சனி, 30 ஜூன், 2018

ஆந்திரா மாணவி பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டிய சக மாணவர்கள்: பிறந்தாள் விழாவில்

tamilthehindu :ஆந்திராவில் பொறியியல் கல்லூரி பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய மாணவியை சக மாணவர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவரின் பிறந்த நாளையொட்டி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இதில் அந்த மாணவர் படிக்கும் கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அப்போது 22 வயதான ஜீனியர் மாணவி ஒருவரை சீனியர் மாணவர்கள் இருவர் குளிர்பானாத்தில் மயக்க மருந்தை கலந்து கொண்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை வீடியோ எடுத்த அந்த மாணவர்கள் பின்னர் மாணவியை விடுதியில் கொண்டு போய் விட்டனர். பின்னர் அந்த வீடியோ காட்சியை காட்டி மாணவியை மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். கல்லூரி முதல்வர் மாணவர்களை கண்டித்ததுடன் விஷயத்தை முடித்துக் கொண்டார். கல்லூரி நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டதால் மாணவியின் சார்பிலும் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. நடந்த சம்பவங்களை மாணவியும் மறந்து விட்டு தனது படிப்பில் கவனம் செலுத்தினார்.

நிக்ஹா ஹலாலா தடைசெய்யப்படுகிறது ... மணமுறிவு பெற்ற பெண் மீண்டும் கணவனோடு சேர வேறு ஒருவரோடு ...

இஸ்லாமியர்களின் பலதார மணமுறையும் சட்ட விரோதமாகிறது!மின்னம்பலம்: இஸ்லாமியரின் மூன்று முறை தலாக் கூறி விவாகாரத்து செய்யும் முறையைச் சட்ட விரோதமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதைப் போன்று நிக்ஹா ஹலாலா முறையையும் பலதார மணமுறையையும் சட்ட விரோதமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது
இஸ்லாமியரின் மதப்படி, மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெற முடியும். மத்திய அரசு, தலாக் முறை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி அதைக் குற்றச்செயலாக்குவதற்கான மசோதாவைக் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது. ஆனால் அது மாநிலங்களவையில் கடுமையான எதிர்ப்புக்குள்ளானதால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது இஸ்லாமியரின் இன்னொரு முறையான நிக்ஹா ஹலாலா எனப்படும் பலதார மணமுறையையும் ரத்து செய்து அதையும் சட்டவிரோதமாக்க முயற்சித்துவருகிறது.

திருவண்ணாமலையில் நிர்வாண யாகம் நடத்திய சாமியார்

அவத்தூதா நித்யா அன்கி ஹோத்ரி அட்ட யோகிஸ்வர மௌனி திகம்பரி ஷட்டகோபி என்பது இந்த நிர்வாண சாமியாரின் பெயர் 
Tiruvannamalaiராஜ்ப்ரியன்
நக்கீரன்:  திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் கடந்த ஜூன் 28ந் தேதி இரவு வலம் வந்துக்கொண்டு இருந்தார்கள். அப்படி வந்த பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது ஒரு நிர்வாண யாகம். கிரிவலப்பாதையில் திருநேர் அண்ணாமலை என்கிற பகுதியில் சந்நியாசிகள் நிறைந்து தங்கியுள்ளனர். அந்த திருநேர் அண்ணாமலை பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இந்த கோயிலுக்கு அருகில் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் ஒரு சாமியார் நிர்வாணமாக அமர்ந்து யாகம் வளர்த்துக்கொண்டு இருந்தார்.
10 பேர் கொண்ட ஒரு குழு சத்தமாக மந்திரங்கள் உச்சரித்துக்கொண்டு இருந்தது.

நாமக்கல் கந்துவட்டி டி.எஸ்.பி.ஈஸ்வரமூர்த்தியை கைது செய்யாமல் விட்ட எடப்பாடி கமிஷன் முதல்வர் .. ரூ.1.60 கோடி கந்துவட்டி கும்பல்

ராசிபுரம் தொழில் அதிபரிடம் ரூ.1.60 கோடி கந்துவட்டி கேட்ட டி.எஸ்.பி. அதிரடி மாற்றம்மாலைமலர் : கந்துவட்டி புகாரில் சிக்கிய டி.எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தி க இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்   நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டி.எஸ்.பி.யாக இருப்பவர் ஈஸ்வரமூர்த்தி. இவர்மீது ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கடந்த ஆண்டு கந்துவட்டி புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருந்ததாவது:-
; ராசிபுரத்தில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வரும் ஈஸ்வரமூர்த்தியை 10 வருடங்களாக தெரியும். நான் கடந்த 25-12-2014 அன்று எனது நிறுவனத்தின் தொழில் அபிவிருத்திக்காக டி.எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தியை அணுகி ரூ.3 லட்சம் கடன் கேட்டேன். அவர் அவரது மனைவி சுமதிக்கு போன் செய்து எனக்கு கடனாக ரூ.3 லட்சம் கொடுக்கும்படி கூறினார். நான் சுமதியிடம் கடனாக ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டேன். அதற்கு ஈடாக கையொப்பம் மட்டும் இட்ட தொகை, தேதி பூர்த்தி செய்யப்படாத காசோலைகள் இரண்டையும், கையொப்பம், கைரேகை மட்டும் பூர்த்தி செய்த தொகை, தேதி பூர்த்தி செய்யப்படாத புரோ நோட் இரண்டிணையும் கொடுத்தேன். கடனுக்கு மாதந்தோறும் ரூ.100-க்கு ரூ.5 வீதம் வட்டி தர வேண்டும் என்று கூறினார்கள்.
ரூ.3 லட்சம் கடன் தொகைக்கு 3 மாதங்கள் முறையாக வட்டி செலுத்தினேன். அப்போது ஈஸ்வர மூர்த்தி, அவரது மனைவி சுமதி, அவர்களது மகன் ரஞ்சி ஆகியோர் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி என்னிடம் தொழிலுக்கு பணம் தேவைப்பட்டால் மேலும் ரூ.10 லட்சம் வேண்டுமானால் வாங்கிக் கொள் என்று கூறினார்கள்.
நானும் பணத்தை கடனாக வாங்கினேன். கடன் தொகை ரூ.13 லட்சத்திற்கு மாதந்தோறும் ரூ.65 ஆயிரம் கொடுத்து வந்தேன்.

சத்யஸ்ரீ ஷர்மிளா ! வழக்குரைஞராகப் பதிவுசெய்த முதல் திருநங்கை

BBC :தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு
செய்துள்ள திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா, இந்தியாவில் வழக்குரைஞராகப் பதிவு செய்யும் முதல் திருநங்கை தாமே என்கிறார். <>ராமநாதபுரத்தை பூர்வீகமாக கொண்ட அவர் சேலத்தில் சட்டம் பயின்றுள்ளார். தமது வழக்குரைஞர் பணியைப் பயன்படுத்தி தனது சமூகத்திற்கு சட்டரீதியான உதவி செய்து அவர்களை முன்னேற்றப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய சத்தியஸ்ரீ ஷர்மிளா தன்னுடைய இலக்கை அடைய கடும் சவால்களை எதிர்கொண்டு வந்ததாக கூறினார்.
''வழக்குரைஞராக வேண்டும் என்பது என நீண்டநாள் கனவு . நான் நீதிபதியாக வேண்டும் என மூத்த நீதிபதிகள் வாழ்த்தியுள்ளனர்.

படு தோல்வியில் முடிந்த மோடியின் பணமதிப்பு சூதாட்டம் - பிபிசி தமிழ்

BBC : விவேக் கவுல் - பொருளியல் வல்லுநர் கணக்கில் வராத பணத்தை
வெளியே கொண்டுவருவதற்கென இந்திய அரசு மேற்கொண்ட 'பண மதிப்பு நீக்க நடவடிக்கை' பலனைத் தரவில்லை என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
'டிமானிடைசேஷன்' என்று ஆங்கிலத்தில் கூறப்பட்ட இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைத் திட்டமாகும்.
இத்திட்டம் ஏன் தோல்வியடைந்தது என்பதை பொருளியல் வல்லுநர் விவேக் கவுல் ஆராய்கிறார்.
கடந்த பத்து மாதமாக பல இந்தியர்கள் இது தொடர்பாகக்
கேட்டுக்கொண்டிருந்த கேள்விகளுக்கு இந்திய ரிசர்வ வங்கியின் ஆண்டறிக்கையின் 195வது பக்கத்தில் பதில் உள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை வெற்றி பெற்றதா, தோல்வியடைந்ததா? ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தின்படி அது ஒரு இதிகாச அளவிலான தோல்வி அடைந்தது என்று சொல்வதே சரி.
செல்லாத நோட்டு நடவடிக்கை: நியாயங்கள், நோக்கங்கள், விளைவுகள்
இந்தியா: அரசியல் சர்ச்சையாக மாறிய ரூபாய் நோட்டு சிக்கல்
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு அறிவித்தது. இப்படி செல்லாததாக ஆக்கப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி ரூபாய்.

மத்திய அரசின் முழுமையான ஆசி இருக்கும் வரைக்கும் இந்த ஆட்சி தொடரும்.

Troll Trousers 2.0 : ஸ்டாலினின் அரசியல்
சேலத்தைச் சார்ந்த ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். எட்டு வழிச் சாலை என்பதை கடுமையாக எதிர்க்கிறவர் அவர். 'கலைஞர் அரசியலில் இருந்திருந்தால் இந்த ஆட்சியை கலைத்திருப்பார்; ஸ்டாலின் விட்டுவிடுகிறார்' என்றார். 'அது எப்படிங்க சாத்தியம்?' என்றேன். 'எப்படியாவது கலைக்கணும்' என்கிறார். சீட்டுக்கட்டா அது? இப்படித்தான் நிறையப் பேர்கள் சொல்கிறார்கள். அப்படியான பிம்பம் உருவாவதைதான் எதிர்கட்சியினரும் கூட விரும்புகிறார்கள். 'அவரளவுக்கு இவர் இல்லை' என்பதான பிம்பம். இதையே மக்களையும் நம்ப வைக்க சில ஊடகங்கள் படாதபாடு படுகின்றன.
ஸ்டாலின் மீது அதிகப்படியான அழுத்தம் உருவாக்கப்படுகிறது. அவர் இருக்கும் இடத்தில் யார் இருந்தாலும் இவ்வளவு அழுத்தத்தில் பதறித்தான் போவார்கள். மத்தியில் வலுவான ஆட்சி அமைந்திருக்கிறது. அவர்கள் தமிழகத்தில் எடப்பாடியின் ஆட்சி வேண்டும் என விரும்புகிறார்கள். மத்திய அரசின் உதவியில்லாமல் ஆட்சியைக் கலைப்பதற்கு எந்த சாத்தியமும் இருப்பதாகத் தெரியவில்லை.

சேலம் 8 வழிச் சாலை – அழிவின் பாதை – 2

Savukku : சேலம் 8 வழி பசுமை விரைவுச் சாலை திட்டத்தை  ஆதரித்து தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியது, “மத்திய அரசின் ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின்படி சென்னை-சேலத்தை இணைக்கும் 277.3கிமீ நீளமுள்ள 8 வழி  பசுமைச் சாலையானது, மும்பை-பூனே மற்றும் டெல்லி-ஆக்ரா அதிவேக சாலைகளைப் போல வளர்ச்சியை ஊக்குவிக்கும்.”
“சென்னை மற்றும் சேலம் இடையே அமையும் 277.3கிமீ நீளமுள்ள 8 வழி  பசுமை விரைவுச் சாலையானது பத்தாயிரம் கோடி மதிப்பீட்டில் அமையும். இந்த திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இன்னும் இரண்டு மாதத்தில் டெண்டர்கள் விடப்படும்” – இவைதான் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் 26 பிப்ரவரி 2018 அன்று  இந்தத் திட்டத்தை அறிவிக்கும்போது சொன்ன வார்த்தைகள்.
ஏற்கனேவே சவுக்கு இணையதளத்தில்  “அழிவின் பாதை” கட்டுரை முதல் பாகத்தில் குறிப்பிட்டது போல, சேலம் 8 வழிச்சாலையானது ஒருபோதும் ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின் ஒருபகுதியாக இருந்திருக்கவில்லை. அதனை நாம் விரிவாகக் காண்போம்.

எட்டு வழிச் சாலைக்கு எதிரான வழக்கு: மத்திய மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

tamilthehindu : சேலம் 8 வழிச்சாலை திட்டம், வனவிலங்குகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு
இல்லாமல் நடக்க ஆய்வுக்குழு அமைக்கவேண்டும் என தொடரப்பட்ட பொது நல வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை என்ற பெயரில் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முயன்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் வனவிலங்குகள், சுற்றுசூழல்பாதிப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட வேண்டும் என பொதுநல வழக்கு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்ரமணியன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
“நிலம் கையகப்படுத்தும் முன் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும், ஏற்கனவே சேலம் முதல் சென்னை இடையிலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துள்ள நிலையில், காடுகளை அழித்து தார் சாலை அமைத்தால் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்படும்” என வழக்கறிஞர் சூரியபிரகாசம் வாதிட்டார்.

மாறன் சகோதரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு! சட்டவிரோத BSNL இணைப்பு வழக்கு

மாறன் சகோதரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு!மின்னம்பலம் : பி.எஸ்.என்.எல் வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் உட்பட ஏழு பேரை விடுவித்ததை எதிர்த்து சி.பி.ஐ. தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கைக் கால தாமதம் ஏற்படுத்தாமல் விரைந்து முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று மாறன் சகோதரர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு இணைப்புகள், சன் தொலைக்காட்சி குழுமத்திற்கு முறைகேடாகப் பயன்படுத்தியதாக கலாநிதிமாறன் மற்றும் தயாநிதிமாறன் உள்ளிட்ட ஏழுபேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஏழு பேரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் பி.எஸ்.என்.எல்.முறைகேடு வழக்கில் இருந்து ஏழு பேரையும் விடுவித்து உத்தரவிட்டது.

அரசு , அரசு உதவி பெறும் பள்ளி 12 மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி...


மின்னம்பலம்: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில் படித்த 12 மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான மருத்துவ கலந்தாய்விற்கான தரவரிசை பட்டியல் நேற்று(ஜூன் 28) வெளியிடப்பட்டது. இதில், அரசு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 1,320 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
1 முதல் 1000 வரையிலான முதல் ஆயிரம் இடங்களில் 4 பேரும், 1001 முதல் 3000 வரை 8 பேரும், 3001 முதல் 5000 வரை 16 பேரும், 5001 முதல் 10000 வரை 76 பேரும், 10001 முதல் 15000 வரை 157 பேரும், 15,001 முதல் 25000 வரை 1,059 பேரும் இடம்பெற்றுள்ளனர். இதில், முதல் 3000 இடங்களில் இடம்பெற்றுள்ள 12 பேருக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது தவிர ஒரு சில மாணவர்களுக்கு இடங்கள் கிடைக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதுபோன்று,சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களே நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். அரசு ஒதுக்கீடு பிரிவின்கீழ் 5,449 பேர் சிபிஎஸ்இ மாணவர்கள் உள்ளனர்.

காட்டுப்பள்ளி துறைமுகத்தை வாங்கிய அதானி

காட்டுப்பள்ளி துறைமுகத்தை வாங்கிய அதானி
மின்னம்பலம்: சென்னைக்கு அருகேயுள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து ஜூன் 28ஆம் தேதி அதானி போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’மரைன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுகத்தின் 97 விழுக்காடு பங்குகளை வாங்க லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தமிட்டுள்ளோம்’ என்று கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு ரூ.1,950 கோடியாகும். இதில் ரூ.1,562 கோடியை அதானி போர்ட்ஸ் செலுத்துகிறது.
இந்தத் துறைமுகம் வட சென்னையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கர்ணன் அதானி, ஸ்க்ரால் ஊடகத்திடம் கூறுகையில், "இந்தத் துறைமுகத்தில் கட்டுமானப் பணிகளை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் 40 மில்லியன் டன் சரக்குகளைக் கூடுதலாக கையாளும் வகையில் துறைமுகத்தை விரிவுபடுத்தவுள்ளோம்" என்றார்.

பேராசிரியை நிர்மலா: சம்பந்தப்பட்ட எல்லோரும் என்னிடம் கெஞ்சினாங்க .. .. நான் என்ன செய்வேன்னு அவங்களுக்கு தெரியும்

மின்னம்பலம் : குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்ட கல்லூரி
பேராசிரியை நிர்மலா தேவிக்கு சோதனை நடைபெற்றது. அவரை பேச வைத்து ஆடியோவை பதிவு செய்தார்கள் அதிகாரிகள். அதன் பிறகு புழல் சிறையில் தற்போது அடைக்கப்பட்டு இருக்கிறார். புழல் சிறையில் உள்ள பெண் அதிகாரிகள் பலரும் நிர்மலா தேவியை அவர் அடைக்கப்பட்டு இருக்கும் அறைக்கு சென்று பார்த்து வந்திருக்கிறார்கள்.
அப்போது அவரிடம் சிலர் பேசியும் இருக்கிறார்கள். எப்படி இவ்வளவு தைரியமா இருக்கே... என்று கூட சிலர் கேட்டார்களாம். அதற்கு நிர்மலா தேவி, ‘போலீஸ் என்னை தேடி வந்தபோது ஒருநாள் முழுக்க நான் வீட்டை திறக்காமல் இருந்தேன் இல்ல... அப்போ என்ன செஞ்சேன்னு நினைச்சீங்க? யாரெல்லாம் இந்த விவகாரத்துல சம்பந்தப்பட்டு இருக்காங்களோ எல்லோருக்கும் பேசினேன். எல்லோருமே என்கிட்ட கெஞ்சினாங்க. அவங்களை மாட்டிவிடாமல் இருக்கச் சொல்லி கேட்டாங்க.
ஜெயிலில் இருந்து எந்த பிரச்னையும் இல்லாமல் வெளியில் கொண்டு வரும் பொறுப்பை அவங்க ஏத்துகிட்டாங்க.
என்னவெல்லாம் நடக்கும் என்பதை வழக்கறிஞர்கள் மூலமாக எனக்கு சொல்லிட்டுதான் இருக்காங்க. அதுபடிதான் நடந்துட்டு இருக்கு. இதுல கொஞ்சம் மாறினாலும் நான் என்ன செய்வேன்னு அவங்களுக்கு தெரியும்..’ என்று சொன்னாராம்.

சிலை கடத்தல் விவகாரத்தில் எச்சை கூஜா சிக்கியுள்ளார் ? அதிர்ச்சியில் ,,

TN Politics Gossip Raj சிலை கடத்தல் தடுப்பு ஐஜி பொன். மாணிக்கவேல் தமிழக அரசு சீறிவருவதன் பின்னணியில் திடுக்கிடும் தகவல் ஒன்று தகவல் வெளியாகி உள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் தம்மை சுதந்திரமாக அரசு செயல்படவிடவில்லை என நீதிமன்றத்தில் பகிரங்க புகார் அளித்தார் ஐஜி பொன் மாணிக்கவேல். தமிழக அரசு வழக்கறிஞருடன் பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்திலேயே மோதினார்.
இந்த மோதல் குறித்து சிலை கடத்தல் தடுப்பு வட்டாரங்களில் நாம் விசாரித்த போது அதிர வைக்கும் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதாவது சிலை கடத்தலின் பின்னணியில் தேசிய கட்சியின் படு முக்கிய பிரமுகர் ஒருவர் இருப்பதை பொன் மாணிக்கவேல் கண்டுபிடித்துள்ளார். தம்மை பொன் மாணிக்கவேல் நெருங்கிவிட்டதை அறிந்து அலறியப் போன அந்த பிரமுகர் அத்தனை அஸ்திரங்களையும் ஏவிக் கொண்டே இருக்கிறாராம்.

வெள்ளி, 29 ஜூன், 2018

துபாய் வேலை- ஓமனில் பாலியல் அடிமையாக விற்பனை- மீட்கப்பட்ட பஞ்சாப் பெண்

tamil.oneindia.com-mathi. ஓமனில் பாலியல் அடிமையாக இருந்த பஞ்சாப் பெண் மீட்பு-
 அமிர்தசரஸ்: ஓமனில் பாலியல் அடிமையாக விற்கப்பட்ட பஞ்சாப் பெண் மீட்கப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 30 பஞ்சாப் பெண்கள் பாலியல் அடிமையாக ஓமனில் சிக்கியிருப்பதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரைச் சேர்ந்த 39 வயது பெண் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு வேலைக்காக துபாய்க்கு அனுப்பப்பட்டார். பின்னர் ஓமனில் பாலியல் அடிமையாக இருந்த நிலையில் அப்பெண் மீட்கப்பட்டார். நாடு திரும்பியுள்ள பெண் அமிர்தசரஸ் காங்கிரஸ் எம்.பி. குர்ஜித்சிங் அஜூலாவை சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அப்பெண் கூறியதாவது:
அமிர்தசரஸில் கடந்த பிப்ரவரி மாதம் ராகுல் என்கிற டிராவல் ஏஜெண்ட்டை சந்தித்தேன். துபாயில் மாதம் ரூ30,000 சம்பளத்துடன் வீட்டு வேலை இருப்பதாக உறுதி அளித்தார்.

ராமசாமி படையாச்சி, சிவாஜி கணேசன் பிறந்த நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்படும்

நக்கீரன்: சுதந்திரபோராட்ட வீரர் ராமசாமி படையாச்சி, நடிகர் சிவாஜி கணேசன்
ஆகியோரது பிறந்த நாட்கள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட அறிவித்ததற்காக  நடிகர் பிரபு அரசுக்கு நன்றி தெரிவித்தார். நடிகர் சிவாஜி கணேசனை தங்கள் குடும்பத்தில் ஒருவராக லட்சக்கணக்கானோர் கருதுகின்றனர் என்று தெரிவித்த பிரபு. நடிகர் சிவாஜி கணேசன் மீது அன்பு வைத்திருக்கும் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

டாக்டர் ராமதாஸ் : எட்டுவழிசாலை இழப்பீடு கிடைக்காது

பசுமைச் சாலைக்கு இழப்பீடு கிடைக்காது : ராமதாஸ்மின்னம்பலம்:  சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தால் கோடிக்கணக்கில் இழப்பீடு கிடைக்கும் எனத் தமிழக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையிலிருந்து  சேலத்திற்கு அமைக்கப்படவுள்ள பசுமைச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கடவுளிடம் மனு கொடுத்தல், தற்கொலை முயற்சி என பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நிலம் கொடுப்பவர்களுக்கு சந்தை மதிப்பைக் காட்டிலும் நான்கு மடங்கு இழப்பீடு உயர்த்தித் தரப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், பசுமைச் சாலைக்கு இழப்பீடு கிடைக்காது என்று பாமக கட்சி நிறுவனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (ஜூன் 29) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரை 136 கி.மீ தொலைவுக்குத் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக 19 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

சர்ஜிகல் ஸ்ட்ரைக் விடியோ போலியானது? கேலி கூத்து என பாக்கிஸ்தான் அறிவிப்பு

சர்ஜிகல் ஸ்டிரைக் வீடியோ: பாக். நிராகரிப்பு!மின்னம்பலம் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து வெளியான வீடியோவை நிராகரித்துள்ளது பாகிஸ்தான் அரசு. இந்தத் தாக்குதல் கற்பனையானது என மீண்டும் கூறியுள்ளது.
2016ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதியன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்தது இந்திய ராணுவம். அப்பகுதியில் 500 மீட்டர் முதல் 3 கிலோமீட்டர் வரை ஊடுருவி, அங்கிருந்த 7 தீவிரவாத முகாம்கள் மற்றும் பதுங்குகுழிகளின் மீது தாக்குதல் நடத்தினர். அடுத்த நாள் அதிகாலை 4 மணி வரை இந்த தாக்குதல் தொடர்ந்தது. இது பற்றிய விவரங்களை, லெப்டினண்ட் ஜெனரல் ரன்வீர் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உரி ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கான பதிலடி இது என்று கூறினார்.
ஆனால், பாகிஸ்தான் அரசு இந்த செய்தியை மறுத்தது.

ஜெயாவின் சிறுதாவூர் பங்களாவில் தீ .... அணைக்க முடியாமல் போராடும் தீயணைப்பு வீரர்கள்

வெப்துனியா : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா
சிறுதாவூர் எலும்புக்கூடு
ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ளது. அவர் முதல்வராக இருந்தபோதும் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் இந்த பங்களாவுக்கு அடிக்கடி வந்து ஓய்வு எடுப்பார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் இந்த பங்களா பெரும்பாலும் பூட்டியே உள்ளது. காவலர்கள் மட்டும் இருப்பார்கள் இந்த நிலையில் நேற்று பங்களாவின் வளாகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பங்களாவை சுற்றி பல ஏக்கர் பரப்பளவில் இருந்த புல் காய்ந்து அதில் தீப்பற்றியுள்ளதாக தெரிகிறது.
தீவிபத்தின்போது காற்று வேகமாக அடித்ததால் இந்த தீ மளமளவென் பல ஏக்கர்களில் பரவியதுஇதுகுறித்து தகவல் அறிந்து சிறுசேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து, தீயை அணைக்கும் பணியிலும் தீ மேலும் பரவி காட்டுத்தீயாக மாறாத வகையிலும் நடவடிக்கை எடுத்தனர். மேலும் முதல்கட்டமாக இந்த தீ, சிறுதாவூர் பங்களாவை தாக்காமல் நடவடிக்கை எடுத்தனர்.( முன்பு சிறுதாவூர் மாளிகையில் மனித எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது தெரிந்ததே_)

ரயிலில் கழிவறை நீரைப் பயன்படுத்தி டீ மற்றும் காப்பி விற்பனை!! - வீடியோ


ரயிலில் விற்கப்படும் டீ மற்றும் காப்பிக்கும் கழிவறை நீரைப் பயன்படுத்தியதாக இணையதளத்தில் வீடியோ ஒன்று நேற்று வைரல் ஆனது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 இது முதல் முறை இல்லை என்றாலும் தற்போது அந்த விற்பனை ஒப்பந்ததாரர் மீது 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துத் தென் மத்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.  வீடியோவில் கழிவறையில் இருந்து டீ மற்றும் காபி கேனை எடுத்து வரும் விற்பனையாளர் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணி தவறு நடைபெற்று இருப்பதாகக் கேள்வி கேட அந்த விற்பனையாளர் டதனை மறுக்கிறார். இது குறித்து ஐஆர்சிடிசி நிர்வாகம் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி விற்பனை ஒப்பந்ததாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தென் மத்திய ரயில்வேஸின் முதன்மை பொது உறவுகள் அதிகாரி உமாஷங்கர் குமார் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நிதி வசூலிப்பதற்காகவே பிளாஸ்டிக் தடை . பொதுமக்கள் அபராதம் செலுத்த கூடாது .

Kathiravan Mumbai : தேர்தல் நிதி வசூலிப்பதற்காகவே
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை .
பொதுமக்கள் அபராதம் செலுத்த கூடாது .
-மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சி தலைவர்
ராஜ் தாக்கரே பேச்சு ....

"மகாராஷ்டிரா அரசு தேர்தல் நிதி திரட்டுவவதற்காகவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டிய ராஜ் தாக்க்கரே,
மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதைப்போலவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு மகாராஷ்டிரா அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது ,தடையை அமல்படுத்துவதற்கு முன்பு பிளாஸ்டிக்கை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து கொடுத்திருக்கவேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியற்காக அபராதம் விதிக்கப்பட்டால் பொது மக்கள் அந்த அபராதத்தொகையை செலுத்தக்கூடாது .

எட்டப்பன் எடப்பாடியின் எட்டுவழிச்சாலை

savukkuonline.com 26 ஜுன் அன்று சட்டப்பேரவையிலே 8 வழிச்சாலையை நியாயப்படுத்திய பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 8 வழிச்சாலை அமைவதால், வாகனங்களின் தேய்மானம் குறையும் என்று பேசினார்.  இதைக் கேட்டதும் இவர் முதல்வரா லாரி கிளினரா என்ற சந்தேகம் எழுந்தது.   ஒரு வளர்ச்சித் திட்டத்தை நியாயப்படுத்தி ஆட்சியாளர்கள் பேசுவது இயல்பு.  ஆனால் தேய்மானம் குறையும் என்ற அளவுக்கு ஒரு முதல்வர் பேசும் அளவுக்கு ஏன் செல்கிறார் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது.
சேலத்துக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை சந்திக்கலாம் என்று முடிவெடுத்து, சக பத்திரிக்கையாளர்கள் இருவரை அழைத்தபோது, அவர்கள் வருகிறேன் என்று வாக்களித்தார்கள்.   26 ஜுன் அன்று, திருவண்ணாமலையில், 8 வழிச் சாலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை காவல்துறை கைது செய்து, செல்போன்களை பறித்து வைத்துக் கொண்டு, பல மணி நேரம் கழித்து விடுவித்த செய்தி வெளியானதும், வருகிறேன் என்று கூறிய அந்த இரண்டு பத்திரிக்கையாளர்களுமே, கடைசி நிமிடத்தில் இந்த கைதுகளை சுட்டிக்காட்டி வர இயலாது என்று கூறியதோடு, என்னையும் செல்ல வேண்டாம் என்று கூறினார்கள்.

மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து 4 நடிகைகள் விலகல் .. மோகன்லால் திலீப் மாபியாவாகி விட்டது மலையாள சினிமா


நடிகர் சங்கத்தில் திலீப் மீண்டும் சேர்ப்பு;  மோகன்லாலுக்கு அதிகரிக்கும் எதிர்ப்புt தினத்தந்தி :நடிகர் சங்கத்தில் திலீப் மீண்டும் சேர்ப்பு நடிகர் சங்க தலைவர் மோகன்லாலுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. திருவனந்தபுரம். கேரள மாநில மலையாள நடிகர்கள் சங்க அம்மாவின் தலைவராக   நடிகரும், எம்.பி.யுமான இன்னசென்ட் இருந்து வந்தார். 17 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கத்தின் தலைவராக இருந்த  இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நடிகை ஒருவர் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்றதால், நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் திலீப் சங்க உறுப்பினராக  சேர்க்கப்பட்டு உள்ளார்.

திருவிழாவில் தீமிதிப்பு .. ஜாதி குழு மோதலில் காயம்

கோயில் திருவிழாவில் தாக்குதல்செ.சல்மான் நக்கீரன் : கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்க சென்றவர்கள் மீது
கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கச் சென்றவர்கள் மீது மற்றொரு கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம், சமயநல்லூர் அருகே மூலக்குறிச்சியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயமடைந்த ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம்
, சமயநல்லூர் அருகிலுள்ள மூலக்குறிச்சி மாரியம்மன் கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கச் சென்ற ஒரு தரப்பு மக்கள் மீது மற்றொரு தரப்பினர்  கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் சாதியை காரணம் காட்டி அடித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஒருவருக்கு தலையிலும் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டு, அவர் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் சிலர் பலத்த காயத்துடன் உள்ளனர்.

டாக்டர் சி.நடேசனார் (1875 - 1937) நீதிக் கட்சியின் முன்னோடி,,, ..

Karthikeyan Balasubramaniam : டாக்டர் சி.நடேசனார் (1875 - 1937) 1875- ல் சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தவரான சி.நடேசனார் மருத்துவம் பயின்றவர். பிராமணரல்லாத மாணவர்களுக்கு விடுதிகளில் இடம் மறுக்கப்பட்ட காலகட்டத்தில், அவர்களுக்காக ' திராவிடர் இல்லம்' விடுதியை 1914- ல் தொடங்கியவர் இவர். அவர்களின் உணவு, உடை, தங்குமிடம் ஆகிய தேவைகளை மட்டுமன்றி, அவர்களின் கல்வி வளர்ச்சிக்குமான செலவுகளையும் ஏற்றவர். இது தவிர, ' சென்னை ஐக்கிய சங்கம்' என்ற அமைப்பையும் நடேசனார் உருவாக்கினார். கல்வி, வேலைவாய்ப்புகளில் பிராமணரல்லாதோர் சமூகம் ஏற்றம் காண, அரசியல் அதிகாரம் மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்த நடேசன் ஏனைய முன்னோடிகளுடன் கைகோத்தன் விளைவே நீதிக் கட்சி. 1923-ல் மதறாஸ் மாகாணச் சட்ட மன்றத்தில் அவர் காலடி எடுத்துவைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் அவாள் மற்றும் தெலுங்கர்கள் கட்டுபாட்டில் இருக்கிறது

Durai Arun : சென்னை உயர் நீதிமன்றத்தில் CISF (Central industrial Security Force) மத்திய தொழிற்பாதுகாப்பு படை பாதுகாப்பு பணி ஏற்ற பிறகு உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி காக்கப்பட வேண்டும்! 
கடைபிடிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை முடக்கப்பட்டு பல்வேறு மாநிலத்த்தை சார்ந்தவர்களும் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள், 
சமூக நீதிக்கான போராட்டங்கள் ஓய்ந்துவிட்டது!!! 
சி.எஸ்.எப் பாதுகாப்பை மீறி வழக்கு இல்லாத வெளியாட்கள் யாரும் நீதிமன்றத்தின் உள்ளே நுழைவது என்பது சாத்தியம் அன்று!!!!! 
சி.எஸ்.எப் பாதுகாப்பு வளையத்தில் உயர் நீதிமன்றம் வருவதால் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் இயங்கிய ஆனந்த பவன் எனும் உணவகத்தை வெளியேற்றினார்கள் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை ஆனால் இரண்டு இடங்களில் தேநீர் கடை நடத்துவதற்கு ஆந்திராவை சார்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது ?!!!!! 
இரண்டு வருடங்களாக ஆந்திராவை சார்ந்தவர்கள் கடை நடத்தி வருகிறார்கள் ..!!!!!!!

பிரகாஷ் ராஜ் : ஒரு போதும் எனது குரலை ஒடுக்க முடியாது! Prakash Raj .. interview English .. Threats From Gauri Lankesh's Killers


கொலைத் திட்டம் போடும் கோழைகளே ஒரு போதும் எனது குரலை ஒடுக்க முடியாது!
சங்-பரிவாரங்களுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி
பெங்களூரு, ஜூன் 28-
சிந்தனையாளரும், மூத்த பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ், கடந்த 2017-ஆம்ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி, பெங்களூருராஜராஜேஸ்வரி நகரிலுள்ள அவரது வீட்டு முன்பே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் கண்டனம் முழங்கினர். நண்பர்என்ற அடிப்படையில், கவுரி லங்கேஷ் மரணம், நடிகர் பிரகாஷ் ராஜையும் கடுமையாகபாதித்தது. அப்போதிருந்து, கவுரியை கொன்று சாய்த்த மதவெறிக்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ் உரக்கக் குரல் எழுப்பி வருகிறார். குறிப்பாக, ஆர்எஸ்எஸ், பாஜக-வின் வெறுப்பரசியலைக் கடுமையாகச் சாடி வருகிறார். கர்நாடகத் தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ் ராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இனி ஏடிஎம்-ல் மாதம் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால்..! வங்கி கணக்கு முடக்கப்படும்..! ரிசர்வ் வங்கியின் கூறுகெட்ட அறிவிப்பு

Natarajan Rajakumar Rajkamal : இனி ஏடிஎம்-ல் 4 முறைக்கு மேல் பணம்
எடுத்தால்..! வங்கி கணக்கு முடக்கப்படும்..! ரிசர்வ் வாங்கி அதிரடி அறிவிப்பு..!!
அப்ப ஏடிஎம்..?!
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் ஏடிஎம்-களிலும், மாதம் 04 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் செலுத்தும் நிலைமை உள்ளது. இந்நிலையில், அடிப்படை வங்கி கணக்குகள் வைத்திருப்பவர்கள், மாதம் 04 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒரு மாதகால அளவுக்கு வங்கி கணக்கை முடக்க கோரி ரிசர்வ் வாங்கி உத்தரவு போட்டுள்ளதாம்.
அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற பெயரில் மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ''ஜன் தன் வங்கி கணக்கு திட்டம்'' அறிமுகம் செய்தது. இந்த வங்கி கணக்குகளை மத்திய அரசின் மானியங்கள் மற்றும் திட்டங்களின் உதவி தொகைகள் இந்த கணக்குகள் மூலம் நேரடியாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜன்தன் வங்கி கணக்குகள் உள்ளிட்ட அடிப்படை வங்கிக் கணக்கில் சில மாற்றங்களை கொண்டு வர ஆர்பிஐ திட்டமிட்டது. அதன்படி, ;;இந்த கணக்குகளில் ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் எந்த வடிவில் பணம் எடுத்தாலும் அந்த வங்கி கணக்கு, அந்த மாத முடியும் வரை முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாம்

மறைந்த காடுவெட்டி குருவை கைவிட்டது காலமா? கட்சியா? ஜாதியா?

Click to see big
Anirutha Brammarayan : சமீபத்தில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் மாவட்டம் மட்டுமல்லாது வட தமிழகம் முழுவதுமே காடுவெட்டி குருவின் கட்டப் பஞ்சாயத்துகள் புகழ் பெற்றவை. அவர் பெயரைச் சொல்லி வசூலிக்கப்படும் தொகைகளும் கப்பங்களும் அனைவரும் அறிந்ததே. பிறகு எப்படி கடனில் சிக்கினார், மருத்துவ தலைமையும் கைவிட்டு விட்டதா என விசாரணையில் இறங்கினோம். கிடைத்த தகவல்கள் பகீர் ரகம்.
காடுவெட்டி ஜெ.குருவின் குடும்பம் கடனில் சிக்கித் தவிப்பதாகவும் கடன் தொல்லை தாங்க முடியாமல் டெம்போ டிராவலர் வேனை உடனடியாக விற்க முடிவு செய்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஏற்கனவே நெற்றிக்கண் போன்ற பத்திரிக்கைகளிலும், பண்ருட்டி வேல்முருகன் பேட்டியிலும் காடுவெட்டி குருவின் குடும்பம் சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் கடும் நெருக்கடியில் இருப்பதாக அரசல் புரசலாக பேசப்பட்டது. தற்போது அது உண்மையென பொதுவெளிக்கு வந்துவிட்டது. அரியலூர்
காடுவெட்டிக்கு உள்ளுரில் ஓர் தளபதி உண்டு. 'வைத்தி' என்று பெயர். உண்மையான அமைதிப்படை அம்மாவாசை. ஆண்டிமடம் கார் ஸ்டேண்டில் 1996ல் கிளினர். ரஜினி ரசிகர் மன்றம், ம.தி.மு.க வழி பயணித்து குருவிடம் சென்று சேர்ந்தார்.

இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் இரு மடங்கானது .. பாஜக ஆட்சியின் அடுத்த சாதனை ...

பாஜக ஆட்சி காலத்தில் இருமுறை 50% அதிகரித்த சுவிஸ் பணம்
Special Correspondent FB Wing :சுவிஸ் நேஷனல் வங்கி ஜூன் 28ம் தேதி வெளியிட்ட ஆண்டுவாரித் தரவுகளின் படி 2017-ல் மொத்தமாக அயல்நாட்டு வாடிக்கையாளர்களின் பணம் 3% அதிகரித்துள்ளது.
அதாவது 1.46 ட்ரில்லியன் அல்லது சுமார் 100 லட்சம் கோடி 2017-ல் மட்டும் டெபாசிட் ஆகியுள்ளது.
வெளிநாட்டிற்குக் கொண்டு சென்று பதுக்கும் கருப்புப் பண நடவடிக்கைகளை மத்திய அரசு கடுமையாக முடக்கி வருவதாகக் கூறப்பட்ட நிலையில் இந்த தரவுகள் ஆச்சரியமூட்டக்கூடியவையாக உள்ளது. சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள பணம் 50% அதிகரித்து, ரூ.7,000 கோடிக்கும் அதிகமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் இருந்ததை விட 2017-ல் நிலமைகள் தலைகீழாகி 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்குகள், அதாவது சுமார் ரூ.7,000 கோடிகளுக்கும் மேல் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் டெபாசிட் ஆகியுள்ளது.
2016-ல் சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் 45% சரிவு கண்டது. இதுதான் மிகப்பெரிய சரிவாகக் கருதப்பட்டு வந்தது.

வியாழன், 28 ஜூன், 2018

தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் வட இந்தியர்கள் . 33.2 சதவீத வட இந்தியர்கள் தமிழகம், கேரளா..

THE HINDU TAMIL:  தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஹிந்தி, வங்காளம், ஓரியா மொழி பேசுவோர்  கடந்த 10 ஆண்டுகளில் அதிகஅளவில் குடியேறியுள்ளனர். அதேசமயம் தமிழகம், கேரளாவைச் சேர்ந்தவர்கள் வட இந்தியாவிற்கு சென்று குடியேறுவது கணிசமாக குறைந்துள்ளது.
அரசு வேலை, தொழில், வர்த்தகம் போன்ற காரணங்களுக்காக தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகஅளவில் வட இந்தியாவில் குடியேறுவது வழக்கம். குறிப்பாக பெருநகரங்களான டெல்லி, மும்பை, அகமதாபாத்தில் தமிழர்களும், கேரள மக்களும் அதிகமாக குடியேறி வந்தனர். இதுமட்டுமின்றி டெல்லியைச் சுற்றியுள்ள நொய்டா, குர்கான் போன்ற நகரங்களிலும் அதிகமானோர் குடியேறி வந்தனர். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது உறுதிப்படுகிறது. ஒவ்வாரு பத்தாண்டில் கணிசமானோர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வட இந்திய மாநிலங்களில் குடியேறியுள்ளனர். தமிழர்கள், கேரள மக்களை தொடர்ந்து கர்நாடகா, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்க அளவில் வட மாநிலங்களில் குடியேறி வந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ் ஆதரவு !

நக்கீரன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ் உள்ளிட்டோரால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இதனால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டு விடுமோ என்கிற அச்சமும் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
Baba Ramdev Anil Agarval Sterlite
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய், ஆஸ்துமா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது தடையை மீறி
பேரணி சென்றதாக அப்பாவி பொதுமக்கள் மீது போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலை ...98 ஏக்கர் விவசாய நிலத்தை பறிக்க மத்தியரசு ... டிபென்ஸ் காரிடார்

டிஃபன்ஸ் காரிடர்:  அரசு கைப்பற்றும் 98 ஏக்கர் விவசாய நிலம்!1996-2001 ஆண்டுகளில் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது நிலமில்லா விவசாயிகளுக்கு பட்டா வழங்கும் திட்டத்தில் இந்த 98 ஏக்கர் நிலத்தையும் அந்த நிலத்தை உழுது பயிர் செய்துவந்த 78 விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் என்ற அளவில் பட்டாப் போட்டுக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இந்த விவசாய நிலப்பட்டா அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அந்த நிலத்தில் வாழ்ந்த 78 பேர் தவிர கூடுதலாக 86 குடும்பத்தினருக்கும் குடியிருந்து வந்த இடத்தில் வீட்டு மனைக்கான பட்டா மட்டும் கொடுத்துள்ளனர்.
மின்னம்பலம்: கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியன்று சென்னை-மகாபலிபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தை என்ற இடத்தில், இந்திய இராணுவ அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த பிரமாண்ட ராணுவ கண்காட்சியில் பேசிய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சேலம்,கோவை, ஓசூர், சென்னை, திருச்சி வழித்தடங்களில் டிஃபென்ஸ் காரிடார் எனப்படும் பாதுகாப்பு வழித்தடம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் ராணுவ தளவாட தொழிற் சாலைகள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதை மேற்கோள் காட்டி, பத்தாயிரம் கோடி முதலீட்டில் சென்னை-சேலம் எட்டுவழி பசுமைப் பாதை என்பது உண்மையில் ராணுவ பயன்பாட்டுக்கான பாதைதான் என்பதை 21.06.2018 அன்று மின்னம்பலம்.காமில் முதன்முதலில் செய்தி வெளியிட்டோம்.
மறுநாள் இதை சுட்டிக்காட்டிப் பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, "இந்த எட்டு வழிச்சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சாலை தான். இந்த சாலையில் பொதுமக்கள் போக்குவரத்துக்கும் பயன்படுத்தலாம், வழியிலுள்ள அனைத்து சாலைகளும் இந்த எட்டுவழி சாலையுடன் இணைக்கப்படும். ராணுவ பயன்பாட்டுக்கான சாலை என்பதை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்." அறிவித்தார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் ஐயும் கொல்வதற்கு திட்டம் தீட்டிய கவுரி லங்கேஷ் கொலைகாரர்கள்

shiyamsundar-  tamiloneindia :பெங்களூர்: பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளிகள் நடிகர் பிரகாஷ்ராஜையும் கொலை செய்ய திட்டமிட்டது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கர்நாடகாவில் ''பத்திரிக்கா" என்ற பெயரில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ். 
 தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தும் அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார். இதனால் அவர் கொல்லப்பட்டார். இது குறித்து பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்து இருந்தார். பிரகாஷ் ராஜ் கருத்து பிரகாஷ் ராஜ் கருத்து இந்த கொலை குறித்து தொடக்கத்தில் இருந்து தைரியமாக பேசியவர்களின் பிரகாஷ்ராஜ் முக்கியமானவர். இந்துத்துவா அமைப்புகள்தான் கொலையை அரங்கேற்றி இருக்கிறது என்று கூறினார். 
இவர் கவுரி லங்கேஷுக்கு நெருங்கிய நண்பர் ஆவார். இவர் மோடி குறித்து தைரியாமாக பேசினார். இந்த கொலை வழக்கில் இந்து யுவ சேனா அமைப்பை சேர்ந்த முக்கியமான நிர்வாகியான கே டி நவீன் குமார் கைது செய்யப்பட்டார். 
கே டி நவீன் குமார் தன்னுடைய கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த கொலையில் பரசுராம் வாக்மோர் என்ற தீவிரவாதியை விஜயபுரா மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். பரசுராமிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், பிரகாஷ்ராஜை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மும்பை.. நொறுங்கி விழுந்த விமானம் - பைலட்டுகள் உள்பட 5 பேர் உயிரழப்பு . குடியிருப்பு பகுதியில்..

மும்பையில் குடியிருப்பு பகுதியில் நொறுங்கி விழுந்த விமானம் - பைலட்டுகள் உள்பட 5 பேர் பலிமகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபர் பகுதியில் இன்று திடீரென சிறிய ரக விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. #MumbaiPlaneCrash மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபர் பகுதியில் உள்ள ஜாக்ருதி கட்டிடத்தின் அருகே திடீரென சிறிய ரக விமானம் இன்று பிற்பகலில் நொறுங்கி விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீயை அணைக்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 2 பைலட்டுகள், 2 எஞ்சினீயர்கள் மற்றும் தரையில் இருந்த நபர் உள்ளிட்ட 5 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பாதிரியார்கள் பாவமன்னிப்பு பாலியல் வல்லுறவு ... கேரளா தேவாலைய பிளாக் மெயில்


தினத்தந்தி :கேரளா அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பாவமன்னிப்பு கேட்க சென்ற
பெண்ணுக்கு 5 பாதிரியார்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயத்தில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்வதற்காகவும், அங்குள்ள பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு அறிக்கையிடுவதற்காகவும் வருவார்கள்.
< திருவல்லா பகுதியை சேர்ந்த ஒரு பெண் இந்த ஆலயத்திற்கு வந்து ஒரு பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு அறிக்கை செய்தார். தான் இப்போது திருமணம் செய்துகொண்டு கணவருடன் வசித்து வருவதாகவும், திருமணத்திற்கு முன்பு தனக்கு ஒரு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தாகவும் கூறி அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

தோழர் டில்லிபாபு கைது ஒரு மோசமான மனித உரிமை மீறல் ...

Chinniah Kasi : தோழர். பாலபாரதி ( Bala Bharathi ) அவர்களின் பதிவில் அரூர்
தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர். டில்லிபாபுவை காவல்துறையினர் கைது செய்தபோது நடந்த மனித உரிமை மீறல்களை கண்டித்திருக்கிறார். இந்த கண்டனத்தின் வாசகங்கள் உள்ளபடியே நெஞ்சை கொதிக்கவைக்கும் வாசகங்கள்..ஒரு எளிய மக்கள் ஊழியனை காவல்துறை நாட்டுமிராண்டிகள் நடத்தியவிதத்தை ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டும்
இதை கண்டிக்கவில்லை எனில், இந்த சமூகத்திற்காக தன்னை அர்பணித்துக்கொண்டுள்ள ஒரு மக்கள் ஊழியனை அவர் வாழ்நாளிலே அவமதிக்கிறோம் என்று பொருள்!
பிரதாபன் ஜெயராமன் :இதோ தோழரின் பதிவு..... "நம் பூர்வீக பழங்குடியின சமூகத்தில்பிறந்து, வறுமைக்கு மத்தியில் கல்விகற்று
அதே வறுமை சமூகத்திலிருந்து
அகற்றப்படவேண்டும் என்பதற்காக மார்க்ஸியத்தை கொள்கையாக ஏற்று
பத்தாண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் மாதம் ஏழாயிரம் ரூபாய் மட்டுமே ஊதியமாகபெற்று

சிலை திருட்டு வழக்கை முடக்க தமிழக அரசு முயற்சி .. ஐ ஜி பொன்மாணிக்கவேல் அதிருப்தி... எச்ச உட்பட சந்தேகம் ?

Vallialagappan Alagappan : சிலை கடத்தல் வழக்கு; தமிழக அரசு
ஒத்துழைப்பதில்லை - ஐஜி. பொன்.மாணிக்கம்
தடைசெய்யப்பட்ட குட்கா கேசை விசாரிச்சா ஆணிவேர் அங்கேதான் போய் முடியுது. கத்தை கத்தையா புது ரூபாய் நோட்டுகள் கேஸ்ல மாட்டுன சேகர்ரெட்டிய விசாரிச்சா ஆணிவேர் அங்கதான் போய் முடியுது. மணல் கொள்ளை கிராணைட் கொள்ளைய விசாரிச்சா அங்கேதான் வேர் போகுது. அட ஜல்ஸா கேஸ் நிர்மலாதேவிய விசாரிச்சா கவர்னருக்கு வலிக்குது.
சிலை திருட்டு வேர் மட்டும் எவனோ கந்தசாமி முனுசாமி கிட்டேயா அந்தவேர் போய் முடியும்? அதுவும் அங்கதான் முடியும். அப்பறம் எப்படி ஒத்துழைப்பு கொடுப்பாங்க?
ஆனா ஒன்னு..... இந்த அரசாங்கத்துகிட்ட இருந்து சம்பளம் வாங்கிட்டு இப்படி தைரியமா ஓப்பனா பேசுனதே பெரிய சந்தோஷம்யா......என்னைக்காவது நீதி கிடைக்கும்ங்கற சின்ன நம்பிக்கை வருதுய்யா.....உங்களப்போல சில அதிகாரிகள்னாலே.......