tamil.asianetnews.com - Raghupati R : காவல்துறையின் பேச்சை, காவலர்களே மதிப்பதில்லை என்பது பொதுமக்களுக்கு தெரிந்த விஷயம் தான். ஆனால், ரவுடிகளை போல, அடாவடி செய்து பணம் பறித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போக்குவரத்து காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கினால் 6 மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று காவல்துறை சில மாதங்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது link கர்ப்பிணி பெண்ணுடன் வந்த ஆட்டோ! 1500 லஞ்சம் கேட்ட டிராஃபிக் போலீஸ்!
சனி, 10 செப்டம்பர், 2022
கர்ப்பிணி பெண் வலியால் துடிக்க.. ஆட்டோவிடம் 1,500 லஞ்சம் கேட்ட சென்னை போலீஸ் - அடாவடியில் காவல்துறை.!
இயக்குநர் பாரதிராஜாவை நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!
நுரையீரல் தொற்று உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், குணமடைந்து அவர் வீடு திரும்பியுள்ளார்.
நல்லூர் கோயில் வழக்கு! தீர்ப்பு - முழுவிபரம் . part 5 - last
யாழ்ப்பாணம் பெரிய நீதிஸ்தலத்தில் நல்லூர் கந்தசாமி கோயிற் பரிபாலன முறையை பற்றி 2 ஆம் பிரிவு வியாச்சியத்திற்கு மேற்படி நீதிபதியவர்கள் பின்வருமாறு தீர்ப்பு செய்தனர்.
இத்தீர்ப்பில் கோயிலதிகாரியினுடைய கடமைகள் வரையறுக்கப் பட்டிருத்தலோடு மேற்படி அதிகாரிக்கு துணை செய்வதற்கு கல்வி அறிவும் ஒழுக்கமுற்ற இன்னுமொருவர் (கமிஷனர்) நியமிக்கப்படல் வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது
நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு - 1928 - part 4
மிஸ்டர்ர் ஹெயிலி : நல்லூர் கந்தசாமி கோயிலை பற்றி உமக்கு தெரியுமல்லவா? ஆம்
கோயிலுக்கும் உமது வீட்டிற்கும் எவ்வளவு தூரம் இருக்கும்? 100 யார் இருக்கும்
அங்கே எவ்வளவு காலம் இருந்திருக்கிறீர்? 27 வருட காலம்
நீர் கந்தசாமி கோயிலுக்குள் கிரமாமாய் போவதா? ஆம்
எவ்வளவு காலமாய் போய் வருகிறீர்? 32 வருட காலமாக
கிரமமாய் போய் வருகிறீர்? இங்கே இருக்கும் வரையில் தினமும் போய்வந்தேன்.
நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆம் ஆண்டு part 3
இந்த கோயிலுக்கும் அதற்கு ஏதும் தொடர்புண்டா? தம்பையா குருக்கள் முந்தி கந்தசாமி கோயில் பூசகருள் ஒருவராக இருந்தவர் . பூசையை விட்டபின் அந்த கோயிலை எதிரிக்கு கட்டினார்.
அவர்களுக்கு ஒரு தொடர்பும் இல்லையா ? இல்லை
அம்போடு வளவில் நீங்கள் குடியிருக்கும் காணி எத்தனை பரப்பு? இருபத்தியேழு இருபத்தியெட்டு பரப்பிருக்கும்
அதெப்படி உங்களுக்கு வந்தது? என் தாயாரின் சீதனம்
அம்போடு வளவு என்னும் பெயரோடு எத்தனை காணிகள் உண்டு? மூன்று , நாங்கள் இருபத்தொன்று . தம்பையா குருக்களுக்கு உரியதொன்று மேற்கில் உள்ளதொன்று.
நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆண்டு -- part 2
நீங்களும் உரிமை தத்துவத்திற் கோயிலாதனங்களை சேர்க்கவில்லையா? தரும சொத்தானபடியால் சேர்க்கவில்லை
கோயில் தரும பொருள் வகுப்பை சேர்ந்ததென்று முந்தி சொன்னீரா? இல்லை அது சொந்த பொருள் சிலருடைய வணக்கத்திற்காக கட்டப்பட்டது
நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு August - 6 - 1928 Monday = part 1 -- இந்து சாதனம் பத்திரிகை
மேற்படி கோயில் வழக்கு சென்ற ஜூலை மாதம் 6 திங்கள் கிழமையும் செவ்வாய் கிழமையும் புதன் கிழமையும் பெரிய நீதி தலத்தில் (டிஸ்த்திரிக் கோர்ட்டில்) நீதிபதி மிஸ்ட்ரர் J C W றொக் முன்னிலையில் நிகழ்ந்தது.
1 ஆம் பிரதிவாதியாக ஸ்ரீ ரகுநாத மாப்பாண முதலியார் கூறியவை. (முற்றோடர்)
ஊரவர்களுடைய உதவியிருந்தால் தமக்கு நன்மையாக இருக்கும் என்று உமது தகப்பனார் நினைத்திருக்க கூடுமா? இல்லை
டாக்குத்தர் கந்தையாவுக்கு மாறாகத்தான் ஊரவர்களுடைய உதவியை பெறவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் முயற்சி செய்யவில்லையா? அப்படிஇல்லை
கலைஞரின் முரசொலி 4041 கடிதங்கள் 54 தொகுதிகள் 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்
இந்நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரை முருகன் பெற்றுக்கொள்கிறார்.
அது பற்றிய விவரம் வருமாறு:-
1968 தொடங்கி 2018 வரையில் கலைஞர், கட்சி தொண்டர்களுக்கு எழுதிய 4041 கடிதங்களின் தொகுப்பு நூல்களை சீதை பதிப்பகத்தில் உரிமையாளர் கவுரா ராஜசேகரன் புதுப்பித்து உள்ளார்.
21 ஆயிரத்து 510 பக்கங்களில் கலைஞர் எழுதிய அனைத்து கடிதங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. 54 தொகுதிகளாக அவை வெளிவந்துள்ளன.
பாகிஸ்தான் Vs இலங்கை அதிரடி வெற்றி ...சூப்பர் 4 சுற்றில் கடைசி போட்டியில்
ஆசியக் கோப்பை தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான், இலங்கை அணிகள் ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டன. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் கடைசி போட்டியில் இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில் வெற்றி, தோல்வியை பெற்றால் எந்த பயனும் கிடையாது என்பதால், இப்போட்டியில் இரு தரப்பும் பதற்றம் இல்லாமல் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இலங்கையின் விக்டோரியா அணைக்கட்டு . எலிசபெத் மகாராணியின் அன்பளிப்பு
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி இலங்கையின் மிகப்பெரிய நீர்மின் நிலையம் – அதேபோல உயரமான அணை அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்க வளவில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் இன்று பறக்கவிடப்பட்டது. அத்துடன், வெள்ளைக்கொடியும் பறக்கவிடப்பட்டு அனுதாபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரத்துடன், இரண்டாம் எலிசபெத் மகாராணியை தொடர்புபடுத்தி பார்க்கையில், இந்த விக்டோரியா நீர்த்தேக்கத்தை மறந்துவிடமுடியாது. மகாராணி கருணை காட்டியதால்தான் , மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் உயிர் நாடியான – இலங்கைக்கு எல்லா விதத்திலும் முக்கியத்துவம் மிக்க அந்த வளம் இலங்கைக்கு கைகூடியது எனலாம்.
கவிஞர் கபிலன் மகள் தூரிகை தற்கொலை என்ன காரணம்? என்ன நடந்தது? - முதற்கட்ட தகவல் என்ன?
பாடலாசிரியர் கபிலனின் மகளும், ஆடை வடிவமைப்பாளருமான தூரிகை சற்று முன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட தூரிகையின் உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி சென்னை அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளி, 9 செப்டம்பர், 2022
பரந்தூர் விமான நிலையம்: கிராம மக்களை அச்சுறுத்துவது அரசுக்கு அவப் பெயரையே ஏற்படுத்தும்- மார்க்சிஸ்ட் எச்சரிக்கை
புதிய விமான நிலையங்கள், சாலைகள் விரிவாக்கம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது, மக்களை வசிப்பிடங்களிலிருந்து இடம்பெயரச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னால் அத்தகைய திட்டங்கள் அத்தியாவசியமானதுதானா? என அரசு ஒருமுறைக்கு பலமுறை ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வுகள் அடிப்படையில் திட்டங்கள் அவசியம் என முடிவு செய்தால், முழுமையான வெளிப்படைத் தன்மையோடு, திட்ட அறிக்கை, சுற்றுச் சூழல் மதிப்பீட்டு அறிக்கை உள்ளிட்டவைகளை சட்ட ரீதியில் பெற்று அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட மக்களிடம் கலந்துரையாடல் நடத்தி முழுமையான ஒப்புதலை பெற்ற பின்பே திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
டாடா - ஆப்பிள் ஒப்பந்தமா.. தமிழ்நாட்டில் உற்பத்திக்கு வாய்ப்பு..!!
tamil.goodreturns.in - Pugazharasi S : டெல்லி: டாடா நிறுவனம் சார்பில் ஆப்பிள் செல்போனுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, இந்தியாவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களில் ஆப்பிள் 14 மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்யவுள்ளதாக கூறப்படும் நிலையில், டாடாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிள் போனின் பெரும்பாலான உற்பத்தியானது சீனாவில் செய்யப்பட்டு வந்த நிலையில், சீனாவில் இருந்து தனது உற்பத்தியினை செய்யத் தொடங்கியுள்ளது.
ஆப்பிள் ஐபோன் உற்பத்தி
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 80% தோல்வி... யார் காரணம்..? - அன்புமணி கோரிக்கை
" மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது வருத்தமளிக்கிறது.
குறிப்பாக இத்தேர்வில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களில் 80 விழுக்காட்டினர் தோல்வியடைந்திருப்பது வேதனையளிக்கிறது.
மருத்துவப் படிப்பில் சேரும் அளவுக்கு இல்லாவிட்டாலும், நீட்டில் வெல்லும் அளவுக்கு கூட அரசு பள்ளி மாணவர்கள் தயார்படுத்தப்படாதது கண்டிக்கத்தக்கது.
2022-ஆம் ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 51.20% மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
இது தேசிய சராசரியான 56.30 விழுக்காட்டை விட 5.10% குறைவு ஆகும்.
வியாழன், 8 செப்டம்பர், 2022
யாழ்ப்பாணத்தில் இருந்த சிங்களக் குடும்பங்கள் என்னவாயின..?
தேசம். நெட் அருண்மொழி: யாழ்ப்பாணத்தில் இருந்த சிங்களக் குடும்பங்கள் என்னவாயின..? இனச்சுத்திகரிப்பை புலிகளே செய்தனர்.”- முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், \
ஓகஸ்ட் 31 ஆம் திகதியன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற ஒருவர் முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரையின் விகாராதிபதி சட்டவிரோத நிர்மாணத்தை மேற்கொள்கின்றார் என்று தெரிவித்து பொய்யான தகவலை நாடாளுமன்றத்துக்கு அறிவித்து, நாடாளுமன்றத்தையும் மக்களையும் தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளார்.
தொல்பொருள் அகழ்வுப் பணிகளை நிறுத்துவதற்கான தீய எண்ணத்துடனேயே அவர் அவ்வாறு கூறியுள்ளார்.
இங்கிலாந்து அரசி எலிசபெத் மகாராணி காலமானார்
Queen Elizabeth dies at age 96: UK Royal Family, Official Queen Elizabeth Dies: இங்கிலாந்து மகாராணி எலிசெபத் காலமானார்..! உலகத் தலைவர்கள் இரங்கல்...!
சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் உடலில் இந்த அறிகுறிகள் தோன்றும்
ஆரோக்கியமற்ற சிறுநீரகத்தின் பல எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன,
அவை நுட்பமானவையாகவோ அல்லது கடுமையானதாகவோ இருந்தாலும் புறக்கணிக்கப்படக்கூடாது. சிறுநீரக நோயின் அறிகுறிகளை அடையாளம் காண நம்மால் முடியும்.
சிறிய அறிகுறிகள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,
இதனால் எந்த வகையான நோயும் முன்னேற வாய்ப்பில்லை. சிறுநீரகங்கள் உடலின் இரத்தத்தை சுத்திகரிக்கின்றன,
திருப்பத்தூர் தலைமை ஆசிரியை கொலை உடல் முழுவதும் வெட்டு காயங்கள் 20 பவுன் நகை கொள்ளை
திருப்பத்தூர் கான்பாநகரில் வசித்து வந்த ரஞ்சிதம், தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். காலை 9 மணி ஆகியும், ரஞ்சிதம் பள்ளிக்கு வராததால், உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது, வீட்டின் முன்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால், வீட்டின் பின்பக்கம் வழியாக சென்று பார்த்தனர்.
அங்கு, ரஞ்சிதம் வலதுகை நரம்பு, குதிகால் நரம்புகள் அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
தமிழகத்தில் நீட் தேர்வு முடிவு... கடந்த ஆண்டை விட குறைவு
வெளியாகியுள்ள நீட் தேர்வு முடிவுகளை www.neet.nta.nic.in என்ற இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான முடிவின்படி, ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு எழுதிய 17.64 லட்சம் பேரில் ஒட்டுமொத்தமாக 9,93,069 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப் பிரிவில் 2,82,184 பேரும், ஓபிசி பிரிவில் 4,47,753 பேரும், எஸ்சி பிரிவில் 1,31,767 பேரும், எஸ்டி பிரிவில் 47,295 பெரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர், இ.டபிள்யூ.எஸ் பிரிவில் 84,070 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 2,717 பேரும் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2024 இல் தேர்தலில் 63% ஓட்டுக்களை காங்கிரஸ் திமுக கூட்டணிபெறும்! ஸ்டாலின்-ராகுல் அதிரடி திட்டம்! ஆர்எஸ் பாரதியின் பேட்டி
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உள்ள 63 சதவீத ஓட்டை ஒன்றாக திரட்ட தான் முதல்வர் ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் இணைந்துள்ளனர்'' என கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் குறித்து திமுகவின் ஆர்எஸ் பாரதி புள்ளிவிபரங்களோடு எடுத்து கூறியுள்ளார்.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை உயர்த்தவும், வரும் தேர்தல்களில் வெற்றி பெறவும் அக்கட்சி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
புதன், 7 செப்டம்பர், 2022
கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடை பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடை பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொள்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி. இந்த நடை பயணத்திற்காக ராகுல் காந்தி நேற்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் இன்று ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
பெங்களூரு வெள்ளம் - கோடீஸ்வரர்களின் வீடுகளையும் பதம் பார்த்த வெள்ளம்.. படகில் மீட்கப்பட்ட தொழிலதிபர்கள்!
பெங்களூரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பெங்களூர் நகரமே கிட்டத்தட்ட மூழ்கியது என்பதும் இதனால் பெங்களூர் நகர மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் சாதாரண பொதுமக்கள் மட்டுமின்றி பெங்களூரு நகரில் வாழும் கோடீஸ்வரர்களும் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடீஸ்வரர்களின் பங்களாக்களும் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்ததை அடுத்து அவர்கள் படகுகளில் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிளகாய் ! ஹார்ட் அட்டாக் வாராமல் இருக்கவும் , வந்தால் நிவர்த்திக்கும் இதுதான் கைகண்ட மருந்து
cholesterol and by extension heart disease. Cayenne could eliminate all these illnesses and that's why the medical establishment and big Pharma doesn't want people to know about it. In fact the 'medical fraternity will demonise this wonderful natural healing fruit' in their efforts to dissuade you from using it.
மிளகாய்க்கு காரத்தைக் கொடுக்கும் கேப்சைசின் (capsaicin) என்னும் ஒரு வேதியல் பொருளுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் உண்டு என்பது முந்தைய சில ஆய்வுகள்மூலம் தெரிந்த செய்தியே! ஆனால், கேப்செய்சின் குறித்த இதுவரையிலான ஆய்வுகளில், மிகவும் அதிக அளவிலான, குறுகிய கால கேப்செய்சின் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்த, ஆனால் சர்ச்சைக்குறிய முடிவுகளே எட்டப்பட்டது என்றும், சமீபத்திய இந்த ஆய்வின்மூலம், நீண்ட காலமாய் உண்ணப்படும் மிளகாய் கலந்த உணவில் இருக்கும் கேப்செய்சின் அளவுகளால், ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது
144 தொகுதிகளில் பா.ஜனதா பலவீனமாக உள்ளது! அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆலோசனை
தினத்தந்தி : 144 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்து மத்திய மந்திரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா பலவீனமாக உள்ள 144 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்து அவற்றின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட மத்திய மந்திரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தொடர்ந்து 2-வது தடவையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடக்கிறது. அதிலும் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் நாடு முழுவதும் தொகுதி நிலவரத்தை அலசியபோது 144 தொகுதிகளில் பா.ஜனதா பலவீனமாகவும், வெற்றி பெறுவது கடினமாகவும் இருப்பது கண்டறியப்பட்டது.
ராகுல் காந்தி நடைபயணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் - இன்று குமரியில்
நாகர்கோவில்: குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார். இந்த பயணத்தை கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
அமெரிக்கா, உக்ரைன் அதிபர்களுடன் இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் பேச்சு வார்த்தை!
இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உடன் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். வடக்கு அயர்லாந்தில் அமைதியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல! - சாத்தூர் சேகரனார்
சாத்தூர் சேகரனார் : சமஸ்கிருதம் உலகமொழிகளின் தாய் என்றும் இந்திய மொழிகளின் தாய் என்றும் சான்றுகள் இன்றி உளறி வந்தனர்.
1947க்கு முன் பிராமணப் பண்டிதர்கள் தம் பதவியாலும் பவிசாலும் மாறி மாறிக் கூறி வந்தாலும் எப்படியோ இந்தப் பொய்களை காத்து வந்தனர்.
1947 இந்தியாவிற்கு மட்டும் விடுதலை வரவில்லை. இந்திய மொழிகளுக்கும் விடுதலை கிடைத்தது.
ஒவ்வொரு மொழியின் மொழி அறிஞர்களும் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல், தத்தம் மொழியை முழுமையாக ஆராய முடிந்தது.
இதன் பலனாக பல அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் வெளிவரத் தொடங்கின.
(அ) சமஸ்கிருதம் வெறும் பாவை மொழி
(ஆ) இந்தியாவின் உள்ளும் சரி இந்தியாவின் வெளியிலும் சரி ஒருநாள் ஒருபொழுது கூட பேசப்படாத மொழி
செவ்வாய், 6 செப்டம்பர், 2022
ராகுல் காந்தி - 12 மாநிலங்கள்.. 150 நாள் பாதயாத்திரை.. 60 கேரவன்கள்.. தேச ஒற்றுமை பயண விவரங்கள்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'தேச ஒற்றுமை பயணம்' பாதயாத்திரையை 150 நாட்கள் 12 மாநிலங்களில் மேற்கொள்ள உள்ளார். இதற்கான தொடக்க விழா வரும் 7-ம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் 150 நாள் பாதயாத்திரை குறித்த அட்டவணை வெளிவந்துள்ளது. அதன்படி 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கவிருக்கும் பாதயாத்திரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை அவரிடம் வழங்கி தொடங்கி வைக்கிறார்.
பில்லி சூனியம் வைத்ததாக கூறி 3 பெண்களை அடித்து கொன்ற ஜார்கண்ட் கிராம மக்கள்
மாலைமலர் : ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில், பில்லி சூனியம் வைத்ததாக 3 பெண்களை கிராம மக்கள் சரமாரியாக அடித்து கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை சோனஹபுத் காவல் சரகத்திற்கு உட்பட்ட ரானாடி கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
இறந்துபோன ஒரு பெண்ணிண் கணவர், மகன் உள்பட 13 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு,
எட்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக எஸ்எஸ்பி கௌஷல் கிஷோர் தெரிவித்தார்.
இந்த 3 பெண்களும் மாந்த்ரீகம் , பில்லி சூனியம் செய்து மக்களை அச்சுறுத்தி வந்ததாகவும்,
அவர்கள் வைத்த சூனியத்தால் கிராமத்தைச் சேர்ந்த சிலரை பாம்பு கடித்ததாகவும் கூறி, கிராம மக்கள் அவர்களை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அருகில் உள்ள மலைப் பகுதியில் உடல்களை தூக்கி வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.
பெங்களூரு வெள்ளம் டிராக்டர்களில் அலுவலகம் செல்லும் பெங்களூரு ஐடி ஊழியர்கள்
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக பெங்களூரு, ரெயின்போ டிரைவ் லேஅவுட், ஷார்ஜா நகர் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு முக்கிய சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஐந்திற்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி நீர் சாலைகளில் புகுவதால் 2 அடிக்கும் அதிகமான நீர் சாலைகளில் காணப்படுகிறது.
பிரிட்டன் பிரதமர் பதவி போட்டியில் ரிஷி சுனக் தோல்வி அடைந்தது ஏன்?
hindutamil.in பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்குக்கு பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார்.
ரிஷி சுனக் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்தார்.
கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள் வாக்களித்த 5 சுற்று தேர்தலில் ரிஷிக்கு அதிக வாக்குகள் கிடைத்தன.
ஆனால், இறுதிகட்ட தேர்தலில் பங்கேற்ற கட்சி உறுப்பினர்கள், லிஸ் ட்ரஸுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன்காரணமாக ரிஷி சுனக் தோல்வியை தழுவியுள்ளார்.
நானூறு ஆண்டுகளுக்கு தென்னிந்தியாவில் இருந்த இலங்கை சென்றவர்கள்
ராதா மனோகர் : இலங்கையில் உள்ள சிங்களவர்களை பெரும்பான்மையோர் தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள். சைவ வைணவர்களின் கொடுமைக்கு அஞ்சி இலங்கைக்கு குடிபெயர்ந்த திராவிடர்கள் தங்கள் பௌத்த மதத்தை காப்பதற்காக சிங்கள மொழியை பயன்படுத்தினார்கள் காலப்போக்கில் அது அவர்களின் தாய் மொழியானது
இது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாக இருந்தாலும் பலரும் பொதுவெளியில் ஒப்புக்கொள்வதில்லை
தமிழ் தீவிரவாதிகளின் கடும்போக்கே இதற்கு முக்கிய காரணம் என்று நான் கருதுகிறேன்
எப்போதும் பிற சமூகங்களை இழிவாக கருதும் ஒரு இனவாத போக்கு தமிழர்கள் மத்தியில் பரவியது ஒரு காரணமாக இருக்கலாம்
:" நானூறு ஆண்டுகளுக்கு முன்பு எனதுமுன்னோர்கள் இந்தியாவில் இருந்த வந்த தமிழர்கள்தான் . நான் இப்போது சிங்களவன் . இதில் என்ன தவறு இருக்கிறது?"
திங்கள், 5 செப்டம்பர், 2022
"பணத்தை கத்தையாக கையில் தொட்டுப்பாருங்கள்"-Google pay, Phonepe வெண்டாம்..இணையத்தில் வைரலாகும் உணவக பேனர்!
கலைஞர் செய்திகள் : Google pay, Phonepe பயன்பாடு குறித்து மதுரை உணவகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
"பணத்தை கத்தையாக கையில் தொட்டுப்பாருங்கள்"-Google pay, Phonepe வெண்டாம்..இணையத்தில் வைரலாகும் உணவக பேனர்!
தற்போது டிஜிட்டல் யுகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்த யுகத்தில் பணம் கூட டிஜிட்டல் வடிவில் மாற்றம் பெற்று நம் கைகளில் Google pay, Phonepe, amazon pay, என்று வளம் வருகிறது. இது போன்ற டிஜிட்டல் சாதனங்களின் வருகையால் பல நன்மைகள் இருந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கவே செய்கிறது.
இலங்கை தெலுங்கு மக்களின் அவல நிலை -"மக்களை கண்டால் ஓடி ஒளிவோம், பிச்சை எடுத்து வாழ்கிறோம்"
ரஞ்சன் அருண்பிரசாத் - பிபிசி தமிழுக்காக :
விளிம்பு நிலையில் வாழ்க்கை: இலங்கை வாழ் தெலுங்கு மக்கள்
பல்வேறு இனங்கள் வாழும் நாடாக இலங்கை விளங்கும் நிலையில், சில இனத்தைச் சேர்ந்தவர்கள் இன்றும் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளமை, வெளி உலகத்திற்கு வரவில்லை.
குறிப்பாக இந்தியாவிலிருந்து வந்த பல இனத்தவர்கள், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இன்றும் வாழ்கின்றனர்.
தமது கலை, கலாசாரம், பண்பாடு, மொழி உள்ளிட்ட தமது அடையாளங்களை இன்றும் மறக்காமல், மாற்றிக் கொள்ளாமலும் அதே விதத்தில் அவர்கள் வாழ்கின்றனர்.
அப்படி இலங்கையில் வாழும் வெளி உலகம் அதிகம் அறியாத தெலுங்கு இன மக்களைப் பற்றி பிபிசி தமிழுக்காக களத்தில் சென்று நாம் ஆராய்ந்தோம்.
இது கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம்.
அம்பாறை மாவட்டத்தின் ஆழையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அளிக்கம்பை பகுதியில் வாழ்ந்து வரும் இவர்கள், தமது தாய்மொழியான தெலுங்கு மொழியையே இன்றும் பேசுகின்றனர்.
பிரிட்டனின் புதிய பிரதமராக திருமதி லிஸ் ட்ரஸ் தெரிவானார் . இந்திய வம்சாவளி ரிஷி சுனக் தோல்வி
லண்டன், செப்டம்பர் 5 (ராய்ட்டர்ஸ்) - வாழ்க்கைச் செலவு நெருக்கடி, தொழில்துறை அமைதியின்மை மற்றும் மந்தநிலையை நாடு எதிர்கொள்ளும் நேரத்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கான தலைமைப் போட்டியில் வெற்றி பெற்று,
பிரிட்டனின் அடுத்த பிரதமராக லிஸ் ட்ரஸ் திங்கள்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கிற்கும் லிஸ் ட்ரஸ் இருக்கும் இடையே பல வாரங்களாக நடந்த கடுமையான போட்டி பிரசாரங்கள் இறுதியில் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் வாக்கெடுப்பில் ட்ரஸ் 60,399 க்கு 81,326 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற லிஸ் ட்ரஸ் கூறுகையில் : "அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் வழங்குவோம் என்பதை நாங்கள் காட்ட வேண்டும். வரிகளைக் குறைப்பதற்கும் நமது பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் நான் ஒரு தைரியமான திட்டத்தை வழங்குவேன்" என்றார் .
அமைச்சர் சிவசங்கர் : தமிழகத்தில்தான் அனைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து சேவை இருக்கிறது. இதன் மூலம் ஒரு மெளன புரட்சி நடந்துள்ளது.
இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:
"தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் என்றாலே கலைஞர் கருணாநிதி நினைவுக்கு வருவார். அதற்கு காரணம் போக்குவரத்து கழகத்தை அரசுடமையாக்கியவர் அவர் தான்.
அதனால் தான் தமிழ்நாடு சமூக நீதி அடிப்படையில் சமச்சீர் வளர்ச்சி அடைந்துள்ளது.
மற்ற மாநிலங்களில் நகர்புற பகுதிகளில் மட்டும் தான் அரசு பேருந்து சேவை இருக்கிறது. கிராமப்புறங்களில் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து சேவை இருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் மெளன புரட்சி நடந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த .டாட்டா நிறுவன முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி.. பின் சீட்டில் இருந்தும் பெல்ட் அணியாமயே ....?
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் நேற்று பலியானார்.
இந்திய பிஸ்னஸ் உலகையே இந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
டாடா குடும்பத்தை சாராத சைரஸ் மிஸ்திரி அந்த நிறுவனத்தில் வளர்ந்து அதன் தலைவராக பரிணமித்து இந்தியாவில் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்ந்தார்.
கனடாவில் கத்திக்குத்து தாக்குதல் 10 பேர் உயிரிழப்பு 15 பேர் படுகாயம்
கனடா நாட்டின் சஸ்கட்சாவான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று தொடர்ச்சியாக அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.
அம்மாகாணத்தின் ரஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர் நேஷன், வெல்டன், சஸ்கடன் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
ஞாயிறு, 4 செப்டம்பர், 2022
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வழக்கறிஞர் துரைசாமி எழுப்பும் 19 கேள்விகள்!
கரு. அண்ணாமலை : *தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன* *தர்மத்தின் சிறப்புகளை விவரித்து, அதை பின்பற்றுவதே சிறப்பு என வலியுறுத்தி* *வருகிறார்.
இந்நிலையில் சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட* *விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி என்பவர் ஆகஸ்ட் 19ஆம் தேதி மனு* *அனுப்பியுள்ளார்.*
அதில், சனாதன தர்மம் குறித்து அதிகம் பேசும் நபராக இருப்பதால், அதுகுறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க சரியான நபர் என குறிப்பிட்டு, 19 கேள்விகளை மனுவில் முன்வைத்துள்ளார். அதன்படி,
(1) சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன?
(2) சனாதன கொள்கைகளுக்கான உரைகள் ஏதும் உள்ளதா அல்லது செவி வழி தகவல் மட்டும் தானா?
மாணவன் நன்றாகப் படித்ததால் ஆத்திரம்: குளிர்பானத்தில் விஷம் கொடுத்த சக மாணவியின் தாய்! Se
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடடத்தில் ராஜேந்திரன், மாலதி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுடைய மகன் பால மணிகண்டன். காரைக்கால் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் வழக்கம் போல் நேற்று (செப்டம்பர் 3) பள்ளிக்குச் சென்றுள்ளார்.
காலை 11:00 மணி அளவில் ஒரு பெண்மணி பள்ளி வாசலில் வந்து பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியரிடம், தான் பால மணிகண்டன் தாய் என்று தன்னை அறிமுகப்படுத்தி எட்டாம் வகுப்பு படிக்கும் பால மணிகண்டனிடம் குளிர்பானத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார்.
விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை சென்னை துறைமுகத்தில் நிறுத்திவைக்க முடிவு
பிரதமர் மோடி நேற்று முன்தினம் கொச்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் போர் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த கப்பல் 18 அடுக்குகளுடன் 262 மீட்டர் நீளத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டதாகும். இந்த கப்பலில் 34 போர் விமானங்களை நிறுத்தி வைப்பதற்கு வசதி உள்ளது. அந்த போர் விமானங்கள் ஏறி, இறங்குவதற்காக 2 கால்பந்து மைதானங்கள் அளவுக்கு பிரமாண்டமான ஓடுபாதையும் உள்ளது. விக்ராந்த் போர் கப்பல் ஏற்கனவே கடலில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.
கனடா தமிழக பெண் சென்னையில் வங்கதேச பெண்ணை திருமணம் செய்தார்.!
tamil.behindwoods.com - K Sivasankar : கனடாவில் வசிக்கும் தமிழ் பெண் ஒருவர், வங்கதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரை குடும்பத்தினரின் சம்மதத்துடன் சென்னையில் திருமணம் செய்து கொண்ட நிலையில்,
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுபிக்ஷா சுப்பிரமணி என்பவர்,
தனது குடும்பத்தினருடன் தற்போது கனடாவில் செட்டில் ஆகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
திரைப்பட தயாரிப்பாளர் பாஸ்கரன் கொலை ராம்கி நடித்த சாம்ராட்' மற்றும் 'ஒயிட்' ஆகிய படங்களை தயாரித்தவர்
தினத்தந்தி : சினிமா தயாரிப்பாளர் கொடூர கொலை வழக்கில் ஒருவர் கைது
சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் பாஸ்கரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விருகம்பாக்கம், சின்மயா நகரில் கூவம் ஆற்றை ஒட்டிய பகுதியில் கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடந்தது. நேற்று காலை அந்த பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதானியின் கடன் 2.6 லட்சம் கோடி ரூபாய்! திவால் அறிவித்து விட்டு ஓடலாம்?
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் சுமார் 141 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ள கௌதம் அதானி-யின் அதானி குழுமம் கடனில் மிதக்கிறது.
உலகப் பணக்காரர்கள் மத்தியில் சில வருடங்களுக்கு முன்பு தான் டாப் 10 பட்டியலில் சேர்ந்த கௌதம் அதானி வேகமாக முன்னேறி உலகின் 3வது பெரும் பணக்காரர் ஆக உயர்ந்துள்ளார். தற்போது இவருக்கு மேல் 151 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஜெப் பெசோஸ் மற்றும் 241 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.
சிலிண்டரில் மோடி படம் - நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி
அப்போது மத்திய அரசு அதிக மானியம் கொடுக்கும்போது, ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இல்லாதது ஏன் என மாவட்ட ஆட்சியரை கடிந்து கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியினர் கியாஸ் சிலிண்டரில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியுள்ளனர். அதில் கியாஸ் விலையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.