சனி, 31 ஜூலை, 2010

சுழற்பந்து பயிற்சி அகாடமி தொடங்க அனில் கும்ளே முரளிதரன் திட்டம்

இந்தியாவின் அனில் கும்ளே, இலங்கையின் முத்தையா முரளிதரன் இணைந்து, பெங்களூருவில் சுழற்பந்து வீச்சுக்கான பயிற்சி அகாடமி துவங்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக காலேவில் நடந்த முதல் டெஸ்டில் 800 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்த முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். தற்போது கும்ளேவுடன் சேர்ந்து பெங்களூருவில் சுழற்பந்துவீச்சுக்கான பயிற்சி அகாடமி துவங்க திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து அனில் கும்ளே கூறுகையில்,
பெங்களூருவில் சுழற்பந்து வீச்சுக்கான பயிற்சி அகாடமி துவங்குவது குறித்து, ஏற்கனவே முரளிதரனுடன் பேசி உள்ளேன். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் இதுகுறித்து இன்னும் பேசவில்லை. சமீபத்தில்தான் இவர் ஓய்வு பெற்றதால், சில பாராட்டுவிழாவில் கலந்து கொள்ள வேண்டி இருக்கும். எனவே விரைவில் இதுகுறித்து ஆலோசிக்க உள்ளேன் என்றார்.
இதுகுறித்து முரளிதரன் கூறுகையில், கும்ளேவுடன் இணைந்து பயிற்சி அகாடமி துவங்க மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன். இதுகுறித்து உறுதியான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றார்.

அண்ணி தற்கொலை பிரஷாந்த்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன்

சென்னை: அண்ணி தற்கொலை  பிரஷாந்த்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

கிரகலட்சுமியின் அண்ணன் பொன்குமரன். இவரது மனைவி அபிராமி. பொன் குமரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கிடையே சொத்துத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் அபிராமி தற்கொலை செய்து கொண்டார்.

அபிராமி தற்கொலைக்கு, தனது அண்ணன் நாகராஜன், அவரது மனைவி ப்ரீத்தி, மைத்துனர் யுவகிருஷ்ணா ஆகியோர்தான் காரணம் என்று கூறி போலீஸில் புகார் கொடுத்தார் பொன் குமரன். இதையடுத்து போலீஸார் நாகராஜன், யுவ கிருஷ்ணாவைக் கைது செய்தனர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கையாக கிரகலட்சுமியும், அவரது தாயார் சிவகாம சுந்தரியும் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் யாருக்கும் இந்த வழக்கில் முன்ஜாமீன் அளிக்கக் கூடாது என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து இருவரின் முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதேசமயம், நாகராஜனின் மனைவி ப்ரீத்தி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு, யுவகிருஷ்ணா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு ஆகியவை விசாரணையில் உள்ளன.
பதிவு செய்தவர்: 498 A
பதிவு செய்தது: 31 Jul 2010 12:12 pm
வினை விதைத்தவள் வினை அறுக்கிறார், இதே 498 A என்ற பூமரங்கை கிரகலட்சுமி அவர்கள் அன்று நடிகர் பிரசாந்தின் மீது எறிந்தார், இன்று அது தன் அண்ணியின் ரூபத்தில், இன்று வேறு ஒரு சட்ட என்னை கொண்டு இவரிடமே அது வருகின்றது. அப்பாவி ஆண்களை, வரதசினை கொடுமை என்று கொடுமை படுத்தும் பெண்கள் இபோளுதாவது திருந்துவார்களா?

UNPயுடன மங்கள சமரவீரவுடன், கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் இணைந்து கொள்ளவிருப்பதாக

நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு எதிர்வரும் வாரமளவில் கலைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கட்சி, எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது மேற்கொள்ளவுள்ள தீர்மானத்தின் அடிப்படையில், கலைக்கப்படும என அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை தமது கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இதன் அடிப்படையில் கட்சி கலைக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுடன், கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

பிரபாகரனின் சாரதி திருமலைப் பொலிஸில் சரண

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் சாரதி திருமலைப் பொலிஸில் சரண்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தனிப்பட்ட சாரதி இன்று பொலிஸாரிடம் சரண் அடைந்தார். வி.சதிகுமரன் என்கிற முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் திருகோணமலை பொலிஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்துள்ளார்.கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகள் இயக்கத்தை விட்டு தப்பி வந்திருந்தார் என்று அவர் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார். திருகோணமலை பொலிஸ் நிலையப் பொலிஸார் இவர் சம்பந்தமாக புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.

தில்லாலங்கடி, வழக்கம் போலவே தன்னுடைய 'ஈயடிச்சான் காப்பி' வேலையை ரொம்பவே

வழக்கம் போலவே தன்னுடைய 'ஈயடிச்சான் காப்பி' வேலையை ரொம்பவே சிறப்பா செய்துள்ளார் இயக்குநர் ராஜா. பணம் இருக்கிறவர்களிடம் கொள்ளையடித்து, இல்லாத ஏழைகளுக்கு கொடுக்கும் 'சிவாஜி' படத்தின் பிளாக் மணி மேட்டரை ஒட்டி வந்த தெலுங்கு படம் 'கிக்கு'. இப்படத்தை 'தில்லாலங்கடி'யாக தமிழில் ரீமேக் செய்துள்ளார்கள்.

எதுவும் ஈசியா கிடைத்துவிட்டால் அதில் கிக்கு இல்லை என்பதால் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு தில்லாலங்கடி வேலை செய்து அந்த பிரச்சனையை சமாளிப்பதில் 'கிக்கு' அனுபவிப்பவர் ஹீரோ கிருஷ்ணா(ஜெயம் ரவி).
இந்தத் தில்லாலங்கடி வேலைகள் அவர் செய்யும் இரண்டு முக்கியமான விஷயங்களிளும் தொடர்கிறது. ஒன்று மற்றவர்களுக்காக சமுதாயத்தில் அவர் செய்யும் பணி. மற்றொன்று நிஷாவுடன் (தமன்னா) அவர் செய்யும் காதல் பணி..
தான் ஒருவனைக் காதலித்ததாகவும் அவன் பெரிய தில்லாலங்கடி என்றும் அவன் பல பொய்களை சொன்னதால் அந்த காதலை கைவிட்டதாகவும் சொல்கிறார் நிஷா
இந்தக் கதை தெரிந்ததும் சைக்கிள் கேப்பில் தன்னுடைய காதலை நிஷாவிடம் போட்டு உடைக்கிறார் கிருஷ்ண குமார் . அதுமட்டும் இல்லாது, முக்கிய அரசியல் புள்ளிகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை கொள்ளையடித்து தில்லாலங்கடி வேலை செய்யும் திருடனை கண்டுபிடிக்க மலேசியா வந்த அவசியத்தையும் சொல்கிறார். பிறகு தான் இரண்டு தில்லாலங்கடியும் ஒருவனே என தெரிகிறது.
விசாரிப்பில் ஹீரோ கொள்ளையடித்த பணத்தை எல்லாம் ஏழை குழந்தைகளின் மருத்துவ செலவிற்குத் தான் பயன்படுத்தியிருக்கிறார் என தெரியவர ஹீரோ ஜெயம் ரவி நல்லவராகிறார். தன்னொடு திருமணம் நிச்சயமான ஷாமை கழற்றி விட்டு ஜெயம் ரவியை கைப்பிடிக்கிறார் ஹீரோயின் தமன்னா.
ரசிகர்களின் விசில் சத்தங்களை அதிகம் அள்ளிக் கொள்பவர் வடிவேலு. ஜெயம் ரவியின் தில்லாலங்கடி வேலைகளில் மாட்டிக்கொண்டு ரகளை செய்கிறார். ஜாக்கி என்கிற ஜாக்ஸனாக வரும் வடிவேலு காட்சிக்கு காட்சி சிக்ஸர் அடிக்கிறார். அதுவும் தமன்னாவோடு 'என் நதியே என் கண்முன்னே வற்றிப்போனாய்...' என டூயட் பாடுவது அபாரம்.
படத்தில் அடுத்து ஸ்கோர் பண்ணியிருப்பது 'இளமை இசை' யுவன் ஷங்கர் ராஜா. படத்தை மட்டும் இல்லாது பாடல்களையும் தெலுங்கு படத்திலிருந்து போட்டோ காப்பி எடுப்பார் ரீமேக் ராஜா. ஆனால், இந்தப் படத்தில் தான் பாடல் காட்சிகளில் கொஞ்சம் மற்றங்கள் செய்துள்ளார். அதற்கு காரணம் யுவன் ஷங்கர் ராஜா தான். சிம்பு பாடியிருக்கும் 'பட்டு பட்டு பட்டம் பூச்சி' பாடல் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்.
பொதுவாகவே ரீமேக் படங்களை எடுக்கும் ராஜா, ரிஸ்க் இல்லாமல் சின்ன கதாப்பாத்திரத்தில் கூட பெரிய நடிகர்களை நடிக்க வைப்பார். அது போல இந்தப் படத்திலும் பிரபு, சுஹாசினி, ராதாராவி, சந்தானம், கஞ்சா கருப்பு, மன்சூர் அலிகான், மனோபாலா என நடிகர் பட்டாளமே உள்ளது. ஜெயம் ரவியை விட உயரம் குறைவு என்பதாலோ என்னவோ தமன்னாவை பல காட்சிகளில் தேட வேண்டியிருக்கிறது. ஜெயம் ரவியின் துறு துறு நடிப்பு கொஞ்சம் புதுசு. குடும்பத்தோடு கைதட்டி பார்க்க ஒரு வாய்ப்பாக தில்லாலங்கடி இருக்கும்.
தில்லாலங்கடி - செம 'கிக்கு'

புது நடிகைகளை சரமாரியாக இறக்குமதி செய்யத் தொடங்கி விட்டனர்

குறைந்த விலை, கூடுதல் லாபம் என்று ஜவுளிக் கடைகளில் கூறுவதைப் போல இப்போது கோலிவுட்டிலும் புது டிரென்ட் உருவாகியுள்ளது. பெரிய பெரிய சம்பளம் கேட்கும் நடிகைகளைப் போடுவதை விட புதுமுக நடிகைகளை நடிக்க வைத்து குறைந்த சம்பளத்தில் நிறைந்த லாபம் பார்ப்பதே அது.

இந்த புதிய நடைமுறைக்கு நல்ல பலனும் கிடைத்துள்ளாம். டென்ஷன் இல்லாமல் படத்தை முடிக்க முடிகிறது, புது நாயகிகள் தொல்லை கொடுப்பதில்லை, சமர்த்தாக நடந்து கொள்கிறார்கள், கொடுக்கும் வசதிகளைப் பெற்றுக் கொண்டு அடக்கமாக இருக்கின்றனர் என்று சந்தோஷமாக கூறுகிறார்கள் திரையுலகினர்.

விஜய், அஜீத், விக்ரம், சூர்யா என சில முன்னணி ஹீரோக்களுக்கு மட்டும்தான் முன்னணி ஹீரோயின்கள் தொடர்ந்து தேவைப்படுகிறார்கள். சுற்றிச் சுற்றி தமன்னா, ஆசின், திரிஷா, நயனதாரா எனத்தான் வர வேண்டியுள்ளது. ஆனால் இவர்களெல்லாம் கோடி சம்பளம் கேட்கிறார்கள். கேடி நாயகி தமன்னா லேட்டஸ்டாக ஒரு கோடி சம்பள வளையத்திற்குள் வந்துள்ளார்.
நயனதாராவுக்கு மார்க்கெட் விழுந்து விட்டது என்றாலும் கூட அவரும் ஒரு கோடி என்றுதான் விரலை காட்டுகிறாராம். 2வது கட்ட நாயகிகளும் கூட 50 லட்சத்திற்குக் கீழ் இறங்க மாட்டேன் என்கிறார்கள்.

இது சரிப்படாது என்று உணர்ந்து பல தயாரிப்பாளர்களும், புதுமுக இயக்குநர்களும் புதிய பாதை அமைத்து, பல புதுமுக நடிகைகளை சரமாரியாக இறக்குமதி செய்யத் தொடங்கி விட்டனர்.

நீண்ட காலமாகவே இந்த டிரென்ட் இருக்கிறது என்றாலும் தற்போதுதான் மகா விறுவிறுப்பாகியுள்ளதாம் புதுமுகங்களின் வரவு. சுப்ரமணியபுரம் படத்தில் ஸ்வாதிக்குக் கிடைத்த வெற்றிதான் இந்த புதுமுக அலை வேகமாக அடிக்க காரணம் என்கிறர்கள்.

தினசரி ஒரு புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தும் நிலை கோலிவுட்டில் உருவாகியுள்ளது. ஒவ்வொரு நடிகைக்கும் 5 முதல் 10 லட்சம் வரைதான் சம்பளம் கொடுக்கிறார்கள். அதிலும் முதல்முறையாக அறிமுகமாகும் நடிகைக்கு அதிகபட்சமே 5 லட்சம்தானாம். அவர் நடித்த படம் ஓடி விட்டால் 10 லட்சம் வரை போகிறார்களாம்.

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பல படங்களின் நாயகிகள் புதுமுகங்கள்தான். அதில் களவாணி நாயகி ஓவியாவுக்கு இப்போது நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதாம். இதேபோல அரவான் படத்தில் அறிமுகமாகும் அர்ச்சனா கவிக்கும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாம். இதேபோல மேலும் பல புதுமுகங்கள் தமிழ்த் திரையுலகில் புதிய தென்றலாக வீசத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் என்ன கொடுமை என்றால் அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக கேரளாவிலிருந்து ஷிப்ட் ஆகி வந்தவர்கள் என்பதுதான்!
பதிவு செய்தவர்: supramaniyasamy
பதிவு செய்தது: 31 Jul 2010 4:22 pm
கதை இருந்தால் எந்த கதாநாயகி என்றாலும் படம் ஓடும் .. விக்ரம் எத்தனை வருடம் குப்பை கொட்டினார். .. திரிசா வேண்டுமா ? இத்தனை வர்ஷத்தில் அவர் தந்த பேசக்கூடிய படம் என்ன ? பித்த மகன் தவிர

ராமேஸ்வரத்தில ராமர் கல் என கூறி 500, 1000 ரூபாய்க்கு விற்பனை

ராமேஸ்வரத்தில் மடம், சிறு கோயில்களில், தடை செய்யப்பட்ட பவளப்பாறைகளை, ராமர் கல் என கூறி 500, 1000 ரூபாய்க்கு விற்பனைசெய்வது தொடர்கிறது.
மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் பலவகை பவளப்பாறைகள் உள்ளன. கடலில் சாக்கடை, ரசாயனக்கழிவு, வெட்டியெடுப்பது, தடை வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது, பாசி வளர்ப்பது போன்ற காரணங்களால் அழிந்து வரும் பவளப்பாறைகளை பாதுகாக்க, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. பவளப்பாறைகளை வெட்டியெடுப்பது, வைத்திருப்பது சட்டவிரோத செயலாக அறிவிக்கப்பட்டு தண்டனைகளும் வழங்கப்பட்டு வரும் நிலையில், ராமேஸ்வரம் பகுதியில் பவளப்பாறைகளை மிதக்கும் கல் என்றும், ராமர் பாலம் கல் என்றும் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. பவளப்பாறைகளில் மிதக்கும் தன்மை கொண்ட பாறைகளும் உண்டு. இந்த பவளப்பாறைகளை கடலுக்கு செல்லும் மீனவர்கள் எடுத்து வந்து, சில நூறு ரூபாய்களுக்கு விற்கின்றனர்.
இவற்றை ராமேஸ்வரத்தில் பல்வேறு மடங்கள் மற்றும் தனியார் கோயில்களில், "சிறிய தொட்டியில் நீர் ஊற்றி மலர்களுடன் மிதக்கவிட்டு ,"ராமர் தொட்டதால் இக்கற்களுக்கு நோய் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டது,' எனக்கூறி, பக்தர்களிடம் சிறிய கற்களுக்கு 500, 1000 ரூபாய்,' என, விற்பனை செய்கின்றனர். இதை விற்கும் பூஜாரிகள், இதற்காக சிறப்பு மந்திரங்கள் சொல்லி பாறையின் மேல் குங்குமம் வைத்து தருவர். பயபக்தியுடன் வாங்கி செல்லும் பக்தர்கள் நோய் தீராமல் ஏமாந்து போவதுதான் மிச்சம்.
இதனிடையே நேற்று மணிப்பூர் இம்பால் நகரில் இருந்து ராமேஸ்வரம் வந்த தினேஷ் (40) இங்குள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் 500 ரூபாய் கொடுத்து மிதக்கும் பவளப்பாறை கல்லை வாங்கினார். ""இதை தண்ணீரில் ஊறவைத்து அதன் நீரை குடித்தால் மூட்டுவலி, தலைவலி, வயிற்றுவலி, கால்வலி, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தீரும்,'' என, பூஜாரி கூறியதாக தெரிவித்தார். ராமேஸ்வரம் பகுதியில் பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக பவளப்பாறைகளை விற்பனை செய்து, ஆயிரக்கணக்கில் பணம் பார்ப்பது தொடர்ந்தாலும், இவற்றை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகள் மவுனம் காக்கின்றனர்

யதார்த்த கதைகளுக்கு ரசிகர்கள் வரவேற்பு - இயக்குனர் ஏ. வெங்கடேஷ்

விஜய் நடித்த “பகவதி”, சரத்குமார் நடித்த “ஏய்”, “சாணக்யா”, “மகாபிரபு”, சிம்புவின் “குத்து”, “தம்” மற்றும் “மலை மலை”, “மாஞ்சாவேலு”, “வாத்தியார்”, “துரை”, “சாக்லெட்”, உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஏ. வெங்கடேஷ். “அங்காடி தெரு” படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தற்போது அர்ஜூன் நடிக்கும் “வல்லக் கோட்டை” படத்தை இயக்கி வரும் வெங்கடேஷ் அளித்த பேட்டி வருமாறு:-
 
ரசிகர்கள் யதார்த்த கதைகளை விரும்புகின்றனர். தொப்பிள் காட்டுவது, குளியல் சீன்களை ரசிப்பதில்லை. இது போன்ற காட்சிகள் கொஞ்சம் 
கொஞ்சமாய் மறைகின்றன.
 
“அங்காடி தெரு”, “பருத்தி வீரன்”, “களவாணி” போன்ற யதார்த்த கதைகளை வரவேற்கிறார்கள். ஆனாலும் இதுபோன்ற படங்களை எடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருவதில்லை. கமர்ஷியல் படங்களை எடுக்கவே ஆர்வப்படுகின்றனர்.

பருத்தி வீரன், அங்காடி தெரு படங்களுக்கு இடையில் அதே போன்ற சாயலில் நாற்பது படங்கள் வந்து இருக்கும். அவை எல்லாமே தோற்றன. எனவே தயாரிப்பாளர்கள் கமர்ஷியல் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். வில்லன் ரசனைகளும் மாறுகிறது. அங்காடி தெருவில் எனது கருங்காலி வில்லன் கேரக்டரையும், களவாணி பட வில்லனையும் விரும்பு கின்றனர்.
 
ரீமிக்ஸ் பாடலுக்கு ரூ.2 1/2லட்சம் செலவாகிறது. நேரடி பாடலை விட ரீமிக்ஸ் செலவு அதிகம். எனவே ரீமிக்ஸ் கலாச்சாரம் போய் விட்டது.
 
இவ்வாறு அவர் கூறினார்.

தன்னை புகைப்படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டுக் கொன்ற மணப்பெண்

ரோம்: மணக்கோலத்தில் இருந்த பெண் [^], தன்னை புகைப்படம் எடுத்த புகைப்படக்காரரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். ரோமில் இந்த பயங்கரம் நடந்துள்ளது.

இத்தாலியில் உள்ள பலோமோ நகரில் திருமணம் [^] ஒன்று நடந்தது. மணமகன் பெயர் இக்னேசியா, மணமகள் பெயர் அனித்ரா. அங்குள்ள சர்ச்சில் திருமணம் முடிந்து பின்னர் திருமண விருந்து நிகழ்ச்சிகள் நடந்தன.

அதன் பிறகு, நம் ஊரில் மணமகனையும், மணமகளையும் அப்படி நில்லுங்க, இப்படி நில்லுங்க என்று புகைப்படக்காரர் நிற்க வைத்து போட்டோ எடுப்பாரே அதேபோல இந்த ஜோடியையும், கினாகரோ என்ற போட்டோகிராபர் பல்வேறு கோணங்களில் நிற்க வைத்துப் படம் எடுத்தார்.

அப்போது சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்று மணப்பெண் கையில் துப்பாக்கி ஒன்றைக் கொடுத்து சுடுவது போல போஸ் கொடுங்க என்று கூறி ஸ்மைல் ப்ளீஸ் என்று கூறியுள்ளார்.

துப்பாக்கியை மணமக்கள் கையில் கொடுத்து சுடுவது போன்றும் போஸ் கொடுக்க செய்தார். அதில் மணமகள் அனித்ரா கையில் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து போட்டோ கிராபர் மீது குண்டு பாய்ந்தது.

இதில் அவர் தலையில் பலத்த காயம் [^] அடைந்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.

வெளிநாடுகளுக்குக் சென்றவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தைவிட்டு வெளியேறிய வாக்காளர்

பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குக் சென்றவர்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தைவிட்டு வெளியேறியவர்களின் விருப்பத்தை அறியாது, அவர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது.
அவர்கள் மீண்டும் வரமாட்டார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டால்   மட்டுமே நீக்குவது குறித்த முடிவுக்கு செல்லவேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அரசாங்க தரப்பினரையும் தேர்தல்கள்   ஆணையாளரையும் விரைவில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளோம்.  பாராளுமன்றத்திலும் இது குறித்து குரல் எழுபபுவோம்.    இதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.   யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்காளர் பதிவு மற்றும் திருத்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறித்து தகவல் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர் இடாப்பு தொடர்பான பதிவுகளை செய்யும்போது கடந்த காலங்களில் போர்ச்  சூழல் காரணமாக இடம்பெயர்ந்து சென்றவர்களின் பெயர்களை அவர்களின் விருப்பங்களை அறியாது வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவதை நாங்கள் எதிர்க்கின்றோம்.
வேறு மாவட்டங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்த நிலையிலேயே அதிகளவான மக்கள் சென்றுள்ளனர்.  எனவே உடனடியாக அவர்களின் பெயர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கக்கூடாது.      அதாவது இவ்வாறு சென்றுள்ள மக்களின் விருப்பங்களை அறிந்துகொண்ட பின்னரே அவர்களை வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்குவது தொடர்பான முடிவை எடுக்க வேண்டும்.  எனவே இவ்விடயம் குறித்து அடுத்தவார மளவில் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து விரிவாக பேச்சு நடத்தவுள்ளோம்.
மேலும் அரசாங்கத்துடனும் இது குறித்து கலந்துரையாட எதிர்பார்ப்பதுடன் பாராளுமன்றத்திலும் இந்த விடயத்தை எழுப்பவுள்ளோம். நாங்கள் எமது தரப்பு நியாயங்களை  மு ன்வைப்போம்.   இதேவேளை இதுகுறித்து அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்யவும் தயாராகவே இருக்கின்றோம்.

அம்பாறை, தாயை கொலை செய்த மகனுக்கு 15 வருட கடூழிய

தாயை கொலை செய்த மகனுக்கு 15 வருட கடூழிய சிறைத் தண்டனையை வழங்கி அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி மொஹான் செனவிரட்ன தீர்ப்பளித்தார்.
அம்பாறை ஹிங்குராண சமகிபுரயைச் சேர்ந்த ரணவாகே சிரில் என்பவர்  2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  தமன பொலிஸ் பிரதேசத்தில் வசித்து வந்த  தனது தாயை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டார்.
இது தொடர்பிலான வழக்கு அண்மையில் அம்பாறை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது,  சந்தேக நபருக்கு நீதிபதி 15 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கியதுடன் 1500 ரூபா தண்டப்பணத்தையும் செலுத்த உத்தரவிட்டார்.
தண்டப் பணம் செலுத்த தவரும் பட்சத்தில் மேலும் ஆறு மாத காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிவரும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
www.tamil.daillymirror.lk

வன்னியில் கண்ணிவெடி அகற்ற சீன இராணுவமும் களமிறங்குகின்றது.

வன்னியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் பங்குகொள்ள சீன இராணுவமும் களமிறங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை இராணுவத்தின் ஆட்பலம் இரண்டு லட்சத்தினையும் தாண்டியுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ள நிவையில் 2400 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் காணப்படுவதாக கூறப்படும் கன்ணி வெடிகளை அகற்ற இந்தியா , மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பல நிறுவனங்களும் களமிறங்கியுள்ள நிவையில் சீனா தனது இராணுவத்தையும் அனுப்ப முயற்சித்துள்ளது.

வடகிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் அமைப்புக்களுக்கு சுதந்திரமான அரசியல் நடவடிக்கைகளுக்கு புலிகளால் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலப்பரப்பில் இன்று சகல அரசியல் கட்சிகள் மாத்திரம் அல்ல உலகிலுள்ள வல்லரசுகள் பலவும் தமது
சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு நடாத்திக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எம்.வி சன் சீ கப்பலை இடைமறிப்பதற்கு காத்திருக்கும் கனடா: பாதுகாப்பு அமைச்சு தகவல்

சுமார் 200 இலங்கையர்கள் இருப்பதாக கூறப்படும் எம்.வி சன் சீ கப்பலை இடைமறிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கனடாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.<> இந்த கப்பல் அடுத்த வாரமளவில் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா துறைமுகத்தை வந்தடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கப்பல் சர்வதேச கடற்பரப்பில் பயணிப்பதை தமது கடற்படையினர் அவதானித்துள்ளதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் மெக்கே தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த கப்பல் கனேடிய கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் போது அதனை தடுத்து நிறுத்த தமது கப்பல்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கப்பலில் பயணிப்போரின் உடல்நிலையை கவனிப்பதற்கான ஒழுங்குகளையும் தமது அரசாங்கம் செய்திருப்பதாக மெக்கே தெரிவித்துள்ளார்

அரியவகை தாவரங்களை வைத்திருந்த அயர்லாந்து பிரஜைகள் உட்பட மூவர் கைது

இலங்கையின் அரிய வகை தாவரங்களை சேகரித்தமைக்காக அயர்லாந்து மற்றும் இலங்கை பிரஜைகளுக்கு இரண்டு இலட்சத்து 30 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து நுவரெலியா மாவட்ட நீதவான் சமன் ஜீ.காரியவசம் நேற்று விடுதலை செய்தார்.

அயர்லாந்து பிரஜைகளான 45 வயதுடைய ஆணொருவரும் 35 வயதுடைய பெண்ணொருவரும் இலங்கை பிரஜையான 23 வயதுடைய மாவனல்ல இளைஞர் ஒருவரும் கடந்த 27ம் திகதி நுவரெலியா அம்பேவெல உலக முடிவு காட்டுப் பகுதியில் வைத்து வன இலாகா தலைமை பொறுப்புதிகாரி ஜீ.யு.சாரங்க தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களை கைது செய்யும் போது இவர்கள் வசம் பல்வேறு வகையான அரிய தாவரங்கள் இருந்துள்ளன.

மூவரையும் 28ம் திகதி காலை நுவரெலியா மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியபோது 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத் தூதரகம் அமைக்கப்பட உள்ளது்,மன்மோகன் சிங்

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் துணைத் தூதரகம் ஒன்று விரைவில் அமைக்கப்பட உள்ளது.இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டில்லியில் நேற்று முன்தினம் இடம்பெற்று முடிந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, எஸ்.எம்.கிருஷ்ணா, சீடு.ராசா உட்பட மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் ஒன்றை அமைப்பதன் மூலம் இலங்கையில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் வட மாகாணத் தமிழர்களுக்கு நேரடியாக உதவலாம் என்கிற அடிப்படையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சென்னை் வசூல்ி ல் களவாணியும், மதராசப்பட்டினமும் ம‌ரியாதைக்கு‌ரிய கலெ‌க்சனை

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் களவாணியும், மதராசப்பட்டினமும் ம‌ரியாதைக்கு‌ரிய கலெ‌க்சனை பெற்றிருக்கின்றன. ராவணன் ஐந்து கோடியை தாண்டியிருப்பது ஆச்ச‌ரியம்.

5. ராவணன்
மணிரத்னத்தின் ராவணன் பலமான எதிர்மறை விமர்சனங்களை கடந்து இதுவரை சென்னையில் மட்டும் 5.04 கோடிகளை வசூலித்துள்ளது. மணிரத்னத்தின் படம் மீது பார்வையாளர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவொரு சான்று. இதன் சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல் ஒன்றரை லட்சங்கள்.

4. ஆனந்தபுரத்து வீடு
நாகா ரசிகர்களுக்கு ஆனந்தபுரத்து வீடு பெரும் ஏமாற்றம்தான். ஷங்க‌ரின் எஸ் பிக்சர்ஸ் தயா‌ரித்த இந்தப் படம் இதுவரை 42 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல் 2.7 லட்சங்கள்.

3. களவாணி
இந்த மீடியம் பட்ஜெட் படம் சென்ற வார இறுதியில் ஆறு லட்சங்கள் வசூலித்துள்ளது. இதன் இதுவரையான மொத்த சென்னை வசூல் 77 லட்சங்கள். புதுமுகமாயிருந்தாலும் புதுவிதமாக படம் எடுத்தால் ஓடும் என்பதற்கு களவாணி ஒரு உதாரணம்.

2. மதராசப்பட்டினம்
இந்த ச‌ரித்திரப் படம் சென்ற வார இறுதியில் ஏறக்குறைய 36 லட்சங்களை வசூலித்து விநியோகஸ்தர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. இதுவரையான இதன் மொத்த சென்னை வசூல் 2.35 கோடிகள்.

1. தில்லாலங்கடி
சென்ற வாரம் வெளியான தில்லாலங்கடிக்கு அமோகமான ஓபனிங். முதல் மூன்று தினங்களில் ஏறக்குறைய 55 லட்சங்களை வசூலித்துள்ளது. படத்தின் ‌ரிசல்ட் எதிர்மறையாக இருப்பதால் இந்த வசூலை தில்லாலங்கடி தக்கவைத்துக் கொள்ளுமா என்பது சந்தேகமே.

டும் டும் டும் படத்தின்் படப்பிடிப்பு தஞ்சை பெ‌ரிய கோவிலில்

தஞ்சை பெ‌ரிய கோவில் சந்தேகமில்லாமல் உலக அதிசயங்களில் ஒன்று. பாடல் காட்சி எடுக்க தேசம் தேசமாகப் பறக்கிறவர்கள் இந்த அற்புத‌க் கோயிலை திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. அதற்கு காரணம் உண்டு.

தஞ்சை பெ‌ரிய கோயிலில் எடுக்கப்படும் எந்தப் படமும் இதுவரை வெற்றி பெற்றதில்லையாம். சினிமாவில் கதையைவிட சென்டிமெண்டை அதிகம் எதிர்பார்க்கும் நமது ஆட்கள் அப்புறம் ஏன் பெ‌‌ரிய கோயிலை திரும்பிப் பார்க்கப் போகிறார்கள்?

இந்த சென்டிமெண்டை உடைத்து தனது டும் டும் டும் படத்தின் பாடல் காட்டியொன்றை பெ‌ரிய கோயிலில் படமாக்கினார் மணிரத்னம். இந்தப் படத்தை அழகம் பெருமாள் இயக்கியிருந்தாலும் தயா‌ரித்தவர் மணிரத்னம்.

டும் டும் டும் ஹிட். என்றாலும் சென்டிமெண்ட் பயத்தில் யாரும் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.

இந்நிலையில் சாந்தனு நடிக்கும் புதிய படம் கண்டேனின் பாடல் காட்சியை பெ‌ரிய கோயிலில் படமாக்கியிருக்கிறார்கள். இந்த துணிச்சலுக்காவது கண்டேன் கன்னா பின்னாவென்று ஓட வேண்டும்.

பாதுகாப்பு வலயங்களை கட்டம், கட்டமாக அகற்றும் பணி ஆரம்பம்’

வட பகுதியிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களைக் கட்டம், கட்டமாக அகற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஏ. பி. உபே மெதவல நேற்றுத் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் கிளாலி, முகமாலை, கச்சாய், சாவகச்சேரி, மல்லாவி, காங்கேசன்துறை முதல் தெல்லிப்பளை வரையான பகுதி யாழ்ப்பாணம் - காங் கேசன்துறை வீதியில் மேற்கு பகுதி, மாங்குளம் உட்பட பல பிரதேசங்களின் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்கனவே நீக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் மீளக் குடியமருவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிரு ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கு - தெற்கு உறவுப் பாலம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய சமாதான பேரவை வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பிரதேச ஊடகவியலாளர்களை தென்பகுதிக்கு அழைத்து வந்துள்ளது.

இந்த ஊடகவியலாளர்கள் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்திற்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்தனர். அங்கு நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லவையும், இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஏ.பி. உபே மெதவலவையும் சந்தித்தனர்.

இச்சமயம் பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே இராணுவப் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாதுகாப்புப் படையினர் தங்கி இருந்த பல கட்டடங்களும், தனியார் வீடுகளும் ஏற்கனவே உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு படையினர் எப்போதும் சமாதானத்தையே விரும்புகின்றனர். அதனால் பழைய நிலைமை ஏற்படாதிருப் பதற்கு தேவையான சகல நடவடிக்கைக ளையும் மேற்கொண்டுள்ளோம்.

இராணுவத்தினர் யுத்தம் புரியக்கூடிய பிரிவினர் மாத்திரமல்லர். மாறாக நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்பு செய்யக்கூடிய, பிரிவினராகவும் அவர்கள் உள்ளனர். வட பகுதியில் இயல்பு நிலையை ஏற்படுத்தும் பணிகளிலும், கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக் கைகளிலும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

இச்சந்திப்பின் போது கருத்து தெரிவித்த ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல, யுத்தம் முடிவுற்று சுமார் பதினொரு மாதங்கள் தான் நிறைவடைந்துள்ளன. இருப்பினும் நாம் தேசிய பாதுகாப்பு விடயத்திற்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டு வருகின்றோம்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களை கட்டம், கட்டமாக அகற்றவும், குறைக்கவும் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

என்றாலும், அவற்றை எடுத்த எடுப்பிலேயே முழுமையாக அகற்ற முடியாது. அவ்வாறு செய்வதால் பாதுகாப்பு படையினர் மாத்திரமல்லாமல் தமிழ் மக்களும் கூட பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும். இதற்கு நிறையவே முன்னனுபவங்கள் உள்ளன என்றார்.

இச்சந்திப்பில் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெஹான் பெரேராவும் கலந்துகொண்டார்.

சென்னையில் பெருகி வரும் கள்ளக்காதல்கள்-அதிகரிக்கும் கொலைகள்

சென்னையில் கள்ளக்காதல்கள் தொடர்பாக நடக்கும் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

சமீபத்தில்தான் ஒன்றரை வயதே ஆன சிறுவன் ஆதித்யாவை கொடூரமாக கொலை செய்து பிணத்தை சூட்கேஸில் அடைத்து வைத்துபுதுச்சேரி வரை கொண்டு பஸ்சில் போட்டு விட்டு வந்ததாக பூவரசி என்ற பெண்ணைப் போலீஸார் கைது செய்தனர்.

பெயருக்கும், அவர் செய்த செயலுக்கும் சற்றும் சம்பந்தம் இல்லாமல் நடந்து கொண்ட பூவரசியின் கொலைச் செயலுக்குக் காரணம் -கள்ளக்காதல். தான் உயிரைக் கொடுத்து வந்த காதலர், தன்னை வெறும் உடல் பசிக்கு மட்டுமே பயன்படுத்தி வந்ததால் ஆத்திரமடைந்து அவர் பெற்ற பிள்ளையைக் கொன்று பழிதீர்த்துக் கொண்டார் பூவரசி.

இந்த அதிர்ச்சிச் மனதிலிருந்து மறைவதற்குள் இன்னும் ஒரு கள்ளக்காதல் கொலை சென்னை மக்களை உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் கள்ளக்காதலரை, அவரைக் காதலித்து வந்த பெண் போலீஸ்காரரின் கள்ளக்காதலன் வெட்டிக் கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். 35 வயதான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த 37 வயதான சாஸ்திரக் கனிக்கும் இடையே இளம் வயது முதல் காதல் இருந்தது. ஆனால் இந்தக் காதலை சாஸ்திரக் கனியின் வீட்டில் ஏற்கவில்லை. மாறாக இன்னொருவருக்கு கட்டி வைத்து விட்டனர். அவர் மூலமாக சாஸ்திரக் கனிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.

இதனால் மனம் உடைந்து நீண்ட காலமாக கல்யாணமே செய்து கொள்ளாமல் இருந்து வந்தார் ராஜேந்திரன். பின்னர் அவரது தாயார் செல்லம்மாளின் வற்புறுத்தல் காரணமாக அனிதா என்ற பெண்ணை மணந்தார்.

ஆனால் மணமான ஒரே மாதத்தில் அனிதாவைப் பிரிந்து விட்டார். அதேபோல சாஸ்திரக் கனியின் கணவருக்கு, மனைவியின் முதல் காதல் தெரிய வந்ததால் அவரும் பிரிந்து போய் விட்டார்.

இருவரும் துணையின்றி தனி மரமானார்கள். இதையடுத்து மீண்டும் பழைய பழக்கம் துளிர்த்து நெருங்கிப் பழக ஆரம்பித்தனர்.

ராஜேந்திரன் சென்னை வேளச்சேரி நேரு நகரில் வசித்து வந்தார். பெருங்குடியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் மின்கணக்கீட்டாளராகப் பணியாற்றி வந்தார். சாஸ்திரக்கனி வடபழனி காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் ஜூன் 30ம் தேதி முதல் ராஜேந்திரனைக் காணவில்லை. இதுகுறித்து வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் செல்லம்மாள். வேளச்சேரி போலீஸார் நடத்திய விசாரணை யில் சாஸ்திரக் கனி சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து பெண் போலீஸாரை விட்டு சாஸ்திரக் கனியிடம் தீவிர விசாரணை நடத்தியபோது உண்மை தெரிய வந்தது.

ராஜேந்திரன் வெட்டிக்கொல்லப்பட்டு விட்டார் என்றும், அவரது உடலை எரித்து விட்டதாகவும் சாஸ்திரக் கனி கூறியுள்ளார்.

இதையடுத்து தொடர்ந்து நடந்த விசாரணையில், சாஸ்திரக்கனியின் கள்ளக்காதலரான வீரராஜன்தான் தனது கூட்டாளிகளோடு சேர்ந்து இந்தக் கொலையைச் செய்தது தெரிய வந்தது.

ஒரு வருடத்திற்கு முன்பு வேளச்சேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார் சாஸ்திரக்கனி. அப்போது அங்குள்ள இன்ஸ்பெக்டரிடம் டிரைவராக இருந்தவர் வீரராஜன். இவருக்கு 25 வயதாகிறது. சாஸ்திரக் கனி பார்க்க அழகாக இருப்பார் என்பதால் அவரது அழகில் மயங்கினார் வீரராஜன். இதையடுத்து தனது வலையில் ஆசை வார்த்தைகளை கூறி அவரை விழ வைத்தார். அதன் பின்னர் இருவரும் கணவன், மனைவி போல உல்லாசமாக இருக்க ஆரம்பித்தனர்.

ஒருபக்கம் ராஜேந்திரன், இன்னொருபக்கம் வீரராஜன் என இரட்டை சவாரியை மேற்கொண்டு வந்தார் சாஸ்திரக்கனி. இந்த நிலையில்தான் தனது மாமியார் பாக்கியம், பெரும் தொல்லையாக இருந்து வருவதாகவும், அவரை கொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார் ராஜேந்திரன். இதைக் கேட்ட சாஸ்திரக்கனி, தன்னிடம் ஒரு ஆள் இருப்பதாக கூறி வீரராஜனை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். வீரராஜன், சாஸ்திரக்கனியின் கள்ளக்காதலர் என்பது அப்போது ராஜேந்திரனுக்குத் தெரியாதாம். அது தெரியாமல் மாமியாரைக் கொல்ல வீரராஜனிடம் பேசியுள்ளார் ராஜேந்திரன். அவரும், ரூ. 2 லட்சம் கொடுத்தால் தீர்த்துக் கட்ட ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.

இந்த சமயத்தில்தான் வீரராஜனுக்கும், சாஸ்திரக் கனிக்கும் இடையே தொடர்பு இருப்பது ராஜேந்திரனுக்குத் தெரிய வந்து அதிர்ந்தார். இதுகுறித்துசாஸ்திரக்கனியிடம் சண்டை போட்டார். முதலில் எனது மாமியாரை தீர்த்துக் கட்டி விட்டு உன்னைக் கவனிக்கிறேன் என்று கோபத்துடன் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு பயந்துபோன சாஸ்திரக்கனி வீரராஜனிடம் இதைக் கூற, கவலைப்படாதே என்று அவரை அமைதிப்படுத்தினார் வீரராஜன். பின்னர் தனது கொலைத்திட்டத்தை மாற்றி, பாக்கியத்திற்குப் பதில் ராஜேந்திரனை தீர்த்துக் கட்ட தீர்மானித்தார்.

இதையடுத்து தனது ஆட்களை தயார் செய்த வீரராஜன், ராஜேந்திரனைத் தொடர்பு கொண்டு திருத்தணிக்குப் போய் திட்டத்தை இறுதிசெய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதை நம்பிய ராஜேந்திரனும் அவருடன் கிளம்பினார்.

காரில் வீரராஜன் ஏற்பாடு செய்து வைத்திருந்த அவரது நண்பர்கள் வேணுகோபால், பசுபதி, முருகன் இருந்தனர். சதீஷ் என்பவர் காரை ஓட்டினார்.

திருவள்ளூர் அருகே உள்ள கே.கே.சத்திரம் எல்லப்பநாயுடு பேட்டை சுடுகாட்டில் காரை நிறுத்தி அனைவரும் கீழே இறங்கினார்கள். பசுபதியும், முருகனும் மது குடித்தனர். வீராரஜானும், ராஜேந்திரனும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது பசுபதி திடீரென்று கத்தியை எடுத்து பாய்ந்து வந்து ராஜேந்திரனை ஓங்கி வெட்டினார். இதை எதிர்பாராத ராஜேந்திரன் அலறியடித்து ஓடினார். இதைப் பார்த்த வீரராஜன், வெட்டிக் கொல்லுங்கள் விடாதீர்கள் என்று சத்தம் போட்டு துரத்தினார். மற்றவர்களும் துரத்தினர். நீண்டதூரம் ஓடிய ராஜேந்திரன் ஒரு கட்டத்தில் கீழே விழுந்து விட்டார்.

இதையடுத்து அங்கேயே வைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றனர். உயிர் போனதை உறுதி செய்து கொண்ட பின்னர் ராஜேந்திரன் உடல் மீது வீரராஜன் பெட்ரோலை ஊற்றி தீவைத்தார்.

உடல் முழுவதும் எரிந்து சாம்பலான பின்னர் சென்னைக்குத் திரும்பி விட்டது இந்தக்கும்பல். பின்னர் ராஜேந்திரனின் செல்போனை எடுத்து சைதாப்பேட்டை ஆற்றில் போட்டு விட்டனர்.

அதன் பின்னர் கடந்த 26ம் தேதி சாஸ்திரக்கனியை சந்தித்த வீரராஜன் உல்லாசமாக இருந்துள்ளார். அதன் பிறகு ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டதைக் கூறியுள்ளார்.

தனது காதலர் வீரராஜனுக்கு 10 ஆயிரம் மட்டுமே கொடுத்ததாக சாஸ்திரக் கனி கூறியுள்ளார். மேலும் நேற்றுநடந்த விசாரணையின்போது கள்ளக்காதலால் தனது வாழ்க்கை சீரழிந்து விட்டதே என அழுதபடி இருந்தாராம்.

சாஸ்திரக் கனி கூறிய இந்தத் தகவல்களைத் தொடர்ந்து அவரையும், வீரராஜன், வேணுகோபால், முருகன், சதீஷையும் போலீஸார் கைது செய்தனர்.

தலைமறைவான பசுபதியை அவரது சொந்த ஊரான மதுரையில் வைத்து போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

சென்னை நகரில் கள்ளக்காதல்களும், முறை கெட்டகாதல்களும் அதிகரித்து வருவதோடு, அவை கொலையில் முடிவதும் மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளன.

புலிகளின் முன்னாள் போராளிகளில் அதிகமானோர் சாரதிகளாக பணியாற்ற விருப்பம்

தமீழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மத்தியில் நடத்திய ஆய்வின் போது பலர் சாரதியாக விருப்பம் தெரிவிப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகோடியர் சுதந்த ரனசிங்க தெரிவித்தார்.

புலிகளின் முன்னாள் போராளிகள் மத்தியில் நடத்திய கருத்துக் கணிப்பின் போது புது வாழ்க்கை அமையும் பட்சத்தில் சாரதியாக வேண்டும் என 941 பேர்  விருப்பம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர்களில் 20 பேர் உளவியலாளர்களாகவும் எட்டுப் பேர் கணக்காளர்களாகவும் 51 பேர் சிகை அலங்கரிப்பாளர்களாகவும் இரண்டு பேர் பேக்கரி இயக்குனர்களாகவும் 50 பேர் அழகுக்கலைஞர்களாகவும், 262 பேர் தொழிலாளிகளாகவும் 280 பேர் தச்சர்களாகவும் 48 பேர் நகை வடிவமைப்பாளர்களாகவும் 222 பேர் கணினி இயக்குனர்களாகவும் தொழில் புரிய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மேலும் 252 பேர் தையற்காரர்களாகவும், 107 பேர் ஆசிரியர்களாகவும் 14 பேர் தொழிலாளிகளாகவும் வாழ்கை ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் போரளிகளுக்கு புனர்வாழ்வளிப்பதன் இறுதியில் பொருளாதர பாதுகாப்பு ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

தற்போது இவர்களுக்கான உளவியல் ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். இந்த போராளிகளில் பெரும்பாலனேர் இந்துக்கள். அவர்கள் சமயப்பற்று கொண்டவர்களாக உள்ளனர். அத்துடன் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மீன் மற்றும் மாமிசம் உண்பதை தவிர்த்து வருகின்றனர் எனவும் அவர் கூறினார். 

ஏற்கனவே 100 புலிகளின் முன்னாள் போரளிகளுக்கு பயிற்சியளித்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் வடபகுதி அரச போக்குவரத்து வண்டிகளில் சாரதிகளாகவும் நடத்துனர்களாகவும் பணியாற்றுகின்றனர்.

முன்னர் இவர்களில் 155 பேர் சமையற்காரர்களாகவும் 585 பேர் சாரதிகளாகவும் 122 மோட்டார் திருத்துனர்களாகவும் 401 பேர் தாதியர்களாகவும் 48 அழகுக்கலைஞர்களாகவும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
www.thenee.com 

புலிகளின் மனைவிமாருக்கு மாத்திரமின்றி அவர்களினால் கொல்லப்பட்டவர்களின் மனைவியருக்கும் நிவாரணம்

விடுதலைப் புலிகளின் மனைவிமாருக்கு மாத்திரமின்றி அவர்களினால் கொல்லப்பட்டவர்களின் மனைவியருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் - சித்தார்த்தன்
புனர்வாழ்வளிக்கப்பட்டு நிவாரணங்களை வழங்க வேண்டியது பாலகுமார் மற்றும் திலகர் ஆகியோர் விதவை மனைவிகளுக்கு மாத்திரமல்ல எனவும் விடுதலைப்புலிகளினால் கொலை செய்யப்பட்ட தமது உறுப்பினர்களின் விதவை மனைவிமாருக்கும் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டியூ.குணசேகரவிடம் சுட்டிக்காட்டியுள்ளார். 20 முதல் 30 வருடங்களாக பாதிப்புகளுக்கும் கொலைகளுக்கும் உள்ளான தமது அமைப்பின் உறுப்பினர்களின் விதவை மனைவிமார் பிள்ளைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அதிகாரிகள் எவரும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சித்தார்த்தன் கூறியுள்ளார்.  கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட கே.பி போன்றவர்களையே ராஜபக்~ அரசாங்கம் மடியில் வைத்து அன்பு பாராட்டி வருவதாகவும் புலிகளின் வன்முறைகளுக்கு அஞ்சாது செயற்பட்ட தமது உறுப்பினர்களையும் அவர்ளது விதவை மனைவிமார்களையும் பிள்ளைகளையும் ராஜபக்~ அரசாங்கம் முற்றாக மறந்து போயுள்ளது எனவும் சித்தார்தன் கூறியுள்ளார். 

முகாமில் உள்ள புலிகளுக்கு சர்வதேச வலையமைப்புடன் தொடர்பு? –

புனர்வாழ்வு முகாமில் உள்ள புலிகளுக்கு சர்வதேச வலையமைப்புடன் தொடர்பு? – இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு

மன்னார் மருதமடு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தம்மிடம் இரகசியமான முறையில் மறைத்து வைத் திருந்த 17 கையடக்க தொலைபேசிகள் உட்பட பல உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
சில கையடக்கத் தொலைபேசிகளை அவர்கள் தமக்கு தேவையான நேரத்தில் பயன்படுத்திய பின்னர் புதைத்துவைத்திருந்த தாகவும் அவர் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய புலிகளின் சந்தேக நபர்கள் வெளிநாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொண்டுள்ளனர்.    இவர்கள் தமது சர்வதேச வலையமைப்பினருக்கு தகவல்களை வழங்கியிருக்கலாம் எனவும் பாதுகாப்புப் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தொலைபேசிகளில் எடுக்கப்பட்ட அழைப்புக்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கையடக்கத் தொலைபேசிகளுடன் 14 சிம் அட்டைகள் முப்பது பற்றரிகள் மற்றும் 21 சார்ஜர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.  புனர்வாழ்வு முகாமில் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.  அதே வேளை இது குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் துரிதமான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புனர்வாழ்வு முகாம்களில் உள்ள புலிகளின் சந்தேக நபர்கள் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருப்பது தடைசெய்யப் பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணை யாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.    எனினும் ஒரு தொலைபேசியில் உள்வரும் அழைப்புக்களுடன் தொடர்பு கொள்வதற்கு மாத்திரம் கண்காணிப்புடன் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுவருகிறது. அதேவேளை தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் ரணசிங்க கூறியுள்ளார்.
மருதமடு முகாமில் கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட் டுள்ளமை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் இந்த முகாமில் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 500 பேருக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் சுதந்த ரணசிங்க மேலும் கூறியுள்ளா

கார்த்தி நடிகருக்கு பெண் கொடுக்க தயங்குகிறார்கள்

சினிமா நடிகருக்கு பெண் கொடுக்க தயங்குகிறார்கள்:நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், ‘’எங்கே போனாலும் உங்களையும், தமன்னாவையும் இணைத்து கிசுகிசுக்கப்படுகிறதே... வருத்தம் இல்லையா?’’என்று கேட்டதற்க
’’அதில் உண்மை இல்லை. வெறும் வதந்தி. பிறகு எதற்கு வருத்தப்பட வேண்டும்? பிரபலமாகி வருபவர்களை பற்றி வழக்கமாக வரும் விஷயம்தான் இது என்று சுலபமாக எடுத்துக்கொள்கிறேன
. எந்தவிதத்திலும் நான் வருத்தப்படவும் இல்லை.

கவலைப்படவும் இல்லை. இந்த வதந்தி ஒரு பெண்ணை பாதிப்பதால், மறுப்பு தெரிவித்து வருகிறேன்.
உங்களுக்கு பெண் பார்ப்பதாக கேள்விப்படுகிறோம்.
உண்மையா?என்ற கேள்விக்கு,
’’ உண்மைதான். எனக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். எங்க அம்மா மிக தீவிரமாக எனக்கு பெண் தேடி வருகிறார்.

தமிழ்நாடு முழுவதும் மணப்பெண் வேட்டை நடக்கிறது. வேலைக்கு போகும் பெண்ணை திருமணம் செய்துகொள்வதில், எனக்கு உடன்பாடு இல்லை. வீட்டுக்கு அடங்கிய பெண்ணாக இருக்க வேண்டும். குடும்பத்தை கவனித்துக்கொள்கிற பெண்ணுக்காக, நான் காத்திருக்கிறேன்.
சினிமா நடிகருக்கு பெண் கொடுப்பது என்றால், பெற்றோர்கள் கொஞ்சம் தயங்கத்தான் செய்கிறார்கள். எங்க குடும்பத்தை பற்றி முழுமையாக தெரிந்து இருந்தால், தயங்க மாட்டார்கள்.

பொதுவாகவே ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும்போது டாக்டர், என்ஜினீயர், நடிகர் என்று மூன்று மாப்பிள்ளைகளின் ஜாதகம் வந்தால், டாக்டரையும், என்ஜினீயரையும்தான் முதலில் தேர்வு செய்வார்கள். அதை தப்பு என்று சொல்ல முடியாது’’என்று தெரிவித்தார்.

கேபி, பிரபாகரன் யாருடைய ஆலோசனையையும் கேட்கத் தயாராக இல்லை.

முடிந்து போன போராளி இயக்கத்திற்கு (விடுதலைப் புலிகள் [^] இயக்கத்தின் சிற்பிகளில் ஒருவரான கேபி, அந்த இயக்கத்தைத்தான் இப்படி போராளி இயக்கம் என்று கூறுகிறார்) மீண்டும் உயிர் கொடுக்க முனைவது, பல்வேறு பிரச்சனைகளுக்கே வழி வகுக்கும் என்று கூறியுள்ளார் கேபி.

ராணுவப் பிடியில் சிக்கியுள்ள கேபி என்கிற குமரன் பத்மநாதன் இலங்கையின் ஐலன்ட் நாளிதழுக்கு கொடுத்துள்ள பேட்டியின் 2ம் பாகம்:

4வது ஈழப் போரின் கடைசி மாதங்களில் நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா? வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைமை தப்ப முடியாத அளவுக்கு சிக்கியிருந்ததா? ராணுவத்தை தடுக்க முடியவில்லை என்று உங்களது தலைமை உங்களிடம் கூறியதா?

பிரபாகரன், அவரது முக்கியத் தளபதிகள், புலம் பெயர்ந்த தமிழர்களில் சில பிரிவினர், தமிழ்நாடு நமக்கு உதவும் என நம்பியிருந்தனர். தமிழக அரசியல் கட்சிகள் தங்களுக்கு உதவ முன்வரும், பிரதமர் மன்மோகன் சிங் [^] இலங்கைப் பிரச்சனையில் தலையிடுவார் என அவர்கள் பெரிதும் நம்பினர்.

நாங்களும் கூட சில ஐ.நா. அதிகாரிகளை அணுகினோம், கிழக்கு தைமூர் அதிபரை அணுகினோம். ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உடன்பாட்டை ஏற்படுத்த முயன்றோம். இந்த நேரத்தில்தான் 2009ம் ஆண்டு மே மாதம் 3வது வாரத்தில் விடுதலைப் புலிகள் வசம் இருந்த கடைசிப் பகுதியையும் ராணுவம் சுற்றி வளைத்து விட்டது.

தற்போது விடுதைலப் புலிகளின் ராணுவ கட்டமைப்பு இல்லை. இந்த நிலையில், அரசுடன் இணைந்து செயல்பட புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்வருவார்கள் என கருதுகிறீர்களா?

புலம் பெயர்ந்த மக்களின் மன நிலையில் மாற்றம் வர வேண்டியது அவசியம். விடுதலைப் புலிகளின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைந்து போய் விட்டது. எனவே புதிய சூழ்நிலை குறித்து பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். தற்போதைய நிலையை புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் சிந்தித்துப் பார்க்க முன்வர வேண்டும். அதற்கேற்ப அவர்கள் செயல்பட வேண்டும்.

முடிந்து போன போராளி இயக்கத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைவது, பல்வேறு பிரச்சனைகளுக்கே வழி வகுக்கும். எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்து திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம்.

இப்போது ராணுவரீதியான பலம் விடுதலைப் புலிகளிடம் இல்லை என்பதால் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

இந்த இடத்தில்தான் நாங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட விரும்புகிறோம். புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கைக்கு திரும்புவது தொடர்பான பணிகளில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள வடக்கு கிழக்கு மறு சீரமைப்பு வளர்ச்சிக் கழகம் தயாராக உள்ளது. இந்த வாய்ப்பை புலம் பெயர்ந்த தமிழர்கள் விட்டு விடக் கூடாது. ஒரு வருடத்திற்கு முன்பு வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுதந்திரமாக நடமாட முடியும் என யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது.

வெளிநாடுளிலிருந்து ஆயுதங்களைப் பெற்று அனுப்புவதில் நீங்கள் மிகவும் வெற்றிகரமானவர் என்று அறியப்பட்டவர் நீங்கள். அப்படி இருக்கையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒருவரை உங்களது இடத்தில் அமர்த்தினார் பிரபாகரன். எப்போது அதைச் செய்தார், ஏன் செய்தார்?

2003ம் ஆண்டு நான் நீக்கப்பட்டேன். வெளிநாட்டுக் கட்டமைப்பை காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார் பிரபாகரன். உளவுப் பிரிவினரின் தொடர் கண்காணிப்பு காரணமாக நான் மிகவும் அடக்கி வாசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். (இலங்கை உளவுப் பிரிவினரின் திறமை காரணமாகத்தான் வெளிநாடுளில் புலிகள் அமைப்பின் செயல்பாடுகள் முழுமையாக செயலிழந்து போனதாக கூறியுள்ளாராம் கேபி)

உங்களது ஆதரவாளரான ரணில் விக்கிரமசிங்கே தேர்தலில் தோற்றது ஏன்?

அப்போதைய பிரதமர் உறுதியானவராக இல்லை என்று பிரபாகரன் கருதினார். ஈழப் பிரச்சனையை ரணில் விக்கிரமசிங்கேவால் தீர்த்து வைக்க முடியாது என்பது அவரது எண்ணம். இதன் விளைவாக மகிந்தா ராஜபக்சே வெற்றி பெற முடிந்தது. ராஜபக்சேவுக்கு முன்பு இருந்த தலைவர்களை எளிதில் வென்ற பிரபாகரனுக்கு ராஜபக்சேவை வெல்ல முடியவில்லை.

2006 ஆகஸ்ட் மாதம் மீண்டும் சண்டைகளில் ஈடுபடுவதற்கு முன்பு உங்களிடம் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆலோசனை நடத்தியதா?

பாதுகாப்பு படையினர் மீது மிகப் பெரிய தாக்குதலை தொடுப்பதற்கு முன் என்னுடன் பிரபாகரன் ஆலோசனை நடத்தினார். உடனடியாக பெருமளவிலான ஆயுதங்களை வாங்கி அனுப்புமாறு அவர் என்னிடம் கேட்டுக் கொண்டார்.மேலும் இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

அதேசமயம், ராணுவரீதியாக ஈழத்தை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில் பிரபாகரன் உறுதியாக இருந்தவரை அவர் யாருடைய ஆலோசனையையும் கேட்கத் தயாராக இல்லை.

நீங்கள் தற்போது கொழும்பில் இருப்பதால், உங்களுக்கும் அரசுக்கும் ஒப்பந்தம் ஏற்படும், அதனால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என சில தமிழ் அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். அப்படி ஏதேனும் உள்ளதா?

நான் கொழும்பில் இருப்பதால் யாரும் பயப்படத் தேவையில்லை. தற்போதைய தேவை போருக்குப் பிந்தைய பிரச்சனைகளைத் தீர்க்கத் தேவையான அரசியல் அணுகுமுறை மட்டுமே. போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவவும், வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் கட்டியெழுப்பவும் தேவையான ஒருங்கிணைந்த திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். இதைத் எந்த அரசியல் தலைவருடனும், கட்சியுடனும் மோதும் எண்ணம் எனக்கு இல்லை.

தமிழ் சமுதாயத்தின் நன்மைக்காக, புலம் பெயர்ந்த தமிழ் சமூகமும், அரசியல் கட்சிகளும், பிரிவுகளும், இலங்கையில் ஒருங்கிணைந்து செயல்பட முன்வர வேண்டும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முன்வர வேண்டும். மற்றபடி எனக்கு வேறு எந்த அரசியல் அபிலாஷைகளும் இல்லை.

இலங்கை அரசை தவிர்த்து விட்டு எதையும் செய்யலாம் என்று நான் நினைக்கவில்லை. அதுசாத்தியமில்லை. பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

புலிகளுக்கு உங்களது நிதி சேகரிப்பு எப்படி இருந்தது?

மிகப் பெரிய அளவில் அப்போது எங்களுக்கு நிதி சேர்ந்தது. நிதிக்குப் பஞ்சமே இல்லை என்று கூறும் அளவுக்கு வந்தது. பல்வேறு தரப்பிலிருந்தும் பணம் வந்தது. சுனாமியின்போதும் கூட எங்களுக்கு பெருமளவில் பணம் வந்தது. இருப்பினும் அதுகுறித்து என்னால் விரிவாகச் சொல்ல முடியாது. காரணம், அவற்றையெல்லாம் அப்போது பராமரித்தது காஸ்ட்ரோதான். அவர் ஒருபோதும் என்னுடன் ஒத்து வந்ததே இல்லை.

பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர், இந்த நிதி குறித்து புலம் பெயர் தமிழ்ச் சமுதாயத்தினர் விவாதித்தனர். அவர்களில் சிலர் வசம் நிதிப் பொறுப்பு இருந்தது. அவர்கள் உடன்பட்டு வர மறுத்து விட்டனர். இதனால்தான் பெரும் பிளவு ஏற்பட வாய்ப்பானது.

பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவை எப்போது சந்தித்தீர்கள்?

நான் பிடிபட்டு கட்டுநாயகே விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, மிகவும் மனம் உடைந்திருந்தேன். மிகவும் பதட்டத்துடன் இருந்தேன். எனது முடிவு நெருங்கி விட்டதாக கருதினேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சியும், என்னை அவர்கள் கைது செய்ததும் எனது இதயத்தை நொறுங்கச் செய்தது.

கட்டுநாயகே விமான நிலையத்திலிருந்து நேராக என்னை கோத்தபயா வீட்டுக்குக் கொண்டு சென்றனர். மிகச் சிறந்த நிர்வாகியாக, திறமையாளராக அறியப்பட்ட கோத்தபயா ராஜபக்சேவை அப்போது எனக்கு சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரை சந்தித்த அடுத்த சில நிமிடங்களிலேயே எனது அனைத்துப் பயத்தையும் அவர் போக்கி விட்டார். எனக்கு டீ, கேக் தரப்பட்டது. பின்னர் அங்கிருந்து நான் அழைத்துச் செல்லப்பட்டேன்.

கோத்தபயா வீட்டுக்குள் நான் நுழைந்ததும் அங்கு ஒரு புத்தர் சிலையைப் பார்த்தேன். அதைப் பார்த்ததும் எனக்கு நம்பிக்கை வந்தது. இங்கு எனக்கு எதுவும் நடக்காது என்ற தைரியம் கிடைத்தது.

பின்னர் கோத்தபயாவின் ஆசிர்வாதங்களுடன், கனடா, இங்கிலாந்து [^], பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா [^], ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து 9 தமிழர்களை நான் கொழும்புக்கு அழைத்து வந்து அவரை சந்திக்க வைத்தேன். மறு வாழ்வு நடவடிக்கைகளில் அவர்களது உதவியைப் பெறுவது தொடர்பாக அப்போது விவாதிக்கப்பட்டது.

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான விரிசலை குறைக்க நிறைய செய்ய வேண்டியுள்ளது. இதற்காக நான் பல நாட்கள் இரவு கூட தூங்காமல் விழித்திருந்து பாடுபட்டேன். எங்களது நடவடிக்கையை சிலர் எதிர்க்கிறார்கள். ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லை, அதன் ராணுவ பலம் இல்லை என்பதை உணர்ந்து அவர்கள் செயல்பட முன்வர வேண்டும்.

அரசின் அனுமதியோடு நாங்கள் படைத் தலைவர்கள் சிலரையும் சந்திக்க முடிந்தது. ராணுவம் எங்களை இதமாக, அன்பாக வரவேற்கும் என நான் கருதவே இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை. குறிப்பாக பலாலியில் அப்படி ஒரு வரவேற்பு எங்களுக்குக் கிடைக்கும் என கருதவில்லை. ஆனால் அவர்கள் என்னை அன்போடு வரவேற்றுப் பேசினர்.

(பேட்டியின் இறுதிப் பகுதி நாளை தொடரும்)

பதிவு செய்தவர்: valluvan
பதிவு செய்தது: 30 Jul 2010 11:00 pm
வரலாறு காலத்தினால் அழியாத ஒன்று .... சகாப்தங்கள் தலைமுறை தலைமுறையாக காக்க படும் . தமிழ் வாழ்க ......... மாவீரர்கள் புகழ் ஓங்குக .............


பதிவு செய்தவர்: வீரனா
பதிவு செய்தது: 30 Jul 2010 10:49 pm
ராணுவமும், போலிசும் சோம்பல்பட்டுக்கொண்டு காட்டுக்குள் போகாததால் , காட்டுக்குள் இருந்த வீரப்பனும், பிரபாவும் தங்களை தாங்களே வீரன் , அழிக்க முடியா வலிமை கொண்டவன் என்று நினைத்து கனவு கண்டார்கள். கூலி வாங்கிய சிலரின் "தமிழ் தலைவா" என்ற கோஷத்தில் ராணுவ, போலிசின் படை வீரமறியாமல் கிடந்தது ஒழிந்து போனார்கள். நாட்டுக்கு வந்து கொலை செய்துவிட்டு ஓடிச்சென்று காட்டில் பதுங்கி கொண்டால் வீரனா? வீரனென்றால் உங்களுக்கு குரங்குகள் வாழும் காட்டில் என்னடா வேலை?

ஜெய்ய்..,யிக்கிறது தெலுங்கானா தனி மாநில கோஷம்; டி.ஆர்.எஸ்.,- 6 ; பா.ஜ.,-1; காங்.,- 0

ஐதராபாத்: ஆந்திர மாநிலம் தெலுங்கானா பகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் சந்திரசேகரராவ் கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. அறிவிக்கப்பட்ட முடிவுகளில் ‌தெலுங்கானா ராஷட்ரிய சமிதி கட்சி 6 இடங்களையும், பா.ஜ., 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்க முடியவில்லை. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலையில் உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு ஆணை பிறப்பித்து திரும்ப பெற்றது. இதனால் மாநிலத்தில் பெரும் கலவரம், வன்முறை வெடித்தது. இதில் காங்., தெலுங்குதேசம், தெலுங்கான ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.,க்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து தனது செல்வாக்கை தெலுங்கானா மக்கள் மத்தியில் உயர்த்திக்கொண்டார்.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி இந்த 12 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. வாக்காளர்களுக்கு உற்சாக பானம். கவர் கவனிப்பு, மற்றும் பிரியாணி என பல விதங்களில் கவர்ந்து இழுக்கப்பட்டனர். வீட்டுக்கு , வீடு யாருக்கும் தெரியாமல் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் பின் செய்து போடப்பட்டது. இந்த இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது.

தேர்தல் நடந்த தொகுதிகள் வருமாறு : சிர்புர், சென்னூர், மான்செரியல், நிஜாமாபாத், தர்மபுரி, வெமுலவாடா, சித்திபேட் , எல்லாரெட்டி, கோர்த்தலா, சிர்சில்லா, ஹூசுராபாத், வாரங்கல் (மேற்கு), ஆகிய 12 தொகுதிகள் அடங்கும். முதலில் முறையே 7 தொகுதிகளில் மின்னணு ஓட்டு இயந்திரம் மூலமும் ஏனைய 5 தொகுதிகளில் ஓட்டுச்சீட்டு முறையும் பின்பற்றப்பட்டன. இன்று காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும், ஆரம்பம் முதலே 11 தொகுதிகளில் தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி வேட்பாளர்கள் கூடுதல் ஓட்டுக்கள் பெற்று முன்னிலை வகித்து வருகின்றனர். ஒரு தொகுதியில் மட்டும் பா.ஜ.., முன்னிலை வகிக்கிறது.

ஆந்திர மாநில காங்., தலைவர் சீனிவாசன் தோல்வியுற்றுள்ளார்.  காங்கிரஸ், மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியினர் ஒரு இடத்தில் கூட முன்னேற முடியவில்லை. மொதத்தில் இந்த இடைத்தேர்தலில் ஜெய் தெலுங்கானா கோஷம் ஜெய்ய்..., யிக்கிறது.

தமிழன் - madurai,இந்தியா
2010-07-30 22:01:40 IST
இதே தோல்வி காங்கிரேச்சிக்கு தமிழ் நாடிலும் கிடைக்கும் , பி tamilan...
அப்துல் ரவூப் - abudhabi,இந்தியா
2010-07-30 20:46:24 IST
மக்கள் தங்கள் கோரிக்கையை மிக வலுவாஹா எழுப்பி இருக்கிரர்ஹல்...
பீட்டர் - CHENNAI,இந்தியா
2010-07-30 20:16:27 IST
தீவிரவாதிகளின் கட்சி (காங்கிரஸ்) ௦ ஜீரோ... மிக்க மகிழ்ச்சி.......
இந்தியன் - chennai,இந்தியா
2010-07-30 19:53:43 IST
Sorry கதர் அமீர் - kualalumpur,மாலத்தீவு, Don't follow CM words. I am follower of DMK, evnethough I am telling don't lisition CM desicion (ஜாதி வாரி கணக்கெடுப்பு). One day it will split Tamil Nadu. I allways say Be Indian, sameway Be Tamlian. Because we have to live togeather enjoy human life. This life is like bottel glass, Once break we can't joint togeather. ஜாதி is worst to split people. Ramadas and Kaduvetti all are looking there home development. People need to understand. Be happy and live togeather....
A NAGAMANI - CHENNAI,இந்தியா
2010-07-30 19:28:54 IST
TRS jeyithuvilldhu telungana state udane uhyamagavendum...
ramkumar - chennai,இந்தியா
2010-07-30 19:19:51 IST
இது உண்மையான தேர்தல். வாக்கு சீட்டு வைத்தால் காங்கிரஸ் தோற்துவிடும். மிஷின் வைத்தால் தில்லு முள்ளு செய்து காங்கிரஸ் ஜெயித்துவிடும் . நல்ல வேலை தில்லு முள்ளு நவீன் சாவ்லா இல்லை...
இரா.கோதண்டபாணி - Chennai,இந்தியா
2010-07-30 18:57:32 IST
மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். தெலுங்கான தனியாக பிரித்துக் கொடுத்து விட வேண்டியதுதான். இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய மாநிலங்களையும் பிரித்தால்தான் மக்கள் நலன்களை சரிவர நிறைவேற்ற முடியும். ஆந்திர உண்டாகும் பொழுதே தெலுங்கான கோரிக்கை எழுந்தது. அதற்குப் பிறகும் போராட்டங்கள் வந்தது. முன்னாள் பிரதமார் திரு நரசிமராவ் டெல்லி அரசியலுக்கு மாறியதே இந்த பிரச்சனையால் தான். அங்குள்ள மக்கள் தெளிவாக தங்கள் கருத்தை தெரிவித்து விட்டார்கள். காங்கிரஸ் இனியும் காலம் தாழ்த்துவது தேவை இல்லாத ஒன்றுதான்....
jaykay - india,இந்தியா
2010-07-30 18:53:11 IST
தமிழ்நாட்டுக்கு பீடை பிடித்து நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆந்திராவிற்கு இப்பொழுது பிடிக்க ஆரம்பித்திருகிறது....
பா.சரவனகார்த்திக் - Rajapalyam,இந்தியா
2010-07-30 18:04:37 IST
இதுதான் மக்கள் தீர்ப்பு என்பது!! மக்கள் என்றும் மடையர்கள் அல்ல என்பதை பல சமயம் நீருப்பித்து வருகின்றனர்!! அது போலத்தான் இதுவும்!! மக்களுக்கத்தான் அரசே தவிர அரசுக்காக மக்கள் அல்ல என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் ஆகவே உடனடியாக மக்களின் உணவிற்கு மதிப்பு கொடுத்து மக்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றி அரசு மக்களுக்க்காகத்தன் என்பதை உணரவைக்க வேண்டும் !!! ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹிந்த்...
INDRAJIT - Benares,இந்தியா
2010-07-30 16:25:32 IST
பொட்டி ஸ்ரீராமுலு செத்துப் பெற்றுக் கொடுத்த ஆந்த்ரா போலில்லை இது ! நல்ல வெற்றியல்ல இது. பின்னால் தொடரப்போகும் பல பாதகங்களின் அறிகுறிதான் இது ! பாவம் ! ஆந்திரச் சகோதரர்கள் ! மிகப் பெரிய இழப்புகளுக்குத் தங்களைத் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும் அவர்கள். ஆந்த்ராவை ஏழரைச் சனி ( சந்திரசேகர ராவ் ) பிடித்துவிட்டது !...
kaMALESH - CHENNAI,இந்தியா
2010-07-30 14:50:58 IST
வெல்க பிஜேபி...
கொண்டா ராஜு - hyderabad,இந்தியா
2010-07-30 14:31:18 IST
மக்கள் பணம் வீணடிப்பு. செல்வாக்கு உள்ள இடத்தில ராஜினாமா செய்வது பிறகு பணம் கொடுத்து செய்கிறது....
nagarajan - saudiarabia,இந்தியா
2010-07-30 13:59:09 IST
i think in the andera pradesh must be divide 2 states....
மலைச்சாமி kanikkoor - abudhabiuae,இந்தியா
2010-07-30 13:39:52 IST
ஆந்திர மக்கள் சிந்தித்ததை தமிழ் மக்கள் சிந்திக்கவில்லை .விரைவில் தமிழ் நாட்டிலயும் காங்கிரஸ்க்கு தக்க பதில் அளிப்பார்கள்...
siva - tirupur,இந்தியா
2010-07-30 13:24:08 IST
சபாஷ் மக்களே. தெலுங்கான மக்களுக்கும் , சந்திரசேகர் ராவ் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பணநாயகதை ஜனநாயகம் வென்றிருக்கிறது. பணம் மற்றும் இலவசங்கள் எல்லா இடத்திலும் மதிப்பு பெறாது மற்றும் வெல்லாது. காங்கரஸ் பொய்வேஷம் அணைத்து மக்களுக்கும் புரிய வேண்டும். காங்கிரஸ் இனியாவது திருந்தவேண்டும். சிவா-திருப்பூர்....
ச.ரவி KUMAR - HYDERABAD,இந்தியா
2010-07-30 13:07:49 IST
காங்கிரஸ் மீண்டும் ஒரு முறை கோஷ்டி பூசல் நடத்தி தன தலயில் தானே மண்ணை வாரி போட்டுகொண்டது என்ன ஜெயில் டிராமா நடத்தினாலும் என்னதான் யாத்திரை போனாலும் மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு. பார்ப்போம் இந்த முறையாவது இவர்கள் என்ன பண்றங்கன்னு?...
Rajesh - Madurai,இந்தியா
2010-07-30 12:17:04 IST
இங்கேயும் இடைதேர்தலுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. ஆந்திர மக்கள் பணம் கொடுத்தாலும் நல்லவரை தேர்தேடுகிரார்கள். ஆனால் நம் மக்கள் கண்மூடி தனமாய் இருக்கிறார்கள் . ஓட்டளிக்கும் உரிமையை சரியாய் ஆந்திர மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் . வாழ்க ஜனநாயகம் !...
கதர் அமீர் - kualalumpur,மாலத்தீவு
2010-07-30 11:39:16 IST
ஜாதி வாரி கணக்கெடுப்பு முதல்வரின் முடிவு நல்ல ஒரு ஆரோக்கியமான முடிவு எந்த ஜாதி யந்த இடத்தில் இருப்பதை காணலாம் மருத்துவர் ராமதாஸ் வரவீர்பரா பதிலை பார்க்கலாம் நன்றி தினமலர்...
மதுரைக்காரன் - tamilnadu,இந்தியா
2010-07-30 10:48:47 IST
ஜெய் தெலுங்கான கோஷம் வெற்றி வாழ்த்துக்கள் மக்களே ... வரும் சட்டசபை தேர்தலில் தமிழர்கள் தங்கள் தமிழ் இன மானத்தை கண்டிப்பாக காட்டி ... "" தன்மான தமிழன்"" கோஷத்தை வெற்றி பெற வைப்பார்கள்..... நம்பிகையுடன் ஒரு தமிழன் ......

பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்!

பாரிஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்த வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நர்ஸ் கைது செய்யப்பட்டு்ள்ளார்.

டோமினிக் கார்டேஸ் என்ற இந்த நர்சின் வில்லேஸ் ஆவ் டெர்ட்ரே நகர் அருகே உள்ள லில்லே கிராமப்புற வீட்டிலிருந்து 6 சிசுக்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மிக உடல் பருமன் கொண்ட இந்த 40 வயதுப் பெண்ணுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் 20 வயதுக்கு மேலானவர்கள்.

முதல் முறையாக இவருக்கு பிரசவம் நடந்தபோது உடல் பருமன் காரணமாக பெரும் வலியையும் வேதனையையும் இவர் அனுபவித்தாராம். இந்த வேதனையால் மனரீதியில் பாதிக்கப்பட்ட அவர் தனக்கு அடுத்துப் பிறந்த 8 குழந்தைகளையும் கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்துள்ளார்.

இந்த வீட்டை சமீபத்தில் இந்தத் தம்பதி விற்றது. இதையடுத்து புதிதாக வாங்கியவர்கள் வீட்டு வளாகத்தில் செடிகளை நட தோண்டியபோது இரு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் சிக்கின. இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் தந்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் டோனிமிக் கார்டேஸ் அடுத்தடுத்து 8 குழந்தைகளை கழுததை நெரித்துக் கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.

இதில் 6 குழந்தைகளின் உடல்கள் இந்தத் தம்பதி இப்போது வசிக்கும் சென்டியர் டி ப்ரூ வீட்டு வளாகத்தி்ல் மீட்கப்பட்டன. இந்த உடல்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வீட்டின் தரைப்பகுதி கிட்டங்கியில் போட்டு வைத்திருந்தார் கார்டேஸ். இந்த உடல்களும் எலும்புக் கூடுகளாகிவிடடன.

இந்தக் கொலைகளுக்கும் தனது கணவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போலீசாரிடம் கார்டேஸ் தெரிவித்துள்ளார். மேலும் தான் கர்ப்பமானது கூட அவருக்குத் தெரியாது, குழந்தைகள் பிறந்ததும் தெரியாது என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து கணவர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார். கார்டேஸ் தொடர்ந்து சிறையில் உள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது.

ஒரு நர்ஸ் என்ற வகையில் கருத்தரிக்காமல் இருக்கவாவது முயன்றிருக்கலாமே என்று போலீசார் கேட்டதற்கு, இதற்காக நான் டாக்டரைப் பார்க்க விரும்பவில்லை என்று கார்டேஸ் பதிலளித்துள்ளார்.
பதிவு செய்தவர்: விமல் பிரான்சிலிருந்து
பதிவு செய்தது: 30 Jul 2010 11:49 pm
பிரான்சில் பச்சிளங்குழந்தை கடத்தல் அதிகமாக காணபடுகின்றது ஒருவேளை இந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைகளாக இருக்காது கடத்தி வந்து கொலை செய்ய பட்டிருக்கலாம் காரணம் தான் கருவுற்றதும் குழந்தைகள் பிறந்ததும் கணவருக்கு தெரியாது என்று கூறுவது சந்தேகம் அளிக்க கூடியதாக இருக்கின்றது

பதிவு செய்தவர்: ram
பதிவு செய்தது: 30 Jul 2010 11:47 pm
இவளெல்லாம் ஒரு தாயா?... இவளே அடிசெய் கொள்ள வேண்டும்

ரஜினி-மாறன் சகோதரர்கள் மலேஷியா பயணம்


சன் பிக்சர்ஸ் நேரிடையாக தயாரித்திருக்கும் படம் எந்திரன்.  ரஜினி-ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கும் இப்படத்தை மிகப் பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.


இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நாளை 31.7.2010 மலேசியாவில் கோலாலம்பூரில் நடக்கிறது.

 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தோடு மலேஷியா சென்றுள்ளார். 
இயக்குனர் ஷங்கர் மற்றும் படப்பிடிப்பு குழுவினரும் விமானம் மூலம் மலேஷியா சென்றுள்ளனர்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மற்றும் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இன்று மலேஷியா சென்றனர்.

வெள்ளி, 30 ஜூலை, 2010

மதிமுக, பாமகவுக்கான அங்கீகாரம் ரத்து6 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள்

தமிழகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) அங்கீகாரத்தை தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. புதுவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் வாங்கியதையடுத்து, தமிழகத்தில் மதிமுகவின் மாநில கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் புதுச்சேரியில் பாமகவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேகலாயாவில் திரிமூணால் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரமும், ஒரிசாவில் ஜார்கண்ட் முத்தி மோர்ச்சாவின் கட்சிக்கும் மாநில கட்சிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு, தேசிய கட்சிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவர் மாணவிகளைப் பற்றித் தன் நண்பர்களிடம் கதைத்திருப்பது ஒலிப்பதிவாகி

என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள் அம்மணி?
(ஜீவிதன்)
மாணிக்கவூர் பகுதியில் அரிச்சந்திரன் காத்த இடத்தில் உள்ள கலவன் பாடசாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் குறித்து கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு உடனடியாகவே விசாரணை நடத்தப்பட்டிருப்பதாக அறிகிறோம். தற்போது அந்த மாகாணத்திற்குப் பொறுப்பாக உள்ள கல்வி அதிகாரி அம்மணிக்குப் பாராட்டுகள்.
ஆனால், விசாரணை நியாயமாக நடத்தப்பட்டதா என்பது பற்றி இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை. ஆற அமரவில் தகவல் அம்பலமானதும் ஒருசமாளி பிகிகேஷனு’க்காக விசாரணை நடத்தப்பட்டிருப்பாக சிலர் உணர்கிறார்கள். அது ஏனென்ற தெளிவு விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
குறித்த இந்த சூரிய ஆசிரியர் உயர் வகுப்பு மாணவிகளைப் பற்றி சக ஆசிரியர்களிடம் எவ்வாறு கதைக்கிறார் என்பதைக் கேட்டால், இவரெல்லாம் இந்தப் புனிதப் பணிக்குப் பொருத்தமே இல்லாதவர் என்பது புரியும்.
தாம் கற்பிக்கும் மாணவர்களைத் தமது பிள்ளைகளாக எண்ணி அவர்களுக்குக் கல்வியை மாத்திரமன்றி நல்லொழுக்கத்தையும் சொல்லித்தர வேண்டியவர்கள் இவ்வாறு கீழ்த்தரமான சிந்தனைகளுடன் பாடசாலைக்குச் சென்று எவ்வாறு கற்பிப்பார்கள்? அரிச்சந்திரன் காத்த இடத்துப் பாடசாலையில் மட்டும் இல்லை. பொதுவாக இந்தப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளின் நிலைமை இதுவாக உள்ளதுதான் வேதனைக்குரிய விடயம்.
மஞ்சள் வளரும் நகருக்குச் செல்லும் வழியில் உள்ளஇறுக்கமானதன்னை’யில் அமைந்துள்ள ஒரு பாடசாலையின் அதிபரை சிங்களத்தில்முதலாளி எங்கேஎன்பார்கள். இன்னும் விளக்கம் வேண்டுமென்றால் ஹட்டன் பாடசாலை ஒன்றை நினைத்துப் பாருங்கள். இப்போது புரிந்திருக்கும் இல்லையா? இவர் மாணவிகளைப் பற்றித் தன் நண்பர்களிடம் கதைத்திருப்பது ஒலிப்பதிவாகி இருக்கிறது. இவர் போதையில் (மது அல்ல) உளறுவதைப் பதிவு செய்வது இவருக்கெங்கே புரியப் போகிறது.
மலையகத்தில் கல்வி வளர்ச்சியைப் பொறுத்தவரை இரத்தின கல் மாவட்டம் படு பாதாளத்தில் இருக்கிறது என்பதை பணிப்பாளர் அம்மணி நன்கு அறிவார். பாடசாலைக் கல்வி சீரழிவதற்குப் பொதுவாக அதிபர், ஆசிரியர்களின் மெத்தனப் போக்கும், சிந்தனைக் குறைபாடும், பொறுப்பற்ற தன்மையும் முக்கிய காரணிகளாக உள்ளன.
ஆகவே, அவர்களை அந்த நிலையிலிருந்து மீட்டு கல்வித் துறை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதால்தான் இங்கு சில விடயங்களை மட்டும் குறிப்பிடுகிறோம். எவரையும் தனிப்பட்ட ரீதியில் புண்படுத்த வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. அதனால்தான் பத்திரிகா தர்மம் நின்று விளங்கியும் விளங்காமல் ஆசிரியர்களை மறைமுகமாக இனங்காட்டுகிறோம். சமூகத்தில் நற்பெயரைப் பேணி வருகிறவர்கள், எதிர்பார்க்கிறவர்கள் ஆசிரியர்கள். ஆனால் அவர்கள் சொந்தச் சமூகத்தின் பிள்ளைகள் சீரழிவதற்குக் காரணமாக இருக்கலாமோ?
கரையேறுவது எங்ஙனம் என்ற பாடத்தை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்துவிட்டு ஆசிரியர்கள் மட்டும் இக்கரையில் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கவில்லை. அவர்களின் உபரி வருமானத்திற்காக கல்விச் சமூகத்தைச் சுரண்டக் கூடாது என்பதும் ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என்பதும்தான் நமது விருப்பம்.
கல்விக்கு உரிய மண்ணில் பிறந்த பணிப்பாளர் அம்மணி அவர்களே, இரத்தினக் கல் மாவட்டத்தின் கல்வியை தூக்கி நிமிர்த்துவதற்கு நீங்கள்தான் இன்னும் பங்களிப்புச் செய்யவேண்டும். உங்கள் மீது அந்த நம்பிக்கையும் மரியாதையும் எமக்கு மட்டுமல்ல முழுக்கல்விச் சமூகத்திடமே உள்ளது. கலவன் பாடசாலை பற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்த நீங்கள், ஏன் ஏனைய பாடசாலைகளின் நிலைவரம் பற்றி அலட்டிக் கொள்வதில்லை என்று எல்லோரும் கேட்கிறார்கள்

மரத்திலிருந்து விழுந்த தமிழ் மக்களை “சிறி டெலோ” மாடு முட்டியது!

டெலோ அமைப்பில் இருந்து பிரிந்த சிறி டெலோ அமைப்பினர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகள் பெற்றுக்கொடுத்தல், காணிகளில் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக கூறி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வன்னி தகவல்கள் மூலம் எமது இணையத்தளத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அரசாங்கத்தின் அனுசரனையில் சிறி டெலோ அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போலியான கச்சேரி மூலம் இந்த மோசடிகள் அரங்கேற்றுப்பட்டு வருவதுடன் இவர்கள் அறவிடும் தொகையில் குறிப்பிடதக்களவு பங்கு அரசாங்கத்தின் அதிகாரிகளுடன் பங்கிட்டு கொள்ளப்படுகிறது எனவும் மேலும் தெரியவருகிறது. சிறிடெலோ அமைப்பின் பொறுப்பாளராக உதயன் என்பவர் செயற்பட்டு வருகிறார். இவர் நோர்வே நாட்டில் அரசியல் தஞ்சம் பெற்று அந்நாட்டு குடியுரிமை பெற்றவராவார்.
இவரை தவிர ஜெர்மனியில் குடிரிமை பெற்ற நிமோ இந்த அமைப்பில் செயற்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் 1990 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்தி அரசியல் தஞ்சம் பெற்றுக்கொண்டவர்களாவர். இதேவேளை இந்த மோசடியில் பிரித்தானியாவில் குடியுரிமை பெற்ற தீரன் என்பவரும் சம்பந்தப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை அரசுக்கு எதிராக செயற்பட்டு இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, பூசா முகாமில் அடைக்கப்பட்டிருந்தார். விடுதலையான இவர் பின்னர் பிரித்தானியாவுக்கு சென்று தஞ்சமடைந்தார்.
அரசாங்கம் மன்னார் கர்பக் வீதியில் இடம்பெயர்ந்தவர்களுக்கு இலவசமாக வழங்கிய காணிகளுக்கே இவர்கள் பணத்தை அறவிட்டு, அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் இந்த காணிகளில் பெரும் பகுதியை இவர்கள் தமது உறவினர்களுக்கு பங்கிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் அந்தத் தகவல்களின் மூலம் தெரியவருகிறது.
நன்றி: தமிழ் நியுஸ்வெப்