வார்னிகா குந்து, ஹரியாணாவைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்
அதிகாரியின் மகள். கடந்த நான்காம் தேதி நள்ளிரவு வார்னிகா தனது காரில் வீடு
திரும்பிக் கொண்டிருந்த போது எஸ்.யூ.வி ரக கார் ஒன்றில் இரண்டு நபர்கள்
பின் தொடர்ந்து வருவதைக் கவனித்திருக்கிறார். குடிபோதையில் இருந்த அந்த
இரண்டு பேரும், வார்னிகாவின் காரைப் பின் தொடர்ந்து வந்ததுடன், ஒரு
கட்டத்தில் மறிக்கவும் முயற்சித்துள்ளனர். தனது காரை வளைத்து நெளித்து
அவர்களிடமிருந்து தப்பிக்க வார்னிகா முயற்சி செய்துள்ளார்; ஒரு இடத்தில்
வார்னிகாவின் காரின் பாதையில் தங்களது எஸ்.யூ.வி காரை நிறுத்திய அந்த
இரண்டு இளைஞர்களும், வார்னிகாவை அவரது காரில் இருந்து வலுக்கட்டாயமாக
இறக்கி கடத்தவும் முற்பட்டுள்ளனர்.
இதற்கிடையே வார்னிகா போலீசாருக்கும், தனது தந்தைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட ஒரு இடத்தில் கிட்டத்தட்ட தப்பிக்க முடியாத ஒரு கோணத்தில் வார்னிகாவின் கார் மாட்டிக் கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த ரவுடிகளில் ஒருவன் வார்னிகாவின் கார் கதவைத் திறக்க முயற்சித்துள்ளான் – சரியாக அந்த நேரத்தில் ரோந்து வாகனத்தில் வந்து சேர்ந்த போலீசார் வார்னிகாவைக் காப்பாற்றியதோடு குடிபோதையில் இருந்த பணக்கார ரவுடிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் விகாஷ் பார்லா என்பவன் ஹரியாணா மாநில பாரதிய ஜனதா தலைவர் சுபாஷ் பார்லாவின் சீமந்த புத்திரன். உடன் வந்த ஆஷிஷ் குமார் என்பவன் விகாஷின் நண்பன்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணும் ஓரளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவரது தந்தை மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதாலும் இந்த வழக்கிற்கு ஓரளவு ஊடக வெளிச்சம் கிடைத்ததோடு, குற்றவாளிகள் உடனடியாக கைதும் செய்யப்பட்டனர். எனினும், விகாஷ் கைது செய்யப்பட்டவுடன் காட்சிகள் உடனடியாக மாறத் துவங்கின.
தமது தலைவரின் மகன் கைது செய்யப்பட்டதை அறிந்த ஹரியாணா மாநில பாரதிய ஜனதா தலைகள் காவல் நிலையத்திலேயே முகாமிட்டனர். வார்னிகா அளித்த புகாரின் படி சட்டவிரோதமாக தடுத்து வைக்க முயற்சிப்பது (இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 341) மற்றும் கடத்தல் (பிரிவு 341) உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பிரிவுகளின் பதியப்படும் வழக்கின் கீழ் கைது செய்யப்படுகிறவர்களுக்கு உடனடியாக பிணை கிடைக்காது.
ஆனால், எளிதில் பிணை கிடைக்கும் பிரிவுகளான மோட்டார் வாகனச் சட்டம் 185 மற்றும் பெண்களைப் பின் தொடர்வதற்கு எதிரான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354D ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளி இரவு கைது செய்யப்ப்ட்ட விகாஷ் பார்லா, பல்வேறு ஓட்டைகளுடன் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் காரணமாக சனிக்கிழமையே பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டார். அது வரை பாரதிய ஜனதா தலைகள் காவல் நிலையத்திலேயே இருந்துள்ளனர்.
இதையடுத்து பாரதிய ஜனதா தரப்பில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை “நடத்தை கெட்டவராக” சித்தரிக்கும் முயற்சிகள் துவங்கின. பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ராம்வீர் பட்டி என்பவர் “அந்தப் பெண் ஏன் இரவு 12 மணிக்கு வெளியே வந்தார்?” எனக் கேட்டுள்ளார். பார்லா குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ வார்னிகா முன்பு வேறு ஒரு சந்தர்பத்தில் மதுக் கோப்பைகளோடு நிற்கும் போது எடுத்த புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டு அவர் ஒழுங்கீனமானவர் எனக் கொளுத்திப் போட்டனர்.
உச்சகட்டமாக களத்தில் இறங்கிய பாரதிய ஜனதாவின் சமூக வலைத்தளப் பிரிவினர், வார்னிகா வேறு ஆண்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அந்தப் படத்தில் இருக்கும் ஆண் தான் விகாஷ் பார்லா என பொய்யான செய்திகளைப் பரப்பத் துவங்கினர். ஹாரியாணாவை ஆளும் பாரதிய ஜனதா முதல்வர் எம்.எல் கட்டர் முன்பு ஒரு சமயத்தில் “பெண்களுக்கு சுதந்திரம் வேண்டுமானால், அவர்கள் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு தெருவில் நடமாட வேண்டியது தானே?” என்று கேட்டவர் தான் என்பதால், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பொறுக்கி விகாஷுக்கு ஆதரவாக களமாடியதில் எந்த வியப்புமில்லை.
பெண்களைப் பின் தொடர்ந்தவரையே தேசிய தலைவராக கொண்டுள்ள ஒரு கட்சியிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
ஆபாசக் குப்பைகளையே புராணங்களாக கொண்டிருக்கும் ஒரு மதத்தின் அரசியல் வடிவமே இந்துத்துவம். பல்வேறு ஆதீன பீடங்களையும், குரு பீடங்களையும் ஆசாராம், நித்தியானந்தா, ஜெயேந்திரன், பிரேமானந்தா போன்ற பாலியல் மிருகங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நிலையில். ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்துத்துவ கும்பலின் பல தலைவர்கள் மைணர் குஞ்சுகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அதிகாரம் கையில் இருக்கும் திமிரில் படுபாதக குற்றங்களைச் செய்தாலும் சட்டங்களின் சந்து பொந்துகளில் புகுந்து வெளியேறி விடலாம் என்கிற மிதப்பில் திரிந்து கொண்டிருக்கின்றனர்.
இந்துத்துவ அரசியல் தலித்துகளுக்கும், சிறுபான்மையினருக்கும், ஜனநாயக சக்திகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் மட்டுமல்ல – பெண்களுக்கே எதிரானவர்கள் என்பதை உணர்த்த துவங்கி விட்டனர்.
செய்தி ஆதாரம் :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக