ராதா மனோகர் : 1927 இல் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து திராவிடன் என்ற பத்திரிகை நான்கு ஆண்டுகளாக வெளிவந்திருக்கிறது.. வெளியிட்டவர் சுன்னாகம் திராவிட வித்தியா சாலையின் நிறுவனரும் யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்க தலைவருமான வழக்கறிஞர் திரு சு ராசரத்தினம் அவர்கள்!. திராவிடன் பத்திரிகையில் சுயமரியாதை என்ற தலைப்பில் வெளியான தொடர் கட்டுரையின் ஒரு பகுதிதான் இப்பதிவு.
இதில் உள்ள விடயங்களை எல்லாம் அந்த கால சூழ்நிலை அந்த காலத்து தமிழ் நடை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் பின்னணியில்தான் நோக்க வேண்டும்.
சுயமரியாதை என்ற தலைப்பில் வெளியான இக்கட்டுரை எனக்கு மிகவும் ஆச்சரியமான ஒரு விடயம் இப்பத்திரிகையின் ஆசிரிய தலையங்கமாகவே இது வெளிவந்திருக்கிறது
இலங்கை தமிழரிடையே சுயமரியாதை என்ற சொல்லே ஒலிப்பதில்லை
ஆனால் 1927 ஆம் ஆண்டிலேயே சுயமரியாதை என்ற தலைப்பில் சில ஆண்டுகள் ஆசிரியர் தலையங்கம் திராவிடன் பத்திரிகையில் வந்திருக்கிறது .. அந்த காலங்களில் சுயமரியாதை என்ற கருத்து ஒலித்திருக்கிறது.