பொதுக்கூட்டத்தில் மமதா பானர்ஜியை எதிர்த்து கேள்வி கேட்ட விவசாயிக்கு சிறைவாசம்
கொல்கத்தா:
தம்மை எதிர்த்து யாரெல்லாம் கேள்வி கேட்கிறார்களோ அவர்களையெல்லாம்
மாவோயிஸ்டுகளாக - மார்க்சிஸ்டுகளாக பார்க்கும் மனநிலை மேற்கு வங்க முதல்வர்
மமதா பானர்ஜிக்கு அதிகமாகிவிட்டது போல...
மாவோயிஸ்டுகள் ஆதிக்கமுள்ள பகுதியாக இருந்த மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் பேல்பஹாரி என்ற இடத்தில் கடந்த புதன்கிழமையன்று மமதா பானர்ஜி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய மமதா பானர்ஜி சும்மா இருக்கவில்லை. அங்கு கூடியிருந்த விவசாயிகளிடம் என்னிடம் ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமானால் கேளுங்கள் என்று கூறியிருந்திருக்கிறார்.