tamil.samayam.com : டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் தற்கொலை:
நேற்றைய தினம் கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களாக தூக்கம் வரவில்லை என தூக்க மாத்திரை எடுத்துக் கொள்வதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மன உளைச்சல் காரணமாகவும் தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கண் கலங்க வைக்கும் டிஐஜி விஜயகுமார் ஆடியோ:
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டிஐஜி விஜயகுமார், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி, பணி மாறுதல் பெற்ற போது காவலர்களுக்காக வெளியிட்ட ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சனி, 8 ஜூலை, 2023
டிஐஜி விஜயகுமார் ஆடியோ: வேலைப்பளு காரணமாக.. என்னை மன்னித்து விடுங்கள் என உருக்கம்!
அனகாபுத்தூரில் 200 ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க முயன்ற அதிகாரிகள்- பெண்கள் போராட்டம்
மாலைமலர் : சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரை பகுதியை ஆக்கிரமித்து 200 வீடுகள் கட்டப்பட்டிருந்தன.
இந்த 200 வீடுகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் நேற்று காயிதே மில்லத் நகர், டோபி கானா நகர், தாய் மூகாம்பிகை நகர் மற்றும் சாந்தி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாக கூறி வருவாய் துறையினர் நோட்டீஸ் அளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் இந்த பகுதியில் நாங்கள் 50 வருடங்களுக்கு மேலாக 3 தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஒரு கோடிப் பெண்களுக்கு உதவும் உயிர்த் தொகை..” : முதலமைச்சர் நெகிழ்ச்சி !
கலைஞர் செய்திகள் - Prem Kumar : கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது ஒரு கோடிப் பெண்களின் வாழ்க்கைக்கு உதவி செய்யும் உயிர்த் தொகை ஆகும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “தமிழ்நாடு வரலாற்றிலும் இவ்வளவு பெரிய திட்டம் இது வரை உருவாக்கப்பட்டது இல்லை என்று சொல்லத் தக்க வகையிலான மாபெரும் திட்டத்தை தொடங்கி நடத்துவதற்கான முதல் கட்டக் கூட்டத்தில் நாம் அனைவரும் பங்கெடுத்துள்ளோம்.
தலைமுறை தலைமுறைக்கு பயனளிக்கப் போகிற மகத்தான மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டத்தை வகுப்பதற்காக நாம் கூடியிருக்கிறோம். எல்லார்க்கும் எல்லாம் என்ற நோக்கத்துடன் செயல்படும் திராவிட மாடல் கோட்பாட்டின் அடிப்படையிலான இந்த அரசு செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களுக்கும் ஒரு பொது நோக்கு உண்டு. அதுதான் சமூக நீதியாகும்.
வெள்ளி, 7 ஜூலை, 2023
உவர் (உப்பு) தரையில் விளையும் உருளை கிழங்கு
Annesley Ratnasingham : Sri Lanka can do it!.
இலங்கையில் முடியும் ...இலங்கையால் முடியும் !
Will Holland's Salt-tolerant Potatoes End World Hunger?
Will the Effect Revolutionize Salt-Draining Lands?
ஹோலாண்டின் Salt-tolerant உருளைக்கிழங்கு உலக பசியை போக்குமா ??....உப்பு ஊறிவரும் நிலத்தில் விளைவு புரட்சியை செய்யுமா ?
Will this potato give you the satisfaction that Tirupati does not?
."திருப்பதி" தராத திருப்தியை இந்த உருளைக்கிழங்கு தருமா ?
"ஹோலாண்டில்" கண்டுபிடிக்கப்பட்ட "உவர்" நிலத்தில் அதாவது "உப்பு" நிறைந்த மண்ணில் விளையும் உருளை கிழங்கு "விதை"
Drought, floods, salinity and iron toxicity are among the key environmental factors that affect paddy cultivation in Sri Lanka, an island nation in the Indian Ocean.
இந்த உவர் நிலத்தில் உருவாக்கக்கூடிய உருளைக்கிழங்கு விதையை ஆசியாவுக்கு என்றே ஹொலண்ட் உருவாக்கி பல நாடுகளில் பயிரிட்டு வருகிறது ..
ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி- 2 ஆண்டு சிறை தண்டனை சரியானது என நீதிபதி தீர்ப்பு
மாலைமலர் : ராகுல் காந்தி மீது 10-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நாடு முழுவதும் நிலுவையில் உள்ளன. புனே கோர்ட்டில் சாவர்கர் மகன் தொடுத்துள்ள மனுவும் நிலுவையில் இருக்கிறது.
அகமதாபாத்: கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
அதனால் அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார். அதை எதிர்த்து சூரத் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ராகுல் காந்தி, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்தார்.
THREADs ஏழு மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களை பதிவு செய்தது டுவிட்டரின் கொலையாளி என வர்ணிக்கபடும் த்ரெட்ஸ் !
தேசம் நெட் - அருண்மொழி : பேஸ்புக் எனப்படும் முகநூல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தனது புதிய சமூக ஊடக தளமான திரெட்சை அறிமுகப்படுத்தியுள்ளது.
டுவிட்டர் நிறுவனத்துக்கு போட்டியாக உருவாக்கப்ட்ட இந்த புதிய சமூக ஊடகத்தை மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் சுக்கர்பெர்க் அறிமுகப்படுத்தியிருந்தார்.
எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான டுவிட்டர் சமூக ஊடக தளத்திற்கு மாற்றாக மெட்டா முன்மொழிந்துள்ள த்ரெட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த செயலியும் டுவிட்டரை போல உரை அடிப்படையிலான உரையாடல் பயன்பாட்டுக்குரிய செயலியாகும்.
இதன் பயனர்கள் 500 எழுத்துகள் வரையிலான இடுகைகளை வெளியிட முடியும், அத்துடன் நிழற்படங்கள் மற்றும் காணொளிக்களை உள்ளடக்கலாம் டுவிட்டரைப் போலவே, சக பயனானிகளின் இடுகைகளுக்கும் பதிலளிக்கலாம்,
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மாலைமலர் : காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்துள்ளார்.
2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று காவல் பணியில் இணைந்தார்.
குடும்ப பிரச்சினை, மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று காவல் பணியில் இணைந்தார்.
காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்துள்ளார்
ராமேசுவரத்தில் 200 மீட்டருக்கு உள்வாங்கிய அக்னி தீர்த்தக்கடல்
maalaimalar : ராமேசுவரம்: ராமேசுவரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றின் வேக மாறுபாட்டால் ராமேசுவரம் கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது.
மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. தனுஷ்கோடி அரிச்சல் முனை, அனந்தராயர் சத்திரம் பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பி வருகின்றன. இதனால் மீனவர்கள் 3 நாட்களாக கடலுக்கு செல்லாமல் உள்ளனர்.
கடந்த 3 நாட்களாக அக்னி தீர்த்த கடல் உள்ளிட்ட பகுதிகளில் பகல் வேளைகளில் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இரவில் மீண்டும் சகஜ நிலையை அடைந்தது.
வியாழன், 6 ஜூலை, 2023
நில அபகரிப்பு வழக்கு- அமைச்சர் பொன்முடி விடுதலை
maalaimalar : தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வருபவர் பொன்முடி. இவர், கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி இடத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த இடத்தில் சட்டவிரோதமாக குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியேற்றி விட்டு போலி ஆவணங்களை தயாரித்து பொன்முடியின் மாமியார் சரஸ்வதி பெயரில் அந்த இடம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மாலை மலர் : சென்னை கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
அவர் தனது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார்.
எனவே, தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
அமைச்சர் பொன்முடி வழக்கில் இன்று தீர்ப்பு.. உற்றுநோக்கும் திமுக!
tamil.oneindia.com - Vignesh Selvaraj : அமைச்சர் பொன்முடி வழக்கில் இன்று தீர்ப்பு.. உற்றுநோக்கும் திமுக!
சென்னை: அரசு இடத்தை அபகரித்ததாக கூறி அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கின் இந்த தீர்ப்பு அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வரும் க.பொன்முடி கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி இடத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதாக கடந்த 2003ஆம் ஆண்டு புகார் எழுந்தது.
புதன், 5 ஜூலை, 2023
வவுனியா நைனாமடுவில் சீனாவின் சீனி ! நன்மை தீமைகள் எவை?.
நன்மை தீமைகள் எவை?.
உலக உணவு பொருளில் சீனி மிகவும் முக்கியமானதும் தேவைக்கு மேலாக பல மடங்கு பாவிக்கப்படும் ஒரு உணவு பொருள்ளாகும்!
சீனாவில் இருந்து வந்தமையால் இதை சீனி என்றழைத்தார்கள்! .
சர்க்கரை என்ற சொல்லிலிருந்து அணைத்து மொழிகளிலும் திரிபு அடைந்து அதே போன்ற உச்சரிப்புடன் வந்தாக பல கட்டுரைகளில் எழுதுகிறார்கள்!
.சீனி இந்தியாவில் 10 ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்திய உணவு கலாச்சாரத்தில் இருந்ததாக பல கட்டுரைகளில் கூறப்படுகிறது ..
அதே போன்று பசுபிக் சமுத்திரத்தில் இருக்கும் Melanesia தீவிலும் அதே காலகட்டத்தில் இந்த சீனி உணவு கலாச்சாரம் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது ....
சீனி உற்பத்தி செய்ய கூடிய 3 வழிகளில் ( வேறு இருந்தால் உங்கள் கருத்தை சொல்லவும் அறிந்து கொள்வோம் )
காங்கிரசை கைவிடுங்கள் திமுகவுக்கு பாஜக ஒன்றிய அமைச்சர் ஆலோசனை
தினமலர் : 'காங்கிரசை கைவிடுங்கள்' : தி.மு.க.,வுக்கு பா.ஜ., ஆலோசனை
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக, தமிழக அமைச்சர் துரைமுருகன் டில்லி சென்றுள்ளார்.
இன்று, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்திக்க உள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கர்நாடகா முதல்வர் பதவி ஏற்பு விழாவில், ஸ்டாலினை அவமதித்தனர்.
ஆட்சிக்கு வந்ததும் முதல் நடவடிக்கையாக, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப் போவதாக, தமிழகத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரையும் வழங்கவில்லை. கூட்டணி கட்சி என்பதால், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைவதை, தி.மு.க., பெரிதும் வரவேற்றது.
ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு - அண்ணாமலை பேட்டி
மாலை மலர் :; சென்னை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்திப்பது குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழக ஆளுநர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தால் என்னை விட மகிழ்ச்சியான ஆள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது.
தி.மு.க.வின் வண்டவாளம், தண்டவாளம் வெளியே வரும். ஆனால் சந்திக்கக் கூடாது என்பது எங்களுடைய நிலைப்பாடு.
காரணம் என்னவென்றால், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது.
இதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆளும் கட்சியாக இருந்தாலும்,
ஆளும் கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும், ஆளுநர் அரசியல் பேசக்கூடாது.
பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் மத்திய பிரதேசத்தில் அரங்கேறிய கொடூரம்
மின்னம்பலம் - Selvam : மத்திய பிரதேசத்தில் கொடூரம்: பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த சம்பவம்!
மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின நபரின் முகத்தில் பிரவேஷ் சுக்லா என்ற இளைஞர் ஒருவர் சிறுநீர் கழித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டம் குபாரி பஜார் பகுதியில் பிரவேஷ் சுக்லா என்ற இளைஞர் ஒருவர் பழங்குடியின நபர் முகத்தில் சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சிகெரட் பிடித்தபடி இருக்கும் அவர் படிக்கட்டில் அமர்ந்திருக்கும் பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழிக்கிறார்.
பலரும் இந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஜப்பான் அணு கழிவு நீரை கடலில் கலக்க முடிவு .. Is it possible to detoxify the water from Fukushima?...or it's a lie
Annesley Ratnasingham : Is it possible to detoxify the water from Fukushima?...or it's a lie...???
எப்படி ஒரு Radioactive contaminated நீரை சுத்தம் செய்வது சாத்தியமானதா ??..
அல்லது அனைவரும் ஜப்பானுடன் சேர்ந்து பொய் சொல்கிறார்களா ?? ...
'The solution to pollution is dilution.' ... என்ற theory யா ??
How dangerous is the cooling water from Fukushima?...
Fukushimaவிலிருந்து வரும் குளிர்ந்த நீர் எவ்வளவு ஆபத்தானது?..
ஜப்பானிய Fukushima வின் அணு உலை பேரழிவு நடந்து 10 வருடங்களின் பின் அந்த அணுஉலையில் Radioactive contaminated நீரை பசுபிக் சமுத்திரத்தில் திறந்துவிட ஆரம்பிக்க போகிறார்கள் யப்பானிய அரசு .
மார்ச் 11, 2011 அன்று, 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வடகிழக்கு ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமியைத் தூண்டியது, 22,199 பேர் கொல்லப்பட்டனர்...
செவ்வாய், 4 ஜூலை, 2023
ஆப்கானிஸ்தானில் கடுமையான உணவு நெருக்கடி : 10 ஆயிரம் டன் கோதுமை வழங்கிய இந்தியா
மாலை மலர் : இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் பொருளாதார சிக்கலின் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உணவு பற்றாக்குறையால் தவித்து வரும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு உதவும் விதமாக, இந்தியா சமீபத்தில் 10,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்கியிருக்கிறது.
தனது டுவிட்டர் பதிவில் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ள ஐ.நா. உணவு அமைப்பு, இந்த கோதுமை இன்று அந்நாட்டின் ஹெராத் நகரை அடைந்ததாக தெரிவித்திருக்கிறது.
கடந்த மாதம், ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக, மனிதாபிமான அடிப்படையில், இந்திய அரசாங்கம் 20,000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
செந்தில் பாலாஜி வழக்கு: நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பில் அடுத்து என்ன நடக்கும்?
BBC தமிழ் : அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாகக் கூறி அவரது மனைவி மேகலா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.
வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளுமே ஒருவருக்கு ஒருவர் முரண்பட்ட தீர்ப்பை அளித்துள்ளனர்.
இதனால், இந்த வழக்கைப் பொருத்தவரை அடுத்தது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில், சென்னை காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் செந்தில் பாலாஜி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
திடீர் நெஞ்சு வலி – காவேரி மருத்துவமனையில் சிகிச்சை
ஜூன் 14-ம் தேதி அதிகாலையில் அமலாக்கத்துறை காரிலேயே நெஞ்சுவலியால் துடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி
அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 வரை போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, ஓட்டுநர், நடத்துநர், உதவியாளர் பணி நியமனங்களுக்கு லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ அனுமதிக்க பட்டுள்ளார்
மின்னம்பலம் - கவி : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
இன்று தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் – 2023 போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுடன் சந்திப்பு, அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் முதல்வர் ஸ்டாலினுக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது.
திங்கள், 3 ஜூலை, 2023
திமுகவும் மாமன்னனும் சமூக ஊடக அரக்கர்களின் அரசியலும்
இவர்களுக்கு என்றுமே திமுகவையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பிரித்தே வைக்கவேண்டும்! .
மாமன்னன் படம் இரத்தினவேல் கதாபாத்திரம் மூலம் தெரியப்படுத்திய செய்தியும் அதே.
இணையத்தில் உழலும் இந்தமாதிரி இரத்தினவேல்கள் தான் ஆகப் பெரும் ஸ்பாய்லர்ஸ்.
மின்சாரகண்ணா படத்தில் மன்சூர் அலிகான்க்கு 3 அல்லக்கைகள் இருப்பார்கள்.
அவர்கள் செய்யும் சேட்டைகளெல்லாம் மன்சூர் அலிகான் கணக்கில் வரும்.
மன்சூர் ஒரு காட்சியில் புலம்புவார் " இவனுங்கள வச்சுக்கவும் முடியல விரட்டவும் முடியல" என்று. அது மாதிரி தான் இருக்கிறது திமுகவின் நிலை
இவங்களுக்கு மத்தியில் கட்சியை காப்பாற்றி இழுத்துச் சென்ற கலைஞர்,
இப்போது செல்லும் திமுக தலைமையை நினைத்தால் கஷ்டமாத்தான்யா இருக்கு.
ஆளுநர் ரவியை கட்டுப்படுத்தாவிட்டால் தமிழக மக்களின் கோபத்தை மத்திய அரசு எதிர்கொள்ள நேரிடும்: முதல்வர் ஸ்டாலின்
1. அரசியல் சட்டத்தின்கீழ் அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் இல்லையென்று தெரிந்திருந்தும், ஆளுநர் ஆர்.என். இரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதாக அறிவித்தார். ஆனால் சில மணி நேரங்களிலேயே அதைக் கிடப்பில் போடுவதாக உங்களுக்குக் கடிதம் அனுப்பினார். அவருடைய நோக்கம் என்ன என்று கருதுகிறீர்கள்?
பதில்: எனது தலைமையிலான தி.மு.க. அரசு, நிம்மதியாக ஆட்சி நடத்தி, மக்களுக்கு எந்த நன்மையையும் செய்து விடாமல் தடுப்பதே ஆளுநரின் உள்நோக்கம். இரண்டு ஆண்டுகளாக எத்தனையோ திட்டங்களைக் கொண்டு வந்து - இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காண்பித்துள்ளோம். இதை எல்லாம் ஆளுநரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் ஆளுநருக்கு துளியும் கிடையாது. அதனால் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக, தமிழ்நாடு அரசுக்கு எதிராக “விதண்டாவாதம்” பேசி வருகிறார்.
செந்தில் பாலாஜி வழக்கு...300 போக்குவரத்து ஊழியர்களுக்கு அழைய்ப்பானை
மாலை மலர் : சென்னை: அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அவர் உள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்- துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்
.maalaimalar : மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து 30 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளிக்கும் கடிதத்தை அஜித் பவார் ஆளுநரிடம் வழங்கினார்.
9 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவியேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் பதவியேற்றார்.
ஞாயிறு, 2 ஜூலை, 2023
என்னால் தலைவருக்கு தர்ம சங்கடம்" -செந்தில்பாலாஜி உருக்கம்!
மின்னம்பலம் - Kavi : ஆளுநரால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அதன் பின் அவராலேயே அந்த பரிந்துரை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்னமும் சட்ட ரீதியாக ‘துறை இல்லாத அமைச்சர்’ ஆக காவேரி மருத்துவமனையில் இருக்கிறார் செந்தில்பாலாஜி.
கடந்த ஜூன் 21 ஆம் தேதி செந்தில்பாலாஜிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அதன் பின்னர் அன்றே காவேரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது ஹீமோடைனமிக் ரீதியாக நிலையாக இருப்பதாகவும்,
அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தது.
தவறான ஊசியால் குழந்தையின் கை பாதிப்பு பற்றி விசாரிக்க மூவர் குழு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
maalaimalar : சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தைக்கு கையில் டிரிப் ஏற்றியதில் தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் உடலில் பல பிரச்சினைகள் இருந்துள்ளது. இதுபற்றி டீன் ஏற்கனவே பெற்றோரிடம் விளக்கமாக கூறி இருக்கிறார். தொடர்ந்து அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறுவன் என்கவுண்டரால் பற்றி எரியும் பிரான்ஸ் – அண்டை நாட்டிலும் வன்முறை பரவியதால் ஐரோப்பா கவலை – முழு விவரம்
கொதித்தெழுந்த மக்களின் ஆவேசத்தால் பிரான்சில் வன்முறை கட்டுக்கடங்காமல் போய்விட்டது. நான்காவது நாளாக நீடிக்கும் வன்முறை தொடர்பாக இதுவரை 1,300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலைநகரில் இரவு நேரங்களில் டிராம் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாரிஸ் நகர வீதிகள் போர்க்களத்தைப் போன்று காட்சியளிப்பதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் சோபியா பெட்ஸ் தெரிவித்துள்ளார்.
போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நஹெல் என்ற சிறுவன் அல்ஜீரியாவை பூர்வீகமாகக் கொண்டவர்.