கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு, அதிமுக சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரு அணியாக உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்களின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம் அணியினருக்கு மாறிவிடாமல் இருக்க சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு அன்று கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அருண் குமார் கூவத்தூரில் இருந்து வெளியேறி, அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் மிகுந்துள்ளது. அதனால், நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து நம்பிக்கை தீர்மானத்தில் பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்த எம்.எல்.ஏ ஆருகுட்டி, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சின்னராசு மற்றும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் புறகணித்த மேற்கு வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் ஆகிய மூவரையும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்க வைக்க திவாகரன் பேச்சு வார்த்தைகளை நடத்தி வந்தார். அவர்களோ, கட்சியின் துணை பொது செயலாளரான டி.டி.வி. தினகரன் பேசினால் ஆலோசிப்போம் என்று கூறிவிட்டனராம்.
திங்கள், 13 மார்ச், 2017
ஞாயிறு, 12 மார்ச், 2017
சிறையில் இருந்தே வென்ற போட்டி வேட்பாளர் அகிலேஷுக்கு அதிர்ச்சி
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மந்திரி அமர்மணி திரிபாதி. இவரது மகன் அமன்மணி திரிபாதி. மனைவி சாராசிங்கை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அமன்மணி திரிபாதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமர்மணியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் சார்பாக நாட்டான்வா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அமன்மணி திரிபாதி மனு அளித்திருந்தார். இதனை அகிலேஷ் யாதவ் தலைமையிலான குழு நிராகரித்தது.
சமாஜ்வாடி கட்சியின் சார்பாக போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், சிறையில் இருந்தபடியே சுயேச்சையாக போட்டியிட்டார் அமன்மணி திரிபாதி. வாக்கு எண்ணிக்கை முடிவில் சமாஜ்வாடி வேட்பாளர் குன்வர் கவுசல் கிஷோர் சிங்கைவிட 32 ஆயிரத்து 478 வாக்குகள் வித்தியாசத்தில் அமன்மணி திரிபாதி வெற்றி பெற்றார். இந்த முடிவை கேட்ட அகிலேஷ்க்கு அதிர்ச்சி ஏற்பட்டதாம். நக்கீரன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)