Muthukumar Sankaran Tuticorin : கீழக்கரையும் காயலும் பின்னே கோரமண்டலமும்
1518 ஆம் ஆண்டில் நம் பகுதி மக்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்ளலாமா?
The Book of Duarte Barbosa Volume II
An account of the countries bordering on the Indian Ocean and there inhabitants written by draughtly Barbosa and completed about the year 1518 A.D.
என்கிற இந்த நூல் 1812 இல் போர்ச்சுகீசிய மொழியில் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1921 இல் வெளியிடப்பட்டது. கல்கத்தா இம்பீரியல் நூலகத்தில் இருந்த இந்த நூல் சிறிது சேதம் அடைந்த பிறகு டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளது . Indianculture வலைத்தளத்தில் பொதுப் பார்வையில் இருக்கிறது.
மூல நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர் பெயர்களையே நானும் குறிப்பிட்டுள்ளேன் புரிந்து கொள்ள வசதியாக அந்த ஊர்களை பற்றி மட்டும் அடைப்புக்குறிக்குள் தெரிவித்திருக்கிறேன். மற்றபடி அனைத்து வாசகங்களையும் அப்படியே நேரடியாக மொழிபெயர்த்து இருக்கிறேன்
சிலோன் தீவை விட்டுப் புறப்பட்டு நிலப்பரப்பை நோக்கி வரும் பொழுது குமரிமுனை கடந்தால் கீழக்கரை Quilcare என்ற பெயரில் கொல்லம் Coulam அரசருக்கு சொந்தமான ஒரு நிலப்பகுதி இருக்கிறது.