சனி, 27 ஜூலை, 2024

கனடா அய்யப்பன் கோவிலில் பணம்பெற்ற யாழ்.கொள்ளைக்காரி கைது!

யாழில் கனடா பிரஜை ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்!இருவர் கைது | Canadian Citizen Has Been Attacked By Jaffna

tamilmirror.lk - எம்.றொசாந்த் :  யாழ்.கொள்ளைக்காரி கைது
யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பம் மீது தாக்குதலை மேற்கொண்டு கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனலைதீவை சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று, கனடாவில் குடியுரிமை பெற்று வந்து அங்கு வசித்து வந்த நிலையில், விடுமுறையை கழிக்க அனலைதீவுக்கு கடந்த வருடம் வந்து தங்கியிருந்துள்ளது.
அந்நிலையில் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு , அவர்களிடம் இருந்த வெளிநாட்டு பணம் , நகைகள் , பொருட்கள் , கடவுசீட்டு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றிருந்தது.

NITI Aayog : சந்திரபாபுவுக்கு 20 நிமிடம் அனுமதி... ஆனால் எனது மைக் ஆப் - கொந்தளித்த மம்தா

 மின்னம்பலம் - Kavi  :  இந்தியா கூட்டணியில் இருந்து நிதி அயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரே முதல்வரான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், அக்கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி அயோக் கூட்டம் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, இமாச்சல பிரதேசம், டெல்லி, பஞ்சாப், ஜார்க்கண்ட் என இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மத்திய பட்ஜெட்டை கண்டித்து கலந்துகொள்ளவில்லை.
ஆனால், ‘நிதி அயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டிப்பேன். இந்த கூட்டத்தில் பங்கேற்பேன்’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

சினிமாஸ் குணரத்தினம் ஏன் சுட்டு கொல்லப்பட்டார்? இனவாதிகளா? இடதுசாரிகளா? JVP ?யார் குற்றவாளிகள்?

May be an image of 1 person and text

ராதா மனோகர் : சினிமாஸ் குணரத்தினம் ஏன் சுட்டு கொல்லப்பட்டார்? இனவாதிகளா? இடதுசாரிகளா? யார் குற்றவாளிகள்?
இலங்கை திரையுலகின் பிதா மகன் என்றழைக்கப்பட்ட திரு கனகசபை குணரத்தினம் 20 July 1917 – 27 August 1989) அவர்களின் வரலாறு இலங்கை  மக்களால் ஏன் போதியளவு நினைவு கூறப்படுவதில்லை?
இவர் கொழும்பில் வைத்து ஒரு ஆயுத குழுவால் (ஜேவிபி)   சுட்டு கொல்லப்பட்டதாக அந்த காலக்கட்டங்களில் எல்லா ஊடகங்களும் கூறின!
கே குணரத்தினம் இலங்கை திரைப்பட உலகின் ஆதார தூணாக விளங்கியவர் . இது வெறும் அலங்கார வார்த்தை அல்ல.!
32  சிங்கள திரைப்படங்களை தயாரித்து இயக்கி உள்ளார்
அதில்  25 படங்கள் வெற்றி படங்கள், ( Box office hit) . இலங்கையில் வேறு எந்த இயக்குனரும் தயாரிப்பாளரும்  இந்த சாதனைக்கு அருகில் கூட வரமுடியாது.
இலங்கை முழுவதும் பல திரையரங்குகளை சொந்தமாக வைத்திருந்தார்.

டாக்டர் “அம்பியா? அந்நியனா?”: “நான் உண்மைகளைச் சொன்னால் கொல்லப்படலாம்” யாழ் டாக்டர்

 தேசம் நெட் - arulmolivarman :  யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த சத்தியமூர்த்தி தன்மீது வீண்பழிகள் சுமத்தியதாக,
 அவ்வைத்தியசாலையில்; தற்போதும் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றும் டொக்டர் வி நாகநாதன் யூலை 25 அன்று குற்றம்சாட்டியுள்ளார்.
 பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி இவ்வாறு பலர் மீதும் பாய்ந்துள்ளதாகவும்
அவர் தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தில் உள்ளவர் கையில் உள்ள முட்டை கூட அம்மிக்கல்லையும் உடைக்கும் எனத் தெரிவிக்கின்றார், மிகுந்த மனவுறுதி கொண்ட டொக்டர் வி நாகநாதன்.

தன்னுயிரை கொடுத்து குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய டிரைவர்:சேமலையப்பன் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம்! (கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களுக்கு 10 இலட்ச்சம்)

மின்னம்பலம் - Selvam :   பள்ளிக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிர் நீத்த ஓட்டுநர் சேமலையப்பனின் பெற்றோர் மற்றும் மகன்களிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (ஜூலை 26) வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் காங்கேயம், சத்யா நகரைச் சேர்ந்த சேமலையப்பன் (வயது 49) வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஜூலை 24-ஆம் தேதி மாலை பள்ளி முடிந்தவுடன் பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோவை திருச்சி நெடுஞ்சாலை வெள்ளக்கோவில் பழைய காவலர் குடியிருப்பு அருகே பள்ளி வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தபோது சேமலையப்பனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

வெள்ளி, 26 ஜூலை, 2024

டெல்லியில் பிரமாண்டமான தமிழ்நாடு இல்லம்- அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

 மாலை மலர்  :  சென்னை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, புதுடெல்லி, சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் 257 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
18.6.2021 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,
புதுடெல்லி மிக தீவிர நில அதிர்வு மண்டலம் 4 ஆக மறு வகைப்படுத்தப்பட்டு உள்ளதை கருத்தில் கொண்டு வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தினை பழைய கட்டிடங்களை முழுவதுமாக இடித்து மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஆலோசனை நடத்தினார்.

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டம்... அரசு கைவிட்டதற்கு என்ன காரணம்?

 tamil.samayam.com - மகேஷ் பாபு   :  நாடாளுமன்றத்தில் கடந்த 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2024-25 தாக்கல் செய்யப்பட்டது.
இதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு விட்டது என்று அரசியல் கட்சிகள் பலவும் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் எந்த ஒரு மாநிலமும் புறக்கணிக்கப்பட வில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறார். குறிப்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேட்டியளிக்கையில், தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் கிடப்பில் இருப்பதற்கு காரணம் போதிய நிலம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றார்.
தமிழ்நாடு அரசு கடிதம்
மேலும் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியதாக சுட்டிக் காட்டினார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் மாதம் 21 இல் நடைபெறும்

தமிழ் நியூஸ் :இலங்கை ஜனாதிபதி தேர்தல்  செப்டெம்பர் மாதம் 21 இல் நடைபெறும் என்று தேர்தல் திணைக்களம் அறிவிப்பு!
தற்போதைய ஜனாதிபதி திரு ரணில் விக்கிரமசிங்க சுயேட்சையாக போட்டி இடுவார் என்று அறிவிப்புக்கள் வெளியாகி உள்ளது

இவர் மிகப்பெரும்பான்மையான வாக்குகளால் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவர் என்று பல கருத்து கணிப்புக்கள் தெரிவிக்கின்றன
இத்தேர்தலில் மேலும் பல வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்
ஜனாதிபதித் தேர்தலில் தன்னையும் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சஜித் பிரேமதாச, அநுர குமார திசாநாயக்க, திலித் ஜயவீர, சரத் பொன்சேகா ஆகியோர்கள் தாங்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ஒரு தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற முனைப்புடன் சில தமிழ் கட்சிகளும் முயல்கின்றன ..

கறுப்பினப் பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யும் அமெரிக்க பொலிசார்!!:

 வீரகேசரி : அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வீட்டிற்குள் புகுந்து கருப்பின பெண் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 6-ம் தேதி நள்ளிரவில், சோனியா மஸ்ஸி என்ற கருப்பின பெண், காவல்துறை உதவி எண்ணான 911-க்கு அழைத்துள்ளார்.
அப்போது, அங்கு 2 காவலர்கள் வந்து சோனியா மஸ்ஸிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென காவலர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுடுகிறார். தற்போது அந்த போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 6 அதிகாலையில், ஸ்பிரிங்ஃபீல்ட் இல்லினாய்ஸ் வீட்டில் இருந்த, 36 வயதான கறுப்பினப் பெண்ணான சோனியா மாஸ்ஸியை,
பொலிசார் மரணதண்டனை நிறைவேற்றிக் கொல்வதைக் காட்டும் உடலில் பொருத்தப்பட்ட ஒளிப்படக் காட்சிகள் திங்களன்று வெளியிடப்பட்டன.

வியாழன், 25 ஜூலை, 2024

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம், மேற்கு வங்கத்தை தொடர்ந்து கர்நாடகா.. தீர்மானம்!

 மின்னம்பலம் - Selvam :  தமிழகம், மேற்கு வங்கத்தை தொடர்ந்து கர்நாடகா… நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்!
தமிழ்நாடு, மேற்கு வங்கத்தை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக இன்று (ஜூலை 25) சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தநிலையில், நீட் தேர்வுக்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியது.

புதன், 24 ஜூலை, 2024

முதல்வர் ஸ்டாலின் : அரசைப் பொதுவாக நடத்துங்கள்; பழிவாங்கல் வேண்டாம்” - பிரதமருக்கு முதல்வர் அறிவுறுத்தல்

 hindutamil.in :  சென்னை: "அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்." என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒரு சில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
பிரதமர் மோடி அவர்களே, “தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!.

ஆம்ஸ்ட்ராங் கொலை - ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது நான் தான்.-வாக்குமூலம்!

article_image1
tamil.asianetnews.com - Ajmal Khan  :  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கொலைக்கு காரணம் என்ன.?
திட்டம் போட்டது யார் என்பது தொடர்பான தகவலை தமாகா நிர்வாகியான ஹரிஹரன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது புதிய வீட்டு முன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்ட நிலையில்,  ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 11 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர்.
அப்போது ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழி வாங்க ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக  தெரிவித்துள்ளனர்.  

செவ்வாய், 23 ஜூலை, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் பார் கவுன்சில் தேர்தல்” : பிஎஸ்பி தலைவர் ஆனந்தன் ஷாக் தகவல்

 minnambalam.com  - Kavi  :  ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் பார் கவுன்சில் தேர்தலில் தோல்வியுற்றவர்களின் சதி இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவர் ஆனந்தன் கூறியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் வகித்த பகுஜன் சமாஜ் தமிழ்நாடு மாநில தலைவர் பதவியில் வழக்கறிஞர் ஆனந்தன் இன்று (ஜூலை 22) நியமிக்கப்பட்டார்.
இதன் பின் பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ப.ஆனந்தன், “காவல்துறை விசாரணை முந்தைய காலங்கள் போல் அல்லாமல் தாமதமாகத்தான் இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையும் ஆரம்பக்கட்டத்திலேயே தான் இருக்கிறது.

சாவகச்சேரி மருத்துவமனை ஊழல் மோசடிகள் – விசாரணை செய்ய 15 பேர் கொண்ட விசாரணை குழு !

 தேசம் நெட் - arulmolivarman :  சாவகச்சேரி மருத்துவமனையில்  இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பாக அண்மையில் ஏற்பட்டிருந்த சர்ச்சையான நிலைமையினைத் தொடர்ந்து, வைத்தியசாலை நிர்வாகத்தினை கண்காணிக்கும் நோக்கில் 15 பேர் கொண்ட அபிவிருத்தி குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வைத்தியர் அர்சுனாவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தது. அத்துடன் வைத்தியர் அர்சுனாவை மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

திங்கள், 22 ஜூலை, 2024

மாஞ்சோலை தேயிலை தோட்டம்; TANTEA நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு

nakkheeran.in  :  தலைமுறை வழியாய் 95 வருடங்கள் நெல்லை மாவட்டத்தின் அம்பை பகுதியின் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பி.பி.டி.சி. கம்பெனிக்கு இரவுபகல் பாராது விசுவாசமாய் உழைத்தவர்கள். அப்படிப்பட்ட மக்கள் அடுத்த வேளை உணவுக்கு,
அவர்கள் தங்கள் பிள்ளைகளோடு என்ன செய்வார்கள் என்ற நன்றி உணர்வு இம்மியளவு கூட இல்லாமல் கடுமையாக நடந்து கொண்ட கார்ப்பரேட் கம்பெனி குத்தகை முடிவதற்கு இன்னும் நான்கு வருடங்கள் இருந்தபோதும்  ஜூன் 17 முதல் கம்பெனி மூடப்படுகிறது.

தற்கொலை செய்த கலெக்டர் மனைவியின் மீது ஜோடிக்கப்பட்ட சிறுவன் கடத்தல் ..மரண வாக்குமூலம்

 மாலை மலர் :  மதுரையில் ரூ. 2 கோடி கேட்டு பள்ளி மாணவர் கடத்தப்பட்ட வழக்கு விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி குஜராத்தில் தனது கணவர் குடியிருந்து வரும் ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தனது சாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என தற்கொலைக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டானின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பெயர்களை குறிப்பிட்டு மரண வாக்குமூலம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
அந்த மரண வாக்குமூலத்தில் எழுதியிருப்பதாவது:-
எனது பெயர் சூர்யா என்றும், மதுரையில் கடந்த 11-ம் தேதி மாணவன் கடந்தப்பட்ட வழக்கில் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. தனக்கு அந்த சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
அதில் சம்பந்தப்பட்டவர்களை நான் இதுவரை பார்த்ததுகூட இல்லை. என்னை ஏன் இந்த வழக்கில் ராஜலட்சுமி சம்பந்தபடுத்தினார் என்று புரியவில்லை. என்னை இந்த வழக்கில் தொடர்புப்படுத்தி அவரது கணவருக்கும் எனக்கு தொர்பு உள்ளதாக ஜெயலட்சுமி பொய் புகார் கொடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து பைடன் விலகல்; கமலா ஹாரிஸ் அதிபராக ஆதரவு

 BBC tamil : அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார். தான் சார்ந்த ஜனநாயகக் கட்சி மற்றும் தேசத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
துணை அதிபராக இருப்பவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபராவதற்கு தனது ஆதரவையும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பைடன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஜோ பைடனின் விலகலால் அதிபர் தேர்தலில் புதிய சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது.