அல்ல. அதுவே பிற்காலத்தில் தொடங்கியது. சமீபத்தில் இருபது ஆண்டுகளுக்கு உள்ளாக சாய்பாபா வழிபாடு வளர்ந்தது போல. இது குறித்து பேச நிறைய இருந்தாலும், குறிப்பாக பிள்ளையார் ஊர்வலத்திற்கும் இந்த பிள்ளையார் வழிபாட்டிற்கும் தொடர்பில்லை என்பதை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும்.
சரி இந்த அரசியல் யாருடைய அரசியல்? யாருக்கு லாபம் தரும் அரசியல் ஊர்வலம்? என்று பார்த்தால், இது இந்துத்துவவாதிகளின் அரசியல், இந்துத்துவ கட்சியான பிஜேபிக்கு லாபம் தரும் அரசியல் ஊர்வலம்.
இந்த ஊர்வலம் முதலில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் நடத்தப்பட்டு கலவரங்கள் நடந்து விளம்பரமானது. பின்னர் மெல்ல சென்னையின் பிற பகுதிகளில் விரிவுபடுத்தப்பட்டது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த ஊர்வலத்தை திட்டமிட்டு சென்னையில் வெற்றிகரமாக வளர்த்தது யார்? என்பதுதான்.
திராவிட இயக்க வரலாறில், தந்தை பெரியாரின் வரலாறில், தமிழர்களின் சுயமரியாதை வரலாறில் முக்கியமான ஒன்று "பிராமனாள் கபே" "பிராமனாள் ஓட்டல்" எதிர்ப்பு போராட்டம் என்பது. அந்த போராட்டத்தின் வெற்றி என்பது தமிழர்களின் தன்மானத்தை மீட்டதில் பெரும் பங்கு வகித்தது. அந்த போராட்டத்தின் போது கடுமையாக எதிர்த்தவர் திருவல்லிக்கேணி முரளி கபே ஓனர். அந்த போராட்டத்தில் பெரியார் வெற்றி பெற்ற பிறகு அதே முரளி கபே ஓனர் பெரியார் திடலுக்கு வந்து பெரியாரை சந்தித்தார் என்பதும் வரலாறு.