திங்கள், 13 மே, 2024

நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் காலமானார்... அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி

 tamil.asianetnews.com Ajmal Khan  : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் செல்வராசு எம் பி (67) இன்று அதிகாலை காலமானார். உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  சென்னை மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்
 இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர். எம் செல்வராசு எம் பி (67) இன்று காலமானார்.
எம் செல்வராசு திருவாரூர் மாவட்டம். நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கப்பலுடையான் என்ற ஊரில் வாழ்ந்து வந்த ஏழை விவசாயி முனியன் - குஞ்சம்மாள் தம்பதியரின் மகனாக 1957 மார்ச் 16 ஆம் தேதி பிறந்தவர்.

ஒரே மேடையில் இந்தியா கூட்டணி தலைவர்கள்? மாற்றி யோசிக்கும் ஸ்டாலின்

 மின்னம்பலம் - Aara  :    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பெயிலில் வந்து பிரச்சாரம் செய்யும் காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
”மே 10 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறையின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.  அவர் நேற்று மே 11ஆம் தேதி டெல்லியில் தனது கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஞாயிறு, 12 மே, 2024

மம்தா பானர்ஜி : ஆளுநரின் “முழு வீடியோவையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்; அனந்த போஸ் இனியும் தொடரக்கூடாது”

 கலைஞர் செய்திகள் - Prem Kumar :  இந்தியா ஆளுநர் மாளிகை வெளியிட்டது எடிட் செய்யப்பட்ட வீடியோ. தனக்குப் பென் டிரைவ் மூலம் முழு வீடியோ வந்திருப்பதாகவும் அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநராக இருப்பவர் சி.வி.அனந்த போஸ். இவர் அம்மாநில அரசுக்கு தொடர்ந்து பல்வேறு இடையூறு கொடுத்ததன் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவராக அறியப்பட்டவர். இவர் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பெண் ஒருவர் கடந்த மே 2ஆம் தேதி, ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் புகார் ஒன்றை கூறினார்.

நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அலை" - ராகுல்

 
மின்னம்பலம் -Selvam :  “நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அலை” – ராகுல்
நாடு முழுவதும் இந்தியா கூட்டணி அலை வீசுகிறது என்று காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (மே 11) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இன்றோடு நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது. மே 13-ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பார் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம்! ஒரு வருடம் வெளியே வர முடியாது!

 தினமலர் :  சென்னை: பெண் போலீஸ் குறித்த அவதூறு பேச்சு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள யூ டியுபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
 தமிழக அரசு , முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, முதல்வர் மருமகன் சபரீசன் ஆகியோர் குறித்து கடுமையாக விமர்சித்து வீடியோ பதிவு செய்து வந்த சவுக்குசங்கர் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் சவுக்கு சங்கர் ஒரு வருடம் வெளியே வர முடியாது.

உக்கிரேன் ரஷ்ய போரில் 300ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள்! காமினி வலேபொட எம்பி

 hirunews.lk : இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக ரஸ்யாவுக்கு அனுப்பப்பட்டவர்களில் 300ற்கும் அதிகமானோர் போரில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் 200ற்கும் அதிகமானோர் தற்போது முகாம்களில் பயிற்சி பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்ய – யுக்ரைன் மோதலுக்காக இலங்கையிலிருந்து 800ற்கும் அதிகமானோர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனி, 11 மே, 2024

பாட்டுக்கு மெட்டா மெட்டுக்குப் பாட்டா? மன்னிப்புக் கேட்ட இசை மேதை!

May be an image of 2 people
Gauthaman Munusamy :   பாட்டுக்கு மெட்டா மெட்டுக்குப் பாட்டா? மன்னிப்புக் கேட்ட இசை மேதை!
“பாடலாசிரியர் எழுதித் தரும் வார்த்தைகளுக்குள்ளேயே இசை ஒளிந்து
கொண்டிருக்கிறது. அதைத் தேடிக் கண்டுபிடித்து வெளியே கொண்டு வர வேண்டியது தான் இசையமைப்பாளர் செய்ய வேண்டிய வேலை” – இது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் சாட்சியம்! இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்து காட்டியவர் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்.
பாடலாசிரியர் எழுதித்தரும் பாடலுக்குத்தான் அவர் இசையமைப்பார். எழுதப்பட்ட வரிகள் மெட்டுக்குள் அடங்காமல் முட்டி மோதினால் அவற்றை விருத்தமாக அமைத்து விட்டு அடுத்த வரியை இசைக்குள் கச்சிதமாக அடக்கிவிடுவார்.

ரெட் பிக்ஸ் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் தூக்கிய போலீஸ்.. சவுக்கு சங்கரை தொடர்ந்து

tamil.asianetnews.com - vinoth kumar : தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் வைத்து தமிழக போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

CM அரவிந்த் கெஜ்ரிவால் : பாஜக வென்றால்... ஸ்டாலின், மம்தா உள்ளிட்டவர்கள் சிறையில் இருப்பார்கள்! டெல்லி முதல்வர் எச்சரிக்கை

 மின்னம்பலம் - christopher  :”மீண்டும் மோடி அரசு அமைந்தால் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பிற எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உச்சநீதிமன்றம் நேற்று ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

கே.சந்திரசேகர் ராவ் (Ex Cm telungana) : மாநில கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும்!

 tamil.oneindia.com -  Vigneshkumar  : டெல்லி: லோக்சபா தேர்தலில் பிராந்திய கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று பிஆர்எஸ் கட்சித் தலைவரும் தெலுங்கானா முன்னாள் முதல்வருமான கேசிஆர் கூறியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நமது நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் திங்கள்கிழமை நடக்கிறது. இதில் மொத்தம் 10 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடக்கிறது.
குறிப்பாகத் தெலுங்கானாவில் மொத்தம் இருக்கும் 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. இன்றுடன் அங்குப் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில், பல்வேறு தலைவர்களும் தீவிரமாகப் பரப்புரை செய்து வருகிறார்கள்.

வெள்ளி, 10 மே, 2024

வடமாநில ரெயில்வே ஊழியர்கள் தமிழ் கற்கவேண்டும் - தெற்கு ரயில்வே ‛அறிவிப்பு இது நடக்குமா?

 tamil.oneindia.com -  Halley Karthik  :  ‛தமிழ் கற்றே ஆகணும்’.. வடமாநில ஊழியர்களுக்கு தெற்கு ரயில்வே ‛ஆர்டர்’.. பஞ்சாயத்துக்கு ‛எண்ட் கார்டு’?
சென்னை: தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் வட மாநிலங்களை சேர்ந்த ஊழியர்களுக்கு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகள் பயிற்றுவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது ரயில்வே சேவையை மேலும் மேம்படுத்தும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
பொதுவாக ரயில்வே துறை என எடுத்துக் கொண்டாலே பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள்

அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை கிடைத்தது Delhi CM Arvind Kejiriwal

 மாலை மலர் :  டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கதுறை கைது செய்தது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் தேர்தலை கணக்கில் கொண்ட இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை நேற்று மனுதாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில் இன்று கெஜ்ரிவால் தொடர்பான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

அம்பானி, அதானி பற்றி பேச்சு.. மறுநாளே பிரச்சாரத்திற்கு போகாத மோடி.. என்ன நடந்தது? இதுதான் காரணம்

tamil.oneindia.com  - Shyamsundar :  சென்னை: அம்பானி, அதானி பற்றி முதல்முறையாக பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசினார்.
இந்த பிரச்சாரத்திற்கு மறுநாளே.. அதாவது நேற்று முதல்முறையாக இந்த தேர்தல் காலத்தில் மோடி பிரச்சாரம் எதையும் செய்யாமல் தவிர்த்து உள்ளார்.
நேற்று முதல் நாள் தெலங்கானாவின் கரீம்நகரில் நடைபெற்ற பேரணியின் போது,
​​பிரதமர் நரேந்திர மோடி, அம்பானி, அதானி ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் "டீல்கள்" குறித்து கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
2024 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அம்பானி, அதானி ஆகியோரை விமர்சனம் செய்வதை ராகுல் காந்தி ஏன் நிறுத்தினார் என்று பிரதமர் மோடிதனது உரையில் கேள்வி எழுப்பினார்.

இந்திரா காந்தியின் சாயல்…பிரியங்காவின் அரசியல் எழுச்சி…உத்திரப் பிரதேசத்தில் மீண்டெழுகிறதா காங்கிரஸ்?

 மின்னம்பலம் - vivekanandhan :   பிரியங்காவின் அரசியல் எழுச்சி பலரையும் மலைக்க வைத்துள்ளது. நீண்ட காலமாக நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி BackEnd-ல் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த பிரியங்கா காந்தி, 2019 ஆம் ஆண்டு நாடளுமன்றத் தேர்தலில் கட்சிப் பொறுப்பில் நேரடியாக அடியெடுத்து வைத்ததிலிருந்து பல சிக்சர்களை விளாசி வருகிறார்.
சமீபத்தில் உத்திரப் பிரதேச மாநிலத்தின் சஹாரன்பூர் பகுதியில் பிரியங்கா காந்தியின் ரோடு ஷோ விற்கு கூடிய கூட்டத்தின் எழுச்சியைப் பார்த்து பாஜகவினர் திகைத்து விட்டார்கள். காங்கிரசுக்கு ஒரு புத்தெழுச்சியை பிரியங்காவின் பிரச்சாரம் கொடுத்திருப்பதாக காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

வியாழன், 9 மே, 2024

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து 8 பேர் உயிரிழப்பு

 zeenews.india.com - JAFFER MOHAIDEEN : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சுதர்சன் என்ற பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்கள் உட்பட பலர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

நிர்மலா தேவி வழக்கு: மாணவிகளிடம் தவறா பேசியது பேராசிரியர் முருகன் கருப்பசாமிகாகத்தான்- ப்ளீஸ் தண்டனையை ரத்து பண்ணுங்க!

tamil.samayam.com - மரிய தங்கராஜ் : கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை, தவறாக வழிநடத்திய வழக்கில்
குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றம் ஏப்ரல் 30ஆம் தேதி தீர்ப்பளித்தது.
மேலும், ரூ.2.45 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் பேராசிரியர் நிர்மலா தேவி அடைக்கப்பட்டார்.

சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

 minnambalam.com - indhu : பெண் போலீசார் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் இன்று (மே 9) கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் விமர்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் குறித்தும் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் காவல்துறை துணை ஆய்வாளர் சுகன்யா புகாரளித்து இருந்தார்.

12,000 நெல் மூட்டைகள் சேதம் திடீர் கோடை மழையால்

 மாலைமலர் : சென்னை  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்வதற்காகவும், கொள்முதல் செய்யப்பட்டும் வைக்கப்பட்டிருந்த 12,000-க்கும் கூடுதலான நெல் மூட்டைகள் கோடை மழையில் நனைந்து சேதமடைந்தன.
நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில்,
அதை மூடி மறைக்க செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிர்வாகம் முயல்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

சவுக்கு சங்கர் வலது கையில் கட்டு.. தாங்கி.. தாங்கி நடக்கிறார் .. பலத்த போலீஸ் பாதுகாப்போடு நீதிமன்றத்தில் ஆஜர்

 tamil.asianetnews.com - Ajmal Khan :  கஞ்சா வைத்திருப்பதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது கையில் முறிவு ஏற்பட்டு கட்டுபோட்டிருப்பது தெரியவந்துள்ளது.
பெண் காவலர்களை தவறாக விமர்சித்த வழக்கில் சவுக்கு சங்கர் கடந்த சனிக்கிழமை தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவரது காரில் சோதனை செய்த போது 400 கிராம் கஞ்சா இருப்பதும் கண்டறியப்பட்டது. இந்தநிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கரை போலீசார் தாக்கியதாகவும்,

அழகிரியின் மகன் துரை தயாநிதியை நலம் விசாரித்த முதல்வர்

 nakkheeran.in  : அழகிரியின் மகன் துரை தயாநிதியை நலம் விசாரித்த முதல்வர்
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரியுடைய மகன் துரை தயாநிதியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
கடந்த மார்ச் 14ஆம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
 உயர்ரக சிகிச்சை அளிக்கக்கூடிய வார்டில் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார்.
துரை தயாநிதிக்கென்று மருத்துவக் குழு ஒதுக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அவரை 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சாம் பிட்ரோடா காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 மாலை மலர் : இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக இந்திய மக்களின் நிறங்களை குறிப்பிட்டு சபாம் பிட்ரோடா பேசினார்.
இதனால் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. சாம் பிட்ரோடாவிற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
பிரதமர் மோடி நிறவெறி என கடுமையாக சாடினார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் பதவியை சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளார்.
சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம்.

புதன், 8 மே, 2024

கஞ்சா வழக்கு.. சவுக்கு சங்கர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்!

 tamil.oneindia.com - Shyamsundar I சென்னை: கஞ்சா வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மீதான விசாரணை நடைபெறுகிறது.
தேனியில் கைது செய்யப்பட்ட போது சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. சவுக்கு சங்கருக்கு கஞ்சா வழங்கியதாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூ-டியூபர் சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மகேந்திரன் என்ற இளைஞர் கைது, அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று விசாரிக்கப்படுகிறார்.

ஜெயக்குமாரை கொன்று எரித்தது மதுரை கூலிப்படையா? ஏவிவிட்ட பிரமுகரை பிடிக்க போலீஸ் தீவிரம்!

 மாலை மலர் :  நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்மமரண வழக்கில் தொடர்ந்து மர்மங்கள் நீடித்து வருகிறது.
கடந்த 2-ந்தேதி மாயமான அவர் 4-ந்தேதி வீட்டருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது குரல்வளை நெரிக்கப்பட்டிருந்ததும், உடல் முழுவதும் கம்பியால் சுற்றப்பட்டிருந்ததும், முதுகில் கடப்பா கல் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. எனவே அவரை மர்ம நபர்கள் கடத்தி கொலை செய்து தோட்டத்தில் வைத்து எரித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சவுக்கு சங்கர் உடலில் காயங்கள், காவல்துறை சித்ரவதை - வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி

 zeenews.india.com -S.Karthikeyan  :; கோவையில் சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டது தொடர்பாக 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு அடிப்படையில் மாவட்ட சட்டப்பணிகள் சார்பில் 3 வழக்கறிஞர் 2 மருத்துவர்களுடன் சிறையில் நேரடியாக சவுக்கு சங்கரை சந்தித்து பார்வையிட்டுள்ளனர்.
நேற்று என்ன நிலைமையில் இருந்தாரோ அதே நிலையில் தான் இன்றும் காயங்களுடன் உள்ளார். நேற்று வரை வலி மாத்திரைகள் கொடுக்கப்பட்ட நிலையில், fluid ஆக இன்று கொடுத்து வருகின்றனர்.

செவ்வாய், 7 மே, 2024

வைரமுத்து – இளையராஜா - குஷ்பு பளீர் பதில் : டீம் வொர்க்தான். இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை”

 minnambalam.com  - christopher  :  படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களின் இசை காப்புரிமை தனக்கே சொந்தம் என இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இவ்வழக்கு சம்பந்தமாக சினிமா தயாரிப்பாளர்கள், அவர்கள் அங்கம் வகிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கங்கள் எந்தவொரு ஆர்வமும் காட்டவில்லை.
காப்புரிமை சம்பந்தமான விவாதத்தை கவிஞர் வைரமுத்து தான் கலந்து கொண்ட திரைப்பட விழா ஒன்றில் மொழி பெரிதா, இசை பெரிதா என பேசி பொது வெளியில் பரபரப்பு உண்டாக்கினார். பாடல் காப்புரிமை சம்பந்தமாக இளையராஜா, வைரமுத்து ஆதரவாளர்கள் அவர்களுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ பட டைட்டில் டீசரில் தனது பாடல் இசையை அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதற்காகவும் அவர் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.

கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

 மாலை மலர்  :  சவுக்கு சங்கர் கைது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"சமூக ஊடக பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ஒரு சில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டி கைதுசெய்துள்ளது காவல்துறை. அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை சந்தித்தப்பின் அளித்த பேட்டியில், "சவுக்கு சங்கரை சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நல்ல நிலையில் சிறைக்கு சென்றார், இந்நிலையில் கோவை சிறையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக" தெரிவித்துள்ளார்

கட்டுநாயக்க ‘விசா’ சர்ச்சையின் பின்னணி

வீரகேசரி : அரச திணைக்களங்களின் வினைத்திறன்களை அதிகரிப்பதற்கு பதிலாக வெளிநாட்டு நிறுவனங்களை உள்வாங்குவதால் அரசுக்கு ஏற்படும் சர்வதேச அவமானங்கள்”
மே முதலாம் திகதி உலகமே தொழிலாளர்தினத்தினைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. இலங்கையிலும் அரசியல் கட்சிகள் தமது பலப்பரீட்சையைக் காண்பிப்பதற்கான போட்டிபோடல்களைச் செய்து ஓய்வடைந்த ஒருசில மணி நேரங்களில் காணொளியொன்று சமூக ஊடகங்களில் வெகுவாகப் பரவியது.
அந்தக் காணொளி பதிவாகிய இடம் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமாகும். அங்கு ஒரு இளைஞர் ‘உள் வருகை தரு விசா மற்றும் இணைவழி விசா’ கருமபீடத்துக்கு அருகில் கடுகாக வெழுத்துத் தள்ளுகின்றார்.   காணொளியின் படி, அவர், “என்னை மன்னியுங்கள். நான் இலங்கைப் பிரஜை. இங்கு கல்விகற்ற இலங்கையர்கள் உள்ளனர்.

திங்கள், 6 மே, 2024

ரெயில்களில் தண்ணீர் இல்லாமல் பயணிகள் திண்டாட்டம்

மாலைமலர் : சென்னை வெயிலின் தாக்கம் ரெயில்வே துறையிலும் எதிரொலிக்கிறது. கோடை விடுமுறை காரணமாகவும, வெயில் காரணமாகவும் சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கும், கோடை வாசஸ்தலங்களுக்கும் படையெடுக்கிறார்கள்.
இதனால் அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிகின்றன. எந்த ரெயிலிலும் டிக்கெட் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடுகிறார்கள்.
அதே நேரம் தண்ணீர் கிடைக்காமல் ரெயில்கள் திண்டாடுகின்றன. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து தொலை தூரங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நிரப்புவதற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அன்பே சிவம் படத்தால் குஷ்பூ மகளுக்கு சீட் கிடைத்தது ..அன்பே சிவத்துக்கு இல்லாமல் வேறு யாருக்கு ?

Here are the unknown Details about Anbae Sivam Movie And Khushbu Daughter

tamil.filmibeat.com   Karunanithi Vikraman  : சென்னை: தமிழில் டாப் நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. ரஜினி, கமல் என இரண்டு துருவங்களுடனும், பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தவர்.
குஷ்பூவின் மேல் அபரிமிதமான பாசத்தால் அவருக்கு தமிழ்நாட்டில் கோயில் கட்டிய காட்சிகள் எல்லாம் அரங்கேறின.
மேலும் குஷ்பூ இட்லி என்பதும் தமிழ்நாட்டில் ஃபேமஸ் ஆனது. அந்த அளவுக்கு குஷ்பூ 80ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.
இவர் இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மும்பையை பூர்வீகமாக கொண்டவர் குஷ்பூ.
ஆனால் தமிழை முறைப்படி விரைவிலேயே கற்றுக்கொண்ட அவர் தான் அறிமுகமான சில படங்களிலேயே சொந்த குரலில் டப்பிங் பேசினார்.

சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு: எஃப்.ஐ.ஆர் சொல்வது என்ன?

மின்னம்பலம் -Selvam :  யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நேற்று (மே 4) அவரை தேனியில் வைத்து கைது செய்தனர்.
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தேனியில் உள்ள விடுதியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்தபோது,
கஞ்சா பயன்படுத்தியதாகவும்,
பெண் காவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் சவுக்கு சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் ராம் பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் மீது தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இதுதொடர்பாக காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில்,

சவுக்கு சங்கர் கைதுக்கு சசிகலா கண்டனம்- பத்திரிக்கை சுதந்திரத்தை காலில் போட்டு மிதித்துள்ளது

 மாலை மலர்  : தமிழக காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், இவர் தனது காரில் கஞ்சா வைத்திருந்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சவுக்கு சங்கர் கைதுக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான எக்ஸ் பதிவில் அவர், "சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர் அவர்களை திமுக தலைமையிலான அரசு கைது செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
இதன் மூலம் திமுக தலைமையிலான விளம்பர அரசு பத்திரிக்கை சுதந்திரத்தை காலில் போட்டு மிதித்துள்ளது."

கவிஞர் கண்ணதாசன் : “பிரமிளா” என்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்கப் போகிறார்கள் ?.

May be an image of 2 people, people smiling and text that says 'BMuzug நடிகை தேவிகா பற்றி கவியரசர் B.Murugesb கண்ணதாசன்'

Pugalendhi Dhanaraj :   நடிகை தேவிகா பற்றி கவியரசர் கண்ணதாசன் குமுதம் பத்திரிகையில்
'இந்த வாரம் சந்தித்தேன் ' என்ற கட்டுரையிருந்தது.
தேவிகா...
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
சுற்றம் காத்தல், விருந்தோம்பல், மரியாதை அனைத்தும் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரித்த நடிகைகளும் உண்டு; கை கொடுத்து உதவிய உத்தமிகளும் உண்டு.
இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் தேவிகா.
அவர் கதாநாயகியாக நடித்த போது இன்றைக்கிருக்கும் பல நடிகைகளைவிட, நன்றாகவே நடித்தார்; அழகாகவே இருந்தார். வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாத காரணத்தால் வாழ்க்கையில் தோல்வியடைந்தார். இல்லையென்றால் தேவிகாவின் குணத்துக்கும், நடத்தைக்கும், எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அமைந்திருக்கும்.

ஞாயிறு, 5 மே, 2024

மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முக்கிய பிரமுகர் தலைமறைவு

 மாலைமலர் : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மரண வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.
கொலையா? அல்லது தற்கொலையா? என்பதில் தொடர்ந்து முரண்பாடான கருத்துக்கள் எழுந்து வரும் நிலையில் ஓரிரு நாட்களில் வழக்கின் முழு விவரங்களும் தெரிவிக்கப்படும் என்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு வழங்குவதற்காக கே.பி.கே. ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முக்கிய பிரமுகர்களில் ஒருவர் தற்போது தலைமறைவு ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை பிடிப்பதற்காக தனிப்படை விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கனடா: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் கரன் ப்ரார் (22), கமல் ப்ரீத் சிங் (22), மற்றும் கரண் ப்ரீத் சிங் கைது

bbc.com - , ஜெசிகா மர்பி  :  இந்தியா - கனடா இடையிலான உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா காவல்துறை தெரிவித்துள்ளது.
காலிஸ்தானுக்கு ஆதரவாகப் பல வழக்குகளில் இந்திய அரசால் தேடப்பட்டு வந்த 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023 ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார்.
வான்கூவர் புறநகர்ப் பகுதியில் ஒரு பரபரப்பான கார் நிறுத்துமிடத்தில் முகமூடி அணிந்து, துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தக் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளை டெல்லி திட்டவட்டமாக மறுத்தது.

சனி, 4 மே, 2024

BREAKING: பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

பிரஜ்வல் ரேவண்ணாவால் கட்டி வைத்து பலாத்காரம் செய்த பெண்ணை காணவில்லை . மகன் போலீசில் முறைப்பாடு

 tamil.oneindia.com  - Halley Karthik :  பிரஜ்வல் ரேவண்ணாவால் கட்டி வைத்து பலாத்காரம் செய்த பெண் திடீர் மாயம்.. மகன் போலீசில் புகார்
பெங்களூர்: பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோ விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் திடீர் மாயமாகியுள்ளார். இது தொடர்பாக பெண்ணின் மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், ஹாசன் லோக்சபா தொகுதி மஜத எம்.பியாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகௌடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகனுமாவார்.

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 6115 புத்தொழில் நிறுவனங்கள் திமுக ஆட்சி 3 ஆண்டு சாதனை

 கலைஞர் செய்திகள் Lenin : திராவிட மாடல் அரசில் கடந்த மூன்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முயற்சிகளின் விளைவாக புத்தொழில் நிறுவனங்கள் (Startups) அமைவதற்கான உகந்த சூழலை உருவாக்குவதில் நாட்டிலேயே தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது பெருமகிழ்ச்சிக்குரியது.
அந்த வெற்றியைத் தக்க வைக்கும் நோக்கோடு உலகில் பல்வேறு பகுதிகளில் முத்திரை பதித்த முன்னணி புத்தொழில் நிறுவனங்களும், இளம் தொழில்முனைவோரும் கலந்து கொள்ளும் வகையில் உலகப் புத்தொழில் மாநாடு (Global Startup Summit) வரும் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது.

சவுக்கு சங்கர் கைது - மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

 மின்னம்பலம் -  christopher   :  தேனியில் இன்று (மே 4) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், சமீபத்தில் காவல் துறை அதிகாரிகள், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன்பேரில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை இன்று அதிகாலை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு வேனில் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் கோவை மாநகரக் காவல்துறை சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

காணாமல்போன நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை

 tamil.abplive.com - ரேவதி :  ஜெயகுமார் தனசிங் கடந்த மே 2 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என அவரது மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல்துறையில் புகாரளித்திருந்தார்.
Nellai east District Congress President Jayakumar recovered as dead body after missing - TNN Crime: காணாமல்போன நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை
திருநெல்வேலி மாவட்டத்தில் காணாமல் போன காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயகுமார்  தனசிங் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 வயது மகனை டிரெட்மில் ஓட வைத்து கொன்ற தந்தை? நீதிமன்றத்தை அதிர வைத்த வீடியோ

maalaimalar :  “அமெரிக்காவின் நியூ ஜெர்சியை பகுதியை சேர்ந்தவர் கிரெகர். இவருக்கும் பிரெ மிக்கோலியோ என்பவருக்கும் திருமணமாகி ஆறு வயதில் மகன் கோரெ இருந்து வந்தார்.
தனது மகன் கோரெ உடல் பருமனாக இருப்பதாக கூறி, அவனை உடற்பயிற்சி செய்ய கிரெகர் கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
அந்த வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிரெகர் தனது மகனை உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்து சென்று டிரெட்மில்லில் ஓட செய்துள்ளார்.
அதன்படி கோரெ டிரெட்மில்லில் ஓட துவங்கியுள்ளார். சிறிது நேரத்தில் டிரெட்மில்லின் வேகத்தை கிரெகர் கூட்டியுள்ளார்.
இதனால் நிலைதடுமாறிய கோரெ டிரெட்மில்லில் இருந்து கீழே விழுந்தார். இதை பார்த்து ஆத்திரமடைந்த கிரெகர் தனது மகன் கோரெவை வலுக்கட்டாயமாக தூக்கி மீண்டும் டிரெட்மில்லில் ஓட செய்துள்ளார்.

வெள்ளி, 3 மே, 2024

ரேபரேலியில் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் . அமேதியில் கே எல் சர்மா போட்டி

 மாலை மலர் :  உத்தரபிரதேசம்  பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகள் இருப்பதால் அந்த மாநிலத்தில் மட்டும் 7 கட்டங்களிலும் ஓட்டுப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து உள்ளது.
அதன்படி கடந்த மாதம் 19-ந்தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 8 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
வருகிற 7-ந்தேதி 3-ம் கட்ட தேர்தலில் 10 தொகுதிகளுக்கும், 13-ந்தேதி 4-ம் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும், 20-ந்தேதி 5-ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், 25-ந்தேதி 6-ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும், ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்ட தேர்தலில் 13 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டி?

nakkheeran.in  : நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது
முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மூன்றாம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வியாழன், 2 மே, 2024

2 ஜி வழக்கு தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது!~

ராதா மனோகர்  :  ஆ ராசா மீதான 2 ஜி  ஸ்பெக்ட்ரம் வழக்கு தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது!~
2 ஜி வழக்கும் அதை ஒட்டி நடந்த ஜனநாயக கேலி கூத்துக்களும் ஒரு அசல் மசாலா படத்திற்கே உரிய அளவு கற்பனை வளம் நிறைந்தவை
ஒட்டு மொத்த  அரசும் சங்கிகளும் முன்னின்று நடத்திய நாடகம்
அதற்கு ஒத்து ஊதிய பெரும் பெரும் ஊடகங்களும் ஜனநாயக உலகே வெட்கி தலை குனியவேண்டிய அளவு பித்தலாட்டங்கள் நிறைந்தவை!
இது பற்றி நான் முன்பு எழுதிய ஒரு பதிவை இங்கு மீள் பதிவு செய்கிறேன்
மீள்பதிவு  : October 25, 2020
ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கையை அவரின் அரசியல் கோணத்தில் இருந்துதான் பார்க்கவேண்டும் என்ற நியதி கிடையாது .
பல  அரசியல்வாதிகளுக்கு அரசியலுக்கு அப்பால் பல கோணங்களும்  உண்டு . அண்ணா  கலைஞர் போன்றவர்கள் கலை  இலக்கியம் நாடகம் சினிமா போன்ற பலதுறைகளில்   பெரும் ஆளுமை உள்ளவர்கள்
எம்ஜியார் கூட ஒரு வெற்றிகரமான நடிகர் என்பதையும் தாண்டி அவர்  ஒரு நல்ல திரைப்பட இயக்குனராகும். '

பூதாகரமாகும் இசையா? மொழியா? : மொரிஷியஸில் இளையராஜா

 மின்னம்பலம் -  Selvam :  கடந்த ஒரு வாரமாக கோலிவுட் வட்டாரத்தில் வைரமுத்து – இளையராஜா பிரச்சனை பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற படிக்காத பக்கங்கள் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, “ஒரு பாடலில், இசை பெரிதா, மொழி பெரிதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது.
இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது மொழி. மொழி எவ்வளவு பெரிதோ, அவ்வளவு பெரிது இசை. இரண்டும் கூடினால்தான் அதற்குப் பாட்டு என்று பொருள். சில நேரங்களில், இசையை விட மொழி சிறந்ததாகவும், திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப் புரிந்து கொண்டவன் ஞானி. புரிந்துகொள்ளாதவன் அஞ்ஞானி” என்று பேசியிருந்தார்.

பாம்பு கடித்தவரை கங்கை நதியில் கட்டி போட்டு வைத்த மக்கள்.. உ.பி.யில் மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்

The body of a snake bite victim was kept tied in the river of Ganga but did not come alive

 tamil.oneindia.com -  Velmurugan P :  லக்னோ: பாம்பு கடித்தவரின் உடலை, ஓடும் கங்கை நீரில் வைத்தால் விஷம் போய்விடும் என சிலர் கூறிய மூடநம்பிக்கையை நம்பிய குடும்பத்தினர்,
கங்கை ஆற்றில் இளைஞனின் உடலை கயிற்றால் கட்டி வைத்திருந்தனர்.. ஆனால் உயிருடன் அவர் திரும்பவில்லை..
மாறாக விஷம் ஏறி இறந்து போனார். மூடநம்பிக்கை உத்தரப்பிரதேசத்தில் உயிரையே பறித்துள்ளது.

திருமாவளவன் : வாக்கு இயந்திர குளறுபடி '11 நாட்கள் கழித்து வெளியான தகவல் சந்தேகத்தை எழுப்புகிறது' - திருமாவளவன் பேட்டி

 nakkheeran.in :   '11 நாட்கள் கழித்து வெளியான தகவல் சந்தேகத்தை எழுப்புகிறது' - திருமாவளவன் பேட்டி
வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு வேலை நடைபெறவில்லை என உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என விசிக தலைவர்  தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில்,
''வாக்குப்பதிவு தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடுவதில் தொடர்ந்து குளறுபடி செய்து வருகிறது.
வாக்குப்பதிவான நாளன்று 7 மணி அளவில் வெளியிடப்பட்ட சதவீதமும் பிறகு சில மணி நேரம் கழித்து வெளியிடப்பட்ட வாக்குப்பதிவு சதவீதமும் நிறைய இடைவெளி கொண்டிருந்தது.
அரசியல் கட்சிகள் இதுதொடர்பாக தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

புதன், 1 மே, 2024

நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை – ஆளுநர் பெயர் அடிபட்ட வழக்கின் விசாரணையில் என்ன நடந்தது?

BBC Tamil :  கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 2.42 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
நிர்மலா தேவி மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டிருந்தது. ஐந்து வழக்குகளிலும் அவர் குற்றவாளி என விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் என்ன நடந்தது? அதன் முழு பின்னணி என்ன?
நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த 2018-ஆம் ஆண்டு, துணைப் பேராசிரியை நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய மூன்று பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

செவ்வாய், 30 ஏப்ரல், 2024

பாலியல் வீடியோ -தேவ கௌடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பி ஓடிவிட்டார்

மாலை மலர் : பெங்களூரு கர்நாடக மாநிலம் ஹூப்ளி தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதற்கிடையே, அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்த ஆபாச வீடியோ குறித்து விசாரணை நடத்த கர்நாடக அரசு சிறப்பு விசாரணை குழுவை நியமித்து உத்தரவிட்டது. அவர்கள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரேவண்ணாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என மூத்த நிர்வாகிகள், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இன்று மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் குமாரசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை இந்த விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் பா.ஜ.க.வின் கைக்கூலிகள் - ஒய்.எஸ்.சர்மிளா சாடல்

 மாலை மலர்  :  அமராவதி   : ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அங்கு 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அங்கு தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.
ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க-தெலுங்கு தேசம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவரும், ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா நேற்று காக்கிநாடாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

திங்கள், 29 ஏப்ரல், 2024

பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி .. தீர்ப்பு விபரங்கள் நாளை .. சிறையில் அடைக்கப்பட்டார்

;hindutamil.in : பேராசிரியர் நிர்மலா தேவி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு - மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக புகார்
விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக பேராசிரியர் நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேர் மீதான வழக்கில் இன்று(ஏப். 29) தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் சரவணபாண்டியன். நகராட்சி ஒப்பந்ததாரர். இவரது மனைவி நிர்மலா தேவி (52). அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணித உதவி பேராசிரியர்.
இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கூறி, தவறாக வழிநடத்தியதாக 2018 மே மாதம் ஆடியோ ஒன்று வைரலானது.

சிட்னியில் அல்லாவின் படைவீரர்கள் கொலை செய்யவும் உயிரிழக்கவும் தயாராகயிருந்தனர் – அவுஸ்திரேலிய காவல்துறை

வீரகேசரி : சிட்னியில் கைதுசெய்யப்பட்ட அல்லாவின் படைவீரர்கள் பதின்மவயதினர் கொலை செய்யவும் உயிரிழக்கவும் தயாராகயிருந்தனர் – அவுஸ்திரேலிய காவல்துறை
சிட்னியில் சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினர் சிட்னி தேவாலய தாக்குதலின் பின்னர் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டு பலரை கொலை செய்துவிட்டு உயிரிழக்க தயாராகயிருந்தனர் என அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது ஏழு பதின்மவயதினர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில் ஆறுபேர் சிட்னி தேவலாயத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞனின் சகாக்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகம் 200 க்கும் மேற்பட்ட பெண்களின் 2700 பாலியல் விடியோக்கள்- பாஜக கூட்டணி JDS MPயின் ஆபாசம் அம்பலம்

 Vasu Sumathi :  பிரஜ்வால் ரேவண்ணா! இவர் முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் பேரன்!   ஹசன் தொகுதியின் தற்போதைய JDS MP. மீண்டும் போட்டியிடுகிறான்.
தற்போது நடந்த கொடுமை 500 பொள்ளாச்சிக்கு சமம்.  
200 க்கும் மேற்பட்ட பெண்களாம். 2700 விடியோக்களாம். இவைகள் பல பென் டிரைவ்களில் ஹசன் தொகுதியில் தேர்தலுக்கு முன் நாள் வலம் வந்திருக்கிறது.
திட்டமிட்டு பரப்பப்பட்ட ஒன்றே என்று தோன்றுகிறது.  
இது பல பேர் கைகளுக்கு மாறி, பார்த்தவர்கள் அத்தனை பேருக்கும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. காரணம் அதில் இருந்த பெண்கள் -
12 JDS கட்சிகாரர்கள், 2 பாஜக பெண்கள்,
ஒரு மிக உயர் அரசு அதிகாரியின் மனைவி ,
அரசு ஊழியர்கள், குடும்ப பெண்கள், 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், தொழில் முனைவோர்கள், வேலைகாரியை கூட விட்டு வைக்கவில்லையாம்.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

தர்மபுரி... வன்னியர் ஓட்டு யாருக்கு? தலித் ஓட்டு யாருக்கு? மற்றவர்களின் ஓட்டு யாருக்கு? ரகசிய விவரம்!


மின்னம்பலம் -Aara : ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில்… ஸ்டார் தொகுதிகளை தேர்ந்தெடுத்து தேர்தலுக்கு பிறகான வெற்றி வாய்ப்பு நிலவரம் பற்றி ஆராய்ந்து வருகிறோம்.
இந்த வரிசையில் முதலில் கோவை தொகுதி பற்றி பார்த்தோம். இப்போது அடுத்த தொகுதியாக தர்மபுரி…
பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி  தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டார். திமுக சார்பில் வழக்கறிஞர் ஆ. மணி போட்டியிட்டார். அதிமுக சார்பில்  அசோகன் போட்டியிட்டார், நாம் தமிழர் சார்பில்  அபிநயா பொன்னிவளவன் போட்டியிட்டார்.

குஜராத் அடுத்தடுத்து சிக்கிய போதைப் பொருட்கள்! போதைப்பொருள் கடத்தல்களின் தலை நகரமாகிறது குஜராத்

 nakkheeran.in : அடுத்தடுத்து சிக்கிய போதைப் பொருட்கள்; பரபரப்பில் குஜராத்
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு,
மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மோடி : இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள்

 மாலை மலர் :  பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் உள்ள கோலாபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவியை சுழற்சி முறையில் வழங்க முடிவு செய்துள்ளது. துணை முதல்வராக இருக்கும் நபரிடம் 2.5 ஆண்டுகள் கழித்து முதல்வர் பதவியை வழங்க திட்டமிட்டுள்ளது. சத்தீஸ்கர் மற்றம் ராஜஸ்தானில் இதே ஏற்பாட்டை செய்திருந்தனர்.
கர்நாடகா மாநிலத்தின் மாடலான ஓபிசி இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களை சேர்த்ததை மற்ற இடங்களிலும் நீட்டிக்க காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சமூக நீதியை கொலை செய்ய சபதம் செய்துள்ளது.

Hunzaz Tribes 60 வயதில் அழகு…! 90 வயதிலும் தாய்மை…! ஹன்ஜா பழங்குடியினரின் விசித்திரம்


BBC Tamil ; : இந்த பள்ளத்தாக்கின் மலைகளின் அழகைக் காண உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள்.
இந்த பள்ளத்தாக்கில் ‘ஹன்ஜா’ சமூகத்தினர் வாழ்கின்றனர். எப்போதும் இளமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று எல்லோரும் கனவு காண்கிறார்கள்.
அதற்கு நீங்கள் ‘ஹன்சா பள்ளத்தாக்கில்’ பிறந்திருந்தால் உங்கள் கனவும் நனவாகும். ஆனால் அது பாகிஸ்தானில் உள்ளது.
பாகிஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஹன்சா பள்ளத்தாக்கும் இடம்பெற்று உள்ளது.

சனி, 27 ஏப்ரல், 2024

British மன்னர் சார்லஸின் உடல்நிலை கவலைக்கிடம்! .. தயாராகும் இறுதிச்சடங்கு திட்டங்கள்!

 tamil.samayam.com - பஹன்யா ராமமூர்த்தி : மோசமாகும் மன்னர் சார்லஸின் உடல்நிலை.. தயாராகும் 'ஆபரேஷன் மெனாய் பாலம்' இறுதிச்சடங்கு திட்டங்கள்!
இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருவதால் அவருடைய இறுதிச்சடங்கு குறித்த திட்டங்கள் நாளுக்கு நாள் புதுப்பிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மன்னரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் ஆபரேஷன மெனாய் பாலம் என்ற மறைமுக பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இலங்கை Chirch குண்டுத்தாக்குதலின் பின்னணியில் மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் (RAW) – விமல் வீரவன்ச

Shri Ajit Kumar Doval (@iam_ajitdoval ...
Ajith doval
21st June as Canada Genocide Day ...
wimal weerawansa

வீரகேசரி: இலங்கை சேர்ச் குண்டுத்தாக்குதலின் பின்னணியில் மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் – விமல் வீரவன்ச
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,
இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? இந்த தாக்குதலால் இலங்கை தேர்தலில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை,இந்திய தேர்தலிலேயே பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன .
எதிர்காலத்தில் தாக்குதல்கள் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச தெரிவித்தார்.

நடிகை ருக்மணி தேவி - சிங்கள திரையுலகின் டெய்சி ராசம்மா டேனியல்ஸ் (ருக்மணி தேவி) நுவரெலியா,

May be a black-and-white image of 6 people and people smiling

Pathmanathan Mahadevah :  டெய்சி ராசம்மா டேனியல்ஸ் (ருக்மணி தேவி) நுவரெலியா, ரம்பொட கிராமத்தில் 1923 ஜனவரி 15 அன்று கொழும்புச் செட்டி கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார்.  ஐந்து பெண்களில் இரண்டாவது பெண், டெய்சியின் தந்தை ஜான் டேனியல் ஒரு தோட்டக்காரர், மற்றும் அவரது தாயார் பெலன் ரோஸ் ஒரு ஆசிரியராக இருந்தார்.
 அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை எண்பத்து நான்கு.  ருக்மணி தனது கணவர் எடி ஜெயமான்னவுடன் இணைந்து நடித்த படங்களில் “கெளஹ ஹண்ட” ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்ற படமாக அறியலாம்.  சீரியலதா (குஸ்டினா அல்லது ஸ்ரீலதா), தெய்வ யோகா (ஷீலா தாஸ்கோன், பெமிலா பிசாவா), கணவன் மனைவி தெய்வம் (சந்திரா), ஸ்பிரிட் அபோவ் (எமிலி) மற்றும் காட் வேர் ஆர் யூ (மரியா) ஆகியவை வேறு சில பிரபலமான படங்கள்.  மேலும் அவர் பிரேமாவாக நடித்த “நலகனன” திரைப்படம் இலங்கை கலாசாரத்திற்கு ஏற்றாற்போல் அவரது உடை கவர்ச்சியாக இருப்பதாகக் கருதி, தணிக்கை செய்யப்பட்டது.

யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது

 ilakkiyainfo.com  : தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

3 இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு - (ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம்)

 nakkheeran.in : இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியங்காவை எதிர்த்து போட்டியிட வருண் காந்தி மறுப்பு

 மாலைமலர் : புதுடெல்லி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் தொகுதியாகும்.
காங்கிரஸ் தலைவர் சோனியா அந்த தொகுதியில் இருந்துதான் பாராளுமன்றத்துக்கு தேர்வானார். இந்த தடவை அந்த தொகுதியில் பிரியங்காவை போட்டியிட வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காகவே சோனியா அங்கு போட்டியிடுவதை தவிர்த்து மேல்சபை எம்.பி.யாகி இருக்கிறார்.
முதன் முதலாக தேர்தல் களத்துக்கு வரும் பிரியங்காவுக்கு முதல் தேர்தலிலேயே நெருக்கடி கொடுத்து தோல்வியை பெரியதாக கொடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவும் தீவிரமாகி உள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இது தொடர்பாக பல தடவை ஆய்வு செய்தனர்.

யாழ்ப்பாண தேசவழமைச் சட்டமும் , வெள்ளாளியமும்! அருண் சித்தார்த்

 Arun Siddharth : தேசவழமைச் சட்டமும் , வெள்ளாளியமும்!
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய வடமாகாணத்துக்கு மட்டும் செல்லுபடியாகும் பிராந்தியச் சட்டமான தேசவழமைச்சட்டம் 12 வெள்ளாள முதலியார்களின் பரிந்துரையின் பேரில் இலங்கையின் அன்றைய ஆட்சியாளர்களான ஒல்லாந்தர்களினால் 1707 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.
இந்தச் சட்டம் அன்று 9 சரத்துகளாக வகுக்கப்பட்டது. அதில் 8 ஆவது சரத்து அடிமைகள் பற்றிய சட்டமாக இருந்தது. அந்த 8 ஆவது சரத்து மேலும் 8 பிரிவுகளாக அடிமை என்பவர்கள் யார் யார் ? என்னென்ன சாதியினர் அடிமைகளாக வரையறுக்கப்பட்டவர்கள் ? அவர்களுடைய கடமைகள் என்ன? அவர்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என உபசட்டங்களை விரிவாக வியாக்கியானம் செய்கின்றது.
அந்த 8 ஆவது பிரிவு ஆங்கிலத்தில் இவ்வாறு ஆரம்பிக்கின்றது.
The Thesawalamai or The Laws And Customs Of The Malabar Of Jaffna.
Section VIII Of The Male And Female Slaves.
1. Different classes of Slaves

மோடிக்கு எத்தனை சீட் கிடைக்கும்? – ஸ்டாலின் கணிப்பு! (100 to 150)

 மின்னம்பலம் Aara தமிழ்நாடு, புதுச்சேரியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் தமிழக மாநில தலைவர் செல்வப் பெருந்தகையோடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த க்ரூப் போட்டோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அதை பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், திமுக வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்கள் உள்ளிட்டோர் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து வருகிறார்கள்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!

Producer Gnanavel Raja s house maid commits suicidal attempt

 tamil.oneindia.com  - Vishnupriya R  : சென்னை: தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் வீட்டு பணிப்பெண், அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞானவேல்ராஜா , சூர்யா, கார்த்தியின் படங்களை தயாரித்து வந்தார். அவர் ஸ்டூடியோ கிரீன், ஆத்னா ஆர்ட்ஸ் என்ற இரு ஸ்டூடியோக்களை வைத்துள்ளார். இவருக்கு மனைவி நேகா.
Producer Gnanavel Raja s house maid commits suicidal attempt

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் கோட்டா!:விசேட அறிக்கை வெளியீடு

ilakkiyainfo.com : பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் கோட்டா!:விசேட அறிக்கை வெளியீடு
-ஆணைக்குழுஅறிக்கை வெளியான பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ளவில்லை என தெரிவிப்பு
1. பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டஇரு தரப்புகள் குறித்த உண்மைகளை கர்தினால் மறைக்கின்றார் அல்லது வெளிப்படையாக தவிர்க்கின்றார்
2. சிஐடி அதிகாரியை விசாரணைகளை சீர் குலைப்பதற்காக நான் பதவி நீக்கவில்லை
3. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இஸ்லாமிய தீவிரவாதிகளே மேற்கொண்டனர்

வியாழன், 25 ஏப்ரல், 2024

திமுகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி?

 மின்னம்பலம் - Aara  :அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்து ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன், இபிஎஸ் – ஓபிஎஸ், ஓபிஎஸ் என்று தொடர்ந்து முகாம் மாறிய பெங்களூரு புகழேந்தி விரைவில் திமுகவில் இணைய இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்தவர் பெங்களூரு புகழேந்தி. பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கு விவகாரங்களை கவனித்துக் கொண்டிருந்தார். இதன் மூலம் சசிகலாவிடமும் ஜெயலலிதாவிடம் நல்ல நெருக்கத்தை பெற்றிருந்தார்.

இளையராஜாவுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!

 Ada derana : : ”பாடல் கேசட்டுகள், சிடி-க்கள் விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்குச் சொந்தம்?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசைத்தட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன.
ஆனால், ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசைத்தட்டு நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

 nakkheeran.in : ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி,
''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ்.
இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா?
இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?
பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தார்!

hirunews.lk : ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்!
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட அழைப்பின் பேரில், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்படி, 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் ஈரான் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.

புதன், 24 ஏப்ரல், 2024

திரைப்பாடல்களுக்கு கவிஞர்களும் உரிமை கோரினால் என்னவாகும்? இளையராஜாவிற்கு நீதிமன்றம் கேள்வி!

 மின்னம்பலம் - Kavi  :  திரைப்பாடல்களுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும்? இளையராஜா பாடல்கள் வழக்கில் நீதிமன்றம் கேள்வி!
இளையராஜாவின் பாடல்கள் தொடர்பான வழக்கில் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இளையராஜா பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

ஸ்டாலின் “சூறாவளி”.. வட இந்திய மாநிலங்களில் ரெடி ஆகிறது dmk ஷெட்யூல்! பலே பிளான்!

 tamil.oneindia.com - Vignesh Selvaraj  :  மீண்டும் ஸ்டாலின் “சூறாவளி”.. வடக்கிலும் கால் பதிக்கும் திமுக.. ரெடி ஆகிறது ஷெட்யூல்! பலே பிளான்!
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில்,'இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வட மாநிலங்களுக்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 64 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

மோடி: கர்நாடகாவை போல் இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் இடஒதுக்கீடு கொடுக்கும்!

 மாலை மலர் :  கர்நாடகாவில் ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை கடந்தாண்டு அம்மாநில பாஜக அரசு ரத்து செய்தது.
வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஓபிசி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அந்த ஒதுக்கீடு தலா 2 சதவீதம் என்ற வகையில் வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகாவில், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது.

அனைத்து பேருந்துகளில் தானியங்கி கதவுகள் : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

 மின்னம்பலம் -  indhu :  அனைத்து பேருந்துகளில் தானியங்கி கதவுகள் : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன? என பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஏப்ரல் 23) உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் தங்களது கால்களை தரையில் தேய்த்தபடியும் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மற்றும் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

திமுகவின் மத்திய அமைச்சர்கள் யார் யார்? ஸ்டாலின் நடத்திய முக்கிய ஆலோசனை!

7 பேர் இன் படமாக இருக்கக்கூடும்

 மின்னம்பலம் - Aara :   அதிமுக அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை கூட்டணிக் கட்சியினர், திமுக அமைச்சர்கள், வேட்பாளர்கள் சந்தித்த படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
“19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், அதன் பிறகு திமுகவின் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள்.
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து கடுமையான தொடர் தேர்தல் பிரச்சாரம் செய்ததற்கு நன்றி தெரிவித்தார்கள்.

சூரத்தில் நடந்தது பேரமா? போட்டியில்லாமல் பாஜக வென்றது எப்படி?

minnambalam.com - vivekanandhan : குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தை அடுத்த இரண்டாவது மிகப் பெரிய மாநகரம் சூரத் ஆகும்.
அப்படிப்பட்ட முக்கியமான சூரத் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
 இது நாடு முழுக்க பரபரப்பான விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.
காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி தாக்கல் செய்த வேட்புமனுவில், அவரை வேட்பாளராக முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகளில் குளறுபடி இருக்கிறது என்று சொல்லி தேர்தல் அலுவலர் அவரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்தார்.
நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவில் முன்மொழிந்துள்ள  மூன்று பேரும் மனு பரிசீலனையின்போது, நாங்கள் இந்த கையெழுத்தை போடவில்லை என்று மறுத்துவிட்டதாகச் சொல்லி தேர்தல் அலுவலர்  வேட்புமனுவை ரத்து  செய்திருக்கிறார்.

PM மோடியின் வெறுப்பு பேச்சுக்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை! ஒரே நாளில் 17,400 பேர்

May be an image of 1 person and text that says 'COMMUNAL POLITICS Over 17,400 citizens write to EC seeking action against PM Narendra Modi for hate speech Scroll Staff 5 hours ago Updated 42 minutes ago f'

Vasu Sumathi  :  நேற்று ராஜஸ்தானில், இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு கருத்துகளை பரப்பிய மோடியை சமூக வலைத்தளங்களிலும், பத்திரிக்கைகளிலும் மக்கள் வச்சு வெளுத்து விட்டார்கள்…!
ஒரே நாளில் 17,400 பேர், மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஈமெயில் அனுப்பியுள்ளார்கள்.
காங்கிரஸ் தரப்பில் அபிஷேக் சிங்வி உட்பட ஒரு குழு நேரில் சென்று 16 விதிமீறல்கள் அடங்கிய புகாரை இன்று சமர்ப்பித்தனர்.
மோடியின் வெறுப்பு பேச்சு, பாஜகவின் தேர்தல் வெற்றியை வெகுவாக பாதிக்கும் என்று பல கருத்து கணிப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் உண்மையிலேயே பயந்த மோடி, இன்று துளியும் வெட்கமில்லாமல் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அப்படியே ஒரு அந்தர்பல்டி அடித்தார்.
நேற்று இஸ்லாமியர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அழைத்துவிட்டு இன்று இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று வாய் கூசாமல் சொல்லுகிறார்.