சனி, 8 அக்டோபர், 2016

திருநாவுகரசுவின் அதிமுக(தாய்வீடு ) பாசம்.... நிச்சயம் கூட்டணி மேகங்கள் இடம் மாறுகிறது?

"தேமுதிக-வில் பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தபோது அதிமுகமீது மென்மையான போக்கைத்தான் கடைப்பிடித்தார். எப்படியாவது அதிமுக கூட்டணியில் தேமுதிக-வை சேர்த்துவிடத் துடித்தார். நினைத்ததுபோலவே கூட்டணியும் அமைத்தார். சில காலத்துக்குப் பிறகு தேமுதிக-வில் இருந்து விலகி, அதிமுக-விலேயே ஐக்கியமாகிவிட்டார்.
இப்போது திருநாவுக்கரசரையும் திமுக அப்படித்தான் பார்க்கிறது. அதிமுக, பிஜேபி என மாறி காங்கிரஸுக்கு வந்தவர் திருநாவுக்கரசர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆகிவிட்டார் திருநாவுக்கரசர். ஆனாலும் அதிமுக மீதான பாசம் மட்டும் அவருக்கு குறையவே இல்லை என்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைக்கலாம் என ராகுல் காந்திக்கு அப்போது ஐடியா கொடுத்து காய் நகர்த்தியவர் திருநாவுக்கரசர். ஆனால் அது நடக்கவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு திருநாவுக்கரசர் தலைவராக ஆனபிறகும்கூட அதிமுக பற்றியோ, ஜெயலலிதா பற்றியோ விமர்சனங்கள் எதுவும் முன்வைக்காமல் தவிர்த்துவந்தார் திருநாவுக்கரசர். ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆனதிலிருந்து தினமும் ராகுலுக்கு அப்டேட் கொடுத்தவரும் திருநாவுக்கரசர்தான்.

அனைத்து கட்சி குழு.... அ.தி.மு.க.,வுக்கு 2 நாள் கெடு: உண்ணாவிரதத்தில் ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூர்:''அ.தி.மு.க., அரசு, அனைத்துக் கட்சி தலைவர்களுடன், பிரதமரை சந்திக்க தவறும்பட்சத்தில், தி.மு.க., சார்பில், அதை செய்வோம்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தஞ்சாவூர், தபால் நிலையம் முன், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், உண்ணாவிரத போராட்டம், நேற்று நடந்தது. போராட்ட முடிவில், ஸ்டாலின் பேசியதாவது:
காவிரி பிரச்னையை மையமாக வைத்து, டெல்டா விவசாய மக்கள், பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மத்திய அரசு, தமிழக விவசாயிகளை வஞ்சித்து விட்டது; தமிழக அரசு, விவசாயிகளின் உரிமைகளை அடமானம்வைத்து விட்டது.

பொறுப்பு முதல்வர்- நெருக்கும் மத்திய அரசு! வைகோ மூலம் சமாதானத்தில் இறங்கிய அதிமுக?

சென்னை: தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால் அதிமுகவோ மதிமுக பொதுச்செயலர் வைகோ மூலம் சமாதானத்தில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வந்து செல்கின்றனர். இந்த வகையில் மதிமுக பொதுச்செயலர் வைகோவும் இன்று வருகை தந்தார்.
ஆனால் வைகோ அப்பல்லோவில் இருந்து நேராக ஆளுநர் மாளிகைக்கு சென்றார். பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில் பொறுப்பு முதல்வர் என்பதே தேவை இல்லை என ஒரே போடாகப் போட்டார்"வைகோவின் அப்பல்லோ டூ ஆளுநர் மாளிகை விசிட் பல்வேறு யூகங்களை கிளப்பிவிட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 வாரங்களாகிவிட்ட நி..

கவர்னர் கொடுத்த ஐடியா – யோசனையில் சசிகலா!


‘எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கவர்னரைப் பார்க்க நேற்று மாலை கிளம்பிப்போனதும், பல்வேறு பேச்சுகள் கிளம்பின. பன்னீர் செல்வம் பொறுப்பு முதல்வர், எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் என்பது வரை அரசியல் வட்டாரத்தில் பேச்சு பரவியது. சேலத்திலோ இன்னும் ஒருபடி மேலே போய், பழனிசாமியின் வீட்டுக்கு முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்தும் இருந்தார்கள். பழனிசாமியைத் துணை முதல்வராக அறிவித்தால் உடனடியாக பட்டாசு வெடித்து கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளுடன் தயாராக இருந்தனர். பழனிசாமி வீட்டில் இருந்தவர்களுக்கு இந்த தகவல் தெரிந்து, பதறிப்போய் வெளியே வந்து வீட்டுக்கு வெளியே இருந்தவர்களை சத்தம் போட்டு அனுப்பியிருக்கிறார்கள்.

வியாபாரத்தைவிட அரசியல் பெரிய முதலீடாக உள்ளது: கி.வீரமணி!

என்.ஆர். ஐஏஎஸ் அகாடமி சார்பில் திராவிடர் கழக தலைவரும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தருமாகிய கி.வீரமணியுடன் மாணவ – மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி கரூர் பைபாஸ் சாலை அருகே உள்ள என்.ஆர். ஐஏஎஸ் அகாடமியில் நேற்று நடந்தது. அகாடமியின் இயக்குநர் விஜயாலயன் வரவேற்றார். நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில், “பெண்ணுக்கு சம உரிமை கிடைக்க பாடுபட்டவர் பெரியார். பதவி ஆசையே இல்லாத இயக்கம் பெரியார் இயக்கம். இப்போது எந்த கட்சியில் சேர்ந்தால் பதவி கிடைக்கும். எங்கு இருந்தால் லாபமாக இருக்கலாம் என்று சிந்தித்து பார்த்துதான் கட்சியில் சேருகிறார்கள். அவர்களுக்கு கொள்கைகளை பற்றியெல்லாம் கவலையில்லை. இந்த காலத்தில் வியாபாரத்தை விட அரசியல் பெரிய முதலீடாக உள்ளது. நாங்கள் எந்த பதவிக்கும் ஆசைப்படாததால், இதனை தைரியமாக சொல்கிறோம். மாணவ – மாணவிகளான நீங்கள் அறிவியலை படித்தால் மட்டும் போதாது. அறிவியல் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும்” என்றார். பின்னர் மாணவ – மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். நிகழ்ச்சியில் திராவிடர் கழக அரியலூர் மண்டல தலைவர் காமராஜ் மற்றும் மாணவ – மாணவிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.minnambalam,com

அருந்ததி சாதி சிவகுருநாதனைக் கொன்ற ஆதிக்க சாதி வெறியர்கள் !

கொலை செய்யப்பட்ட சிவகுருநாதன். கொலை செய்த இலட்சுமணப் பெருமாள்.ளவரசன், கோகுல்ராஜ், சங்கர் வரிசையில் இன்னுமொரு ஆதிக்க சாதிவெறிப் படுகொலை !
நெல்லை மாவட்டம் மேல இலந்தைகுளம் கிராமத்தில் தேவர் சாதி பெண்ணை காதலித்ததற்காக அருந்ததிய இளைஞர் சிவகுருநாதனை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள் தேவர் சாதி வெறியினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகில் உள்ள பாப்பம்பட்டி கிராமத்தின் இளைஞர் சிவகுருநாதன், அருந்ததி சாதியைச்சேர்ந்தவர். எம்.எஸ்.சி முடித்து மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். நெல்லை மாவட்டம் மேல இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் செவிலியர் வேலை கிடைத்து பாப்பம்பட்டி-நெய்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். தேவர் சாதியைச் சார்ந்தவர். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

தறியோட வாசத்தை மூக்கு சுவாசிச்சு கிட்டே இருக்கணும் !

குடும்ப உழைப்பில் இயங்கும் நெசவு தொழில் விளக்கப்படம்நான் ஏழு வயசுல நெசவு தொழிலுக்கு வந்தேன். இந்த ஊருக்குள்ள தொழில்ல என்ன அடிச்சுக்க யாராலும் முடியாது. நூலுக்கு பாவு போட்றதுல இருந்து தறியில உள்ள ஆசாரி வேலை மொதக்கொண்டு நானே பாத்துருவேன். தறி சத்தத்த கேட்டே எந்த எடத்துல பிரச்சனையின்னு சொல்லிருவேன். இருந்தாலும் இந்த தொழில நம்பி நிதமும் வயிறார சாப்பிட முடியுமான்னா முடியாது. பல நாள் பட்டினி கெடந்த அனுபவமெல்லாம் உண்டு. சொந்தமா தறி வச்சுருக்கேன். ஆனா சக்திக்கு மீறி கடனாளியா இருக்கேன்.”
இரண்டு தலைமுறை நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர் 32 வயதான குமார். பல வருடங்கள் கூலி நெசவுக்கு போனவர் தற்போது சொந்த தறியில் நெய்கிறார். கூட்டுறவு சங்கதில் உறுப்பினராக இல்லையென்றாலும் அங்கிருந்து வரும் ஆர்டர்களுக்காக நெசவு நெய்கிறார். ஒரு அறை மட்டும் கொண்ட வீட்டில் தறியே பெரும் இடத்தை எடுத்துக் கொண்டு விடுகிறது. தறி ஓசையை தாலாட்டாக கேட்டு வளரும் குழந்தைகளுக்கு படுக்குமிடமே அறையின் பாதையாக இருக்கும் இடம்தான்.
“இது போல எத்தன நாளைக்கி பட்டினி கெடக்க முடியும். பல பேர் நெசவ விட்டுட்டு சமையல் மாஸ்டர், சப்ளையருன்னு வேற வேலைக்கி போறாங்க. எத்தன கஸ்டம் வந்தாலும் என்னால போக முடியல. இந்த தொழில  நேசிக்கிறேன். புடவை நெய்யும் பேது ஒரு புள்ளி மாத்தி வந்தாலும் என்னால பொறுத்துக்க முடியாது அம்மா.”

ஐ.எஸ் அமைப்புக்கு சிவகாசி வெடிமருந்து!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரள மாநிலத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அம்மாநிலத்தை சேர்ந்த 21 பேர் ஏற்கனவே ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக வாட்ஸ்-அப் மூலமாக உறவினர்களுக்கு தகவல் சொல்லியிருந்தனர்.இதுகுறித்த தகவலை கேரள போலீசார், டெல்லியை சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.இதை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கேரளாவுக்கு விரைந்து சென்று அங்கு விசாரணை நடத்தினர். அப்போதுதான் கண்ணனூர் கனகமலை உச்சியில் 6 பேர் ரகசிய கூட்டம் நடத்தியது தெரியவந்தது. இவர்கள் 6 பேரும், ஏற்கனவே ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்துள்ள 21 பேர் மூலமாக தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்கு திட்டம் தீட்டியதுவிசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

ஹிட்லர் ஒரு போதை விரும்பி! ஹிட்லர் மட்டுமா .....?


உலக வரலாற்றில் இரக்கமற்ற சர்வாதிகார தலைவர்கள் பட்டியலில் அடோல்ஃப் ஹிட்லர் முதலிடத்தில் இருப்பவர். இரண்டாம் உலகப்போரின் போது ‘நாஜி’ படைகள் மூலம் ஆட்சியமைத்த இவரைப் பற்றி வரும் தகவல்கள் ஒன்றை விட ஒன்று ஆச்சர்யமூட்டுவதாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது.
தற்போது அவர் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தார் என்ற புதிய தகவல்வெளியாகி உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த விருது பெற்ற எழுத்தாளர் நார்மன் ஓக்லர் என்பவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். ‘டிரக்ஸ் இன் நாஜி ஜெர்மனி’ என்று பெயரிடப்பட்டுள்ள இதில் சர்வாதிகாரி ஹிட்லர் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
அந்த புத்தகத்தில் ஹிட்லர் போதை பொருட்களுக்கு அடிமையாக இருந்தார். ஹெராயின் போன்ற ‘இயூகோடெல்’ என்ற ஒருவித போதை பொருளை உட்கொண்டு வந்தார்.மேலும் போதை மருந்துகளை ஊசி மருந்து மூலம் உடலுக்குள் செலுத்தினார். அதனால் அவரது ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் அனைத்தும் படிப்படியாக செயல் இழந்து விட்டன.

எல்லோரும் நல்லா நடிக்கிறாங்க .. கையெழுத்து முதல்வருடையதுதானா? சசிகலா புஷ்பா கடிதம்.

ஜெயலலிதா மருத்துவமனையில்
இருந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என அதிமுக-வினர் தமிழகம் முழுக்க கோயில் கோயிலாக பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கட்சிக்கார்கள் பிரார்த்தனையும் வேண்டுதல்களும் ஒருபக்கம் இருக்க… சசிகலா குடும்பத்தின் குலதெய்வம் கோயில் தஞ்சாவூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவெண்ணியூரில் இருக்கிறது. இங்குள்ள அய்யனார் கோயில்தான் சசிகலா குடும்பத்தின் குலதெய்வம். (திருவெண்ணியூர் அய்யனார் கோயில்) கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த கோயிலில் சிறப்பு யாகம் ஒன்றினை நடத்தியிருக்கிறார் சசிகலாவின் சகோதரர் திவாகரன். ஜெயலலிதாவுக்காக அந்த யாகத்தை விடியற்காலையில் தொடங்கி நான்கு மணி நேரத்துக்கு மேலாக நடத்தியிருக்கிறார் திவாகரன். அந்த கோயிலில் இருந்து சற்று தூரத்தில் உள்ளது வெண்ணிக் கரும்பர் கோயில். இதை கரும்பீஸ்வரர் கோயில் என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். இந்த கரும்பீஸ்வரருக்குச் சிறப்பு பூஜைகள் செய்து வணங்கினால் சர்க்கரை நோயின் பாதிப்பு குறையும் என்பது ஐதீகம்.

ஜெயலலிதாவை / அப்போலோவை வேவு பார்க்க எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பிய ......

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நெறியாளர் மு.குணசேகரன் நடத்தும் காலத்தின் குரல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது இப்படித் தெரிவித்தார் சுதர்சன நாச்சியப்பன்.
எய்ம்ஸ் மருத்துவர் குழுவை அனுப்பி என்ன நடக்கிறது என்று பார்த்துள்ளது மத்திய அரசு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷியும் நேபாள தேர்தல் ஆணையர் இலா சர்மாவும் காதல் திருமணம் செய்ய உள்ளார்கள்

 Former CEC Quraishi to marry Nepal’s current election commissionerஇந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷியும், நேபாள நாட்டின் தற்போதைய தேர்தல் ஆணையரான இலா சர்மாவும் காதலித்து வருகிறார்கள். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான குரேஷி, டெல்லியில் வசித்து வருகிறார். 69 வயதான குரேஷி, மெக்ஸிகோவில் கடந்த ஆண்டு தேர்தல் தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டார். அங்கு நேபாள நாட்டின் தற்போதைய தேர்தல் ஆணையராக இருக்கும் இலா.சர்மாவை சந்தித்திருக்கிறார் குரோஷி. அப்போது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர், தொடர்ந்து அவர்கள் பேசிக் கொண்டதில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

160 கேள்விகள் கேட்ட மதுரை போலீஸ் ! பழிவாக்குதல் ? ஐந்தரை மணி நேரம் சசிகலா புஷ்பா பதில்

மதுரை: முன்ஜாமின் கேட்டு, தாக்கல் செய்த மனுவில், போலி கையெழுத்திட்டதாக, சசிகலா புஷ்பா எம்.பி., மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், நேற்று அவர், மதுரை புதுார் போலீசார் முன் ஆஜராகி, ஐந்தரை மணி நேரம் விளக்கம் அளித்தார்.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, ராஜ்யசபா, எம்.பி., சசிகலா புஷ்பா, கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா உள்ளிட்டோர் மீது, அவரது வீட்டில் பணிபுரிந்த பானுமதி, ஜான்சிராணி அளித்த புகாரின் படி, துாத்துக்குடி போலீசார், பாலியல் வழக்குப்பதிவு செய்தனர். இவ் வழக்கில், முன்ஜாமின் கேட்டு சசிகலா புஷ்பா தரப்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்த சசிகலா புஷ்பா, 'மதுரை வந்து, வழக்கறிஞர் முன், முன்ஜாமின் வக்காலத்து மனுவில் கையெழுத்திட்டேன்' என, தெரிவித்திருந்தார். இதில் சந்தேகம் இருப்பதாக, அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆளுநர் கைக்குப் போய் விட்டதா தமிழக அரசு?

sudha :சென்னை: ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட அறிக்கையில் முதல்வர்
ஜெயலலிதாவுக்கு உரிய வகையில் மரியாதை தரப்படாதது அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. என்று மட்டுமே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வழக்கமாக இடம் பெறும் Honourable என்ற அடைமொழி இல்லை. அதாவது மாண்புமிகு இல்லை. முதல்வர் ஜெயலலிதாவின் பெயரும் கூட அதில் இடம் பெறவில்லை. மாறாக வெறும் "முதல்வர்" என்று கூறி விட்டு நிறுத்தி விட்டனர். அதுவும் கூட ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முதல்வர் என்ற வார்த்தை வருகிறது. இந்த அறிக்கையைப் பார்த்தால் ஆளுநர் வசம் தமிழக ஆட்சி மாற்றப்பட்டு விட்டதோ என்ற தோற்றம் வருவதைத் தவிர்க்க முடியவில்ல. அதிகாரப்பூர்வமில்லாத வகையில் ஆளுநர் வசம் தமிழக ஆட்சி போய் விட்டதாகவே தோன்றுகிறது.
அதை விட முக்கியமாக தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறார். அடுத்த சில மணி நேரங்களில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அப்பல்லோ வருகிறார். அடுத்த சில மணி நேரங்களில் இந்த சந்திப்பு நடக்கிறது. எல்லாவற்றையும் கோர்த்துப் பார்த்தால் சம்திங் சம்திங் புரியும்.

வெள்ளி, 7 அக்டோபர், 2016

கலைஞர் கேட்கவா போகிறார்..? திமுக இனி தனித்தே போட்டியிடவேண்டும் .. வலுக்கும் குரல்

காங்கிரஸ் காரர்கள் திமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டே இரட்டை
இலைக்கே வாக்களிப்பது வழக்கம்
அதிமுக அவர்களுக்கு போதிய இடம் அளிக்க முன் வராததால்தான் ...அவர்கள் திமுகவிடம் வருகிறார்கள்.
அவர்களுக்கு நிரந்தர நட்பு ஜெயாவுடன் மட்டுமே...
கலைஞர் எதிர்ப்பு காங்கிரஸ் காரன் இரத்தத்தில் ஊரறிய பண்பு..
திமுக வலிந்து காங்கிரஸுடன் கூட்டணி வைத்தே தேய்ந்தது..
ராகுல் கலைஞரை ஒரு பொருட்டாகவே என்றுமே மதித்தது இல்லை.
இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது...
என்ன பயன்..கலைஞர் கேட்கவா போகிறார்..? தலைவர் கலைஞர் இனியாவது
ஒரு தெளிவான உறுதியான முடிவெடுத்து அறிவிக்கவேண்டும்..
இனி வரும் எல்லா தேர்தல்களிலும்
திமுக தனித்தே போட்டியிடும்...என்று முடிவு எடுக்கவேண்டும்.

ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை..! - ரேஸில் முந்துவது யார்?




vikatan,com : முதல்வர் ஜெயலலிதா அப்போலோவுக்குப் போய் 15 நாட்கள் ஆகின்றது. காவிரி பிரச்னை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் முடிவெடுக்கப்படாமல் உள்ளது. ஐ.ஜி. டூ கூடுதல் டி.ஜி.பி. பதவி உயர்வு ஃபைல் முதல்வர் டேபிளில் கடந்த ஜனவரி முதல் தூங்குகிறது. இதுமாதிரி முதல்வர் நேரிடையாக பார்க்கவேண்டிய அரசுப் பணிகள் அப்படியே கிடக்கின்றன. ஆனால், அப்போலோ பெட்டில் படுத்தபடியே ஜெயலலிதா அரசு தொடர்பான சில உத்தரவுகளை பிறப்பித்தார் என்றெல்லாம் மருத்துவமனையில் இருந்து செய்திகள் கசியவிடப்பட்டன. ஆனால், இதையெல்லாம் பொதுமக்கள் துளிகூட நம்பவில்லை.
அக்டோபர் 6-ம் தேதியன்று மாலை அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் இருந்த கடைசி வரிதான் மத்திய அரசை யோசிக்க வைத்துள்ளது. இன்னும் நீண்ட நாட்கள் ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா தங்கியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டதை கூர்ந்து கவனித்தனர். அப்போலோ வந்துள்ள எய்ம்ஸ் டாக்டர்களிடம் மத்திய உள்துறை தரப்பில் கருத்து கேட்கப்பட்டது. அவர்களும் ஜெயலலிதா உடல்நிலை தொடர்பான தங்களது கருத்தை உடனே தெரியப்படுத்தினர்.

ஜெ’சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு?

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வருகிற 18-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. முதன் முதலாக,தமிழகத்தில் முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரைமுதல்வராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996 -ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, அவரது தோழிசசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூருசிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த ஆண்டு தீர்ப்பளித்தார். இதையொட்டி சிறைக்குச் சென்றஜெயலலிதா, பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அந்த மனுவை விசாரித்தஉயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22-ம் தேதி இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தொடர்ந்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு நீண்ட நாள்கள் சிகிச்சை தேவை என்று தெரிவித்தது.  இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தமிழச்சி :இந்த சந்தேகம் ஏன் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படவில்லை?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஏற்கனவே தவறான தகவல் ஒன்றை பிரான்சில் இருக்கும் தமிழச்சி என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இதனால் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக புகார் அளிக்கப்பட்டு தமிழகத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் முதல்வர் ஜெயலலிதா குறித்து சர்ர்சைக்குறிய தகவல் ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், ஜெயலலிதாவின் நுரையிரலில் இருப்பது தொற்று கிருமி இல்லை. >என்ற செலுத்தப்பட்ட கிருமி. சில நாட்களாக 'ஜெயலலிதா அப்பலோவில் தலைமறைவு' என்று எழுத ஆரம்பித்த பிறகு இன்று வேறு விதமான தகவலை அப்பலோ கூறுகிறது. இந்த உண்மையை வரவழிப்பதற்கு தான் தலைமறைவு கதை செப்டம்பர் 22 அன்று இரவு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, 'சாதாரண காய்ச்சல் இரண்டு நாட்களில் வந்துவிடுவார்' என்று அறிவித்த அப்பலோ இன்று 'முதல்வர் ஜெயலலிதா நீண்டநாள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும்' என்று கூறுகிறது. இதுவும் பொய். மக்களை சமாதானப்படுத்துவதற்கான அறிக்கை.

சசிகலா புஷ்பாவிடம் காலை முதல் மாலை வரை இடை விடாமல் விசாரணை.. மதுரையில்!

Madurai police grills Sasikala Pushpa மதுரை: ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவிடம் மதுரை போலீஸார் இன்று காலை தொடங்கி மாலை வரை இடைவிடாமல் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் பிரதீப் ராஜா ஆகியோர் மீது சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்து வந்த இரு இளம் பெண்கள் பாலியல் கொடுமை புகார் கொடுத்துள்ளனர்.
அதில் சசிகலா புஷ்பா நிர்வாணமாக படுத்துக் கொண்டு மசாஜ் செய்யச் சொன்னதாகவும், அவரது கணவரும், மகனும் பாலியல் இச்சைக்கு ஆளாகுமாறு தங்களைக் கொடுமைப்படுத்தியதாகவும் கூறியிருந்தனர்.

கவுண்டர் பெண் நாடாரைத் திருமணம் செய்து கொள்ளலாமா: காதல் திருமணம் செய்த பெண்ணிடம் போலீஸ் கேள்வி…

கொளத்தூர் குமார்; நவீனா ஒரு பொறியியல் கல்லூரி மாணவி; கொங்கு
வேளாளர் சமூகத்தில் பிறந்தவர். பெரியண்ணன் பேருந்தில் ஓட்டுநரகப் பணியாற்றுபவர்; நாடார் சமூகத்தில் பிறந்தவர், இருவருக்கும் இடையே மலர்ந்த காதல், திருமணத்தில் முடிகிறது. 2016 மே மாதத்தில் ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட அவர்கள் இருவரும் அதோடு மனநிறைவடையாமல் சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியத் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை அணுகி தங்கள் திருமணத்தை, பெரியாரின் சுயமரியாதைத் திருமணமாய் நடத்திக் கொள்ள தாங்கள் விரும்புவதாகக் கூறியுள்ளனர். மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் கொளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஈசுவரன் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்கின்றனர். அத்திருமணமும் மேட்டூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 11-7-2016 அன்று பதிவும் செய்யப்பட்டுள்ளது.

சசிகலாவே பொறுப்பு: டிராபிக் ராமசாமி; ...சும்மா விடமாட்டேன். சிறையில் தள்ளுவேன்”

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏதேனும் விபரீதம் நேர்ந்தால், உண்மைகளை மறைக்கும் சசிகலாவே அதற்கு பொறுப்பு. அப்படி ஏதேனும் நடக்கும் பட்சத்தில் அவரை நான் சும்மா விடமாட்டேன்’ என்று வெகுண்டெழுந்துள்ளார் டிராபிக் ராமசாமி. பதினைந்து நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முழுமையான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மையான விரிவான அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், ‘இந்த வழக்கு விளம்பர நோக்கம் கொண்டது’ என சாடியது.

ராகுல் காந்தி சென்னை அப்போலோவுக்கு வருகை ..



காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க வந்த ராகுல் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.
முதல்வரின் உடல் நலம் பற்றி அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடும் அப்பல்லோ நிர்வாகம் நேற்று வெளியிட்ட நீண்ட அறிக்கையில் முதல்வர் நீண்ட நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கூறியதால் அதிமுக தொண்டர்களிடையே கவலை அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைந்து குணமடைய வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்த ராகுல்காந்தி இன்று தனி விமானம் மூலம் சென்னை வந்தார். அவருடைய வருகை குறித்த தகவல் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

தஞ்சை ராமையாதாஸ் ... திராவிட கொள்கைகளை பரப்பிய அற்புதமான கவிஞர், கதை வசனரகர்தா எழுத்தாளர்....

தஞ்சை ராமையாதாஸ் [கவிஞர், பாடலாசிரியர், கதை, வசனகர்த்தா, தயாரிப்பாளர்] திரைப்படக் கலைஞர்கள் வாழும் போது கொண்டாடப்படும் அளவுக்கு அவர்கள் மறைந்தபின் நடப்பதில்லை. சிலர் வாழும் போதேயும் கூட இப்படிப்பட்ட நிலை இருப்பதில்லை என்பது வேறு. அந்த வகையில் திரைப்படப்பாடல் ஆசிரியர்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன், உடுமலை நாராயணகவி போன்றோருக்கு நிகராகத் தஞ்சை ராமையாதாஸ் பேசப்படுவதில்லை.
பலநேரங்களில் எந்தப் பாடல் பட்டுக் கோட்டையின் பாடல், எது தஞ்சை ராமையாதாசின் பாடல் என பிரித்துப் பார்க்க இயலாத அளவுக்கு நல்ல பல பாடல்களை எழுதி யவர் தஞ்சை ராமையாதாஸ்.

வெமுலா சகோதரர் குற்றச்சாட்டு : மந்திரிகள், பல்கலைக் கழக துணை வேந்தரை காப்பாற்றுகிறது நீதிபதி அறிக்கை

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ரோகித் வெமுலா என்ற
மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து, அவர் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டார் என கூறப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்று மத்திய மந்திரிகள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிரிதி இரானி ஆகியோர் பதவி விலக கோரி போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து ரோகித் வெமுலா தற்கொலை குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி அசோக் குமார் ரூபன்வால் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்தி 41 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நேற்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளித்துள்ளது.

ரூ.5,700 கோடியில் மேக்கேதாட்டு அணை திட்டம் தயார்

sidharamaya காவிரிப் பிரச்னை முடிவதற்குள் தமிழகத்துக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் மேக்கேதாட்டு அணை கட்ட ரூ.5,700 கோடியில் திட்ட மதிப்பு தயார் செய்துள்ளது கர்நாடகம். இதுகுறித்து மைசூரில் முதல்வர் சித்தராமையா வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
மேக்கேதாட்டு அணையை ரூ.5,700 கோடியில் கட்டுவதற்கான திட்ட விவர அறிக்கையைத் தயாரித்துள்ளோம். அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டதும், பணிகள் தொடங்கப்படும். மேக்கேதாட்டு அணையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை விட்டுவிட்டு எஞ்சியுள்ள நீரைச் சேமித்து, பெங்களூரு மக்களின் குடிநீர் விநியோகத்துக்கு மட்டுமின்றி, மின்சாரம் உற்பத்தி செய்யவும் பயன்படுத்தப்படும்.

உள்ளாட்சி தேர்தல் ரத்து: தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

 சென்னை:உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைரத்து செய்யப்பட்டதை
எதிர்த்து, தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது, சென்னை உயர் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. விசாரணையை, 18ம் தேதிக்கு, தள்ளிவைத்து உள்ளது. தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்ற தனி நீதிபதி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பா ணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, டிசம்பருக் குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட் டார். இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது.மேல்முறையீட்டு மனுவில் கூறியுள்ளதாவது:

தற்காலிக முதல்வரை அறிவிக்க வேண்டிய அழுத்தத்தில் ,.......

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மும்பையிலிருந்து 1-ந் தேதி மாலை
சென்னை திரும்பிய கவர்னர் வித்யாசாகர் ராவ், அப்பல்லோ சென்று மருத்துவர்களை சந்தித்துவிட்டு ராஜ்பவனுக்குத் திரும்பினார். அடுத்த சில நிமிடங்களில், ""முதல்வர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்'' என்கிற அறிக்கை கவர்னர் சார்பில் வெளியானது. அறிக்கையின் எந்த ஒரு இடத்திலும் ஜெயலலிதாவை பார்த்துப் பேசியதாக சின்ன குறிப்புகூட இல்லை. கவர்னரின் அப்பல்லோ விசிட் குறித்து விபரமறிந்த உயரதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, ""அப்பல்லோ வந்த கவர்னரை தலைமைச் செயலாளர் ராமமோகனராவும் மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் பிரதாப் ரெட்டியும் வரவேற்றனர். கவர்னரை தனது சேம்பருக்கு அழைத்துச்சென்றார் ரெட்டி. ஜெயலலிதாவின் உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள், அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், லண்டன் டாக்டர் கொடுத்த சிகிச்சைகள் என அனைத்தையும் கவர்னரிடம் பிரதாப் ரெட்டி விவரித்திருக்கிறார். சில மெடிக்கல் ரீதியான வார்த்தைகளின் அர்த்தத்தை திரும்பக் கேட்டு புரிந்துகொண்டார் கவர்னர். "முதல்வரை பார்க்க முடியுமா?' என கவர்னர் கேட்டிருக்கிறார். அதற்கு, மருத்துவமனையின் நடைமுறைகளைச் சொல்லியிருக்கிறார் ரெட்டி. அதனை புரிந்து கொண்ட கவர்னர், "அப்படியானால் வேண்டாம்' என தெரிவித்திருக்கிறார்.

வாட்ஸ் அப் மிமிக்ரி வாய்ஸ் யார்? மன்னார்குடியை தவிர வேறு யாருக்கு அந்த தைரியம் வரும்?

மருத்துவமனையிலிருந்து ஜெ. பேசுவது போல ஒரு வாட்ஸ் அப் ரிக்கார்டு ஒன்று வெளியிடப்பட்டது. அதை தயாரித்தது அ.தி.மு.க. தலைமைதான். ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் மூலம் தயாரான அந்த வாட்ஸ் அப் ரிக்கார்டை ஜெயா டி.வி.யில் ஒலிபரப்ப திட்டமிட்டிருந்ததாகவும், அதே நாளில் ஜெ.வுக்கு சுவாசக் கருவி பொருத்தியிருப்பதை அப்பல்லோ வெளிப்படுத்தி விட்டதால் கடைசியில் ஒலிபரப்ப வேண்டாமென்றும் டி.வி. நிர்வாகம் விட்டுவிட்ட நிலையில் யாரோ வெளியிட்டு விட்டார்கள் என்கிறார்கள் அ.தி.மு.க.வின் உள்வட்டத்தினர்.
அப்பல்லோவில் யாகம்?
டி.டி.வி.தினகரன், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், அவரது சகோதரி டாக்டர் ராஜ மாதங்கி உட்பட மன்னார்குடி குடும்பத்தினர் ஜெ.வை கவனித்துக் கொள்ளும் சசிக்கு உதவியாக அப்பல்லோவில் தங்கி இருக்கிறார் கள். சசிகலா மட்டும் இரண்டு நாட் களுக்கு ஒருமுறை போயஸ் கார்ட னுக்கு சென்று வருகிறார். கடந்த 4-ம் தேதி மாலை யாகம் நடத்த விறகுக் கட்டைகளோடு ஒரு புரோ கிதர் சசிகலாவால் அப்பல்லோவுக்கு அழைத்து வரப்பட்டார்.

நக்கீரன் : நீடிக்கும் அப்போலோ மர்மங்கள்!

ஒவ்வொரு நாளும் அப்பல்லோ அறிக்கை வெளியானாலும் ஜெ.வின்
உடல்நிலை என்பது பரம ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் ஜெ.வுக்கு என்ன வியாதி என்பதை பற்றி ஒரு அறிக்கை தருமாறு சென்னை உயர்நீதிமன்றமே கேட்டு உத்தரவு பிறப்பித் துள்ளது. இந்நிலையில் நக்கீரன் டீம் ஜெ.வுக்கு என்ன உடல்நிலை பாதிப்பு, அதற்கு என்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என்பதை அப்பல்லோ மருத்துவமனையில் பராமரிக்கப் படும் ஆவணங்கள் குறித்து, குறிப்பெடுத்து முழு மெடிக்கல் ஹிஸ்டரியை வாசகர்களுக்கு தருகிறது.
 முதல்நாள் முதலே சுவாசக் கருவி! அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள ஜெ.வின் வார்டு MDCCU என குறிப்பிடப்படுகிறது. அதில் ஜெ. படுத்திருக்கும் பெட்டின் எண்தான் 2008. (இது வார்டின் எண் அல்ல) இந்த பெட் எம்.ஜி.ஆர். படுத்திருந்த பெட் என சொல்கிறார்கள் அப்பல்லோ டாக்டர்கள். ஜெ. அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு நுரையீரலிலும் சிறுநீர்ப் பாதையிலும் நோய் தொற்று இருப்பதாக கண்டுபிடித்த டாக்டர்கள், அவரது இதயத்துடிப்பு மிக மிகக் குறைவாக (40 முதல்-60 வரை) இருப்பதை கண்டுபிடித்து அவருக்கு கழுத்து பகுதி மூலம் (Inotropes) எனப் படும் இதயத்தை வலுப்படுத்தும் மருந்துகளை செலுத்துகிறார்கள். இதயத்தை வேகமாக இயங்கச் செய்யும் PACE MAKER கருவிகளை பொருத்துகிறார்கள்.
மூச்சுவிட சிரமப்பட்டிருந்த ஜெ.வுக்கு எளிய முறையில் செயற்கை சுவாசம் அளிக்கும் கருவியும் பொருத்தப்படுகிறது.

வியாழன், 6 அக்டோபர், 2016

3 தோல்வி படங்களுக்கு பின் தனுஷ் ஊடகங்கள் மீது அக்கறை....

ஒரு காலத்தில் பிரஸ், மீடியாவைச் சந்திப்பதில் தனுஷுக்கு எந்தத்
தயக்கமும் இருந்ததில்லை. ஆனால் சுள்ளானுக்குப் பிறகு, சூப்பர் ஸ்டார் மருமகனான பிறகு அவர் மீடியாவை முடிந்தவரை தவிர்த்தார். சமூக வலைத் தளமான ட்விட்டரில் தனுஷுக்கு கணிசமான ஃபாலோயர்கள் குவிந்ததும், மீடியாவே எனக்குத் தேவையில்லை. தேவைப்பட்டால் அவர்கள் என் ட்விட்டர் பக்கத்திலிருந்து செய்திகளை எடுத்துக் கொள்ளட்டும் என்று வெளிப்படையாகவே சொன்னவர்தான். முன்னணி நாளிதழின் செய்தியாளரை வெளிப்படையாக ட்விட்டரில் திட்டினார். மாரி படம் நாளை வெளியாகிறது என்றால், அதற்கு ஒரு நாள் முன்பாகத்தான் அவர் மீடியாவைச் சந்தித்தார். அதுவும் ஒப்புக்கு. இதைக் குறிப்பிட்டு கேள்வி கேட்டபோது, ஏகத்துக்கும் கடுப்பானவர், தங்க மகன் படத்தின் போது மொத்தமாகவே புறக்கணித்தார். அடுத்து தொடரி. அந்தப் படமும் பாக்ஸ் ஆபீசில் மொக்கை வாங்கியது. குறிப்பிட்ட ஒரு வாரப் பத்திரிகைக்கு மட்டும்தான் அந்தப் படம் குறித்த பேட்டி கொடுத்தார்.
ஆனால் இந்த மூன்று படங்களும் சொல்லி வைத்த மாதிரி ப்ளாப் ஆகின பாக்ஸ் ஆபீஸில்.

தா.பாண்டியன் : முதல்வர் தற்போது பேசும் நிலையில் இல்லை !

Don’t believe rumors, says Tha.Pandianசென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசும் நிலையில் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார். தமிழக முதல்வர் குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும், அதிமுகவினர் யாரும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இதனால் மனநிலை பாதிக்கப்படும் அதிமுக தொண்டர்கள் சிலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். ஒரு சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.< முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தகவல் அறிந்து கொள்வதற்காக முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகின்றர். இந்த நிலையில் இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று திரும்பிய தா.பாண்டியன், முதல்வரை சந்திக்கவில்லை என்றும் அவர் தற்போது பேசும் நிலையில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

தம்பிதுரையிடம் என்ன கொடுத்தார் பன்னீர்? - தொடரும் அப்பல்லோ மர்மங்கள்!

என்னமோ நடக்குது... அதை என்னன்னு ஏன் சொல்ல மாட்டேங்குறாங்க...’ என்ற புலம்பல்கள் அமைச்சர்கள் மத்தியிலேயே கேட்கத் தொடங்கியிருக்கிறது. ஜெயலலிதா உடல்நிலை சார்ந்த விஷயங்கள் சசிகலா குடும்பத்துக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கட்சி சார்ந்த விஷயங்களை தம்பிதுரையும், பன்னீர்செல்வமும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்”

‘‘பிரதமரைப் பார்த்து காவிரி விவகாரம் தொடர்பாக மனு கொடுக்கப்போயிருந்த தம்பிதுரை திரும்பி வந்துவிட்டார். இன்று காலையில் அவர்தான் அப்பல்லோவுக்கு முதல் நபராக அட்டனன்ஸ் போட்டார். அவர் காரைப் பின்தொடர்ந்து வந்தது அமைச்சர் தங்கமணியின் கார். 9.30 மணிக்கு தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவும், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் வந்தார்கள். அதன்பிறகு அமைச்சர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.

அப்போலோவின் கிரிமினல் வண்டவாளங்கள் ..

ஏற்கனவே டெங்குக் காய்ச்சலால் உடல் நிலை மிகவும் பலவீனமடைந்திருந்த நிலையில், அந்தப் பெண் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக வன்புணர்வு செய்யும் போது போதை மருந்து வேறு கொடுத்து நாசப்படுத்தியிருக்கிறான் அந்த அப்போலோ மருத்துவர்
Apollo
லகத்தரமான சிகிச்சை, மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், அதிநுட்ப சிகிச்சைக் கருவிகள், அனைத்து நோய்களுக்குமான சிகிச்சை, பல்வேறு மொழி பேசத்தெரிந்த மொழிபெயர்ப்பு வசதிகள் இன்னும் எண்ணிமாளாத எண்ணற்ற வசதிகள் ….அப்படித்தானே……
குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 21 வயதான இளம்பெண் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை (04.09.2016) அன்று நள்ளிரவு வேளையில் அங்கு இரவுப்பணி மருத்துவராக இருந்த டாக்டர்.ரமேஷ் செளஹான், அதே மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக வேலைபார்க்கும் சந்திரகாந்த் வங்கார் என்பவரின் உதவியுடன் அந்த இளம்பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியிருக்கிறார்.

அப்பல்லோவில் அம்மா : அறை எண் 2008-ல் கடவுள் !

ஒருவேளை முதல்வருக்கு போயஸ் தோட்டத்திலேயே மருத்துவம் பார்க்கப்பட்டிருந்தால் யாராவது இந்தக் கேள்விகளையெல்லாம் எழுப்பியிருப்பார்களா? அங்கே முடிவுகள் எப்படி யாரால் எடுக்கப் படுகின்றன என்றுதான் யாருக்காவது தெரியுமா?
மிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சேர்க்கப்பட்டது ஏன்? இன்று வரை இந்தக் கேள்விக்கான பதில் அப்பல்லோ நிர்வாகம் வெளியிடும் அதிகாரப் பூர்வ செய்தி அறிக்கைகளில் தள்ளாடுகிறது. ஆரம்பத்தில் நீர்ச்சத்து குறைவு, காய்ச்சல், இரண்டாம் நாளிலேயே வழக்கமான உணவு எடுக்கிறார் என்று கூறியது பிரதாப் ரெட்டியின் மருத்துவமனை.
சரி, ஏதோ சாதா காய்ச்சல் அதற்கு சிறப்பு சிகிச்சை எடுக்க சென்றிருக்கிறார் என்றார்கள். பிறகு முழு பரிசோதனை மற்றும் கண்காணிப்பிற்காக மேலும் சில நாட்கள் இருப்பார் என்றார்கள். கடைசியில் லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவர், தில்லியிலிருந்து சிறப்பு மருத்துவக் குழு வந்தது. சாதா காய்ச்சலுக்கு ஏன் லண்டன், தில்லி சிறப்பு மருத்துவர்? என்றால் பதிலில்லை.
ஊடகங்களைப் பொறுத்தவரை, பொது வாழ்க்கையில் இருப்போரின் மருத்துவப் பிரச்சினைகள் தனிப்பட்ட விசயம், அதை பொது வெளியில் பகிர்வது தேவையற்றது என்பது நிலைப்பாடாம். இதை தந்தி பாண்டே முதல் இந்து தலையங்கம் வரை உபதேசிக்கிறார்கள். கூடவே “இருப்பினும் மக்களின் சந்தேகங்கள் போக்கப்படவேண்டும்” என்று பயந்து கொண்டே ஒரு பின் குறிப்பு போடுகிறார்கள்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளை கூட அப்போலோவில் அத்தையை பார்க்க அனுமதி இல்லை

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாட்கள் ஆன பின்னும்கூட, அவரை பார்க்க ரத்த சொந்தங்கள் எவரும் வந்ததாக தகவல் இல்லை. ஆனால், அவருடைய சகோதரரின் மகள் அவரை பார்க்க வந்து அப்பல்லோ நுழைவாயிலுக்குள் கூட அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்ட செய்தி வெளியாகியிருக்கிறது. ஜெயலலிதாவின் சகோதரர் ஜெயக்குமாரின் மகள் தீபா இதுபற்றி கூறும் போது, “அத்தை என்னிடம் பாசமாக இருப்பார். எனக்கு அத்தையைப் பார்க்க வேண்டும். ஆனால், மருத்துவமனை வாசலை கடந்து உள்ளே செல்ல முடியவில்லை. நான் அத்தையைப் பார்க்கச் சென்றேன். ஆனால், என்னை சந்திக்க விடவில்லை. மருத்துவமனையின் உள்ளே விட அனுமதிக்கவில்லை. என்னை சந்திக்க விடவில்லை என்றால் இங்கிருந்து திரும்பிப் போக மாட்டேன் என்றேன். உடனே நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். ஒரு உயரதிகாரி உங்களை அழைப்பார். என்றார்கள். ஆனால், எனக்கு அப்படியான அழைப்புகள் எதுவும் எனக்கு வரவில்லை” என்கிறார் தீபா. சென்னை தியாகராய நகரில் வசிக்கும் தீபா ஊடகங்கள் வழியேதான் அத்தை ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு பற்றிய செய்தியை அறிந்திருக்கிறார்.

ஜெயலலிதா உடல்நிலை பற்றி புகைப்பட ஆதாரத்தை எப்படி கேட்க முடியும்?: டிராபிக் ராமசாமிக்கு ஐகோர்ட் கண்டனம்

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த 22-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை பற்றி பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்தி பரவுகின்றன. இதனால், தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் ஒரு விதமான பதட்டம் நிலவுகிறது. வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அதே நேரம், தமிழக அரசு இதுநாள் வரை ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. ஜெயலலிதா அதிகாரிகளுடன் காவிரி விவகாரம் குறித்து விவாதித்தார் என்று தமிழக அரசு பத்திரிகை செய்தி வெளியிட்டாலும், அதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடவில்லை.

மும்பை கால்சென்டர் அமெரிக்கர்களிடம் பண மோசடி; 70 பேர் கைது

தானே : மஹாராஷ்டிராவில், 'கால் சென்டர்'கள் மூலம், அமெரிக்க நாட்டினரை
ஏமாற்றி, கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்த, 70 பேரை போலீசார் கைது செய்தனர்; 600க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மஹாராஷ்டிர மாநிலம், மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த, 'கால் சென்டர்' மூலம், அமெரிக்க நாட்டை சேர்ந்த பலர், பண மோசடிக்கு ஆளானதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தானே மாவட்டம் மிரா ரோடு பகுதியில், மூன்று கால் சென்டர்களில், தானே போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து, போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் கூறியதாவது:
மிரா ரோடு பகுதியில் உள்ள மூன்று கால் சென்டர்களில், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட, 600க்கும் அதிகமானோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, அமெரிக்கர்கள் பேசுவது போன்ற ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வருக்காக லண்டனிலிருந்து வந்த புது மருத்துவர்!

விகடன்,காம் :தமிழக  முதல்வர் ஜெயலலிதா 13 நாட்களைக் கடந்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 'லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டைத் தொடர்ந்து,; நேற்று மற்றொரு லண்டன் மருத்துவர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ‘முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள், முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல் நலத்தை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருந்தது. முதல்வர் உடல்நிலை பற்றி அப்போலோ மருத்துவமனை வெளியிடும் தகவல்கள் மட்டுமே தொண்டர்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், முதல்வர் உடல்நிலை குறித்த வதந்திகள் வேகமெடுத்து வருகின்றன.

ட்ராபிக் ராமாசாமி :கொஞ்சம் கொஞ்சமாக அவிங்க உயிரை பறிக்க முயற்சிக்கிராயங்கா



ஜெயலலிதாவின் தங்கை( April 9, 2015) பெங்களூரிவில் கிட்னி பாதிப்பால் மரணமடைந்தார் Flashback

கிட்னி பாதிப்பால் அவதிப்பட்ட சைலஜா, தனது வீட்டருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால், சிகிச்சை செலவு அதிகரித்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு டிச்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனவே உடல் நலிந்தபடியே சென்றது. இந்நிலையில் இன்று அதிகாலை சைலஜா மரணமடைந்தார்

1 அக்டோபர், 2014
கடந்த ஒரு வாரமாக கர்நாடக மாநிலத்தில் எந்த கன்னட டி.வி சேனல்களைத் திருப்பினாலும், சைலஜா என்ற பெண்ணின் பேட்டி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ‘தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தங்கை நான்’ என்று இவர் சொல்லிக்கொள்வதுதான், நம்மையும் கவனிக்க வைத்தது!
ஜெயராமன் – சந்தியா தம்பதியருக்கு ஜெயக்குமார் என்ற மகனும் ஜெயலலிதா என்ற மகளும்தான் என்பது இதுவரை வெளியில் தெரிந்த வரலாறு. ஆனால், சைலஜா புதிதாகச் சொல்கிறாரே என்று அவரைத் தொடர்புகொண்டோம். நம்மை பெங்களூரு ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள சாம்ராஜ் ஹோட்டலுக்கு வரச் சொன்னார்.அங்கு சென்றதும் முதலில் நம்மை சாப்பிடச் சொன்னார். நாம் மறுத்தோம். ”எங்க அக்கா ஊருக்கே உணவகம் திறந்து உணவளிக்கிறார். நீங்கள் சாப்பிட்டால்தான் பேட்டி கொடுப்பேன்” என்றபடி ஒரு மசால் தோசை ஆர்டர் செய்தார். தனது மகள் அமிர்தாவை அருகில் வைத்துக்கொண்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார். அதில் இருந்து…
”உண்மையில் நீங்கள் யார்… உங்களின் பின்புலம் என்ன?”

”என் பேரு சைலஜா. தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவின் தங்கை நான். எங்க அப்பா பேரு ஜெயராமன். அம்மா பேரு வேதம்மாள் என்கிற சந்தியா. இவர்களுக்குப் பிறந்தவர்கள் அண்ணன் ஜெயக்குமார், அடுத்து அக்கா ஜெயலலிதா. கடைசியாக பிறந்தவள்தான் நான்.

சின்னம்மாவின் சுற்றம் சொந்தம் மட்டுமே அப்போலோவில்.. மற்ற எல்லோரும் அப்போலோ வாசல் வரைதான்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர்களுக்கு கூட இல்லாத முன்னுரிமை சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கிடைத்து வருவது அதிமுக தொண்டர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளுக்கு, முதல்வரிடம் இல்லாத உரிமை தனிப்பட்ட நபர்களுக்கு கிடைத்தது எப்படி என்பது நடுநிலையாளர்கள் கேள்வி. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி, சென்னை, அண்ணா சாலை பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அன்று முதல், அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர்தான், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுடன் தங்கியுள்ளனர். இவர்களுக்கு 2வது மாடியில் தனி அறைகளே ஒதுக்கப்பட்டுள்ளனவாம். வேறு ஆண்கள் மட்டுமல்ல, பெண் அமைச்சர்களுக்கு கூட ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்குள் போக அனுமதியில்லை என கூறப்படுகிறது. டாக்டர்கள் மற்றும் நர்சுகளை தவிர வேறு யாரும் ஜெயலலிதா அருகில் செல்லகூட அனுமதியில்லை என்கிறது அப்பல்லோ வட்டாரங்கள்.  பார்க்க முடியாமல் தவிப்பு ஆனால், சசிகலா மட்டுமின்றி, அவரது உறவுக்காரர்களும் அப்பல்லோவில் முகாமிட்டுள்ளதுதான் அதிமுக விசுவாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதன், 5 அக்டோபர், 2016

மகளை காதலித்தவரை திருமண பேச்சுக்கு அழைத்து கொலை செய்த தந்தை: நெல்லை..

சிவகுருநாதன்              லட்சுமணப் பெருமாள்
மகளை காதலித்தவரை திருமண பேச்சுக்கு அழைத்து வெட்டிக் கொலை செய்த தந்தை போலீசில் சரண் அடைந்தார்.நெல்லை மாவட்டம், சங்கரன் கோவில் அருகே தேவர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். இவரது மகள் கஸ்தூரி நர்சிஸ் படிப்பு முடித்து திண்டுக்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அப்போது திண்டுக்கல் மாவட்டம், நெய்காரப்பட்டியைச் சேர்ந்த சிவகுருநாதனுடன் கஸ்தூரிக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இந்த விவகாரம் லட்சுமணப் பெருமாளுக்கு தெரிய வந்ததும், ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தவர். பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

பொள்ளாட்சி ஜெயராமனின் மகன்: தோழி பலி: 7 பேர் படுகாயம்

தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீண், தன்னுடன் கல்லூரியில் படிக்கும் திலக், சுரேகா, மாந்திரா, சுவாதி மற்றும் பெரிய நாயகி ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை மாலை கோவையில் இருந்து ஈரோடு நோக்கி சென்றார். அவினாசியை அடுத்த பெருமாநல்லூரில் ஆதியூர் பிரிவில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பையும் தாண்டி, ஈரோட்டிலிருந்து பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சுரேகா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரவீண் உள்ளிட்ட 7 பேரும் படுகாயம் அடைந்து திருப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறிதது பெருமாநல்லூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரை அதிவேகமாக இயக்கியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.;அருள்குமார்   .. நக்கீரன்,இன் ;

பாம்பு தீண்டி 26 குழந்தைகள் விடுதியில் உயிரிழப்பு! பழங்குடியினர் நல விடுதியில்

26 kids killed by snake bite' ... in government run tribal welfare residential schools in Telangana since
மின்னம்பலம்,காம் :தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெலங்கானா மாநில அரசை, பழங்குடியினர் நல விடுதியில் தொடர்ந்து ஏற்படும் இறப்புகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
தெலங்கானாவில், 2014ஆம் ஆண்டு முதல் பழங்குடியினர் நல விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் இறப்பு அதிகமாகிக்கொண்டே செல்வதை சுட்டிக்காட்டி, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், தெலங்கானா மாநிலத்தின் தலைமை செயலாளர் ராஜீவ் சர்மாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், உடனடியாக அந்த விடுதியின் கட்டமைப்பு மாற்றி அமைக்க வேண்டும் எனவும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

'ம்ம்ம்... நல்லா இருக்காங்களாம்...' அம்மா பற்றி கேட்டதற்கு பன்னீரு பதில்!

மின்னம்பலம்,காம் :
"முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி தினமும் ஒரு வதந்தி வருவதும் அதைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் 'மாண்புமிகு தமிழக முதலமைச்சர், உடல்நிலை தேறி வருகிறார். அதே சிகிச்சை தொடரப்படுகிறது. மருத்துவர் குழுவின் தீவிர கண்காணிப்பில் மாண்புமிகு முதலமைச்சர் இருக்கிறார். சிகிச்சைக்காக மேலும் மருத்துவமனையில் தங்கியிருக்க முதலமைச்சர் அறிவுறுத்தப்படுகிறார்' என்று, ஒரு பிரஸ் ரிலீஸ் வெளியிடுவதும் வழக்கமாகிவிட்டது.
முதல்வர் எப்படி இருக்கிறார் என்பது சசிகலா, இளவரசி தவிர வேறு யாருக்கும் தெரியாத ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். இரண்டாவது தளம் வரை அனுமதிக்கப்படும் ஓ.பன்னீர்செல்வத்துக்கோ, தம்பிதுரைக்கோகூட முதல்வர் இருக்கும் அறைப்பக்கம் செல்ல அனுமதி இல்லை. அங்குள்ள ஏதாவது ஒரு அறையில்தான் முதல்வர் இருப்பார் என்ற நம்பிக்கைதான் அவர்களுக்கும். எந்த அறையில் முதல்வர் இருக்கிறார் என்பதைக் கேட்கும் தைரியம்கூட அவர்களுக்கு இல்லை.

அப்ப அல்லோ என்று மலைக்காதே... இப்போதும் அல்லவா சேம் ஸ்டோரி ... ஒரு கதை .... யா ?

அந்த காலத்தில்...ஒரு மன்னன் இருந்தான்...
அவனுக்கொரு சேனாதிபதியம் இருந்தான்..இருவரும் ஒட்டிப்பிறந்த உடன்பிறவா சகோதரர்களாக...சிலகாலம் பழகிவந்தார்கள்
மன்னனின் சபல புத்திக்கு தீனி போட்டு மான்னனை மயக்கி மெல்ல..தன் பிடிக்குள் கொண்டுவந்துவிட்டான் சேனாதிபதி.
மன்னருக்கு பல நோய்கள் இருப்பதாக செய்தி பரப்பினான் சேனாதிபதி...
அதை பயன்படுத்திக்கொண்டு...மன்னரை அரண்மனையில் சிறை வைத்தான்...அவருக்கு ராஜ் வைத்தியம் செய்து வருவதாக வெளியே செய்தி சொல்லிவந்தான்...
மன்னரை ஈ எறும்பு கூட நெருங்க முடியாத அளவில் இரகசியமாக தனிமை சிறையில் வைத்திருந்தான்..
மன்னர் நலமாக இருக்கிறார் விரைவில் சபைக்கு வருவார் என்று ..அரசவையில் இருக்கும்நபர்கள் மூலமாக செய்தி சொல்லிவந்தான்...
சேனாதிபதியின் கனிவான சேவையில் மன்னர் சுகமாக இருப்பதாகவே மக்கள் நம்பினார்கள்.
அதற்கு பின்னால் சேனாதிபதி நினைத்ததே நடந்தது...
" தனக்கு பிறகு என் உடன் பிறவா சகோதரன் சேனாதிபதியே இந்த நாட்டை ஆளவேண்டும் "" என்று மரண சாசனம் எழுதி ஒப்பம் இட்டதாக ஒரு மடல் வாசிக்க பட்டது...மக்கள் அதை நம்பினார்கள்.
சேனாதிபதி நாட்டுக்கு மன்னர் ஆனார்....
அது அப்போ அல்லோ என்று மலைக்காதே...
இப்போதும் அதே கதைகள் நடக்கிறது...நம்மை சுற்றி...
முகநூல் பதிவு : Damodaran Chennai

கமலஹாசனின் Abuse .. நடிகை கார்த்திகா தமிழ் படமே வேண்டாம் என்று ஓடிவிட்டார்

திருவனந்தபுரம்: உலக நாயகன் கமல் ஹாஸன் வேண்டும் என்றே நடிகை கார்த்திகாவை ஓங்கி அறைந்ததால் அவரது காதில் இருந்து ரத்தம் வந்தது என பிரபல மலையாள சினிமா விமர்சகர் பெல்லிசேரி தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன், சரண்யா, ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்த படம் நாயகன். அந்த படத்தில் கமல் ஹாஸனின் மகளாக மலையாள நடிகை கார்த்திகா நடித்திருந்தார். கார்த்திகா நாயகன் தவிர்த்து பூவிழி வாசலிலே படத்திலும் நடித்துள்ளார்.="நாயகன் படம் குறித்து பிரபல மலையாள சினிமா விமர்சகர் பெல்லிசேரி மலையாள வார இதழ் ஒன்றுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு பேட்டியளித்தார். அந்த .நாயகன்" நாயகன் < நாயகன் படம் குறித்து பிரபல மலையாள சினிமா விமர்சகர் பெல்லிசேரி மலையாள வார இதழ் ஒன்றுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கமல் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.நாயகன் பட போட்டோஷூட்டின்போது கமல் ஹாஸன் கார்த்திகாவின் தோளில் கை போட்டுள்ளார். இது பிடிக்காமல் அவர் கமலின் கையை தட்டியுள்ளார் என்கிறார்

காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் நிறுத்தியது தமிழகத்துக்கு பின்னடைவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை, சுப்ரீம் கோர்ட், நேற்று நிறுத்தி வைத்ததால், தமிழகத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை, காவிரியில் இருந்து திறந்து விடும்படி, சுப்ரீம் கோர்ட், அடுத்தடுத்து பிறப்பித்து வரும் உத்தரவுகளை, கர்நாடக அரசு, தொடர்ந்து மீறி வருகிறது.இதனால், கோபமடைந்த நீதிபதிகள், இம்மாதம், 4ம் தேதிக்குள்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில், திடீர் திருப்பமாக, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெற வேண்டும்' எனக்கூறி, மத்திய அரசு சார்பில், நேற்று முன்தினம், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, உதய் லலித் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை வாபஸ் பெற வேண்டும் அல்லது இறுதி விசாரணை நடக்கும்,அக்.,18 வரை, ஒத்தி வைக்க வேண்டும்,'' என, வாதிட்டார். இதற்கு, தமிழக அரசு சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், சேகர் நபாடே கடும் எதிர்ப்பு தெரிவித் தார்.

nano நேனோ இயந்திரங்களை வடிவமைத்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல்

படம்: ராய்ட்டர்ஸ்.
2016-ம் ஆண்டு வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மூலக்கூறு இயந்திரங்கள் வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்காக இவர்களுக்கு நோபல் அறிவிக்கப்ப்பட்டுள்ளது. அதாவது தற்போது புழக்கத்தில் உள்ள சொல்லைப் பயன்படுத்த வேண்டுமென்றால் நேனோ-மெஷின்களை வடிவமைத்தவர்களான இந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சைச் சேர்ந்த ஜான் பியர் சாவேஜ், அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்காட்லாந்து விஞ்ஞானி சர் பிரேசர் ஸ்டோடர்ட், நெதர்லாந்து, கிரோனிஞ்சன் பல்கலைக் கழக விஞ்ஞானி பெர்னர்ட் ஃபெரிங்கா ஆகியோருக்கு 2016-ம் ஆண்டு வேதியியல் நோபல் வழங்கப்படுகிறது.

மோடி, சோனியாவைச் சந்தித்தார் ரணில்!



இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். நாளை (வியாழக்கிழமை ) 6ஆம் தேதி நடக்கவுள்ள இந்திய பொருளாதார மாநாட்டில் ரணில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். ரணில் தன்னுடைய இந்தியப் பயணத்தின்போது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய மந்திரிகள் சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, தர்மேந்திர பிரதான் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரையும் இன்று சந்தித்துப் பேசவுள்ளார். இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டியில், “இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே பொருளாதாரம் தொடர்பான உறவு மட்டுமே உள்ளது. சீனாவுடன் ராணுவரீதியான உறவு எதையும் இலங்கை வைத்திருக்கவில்லை. ஆனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வரலாற்றுரீதியிலானது.

நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்ய முடியாது:ஆணையம் மனு!

மின்னம்பலம்,காம் : தமிழக மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட்டு தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டநிலையில், தேர்தல் அறிவிப்பாணையை நீதிமன்றம் ரத்து செய்தது. தனி நீதிபதி கிருபாகரனின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக தேர்தல் ஆணையம் இன்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பு, கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி மாலை வெளியிடப்பட்டது. அதற்கு மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதனால் ஆளும் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் அதிருப்தி அடைந்தன. திமுக கண்டனக் குரலை எழுப்பியது. இதையடுத்து, ஆளுங்கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக சர்ச்சை எழுந்தது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் குறித்த இந்த அறிவிப்பில், பழங்குடியின மக்கள் தொகைக்கு ஏற்ப, இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

சசிகலா புஷ்பா படங்களை நீக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

மினம்பலம்,காம் :சசிகலா புஷ்வாவை தவறாகச் சித்தரிக்கும் நிழற்படங்களை வெளியிடுவோர்மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தன்னை தவறாகச் சித்தரிக்கும் படங்களை நீக்க வேண்டும் என சசிகலா புஷ்பா வழக்கு தொடுத்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், சசிகலா புஷ்பா தொடர்பான தவறான படங்களை நீக்குமாறு வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக-வில் இருந்தவர் ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா. திருச்சி சிவா உடன் டெல்லி விமான நிலையத்தில் வைத்து அவரது கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னை அடித்தார். மிரட்டினார். எம்.பி. பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தினார். ஆகவே, என் உயிருக்கு ஆபத்து என்று ராஜ்யசபாவில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் சசிகலா புஷ்பா.

ஷீலா பாலகிருஷ்ணன் தான் இன்றைய தமிழக de facto முதலமைச்சர்?

முகநூல் Sources : New power centers in TN. Bandit Queen Sheela Balakrishnan and Jayalalitha's collection manager Venkatramanan @ Kallu Mama emerge as power centers. They both are issuing orders to the CM O Panneerselvam, who meekly follows their orders. It is sad that while elected representatives are crawling before Bengaluru prison, TN's fate is being decided by two retired bureaucrats.
ஒட்டுமொத்த தமிழகமும் அப்போலா மருத்துவமனையை நோக்கியுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை அறிந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்னை வந்து, அப்போலோ வாசல் வரை சென்று வருகிறார்கள். மருத்துவமனைக்குள் சென்று வரும் அ.தி.மு.க நிர்வாகிகள், அமைச்சர்களிடம், "அம்மாவின் உடல் நிலை இப்போது எப்படி உள்ளது? மருத்துவமனையில் இருந்து எப்போது வீடு திரும்புவார்கள்?" என்று கேட்கிறார்கள்.
பின்னர் ஒருவழியாக திருப்தி அடைந்தவர்களாக திரும்பிச் செல்கிறார்கள். தாங்கள் அறிந்ததை, தங்களுக்குத் தெரிந்தவர்கள், குடும்பத்தினர் என்றெல்லாம் செல்பேசியில் தெரிவித்து, திருப்தியடைகிறார்கள்.
இதுஒருபுறமிருக்க, முதலமைச்சரின் உடல்நிலை குறித்து டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், முதல்வரின் உடல்நிலை குறித்து 2 நாட்களில் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இரவிரவாக சசிகலா அன் கோ ரகசிய ஆலோசனை...

ஏழு நாட்களுக்குப் பின் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி இரவில் ஏழு நாட்களுக்குப் பின் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி இரவில் அப்பல்லோவிலிருந்து சசிகலா வெளியே வர, அவரது கார் வேகமாக சென்றது. மறுநாள் மகாளய அமாவாசை என்பதால் போயஸ்கார்டனில் சிறப்பு பூஜைகளுக்காக சின்னம்மா செல்கிறார் என்றனர் அங்கிருந்த அ.தி.மு.க.வினர். ஆனால், நள்ளிரவில் அவர் சென்றது பெசன்ட் நகர் பகுதிக்கு. அங்கு தனது முக்கியமான உறவினரை சந்தித்து விடியற்காலை 3.30 வரை விவாதித்திருக்கிறார். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பி கார்டனுக்கு வந்துவிட்டு விடிவதற்குள் மருத்துவமனைக்குத் திரும்பிவிட்டார். கடந்த சில நாட்களாகவே நள்ளிரவில் நடக்கின்றன ராஜ ஆலோசனைகள் என்கிறார்கள் அ.தி.மு.கவின் சீனியர்கள். பெசன்ட் நகர் வீட்டிற்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் ரகசிய வருகையும் அதிகரித்திருக்கிறது.

ஜெயலலிதா உடல்நிலையும் ஊர் சுற்றும் வதந்திகளும்! இதுவரை சசிகலா குடும்பம் மட்டுமே பார்க்க...

விகடன்,காம்  ; காவிரிக்காக உண்ணாவிரதம்!செப்டம்பர் 22-ம் தேதி இரவு 9 மணி. போயஸ் கார்டன் தூங்கி வழிந்துகொண்டு இருந்தது. ஆனால், 9 மணிக்குப் பிறகு, வேதா நிலையத்துக்குள் இருந்து, மெல்லக் கிளம்பிய தகவல், “காவிரிப் பிரச்னைக்காக முதலமைச்சர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்; அதற்காக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்; சசிகலா புஷ்பாவை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் பேசினார்’’ என்றெல்லாம் சுற்றி, கடைசியில்  அப்போலோவில் போய் நின்றது. போயஸ் கார்டனில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் கிளம்பி, கிரிம்ஸ் ரோடு அப்போலோ போனது என்று தகவல் உறுதி செய்யப்பட்டது. போயஸ் கார்டன் டு அப்போலோ யார் அனுமதி? 
போயஸ் கார்டனில் இருந்து ஆம்புலன்ஸ் என்றால், அதில் இருந்தது யார் என்பதிலும் குழப்பம். ஏனென்றால், போயஸ் கார்டனில் ஜெயலலிதாவும் இருக்கிறார்; சசிகலாவும் இருக்கிறார். முதலமைச்சர் ஜெயலலிதாதான் அப்போலோவுக்குச் சென்றார் என்றால், அந்தத் தகவல் கன்ட்ரோல் ரூமுக்குச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அங்கு விசாரித்தபோது, “சி.எம். பாஸிங் மெசேஜ் நாட் ரிசிவ்டு” என்றுதான் தகவல் சொல்லப்பட்டது.  ஆனால், விசாரித்து.. விசாரித்து.. கிரீம்ஸ் ரோடு அப்போலோ போனபோது, அங்கு, அ.தி.மு.க கரைவேட்டிகளில் சிலர் நின்றுகொண்டிருந்தனர். வேறு முக்கியப் பிரமுகர்கள் யாரும் அங்கே இல்லை. அதோடு மருத்துவமனையின் மெயின் கேட் இழுத்துப் பூட்டப்பட்டு இருந்தது.

கோவை கலவரம் : பா.ஜ.வினர் 3 பேர் கைது

கோவை: கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் (36) கடந்த மாதம் 22ம் தேதி வெட்டிக்கொல்லப்பட்டார். முன்னதாக, சசிகுமார் வெட்டுக்காயங்களுடன் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்ததும் மருத்துவமனையில் திரண்டிருந்த சிலர், வரவேற்பு அறை கண்ணாடியை உடைத்தனர்.

 இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று கவுண்டம்பாளையத்ைத சேர்ந்த அசோக்குமார் (30) என்பவரை கைது செய்தனர். இதேபோல், கடந்த மாதம் 23ம் தேதி சசிகுமார் இறுதி ஊர்வலத்தின்போது காந்திபுரம் பகுதியில் அரசு பஸ்களை கல்வீசி தாக்கினர். இதுதொடர்பாக, ரஞ்சித்குமார் (30), கஜேந்திரன் (30) ஆகிய 2 பா.ஜ.க.வினரை நேற்று கைதுசெய்தனர் தினகரன்,காம்

கடைசி நேரத்தில் தமிழகத்தின் கை நழுவிய காவிரி.. நாடகம் நடத்திய கர்நாடகா

டெல்லி: காவிரி பங்கீடு விவகாரத்தில் முதலில் வெற்றிகளை சுவைத்து வந்த தமிழகம் தற்போது குப்புற தள்ளிவிடப்பட்டுள்ளது. தனது பல்வேறு வகையான துரித நடவடிக்கைள் மற்றும் ராஜதந்திரங்கள் மூலம், கர்நாடகா ஒரு சொட்டு தண்ணீரையும் 'திறந்துவிட மாட்டோம்' என்ற தனது பிடிவாதத்தில் ஜெயித்துவிட்டது. நடுவர் மன்ற உத்தரவுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய சுமார் 50 டிஎம்சி தண்ணீரை திறக்க உத்தரவிடுங்கள், என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுதான், இந்த பிரச்சினையின் ஆரம்ப புள்ளி. கடந்த மாதம் 2ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த தனது முதல் உத்தரவில், அடுத்த 10 நாட்களுக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்த போதிலும், உச்சநீதிமன்ற உத்தரவை மீற முடியாது என்பதால் தண்ணீரை திறந்துவிட்டது. 

அ.தி.மு.க.,வில் மீண்டும் 1984: ஊரை அடிச்சு உலையில் போடும் அமைச்சர்கள் எம் எல் ஏக்கள் கவுன்சிலர்கள் ...

அ.தி.மு.க.,வில் மீண்டும் 1984: அள்ளித்தட்டிய அமைச்சர்கள்!< தமிழக அரசியல் வரலாற் றில், மறக்க முடியாத ஆண்டு 1984. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.,
உடல்   நலக்குறைவால், அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, அந்தக்கட்சி சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை. எம்.ஜி.ஆர்., என்ற மாபெரும் வசீகர சக்தியை வைத்து, தேர்தலில் வெற்றி கொள்வதற்கான வியூகத்தை வகுத்தது, அன்றிருந்த 12 சீனியர் அமைச்சர்கள்.<>அன்று 12 பேர்<>அவர்கள் தான், தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.,வேட்பாளர்களையும் தேர்வு செய்தனர். நிச்சயமாக ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில், சொத்துக்களை விற்று லட்சங் களில், அந்த அமைச்சர்களைக் குளிப்பாட்டினர் பலர். விளைவு, 'சீட்' கிடைத்தது; ஜெயித்தார் கள்; அமைச்சர்க ளானார்கள்; செல்வத்திலும், செல்வாக்கிலும் அசாத்தியமான உயரங்களைத் தொட்டனர். அதில் மட்டும், அந்த 12 சீனியர் அமைச்சர்கள் அள்ளித்தட்டியதைப் பற்றி, ஆயிரம் கதைகள் இன்னும் உலவுகின்றன.

முதல்வரின் உடல்நிலை குறித்து மக்கள் அறிந்து கொள்ள உரிமை உள்ளது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கடந்த 22ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது முழுமையில்லாத அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. ஆளுநர், மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் சென்று பார்த்த நிலையில் அவர்களும் முழுமையாக தகவல்களை வெளியிடவில்லை.

மேலும் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளால் பல்வேறு இடங்களில் கடையடைப்பும் நடத்தப்படுகிறது. முதலமைச்சரின் புகைப்படங்களை வெளியிட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்து கொண்டே பணிகளை கவனிப்பதாகக் கூறப்பட்டாலும் அது தொடர்பான உண்மையான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

செவ்வாய், 4 அக்டோபர், 2016

இந்து முன்னணியை விரட்டுவோம் – சென்னை, திருச்சி, புதுவை ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணியும் பிஜேபியும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வெறிகொண்டு கத்திக்கொண்டு இருக்கிறார்கள், நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
kovai-hindu-munnani-riots-chennai-pp-demo-posterகோவையில் போலீசு உதவியுடன் இந்து முன்னணி காலிகள் வெறியாட்டத்திற்கு எதிராக மக்கள் அதிகாரம் – சென்னையில் ஆர்ப்பாட்டம்  கோவையில் போலீசு உதவியுடன் இந்து முன்னணி காலிகள் வெறியாட்டத்திற்கு எதிராக மக்கள் அதிகாரம் ஒருங்கிணைத்து ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் 01-10-2016 அன்று நடைபெற்றது.
சசிகுமார் என்ற இந்துமுன்னணியினைச் சேர்ந்த நபர் கொல்லப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் இருந்து திரட்டப்பட்ட இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி காலிகள் கோவையை சூறையாடினர், போலீசோடு சேர்ந்து கொண்டு.
இந்த வெறியாட்டத்தை கண்டித்து அடுத்த நாளே வியாபாரிகளும் முற்போக்கு அமைப்பினரும் சுமார் 800 பேர் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு இருக்கிறார்கள் . இந்து முன்னணியும் பிஜேபியும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வெறிகொண்டு கத்திக்கொண்டு இருக்கிறார்கள், நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கடந்த 28 அன்று ஆர்ப்பாட்டம் நடத்திய பி.ஜே.பி – எச்சு ராஜா பார்ப்பன மதவெறியை கக்குகிறார். தங்களது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு எல்லாவகையிலும் முயன்று கொண்டே இருக்கிறார்கள்.

காவிரி : தமிழினத்திற்கு எதிரான மோடி அரசின் காழ்ப்புணர்ச்சி

people-power-press-releaseவினவு .காம்  : நாள் 3-10-2016:   பத்திரிகை செய்தி  :  தமிழினத்திற்கு எதிரான மோடி அரசின் காழ்ப்புணர்ச்சி >ஒருதலைப்பட்சமான ஒருமைப்பாட்டுக்குக் கட்டுப்பட மறுப்போம்உச்சநீதிமன்றம் சொன்னால் என்ன? காவிரி நடுவர் மன்றம் சொன்னால் என்ன? தமிழகமே பாலைவனமானால் என்ன? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு கூறுவது தமிழினத்திற்கு எதிரான மோடி அரசின் காழ்ப்புணர்ச்சியை உறுதிபடுத்துகிறது. இனியாவது தமிழகம் ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. அமைப்புகளை அரசியல் சமூக புறக்கணிப்பு செய்தாக வேண்டும்.
இனி தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட சட்டத்தை மட்டும் பேசினால் நியாயம் கிடைக்காது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்ப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக மைய அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறைக்கும் ஓரவஞ்சனையும் சூழ்ச்சியும் அடங்கி இருக்கிறது.