சனி, 31 அக்டோபர், 2020

முதல் ஜேம்ஸ்பாண்ட்... ஷான் கானரி காலமானார்! Sean Connery: James Bond actor dies aged 90

nakkeeran : புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் முதலாவதாக நடித்த ஷான் கானரி காலமாகியுள்ளார். 1930 ஆம் ஆண்டு பிறந்த அவர், தற்பொழுது அவருடைய 90 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். ஸ்காட்லாந்தில் பவுண்டன் பிரிட்ஜ் நகரில் பிறந்த ஷான் கானரி, ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் முதலாவதாக நடித்து பிரபலமடைந்தவர். சிறந்த துணை நடிகருக்கான 'ஆஸ்கார்' விருதையும் நடிகர் ஷான் கானரி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கியில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

hindutamil.in : துருக்கியில் நிலநடுக்கத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. 800க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து துருக்கி ஊடங்கள் தரப்பில், “துருக்கியில் வெள்ளிக்கிழமையன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. 800 பேர் காயமடைந்துள்ளனர். செபிரிஹிசர் நகரில் நிலநடுக்கம் காரணமாகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக, துருக்கியில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆகப் பதிவானது. ஏஜியன் கடலை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 16.5 கிலோ மீட்டர் ஆகும்.
துருக்கியின் இஸ்மிர் நகரில் நிலநடுக்கம் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் சரிந்துள்ளன. இந்த நிலையில் இஸ்மிர் நகரில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அலையும் தாக்கின.

பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை: செங்கோட்டையன்

பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை: செங்கோட்டையன்

மின்னம்பலம் : நவம்பர் மாதத்துக்கான தளர்வுகள் குறித்து முதல்வர் இன்று அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்திய கூறுகளே இல்லை எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு துணை ஆரம்பச் சுகாதார நிலைய கட்டிடத்தை இன்று (அக்டோபர் 31) திறந்து வைத்து, தாய்மார்களுக்கு அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத்தை வழங்கினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

வேலை கிடைத்தால் உயிரை தருவதாக நேர்த்திக்கடன்: ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த வங்கி அதிகாரி

maalaimalar.com :வேலை கிடைத்தால் உயிரை தருவதாக கடவுளிடம் வேண்டி கொண்டதால், அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக ரெயில் முன்பாய்ந்து மும்பை வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
நாகர்கோவில் : நாகர்கோவில் புத்தேரி ரெயில்வே பாலம் அருகே நேற்று காலை வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக கிடந்தவர் யார்? அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என விசாரணை நடத்தினர். விசாரணையில், பிணமாக கிடந்தவர் நாகர்கோவில் அருகே எறும்புக்காடு பத்தன்காடு பகுதியை சேர்ந்த செல்லசாமி மகன் நவீன்(வயது 32) என்பது தெரியவந்தது. இவர் என்ஜினீயரிங் படிப்பு முடித்து விட்டு வேலை தேடிவந்தார். இந்தநிலையில் நவீனுக்கு மும்பையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக வேலை கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பைக்கு சென்று, அந்த வங்கியின் உதவி மேலாளராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார்.

பிளாஸ்டிக் கழிவில் இருந்து திட எரிபொருள்

BBC /:  பரமக்குடி அருகே உள்ள பனிதவயல் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி அன்பரசன். இவர் நீட்ஸ் (புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்) மூலம் அரசின் மானியக் கடனுதவி பெற்று பிளாஸ்டிக் கழிவில் இருந்து சுற்றுப்புறத்துக்கு உகந்த திட எரிபொருள் உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.

கட்டும்போதே இடிந்து விழுந்த அரசு மருத்துவக் கல்லூரி!

minnambalam : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் கடந்த மார்ச் 5ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது நாமக்கல் மருத்துவக் கல்லூரி. நாமக்கல் கலெக்டர் அலுவலகம் பின்பக்கம், புதிதாகக் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடத்தின் முன்புறப் பகுதி நேற்று (அக்டோபர் 30) திடீரென இடிந்து விழுந்தது. 25 ஏக்கர் பரப்பளவில் ரூ. 336 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடத்தை சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திறப்பு விழா செய்ய வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டதால் பணிகள் வேகமாக நடைபெற்றதாகக் கூறுகிறார்கள். பல வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இந்த கட்டுமானப் பணியில் நேற்று காலை 6 மணிக்கு வேலையாட்கள் பலரும் இல்லாத நிலையில் கான்க்ரீட் இடிந்து விழுந்துள்ளது.

#GoBackStalin கோ பேக் ஸ்டாலின் ஹாஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது!

Hemavandhana -  tamil.oneindia.com :  சென்னை: எப்ப பார்த்தாலும் இந்து மதத்தை பற்றியும் ஆன்மீகத்தையும், அவதூறு செய்யும் ஸ்டாலின், தேவருக்கு அஞ்சலி செலுத்த கூடாது, என்று கோ பேக் ஸ்டாலின் #GoBackStalin என்ற ஹேஷ்டாக்கை ட்விட்டர்வாசிகள் பதிவிட்ட ஹேஷ்டாக் டிரெண்டானது.. அதுவும் இந்திய அளவில் டிரெண்ட் ஆனதுதான் இங்கு கவனிக்கத்தக்க விஷயம். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த மற்றும் நினைவு நாள் இன்று. ஒவ்வொரு வருஷமும் அவரது நினைவிடத்தில் ஜெயந்தி, குரு பூஜை நடப்பது வழக்கம். அதேபோல, அரசியல் கட்சி தலைவர்களும் அவரது நினைவிடம் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்துவர். அந்த வகையில், திமுக தலைவர் ஸ்டாலினும் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

எதிர்ப்பு எதிர்ப்பு ஆனால் அவர் அஞ்சலி செலுத்த துவங்கியபோதே சோஷியல் மீடியாவில் எதிர்ப்பு கிளம்பி விட்டது.. தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் வாழ்ந்தவர் தேவர்.. அவருக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உண்டு.. ஆனால் ஆன்மீகத்தையும், இந்து மதத்தை பற்றியும் எப்போதும் அவதூறு செய்யும் ஸ்டாலின், தேவருக்கு அஞ்சலி செலுத்த கூடாது, என்று கோ பேக் ஸ்டாலின் #GoBackStalin என்ற ஹேஷ்டாக்கை பதிவிட்டனர் 

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மேம்பாட்டுக்காக திமுக ஆட்சி மேற்கொண்ட நடவடிக்கைகள்:!

கலைஞரும்,ஒடுக்கப்பட்ட.அடையாள சாதி மக்களும் *தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மேம்பாட்டுக்காக கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் மேற்கொண்ட நடவடிக்கைகள்:* 1. சமுதாய நலத்துறை அரசு ஆணை G.O.(MS) No.122 DT. 18. 2. 1972 ன் படி, தொழில் கல்வி கற்கும் SC/ST மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் கடன் கொடுக்கும் திட்டம் தமிழகத்தில் முதல் முதலாக அமுலாக்கப்பட்டது.
2. *அரசு ஆணை G.O.Ms.No. 477 Dated : 27 - 06 – 1975 ன் படி, வேறுவேறு சாதியை சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையின் சாதிசான்று தந்தையின் சாதியாகவே இருந்த நடை முறையை மாற்றி அவரவர் விருப்பத்தின்படி தந்தை அல்லது தாய் இருவரில் யாருடைய சாதியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வழி செய்கிறது.*
3. அரசு ஆணை G.O.Ms.No.1414 Dt: August 01, 1989 ன் படி, ஆதிதிராவிட பழங்குடியினர் மற்றும் அதிலிருந்து மதம் மாறியவர் அனைவருக்கும் பட்டப்படிப்புவரை கல்வி இலவசம் ஆக்கப்பட்டது.
4. *அரசு ஆணை G.O. Ms. No. 1597 Dt: September 27, 1990 ன் படி, புத்தமதம் மாறிய ஆதிதிராவிட பழங்குடி இன மக்களுக்கும் சலுகைகள் இலவச திட்டங்கள் கிடைக்க வழி செய்யப்பட்டது*.
5. அரசு ஆணை G.O.Ms.No.44 Dt: May 20, 1998 ன் படி, தமிழக அரசு பணியிடங்களில் ஆதி திராவிட மற்றும் பழங்குடி இனத்தைச்சேர்ந்தவர்களுக்கான இடஒதுக்கீடு சதவிகிதத்தை முழுமையாக்கி காலி இடங்களை நிரப்ப வகை செய்யப்பட்டது.
6. *அரசு ஆணை G.O. (Ms). No. 50 Dt: April 29, 2009 ன் படி, அருந்ததிய இனமக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.*

பிரான்சில் தீவிரவாத இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்!

francetamilar.com :“நாம் போரில் உள்ளோம். இஸ்லாமிய அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் முற்றாகஅழித்தொழிக்கப்படும். எங்களின் எதிரிகள் நாட்டிற்குள்ளும், வெளியிலும் உள்ளனர். 

நாட்டிலுள்ள அடிப்படைவாத, தீவிரமதவாத இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்‘” என Nice நகரின் தேவாலயத்திற்குள் நடாத்தப்பட்ட இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட்டார்மனின் (Gérald Darmanin) தெரிவித்துள்ளார்.

 சார்லி எப்தோவின் முன்னாள் அலுவலகம் மீதான தாக்குதல்,   Nice தாக்குதல், காவற்துறையினர் மீதான தாக்குதல் எனத் தொடர்சியான இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்கள் வலுத்து வருகின்றன. அடிப்படை தீவிர மதவாத இஸ்லாமியர்கள் 14பேர் இதுவரை நாட்டை விட்டு வெளியெற்றப்பட்டுள்ளனர்.

வெள்ளி, 30 அக்டோபர், 2020

ஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை ஊழலின் ஊற்றாக அதிமுக அரசு விளங்குகிறது: மு.க.ஸ்டாலின் அறிக்கை

dhinakaran :  சென்னை: ஊழலின் ஊற்றாக அதிமுக அரசு விளங்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  இதுகுறித்து, மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது என்று முன்கூட்டியே தெரிந்தும்,  முதலமைச்சர் பழனிசாமியும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் காட்டிய அலட்சியத்தால், இன்றைக்கு ஒரு நாள் மழையைக் கூடத் தாங்க முடியாமல் சென்னை மாநகரத்தின் முக்கிய சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாகக்  காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் தொடரப்போகும் வடகிழக்குப் பருவமழையால், சென்னை மீண்டும் ஒரு ‘டிசம்பர் 2015’ வெள்ள அபாயத்தைச் சந்திக்கப் போகிறதோ என்ற  அச்சம் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்வாய்களை முறைப்படி முன்கூட்டியே தூர் வாரி, சீரமைத்து வேண்டிய இடங்களில் அகலப்படுத்தி, இந்த பருவ மழையைச் சந்திக்கச் சென்னை மாநகராட்சி தயாராகியிருக்க  வேண்டும்.

வட்டிக்கு வட்டி தள்ளுபடி விவசாய கடன்களுக்குப் பொருந்தாது: மத்திய அரசு!

வட்டிக்கு வட்டி  தள்ளுபடி விவசாய கடன்களுக்குப் பொருந்தாது: மத்திய அரசு!

;minnampalam : வட்டி மீதான வட்டி தள்ளுபடி விவசாயம் சார்ந்த கடன்களுக்குப் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   கொரோனா ஊரடங்கு காரணமாகப் பொருளாதாரம், மக்களின் வருமானம் என அனைத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆறு மாதங்களுக்கான, கடன் தவணைகளைச் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியது.   எனினும் இந்த ஆறுமாத கால கடன் தவணைகளுக்கு வட்டி மீதான வட்டி வசூலிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.     இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தது. 

சக மனிதனை நாம் ஏன் மதிப்பதில்லை? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர்கிறது...

Kathir RS : · கேள்வி: சக மனிதனை நாம் ஏன் மதிப்பதில்லை? அல்லது சக மனிதனை மதிக்க நாம் ஏன் காரணங்களைத் தேடுகிறோம்..? 

பதில்: நமது மரபில் அல்லது மரபணுவில் உறைந்து போன ஒரு கீழான கொள்கையே இதற்கு காரணம். இழிவான தீண்டத் தகாத மனிதர்களும் புனிதமான பூசிக்க வேண்டிய மனிதர்களும் இருக்கிறார்கள் என்ற கருத்தை எல்லோர் மனதிலும் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் அழுத்தமாக விதைத்து வளர்த்தது மனுதர்மம் எனும் நஞ்சு.

அதை தொடர்ந்து பிற வேத இதிகாசங்களும் பல ஆயிரம் வருடங்களுக்கு இவற்றை உறுதி செய்து கொண்டே இருந்தன.
மனித இனத்திற்கு எதிரான இந்த சமூக சீர்கேட்டை எதிர்த்த போராளிகள் புத்தர் தொடங்கி பெரியார் வரை தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருந்தாலும் இந்த இந்த நச்சுத்தன்மையை மனிதனின் மனத்திலிருந்து முழுவமுமாக நீக்க முடியவில்லை.
ஊறுகாய் ஜாடியை எத்தனைதான் கழுவினாலும் ஊறுகாய் நெடி போவதில்லையே அதைப்போல.
மனிதர்களில் இழிவானவர்கள் இருக்கிறார்கள் அவர்களை நாம் அவமதிக்கலாம் ஆதிக்கம் செய்யலாம் ஒடுக்கலாம் என்ற எண்ணம் இந்திய சமூகத்தின் மனங்களில் படிந்திருக்கும் ஒரு நிரந்தரமான நச்சுத்தன்மை.
இதில் பாதிக்கப்படும் மனிதனுக்கும் கூட இதே நச்சுத்தன்மை உண்டு.அவன் கொஞ்சம் மேலெழும் போது அவனை விட சற்று கீழான மனிதனிடம் இதே நச்சுத்தன்மையை காட்டுவான்.

செனகலில் இருந்து ஸ்பெயின் கெனரி தீவுகளுக்கு சென்ற படகு மூழ்கி 140 பேர் பலி

தினத்தந்தி :டகர் கடந்த சனிக்கிழமையன்று செனகல் நகரமான எம்பூரிலிருந்து சுமார் 200 பயணிகள் ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு புறப்பட்டனர். படகு சென்று கொண்டு இருக்கும் போது திடீர் என தீப்பிடித்து செனகலின் வடமேற்கு கடற்கரையில் செயிண்ட் லூயிஸுக்கு அருகில் மூழ்கியது. இந்த விபத்தில் 140 பேர் உயிரிழந்துள்ளனர். செனகல், ஸ்பானிஷ் கடற்படைகள் மற்றும் அருகில் இருந்த மீனவர்கள் 59 பேரை மீட்டனர் மற்றும் 20 பேரின் உடல்கள் மீடகப்பட்டன. மேற்கு ஆபிரிக்காவிலிருந்து கேனரி தீவுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு நான்கு மடங்காக 11,000 ஆக அதிகரித்துள்ளது. 663 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்லும் பதினான்கு படகுகள் செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்த பயணத்தை மேற்கொள்ள முயற்சித்தன - அவற்றில் பல படகுகள் விபத்தில் சிக்கி மூழ்கி உள்ளன.

தமிழகம் மீட்போம் ! உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகிறது! ஒதுங்கியது போதும்!

Kandasamy Mariyappan : · Reservation நாட்டின் வளர்ச்சியை தடுத்து விட்டது! Reservation ஒரு சிலருக்கு மட்டுமே! எனவே Reservation பற்றி பேசுவது வீண்!

இப்படி பலரின் மனதில் இருப்பது வருத்தமாக இருக்கிறது! இதன் வெளிப்பாடுதான் EWS 10% கொடுத்த பொழுதும், OBC 27% கொடுக்காத பொழுதும், MBBS சேர்க்கைக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% கொடுக்க மறுத்து பொழுதும் எந்த ஒரு கோபமும் நம்மிடம் இல்லை!
மத்திய அரசு பணிகள் மற்ற மாநிலத்தவர்கள் எடுத்துக் கொண்ட பொழுது....
எனக்கு கிடையாது, நான் ஏன் பேசனும்!
IAS/IPS/IFS தேர்வில் குறிப்பிட்ட Coaching centreகளில் பயில்பவர்களே குறிப்பாக வடக்கத்தியர்களே தேர்ச்சி பெறும் பொழுது......
எனக்கு கிடையாது, நான் ஏன் பேசனும்!
NEET, JEE தேர்வில் குறிப்பிட்ட Coaching centreகளில் பயில்பவர்களே குறிப்பாக வடக்கத்தியர்களே தேர்ச்சி பெறும் பொழுது......
எனக்கு கிடையாது, நான் ஏன் பேசனும்!
எனது மாநிலத்தில் உள்ள MBBS இடங்கள் மற்றவர்களுக்கு செல்கிறதே....
எனக்கு கிடையாது, நான் ஏன் பேசனும்!
தமிழ்நாட்டு அரசு பணிகள் மற்ற மாநிலத்தவர்களுக்கு செல்கிறதே...
எனக்கு கிடையாது, நான் ஏன் பேசனும்!
கூடங்குளம் அணு உலை வெடித்தால் அந்த பகுதியே அழிந்து விடுமே...
நான் அங்கே இல்லை, நான் ஏன் பேசனும்!

பார்ப்பனியத்திற்கு மரண அடி கொடுத்த ஆங்கிலேய ஆட்சி ! பார்ப்பனர்கள் ஆங்கிலேயர்களை வெறுக்கும் காரணங்கள்!

W. B. பழனி  : பிரிட்டிஷார் Vs பிராமணர்கள் பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும், ஷத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும், வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த, இந்து மனுதர்மச் சட்டத்தை பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல், சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்
1773 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரசு பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.
ஷத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை,
1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.
1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது.
1813 ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும்.
(இந்து மனு சட்டம் VII 374, 375),
ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம். ஆனால், அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்துவிட்டால் அது பிணம் போன்றதேயாகும்.
(இந்து மனு சட்டம் IX 178)
பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில் பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது

நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்- எர்டோகனின் தாகத்தால் தவிக்கும் துருக்கி

Kathir Kumaran : · நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்-

எர்டோகனின் தாகத்தால் தவிக்கும் துருக்கி ஒட்டமான் இஸ்லாமிய பேரரசு, துருக்கியைத் தலைமையிடமாகக் கொண்டு வடகிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆப்ரிக்க நாடுகளை ஆட்சி செய்தது. கி.பி. 1500 - 1800 ஆம் ஆண்டுகளில் மிக வலுவான பேரரசாக இருந்தது. இதே போன்றதொரு இஸ்லாமிய பேரரசை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் துருக்கி அதிபர் ரெசெப் தாயூப் எர்டோகன் உள்ளார்.      இஸ்லாமிய நாடுகளின் நன்மதிப்பைப் பெற்று, அவற்றின் ஒரே தலைவராகத் திகழ வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்படுகிறார். ஆனால், அவரது கனவுக்கு உதவிகரமாக இருக்க வேண்டிய துருக்கியின் பொருளாதாரம் தான் மிகவும் பலவீனமாக காணப்படுகிறது. அதிபர் எர்டோகனின் ஆட்சியில் துருக்கி நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு, ஏற்றுமதி வீழ்ச்சி, நாணய வீழ்ச்சி, தனிமைப்படுத்தப்படுதல் போன்ற காரணங்களால் துருக்கியின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வியாழன், 29 அக்டோபர், 2020

1400 ஏக்கர் நிலத்தை சுருட்ட வந்து சிக்கிய கேரள சேட்டன்கள்..! சிங்கத் தமிழச்சியின் சீற்றம்

அப்பாடா…! கலைந்தது ரஜினியின் அரசியல் மாயை!.. சாவித்திரி கண்ணன்

 

aramonline.in :உலகில் முப்பது ஆண்டுகளாக முடியாத ஒன்றை, முடித்துக் காட்டிவிடுவதாக நம்ப வைத்து மக்களை முட்டாளாக வைத்திருந்த ஒரு நபரும்,அப்படி ஏமாந்த ஒரு தேசமும் தமிழகமாகத் தான் இருக்க முடியும்! இந்த விவகாரத்தில் மக்களை மட்டுமல்ல தன்னைத் தானே ரஜினி ஏமாற்றிக் கொண்டார் என்றும் நான் சொல்வேன்!    தான் ஓடமுடியாத மண்குதிரை என்று அவருக்கே நன்றாக தெரியும்! ஆனால்,என் முதுகில் தமிழகத்தையே சுமந்து கரைசேர்த்துவிடுவேன் என்ற நம்பிக்கையை  மறை முகமாகத் திரைப்படங்களிலும், நேரடியாக ஊடகங்களிலும் அவர் தொடர்ச்சியாக கட்டமைத்து அதைக் கலைந்து விடாமல் காப்பாற்றியும் வந்தார். ஒரு வகையில் மக்களை காக்கவைத்துவிட்டு தனக்கான ஒரு வாழ்வை எந்த பதட்டமும் இல்லாமல் சுகமாக அவர் வாழ்ந்தார் என்றும் சொல்லலாம்!

இண்டர்காமில் முடிவைச் சொன்ன ரஜினி.. அரசியலை விட உயிர்தான் முக்கியம். கண்கலங்கிய நிர்வாகி!

minnambalam :ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப் போவதில்லை என்ற தகவல் ரஜினி வெளியிடுவதைப் போன்ற அறிக்கை வாயிலாக சில தினங்களுக்கு முன் சில விஐபிக்களின் வாட்ஸ் அப் க்ரூப்பில் வெளிவந்தது. ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் அதிர்வு கலந்த விவாத்தை இந்த அறிக்கை ஏற்படுத்தியது.
இண்டர்காமில் முடிவைச் சொன்ன ரஜினி:  கண்கலங்கிய நிர்வாகி!

இதை மின்னம்பலத்தில் 27 ஆம் தேதி அரசியல்: ரஜினியின் சர்ச்சை அறிக்கை?என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த அறிக்கை பற்றி ரஜினியிடம் இருந்து எந்த ரியாக்‌ஷனும் வெளியாகாத நிலையில், இது யார் மூலம் வெளியிடப்பட்டது என்பது பற்றியும் விசாரித்து அரசியலுக்கு முற்றுப்புள்ளி: தயாராகும் ரஜினி அறிக்கை என்ற தலைப்பில் வெளியிட்டோம்   இப்போது வரை இதுகுறித்து ரஜினியிடம் இருந்து அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வராத நிலையில் இதுகுறித்து அரசியல், பத்திரிகை வட்டாரத்தினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே ரஜினி மன்றத்தினரிடையே இந்த பரபரப்பு குறித்து விசாரித்தோம்.

காதலன் மீது திராவகம் வீசிய இளம்பெண் படிக்க வைத்து ஆளாக்கிய தனக்கு துரோகம்......

webdunia : படிக்க வைத்து ஆளாக்கிய தனக்கு துரோகம் செய்துவிட்டதாக காதலன் மீது திராவகம் வீசிய இளம்பெண் பற்றிய செய்தி பரபரப்பை


ஏற்படுத்தி உள்ளது.      அகர்தலா: சினிமாவை மிஞ்சும் இந்த ருசிகர சம்பவம் திரிபுராவில் நடந்தது. அங்குள்ள கோவாய் நகரம் அருகே உள்ளது பெல்சேரா கிராமம். இங்கு வசிக்கும் சவுமென் சந்தல் (வயது 30) என்பவர் காயங்களுடன் அகர்தலா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ‘ஆசிட்’ (திராவகம்) தாக்குதலில் காயம் அடைந்து மூக்கு, கண் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது இதுபற்றி அவரது சகோதரர், அண்ணனின் பெண் தோழியான பினட்டா சந்தல்(27) திராவகம் வீசியதாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் பினட்டாவை பிடித்து விசாரித்தபோது பினட்டா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

7.5% இடஒதுக்கீடு அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

tamil.oneindia.com/ ென்னை: மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது... 

சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்டமசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர தாமதமானதால் தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டது. மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது..      பிறகு அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியும் ப்பட்டது.. ஆனால், இதுவரை ஆளுநர் அதற்கு ஒப்புதல் தரவில்லை. வேண்டுமென்றே இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.   மேலும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகளும் கருத்து தெரிவித்திருந்தனர். 

பிரான்ஸ்: தேவாலயத்துக்குள் பெண்ணின் தலையை துண்டித்த இஸ்லாமிய பயங்கரவாதி.. 3 பேர் பலி .. attacker kept repeating the words "Allahu Akbar"

Hemavandhana - tamil.oneindia.com பாரீஸ்: சர்ச்சுக்குள் கத்தியுடன் திடீரென நுழைந்த மர்மநபர், அங்கு பிரார்த்தனையில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. இதில் ஒரு பெண்ணின் தலையை அப்படியே துண்டித்து எடுத்த கொடூரமும் பிரான்ஸ் நாட்டில் நடந்துள்ளது! maalaimalar : பிரான்சில் தேவாலயத்தில் நுழைந்த இஸ்லாமிய  பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரு பெண் தலைதுண்டித்து கொல்லப்பட்டார். பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேளிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய பாரிஸ் நகரை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடி கடந்த 16-ம் தேதி தலைதுண்டித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் கேலிச்சித்திரங்களை காட்டியதால் தலைதுண்டித்து கொல்லப்பட்ட சாமுவேலின் அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் பங்கேற்றார். அப்போது பேசிய அதிபர் இம்மானுவேல்,’கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை’ என தெரிவித்தார். ஆனால், இம்மானுவேலின் கருத்துக்கு துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. 

ஒக்ஸ்போர்ட் Oxford கொரோனா தடுப்பூசி நவம்பரில் வெளிவரும்.. Oxford-AstraZeneca COVID-19 vaccine

aathavannews :  : ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுப்பு நவம்பர் முதல் வாரத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

பிரித்தானியாவில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகளை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.        நவம்பர் 2 ஆம் திகதி தொடங்கும் வாரத்திலிருந்து தடுப்பூசிக்குத் தயாராக இருக்கும் படி குறித்த வைத்தியசாலைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.                     உலகில் உள்ள ஒவ்வொருவரது எதிர்ப்பார்ப்பும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மீது இருக்கும் நிலையில் ரஷியா, அமெரிக்கா, சீனா, பிரித்தானியா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

NXIVM அமெரிக்காவில் காம வழிபாட்டு முறை தலைவருக்கு 120 ஆண்டு சிறை

BBC :அமெரிக்காவின் மிகப்பெரிய பாலியல் அமைப்பின் தலைவரான கீத் ரெனேரிக்கு 120 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம். நெக்சியம் எனும் பாலியல் வழிபாட்டு அமைப்பின் நிறுவனர் இவர். கடந்தாண்டுதான் பெண்களை கடத்துவது, குழந்தைகளை வைத்து ஆபாசப் படம் எடுப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றார் கீத் ரெனேரி.

ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் நிறுவனங்கள் தப்புவது எப்படி? அமெரிக்க சட்டப்பிரிவு 230

BBC : சுந்தர் பிச்சை (கூகுள்), டோர்ஸே (ட்விட்டர்), மார்க் ஜக்கர்பெர்க் (ஃபேஸ்புக்) பயனர்களின் இடுகைகள் விதிகளை மீறும் வகையில் அமையும்போது அவை எவ்வாறு கையாளப்படுகின்றன என்பது குறித்து ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ஆகிய மூன்று சமூக ஊடக பெரு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளிடம் அமெரிக்க எம்.பி.க்கள் குழு புதன்கிழமை விசாரணை நடத்தியது. இந்த விசாரணை முழுமையாக அந்நாட்டு சட்டப்பிரிவு 230-ஐ மையப்படுத்தியே இருந்தது. கூகுள்

அமெரிக்க அதிபர் உட்பட அந்நாட்டின் எம்.பி.க்கள் தேர்தல் இன்னும் ஒரு வாரத்தில் நடக்கும் நிலையில், இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.  தற்போதைய நடைமுறைப்படி, சமூக ஊடக பயனர்களின் பதிவுகள் தொடர்பாக அந்த நிறுவனங்களை விசாரிக்கும் வழக்கம் இல்லாதபோதும், இதை இப்படியே விட்டால், அது தவறான பழக்கமாகி விடலாம் என சில எம்.பி.க்கள் கூறியதையடுத்து, இந்த விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது.

ஒரு கொலையை மறைக்க ஒன்பது கொலைகள்! -‘முறையற்ற காதல்’ குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!

nakkheeran.in - அதிதேஜா : தெலங்கானா மாநிலம் - வாரங்கல் மாவட்டம் -
INCIDENT IN TELUNGANA
கோரிகுண்டா கிராமத்தில் உள்ள சணல் தொழிற்சாலையில் உள்ள கிணற்றில், கடந்த மார்ச் மாதம் 9 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மசூத்,  அவரது மனைவி நிஷா ஆகியோர்,   குடும்பத்தினருடன் கடந்த 20 ஆண்டுகளாக  வாரங்கல் - கீர்த்தி நகரில் உள்ள கோணிப்பை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். அப்போது பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்பவருடன்,  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், நிஷாவின் உறவினர் ரபிகா என்பவர்,  மேற்குவங்கத்தில் இருந்து தனது 16 வயது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் பிழைப்பு தேடி அங்கு வந்தார்.

வாரங்கல்லில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த ரபிகா, சஞ்சய் குமாருக்கு சமையல் செய்து கொடுத்து,  அதற்கான பணத்தைப் பெற்று வந்தார். அவ்வாறு ஏற்பட்ட பழக்கம்,  நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதனால், மூன்று பிள்ளைகளுடன் ரபிகா, சஞ்சய்குமாருடன் திருமணம் செய்துகொள்ளாமல், குடும்பம் நடத்தத் தொடங்கினார். இந்நிலையில்,  ரபிகாவின் வயதுக்கு வந்த மகளுடன் சஞ்சய்குமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கவனித்த ரபிகா, தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, தற்பொழுது தனது மகளுடன் நெருங்கிப் பழகுவது முறையானது அல்ல என எச்சரித்துள்ளார்.

பிரான்ஸ் சுதந்திரத்தை கைவிடாது. நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை” – பிரான்ஸ் ஜனாதிபதி உறுதி !

thesamnet.co.uk : பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் புறநகர் பகுதியான கன்ஃபன்ஸ்-செயிண்டி-ஹனோரின் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாமுவேல் பெடி (வயது47).  இவர் கடந்த 5-ம் திகதி தனது வகுப்பில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியுள்ளார். கருத்து சுதந்திரம் தொடர்பான வகுப்பு நடந்த விவாதத்தில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை காட்டியுள்ளார். அப்போது அந்த வகுப்பில் படித்துவந்த ஒரு மாணவனின் பெற்றோர் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை காட்டக்கூடாது என சாமுவேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சாமுவேலுக்கு பல தரப்பில் இருந்தும் எச்சரிக்கையும் வந்துள்ளது. இதற்கிடையில், பள்ளிக்கூடம் அருகே கடந்த 16-ம் திகதி மாலை நடந்து சென்று கொண்டிருந்த சாமுவேல் பெடியை பின் தொடர்ந்து வந்த 18 வயது இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சாமுவேலின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

புதன், 28 அக்டோபர், 2020

சீனா இலங்கையின் நிலம். கடல்பகுதிகளை ஆக்கிரமிப்பதற்காக ஒப்பந்தங்களை.. அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ

thesamnet.co.uk :சீனா இலங்கையின் இறையாண்மையை மீறும் வகையில் நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை ஆக்கிரமிப்பதற்காக மோசமான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது”  என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த பின்னர் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.    தொடர்ந்தும் ஊடகவியலாளர்களுடன் பேசிய அவர்,     இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் மோசமான ஒப்பந்தங்களை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டுவந்துள்ளது.

இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்! நீட் தேர்வு. ரஃபேல் ஊழல். இந்தி, விலைவாசி உயர்வு. கீழடி முடக்கம்

ஷங்கர் :கடந்த இரண்டு ஆண்டுகளில் .......! வைரமுத்துவின் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!     நடிகர் விஜய் படம் இந்துக்களை புண்படுத்திய தால் பிஜேபி போராட்டம்!      நெல்லை கண்ணன் பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!     சுகி சிவம் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!   நடிகர் சிவகுமார் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!      நடிகர் விஜய் சேதுபதி கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!    நடிகை ஜோதிகா கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!       கருப்பர் கூட்டம் சுரேந்திரன் கருத்து இந்துக்கள் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்?       திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தும் போராட்டம்!      எம்ஜிஆர் சிலைக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை!  பெரியார் சிலைக்கு காவி உடை சர்ச்சை!      பெரியார் சிலைகளை சேதப்படுத்தி பதட்டம்!    அண்ணா சிலைக்கு காவி கொடி கட்டி பதட்டம்!         இது போல,கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாதம் ஒரு முறை யாராவது, எங்காவது, எதையாவது பேச அதை வைத்து பிஜேபி போராட்டம், ஆர்ப்பா ட்டம் என்று 7 கோடி தமிழ் மக்களையும் திசை திருப்பி வருகிறது.        இவர்கள் இப்படி திசை திருப்பி வருவதால்     மத்திய  அரசு  மாநில   அரசால் பாதிக்கப்படும் மக்களின் அன்றாட பிரச்சினைகள் முக்கியத் துவம் இல்லாமல் நீர்த்துப் போகின்றன.

நீட் தேர்வு
ரஃபேல் ஊழல்
இந்தி திணிப்பு
விலைவாசி உயர்வு
கீழடி ஆய்வு முடக்கம்
வேலை வாய்ப்பின்மை
காவல் துறை அராஜகம் 

பிறப்புச் சான்றிதழில் தாயின் பெயர் மட்டும் போதும். தந்தை பெயர் அல்லது முதலெழுத்து (இனிஷியல்) கட்டாயமில்லை .. உயர் நீதி மன்றம்

 திருச்சியைச் சேர்ந்த விவாகரத்து ஆன பெண் ஒருவர் தனக்கென ஒரு குழந்தை வேண்டும் எனக் கருதி விந்தணு கொடையாளர் ஒருவரது உதவியுடன் செயற்கைக் கருத்தரிப்பு செய்து பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழுக்காக மனுவில் குழந்தையுடைய தந்தை பெயர் என்னும் இடத்தைப் பூர்த்தி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தப் பட்டுள்ளார். எனவே மாநகராட்சி அலுவலகத்தில் முறையிட்டபோது விந்தணு கொடையளித்தவரின் பெயரை இணைக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பெண், சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
அதில், தான் ஒற்றைப் பெற்றோராக இருக்கும் பட்சத்தில் தாயின் பெயர் மட்டுமே பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்தால் போதுமானது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இதை விசாரித்த மாண்புமிகு நீதிபதி ஐயா M.S.ரமேஷ் அவர்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கினார்.
அந்தத் தீர்ப்பில், தந்தையை இழந்த குழந்தை அல்லது தந்தையைப் பிரிந்து தாயின் பாதுகாப்பில் மட்டும் வளரும் குழந்தை, தந்தையுடைய வருமானம் இன்றித் தாயின் வருமானத்தில் மட்டுமே வளரும், வாழும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் அதன் தாயின் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தாலே போதும். தந்தையுடைய பெயர் அல்லது முதலெழுத்து (இனிஷியல்) சேர்க்க வேண்டிய கட்டாயமில்லை எனவும், பள்ளிச் சேர்க்கை மற்றும் சொத்துப் பதிவு ஆகியவற்றிற்கும் கூட இது பொருந்தும் எனவும் அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.

தூத்துக்குடியில் முடி திருத்தகத்தில் நூலகம்! பத்து பக்கங்களுக்கு மேல் வாசித்தால் ரூபாய் 30 தள்ளுபடி !

 
Thoothukudi People : · தூத்துக்குடியில் முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்! பத்து பக்கங்களுக்கு மேல் வாசித்தால் அவருக்கு ரூபாய் 30 தள்ளுபடி ! வருகிறவர் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து பத்து பக்கங்களுக்கு மேல் வாசித்தால் அவருக்கு ரூபாய் 30 தள்ளுபடி தந்து, அசத்துகிறார் முடிதிருத்தும் கலைஞர் பொன் மாரியப்பன்! வழக்கமான முடி திருத்தகங்களில் காணப்படும் அரைகுறை ஆடைகளுடன் கூடிய நட்சத்திரப் படங்கள் என்ன, எந்த நட்சத்திரப் படங்களும் இந்தக் கடையில் இல்லை. மாறாக, மர அலமாரியில், புத்தகங்கள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்க முடி திருத்த வந்தோர் அமைதியாக அந்தப் புத்தகங்களை எடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்..

தன் கடைக்கு வருபவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, கடைக்குள் சிறிய நூலகத்தை அமைத்துள்ளார் தூத்துக்குடி மில்லர்புரத்தில் 'சுசில்குமார் பியூட்டி கேர்' என்ற பெயரில் முடி திருத்தகம் நடத்திவரும் பொன்.மாரியப்பன். அதை முடிதிருத்தும் கடை என்பதைவிட மூளையை புதுப்பிக்கும் கடை என்று தாராளமாகச் சொல்லலாம்.
வழக்கமாக முடி திருத்தும் கடைக்குச் செல்கிறவர்கள் செய்தித்தாள்களை வாசிப்பதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் பொன் மாரியப்பன் கடைக்குச் செல்கிறவர்கள் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பதை கண்டிப்பாகக் காண முடிகிறது.

பெண்ணின் வீட்டுமுன்பு சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகம் AIIMS மருத்துவமனை உறுப்பினராக நியமனம்

zeenews.india.com :ஒரு பெண்வீட்டின் முன் சிறுநீர்கழித்து அவரிடம் ஆபாசமாக, அறுவெறுப்பாக நடந்துகொண்ட பிஜேபி கட்சியை சேர்ந்த சண்முகம் சுப்பையாவை உடனடியாக மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை.   

பெண்ணின் வீட்டுமுன்பு சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகம் AIIMS மருத்துவமனை உறுப்பினராக நியமனம்
accused Dr Shanmugam Subbiah now on AIIMS Madurai board (Photo: Twitter)

சென்னை: மதுரைக்கு வரவிருக்கும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கான (Madurai AIIMS) தலைவர் மற்றும் பிற வாரிய உறுப்பினர்கள் குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் தலைவர் டாக்டர் .வி.எம்.கடோச் (Dr VM Katoch) தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஆனால் பிரச்சனை இதுவல்ல. சில நாட்களுக்கு முன்பு மூத்த பெண்மணியின் வீட்டுக்கு முன்னால் குப்பைகளை வீசி எறிந்து சிறுநீர் கழித்து அநாகரிக செயல்களில் ஈடுபட்ட சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் முதற்கட்ட தேர்தல்: மாலை 3 மணி நிலவரப்படி 46.29% வாக்குப்பதிவு

பீகார் முதற்கட்ட தேர்தல்: மாலை 3 மணி நிலவரப்படி 46.29% வாக்குப்பதிவு

maalaimalar :பாட்னா, பீகார் சட்டசபை தேர்தலுக்கான 3 கட்ட வாக்கு பதிவில் முதற்கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்கு பதிவில் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் உள்ள 6 மந்திரிகளின் அரசியல் எதிர்காலம் நிர்ணயம் செய்யப்படும். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளன. 7 லட்சம் சேனிடைசர்கள், 46 லட்சம் மாஸ்குகள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 6.7 லட்சம் முக கவசங்கள், 23 லட்சம் ஜோடி கையுறைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் 2 கோடி பொதுமக்கள் வாக்களிக்கின்றனர்.

தெலங்கானா வடமாநில தொழிலாளிகள் கொலை வழக்கு.. குற்றவாளிக்கு மரண தண்டனை .. நீதிமன்றம்

nakkeeran: தெலங்கானா மாநிலம், வாரங்கலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 9 பேரின் உடல்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.  

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கொர்ரகுண்டா பகுதியில் செயல்பட்டுவரும் சணல் தொழிற்சாலையில் 20க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். சதீஷ் குமார் என்பவருக்கு சொந்தமான இந்தத் தொழிற்சாலை ஊரடங்கு காரணமாக மூடப்பட்டதால், தொழிலாளர்கள் அனைவரும் சதிஷ்குமாரின் வீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், கடந்த மே மாதம் தொழிலாளர்களைப் பார்க்கச் சென்ற சதீஷ்குமார், அங்கிருந்த சில தொழிலாளர்களைக் காணாததால் அருகே உள்ள பகுதிகளில் தேடிப் பார்த்துள்ளார். அப்போது அங்கு உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் நான்கு பேரின் உடல்கள் மிதப்பதை அவர் கண்டுள்ளார். இதனையடுத்து இந்தத் தகவலறிந்த வாராங்கல் போலீஸார், வருவாய்த் துறையினர், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரின் உடல்களை மீட்டனர்.

இயக்குனர் சீனு ராமசாமி உயிருக்கு ஆபத்து? முதல்வரிடம் உதவி கேட்ட இயக்குனர்!

உயிருக்கு ஆபத்து: முதல்வரிடம் உதவி கேட்ட இயக்குனர்!
minnambalam : இயக்குனர் சீனு ராமசாமி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடல் நகர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர். தொடர்ந்து, நீர் பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட சமூகப் பார்வையுள்ள அனைவரும் பாராட்டத் தக்க திரைப்படங்களை எடுத்தவர். ‘800’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என திரைத் துறையிலிருந்து முதலாவதாக எழுந்த குரல் இவருடையதுதான். இந்த நிலையில் இன்று (அக்டோபர் 28) காலை சீனு ராமசாமி திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்” என்று பதிவிட்டிருந்தார். இது திரைத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.    பின்னர் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தவர், தனக்கு அரசியல் சினிமா எடுக்கத் தெரிந்த அளவுக்கு சினிமாவில் அரசியல் தெரியாது எனக் குறிப்பிட்டார். விஜய் சேதுபதியின் நலன் கருதி தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதிக்கக் கூடாது என்பதால் 800 பட விவகாரம் தொடர்பாக என்னுடைய கருத்துக்களை தெரிவித்தேன். ஆனால், நான் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாக தொடர்ந்து சித்தரிக்கப்பட்டது என்றார்.

சீனாவின் கொரோனா வுஹான் நகரம் சீனாவின் முக்கியமான சுற்றுலா மையமாக மாறி வருகிறது. BBC

நார்பெர்டோ பரெடெஸ் - பிபிசி உலக சேவை : இந்த தலைமுறை தன் நினைவில் எப்போதும் வைத்திருக்கும் நகரங்களில் ஒன்று வுஹான். இந்த நகரத்தில் இருந்துதான் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. உலக நாடுகளை முடக்கிப் போட்டது. 

ஆனால், இப்போது அந்த நகரம் எப்படி இருக்கிறது எனப் பலருக்குத் தெரியாது. ஆனால், அந்த நகரத்தின் இப்போதைய நிலையை அறிந்தால் ஆச்சரியம் கொள்வீர்கள். ஆம், இப்போது அந்த நகரம் சீனாவின் முக்கியமான சுற்றுலா மையமாக மாறி வருகிறது. சீனாவின் தேசிய தினத்தை முன்னிட்டு, அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து 7ஆம் தேதி வரை விடுமுறை இருக்கும். இந்த வாரத்தை `தங்க வாரம்` என அழைக்கிறார்கள். இந்த சமயத்தில் மட்டும் வுஹான் நகரம் அமைந்துள்ள ஹூபே மாகாணத்திற்குக் குறைந்தது 5.2 கோடி சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளார்கள். 5.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அந்த மாகாணத்திற்கு இந்த ஒரு வார காலத்தில் வருவாயாக வந்துள்ளது.

இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் பிரான்ஸ் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்- பிரான்ஸ் அறிவுறுத்தல்

  thinathanthi : பாரிஸ், நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை மாணவர்களிடத்தில் காட்டி, ‘பேச்சு, கருத்து சுதந்திரம்’ பற்றி வகுப்பறையில் விவாதத்தை நடத்திய பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் தலை பள்ளிக்கு வெளியே பத்து நாட்களுக்கு முன்னர் துண்டிக்கப்பட்டது. 

இந்தச் சம்பவம் பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அன்றே போலீஸாரால் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.      இந்தத் தாக்குதலை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், “இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்” என்று கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

கம்யூனிஸ்ட் தியாகி மேடைக்கலைவாணர் நன்மாறன் Ex. எம்எல்ஏ.

ஆர்.எஸ்.மணி  : கம்யூனிஸ்ட் தியாகி மேடைக்கலைவாணர்  நன்மாறன் Ex. எம்எல்ஏ.
சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நன்மாறன் அவர்கள் மதுரையிலிருந்து பேருந்தில் பயணம் செய்து திண்டுக்கல் வந்து கொண்டிருந்தார். . நிகழ்ச்சி துவங்கும் நேரமாகி விட்டதாலும், நிகழ்ச்சி நடைபெறுமிடம் ஸ்டேட் வங்கியின் அருகில் என்பதாலும், பேருந்து நிலையத்துக்கு செல்லாமல் ஸ்டேட் வங்கி பக்கத்திலிருக்கும் நிறுத்தத்தில் அவரை இறங்கச் சொல்லியிருந்தோம்.
முகம் கழுவவும், இயற்கை உபாதையை சரிப்படுத்தவும், நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் வசதி இல்லாததால் , அருகிலுள்ள நான் பணி செய்யும் வங்கிக்கு அவரை அழைத்துச் சென்றேன். இரவு நேரமாதலால் முன்புறம் பூட்டியிருந்தது. ஆயுதக்காவலரை அழைத்து திறக்கச் சொல்லி தோழரை உள்ளே அழைத்துச் சென்றேன் . ஒரு அதிகாரி மட்டும் பணியிலிருந்தார் .

அன்று குஷ்பு கூறிய சொல்லை திரித்து அவர்மீது வீண்பழி .. இன்று அதே பாணியில் குஷ்பு திருமா மீது?

Suguna Diwakar : 'திருமணத்துக்கு முன்பு உறவுகொள்ள நேர்ந்தால் பெண்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்" என்று குஷ்பு சொன்னது திரிக்கப்பட்டு "தமிழ்ப்பெண்கள் இழிவானவர்கள் என்று குஷ்பு சொன்னார்" என்று அவர்மீது தாக்குதல்களும் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. 

இப்போது மனுஸ்மிருதியில் உள்ள ஆணாதிக்க வக்கிரத்தைத் திருமாவளவன் முன்வைக்கும்போது, "திருமா இந்துப்பெண்களை இழிவுபடுத்திவிட்டார்" என்று இந்துத்துவவாதிகள் திரிக்கிறார்கள். ஒரு சொல் திரிக்கப்பட்டால் அதன் விளைவையும் வலியையும் உணர்ந்த குஷ்பு, இன்று அதே இழிவான ஆயுதத்தை எடுப்பது அறமற்ற செயல்.  

ரங்கராஜ் பாண்டே ஏன் வெறுமையாக காட்சி அளிக்கிறார்? எங்கே போனது அந்த கூச்சல்?

Abilash Chandran  :   ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட சங்கிகளின் தகிடுதித்தங்கள்.   ரங்கராஜ் பாண்டே ஒரு திறமையான பேட்டியாளர், செய்தியாளர், ஆனால் காட்சி ஊடகத்தில் இருந்து விலகிய பின் அவருடைய ஒரு முக்கிய குறை வெளிப்படுகிறது - அவருக்கு பதில் அளிக்கத் தெரியாது. அவர் சுயவிளக்கம் கொடுத்து எதைப் பற்றியாவது வாதிடுகிற நிலை ஏற்பட்டால் ஒரு அறிவுஜீவிப் பட்டத்தை சுமக்கு கோமாளியைப் போன்று பரிதாபமாகத் தோன்றுகிறார். நேற்று மனுதர்மத்தை நியாயப்படுத்தி அவர் வெளியிட்ட யுடியூப் காணொலியைப் பார்த்த போது இந்த எண்ணம் உறுதிப்பட்டது. அப்படியே தமிழகத்தில் உள்ள விளக்கெண்ணெய் சங்கிகளின் கருத்துக்களை அங்கங்கே சில புத்தக மேற்கோள்களைக் காட்டி நிரூபிக்க முயன்று பரிதாபமாய் தோற்கிறார்:

பாண்டேவின் கேள்வி: பழமைவாதம், ஆணாதிக்கம், பொதுவான நம்பிக்கைகள் அடிப்படைவாதம் ஆகியவற்றுக்கும் மனு தர்மத்திற்கும் என்ன சம்பந்தம்? உலகம் முழுக்க இந்த பிரச்சனைகள் இல்லையா? கிறித்துவத்தில் இல்லையா, இஸ்லாத்தில் இல்லையா? ஆணாதிக்கம் என்ன இந்துக்கள் கண்டுபிடித்ததா அல்லது அது மனுதர்மத்தால் உருவாக்கப்பட்டதா? 

ஆயுத பூஜையால் அழிந்த தமிழர் அரசு! கொலுவில் வைக்கப்பட்டிருந்தன வீரர் படைக் கலங்கள் ..

ஆயுத பூஜையால் அழிந்த ராஜ்யம்; (விடுதலை” 1-10-2011 )
தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பான் பீஜப்பூர் சுல்தானின் படைத் தலைவர் வெங்காஜி என்பானை வேண்டினான்.
வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டுதலின் பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படை எடுத்து வந்த சமயமானது ஆயுதபூஜை சமய மாகும். படை வீரர்களது படைக் கலங்கள் எல்லாம் ஆயுதபூஜைக்காக கொலுவில் வைக்கப்பட்டிருந்தன.
மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வ தென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்த வனாய் பார்ப்பன மந்திரிகளையும் பார்ப்பனக் குருமார் களையும் அழைத்து ஆலோசனை கேட்டான்.
அதற்கு அந்தப் பார்ப் பனர்கள், மன்னா! கவலைப்படாதீர்கள். ஆயுதபூஜையில் அடுக்கி வைக்கப் பட்டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின் மீது படை எடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜி யாவான். அவனோ ஓர் இந்து, மேலும் பரம வைணவன். 
ஆகவே, திரு மாலுக்கு மிகவும் உகந்த திருத் துழாய்களை (துளசி செடிகளை) நமது நகரின் எல் லையில் தூவிவிட் டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட் டான் என்று சொன்னார்கள்.
மன்னனும் அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தான் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரிபஜனை செய்து கொண்டிருந்தான்.

செவ்வாய், 27 அக்டோபர், 2020

முஸ்லிமாக மதம் மாற மறுத்த இளம் பெண் பட்டப்பகலில் சுட்டு கொலை..ஹரியானா.. சிசிடிவி காட்சி

Hemavandhana - tamil.oneindia.com  : ஃபரீதாபாத்: காலேஜ்-க்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த 21 வயசு மாணவியை, மர்ம நபர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஹரியானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் பாலப்கர் என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள ஒரு காலேஜில் படித்து வருபவர் நிகிதா தோமர்.. 21 வயதாகிறது. கடந்த திங்கட்கிழமை அன்று இவருக்கு தேர்வு நடந்தது.. அதனால் காலேஜ் சென்றுவிட்டு தேர்வையும் எழுதிமுடித்துவிட்டு, தோழியுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

மர்மநபர் ! அப்போது, அங்கு திடீரென ஒரு கார் வந்து நின்றது.. அதில் இருந்து 2 மர்ம நபர்களில் ஒருவர், கையில் துப்பாக்கியுடன் தபதபவென காரில் இருந்து கீழே இறங்கி வந்தார்.. நிகிதாவை வழிமறித்து காரில் கடத்திச் செல்ல முயன்றார்.. ஆனால் அவரை பார்த்ததும் நிகிதா அங்கிருந்து தப்ப முயன்றார்.. எனினும் அந்த நபர் கையில் துப்பாக்கியை எடுத்து கொண்டு பின்னாடியே ஓடினார்.. இறுதியில் அந்த பெண்ணின் தலையில் சுட்டுவிட்டார். 

முரளிதரனாக நடிக்க இருந்த இன்னொரு பிரபல நடிகர்.. ?

.sathiyam.tv/இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் 800 என்ற பெயரில் எடுக்கப்பட இருந்தது. இதில், விஜய்சேதுபதி நடிக்க இருந்தார். ஆனால், ஈழத்தமிழர்களுக்கு எதிராக முரளிதரன் பேசியதாக கூறி, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனால், அப்படத்தில் விஜய்சேதுபதி விலகினார். இந்நிலையில் புதியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 800 படத்தின் கதை முதலில், நடிகர் தனுஷிடம் தான் சொல்லப்பட்டது. ஆனால், அப்படத்தில் நடிக்க தனுஷும் மறுத்து விட்டாராம் . கருணாஸ் மகன் கென்னிடமும் கேட்கப்பட்டது ஆனால் அவரும் தவிர்த்து விட்டார் என்று கூறப்படுகிறது

ஜெ., மரணத்தை ஏன் முன்னிறுத்துகிறது தி.மு.க? – அதிர்ச்சி கொடுக்குமா 5 சி.டி-க்கள்?

.vikatan.com ஆ.விஜயானந்த் :  ஆறுமுகசாமி ஆணையம் என்பது அ.தி.மு.க அரசால் நியமிக்கப்பட்டது. அந்த ஆணையம், `இந்த அரசு வேகமாகச் செயல்படவில்லை’ என்று சொன்னால், கமிஷன் நியாயமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம். `ஜெயலலிதா மரணம் தொடர்பாக, மூன்று மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை தர வேண்டிய ஆறுமுகசாமி ஆணையம், 37 மாதங்களாகத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. `அப்போலோவில் வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக மேலும் ஐந்து சி.டி-க்கள் இருக்கின்றன. அவை வெளியே வரும்போது மொத்த மர்மமும் விலகும்’ என்கிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த புகழேந்தி.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையம், எட்டாவது முறையாக காலநீட்டிப்பு கோரியிருக்கிறது. வரும் 24-ம் தேதியோடு ஆணையத்தின் கால அளவு நிறைவடைவதால், இது தொடர்பாக அரசுக்குக் கடிதம் எழுதயிருக்கும் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி, ஆணையத்தின் விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் பெற்ற தடை உத்தரவை நீக்கக் கோரும் மனுக்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்யவில்லை, இதற்குக் குறைந்தபட்ச ஆட்சேபனைகூட தெரிவிக்காமல் அரசு வழக்கறிஞர்கள் வேடிக்கை பார்த்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார். அ.தி.மு.க அரசால் நியமிக்கப்பட்ட ஆணையமே அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டியது அரசியல் வட்டாரத்தில் உற்று கவனிக்கப்பட்டது.

பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்கும் (இஸ்லாமிய) மத்திய கிழக்கு நாடுகள்!

/tamil.theleader.lk முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமை குறித்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங்கின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குவைத், ஜோர்டான் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளிலுள்ள சில அங்காடிகளில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பிரான்ஸ் அதிபரின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து லிபியா, சிரியா, காசாவில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்கும் முடிவை மத்திய கிழக்கு நாடுகள் கைவிட வேண்டுமென்று பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.

பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்கும் "அடிப்படையற்ற" அழைப்புகள் "ஒரு தீவிர சிறுபான்மை குழுவால் மேற்கொள்ளப்படுவதாக" பிரான்சின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஸ்டாலின் நடமாட முடியாதா? BJP முருகனுக்கு பதிலடி கொடுக்கும் தி.மு.க.வினர்

/tamil.indianexpress.com : பாஜக தலைவர் எல்.முருகன், மு.க.ஸ்டாலின் இனி வெளியே நடமாட முடியாது என்று எச்சரிக்கை விடுத்ததற்கு திமுகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். அவற்றில் சிலவற்றை மட்டும் வாசகர்களுக்கு தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. மனுஸ்மிரிதியில் இந்து பெண்களை பற்றி கூறியுள்ளதைக் குறிப்பிட்டு மனுஸ்மிரிதியை தடை செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன், கூறிய நிலையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மனுஸ்மிரிதியை தடை செய்யக் கோரி விடுதலை கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நடிகை குஷ்பு கைது .. திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற...

தினத்தந்தி : திருமாவளவனுக்கு  எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது  திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். சென்னை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார்  டை விதித்தனர். இந்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் கைது செய்தனர். முட்டுக்காடு அருகே சுந்தரவதனம் எஸ்.பி தலைமையிலான போலீஸ், குஷ்புவை கைது செய்தது


முதலமைச்சராக வேண்டும் என நான் ஆசைப்படக் கூடாதா..? ஆசைப்பட்டால் என்ன தவறு..? -திருமாவளவன்

Arsath Kan - tamil.oneindia.com : ராணிப்பேட்டை: தமிழக முதலமைச்சராக வேண்டும் என தாம் ஆசைப்படக் கூடாதா என்றும் ஆசைப்பட்டால் என்ன தவறிருக்கிறது எனவும் வினவியிருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். திமுக கூட்டணியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு வரும் சூழலில் திருமாவின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தீட்சா பூமி திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள புத்த விஹார் மற்றும் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தாம் தமிழக முதலமைச்சராக வந்தால் மதுவை ஒழிக்கத்தான் முதல் கையெழுத்து போடுவேன் என உறுதியளித்துள்ளார். கைதட்டல் திருமாவளவன் தன்னை முதலமைச்சராக வந்தால் எனக் குறிப்பிட்டு பேசிய போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கரவொலி எழுப்பி ஆரவாரத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

முருங்கை.. உத்தரப்பிரதேசம்.. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முருங்கை மரம்!’ – ஏன் முருங்கையை ஊக்குவிக்கிறது உ.பி அரசு?

ஜெயகுமார் த - Vikatan / Saravanakumar.P : முருங்கையிலுள்ள சத்துகளின் அவசியத்தைப் புரிந்து கொண்ட உத்தரப்பிரதேச அரசு கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் ஒரு முருங்கை மரத்தை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது ுருங்கையிலிருந்து கிடைக்கக்கூடிய இலை, காய், பூ, விதை அனைத்துமே மருத்துவ பண்புகளைக் கொண்டவை. இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு முருங்கை சம்பந்தமான பொருள்கள் ஏற்றுமதியாகின்றன. முருங்கையிலுள்ள சத்துகளின் அவசியத்தைப் புரிந்து கொண்ட உத்தரப் பிரதேச மாநில அரசு கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் ஒரு முருங்கை மரத்தை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
முருங்கை

கோவிட் 19 பெருந்தொற்று தொடங்கியதை அடுத்து, கடந்த ஜூலை மாதத்தில் முருங்கை பரவலாக்கத்திற்கான இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1.7 கோடி முருங்கை நாற்றுகளை உற்பத்தி செய்து அவற்றை மாநிலம் முழுவதும் நடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யாநாத்தும் அம்மாநில வனத்துறையினரிடம், “ஒவ்வொரு கிராமத்திலும் முருங்கையின் அவசியத்தை சொல்லி, அதிலிருக்கும் சத்துகள் குறித்து விளக்கி இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளளார். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைப்பாட்டினைச் சரிசெய்வதற்காக அவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.

திங்கள், 26 அக்டோபர், 2020

மலையக தோட்டப் போராட்டங்களில் உயிர் நீத்த போராளிகள்.. வரலாற்றை திரைப்படமாக எடுங்கள்

 
Nallaiya Vinothan : · மலையகத்தின் வரலாறு தெரியவேண்டும் என்றால் இவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுங்கள். நமது மலையக தோட்டத் தொழிலாளர்களின் உயிர் தியாக #போராளிகள் 1942 இல் முல்லோயா தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த கோவிந்தன்
* 1942இல் புப்பரஸ்ஸ கந்தா தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த  வேலாயுதம், வீரசாமி
*1950 மார்ச் 02 ஆம் திகதி டெவன் தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த வைத்திலிங்கம்
*1953 இல் என்சாவெல தெபுவான தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த எட்லின்நோனா
*1953 நவம்பரில் கல்தோணி தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த பீ.#வெள்ளையன்
*1956 இல் மஸ்கெலியா நல்லதண்ணி தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த #காருமலை
*1956 மே 08 ஆம் திகதி டயகம தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த #அப்புஹாமி ஆப்ரஹாம் சிங்கோ
*1957 ஜூலை 15 ஆம் திகதி உடபுஸ்ஸலாவை எனிக் தோட்டத்தில் உயிர் கொடுத்த #பொன்னையன் #கொம்பாடி ஆகியோர்
*1958 இல் இரத்தினபுரி ஹேய்ஸ் தோட்டப் போராட்டத்தில் உயிர் கொடுத்த நடேசன்

சாத்தான்குளம்: "ரத்தம் சொட்ட, சொட்ட துன்புறுத்திய காவலர்கள்" - சிபிஐ குற்றப்பத்திரிகையில் பதற வைக்கும் தகவல்கள்

BBC :சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ரத்தம் சொட்ட, சொட்ட, மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால் மோசமடைந்த உடல்நிலை காரணமாகவே ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் உயிரிழந்துள்ளதாக மருத்துவ ஆய்வறிக்கைகள், தடயவியல் பரிசோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக அந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தள்ள சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம்

டெல்லியில் உள்ள சிபிஐ காவல் கண்காணிப்பாளர் தன்மயா பெஹரா, கூடுதல் கண்காணிப்பாளர் விஜய் குமார் ஷுக்லா, இது தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடம்

அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்!

 minnambalam : அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு (72), கடந்த அக்டோபர் 13ஆம் தேதி, தீவிர மூச்சுத் திணறல் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதோடு அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சிடி ஸ்கேன் எடுத்ததில் அவரது நுரையீரல் 90 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக அவர் சிகிச்சை பெறும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்தது. 

மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி - இலவசமாக உயிர் காக்கப்படும் .. மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி

 
நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி - மத்திய இணைமந்திரி தகவல்
பிரதாப் சாரங்கி - நிர்மலா சீதாராமன் புவனேஷ்வர்
மாலைமலர்  பீகார் தேர்தலில் வெற்றிபெற்றால் மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கைக்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கொரோனா தடுப்பூசியை தேர்தலில் வாக்கு சேகரிக்கும் கருவியாக பாஜக பயன்படுத்துவதாக கண்டனங்களும் எழுந்துள்ளது. இதற்கிடையில், தமிழ்நாடு, மத்தியபிரதேசம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் தங்கள் மாநில மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளன.அதேபோல் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

SamSung நிறுவன அதிபர் லீ குன் ஹீ காலமானார்! ஆசியாவில் நான்காவது மிகப்பெரிய நிறுவனம் சம்சங்

 T
hambirajah Jeyabalan
: · சம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ காலமானார்! உலகின் மிகப்பெரிய மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ அலருடைய 78ஆவது வயதில் நேற்று (25/10/2020) காலமானார். கடந்த 2014-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட லீ குன் ஹீ தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்தநிலையில் காலமானார் என்று சம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. சாதாரண தொலைக்காட்சி நிறுவனமான இருந்த சம்சங் நிறுவனத்தை லீ குன் ஹீ தனது தந்தையிடம் இருந்து பெற்று இன்று உலகின் பெரிய நிறுவனமாக மாற்றியுள்ளார். ஸ்மார்ட்போன், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மெமரி சிப் உள்ளிட்ட பல்வேறு மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சம்சங் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் “சம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ அக்டோபர் 25-ம் தேதி காலமானார். அவர் உயிரிழந்த செய்தியை குடும்ப உறுப்பினர்கள், அவரின் மகன் உறுதி செய்தனர். லீ குன் நினைவுகளை சம்சங் நிறுவனத்தைச் சேர்ந்த அனைவரும் பகிர்ந்து அவரின் பயணத்தை நினைவு கூர்கிறோம். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆ. ராசா பிறந்த ( 57 ) நாள்! சோதனைகளை சாதனைகளாக மாற்றிய திராவிட தீரர்

 ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கையை அவரின் அரசியல் கோணத்தில் இருந்துதான் பார்க்கவேண்டும் என்ற நியதி கிடையாது . 

பல அரசியல்வாதிகளுக்கு அரசியலுக்கு அப்பால் பல கோணங்களும்  உண்டு . அண்ணா கலைஞர் போன்றவர்கள் கலை  இலக்கியம் நாடகம் சினிமா போன்ற பலதுறைகளில்  பெரும் ஆளுமை உள்ளவர்கள்     எம்ஜியார் கூட ஒரு வெற்றிகரமான நடிகர் என்பதையும் தாண்டி அவர் ஒரு நல்ல திரைப்பட இயக்குனராகும். '   ஆ ராசா அவர்கள் அரசியல்வாதி நல்ல நிர்வாகி என்பதை எல்லாம் விட அவர் உச்சம் பெற்றது 2 ஜி வழக்கு போரில்தான் .   அது  முழு திராவிட இயக்கத்திற்கும் எதிராக கட்டமைக்கப்பட்ட ஒரு போர்தான்.    அந்த போரின் மையப்புள்ளியாக காலம்   ஆ ராசாவை நிறுத்தி இருந்தது.    அந்த போரில் திராவிட இயக்கமும் திமுகவும் அதன் தலைவர்களும் தொண்டர்களும் அடைந்த விழுப்புண்கள் ஏராளம் .

திருமதி கனிமொழியையும் குறி வைத்தே தாக்கினார்கள் .. நிச்சயமாக அவரின் ஆளுமையை இனம் கண்டுதான் அந்த தாக்குதல் அவர் மீது தொடுக்கப்பட்டது.     ஒரு கட்டத்தில் எல்லா அம்புகளும் அத்தனை சக்திகளையும் திரட்டி கொண்டு மூர்க்கத்தனமாக பாய்ந்தது . 

மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

தினத்தந்தி :  : நடப்பு கல்வி ஆண்டிலேயே மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் இன்று (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறுகிறது.

புதுடெல்லி, மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு (ஓ.பி.சி.) 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.

மேலும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. எனினும் இந்த குழுவின் பரிந்துரைகளை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்துமாறும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

வெண்கலக்குரலோன் எஸ்சி.கிருஷ்ணன் பாடல்கள்.. துணை நடிகனாக துவங்கி பாடகரானார்.

எஸ்சி.கிருஷ்ணன் -
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், சீர்காழி கோவிந்தராஜன்
  ப.க
விதா குமார் :
· வெண்கலக்குரலோன் எஸ்சி.கிருஷ்ணன் பாடல்கள்
மல்டி பிளக்ஸ் தியேட்டர் தலைமுறைகளுக்கு மத்தியில் டெண்டு கொட்டகை தலைமுறை பாடகரை எழுதுவது மிக அவசியமென கருதுகிறேன். நேற்று பார்த்த படத்தின் பாடல் மனதில் தங்காத இன்றைய சினிமா சூழலில், 60 ஆண்டுகளுக்கு முன் வெளியான பாடல்களின் வரிகள் மனதில் நிற்கிறதென்பதால் கால ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படாத பழைய சினிமாக்களின் காலம் பொற்காலம் தான். மதுரை கோ.புதூரில் ஆத்திக்குளத்தில் வீரலெட்சுமி டெண்டு கொட்டகை இருந்தது. எனது பால்ய காலத்தின் பெரும்பாலான நாட்கள் கழிந்தது அந்த திரையரங்கில் தான்.
எம்ஜிஆர் படங்கள் என்றால், சொல்லவே வேண்டாம். தரையில் அமர்ந்து படம் பார்க்க 15 பைசா, பென்ஞ்சில் அமர 30 பைசா, சேரில் அமர 50 பைசா தான் கட்டணம். ஆற்று மணல் குவிக்கப்பட்ட தரையில் அமர்ந்து படம் பார்ப்பது அலாதி ஆனந்தம்.

இன்று லார்ட் மெக்கலே பிறந்த நாள்.. பொது கல்வியை கொண்டு வந்தவர்

Dr. ஷாலினி : இன்று லார்ட் மெக்கலே அவர்களின் பிறந்த நாள். அவரை

நமக்கு ஒரு வில்லனாகத்தான் அறிமுகப் படுத்தினார்கள். “இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையைச் சிதைத்து, வெள்ளைக்காரனுக்குப் பியூன் வேலைபார்க்க ஆங்கிலத்தை கற்பித்த கயவன்” என்றுதான் எனக்கும் அவர் அறிமுகம். அப்புறம் நானே யோசித்தேன்: என் பாட்டியும் கொள்ளுப்பாட்டியும் எப்படி படித்த பெண்களாக முடிந்தது? அதுவும் பெண்கள் படிக்கவே கூடாது, குருக்குலக்கல்வி என்பது பிராமண மாணவர்களுக்கு மட்டும்தான் என்றிருந்த அந்தக் காலத்தில் இந்தப் பெண்கள் எப்படிக் கல்வி பெற்றார்கள்?
என் குடும்பம் என்கிற குட்டி வட்டத்தை விட்டு வெளி உலகையும் நான் கவனிக்கிறேன்....
மோதிலால் நேரு எங்கு படித்தார்?
வங்காளிகள் ஏன் இவ்வளவு அதிக நோபல் பரிசு வாங்குகிறார்கள்?
இந்தியாவின் முதல் செக்யூலர் பள்ளி/ கல்லூரிகளை யார் துவக்கினார்கள்....?
கல்வி மறுக்கப்பட்ட ரெட்டைமலையின் மகன் ஶ்ரீநிவாசன் எப்படி டிகிரி வாங்கினார்?   Minute by the Hon'ble T. B. Macaulay,

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

200 மூட்டை கலப்பட டீ தூள்... பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்!

 cuddalore district virudhachalam tea powder fssai officer raid

nakkeeran :விருத்தாசலம் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 200 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் கலப்பட டீ தூள் பயன்பாட்டில் உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நகரத்தின் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, கோவையில் இருந்து விருத்தாசலத்திற்கு பார்சல் மூலமாக, 200 கிலோ டீ தூள் மூட்டைகள் வந்திருந்தது.

அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு ‘எக்மோ கருவி’ மூலம் தீவிர சிகிச்சை

thinathanthi :சென்னை, தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அவருக்கு எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அமைச்சர் துரைக்கண்ணு இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது sathiyam.tv :தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மூச்சு திணறல் காரணமாக, கடந்த 13-ஆம் தேதி அன்று காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கலெக்டர்கள் மாற்றம்! அரசியல் பின்னணியா?

மின்னம்பலம்:  தமிழ்நாடு முழுவதும் ஆறு மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். நேற்று (அக்டோபர் 24) தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் வெளியிட்ட உத்தரவில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  காஞ்சிபுரம் கலெக்டராக இருந்த பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் கலெக்டராகப் பணியாற்றிய மகேஸ்வரி, காஞ்சிபுரம் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல தருமபுரி கலெக்டராக இருந்த மலர்விழி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  கரூர் கலெக்டராக இருந்த அன்பழகன், மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை கலெக்டராக இருந்த வினய், சேலம் பட்டுப் புழு வளர்ப்புத் தொழில் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் கொடியை ஏற்றும்வரை போராடுவோம்" - சூளுரைத்த மெஹ்பூபா முஃப்தி

ரியாஸ் மஸ்ரூர் - பிபிசி, ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் கொடியை தாய் மண்ணில் பறக்க விடும்வரை போராடுவோம். அதுவரை வேறு எந்த கொடியையும் ஏற்ற மாட்டோம் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட நடவடிக்கையையொட்டி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி, 14 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த மெஹ்பூபா முஃப்தி, கடந்த 14ஆம் தேதிவிடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) மெஹ்பூபா முஃப்தி சந்தித்தார்.  அப்போது அவர், தனது மேஜை மீதிருந்த தேசிய மூவர்ண கொடியை காண்பித்து, "இந்த கொடியை ஏற்றும் காலம் வரும்போது நாங்கள் மூவர்ண கொடியை ஏற்றுவோம். அதுவரை எந்தவொரு கொடியையும் ஏற்ற மாட்டோம். அதுவரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்று தெரிவித்தார்.

திமுகவின் சில மாவட்ட அக்கப்போர்களை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை

Mathivanan Maran - tamil.oneindia.com சென்னை: திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திடீரென உதயசூரியன் ஒழிக என முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதில் திமுக படுதீவிரமாக இறங்கியுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டுவந்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறது திமுக. கடந்த காலங்களை போல இல்லாமல் தொடர்ந்து நடத்தப்படும் முப்பெரும் விழாக்கள் மூலம் இதனை சாதித்துவிட முடியும் என நினைக்கிறது திமுக தலைமை. ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தீர்க்க முடியாத கோஷ்டி பூசல்கள் இருக்கத்தான் செய்கின்றன. 

 அறிவாலயத்தில் ஒலித்த உதயசூரியன் ஒழிக கள்ளக்குறிச்சி திமுகவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயமே அதிர்ச்சியில் உறைந்து போனது. அண்ணா அறிவாலயத்துக்கு வந்த திமுக நிர்வாகிகள் சிலர், மு.க.ஸ்டாலின் வாழ்க- உதயசூரியன் ஒழிக என கோஷம் போட்டனர்

மா.செ. உதயசூரியன் மீது புகார் ...  திமுகவின் சின்னமான உதயசூரியனை ஒழிக என ஏன் கோஷம் போடுகிறார்கள் என முதலில் அண்ணா அறிவாலயத்தில் இருந்த திமுகவினரே குழம்பிப் போயினர். பின்னர்தான் கள்ளக்குறிச்சி திமுக மா.செ.உதயசூரியனுக்கு எதிராக கோஷம் போட்டது தெரியவந்தது. அதிமுக எம்.எல்.ஏ. குமரகுருவுடன் உதயசூரியன் நெருக்கமாக இருக்கிறார் என்பதுதான் புகார்.

ஹத்ராஸ் விசாரணை நடத்திய அதிகாரியின் மனைவி தூக்கிட்டு தற்கொலை

sathiyam. : உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, சிறப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குழுவில் இடம்பிடித்த அதிகாரியின் மனைவி, இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஹத்ராஸ் சம்பவத்தை விசாரித்த சிறப்பு அதிகாரியின் மனைவி, தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பழனியாத்திரையும், பாஜக யாத்திரையும் ஒன்றாகுமா?

  சாவித்திரி கண்ணன் : இன்னும் என்னென்ன மலிவான கேலிக்கூத்துகளை அரங்கேற்றப் போகிறீர்களோ…! கடவுள், பக்தி, ஆன்மீகம்…ஆகியவை குறித்து பாஜகவினருக்கு எந்த அடிப்படை புரிதலுமே இல்லை என்பது அவ்வப்போது தெளிவாக நிரூபணமாகிக் கொண்டுள்ளது!மத நோக்கத்திற்கு அப்பால் மக்கள் நலன் என்பதே பாஜகவினர் சிந்தனையில் வராதா? வெற்றிவேல் யாத்திரையாம்! நவம்பர் 6 தொடங்கி டிசம்பர் ஆறு வரை முருகனின் அறுபடைவீடுகளையும் நோக்கிப் போகிறார்களாம்..? எதற்காக? முருகன் மீதான பக்தியா? ’’இல்லை’’ என்பதை அவர்களே, ’’தமிழகத்தில் தாமரை மலர்ந்திட வெற்றிவேல் யாத்திரை என்று சொல்லிவிட்டார்கள்! ஆக, அரசியல் வெற்றிக்கு பக்தியையும்,மதத்தையும் கையில் எடுக்கிறார்கள்!