சனி, 20 ஜூலை, 2024

மனித வாழ்வின் மர்மங்களை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து பார்க்கும் முயற்சி

·ராதா மனோகர் :  மனித வாழ்வின் மர்மங்களை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து பார்க்கும் முயற்சியை பொதுவில் யாரும் திறந்த மனதோடு அணுகுவதில்லை.
 அதற்கு காரணம்,
 அது பற்றி அவர்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளே.
 அவை அவர்களின் அறிவுத்தாகத்தை தீர்த்து கொண்டிருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்!
 இந்த நம்பிக்கைதான் அறிவுக்கு மிகப்பெரும் தடை.
 பிறப்பு, இறப்பு, மறுபிறவி , உயிர்,; கடவுள் போன்ற விடயங்களை பற்றி  சிந்திக்க தொடங்கும் போதே மதங்கள் அவை பற்றி வகுப்பெடுத்த கதைகள்  ஞாபகத்திற்கு வந்துவிடும் .
 இந்த கதைகள் எமது ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவே விடாது.
இது ஒரு ஆபத்து என்றால் அடுத்த ஆபத்து இதை எல்லாம் பொத்தாம் பொதுவாக  மூர்க்கமாக மறுத்து வேறொரு பக்கத்தில் இருந்து வாதங்கள் வந்துவிடும் .
 இதுவும் உண்மையை அலசி ஆராயும் வாய்ப்புக்களை மறுத்து விடும் தடைதான்.

மைக்ரோசாப்ட் கோளாறு 2வது நாளாக சென்னையில் விமான சேவை பாதிப்பு

 மாலை மலர் :  மைக்ரோசாப்ட்டின் 'விண்டோஸ்' மென்பொருளை எண்ணற்ற நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் 'விண்டோஸ்' மென்பொருள் இயங்குதளத்தில் நேற்று திடீரென கோளாறு ஏற்பட்டது. அதனால் அந்த மென்பொருளை சார்ந்துள்ள தொழில்நுட்ப சேவைகள் அனைத்தும் முடங்கின.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த பாதிப்பு உணரப்பட்டது. இதற்கான காரணத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. எனினும் மைக்ரோசாப்ட்டிலோ அல்லது விண்டோசிலோ எந்த பாதிப்பும் இல்லை. 'கிரவுட்ஸ்டிரைக்' அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் இந்த கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வெள்ளி, 19 ஜூலை, 2024

ஜெய் ஸ்ரீராம் கோஷமும் .. பாஜக அதிமுக நா த க தலித்திய ஜாதிக்கட்சிகளும்

 Vimalaadhithan Mani :   நாளைக்கு நீங்க ரோட்ல போய்க்கிட்ருப்பீங்க.ஒரு நாலு பேர் வந்து ஜெய் ஸ்ரீராம் சொல்லும்பானுக .
நீங்க சிரிச்சுட்டே விளையாடாமப் போங்க பாஸ் னு சொல்லி நகரப் பார்ப்பீங்க. அப்ப ஒருத்தன் நீ இந்து தான ஜெய் ஸ்ரீராம் சொல்லமாட்டியான்னு கேட்டு உங்க பொடனிலயே ஓங்கி ஒன்னு போடுவான்.
உங்களுக்கு என்ன நடக்குதுன்னே புரியாது. சுத்தி இருக்கவங்களும் இதை ஒரு பெருசாவே பாக்கமாட்டாங்க. ஒரு ஜெய் ஸ்ரீராம் சொல்றதால என்ன ஆகப்போகுது சொல்லிட்டுப் போகலாம்லன்னு உங்களுக்கு அட்வைஸ் கூட பண்ணுவாங்க.
டேய் நான் ஏன்டா சொல்லணும், இதை சொன்னாத்தான் நான் இந்துவான்னு உங்களுக்குத் தோணும். ஆனா அடுத்த அடி விழும் முதுகுல.

மைக்ரோசொஃப்ட் கணினிகள் முடங்கின உலக ரீதியான பாதிப்பு

  hirunews.lk : உலகளாவிய ரீதியாக முடங்கிய மைக்ரோசொஃப்ட் கணினிகள்
உலகளாவிய ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக, பல நாடுகளில் விமானச் சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பித்துள்ளன.
விமானச் சேவை கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக, பல நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டு பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் சில ஊடகங்கள் செயலிழந்துள்ளன.
லண்டன் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்டிக்கு தடைவிதித்த வணிக வளாகத்தை மூட கர்நாடக அரசு உத்தரவு!

 dinamani.com : பெங்களூருவில் உள்ள ஜிடி வேர்ல்ட் வணிக வளாகத்தில் வேட்டி அணிந்து சென்ற முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் வணிக வளாகத்தை ஒரு வாரத்துக்கு மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் சுரேஷ், சட்டப்படி, வணிகவளாகத்தை ஏழு நாள்களுக்கு மூடலாம். புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே அதிகாரிகளிடம் இதுபற்றி பேசினேன்.
வேட்டி அணிந்துவந்த விவகாரத்தால் வணிகவளாகம் ஏழு நாட்களுக்கு மூடப்படும். அமைச்சர் சுரேஷின் அறிவிப்பைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் யு.டி.காதர் இந்த முடிவை ஆதரித்து, உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தினார்.

டாக்டர் நடராஜா ஜெயகுமாரன் : எனது வீட்டை அடித்து நொருக்கி எரித்து என்னை யாழில் இருந்து விரட்டியவர் டாக்டர் சத்தியமூர்த்தி”

டாக்டர் நடராஜா ஜெயகுமாரன்

தேசம் நெட் -arulmolivarman  :  “எனது வீட்டை அடித்து நொருக்கி எரித்து என்னை யாழில் இருந்து விரட்டியவர் டொக்கடர் சத்தியமூர்த்தி” டொக்டர் நடராஜா ஜெயகுமாரன்
யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் நிபுணராகக் கடமையாற்றிய தன்னை, ஊழல்கலை வெளிப்படுத்தியதற்காக, உயிர் அச்சுறுத்தல் கொடுத்த வீட்டை அடித்து நொருக்கி எரித்து யாழில் இருந்து விரட்டி அடித்தனர்,
யாழ் மருத்துவ அதிகாரிகள் எனக் குற்றம்சாட்டுகின்றார் புற்றுநோய் மருத்துவ நிபுணர் நடராஜா ஜெயக்குமாரன். 2004 முதல் 2012 யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாளையில் கடமையாற்றிய இவர், அங்கு நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டுவந்தால் தனக்கு எதிராக கடுமையாகவும் மோசமாகவும் நடந்து கொண்டதாக யாழ் போதனா வைத்தியசாலையின் அத்தியேட்சகர் டொக்கடர் சத்தியமூர்த்தி மீது மிகக் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

வியாழன், 18 ஜூலை, 2024

சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

 tamil.samayam.com  - எழிலரசன்.டி  :   பெண் காவலர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கஞ்சா வைத்திருந்தது,ம்கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் குறித்து அவதூறு பரப்பியது என அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகின. இதனையடுத்து, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார்.
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவுக்கு எதிராக சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

வடசென்னை பாஜக மகளிர் அணி செயலாளர் அஞ்சலை ஆர்ம்ஸ்ட்ரோங் கொலைக்கு 50 இலட்சம் கொடுத்துள்ளார்?

article_image5

tamil.asianetnews.com  - vinoth kumar :  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி  செயலாளர் அஞ்சலையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்ல தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக மறைந்த கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூர் திருவேங்கடம், திருநின்றவூர் ராமு என்ற வினோத் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை : பெண் வழக்கறிஞர் உட்பட மேலும் இருவர் கைது!

 minnambalam.com  -christopher :  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் வழக்கறிஞர் மலர் கொடி மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் இன்று (ஜூலை 17) கைது செய்துள்ளனர்.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலு உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து அனைவருக்கும் 5 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்ட நிலையில்,  ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ரவுடி திருவேங்கடம் கடந்த 14ஆம் தேதி அதிகாலையில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

கன்னடர்களுக்கு 100% இட ஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு .. கடும் எதிர்ப்பால்

 மாலை மலர்  :  கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த திங்கள் அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரின் எக்ஸ் பதிவில், "கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

புதன், 17 ஜூலை, 2024

நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் கொலை! உறவினர் 4 பேர் கைது

tamil.asianetnews.com  - vinoth kumar :  மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (47). நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு தொகுதி துணைச்செயலாளர். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். மதுரை பீபீ குளம் வல்லபாய் சாலையில் நேற்று காலை 7 மணியளவில் பாலசுப்ரமணியன் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், பாலசுப்ரமணியனை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தப்பிக்க முயற்சித்தார். ஆனால் அவரை விடாமல் ஓட ஒட விரட்டி சென்று சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்தனர்.

திங்கள், 15 ஜூலை, 2024

தூத்துக்குடி 13 பேர் கொலைகள் தொழிலதிபர் வேதாந்தா அகர்வால் ஆலோசனையில் நடந்தது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

File video :

 மாலை மலர்  :  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை குறித்து கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்,
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் விசாரிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் புரிந்துணர்வு - புதிய பதவி !

பலத்த பாதுகாப்புடன் டாக்டர் அர்ச்சுனா வெளியேறினார்: பேச்சுவார்த்தை நடத்த  கொழும்புக்கு வருமாறு அழைப்பு | TAMIL NEWS

தேசம் நெட் : வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளை மையப்படுத்தி புதிய பதவி !
சாவகச்சேரி வைத்தியசாலையில்  இடம்பெற்ற இந்தப் போராட்டம் பெரியளவில் வெற்றி பெற்றிருக்கின்றது என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
என்னுடைய மாற்றம் சுகாதாரத்துறைக்கு மட்டுமானது. வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு மட்டுமானதே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வருகை தந்த பின்னர் முகநூலில் அவர் வெளியிட்டுள்ள நேரலையிலேயே இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

ஜாதி ஜாதியாக இணைந்து கொள்ளும் அம்பேத் காரியவாதிகள்

May be an image of 3 people and beard

 Yazh V M :   [முன்குறிப்பு: திமுக என்ன செய்தாலும் ஆதரிக்க வேண்டும் என்று நான் கூற இதை எழுதவில்லை. மாறாக என்ன சந்தர்ப்பம் கிடைத்தாலும் திமுக ஆட்சியைக் குறை சொல்வதையும், திராவிடம் மற்றும்  பெரியார் வெறுப்பை வெளிப்படுத்துவதையும் எதிர்க்கவே எழுதுகிறேன்.]
சமீபத்தில் BSP கட்சியின் மாநிலத் தலைவர் Armstrong படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வன்மையான கண்டனங்களும் ஆழ்ந்த இரங்கலும்!
இது ஒரு personal vengeance ஆ ஆருத்ரா பிரச்சனையில் Armstrong சம்பந்தப்பட்டதால் கொல்லப்பட்டாரா ?
என இனி தான் தெரியும்.

ஞாயிறு, 14 ஜூலை, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம்: அதிர்ச்சி வீடியோ வெளியீடு

maalaimalar :  சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப் பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடிகள் 11 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் இன்று போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து சீமான் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி உட்பட 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி அபார வெற்றி

 நக்கீரன் : “சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததைத் தொடர்ந்து
அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன. அதன்படி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.

இதனையடுத்து 20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

டொனால் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு . மயிரிழையில் உயிர் தப்பினார் . துப்பாக்கிதாரி சுட்டு கொலை

 Thesam Jeyabalan  : துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் தப்பினார் ட்ரம்! அடுத்த ஜனாதிபதி ட்ரம் உறுதியாகிவிட்டது!
சில நிமிடங்களுக்கு முன் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால் ட்ரம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது போல் தலைக்கு வைக்கப்பட்ட வெடி காதடியால் சிராய்த்துக் கொண்டு சென்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு காதடியில் பட்டதும் டொனால்ட் ட்ரம் உரையாற்றிக் கொண்டு நின்ற இடத்திலேயே குந்தி இருந்துவிட்டார்.
உடனடியாக ட்ரம்மைச் சுற்றி இருந்த மெய்ப்பாதுகாவலர்கள் அவரைச் சுற்றிவளைத்து அழைத்துச் சென்றனர். அவ்வாறு அழைத்துச் செல்கின்ற போது ட்ரம் தன் மணிக்கட்டை மடித்து காற்றில் குற்றி தன்னுடைய தைரியத்தை காட்டிச் சென்று வாகனத்தில் ஏற்றினர். வாகனத்தில் ஏறிய பின்னும் ட்ரம் கையை உயர்த்தி தன்னுடைய உறுதியைத் தெரிவித்து இருந்தார்.