சனி, 17 பிப்ரவரி, 2024

கலைக்கப்படும் மம்தாவின் அரசு?

 nakkheeran.in : கலைக்கப்படும் மம்தாவின் அரசு?
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிர்ஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷாஜகான் ஷேக் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த சம்பவங்களை எல்லாம் வெளியே கூறினால் கடுமையான பின் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளார் ஷாஜகான் ஷேக்.
  இந்த நிலையில் தான் கடந்த மாதம் ரேஷன் பொருட்கள் ஊழல் தொடர்பாக ஷாஜகான் ஷேக் வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகளை ஷாஜகான் ஷேக் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் தப்பிய ஷாஜகான் ஷேக் தலைமறைவாக உள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்!

ின்னம்பலம் - Kavi :  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியின் 3 வருடப் பதவிக்காலம் முடிவடைந்து விட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக புதிய தலைவரை நியமிப்பதற்கு காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வந்தது.
இந்நிலையில் புதிய காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

யாழ். சிறையில் இந்திய மீனவர்களை சந்தித்தார் அமைச்சர் ஜீவன் தொண்டமான்!

May be an image of 7 people and text that says 'குருනு NEWS UPDATE குருனி யாழ். சிறையில் இந்திய மீனவர்களை சந்தித்தார் ஜீவன் www.kuruvi.lk'

மலையக குருவி : மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள 43 தமிழக மீனவர்களை அமைச்சர் நேரில் சென்று சந்தித்தார். அவர்களிடம் சுகம் விசாரித்ததுடன், அவர்களுக்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் கூறியவை வருமாறு,
“ யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 43 தமிழக மீனவர்களை சந்தித்தேன். அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது பற்றி எடுத்து கூறினேன். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர். 43 மீனவர்களில் இருவர் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர்.

Gone With The Wind என்னைவிட...ஏன் உன்னையும் விட நீ நேசித்தது இந்த மண்ணைத்தான் !

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWhygOimkPpdnK6dPbfZqhOs5nLvjhYSP_HO40BIX6q1588HTTOSLr3Igi6YuZOtCDs3IvAr70WNsVEf5_uA72M1ECqdqYq5vCa1i292aJEulc-H1h999sXBJ1jiOwZZVgmubXffoGPvk/s1600/index.jpg

ராதா மனோகர்  Gone With The Wind  கோன் வித் த வின்ட் ...இது  1939 வெளியான ஹாலிவூட் திரைக்காவியம், இதுவரை இதன் வசூல் சாதனையை வேறு ஒரு திரைப்படமும் முறியடிக்கவில்லை. அதாவது   $3,440,000,000  டொலர்கள் வசூலித்தது இன்னும் இதன் வியாபாரம் டிவிக்களிலும் டிவிடிக்களாலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
மார்கிரட் மிச்சல் என்ற பெண்மணியால் எழுதப்பட்ட ஒரே ஒரு நாவல் இதுதான் இது புலிட்சர் பரிசு பெற்றது . இது மிகப்பெரிய படமாகும் இதன் மூலப்பிரதியான நாவலும் மிகவும் பெரியதாகும், இதன் கதையை சுருக்கமாக காட்டுவது கூட மிகவும் கடினமாகும்,  இதைபடமாக்க MGM Panavision போன்ற பெரிய நிறுவனங்கள் தயங்கி கொண்டிருந்த வெளியில்  டேவிட் சொல்செனிக் என்ற ஒரு தயாரிப்பாளர் முன்வந்தார்.

மன்னார் 10 வயது சிறுமி வன்புணர்வு படுகொலை – வௌியான அதிர்ச்சித் தகவல்!

Ada derana :   மன்னார் – தலை மன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு காணாமல் போன நிலையில் இன்று (16) அதிகாலை குறித்த பகுதியில் உள்ள தென்னந் தோட்டம் ஒன்றின் பின் பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிறுமியின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் தலைமன்னார் கிராமம் பகுதியில் தங்கியிருந்து தோட்டம் ஒன்றை பராமரிக்கும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த சிறுமி உள்ளடங்களாக சிறுமியின் சகோதரங்கள் 4 பேர் தலைமன்னார் கிராமத்தில் உள்ள அம்மம்மாவின் வீட்டில் வசித்து வருகின்றனர்.

ரஷ்யா: புதினை எதிர்த்த எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸே நவால்னி சிறையில் மரணம்

BBC : ரஸ்ய எதிர்கட்சி தலைவரும் விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்துவந்தவருமான அலெக்சே நவல்னி சிறையில் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்ட்டிக்கில் உள்ள சிறைச்சாலையில் அவர் உயிரிழந்துள்ளார் என ரஸ்ய சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளில் ரஷ்யாவின் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்ட அலெக்ஸி நவல்னி, ஆர்க்டிக் வட்டத்திலுள்ள சிறையில் இறந்துவிட்டதாக, சிறைத்துறை செய்தியை மேற்கோள் காட்டி, ரஷ்ய செய்தி முகமைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
அதிபர் விளாதிமிர் புதினின் மிகக் கடுமையான விமர்சகராகப் பார்க்கப்பட்டவர் நவல்னி. நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்மீது போடப்பட்ட வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாகப் பரவலாகக் கருதப்பட்டது.

துரை வைகோ : நாங்க கேட்ட சீட் இது.. கொடுக்காவிட்டாலும் திமுகவுடன் தான் கூட்டணி!

 tamil.oneindia.com  -Vignesh Selvaraj :  கோவை: லோக்சபா தேர்தலில், கேட்ட சீட்டை கொடுக்காவிட்டாலும் திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வர மாட்டோம் என மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது. ஈரோடு தொகுதியில் மதிமுகவின் கணேசமூர்த்தி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி பதவியை வழங்கியது திமுக. இந்நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது மதிமுக. எனினும், இன்னும் தொகுதி உடன்பாடு இறுதியடைவில்லை.
MDMK alliance will continue with dmk even if we cannot get we demanded seat: says Durai vaiko

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

தாசில்தாரை தாக்கியதாக வழக்கு: மு.க.அழகிரி விடுதலை!

மின்னம்பலம் -Selvam :  தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கில் அவரை விடுதலை செய்து மதுரை ஜே.எம் 1 நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 16) தீர்ப்பளித்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயில் பகுதியில் கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் மு.க.அழகிரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது தேர்தலில் ஓட்டு வாங்க அழகிரி பணப் பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.

கமல் ஹாசன் தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதியில் நிக்கிறார்! . தென் சென்னை கோவை ராமநாதபுரம்?

லைமலர் : சென்னை: தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துள்ளனர். தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் கூட்டணி கட்சிகள் கொடுத்துள்ளன.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை.

விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகைக் குண்டுவீச்சு - பஞ்சாப், ஹரியாணா எல்லையில் என்ன நடக்கிறது?

 BBC - தமிழ் : மோதி அரசு vs விவசாயிகள்: 2வது நாளாக கண்ணீர்ப் புகைக் குண்டுவீச்சு - விவசாயிகள் தற்காப்புக்கு என்ன செய்கிறார்கள்?
டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் ஹரியாணா - பஞ்சாப் மாநில எல்லையில் ஷாம்பு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து முன்னேறக் கூடாது என்பதற்காக இரண்டாவது நாளாக இன்று கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. தடுப்புகளை மீறி ஹரியாணா எல்லையை கடக்க விவசாயிகள் முயன்று வருகின்றனர்.
காலை 11 மணி முதல் விட்டுவிட்டு கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. கண்ணீர் புகைக் குண்டுகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஈரமான சாக்குப்பைகளை கைகளில் வைத்திருக்கின்றனர் விவசாயிகள்.

இலங்கை மலையக மக்களும் தஞ்சாவூர் நடேச அய்யரும்

May be an image of text that says 'சபக்தன் சய்யர் நடே -சாரல்நாடன்-'
Badulla Senathiraja  :  இந்திய தமிழர்களுக்கு அல்லது மலையக மக்களுக்கு முதன் முதலாக  "சந்தா " அறவிடுவதை அறிமுகப்படுத்திய நடேச ஐய்யர்....
நடேச ஐய்யர் இலங்கைக்கு தான் தஞ்சையில் நடத்திவந்த வர்த்தக மித்திரன் பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பதற்காக  1919 ம் ஆண்டு வந்ததாக கூறப்படுவதும் கணபதிப்பிள்ளை அவர்கள் தனது நூலில் 1917 என்றும்  சாரல்நடான்
1919 களில் எனவும் குமாரி ஜெயவர்த்தனா  1915 என்றும் ( பக்கம் 337) ம் பெட்டா பொலிஸ் தகவல் படி. சந்தா சேர்ப்பதற்காக நடேச அய்யர் 1915 ம் ஆண்டில் இலங்கை வந்ததாக (CNA police Report 26 -1922 - file number 14196/25)  இலங்கை பொலிஸ் தெரிவித்தது.
"மலையக நிர்மாணப் சிற்பி கோ. நடேசய்யர் " என்ற நூலில் சாரல் நாடன் அவர்கள் பக்கம் 10 ல் " தனது வர்த்தக மித்திரன் பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பதற்காக நடேசய்யர்  இலங்கை தீவிற்கு 1919 ம் ஆண்டு வருகை தந்தார்" என  எழுதுகிறார்.

வியாழன், 15 பிப்ரவரி, 2024

பேருந்து நிலையத்தில் உக்காந்து சாப்பிடறதுக்கான ஹோட்டல் இருக்கனுமா?

May be an image of 8 people

Prasath Priyan :  Then: பேருந்து நிலையத்தில் உக்காந்து சாப்பிடறதுக்கான ஹோட்டல் இருக்கனுமா?
ஏன் ப்ளாட்பார்ம்ல நின்னு சாப்பிடக்கூடாதா?
Now: எதிர்காலத்தில் அப்படி உக்காந்து சாப்பிட மாதிரியான ஹோட்டல்கள் வரும்.
தேவையில்லைங்கிறது ஏன் எதிர்காலத்துல வரனுமாம்?
ஒரே குழப்பமா இருக்குங்க.
கீழே உள்ள படங்கள் மதுரை மாட்டுத்தவாணியில் எடுக்கப்பட்டவை.
எந்த பஸ் ஸ்டாண்ட்டில் அப்படி வசதி இருக்குனு கேட்டவர்களுக்காக.
பெரும்பாலாண பேருந்து நிலையங்கள் , ரோட்டுக்கு அருகில்தான் இருக்கு.
அதனால காலப்போக்கில் அதனைச்சுற்றி ஹோட்டல்கள் வந்திடும்.
பக்கத்துலையே இருக்கிறதால easy யா access பண்ணிக்கலாம்.
ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துல mofussil buses நிக்கிற இடத்துக்கும் ரோட்டுக்கும் ரொம்ப தூரம்.
அதனாலதான் பேருந்து நிலையத்துக்குள்ளே உக்காந்து சாப்பிட மாதிரியான ஹோட்டல் இருந்தா நல்லா இருக்குமேனு.
ஒரு வேளை  இந்த குஷன் வைச்ச ஹோட்டல்களைதான்  கேட்டுகிறானேனு நினைச்சிட்டாங்களோனு தெரியலை.
யாரும் சாப்பிடறதுக்காக பஸ் ஸ்டாண்ட்க்கு போறதில்லை.

தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து.. தேர்தல் நிதியை திருப்பியளிக்க அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

dinakaran.com - Neethimaan :  தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து.. தேர்தல் நிதியை திருப்பியளிக்க அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தேர்தல் பத்திரங்கள் மூலம் முறைகேடு நடைபெறுவதாக 4 எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் அதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், ஐ.டி. சட்டத்தில் மேற்கொண்ட திருத்தங்கள் ரத்து செய்யப்படுகிறது.
மோடி அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது. தேர்தல் பத்திரங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் பத்திர நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது.

இலங்கையில் காதலர் தினத்தில் இரண்டு மில்லியன் ரோஜாக்கள் விற்பனை!

 தமிழ் மிரர் : இலங்கையில் காதலர் தினத்தில் இரண்டு மில்லியன் ரோஜாக்கள் விற்பனை!
காதலர் தினமான நேற்று (14ம் திகதி) இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக ரோஜாக்கள் விற்பனை செய்யப்பட்டதாக மலர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டை விட (2023) இந்த ஆண்டு ரோஜாக்களின் விற்பனை 100 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
நேற்றையதினம் பூ விற்பனை நிலையங்களில் சிவப்பு ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை வாங்குவதற்கு அதிகமானோர் வருகை தந்ததாக மலர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பூக்கடைகளில் ஒரு ரோஜா ரூ.300 முதல் ரூ.1,000 வரை விற்கப்பட்டது. மேலும், ஒரு கொத்து ரோஜா 3,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டன .

அதிமுகவில் கவுதமி.. ஜெயலலிதாவுக்கும் இவருக்கும் ரொம்ப நெருக்கமாம்!


  tamil.oneindia.com - Vignesh Selvaraj  :  சென்னை: பாஜகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகிய நடிகை கவுதமி, இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.
 அதிமுகவுக்கும் கவுதமிக்கும் பல்வேறு தொடர்புகள் உள்ளன. கௌதமியின் திருமணத்தை நடத்தி வைத்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மரணம் குறித்து முதன் முதலில் சந்தேகம் கிளப்பியவர் கௌதமி.
ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை கௌதமி.
1988ஆம் ஆண்டு ரஜினிகாந்த்தின் குருசிஷ்யன் படத்தின் மூலம் கௌதமி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கமல்ஹாசனுடன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி பாஜகவுக்கு போகிறார் - காரணம் என்ன?

மின்னம்பலம் - christopher  : தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் விரைவில் பாஜகவில் சேருவதற்கான வேலைகளில் பாஜக தலைவர் அண்ணாமலை தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ வாகவும், சட்டமன்ற கொறடாவாகவும் இருக்கும் விஜயதரணி தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்எல்ஏ வாக இருந்து வருகிறார்.
இவரது தாத்தா, அப்பா அம்மா ஆகியோர் பாரம்பரியமாக இந்திய தேசிய காங்கிரஸ் வழியில் வந்தவர்கள், இவரது தாயார் பகவதி தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.
இப்படி பாரம்பரியமாக காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்த விஜயதரணி எம்.எல்.ஏ, வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி, தமிழகம் வரும் இந்திய பிரதமர் மோடி தலைமையில் பாஜகவில் இணையபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதன், 14 பிப்ரவரி, 2024

‘திணறும்’ டெல்லி! - மீண்டும் விவசாயிகள் போராட்டம்.. என்னதான் நடக்கிறது?

hindutamil.in :  விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க, எல்லையில் தடுப்புகள் போடப்படும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதையும் மீறி நுழைபவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்துகிறது. என்ன நடக்கிறது டெல்லியில்..?
கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் வேளாண் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டத்தை நடத்தினர். அப்போதே குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

கஜகஸ்தானில் (முஸ்லிம் நாடு) ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது ஏன்?

BBC News தமிழ் - , ஐசிம்பத் தோகோயேவா : பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடை செய்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் ஒன்று கஜகஸ்தான். 2016இல் விதிக்கப்பட்ட தடை குறித்து அங்கு இன்னும் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.
ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட சில பெற்றோர்கள் இன்னமும் தங்கள் குழந்தைகளின் கல்விக்கான அரசமைப்பு உரிமையைப் பாதுகாக்க முயல்கின்றனர்.
இந்த விவாதம் கஜகஸ்தானில் அடையாளத்திற்கான தேடலை பிரதிபலிக்கிறது. அங்த நாட்டின் தலைமை, இஸ்லாத்தின் மீது அர்ப்பணிப்பைக் காட்டும் அதேவேளையில், சோவியத் யூனியனில் இருந்து வந்த மதத்தின் மீதான கட்டுப்பாட்டைப் பலவீனப்படுத்த இன்னும் தயாராக இல்லை.

ஜெர்மனி-ஐரோப்பிய யூனியனில் வெளியேற அழுத்தம்!

 tamil.goodreturns.in - Prasanna Venkatesh :   ஐரோப்பிய யூனியனில் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி நாட்டின் வலதுசாரிக் கட்சியான AfD என்னும் ஜெர்மனிக்கான மாற்றுக் கட்சி, இங்கிலாந்தைப் போன்று ஐரோப்பிய யூனியனிலிருந்து ஜெர்மனியும் வெளியேற வேண்டும் என்று முன்மொழிந்தது.
 AfD-ன் இந்தக் கருத்து ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியனில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் தனியாகப் பிரிந்ததில் இருந்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் AfD என்னும் ஜெர்மனிக்கான மாற்றுக் கட்சி-யின் கருத்து அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் தீப்பொறியைக் கிளப்பியுள்ளது.

சோனியா காந்தி ‛‛தேர்தல் அரசியலில் ஓய்வு''.. ராஜ்யசபா எம்பி - ராஜஸ்தானில் இன்று மனுத்தாக்கல்

tamil.oneindia.com  - Nantha Kumar R  :  டெல்லி: சோனியா காந்தி தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று ராஜ்யசபா எம்பியாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் தான் தற்போது அது உறுதியாகி உள்ளது. அதன்படி இன்று சோனியா காந்தி ராஜ்யசபா எம்பி பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 25 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற பணிகளை தொடங்கி விட்டன.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

வெற்றி துரைசாமியின் உடல்! இன்று மாலை சென்னை கண்ணம்மாபேட்டையில் நல்லடக்கம்

tamil.oneindia.com  -  Vishnupriya R :  சென்னை: இமாச்சல் பிரதேசத்தில் இறந்த வெற்றி துரைசாமியின் உடல் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. அங்கிருந்து தாம்பரத்தை அடுத்த ராஜ் கீழ்ப்பாக்கத்தில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
இமாச்சல பிரதேசத்தில் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் சட்லஜ் நதியில் கவிழ்ந்தது. இதையடுத்து அவரை 8 நாட்களாக ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், போலீஸார், மீட்பு படையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் வெற்றியின் உடலை ஸ்கூபா டைவ் வீரர்கள் மீட்டனர். இத்தனை நாளாக வெற்றி உயிருடன் வருவார் என காத்திருந்த குடும்பத்தினருக்கு பேரிடியாக வந்தது இந்த செய்தி!

1974 - 2024 -தமன்னா ஹரிஹரன் நிகழ்ச்சியும் 4 வது உலக தமிழாராய்ச்சி மாநாடும்


ராதா மனோகர்:  1974 இல் யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாடு நடந்து சரியாக ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டது!
தற்போது அதே யாழ்ப்பாணத்தில் அதற்கு இணையான ஒரு  பெரிய விபத்து நடந்திருக்க கூடிய  வாய்ப்பு  அதே யாழ் முற்றவெளி மைதானத்தில் நடந்த இசை நிகழ்வுக்கும்  உள்ளது.
இசை நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் சில குளறுபடிகள் காரணமாக விரும்பத்தகாத விடயங்கள் நடந்தேறியதாக அறியப்படுகிறது.
ஏற்கனவே  இந்த இசை நிகழ்ச்சி நடக்கக்கூடாது என்று  ஒரு கும்பல் சமூக ஊடகங்களில் செயல்பட்டதை பலரும் குறிப்பிடுகிறார்கள் .
தீவிர  தமிழ் வெறுப்பு  அரசியல்  கலாச்சார காவல் மேதாவிகள் எனப்படுவோர் சிலர் விஷம பிரசாரங்களை  மேற்கொண்டிருந்தார்கள்
எச்சரிக்கைகள் விட்டு கொண்டிருந்தார்கள்
சந்தர்ப்பத்தை பார்த்து கூட்டத்திற்குள்  புகுந்து குழப்பம் விளைவிக்கவே அவர்கள் காத்திருந்தனர்

அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்

tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: இலாகா இல்லா அமைச்சராக சிறையில் இருந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 14 முதல் தற்போது வரை சிறைவாசம் தொடர்வதால் செந்தில் பாலாஜி ராஜினாமா முடிவை எடுத்துள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

திங்கள், 12 பிப்ரவரி, 2024

குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்... அப்பாவு பேச்சு..

 மாலை மலர்  :   சென்னை  தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.45 மணியளவில் சட்டசபைக்கு வந்தார். அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி 9.55 மணிக்கு வந்தார். அவருக்கும் பேண்டு வாத்தியம் முழங்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சட்டசபை வளாகத்தில் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபைக்குள் அழைத்து செல்லப்பட்டார். கவர்னர் சபைக்குள் வந்ததும் சரியாக காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது.

Lal Salaam - தமிழ்நாட்டில் இந்து முஸ்லீம் மக்களிடையே வெறுப்பு இருந்ததாக பொய்யாக காட்டப்படும் பித்தலாட்டம்

May be an image of 1 person and text

LR Jagadheesan    லால் சலாம் திரைப்படத்தில் 1990களுக்கு முன்பு நடப்பதாக வரும் காட்சியில் முஸ்லிம் உரிமையாளர் வீட்டில் குடியிருக்கும் அவரது நெருங்கிய இந்து நண்பர் இறந்துவிடுகிறார்.
அவரது இறுதிக்கிரியைகள், சடங்கு சம்பிரதாயங்களை அவர்களின் இந்துமத/ஜாதிய முறைப்படி நடத்த அந்த இந்து குடும்பமும் உறவினர்களும் ஏற்பாடுசெய்கிறார்கள்.
அதை அந்த ஊரில் இருக்கும் முஸ்லிம்கள் தடுக்கிறார்கள். முஸ்லிமுக்கு சொந்தமான வீட்டில் இந்துமத சடங்குகள் நடத்தக்கூடாது என்கிறார்கள்.
இப்படி சொல்பவர்கள் தமிழ்முஸ்லிம்களாக படத்தில் காண்பிக்கப்படுகிறது.
இப்படியான ஒரு சூழல் கற்பனையாகக்கூட தமிழ்நாட்டில் தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் அந்தகாலகட்டத்தில் இருந்ததாக பார்க்கவும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை. 

கட்டார் சிறையில் இருந்து 8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்களும் விடுதலை

மாலை மலர் : இந்தியாவைச் சேர்ந்த முன்னாள கடற்படை வீரர்கள் 8 பேர் உளவு பார்த்ததாக கத்தார் அரசு குற்றஞ்சாட்டி கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் அவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கியது.
இதனைத் தொடர்ந்து அவர்களின் தண்டனையை குறைக்க இந்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால் அவர்களின் தூக்குத்தண்டனை ரத்து செய்யப்பட்டு ஜெயில் தண்டனையாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அந்த 8 முன்னாள் அதிகாரிகளையும் கத்தார் அரசு விடுதலை செய்துள்ளது. அவர்களில் ஏழு பேர் இந்தியா வந்தடைந்துள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

கலா மாஸ்டர் : யாழ்ப்பாண ஹரிஹரன் தமன்னா நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது . தடைப்படவே இல்லை .ஒரு இலட்சத்தி இருபதாயிரம் ரசிகர்கள்

யாழ்ப்பாண இசை நிகழ்ச்சி பெருவெற்றி - கலா மாஸ்டர்
சுமார் ஒரு இலட்சத்தி இருபதாயிரம் பேர் நிகழ்ச்சியை ரசித்தார்கள்
ஆர்வ கோளாறால் சிறிய குளறுபடி நடந்தது .
ஆனால் அதன் காரணமாக நிகழ்ச்சி பெரிய தடங்கல் ஏற்படவே இல்லை.
சில நிமிடங்களில் அது சரி செய்யப்பட்டது
சில ஊடகங்கள் தவறாக சித்தரித்தன. ஆனால் அது உண்மையல்ல
இந்த நிகழ்வின் மூலம் எதிர்காலத்தில் இன்னும் பல பல நிகழ்வுகள் நடக்க இருக்கிறது
யாழ்ப்பாண மக்களை நெகடிவாக சித்தரிக்க சிலர் முயல்கிறார்கள்
அதை செய்யவேண்டாம் என்று வேண்டி கொள்கிறோம்  .. கலா மாஸ்டர் .
யாழில் நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்து அனைத்து கலைஞர்களும் திருப்தியாக நாடு திரும்பியுள்ளதாக ஹரிஹரன் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டு குழுப் பணிப்பாளர் ஷியா உல் ஹசன் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம்.. இதுவரை 112 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் .

 tamil.oneindia.com -  Shyamsundar :  சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தமிழ்நாட்டில் கவனம் பெற்று வரும் நிலையில் இந்த திட்டத்தில் அடுத்த கட்டமாக முக்கியமான சில பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் என்று திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த 2021 ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த திட்டம் அமலுக்கு வந்தது.
பயனாளிகள் இல்லங்களுக்கு சென்று மருந்து சேவைகள் வழங்கும் இந்த திட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு பொதுவான நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இந்த மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் தமன்னா,ஹரிஹரன் ரம்பா DD கலா மாஸ்டர் யோகி பாபு பங்கேற்ற இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் - என்ன நடந்தது? BBC Tamil

 யாழ்ப்பாணத்தில் நடந்த ஹரிஹரன் கலைநிகழ்வில் மின்சார பல்ப்புகளுக்கவும் இதர ஒலிபெருக்கி தேவைகளுக்காகவும் நிர்மாணிக்கப்பட்ட ஒரு சாதாரண தற்காலிக  ஸ்டான்ட்.
இது பெரிய பாரங்களை சுமக்க கூடிய அளவில் பலம் வாய்ந்ததாக இருப்பதில்லை
ஆனால் இங்கே இத்தனை பேர்களை தாங்கி கொண்டு இந்த ஸ்டான்ட் முறிந்து போகாமல் இருந்தது உலக மகா அதிசயம் என்றுதான் கூறவேண்டும்
அதிக வலுவுள்ள மின்சார வயர்களும் கூட  பிணைக்கப்பட்டு உள்ளன.
 இதில் உள்ள மின்சாரம் கூட இந்த இளைஞர்களில் ஒருவரை கூட தீண்டி பார்க்கவில்லை என்பது அதிசயத்திலும் அதிசயம்தான். .
ஏறக்குறைய எண்பது பேர்வழிகள் இதில் ஏறி நிற்பது போல் தெரிகிறது
பெரிய அளவில் உயிராபத்து நிகழக்கூடிய அத்தனை சாத்திய கூறுகளும் இதில் இருக்கிறது
அளவற்ற முட்டாள்தனத்தை உச்சம் இது .
இதில் விபத்து நடந்து இருந்தால் தமிழாராய்ச்சி மாநாட்டு மின்சாரத்தின் பாதிப்பின் அளவை இது அனாயாசமாக தாண்டி இருக்கும்

இந்திய பொருளாதாரத்தை மந்தகதிக்கு தள்ளியுள்ள அரசின் மோசமான வங்கி & நிதி நிர்வாகம்.

 Vimalaadhithan Mani  :   இந்திய பொருளாதாரத்தை மந்தகதிக்கு தள்ளியுள்ள சங்கி அரசின் மோசமான வங்கி & நிதி நிர்வாகம்.
இந்திய வங்கித் துறையின் லாபம் 2013 முதல் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது,
இது 2018 இல் எதிர்மறையாக மாறியுள்ளது.
2018 இல் உலகில் கிரீஸ் மற்றும் சான் மரினோ ஆகிய நாடுகளின் வங்கித் துறைகள் மட்டுமே இந்திய வங்கி துறையை விட மோசமாகச் செயல்பட்டன.
இந்திய வங்கிகளின் வாராக்கடன் அளவு 2015 மற்றும் 2018 க்கு இடையில் கணிசமாக உயர்ந்துள்ளது.
2014–15 முதல் 2017–18 வரை ரூ. 16 டிரில்லியன் மதிப்புள்ள புதிய வாராக்கடன்கள் வணிக வங்கிகளால் உறுதி செய்யப்பட்டன.
 NDA-II ஆட்சியின் கீழ் செய்யப்பட்ட  வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடிகள் UPA-II ஆட்சியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிகம்.