tamil.oneindia.com -hemavandhana:
அழகிரியை மீண்டும் சேர்த்துக்கொள்வாரா ஸ்டாலின்- வீடியோ
சென்னை:
கடைசி முயற்சியாக அழகிரியை ஒருமுறை கட்சியில் சேர்த்து கொள்வது பற்றி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரிசீலிக்கலாமே என்ற கருத்து அக்கட்சியினராலேயே
முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஸ்டாலினை போலவே இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்தவர்தான் மு.க.அழகிரியும். தென்மாவட்டங்களில் திமுகவை வளர்த்தெடுக்க கருணாநிதியால் பணிக்கப்பட்டதுகூட அழகிரியின் மேல் இருந்த நம்பிக்கைதான் காரணம். அதன்படியே ஒவ்வொரு தேர்தலின்போதும் தென்மாவட்டங்களை பற்றியே எந்த கவலையும் இல்லாமல் அழகிரி இருக்கும் தைரியம், நம்பிக்கையில் இருந்தார் கருணாநிதி.
ஆனால்
காலம் மாற மாற.. காட்சிகளும் மாற மாற.. ஸ்டாலின் மேல் நேர்மறை
விமர்சனங்களும், அழகிரி மீது எதிர்மறை விமர்சனமும் விழ ஆரம்பித்தது. இந்த
எண்ணம் கடைசி வரை நிலைத்தும் விட்டது. தானாக முன்வந்து கட்சியில் தன்னை
சேர்த்து கொள்ளும்படி அழகிரி சொல்லியும் திமுக தலைமை பிடி கொடுக்கவே இல்லை.