மதுரை: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், சமையல்காரரைத் தவிர குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த 2004-ஆம் ஆண்டு, ஜூலை 16-ஆம் தேதி கும்பகோணத்தில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இதில் 16 குழந்தைகள் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். பள்ளியின் சமையலறையில் பற்றிய தீயே விபத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது.
இந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர், கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியைகள் உட்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் பள்ளி தாளாளர் பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும், மனைவி சரஸ்வதி சமையல் செய்த வசந்தி உள்ளிட்ட 10 பேருக்கு சிறைத்தண்டனை விதித்தது. 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தண்டனையை ரத்து செய்யக் கோரி தண்டனை பெற்றவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், சமையல்காரர் வசந்தியின் தண்டனையை உறுதி செய்தும், மற்ற 9 பேரை விடுவித்தும் தீர்ப்பளித்துள்ளது.தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக