மின்னம்பலம் :சுமார் 700.30 கோடி ரூபாய் மதிப்பிலான கோதுமையை இந்திய உணவுக் கழகம் வீணடித்துள்ளதாக பொதுக்கணக்கரின் அறிக்கை கூறுகிறது.
இந்திய உணவுக் கழகத்தின் செயல்பாடுகள் பற்றி பொதுக்கணக்கர் ஆய்வு செய்தது. ஆகஸ்ட் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பொதுக்கணக்கரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில், ’வடகிழக்கு பகுதிகளில் உள்ள போக்குவரத்து காண்ட்ராக்டர்களுக்கு மோசடி பணம் 14.73 லட்சம் ரூபாய் மற்றும் 37.89 லட்சம் ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. உணவு தானியங்கள் இடம் மாற்றப்பட்ட தொலைவை விட அதிகமான தொலைவுக்கு ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அதிகமான விகிதங்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
2013-14ஆம் ஆண்டில் இந்திய உணவுக் கழகம் திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் அதிகளவில் கோதுமையை நுகர்வோர்க்கு வழங்கியுள்ளது.
2014-15ஆம் ஆண்டின் காரிஃப் பருவத்தின் போது கோணிப்பைகள் வாங்க உத்தரப்பிரதேச அரசுக்கும் அதன் ஏஜன்சிகளுக்கும் தேவைக்கும் அதிகமாக 24.96 கோடி ரூபாய் கூடுதலாக பணம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக பணம் வழங்கப்பட்டது பற்றி தணிக்கை செய்யப்பட்ட பிறகு 2.96 கோடி ரூபாயை இந்திய உணவுக் கழகம் மீட்டுவிட்டது. இன்னும் 22 கோடி ரூபாய் மீட்கப்படவேண்டும். சுமார் 4.72 லட்சம் டன் கோதுமை திறந்த வெளியில் வீணாக்கப்பட்டுவிட்டது. இதன் மதிப்பு 700.30 கோடி ரூபாய் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக