சனி, 3 செப்டம்பர், 2016

தலித்துகளுக்கு எதிராகப் பிரயோகிக்கத்தான் ஆயுதங்களை வைத்து தசராவின் போது பூஜிக்கிறீர்களா?”: பிரகாஷ் அம்பேத்கர்

thetimestamil.com :இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளின் மனுவாத திட்டங்களுக்கு
தலித்துகள் முடிவு கட்ட வேண்டுமென பிரகாஷ் அம்பேத்கர் அழைப்பு விடுத்துள்ளார். டாக்டர் பிஆர். அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர், தசராவின் போது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் காட்சிக்கு வைக்கும் ஆயுதங்கள் எதை சுட்டுகின்றன என்றால்…முன்பு முஸ்லீம்களுக்கு எதிராகவும்  தற்போது தலித்துகளுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்துவதையே உணர்த்துகின்றன என்றார்.  ராஜ்கோட்டில் நடந்த தேசிய தலித் உரிமை மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“அதிகாரத்தில் இருக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். யார் உங்கள் எதிரி? விஜயதசமியிலும் தசராவிலும் எல்லா இடங்களிலும் நடத்தப்படும் பூஜைகளில் ஆயுதங்களை வைத்து பூஜிக்கிறீர்கள். அது போன்ற வழிபாடுகள் மன்னர்களாலும் ஆட்சியாளர்களாலும் தங்களுடைய ராஜ்ஜியத்தைக் காப்பாற்றிக் கொள்ளும்வகையில் ஏற்பட்டவை.

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பெண்ணை பலவந்தப்படுத்தி காதலிக்கும் சினிமா எடுப்பீர்?

thetimestamil.com :குடும்பம் உள்ளிட்ட பண்பாட்டு அமைப்புகள் ஆண் திமிரை வளர்த்தது
போலவே…காதலை ஒப்புக் கொள்ளாத பெண்ணிடம் குட்டிக்காரணம் போட்டு , குரங்கு சேட்டை பண்ணி , பலவந்தம் செய்துக் கொண்டேயிருந்தால் காதலை ஒப்புக்கொண்டு விடுவாள் என்ற கருத்தை இளைஞர்கள் மனதில் பிரம்மாண்டமாக விதைத்ததில் முக்கியப் பங்கு.. கடந்த 30 ஆண்டுகளாய் வெளிவந்த பல அரைவேக்காட்டு சினிமாக்களுக்கு இருக்கிறது.
காதலை ஒப்புக்கொள்ளாத நாயகியை பலவந்தப்படுத்தி தொந்தரவு செய்துக் கொண்டே இருப்பார் ஹீரோ , சில காட்சிகள் கழித்து ஹீரோவின் (ஆண்மைக்கு ) அடங்கிப் போய் , பம்மிப் போய் தனது காதலை நாணத்தோடு தெரிவிப்பார் காதலி. 90 களின் தலைமுறை இத்தகைய காட்சிகளை நிறையப் பார்த்து வளர்ந்திருக்கிறது.

பான் கி மூன் : இறுதிகட்ட போரின் போது ஐ நா தமிழர்களை காக்க தவறிவிட்டது

UN 'failed Sri Lanka civilians'கொழும்பு: இலங்கையில் நடந்த இறுதி கட்ட
போரின் போது தமிழர்களை காக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பான் கீ-மூன் தெரிவித்துள்ளார்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் பான் கீ மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது: ஐ.நா., சபையின் இலங்கைக்கான பிரதிநிதிகள் சரியாகச் செயல்பட்டிருந்தால், இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, அதிக அளவிலான மனித உயிர்களைப் பாதுகாத்திருக்க
முடியும். வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து ராணுவம் குறைக்கப்பட வேண்டும். இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்களை, சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 30 ஆண்டு கால போரின் போது ஏற்பட்ட பாதிப்புக்களைச் சரிசெய்வதில் அந்நாட்டு அரசு மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.  ஐ நா பெண்களுக்கான தூதராக  பெண் போராளி ஐஸ்வர்யா தனுஷ்தான் தற்போது  இருக்கிறாரே இனி அவா  பார்த்துப்பார்

ஸ்ரீதர் தனபாலன் கைது.. தமிழ்நாட்டி தாவூத் இப்ப்ரஹீம் இவன்தான்?


காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை சென்னை அமலாக்கப் பிரிவு நேற்று முடக்கியது. இது தொடர்பாக சென்னை அமலாக்கப் பிரிவு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சிவப்பு அறிக்கை t; ஸ்ரீதர் மற்றும் அவரது கூட்டாளி கள் மீது பல்வேறு குற்றங்களுக் காக தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் 26 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீதர் கடந்த 3 ஆண்டுகளாக, இந்தியாவுக்கு வெளியில், துபாயில் இருந்து கொண்டு, இந்திய நீதிமன்ற நடவடிக்கை களை தவிர்த்து வந்துள்ளார். அதற் காக சிபிஐ, இன்டர்போல் ஆகி யவை சிவப்பு அறிக்கையும் வெளியிட்டுள்ளன.

பீகார் மதுவிலக்கினால் குற்றங்கள் 27 வீதம் குறைந்தது Crime has declined by 27 per cent in Bihar


மின்னம்பல.காம் தமிழ்நாட்டு தேர்தல்களத்தைப் போலவே பீகாரின் தேர்தல்களத்திலும் ஒரு மையப் பொருளாக இருந்தது மதுவிலக்கு. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்’ என்று வாக்குறுதி வழங்கி தேர்தலைச் சந்தித்தார் நிதிஷ்குமார். அதை பீகார் மக்களும் ஏற்றுக்கொண்டதன் பலன் மீண்டும் பீகார் முதல்வரானார் நிதிஷ்குமார். அவர் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெறத் தொடங்கியதும், படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வந்தார்.

விமான நிலையம் வரை மெட்ரோ ரயில்: ஓ.பன்னீர்செல்வம்!


மின்னம்பலம்.காம் தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொதுத்துறை, மாநில சட்டமன்றம், நிதித்துறை, பணியாளர்-நிர்வாக சீர்திருத்தத் துறை, திட்டம்-வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இதன்மீது, பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. பா.கருணாநிதி பேசுகையில், “குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை திமுக ஆட்சியில் 1973ஆம் ஆண்டு கலைஞரால் திறக்கப்பட்டது. 43 ஆண்டுக்குப் பிறகு, தற்போது மழைக் காலத்தில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள், சென்னை பொது மருத்துவமனைக்கு அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரு மாதமாக நோயாளிகள் வெளியில் சிகிச்சை பெறும் நிலை உருவாகியுள்ளது” என்றார்.

தமிழர்களிடம் மோதாதே' - திமுக போராட்டம்! கேரள மத்திய அரசுகளை கண்டித்து ஸ்டாலின்...

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசைக் கண்டித்தும், ஆய்வுப் பணிக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசைக் கண்டித்தும் இன்று கோவையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொடிசியா மைதானம் முழுக்க திமுக-வினர் நிரம்பியிருந்தனர். மேடையில் மு.க.ஸ்டாலினுடன் பொங்கலூர் பழனிசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் போன்ற மூத்த தலைவர்கள் இருக்க, சிறுவாணி உரிமை குறித்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது, ‘இது, கோவை மண்டலத்தைக் காக்கும் போராட்டம். தடுப்பணை கட்டும் கேரள அரசையும் கண்டிக்கும் போராட்டம். அதைக் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக நடந்துகொள்ளும் தமிழக அரசைக் கண்டிக்கும் போராட்டம்’ என முழக்கமிட்டனர். தொடர்ந்து, ‘இது, தமிழக மக்களுக்கான போராட்டம். எங்கள் தண்ணீருக்காகப் போராடுகிறோம். மத்திய அரசு அணை கட்டும் அனுமதியை ரத்துசெய்ய வேண்டும், தூங்கும் தமிழக அரசை தட்டியெழுப்பும் போராட்டம் இது. கேரள அரசே, மத்திய அரசே, எங்களிடம் மோதாதே. தமிழர்களிடம் மோதாதே, எங்கள் உரிமையைப் பறிக்காதே’ என்று மேடையில் முழங்கினர்.

சவுதியில் கடவுள் மறுப்பாளருக்கு 10 ஆண்டுகள் சிறை! 2000 கசையடி 4000 ரியால் அபராதம்.. முதல்ல உயிரோட இருக்கணுமே?


கடவுளை மறுப்பவன் நான் என்று, ஒருவர் ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார். இது, முஸ்லிம் மதக் கொள்கைகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி அந்த இளைஞருக்கு 2000 கசையடிமற்றும் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 4000 ரியால் அபராதமும் விதித்து சவுதி அரேபிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 வயதான அவர், தன்னுடைய கடவுள் மறுப்புக் கொள்கையை பல வருடமாக ட்விட்டரில் பதிந்துவந்திருக்கிறார். கிட்டத்தட்ட, 600 ட்வீட்டுகள் கடவுள் மறுப்பு குறித்துஎழுதப்பட்டவை என்பதை சவுதி போலீஸார் கண்டறிந்து தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளனர். சவுதி அரேபியாவில், இரண்டு வருடத்திற்குமுன் அறிமுகப்படுத்தப்பட்டசட்டத்தின் கீழ், ‘நாத்திகம் என்பது தீவிரவாதம்’ என வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக ஊடகப் பதிவுகள் அவரது நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கிறது என்றும் அதை வெளிப்படுத்த தனக்கு உரிமை இருக்கிறது என்றும் தண்டனைபெற்றவர்கூறியுள்ளார்.  பகுத்தறிவு முகாம்களில் ஊடுருவி இந்து மதத்தை மட்டும் தாக்கும் போக்கிரிகள் தப்பி தவறி கூட  தாம் சார்ந்த இஸ்லாமிய காட்டுமிராண்டிதனங்களை தாக்குவதே இல்லை

சிறுவாணியில் கேரளா அனைகட்டப்பட்டால் ஒரு சொட்டு தண்ணீர் கூட கோவைக்கு வராது?

சிறுவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை தமிழக விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?>கேரள மாநிலம் அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் 8387 ஹெக்டர் நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்துவதுடன், குடிநீர் மற்றும் மின் திட்டங்களையும் செயல்படுத்துவதற்காக சிறுவானி ஆற்றின் குறுக்க 47 மீட்டர் நீளத்திற்கு தடுப்பணைக்கட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக 460 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யவும் கேரள அரசு தீர்மானித்திருக்கிறது.இரு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளின் குறுக்க தடுப்பணைக் கட்டவேண்டும் என்றால் கடைமடை பாசனப்பகுதி அமைந்துள்ள மாநிலத்தின் அனுமதி பெறப்படவேண்டும் என்பது விதியாகும். ஆனால், சிறுவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக்கட்ட தமிழக அரசு கடந்த 30 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் அதை பொருட்படுத்தாமல், புதிய தடுப்பணைக்கட்ட கேரள அரசு முடிவு செய்திருக்கிறது.

பெண்களை சீரழித்து 100 கோடி சம்பாதித்த தம்பதி! டெல்லி அதிர்ச்சி

vikatan.com :தலைநகர் புதுடெல்லியில் புகழ்பெற்ற இடங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், டெல்லியைப் பற்றித் தெரிந்த அனைவரும் கேள்விப்பட்டுள்ள ஒரு பெயர் ‘ஜி.பி.ரோடு’. பாலியல் தொழிலுக்குப் பெயர்போன இடம் அது. இங்கு, சுமார் 1,000 பெண்கள் இந்தத் தொழில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். முகலாய ஆட்சிக்காலத்தில் பணக்காரர்களுக்கு அந்தப்புரமாக இருந்த ஜி.பி.ரோடு, பிரிட்டிஷ் ஆட்சியின்போது முறையாக்கப்பட்டு, தற்போது ‘கோத்தா’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கோத்தா கட்டடங்கள், பகல் நேரத்தில் சாதாரண மார்க்கெட்போல் காட்சியளிக்கும். மாலை நேரத்திலிருந்து விபசாரப் பகுதியாக மாறிவிடும்.
டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நேற்று நடத்திய அதிரடிச் சோதனையில் இங்கு எட்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். அதில், ஹுசைன் என்பவரும் அவரது மனைவி சாயிரா பேகமும் அடக்கம். இவர்கள் இருவரும்தான் இந்தத் தொழிலைக் கடந்த 20 வருடங்களாக நடத்திவருகின்றனர்.

ட்ராபிக் ராமசாமி அதிரடி : சுவாதி கொலையில் நான்கு பேர் ... ராம்குமாருக்கும் சுவாதிக்கும் சம்பந்தமே இல்லை!

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியி கொலை வழக்கில் நான்கு பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல், ஏற்கனவே தேசியக் கொடியை எரித்து புகைப்படம் வெளியிட்டு கைதான திலீபன் மகேந்திரன், ராம்குமாரின் பேஸ்புக்கை ஆராய்ச்சி செய்து, ராம்குமாருக்கும் சுவாதிக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் ஒரு வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார்.அதனால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முதல் முறையாக சுவாதி கொலைவழக்கு பற்றி பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழச்சியும் விடவில்லை.. மகேந்திரனும் விடவில்லை.. நானும் விடப்போவது இல்லை.

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

அதிமுக எம் எல் ஏக்கள் அம்மாபுகழ் பாட புதுசு புதுசா பாட்டுக்கள் தேடுறாய்ங்க .. நம்மளால முடிஞ்ச சிறு உதவி இந்த பாடல்


சட்ட சபை கூட்ட தொடர் இனிதே நிறைவு பெற்றது!!
அதில் அமைச்சர் பெருமக்களின்!! உரையின் சுருக்கம் இதோ!!
உங்களுக்காக!!!
நிதி அமைச்சர்;::"ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்!!
அம்மாவ வாங்க முடியுமா!!.......
உணவு: "சோறு போட தாயிருக்கா பட்டினிய பார்த்ததில்ல!!
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்கு போனதில்ல!!!..........."
நீர்வளம் தாயில்லால் நானில்லை!! தனியே எவரும் ஜெயித்ததில்லை!! எனக்கொருதாய்......... ..........ஜீவ நதியாய் வருவாள்!! ....... கால்நடைதுறை: அம்மா என்றழைக்காத உயிரில்லையே!!
அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே.........
மக்கள்நலம்:_சமூகவளத்துறை: "அம்மாவும் நீயே!!
அப்பாவும் நீயே!!
அன்புடனே வாழ வைக்கும் தெய்வமும் நீயே!!

கர்நாடகாவுக்கு சுப்ரீம்கோர்ட் :வாழு- வாழ விடு... காவிரி விவகாரத்தில்

டெல்லி: காவிரி நீர் கிடைக்காமல் தமிழகத்தின் 7 மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன; ஆகையால் வாழு... வாழவும் விடு அதாவது மனிதாபிமான அடிப்படையில் காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்கலாம்... என்று கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு 50 டி.எம்.சி. நீரை ஏன் திறந்துவிட முடியாது என்று கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது. காவிரியில் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடகா திறந்துவிடாமல் அடம்பிடித்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கான 50 டி.எம்.சி. காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது. கர்நாடகாவின் கடமை இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யுயு லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியதாவது:

கார்த்திக் சிதம்பரம் கைதா? Karti Chidambaram Holds Global Empire Through Benamis?


Vasan Eye Care Scam: How Express Exposed,    Chidambaram's Lies New Proof Nails PC Lies in Rs 223 Crore ,   Black Money Trail Chidambaram Fails to Answer,    Serious Posers on Vasan After Express Expose, Vasan Healthcare Director Quits P Chidambaram,,    Vasan Eye Care and Rs 223 Crore Black Money .
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2ஜி ஊழல் வழக்கின் ஒரு பகுதியாக ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை சார்பில் பண மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் கார்த்தி சிதம்பரத்திற்கு இதுவரை 3 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்து வருவதுடன், சம்மனுக்கு எதிராகவும் கார்த்தி சிதரம்பரம் கேள்வி கேட்டுள்ளார். சம்மன் ஒன்றிற்கு எதிர் கேள்வி எழுப்பி உள்ள கார்த்தி சிதம்பரம், நான் என்ன குற்றம் செய்தேன்? என கேட்டுள்ளார். தனது கேள்விக்கு அமலாக்கத்துறை பதிலளித்த பிறகு நல்ல முடிவை எடுக்க உள்ளதாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சனா தற்கொலை முயற்சி: உண்மைக் காரணம் என்ன?

சட்டப்பேரவை வளாகத்தில் பெண் காவலர் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவொற்றியூர் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வருபவர் காஞ்சனா. இன்று, தலைமைச் செயலக வளாகத்தில் பணியில்இருந்தபோது தீக்குளிக்க முயன்று அதிகாரிகளால் காப்பற்றப்பட்டிருக்கிறார். முன்னாள் தடகள வீராங்கனையான காஞ்சனா, தற்கொலைக்கு முயன்றதுகாவல்துறையினரிடையே முக்கியமாகப் பேசப்படும்நிலையில், அவர்மீது தற்கொலை வழக்கு பதியப்படும் என்று தெரிகிறது. ஆனால் தன் பணியில் அவர் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளானதாலேயே தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் காஞ்சனா வீட்டில் சில மாதங்களுக்கு முன்னர் நகைகள் கொள்ளைபோனது. அது தொடர்பான புகார் கொண்டித்தோப்புகாவல் நிலையத்தில் கொடுத்தும்கூட இதுவரை துப்புக் கிடைக்கவில்லை என்று போலீசார் கூறுவதால், காஞ்சனா ஏற்கனவே மனமுடைந்து காணப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் காஞ்சனா ! இப்படித்தான் அலட்சியமாக இருப்பீங்களா..’ என அதிகாரிகளுக்கு முதல்வர் டோஸ்

அதைப்படித்த ஃபேஸ்புக், ஸ்டேட்டஸ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது. "சட்டமன்றத்தில் ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்த நேரத்தில், திருவெற்றியூர் இன்ஸ்பெக்டர்காஞ்சனா கையில் மண்ணெண்ணெய் கேனை எடுத்தபடி அவைக்கு வெளியே தன்மீது ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்று இருக்கிறார். அவரை சக அதிகாரிகள்மீட்டுவிட்டனர். கொஞ்சம் கவனிக்காமல் விட்டிருந்தால், பேரவைக்குள் நுழைந்திருப்பார் காஞ்சனா. சட்டமன்றத்தில் இருந்த முதல்வர் கவனத்துக்கு இந்தத் தகவல்உடனடியாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. ‘எதுக்காக அப்படி செஞ்சாங்கன்னு விசாரிங்க.. இப்படித்தான் அலட்சியமாக இருப்பீங்களா..’ என அதிகாரிகளுக்கு டோஸ்விழுந்திருக்கிறது.

சஸ்பெண்ட் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது?


நெட்டைத் தொட்டதும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
"தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுபற்றி நான், 30.8.16 டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருக்கிறேன். அப்போது நான்சொல்லும்போது, ‘ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுக்கும் சசிகலா புஷ்பா விவகாரம்தான் காரணம் என்கிறார்கள். 2014ஆம் ஆண்டு மின்சார வாரியத்தின்தலைவராக இருந்தவர் கு.ஞானதேசிகன். அந்தப் பதவியிலிருந்து அவர் திடீரென மாற்றப்பட்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த அதிமுகஆட்சியில், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் முக்கியமானவராகச் செயல்பட்டதும் ஞானதேசிகன்தான். கடந்த டிசம்பர் மாதம், மழை வெள்ளத்தில்சென்னை சிக்கித் தவித்தபோதுதான் ஞானதேசிகனுக்கு சிக்கல் ஏற்பட்டது.

மனிதாபிமானம் வேண்டும்! கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை!

வறட்சிக் காலத்தில் தமிழகத்துக்கு திறந்துவிட்ட தண்ணீரின் அளவுபற்றி கர்நாடக அரசு, நீதிமன்றத்தில் முழு அறிக்கையை வரும் திங்கட்கிழமைக்குள் தாக்கல்செய்ய வேண்டும் என்று, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மேலும் மனிதாபிமான அடிப்படையில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
காவிரி நதி நீர் ஆணையம் கூடுவதற்கு இன்னும் 12 நாட்கள் இருப்பதால் தற்போது பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரைக் காப்பாற்றுவதற்காக கர்நாடக அரசு தினமும் 2 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது.

Mr.Reliance மோடி..... மிஸ்டர்.ரிலையன்ஸ் என்று மோடியை டிவிட்டரில் அழைத்த கெஜ்ரிவால்

டெல்லி: பிரதமர் மோடியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மிஸ்டர். ரிலையன்ஸ் என்று டிவிட்டரில் குறிப்பிட்டது சமூக வலைதளங்கில் வைரலாக பரவி வருகிறது. நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இணைய சேவையை நேற்று அந்நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்தினார். இதுதொடர்பான விளம்பரங்களில், பிரதமர் மோடியின் புகைப்படம் பதிக்கப்பட்டு, மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவிற்கான நுழைவாயில் ஜியோ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மோடியை மிஸ்டர். ரிலையன்ஸ் என்று டிவிட் செய்து இருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தொடர்ந்து விளம்பர மாடலாக இருங்கள் என்றும், நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் 2019-ல் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் டிவிட்டரில் குறிப்பிட்டார்.  தினகரன்,com

சட்டப்பேரவையில் பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி!

சட்டப்பேரவையில் இன்று சட்டப்பேரவை நிகழ்வுகள் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டி ருந்தன. அப்போது சீருடையில் வந்த திருவொற்றியூர் பெண் ஆய்வாளர் காஞ்சனா சட்ட ப்பேரவையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என்று அனுமதி கேட்டுள்ளார். முதலமைச்சர் சட்டப்பேரவையில் இருப்பதால் அவரை பார்க்க முடியாது என்று காவலர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அந்த இன்ஸ்பெக்டர் தான் தயாராக வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீவைத்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.

முதல்வரின் பேச்சுக்கு சட்டசபையில் திமுக கண்டனம்

சட்டசபையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுத்துறை மாநில சட்டமன்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினார். காவல்துறை வீட்டு வசதிக்காக ரூ.422 கோடியில் 2623 வீடுகள் கட்டப்படும் என்று கடந்த 2016-17-ம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது. அதுபோல காவல்துறை அதிகாரிகளுக்கு ‘‘உங்கள் சொந்த இல்லம்’’ திட்டத்தின் கீழ் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மற்றும் தீயணைப்பு கோட்ட அலுவலர்கள் பதவியில் இருப் பவர்களுக்காக மாவட்ட தலைநகரங்களில் தலா 10 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து வீடுகள் கட்டித்தரப்படும் என்று 3.5.2012 அன்று முதல்-அமைச்சர் கூறி இருந்தார். இதில் சென்னை மேல கோட்டையூர் தவிர மற்ற 31 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? என்று பேசியபோது, முதலமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு, எதிர்க்கட்சித் தலைவருக்கு காவலர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது பற்றி திடீரென்று அக்கறையும் கவலையும் வந்திருக்கிறது.

சட்டதிருத்த நகலை கிழித்து எறிந்து திமுகவினர் ஆவேசம்


நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவரை கவுன்சிலர்கள் தேர்சு செய்யும் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் சட்டதிருத்த மசோதாவை ஆவேசத்துடன் கிழித்து எரிந்தனர். திமுகவினரின் இந்த செயலுக்கு சபாநாயகர் தனபால் கண்டனம் தெரிவித்தார். இதனால் சட்டசபையில் பரபரப்பு நிலவியது. நக்கீரன்,இன்

9 மாதம் மகப்பேறு விடுமுறை. அரசுபணியில் உள்ள பெண்களுக்கு .. முதல்வர் அறிவ்ப்பு

சென்னை : சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் அளித்த  வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு  ‘மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்புகாலம் 9  மாதங்களாக உயர்த்தப்படும்’ என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா  அறிவித்துள்ளார். 
இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ்  முதல்வர்  ஜெயலலிதா வெளியிட்ட  அறிக்கை வருமாறு:-
அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்பவர்களும் அரசு ஊழியர்கள் தான். அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

வைகுண்டராஜன்: சசிகலா புஷ்பாவின் பின்னணியில் நான் இல்லை ! அப்டீங்களா?


விகடன்.காம் ;நெல்லை: தமிழக முதல்வருக்கு எதிராக செயல்பட்டு வரும் சசிகலா புஷ்பாவுக்கு பின்புலமாக இருப்பதாக சொல்லப்பட்ட தொழில் அதிபரான வைகுண்டராஜன், திடீரென தனக்கும் சசிகலா புஷ்பாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அரசியல் அரங்கில் சூட்டை கிளப்பி வருபவர், சசிகலா புஷ்பா. அவரது மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்யுமாறு ஜெயலலிதாவே உத்தரவிட்ட பின்னரும் பிடிவாதமாக மறுத்து எதிர்ப்பு அரசியல் செய்து வருகிறார். அத்துடன், ஜெயலலிதா தன்னை அறைந்தார் என்று மாநிலங்களவையில் ஓபனாக குற்றம் சாட்டினார்.

வியாழன், 1 செப்டம்பர், 2016

ஜியோ 4 ஜி... போட்டி நிறுவனங்களுக்கு 11,983 கோடி இழப்பு.. முகேஷ் அம்பானி 45 நிமிட பேச்சு

மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற ரிலையன்ஸ் ஜியோ அறிமுக விழாவில் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு ஜியோ 4 ஜி சேவையை தொடங்கி வைத்தார். அப்போது அவர், ரிலையன்ஸ் திட்டம் மற்றும் சலுகைகள், சந்தை வாய்ப்புகள் குறித்து சுமார் 45 நிமிடங்கள் பேசினார். பிற மொபைல் சேவை நிறுவனங்கள் தற்போது ஒரு ஜி.பி. இணையதள சேவைக்கு 250 ரூபாய் வசூலித்து வருகின்றன. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு ஜி.பி.க்கு 50 ரூபாய் மட்டுமே வசூலிக்கும். இது மற்ற நிறுவனங்களை காட்டிலும, 5 முதல் 10 மடங்கு குறைவு. அதிக அளவில் பயன்படுத்தும்போது ஒரு ஜி.பி. 25 ரூபாய் என கணக்கிடப்படும். ஒரு சில திட்டங்களில் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் எப்போதும் இலவசம். அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றார்.

தமிழகத்தில் சசிகலா புஷ்பாவுக்கு அதி உச்ச பாதுகாப்பு ஏன்? 200 காவலர்கள் புடைசூழ....

கி.மகாராஜன்> உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு விசாரணையில் ஆஜராக வந்த அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு, அதிகபட்ச பாதுகாப்பு அளித்தது தொடர்பான பின்னணி வெளியாகியுள்ளது. அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் உயர் நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜராகினர். இவருக்கு எதிராக போராட்டம் நடத்த அதிமுகவினர் தயாராக இருந்தனர். சசிகலா புஷ்பாவுக்கு எதிராக ஏதாவது நடைபெற்றால் தமிழக அரசுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்று கூறி நீதிமன்றத்தின் அவப்பெயருக்கு ஆளாக வேண் டியது வரும் என்பதால், யாரும் போராட்டம் நடத்தக் கூடாது என அதிமுகவின ருக்கு மேலிடத்தில் இருந்து உத்தர விடப்பட்டது.

அன்புமணியை சிபி ஐ விசாரணை நடத்தலாம்! டில்லி உயர்நீதிமன்றம் அனுமதி

புதுடில்லி: மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி அளிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அன்புமணி ராமதாஸ் மீது சி.பி.ஐ., விசாரணை நடத்தலாம் என டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2004 முதல் 2009 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இந்தூர் மற்றும் லக்னோவில் 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தார் என புகார் எழுந்தது. இது பற்றி சி.பி.ஐ., அன்புமணி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணை டில்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ., தனி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு டில்லி ஐகோர்ட்டில் அன்புமணி இடைக்கால தடை வாங்கினார். மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மாற்ற வேண்டும் எனவும் அவர் மனுத்தாக்கல் செய்தார்.    இப்போ பாருங்க தமாஷாவை தாமரை மணாளனாகிடுவார்

நக்கீரன் மீது ஜெ. அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்கு உயர்நீதிமன்றம் தடை

கடந்த 2011ல் ஜெ. ஆட்சிக்கு வந்தது முதல் நக்கீரன் மீது தொடர்ச்சியாக அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. 2016ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும் நக்கீரன் மீது முதல் அவதூறு வழக்கு போடப்பட்டு மொத்தம் நக்கீரன் ஆசிரியர் மற்றும் நிருபர்கள் மீது 18 அவதூறு வழக்குகள் இதுவரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 499வது பிரிவில் பத்திரிகைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சில விலக்குகளை மீறி குற்றவியல் நடைமுறைச் சட்டம் 199 (2)ன் படி நக்கீரன் ஆசிரியர் மற்றும் நிருபர்கள் மீது வழக்கு தொடர்ந்து வருகிறது. இதில் ஒரு செய்திக்காக நக்கீரனின் அனைத்து மாவட்ட நிருபர்கள் மொத்தம் 20 பேர் மீதும் வழக்கு தொடர்ந்ததும், மற்றொரு செய்திக்காக சுற்றுலாத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் வேறொரு துறையைச் சேர்ந்த அதிகாரி வழக்கு தொடர்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பாரிவேந்தரின் ஜாமீன் மனு தள்ளுபடி

பாரிவேந்தரின் ஜாமீன் மனுவை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 72 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாரிவேந்தர் கடந்த 29.08.2016 வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பாரிவேந்தரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (செப்டம்பர் 1ஆம் தேதி) நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  நக்கீரன்.இன்

நாளை 33 கோடிபேர் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் .. 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு..

தினகரன்.காம் :சென்னை: நாடு முழுவதும் நாளை பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதில் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறை தொழிலாளர்கள் 33 கோடி பேர் கலந்து கொள்கின்றனர். பஸ், ரயில்கள் இயக்கப்பட்டாலும் ஸ்டிரைக் காரணமாக குறைந்த அளவில்தான் ஓடும் என தெரிகிறது.  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது, சாலைபாதுகாப்பு மசோதா சட்டத்திருத்தங்களை கைவிட வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் கட்டிடத் தொழிலாளர், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் என பல்வேறு துறை தொழிலாளர்களும் பங்கேற்கிறார்கள். சுமார் 33 கோடி பேர் ஸ்டிரைக்கில் கலந்து கொள்வார்கள் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.  இந்த போராட்டத்துக்கு தொமுச, சிஐடியு, எச்.எம்.எஸ் உள்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

ரம்யா :சுதந்திரத்துக்காக பாடுபடாத ஆர்எஸ்எஸ் தேசப்பற்று குறித்து பாடம் எடுக்கிறது

thetimestamil.com :முன்னாள் காங்கிரஸ் எம்பியும் நடிகருமான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சிப்பதன் மூலம் தொடர்ந்து செய்திகளில் வந்துகொண்டிருக்கிறார்.
சமீபத்தில் பாகிஸ்தான் நல்ல நாடுதான், அங்கேயும் மக்கள் வசிக்கிறார்கள் என்று கூறி மத்திய அமைச்சர் மனோகர் பரிக்கரின் பாகிஸ்தான் நரகம் என்ற கருத்துக்கு பதிலடி கொடுத்தார். அதையடுத்து அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்தது கர்நாடக மாநில பாஜக. திவ்யாவை எதிர்ப்பு போராட்டங்களும் நடந்தன. பாஜக காலூன்றியிருக்கும் கர்நாடகாவில் திவ்யாவின் பேச்சு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

யுபிஎஸ்இ தேர்வுகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இடம்: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

thetimestamil.com :இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வினை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்இ) நடத்தி வருகிறது. இதற்கான தேர்வுகளில் மூன்றாம் பாலினத்தவர்களும் பங்கேற்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ஜம்ஷெத் அன்சாரி தாக்கல் செய்திருந்த பொதுநல மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

ஆம் ஆத்மியில் இருந்த ஒரே தலித் அமைச்சர் பதவி நீக்கம் ! தவறான குற்றச்சாட்டில்.....?

டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி மந்திரிசபையில் சமூக நலத்துறை மந்திரியாக இருப்பவர் சந்தீப்குமார். இவர் சுல்தான்பூர் மஜ்ரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். மந்திரி சந்தீப்குமார் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு சிடி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சியின் கொள்கைக்கும் பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் மந்திரி சந்தீப்குமார் பெயரில் வெளியான சி.டி. பற்றி ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக்கு பின்னர் மந்திரி சபையில் இருந்து சந்தீப்குமாரை நீக்கம் செய்ய கெஜ்ரிவால் முடிவு செய்தார். இதனை அவர் தனது டுவிட்டர் வலைத்தள பக்கத்தில் நேற்று அறிவித்தார். இந்நிலையில் மந்திரி பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட சந்தீப் குமார், நான் தலித் என்பதால் என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.  ஒரு பெண்ணின் சம்மதத்துடன் அவரோடு இருப்பது அல்லது உறவு கொள்வதென்பது சட்டப்படி குற்றம் அல்லவே? மேலும் இதுபற்றி தீர விசாரிக்காமல் தலித் என்பதால் வேகவேகமாக முடிவெடுத்து...  

சகாயம் ஐ ஏ.எஸ் : இத்தனை அதிகாரிகளில் நீங்கள் மட்டுமே இந்தி தெரியாது என்று குற்றம் சாட்டிய டெல்லி....

சிலகாலம் முன்பு டெல்லியில் எங்களைப் போன்ற குடிமைப்பணி அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தனர். அங்கு பயிற்சி அளிக்க வந்த ஒரு பெண் அதிகாரி ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தார். அதுவரை எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அவர் திடீரென்று இந்தியில் பேசத் தொடங்கிய போது, நான் எழுந்து, “உங்களுடைய இந்தி மொழியை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை” என்று சொன்னேன்.
உடனே அந்த பெண் அதிகாரி, “உங்களுக்கு இந்தி தெரியாதா..? இந்தி நமது தேசிய மொழி” என்றார். நான் உடனே, “இந்தி எனது தேசிய மொழி அல்ல. இந்தி அலுவல் மொழி மட்டுமே. எனது தேசிய மொழி தமிழ்” என்றேன்.
“இங்கே உள்ள இத்தனை அதிகாரிகளில் நீங்கள் ஒருவர் மட்டுமே இந்தி தெரியாது என்கிறீர்கள்” என்றார் அந்த பெண்மணி. நான் உடனே, “அதற்கு காரணம், இந்திய துணைக்கண்டம் முழுதும் இந்தியை திணித்தபொழுது அதை எதிர்த்துப் போராடிய ஒரே இனம் என் தமிழ் இனம் மட்டுமே” என்றேன். “இந்தி தெரியாது என்று சொல்லுவது எனக்கு அவமானம் அல்ல. அது என் இன எழுச்சிக்கான அடையாளம்” என்றேன்.

நாயை தூக்கி போட்ட மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

சென்னை: சென்னை குன்றத்தூரில் மாடியிலிருந்து நாயை தூக்கி போட்ட மாணவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் சென்னை குன்றத்தூரில் மாடியிலிருந்து வளர்ப்பு நாயை தூக்கி போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் மாடியிலிருந்து நாயை வீசியவர் நெல்லையை சேர்ந்த கவுதம் சுதர்சன் எனவும், இதனை படம்பிடித்தது அவரது நண்பர் நாகர்கோவிலை சேர்ந்த ஆசிஸ் பால் எனவும் தெரியவந்தது. இவர்கள் மருத்துவ கல்லூரி மாணவர்கள் எனவும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அறிவுரைப்படி, மாணவர்களை அவர்களது பெற்றோர்களே போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுதலையானார்கள்.

புதன், 31 ஆகஸ்ட், 2016

பொறுத்தது போதும், தலித்துகளின் சரியான நிலைபாடு: ப.சிதம்பரம்

By P Chidambaram
thenewsminute.com குஜராத் மாநிலம் உனா மாவட்டத்தில் செத்துப்போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காக தலித் ஆண்கள் ஏழுபேரை பசு பாதுகாப்புப் படையைச் சேர்ந்ததாக சொல்லிக்கொள்வோர் ஈவிரக்கமின்றி தாக்கும் வீடியோ ஒன்று 2016 ஜூலை 11 ஆம் தேதி வெளியானது. அந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ' இனிமேல் செத்த மாட்டை அகற்றமாட்டோம்' என தலித்துகள் பலர் அறிவித்தனர். இதற்காகப் பசு பாதுகாப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கவேண்டும், ஆனால் அவர்கள் சந்தோஷப்படவில்லை. செத்த மாட்டை அகற்றாததற்காக தலித்துகள்மீது பசு பாதுகாப்பாளர்கள் உள்ளிட்ட தலித் அல்லாதவர்கள் மேலும் அதிக அளவில் வன்முறையை  ஏவினார்கள். சம்தேர் (ஆகஸ்ட் 16) பாவ்ரா ( ஆகஸ்ட் 20) ராஜ்கோட் (ஆகஸ்ட் 24) ஆகிய இடங்களில் தலித்துகள் இப்படி தாக்கப்பட்டனர்,

தூத்துக்குடி சர்ச்சுக்குள் ஆசிரியை வெட்டி படுகொலை .. ஒருதலை காதல் காட்டுமிராண்டியின் கொடுரம்

தூத்துக்குடியில் ஒருதலைக் காதல் வெறியில் சர்ச்சுக்குள் நுழைந்து
ஆசிரியை பிரான்சினா வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரை வெட்டி கொலை செய்த இளைஞர் சீகன் தப்பி ஓடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இன்று காலை வழக்கம் போல் மாணவர்கள் வகுப்புக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பிரான்சினா என்ற ஆசிரியை பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள சர்ச்சில் வழிபட்டுக் கொண்டிருந்தார்.>அப்போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் ஆசிரியை பிரான்சினாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார். இதில் ஆசிரியை பிரான்சினா சம்பவ இடத்திலேயே அலறியபடி துடிதுடித்து மயங்கி விழுந்தார்.

சிங்கூர் நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

tamil.thehindu.com : மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்குமாறு மேற்குவங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 10 ஆண்டுகளாக விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்ததால் அரசு அவர்களுக்கு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை திரும்பத் தர தேவையில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிங்கூர் நிலம் விவசாயிகளிடமிருந்து சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் பத்து ஆண்டுகால சட்டப் போராட்டத்தில் சிங்கூர் மக்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது. வழக்கு பின்னணி:
கடந்த 2006-ம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தின் சிங்கூர் மாவட்டத்தில் நானோ கார் தொழிற்சாலை அமைக்க 1000 ஏக்கர் நிலத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது.

100வது நாள் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆட்சி பாலன்ஸ் சீட் !


minnambalam.com : 2016ஆம் ஆண்டு, மே 23ஆம் தேதி மாலை 12 மணி, சென்னை நூற்றாண்டு விழா அரங்கில், தமிழக முதல்வராக 6வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார்.அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இரண்டாவது முறையாக அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் 100வது நாளில் அடியெடுத்துவைக்கிறது.
இதற்காக தலைமைச் செயலகத்தில், வண்ண அலங்கார விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சட்டப்பேரவை வாயிலில் குலைதள்ளும் வாழை மரங்கள், வண்ணவண்ணமலர்கள் என்று தலைமைச் செயலகம் முழுவதும் கண்கொள்ளா காட்சியளிக்கிறது. இன்று பேரவைக் கூட்டத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சபாநாயகர் தனபால்,தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர்கள் என அனைவரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

bogusvotescm ஜெயலலிதாவுக்கும் டுபாக்கூர் மோடிக்கும் இடையில் விக்வேந்தர் பச்சமுத்து மாட்டிகிட்டார்

Image may contain: 1 person , closeupகல்வியை விற்ற கருப்பு பணத்தின் மூலமாக பிஜேபிக்கு தேர்தல் நிதி அளித்து வந்தவரை , மதன் விவகாரத்தில் கைது செய்ய வேண்டாம் என்று" #PM11Am Advance wishes "பெர்சனலாகவே கேட்டு கொண்டும் , செவி சாய்க்காமல் பச்சமுத்துவை தூக்கிய விவகாரம் தொடர்பாகவே #bogusvotesCM விரும்பி மன்றாடி கெஞ்சி கேட்டு கொண்டும் மத்திய அரசு ரோசய்யாவை வீடுவித்து விட்டதோ ..
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரு விதமான cold war ஓடி கொண்டு தான் உள்ளது ..
1) இவர் உருவாக்கிய 40000 கோடி நிதிப்பற்றாக்குறை நிவர்த்தி செய்ய மத்திய அரசு நிதி கொடுக்காமல் இருந்து வந்த கடுப்பில் ..
2) ஜெயேந்திரரை மேல் முறையீடு செய்த விஷயத்தில் மத்திய அரசை சீண்டி உள்ளார் ஜெயலலிதா
3) கெரோசின் அளவு குறைக்கப்பட்டு போது திமுக மத்திய அரசில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் ஜெயலலிதா ஆனால் 50 எம்பிக்கள் இருந்தும் , மத்திய அமைச்சர் இணையான பொறுப்பான துணை சபாநாயகர் பதவியை கையில் வைத்து கொண்டும் இப்போது திமுக அரசை விட குறைவாக கெரோசின் பெற்றும் Kalaignar Karunanidhi அதனை சுட்டி காட்ட விட்டாலும் மனதளவில் ஜெயலலிதா வெறுத்து போய் உள்ளார் ..
4) இட ஒதுக்கீடு , #NEET விவகாரம் மாநில அரசுக்கு உகந்தது இல்லை என்று தெரிந்தும் பிரதமரை , நிதி மந்திரியை வீட்டுக்கு வரவைத்த ஜெயலலிதாவுக்கு இப்போது ஒன்றும் முடியவில்லை .

பச்சமுத்து தொடக்கத்தில் இருந்தே மோசடிகள் மூலம்தான் வளர்ந்தார்!

எஸ் ஆர் எம் பச்சைமுத்து...இதுவரை உத்தமரா புத்தரா ஏசுவா இருந்தது போலவும் இப்போதான் கிரிமினல் குற்றங்கள் செய்ததை போலவும் ...தமிழக கட்சிகளும் காவல் துறையும் ...பெரிய ஸீன் போடறாங்க..
தொடக்கத்திலிருந்தே...பச்சமுத்து அடுக்கடுக்காக செய்து வந்த மோசடிகள்...குற்றங்கள் எல்லாம் காவல் துறைக்கும் ...காவல்துறை மூலமாக ஆளும்கட்சிகளுக்கும் தகவல்கள் வந்துகொண்டே இருந்தன...
மாதம் தவறாமல் பத்திரிகை நிருபர்களுக்கம் ...காவல்துறையினருக்கும் ஆளும் கட்சிக்கும் லஞ்சமும் பங்குத்தொகையும் வந்துகொண்டுதான் இருந்தது...பாச்சமுத்துவின் கிரிமினல் அராஜகங்கள் ஊரறிந்த ரகசியம்....சரி போனது போகட்டும்...

ஒரு பறப்பையன் ஃப்ர்ஸ்ட் மார்க் எடுக்கிறான், உன்னால முடியாதா? ஒரு ஆசிரியனின் சாதிவெறி!

thetimestamil.com :கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலித் மாணவர்கள் மீது சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமையை கடைப்பிடிப்பதாக இரண்டு ஆசிரியர்கள் மீது பள்ளி மாணவர்கள் புகார் அளித்தனர். அவர்கள் இருவரையும் பள்ளியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய கல்வி துறை அதிகாரிகளிடம் ஒடுக்குமுறைக்கு ஆளான மாணவர்கள் பேசினர்.
வன்னியர் சாதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற ஆசிரியர் தலித் மாணவர்களுக்கு தனி வகுப்பறை ஒதுக்குவதாகவும் டியூசனும்கூட எம்பிசி (வன்னியர்) மாணவர்களுக்கு எஸ்சி மாணவர்களுக்கு என தனித்தனியாக நடத்துவதாகவும் கூறினர்.

கோயில், மசூதிக்குச் சென்று நேரத்தை வீணடிப்பதைக் காட்டிலும் பொறியியல், மருத்துவ கல்லூரிக்குச் செல்லுங்கள்”: மார்கண்டேய கட்ஜு

கோயில்களில், மசூதிகளில் பெண்கள் வழிபாட்டு உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். சனாதனவாதிகளும் பெண்ணியவாதிகளும் ஒரு புறம் இதுகுறித்த விவாதங்களில் ஈடுபட்டிருக்க, ஓய்வுபெற்ற
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, ஆன்மீகத்திலிருந்து அறிவியலுக்கு திரும்புங்கள் என்கிறார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில்,
“இந்து பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் செல்வதைப் பற்றி என்னிடம் ஒருவர் கேட்டார். என்னைப் பொருத்தவரை, பெண்கள் உள்பட அனைவரும் கோயில், மசூதிக்குச் சென்று நேரத்தை வீணடிப்பதைக் காட்டிலும்,  அறிவியல் நிறுவனங்கள், பொறியியல், மருத்துவ கல்லூரிகளுக்குப் போக வேண்டும். அதிக அளவில் அறிவியலும் அறிவியல் சிந்தனையும் குறைந்த அளவில் மதச் சிந்தனையுமே இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவை” என்று தெரிவித்துள்ளார் மார்கண்டேய கட்ஜு.  மின்னம்பலம்.காம்

பச்சமுத்து :பணத்தை கொடுக்குமாறு சொன்னேன் .. பசங்க கேக்கல .. இப்ப பாத்தீங்களா..?

மின்னம்பலம்.காம் :தன்னை கைது செய்வார்கள், சிறையில் அடைப்பார்கள், போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பார்கள்என்றெல்லாம் பச்சமுத்துவோ, அவரது குடும்பத்தினரோ கனவிலும் நினைக்கவில்லை. 5 நாட்கள் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டபோது, நீதிமன்றம்ஒருநாள் மட்டுமே அனுமதி வழங்கியிருக்கிறது. இன்று காலை 6.20 மணிக்கே புழல் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்ட பச்சமுத்துவிடம் 7.30 மணிக்கே விசாரணைதொடங்கிவிட்டது. பச்சமுத்துவிடம் கேட்பதற்காக போலீஸ் சுமார் 150 கேள்விகளை தயார் செய்து வைத்திருந்ததாம். போலீஸ் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும்பொறுமையாகவே பதில் சொல்லியிருக்கிறார் பச்சமுத்து.

ஞானதேசிகன் சஸ்பெண்ட்: கூடுகிறது ஐ.ஏ.எஸ். சங்கம்!

தமிழகத்தில் அடுத்தடுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டமை அதிகாரிகளிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. சமீபத்தில், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், சுரங்கத்துறை ஆணையர் அதுல் ஆனந்த் ஆகிய இரு அதிகாரிகள் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதிரடியாக நடந்த இந்த சஸ்பெண்டுகள் பல கேள்விகளை எழுப்பியநிலையில் கேள்வியோ, விசாரணைகளோ இல்லாமல் அதிரடியாக இப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருக்கும் நடவடிக்கை இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளிடையே கடும் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கேள்வி கேட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் பொதுக்குழு நாளை கூடவுள்ளது.

ஞானதேசிகன், அதுல் ஆனந்த் உட்பட 8 அதிகாரிகள் ஒரேநாளில் சஸ்பெண்ட்! வைகுண்டராஜன்...?

Why Former Chief Secretary among 8 officials suspended?சென்னை: தொழிலதிபர் வைகுண்டராஜனின் தாது மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த முன்னாள் தலைமைச் செயலர் ஞானதேசிகன் உட்பட 8 அதிகாரிகள் ஒரே நாளில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தாது மணல் கடத்தல் வழக்கில் வைகுண்டராஜன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என கூறப்படுகிறது.
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ஞானதேசிகன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோ கடந்த திங்கள்கிழமையன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதே நாளில் மேலும் 6 அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் சகோதரிகள் போயிங் 777 விமானம் ஒட்டி சாதனை

Sisters Maryam Masood, Erum Masood are first such pair to pilot a Boeing 777 jet together பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் போயிங்-777 விமானம் ஓட்டிய முதல் சகோதரிகள் என்ற பெருமையை பெற்றுள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த சகோதரிகள் மரியம் மசூத் மற்றும் ஏர்ரம் மசூத். இவர்கள் இருவரும் பாகிஸ்தான்  இன்டர்நேஷனல் விமான நிறுவனத்தில் பைலட்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில்  மூத்தவரான மரியம் மசூத் ஏற்கனவே போயிங் -777 விமானம் ஓட்டுவதற்கான தகுதி பெற்றுள்ளார்.

ரோசைய்யா விடுவிப்பு - தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ்!

2011 ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் ரோசைய்யா. அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுர் நியமிக்கப்பட்டதால் ரோசைய்யா விடுவிக்கப்படுகிறார். இனி, மராட்டிய மாநில ஆளுநர் வித்தியாசாகர் ராவ், கூடுதல் பொறுப்பாக தமிழக ஆளுநர் பொறுப்பையும் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநில ஆளுநர் வித்தியாசாகர் ராவ், தெலுங்கானாவின் கரீம்நகரில் பிறந்தவர் நக்கீரன்,இன்

ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி இராணி அரசு கஜானாவில் எட்டு லட்சத்துக்கு சாரி வாங்க முயற்சி .. மறுத்து பெண் அதிகார்


மத்திய ஜவுளித் துறை அமைச்சராக இருப்பவர் ஸ்மிருதி இரானி. இதற்குமுன் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். வழக்கமாக, ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர். இந்தமுறை புடவை வாங்கிய விவகாரத்தில் சர்ச்சைக்கு ஆளாகி இருப்பதாக வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. சமீபத்தில், தனது துறைக்குக் கீழ்வரும் கைவினைத் தொழிற்சாலை ஆய்வு ஒன்றுக்குச் சென்றிருந்தபோது அங்கு எட்டு லட்சம் மதிப்பிலான புடவைகள் மற்றும் விநாயகர் சிலையை வாங்கி இருக்கிறார். அதற்கான பில்லை தனது உதவியாளர் மூலம் தனது துறைச் செயலாளருக்கு அனுப்பி, கட்டச்சொல்லி இருக்கிறார்.

டெல்லி மிகபெரும் விபசார மாபியா பிடிபட்டது ,,, சுமார் 5000 பெண்ளை கடத்தி ஜி பி ரோட்....

The Delhi Police on Tuesday arrested eight people on suspicion of human trafficking. The arrested include a couple - Saira Begum and Aafaq Hussain, who had an unchecked run as trafficking kingpins in Delhi`s Garstin Bastion (GB) Road - and six of their aides.டெல்லி: விபசார தொழிலில் கோடிக்கணக்கில் சொத்து குவித்த கணவன்-மனைவி ஆகிய இருவரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் ஜி.பி.சாலையில் சிவப்பு விளக்கு பகுதி உள்ளது. அங்கு நடைபெறும் விபசார தொழிலை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வந்தனர். அதில், 80 சதவீத தொழிலை அபாக் உசைன்-சாய்ரா பேகம் என்ற தம்பதி, ரவுடிகள் துணையுடன், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து நடத்தி வருவது தெரிய வந்தது. Husband and wife charged with running prostitution business நேபாளம், மேற்கு வங்காளம், ஒரிசா, கர்நாடகா, மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து இளம் பெண்களை கடத்தி வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலை சேர்ந்த கணவன் - மனைவி அபாக் குசைன் மற்றும் சாய்ரா பேகம் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

புதிய கட்சி ஒத்திகை பார்த்த சசிகலா புஷ்பா?


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுபினர் சசிகலா புஷ்பா,
நேற்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக விமானம் மூலமாக தமிழக வந்தார்.< அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இவர் வேறு கட்சியில் சேர்ந்தால் கட்சி தாவல் தடை சட்டத்தின் படி இவரது எம்.பி. பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சசிகலா புஷ்பா மக்கள் புதிய கட்சியை துவங்கலாம் என்ற செய்தி முன்னதாக உலா வந்தது.சசிகலா புஷ்பா சில
பேட்டிகளில் தான் சார்ந்த சமூகத்தின் பெயரை சொல்லி பேட்டி கொடுத்தார். நாடார் சமூகத்தை சேர்ந்த சசிகலா புஷ்பா அந்த இன மக்களை குறிவைத்து கட்சி ஆரம்பிக்கலாம் என கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வருவதற்கு முன்னர் சசிகலா புஷ்பா கார்கள் புடை சூழ தனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை காட்ட காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். இது அவர் புதிய கட்சி தொடங்க அடித்தளம் என பேசப்படுகிறது.மக்கள் அதிமுகவை தொடங்கி, தனக்கு நம்பிக்கையான ஒருவர் மூலம் நாடார் இனத்தை குறிவைத்து ஒரு அரசியல் கட்சியையும் தொடங்கி சில நாட்கள் கழித்து இரு கட்சியையும் ஒன்றாக சேர்ர்க்கும் பிளானில் சசிகலா புஷ்பா உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கான ஒத்திகையே காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த நிக்ழ்வு எனவும், இதன் பின்னணியிலும் மணல் மனிதர் இருப்பதாக பேசப்படுகிறது.வெப்துனியா.காம்

அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் பாட்டு பாட ஆர்வம்.. பாடலை அம்மா ரசிக்கிறாங்களாம்.. அதான் !

சட்டசபையில் கருணாஸ் பேசும் போது, சினிமா பாடல்களை, ராகத்துடன் பாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நேற்று, 'கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்' என்ற பாடலை மாற்றி, 'கேட்காமலே கொடுக்கப்படும்; தட்டாமலே திறக்கப்படும் முதல்வர் ஆட்சியில்' என, ராகத்துடன் பாடினார்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தாளம் போட்டனர்.
அவரது பாடலை, முதல்வர் ரசித்து கேட்பதால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் பாடத் துவங்கி உள்ளனர். அமைச்சர் துரைக்கண்ணு அவ்வப்போது பாடுகிறார். நேற்று கேள்வி நேரத்தின் போது, எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, முதல்வரை பாராட்டி, சில வரிகளைப் பாடினார்.
ரூ.3,229 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் : சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவிப்பு சென்னை,: ''ஏழு மாநகராட்சி மற்றும் நான்கு நகராட்சிகளில், 3,229 கோடி ரூபாய் செலவில், குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில், 110 விதியில், அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:

ஞானதேசிகன் இடைநீக்கம்.. ஊழலுக்கு உதவியவர்கள் மீது என்ன நடவடிக்கை? - ராமதாஸ்

சென்னை: முன்னாள் தலைமைச் செயலாளர் பணியிடை நீக்கத்துடோடு நின்றுவிடாமல் யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான ஞானதேசிகன், எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் நிலவியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையருமான அதுல் ஆனந்த் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். Ramadoss issued statement about Gnanadesikan suspended ஞானதேசிகன், அதுல் ஆனந்த் ஆகிய இருவரின் பணியிடை நீக்கம் குறித்த அறிவிப்பையோ, அதற்கான காரணங்களையோ தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், அவர்கள் இருவரும் அவர்கள் வகித்து வந்த பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைமை செயலர் ஞானதேசிகன் பதவி இடைநீக்கம் ..

மின்னம்பலம்.காம் :தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத் தலைவர் பதவியில் இருந்து கே.ஞானதேசிகன் திடீரென்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 1959இல் திருநெல்வேலியில் பிறந்த இவர், பொறியியல் படித்தவர். பின்னர் லண்டனில் சமூக அறிவியலில் மேற்படிப்பை முடித்திருக்கிறார். 1982இல் இந்திய ஆட்சி பணி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் ஆகியிருக்கிறார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பணியாற்றிய கே.ஞானதேசிகன், அப்பதவியில் இருந்து அண்மையில் மாற்றப்பட்டார். இதையடுத்து புதிய தலைமைச் செயலராக பி.ராமமோகன ராவ் நியமிக்கப்பட்டார். தலைமைச் செயலராக இருந்த ஞானதேசிகன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன (டிட்கோ)-த்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில்தான் கே.ஞானதேசிகன் திடீரென்று தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமைச் செயலராக இருந்த ஞானதேசிகன் ஏன் மாற்றப்பட்டார் என்பதும் தற்போது அவர் என்ன காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பதும் புரியாத புதிராக இருக்கிறது. இதன் பின்னணி விவரம் மின்னம்பலத்தின் ஏழு மணி அப்டேட்டில் தரப்படும்