சனி, 24 பிப்ரவரி, 2018

நம்ம ஸ்டேஷன்ல இருக்கவங்க பாதி பேர் நம்ம ஆளு தான்.. ஒண்ணும் ஆகாது

பிரிந்தா :தரையில் சிறுவனின் சடலத்தின் பார்த்திட்டு கேட்டான் "செத்துட்டானா?"
"ம. இப்ப தான். கழுத்தில் ஒரே இழு தான், போய் சேர்ந்திட்டான். ஆனால் அதுக்கு முன்னாடி நிறைய கத்தினான், சல்லிபய", அடுத்தவன் அமைதியா பதில் சொன்னான்.
"நீ ஏன் இவனைக் போய் கொன்ன? 8 வயசு தானே என்ன பண்ணிடுவான்?" பெரிசா கவலைப்படாமல் அடுத்தவன் கேட்டான்.
"வளர்த்து வந்தா திருப்பி நிலம் சம்பந்தமா சண்டை போடுவான். இவன் எல்லாம் இருந்து என்ன சாதிக்க போறான். விடு" என்றான்.
"அப்ப சரிதான். இவன் அம்மாவுக்கும் நல்லா காட்டு காட்டி இருக்கேன். இனி நம்ம வழிக்கு வரமாட்டா."
மூன்றாவதா நுழைஞ்சவன்
"சரி, பேசி டைம் வேஸ்ட் செய்யாதிங்க. இவன் அக்காவுக்கு 14 வயசு. இருந்தாலும் நம்ம யாருனு காட்டனுமில்ல. அப்பதான் இருக்க வேண்டிய இடம் என்னனு இவங்களுக்கு புரியும். சிக்கிரம் போய் முடிச்சிட்டு வாங்க".
அடுத்தவன் "டேய் பிரச்சனை பெரிசா ஆயிடபோதுடா"

வங்கிகளுக்கு அதானி செலுத்த வேண்டிய தொகை,,, மிக மிக அதிகம் ...

ADaniநக்கீரன் ச.ப.மதிவாணன்  : இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தேசிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியை மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது வைரவியாபாரி நீரவ் மோடியின் மெகா மோசடி. இது ஒருபுறமிருக்க விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி என நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் கடன்வாங்கி, திரும்பச் செலுத்தாத பெருமுதலாளிகளின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போகிறது.
தங்கள் பணங்களை பாதுகாக்க வங்கிகளில் டெபாசிட் செய்யும் மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவரும் சூழலில், கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாநிலங்களவைக் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பவன் வெர்மா, அதானி குழுமம் மற்றும் அதன் நிறுவனர் கவுதம் அதானியின் மீது வாராக்கடனைத் திரும்பச் செலுத்தாத குற்றச்சாட்டுகளை சரமாரியாக அடுக்கினார். மேலும், பொதுத்துறை வங்கிகளில் அவர் திரும்பச் செலுத்தாத இமாலயத் தொகையை பட்டியலிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

கமலஹாசன் பிக் பாஸ் இரண்டாம் பாகம் ஆரம்பமாகிறது ,,, கட்சியை வளர்க்கவாம் ..

வெப்துனியா :நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தொடங்கிய 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சி தொடங்கப்பட்ட நாளில் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியானது. தொடக்க விழாவினை முன்னணி தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்ப்பின. ஆனால் கடந்த இரண்டு
நாட்களாக இந்த கட்சி குறித்து எந்த பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் பெரிய செய்தியாக வெளிவரவில்லை. மேலும் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையும் கமல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை இந்த நிலையில் கமல் ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளாராம். தான் ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்கு செல்லும் வகையில் தன்னை பிரபலப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். எனவே மீண்டும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, அதன் மூலம் தனது கட்சியையும் அவ்வப்போது பிரபலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளாராம். தனது முடிவினை விஜய் டிவியிடம் அவர் தெரிவிக்க, டிவி நிர்வாகத்தினர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 என்ற விளம்பரம் வரவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.<

ஆழியாறு தண்ணீர் கேட்டு கேரளாவில் போராட்டம்! கேரளா வாகனங்கள் தடுத்து நிறுத்தம்

தினமலர் :வறட்சி காரணமாக, போதிய நீர் இருப்பு இல்லாததால், இது போல், மீனாட்சிபுரம் சோதனைச் சாவடியிலும், கேரளா செல்லும் வாகனங்கள் வரிசையாக நிறுத்த பட்டு இருந்தன. தமிழக - கேரள எல்லை யில்,இரு மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பாசனத்துக்கு நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஆனாலும், கேரளாவின் குடிநீர் தேவைக்காக, வினாடிக்கு, 63 கன அடி தண்ணீர் வழங்கப்படுகிறது. 'கேரளாவுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை முறையாக வழங்க வேண்டும்' என, சில அரசியல் கட்சியினர், நேற்று முன்தினம் இரவு முதல், திடீர்போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இருந்து கேரளா சென்ற, ஐந்து லாரிகள் சேதப்படுத்தப்பட்டன.மீனாட்சிபுரம் சோதனைச்சாவடி அருகே, நேற்று காலை வந்த தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அமைப்பினர், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.

ஜெயலலிதா சிலை திறப்பு.... ( வடிவுக்கரசி சிலை என்று மக்கள் .....?)

Trollவெப்துனியா : அதிமுக அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வெண்கல சிலை குறித்து நெட்டிசன்கள் போடும் மீம்ஸ் வைரலாகியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை தமிழகமெங்கும் உள்ள அதிமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகமெங்கும், அதிமுக சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 70 அடி உயர வெண்கல சிலையும் திறக்கப்பட்டது. மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது புரட்சி தலைவி அம்மா ’ வும் வெளியிடப் பட்டுள்ளது. இந்நிலையில், அந்த சிலையில் உள்ள உருவம் ஜெயலலிதாவைப் போல் இல்லை என்ற கருத்து எழுந்துள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் மீம்ஸ் போட்டு வருகின்றனர். ஜெ. உருவ சிலை வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமி மனைவி, நடிகை காந்திமதி, நிர்மளா பெரியசாமி ஆகியோர் போன்று உள்ளது என்று குறிப்பிட்டு வருகின்றனர்.<யார் போன்று ஜெ. உருவ சிலை இருக்கிறது என்று நெட்டிசன்கள் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். குழப்பத்தில் ஒவ்வொரு மீம்ஸூம் ஒவ்வொரு புகைப்படத்துடன் ஒப்பிட்டு வைரலாகி வருகிறது.

மேலும் ஒரு வங்கி மோசடி பிடிபட்டது ரூ.389 கோடி Dwarka Das Seth International Pvt Lt டெல்லி வைர வியாபாரிகள் கைவரிசை

The CBI has booked Dwarka Das Seth International Pvt Ltd for the
alleged fraud. Six months after the public sector bank filed a complaint with the CBI, the agency booked the company, and Sabhya Seth, Reeta Seth, Krishna Kumar Singh, Ravi Singh — all directors of the firm — and another company named Dwarka Das Seth SEZ Incorporation. The company has availed various credit facilities from OBC between 2007-12, which swelled to Rs389 crore during the period.
வெப்துனியா :விஜய் மல்லையா, நீரவ் மோடியை அடுத்து மேலும் ஒரு நிறுவனம் வங்கியில் கடன் பெற்று திருப்பி கட்டாமல் மோசடி செய்ததாக சிபிஐ
வழக்குப்பதிவு செய்துள்ளது. டெல்லியை சேர்ந்த முன்னணி வைரநகை ஏற்றுமதி நிறுவனம் ஒன்று ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் ரூ.389.85 கோடி சட்டவிரோதமாக கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த வைரநகை நிறுவனத்தின் நான்கு இயக்குனர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைதாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் கடந்த 2007 முதல் 2012 வரை ரூ.389.85 கோடி கடன் பெற்று திருப்பி கட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

விழுப்புரம் ..தலித் ..தாயும் சிறுவனும் படுகொலை .. சிறுமி பாலியல் வல்லுறவு .. வன்னிய ஜாதி வெறி ..

Thiyaga Rajan : தலித் சிறுவனும் தாயும் படுகொலை. சிறுமி வல்லுறவு.சாதிவெறியின் கொடூரம் குற்றவாளிகள் பாமாகவினர் என கூறப்படு கின்றது.குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ததாக தகவல் இல்லை.
விழுப்புரம் மாவட்டம், வேலாம்புதூர் கிராமத்தில், தலித் குடும்பத்தின் மீது, ஒரு பதினான்கு சென்ட் இடப்பிரச்சனையின் காரணமாக, தமது சாதிய வெறித்தனைத் தைக் காட்டியிருக்கிறது சாதீய கும்பல். அந்த தலித் குடும்பத்தின் விதவைத் தாய், மற்றும் அவருடைய எட்டு வயது மகனையும் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்த சாதிவெறிக் கும்பல், அவருடைய 14 வயது மகளை கூட்டு வல்லுறவு செய்துள்ளது.
ஆதிக் சாதி வெறியின் போக்கு நாளுக்கு நாள் வளர்ந்தபடியே இருக்கிறது. அந்த சாதியில் பிறந்து, தங்களை வழிகாட்டிகளா கவும் தலைவர்களாவும் காட்டிக் கொண்டவர் களும் அந்த சாதிவெறி நெருப்பையே வளர்த் தெடுத்திருக்கிறார்கள். கடும் வெறியூட்டப் பட்ட அந்த சாதியினரின் சாதிவெறியை, மென்மையான, அடையாளப் போராட்டங்க ளாலால் கட்டுப்படுத்த முடியாது.

ஸ்கூட்டர் மானியம் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்

தினேஷ் ராமையா vikatan: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி, தமிழக அரசின் மானியவிலை ஸ்கூட்டர் திட்டத்தைப் பிரதமர் மோடி சென்னையில் தொடங்கிவைத்தார்</ *தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பேசிய பிரதமர் மோடி, `மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பதவி வகித்தபோது 13வது நிதிக்குழு மூலம் தமிழகத்துக்கு 81,000 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபின்னர் தமிழகத்துக்கு ரூ.1,80,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
*ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, ’பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு 1.80 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது’ என்றார். மேலும், ’நாடு முழுவதும் உஜ்வாலா திட்டத்தில் 3.5 கோடி இலவச கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

பதஞ்சலியின் 50 டன் செம்மரக் கட்டைகள் பிடிபட்டும் 40000 கோடி வணிகம் வர்த்தகம் செய்யும் சாமியார்



Venkat Ramanujam : பதஞ்சலியின் 50 டன்
செம்மரக் கட்டைகள் பறிமுதல்
செய்யப்பட்டு பிடிபட்டும் 40000 கோடி வணிகம் வர்த்தகம் செய்யும் சாமியார் ராம்தேவ் மீது சுண்டு விரலும் படவில்லை.ஆனாலும் அந்திராவில் 600 ரூ தினம் மட்டும் பெறும் கூலி தமிழ் தொழிலாளிகள் 3250 பேர் சிறையில் மூன்று வருடமாக வாடுகின்றனர் தண்டாவகோனே...
நமது மீடியாக்களின் முழு கவனமோ நேற்று மய்ய்ம் மீதும் இன்று மானியம் பெறும் ஸ்குட்டி மீதும் தண்டாவகோனே.....
Z+ security 22/09/16 விலக்கபட்டாலும் ஏன் என்று கேள்வி கேக்காமல் விலக்கியவரை வைத்தே விசில் அடித்து ஸ்குட்டி ஓட்டுவார்கள் அதிமுக அம்மாவின் அதி திவிர விசுவாசிகள் தண்டாவகோனே......
தமிழ் நாட்டில் எர்செல் 8000 டவர் ஒர் இரவில் செயல் இழக்கும் .,மூன்று ஆண்டுகள் 4G BSNL க்கு உரிமம் தராமல் மத்திய பாஜக அரசு மவுனவிரதம் இருக்கும் ..tender இல்லாமல் 4G உரிமம பெற்றே அம்பானிகளும் closeup ட்டுத்பேஸ்ட் பல்லிளிக்கும் தண்டாவகோனே.....
நமது மீடியாக்களின் முழு கவனமோ நேற்று மய்ய்ம் மீதும் இன்று மானியம் பெறும் ஸ்குட்டி மீதும் தண்டாவகோனே... ..
700 கோடி வழக்கில் கார்திக் சிதம்பரம் வழக்கில் கைது செய்து விசாரிக்கும் சிபிஐயிடம் .,PNB வங்கி ஒரு வருடமாக புகார் அளித்தும் மோடியுடன் செல்பி எடுத்து வைரவியாபாரி டாடா காட்டி பறந்தாலும்., 11000 கோடி ஊழல் வழக்கில் அவர்களின் வைரவியாபாரியின் ஆடிட்டர் யாரையும் கைது செய்யாமல் சிபிஐ கைகள் நல்ல முறையில் பேன் மட்டுமே பார்க்கும் தண்டாவகோனே....

கமல் ! தன்னையே தலைவன் என்று தவிக்கிரானடி ,,, தன்னையே தானே கண்டு மயங்குறானடி ... சமுகவலை வறுவல்


Richy Bryson‎ t : கமல் எனும் நார்சிஸ்ட்
தன்னைத்தானே அளவுக்கு அதிகமாக காதலித்தல் தானே சிறந்தவன் என எண்ணுதல் தன்
மேலே ஆசை கொள்ளுதல் இதற்கு ஆங்கிலத்தில் நார்சிசம்(narcissism) எனும் பதம் உண்டு. நார்சிசம் எனும் பதத்திற்கு பின்னர் ஒரு கிரேக்க பழங்கதை உண்டு.கிரேக்கத்தின் வேட்டைக்கார இளைஞனான நார்சிசஸ் ஆற்றோரத்தில் அமர்ந்திரிக்கும் போது ஆற்று வெள்ளத்தில் விழுந்த தன் பிம்பத்தை பார்த்து அதன் மேல் மையல் கொள்கிறான்.அதன் பிறகு அவனால் பிறவற்றின் மேல் கவனம் கொள்ள இயலவில்லை.உருகி உருகி தன்னைத்தானே காதலித்து செத்துபோகிறான்.இந்த நார்சிசஸின் கதையிலிருந்து வந்த பதமே நார்சிசம் தன்னைத்தானே சுய ஆராதனை செய்து கொள்ளுபவர்களுக்கு இடப்படும் பெயர்தான் நார்சிஸ்ட்.இது ஒருவித ஆட்கொல்லி மனநோய்.........
நார்சிஸ்ட் களின் இயல்புகளானது
1. தன்னைத்தானே எல்லா விடயங்களிலும் முன்நிறுத்தி கொள்ள நினைப்பது அல்லது தான் தான் எனும் பிம்பத்தை தன்க்குள்ளே கட்டி எழுப்புவது.....
2.தான் சார்ந்த சமூகத்தில் தான் ஒரு மிக முக்கியமானவனாக தன்னை முன்நிறுத்து கொள்ள முயல்வது.....
3.எல்லா விடயங்களிலும் தான் தேர்ந்தவன் என்று காட்டிக்கொள்வது........
4.அளவுக்கதிகமான தற்பெருமையில் உழல்வது.தன் சாதனைகளை தானே ஊதிப்பெரிதாக்குவது........

டாக்டர் ஷாலினியின் பார்வையில் .... கனடா வருகையும் சலசலப்பும்

டாக்டர் ஷாலினி அவர்கள் எழுதிய இந்த கட்டுரையை புலம் பெயர் தமிழர்கள் சிலர் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து தங்கள் ஜனநாயக விழுமியங்களை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளனர் .அதன் காரணமாக அவரது முகநூல் டி ஆக்டிவேட் பணியுள்ளார் போல் தெரிகிறது ,, உண்மையில் இக்கட்டுரை நல்ல கட்டுரையே . ஒரு கட்டுரையில் காணப்படும் உண்மைகளை பார்க்க சகிக்காத கூட்டம் ஒன்று இலக்கியம் பற்றி எல்லாம் வகுப்பு எடுக்கும் காமடி நடக்கிறது
 அவர் சமீபத்தில் கனடாவின் டொராண்டோ  சென்று அங்குள்ள ஈழத்தமிழர்களைச் சந்தித்துத் திரும்பிய பின் தனது முகநூல் பதிவில் புலித்தலைவர்  பிரபாகரன் குறித்தும், கியூபாவின் புரட்சித் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ குறித்தும்  பதிவு செய்திருந்தார். 
‘கியூபா பிரட்சித் தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி இந்த உலகம் மிகத் தவறான புரிதலையே கொண்டுள்ளது.

ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்... செயலிழந்த Aircell செல்போன் இணைப்புகள்



tamilthehindu :கோவை அண்ணா சிலை அருகேயுள்ள ஏர்செல் நிறுவன அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்.   –  படம்: ஜெ.மனோகரன்

ஏர்செல் நிறுவனத்தின் செல்போன் இணைப்புகள் செயல் இழந்ததால், ஏராளமான வாடிக்கையாளர்கள் கோவை, திருப்பூரில் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
செல்போன் இணைப்பு சேவையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஏர்செல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

காய்கறி வண்டியில் மூட்டையோடு மூட்டையாக கடத்தப்பட்ட பிணங்கள் ! காஞ்சிபுரம் கருணை இல்லம்

Kalai Mathi 
Oneindia Tamil :  காஞ்சிபுரம்: சர்ச்சைக்குள்ளான செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் என்ற பெயரில் கருணை இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஆதரவற்ற முதியோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கு நாள்தோறும் முதியவர்கள் உயிரிழப்பதாகவும் அவர்களின் எலும்புக்கூடுகள் வெளிநாட்டிற்கு கடத்தப்படுவதாகவும் தகவல் வெளியானது. கூச்சலிட்ட மூதாட்டி கூச்சலிட்ட மூதாட்டி அண்மையில் கருணை இல்லத்துக்கு சொந்தமான போலி ஆம்புலன்ஸில் கடத்தப்பட்ட மூதாட்டி ஒருவர் வாகனத்தில் பிணம் ஒன்று இருப்பதைக் கண்டு காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். 
 முதியவரும் கடத்தல் இதையடுத்து வாகனத்தை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரர் காய்கறி மூட்டைகளுடன் கடத்தப்பட்ட உடலை கைப்பற்றியதோடு உயிருடன் இருந்த மேலும் ஒரு முதியவரையும் காப்பாற்றினர்.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

மோடியின் கைகுலுக்கலை தவிர்த்து வணக்கம் செலுத்திய கனடா பிரதமரின் மனைவி

கை குலுக்கவோ கட்டிபிடிக்கவோ இந்தியா வரவில்லை... இங்குள்ள கலாச்சரத்தை பன்முக தன்மையை பற்றி அறியவே வந்துள்ளேன்." என கனடா பிரதமர் இந்தியா வந்ததும் கூறியதை அவரது மனைவி உண்மை ஆக்கிவிட்டாரோ.!!

9 வயது மாணவியை பலாத்காரம் செய்த அதிபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை ... நீதிபதி இளஞ்செழியன்

9 வயது பாடசாலை மாணவி வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு  10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கிய இளஞ்செழியன் !!இலக்கியா இன்போ : 9 வயது பாடசாலை மாணவி வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கிய இளஞ்செழியன் !
“வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது கல்வி கற்பதற்காகவே. ஆனால் பாடசாலையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிபர், மாணவி ஒருவரை வன்புணர்வுக்குட்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே இந்தக் குற்றவாளிக்கு வழங்கப்படும் தீர்ப்பு அனைத்து அதிபர்கள், ஆசிரியர்களுக்கு பாடமாக அமையவேண்டும்” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பில் கோடிட்டுக்காட்டினார். யாழ்.தீவகம் நாரந்தனைப் பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசலை ஒன்றில் 2009ஆம் ஆண்டு நவம்பர் மாத காலப்பகுதியில் தரம் 4இல் கல்வி கற்ற 9 வயது மாணவி ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார். என்று ஊர்காவற்றுறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்முறை ,கொலை செய்த பொதுமக்கள்!


Arunaநக்கீரன் :ச.ப.மதிவாணன் ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தவர்களை, காவல்நிலையத்தில் இருந்து இழுத்து வந்து பொதுமக்களே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் நம்கோ மிஷிமி கிராமத்தில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி காணாமல் போனார். ஐந்து நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, அருகில் இருந்த தேயிலைத் தோட்டத்தில் சிறுமி பிணமாகக் கிடப்பது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

ரஜினியின் ஜிகிர்தாண்டா .... இதுதாண்டா நானு ... ஹா ஹா ஹா ... பிளாக் டிக்கட் விற்க தமிழருவி மணியன் தயார்?


கேரளாவில் ஆதிவாசி இளைஞர் அடித்து கொலை செல்பியும் எடுத்த கொலையாளிகள் ..விடியோ


மின்னம்பலம் :கேரளாவில் ஆதிவாசி இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிவாசி இளைஞர் கொலை: பினராயி விஜயன் கண்டனம்!கேரள மாநிலம் அட்டாப்பாடி பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஆதிவாசி இளைஞரான மது என்பவரை 15 பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
அந்தக் கும்பல் மதுவின் இரு கைகளையும் கட்டி, சரமாரியாகத் தாக்கியுள்ளது. மதுவிடம் ஒரு இளைஞர் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்த நிலையில் அதனை மற்றொரு இளைஞர் செல்ஃபி எடுத்துள்ளார். முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இவர்களின் தாக்குதலுக்குப் பிறகு அவர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மதுவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அவர் உயிரிழந்தது குறித்துச் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்தியாவில் 4ஜி வேகம் குறைவு ..பாகிஸ்தான், இலங்கை, கஜகஸ்தானை விட : ஆய்வில் தகவல்

tamilthehindu : பிரதமர் மோடியும், மத்திய அரசும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை வேகப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும். இந்தியாவில் 4ஜி வசதி கூட சரிவர கிடைப்பதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான், கஜகஸ்தான், இலங்கையை விட இந்தியாவில் 4ஜி வேகம் மிக குறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
‘தி ஸ்டேட் ஆப் எல்டிஇ’ என்ற மொபைல் போன் ஆய்வு நிறுவனம் ஒன்று சமீபத்தில் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் 88 நாடுகளில் வெளியிடங்களில் கிடைக்கும் 4ஜி அலைவரிசையின் வேகத்தை அளவிடப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தான், கஜகஸ்தான், சவுதி அரேபியா, இலங்கை, அல்ஜீரியா போன்ற நாடுகளை விடவும், இந்தியாவில் 4ஜி வேகம் மிக குறைவாக உள்ளது.

ரஜினி புதுப்படத்தில் நடிக்கிறார் .. உடனடி அரசியல் கிடையாது . ரசிகர்கள் ஏமாற்றம்!

ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு!
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. Veera Kumar  Oneindia Tamil: சென்னை: யாரும் எதிர்பார்க்காத நிலையில் அரசியலில் குதித்த நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அழைத்து அவர் முன்னிலையில், தொடங்கி விட்டார்.
 அரசியலுக்கு வருவார் என இரு தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் இன்னும் கட்சி துவங்காமல் இழுத்தடித்து வருவது தனது திரைப்பட ரிலீசுக்காகத்தானா என்ற ஐயங்கள் எழுந்துள்ளன.
 ரஜினி நடிப்பில் எந்திரன் 2வது பாகமும், காலா திரைப்படமும் வெளியாக வேண்டியுள்ளது. படத்திற்காக வெய்ட்டிங் படத்திற்காக வெய்ட்டிங் இவ்வாண்டில் இப்படங்கள் ரிலீஸ் ஆகும். அதற்கு முன்பாக அரசியலில், அதிரடியாக ஏதாவது செய்தால், படங்களுக்கு பாதிப்பு வருமோ என ரஜினிகாந்த் யோசிப்பதாக கூறப்படுகிறது. எனவே, கட்சியை வலுப்படுத்துவதாக கூறியபடி, ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தபடி காலம் தாழ்த்தி வருகிறார் ரஜினிகாந்த். 
 இன்று நெல்லை மாவட்ட ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தபோது, கட்சியை வலுப்படுத்துவதான் அவசியம். கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதுதான் முக்கியம் என்று, ரஜினிகாந்த் பேசினார். எனவே இப்போதைக்கு கட்சி பெயரை அவர் அறிவிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகிறது.

கள்ளகுறிச்சி எம் எல் ஏ தினகரன் பக்கம் ஓட்டம் ... மோடி வருகைக்கும் இதற்கும் தொடர்பு ....?

மக்கள் சேவை செய்ய ஆசை
மதம் சார்ந்த அரசியலில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை : மோடி!
 : சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான மொழி! நாளைக்கு : முஸ்லிம்கள் என் சகோதரர்கள் என்பார். நான்கு வருடமாக பிரஸ்மீட்டே தராத பிரதமரை எந்த ஊடகமாவது கேள்வி கேட்குதா? இவர்கள் இந்தியாவின் சாபக்கேடுகள்,

Venkat Ramanujam 9 mins · கள்ளகுறிச்சி MLA ஆல்சோ பறந்திங் டூ #TTV DMK + : 98 TTV : 22 + 3 #BJP boys ( #EPS + #OPS ) : வட சட்டியே போச்

 காவேரி நீர் பிரச்னைக்கு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்!..
அனைத்து கட்சிகள் கூட்ட த்தில், எதிர் கட்சிகள் வேண்டுகோள் ;-


Mayura Akhilan tamiloneindia :
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவை வழி நடத்த டிடிவி தினகரனாலும், சசிகலாவினால் மட்டுமே முடியும் என்று கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு கூறியுள்ளார்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு இன்று பெசன்ட் நகரில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிற்கு சென்று அவருக்கு பூங்கொத்து கொடுத்து தனது ஆதரவை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் கருணை இல்லம் கொடுரமாக எலும்புகள் ஏற்றுமதி? அதிகாரிகள் ஆய்வு ... பிணவறையில் சீமென்ட் பூசி மறைக்கபட்ட உடல்கள் ...

tamilthehindu  இரா. ஜெயபிரகாஷ் :காஞ்சிபுரம் உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆதரவற்றவர்களுக்கான கருணை இல்லத்தில் உள்ள விதிமீறல்கள் தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உத்திரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரத்தில் ஆதரவற்றவர்களுக்கான கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 350 பேர் தங்கியுள்ளனர்; 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்தக் கருணை இல்லத்தில் இறந்தவர்கள் சுவரில் சிறு, சிறு பெட்டிகள் போன்ற பிணவறையில் வைத்து சிமென்ட் பூசி அடக்கம் செய்வதாகக் கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் எலும்புகள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், அதற்காகத்தான் பெட்டிகள் போன்ற பிணவறையில் வைத்து அடக்கம் செய்வதாகவும் இப்பகுதியைச் சேர்ந்த சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு கருணை இல்ல நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

சிரியாவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு .. 5-நாள் தாக்குதலில்

5-நாள் தாக்குதலில் சிரியாவில் 400க்கும் மேற்பட்டோர் பலிதினத்தந்தி :சிரியா உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கவுட்டா நகரை மீட்பதற்காக, ரஷிய படைகளின் ஆதரவுடன் அதிபர் ஆதரவு படைகள் மூர்க்கமாக சண்டையிட்டு வருகின்றன. பிப்ரவரி 23, 2018, 09:08 AM பெய்ரூட், சிரியா உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கவுட்டா நகரை மீட்பதற்காக, ரஷிய படைகளின் ஆதரவுடன் அதிபர் ஆதரவு படைகள் மூர்க்கமாக சண்டையிட்டு வருகின்றன. கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 18–ந் தேதி இரவு முதல் அந்தப் படைகள் தீவிர வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வந்தன. 5 நாட்களாக நடந்த தாக்குதலில் 403 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பலியானவர்களில் 95-க்கும் மேற்பட்டோர் சின்னஞ்சிறு குழந்தைகள் ஆவர்.

ஜி டி நாயுடு கூறியதை பேரறிஞர் அண்ணா கூறியதாக ... ... கமல் ..பாரதிராஜா

அறிஞர் அண்ணா என்ன சொன்னார் பாரதிராஜா!மின்னம்பலம் - சிவா​: ஒரு நண்பராக கமல்ஹாசனின் அரசியல் அத்தியாயத்துக்கு வாழ்த்துகளைப் பதிவு செய்து, சில போதனைகளைச் சொல்ல பாரதிராஜா முயற்சித்ததில் இவ்வளவு பெரிய பிழை நேர்ந்திருக்கக் கூடாதுதான். ஆனால், சிறு தவறு எத்தனை பெரிய வரலாற்றுப் புரட்டை ஏற்படுத்தும் என்றுணர்ந்த பாரதிராஜா போன்ற படைப்பாளி அறிஞர் அண்ணாவின் கூற்றை மாற்றுவது அவருக்குத்தான் கெட்ட பெயரை ஏற்படுத்திக்கொடுக்கும்.
என் இனிய நண்பர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு... அன்புடன் பாரதிராஜா எழுதுகிறேன் என்று கடிதத்தைத் தொடங்கினாலும், நான்காவது பத்தியில், கமல் பற்றிய புகழை அழுத்தம் கொடுத்துச் சொல்வதாக இந்தக் கடிதம் மாறிவிடுகிறது. எனவே, இந்தக் கடிதம் கமலுக்காக எழுதப்பட்டது

‘முதல்வராக ரஜினியை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு... தமிழருவி மணியன் அறிவிப்பு

மின்னம்பலம் :‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கும் நிலையில், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அவர் பெயரில் இரண்டாவது மாநாட்டை வரும் மே 20ஆம் தேதி கோவையில் நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார் தமிழருவி மணியன். அதுவும் ரஜினியை முதல்வராக முன்னிறுத்தி நடக்க இருக்கிறது இம்மாநாடு.
கட்சிக்குக் கட்டமைப்பு முக்கியம் என்பதை உணர்ந்து வைத்துள்ள ரஜினி பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இப்போது ஒவ்வொரு மாவட்டமாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். தினம்தோறும் ரஜினி மக்கள் மன்ற மாநிலச் செயலாளர் ராஜூ மகாலிங்கம், நிர்வாகி சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆந்திர சிறைகளில் அப்பாவி தமிழர்கள் .. தலைகீழாக கட்டி அடிப்பது ,, நகங்களை புடுங்குவது .. மின்சார அதிர்ச்சி கொடுப்பது

மின்னம்பலம் :தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், ஆந்திர மாநிலச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை மீட்கத் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று (பிப்ரவரி 22) அவர் விடுத்த அறிக்கையில், ‘ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அந்த மாநிலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அல்ல. அவர்களில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் ஆந்திரக் காவல் துறையினரால் தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்களுக்குச் செம்மரக் கடத்தலில் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர்கள் ஆந்திராவில் செம்மரங்களை வெட்டியிருக்கலாம்; கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே அம்மாநிலக் காவல் துறை கைது செய்துள்ளது.

கனடா பிரதமர் மீது மத்திய அரசுக்கு என்ன காய்ச்சல் ? மக்களின் கதாநாயகன் ஜஸ்டின் ட்ருடோ


justin trudeauநக்கீரன் :சந்தோஷ் குமார் : ஜனவரியை "தமிழ் பாரம்பரிய மாதமாக" அறிவித்த முதல் நாடு என கனடா பெருமையுடன் கூறிக்கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கனடா நாட்டில் இளைய வயதிலேயே பிரதமரான இரண்டாவது நபர் இவர்தான். தமிழ் மொழியின் மீது எப்போதும் நன்றி கொண்டவர். தற்போது இந்தியாவிற்கு ஏழு நாள் பயணமாக வந்த இவர் ஒரு பக்கம் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், மற்றொரு பக்கம் ஆக்கப்பூர்வமான உரைகளையும் இந்தியர்களோடு இந்தியராக செய்துகொண்டிருக்கிறார். ஆனால் இவர் இந்தியா வந்திறங்கியபோது இவருக்கு குறிப்பிடும்படியான வரவேற்புகள் வழங்கப்படவில்லை,
மேலும் ஒரு நாட்டின் பிரதமருக்கு அளிக்கவேண்டிய பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை (ஒருவேளை மோடியின் பயணத்திட்டத்தில் கனடா இல்லைபோலும்) ஆறடி டாம் க்ரூஸ் போன்ற உருவத்தில், மஞ்சள் நிற ராமராஜன் சட்டை, கீழே ஜரிகை வேஷ்டி இதெல்லாம் கலந்த கலவையாக நினைத்து பாருங்கள் ஹாலிவுட் ஹீரோ தமிழில் நடிக்க வந்தது போல் இருக்கும்.

வியாழன், 22 பிப்ரவரி, 2018

கும்பகோணம் கோவில் தீவிபத்து ,, கோவில்கள் தொடர் தீவிபத்துக்கள் .. மதக்கலவரத்துக்கு ?

முடிவில்லா கோயில் தீ விபத்துகள்!மின்னம்பலம் : கும்பகோனத்தில் உள்ள 1000 ஆண்டு பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இன்று மதியம் (பிப்ரவரி 22) தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே சத்திரம் கருப்பூர் சாலையில் திருப்பனந்தாள் மடத்துக்கு சொந்தமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மாசிமகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலை கோயிலில் சாமிக்கு நித்திய பூஜைகளை நடத்தப்பட்டது. மதியம் கருவறையில் சுந்தரேசன் குருக்கள் பூஜைகளை முடித்து விட்டுத் திரும்பியுள்ளார். அப்போது, அருகில் எரிந்து கொண்டிருந்த குத்துவிளக்கு சரிந்து, சாமி சிலையில் உடுத்தப்பட்டிருந்த ஆடையில் பற்றி எரியத் தொடங்கியது.