சனி, 20 நவம்பர், 2021

ராமநாதபுரத்தில் புத்த விகாரை அடிக்கல் நாட்டுவிழாவில் திருமாவளவன்!

 புத்தர் பெருமை

Arsath Kan -   Oneindia Tamil : : ராமநாதபுரம் மாவட்டம் ஒரிக்கோட்டையில் நடைபெற்ற பிரஹ்போதி புத்த விகாரை i  அடிக்கல் நாட்டுவிழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்ற நிலையில் வலதுசாரிகள் வரிந்துகட்டத் தொடங்கியுள்ளனர்.
பெளத்த மதம் தொடர்புடைய நிகழ்வில் திருமாவளவன் கலந்துகொண்டதை தொடர்ந்து சமூகவலைதளங்களில் அவர்கள் விமர்சிக்கின்றனர்.
மதங்களுக்கு அப்பாற்பட்டவராக தன்னை காட்டிக்கொள்ளும் திருமா,
புத்த மத நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன் என வலதுசாரிகள் கமெண்ட்கள் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
புத்த விஹார் ராமநாதபுரம் மாவட்டம் ஒரிக்கோட்டையில் பிரஹ்போதி புத்த விஹார் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

விவசாயிகள் போராட்டம் தொடரும் .. குறைந்த பட்ச விலையை ஒன்றிய அரசு அறிவிக்கும் வரை தொடரும் .. போராட்டக்குழு அறிவிப்பு

 மாலைமலர் : விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற மறுத்து உள்ளன.
மத்திய பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 வேளாண் திருத்த சட்டங்களை கொண்டு வந்தது. விவசாய விளை பொருட்கள் விற்பனை மற்றும் வர்த்தகம் (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டங்களை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இந்த சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு பெரும் பலன்கள் கிடைக்கும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. உடனே இந்த சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

சந்திரபாபு நாயுடு கண்ணீர் விட்டு அழுதார் .. இனி முதல்வராகத்தான் சட்ட மன்றத்திற்கு...

 தினத்தந்தி  :ஐதராபாத், ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சி செய்து வருகிறது.  அம்மாநில சட்டப்பேரவையில் வேளாண் துறை தொடர்பான விவாதம் இன்று நடைபெற்று  வந்தது. அப்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்தார்.
இதனால் ஆவேசமடைந்த ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கூச்சலிட்டனர். அதனைத் தொடர்ந்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமான சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் சட்டப்பேரவைக்குள் நுழையப் போவதில்லை எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.

லண்டனில் நான்கு தமிழர்கள் தீக்கிரை - ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ... இலங்கை அராலியை

thesamnet - அருண்மொழி :தென்கிழக்கு லண்டனின், பெக்ஸ்லிஹீத் ஹாமில்டன் சாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மரணமாணவர்கள் இலங்கையர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று வியாழக்கிழமை (18.11.21) லண்டன் நேரம் 20:30 மணியளவில் பெக்ஸ்லிஹீத்தின் ஹாமில்டன் சாலையில் உள்ள  வீட்டின் முதல் மாடியில் இருந்து இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு கைக்குழந்தைகள் மீட்கப்பட்டனர், ஆனால் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே மரணித்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் காலில் காயம் அடைந்த ஒருவர் உட்பட இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்று காவற்தறையினர் தெரிவித்தனர்.

நாளை தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம்.. விவாதிக்கப்படவுள்ள முக்கிய பிரச்சினைகள்.. பரபர தகவல்!

 Rayar A  -  Oneindia Tamil  :  சென்னை: தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது:- 'திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் (21-11-2021) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
DMK MPs meeting to be held tomorrow in chennai அதுபோது, திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 19 நவம்பர், 2021

இந்தியாவில் கற்பழிப்பு அதிகரித்திருக்கிறது. டெங்கு கொரோனா வெள்ளம் புயல் எல்லாவற்றையும் விட அதிகம் .. காவிகளின் சாதனை

May be an image of 1 person and text that says 'NOTV US TRAVEL ADVISORY 'DO NOT TRAVEL ALONE, PARTICULARLY IF YOU ARE A WOMAN' COINSWITCH KUBER US TRAVEL ADVISORY FOR INDIA FLAGS RAPE AS BIG CONCERN NDTV US TRAVEL ADVISORY 'INDIAN AUTHORITIES REPORT RAPE IS ONE OF THE FASTEST GROWING CRIMES IN INDIA US ADVISORY: DON'T TRAVEL ALONE, ESPECIALLY IFA WOMAN'

Karthikeyan Fastura  :  மோடி அரசின், பிஜேபி கட்சியின் மகத்தான சாதனைகளில் ஒன்று. இது நாள் வரை இந்தியாவில் கோவிட் பரவல் இருக்கிறது, டெங்கு காய்ச்சல் இருக்கிறது, ப்ளூ காய்ச்சல் இருக்கிறது, பருவமழை மோசமாகி இருக்கிறது, பூகம்பம் வந்திருக்கிறது, வெள்ளம் வந்திருக்கிறது, கலவரம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று பல Advisory Flag வந்திருக்கிறது.
முதன்முறையாக இந்தியாவில் கற்பழிப்பு அதிகரித்திருக்கிறது.
ஆகவே பெண்களுக்கு பாதுகாப்பில்லை, தனியே செல்ல வேண்டாம் என்ற அறிவிப்பு இது தான் முதன்முறை.
ஒட்டுமொத்த உலகின் முன்பு இந்தியா தலைகுனிந்து போயுள்ளது. இதற்கு முழு பொறுப்பும் மத்திய பிஜேபி அரசும் அதன் மாநில அரசுகளின் அவர்களின் வாலறுந்த காவி குரங்குபடைகளும் தான்.

சிந்துவெளி நாகரிக எழுத்துக்களை தமிழ் மொழி அடிப்படையிலேயே படிக்க முடியும் ..இவற்றை வேத புராண செய்தியாக்குவது மோசடி

No photo description available.
No photo description available.

PoornaChandra Jeeva  : The  Indus Script .  Pasupathi  Seal - Mohenjo daro  :  No . 2420
    To clear the most wrong conception that of reading the seals of the Indus script on the basis of the  latter Vedic  and Puranic  meanings , this note was posted  .
      The seals  of the Indus script  was  historically oldest than 1000 years to the Vedic and Puranic matters in which the life and culturer of native people  of the Indian Sub continent  revealed  .
       The seal of Mohenjodaro no : 2420
Was considered by Sir John Marshall  and enumerated by him as Pasupathi seal  clearly indicated that it was Proto Siva  a God of the origin of the Indian  agricultural society  .
        Deciphering this seal as Puranic or Vadic matter is a historical fault on the basis of the historical and archaeological evidences  . We can read the Indus script only by the  Tamil  a primary  language of the Dravidian family of languages  . This seal script reads as  :
               a   l   av    i    ca    ca      
            =   Al   av   Icaka
# The  lord  Icaka who is an elderly ascetic  
         பசுபதி  முத்திரை
         மொகஞ்ச தாரோ  :  2420
       சிந்து எழுத்தைக் காலத்தால் பிற்பட்ட வேத , புராணங்களின்  அடிப்படையில் பொருள் கொண்டு படிப்பதில் உள்ள தவறினை விளக்க இப்பதிவு இடப்படுகிறது .

கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பி ரமேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது

மின்னம்பலம் : முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி. ரமேஷுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவம்பர் 19) ஜாமீன் வழங்கியது.
கடலூர் தொகுதி திமுக எம்.பி.யான டிஆர்வி ரமேஷூக்கு சொந்தமாக பணிக்கன்குப்பம் பகுதியில் முந்திரி ஆலை உள்ளது. இங்குத் தொழிலாளியாக பணியாற்றி வந்த மேல்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரமேஷ் கடந்த அக்டோபர் 11 தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
எம். பி. ரமேஷின் ஜாமீன் வழக்கு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இதில் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், முந்திரி ஆலையிலிருந்து 7 கிலோ முந்திரியைத் திருடியதாக கோவிந்தராஜு தாக்கப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் எம்.பி. ரமேஷ் இருந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்ததாகவும் கூறப்பட்டது.

3 வேளாண் சட்டங்களும் வாபஸ் -பிரதமர் அறிவிப்பு ! பஞ்சாப் விவசாயிகள் போராடடம் வெற்றி

May be a cartoon
Ravi Pallet

 மாலைமலர் : வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் விவசாயிகள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடெல்லி:குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
2014-ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறோம். விவசாயிகளின் வேதனைகளை அறிந்தவன் என்பதால்தான், அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 

திருப்பதியில் வெள்ளக்காடு ..ஆந்திரா நெடுஞ்சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்

 கலைஞர் செய்திகள் : திருப்பதியில் வெள்ளக்காடு ..ஆந்திராவில் பெருக்கெடுத்த வெள்ளம்.. நெடுஞ்சாலை ஓரத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்!
ஆந்திராவில் பெய்த பலத்த மழையால் தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், சாலையோரம் வெள்ள நீரில் ஒருவர் அடித்துச் செல்லப்படும் காட்சி வைரலாகி வருகிறது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம், வட தமிழகம், தெற்கு ஆந்திரா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளில் அதிகம் காணப்பட்டது.
இதனால் கடந்த சில நாட்களாகவே இப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழக எல்லையை ஒட்டியுள்ள சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் காளஹஸ்தி, திருப்பதி, தடா, சூளூர்பேட்டை, ஸ்ரீஹரிகோட்டா போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பின.

சென்னை பெண் டாக்டர்களுக்கு பாலியல் வன்கொடுமை - ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை 2 டாக்டர்கள் கைது

Minister Vijayabaskar inaugurates plasma bank for Covid-19 in Chennai Rajiv  Gandhi Government Hospital - DTNext.in

தினத்தந்தி :  சென்னை, தமிழகத்தில் உள்ள அரசு பொது ஆஸ்பத்திரிகளில், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை கொண்ட ஆஸ்பத்திரியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரி இருந்து வருகிறது. இங்கு பிரபல மருத்துவ நிபுணர்கள், நர்சுகள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா முதல் அலை தொடங்கிய போது ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த டாக்டர்கள் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஒட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டதால் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு இந்த ஏற்பாட்டை செய்திருந்தது.

40,000 தமிழ் பிராமண இளைஞர்கள் மணப்பெண் கிடைக்காமல் தவிப்பு - வடமாநிலங்களில் பெண் தேடும் நிலை

 News18 Tamil : தமிழ்நாட்டில்  திருமணத்துக்காக வரண் தேடும் 30 முதல் 40 வயதுடைய பார்ப்பன  இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 40,000க்கும் அதிகம் என்றும், 10 பார்ப்பன இளைஞர்களுக்கு தமிழகத்தில் திருமண வயதில் 6 பெண்களே கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
40,000க்கு மேற்பட்ட அந்த ஜாதி இளைஞர்கள் திருமணத்துக்கு மணப்பெண் கிடைக்காமல் தவிப்பதால் உத்தரப்பிரதேசம், பீகாரில் தகுந்த மணமகள்களை மணமுடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் திருமணத்துக்காக தங்கள் சமூகத்தில் பெண் கிடைக்காமல் 40,000க்கும் மேற்பட்ட பிராமண சமூகத்து இளைஞர்கள் இருந்து வருவதால், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பொருத்தமான பெண் வரன்களை தேடும் சிறப்பு முயற்சியில் தமிழக பிராமணர் சங்கம், (தாம்ப்ராஸ்) இறங்கியுள்ளது.
‘பிராமணர் சங்கம்’ நவம்பர் மாத இதழில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் தலைவர் என்.நாராயணன், பிராமண சங்கத்தின் சார்பில் வரன் தேடும் சிறப்பு இயக்கத்தை தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திருமணத்துக்காக வரண் தேடும் 30 முதல் 40 வயதுடைய பிராமண இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 40,000க்கும் அதிகம் என்றும், 10 பிராமண இளைஞர்களுக்கு தமிழகத்தில் திருமண வயதில் 6 பெண்களே கிடைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வியாழன், 18 நவம்பர், 2021

கேரளா மாடல் அழகிகள் மரணம்!...விசாரணையில் ஓட்டல் அதிபர் உள்பட 6 பேர் கைது

மாடல் அழகிகள் மரணம்!...விசாரணையில் திடீர் திருப்பம்..! ஓட்டல் அதிபர் உள்பட 6 பேர் கைது

தினமலர் : மிஸ் கேரளா(2019) பட்டம் வென்ற அழகி அன்சி கபீர் கார் விபத்தில் பலியான வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொச்சி,  மிஸ் கேரளா(2019)  பட்டம் வென்ற அழகி அன்சி கபீர்(25 வயது) மற்றும் அழகி அஞ்சனா ஷாஜன்(26 வயது) மற்றும் அவர்களுடைய நண்பர் முகமது ஆசிக் உள்ளிட்டோர் மர்மமான முறையிம் மரணம் அடைந்தனர். இவர்கள் மூவரும் நவம்பர் 1ம் தேதி அன்று கொச்சியில் ஏற்பட்ட கார் விபத்தில் பலியாகினர்.
அன்சி கபீரின் குடும்பத்தார், இந்த விபத்து குறித்த விரிவான விசாரணை வேண்டும் என்று பாலரிவட்டம் போலீசிடம் புகார் அளித்திருந்தனர். அதனை தொடர்ந்து, பாலரிவட்டம் போலீசார் தீவிர விசாரனையில் இறங்கினர்.

அதிமுக - ராஜேந்திர பாலாஜி மீது ஐ.பி.சி. 420 உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  ஆவினில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இரண்டு புகார்களில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ரவீந்திரன் என்பவர், தன்னுடைய சகோதரி மகனான ஆனந்துக்கு ஆவினில் மேனேஜர் வேலை வாங்கித்தர, அதிமுக ஒன்றியச் செயலாளர் விஜய நல்லதம்பியிடம் ரூ. 30 லட்சம் கொடுத்துள்ளார்.
வேலை வாங்கித்தராத நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட, பணத்தை திருப்பிக்கொடுக்காததால், கடந்த ஆகஸ்ட் மாதம் விஜயநல்லதம்பி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ரவீந்திரன் புகார் அளித்தார். அந்தப் புகாரை ஏற்ற விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர், அதன் மீது விசாரணை நடத்தினர்.

கடலூர் திமுக எம்.பி டி.ஆர்.வி.ரமேஷுக்கு ஜாமீன் கிடைக்குமா? .. கொலை வழக்கு

கொலை வழக்கு: திமுக எம்.பி.க்கு ஜாமீன் கிடைக்குமா?

மின்னம்பலம் : கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், கடலூர் திமுக எம்.பி. ரமேஷின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக இன்று (நவம்பர் 18) ஒத்திவைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் பனிக்கன்குப்பம் பகுதியில், திமுக எம்.பி டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமாக முந்திரி ஆலை உள்ளது. இதில் பணியாற்றி வந்த தொழிலாளி கோவிந்தராஜூ கொலை செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், எம்.பி. ரமேஷ், கடந்த அக்டோபர் 11ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நடிகர் சூர்யாவை கைது செய்யக்கோரி போலீசில் பா.ம.க முறைப்பாடு ..


  Rayar A  -  Oneindia Tamil :   சென்னை: நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் வெளியானது. நடிகர் சூர்யா, ஜோதிகா படத்தை தயாரித்துள்ளனர். ஞானவேல் இயக்கியுள்ளார்.
ஒதுக்கப்பட்ட இருளர் சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும் கதாநாயகன் அவர்களுக்கு நீதி பெற்று தருவதே படத்தின் கதை.
ஜெய்பீம் திரைப்படம் சமூக நீதியை பறைசாற்றுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். இதேபோல் அரசியல் கட்சியினர், திரையுலகினர் உள்ளிட்ட பலர் சூர்யாவுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவத்து வந்தனர்.

சென்னை அருகே கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் ...

 மாலைமலர் : சென்னை:  தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டது
ஆனால், அதற்கு முன்பாகவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இதன் காரணமாக, தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பன்னீரால் ரூ.500 கோடி இழப்பு : திமுக பகீர் புகார்!

பன்னீரால் ரூ.500 கோடி இழப்பு : திமுக பகீர் புகார்!

மின்னம்பலம் : அரசுக்கு சொந்தமான நிலத்தைப் பாதி விலைக்கு விற்றதால் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
கோயம்பேட்டில் அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை அவசரச் சட்டம் மூலம் முன்னாள் துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு நெருக்கமானவர்களுக்கு விற்றதாக ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்தார்.

”ஆதிக்க கலாச்சாரத்தை என்னால் தகர்த்தெரிய முடியவில்லை” - தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி உருக்கம்!

May be an image of 1 person and text that says 'మடைதகல அழகான மாநிலத்தை விட்டு விடைபெறுகிறேன்! JUSTICE SANAB BANERJEE எனக்காக நீண்ட நேரம் காத்திருந்த நீதிமன்ற ஊழியர்களுக்கு நன்றி. இதுநாள் வரை ஆதிக்க கலாச்சாரத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதை முழுமையாக தகர்த்தெறிய என்னால் இயலவில்லை, இந்த அழகான மாநிலத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் கடன் பட்டிருக்கிறேன். எனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். -சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி fiaiaignanewsoticiai aloignar News Kalaignamnewt கலeர சேக்திகள் 17-11-2021'

  கலைஞர் செய்திகள் : மேகாலயாவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட சென்னை தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி சக நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள என் குடும்பத்தினருக்கு என அவர் தொடங்கியுள்ள கடிதத்தில், தனிப்பட்ட முறையில் விடைபெறாமல் செல்வதற்காக மன்னிக்கும்படி என சக நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், தன்னுடைய நடவடிக்கைகள் யாரையும் புண்படுத்தி இருந்தால், அது தனிப்பட்ட முறையிலானது இல்லை என்றும், அது உயர் நீதிமன்ற நலனுக்கானதாகவே இருந்திருக்கும் என விளக்கம் அளித்துள்ளார்.

மஞ்சள், வெட்டிவேர், வேம்பு கொண்டு சானிட்டரி பேட்களை உருவாக்கிய மாணவி!


  YS TEAM TAMIL : அண்ணா பல்கலைகழக ஆராய்ச்சி மாணவியின் 3 ஆண்டுகால உழைப்பில் உருவான இந்த சானிட்டரி பேட்களால் சுற்றுச்சூழல் மற்றும் பெண்கள் ஆரோக்கியத்துக்கு கேடு வராது.
இன்றைய சூழலில் நாம் அதிகம் பேசுவது சுற்றுச்சூழலை காக்க பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பெண் சுகாதாரம். பெண்கள் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை பற்றிப் பேசும்பொழுது மாதவிடாய் காலத்தில் பெண்கள் சானிட்டரி நாப்கினை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஆனால் அந்த நாப்கினில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் இரசாயனங்கள் சுற்றுச் சூழலை பாதிப்பதோடு, பெண்களின் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது.
இந்த இரண்டையும் சமநிலைப் படுத்தி பெண்கள் சுகாதாரம் மற்றும் சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு சானிட்டரி பேட்களை தயாரித்துள்ளார் சென்னை அண்ணா பல்கலைகழக மாணவி ப்ரீத்தி.

புதன், 17 நவம்பர், 2021

அதிரடியாக குறைக்கப்பட்ட உச்ச நட்சத்திரத்தின் சம்பளம்.. எல்லாத்துக்கும் காரணம் அது தானாம்

Annaatthe Box Office: The Rajinikanth Starrer Collects 225 Crores In 12  Days! - Filmibeat

  staff -  tamil.filmibeat.com :  சென்னை: ஒரு வாரத்தில் ஓஹோன்னு வந்த வசூல் அடுத்த வாரத்தில் அதள பாதளத்திற்கு சென்றதன் விளைவை அடுத்த படத்தில் அனுபவிக்க போகிறாராம் அந்த உச்ச நட்சத்திரம்.
ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியும் அடுத்த படத்தை உடனடியாக ஆரம்பிக்க உத்வேகமாக கிளம்பியவருக்கு தயாரிப்பு தரப்பு இப்படியொரு செக் வைத்ததை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லையாம். கிடைத்தது போதும் என ஓகே சொல்லி நடிக்கலாமா?
இல்லை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தை அணுகலாமா என்கிற யோசனையில் இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.
பல வருடங்களாக சொதப்பல்..  பிரம்மாண்டத்துடன் இணைந்து உச்ச நட்சத்திரம் நடித்த அந்த படத்திற்கு பிறகு அவர் கடந்த 10 ஆண்டுகளாக நடித்து வரும் அத்தனை படங்களும் சொதப்பலாகவே அமைந்து வருவதாக மிகப்பெரிய குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

ஜெய் பீம்: IMDB ஐஎம்டிபியில் முதலிடம், நவீன தலித் சினிமாவில் முக்கிய இடம்.. BBC

ஜெய்பீம்

பி பி சி - அசீம் சாப்ரா     திரைப்பட பத்திரிகையாளர்  : தி ஷஷாங் ரிடெம்சன் மற்றும் தி காட்பாதர் போன்ற மிகப் பிரபலமான படங்களைப் பின்னுக்குத் தள்ளி, IMDb இணையதளத்தில் சிறந்த படமாக பயனர் தரமதிப்பீட்டில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது ஜெய் பீம். சாதிய படிநிலையின் அடிமட்டத்தில் இருக்கும் தலித் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளைச் சொல்லும் இந்தியத் திரைப்படங்களில் இது சமீபத்தியது என்று எழுதுகிறார் திரைப்படப் பத்திரிகையாளர் அசீம் சாப்ரா.
ஞானவேல் இயக்கி, சூர்யா நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் சாதீயப் பாகுபாட்டை மையமாகக் கொண்டது. வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகும் இது தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகின்றன.
ஜெய் பீம் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில், சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து வரப்பட்டவர்கள் சாதியின் அடிப்படையில் பிரிப்பதாகக் காட்டப்படுகிறது.

ஒரே ஆண்டில் 41 பைக்குகளை திருடிய திருடர்கள்! ரூ.25 லட்சம் மதிப்பு - ஓசூரில் கைது

file tube

 கலைஞர் செய்திகள் : ஓசூர் அருகே 25 லட்சம் மதிப்பிலான 41 இருசக்கர வாகனங்களை திருடிய 5 பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒரு வருடமாக தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பவம் அரங்கேறி வந்தது.
இந்த தொடர் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண்தேஜஸ்வி உத்தரவின் பேரில் சூளகிரி காவல் ஆய்வாளர் மனேகரன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு திருட்டு சம்பவங்களை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் சூளகிரி பகுதியில் போலிஸார் வாகன தணிக்கையின் போது 5 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது. விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பரசேர்ந்த தட்சணமூர்த்தி, வாணியம்பாடியை சேர்ந்த அரசன், சந்தோஷ், சதீஷ் மற்றும் வேலூரை சேர்ந்த திருவெங்கடம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

20 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

 மாலைமலர் : 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, மொத்தம் 1088 கோடி ரூபாய் செலவில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பினை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

திருப்புவனம்! மதமாற்றத்தை தடுத்த ராமலிங்கம் கொலை- தலைமறைவான 5 பேர்- தகவல் தந்தால் ரூ5 லட்சம் சன்மானம்- என்.ஐ.ஏ.

 Mathivanan Maran  -   Oneindia Tamil :   சென்னை: மதமாற்றத்தைத் தட்டிக் கேட்டதால் திருப்புவனம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் தலைமறைவாக இருக்கும் 5 பேர் குறித்து தகவல் தந்தால் ரூ5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தலைமறைவு நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது.
கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாமகவின் உறுப்பினராக இருந்தவர்.
திருபுவனம் கடை வீதியில் தமிழன் கேட்டரிங்க் சர்வீஸ் என்ற பெயரில் சமையல் ஒப்பந்ததாரராகவும் சமையல் பொருட்களை வாடகைக்கு கொடுப்பவராகவும் தொழில் நடத்தி வந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம்- கோவை சின்மயா வித்தியாலயா மாணவி கொலையை மூடி மறைக்க உதவவில்லையோ?

 Mathivanan Maran  -   Oneindia Tamil  :   கோவை: கோவையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது அடையாளங்களை பகிரங்கமாக வெளியிட்டதால் 48 யூடியூப் சேனல்கள் மீது கோவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை சின்மயா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவி சில நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
பாலியல் தொல்லை கொடுத்து மாணவியின் தற்கொலைக்கு காரணமாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து பெங்களூருவில் பதுங்கி இருந்த சின்மயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டார்.

கல்லூரிகளில் இனி நேரில் தான் தேர்வு'- தமிழ்நாடு உயர் கல்வித்துறைச் செயலாளர் அறிவிப்பு!

 நக்கீரன் தமிழ்நாட்டில்  கரோனா பெருந்தொற்று ஊரடங்கால் அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. இனி ஆஃப்லைன் எனப்படும் நேரில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்று தமிழ்நாடு உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் இ.ஆ.ப. அறிவித்துள்ளார்.
 இது தொடர்பாக, உயர் கல்வித்துறைச் செயலாளர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், அனைத்து வகை கல்லூரி கல்வியியல் இயக்குநரகம், அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கரோனா காலகட்டம் முடிந்துவிட்டது. அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும். பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் என அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் – இஸ்லாமியவாதி – ஜிஹாதி : அவசியம் புரிந்துகொள்ளப்பட வேண்டிய வேறுபாடுகள்!

றிஷ்வின் இஸ்மத்  : முஹம்மது நபியின் சித்திரத்தை வகுப்பறையில் காட்சிப் படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் 2020 ஆம் ஆண்டு குத்திக் கொலை செய்யப்பட்ட பிரஞ்சு பள்ளிக்கூட ஆசிரியர் சாமுவேல் படியின் நினைவு தினத்தை அனுஷ்டித்துக் கொண்டு இருந்தவர்கள் சில தினங்களுக்கு முன்னர் ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் தாக்கப்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள சில ஊடகங்கள், அந்தத் தாக்குதலை மேற்கொண்டவர்களை வெறுமனே ‘முஸ்லிம்கள்’ என்று அடையாளப் படுத்தி இருந்தமையைக் காண முடிந்தது.
முஸ்லிம், இஸ்லாமியவாதி, ஜிஹாதி போன்ற சொற்பிரயோகங்களிற்கு இடையிலான வேறுபாடு குறித்து பொதுப் பரப்பில் காணப்படுகின்ற தெளிவற்ற தன்மையின் ஒரு எடுத்துக் காட்டாகவே ஸ்டுட்கார்ட் தாக்குதல் தொடர்பான செய்திகள் அமைந்துள்ளன.
அரசியல் பரப்பிலும், ஊடகப் பரப்பிலும், சமூக ஊடகங்களிலும் இந்த சொற்பிரயோகங்கள் தொடர்பான தெளிவற்ற தன்மையைத் தொடர்ந்தும் அவதானிக்க முடிகின்றது. இந்தத் தெளிவற்ற தன்மை அப்பாவிகள் மீதான வன்மத்திற்கு வழிவகுக்கின்றது.

சேலம் சங்ககிரி தலித் இளைஞர் மோகன்ராஜ் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு- வன்னிய ஜாதி ஆணவக்கொலை...

தர்மபுரி திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் மரணம்: தண்டவாளத்தில் சடலம்  கண்டெடுப்பு! (படங்கள்) | dharmapuri, Elavarasan death, lover divya

Mathivanan Maran   -  Oneindia Tamil :  சேலம்: சேலம் அருகே சங்ககிரி ஒன்றியம் தட்டாபட்டியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த, ஜாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் மோகன்ராஜ், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் மோகன்ராஜ் ஆணவப்படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதால் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித் தமிழர் பேரவையினர் வலியுறுத்தி உள்ளனர்.

சபரிமலையில் தமிழ்நாடு அறநிலைய துறையின் மருத்துவ சேவை ஆரம்பம்

Diwa :  சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு கேரளா கர்நாடக ஆந்திரா தெலுங்கான மகாராஸ்டிரா என நம் நாட்டின் பல மாநிலத்தவர்கள் வருகை தந்தாலும் அக்கோவில் அமைந்துள்ள கேரளா மாநிலத்தவரைவிட மிக அதிகமான எண்ணிக்கையில் தமிழ்நாட்டு பக்தர்கள்தான் தர்ம சாஸ்தா ஐய்யப்பனை கண்டு வணங்கிட வருடா வருடம் சபரிமலைக்கு செல்கின்றனர்...
சபரிமலை கோவிலுக்கு வரும் அனைத்து மாநில பக்தர்களுக்கும் தேவையான தங்குமிட வசதி உணவு வசதி உடமை பாதுகாப்பு வசதி மற்றும் மருத்துவ சேவை உட்பட அனைத்து சேவைகளையும் 24*7 மணி நேரமும் கன்னும் கருத்துமாக இருந்து கண்காணித்து சேவை செய்து வருகிறது திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு எனும் கேரளா மாநில அரசினுடைய கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு.
கேரளா மாநிலத்தவர் மட்டுமல்ல உள்ள பிற மாநிலங்களிலிருந்து இக்கோவிலுக்கு வரும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவது இந்த திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுதான்.

செவ்வாய், 16 நவம்பர், 2021

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி. நல்லம நாயுடு காலமானார்! ஜெயலலிதா சிறை செல்ல காரணமானவர்

 நக்கீரன் : தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி. நல்லமநாயுடு. இவருக்கு வயது 83. உடல்நலக்குறைவு காரணமாக இன்று (16.11.2021) அதிகாலை சென்னை பெரவள்ளூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக தகவல் வெளியாகியது.
 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர். ஜெயலலிதாவிற்கு எதிரான ஊழல் மற்றும் லஞ்ச புகார்களை விசாரித்து, அவரை கைது செய்து, ஆறே மாதத்திற்குள் அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகையையும் இவர் தாக்கல் செய்தார்.
இதுதான் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதலமைச்சர் பதவியை ஜெயலலிதா இழக்கக் காரணமாக இருந்தது.
1997ஆம் ஆண்டே நல்லமநாயுடு ஓய்வுபெற்றுவிட்டார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு குறித்த தன் அனுபவங்களை ‘என் கடமை. ஊழல் ஒழிக!’ என்ற புத்தகம் வாயிலாக சுயசரிதையாக பதிவுசெய்துள்ளார். அப்புத்தகத்தை நக்கீரன் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது.

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20000 நிவாரணம்”: முதலமைச்சர் அறிவிப்பு!

கலைஞர் செய்திகள்  - Vignesh Selvaraj  :  மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்க ரூபாய் 300 கோடி - பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழையினால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கன்னியாகுமரியிலும் மிக அதிகளவில் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டன. மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று தொடர்ந்து ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்; அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் ஆலோசனை!

 கொண்டாட்டம் தவிர்ப்பு?

Arsath Kan -  Oneindia Tamil :   சென்னை: உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடுவது குறித்து திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த உள்ளதாகவும் தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் இதற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சென்னை மற்றும் கன்னியாகுமரி கனமழையால் தவித்து வரும் நிலையில் அமைச்சர் ஒருவர் உதயநிதி பிறந்த நாள் கொண்டாட்ட ஆலோசனையில் பங்கேற்பதா என பாஜக அதிருப்தி மற்றும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடியில் இது தொடர்பாக நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டதுடன், எப்படி கொண்டாடலாம் என தனது பங்குக்கு சில யோசனைகளையும் இளைஞரணியினருக்கு கொடுத்து விட்டு வந்துள்ளார்.

சேது சமுத்திரம் ..தென்னிந்தியாவின் சூயஸ் கால்வாய்! யாரால் நின்றுபோனது?

May be an image of map, sky and text that says 'INDIA Bay of Bangal Tamil Nadu Arablan Sea Sethusamudram Rame swaram ship canal laland Dhanushkodl Tuticorin Paik Bay Gulf Gulfof of Mannar SRI LANKA Colombo route Present Indian Ocean'
May be an image of map and text

கபிலன் காமராஜ் :  சுவீடனின் கோதா கால்வாயும் - தமிழ்நாட்டின் சேதுசமுத்திர கால்வாயும்
இங்கிலாந்தில் இருந்து North Sea வழியாக வந்து டென்மார்க் அருகே Baltic கடலுக்குள் நுழைந்தால் ரஷ்யா, போலந்து, பின்லாந்து, வடக்கு ஜெர்மனி, டென்மார்க், சுவீடனின் தலைநகர் ஸ்டோக்ஹோல்ம் என பல இடங்களை கடல் வழியாக சென்று சேர முடியும். பால்டிக் கடல் தான் வடக்கு ஐரோப்பாவின் வர்த்தக வழி. ஆனால் 1856யில் கிரிமியா போர் முடியும் வரை பால்டிக் கடலில் நுழைய டென்மார்க் நாட்டிற்கு சுங்க வரி கட்ட வேண்டும்.
சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டோக்ஹோல்ம் கிழக்கில் இருந்தது. அங்கிருந்து இங்கிலாந்து, அமெரிக்கா, தெற்கு ஐரோப்பிய நாடுகளோடு வணிகம் செய்ய சுவீடன் கப்பல்கள் டென்மார்க் நாட்டிற்கு கப்பம் கட்டிவிட்டு தான் பால்டிக் கடலை விட்டு வெளியேறவோ, நுழையவோ முடியும்.  ஆனால் சுவீடனின் மேற்கில் இருந்த கோத்தென்பெர்க் நகரின் துறைமுகத்திற்கு அந்தச் சிக்கல் இல்லை. அங்கிருந்து சுவீடன் தன் கடல் வழி வணிகத்தை செய்ய முடியும்.

நடிகர் சூர்யாவை விமர்சிப்பதை பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ் தவிர்க்க வேண்டும் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தகச் சபை கோரிக்கை!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  அரசியல், ஜாதி, மத சார்பின்றி கல்விப் பணியில் கலங்கரை விளக்காக செயலாற்றி வரும் சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்கும்படி, பா.ம.க.வின் இளைஞரணித் தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக,  அன்புமணி ராமதாஸுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபை இன்று (15/11/2021) எழுதியுள்ள கடிதத்தில், "நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான 'ஜெய்பீம்' திரைப்படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களால் காண்பிக்கப்பட்ட தங்கள் கட்சியின் முத்திரையை நீங்கள் அடையாளப்படுத்தி அதை நீக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தீர்கள்.
 எங்களுடைய தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினர் சூர்யா, உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்தக் காட்சியை உடனடியாக நீக்கிவிட்டார்.

சிவகாசியில் வெடித்துச் சிதறிய பட்டாசுகள்.. அப்படியே தரைமட்டமான கட்டிடம்.. 3 பேர் மாயம்.. பரபர தகவல்

Vigneshkumar  - tamil.oneindia.com  : விருதுநகர்: சிவகாசியில் உள்ள நேருஜி நகரில் உள்ள குழாய் கம்பெனியில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது -
உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்மார்ட் ஹோம்சுக்கு உங்களை வரவேற்கிறோம்! மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
விருதுநகர் சிவகாசியில் உள்ள நேருஜி நகரில் சுமார் 3500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பஞ்சவர்ணம் என்பவருக்குச் சொந்தமான கட்டிடம் உள்ளது.
இதில் கீழ் தளத்தில் ராமநாதன் என்பவருக்குச் சொந்தமான குழாய் கம்பெனியும் மேற்தளத்தில் குடும்பத்தினரும் வசித்து வந்துள்ளனர்தீபாவளி சமயத்தில் தனது கம்பெனி இருக்கும் கட்டிடத்தில் ராமநாதன் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை இருப்பு வைத்து, அங்கிருந்து விற்பனைக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எவ்வித அனுமதியும் பெறவில்லை.

திங்கள், 15 நவம்பர், 2021

ஜாக்கி வாசுதேவ் ஆசிரமத்தில் ஒழிந்திருந்த சின்மயா வித்தியாலய மீரா ஜாக்சன் .. மைசூரில் இருந்ததாக கதையளந்த போலீஸ் கோவையில் பாஜக ஆட்சி நடக்கிறது

 நக்கீரன்  : கோவையில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், பெற்றோர்கள், உறவினர்கள், மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் போராட்டத்தின் காரணமாக மூன்று நாட்களுக்குப் பிறகு தனிப்படை போலீசார் நேற்று (14.11.2021) இரவு பெங்களூருவில் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து, கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துவரப்பட்டு, அவரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில், முதற்கட்ட விசாரணையை துணை ஆணையர் ஜெயச்சந்திரன் முடித்துக்கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்வதற்காக மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டது.

மகாராஷ்டிரா போலீஸ் ஸ்டேஷன் ..16 வயது சிறுமியை 6 மாதங்களாக 400 பேர் பாலியல் வல்லுறவு..

tamil.asianetnews.com -Thiraviaraj RMமகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் 16 வயதான திருமணமான மைனர் பெண் ஒருவரை கடந்த 6 மாதங்களில் 400 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் 16 வயதான திருமணமான மைனர் பெண் ஒருவரை கடந்த 6 மாதங்களில் 400 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா ராமசாமி தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், ’’காவலர்கள் கூட பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர்.  அவர் இருமாத கர்ப்பிணியாக உள்ளார். இது தொடர்பாக மூன்று குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.Minor Allegedly Raped By 400 Men Over 6 Months In Beed District, 3 Arrested

நாங்கள் குறவர்! இருளர் இல்லை! சூர்யா உதவவில்லை! நிஜ செங்கேனி பகீர் Jai bhim

குறவர்

Arsath Kan  -  Google Oneindia Tamil :   சென்னை: ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் கோடி கோடியாக சம்பாதித்த நடிகர் சூர்யா, இதுவரை தனக்கு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் அந்த படக்கதையின் உண்மை நாயகியான பார்வதி.
 தாங்கள் இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எனவும் பார்வதி மிகத் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் ஜெய்பீம் திரைப்பட இயக்குநருக்கும், நடிகர் சூர்யாவுக்கு நெருக்கடி முற்றி வருகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் திரைப்படமானது 28 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டி! பிரியங்கா காந்தி உறுதி

தினமலர் : புலந்த்ஷர்: உ.பி.,யில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா கூறியுள்ளார்.
உ.பி.,யில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. காங்கிரசை தயார் படுத்தும் வகையில், பிரியங்கா அம்மாநிலத்திற்கு அடிக்கடி சென்று பல்வேறு கூட்டங்கள், பேரணிகளில் பங்கேற்று வருகிறார்.

'முதலமைச்சரின் முகவரி'- புதிய துறை உருவாக்கம்!

நக்கீரன்  : கரோனா கட்டுப்பாடுகளை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தற்பொழுது 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறையை உருவாக்கி அதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் உதவி மையம், முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவைகளை ஒன்றிணைந்தது 'முதல்வரின் முகவரி' என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வரின் முகவரி துறையில் மனுக்களுக்குத் தீர்வுகாண ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அமித் ஷா கூட்டிய தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக பொன்முடி பங்கேற்பு!

  Asianet Tamil  - Tirupati  :  மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா திருப்பதியில் கூட்டிய தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவில்லை. ஸ்டாலின் சார்பில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திருப்பதியில் 29-ஆவது தென் மண்டல கவுன்சில் (தென் மாநில முதல்வர்கள்) கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.
இன்று நடைபெற்ற முதல்வர்கள் இக்கூட்டத்தில் அமித்ஷா தலைமை வகித்தார். கூட்டத்தைத் தொடங்கி வைத்து அமித்ஷா பேசுகையில், “தென்னிந்திய மாநிலங்களின் கலாச்சாரம், மரபுகள், மொழிகள் ஆகியவை இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்டைய பாரம்பரியத்தை வளப்படுத்துகின்றன. 

ஞாயிறு, 14 நவம்பர், 2021

தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு; முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு!

 Mageshbabu Jayaram -  Samayam Tamil :   கொரோனா நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசாணை எண்.688, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 28.10.2021-ன்படி, 15.11.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகளை 30-11-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் 28-10-2021 அன்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், மழை வெள்ள காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டும், பொது மக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 30-11-2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

சின்மயா வித்தியாலயா முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூரில் கைது.. விபரம்

   BBC :   பிபிசி தமிழ் : மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், உறவினர்கள் கோரியபடி முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தவறிய பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக சித்தரிக்கும்போக்கு நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் மரணமடைந்த மாணவியின் வாட்ஸ்அப் உரையாடல்களை சிலர் வெளியிட்டுள்ளனர்' என்கின்றன மனித உரிமை அமைப்புகள்.
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்தியாலயாவில்   பிளஸ் 1 படித்து வந்தார். 

வெள்ள அரசியல்: சசிகலாவை நோக்கிப் பாயும் அதிமுக புள்ளி!

 மின்னம்பலம் : மழை வெள்ளத்தை பார்வையிட அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் தனித்தனியாக பார்வையிட சென்றதால் கீழ் மட்ட நிர்வாகிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
தொடர் மழையால் தத்தளித்து வந்த சென்னை மாநகரத்தை ஆளுங்கட்சி எம் எல் ஏ கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என ஆளுக்கு ஒரு பக்கம் சென்று பார்வையிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். கூடுதலாக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஏழு நாட்களாக சென்னையை சுற்றிச் சுற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

செல்ஃபி.. தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்.. உடல்கள் மீட்பு .. சிலர் காப்பாற்றப்பட்டனர்

செல்ஃபி: தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்!

மின்னம்பலம் : வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு சராசரி அளவை விட அதிகமாக பெய்துள்ளது. கடந்த ஒரு வாரமாகப் பெய்த கனமழையின் காரணமாகத் தமிழகத்தின் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்தாலும், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் ஆற்று பகுதிக்கு சென்று செல்பி எடுப்பது, குளிப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
மழை காரணமாகக் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆதரவற்றோர் இல்லங்களில் ஆண் குழந்தைகளைவிட 38% அதிக பெண் குழந்தைகள்

 அர்ஜுன் பார்மர்  -      பிபிசி குஜராத்தி  :  இன்று (நவம்பர் 14) இந்தியா "குழந்தைகள் தினத்தை" கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று சூரத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
அக்குழந்தை அக்டோபர் 28ம் தேதி சூரத்தில் பெஸ்தான் என்கிற பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கண்டுபிடிக்கப்பட்டது.
பரத்பாய் பெல் என்கிற நபர் கைவிடப்பட்ட அக்குழந்தையை கண்டெடுத்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். சரியான நேரத்தில் அவர் அக்குழதையைக் கண்டெடுத்ததால் பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது.
"அந்த பிஞ்சுக் குழந்தை எப்படி அங்கே இருந்தது என்பதை நினைக்கும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது. அக்குழந்தையின் நிலையைக் கண்டு எனக்கு கண்ணீர் வருகிறதா?

சென்னையில் 14,000 மெட்ரிக் டன் குப்பை அகற்றம்; மழை ஓய்ந்த பிறகும் தொடரும் தூய்மை பணி

இரண்டே நாளில் 14,000 மெட்ரிக் டன் குப்பை அகற்றம்; மழை ஓய்ந்த பிறகும் சென்னையில் தொடரும் தூய்மை பணி!

கலைஞர் செய்திகள் : சென்னையில்  இடைவிடாது பெய்த மழையால் தேங்கிய 14 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை கடந்த 2 நாட்களில் அகற்றம். குமரியில் மழைக்கால மருத்துவ முகாம்கள் முறையாக நடைபெறுகிறது” என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நோய் தடுப்பு பணிகளை பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கோவை சின்மயா வித்தியாலயா முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூருவில் கைது.. பதுங்கி இருந்தார்

பள்ளி முதல்வர் மீரா

  Vishnupriya R  - Oneindia Tamil :  கோவை: கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூருவில் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை, தற்கொலைக்கு மாணவியை தூண்டிய விவகாரத்தில் ஏற்கெனவே இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி நேற்று கைது செய்யப்பட்டார்.
கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்த நிலையில் இந்த பள்ளியில் தனக்கு படிக்க விருப்பமில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோரிடம் மாணவி பெற்றோரிடம் மாணவி இதையடுத்து வேறு பள்ளியில் அவரை சேர்த்துவிடுமாறு பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார்.

உ.பி.யில் பாஜக ஆட்சியை தக்கவைக்குமா? கருத்துக்கணிப்பில் அதிரடி.!

Opposition parties showing tough fight to BJP in UP .. Will BJP retain power? Action in the opinion poll.!


Asianet Tamil  : மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக 217 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நூலிழையில் ஆட்சியை பாஜக கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக நூலிழையில் ஆட்சியைத் தக்க வைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. என்றாலும் கடந்த தேர்தலை போல அல்லாமல் கடும் போட்டியை பாஜக சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. 

மேட்டூர் அணை 120 அடியை எட்டியது, உபரி நீர் அப்படியே வெளியேறுகிறது, காவிரி கரை மக்களுக்கு எச்சரிக்கை

 Velmurugan P -  Oneindia Tamil :   சேலம் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை நள்ளிரவு எட்டியது .
இதனால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
அணைக்கு வரும் 22,000 கன அடி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் காவிரி கரையோர மக்களுக்கு மேட்டூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து 25 ஆயிரம் கனஅடி வரை அதிகரித்தது.