Lenin கலைஞர் செய்திகள் : முஸ்லிம்கள் திறந்தவெளியில் தொழுகை நடத்துவது பொறுத்துக்கொள்ள முடியாது என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம், குர்கான் நகரில் தொழுகை நடத்துவதற்காக 2018ஆம் ஆண்டே இந்து மற்றும் முஸ்லிம்கள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சில நாட்களாக வலதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் தொழுகை பகுதியில் மாட்டுச் சாணங்களைக் கொட்டி தொழுகைக்கு இடையூறும் செய்துள்ளனர்.
இதையடுத்து சீக்கிய மதத்தினர் தங்களின் கோயில்களில் முஸ்லிம்கள் தொழுகை செய்து கொள்ளலாம் என அறிவித்தனர்.பிறகு முஸ்லிம்கள் அங்குத் தொழுகை செய்தனர். இருப்பினும் குர்கான் பகுதியில் பதற்றமான நிலையே நீடித்து வருகிறது.
சனி, 11 டிசம்பர், 2021
திறந்தவெளியில் தொழுகை நடத்துவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது": ஹரியானா முதல்வர் அறிவிப்பு
நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் ஸ்ரீ ரங்கம் கோயில் நிர்வாகத்தால் துரத்தப்பட்டார்! அர்ச்சகர்களின் இந்துத்வா வெறியாட்டம்
முரளிதரன் காசிவிஸ்வநாதன் - பிபிசி தமிழ் : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்குள் சென்ற பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் கோயிலைவிட்டுத் துரத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.
பரத நாட்டியக் கலைஞரான ஜாகிர் ஹுசைன் டிசம்பர் பத்தாம் தேதி திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பெரும் சத்தமிட்டு, தன்னை கோவிலைவிட்டுத் துரத்தியதாக ஜாகிர் ஹுசைன் தெரிவித்திருக்கிறார்.
டெல்லி போராட்டக் களங்களை காலி செய்து வீட்டிற்கு திரும்பிய விவசாயிகள்
மாலைமலர் : புதுடெல்லியின் எல்லைப்பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மூன்று மாநில விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பினர்.
டெல்லி போராட்டக் களங்களை காலி செய்து வீட்டிற்கு திரும்பிய விவசாயிகள்
சொந்த ஊர்களுக்கு டிராக்டர்களில் செல்லும் விவசாயிகள்
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் சிங்கு, திக்ரி மற்றும் ஹாஜிபூர் எல்லைகளை முற்றுகையிட்டு ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பின் தலைமையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த போராட்டம் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.
திராவிட உணவகம் - தெருவோர ஹோட்டல் ! பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஞாபக மீட்டல்
Rayar A - Oneindia Tamil : மதுரை: தமிழகத்தின் நிதி அமைச்சராக இருந்து வருபவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்போதே 'தி.மு.க வெற்றி பெற்றால் இவர்தான் நிதி அமைச்சராக வருவார்' என்று தேர்தலுக்கு தேர்தலுக்கு முன்பே மக்களால் அறியப்பட்டவர்.
எதிர்பார்த்தபடியே நிதி அமைச்சராக ஆக்கப்பட்டார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். பல உயர் படிப்புகளை படித்தவர். மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றியவர் என்பதால் நாட்டில் மிகச்சிறந்த நிதி அமைச்சராக செயல்படுவார் என்று பிடி.ஆர் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும் 2 நாடுகளில் ஓமிக்ரான் பாதிப்பு...59 நாடுகளில் 2,936 பேருக்கு தொற்று மேலும் 2 நாடுகளில் ஓமிக்ரான் பாதிப்பு...59 நாடுகளில் 2,936 பேருக்கு தொற்று
ஆப்கானில் ”கிட்னி, பெண் குழந்தைகள் விற்பனைக்கு” தலைவிரித்தாடும் உணவுப்பஞ்சம்
BBC : : வரலாறு காணாத உணவுப் பஞ்சத்தில் சிக்கியுள்ள ஆப்கன் மக்கள், வாழ்வாதாரத்துக்காக கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புகளையும், பெண் குழந்தைகளையும் விற்பனை செய்வதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தாலீபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர். அமெரிக்க படைகளின் வெளியேற்றத்துக்குப் பிறகு வெகுடெழுந்த அவர்கள், படிப்படியாக அனைத்து நகரங்களையும் கைப்பற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தனர்.
இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஆட்சி நடத்துவோம் என அறிவித்த அவர்கள், முந்தைய தாலீபான் ஆட்சியில் இருந்ததுபோலவே கடுமையான சட்டங்களை அமல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
வெள்ளி, 10 டிசம்பர், 2021
போராட்டக்காரர்களை மதிக்காத ஆரோவில் நிர்வாகம்; மரங்களை வெட்ட தடை விதித்த பசுமைத் தீர்ப்பாயம்!
கலைஞர் செய்திகள் . ஜனனி : வளர்ச்சி என்ற பேரில் சாலை போன்ற மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள அங்குள்ள மரங்களை வெட்டும் பணி தொடங்கியது. இந்த செயலுக்கு ஆரோவில்லில் உள்ள வெளிநாடு மற்றும் உள்ளூர்வாசிகளிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பின.
புதுச்சேரியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆரோவில் நகரம். இதன் அனைத்து பணிகளும் ஆரோவில் ஃபவுண்டேஷன் என்பதன் மூலமே மேற்கொள்ளப்படும்.
அந்த அமைப்பின் தலைவர் பதவிக் காலம் கடந்த நவம்பருடன் முடிவடைந்ததை அடுத்து புதிய தலைவராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும், நிர்வாகக் குழு உறுப்பினராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை என 8 பேர் நியமிக்கப்பட்டனர்.
5 வருடத்தில் 25 விமான நிலையங்களை காப்பரேட்டுக்களுக்கு அள்ளிக்கோ அள்ளிக்கோ! திருச்சி மதுரை கோவை ...
/tamil.goodreturns. - Prasanna Venkatesh : பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் வளர்ச்சி(????) திட்டத்திற்கான நிதி திரட்டும் பொருட்டு, அரசுக்குப் பெரிய அளவில் லாபம் அளிக்காத மற்றும் பெரிய அளவில் பயன்படுத்த முடியாத சொத்துக்களைத் தேசிய பணமாக்கல் திட்டத்தின் வாயிலாகத் தனியார் நிறுவனங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டு அதற்காக முழு அறிக்கையும் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இதில் முக்கியமாக இந்தியாவில் இருக்கும் 25 விமான நிலையங்களை அடுத்த 5 வருடத்திற்குள் தனியார்மயமாக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது எந்தெந்த விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படுகிறது என்பது குறித்த கேள்விக்குப் பதில் லோக்சபாவில் அளிக்கப்பட்டு உள்ளது.
நகைக்காக தாய் - மகள் வீட்டிற்குள் எரித்து கொலை: கூட்டாளியால் சிக்கிய 2 இலங்கை அகதிகள்
BBC : மண்டபத்தில் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு, ரயில்வே பெண் ஊழியர் மற்றும் அவரது மகளை எரித்து கொன்ற வழக்கில் இலங்கை அகதிகள் இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே ஊழியர் காளியம்மாள் 58. அவரது மகள் பிகாம் பட்டதாரி மணிமேகலை 34. இந்த இருவரது உடல்களும் முற்றிலும் கருகிய நிலையில் உள்புறமாக பூட்டிய குடியிருப்பில் டிசம்பர் 7ம் தேதி காலை கண்டுபிடிக்கப்பட்டது.
காளியம்மாளின் மூத்த மகள் சண்முகபிரியா அளித்த புகாரின் அடிப்படையில் மண்டபம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறவிருந்த காளியம்மாள், மண்டபம் முகாம் முனைக்காடு உமையாள்புரத்தில் புதிய வீடு கட்டி வந்தார்.
ஜெயலலிதா வீட்டு சாவி தீபாவிடம் ஒப்படைப்பு- உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆட்சியர் வழங்கினார்
மாலைமலர் : போயஸ் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்றும் 3 வாரங்களுக்குள் வீட்டு சாவியை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது.
சென்னை:
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகளான அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு போயஸ் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்றும் 3 வாரங்களுக்குள் வீட்டு சாவியை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து சாவியை பெறுவதற்காக தீபா, தீபக் இருவரும் இன்று சென்னை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். வீட்டுச்சாவியை கலெக்டர் விஜயராணி அவர்களிடம் வழங்கினார்.
பிபின் ராவத் என்னிடம் தண்ணீர் கேட்டார்...விபத்தை பார்த்தவரின் சாட்சி..!
dailythanthi.com : ஹெலிகாப்டர் விபத்தின் போது பிபின் ராவத்தை உயிருடன் பார்த்ததாக ஒருவர் கூறுகிறார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தை நேரில் கண்ட சிவக்குமார் என்பவர், விபத்து குறித்தும் பிபின் ராவத் குறித்தும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
சசிகலாவுக்காக அமித் ஷாவிடம் பேசும் ரஜினி? - புயலைக் கிளப்பும் போயஸ் கார்டன் சந்திப்பு!
மின்னம்பலம் : சசிகலா சிறையிலிருந்த போதும், விடுதலையான பிறகும் தினகரனைத் தொடர்புகொண்டு சசிகலாவைப் பற்றி நலம் விசாரித்தவர் ரஜினிகாந்த். கடந்த இரண்டு ஆண்டுக் காலமாக கொரோனா வைரஸ் தொற்று பரவலால் முக்கிய பிரமுகர்கள் யாரையும் ரஜினி நேரடியாகச் சந்திக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த மாதம் அக்டோபர் 25ஆம் தேதி, டெல்லியில் நடைபெற்ற 67ஆவது தேசிய திரைத் துறை விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முன்னணி நடிகரான ரஜினிகாந்துக்குத் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி: பேருந்தில் இருந்து குறவர் குடும்பம் இறக்கிவிடப்பட்டார்கள்
நக்கீரன் - கலிலுல்லா : நாகர்கோவில் அருகே குறவர் குடும்பத்தினரை அரசு பேருந்திலிருந்து நடத்துநர் கிழே இறக்கி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் துர்நாற்றம் வீசுவதாக கூறி மீன்விற்கும் மூதாட்டி ஒருவரை அரசு பேருந்து நடத்துநர் பேருந்திலிருந்து இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அதேபோல ஒரு சம்பவம் நிகழந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குறவர் குடும்பத்தினரை அரசு பேருந்திலிருந்து நடத்துநர் கிழே இறக்கி விட்டு, அவர்களது உடைமைகளையும் தூக்கி வீசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினை விட உதயநிதியின் ஆதரவு தளம் கட்சியில் அதிகரித்து உள்ளதா? சவுக்கு சங்கர்
செல்லபுரம் வள்ளியம்மை : சவுக்கு சங்கர் என்னன்னவோ எல்லாம் கூறுகிறார் தலை சுற்றுகிறது
சில விடயங்கள் உண்மையாக இருக்கலாம் என்று கூட தோன்றுகிறது
குறிப்பாக தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் பாஜகவின் வாக்கு வங்கி பற்றிய கூற்று உதாசீனம் பண்ணி விட முடியாதது என்று தோன்றுகிறது ..
மேலும் கட்சி மட்டத்தில் முதல்வர் ஸ்டாலினை விட உதயநிதியின் ஆதரவு தளம் அதிகரித்து உள்ளதாகவும் கூறுகிறார்.
அரக்கர் கூட்டம் என்று அழைக்கப்படும் குழுவினர் ஆர் எஸ் எஸ் திட்டங்களுக்கு ஏற்ப இயங்குவதாகவும் கூறுகிறார்
இப்படியாக பல பகீர் பிக்ஸர்களை புராஜெக்ட் செய்கிறார்
வியாழன், 9 டிசம்பர், 2021
ஈபிஎஸ்சை நெருங்கும் கத்தி; ஸ்டாலின் கையில் கிடைத்த துருப்புச் சீட்டு
Mageshbabu Jayaram | Samayam Tamil : முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தை தூசு தட்டி விசாரணையை தீவிரப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வருகிறது.
இந்த சூழலில் மாசுக் கட்டுப்பாட்டுத் துறையின் முன்னாள் தலைவர் வெங்கடாச்சலத்தின் தற்கொலை விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் இயக்குநராக இருந்து 2018ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் வெங்கடாச்சலம்.
இவருக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன் உடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாக விளங்கியவர்.
சாட்டை துரைமுருகனுக்கு நீதிமன்றம் சாட்டை ..“முதலமைச்சர் சிறப்பாக வேலை செய்றாரு.. பாராட்டவில்லை என்றாலும் அவதூறு செய்யவேண்டாம்
கலைஞர் செய்திகள் : “ஒரு முதலமைச்சரால் எவ்வளவு முடியுமோ அதைவிட அதிகமாகவே தமிழக முதலமைச்சர் பணியாற்றி வருகிறார். அவரை பாராட்டாவிட்டாலும் அவதூறாகப் பேசுவதைத் தவிர்க்கலாம்.” என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து.
“ஒரு முதலமைச்சரால் எவ்வளவு முடியுமோ அதைவிட அதிகமாகவே தமிழக முதலமைச்சர் பணியாற்றி வருகிறார். அவரை பாராட்டாவிட்டாலும் அவதூறாகப் பேசுவதைத் தவிர்க்கலாம்.” என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சாட்டை துரைமுருகன் என்பவர் யூடியூபில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசி வீடியோ வெளியிட்டார்.
மாரிதாஸ் கைது! 53 A, 505 (2) பிரிவுகளின் கீழ் இரு வழக்குகள்
நேற்று (டிசம்பர் 8) நீலகிரி மாவட்டம் குன்னூரில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் அவர் உட்பட அவரோடு பயணித்த 13 பேரும் உயிரிழந்தனர்.
இந்திய விமானப் படை இதை விபத்து என்று உறுதி செய்திருக்கும் நிலையில் யு ட்யூபர் மாரிதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் இதுபற்றிய கருத்துகளை பதிவு செய்தார்.
முதலாவது பதிவில் திமுக, திமுகவினர் தேச விரோதிகள் என்று பொருள்படி, “திக, திமுக ஆதரவாளர்கள் பலரும் விபத்தில் இராணுவ தளபதி மரணத்தைக் கேலி செய்யும் விதமாகப் பதிவுகள் இடுவதும், சிரிப்பதுமாக எமோஜி போடுவதைக் காண முடிகிறது. ஒவ்வொரு முறையும் இதைச் செய்கிறார்கள். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை” என மாரிதாஸ் குறிப்பிட்டிருந்தார்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருகிறது: வீடு திரும்ப விவசாயிகள் முடிவு
BBC tamil : அரசு தங்கள் கோரிக்கையை நிரைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவோம் என்கிறார் சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் குருநாம் சிங் சதுனி. (வலது)
அரசு தங்கள் கோரிக்கையை நிரைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவோம் என்கிறார் சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் குருநாம் சிங் சதுனி. (வலது)
ஓராண்டுக்கு மேலாக டெல்லிக்கு வரும் சாலைகளை மறித்து நடத்தி வரும் போராட்டத்தை தற்போதைக்கு முடித்துக்கொள்ள விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.
இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தபோதும், நாடாளுமன்றத்தில் அவற்றை முறைப்படி திரும்பப் பெறும் நடைமுறையை நிறைவேற்றும்வரை காத்திருப்போம் என்று டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
வெங்காயம் .. 5000 ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுதும் ஆரோக்கியம் காக்கும் அருமருந்தாக
Devanurpudur DrAnbu Selvan : வெங்காய வேதியியல்!! (மீள்)
கிறித்து பிறப்பதற்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னம் வெங்காயம் நடு ஆசியாவில் தோன்றி உலகம் முழுதும் பரவியதாகக் கருதப்படுகிறது. ஆயினும், பழஞ்சீனாவிலும், எகிப்து, துருக்கி, உரோம் நாடுகளில் வெங்காயம் அதிகளவு பயன்படுத்தப் பட்டிருப்பதற்கான சான்றுகள் இன்றளவும் இருக்கின்றன. எகிப்தியச் சமயச்சடங்குகளில் குருமார்கள் வெங்காயத்தை ஏந்திக்கொள்வது மரபு. வெங்காயத்தின் காரநெடியானது இறந்தவர்களை எழுப்பவைக்கும் ஆற்றலுள்ளது என்ற நம்பிக்கை இருந்ததால், இறந்தவர்களின் உடலங்களைப் பதப்படுத்துகையில் (மம்மிகள்), அவற்றின் கண்களின்மீது வெங்காயம் வைக்கப்பட்டே கட்டப்பட்டிருக்கிறது.
உத்தரபிரதேச காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சமூகநீதி சுயாமாரியாதை .. பிரியங்கா வெளியிட்டார்
லக்னோ, உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2022) சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தொடங்கி விட்டது.
பெண்களை முக்கியமாக வைத்து இந்த தேர்தலை காங்கிரஸ் கட்சி சந்திக்க உள்ளது. அந்தவகையில், பெண்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை கட்சியின் பொதுச்செயலாளரும், மாநில பொறுப்பாளருமான பிரியங்கா ஏற்கனவே வெளியிட்டு வந்தார்.
இதன் தொடர்ச்சியாக பெண்களுக்கான தேர்தல் அறிக்கை ஒன்று தனியாக தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையை பிரியங்கா நேற்று வெளியிட்டார்.
வடநாட்டில் போலி படங்களை காட்டி பாஜக தேர்தல் பிரசாரம்
Chinniah Kasi : போலியான படங்களை பரப்பி புகழ்பாடும் ஆர்எஸ்எஸ் அடிவருடிகள்
8 December 2021 தீக்கதிர்
புதுதில்லி, டிச. 8 - பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்க்கிழமை உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் 9,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங் களைத் தொடங்கி வைத்தார்.
இவற்றுள், ரசாயன உரத் தொழிற்சாலை ஒன்றும் அடக்கம்.
இந்நிலையில், புதிதாகத் திறக்கப்பட்ட ரசாயனத் தொழிற்சாலை என்று சில படங்கள் சமூக வலைதளங் களில் ஆர்எஸ்எஸ் - பாஜக அடிவருடிகளால் பரப்பப் பட்டு, மோடியின் சாதனை யாக புகழ்பாடப்பட்டு வரு கின்றன.
கனகி புராணம் ! 19ம்நூற்றாண்டு : யாழ்ப்பாண காமசூத்திரம்! (ஆறுமுக நாவலரும் கனகியின் வாடிக்கையா?)
Kaala Subramaniam : கனகி புராணம் (19ம்நூற்றாண்டு : யாழ்ப்பாண காமசூத்திரம்.
டாக்டர் கு. மகுடீஸ்வரன்.
(ஆறுமுக நாவலரின் காமரூபம் பற்றியும் இக்கட்டுரையில் ஓரிரு வரிகள் உண்டு.)
இந்தக்கால PornStarகளைப்போல 19ம் நூற்றாண்டில் யாழ் வண்ணார் பண்ணையில் வசித்தவர் பிரசித்தமான கனகி என்னும் கணிகை. இவருடைய வாடிக்கையாளர்களில் ஆறுமுகநாவலரும் அடங்குவார் என்பது கனகிபுராண செய்யுள்களிலிருந்து விளங்கும். முக்காடு போட்டுக்கொண்டு மாறுவேடத்தில் ஆறுமுகநாவலர் வண்ணார் பண்ணை கணிகையர் தெருக்களில் திரிந்தது யாழ்ப்பாண வாய்மொழி வரலாறு அறிந்த உண்மை.
கனகம்மாவின் இலக்கணங்களையும், ஊர் ஊராய் வந்து அவளுடன் நட்புப் பூண்டிருந்தவர்களின் பெயர்களையும், பாடல்களில் ஆங்காங்கு அமைத்துள்ளார் நம் புலவர் சுப்பையனார். அவருடைய ஆதி ஒலைப்பிரதிகள் தொலைந்திருக்கவேண்டும். 19ம் நூற்றாண்டில் கனகி புராணம் வாய்மொழி இலக்கியமாகவே வாழ்ந்தது. பின்வரும் குறிப்பு முக்கியமானது.
ராணுவத்தைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டும்!" - முப்படைகளின் தலைமைத் தளபதி... யார் இந்த பிபின் ராவத்? flashback
பிபின் ராவத் - ஜியா உல் ஹக்
விகடன் : 2019-ம்
ஆண்டு முடிவதற்குள், இந்த முடிவின்மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டுவிட்டது.
இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்,
பிபின் ராவத். ராணுவ தலைமைத் தளபதியாகப் பதவி வகிக்கும் பிபின் ராவத்,
இன்றோடு ஓய்வுபெற்றார். தற்போது முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியில்
இருப்பவர் ஓய்வுபெறும் வயது 65 என சட்டம் இயற்றப்பட்டுள்ளதால், பிபின்
ராவத் இன்னும் 4 ஆண்டுகள், முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருப்பார் என
எதிர்பார்க்கப்படுகிறது.
முப்படைகளின்
தலைமைத் தளபதி என்ற பொறுப்பில் இருப்பவர், ஏதாவது ஒரு படையில் தளபதியாக
இருந்திருக்க வேண்டும் எனவும், அந்தப் பொறுப்பில் வழங்கப்பட்ட அதே சம்பளம்
வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்.
இந்தப் பதவி, நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்டது. கார்கில் போருக்குப்
பின், பாதுகாப்புத்துறையில் செய்யப்படவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து
ஆராய, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அரசால் கே.சுப்ரமணியன் தலைமையில் குழு
அமைக்கப்பட்டது. அந்தக் குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில்,
`முப்படைகளுக்கும் ஒரே தளபதி' உருவாக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
பேருந்தில் இருந்து பெண் இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
newsNews18 Tamil : அரசு பேருந்தில் இருந்து மூதாட்டி இறக்கிவிடப்பட்ட சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழக போக்குவரத்து துறையின் குமரி மாவட்ட துணை இயக்குனர் (இயக்கம் & ஆய்வு) ஜெரோலின் மூதாட்டியை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்தில் இருந்து பெண் பயணி நடத்துனரால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி வாணியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமேரி. மீன் விற்பனை செய்துவரும் இவர் குளச்சல் பேருந்துநிலையத்தில் இருந்து வாணியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியபோது, நாற்றம் அடிப்பதாக கூறி அவரை பேருந்தில் இருந்து நடத்துநர் இறக்கிவிட்டுள்ளார்.
புதன், 8 டிசம்பர், 2021
கண்டமங்கலம் பாலியல் பலாத்காரம் செய்து தாய்- மகள் கொலை வழக்கில் அதிர்ச்சி
மாலைமலர் : தாய்-மகளை கற்பழித்து கொலை செய்த வாலிபரை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்டை போலீசாரையும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டையும் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
விழுப்புரம்: அருகே கண்டமங்கலம் போலீஸ் சரகம் கலித்திராம்பட்டு கண்டச்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி சரோஜா (வயது 75).
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தட்சிணாமூர்த்தி இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து சரோஜா அவரது மூத்த மகள் பூங்காவனம் (55) என்பவருடன் வசித்து வந்தார்.
ஏவிஎம் + விஜயகாந்த் பட இயக்குநர் எம் தியாகராஜன் சாலையோரத்தில் கேட்பாரற்று மரணம்.. கண்டுகொள்ளாத நட்சத்திரங்கள்!
விஜயகாந்தின் 150 ஆவது படமாக ஏவிஎம் தயாரிப்பில் உருவான மாநகர காவல் படத்தின் இயக்குனர் எம் தியாகராஜனின் சாலையோர உயிரிழப்பு திரையுலகின் மற்றொரு கொடூர முகத்தை காட்டியுள்ளது!
கலைஞர் செய்திகள் - Prem Kumar : தமிழ் சினிமாவின் முகவரி என்றால் அது கோடம்பாக்கம்தான்.. அந்த முகவரியால் உச்சாணிக்கொம்பில் ஏறியவர்கள் பலர் என்றால், அதே முகவரியால் முகவரி இல்லாமல் தொலைந்தவர்களும் ஏராளம் உண்டு.
கிராமத்தில் இருந்த வேலை, சொத்து, வசதி வாய்ப்புகளை உதறிவிட்டு சென்னைக்குப் பயணித்த பலரும் இன்று திறைத்துறையில் நிறைந்து கிடக்கின்றனர்.
இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி, பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் மேலும் மனைவி உள்பட 14 பேர் உயிரிழப்பு
தினமலர் : குன்னுார் : குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று(டிச., 8) நடக்கவிருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.47 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.
ராணுவ மையத்தை அடைய 10 நிமிடங்கள் உள்ள சூழ்நிலையில், ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் எனும் பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது , பிற்பகல் 12:40 மணியளவில் கடும் மேகமூட்டமான கால நிலை நிலவியது. காலை முதலே அந்த பகுதியில் பனிமூட்டமான சூழல் நிலவியது.
கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் திருமண ஒளிபரப்பு 100 கோடி .. OTT நிறுவனத்திற்கு ஒப்பந்தம்? செல்போன்களுக்கு தடை ..
கலைஞர் செய்திகள் - Vignesh Selvaraj : பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் கத்ரீனா கைஃப். இவருக்கும் நடிகர் விக்கி கௌஷலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இவர்களது திருமணம் வரும் டிச., 9ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.
விக்கி கௌஷல் - கத்ரீனா கைஃப் திருமணத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தையும் ஒளிபரப்பு செய்யும் உரிமையை, ஒரு OTT நிறுவனத்திற்கு அளித்துள்ளதாகவும் அதற்காக அந்த OTT நிறுவனத்துடன் 100 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக விக்கி கௌஷல், கத்ரீனா கைஃப் திருமணம் நடக்கும் இடத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மிச்சிகன் துப்பாக்கிச்சூடு... 4 பேரைக் கொன்ற மாணவன்... அதிர்ச்சி பின்னணி!
பகல் 12.51 மணிக்கு ஈதன் க்ரம்ப்ளே என்கிற 15 வயது மாணவன் பள்ளியின் கழிப்பறையிலிருந்து வெளிவந்தான். கையில் துப்பாக்கி!
சில நிமிடங்கள் மட்டும்தான். படபடத்தது துப்பாக்கி. தோட்டாக்கள் பறந்தன. 30 தோட்டாக்கள். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பதைபதைத்தனர். காவல்துறைக்கு தொடர்பு கொண்டனர். நூற்றுக்கணக்கான அழைப்புகள். 12.57 மணிதான் ஆகியிருந்தது. காவல்துறை ஈதன் க்ரம்ப்ளேவை கைது செய்தது. நால்வர் கொல்லப்பட்டிருந்தனர். ஆறு பேருக்குக் காயம். அமெரிக்காவில் பள்ளிகளில் நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு புதிதில்லை. ஓயவுமில்லை. எல்லா துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் துப்பாக்கிச் சூடுகள் ஓயவில்லை.
கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ எழிலன் நாகநாதன் தொடர்ந்த வழக்கு: ஜனவரி 3 ஆம் வாரத்தில் விசாரணை
Abdul Muthaleef - Oneindia Tamil : கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ எழிலன் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி மாதம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியுமான டாக்டர் எழிலன் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான விதிமீறல். இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டு மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.
1976 ம் ஆண்டு மொத்தம் 5 முக்கியமான துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதில் கல்வி முக்கியமானது.
காஞ்சி மடத்துக்கு வயது 150 வருடங்கள்தான்- 2500 ஆண்டு பாரம்பரியம் என்ற அண்டப்புழுகுகள் ஆகாசப்புழுகுகள்...
கும்பகோண மடம் |
செவ்வாய், 7 டிசம்பர், 2021
ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு செய்த சரவணா ஸ்டோர்ஸ்!
மின்னம்பலம் : பிரபல நகை மற்றும் ஜவுளிக் கடையான சரவணா ஸ்டோர்ஸ் 1000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது வருமான வரித்துறை ரெய்டில் அம்பலமாகியுள்ளது.
வணிக நிறுவனங்களில் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்கள், வருவாயை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் தொடர் சோதனையில் ஈடுபட்டது வருமான வரித்துறை.
சென்னை, கோவை, மதுரை, நெல்லை என மொத்தம் 37 இடங்களில் சோதனை நடத்தியது. இந்நிலையில் சோதனை முடிவை இன்று (டிசம்பர் 7) வெளியிட்டுள்ள வருமான வரித்துறை, “முதல் குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 1000 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, ஜவுளி மற்றும் நகைப் பிரிவில், கணக்கில் வராமல் ரூ.150 கோடி மதிப்பீட்டில் பொருட்கள் கொள்முதல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணையின் பின்பு உயிரிழந்த கல்லூரி மாணவர் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு! ராமநாதபுரம்
நக்கீரன் செய்திப்பிரிவு : ராமநாதபுரம் மாவட்டம் நீர்கோலனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி இளைஞர் மணிகண்டன் என்பவர் போலீசார் வாகன சோதனையின் பொழுது நிற்காமல் இருசக்கர வாகனத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு போலீசால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
போலீசார் விசாரணைக்கு சென்று வீடு திரும்பிய மணிகண்டன் கடந்த 5 ஆம் தேதி அதிகாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மணிகண்டன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்வுக்குத் தயாராகுங்கள்.. தமிழ் மொழித்தாள் கட்டாயம்” : TNPSC தேர்வு விரிவான அறிவிப்பு
கலைஞர் செய்திகள் : 2022ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்.
தமிழகத்தில் வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வும் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். மேலும் 2022ம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள பணி நியமனங்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்த திட்ட அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார்.
ரஜினி, சசிகலா திடீர் சந்திப்பு!
நக்கீரன் செய்திப்பிரிவு :; சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை வி.கே. சசிகலா சந்தித்துப் பேசினார். பரபரப்பான அரசியல் சூழலில் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தாதா சாகேப் விருது பெற்றதற்காக நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து வி.கே. சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக உட்கட்சித் தேர்தல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு பரபரப்பான அறிக்கை வெளிட்ட சசிகலா, இன்று (07.12.2021) யாரும் எதிர்பாராத வகையில் ரஜினிகாந்த் இல்லம் சென்று அவரை சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலை குறைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மாலைமலர் : தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் குறைவான விலையில் மனை ஒதுக்கீடு பெற்று தொழில் துவங்க முடியும்.
தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலை குறைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
தமிழகத்தினை தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச் செய்ய இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைகளை ஊக்குவிக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இவ்வரசு பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிட்கோ தொழில்மனைகளின் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தொழில்முடக்க நிலையிலிருந்து தொழில்முனைவோர் மீளவும் வழிவகை செய்யும் பொருட்டு தற்போது, தொழில்மனைகளின் விலையை குறைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் - தமிழ்நாடு அரசு!
கலைஞர் செய்திகள் - Vignesh Selvaraj : கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த சூழலில், ஏராளமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என முந்தைய அ.தி.மு.க ஆட்சியிலேயே வலியுறுத்தப்பட்டது. ஆனால், அன்றைய அரசு நிவாரணம் வழங்கவில்லை.
தி.மு.க அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறது. ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே அனைவருக்கும் கொரோனா நிவாரணம் வழங்க உத்தரவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஓமிக்ரான் பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!
மின்னம்பலம் : மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
காட்டுத்தீ போன்று ஒமிக்ரான் தொற்று வேகமாக நாடுகளிடையே பரவி வருகிறது. ஒமிக்ரான் வைரஸ் பரவல் பல நாடுகளை மீண்டும் எல்லைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க கட்டாயப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே குஜராத், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 21 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மும்பையில் மேலும் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், மும்பையில் மேலும் இரண்டு பேருக்கு நேற்று (டிசம்பர் 6) ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கால்கள் எடுக்கப்பட்டதா? எப்போது? சமூகவலை லீக்ஸ்
Chozha Rajan : ஜெயலலிதாவின் கலக்கத்துக்குக் காரணம் இருந்தது. 2014 மக்களவைத் தேர்தலில் இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக தன்னை அறிமுகப்படுத்தி, பணத்தை வாரியிறைத்து 39 தொகுதிகளை கைப்பற்றினார் ஜெயலலிதா. ஆனால், கூட்டணி அரசு அமைந்தால் தன்மீதான வழக்குகளை நீர்த்துப்போக செய்யலாம் என்ற அவருடைய ஆசை நிராசையானது. பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற்று மோடி தலைமையில் அரசு அமைத்தது.
இந்நிலையில்தான், பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 14 ஆம் தேதி தீர்ப்பு என்று நீதிபதி குன்ஹா அறிவித்தார். தீர்ப்பின்போது, ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது தோழியுடனும் மற்ற இருவருடனும் நீதிமன்றம் சென்றார்.
அங்கு நீதிபதி அளித்த தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்தது. அதுமட்டுமின்றி உடனடியாக ஜெயலலிதா உள்ளிட்டோரை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். இது இந்தியா முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊழல் வழக்கில் பல முறை பதவியிழந்த முதல்வர், முதல் முறையாக சிறைத்தண்டனை பெற்ற முதல்வர் என்ற பெயரை ஜெயலலிதா பெற்றார்.
திங்கள், 6 டிசம்பர், 2021
நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!
மின்னம்பலம் : நாடாளுமன்றம் கடந்த நவம்பர் 29 தொடங்கிய சில நாட்களில் டெல்லியில் நடந்த முக்கிய இரு சந்திப்புகளை திமுக எம்பிக்கள் கவனித்து தங்கள் தலைமைக்கு அனுப்பியுள்ளார்கள்.
முதல் சந்திப்பு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடந்த நவம்பர் 30 ஆம் தேதி சந்தித்தனர். இதுபற்றி திருமாவளவன் வெளியிட்ட செய்தியில்,
“பொதுத்துறை வங்கிகளை தனியார்மயம் செய்வதற்கான சட்ட மசோதாவை இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவேண்டாம் என மாண்புமிகு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களிடம் மனு அளித்தோம். இதுவரை எந்த வங்கி என்பது முடிவாகவில்லை. இந்த கூட்டத்தொடரில் அந்த மசோதா பட்டியல் இடப்பட்டிருந்தாலும் இன்னும் அதற்கு கேபினட் ஒப்புதல் கிடைக்கவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்- எடப்பாடி போட்டியின்றி தேர்வு: போராட்டக் களம் காணும் அதிமுக
மின்னம்பலம் : அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையரும் அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான சி. பொன்னையன் இன்று (டிசம்பர் 6) அறிவித்தார்.
இன்று மாலை 4 மணிக்கு அதிமுக தலைமைக் கழகத்துக்கு ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் வந்தனர். அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் உற்சாகமாக வரவேற்றனர்.
ரஷிய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை
தினத்தந்தி : புதுடெல்லி, இந்திய-ரஷிய உச்சி மாநாடு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிற்பகலில் டெல்லி வருகிறார். விமான நிலையத்தில் இருந்து நேராக மாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்துக்கு செல்கிறார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார்.
பின்னர் இரு தலைவர்களும், தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகளும் இடம்பெறுகின்றனர். இதைத்தொடர்ந்து மோடி-புதின் இடையேயான நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறுகிறது.
ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!
மின்னம்பலம் : முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில் மெரினா அதிமுகவின் மூன்று பிரிவுகளால் அமர்க்களமானது.
நேற்று டிசம்பர் 5ஆம் தேதி, ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில் மரியாதை செலுத்தக் காலை 10.30 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் எம்.எல்.ஏ,கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர், அதில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் வெள்ளை கலர் சட்டையிலும், இபிஎஸ் ஆதரவாளர்கள் கருப்பு கலர் சட்டையிலும் அடையாளம் காணப்பட்டார்கள்.
Real history of the Kanchi math !...It was only in the 20th century works, all compiled after Chandrasekharendra Saraswati
The Kumbhakonam math shifted to Kanchipuram in accordance with its
new story. In 1839 AD,
In article sadananda@anvil.nrl.navy.mil (K.
Sadananda) writes:
>
In article , editor.csm.uc.edu (digest
editor)
; wrote:
; Kanchipuram, July 24 (PTI) The former President, Mr R
Venkataraman, today inaugurated the year long 60th centenary
celebrations of Sri Jayendra Saraswathi, the head of the 2,500
year old Kanchi mutt, amidst religious fervour.
Sri Jayendra Saraswathi is the 69th pontiff of the mutt,
which was established here by Adi Sankara, who was the first
'peedapathi' (head of the mutt) from 482 to 477 bc.
SIR
May I bring to your attention that by all accounts Adi Sankara time was
some where around 8th to 9th century AD. And of the four Matts that he
established Kanchi is not one of them. Either the Mutt is less than
1100 years old or if it is 482 B.C. as is claimed in the news then it
must not have been established by Adi Sankaracharya.
பாலு ஜுவலேர்ஸ் கதை! ஜெயாவும் சசியும் கொள்ளையடித்த நகைமாளிகை! .பணம் கொடுக்கவே இல்லை! பாலு செட்டியார் தற்கொலை!
லைவ் டே .காம் : 1991-96 காலக் கட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த காலம் அது. தனது வளர்ப்பு மகன் திருமணத்திற்காக பாலு ஜுவல்லரியில் இருந்து சசிகலாவின் கில்லாடித் தனத்தால்… 40 கோடி ரூபாய்க்கு தங்கம் கடனாக வாங்கப்பட்டது. பணம் தருகிறேன் முதலில் நாங்கள் கேட்கும் நகைகளை தாருங்கள் என்று கூறி அக்கடையின் நிறுவனர் பாலுவை தனது வீட்டுக்கே வரவழைத்து, அக்கடையின் ஒட்டுமொத்த நகைகளையும் போயஸ் தோட்டத்திற்கு எடுத்து வர செய்தனர்..! அனைத்து நகைகளையும் பார்த்துவிட்டு கடையில் இருந்த முக்கால்வாசி நகைகளையும் தங்களுக்கு தேவையானதுதான் என தேர்வு செய்து எடுத்துக் கொண்டார் சசிகலா. அதற்கான பணம் இதோ அனுப்புகிறேன். அதோ அனுப்புகிறேன், நாளை அனுப்புகிறேன் எனக் கூறி… ஒரு சல்லி பைசா கூட கொடுக்கப் படாமல் சசிகலாவால் நாயாக அலைக்கழிக்கப் பட்டார் அந்த பாலு செட்டியார்.
மாதவிடாய் பற்றி ஹிந்து வைதீக சனாதன புராணங்களில் சுவாரஸ்யமான கதைகள்
Dhinakaran Chelliah : மாதவிடாய் எதனால் ஏற்படுகிறது
பெண்களுக்கு ஏற்படும் இயற்கையான விசயங்களில் மாதவிடாயும் ஒன்று. ஆனால் ஹிந்து வைதீக சனாதன புராணங்களில் மாதவிடாய் பற்றி சுவாரஸ்யமான கதைகள் சொல்லப்படுகிறது.மாதவிடாய் பற்றி ISKCON ஸ்தாபகர் ஶ்ரீலஶ்ரீ பிரபுபதா விரிவுரை எழுதிய ஶ்ரீமத் பாகவதம் கூறும் கதையை சில வருடங்களுக்கு முன்பே பதிவு செய்திருந்தேன்.
கருட புராணமும் மாதவிடாய் பற்றிய கதையைக் கூறுகிறது. இந்தக் கதையினை பெருமாள் கூற கருடாழ்வார் கேட்பதாக கருடபுராணம் கூறுகிறது. அதை உங்களுக்கு வழங்குகிறேன்;
இந்திரன், மங்கையர் மயக்கத்தில் தேவர்களின் குருவான வியாழ பகவான் வந்ததையும் கவனியாது உரிய கௌரவமும் வழங்காததால்,கோபம் கொண்ட வியாழன் இந்திரலோகத்தை விட்டு வெளியேறினான்.
ஆசிரியனை மதியாததால் இந்திரனது செல்வ வளங்கள் சிதைந்தன.ஆசிரியரான வியாழனைத் தேடி அலைந்து காண முடியாததால் பிரம்மாவிடம் சென்று முறையிட்டான் இந்திரன்.
ஞாயிறு, 5 டிசம்பர், 2021
பன்னீர்செல்வம் - பழனிசாமி வேட்பு மனுக்கள் ஏற்பு; போட்டியின்றி தேர்வாகின்றனர்
தினத்தந்தி : அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.
சென்னை, அ.தி.மு.க. சட்ட திட்ட விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சி அமைப்புகளுக்கு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 2-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தேர்தல் ஆணையாளர்களாக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
நாகாலாந்தில் அப்பாவி கிராம மக்கள் 13 பேர் சுட்டுக்கொலை ! பயங்கரவாதிகள் என்று தவறாக நினைந்தார்களாம்
மாலைமலர் : நாகாலாந்தில் பாதுகாப்பு படையினரால் சுட்டு இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்த நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ சிறப்பு புலனாய்வுக் குழுவின் கீழ் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் அரசுக்கு எதிராக சில அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இதில் பயங்கரவாத அமைப்புகளும் அடங்கும். அவர்கள் அடிக்கடி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலக்கடலை டாக்டர்களின் எதிரி! பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது! நோயற்ற வாழ்வு HEALTHY LIFE ·
Sridhar K Giri · டாக்டர்களின் எதிரி யார்? நிலக்கடலை தான்...
சூழ்ச்சியறியா மக்களும் நிலக்கடலையும்..!!
நிலக்கடலை சர்க்கரையை கொல்லும்..!!
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.
நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.
★ நீரழிவு நோயை தடுக்கும்:
EXCLUSIVE முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் கொடுத்த மார்க்ஸ் டைம்ஸ் ஆப் இந்தியா கள ஆய்வு!.. நூற்றுக்கு 75
Mariathangaraj Jeyapal - Samayam Tamil : கனமழை, வெள்ளத்தை தமிழக அரசு எப்படி கையாண்டது? சென்னையின் 16 தொகுதிகளிலும் ‘TOI சமயம் தமிழ்’ நேரடியாக மேற்கொண்ட கள ஆய்வின் முடிவுகள் இதோ!
தமிழகம் வரலாறு காணாத கனமழையை கடந்த மாதம் எதிர்கொண்டது. மாதம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கொரோனா நெருக்கடியிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் கனமழை காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
2015 சென்னை வெள்ளத்தின் போது ஏற்பட்ட மழைப் பொழிவுக்கும் தற்போதைய மழைப் பொழிவுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால் பாதிப்பை பொறுத்தவரை கடந்த முறையைவிட இப்போது பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. அரசு இயந்திரம் வேகமாக இயங்கியதாக ஒரு பக்கம் அரசுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கப்பட்டாலும் சில பகுதிகளில் மீட்பு பணிகள் தாமதமானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஓபிஎஸ்-இபிஎஸ் வேட்பு மட்டும் மனு தாக்கல்.. பல்லிளிக்கும் உட்கட்சி ஜனநாயகம்
மின்னம்பலம் : ஓபிஎஸ்-இபிஎஸ் வேட்பு மனு தாக்கல்:ஜெயக்குமார் போலீசில் புகார்!
அதிமுகவின் அமைப்புத் தேர்தலில் தலைமைப் பதவிகளுக்கான ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில்...வேட்பு மனு தாக்கல் நேற்றும் இன்றும் நடைபெற்றுள்ளன.
நேற்று (டிசம்பர் 3)ஓமப்பொடி பிரசாத் என்பவர் வேட்பு மனுதாக்கல் செய்ய வந்தபோது அவரை தலைமை அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் பிடித்துத் தள்ளி வெளியேற்றினார்கள். இன்றும் வியாசர்பாடியில் இருந்து வந்த ஒருவரை அதிமுக நிர்வாகிகள் துரத்தி வெளியேற்றினார்கள். இதற்கிடையில்தான் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கலுக்கான நேரம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் பொன்னையன், “இன்று வேட்பு மனுவின் இறுதி நாள் என்ற வகையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றன. நாளை வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும்”என்றார்.
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது - ஊரை விட்டு ஓடும் மக்கள்
மாலைமலர் : எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சென்றடைந்த நிலையில், 5 கிமீ சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் உள்ள செமரு எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் காணப்பட்டது. இன்று எரிமலை வெடித்துச் சிதறி கடும் சீற்றத்துடன் நெருப்புக் குழம்புகள் வெளியேறுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பல் படர்ந்ததால் கருப்பாக காட்சியளிக்கிறது.
எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சென்றடைந்தது. ஒரு பாலம் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறினர்.