சனி, 9 ஜனவரி, 2016

பார்பனர்கள் அருச்சனை செய்தா கோவிலுக்கு போகமாட்டோம்னு சொல்லுங்க...கோவிலை விட்டே ஓடிடுவாய்ங்க..கருவறை எம்மாத்திரம்?.

பார்ப்பனர்கள் அர்ச்சனை செய்தால் நாங்கள் கோவிலுக்குள் நுழைய மாட்டோமென்று மற்ற ஜாதியினர் அனைவரும் சேர்ந்து கோவிலுக்குப் போவதை நிறுத்திவிடுங்களேன். பிறகு கொஞ்சநாளில் வருமானமில்லாமல் அந்தப் பூனைகள் தானாகவே வெளியேறிவிடும். அவன் ஆகம விதி என்று பொய் புளுகி உள்ளே நுழைகிறான். இவையெல்லாம் எங்களுக்கு ஆகாத விதிகள் என்று நாம் அவர்களை விலக்கி வைத்து விளக்கவேண்டும். தக்க நேரம் இது. இப்போதாவது யோசியுங்கள். நாத்திகம் பேசுவாள் இவளுக்கென்ன என்று எப்போதும் போல் இருந்துவிட வேண்டாம். ------ லதாராணி
சிவனும் முருகனும் தமிழ் கடவுள்கள்...
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
                  - இதை எழுதினது சிவனென்றும்
சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று என் அறிவிற்கு சுட்டிக்காட்டிய தமிழ்ப் பெருங் கடலே ன்னு அவ்வைப்பாட்டி முருகனைப் பார்த்துப் பாடினார் என்றும் இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிந்துள்ளோம்.

நேர்மையான நீதிபதி அகர்வால் திடீரென மாற்றப்பட்டது ஏன்? ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு....

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின்
மேல்முறையீட்டை விசாரிக்கும் அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி ராஜேஷ் குமார் அகர்வால் மாற்றப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையிட்டு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த மேல்முறையீட்டின் இறுதி விசாரணை ஜனவரி 8-ம் தேதி தொடங்கப்பட்டு, அன்று முதல் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பர் 23-ம் தேதி கூறியது. இந்த சூழலில், அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகளில் ஒருவரான ஆர்.கே.அகர்வால் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நீதிபதி அமிதவராய் அந்த அமர்வில் புதிதாக கடந்த 7-ம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.கே.அகர்வால் நேர்மையான நீதிபதி என்பதால் அவர் இவ்வழக்கிலிருந்து விலக விரும்பியதால் தான், அவர் மாற்றப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் மத்தியில் பேசப்படுகிறதாம்.

பதவியேற்க மெகபூபா தயக்கம்: காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்

ஜம்மு : காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் மறைந்த முதல்வர்
முப்தி முகம்மது சயீத்தின் மகளுமான மெகபூபா முப்தி, முதல்வராக பதவியேற்றுக் கொள்ள தயக்கம் காட்டி வருகிறார். இதனால், அவர் முதல்வராக பதவியேற்கும் வரை கவர்னர் ஆட்சி அமலில் இருக்கும் என அம்மாநில கவர்னர் என்.என். வோரா அறிவித்துள்ளார்.காஷ்மீர் முதல்வராக இருந்த முப்தி முகம்மது சயீத், உடல்நலக்குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் டிசம்பர் 24ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி ஜனவரி 7ம் தேதி அவர் உயிரிழந்தார். சயீத் மறைவிற்கு பிறகு அவரது மகள் மெகபூபா முப்தி தான் அடுத்த முதல்வராக வர உள்ளார் என கூறப்படுகிறது.

சென்னை: போதையில் 3 போலீசார் நடுரோட்டில் அட்டகாசம்...பொதுமக்கள் சாலை மறியல்


சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் போதையில் இருந்த 3 போலீசாரை பொதுமக்கள் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே சாலையோரம் பொதுமக்கள் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனம் ஒன்று தாறுமாறாக வந்துள்ளது. திடீரென்று இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவர்களை விசாரித்தபோது, அவர்கள் தங்களை போலீசார் என்று மிரட்டியுள்ளனர். மேலும், தட்டிக்கேட்டவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அவர்கள் 3 பேரும் போதையில் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மற்ற வாகன ஓட்டிகள் போதையில் இருந்த 3 போலீசாரையும் சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலால் கோயம்பேடு 100 அடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கூவம் நதி ..ஒரு காலத்தில் குடிநீராக இருந்தது...இன்று குரங்கு கையில் பூமாலையாக...

luckylookonline.com :குரங்கு கையில் பூமாலை... கூவம் நம் கைகளில்!! வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புபவர்கள் ஏதேனும் பாலங்களை கடக்கும்போதே மூக்கைப் பொத்திக்கொண்டு முணுமுணுப்பார்கள். “அங்கெல்லாம் ஆறு என்னம்மா ஓடுது தெரியுமா? நம்மூர்லேயும் கெடக்குதே கூவம் கழுதை...” அவர் வாயிலிருந்து அடுத்த அரை மணி நேரத்துக்கு கூவத்துக்கு அர்ச்சனை நடக்கும். பாவம். ஆறு என்ன செய்யும். ஆற்றை அசிங்கப்படுத்திய நம்மை அல்லவா நாமே காறித்துப்பிக் கொள்ள வேண்டும்?கூவத்தை குடித்தார்கள்; நம்புங்கள்.

சவுதி- இரான் யுத்தம் /பதற்றம்: வளைகுடா நாடுகள் ரியாத்தில் கூடுகின்றன

சவுதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையே தீவிரமடைந்துள்ள
பதற்றமான சூழல் தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக வளைகுடா கூட்டுறவு பேரவையைச் சேர்ந்த 6 நாடுகளும் சவுதி தலைநகர் ரியாத்தில் கூடுகின்றன. ஒரு வாரத்துக்கு முன்னர் முன்னணி ஷியா மதகுரு ஒருவருக்கு சவுதி மரண தண்டனை நிறைவேற்றியதைத் தொடர்ந்தே, சுன்னி ஆதிக்க நாடான சவுதிக்கும் அதன் பகைநாடான ஷியா ஆதிக்கம் கொண்ட இரானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன. இரானுடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்ட சவுதியின் நடவடிக்கையை வளைகுடா ஒத்துழைப்பு பேரவையின் இன்னொரு உறுப்பு நாடு மட்டுமே பின்பற்றியுள்ளது.

சாதிங்கிறது அந்தரங்க உறுப்பு மாதிரி...என்னோடதான் பெஸ்ட் என்பது கேவலம்...nisaptham.com

எங்கே பார்த்தாலும் சாதிதான். திரும்பிய பக்கங்களிலெல்லாம் சாதிய வாசகங்களுடன் போஸ்டர் அடித்து வைத்திருக்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீர்ர்களிலிருந்து சினிமா நடிகர்கள் வரை அத்தனை பேருக்கும் ஒரு சாதி முத்திரையைக் குத்தியாகிவிட்டது. ஒருவரைத் தப்பிக்கவிடுவதில்லை. இந்தியாவில் அத்தனை மாநிலங்களிலும் தங்களின் சாதியைப்  பெயருடன் சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள். நாயர்களும் ரெட்டிகளும் கோஷ்களும் கெளடாக்களும் பட்டீல்களும் இன்னபிற சாதியினரும் பெருமையாகக் காட்டிக் கொள்கிறார்கள். தமிழகத்தில் மட்டும்தான் பெயருக்குப் பின்னால் சாதியைச் சேர்த்துக் கொள்ளாத ஒரு பக்குவம் இருந்தது. அறுபதுகளுக்குப் பிறகு முதலியார், கவுண்டர், செட்டியார், நாயக்கர் என்கிற விகுதிகள் பெயர்களிலிருந்து உதிர்ந்து போயின. அதைப் பக்குவம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிப்ரவரி 2ஆம் தேதி சொத்து குவிப்பு விசாரணை பெங்களூருவில்....2 Gஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையும் பெப்ரவரி டில்லியில்

புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, முதல்வர் ஜெயலலிதா உட்பட
, நான்கு பேரை விடுவித்து, கர்நாடக ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, பிப்ரவரி, 2ம் தேதி துவங்குகிறது. 'அன்று முதல், தினமும் விசாரணை நடக்கும்' என, நீதிபதிகள் அறிவித்துள்ளனர். அதேநேரத்தில், '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கிலும், டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், பிப்ரவரியில் இறுதி வாதம் துவங்குகிறது
முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உட்பட, நான்கு பேருக்கு எதிரான, சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த, கர்நாடக சிறப்பு கோர்ட், 2014 செப்டம்பரில் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா உட்பட, நான்கு பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்தார்.  இனி இரண்டு கழகங்களையும் வழக்குகளில் முடக்கி விட்டு வைகோ, அன்புமணி, சீமான், தமிழிசை, தமிழருவி, விஜயகாந்து மற்றும் திருமாவளவன்  எல்லாரையும் சி எம் ஆக்கிடலாம்ல கோவாலு ?

சமணர்கள்தான் சைவ உணவை உண்டனர்...பார்பனர்கள் வேதகாலத்தில் மாமிசம்தான் உண்டனர்...மாடு குதிரை...

இந்த உலகில் எப்படி மனிதர்களுக்கு வாழும் உரிமை இருக்கிறதோ அதே
போலதான் சகல ஜீவராசிகளுக்கும் வாழும் உரிமையை இந்த உலகம் பாரபட்சம் இல்லாமல் வழங்கி இருக்கிறது.  ஏனோ தெரியவில்லை பகுத்தறிவாளர்களும் சுயமரியாதையாளர்களும் மாட்டுக்கறி சாப்பிடுவதை ஏதோ ஒரு பகுத்தறிவு போராட்டமாக எண்ணி விருப்பம் இல்லாவிடினும் பிரசாரதிற்காக உண்ணுகிறார்கள். இதற்கும் கூட பார்ப்பனர்களின் ஜாதி துவேஷ கொள்கைதான் ஒரு விதத்தில் காரணமாக அமைந்துவிட்டது. பார்பனீயத்தின் மனித குல விரோத கொடுமையான ஜாதி வேறுபாட்டையும் அதன் ஒடுக்குமுறையையும் எந்த வழியில் ஆவது இல்லாமல் செய்யவேண்டும் என்ற கோபத்தில் மாட்டு இறைச்சி போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள் போலும்.  வேதகாலத்தில் பார்பனர்கள் சகல ஜீவராசிகளையும் கொன்று நெருப்பில் வாட்டி உண்டவர்கள்தான். சமுகத்தில் தீட்டு வியாதியை பரப்ப அவர்கள் திடீரென்று சமணர்களின் கொல்லாமையை ஏற்று கொண்டு மாமிசம் உண்ணுவதை நிறுத்தினார்கள்.  இன்று தாங்கள்தான் பசுக்களை பாதுக்கப்பதாக வேஷம் போடுகிறார்கள்.www.prearyan.blogspot.com

கலைஞரை சந்தித்தித்த திருப்பதி தேவஸ்தானம்...ராமானுஜர் தொடரை தெலுங்கில் வெளியிட விருப்பம்

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் | படம்: கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்கம்.
திமுக தலைவர் கருணாநிதியின் வசனத்தில் உருவான ராமானுஜர் தொடரை தெலுங்கில் தயாரித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுமதி கோரியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திமுக தலைவர் கருணாநிதி வைணவ புனிதரான ராமானும் தொடர்பான தொலைக்காட்சி தொடருக்கு கதை வசனம் எழுதுகிறார் என்ற விஷயம் விவாதப் பொருளானது.
நாத்திகரான கருணாநிதி ராமானுஜர் வரலாற்றை சிதைத்துவிட வாய்ப்பிருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ராமானுஜர் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

வெள்ளி, 8 ஜனவரி, 2016

Porn-Hub செக்ஸ் படங்கள்... இந்தியா உலகில் மூன்றாவது இடம்... பெண்களும் அதிகம் பார்க்கிறார்கள்...அதிலும் மத பற்றாளர்கள்தான் அதிகம்


India’s hardcore porn appetite: 3rd highest porn-watchers in the world, women catch on - If there is one sign of the high-speed data revolution which is taking over India, it is its increasing porn appetite. Not only are more and more men logging in to watch porn, women's appetite too for porn is increasing.
According to internet porn giant PornHub, India now has the third highest number of porn watchers in the world.
A 2015 survey by the website shows that India stands at number 3, just behind USA and UK in countries that view porn. Compared to last year, India has gained one position and pushed Canada to fourth.
The average time spent by Indians while consuming porn on the website is 9 minutes 30 seconds.
India ranked third on the list of women visitors to the site with the proportion of the female audience jumping to 30% this year from 26% in 2014.

மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

2ஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது அமலாக்க இயக்குநரகம்.வி காவேரி மாறன் உள்பட 6 பேர் மீது அமலாக்க இயக்குநரகம் தனது குற்றப்பத்திரிக்கையில் சேர்த்துள்ளது. 2011- ஆம் ஆண்டு ஏர்செல் உரிமையாளர் சி.சிவசங்கரன், மேக்சிஸ் நிறுவனத்துக்கு பங்குகளை விற்குமாறு தனக்கு அப்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக சிபிஐ-யிடம் புகார் அளித்ததையடுத்து இந்த வழக்கில் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் விசாரணை அதிகாரிகளின் பார்வைக்கு வந்தது.

Iran மன்னர் ஷாவின் சகோதரி காலமானார்..மன்னர் ஷாவின் காலத்து இரான் அமெரிக்காவுக்கே கடன் கொடுத்தது...இன்று?


1979இல் இஸ்லாமிய புரட்சியின்போது பதவியில் இருந்து வீழ்த்தப்பட்ட மன்னர் ஷா மொஹமட் ரெஷா பஃலவியின் இரட்டைச் சகோதரியான இளவரசி அஷ்ரப் பஃலவி மாத்திரந்தான் மன்னரின் சகோதரங்களில் இதுவரை உயிர் வாழ்ந்தவராவார். அவரது நம்பகத்தன்மை குறித்து பல விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்து வந்த போதிலும், தனது சகோதரனின் கொள்கைக்கு இறுதி வரை பக்கபலமாக இருந்து வந்த இளவரசியார்,

பாஜக கூட்டணியில் இருந்து கொங்கு நாடு ஜாதிகட்சி விலகியது..கந்துவட்டி வாழ்க .

கரூர்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார். 2016 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எல்லா கட்சிகளும் அதற்கான பணிகளில் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் பாஜக கட்சியினர் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக துவக்கினர். Kongunadu Makkal Desiya Katchi General Meeting at karur பெரிய கட்சிகளுக்கு தொடர்ந்து கூட்டணி அழைப்பு விடுத்தும் அங்கிருந்து இன்னும் உறுதியான பதில் எதுவும் வரவில்லை. இதையடுத்து சிறிய கட்சிகளுடனான கூட்டணியை உறுதிப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தையில இறங்கியது தமிழக பாஜக.

G-9 வாழை விவசாயம் ! வாழ்வை தொலைக்கும் காபரெட் வாழை வர்த்தகம்


banana-distress-6
வினவு.com “வாழை பயிரிட்டால் வாழ்க்கை சிறக்கும்”என்ற நம்பிக்கையோடு பயிரிட்ட தேனி மாவட்ட விவசாயிகள், நடவு செய்த தங்கள் கைகளாலேயே இன்று வாழைமரங்களை வெட்டி வீசுகிறார்கள்! பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விளைந்த வாழைகள் தாரிலேயே பழுத்து அழுகி வீணாகிக் கிடக்கிறது! சகிக்கமுடியாத ஒரு விவசாயி தானே அறுவடைசெய்து, வண்டியில் ஏற்றிச்சென்று பக்கத்து கிராம மக்களுக்கு பழங்களை இலவசமாக கொடுக்கிறார்! ஒரு வருடத்திற்கு முன்பு ஒருகிலோ 12-17 ரூபாய்க்கு விற்ற வாழையை, இன்று கிலோ 2 ரூபாய்க்கு வாங்க ஆளில்லை! “ஒரு ஏக்கருக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஒரு வாழை மரத்தை 11மாதம் வளர்ப்பதற்கு 150 ரூபாய்வரை செலவாகிறது. 3 ஏக்கரில் பயிரிட்டு 4.50 லட்சம் செலவு செய்துவிட்டு, 2 லட்சம் ரூபாய்க்கு விற்றிருக்கிறேன். மீதி 2.50 லட்சம் கடனை கூலிவேலை செய்து அடைத்து வருகிறேன்” என்று கதறுகிறார் குத்தகை விவசாயி மணிகண்டன்! இதே அவலக்குரல்தான் கம்பம், கூடலூர், கேகே.பட்டி உத்தமபாளையம், சின்னமனூர், உப்புக்கோட்டை என தேனிமாவட்டம் முழுக்க எதிரொலிக்கிறது! காரணம் என்ன? கடந்த ஒரு வருடமாகத் தொடரும் விலைவீழ்ச்சி!

அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர்...நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை

othisaivu.wordpress.com :நான் குர்தி । अहम् कुरदि । मैं कुर्दि हुँ। Je suis un Kurde । Ben Kürtüm । Ich Bin Kurde । I am Kurd । இஸ்லாமிய கழுத்தறுப்பு-கற்பழிப்பு முதல்வாதக் கொலையாளர்களுக்கும், துருக்கிய அநியாய கொன்றொழித்தல்களுக்கும் எதிராக, இராக்-இராக்​-ஸிரிய அன்றாட அட்டூழியங்களுக்கு எதிராக – கர்ட் மக்கள்திரள் தொடர்ந்து நூறாண்டுகளுக்கு மேலாகப் போராடுவது வியர்த்தமாகக்கூடாது… | இது ஒரு #ஔட்ரேஜ் அறச்சீற்ற அரைகுறைத்தனம் அல்ல, மன்னிக்கவும்; என்னைப் பொறுத்தவரை, நாம் முடிந்த வழிகளிலெல்லாம் கர்ட் மக்கள் திரளை ஆதரிக்கவேண்டுமென்பதுதான் என் அவா, அவ்வளவுதான்! ஆனால், நமக்கு வேறு பல முக்கியமான வேலைகள் – நடிகர்சங்கத் தேர்தல், சென்னைவெள்ள அறச்சீற்றம், கோயில்பூசாரிமுதல்வாதம், விடலை​_பாத்ரூம் பாட்டு விமர்சனம், இளையராஜாவா_ரஹ்மானா, விஜய்யா_அஜித்தா, கூட்டணிஎப்படிஉருவாகும், சகிப்புத்தன்மைமுதல்வாதம் போன்றவைதான் முக்கியம் என்பதையும் அறிகிறேன், கவலை வேண்டேல்! எனக்கும் எப்போதுமே இம்மாதிரி கேளிக்கைதான் பிடிக்கும், நன்றி; நானும் ஒரு சராசரித் திராவிடத் தமிழன் தானே! அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர்: இரான் அரசின் இரட்டைவேடமும், நடைமுறை இஸ்லாமின் பெரும்பாலும் கதிமோட்சம் இல்லாத நிலைமையும்

பசுப்பால் மற்றும் இறைச்சி வர்ததகர்களின் கொடுமை பாரீர்....மனிதனின் மிருகவதை உச்சம்.!



ஜல்லிகட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது....

தமிழகத்தில் பொங்கல் தினத்தையொட்டி பிரதானமாக நடத்தப்படும்
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜல்லிக்கட்டு தமிழகத்தின் வீர விளையாட்டாகக் கருதப்படுகிறது இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, கேரளா ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும் மாட்டு வண்டிப் பந்தையங்கள் ஆகியவற்றில் காட்சிப் படுத்தும் மிருகங்களாக பயிற்றுவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு அனுமதி மாவட்டவாரியாக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது, இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியைப் பெற வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

புத்தொளி என்கின்ற நாஞ்சில் சம்பத்தின் இன்றைய சிட்டுவேசன் ரிப்போர்ட்

அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து நாஞ்சில் சம்பத் நீக்கப்பட்ட நாளில், அவரது சொந்த ஊரான கன்னியா குமரி மாவட்டம்,  மணக்காவிளையில் ""இன்னைக்குத்தான் எங்களுக்கு தீபாவளி..'' என்று பட்டாசு வெடித்துக் கொண்டாடினார் கள் மறுமலர்ச்சி தி.மு.க.வினர்.  நாஞ்சில் சம்பத் பற்றி கேட்டதும் நறநறவென்று  அடுக்கினார்கள்""அவரோட ஒரிஜினல் பேரு புத்தொளி. ஏழ்மை நிலையில் கோயில்களில் சொற்பொழிவாற்றியவரை 1986-ல் பரிதிஇளம் வழுதிதான் தி.மு.க.வில் சேர்த்தார். நாஞ்சில் சம்பத் ஆக்கியவரும் அவர்தான். அப்புறம், வைகோவோடு பயணம். அங்கிருந்து அ.தி.மு.க.'' என்றார்கள் தொடர்ந்து...""இந்த ஊரு பெரிய மனுஷங்க சிலர்... போன மாசம் சம்பத் வீட்டுக்கே போயி "மணலிக்கரைக்கு போற ரோடு குண்டும் குழி யுமா கிடக்கு. முதலமைச்சர்கிட்ட அடிக்கடி தொடர் புல இருக்கிற நீங்க சொன்னா கண்டிப்பா நல்ல ரோடு கிடைக்கும்'’ என்றிருக்கிறார்கள்.

ஜி எஸ் டி மசோதா நிறைவேற காங்கிரசிடம் கையேந்தும் பாஜக

புதுடில்லி:'சரக்கு மற்றும் சேவை வரி மசோதா' என, அழைக்கப்படும்,
ஜி.எஸ்.டி., மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்ற ஒத்துழைக்கும்படி, காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, நேற்று ஆதரவு கோரினார். ஆனால், வெங்கையாவின் கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்ததை அடுத்து, ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேறுவதில் இழுபறி நீடிக்கிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடைய, ஜி.எஸ்.டி., மசோதா, நீண்ட நாட்களாக பார்லிமென்டில் நிறைவேற்றப்படாமல், நிலுவையில் உள்ளது. ராஜ்யசபாவில், ஆளுங்கட்சியான பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இல்லாததால், இந்த மசோதாவை நிறைவேற்ற
முடியவில்லை. உலக வங்கி எச்சரிக்கை என்பதே கண் துடைப்பு நாடகம். 18 சதவிகித ஜி எஸ் டி வரி என்பது சாமான்ய மக்களுக்கு மேலும் வரி தவிர வேறொன்றுமில்லை. இனி எல்லா மானியமும் கட் ஆகும். முதலில் யார் உண்மையான வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பயனாளிகள் என்று இந்த அரசு (மத்திய மற்றும் மாநில) ஒரு பட்டியல் ரெடி செய்து அவர்களுக்கு மட்டும் விலக்கு அளித்தாலே போதும் செய்வார்களா? அனால் அப்படி செய்தால் அரசியல் மற்றும் அதிகார மட்டத்தில் இருக்கும் பணம் தின்று கொழித்த பெருச்சாளிகள் நிலைமை மோசமாகிவிடும்

நெல்லை சுற்றுலா பஸ் கவிழ்ந்து 10 பேர் மரணம்

நெல்லை : நெல்லை அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்
10 பேர் பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் பஸ் டிரைவர் துாங்கியதே விபத்துக்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது. வேளாங்கண்ணியிலிருந்து திருவனந்தபுரம் சென்ற தனியார் பஸ், திருநெல்வேலி அருகே பனக்குடியை அடுத்து பிளாக்கோட்டை பாறையில் சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட10 பேர் பலியாயினர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவ்விபத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

விசர் டிவியின் விபச்சாரமா கள்ளகடத்தலா? மொள்ளைமாரியா முடிச்சவிக்கியா?


விஜய் டி.வி யிலிருந்து ஒருவர் நேற்று (06-01-2016) போன் பண்ணி, உங்க நம்பர் ஒருத்தர்கிட்ட இருந்து வாங்குனேன். நீயா – நானா வில் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பேசுவதற்கு உங்களுக்குத் தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்களேன்’ என்றார்.
‘எனக்கு அப்படி யாரையும் தெரியாது’ என்றேன்.
இன்றும் கொஞ்சம் நேரத்திற்கு முன் அவரே ..
‘காலையில இருந்து உங்க நம்பருக்கு முயற்சி செய்கிறேன்.. கிடைக்கல. நாளைக்கு ஜல்லிக்கட்டு பற்றிய விவாத்துல கலந்துக்க முடியுமா? ஆதரவா, எதிரா எந்தத் தலைப்பில் வேணுனாலும் பேசுங்க’ என்றார்.
‘சிறப்பு விருந்தினராகவா?’ என்றேன்
‘இல்லை. ஒரு டீம் ல ஒக்கத்து பேச..’ என்றார்.
‘வாய்ப்பில்ல.. சிறப்பு விருந்தினரா மட்டும் தான் வருவேன்’ என்றேன்.
‘அப்போ நான் கேட்டுட்டு சொல்றேன்..’ என்றார்.
நீயா நானா குழுவினரோடு எனக்கு இது இரண்டாவது அனுபவம்.
விட்டா.. ‘குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கித் தரோம்.. பேச வறீங்களா..?’ ன்னு கேட்பார்கள் போலும்.

நீதிபதி நிஷா மீது செருப்பை வீசிய கைதி...பூந்தமல்லி குற்றவியல்....

திருவள்ளூர்: பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்ற பெண் நீதிபதி மீது
கைதி ஒருவர் செருப்பை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ரயில்வே தளவாடங்களைத் திருடியது, ரயில்களில் வழிப்பறி செய்தது தொடர்பான வழக்குகளில் ஏழுமலை (38) என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்காக ஏழுமலை போலீஸ் பாதுகாப்புடன் நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு பெண் நீதிபதி நிஷா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஏழமலைக்கு 15 நாட்கள் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். அப்போது திடீரென ஆத்திரம் அடைந்த ஏழுமலை நீதிபதியை விமர்சித்து தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி வீசியுள்ளார்.குமாரசாமி போன்ற உத்தம நீதிபதிகள் எல்லாம் நீதித்துறையின் கண்ணியத்தை நேர்மையுடன் பாதுகாக்கையில் இவர் இப்படி நிஷாவுக்கு செருப்பு எறிந்தமை வேதனைக்கு உரியது

சரோஜாதேவி வெள்ளநிவாரணதுக்கு 5 லட்சம்...நடிகர் சங்கத்தில் வழங்கினார்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தன்னுடைய பிறந்தநாளை வியாழக்கிழமை (07.01.2016) கொண்டாடினார். இந்நிகழ்வில் நடிகர் சிவகுமார் , நடிகர் சங்க நிர்வாகிகள் மனோபாலா, குட்டி பத்மினி, உதயா, ரமணா, ஹேமசந்திரன், அயுப் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.சரோஜாதேவி பேசியது, நான் முதலில் நடிகர் சிவகுமார் அவர்களிடம் தான் சென்னைக்கு வந்து பிறந்த நாள் கொண்டாடுவது பற்றியும் நிவாரண நிதி வழங்குவது பற்றியும் கூறினேன். நான் அதை பற்றி அவரிடம் கூறியதும் உடனே ஏற்பாடு செய்துவிடலாம் என்று கூறி என்னை உற்சாகப்படுத்தினார். நடிகர் சிவகுமார் மிகவும் நல்ல மனிதர், எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் நான் என்னுடைய வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.நான் முன்னொரு காலத்தில் மிகப்பெரிய நடிகையாக வலம்வந்த போது நடிகர் சங்கத்துக்கு ரூபாய் 5௦,௦௦௦ நன்கொடையாக வழங்கினேன்.

வியாழன், 7 ஜனவரி, 2016

மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் வைகோ...அதிமுகவின் பூத் ஏஜென்டாக செயல்பட முடியும், வேற லட்சியம்? ..

மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக நான் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்பினால் அதை ஏற்கிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.மதுரை மண்டல மதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செல்வந்தியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசு ம்போது “மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருக்கும், தாங்கள் முதல்வர் வேட்பாளராக வேண்டும்.
வழக்கம்போல் யாருக்கும், எதற்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது என வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு பதில் அளித்த வைகோ பேசும்போது, “எனக்கு எந்த ஆசையும் இல்லை. உங்கள் கட்டளையை ஏற்கிறேன். மறுப்பும் சொல்ல முடியவில்லை என்றதும் அரங்கத்தில் இருந்த நிர்வாகிகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

அதிமுக அரசுக்கு எதிராக 25 ஊழல் குற்றச்சாட்டுக்களை இளங்கோவன் அடுக்குகிறார்

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிரான ஊழல் பட்டியலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ளார். அதில் ஆவின் பால் கலப்பட ஊழல், பள்ளிக் கல்வித்துறையில் ஊழல், கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் வழங்கியதில் ஊழல், கிரானைட் ஊழல் உள்ளிட்ட 25 ஊழல்களை பட்டியலிட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அ.தி.மு.க. அரசு மீதான ஊழல் பட்டியலை வெளியிட்டார். அந்த பட்டியலில், 
செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை 
 மின் கொள்முதலில் ஊழல் 
கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கியதில் ஊழல் 
 உயர்கல்வித்துறையில் ஊழல் 
ஆவின் பால் கலப்பட ஊழல் 

வடகிழக்கு மாநிலங்களில் 8.0 ரிச்டர்களுக்கு மேல் நான்கு நிலநடுக்கங்கள் ஏற்படவாய்ப்பு....நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடில்லி :'நாட்டின் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலை பகுதி யில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படலாம்' என, மத்திய உள்துறை அமைச்சகத்தின், தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இமயமலை அடிவாரத்தில் உள்ள, அருணாச்சல பிரதேச மாநில தலைநகர் இடாநகரில், மத்திய உள்துறை அமைச்சகத்தின், தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் கூட்டம் நடந்தது. அதில், மலைப்பிரதேச கட்டுமான நிபுணர்களும் பங்கேற்றனர். நில நடுக்கத்தை தாங்கும் சக்தி படைத்த கட்டிடங்களை எப்பொழுது கட்டி எப்பொழுது குடி புகுவது... இனி கட்டும் கட்டிடங்களையாவது ஒழுங்காக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்...

ஜெயலலிதா சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை நீதிபதி அதிரடி மாற்றம்

முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீடு மனு மீதான வழக்கில் விசாரணை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, கர்நாடக மாநில அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் ஜெயலலிதா உட்பட நால்வர் தரப்பிலும் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ''இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக மாநில அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நால்வர் தரப்பிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.   நீதி துறையை மக்சிமம் வளைத்து நெளித்து உடைத்த ஒரு கோஷ்டியின்  வழக்கை  மைக்கிராஸ்கோப்பால்தான் பார்க்கவேண்டி இருக்கிறது. இதில் எதோ அவசரம் தெரிகிறதே

ஈரான் தூதரகம் தாக்குதல்..சவுதிமீது ஈரான் அதிரடி குற்றச்சாட்டு

சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமனில் உள்ள தங்கள் நாட்டு தூதரம்
மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. சவுதி அரேபியா, சிறுபான்மை ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல் நிமர் (வயது 56) உள்பட 47 பேருக்கு ஒரே நாளில் அண்மையில் மரண தண்டனையை நிறைவேற்றியது. இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு ஈரானில் போராட்டம் வெடித்தது, ஈரானில் சவுதி தூதரகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனையடுத்து ஈரான் உடனான உறவை சவுதி அரேபியா முறித்துக் கொண்டது. இவ்விவகாரத்தில் சன்னி இஸ்லாமிய பிரிவை சேர்ந்த நாடுகள் சவுதி அரேபியாவிற்கு ஆதரவாக ஈரானில் இருந்து தங்களது நாட்டு தூதர்களை திரும்ப அழைத்து வருகிறது.

காஷ்மீர் முதலமைச்சர் முஃப்தி முகமது சையது காலமானார்...V.P.Sing ஆட்சியின் உள்துறை அமைச்சர்

காஷ்மீர் மாநில முதலமைச்சர் முஃப்தி முகமது சையது இன்று காலமானார்.
அவருக்கு வயது 79.
பல்வேறுவிதமான உடல் நல உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தில்லி மருத்துவமனை ஒன்றில் சில வாரங்களுக்கு முன்பாக சேர்க்கப்பட்டு, சிகிச்சைபெற்றுவந்தார்.
வியாழக்கிழமையன்று அதிகாலையில் முஃப்தி முகமது சையது மரணமடைந்ததாக அம்மாநில கல்வித் துறை அமைச்சர் நயீம் அக்தர் பிடிஐயிடம் தெரிவித்தார்.
இவரது மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாரதீய ஜனதாக் கட்சியும் இணைந்து காஷ்மீரில் ஆட்சி செய்து வருகின்றன.
முஃப்தியின் மரணத்தையடுத்து அவரது மகள் மெஹ்பூபா முஃப்தி அடுத்த முதல்வராக பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2014 டிசம்பரில் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முஃப்தியின் பிடிபி 28 இடங்களைக் கைப்பற்றியது. பாரதீய ஜனதாக் கட்சி 25 இடங்களைக் கைப்பற்றியது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வெற்றியை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியதில் ஒருவர் மரணம்

ஆப்கன் தேசியக் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு எதிராக பெற்ற டெஸ்ட் போட்டித் தொடர் வெற்றியைக் கொண்டாடிய சிலர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பதின்பருவ இளைஞர் கொல்லப்பட்டார்.ஆப்கானிஸ்தானின் தெற்கே நடந்த இந்த சம்பவத்தைத் தவிர, தலைநகர் காபூலில் நடந்த வேறொரு சம்பவத்தில் வேறு பலர் காயமடைந்தனர். ஷார்ஜாவில் நடந்த ஜிம்பாப்வே-ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான ஐந்து டெஸ்ட் போட்டித் தொடரை ஆப்கானிஸ்தான் வென்றதை அடுத்து, ஆப்கான் ரசிகர்கள் பல இடங்களில் வீதிகளில் ஆடியும், வானில் துப்பாக்கியால் சுட்டும் கொண்டாடினர்.

A.R .ரஹ்மான் :உலகை அழகுள்ளதாக மாற்றுவோம் ! திலீப்குமார் ரஹ்மான் ஆனது போல உலகம் என்ற பெயர் கலகம் என்றாகம இருந்தா சரி...

தனது 48-வது பிறந்தநாளன்று தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் கூறியிருப்பதாவது : என் பாசத்திற்குரிய நண்பர்கள், ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு... உங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைக்கும், பாசத்திற்கும் நன்றி. நான் கடினமாக உழைத்து அழகாக இசையமைப்பதற்கு காரணம் நீங்கள் தான். எல்லாம் வல்ல இறைவன் நம்மை ஒன்றிணைத்து, நமது மனதை சுத்தமாகவும் கருணையுள்ளதாகவும் வைத்திருக்கட்டும். ஒன்றிணைந்த அறிவு, அன்பு, அக்கறையுடன் உலகத்தை அழகானதாக மாற்றுவோம்

வட கொரியா ஹைட்ரஜன் குண்டை வெடிக்க வைத்தது...மிகவும் சக்தி வாய்ந்த..

பியாங்யாங்: ஹைட்ரஜன் அணுகுண்டை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. இந்த சோதனை காரணமாகவே, நிலநடுக்கம் போன்ற அதிர்வை வட கொரிய மக்கள் உணர்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் இந்த சோதனைக்கு சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐநா,வும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆசிய நாடான வடகொரியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்தது. வடகொரியாவின் அணுஆயுத சோதனை மையத்திற்கு அருகே இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டது. சீனர்கள்தான் இவர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் தொழில் நுணுக்கத்தை கொடுத்தவர்கள்... எல்லாம் காப்பி அடிக்கும் கூட்டம்... சொந்த மூளையை வைத்து தானாக செய்யத்தெரியாது...

17600000 கோடி 2G ஸ்பெக்ட்ரம் பிரசாரம்....இப்போது 200 கோடியாக சுருங்கியது ...அதுவும் கடன்...

புதுடில்லி: 'தி.மு.க.,வால் நடத்தப்படும் கலைஞர், 'டிவி'க்கு, குஸேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் நிறுவனம் மூலமாக, 200 கோடி ரூபாய் பணம் கடனாக கொடுத்த  விவகாரத்தில் உண்மை தன்மை இல்லை' என, அமலாக்க இயக்ககம் கூறியுள்ளது.
'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் இறுதிக்கட்ட விவாதங்கள், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஓ.பி.ஷைனி முன் நடந்து வருகின்றன. அமலாக்க இயக்ககம் தொடர்ந்த, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான விசாரணையில், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் நேற்று வாதிட்டதாவது: தி.மு.க.,வால் நடத்தப்படும் கலைஞர், 'டிவி'க்கு, குஸேகான் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் நிறுவனம், சினியுக் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக, 200 கோடி ரூபாய் பணம கடனாக கொடுக்கப்பட்டு  உள்ளது. இந்நிறுவனங்கள், உண்மையான வர்த்தக பரிவர்த்தனைகளில் ஈடுபடவில்லை. 200 கோடி ரூபாய் பணத்தை பரிமாற்றம் செய்யும் நோக்கில், போலியாக இந்த நிறுவனங்கள் துவக்கப்பட்டு உள்ளன என்று தற்போது சிபியை வழக்கறிஞர் வாதிட்டார்.   ராசா ஒரு தலித்தாக ஒரு திமுக காரனாக ஒரு தேயிலைதோட்ட கூலி பரம்பரையாக இருப்பதெல்லாம் அவா பொறுப்பாளா?

புதன், 6 ஜனவரி, 2016

தமிழக வெள்ளம் : தனியார்மயம் உருவாக்கிய அழிவு ! வினவு.com

06-encroached-lakes“நீரின்றி அமையாது உலகு” என்றார் திருவள்ளுவர். இதனை நமது முன்னோர்கள் நன்கு உணர்ந்தும் புரிந்தும் வைத்திருந்ததற்கு ஆதாரமாகத் திகழ்பவைதான் தமிழகத்தின் கிராமம் தொடங்கி நகரம் வரை காணப்படும் கண்மாய்களும், ஏரிகளும், குளங்களும். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை தமிழகத்தில் ஏறத்தாழ 39,000 ஏரிகளும், 3,000 கோயில் குளங்களும், 5,000 ஊருணிகளும் இருந்ததாகப் பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு தமிழகத்தில் இன்றுள்ள நவீன, பெரிய அணைக்கட்டுகளில் தேக்கப்படும் நீரின் கொள்ளளவைவிட அதிகம் என்று நீரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்குச் சொன்னால், வைகை அணையின் கொள்ளளவு 614 கோடி கன அடி; காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 364 கோடி கனஅடி.

பல்கலைக்கழகங்கள் இறக்குமதி ! மாணவர்கள் ஏற்றுமதி !! vinavu.com

கல்வியை பாதுகாப்போம்புதிய கல்விக் கொள்கை – 2015 :
பல்கலைக்கழகங்கள் இறக்குமதி ! மாணவர்கள் ஏற்றுமதி !! “எண்ணென்ப ஏனை யெழுத்தன்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்கிறது குறள்.
ஆனால், மோடி அரசு முன் வைக்கும் புதிய கல்விக்கொள்கை-2015 சமூகத்தின் கண்களாக இருக்கும் கல்வியை நோண்டி விற்றுத் தீர்க்கப் பார்க்கிறது.
வரும் டிசம்பர்-15- இல் மோடி அரசு, உலக வர்த்தகக் கழகத்தின் காட்ஸ் ( General Agreement on Trade in Services) ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கிறது. ஏற்கனவே, 90-களில் புகுத்தப்பட்ட காட் ஒப்பந்தம் உற்பத்தித் துறையில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று கூவி இந்திய விவசாயத் தையும் தொழில்துறையையும் சின்னாபின்னமாக்கியிருக்கிறது.
இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது; கோடிக்கணக்கான தொழிலாளிகள் உதிரிகளாகிப் போனது; சிறு-குறுந்தொழில்கள் பேரளவில் அழிந்துபோனது;

அ.தி.மு.க.தேர்தல் பிரசாரம்...ஈசான்ய மூலையில் இருந்து, காலை, 8:15 மணிக்கு துவக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., சார்பில், இன்று காலை, 8:15 மணிக்கு, தேர்தல் பிரசாரம் துவக்கப்படுகிறது.
தமிழக சட்டசபையின் பதவி காலம், மே மாதம் நிறைவு பெறுகிறது. எனவே, மார்ச் மாதம் துவக்கத்தில், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த லோக்சபா தேர்தலின் போது, மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்கு முன், முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். அதே பாணியில்,சட்டசபை தேர்தல் பணிகளை துவக்க, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து, அவர்களிடம், அ.தி.மு.க., அரசின் சாதனைகளை எடுத்து கூறி, ஓட்டுகளைப் பெறுவதற்காக,ஒவ்வொரு ஓட்டுச் சாவடிக்கும், ஜெயலலிதா பேரவை சார்பில், ஏஜன்ட் நியமிக்கும் படி, சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதா உத்தரவிட்டார்.   பணபட்டுவாடா துவங்கிடிச்சி டோய் இன்னும் 4 மாதம் களுக்கு பிரியாணி, சாராய வியாபாரம் கொடி கட்டி பறக்கும்...ஏய் கோவாலு பொருளாதாரம் உயரும்ல ?

அ.தி.மு.க. துணை பொதுச்செயலராகிறார் சசிகலா?

சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழுவிலேயே நம்பர் 2-வாக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது இம்மாத இறுதிக்குள் சசிகலா அதிமுக துணைப் பொதுச்செயலராகிவிடுவார் என்கிறது அதிமுக வட்டாரங்கள். அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலராக ஜெயலலிதாவே நீடித்து வருகிறார். மற்ற கட்சிகளைப் போல அதிமுகவில் நம்பர் 2 இடம்
யாருக்கும் கிடையாது. Sasikala to get top ADMK Post? சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு செல்ல நேரிட்ட போது அடுத்த முதல்வர் யாராக இருக்கலாம் என சசிகலாவின் உறவினர்கள் உட்பட பலரது பெயர்களும் அடிபட்டன. ஓய்வுபெற்ற பின்னரும் அரசு பதவியில் ஆலோசகராக ஒட்டிக் கொண்டிருக்கும் ஷீலா பாலகிருஷ்ணன் பெயரும் கூட அடிபட்டது. ஆனால் மீண்டும் ஓ. பன்னீர்செல்வம்தான் முதல்வரானார்.  இந்த அம்மா சும்மா டிராமா காட்டுவதில் எம்ஜியாரையும் மிஞ்சிய குழப்ப கேஸ். கொடுக்கும் கொடுக்காது அல்லது கொடுத்துவிட்டு பறிக்கும் மொத்தத்தில் குரங்குக்கு வாழ்க்கைப்பட்ட சசி 

சவுக்கு: அம்மா என்ற புனிதமான பெயரை உச்சரிக்கவே கூச்சப்படும் பெயராக ......

பசியோடு ஓட்டலுக்குள் நுழைகிறார். மெனுவை நீட்டுகிறார் சர்வர்.
ஒரு ஆனியன் ரவா.
ரவா தோசை ஆயிருச்சு சார்.
சரி, ஆனியன் ஊத்தப்பம்.
ஆனியனே வரலை சார் மார்க்கெட்டுக்கு.
அடடா, அப்ப மசால் தோசையே கொடுங்க.
ஆனியன் இல்லாம் மசாலா பண்ணினா ருசியா இருக்குமா, சார்?
அப்ப நான் என்னதான் சாப்பிட்றது? சாதா தோசையே கொடுங்க.
கரண்ட் கட்ல ஃபிரிட்ஜ் ஓடல. சட்னி புளிச்சுர்ச்சு. சாம்பார் மட்டுந்தான். பரவால்லையா?
தலையெழுத்து. அதையாவது கொண்டு வாப்பா. பசிக்குது.
இதுதான் இந்திய ஜனநாயகத்தில் வாக்காளர்களின் நிலை. அவர் சொன்னது போல் தலையெழுத்து என்றும் சொல்லலாம்.
தமிழ்நாட்டு வாக்காளர் என்றால் இன்னும் பாவம்.
பழைய தோசையை கல்லில் போட்டு சூடாக்கி தருவதைதான் சாப்பிட முடியும்.

இந்துவாக இருந்து முஸ்லிம் ஜிகாதியாக மாறியவன் அடையாளம் காணப்பட்டான்

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் மற்றொரு ‘ஜிகாதி ஜான்’ உருவாகியிருக்கிறான். அவன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவன். சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒரு வீடியோ வெளியிட்டனர். அதில் இங்கிலாந்து ராணுவத்துக்கு உளவாளியாக இருந்த 5 பிணைக்கைதிகளை முகமூடி அணிந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற வீடியோ காட்சி இடம் பெற்றிருந்தது. பிணைக் கைதியை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவன் ஜிகாதி ஜான்–2 என அழைக்கப்பட்டான். அவன் இங்கிலாந்தை சேர்ந்தவன் என தெரிய வந்துள்ளது. அவனது பெயர் அபு ருமாசயா (32). இவனது உண்மையான பெயர் சித்தார்த்த தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவன் பிறப்பால் இந்து. பின்னர் இவன் இஸ்லாம் மதத்துக்கு மாறி ஆயிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டான். ஆயிஷா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவள். எனவே, அவனும் தீவிரவாதியாக மாறினான். லண்டனில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்தான். வீடியோவில் வெளியான குரலை வைத்து அவன் சித்தார்த்த தார் தான் என தாயாரும், சகோதரியும் தெரிவித்தனர். இதை இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து போலீசாரும் உறுதி செய்துள்ளனர்.

ஒபாமா அதிரடி..இனி யாரும் சுலபமாக துப்பாக்கி வைத்திருக்க முடியாது

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு மக்களுக்கு இருந்துவரும்
உரிமையை கட்டுப்படுத்துவது தொடர்பான அதிபர் ஒபாமாவின் திட்டங்கள் பற்றி அவரது அலுவலகமான வெள்ளை மாளிகை விவரம் வெளியிட்டுள்ளது. துப்பாக்கி விற்பவர்கள் அனைவரும் அதற்காக தங்களைப் பதிவுசெய்துகொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், துப்பாக்கி வாங்க வருபவர்களைப் பற்றி பரிசோதனைகள் செய்த பிறகு தான் அவர்களிடம் விற்க வேண்டும் என்றும் புதிய விதிகள் கொண்டுவரப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Dmdk.Titanic தேமுதிக டைடானிக் பாதையில்..கப்டனோ சதா full ..கப்பலுக்கு உள்ளேயே ஐஸ் பாறைகள்...பிரேமா...சுதீஷ்....

விஜயகாந்த் ஏன் கருணாநிதி, வைகோ, பி.ஜே.பிக்கு தேவைப்படுகிறார்? - தி.மு.க. சர்வே சொல்லும் உண்மை! 2005-ல் விஜயகாந்த் 'அரசியல் என்ட்ரி’ கொடுத்து தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என புதிய கட்சியை ஆரம்பித்தபோது, உலகத் தமிழர்கள் அனைவரிடமும் ஒரு பிரமாண்ட எதிர்பார்ப்பு இருந்தது. 'நீண்ட காத்திருப்புக்கு பிறகு தமிழகத்துக்கு ஒரு நல்ல மாற்றம் வந்துவிட்டது' என்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட விஜயகாந்தின் ரசிகர்கள் உற்சாகமாக குரல் கொடுத்தார்கள்.
திரையில் பார்த்த அதே சிவந்த கண்களோடும் கோபத்தோடும் விஜயகாந்த் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையும் வறுத்தெடுத்தார். அவரது தீவிரப் பிரசாரமும் கணிசமான மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையும் சாதகமாக இருக்க... அப்போது நடைபெற்ற தேர்தலில் 8.38% வோட்டுக்களை அவர் குவித்ததோடு தன் கட்சி சார்பாக தனி ஒருவனாக சட்டமன்ற உறுப்பினராகவும் ஜெயித்தார்.

நாஞ்சில் சம்பத் தெரிந்தே உளறினார்....வைகோ வந்துவிடகூடாது என்கின்ற அவசரம்....புகைச்சல் வெளிச்சம்

""பொதுக்குழுவை கோலாகலமாக கொண்டாட லையே... ஏற்கனவே நடந்த எங்க பொதுக்குழுவோடு இதனை ஒப்பிடுகிறபோது ஆயிரத்தில் ஒரு பங்கு ஏற்பாடு பண்ணலியே... ரொம்ப எளிமையால்ல நடத்துனோம்.''""அந்தந்த வீட்டு உரிமை யாளர்களோட அனுமதி பெற்று, அவர்களின் மகிழ்ச்சி யோடுதான் பேனர்கள் வைத்தோம். பேனர் வச்சதால ஆள் போக முடியாம, மூச்சுத்திணறி இறந்துட்டாங்களா?''

""500 பேர் இறந்தது வெள்ளத்தில் அடிச்சிட்டு போனதாலா? வெள்ளத்தை வேடிக்கப்பாக்க போனதாலா? ஒரு வீட்டில் ஒப்பாரி கேட்கும். அடுத்த வீட் டுல கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி யிருக்காங்க. ஒப்பாரி கேட்கிறது என்பதற் காக கல்யாணத்தை நிறுத்த முடியாது.''

செவ்வாய், 5 ஜனவரி, 2016

400 ரயில் நிலையங்களை பராமரிக்கும் பணி தனியாரிடம்...அருண் ஜெட்லி முடிவு:

400 ரயில் நிலையங்களை பராமரிக்கும் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவன நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், நிதி ஆதாரங்களை பெருக்கும் பணியில் ரயில்வேத்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த வகையில் ரயில் நிலைய பராமரிப்பும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும். இதற்காக 400 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் அந்த ரயில் நிலையங்களை பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க ரயில்வேத்துறை நடவடிக்கை எடுக்கும். சிரிய மற்றும் நடுத்தர விமான நிலைங்களை பராமரிக்கும் பொறுப்பையும் தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து ஆலோசனை செய்யப்ப்டடு வருகிறது என்று தெரிவித்தார்.nakkheeran,com

உலகின் மிகப்பெரிய நீலநிற இரத்தினக்கல் இலங்கையில்....100 மில்லியன் அமெரிக்க டாலர்கள்


முதல் முறையாக உலகின் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். ‘த ஸ்டார் ஆப் ஆடம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ப்ளூ ஸ்டார் சபையர் என்ற மாணிக்கக்கல் 1404.49 காரட் நிறை கொண்டது.இதன் சந்தை மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும், பெயர் வெளியிட விரும்பாத இந்தக் கல்லின் தற்போதைய உரிமையாளர் இந்த மாணிக்க கல்லை 175 மில்லியன் டாலர்கள் வரை (சுமார் ஆயிரத்து நூறு கோடி ரூபாய்) ஏலத்தில் விற்பனை செய்ய முடியும் என்றும் அழகுக்கல் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த மாணிக்கக்கல் ‘இரத்தினங்களின் நகரம்’ என்று அழைக்கப்படும் இலங்கையின் இரத்தினபுரி பகுதியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக்கல் என்ற உலக சாதனைப் பட்டியலில் தற்போது உள்ள மாணிக்கக்கல் 1,395 காரட் நிறை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மாலைமலர்.com

திருச்சியில் கனிமொழி பிறந்தநாளுக்கு வாழ்த்து போஸ்டர்கள்....உள்குத்து இருக்குமோ?


கனிமொழிக்கு எதிரிகள் ஒருபோதும் வெளியே இருந்ததில்லை. எப்போதும் குடும்பத்துக்கு உள்ளேயே அவருக்கு குழிபறிக்க ஒரு கூட்டம் காத்திருக்கிரதாக சொல்லப்படுகிறது. திமுகவின் அடிப்படை கொள்கைகளில் பற்று கொண்ட முக்கிய தலைவர்களில் இவர் ஒருவர்தான் மிகவும் நேர்மையானவராக உள்ளார். இவரை சிறைக்கு தள்ளியவர்கள் வடவர்கள் மட்டும் அல்ல உள்வீட்டிலேயே உள்ள கோடரி காம்புகள்தான் என்பது முழு உலகத்திற்கும் தெரியும். கனிமொழிக்கு திமுகவின் தலைமையை ஏற்க கூடிய தகுதி உள்ளதாக காட்டி திமுகவை ஒரு அதிமுக போல மாற்ற முயற்சிக்கும் பாதி பார்பன கும்பல்களிடம் கனிமொழி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.உடன்பிறந்தே கொல்லும் வியாதிகள்தான் தாரளாமாக உள்ளதே?

திமுக ஆர்ப்பாட்டம்...தொண்டர்கள் குவிந்ததால் நெரிசலில் சிக்கிய கலைஞர்

சென்னை திமுக ஆர்ப்பாட்டத்தில் குவிந்த தொண்டர்கள் கூட்டம் | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்.மாஸ்-காட்டிய-கழகம்-4-மணி-நேரம்-திணறித்-தவித்த-மக்கள்-8-தகவல்களுடன்-திமுக-ஆர்ப்பாட்டம்/ சென்னை திமுக ஆர்ப்பாட்டத்தில் குவிந்த தொண்டர்கள் கூட்டம் | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன். >செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி நடந்த திமுக ஆர்ப்பாட்டத்துக்கு தொண்டர்கள் குவிந்ததால் சென்னை வாலாஜா சாலையில் காலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.குறிப்பாக, அண்ணா சாலை, வாலாஜா சாலை, கடற்கரைச் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னதாக, திமுக கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள சென்னை தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, திருவள்ளூர் வடக்கு, தெற்கு ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜீன்ஸ் பயங்கரவாதம் – தினமணி/திருக்கோவில் லூலாயி ! இந்து "அரை" நிலைய துரை

ஜீன்ஸ் போட்டால் கடவுளுக்கு ஆகாதாம்!
ஆன்ட்ராய்டு காலத்தில் அரை டிராயரை தடை செய்தால் பழனி ஆண்டவனே குற்றவாளியல்லவா?
காமாட்சி ஆட்சி செய்யும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மீனாட்சி ஆட்சி புரியும் மதுரையிலும் இருக்கிறது. புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட சிவனான்டி மண்ணில் ஜீன்ஸ் பேண்டுகளின் அட்டகாசம் அதிகரித்தபடியால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அவர்கள் திருக்கோவில் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தாமாகவே ஒரு வழக்கை பதிவு செய்தார்.
கிரானைடும், ஸ்டிக்கரும், பீஃப் கானமும் ஆட்டம் போடும் தமிழ்த்தாய் ஊரில் தாமாகவே வழக்கு போடுவதற்கு எத்தனையோ இருக்கையில் இற்றுப் போகும் அழுக்கு பேண்டு குறித்து ஒரு நீதியரசர் ஏன் இத்தனை அற ஆவேசம் கொண்டிருக்க வேண்டும்? ஏதோ இந்த மட்டிலாவது இந்த மண்ணில் அறம் சீவித்திருக்கிறதே என்று காரப் பணியாரம் சுவைத்துக் கொண்டு கவிதை ஏரியாவில் இலக்கியம் பூசும் சில வார்த்தை செதுக்கர்கள் சிலாகிக்கிறார்கள்.
ஜீன்ஸ் போட்டால் கடவுளுக்கு ஆகாதாம்!
அந்த வழக்கு தொடர்பாக கடந்த நவம்பர் 26-ம் தேதி வைத்தியநாதன் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். நெற்றிக் கண் திறப்பினும் கூந்தலுக்கு இயற்கையாக மணம் கிடையாது என்ற அரிய உண்மையை நிலைநாட்டிய வைகைக் கரையில் லெக்கின்ஸ் போட்டால் இயற்கையாக பக்தி வராது என்று ஒரு பத்வாவை ஏவி விட்டார். அதில், தமிழக இந்து கோவிலுக்குள் வரும் ஆண்கள் மேல் சட்டை, வேட்டி, பைஜாமா, சாதாரண பேண்ட் (ஜீன்ஸ் இல்லை), சட்டை அணிந்து வர வேண்டும், பெண்கள் சேலை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மற்றும் குழந்தைகள் உடல் முழுவதும் மூடப்பட்ட ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றெல்லாம் தாலிபான் முல்லாக்களுக்கு போட்டியாக உத்தரவிட்டார். ஆன்ட்ராய்டு காலத்தில் அரை டிராயரை தடை செய்தால் பழனி ஆண்டவனே குற்றவாளியல்லவா?
நீதியரசரே பொங்கி விட்டால் திருக்கோவில்களில் வெண் பொங்கலை மட்டும் படையல் செய்யும் இந்து அறநிலையத் துறையும் பொங்கினார்கள்.

அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் லஞ்சம்...விஷம் குடித்து உயிருக்கு போராடும் நிர்வாகி.....

சென்னை: தமிழக அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் அறையிலேயே
கட்சியின் மாவட்ட பிரதிநிதி ஒருவர் விஷம் குடித்த சம்பவத்தால் கோட்டை வட்டாரமே பரபரப்புக்குள்ளானது. என்ன நடந்தது? விசாரணையில் இறங்கினோம். கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம். மந்திரியை பார்க்க வந்தார் திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக அ.தி.மு.க. செயலாளராகவும், தகவல் தொழில்நுட்ப மந்திரியாகவும் பொறுப்பில் இருப்பவர் முக்கூர் சுப்பிரமணியன். இவரைப் பார்க்க அதே மாவட்டத்தின் ஒன்றிய பிரதிநிதியான ஏ.இ. சண்முகம் இன்று காலை கோட்டைக்கு வந்திருக்கிறார். மந்திரி'முக்கூர்' அரசு விருந்தினர் மாளிகையில் இருப்பதாக தகவல் கிடைக்கவே, அங்கு சென்றுள்ளார். அங்குதான் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு,  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார் இப்போது.

 அமைச்சு பதவி எடுக்கும்போது அம்மைவின் ஜெயில்வாசத்தை எண்ணி கேவி கேவி அழுதாங்களே ஒரு டிப்பிக்கல் அம்மா அடிமை அவன்தாய்ன் இந்த லஞ்ச கேப்மாரி