வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

டோக்ளாம் நெருக்கடி ! சீனாவிற்கு பூடான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது


இந்தியாவின் சிக்கிம் மாநிலம் அருகே இந்திய, சீன எல்லைப் பகுதியில் உள்ள டோக்லாம் தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா கூறிக்கொள்வதற்கு பூடான் கண்டனம் விடுத்துள்ளது.
இந்தியா, சீனா, பூடான் ஆகிய மூன்று நாடுகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் பகுதி உள்ளது. அங்குள்ள இந்திய ராணுவத்தின் பதுங்கு குழிகளைச் சீன ராணுவத்தினர் கடந்த மாதம் தாக்கி அழித்தது மட்டுமன்றி அந்தப் பகுதியில் தங்கள் ராணுவ வாகனங்கள் சென்று வரும் வகையில் சாலைகளையும் அத்துமீறி அமைத்துவருகிறது.
இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டு இந்திய ராணுவம் தனது படைகளைக் குவித்தது. சீனா அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியத் தரப்பில் ராணுவப் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று ராணுவ அதிகாரிகள், வெளியுறவு செயலக அதிகாரிகள், மற்றும் சீன அதிபர் உள்படச் சீனாவின் ஊடகங்கள் அனைத்தும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பதற்றம் மிகுந்த பகுதியிலிருந்து தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று சீனா விடுத்த எச்சரிக்கையை இந்தியா நிராகரித்தது. தற்போது, டோக்லாம் பகுதியைத் தங்களுக்கே உரியது என்று கூறிவரும் சீனாவிற்கு பூடான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டோக்லாம் எல்லைப் பகுதி விவகாரத்தில் சீனாவின் அத்துமீறல் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என பூடான் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: