சனி, 13 ஏப்ரல், 2019

அம்பானி பிரான்சுக்கு செலுத்த வேண்டிய 1120 கோடி ரூபாயை பாஜக கொடுத்திருக்கிறது .. ரபேல் விலை உயர்வு ஊழல் இதுதான்

Shahjahan R : அனில் அம்பானிக்கு பிரான்சில் ஒரு டெலிகாம் கம்பெனி
இருக்கிறது. அதன் பெயர் - Reliance Atlantic Flag France.
அந்தக் கம்பெனியின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்த பிரான்ஸ் அரசு, 2007-2010 காலகட்டத்துக்கு 60 மில்லியன் யூரோ வரி செலுத்த வேண்டியிருக்கிறது என்று கண்டறிந்தது.
7.6 மில்லியன் யூரோ செலுத்தி விடுகிறோம் என்று ரிலையன்ஸ் இறங்கி வந்தது.
பிரான்ஸ் அதிகாரிகள் மறுத்து விட்டார்கள்.
பிரான்ஸ் மீண்டும் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்த்து.
2010-12 காலத்துக்கு 91 மில்லியன் யூரோ வரி செலுத்த வேண்டும் என்றும் கோரியது பிரான்ஸ்.
அப்புறம்...
அப்புறம்தான் பெரிய ட்விஸ்ட்
2015இன்படி ரிலையன்ஸ் செலுத்த வேண்டிய வரி 151 மில்லியன் யூரோ.
2015இல் ரபேல் ஒப்பந்தம் போடுகிறார் மோடி
அடுத்த ஆறே மாதங்களில் ரிலயன்ஸ் தருவதாகச் சொன்ன 7.6 மில்லியன் மட்டும் ஏற்றுக்கொண்டு 143 மில்லியன் யூரோவை தள்ளுபடி செய்துவிட ஒப்புக் கொள்கிறது பிரான்ஸ் அரசு.
சூப்பர் இல்லையா?

தேனியில் மோடி ... 600 பஸ்களில் கூலிக்கு வந்த 30ஆயிரம் மக்கள்!.. ரவீந்திரநாத்துக்கு பிரசாரம்


m
nakkheeran.in - sakthivel.m : தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் -ன் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டி போடுகிறார்.   ஓபிஎஸ் மகன் அதிமுக சார்பில் போட்டி போடுவதை ஆதரித்து பாரதப் பிரதமர் மோடி தேனி அருகே உள்ள க. விளக்கு பகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்தார். மோடி தேர்தல்
பிரச்சாரத்துக்கு வருவதை ஒட்டி துணை முதல்வர் ஓபிஎஸ் தன் பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து 650 பஸ்களை  தேனி மாவட்டத்திற்கு  இறக்கி அங்கிருந்து ஆட்களை< திரட்டி வர முடிவு செய்தார். அதன் பேரில் முதல் நாள் இரவே நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை பஸ்களை அனுப்பி அதிகாலையில் ஆறு மணிக்கெல்லாம் ஒரு பஸ்சுக்கு 50 பேர் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை திரட்டி ஆண்டிபட்டி க.விளக்கு பொதுக்கூட்டத்திற்கு கொண்டுவந்தனர். அதன் மூலம் தேனி முதல் ஆண்டிபட்டி வரை போக்கு வரத்தே ஸ்தம்பித்தது. தலைக்கு 500 ரூபாய் என கூலிக்கு ஆட்களை கொண்டு வந்து சாப்பாட்டு தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.  இப்படி கூலிக்கு ஆட்களை அழைத்து வரப்பட்ட மக்களோடு கட்சிக்காரர்களும் மோடியின் பிரச்சார மேடைக்கு முன் சாரை சாரையாக  வந்து அமர்ந்திருந்தனர்.

கனிமொழி, கதிர்ஆனந்தை தகுதிநீக்கம் செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மாலைமலர் ;தூத்துக்குடி, வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.
வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை மதுரை ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது. மதுரை: ராமநாதபுரம் கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை சட்டப்படியும், நியாயமான முறையிலும் நடத்தும் வகையில் பறக்கும் படை, சிறப்பு குழுக்களை ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது. தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
பிரசார கூட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவருக்காக, தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்கிறார்கள். கடந்த மாதம் 27-ந்தேதி வேப்பலோடை கிராமத்தில் கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கமலுக்கு அனிதாவின் அண்ணன் பதில் : நீட் விலக்கை உறுதி செய்யும் ஒரே கட்சி தி.மு.க மட்டுமே.

அனிதாவின் சகோதரர்மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட கட்சி, சமூக நீதி நிலைநாட்டும் கட்சி, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத கட்சி, தற்போதைய சூழலில் தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே கட்சி தி.மு.க மட்டுமே. தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
கமல்ஹாசனுடன் அனிதாவின் சகோதரர்vikatan.com - மலையரசு : தேர்தலில், மாற்றம் வேண்டும் என்ற முழக்கத்துடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தன் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் கமல், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பிரசார வீடியோவை வெளியிட்டு மும்முரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அந்தவகையில் நேற்று தனது வலைதளபக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்ட அவர், ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகளை மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார். மேலும் அதில், ``மொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வு என்ற பெயரில் ஒரு பொண்ண கொலை செய்தார்களே அந்தப் பெண்னோட அப்பா அம்மாகிட்ட கேளுங்க. அவங்க சொல்வாங்க யாருக்கு ஓட்டு போடணும்னு" என்று கூறியிருந்தார்.

ராகுல் : ஏன் அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி.. நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி..

மின்னம்பலம் : பிரதமர் மோடி தன்னை காவலாளி என்று கூறி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எல்லா திருடர்களின் பெயர்கள் முடிவிலும் மோடி வருவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடை பெறவிருக்கிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 11ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடை பெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இன்று தமிழகம் வந்துள்ள மோடி, தேனி, ராமநாதபுரம் பிரச்சாரத்தைத் தொடர்ந்து மங்களூருவில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இதற்கிடையே, நேற்று தமிழகம் வந்திருந்த ராகுல் காந்தி இன்று கர்நாடகாவில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

4 தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

4 தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!மின்னம்பலம் : மே 19ஆம் தேதி நடைபெறவுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. 21 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில் வழக்கைக் காரணம் காட்டி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப் பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் காலமானதால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பல்வேறு கட்சிகளும் கோரிக்கைகள் எழுப்ப, மே 19ஆம் தேதி தமிழகத்தில் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக கோரவில்லை’: பியூஷ் கோயல் கருத்துக்கு அதிமுக கூட்டணியினர் பதில் என்ன?- மருத்துவர் சங்கம் கேள்வி

THE HINDU TAMIL : நீட் தேர்வு தொடர்பாக அதிமுக அரசு ரத்து செய்யக் கோரவில்லை. நீட் ரத்து செய்யப்படாது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் கருத்துக்கு அதிமுக கூட்டணியினரின் பதில் என்ன? என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது: ''நீட் நுழைவுத்தேர்வு தமிழ்நாடு அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கும், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பு .. பிரச்சாரத்தில் உயிர் பிரிந்தது

THE HINDU TAMIL : முன்னாள் எம்.பி.யும் நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் பிரச்சாரம் செய்யும்போது மாரடைப்பால் மரணமடைந்தார்.
முகவை குமார் என்ற இயற்பெயர் கொண்டவர் ஜே.கே.ரித்தீஷ்(46). திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான இவர் 2009-ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். 'சின்னபுள்ள' படத்தில் அறிமுகமான இவர் 'நாயகன்' என்ற படத்தைத் தயாரித்து தானே ஹீரோவாகவும் நடித்தார். அதுவரை ஜே.கே.ரித்தீஷ் என்றால் யாருக்குமே தெரியாது. அதன்பின்னர் அவர் பிரபலமானார். திரையுலகில் அனைவருக்கும் உதவி செய்வது, சங்கப்பணிகளில் வேகம் காட்டியது அவரை வேகமாக திரையுலகின் முக்கிய பிரமுகராக்கியது.

9 அமைச்சுக்களுக்கு தனியார் கம்பனி நிர்வாகிகள் நியமனம் .. ஒருவர் கூட தென்னிந்தியர் கிடையாது


பிரதமர் மோடி தேனியில் இன்று தேர்தல் பிரச்சாரம்!

tamil.indianexpress.com : நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்துள்ளார். மதுரையில் தங்கியுள்ள அவர், தேனி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் இன்று கலந்துகொள்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக கேரளாவிலிருந்து நேற்றிரவு 10 மணியளவில், விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

மோடிக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்ட இருவர் கைது .. மதுரையில்

நக்கீரன் : பிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட
மதுரையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனையூரை சேர்ந்த 7 தமிழர் விடுதலை ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த காந்தி,மாரிமுத்து மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் ஜூலியன் ஆசாஞ்சே .. அரசுகளினதும் பெரும் கம்பனிகளினதும் ரகசியங்களை அம்பலமாக்கியவரின் எதிர்காலம்?


தினகரன் : ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்ஜ். இவர் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கம்ப்யூட்டர்களை ஹேக் செய்வதில் கைதேர்ந்தவர். பல்வேறு நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்து தகவல்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்த இவர் மீது ஆஸ்திரேலியாவில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. உடனே, குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு அபராதம் கட்டி வழக்கில் இருந்து வெளியே வந்தார்
2006ம் ஆண்டு விக்கி லீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கி அதன் நிறுவனராக செயல்பட்ட அசாஞ்ஜ், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் பென்டகன் இணையதளத்தை ஹேக் செய்து ரகசியங்களை திருடி வெளியிட்டார். இது அமெரிக்காவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. எப்படியாவது இவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று முயற்சியை தொடர்ந்தது.

டெல்லியில் காங்கிரஸ் 3 தொகுதிகள் ஆம் ஆத்மி 4 தொகுதிகள் போட்டியிட முடிவு?

ஒருமாத இழுபறி முடிந்தது! ஆம் ஆத்மியுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் முக்கிய அறிவிப்பு!!NDTV : மக்களவை தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த குழப்ப நிலை முடிவுக்கு வந்துள்ளது.
டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிட்டால் வாக்குகள் பிரிந்து பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின. காங்கிரஸ் தரப்பில் எடுக்கப்பட்ட சர்வேயிலும், இதுபோன்ற நிலைதான் காணப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோரும் ராகுல் காந்தியை சந்தித்து ஆம் ஆத்மி உடனான கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

ஜெர்மனி முன்னாள் புலி போராளி சிவதீபன் போர் குற்றச்சாட்டில் கைது Germany indicts suspected rebel over Sri Lanka war crime

Germany indicts Tamil man for alleged war crimes whilst in LTTE German authorities have indicted a Tamil man, accusing him of committing war crimes in 2008 whilst he was a member of the Liberation Tigers of Tamil Eelam (LTTE). Federal prosecutors said that 37-year-old Sivatheeban B stands accused of executing 15 Sri Lankan soldiers.
The AP reports that he is also accused of killing two Sri Lankan soldiers a year later. Other charges he faces include membership in a foreign terrorist organization, war crimes, two cases of manslaughter and 11 cases of attempted manslaughter. See more from the AP here. Sivatheeban was originally arrested by German authorities in August last year. Earlier this year
German authorities also arrested another Tamil man over accusations he was involved in the 2005 assassination of Sri Lanka's foreign minister, Lakshman Kadirgamar.
hirunews.lk : இலங்கை இராணுவத்தின் 15 பேரை படுகொலை செய்தததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஜேர்மனில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போர்க்குற்றம், மனிதப் படுகொலை மற்றும் தீவிரவாத அமைப்பின் உறுப்பினராக இருந்தமை உட்பட அவருக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் 15 இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் சடலங்கள் எரிக்கப்பட்டிருந்ததாக ஜேர்மன் அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட்டை எச்சரித்த நீதிபதிகள் : நாங்கள் விசாரிக்க முடியாது; இனி வழக்கு தொடர்ந்தால் அபராதம்!' -

ஸ்டெர்லைட்
vikatan.com - துரை.நாகராஜன் : தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். அதைத் தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. ஆனால், வேதாந்தா நிறுவனம் பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், அந்த ஆலையைத் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில், தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவை, கடந்த பிப்ரவரி 18–ம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததோடு, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

நீங்க எந்த நகரத்தில் இருக்கிறீர்கள் ?.. இப்படியும் கண்டுபிடிக்க முடியுமா? (சிரிப்பதற்கு)

Samuel Manickam : நீங்கள் இந்தியாவில் எந்த பகுதியில் இருக்கிறீர்கள் என்பதை கண்டுபிடிக்க ஒரு எளிய வழி……
காட்சி -1 … இரண்டுபேர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு மூன்றாவது ஆள் வருகிறார். சண்டையை நின்று வேடிக்கை பார்த்துவிட்டு நடையைக் கட்டுகிறார்…
இது மும்பை நகரம்.
காட்சி -2 … இரண்டுபேர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு மூன்றாவது ஆள் வருகிறார். சண்டையை விலக்க முயலுகிறார்…
சண்டை போட்டுக்கொண்டிருந்த இரண்டுபேரும் சேர்ந்து மூன்றாவது ஆளை அடித்து நையப் புடைக்கிறார்கள்…
இது சென்னை நகரம்.
காட்சி -3 … இரண்டுபேர் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு மூன்றாவது ஆள் வருகிறார். என் வீட்டுக்கு முன்னாடி நின்று சண்டை போடாதீங்க.. வேற எங்கேயாவது போங்க என்று அவர்களை விரட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிடுகிறார்.
அப்படீன்னா இது பெங்களூரு.

அய்யாகண்ணு அவர்களே, டெல்லியில் அம்மணமாக ஓடியது அமித் ஷாவைப் பார்க்கத்தானா? பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

THE HINDU TAMIL - : பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுடனான அய்யாக்கண்ணு சந்திப்பைக் கிண்டல் செய்துள்ளார் சுப.வீரபாண்டியன்
டெல்லியில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் அய்யாக்கண்ணு. இப்போராட்டங்களுக்கு தமிழகத்திலிருந்து பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால், அவர்களுடைய போராட்டம் எதற்குமே மத்திய அரசு தலைசாய்க்கவில்லை.
இந்நிலையில், பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் விவசாயிகள் 111 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்வது என்று அய்யாக்கண்ணு தரப்பில் முடிவு செய்தார்கள். இதனைத் தொடர்ந்து பாஜக கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவைச் சந்தித்தார் அய்யாக்கண்ணு.

தமிழிசை சவுந்தரராஜன் : எதிர்கட்சிகள் ஸ்டெர்லைட் பிரச்னையை தூண்டுகிறார்கள் BBC க்கு பேட்டி..

BBC : ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற 13 பேர்
சுட்டுக்கொல்லப்பட்ட பிரச்சனையை எதிர்க்கட்சிகள் தூண்டிவிட முயற்சிக்கின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார். பிபிசி தமிழின் பிரமிளா கிருஷ்ணனுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து:
கேள்வி: நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6,000 என வாக்குறுதிகளை தந்துள்ள திமுக-காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: அந்த அறிக்கை ஒரு ஏமாற்று வேலை. சாத்தியம் இல்லாத விஷயங்களை, வாக்குறுதிகளாக அவர்கள் கொடுக்கிறார்கள். இவர்கள் எவ்வளவு ஏமாற்று விஷங்களை சொல்கிறார்கள் என்பதற்கு இந்த தேர்தல் அறிக்கை சாட்சி. பாஜகவின் அறிக்கை மிகவும் நேர்த்தியான, உண்மையில் என்ன செய்ய முடியுமோ அதை சொல்லும் அறிக்கையாக உள்ளது.
கே: நீங்கள் சாதி வாக்குகளுக்காக இந்த தொகுதியை தேர்ந்தெடுத்ததாக கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து?

இன்னொரு அனிதா உருவாகக் கூடாது: ராகுல்

இன்னொரு அனிதா உருவாகக் கூடாது: ராகுல்மின்னம்பலம் : நீட் தேர்வை நடத்தலாமா, வேண்டாமா என்பதை தமிழகத்தின் முடிவுக்கே விட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது ஏன் என்று சேலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி விளக்கியுள்ளார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து சேலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தத் தேர்தல் என்பது 2 கொள்கை உடையவர்களுக்கு இடையில் நடக்கும் தேர்தல் என்று இக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் ஒற்றை நோக்கம், ஒற்றை பண்பாடு, ஒற்றை கலாச்சாரம் இருக்க வேண்டும் என கூறுகிறது. ஒரே கருத்துதான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று கூறுகிறது. மற்றொருபக்கத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி பல்வேறு பார்வைகள் இருக்கிறது. பல்வேறு மொழிகள், சிந்தனைகள் இந்த நாட்டில் இருக்கிறது என்று சொல்கிறோம்”என்றார்.

திமுக நெருக்கடி .. பூத் செலவுக்குகூட தட்டுப்பாடு .. அதிமுக வட்டாரத்தில் வெள்ளம் போல பாய்கிறது

டிஜிட்டல் திண்ணை: பண விநியோகம்: தடுமாறும் திமுக... தாறுமாறு அதிமுக!மின்னம்பலம் : “மக்களவை மினி சட்டமன்றத் தேர்தல்களின் கடைசி நான்கு நாள் களத்தில் பரபரப்பும் பதற்றமும் பற்றிக் கொண்டிருக்கிறது. பணப்பட்டுவாடா விசயத்தில் ஆளுங்கட்சி பாய்கிறது என்றும், திமுக சுணங்குகிறது என்றும் டிஜிட்டல் திண்ணை பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். இப்போது எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளர்கள் பூத் செலவுக்கு கூட பணம் கொடுக்கக் கூடாது என்ற நிலைமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று பல எதிர்க்கட்சி வேட்பாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
திமுக அனைத்து பூத் கமிட்டிகளுக்கும் முதல் தவணையாக தலா 3 ஆயிரம் ரூபாய் கொடுத்து முடித்துவிட்டது. துண்டுப் பிரசுரம் விநியோகித்தல், சுவர் விளம்பரம் எழுதுதல் போன்றவற்றுக்காக கொடுக்கப்படும் இந்த முதல் கட்ட விநியோகத்தை அதிமுக, அமமுக ஆகியவையும் 3 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் ஏற்கனவே கொடுத்து முடித்துவிட்டன. இரண்டாவது ரவுண்டாக வேட்பாளர்கள் வரவேற்பு உள்ளிட்ட பணிகளுக்காக அதிமுக 3 ஆயிரம் ரூபாயைக் கொடுத்திருக்கிறது.

ராகுல் காந்தி :தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் புத்துணர்ச்சி பெறுகிறேன்.. வீடியோ


tamilthehindu :தமிழக மக்கள் விரும்பாததை உலகில் உள்ள எந்த ஒரு சக்தியாலும் திணிக்க இயலாது என தேனியில் பிரச்சாரம் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
தமிழகத்தில் இன்று ராகுல் காந்தி சூறாவளிப் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். காலையில் கிருஷ்ணகிரியில் பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர் பின்னர் சேலம், தேனி என பிரச்சாரம் செய்தார். தேனியில் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் மற்றும் ஆண்டிபட்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் மகாராஜன், பெரியகுளம் திமுக வேட்பாளர் ஆகியோரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு பிரச்சாரம் தொடங்கியது. நீட் ரத்து, வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கான நலத்திட்டம், ஏழை மக்களுக்கு நியாய் யோஜனா என பல்வேறு வாக்குறுதிகளை அவர் வழங்கினார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி பேசியதாவது:
''காங்கிரஸ் கட்சியின் மீது தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொண்டுள்ள பற்று எனக்கு பூரிப்பு தருகிறது. தமிழ் மொழி, தமிழக மக்கள், தமிழ் மக்களின் கலாச்சாரம், தமிழகத்தின் வரலாற்றை நான் மதிக்கிறேன். ஆனால், நரேந்திர மோடி தமிழக மக்களின் மீது ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்கப் பார்க்கிறார்.
தமிழக மக்கள் விரும்பாததை எந்த ஒரு சக்தியாலும் ஒருபோதும் திணிக்க முடியாது. பிரதமர் மோடி பெரியாரின் புத்தகங்களை படிக்க வேண்டும். அவற்றை நான் பிரதமருக்குப் பரிசளிக்க விரும்புகிறேன்.

சதாசிவம்-MS சுப்புலட்சுமி திருமணம் ...... மறைத்த வரலாறுகள்

LR Jagadheesan : What makes one of the marriages sinful/regressive and the other holy/progressive? எந்த அடிப்படையில் இதில் ஒரு திருமணம் தீதான/ பிற்போக்கானதாகவும்
மற்றது
புனிதமான/முற்போக்கானதாகவும் திரும்பத்திரும்ப பொதுபுத்தியில் பதியவைக்கப்படுகிறது? ஒரு கட்சியும் ஒரு ஜாதிக்காரர்களும் இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த ஆபாசத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் எந்தவித கூச்சமோ குற்ற உணர்வோ இன்றி கடத்திக்கொண்டே இருக்கப்போகிறார்கள்? எதெதற்கோ முறுக்குப்பிழியும் முற்போக்கு பெண்ணியங்கள் இதையெல்லாம் எதிர்த்து ஏன் எதுவுமே பேச மறுக்கிறார்கள்?
 பெரியார் மணியம்மை திருமணத்தைக்காட்டி வளர்ப்பு மகளை திருமணம் செய்துகொண்டார் என்று பொய்யாக கொச்சைப்படுத்தி பேசுவதை ஒரு அரசியல் செயற்பாட்டு இயக்கமாகவே செய்துகொண்டிருக்கும் அதே ஆட்கள் மதுரை ஷண்முகவடிவின் மகள் சுப்புலெட்சுமியை சதாசிவம் எப்படி திருமணம் செய்துகொண்டார் என்று மறந்தும் கேள்விகேட்பதில்லை. மாறாக “எம் எஸ் அம்மா” என்கிறார்கள். சதாசிவத்தை திருமணம் செய்து கொண்ட மதுரை ஷண்முகவடிவு சுப்புலெட்சுமியை அவரது திருமண முடிவை மதிக்கத்தெரிந்தவர்களுக்கு மணியம்மைக்கும் அதே போல் தன் திருமணம் குறித்து முடிவெடுக்க உரிமை உண்டு என்பது ஏன் தெரியாமல் போகிறது? 

விவேக் ஓபராய், ஷங்கர் மகாதேவன் மற்றும் பலர் பாஜகவின் பே லிஸ்டில்

மோடி ஆதரவு: அணி சேரும் பாலிவுட் கலைஞர்கள்!மின்னம்பலம் : மோடிக்கு எதிராக திரைப்படம், நாடகம், இசை, இலக்கியம் என பல்வேறு துறைகளைச் சார்ந்த 800 கலைஞர்கள் கையெழுத்திட்டுள்ள நிலையில் நேற்று (ஏப்ரல் 10) பாலிவுட்டைச் சேர்ந்த 907 திரைக் கலைஞர்கள் மோடி ஆட்சியே தொடரவேண்டுமென அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நேஷன் பர்ஸ்ட் கலக்டிவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலைத்துறையைச் சேர்ந்த நாங்கள், எந்த அழுத்தமும் முன் தீர்மானங்களுமின்றி புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுத்து வாக்களிக்க எங்கள் சக குடிமக்களுக்கு முறையிடுகிறோம். கடந்த ஐந்தாண்டுகளில் நமது தேசம், ஊழலற்ற வளர்ச்சி சார்ந்த நிர்வாகம் கொண்ட நல்ல அரசை பார்த்தது. இந்த காலத்தில், உலகளவில் இந்தியா அதிக மரியாதை பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தொடர்ச்சியானது இந்த நேரத்தில் அவசியமானது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

நாடாளுமன்றத்துக்கு முதல் கட்ட தேர்தல்: 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

நாடாளுமன்றத்துக்கு முதல் கட்ட தேர்தல்:  20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவுdailythanthi.com/ நாடாளுமன்றத்துக்கு நேற்று முதல் கட்டமாக உத்தரபிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. புதுடெல்லி, நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தலை தேர்தல் கமிஷன் அறிவித்த நாள் முதல், நாடு பரபரப்பாகி இருக்கிறது. உலகின் கவனத்தை கவரும் தேர்தல்< கோடிக்கும் அதிகமான மக்களை கொண்ட இந்தியாவை அடுத்து ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது என்பதால் உலக நாடுகளின் கவனத்தை ஒரு சேர கவர்ந்துள்ளது.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை தொடர்வதற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றியே ஆக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி இளம்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் களம் இறங்கி இருக்கிறது.

இவர்களுக்கு மத்தியில், அடுத்து மத்தியில் அமைய உள்ள அரசில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தெலுங் கானா ராஷ்டிர சமிதி, பிஜூஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அர்விந்த் கேஜ்ரிவால் : புல்வாமா தாக்குதல் திட்டமிட்ட சதி...? பாகிஸ்தானுடன் மோடிக்கு ரகசிய உறவு.

தீக்கதிர், ஏப்ரல் 12, 2019 : புதுதில்லி, ஏப்.11-பிரதமர் மோடிக்கு தேர்தலில் க்கு வந்தால், காஷ்மீர் பிரச்சனையை பேசித் தீர்க்க மிகுந்தஅச்சப்படலாம். ஆனால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நிச்சயமாக காஷ்மீர் பிரச்சனையை பேசித் தீர்க்க முயற்சி எடுப்பார்கள்” என்று தெரிவித்திருந்தார்.இதையொட்டியே கெஜ்ரிவால் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.“பாகிஸ்தானும், இம்ரான் கானும்வெளிப்படையாகவே மோடிக்கு ஆதரவு அளித்ததன் மூலம், அவர்களுடன் மோடிக்கு இருக்கும் ரகசிய உறவுஅம்பலமாகி இருக்கிறது; அதுமட்டுமன்றி, மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு உதவுவதற்காகவே கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி, புல்வாமாவில் நமது துணிச்சல் மிகுந்த 40 சிஆர்பிஎப் வீரர்களை பாகிஸ்தான் கொன்றதோ? என்ற சந்தேகமும் எழுகிறது” என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பார்ப்பனரின் கோரிக்கை : நீங்கள் வெறுக்கும் 'சூத்திரர்'களுக்கு மட்டும் இல்லை உங்களுக்கும் சேர்த்துதான்!

Aparajithan R : மார்கழிப் புரட்சி செய்த என் அன்பு மயிலாப்பூர் தோழர்களுக்கு...
நான் பிறப்பால் பார்ப்பன வைதீக குடும்பத்தைச் சார்ந்தவன். இதில் பெருமை எல்லாம் ஒரு மண்ணும் இல்லை. இதை சொல்லுவதற்கு காரணமுண்டு. முதலில் இடதுசாரிகள் எல்லாம் பார்ப்பனர்களுக்கு எதிரிகளைப்போல் சித்தரிப்பது மிகவும் மோசமான செயல்! எந்த ஆட்சிக்காலத்தில் மைலாப்பூரும் நங்கநல்லூரும் விறுவிறுவென வளர்ச்சி அடைந்தது என எல்லாருக்கும் தெரியும். பார்ப்பன சித்தாந்தம்தான் எதிரியே தவிர திராவிடக் கட்சி உங்களை என்றைக்குமே விரோதிகளாக பார்த்ததே இல்லை என்பதுதான் உண்மை. பெரும்பாலான பார்ப்பனர்களுக்கு துக்ளக் வசிக்கும் பழக்கம் இருக்கிறது. உங்கள் குருமூர்த்தி பொள்ளாச்சி சம்பவம் நடந்ததற்கு திராவிட கலாச்சாரம்தான் காரணம் என்று சொன்னதன் எதிர்வினைதான் கிருஷ்ணரைப் பற்றி பெரியார் திடலில் பேசியது! பார்ப்பனியத்தை எதிர்த்தாலும் ஒருபோதும் தமிழகத்தில் எந்தக் கோவில் மீதும் திமுகவோ திகவோ கை வைத்தது இல்லை. ஆனால் நீங்கள் பாரத் மாதாக்கி ஜே என்று சொல்லி ஆராதிக்கும் பாஜக, 'சப்கா சாத் சப்கா விகாஸ்' என்று சொல்லிவிட்டு பாபர் மஸ்ஜிதை இடித்தது. தமிழகத்தில் மதத்தின் பெயரால் எத்தனை கலவரம் இதுவரை நடந்திருக்கிறது?

பணமதிப்பிழப்பில் 3லட்சம் கோடி ரூபாய்.ஊழல் . பாஜகவினர் கமிஷன் வாங்கி கொண்டு பணமதிப்பு இழப்பை அறிவித்திருக்கிறார்கள் கபில் சிபல் அதிரடி ..வீடியோ


Marikannan Kannan‎ : இந்திய_வரலாற்றில் இதுவரை இல்லாதளவுக்கு
3லட்சம்_கோடி_மெகா_ஊழல் செய்திருக்கிற பிஜேபியின் அமித்ஷா பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நவம்பர் 08, 2016இல் மோடி அரசு அறிவிப்பதற்கு 6 மாதத்திற்கு முன்பே வெளிநாடுகளில் வைத்து புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அமித்ஷா தலைமையில்...
இந்திய ஒன்றியத்தின் பல்வேறு துறைகளை சார்ந்த 26 பேர் சேர்ந்து அச்சடித்திருக்கிறார்கள். பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தபின் பெரிய முதலாளிகளிடமிருந்த கருப்பு பணத்தையெல்லாம் வாங்கிக்கொண்டு வெளிநாடுகளில் அச்சடித்த புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படியாக குறைந்தபட்சம் 3லட்சம் கோடி பணத்தை கைமாற்றினோமென்று இந்த சதிகளில் முக்கிய பங்காளியாக இருந்த இந்திய உளவுதுறையான ’ரா’(RAW) அமைப்பை சேர்ந்த ராகுல் ராத்னேக்கர் என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். nationalheraldindia.com/india/randaw-f
மேலும் இந்த மெகா ஊழலில் இந்திய...
ஒன்றியத்திலிருக்கிற பல்வேறு துறைகளையும் சட்டத்தை மீறி பயன்படுத்தியிருக்கின்றனர். அதாவது வெளிநாடுகளில் அச்சடித்த பணத்தை இந்திய இராணுவ விமானம் மூலம் டெல்லி எல்லையிலுள்ள ஹிண்டன் என்ற இராணுவ விமான படைதளத்திற்கு கொண்டுவந்து அங்கிருந்து முதலாளிகளுக்கு சப்ளை செய்திருக்கிறார்கள்.

பாலியல் குற்றச்சாட்டில் அமமுக வேட்பாளர்கள் டாக்டர் கதிர்காமு ,, தங்கத்தமிழ் செல்வன்


ns7.tv : பெரியகுளம் அதிமுக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், தேனி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வன் பெயரும் இடம்பெற்றிருப்பது, புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் கதிர்காமு, பெண் ஒருவருடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகின. இந்நிலையில், கதிர்காமு, கடந்த 2015ம் ஆண்டு, தம்மை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக, தேனி மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
ஆனால், இந்த புகார் பொய்யானது என்றும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரின் தூண்டுதல் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், கதிர்காமு குற்றம்சாட்டினார். இதனிடையே, இந்த விவகாரத்தில் தங்க தமிழ்ச் செல்வன் பெயரும் சிக்கியுள்ளது. பெண் கொடுத்த புகாரின் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், தங்க தமிழ்ச் செல்வனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், பாலியல் விவகாரத்தில், கதிர்காமுவோடு சேர்த்து, தங்க தமிழ்ச் செல்வனுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது

BBC : சூடான் .. 30 ஆண்டுகள் அதிகாரத்திலிருந்த அதிபரை ராணுவம் கைது செய்தது.. வீடியோ


கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக சூடானின் அதிபராக இருந்த ஒமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு தொலைக்காட்சியில் தோன்றிய சூடான் பாதுகாப்பு அமைச்சர் அவாத் இப்ன் ஊஃப் மூன்று மாத காலத்துக்கு அவசர நிலை நாட்டில் செயல்பாட்டில் இருக்கும் என்றார்.
அவாத் இப்ன் ஊஃப் மேலும் கூறுகையில், ராணுவத்தின் மேற்பார்வையில் இரண்டு ஆண்டு காலம் நாட்டின் ஆட்சி இருக்குமென்றும், இதனை தொடர்ந்து தேர்தல்களைத் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.
1989-லிருந்து ஆட்சி செய்து வரும் அதிபர் பஷீருக்கு எதிராக பல மாதங்களாக தொடர் போராட்டம் நடந்து வந்தது.
''ஒமர் அல் பஷீரின் 'ராஜ்ஜியம்' முடிவுக்கு வந்தது. தற்போது அவர் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார்'' என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
''மேலும், மோசமான மேலாண்மை, ஊழல், நீதியின்மை காரணமாக நாடு கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது'' என குறிப்பிட்டார்.

உயர்நீதிமன்றம் : சமஸ்கிருதம் தேவையில்லை .. மோடி அரசின் அறிவிப்பாணை அதிரடியாக ரத்து

ஸ்பெல்கோ"  : "சமஸ்கிருதம் எதற்கு  மோடி அரசின் அறிவிப்பாணையை அதிரடியாக ரத்து செய்தது உயர்நீதிமன்றம் –
 தமிழகத்தின் 25 பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வு முடிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. >ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும், அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என, உத்தரவிட கோரி, காமராஜ் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று இந்த பல அதிரடி உத்தரவை, நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.
தொல்லியல் துறை பணியிடங்களுக்கு சமஸ்கிருதத்தில் பட்டம் பெற வேண்டும் என்ற தகுதியை நீக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை..பிந்திய கருத்து கணிப்பு

Swathi K : நிறைய பேர் மறுபடி மறுபடி கேக்கும் கேள்வி.. தேசிய அளவில் நிறைய கருத்துகணிப்புகள் மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என்று சொல்கிறது.. இது உண்மையாகி விடுமா??
பயமே வேண்டாம்... நிச்சயம் பிஜேபி கூட்டணி அதிக இடங்கள் பெற வாய்ப்பே இல்லை.. காரணம் சொல்கிறேன்.. கருத்து கணிப்பில் இருந்து ஆரம்பிக்கலாம்..
மக்களின் எதிர்ப்பு அலையை புரிந்துகொள்ளாமல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வந்த அனைத்து கருத்துக்கணிப்புகளும் தோல்வியில் தான் முடிந்துள்ளது.. ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள மக்கள் மனநிலையை சரியாக யாரும் கணிக்க முடிந்ததில்லை என்பதற்கு சில உதாரணங்கள்..
A). 2004 தேசிய தேர்தல் - வாஜ்பாய் புகழ் உச்சக்கட்டம்.. காங்கிரஸ் 1999ல் வாங்கிய தோல்வியில் இருந்து பெரிதாக எழமுடியாமல் சோனியா காந்தியை மட்டுமே முழுமையாக நம்பி இருந்த காலம்.. ஒரு புறம் "கார்கில் வீரர் வாஜ்பாய்", "இந்தியா ஒளிர்கிறது", "சோனியா இத்தாலி அடிமை" இது போன்ற பிஜேபி கோஷங்கள்.. பெரிய அளவில் வெளியில் வாஜ்பாய்க்கு எதிர்ப்பு அலை தெரியவில்லை.. தேர்தலுக்கு முந்தைய அனைத்து கருத்து கணிப்புகளும் பிஜேபி கூட்டணி 285-300 இடங்களில் வெற்றி பெறும்.. காங்கிரஸ் கூட்டணி 120 இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தது.. ஆனால் முடிவில் பிஜேபி கூட்டணி 181 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 218 இடங்களிலும் வெற்றி பெற்றது..

வியாழன், 11 ஏப்ரல், 2019

பல தேர்தல்களில் தபால் வாக்குகள் ஏன் திமுகவுக்கே சாதகமாக இருக்கிறது?

கடந்த சட்டசபை தேர்தலில் அப்பாவு அவர்களின் தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணப்படாமலேயே அவர் தோற்றதாக அறிவிக்கப்பட்டது தெரிந்ததே. வழக்கு இன்னும் நடக்கிறது ..
Ravishankar Ayyakkannu : கேள்வி: தொடர்ந்து பல தேர்தல்களில் அரசு ஊழியர்கள் பதிவு செய்யும் தபால் வாக்குகள் திமுகவுக்குச் சாதகமாகவே உள்ளதே. இதை எப்படிப் புரிந்து கொள்வது?
பதில்:
பல கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்கள் தங்கள் CEOவுக்கு rating கொடுப்பார்கள்.
ஊழியர்களின் நம்பிக்கையைப் பெற முடியாத CEO இருந்தால் நிறுவனம் பாழாகும். விரைவில் சீட்டைக் கிழிப்பார்கள்.
அரசு அதிகாரிகள் யாரைக் கேட்டாலும்,
ஒவ்வொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தாலும் புதுப்புதுத் திட்டங்களாகப் போட்டுப் பணிச்சுமையைக் கூட்டுவார்கள்,
பழுத்த அனுபவம் உள்ள அமைச்சர்கள் ஆய்வுக்கு வந்தால் கை கால் உதறும் என்றே
கூறுவார்கள்.
இருந்தாலும், அரசாங்கம் என்னும் நிறுவனத்தில்
* போன ஆட்சிக்கு இந்த ஆட்சி எப்படி இருக்கிறது?
* யார் வந்தால் போராடத் தேவையின்றி தங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன?
* நன்கு படித்து திறமையுடன் பணியாற்றும் தங்களை ஆளத் தகுதி படைத்தவர்கள் யார்?
என்று அரசு எந்திரத்துடன் நேரடியாகப் பணியாற்றும் காரணத்தால் நன்கு மதிப்பிடும் வாய்ப்பு பெற்றவர்கள் அரசு ஊழியர்கள்.
அவர்களே திமுகவுக்குத் தொடர்ந்து வாக்களிறார்கள் என்றால்,
திமுக சிறந்த ஆட்சித் திறன் படைத்த கட்சி என்பது புலனாகிறது.

அண்ணா பல்கலைக்கழகங்கள் மத்தியரசு கட்டுப்பாட்டுக்கு செல்கிறது? துணைவேந்தர் சூரப்பாவுக்கு கடும் எதிர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு கடும் எதிர்ப்பு
சூரப்பா - அண்ணா பல்கலைகழக துணைவேந்தர்; சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக
எம்.கே.சூரப்பாவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆணை பிறப்பித்தார்.< சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு துணை வேந்தர் நியமிக்காமல் கடந்த 2 ஆண்டுகளாக அப்பதவி காலியாக இருந்தது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் முக்கியமான பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தர் நியமனம் செய்யப்படாமல் இருப்பதற்கு கல்வியாளர்கள் தரப்பில் அதிருப்தியும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் , அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சூரப்பாவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆணை பிறப்பித்துள்ளார். நாட்டின் முதன்மையான பல்கலைக்கழகமாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையால் அறிவிக்கப்பட்ட பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் கடந்த 24 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் சூரப்பா. அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் : தேர்தலுக்கு பின் மாயாவதி காங்கிரஸ் கூட்டணி அரசில் இணைவார்.

zeenews.india.com : தேர்தலுக்கு பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி
அமைக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில்,  மோடி ஆட்சியில் நமது நாடு பாதுகாப்பாக இருந்தது போலவும், 2004-ல் இருந்து 2014 வரை மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது நாடு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது போலவும் கட்டு கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள் என தெரிவித்தார்.
மேலும் மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எந்த போரும் நடக்கவில்லை. போர் பதட்ட சூழ்நிலையும் ஏற்படவில்லை. எல்லை பாதுகாப்பான நிலையில் இருந்தது. பயங்கரவாதிகள் ஊடுருவல் குறைந்து இருந்தது. பாதுகாப்பு படை வீரர்கள், பொது மக்கள் உயிரிழப்பு குறைந்து இருந்தது.

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது ..வீடியோ


மாலைமலர் : ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் லண்டனில் இன்று கைது செய்தனர். இந்நிலையில், லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் லண்டனில் இன்று கைது செய்தனர். ஈக்வடார் அரசு அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பை வாபஸ்பெற்ற நிலையில் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார்  கைது செய்து வெஸ்ட் மிண்ட்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 2012ம் ஆண்டு லண்டனில் தஞ்சம் அடைந்த ஜூலியன் அசாஞ்சேவை 7 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலை சீர்குலைக்க காங்கிரசுக்குள் பாஜக அமமுக கட்சிகளின் சிலீப்பர் செல் .. வி.எஸ்.ஜே.தினகரன்?

bjp sleeper cell is dhinakaran!- congress nakkheeran.in-elaiyaselvan : நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை தொட்டிருக்கிறது. வெற்றியை நோக்கி தி.மு.க.,வினர் களத்தில் இறங்கியிருக்கும் நிலையில், அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பை அளிக்க காங்கிரஸ் மறுப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.  முதற்கட்ட நிலவரப்படி மத்திய சென்னை, வடசென்னை தொகுதிகளில் காங்கிரஸ் நிர்வாகிகள்   தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் ‘டிமிக்கி’ கொடுத்து வருகிறார்களாம். அதாவது, மத்திய சென்னை மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தமிழக காங்கிரஸ் மாஜி தலைவர் அரசரின் தீவிர ஆதரவாளர்.  தேர்தல் பணிகளின்போது இவருக்கும், தி.மு.க., மாவட்ட செயலாளர் சேகர்பாபுவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதை ஒரு காரணமாக காட்டி திருச்சிக்கு பறந்துவிட்டார் வீரபாண்டியன். இதேபோல் மாஜி மாவட்ட தலைவர் ரங்கபாஷியம் தலைமையில் சென்னையை சேர்ந்த இளங்கோவன் ஆதரவாளர்கள் அனைவரும் தேனியில் குவிந்துவிட்டனர். இதனால் வட மற்றும் மத்திய சென்னை தொகுதிகளில் காங்கிரஸ் மந்தமாகவே இருக்கிறது.

தேர்தல் பணியில் ஈடுபட டி ஜி பி குட்கா ராஜேந்திரனுக்கு தடை .. தேர்தல் ஆணையம் .

தேர்தல் பணிகளில் ஈடுபட டிஜிபி ராஜேந்திரனுக்கு தடை!மின்னம்பலம் : மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் தேர்தல் பிரிவு டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது. பறக்கும் படையினரும், காவல் துறையினரும் வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்கள் இல்லாத பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்துவருகின்றனர். தேர்தல் காலத்தில் தேர்தல் பணிகளுக்காக மட்டும் தனியாக ஒரு டிஜிபியை தேர்தல் ஆணையம் நியமிக்கும். தேர்தல் தொடர்பான வழக்குகள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தேர்தல் பிரிவு டிஜிபியே மேற்கொள்வார்.

நடிகை லதா : கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் விரசமா நடிக்கலையே...

கஸ்தூரியின் விமர்சனத்துக்கு லதா எதிர்ப்பு!மின்னம்பலம் : அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நடிகை கஸ்தூரி எம்.ஜி.ஆர்., நடிகை லதா இணைந்து நடித்த பாடல் காட்சியை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். கஸ்தூரிக்கு அது தொடர்பாக எதிர்ப்புகள் வந்த நிலையில் தற்போது நடிகை லதா கஸ்தூரிக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9ஆம் தேதி இரவு நடைபெற்றது. அப்போது எளிய இலக்கை மிக அதிகமான பந்துகளை எதிர்கொண்டு ஆடி வெற்றி பெற்றது சென்னை அணி.

சந்திரபாபு நாயுடு மறுதேர்தல் கோரினார் .

மறுதேர்தல் கேட்கும் சந்திரபாபு நாயுடுமின்னம்பலம் : 17ஆவது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கு இன்று தொடங்கி மே 19ஆம் தேதி வரை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கான பிரச்சார அலை நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம் என 20 மாநிலங்களில் 91 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் ஆந்திராவில் நடைபெறுகிறது. இன்று காலையில், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் வந்து அமராவதியில் வாக்களித்தார்.
மறுதேர்தல் கோரும் முதல்வர்

ராகுல்காந்தி தலைக்கு குறிவைக்கப்பட்டது!’ - உள்துறை அமைச்சகத்தில் ஆதாரத்துடன் காங்கிரஸ் புகார்


காங்கிரஸ்ராகுல்கலிலுல்லா.ச -விகடன் :
ராகுல்காந்தி அமேதியில் மனுத்தாக்கல் செய்தபோது, அவரை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சிகள் நடப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் கடந்த 4-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதேபோல உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதியில் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக அவர், 3 கிலோ மீட்டர் தூரம் திறந்த வாகனத்திலே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரின் சகோதரி பிரியங்கா, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, அவர்களின் மகன் ரேகன், மகள் மிரயா ஆகியோரும் கலந்துகொண்டனர். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ராகுல்காந்தியைக் கொல்ல முயற்சி நடந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் ஒன்றையும் காங்கிரஸ் அனுப்பியுள்ளது.

Bad Touch குஷ்பூ விட்ட பளார் .. கூட்டத்தில் .. ஓங்கி கன்னத்தில் ஒரு அறை .. வீடியோ ..பெங்களூரு


THE HINDU TAMIL : தன் அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருந்தார் குஷ்பு. தற்போது அண்ணனுக்கு உடல்நிலை கொஞ்சம் தேறியவுடன் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார்.
முதலில் தேனி தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தன் பிரச்சாரத்தைத் தொடங்கினார் குஷ்பு. அதனைத் தொடர்ந்து தற்போது பெங்களூருவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ரிஷ்வான் ஹர்சத்தை ஆதரித்து குஷ்பு இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைத் தாண்டி குஷ்பு நடந்து கொண்டிருந்த போது, ஒருவர் தகாத முறையில் கை வைத்திருப்பதாகத் தெரிகிறது.

முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது .. 17-வது மக்களவை தேர்தல்

17-வது மக்களவை தேர்தல்: முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியதுdailythanthi.com> 17-வது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.  புதுடெல்லி, நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11–ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19–ந் தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று (வியாழக்கிழமை)  துவங்கி நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் 25, அருணாசலபிரதேசத்தில் 2, அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஷ்காரில் 1, காஷ்மீரில் 2, மராட்டியத்தில் 7, மணிப்பூரில் 1, மேகாலயாவில் 2, மிசோரமில் 1, நாகலாந்தில் 1, ஒடிசாவில் 4, சிக்கிமில் 1, தெலுங்கானாவில் 17, திரிபுராவில் 1, உத்தரபிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, மேற்கு வங்காளத்தில் 2, லட்சத்தீவுகளில் 1, அந்தமான் நிகோபார் தீவுகளில் 1 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.

கொள்ளையனிடமிருந்து 100 சவரன் நகைகள் பறிமுதல்.. விடுப்பில் சென்று நகைகளை பங்கு போட்ட காவலர்கள்

காவலர்கள்
tamiloneindia :சென்னை: சென்னையில் நகை கொள்ளையனிடமிருந்து பறிமுதல் செய்த நகைகளை காவலர்களே பங்கு போட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் இந்த கொள்ளையர்களை பிடிப்பது போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்தது.
சென்னை அசோக் நகர் காவல் நிலைய போலீஸார் ஆரி பிலிப் என்ற கொள்ளையனைபோலீஸார் பிடித்தனர்.
அவர் கொள்ளையடித்த 100 சவரன் நகைகளை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. திருடிய நகைகள் இந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது போலீஸாருக்கு பல்வேறு பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் ஆரி பிலிப் திருடிய நகைகளை பறிமுதல் செய்தனர். காவலர்கள் பின்னர் தங்களுக்குள்ளாகவே பங்குப் போட்டுக் கொண்டனர் என ஆரி பிலிப் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பிளாக் ஹோல்’-ன் முதல் புகைப்படம் வெளியானது !

பிளாக் ஹோல்லின் புகைப்படம்
ஷெப்பர்ட் டோலேமேன் தொலைநோக்கிகள் பற்றி பேசுகிறார் ம.காசி விஸ்வநாதன் விகடன் : பிளாக் ஹோல் (கருந்துளை) புகைப்படம் எடுப்பது என்பது இதுவரை யாரும் சாதிக்காத ஒரு விஷயமாகவே இருந்துவந்தது. நம்மிடம் இருக்கும் தகவல்களை வைத்து கணினிகளால் உருவாக்கப்பட்ட மாதிரிப் படங்கள் மட்டுமே இருக்கின்றன. நிலை அப்படியிருக்க பிளாக் ஹோல்லின் முதல் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. EHT என அழைக்கப்படும் ஈவென்ட் ஹாரிஷன் டெலஸ்ஸ்கோப் திட்டத்தைச் சேர்ந்த NSF விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதைச் சாதித்துள்ளனர். சுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த பிளாக் ஹோல் M87 என அழைக்கப்படும் கேலக்ஸியில் உள்ளது.