சனி, 3 மார்ச், 2018

Manual scavenging சட்டவிரோதமானது ஆனால் நீதிபதியின் தீர்ப்பு .. துப்புரவு பணியாளர்களுக்கு எதிராக வந்துள்ளது. (25000 ரூபாய் அபராதம் வேறு


In Madras High Court’s “considered opinion”, “Scavenger” has to clean toilets, wash inner clothes

Brinda : பள்ளர் சாதியை சேர்ந்தவர் ஒருவர் தன் கீழ் வேலை செய்யும் இரண்டு அருந்ததியர் ஜாதியை சேர்ந்த துப்புரவு பணியாளர்களை வெறும் கைகளால், கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த வழக்கில் தீர்ப்பு துப்புரவு பணியாளர்களுக்கு எதிராக வந்துள்ளது. (25000 ரூபாய் அபராதம் வேறு) Manual scavenging சட்டவிரோதமானது சொல்லிட்டே இப்படிப்பட்ட கேவலமான தீர்ப்பு எப்படி? விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் · ( from Facebook)

Sowmiya Narayanan :It is not about manual scavenging; it is about a person employed under the category of sweeper is what i saw. He has to do all the jobs fitting to his category of employment is what the judge said and dismissed his case and asked him to pay fine for wasting court's time

 Brinda :How can a sweeper be asked to do manual scavenging work? Especially when it is illegal to employ one to do that work? Doesn't the judge know that?

Sowmiya Narayanan Contention was about making them wash inner clothes and not manual scavenging. Cleaning a western cistern with brush won't come under manual scavenging

 Brinda: She was employed to work in the university not in this person's home, right? Cleaning with a brush is indeed manual scavenging!

கம்யுனிஸ்டுகள் களப்போராளிகள் ஆனால் சமுக பொருளாதார முன்னேற்றத்துக்கான எந்த தீர்வையும் அவை ...

Adv Manoj Liyonzon : சொன்னால் யாரும் எளிதில் நம்ப மாட்டார்கள் ஆனாலும் இது தான் உண்மை
கம்யூனிஸ்ட்கள் கடுமையான களப்போராளிகள், சந்தேகம் வேண்டாம், ஆனால் அவர்களிடம் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான எந்த தீர்வுகளும் இருக்காது
திரிபூரா மாநில கம்யூனிஸ்ட் ஆட்சியும் முதலமைச்சர் மானிக் சர்க்காரின் எளிமையும் அந்த மாநில சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு எந்த தீர்வையும் தரவில்லை என்பதே எதார்த்தம்
உடனே, கம்யூனிச ஆட்சியால் கேரளா செழித்து விளங்குகிறது என்று பொங்க வேண்டாம். கேரள வளர்ச்சியில் காங்கிரஸிற்கு சரிபாதி பங்கு உண்டு. மேலும் கேரள சமூக பொருளாதார வளர்ச்சியின் பெரும் பங்கு அந்நிய செலாவணியினுடையது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து ஈட்டப்படுகிறது.
இன்னொரு உண்மையை சொல்ல வேண்டுமானால் திரிபூராவை போல் கேரளத்திலும் வேலைவாய்ப்பு குறைவின் காரணமாகவே மலையாளிகள் மத்திய கிழக்காசிய நாடுகளை நோக்கி படையெடுத்தனர் வருவாய் ஈட்ட
மீண்டும் சொல்கிறேன். மிகத் திடமாக சொல்கிறேன். கம்யூனிஸ்ட் கடுமையாக போராடுவார்கள். ஆனால் சிக்கலுக்கான தீர்வே அவர்களிடம் இருக்காது
தீர்வுகளை சொல்லத்தெரியாத போராட்டக்கார்ரகளால் மக்களுக்கு எந்த பயணும் இல்லை
EVM தகிடுதத்தங்களை தாண்டி கம்யூனிஸ்ட்கள் தோற்க இதுவே முதன்மையான காரணம்

காவிரி மேலாண்மை வாரியம்... ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் விவசாயிகள்!

tamilthehindu :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, வரும் மார்ச் 6ஆம் தேதியன்று சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் விவசாயிகள்!சென்னை தலைமைச்செயலகத்தில், கடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அனைத்துக் கட்சியினரும் பிரதமரைச் சந்திப்பதென்று முடிவானது.
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரையும் சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி மறுப்பதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து, இன்று (மார்ச் 3) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், அப்போது, வரும் மார்ச் 6ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடவுள்ளதாகத் தெரிவித்தார்.

கெளரி லங்கேஷ் கொலை .. இந்து யுவசேனாவை சேர்ந்தவர் பிடிபட்டார்

மின்னம்பலம் :கடந்த வருடம் செப்டம்பர் 5-ம் தேதி இரவு கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல புலனாய்வுப் பத்திரிகையாளரும், இடதுசாரிச் செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் தன் வீட்டு வாசலிலேயே கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இது இந்தியாவின் கருத்துலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மத வாத இயக்கங்களுக்கு எதிராக எழுத்து ரீதியாகவும், கள ரீதியாகவும் தொடர்ந்து செயல்பட்டு வந்த கௌரி லங்கேஷ் கொலையில் ஐந்து மாதங்கள் கழித்து இப்போது முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது கர்நாடக சிறப்புப் புலனாய்வுக் குழு.
கடந்த பிப்ரவரி 19 -ஆம் தேதி, பெங்களூரு மாநில அரசு பேருந்து நிலையத்தின் அருகே, சட்டவிதிகளை மீறி துப்பாக்கி தோட்டாக்களை விற்க முயன்ற நவீன்குமார் என்பரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவரை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தா.பாண்டியன் : நீதிமன்ற தீர்ப்புக்கு மரியாதை இல்லை! இதற்கு நாட்டு மக்கள் கவலைப்பட வேண்டும்

thapandiyanநக்கீரன் ஜீவாதங்கவேல்:
ஈரோடு சி.என்.சி.  கல்லூரி தமிழ்த்துறை சார்பில்  "இன்றைய பொருளாதாரம்" என்ற தலைப்பில் கருத்தரங்கு இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  தா.பாண்டியன் கலந்து கொண்டு இன்றைய பொருளாதாரம் குறித்து பேசினார்.
முன்னதாக  செய்தியாளர்களுக்கு தா.பாண்டியன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால் இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசிற்கு இதுதொடர்பாக கெடு விதித்த நிலையில் நாட்கள் கழிகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை கூறி வருகிறார்கள்.

BBC :திரிபுரா சட்டசபை தேர்தல் இறுதி முடிவுகள் பாஜக வெற்றி

மு.நியாஸ் அகமது-பிபிசி தமிழ்:   தொடர்ந்து 25 ஆண்டுகள், இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து மொத்தம் 35 ஆண்டுகள் என இடதுசாரிகள் திரிபுராவை ஆட்சி செய்து இருக்கிறார்கள். அதன் முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் மிகவும் எளிமையான முதல்வர் என பெயரெடுத்தவர்.
;ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் மாணிக் சர்க்காரைதான் நாட்டிலேயே குறைந்து சொத்துள்ள முதல்வர் என கோடிட்டு காட்டி இருந்தது. அவருடைய சொத்து மதிப்பு 26 லட்சம் ரூபாயாகும்.
ஆனால், இன்று அக்கட்சி திரிபுராவில் ஆட்சியை இழந்து இருக்கிறது. இதற்கு என்ன காரணம்? எப்படி இடதுசாரிகள் தொடர்ந்து ஆட்சி செய்த ஒரு மாநிலத்தில், வலதுசாரி கட்சியான பா.ஜ.கவால் ஆட்சியை பிடிக்க முடிந்தது? இத்தனைக்கும் பா.ஜ.க கடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இப்போது இந்த வெற்றி எப்படி சாத்தியமானது?g>'கொள்கை வெற்றி அல்ல`
இது பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தத்திற்கு கிடைத்த வெற்றி என்ற புரிதலில் நாம் இந்த தேர்தல் முடிவுகளை அணுக கூடாது என்கிறார் அரசியல் செயற்பாட்டாளரான ஆழி செந்தில்நாதன்.

மேகாலயா சட்டசபை தேர்தல் - காங்கிரஸ் தனிப்பெரும் கட்சி .

மேகாலயா சட்டசபை தேர்தல் - இறுதி முடிவுகள் நிலவரம்மேகாலயா மாநில சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவை சந்தித்த 59 தொகுதிகளுக்குமான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.  ஷில்லாங்: 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா சட்டசபையின் 59 இடங்களுக்கு கடந்த 27-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து இந்த மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 
21 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
பா.ஜ.க. வேட்பாளர்கள் இரு இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஒரு இடத்திலும் வென்றுள்ளனர்.
 மலையக மக்கள் குடியரசு கட்சி வேட்பாளர்கள் இரு இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி வேட்பாளர்கள் 19 இடங்களிலும் வெற்றி அடைந்துள்ளனர்.
; ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் 6 இடங்களிலும், குன் ஹைம்மிவ்டிரெப் தேசிய விழிப்புணர்வு இயக்கம் வேட்பாளர் ஒரு இடத்திலும், மக்கள் குடியரசு முன்னணி வேட்பாளர்கள் 4 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். மேகாலயா சட்டசபைக்கு உட்பட்ட வில்லியம் நகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜோனாதன் சங்மா கடந்த மாதம் 18-ம் தேதி வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அதனால் அந்த ஒரு தொகுதியை தவிர்த்து மீதியுள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

திரிபுராவில் இடதுசாரி கோட்டை தகர்ந்தது... கடைசி நேரத்தில் திருப்பம்.. பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது!

Gajalakshmi" Oneindia Tamil< மாணிக் சர்க்கார் 5வது முறையாக அரியணையில் அமருவாரா? அகர்தலா : திரிபுரா சட்டசபை தேர்தலில் நொடிக்கு நொடி த்ரில் முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி, பாஜக மாறி மாறி முன்னிலை வகிப்பதால் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக உள்ளன.
திரிபுரா மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று பிரச்சாரம் செய்தது பாஜக, அமைதி வளர்ச்சிக்காக மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்று இடது சாரி அமைப்புகள் பிரச்சாரம் செய்தன. இன்று 59 தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்ட நிலவரப்படி திரிபுரா சட்டசபை தேர்தல் முடிவு டிரெண்டில் மாற்றம் வந்து கொண்டே இருக்கிறது. முதலில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னிலை வகித்த நிலையில் அடுத் சுற்றில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றது. கடைசியாக கிடைத்த தகவல்படி இடது சாரி கட்சிகள் 25 இடங்களிலும், பாஜக கூட்டணி 34 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் அங்கு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மேகலாயா காங்கிரஸ்.. திருபுராவில் கம்யுனிஸ்டுகள் .. நாகலாந்தில் நாகலாந்து மக்கள் கட்சி ஆகியன முன்னிலையில்


  Kalai Mathi P Oneindia Tamil ஷில்லாங்: மேகாலயா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
 மேகாலயாவில் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 27-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 67 சதவீத வாக்குகள் பதிவானது.
 Congress leads in Meghalaya assembly election வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்குகள் எண்ணப்படுவதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 59 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில் காங்கிரஸ் 12 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 
என்.பி.பி எனும் நாகா மக்கள் கட்சி 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக கூட்டணி வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

BBC : அமெரிக்காவில் தவிக்கும் தமிழர்கள்... H1B விசா பிரச்சனை:

டிரம்ப்ஹெச்1பி விசா பிரச்சனை: என்ன காரணம்? விவரிக்கும் அமெரிக்க வாழ் தமிழர்கள்< பல ஆண்டுகளாக அமெரிக்காவில் உருவெடுத்துக் கொண்டிருந்து இப்போது டிரம்ப் தலைமையிலான அரசின் கீழ் தீவிரம் அடைந்திருக்கிறது இந்தியர்களுக்கான அமெரிக்க குடிவரவு மற்றும் குடியுரிமை பிரச்சனைகள்.
 முதற்கட்டமாக உயர் திறமையான வேலைகளுக்கு வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் H1B விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது கடைபிடிக்கும் விதிகளைக் கடுமைப்படுத்தி உள்ளது டிரம்ப் அரசு. மேலும், விசா அளிப்பதிலும் பல புதிய கெடுபிடிகளை அமல்படுத்த தொடங்கிவிட்டது.
இச்சூழலில், H1B விசா வைத்திருப்போரின் துணைவர்களுக்கு வழங்கப்படும் EAD எனும் வேலை செய்ய அனுமதிக்கும் ஆவணத்தை விநியோகம் செய்வதை அமெரிக்க அரசு நிறுத்த உள்ளதாக பரவி வரும் செய்திகள் அமெரிக்க வாழ் இந்திய குடும்பங்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இது நிறைவேற்றப்பட்டால் பல்லாயிரக்கணக்கான இந்திய குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

வெள்ளி, 2 மார்ச், 2018

வடிவேலு இம்சை அரசன் 24 படப்பிடிப்பில் கலந்து கொள்ள வடிவேலு சம்மதம்

மின்னம்பலம் :இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்த வடிவேலுவிடம் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து படத்திற்காக செலவிட்ட 9 கோடி ரூபாயைக் கேட்டதாகவும், இதையடுத்து வடிவேலு மீண்டும் படத்தில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்தில் நாம் தொடர்புகொண்டு விசாரித்தபோது, இந்தத் தகவல் உண்மைதான் என்றும் வடிவேலு, ஷங்கர் ஆகிய இரு தரப்பும் சுமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகவும் கூறினர்.
நகைச்சுவை நடிகராக வலம்வந்த வடிவேலு, சிம்பு தேவன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் மூலம் ஹீரோவாக புதிய பரிமாணத்தில் திரையில் தோன்றினார். இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து அதே டீம் இணைந்து இதன் இரண்டாம் பாகத்தை 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' என்ற பெயரில் தயாரிக்க முடிவு செய்தனர். இதற்காக, வடிவேலுவுக்கு ரூ.1.50 கோடி ரூபாய் சம்பள முன்பணமாகக் கொடுத்து ஒப்பந்தம் செய்தார் ஷங்கர். இந்தப் படத்துக்காக சென்னை அருகே ரூ.6 கோடி செலவில் பிரமாண்டமான அரங்கு அமைத்து படப்பிடிப்பைத் தொடங்க ஏற்பாடு நடந்தது.

காங்கிரஸ் திமுக கூட்டணி கேள்வி குறி .... தினகரன் காங்கிரஸ் கூட்டணியா ? சிதம்பரம் - திமுக - மௌனம் ...

டிஜிட்டல் திண்ணை: திமுகவுக்கு பதிலாக தினகரன்மின்னம்பலம் : காங்கிரஸின் சீக்ரெட் ப்ளான்?
“கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். 'இந்திய நாட்டின் வளர்ச்சியை சரியான பாதையில் கொண்டு செல்லுவதற்காக ப.சிதம்பரம் தொடர்ந்து பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதிவருகிறார். அவரது கட்டுரையில் உள்ளபடி மோடி அரசு நடந்து கொண்டாலே குறைகளை திருத்திக் கொள்ள முடியும். ஆனால், சிதம்பரத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத மோடி அரசு குறுக்கு வழியில் அரசியல் லாபம் தேடுவதற்காக கைது நடவடிக்கை எடுக்கிறது. இது உள்நோக்கம் கொண்ட கைது... தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதற்கு உதாரணமானவர் கார்த்தி. இந்த சல சலப்புக்கெல்லாம் காங்கிரஸ் அஞ்சாது!’ - இப்படித்தான் பல ஊர்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பொங்கினார்கள்.
ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் முக்கியக் கட்சியான காங்கிரஸின் தேசிய அளவிலான தலைவரான ப.சிதம்பரத்தின் மகன் கைது பற்றி திமுக அதிகார பூர்வமாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

சீனாவில் ' N ' எழுத்தை உபயோகிக்க தடை.. மேலும் பல ஆங்கில சொற்கள் தடை ..

N எழுத்துடன் ‘Ten thousand years’, ‘Disagree’ , Xi Zedong’ ‘Shameless’, ‘Lifelong’ , ‘Personality cult’ , ‘Emigrate , ‘Immortality’ ஆகிய வார்த்தைகளும் சீனாவில் சமூக வலைதளங்களில் உபயோகிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது
tamilthehindu :சீனாவில் ’ N ’என்ற எழுத்தை சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சீனாவின் நிரந்தர தலைவராக்கும் முயற்சியில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஜி ஜின்பிக்கும் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் ஜி ஜின்பிங் தொடர்ந்து அதிபராக பதவி வகிக்கும் எண்ணத்துடன் அரசியல் சட்டத் திருத்தங்கள் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, 2023-ம் ஆண்டுக்குப் பிறகும் ஜி ஜின்பிங்கே தொடர்ந்து அதிபராக இருக்கும் நிலை உருவாகி உள்ளது.

பணப்பரிமாற்றம் ... சிதம்பரத்தை விசாரிக்க சி பி ஐ முடிவு

பண பரிமாற்ற வழக்கு - ப.சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐ முடிவு
மாலைமலர் :ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் சட்ட விரோத  பணப் பரிமாற்ற வழக்கில் ப.சிதம்பரத்தை விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனம் மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக பீட்டர் முகர்ஜி, அவரது மனைவி இந்திராணி முகர்ஜி உள்ளனர்.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த வெளிநாட்டில் இருந்து முதலீடு பெற பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு முடிவு செய்தனர். ஒரு நிறுவனம் வெளிநாட்டில் இருந்து பணம் பெற வேண்டுமானால், மத்திய நிதி அமைச்சகம் மற்றும் அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

பொதுவெளியில் தாய்ப்பால் .... உற்று பார்ப்பதை நிறுத்துங்கள்.. மலையாள பத்திரிகையின் அட்டைப்படம்

நக்கீரன் :மலையாள பத்திரிகையான கிருகலஷ்மியின் மார்ச் மாத அட்டைப் படம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அப்படி அதில் என்ன இருந்தது என்கிறீர்களா?
பெண்கள் பொது இடங்களில் தயக்கமில்லாமல் தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிக்கும் விதமாக துபாயைச் சேர்ந்த ஜிலு ஜோசப் எனும் மாடல் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவது போன்ற அட்டைப்படம் இடம்பெற்றிருந்தது.
கூடவே கேரள தாய்மார்கள் சொல்வதுபோல், உற்றுப் பார்ப்பதை நிறுத்துங்கள். நாங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டவேண்டும் என்ற வாசகமும் கீழே இடம்பெற்றிருந்தது.
அட்டைக்கு ஒரே நேரத்தில் வரவேற்பும் எதிர்ப்பும் வந்திருக்கிறது. வரவேற்பவர்கள், இதிலென்ன தப்பு நல்ல விஷயம்தானே என்கிறார்கள். யுனிசெஃப் இந்தியா அமைப்பு, நடிகை ஜெலினா ஜெட்லி உள்ளிட்டவர்கள் பாராட்டி வரவேற்றிருக்கிறார்கள். பெண்களின் மார்பகத்தை கவர்ச்சிப் பொருளாக பார்ப்பதை மாற்றிக்கொள்ளவேண்டும் என்கிறார்கள் ஆதரவுதெரிப்பவர்கள்.

லோக்பால் வெறும் கண்துடைப்பு .. போராட்டம் நடத்திய கிரண் பேடி அன்னா ஹாசாரே ,பாபா ராம்தேவ எல்லாம் இப்ப வேற லெவல் ..

Special Correspondent FB Wing : லோக்பால் சட்டப்படி அந்த அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோரைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், மக்களவைத் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் ஒரு நீதிபதி ஆகியோர் இடம்பெற வேண்டும்.
பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக்பால் அமைப்பை உருவாக்கும் நோக்கில் லோக்பால் -லோக் ஆயுக்த சட்டம் கடந்த 2013-இல் கொண்டுவரப்பட்டது.
எனினும், இதுவரை அந்த அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டத்தை மத்திய அரசு நடத்தவில்லை.
இது தொடர்பாக மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தலைமையிலான 'காமன் காஸ்' என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2014-இல் ஒரு பொது நல வழக்கைத் தொடர்ந்தது.

விழுப்புரம் தலித் குடும்பம் மீதான கொடூரம்: தொடரும் விசாரணை!

விழுப்புரம் கொடூரம்: தொடரும் விசாரணை!மின்னம்பலம் :விழுப்புரத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் கொலை, சிறுமி பாலியல் கொடுமை, தாய் ஆராயி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக குற்றவாளியைப் பிடிக்க போலீஸார் திணறி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள வெள்ளம்புதூர் குக்கிராமத்தைச் சேர்ந்த ஆராயி தனது இளையமகள் தனம், மகன் சமயன் ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த 22ஆம் தேதி தமிழகமே பதறிய ஒரு கொடூர சம்பவம் அங்கு அரங்கேறியது. அன்று இரவு ஆராயி, தனம், சமயன் ஆகியோரை மர்ம நபர்கள் கொடூர முறையில் தலை உட்பட பல இடங்களில் தாக்கியுள்ளனர். சிறுமியைக் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் சமயன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஆராயி, தனம் ஆகிய இரண்டு பேரும் தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி ஆஞ்சநேயபுரத்தில் 84 தமிழர்கள் கைது.. செம்மரம் வெட்ட வந்தததாக ஆந்திர போலீஸ்

: Kalai Mathi  Oneindia Tamil திருப்பதி: ஆஞ்சநேயபுரத்தில் 84 தமிழர்களை ஆந்திர போலீசார்
கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் அதிகளவு செம்மரங்கள் காணப்படுகின்றன. இந்த செம்மரங்களை அப்பாவி தமிழர்கள் பலரை பண ஆசை காட்டி பயன்படுத்தி பலர் வெட்டி கடத்தி வருகின்றனர். அண்மையில் ஆந்திரமாநிலம் ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்கள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர். செம்மரம் வெட்ட வந்தவர்கள் போலீசாரிடமிருந்து தப்பிக்க எரியில் குதித்து உயிரிழந்ததாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர். ஆனால் போலீசாரே தமிழர்களை அடித்துக்கொன்று ஏரியில் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் திருப்பதி ஆஞ்சநேயபுரத்தில் 84 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 84 பேரும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கைதானவர்களை திருப்பதிக்குக் கொண்டு சென்று செம்மரக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மு க முத்து மீது மகள் ஷீபா ராணி ஆட்கொணர்வு மனு .... அறிவுநிதி ரவுடிகளோடு வந்து .....

D.M.K,karunanidhi,கருணாநிதி,தி.மு.க,முத்து
தினமலர் :சென்னை : தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மூத்த மகன், முத்துவை ஆஜர்படுத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை, சைதாப்பேட்டையை சேர்ந்த, ஷீபா ராணி தாக்கல் செய்த மனு: என் தாயாருக்கும், கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவுக்கும், 1988ல் திருமணம் நடந்தது. இந்து மத சடங்கின்படி, இரு குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முன்னிலையில், இந்த திருமணம் நடந்தது. கோபாலபுரம் வீட்டில், திருமண வாழ்க்கையை துவக்கினர்.
1991 ஜூன், 17ல், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், நான் பிறந்தேன். 10 ஆண்டுகள், கோபாலபுரம் வீட்டில் வசித்தோம். அதன்பின், ராயப்பேட்டை, லாயிட்ஸ் காலனியில் உள்ள வீட்டுக்கு மாறினோம். n>என் தந்தையின் முதல் மனைவியின் மகன், அறிவுநிதி, ரவுடிகளுடன் வந்து, எங்களை தாக்கினார். வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். அந்த வீட்டில் இருந்து, என்னையும், தாயையும் வெளியேற்றினர்.
பின், சிலர் எங்களுக்கு உதவினர்; ஆவடியில் தங்கினோம். பாலவாக்கத்தில் இருந்த தந்தையை, நாங்கள் சந்தித்தோம். அப்போதும், ரவுடிகளுடன் அறிவுநிதி வந்து, எங்களை தாக்கினார்; மிரட்டல் விடுத்தார். அப்போது, என் தந்தை குறுக்கிட்டு, எங்களை தாக்க வேண்டாம் என, தெரிவித்தார். அதன்பின், அந்த இடத்தை விட்டு நாங்கள் அகன்றோம். நீண்ட நாட்களாக, என் தந்தையை சந்திக்க, எங்களை அனுமதிக்கவில்லை.

மோடியின் கல்வி தகுதி .. உண்மை கண்டுபிடிக்க நீதிமன்றம் அனுமதி


வெப்துனியா :பிரதமர் மோடியின் கல்வித்தகுதி என்னவென்று ஆராய சமூக ஆர்வலர்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த விரிவான செய்திகள் பின்வருமாறு... பிரதமர் மோடி 1978-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பை முடித்தார் என்று பாஜக கட்சி தெரிவித்து இருக்கிறது. இது உண்மைதானா எனற சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். தனி மனித சுதந்திரம் என்ர பெயரில் இந்த தகவலை கொடுக்க டெல்லி பல்கலைகழகம் மறுத்துவிட்டது. மேலும், 20 வருடத்திற்கு முன்பு உள்ளத்தக்கவலை கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், டெல்லி கல்லூரியில் 1978-ல் படித்தவர்களின் விவரங்களை ஆராய அஞ்சலி பரத்வாஜ், நிகில் டே, அமிர்தா ஜோரி ஆகியோருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. இந்த ஆய்வு முடிந்த பின்னர், பிரதமர் மோடியின் உண்மையான கல்வித்தகுதி தெரியவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீதேவி, மிதுன், போனி கபூர்… ராம் கோபால் வர்மா சொன்னதும் நிஜத்தில் நடந்ததும் என்ன?

vikatan :எம்.குமரேசன் : `நடிகை ஸ்ரீதேவி, உண்மையிலேயே சந்தோஷமாக வாழ்ந்தாரா அல்லது நிஜத்திலும் நடித்தாரா?’ என்று பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீதேவி, வாழ்க்கையில் பல விஷயங்களில் தோல்வியைச் சந்தித்தவர்தான். கோலிவுட்டுடன் ஒப்பிடுகையில் பாலிவுட் மிகப் பெரியது. பத்மினி, வைஜெயந்தி மாலா, வஹிதா ரஹ்மான், ஹேமமாலினி, ரேகா வரிசையில் தென்னிந்தியாவிலிருந்து சென்று பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிபெற்றவர் ஸ்ரீதேவி. பாலிவுட்டில் `லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற அந்தஸ்த்தைப் பெற்ற ஒரே நடிகை இவர் மட்டுமே! அவரின் சொந்த வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாகவா இருந்தது?
ஸ்ரீதேவி பாலிவுட்டுக்குச் சென்ற சமயத்தில் மிதுன் சக்கரவர்த்தி பாப்புலராக இருந்தார். `டிஸ்கோ டான்ஸர்’ `படத்தின் ஹீரோ அவர். அட்டகாசமாக நடனம் ஆடுவார். மிதுனுடன் சேர்ந்து சில படங்களில் ஸ்ரீதேவி நடித்தார். முதலில் மிதுனைத்தான் ஸ்ரீதேவி ரகசியத் திருமணம் செய்தார். மிதுனுக்கோ ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தனர். மனைவியின் பெயர் யோகிதா பாலி.

வியாழன், 1 மார்ச், 2018

தமிழில் ஊடுருவும் சம்ஸ்கிருத சொற்கள் .... தமிழ் சொற்கள் தமிழின் வரலாற்று அடையாளங்கள்

Thirumeni Saravanan :   நம்மை அறியாமலேயே தினமும் பேசும் சமஸ்க்ருத சொற்கள் சில...

அகங்காரம் - செருக்கு
அக்கிரமம் - முறைகேடு
அசலம் - உறுப்பு
அசூயை - பொறாமை
அதிபர் - தலைவர்
அதிருப்தி - மனக்குறை
அதிருஷ்டம்- ஆகூழ், தற்போது
அத்தியாவசியம் --இன்றியமையாதது
அநாவசியம் -வேண்டாதது
அநேகம் - பல
அந்தரங்கம்- மறைபொருள்
அபகரி -பறி, கைப்பற்று
அபாயம் -இடர்
அபிப்ராயம் -கருத்து
அபிஷேகம் -திருமுழுக்கு
அபூர்வம் -புதுமை
அமிசம் -கூறுபாடு
அயோக்கியன் -நேர்மையற்றவன்
அர்த்தநாரி -உமைபாகன்
அர்த்த புஷ்டியுள்ள -பொருள் செறிந்த
அர்த்தம் -பொருள்
அர்த்த ஜாமம் - நள்ளிரவு
அர்ப்பணம் -படையல்
அலங்காரம் -ஒப்பனை
அலட்சியம் - புறக்கணிப்பு

ஏழு மாணவிகள் சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினர்.. சத்தீஸ்கார் விடுதியில் ...

சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய மாணவிகள்!மின்னம்பலம் : சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 வயதுச் சிறுமியை 6 மாணவிகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள பெண்ட்ரா பகுதியில் எஸ்சி/எஸ்டி மாணவிகளுக்காக அரசு விடுதி நடத்தப்படுகிறது. அந்த விடுதியில் உள்ள சீனியர் மாணவிகள் துவைத்து வைத்திருந்த துணிகளை 7 வயது சிறுமி கை தவறிக் கீழே போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவிகள் அந்தச் சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளனர்.
பிலாஸ்பூர் போலீஸ் கண்காணிப்பாளர் ஆரிஃப் ஷேக், “சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 6 மாணவிகள் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டமான போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

உடல் உறுப்பு விற்பனையில் தமிழகம் மூன்றாவது இடம்

உடலுறுப்புகளை விற்றது குறித்து விசாரணை!மின்னம்பலம் : இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து 3ஆவது முறையாக உடலுறுப்பு தானத்தில் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து உடலுறுப்புகள் தானம் நடந்துவரும் நிலையில், உடலுறுப்புகளைப் பணத்திற்காக விற்றதாக சேலம் மணிப்பால் மருத்துவமனையின் மீது புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரையடுத்து, மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 1) அம்மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர்.
உடலுறுப்புகளை விற்பது சட்டவிரோதமான செயல் என்பது தெரிந்தும், சேலம் மணிப்பால் மருத்துவமனையில் விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த ஒரு இளைஞரின் உடலுறுப்புகளை அவருடைய உறவினர்களிடம் விலை பேசி எடுத்திருப்பது, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் : என் அரசியல் வாழ்வுக்கு என் மகன் மூலமாகக் களங்கத்தை உண்டாக்குகிறார்கள்.

கார்த்தி சிதம்பரம்
சிதம்பரம்ஆ.விஜயானந்த்விகடன் -ஆ.விஜயானந்த் :
ண்டனில் தன் மகளின் மேல்படிப்புக்கான இடத்தை உறுதி செய்வதற்காகச் சென்ற கார்த்தி சிதம்பரம், கடந்த 28-ம் தேதி காலை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டார். 'என் மகன் மூலமாக என்னை அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள். அவ்வளவு எளிதில் இந்த விவகாரத்தை விட்டுவிட மாட்டேன்' எனக் கொந்தளித்திருக்கிறார் ப.சிதம்பரம்.
மத்திய நிதியமைச்சராகப் ப.சிதம்பரம் பதவி வகித்த 2007-ம் ஆண்டில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்குக் கிடைத்த முதலீட்டு தொகையைக் குறைத்துக் காட்டுவதற்கு உதவி செய்த வகையில் 10 லட்ச ரூபாயைக் கார்த்தி பெற்றார் என்பதுதான் சி.பி.ஐ முன்வைக்கும் குற்றச்சாட்டு. அதுவும் அவருடைய அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் நிறுவனம் மூலம் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதாகக் கடந்த ஆண்டு சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. குறிப்பாக, ரூ.4.62 கோடி மட்டுமே முதலீடு திரட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு அதிகமாகத் திரட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான வீடு, அலுவலகம், சிதம்பரத்தின் டெல்லி வீடு ஆகியவற்றில் தீவிர தேடுதலை நடத்தியது சி.பி.ஐ. இதன் தொடர்ச்சியாகக் கடந்த மாதம் அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகி விளக்கமும் அளித்தார் கார்த்தி.

மதுரை இரு ரவுடிகள் சுட்டு கொலை ...

மாலைமலர் :மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியில் இரண்டு ரவுடிகளை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் 2 ரவுடிகள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொலை மதுரை: மதுரையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒழிக்க மாநர போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இன்று சிக்கந்தர் சாவடி பகுதியில் உள்ள ரவுடிகளை பிடிக்க மாநகர போலீசார் சென்றனர். அப்போது போலீசார் - ரவுடிகள் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீசார் என்கவுண்டர் நடத்தினர். இதில், மந்திரி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு ரவுடி தப்பி ஓடிவிட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்த்திக் சிதம்பரத்துக்கு மேலும் ஐந்து நாள் காவல்

கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் விசாரிக்க சி.பி.ஐ.க்கு கோர்ட் அனுமதிமாலைமலர் :ஐ.என்.எஸ் மீடியா வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி:< ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். உடனே, டெல்லி அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம் பல மணி நேரம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், மாலை பாட்டியாலா ஹவுஸ் பகுதியில் உள்ள சி.பி.ஐ கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்தது. இந்நிலையில், இன்று அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஸ்ரீ தேவிக்கு தேசியக்கொடி ... நடிகர் திலகத்துக்கு ?

Venkat Ramanujam :
🔹1960 - ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,)சிறந்த நடிகருக்கான விருது.
🔹1962 - கலைமாமணி விருது
🔹1966 - பத்மஸ்ரீ
🔹1982 - நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்
🔹1984 -பத்மபூஷன்
🔹1995 - செவாலியர்
🔹1997 - தாதாசாகிப் பால்கே

இந்தியாவில் இருந்து 1962 ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற முதல் கலைஞன் சிவாஜி ..
இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்த போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அதற்கான சாவியும் பெற்றது சிவாஜி ..
எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட ஒரே தனி நபர் சிவாஜி..
ஆனாலும் சிவாஜி ஜுலை 21, 2001 மறைந்த போது ., அன்றைய பாஜக வாஜ்பேயி அரசு மற்றும் அதிமுக ஜெயலலிதா அரசு அவருக்கு #தேசியகொடி போர்த்தவில்லை ..

கார்த்திக் சிதம்பரம் கைது திமுக தரப்பு எதுவித கருத்தும் கூறவில்லை ...

வெப்துனியா :முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் கைது செய்யப்பட்ட நிலையில், திமுக-காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கார்த்திக் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவரை சிபிஐ நேற்று அதிரடியாக கைது செய்தது. இந்நிலையில், காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக இதுவரைக்கும் எந்த ரியாக்‌ஷனும் காட்டவே இல்லை. அதோடு, திமுக ஆதரவு தொலைக்காட்சியிலும் கார்த்திக் சிதம்பரம் தொடர்பான செய்திகள் வெளிவந்து கொண்டே இருந்தன. அதற்கு பின்னால் இருக்கும் காரணம் இதுதான். 2ஜி வழக்கில் ராசா மற்றும் கனிமொழியை சிக்க வைத்ததற்கு பின்னால் ப.சிதம்பரமே இருந்தார் என்பதே திமுகவின் குற்றச்சாட்டு.

வைகோ :மு.க.ஸ்டாலினை கண்ணின் இமைபோல பாதுகாப்பேன்

தினத்தந்தி : கலைஞரை  பாதுகாத்தது போல மு.க.ஸ்டாலினை கண்ணின் இமைபோல பாதுகாப்பேன் என்று வைகோ பேசினார். மார்ச் சென்னை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாழ்த்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, வேப்பேரி பெரியார் திடலில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், கவிஞர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், பா.விஜய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பொன்முடி நண்பர் லெனின் பாண்டியன் கொலை! பட்டப்பகலில் விழுப்புரம்

மின்னம்பலம் :விழுப்புரம் நகரத்தில் திமுகவைச் சேர்ந்த லெனின் என்பவர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த மாவட்டத்தையே அதிரவைத்துள்ளது. இவர், முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்று தெரியவந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கொலையாவது தொடர்கதையாகி வருகிறது. நேற்று (பிப்ரவரி 28) மதியம் 11.45 மணியளவில், திமுகவைச் சேர்ந்த மாவட்டப் பிரதிநிதி லெனின் பாண்டியன் என்பவர் விழுப்புரம் பை-பாஸ் சாலையில் மோட்டார் பைக்கில் வந்தபோது தாக்குதலுக்கு உள்ளானார். திருவாமத்தூர் பகுதி அருகே வந்தபோது, அவர் கத்தியால் குத்தப்பட்டார்.

ரூ.750 கோடி மோசடி.. சுபிக்ஷா நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் வங்கிக் கடன்

சுபிக்ஷா சுப்ரமணியன் - ஒரு தொடர்கதை!மின்னம்பலம் :சுபிக்ஷா நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் வங்கிக் கடன் பெற்று ரூ.750 கோடி மோசடி செய்துள்ளதாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடைய கடந்த காலம் பற்றிக் காண்போம்.
பெரும் தொழிலதிபர்கள் இந்திய வங்கிகளில் கோடிகளில் கடன் பெற்று வங்கியை ஏமாற்றி மோசடி செய்வது தொடர்கதையாகி விட்டது. லலித் மோடி, தீபக் தல்வார், சஞ்சய் பண்டாரி, ஜடின் மேத்தா, விஜய் மல்லையா ஆகிய பெரும் புள்ளிகள் பலர் வங்கிகளில் கோடிக்கணக்கில் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டே பறந்துவிட்டனர். அண்மையில் இரண்டாவது பெரிய பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடிக்கும் மேல் மோசடி செய்துவிட்டு மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி நாட்டைவிட்டுத் தப்பியோடிய செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சுபிக்ஷா சுப்ரமணியன் ரூ.750 கோடியை வங்கிகளில் கடனாகப் பெற்று மோசடி செய்துள்ளதாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Aircel Bankrupt ? திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி ஏர்செல் நிறுவனம் மனு: தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தை அணுகியது

tamilthehindu :திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில்(என்சிஎல்டி) எர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் மனுத்தாக்கல் செய்துள்ளதாக ஊடங்கங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அதற்கு ஏற்றார்போல், அந்த நிறுவனத்தின் தென் இந்திய தலைமைச் செயல் அதிகாரி சங்கரநாராயணன் வெளியிட்ட அறிக்கையில் ஏர்செல் செல்லிடப் பேசி சேவையின் சிக்னல் கிடைப்பதில் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று இன்று தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சிவசங்கரன் என்பவரால் கடந்த 1999 -ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டது. சந்தையில் செல்போன் அறிமுகமாகும்போதே ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டதால், மக்கள் மத்தியில் இந்த நிறுவனத்துக்கு அதிக வரவேற்பு இருந்தது. அதற்கு ஏற்றார்போல், மக்களுக்கு ஏராளமான சலுகைகளையும் வழங்கியது. இதனால், தொலைத்தொடர்பு சந்தையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஏர்செல் நிறுவனமும் இடம் பெற்றது.

BBC : சிரியாவுக்கு எதுவித உதவிப் பொருளையும் கொண்டு சேர்க்க முடியவில்லை'


சிரியாவில் 30 நாட்கள் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள ஐ.நா பாதுகாப்பு அவை கடந்த சனிக்கிழமையன்று வாக்களித்தபின்னர், போர் நடைபெறும் பகுதிகளில் இன்னும் ஒரு நிவாரணம் மற்றும் உதவிப் பொருளைக்கூட கொண்டு சேர்க்க முடியவில்லை என்று ஐ.நா தெரிவித்துள்ளது.உணவு மற்றும் மருந்துப் பொருட்களை நிரப்பிக்கொண்டு, பாதிக்கப்பட்ட பத்து பகுதிகளுக்குள் நுழைய சரக்கு வாகனங்கள் சனிக்கிழமை முதலே காத்திருப்பதாகவும், அப்பகுதிகளில் சண்டை இன்னும் நீடிப்பதால் அவற்றை தேவைப்படுபவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை என்றும் ஐ.நாவின் அவசரகால உதவிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் மார்க் லோகாக் கூறியுள்ளார்.
சண்டை நிறுத்தம் எப்போது அமலுக்கு வரும் என்றும் அவர் பாதுகாப்பு அவையிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக நீதி காத்த ரத்தினவேல் பாண்டியன்!-.. இறுதி நிகழ்வில் நெகிழும் வழக்கறிஞர்கள்...

நீதிபதிவிகடன் பிரதீப்.த.ரே : உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் தனது 89-வது வயதில் இன்று மறைந்துவிட்டார். இவர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் திருப்புடைமருதூர் எனும் ஊரில் பிறந்தவர். பள்ளிப் படிப்பை அம்பாசமுத்திரத்திலும் கல்லூரி கல்வியைத் திருநெல்வேலி தூய சேவியர் கல்லூரியிலும் முடித்தார். 1954-ம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். திருநெல்வேலியில் கிரிமனல் வழக்குகளை நடத்தும் பிரபல வழக்கறிஞராக விளங்கினார். அவருடனான நினைவுகள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார், தி.மு.க வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
1. அக்காலத்தில் வெளிவந்த பிரபல திரைப்படமான 'சீவலப்பேரி பாண்டி' யின் அசல் வழக்கை திருநெல்வேலியில் நடத்தியவர் ரத்தினவேல் பாண்டியனே ஆவார்.

2. இவரோடு ஜூனியர் வழக்கறிஞராக இருந்தவரே ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. ’

3. ரத்தினவேல் பாண்டியன் 1960-களில் திருநெல்வேலி மாவட்டத்தில் சீனியர் வழக்கறிஞராக மட்டுமல்லாமல் நெல்லை மாவட்ட தி.மு.க மாவட்டச் செயலாளராகவும் விளங்கினார். அப்போது இவருடைய வழக்கறிஞர் அலுவலகம் திருநெல்வேலி முருகன்குறிச்சியில் இருந்தது. வைகோ மீது இவருக்குத் தனிப்பற்று உண்டு. தமிழ், ஆங்கிலத் திரைப்படங்களுக்குச் செல்வதானால் வைகோவை அழைத்துக் கொண்டுதான் செல்வார்.

தூத்துக்குடி: சாதி மறுப்பு திருமணம் செய்த 12 குடும்பத்தினர் ஊரை விட்டு வெளியேற பஞ்சாயத்து உத்தரவு



தீக்கதிர் :தூத்துக்குடி மாவட்டம் புன்னைகாயல்  கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்று ஊர் பஞ்சாயத்து சார்பில் தண்டாரோ  போடப்பட்டுள்ளது . இது அப்பகுதியில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புன்னை காயல்  கிராமத்தில் நுழையும் பகுதியில் ஒரு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் அந்த தடுப்பை தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட 12 குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டும் என்று வெளிப்படையாக தண்டோரா போடப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களுடன் ஊர்மக்கள் உணவு , நீர் புழங்கக் கூடாது என்று தண்டோராவில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதைக்கண்காணிப்பதற்கு தனியாக ஒரு படை அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீதேவி .. முழுக்க முழுக்க திரைப்படங்கள் போலவே ஆகிவிட்ட சொந்த வாழ்க்கை ... ராம் கோபால் வர்மா

ஶ்ரீதேவி'நிஜ வாழ்விலும் நடித்துக்கொண்டு இருந்திருக்கிறார், ஶ்ரீதேவி!" - இயக்குநர் ராம் கோபால் வர்மா
vikatan அலாவுதின் ஹுசைன் :  க டந்த 20-ம் தேதி துபாயில் நடந்த திருமணம் ஒன்றில் பங்கேற்க ஶ்ரீதேவி, அவரின் மகள் குஷி மற்றும் கணவர் போனி கபூர் ஆகியோர் சென்றனர். கடந்த 24-ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற தகவல் வெளியானது. இந்தியத் திரைத்துறையே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இதனைத் தொடர்ந்து துபாயின் சட்ட திட்டங்களின்படி ஸ்ரீதேவியின் உடல் தடயவியல் சோதனைக்கும், உடற்கூராய்வுக்கும் அனுப்பப்பட்டு நேற்று அறிக்கைகள் வெளியாகின. அதில், ஶ்ரீதேவி அதிகமாக மது அருந்தியதால், நிலைதடுமாறி அவரது அறையிலுள்ள நீர்த்தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உடற்கூராய்வு முடிந்து உடல் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக இன்று மதியம் எம்பாமிங் செய்யப்பட்டதாகவும், பிறகு அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு அவரது உடல் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதற்கான வேலைகளை இந்தியத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ரஜினி, கமல் என கோலிவுட் பிரபலங்கள் மற்றும் மற்ற மொழி சினிமாப் பிரபலங்கள் பலரும் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்த மும்பையில் தங்கியிருக்கின்றனர். பலர் சமூக வலைதளங்கள் வழியாக தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

புதன், 28 பிப்ரவரி, 2018

4,78,348 ஏக்கர் நிலங்களும் தமிழக கோவில்களும் .. இந்து சமய அறநிலையத்துறையை அபகரிக்க மதுரை மீனாட்சி அம்மன் தீ விபத்து

சுசிலா : சிறகு மின்னிதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை .... சிறகிற்கு மிக்க நன்றி.
இப்போதிருக்கும், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், 36,000 கோவில்களுக்கு மேல் இருக்கின்றன. இந்த கோவில்களுக்கு 4,78,348 ஏக்கர் நிலங்கள் இருப்பதாக ஆவணங்கள் சொல்கின்றன. குத்தகைக்கு விட்டு, இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு, ரூ. 58.68 கோடி ரூபாய் வருமானமாகக் கிடைக்கிறது என்று அரசு சார்பில் சொல்லப்படுகிறது. பிராமணர்கள் கட்டுப்பாட்டின் கீழ் வருமேயானால், வருமானம் முழுதும் அவர்கள் பையில் தான் போய் சேரும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதனால் தான் தற்போது இந்து அமைப்பினர், இந்து பக்தர்கள் சார்பில் கேட்பதாக ஒரு போலி ஏமாற்று வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு சில மடாதிபதிகளும் உடன்படுகிறார்கள் என்பது தான் வேதனைக்குரிய ஒன்று. இந்த பேராபத்தை மக்கள் உணர வேண்டும். இந்த துறை ஆரியத்திடமோ அல்லது அவர்களை துதிபாடும் அடிவருடிகளிடமோ போய்ச் சேர்ந்து விடுமேயானால், இந்த 36,000 கோயில்கள் எல்லாமே ஆரியமயமாகி விடும், சமஸ்கிருதமயமாகி விடும், நம் உள்ளூர் பூசாரிகள் ஓரங்கட்டப்படுவர். இதற்கான சூழ்ச்சி தான் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கலைஞரின் பாதுகாப்பு அதிகாரி ஒய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் !

 பாண்டியன் கருணாநிதிvikatan -MUTHUKRISHNAN S : தி.மு.க தலைவர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரி டி.எஸ்.பி., பாண்டியன். இன்று ஓய்வுபெற இருந்த அவர்,  திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர்மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் பதிவுசெய்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளதால், துறைரீதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரி கூறுகையில், ”தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அதிகாரத்தை துஷ்பிரயோகம்செய்து, முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த பாண்டியன், கணேசன், விநோதன் ஆகியோர், முகப்பேர் வீட்டு வசதி வாரியத்தில் தலா 2 கிரௌண்டு இடம் வாங்கினர். அதை, வீட்டு வசதி வாரியத்தின் விதிமுறைகளுக்குப் புறம்பாக இவர்கள், அந்த இடத்தைத் தனியாருக்கு விற்றனர். ஒவ்வொரு அதிகாரியும் 19 லட்சம் வீதம் சட்டவிரோதமாக லாபம் அடைந்தனர். இதனால், வாரியத்துக்கு இழப்பீடு ஏற்படுத்தினர்.

நீதிபதி ரத்னவேல் பாண்டியன் - திமுக மாவட்ட செயலாளராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகி மண்டல் ஆணைய தீர்ப்பை வழங்கிய

Sivasankaran Saravanan : நிறைய பேர் கருதுவதை போல ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் அரசியல் வெற்றியை பெறுவதோ ஆட்சியமைப்பதோ இல்லை. மாறாக அவர்களது ஸ்லீப்பர் செல்களை ஐஏஎஸ் உள்ளிட்ட ஆட்சியதிகார பதவிகளில் அமர்த்துவதுதான் அவர்களது தலையாய பணி. ராணுவம், நீதித்துறை, ஆட்சிப்பணி என சகல துறைகளிலும் அவர்களது ஆட்கள் இருப்பார்கள். அதனால் தான் காங்கிரஸ் ஆட்சி நீடித்தபோது கூட அது கவலைப்படவில்லை.
அதுபோல திராவிட இயக்க அபிமானிகள் அதிகாரப்பணிகளில் கோலோச்சுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை என்று உறுதியாக சொல்லமுடியும். திராவிட இயக்கத்தின் பலனாக உயர் பதவிகளுக்கு சென்றவர்களுக்குக் கூட தாங்கள் அதனால் தான் இத்தகைய உயர் இடத்திற்கு வந்தோம் என்ற உணர்வு இருப்பதில்லை. அப்படியே வந்தாலும் ஒரு சில சொற்ப நபர்கள் தான் இருப்பார்கள்.
அப்படிப்பட்ட சொற்ப எண்ணிக்கையில் முக்கியமானவர் மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள். அவர் ஸ்லீப்பர் செல் கூட இல்லை. திமுகவின் மாவட்ட செயலாளர் என்ற பதவியிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதியானவர்!
மண்டல் கமிசன் பரிந்துரை தொடர்பான உச்சநீதிமன்ற மன்ற வழக்கில் 11 நீதிபதிகளில் ஒருவராக இருந்து இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதிய நீதிமான். அதுவும் அந்த தீர்ப்பு 11 பேரில் 6-5 என்ற கணக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு!