தமிழ் மிரர் :கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்
யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி
யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிகொண்டது. அப் பேருந்தில் பயணம் செய்த 69 பேர் அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு இடையிலான கலாஓயா பகுதியில் பாதுகாப்பாக கூரையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நொச்சிகாமம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சனி, 29 நவம்பர், 2025
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யாழ் பேருந்திலிருந்து அனைவரும் மீட்பு – யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றிய ராணுவம்
வெள்ளி, 28 நவம்பர், 2025
கொழும்பு அடுத்த 24 மணி நேரத்தில் மூழ்கும் அபாயம் – நீரியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை!
களனி நதிப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டும் என்று நீரியல் & பேரிடர் மேலாண்மைக்கான இயக்குநர் பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இயற்கை அழிவுகளுக்கும் மனிதர்களின் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு
ராதா மனோகர் : இயற்கை அழிவுகள் கூட உங்கள் மனங்களில் இருந்துதான் ஆரம்பம் ...
Collective Consciousness ... become Collective Unconsciousness. Then it will create material realities
தனி மனிதர்களுக்கு இருக்கும் மன நிலை அவர்களை வாழ்வை தீர்மானிக்கும் என்பதை பற்றி பல தடவைகள் எழுதி உள்ளேன்.
அவற்றை பலரும் ஏற்றுகொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டலும் அதுதான் உண்மை.
பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்று மனமே வாழ்க்கையை உற்பத்தி செய்கிறது. இங்கே நான் சொல்ல வரும் விடயம் அது அல்ல.
உலக வரலாற்றில் எங்கெல்லாம் இயற்கை அழிவுகள் நடக்கின்றதோ அங்கெல்லாம் அதை தொடர்ந்து அல்லது அதற்கு முன்பாகவே மக்கள் அமைதி இழந்து நாட்டில் குழப்பங்கள் நிலவுவதை காணலாம்.
இதை ஒரு தற்செயலான நிகழ்வு என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள் . பிரபஞ்சம் இயங்கும் பொறி முறையை பற்றிய போதிய புரிதல் இன்றைய உலகுக்கு கிடையாது என்பதே உண்மை
ஐராவதம் மகாதேவனும் தமிழும்!
![]() |
Giri Sundar : நவம்பர் 26, ஐராவதம் மகாதேவன் அவர்களின் நினைவுநாள். அவர் கல்வெட்டு ஆய்வாளர் என்பது பலரும் அறிந்தது. ஆனால் அவர் தினமணி ஆசிரியராகத் தமிழுக்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. அதனைத் தம் கட்டுரையில் நினைவுகூர்ந்திருக்கின்றார் தினமணி நாளிதழின் இணை ஆசிரியரும் கட்டுரையாளருமான திரு. எம். பாண்டியராஜன். அதனை இங்கே பகிர்ந்திருக்கிறேன்!
தமிழும் ஐராவதம் மகாதேவனும்!
-எம். பாண்டியராஜன்
அறிஞர் ஐராவதம் மகாதேவன் என்றதும் பெரும்பாலும் தொல்லியல், ஆரியர் வருகைக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகம், புகளூர்த் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகியவற்றைப் பேசி, மிகக் குறைவாகவே தினமணி பற்றிக் குறிப்பிட்டு விட்டுவிடுகிறார்கள்.
வெள்ளக் காடாக மாறிய இலங்கை - இதுவரை 70 க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு பதுளையில் மட்டும் 31 பேர் உயிரிழப்பு
bbc.com : திட்வா புயல்: வெள்ளக் காடாக மாறிய இலங்கை
இலங்கையில் இயற்கை சீற்றத்தால் 40 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்குள்ள நிலவரம், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் நிலை ஆகியவற்றைக் காட்டும் சில புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.
கொழும்பு - பதுளை பிரதான சாலையில் உள்ள ஒய் சந்திப்பில் இருந்து பண்டாரவெல செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது. அந்த சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் தியத்தலாவ வழியாகச் செல்லும் சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அம்பாறை கால்வாயில் கார் வீழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
தினகரன் :அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைவாகுப்பற்று, பொலிவேரியன் குடியிருப்புப் பகுதியில் இன்று (27) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்ததும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினர், சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ செயற்படையணி மற்றும் பொலிஸார் இணைந்து உடனடியாக மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். இதன்போது கால்வாயில் மூழ்கிய கார் மீட்கப்பட்டது.
வியாழன், 27 நவம்பர், 2025
1951 கலைஞரின் கார் -.மணமகள் - சுப்பிரஜா - கலைவாணர்!
![]() |
ஆனந்த்குமார் சித்தன் : கலைவாணர் என் எஸ் கே பொருளாதார ரீதியாக தோல்விகளை சந்தித்த காலம்..
லட்சுமி காந்தன் என்கிற பத்திரிகையாளர் கொலை வழக்கில் இவரையும் சேர்த்து விட்ட பின்னர், போராடி வெளியே வந்த காலம்..
அப்போது
1950 களில் மலையாளத்தில் சுப்ரபா என்று ஒரு நாடகம் மிகப் பிரபலமாக இருந்தது.. அந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்க நினைத்தார் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்.
அதை அப்போதைய நண்பரான கலைஞரிடம் சொன்னார்..
பின்னர்
சுப்ரபா நாடகத்தின் எழுத்தாளர் அடூர் முன்ஷி பரமேஸ்வரன் பிள்ளையும், கலைஞரும் இணைந்து திரைக்கதை உருவாக்கினர்.
படத்தின் வசனம் முழுமையாக கலைஞர் எழுதினார்..
கட்டாயத்திருமணமும், பெண் சுதந்திரத்தையும் அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை என் எஸ் கே தயாரித்து இயக்கினார்.
ஹாங்காங் பிரமாண்ட குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! 36 பேர் உயிரிழப்பு .. பலரின் நிலை தெரியவில்லை
ஹாங்காங்கின் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காக்கில் உள்ள பல அடுக்குமாடி கொண்ட குடியிருப்பில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அனைத்து தளங்களிலும் தீப்பற்றி எரிந்த நிலையில், இந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
புதன், 26 நவம்பர், 2025
‘செங்கோட்டையன் தவெவில் -பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ்...’ - திருமாவளவன் சந்தேகம்
hindutamil.in - தமிழினி : சென்னை: “செங்கோட்டையனின் செயல்பாடுகளுக்குப் பின்னால் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் கைகளும் நீண்டிருக்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “அதிமுகவின் மூத்த தலைவராக இருந்தவர் செங்கோட்டையன். அவருக்கு நெடிய அனுபவம் உள்ளது. ‘
அவர் வெளியேறும் நிலை ஏற்பட்டிருப்பது அதிமுகவுக்கும், எடப்பாடிக்கும் பின்னடைவாகத்தான் இருக்கும். தனிப்பட்ட முறையில், தன்னிச்சையாக அவர் இந்த முடிவை எடுத்திருந்தால், நாம் எதுவும் சொல்ல முடியாது.
சிறையில் உள்ள புலிகள் ஆதரவு பெண்ணுக்கு எஸ்.ஐ.ஆர்., படிவம்
![]() |
தினமலர் -சென்னை: சிறை கைதியாக உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண்ணுக்கு வினியோகம் செய்ய, எஸ்.ஐ.ஆர்., படிவம் அச்சடித்து இருப்பதும், அவரிடம் நம் நாட்டு பாஸ்போர்ட், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் என, சகல விதமான ஆவணங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்தவர் லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா, 45. இவர், 2019ல், சுற்றுலா விசாவில் தமிழகம் வந்து, சென்னை அண்ணா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்.
விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த இவர், 2021ல், விமானத்தில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல முயன்றார். அவரை, தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விஜய்.. செங்கோட்டையனை வாண்டடாக கேட்டது ஏன்? விஜயகாந்த் எடுத்த அதே ரூட்!
tamil.oneindia.0Rajkumar R : சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது/ ஏற்கனவே பல தலைவர்கள். குறிப்பாக செஞ்சி ராமச்சந்திரன், மருது அழகராஜ், காளியம்மாள் ஆகியோர் விஜய் தரப்பை அணுகிய நிலையில் அவர்கள் கட்சியில் இணைவதற்கு விஜய் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் செங்கோட்டையனை விஜய் தரப்பே அணுகி கட்சியில் சேர வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்குப் பின்னணி என்ன என்பது குறித்தான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளது.
செவ்வாய், 25 நவம்பர், 2025
5 வயது சிறுவனை மரத்தில் கட்டி தொங்க விட்ட ஆசிரியைகள்- சத்தீஸ்கர் மாநிலம்
![]() |
மின்னம்பலம் - Pandeeswari Gurusamy :சத்தீஸ்கரில் வீட்டுப்பாடம் முடிக்காத நான்கு வயது மாணவனை ஆசிரியைகள் மரத்தில் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் பகுதியில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில் வாஹினி வித்யா மந்திர் பள்ளி செயல்பட்டு வருகிறது. நர்சரி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் திங்களன்று காலை வழக்கம் போல் பள்ளி தொடங்கியது. அப்போது நர்சரி வகுப்பு ஆசிரியை காஜல் சாகு என்பவர் குழந்தைகளுக்கு அளித்த வீட்டுப்பாடத்தை சரிபார்த்தார். அப்போது அவரது வகுப்பில் ஒரு மாணவர் மட்டும் வீட்டு பாடங்களை முடிக்காதது கண்டு ஆத்திரம் அடைந்தார்.
“கொழும்பு ஹோட்டலில் தாக்குதல் சம்பவம் – வாடிக்கையாளர்கள் மீது இனவாதக் குற்றச்சாட்டு தவறு”
மதுஷா : கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளில் ஹோட்டல் ஊழியர்களால், வாடிக்கையாளர்கள் தாக்கப்படுவது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
எனினும் உண்மையில் வாடிக்கையாளர்களால் கொடூரமான முறையில் ஊழியர்கள் தாக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மீது தாக்குல் மேற்கொண்டதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் சம்பவத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
ஊழியர்கள் மீது தாக்குதல்
திங்கள், 24 நவம்பர், 2025
திமுகவிடம் காங்கிரஸ் 45 தொகுதி கேட்கிறது - டபிள் டிஜிட்டாவது கிடைக்குமா?
மின்னம்பலம் : 45 சீட்.. காங்கிரஸ் ஐவர் குழு 'அதிரி புதிரி’.. திமுக ‘ஷார்ப்’ ரியாக்சன் என்ன?
கூட்டணி விவகாரத்துல காங்கிரஸ் ரொம்ப வேகமா இருக்கேன்னு டெல்லி மேலிடத்துக்கு நெருக்கமான சீனியர்களிடம் நாம் பேசிய போது, “பீகார் தேர்தல் முடிஞ்ச கையோடு டெல்லியில 12 மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், பொறுப்பாளர்கள், சீனியர் லீடர்ஸை ராகுல் அழைச்சு பேசுனாரு.. SIR பத்தி பேசுறதுக்குன்னு சொன்னாலும் ஒவ்வொரு ஸ்டேட்டுலயும் எலக்ஷன் வரப் போறதால அதுபத்தியும் டிஸ்கஷன் போனது..
இந்த கூட்டத்துல, தமிழகத்துல காங்கிரஸ் வேற கூட்டணி ஆப்சனை எதுவும் பார்க்குதுன்னா சிலர் கேட்டுப் பார்த்தாங்க.. அதுக்கு கார்கேவும் ராகுலும், திமுக கூட்டணியைத் தவிர வேற சான்ஸே இல்லை.. ஆனா எத்தனை சீட், எந்த தொகுதிங்கிற விவகாரம் எல்லாத்தையும் நீங்களே பார்த்துக்கனும் என கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாங்க..
இலங்கை கடுகண்ணாவ மண்சரிவில் 6 பேர் உயிரிழப்பு
![]() |
ஜாப்னா முஸ்லீம் : கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட மண்மேடு மற்றும் கற்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்தவர் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளது.
அனர்த்தத்தில் சிக்கியிருந்த நிலையில் காயமடைந்து மீட்கப்பட்ட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவந்த தேடுதல் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி வீதியிலுள்ள பஹல கடுகண்ணாவ மற்றும் மாவனெல்லவுக்கு இடையிலான பகுதியில் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
ஞாயிறு, 23 நவம்பர், 2025
கார்த்தி சிதம்பரம் : சென்னையை தவிர மற்ற நகர்களுக்கு மெட்ரோ ரயில் தேவையில்லை!
தினமலர் : திருப்புத்தூர் : ''தமிழகத்தில் சென்னை தவிர மற்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை,'' என,காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் அவர் அளித்த பேட்டி: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஏற்கக் கூடியதே.
ஆனால் வாக்காளர் நீக்கப்பட தகுந்த ஆதாரங்கள், ஆவணங்கள் அளிக்க வேண்டும். முப்பது நாட்களுக்குள் வாக்காளர் பட்டியலை திருத்த முடியுமா என்பது தான் கேள்வி.
தேர்தல் கமிஷனுக்கு, 2026ல் தமிழக சட்டசபைத்தேர்தல் வரும் என்பது தெரியும்.
இலங்கை இந்தியா பாகிஸ்தான்- குடியுரிமையும் பொய் பிரச்சாரங்களும்

Prime Minister Jawahalal Nehru Prime Minster D.S.Senanayaka
ராதா மனோகர் : இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் இலங்கை குடியுரிமை பற்றி இந்த நிமிடம் வரை ஏராளமான வரலாற்று பொய்கள் கட்டமைக்கப்படுகிறது.
அதில் கவனிக்க வேண்டிய சில விடயங்களை பற்றி இப்போது பாப்போம்.
இலங்கை இந்தியா பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் பிரித்தானியாவிடம் இருந்து ஏறக்குறைய சமகாலத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகளாகும்.
இந்த மூன்று நாடுகளின் பல பிரச்சனைகள் பெரிதும் பொதுவானவை.
அந்த பிரச்சனைகள் எப்படி எதிர்கொள்ள பட்டன என்பது ஆய்வுக்கு உரியது.
இந்தியாவும் பாகிஸ்தானும் ( பங்களாதேஷ் உள்ளிட்ட) ஒரு போர்முனையில் பிரியவேண்டிய சூழ்நிலை உருவானது.
இரு பகுதி எல்லைகளும் பிரிக்கப்பட்ட போது இரத்த ஆறு ஓடியது.
மேற்கு பாகிஸ்தான் எல்லையிலும் கிழக்கு பாகிஸ்தான் எல்லையிலும் ஒரு வரை ஒருவர் வெட்டி கொன்றார்கள்.
இதில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது
அண்ணளவாக இரண்டு கோடி மக்கள் இடம்பெயர்ந்ததாக கூறப்படுகிறது..
கோடிக்கணக்கான குடும்பங்கள் ஈவு இரக்கம் இல்லமால் நிரந்தரமாக பிரிக்கப்பட்டன.
மன்மோகன்சிங் வழக்கின் தீர்ப்பை மீறும் தேர்தல் ஆணையம்- பீகாரிகள் தமிழக வாக்காளர்களாக முடியுமா?

![]() |
அதாவது, 4.11 2025 அன்று வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் 27.10 2025ல் அறிவித்த போதிலும், தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 41 லட்சத்து வாக்காளர்களுக்கு, ஒரு வாக்காளருக்கு இரண்டு படிவங்கள் என்ற வகையில் நான்கு பக்கங்கள் கொண்ட கணக்கீட்டு படிவம் (Enumeration,Form) கொடுக்க வேண்டும். ஆனால் 4. 11.2025 தேதியில், எந்த முன்னேற்பாடும் இல்லாமல், முறையாக BLO-க்களுக்கு தேவையான அளவுக்கு பயிற்சி கொடுக்காமல், அவசரகதியிலும் இதை நடைமுறைப்படுத்த ஆணையிட்டது
ஈரோடு தமிழன்பன் காலமானார் .
Annamalai Arulmozhi : திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் இரங்கல் அறிக்கை!!
நமது அருமைத் தோழர் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் தமது 92ஆம் வயதில் (22.11.2025) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவரின் இழப்பு எளிதில் ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பாகும்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பரம்பரை என்று போற்றத் தகுந்த கவிஞர்களுள் முதல் வரிசையில் திகழ்ந்தவர். முற்போக்குச் சிந்தனையாளர்! இன உணர்வாளர்! சமூகநீதியாளர்! மானுடநேயர்!
சென்னிமலையில் பிறந்தாலும் எந்தச் சிறப்பைப் பெற்றாலும் எந்த விருதினை ஏற்றாலும், அவை அத்தனையும் ஈரோட்டுப் புகழே என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தன்னுடைய பெயருக்கு முன்னால், ஈரோட்டை இணைத்துக்கொண்டு, வெறும் பெயரோடு என்றில்லாமல் அந்த உணர்வோடு கலந்துவிட்ட பெரியார் பற்றாளர், அற்புதமான ஒப்பற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன்.





