சனி, 11 ஜூன், 2011

மும்பை: மிட்-டே பத்திரிக்கையின் கிரைம் நிருபர் சுட்டுக் கொலை

மும்பை: மும்பையின் பிரபல மிட்-டே பத்திரிக்கையின் கிரைம் ரிப்போர்டர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அண்டர்வோர்ல்ட் தாதாக்கள் பற்றிய பல திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டவர் மிட் டே பத்திரிக்கையின் மூத்த நிருபரான ஜே.டே. இந் நிலையில் இன்று பட்டப் பகலில் போவாய் பகுதியில் சென்று கொண்டிருந்த அவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டனர்.

தாவூத் இப்ராகிம் உள்பட பல தாதாக்களின் கூலிப் படைகளின் செயல்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் இவர்.

Indian investigative journalist shot dead in Mumbai

Indian policemen investigate the crime scene where senior Mid Day journalist Jyotirmoy Dey
19:41 11/06/2011
A senior investigation editor of Mumbai's leading tabloid, Mid-Day has been shot dead on Saturday, the tabloid said on its web site.
According to the police, Jyotirmoy Dey was shot dead in Mumbai's suburb by four unidentified men riding two motorcycles.
"It is hard to say what exactly was the reason of the murder. He had not written a single sensational story over the recent months," Dey's friend, an editor of Indian daily told RIA Novosti.
Mid-Day said citing the police sources that Dey was reportedly receiving death threats from the local mafia.
The journalist had been specializing on covering the stories on the Mumbai's underworld for over two decades. He had contacts both in criminal circles and police.
He is also the author of two books on Mumbai's underworld.

மதவாதம் தலைதூக்கவிடக்கூடாது: திராவிடர் கழகம்

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக வழக்கறிஞர்கள் அணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

லஞ்சம், ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில், மதவாத சக்திகள் காவிகள் ஆர்.எஸ்.எஸ்., அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க. போன்ற அமைப்புகள் பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே ஆகியோரை முகமூடிகளாகப் பயன்படுத்தி, மத்தியில் மதச்சார்பின்மை அடிப்படையில் நடைபெறும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தி.மு.க. ஆதரவினால் நடைபெறும்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசினை ஒழிப்பதற்காக, ஜனநாயகத் தேர்தல் முறைக்காகக் காத்திராமல், குறுக்கு வழியில் ‘உண்ணாவிரதம்’, கலவரம், ஆயுதப் பயிற்சி கொடுக்கும் தனிப்படை உள்பட அறிவிக்கும் அளவுக்கு வந்துவிட்டதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இவர்களது ஜனநாயகப் போர்வைக்குள் இருப்பது இந்துத்துவா மதவாதம் என்பதை நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் நடத்தி அம்பலப்படுத்துவது நமது கடமையென்றும், அதேநேரத்தில், மத்திய அரசு சட்டப்படி எடுக்கவேண்டிய எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயங்கக்கூடாது என்றும் இக்கூட்டம் வற்புறுத்துகிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

ஹீரோ ரேஸில் ஜீவா முன்னணி!


 இது ‌‌ஜீவா வருடம். சிங்கம் புலி, கோ என அடுத்தடுத்த ஹிட்கள். இதுமட்டுமின்றி ஜீவா நடித்து வரும், ரௌத்திரம், வந்தான் வென்றான், நண்பன் என வரப் போகிற படங்களும் எதிர்பார்ப்புக்கு‌ரியவை. ஜீவாவின் மார்க்கெட் 'கோ' படத்தின் மூலம் பட்டையை கிளிப்பியுள்ளது. மேலும் 'கோ' படம் வசூலிலும் பட்டையை கிளிப்பியுள்ளது. இதனையடுத்து கோலிவுட் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் ஜீவா கால்ஷீட் வாங்குவதற்குக்காக ஜீவா வீட்டிற்கு படை எடுத்து வருகின்றனர். கோலிவுட் ஹீரோ ரேஸில் ஜீவா படு வேகமாக சென்று கொண்டிருக்கிறார்.

முட்டைய நிறுத்த போறாங்க,பசங்க மந்தமாயிடறாளாம்

Swine Flu
‘‘எல்லாம் நல்ல விஷயந்தான்... சீட் கிடைச்சுடுத்து... எல்கேஜி சீட் வாங்கறதுக்கு என்ன போராட்டம்...’’ என்றாள் ப.வீ.தோழி. ‘‘எம்மெல்லே சீட் கூட கிடைச்சுரும்... நல்ல ஸ்கூல்ல எல்கேஜி சீட் கிடைக்கறது கஷ்டம்தான்...’’ என்று கமென்ட் அடித்தார் பீட்டர் மாமா. ‘‘அதை விடுங்கோ மாமி... ஸ்கூல்ன்னதும் தான் ஞாபகம்... உங்க டிபார்ட்மென்ட் விவகாரமாச்சே... சத்துணவுல ஏதோ சேஞ்ச் வரப் போறதா பேசிண்டாளே... உண்மையா...’’ என்று விசாரணையில் இறங்கினாள் சுசி மாமி.

‘‘ஆமாமா... வாரத்துக்கு 5 முட்டை போட்டா இல்லியா... இப்போ அதை நிறுத்தறதா முடிவு செஞ்சிருக்கா.. அவிச்ச முட்டை சாப்பிட்டா பசங்க மந்தமாயிடறாளாம்... அதனால முட்டைக்கு பதிலா காய்கறிகளை அதிகமா சேக்க போறதா சொல்றா... போன வாரம் டிஸ்கஷன் நடத்தினா... முடிவு வரல... டீச்சர்சை அழைச்சு சொல்லிட்டாளாம்... கண்டிப்பா முட்டை கிடையாதுனு... அவா அப்செட்... பேரன்ட்ஸ் சைட்ல எதிர்ப்பு வருமோனு யோசிக்கறா...’’ என்று தோழி விவரித்தார்.

‘‘ஸ்கூல் திறந்த பின்னதான் ரீயாக்ஷன் தெரியும்... இதுதொடர்பா சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவா இன்னிக்கு கூடி பேசறாளாம்... போராட்டம் அறிவிப்பா போல...’’ என்றாள் சுசி மாமி. ‘‘அதெல்லாம் சரி சுசீ... உங்காத்துக்காரருக்குதான் நிறைய பேரை தெரியுமே... அரசு வக்கீல் போஸ்டிங் ஏதாவது வாங்கி தரப்படதோ... என் ஹஸ்பண்ட்டும் யாரையெல்லாமோ பாத்துண்டு இருக்கார்...’’ என்று கேட்டார் தோழி.

‘‘இதோ இங்கதான இருக்கார்... நீங்களே கேளுங்களேன்...’’ என்று சுசி மாமி சொல்ல, பீட்டர் மாமா சிரித்தபடியே சொன்னார்... “அமைச்சர் பதவிக்கு கூட அவ்வளவு போட்டியில்ல மாமி... அரசு வக்கீலாகறதுக்குஅடிதடியே நடக்குது... ஹவுசிங் போர்டு இருக்கே... அதுக்கு லீகல் ஆபீசர் போஸ்டிங் இருக்கு... அந்த பதவிய பிடிக்கறதுக்கு கடும் போட்டி... அதுல வாரிசுகளை கொண்டு வர்றதுக்கு ரெண்டு விஐபிகள் மோதறாங்கன்னா பாருங்க...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘யார் அவா...’’ என்று கேட்டாள் சுசி மாமி.

‘‘ஒருத்தர் அமைச்சருக்கு உறவினராம்... மற்றவர் நாடாளுமன்ற உறுப்பினரோட உடன்பிறப்பாம்... பெரிய தலைகள்லாம் மோதினா... கட்சியில உள்ள சாதாரண வக்கீல்கள் என்ன பண்றதாம்னு ஏடியெம்கே வக்கீல்கள் எல்லாம் புலம்பிட்டு இருக்காங்க...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சட்டசபையில காங்கிரஸ் தலைவர் பதவி யாருக்குனு இன்னும் முடிவு செய்யல... கவர்னர் உரையும் முடிஞ்சுடுத்து... விவாதமும் முடிஞ்சிடுத்து... எல்லா கட்சிகளும் அறிவிச்சுட்டா...’’ என்றாள் சுசி மாமி.

‘‘தற்காலிக தலைவரா கோபிநாத் இருக்கார்... மேலிடம் பட்டுக்கோட்டை எம்மெல்லேவை அறிவிக்க வாய்ப்பிருக்கு... பட்ஜெட் கூட்ட தொடர்ல தெரிஞ்சிடும்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சிஎம் 13ம் தேதி டெல்லி போறாங்களாம்... அதுக்கான ஏற்பாடுகள் நடந்துண்டு இருக்காம்... எல்லா லீடர்சையும் சந்திக்கறதா பிளான்... தமிழ்நாடு ஹவுஸ்ல தங்கறதால ரிப்பேரிங் வேலை ஜரூரா நடந்துட்டு இருக்குனு டெல்லி ப்ரண்ட் சொன்னார்...’’ என்று சுசி மாமி சொல்லி முடிக்கும்போது குறுக்கிட்ட தோழி, ‘‘சரி சுசீ... நான் கிளம்பறேன்...’’ என்று விடைபெற்றார்.
gossip 

வந்த மஹான்கள் எல்லோருமே போலியான மனிதர்கள்.U.G.Krishnamurthi

யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி-இது வரை நீங்கள் சந்தித்திராத எதிரி

புனிதம்,பவித்ரம்,தர்மம்,ஆன்மீகம்,ஆத்மா,கலை,கடவுள்,குரு,ஞானிகள்,பண்பாடு,மதம் என்று வாழ்க்கையில் எதைப் பற்றியெல்லாம் நீங்கள் இதுவரை உயர்வான அல்லது தாழ்வான கருத்துக்களை வைத்திருந்தீர்களோ அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி, உங்களை நீங்களாகவே தரிசிக்க உதவுதற்குத் தோன்றிய அபூர்வமான மனிதர் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி.

தன்னை ரிஷி என்று அறவே ஒத்துக் கொள்ள மறுத்த இன்றைய ரிஷி.

உண்மையைத் தேடத் தொடங்கினாலேயே,தவறான திசையில் பயணமாக ஆரம்பிக்கிறீர்கள் என்று அர்த்தம் என்று சொல்லிய இந்த நூற்றாண்டின் இணையற்ற மாற்றுச் சிந்தனையாளர்.

இனி அவரது வார்த்தைகளிலேயே……
‘உண்மையைத் தேடிச் செல்லும் எந்த முயற்சியுமே நீங்கள் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் உங்களது இயற்கையான நிலையிலிருந்து உங்களை விலக்கி விடுகிறது.

உண்மை என்பது உங்களது முயற்சியினால் அடைவதோ,பெறுவதோ அல்லது நிறைவேறுவதோ கூடிய பொருள் அல்ல.அது தன்னைத் தானே வெளிப்படுத்த முடியாதபடிக்குச் செய்கின்ற தடைகளே நீங்கள் செய்கின்ற முயற்சிகள் எல்லாம்.
எப்போதும் நீங்கள் உங்கள் இயற்கையான நிலையில்தான் இருக்கிறீர்கள்.உண்மை தனக்கே உரித்தான வழியில் தன்னிச்சையாக வெளிப்படத் தடையாக இருப்பதே உங்களது தேடல்கள்தான்.அதனால்தான் தேடுதல் என்பதே தவறான திசையில்தான் இருக்க முடியும்!

நீங்கள் புனிதம்,பவித்ரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்துமே உங்கள் உணர்வில் படிந்திருக்கும் அசுத்தங்கள்.

அசுத்தம் என்ற வார்த்தை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்,இருந்தாலும் சொல்கிறேன் அவை அசுத்தங்களே.

உங்களால் எதுவுமே செய்ய முடியாது.உங்கள் கைகளில் எதுவுமே இல்லை.

இதை நான் உங்களுக்கு தர முடியாது.ஏனெனில் அது ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது.

உங்களிடம் உள்ள பொருளையே நீங்கள் தானம் கேட்பது தமாஷாக இருக்கிறது.

எவரிடமும் கேட்டுப் பெறுவதற்கு எந்தப் பொருளும் இல்லை.

என்னிடம் இருப்பதுதான் உங்களிடமும் இருக்கிறது.

நான் இருக்கும் இடத்தில்தான் நீங்களும் இருக்கிறீர்கள்.

என்னைப் பற்றிச் சொல்வதானால்,

மத சம்பிரதாயங்கள்,அனுஷ்டானங்களுடன் நிரம்பிய ஒரு சூழ்நிலையிலேயே நான் வளர்க்கப் பட்டேன்.எனது தாத்தா நல்ல பண்பாடுடைய மனிதர்.நிறையப் படித்த, பண்டிதர்களை அவர் சம்பளம் கொடுத்து ஊழியத்துக்கு வைத்திருந்தார்.நான் தரமான கல்வியும்,அதற்கானஆழ்ந்த சூழ்நிலையும் பெறவேண்டும் என்பதில் அவர் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

தினமும் காலை நாலு மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் அந்தப் படித்த பேர்வழிகள் வந்து புனித நூல்களையும்,அதன் விளக்க உரைகளையும்,இன்னும் எல்லா சாஸ்திரங்களையும் படிப்பார்கள்.ஐந்து வயதோ,ஆறு வயதோ,ஏழு வயதோ சிறு பிள்ளையான நான் அந்தக் கருமத்தையெல்லாம் கேட்டுத் தொலைய வேண்டும்!

நிறையப் புனித மஹான்கள் எங்கள் இல்லத்துக்கு வருகை புரிந்திருக்கிறார்கள்.எந்தப் புண்ணிய ஆத்மாவுக்கும் எங்கள் வீட்டுக் கதவு திறந்தே இருக்கும்.ஆனால் அந்தச் சிறிய வயதிலேயே ஒன்றை மட்டும் நான் கண்டுபிடித்து வைத்திருந்தேன்.

வந்த மஹான்கள் எல்லோருமே போலியான மனிதர்கள்.அவர்கள் எல்லாருமே பொய்யர்கள் என்றுதான் சொல்லுவேன்.
எப்படியோ எதுவெல்லாம் புனிதம் என்று சொல்லப் பட்டதோ,தெய்வீகம் என்று கூறப் பட்டதோ அவற்றின் மீதெல்லாம் எனது சிஸ்டத்துக்குள்ளேயே ஒரு வெறுப்பு ஊர்ந்து வந்து,அவற்றையெல்லாம் தூக்கி எறிந்து விட்டது.
அதற்குப் பிறகுதான் எனது தேடல் தொடங்கியது.சொல்லப் பட்ட அனைத்து அனுஷ்டானங்களையும் முறைப்படி செய்தேன்.எனக்கு இளைய வயதுதான்.ஆனால் வீடுபேறு,மோட்சம்,விடுதலை,நிர்வாணம் என்று சொல்லப் பட்டதை யெல்லாம் அடைந்தே தீருவது என்ற உறுதியுடன் செயல் பட்டேன்.அது எனக்கு அவ்வளவு தேவைப் பட்டது.இல்லையெனில் இப்படி ஒரு முழு வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்திருக்க மாட்டேன்.பிறகு எனது இன்னும் தீவிரமான தேடல் ஆரம்பித்தது.எனக்கு ஆழமான மதப் பின்னணி இருந்தது.எனது வழியிலேயே நான் அனைத்தையும் ஆராய ஆரம்பித்தேன். உளவியல்,தத்துவ இயல்,மேற்கத்திய,கிழக்கத்திய தந்திர சாஸ்திரங்கள்,இன்றைய அறிவியல் கோட்பாடுகள் அனைத்தையும் பல வருடங்கள் கற்றேன்.பரந்து பட்ட மனித அறிவினை நானே ஆராயத் துவங்கினேன்.
எனக்குப் பல சக்திகள் கிடைத்தன. பல அனுபவங்கள் நிகழ்ந்தன.ஆனால் அவை எதனிடமும் எனது கவனம் போகவில்லை.

ஒருவரைப் பார்த்தவுடன் அவரது இறந்த காலம்,நிகழ் காலம்,எதிர் காலம் எல்லாவற்றையும் என்னால் பார்க்க முடிந்தது.ஆனால் எனக்கு மட்டும் எப்படி, ஏன் இந்த ஆற்றல் என்று வியந்தும்,குழம்பியும் இருந்திருக்கிறேனே தவிர அந்த ஆற்றலை நான் ஒரு போதும் பயன் படுத்த வில்லை.
பல சமயங்களில் நான் ஏதோ சொல்லுவேன்.அது அப்படியே நடக்கும். அதனுடைய சூட்சுமம் என்னவென்று நான் எவ்வளவு முயன்றும் எனக்குத் தெரியவே இல்லை.இது பல முறை நடந்த போதும் அந்த எனது ஆற்றலுடன் நான் விளையாட வில்லை.
அதற்கான ஆர்வமும் அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. அது மட்டுமல்ல எனக்குள் அனைத்துத் தேடலுமே நின்று போனது.அதற்குப் பிறகுதான் எனக்குப் பல விந்தையான நிகழ்ச்சிகள் நடந்தன.
இப்போது
எனது உடலைத் தேய்த்தால் ஒளிப் பொறிகள், பாஸ்பரஸைப் போல சிதறின.
http://pandiyan74.wordpress.com/

விரைவில் இலங்கை செல்கிறார் மன்மோகன்

கொழும்பு : இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் அழைப்பைஏற்று, பிரதமர் மன்மோகன் சிங், விரைவில்இலங்கை செல்லவுள்ளார்.தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோர், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை நேற்றுசந்தித்தனர். அப்போது, ராஜபக்ஷேவின் கோரிக்கையை ஏற்று, விரைவில் இலங்கைக்கு வர, பிரதமர் மன்மோகன் சம்மதித்துள்ளதாக அவரிடம் தெரிவித்தனர். இதற்கான கடிதத்தையும் அவரிடம்கொடுத்தனர். இருந்தாலும், பிரதமர் எப்போது சுற்றுப் பயணம் செய்கிறார் என்பது பற்றிய உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

சமச்சீர் கல்வி: ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்?

சென்னை: திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்த அதிமுக அரசின் சட்ட திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையே தொடரப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியை வழங்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை முந்தைய திமுக அரசு அறிமுகம் செய்தது, இந்தாண்டுக்கான பாடப் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டன.

ஆனால், இந்த பாடப் புத்தகங்கள் தரமானதாக இல்லை என்று கூறி சமீபத்தில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், சமச்சீர் கல்வியை ரத்து செய்யும் சட்டத் திருத்தம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக தாக்கலான வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்ததோடு, மாணவர்களின் நலன் கருதி பழைய கல்வி முறையை அமல்படுத்த இந்த நீதிமன்றம் அனுமதி மறுக்கிறது என்றும், சமச்சீர் கல்வி முறையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் தேவையான பக்கங்களை நீக்கவோ, சேர்க்கவோ தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் தமிழகத்தில் மீண்டும் சமச்சீர் கல்வி முறையையே அமலுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச்சில் அப்பீல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதற்காக அரசு வழக்கறிஞர்கள் நேற்றே டெல்லி விரைந்தனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் இன்று காலை டெல்லி சென்றார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பு-ராமதாஸ் வரவேற்பு:

இந் நிலையில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல குறைகள் இருந்தாலும் அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே அதில் உள்ள குறைகளை படிப்படியாகக் களைய வேண்டும் என்றுதான் பாமக வலியுறுத்தி வந்தது. சென்னை உயர்நீதிமன்றமும் அதன் இடைக்காலத் தீர்ப்பில் இதையே தெரிவித்திருக்கிறது.

இந்தத் தீர்ப்பை கெளரவம் பார்க்காமல் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தாமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

English summary
Follow the Madras High Court's stay on the operation of an amendment to the Tamil Nadu Uniform System of School Education Act, the government is planning to appeal in SC against the order

காங்கிரஸ் கூட்டணியை திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்-திருமாவளவன்

மதுரை: காங்கிரசுடன் கூட்டணி தொடர்கிறது என்று திமுக சார்பில் வெளியான செய்தி, எங்களுக்கு கசப்பாக இருக்கிறது. இதனால் இந்த முடிவை திமுக பரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரி்க்கை விடுத்துள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்ததால் தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கசப்பு உணர்வு ஏற்பட்டது.

திமுகவுடனான நெருக்கத்தால் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் சூழல் உருவானது. இருப்பினும், திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சி தான் முக்கிய காரணம்.

காங்கிரஸ் பிளாக்மெயில் செய்து 63 சீட்டுகளை பெற்றது. இதனால் 2 கட்சிகளும் தேர்தலில் இணைந்து செயல்பட முடியாத நிலை இருந்தது. காங்கிரஸ் கட்சியுடன் கசப்பான உணர்வு கொண்ட எங்கள் தோழர்கள் தேர்தலில் செயல்பட முடியவில்லை. இதனால் தான் சட்டமன்ற தேர்தலில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தார்கள்.

திமுக அரசு மீது மக்களுக்கு எந்த கோபமும் இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது தான் தமிழின உணர்வாளர்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரசுடன் கூட்டணி தொடருகிறது என்று திமுக சார்பில் வெளியான செய்தி, எங்களுக்கு கசப்பாக இருக்கிறது. இதனால் இந்த முடிவை திமுக பரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி அமல்படுத்தலாம் என்ற ஐகோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன். சமச்சீர் கல்விக்கு மக்கள் ஆதரவு இருக்கும் போது, அதனை அரசு பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்றும், இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய அ.தி.மு.க. அரசை பாராட்டுகிறேன். அதேபோல கச்சத்தீவை திரும்ப பெறும் தீர்மானத்தையும் வரவேற்கிறேன் என்றார்.

English summary
VCK leader Tirumavalavan has urged DMK to reconsider its alliance with congress

June 11, 1990, LTTE massacred over 600 unarmed policemen who surrendered t

June 1, 1990, சரணடைந்த 600 போலீசாரை புலிகள் குருரமாக கொன்றுகுவித்த நாள்

Recalling ‘the saddest day in Lankan Police history’

June 11, 1990 according to many is the saddest day in the history of Sri Lankan Police. It is the day, the LTTE massacred over 600 unarmed policemen from several police stations in the East, who surrendered allegedly following a request from the very top in the political hierarchy.
In a most cowardly way the LTTE murdered unarmed police personnel, after giving an assurance that they would not be harmed, to the political leaders with whom they were engaged in so-called peace talks at that time.
According to eye-witness accounts Policemen who surrendered heeding the call of their superiors were taken into the jungles blindfolded, hands tied behind their backs and shot at close range with bullets to the back of their heads.
Twenty one years hence the gruesome incident lingers in the minds of not only the kith and kin of the murdered policemen but in many others as well. At a time when all Sri Lankans are enjoying the dividends of peace due to the sacrifices made by such heroes and many others like them, it is the duty of all to ensure that they do not remain forgotten heroes.
In 1990 as peace talks between the LTTE and the then government led by President R. Premadasa began to wane, the LTTE demanded the surrender of police stations in the East on June 11, 1990.
The LTTE surrounded police stations in Batticaloa, Vellaveli, Kalmunai, Valachenai, Kalawnchikudi, Samanthurai, Eravur and Akkaraipattu. By the end of the day most of the police stations surrendered to the LTTE, allegedly heeding calls from the top to do so.
According to some reports on June 11, the LTTE ordered police personnel in the Eastern province to vacate all police stations with their families by 2.30 pm, or face the consequences.
It is reported that more than 800 police personnel were abducted by the LTTE later. Some had escaped but the majority of them had been murdered in cold blood.
Eye-witnesses have said that they were lined up and shot with their hands tied behind their backs.
Subsequently the LTTE is reported to have taken control of a number of police stations, including Batticaloa, Vellaveli, Kalmunai, Valachenai, Kalawnchikudi, Samanthurai, Eravur and Akkaraipattu.
Later the LTTE also stormed stations in the Jaffna district and ordered the policemen to leave, stations at Kankesanthurai, Valvetiturai, Point Pedro, Kilinochchi, Vavuniya and Murunkan.
On June 15, the LTTE had attacked the police stations at Elephant Pass in the Jaffna district and Mud Cove in the Trincomalee district. Also, the LTTE attacked several army camps in the area.
According to reports Police officers laid down their arms after being promised safe conduct and subsequent release.
The policemen had surrendered following alleged orders because the political leadership at the time had thought that they could re-invigorate the talks with the LTTE which was in the wane during the time.
And they thought by doing so they could avoid armed confrontation. That was, the way the LTTE effectively used negotiation as a tactical ploy to achieve certain politico/military advantages.
The LTTE were holding talks with the then government. They were doing so since the IPKF left the shores of Sri Lanka, but returned to armed conflict soon after the departure of the IPKF having massacred over 600 policemen, marking the beginning of another phase of the so-called ealam war.
Recently, retired SSP Tassy Seneviratne had recalled incidents concerning the massacre of more than 600 policemen in the East during his testimony to the Lessons Learnt and Reconciliation Commission.
Answering queries the retired police officer had told the LLRC that the police then had even failed to conduct a proper inquiry into the incident fearing the wrath of the political hierarchy at the time, the media reported.
This is not the only atrocity done by the LTTE during their reign of terror spanning 30 long years. The enormity of the death and destruction caused by them is well documented and would never be forgotten.
The LTTE massacred village’s, killed pregnant women and children, sent suicide bombers to public venues. This is why the world is a better place without terrorists.
So let’s not forget that this future of hope is built upon the sacrifices made by many like the 600 plus police officers who laid down their lives in June 11, 1990.
 நிராயுத பாணியான  போலீசாரை புலிகள் குருரமாக கொன்றுகுவித்த நாள் 

பாலா அழுது விட்டார்.அவன் இவன்,எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும்


பாலா யாரையும் பாராட்ட மாட்டார்: அவன் இவன் மாதிரி இன்னொரு படத்தில் நடிக்க மாட்டேன்: விஷால்

எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், அவன் இவன் மாதிரி இன்னொரு படத்தில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் விஷால் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால்,

பாலா டைரக்ஷனில் நானும், ஆர்யாவும் இணைந்து நடித்த  அவன் இவன்  படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்தில் நான் 200 நாட்கள் நடித்தேன். அதுவும் ஒன்றரை கண் ஆசாமியாக...அப்படி நடித்தபோது எனக்கு ஏற்பட்ட சிரமங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. படப்பிடிப்பு முடிந்து ஓட்டல் அறைக்கு திரும்பியதும் கண் வலி மற்றும் தலை வலி தாங்க முடியாமல் அழுது இருக்கிறேன்.

எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும்,  அவன் இவன்' மாதிரி இன்னொரு படத்தில் நடிக்க மாட்டேன். இதுதான் என் கடைசி படம் என நினைத்து நடித்து இருக்கிறேன். ஒரு காட்சியில் நடித்தபோது, உயிர் போய்விட்டதாகவே நினைத்தேன்.
எவ்வளவு சிரமமான காட்சியில் நடித்தாலும், பாலா யாரையும் எளிதில் பாராட்ட மாட்டார். அவன் இவன்' படத்தில், 70 அடி உயர மரத்தில் நான் எந்த பிடிமானமும் இல்லாமல் நடப்பது போல் ஒரு காட்சி. அதுவும், ஒன்றரை கண் உள்ளவனாக நடித்தேன். படத்தில் அது, 400 அடி நீளம் வரும்.

அந்த காட்சியை டப்பிங்'கில் பார்த்துவிட்டு, பாலா அழுது விட்டார். தியேட்டருக்கு வெளியே வந்து,   எப்படிடா நடிச்சே?'' என்று கேட்டு என் முதுகில் பலமாக அடித்துவிட்டு,   சூப்பர்டா'' என்று பாராட்டினார்
ஒன்றரை கண் உள்ள மனிதனாக இதுவரை யாரும் நடிக்கவில்லை என்பதால்,  கின்னஸ்' சாதனைக்காக விண்ணப்பிக்கலாம் என்கிறார்கள். அதற்கான முயற்சி நடக்கிறது.

அவன் இவன்' படத்தில் நான் நடிப்பதற்கு ஆர்யாதான் காரணம். 16 வருடங்களாக நாங்கள் இருவரும் நண்பர்கள். அவன் ஒரு அதிசயப்பிறவி. அவனுக்கு கர்வம், தாழ்வுமனப்பான்மை இரண்டும் கிடையாது. சில காட்சிகளில் எனக்கு பெரிய பெயர் கிடைக்கும் என்று அவனுக்கு தெரியும். ஆனால், பொறாமைப்படவில்லை

இந்த படத்தில் நடித்த பிறகு, இனிமேல் எப்படிப்பட்ட படங்களில் நடிப்பது? என்று தோன்றாமல், கதை கேட்பதையே நிறுத்தி விட்டேன்.

ஒரு மாறுதலுக்காக, பிரபுதேவா டைரக்ஷனில் நடிக்கிறேன். இது,  சவுர்யம்' என்ற தெலுங்கு படத்தின் தழுவல். இப்போதைக்கு,  பிரபாகரன்' என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
திருமணத்துக்காக, நான் அவசரப்படவில்லை. இன்னும் 2 வருடங்கள் போகட்டும் என்று விட்டுவிட்டேன் என்றார்.

Two fanatics or two black mail brokers


கூடா நட்பு அது யாரைப் பற்றி? கலைஞர் பதில்


கூடா நட்பு என்று சொன்னீர்களே, அது யாரைப் பற்றி?
கலைஞர் பதில்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 10.06.2011 அன்று நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் முடிந்ததும், தி.மு.க. தலைவர் கலைஞர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அளித்த பதில்களும் வருமாறு:
இன்று நீங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தில் சி.பி.ஐ. பற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மத்திய அரசு, சி.பி.ஐ. நிறுவனத்தை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
ஆயுதமாக இருக்கலாம், அரசியல் ஆயுதமாக இருக்க முடியாது
கேள்வி: திருவாரூரில் நீங்கள் பேசும்போது கனிமொழி மீது போடப்பட்டுள்ள வழக்கு மத்திய அரசால் போடப்பட்ட வழக்கு என்பதைப் போலச் சொன்னீர்கள். இன்றைய உங்கள் தீர்மானத்தில் அதை ஏன் குறிப்பிடவில்லை?.
தில்: திருவாரூரில் நான் என்ன பேசினேன் என்பதை திரித்துச் சொல்லாமல், முறையாக, ஒழுங்காக, உண்மையாக, சத்தியமாகக் கேளுங்கள்.

கேள்வி: "கூடா நட்பு'' என்று சொன்னீர்களே, அது யாரைப் பற்றி?.
உங்களில் ஒருசிலரோடு இருக்கின்ற நட்பாகக் கூட இருக்கலாம் அல்லவா?

கேள்வி: காங்கிரஸ் கட்சி தி.மு.க.வை என்றைக்கும் மதித்ததில்லை என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கூறினீர்கள். இப்போது கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னீர்கள். அதனால் மீண்டும் இப்போது காங்கிரஸ் கட்சி தி.மு.க.வை என்றைக்கும் மதித்ததில்லை என்று கூறுவீர்களா?.
ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றி   அப்போதுள்ள நிலையைப் பொறுத்து கூற வேண்டிய சூழ்நிலையில் நான் அப்படி கூறியிருப்பேன். அதையே இப்போதும் நீங்கள் கூறுவீர்களா என்று கேட்க முடியாது  என்றார்.

Jeyalalitha:தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை


இலங்கைத் தமிழினத்தை காட்டிக்கொடுத்த ஜெயலலிதாவின் செயலை நாட்டிற்குக் காட்டுவோம்: திமுக
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 10.06.2011 அன்று திமுக தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,

அன்று தமிழகச் சட்டப் பேரவையில் இலங்கையில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டுமென்றும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பி, சிங்களவர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ்ந்திட அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் அனைவரும் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன்
இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், கேட்டுக்கொண்டு முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட அரசினரின் தனித் தீர்மானத்தை திராவிட முன்னேற்ற கழகம் முழு மனதோடு ஆதரிப்பதோடு, அந்த தீர்மானத்தை நிறைவேற்றுகின்ற நேரத்தில் தேவையில்லாமல் முதல் அமைச்சர் ஜெயலலிதாவும், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக அரசையும், கழகத் தலைவர் கலைஞர் அவர்களையும் ஜனநாயக மரபுகளுக்கு மாறாகவும், கருத்துக்குக் கருத்து என்ற முறையில் எதிர்க் கருத்தை எடுத்து வைத்திட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் - ஒன்றுபட்ட உணர்வோடு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நேரத்தில் கடுமையாகத் தாக்கி விரோத உணர்வை வெளிக்காட்டிப் பேசியதற்கு இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு தனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறத அதே நேரத்தில்,
தமிழகச் சட்டப்பேரவையில் 16.04.2002 அன்று இதே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்போது, கொண்டு வந்த தீர்மானத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரான பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்றும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றம் கூறியதையும், 17.1.2009 அன்று இதே ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டதையும் எடுத்துக்காட்டி இலங்கை தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்த இழிசெயல், பழிச்செயல் புரிந்தவர்கள் தற்போது தமிழ் இனத்தை எதையும் சொல்லி எல்லாக் காலத்திலும் ஏமாற்றலாம் என்ற மனப்பான்மையோடு இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள் என்பதை இந்த உயர்நிலைச் செயல் திட்டக் குழு தமிழ் உலகத்திற்குச் சுட்டிக்காட்டி நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கையில் டோக்கன் இருக்கு, யாரு டிவி கொடுப்பாங்க? குழம்பும் மக்கள்!

வால்பாறை:  இலவச தொலைக்காட்சி கிடைக்காதவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. ஆட்சி மாறிவிட்டதால், அவர்களுக்கு டிவி கிடைக்குமா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.

டோக்கன்

திமுக ஆட்சியில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இலவச கலர் டிவி வழங்கும் பணி துவங்கியது. வால்பாறை தாலுகாவில் 5 கட்டமாக இது வழங்கப்பட்டது. விடுபட்ட பயனாளிகள் 661 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு டிவி கிடைக்கவில்லை.

டிவி கிடைக்குமா?

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதால், இவர்களுக்கு தொலைக்காட்சி கிடைக்குமா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இது குறித்து வால்பாறை தாசில்தார் சின்னப் பையனிடம் கேட்டபோது, "இது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்'' என்றார்.
 

English summary
661 people in Valparai who are yet to receive the free colour TV promised by DMK seem confused. Since the government has changed, they are wondering as to who'll give them the promised free colour TV.

சோ ராமசாமி கூட ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக கண்ணீர் விடத் துவங்கி விட்டார்.

லங்கை மீதான பொருளாதாரத் தடை விதிக்க கோரும் தீர்மானத்தில் கடித அரசியலில் உள்ள பலம் கூட இல்லை. ஆனால் அதுதான் நம்பிக்கை ஊட்டுவதாக வைகோ முதல் சாதாரண தமிழ் உணர்வாளர்கள் வரை கருதுகின்றனர். பான் கி மூன் ஒரு மூவர் குழுவை அமைத்துள்ளார். அது அதிகாரப்பூர்வ ஐ.நா குழு அல்ல என்பதை ஜெயாவே சட்டமன்றத்தில் தனது உரையில் சுட்டிக் காட்டி உள்ளார். இந்தக்குழு ஆதாரங்களை வெளியிட்டுள்ளது, சில பரிந்துரைகளையும் தந்துள்ளது. இதனைப் பெற்றுக் கொண்ட ஐ.நா செயலர் இதனை பாதுகாப்பு சபை மற்றும் பொதுச்சபைகளில் வைத்துப் பேசுகிறார் என்றால் அதில் இது பெரும்பான்மை உறுப்பினர்களால் ஏற்கப்பட வேண்டும். இலங்கைப் பிரச்சினையில் தங்களது  பொருளாதார, ராணுவ நலன்களை இவர்கள் விட்டுத்தர வேண்டும். இதற்குப் பிறகு அவர்கள் ஒரு விசாரணைக் கமிசன் அமைத்து, அதில் குற்றம் நிரூபிக்கப்படுவது நடக்க வேண்டும். விசாரணைக்கு இலங்கை சம்மதிக்க வேண்டும். இதெல்லாம் சாத்தியமா ? இதற்கு மத்திய அரசு ஐ.நா சபையை வலியுறுத்தி தீர்மானம் நாடாளுமன்றத்தில் போட்டால் கூட அதனை பான் கி மூன் கண்டுகொள்ள வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. அப்புறம் இந்த தீர்மானத்தால் என்ன பயன் ?
தீர்மானங்களுக்குப் பதிலாக தமிழக மீனவர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக இனிமேல் தமிழகத்தின் வரிவருவாய் மத்திய அரசுக்கு வராது என அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் அங்கமான உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என அறிவிக்க வேண்டும். இதனை ஜெயலலிதாவோ கருணாநிதியோ செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால் அரசு என்பதன் உண்மையான பொருளை ஆளும்வர்க்கம் அவர்களுக்கு நன்றாகப் புரியவைத்து விடும்.
கருணாநிதி எழுதிய கடிதத்தின் மதிப்பிற்கும், தமிழக சட்டசபை நிறைவேற்றியிருக்கும் தீர்மானத்திற்கும் மயிரளவு கூட வித்தியாசம் இல்லை. இந்தத் தீர்மானத்திற்கு எந்தவிதமான சட்ட ரீதியாகவோ, நடைமுறை சார்ந்தோ எந்த மதிப்புமில்லை. அதனால்தான் துணிந்து செய்திருக்கிறார் ஜெயலலிதா. ஏற்கனவே தமிழ் மொழி ஆட்சிமொழியாக வேண்டும் என்ற கருணாநிதி அரசின் தீர்மானத்திற்கு என்ன மதிப்பிருக்கிறதோ அதுதான் இதற்கும்.
இன்று தமிழகத்தின் விடிவெள்ளி போல காட்சியளிக்கும் பாசிச ஜெயாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்யக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றினார். ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாகவோ அல்லது தமிழ்தேசிய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகளையும் தமது முந்தைய ஆட்சிகளில் ஒடுக்க அயராது பாடுபட்டவர் ஜெயா. இதில் நெடுமாறனும் வைகோவும் கூட தப்பவில்லை.
கடந்த 2001 – 06 ஆட்சியில் மத மாற்றத் தடைச் சட்டம், ஆடு கோழி பலியிட தடை என இந்துபாசிச அமைப்புக்களின் கோரிக்கையை சட்டமாக ஆக்கிய ஜெயா, ஜெயேந்திரனை கைது செய்த ஒரே காரணத்துக்காக பார்ப்பன எதிர்ப்பு போராளி என நாம் வீரமணி போல கொண்டாட முடியுமா ? இன்று அவர் மட்டுமா சோ ராமசாமி கூட ஈழ மக்களின் நல்வாழ்வுக்காக கண்ணீர் விடத் துவங்கி விட்டார்.

நன்றி வினவு இணையம் 

பாசிச ஜெயா அரசுக்கு நீதிமன்றம் மூலம் ஆப்பு வைத்திருக்கிறது ம.க.இ.க சார்ந்த மனித உரிமை பாதுகாப்பு மையம்.

தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வியை இரத்து செய்த பாசிச ஜெயா அரசுக்கு நீதிமன்றம் மூலம் ஆப்பு வைத்திருக்கிறது ம.க.இ.க சார்ந்த மனித உரிமை பாதுகாப்பு மையம். இதன்படி பழைய சமச்சீர் கல்வியை அமல்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு,
சமச்சீர் கல்வி தரமில்லை என்று சாக்கிட்டு அதை இரத்து செய்து அமைச்சரவை மூலம் உத்தரவிட்டு சமீபத்தில் அதை சட்டமாக்கியும் முடித்துவிட்டார்கள். அமைச்சரவை உத்தரவு வந்த போதே மனித உரிமை பாதுகாப்பு மையம் களத்தில் போராடியதோடு சட்டப் போராட்டத்தையும் கையிலெடுத்தது.
இதே நேரத்தில் சி.பி.எம் சார்ந்த பிரின்ஸ் கஜேந்திர பாபு என்ற தனியார் மெட்ரிக் பள்ளி உரிமையாளர் சமச்சீர் கல்விக்காக தி.மு.க அரசு அச்சிட்ட நூல்களை அழிக்க கூடாது என்ற தடை உத்தரவை பெற்றார். வெளியே சி.பி.எம் கட்சி ஜெயா வீட்டில் தனது எம்.எல்.ஏக்களோடு கூருப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டு அக்கட்சியின் மாநில செயலர் பாசிச ஜெயாவை மயிலிறகால் வருடிக் கொண்டிருந்தார். அதாவது அம்மா பாத்து ஏதாவது செய்ய வேண்டுமென்று பல்லவி பாடிக் கொண்டிருந்தார்.
ஜூன் 7 ஆம் தேதி சமச்சீர் கல்வியை ஒழிக்கும் நோக்கத்திற்காக சட்டப்பேரவையில் சட்டத் திருத்தத்தை ஜெயலலிதா கொண்டு வந்த போது அதற்கு ஆதரவாக சி.பி.எம் சட்ட மன்ற உறுப்பினர்கள் வாகளித்துள்ளனர்

அதே நாளில் தான் சி.பி.எம் இன் மாணவர் அமைப்பான SFI , இளைஞர் அமைப்பான DYFI யும் தமிழகம் முழுவதும் சமசீர் கல்வியை இந்த ஆண்டே அமல் படுத்த வேண்டும் என்று போராடினர்.சி. பி. எம் .இன் இரட்டை வேடத்திற்கு இது ஒரு சான்று
வழக்கறிஞர் சியாம் சுந்தர் என்பவரும், திமுகவின் முன்னாள் கூடுதல் அடிஷனல் அட்கவேட் ஜெனரல் வில்சன் ஒரு மனுதாரருக்கு ஆதரவாகவும் வாதாடினார்கள்.
மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அது சார்ந்த கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், விருத்தாசலம் சார்பில் ம.உ.பா.மையத்தின் இளம் வழக்கறிஞர்கள் விரிவான மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்கள். ம.உ.பா.மை சார்பாக வழக்கறிஞர்கள் காந்தி, புருஷோத்தமன், மோகன், தியாகு ஆஜராகினர். மேலும் ஒரு வழக்கறிஞர் படையே இதற்காக தீவிரமாக வேலை செய்து வந்தது.
இன்று நடந்த விவாதத்தில் நமது வழக்கறிஞர்கள் பாசிச ஜெயா அரசின் உள்நோக்கத்தை பட்டவர்த்தனமாக நிரூபித்தார்கள். முக்கியமாக 15ஆம் தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படும், அதற்குள் பழைய பாடத்திட்டம் அச்சடிக்கப்படும் என்ற அரசின் வாதத்தை பொய் என்று நிரூபித்தார்கள். அதன்படி பழைய பாடத்திட்டம் அச்சடிப்பதற்காக அரசு, அச்சக உரிமையாளர்களோடு செய்திருக்கும் ஒப்பந்தத்தை தாக்கல் செய்தார்கள். அதில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நூல்களை வழங்கினால் போதுமென்று அரசு கோரியிருந்ததை சுட்டிக்காட்டி வாதாடினார்கள்.
ஆக பதினைந்தாம் தேதி பள்ளி திறக்கப்படும், நூல்கள் கிடைக்கும் என்று பொய்யுரைப்பதை நிரூபித்தார்கள். மேலும் தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி ஏன் தரமல்ல என்பது குறித்து இதுவரை அரசு ஒரு விசயத்தை கூட சொல்லவில்லை, விளக்கமளிக்கவில்லை என்பதையும் வாதிட்டார்கள். 200 கோடி ரூபாய் செலவிட்டு அச்சிடப்பட்ட நூல்களையும், அந்த திட்டத்திற்கான பிரயத்தனத்தையும் ஒன்றுமில்லை என சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் வாதிட்டார்கள். மேலும் இதில் ஜெயா அரசி காழ்ப்புணர்வுடன் நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தாண்டி வேறு காரணமில்லை என்றும் பேசினார்கள்.
இன்று இந்த வாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது பெஞ்சில் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் முன்னால் நடந்தது. இறுதியில் நீதிபதிகள் சமச்சீர் கல்வியை ரத்து செய்த புதிய சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து, பழைய சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்கள். மேலும் 200கோடியை செலவழித்து விட்டு தற்போது அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்வதற்கு எந்த காரணமுமில்லை என்பதையும், அரசின் உள்நோக்கம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் வழக்கை ஒத்திவைத்தார்கள்.

தற்போது தமிழக அரசு சமச்சீர் கல்வியை அமல்படுத்தியே ஆக வேண்டும். பாசிச ஜெயா அரசு இதற்காக உடனே உச்சநீதிமன்றம் சென்று இந்த இடைக்காலத் தடைக்கு எதிராக வழக்கு தொடுக்கும். அதற்கென்று பெரிய வழக்கறிஞர்களை  நியமித்து, பெரிய செலவில் வாதாடும். எனினும் இந்த இடைக்காலத் தடை என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது.
மேலும் ம.க.இ.க சார்பு அமைப்புகள் இதை வெறுமனே சட்டப் பிரச்சினையாக மட்டும் அணுகவில்லை. தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டுமென்று மக்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டமும் செய்து வருகிறது. இதன் அங்கமாகத்தான் இந்த வழக்கு போடப்பட்டது. சமச்சீர் கல்வி 

 வேண்டுமென பலர் வழக்குப் போட்டதை ஒன்றாக இணைத்தே உயர்நீதிமன்றம் விசாரித்திருக்கிறது. எனினும் ம.உ.பா.மை சார்ந்த மனுதான் விரிவாகவும், ஆதாரப் பூர்வாகமாகவும், ஆணித்தரமாகவும் இருந்தது. தற்போது அ.தி.மு.க அரசு உச்சநீதிமன்றம் செல்லும் என்ற நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையமும் உச்சநீதிமன்றம் செல்லும் என்று அறிவித்திருக்கிறது. மக்கள் அரங்கிலும் சரி, சட்ட அரங்கிலும் சரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ம.க.இ.க அமைப்புகள் தயாராகின்றன.
தி.மு.க போன்ற பிரதான எதிர்க்கட்சிகளே ஒன்றும் செய்ய இயலாது என்று கைவிரித்த நிலையில் ம.க.இ.க இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. ஏனெனில் பாசிச ஜெயாவுக்கு நாங்கள்தான் உண்மையான எதிரிகள், அதனால் எங்களது போராட்டமும் தொடரும்.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!

அடித்தட்டு மக்களின் நலத்திட்டங்கள் ரத்து,இந்த மாற்றம் தேவையா?கலைஞர்

"இனி என்ன செய்யப்போகிறது?' என்று தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தி.மு.க.வைப் பற்றி ஊடகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும், சொந்தக் கட்சிக்காரர்கள் மனதிலும் எழுந்த கேள்விக்கு பதில் சொல்வது போலத்தான் இருந்தது, திருவாரூரில் கடந்த ஞாயிறன்று (ஜூன் 5) நடந்த கலைஞரின் நன்றியறிவிப்பு பொதுக்கூட்டம்.

சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற முடியாத அளவுக்கு அமைந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தி.மு.க தலைமையும் அதன் தோழமைக் கட்சிகளின் தலைவர் களும், 6 மாதத்திற்கு எந்த அரசியல் நடவடிக்கையையும் மேற் கொள்ள வேண்டாம் என்ற முடிவைத்தான் முதலில் மேற் கொண்டனராம். ""ஜெயலலிதாவின் இயல்பு தொடர்ந்து வெளிப்படும்போது, வாக்களித்த மக்கள் வருத்தப்படுவார்கள். கோபமடைவார்கள். அவருடன் கூட்டணி அமைத்து ஜெயிக்க வைத்த மார்க்சிஸ்ட் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தே.மு.தி.க., ம.ம.க., புதிய தமிழகம் என ஒவ்வொரு கட்சியாக அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வெளியே வரும். அந்தச் சூழ்நிலை வரும்போது, நமது அரசியல் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தலாம் என்ற மனநிலைதான் எங்கள் அணியில் இருந்தது'' என்கிறார் தி.மு.க. கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் முக்கிய பிரமுகர்.

இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என்பதால், ஜூன் 3-ஆம் நாள் தனது பிறந்தநாள் கொண்டாட் டங்களைக்கூட தவிர்த்துவிட்டார் கலைஞர். ஆனால், தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் வழக்கமான பாணியில் பிறந்தநாள் கொண்டாட்டங்களை அமர்க்களப்படுத்தினார்கள்.

இந்த நிலையில்தான், ஜூன் 5-ந் தேதி திருவாரூரில் நன்றியறிவிப்பு பொதுக்கூட்டம். நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் ஜூன் 4-ந் தேதிவரை இருந்தது. 5-ந் தேதி காலையில் கம்பன் எக்ஸ்பிரசில் சொந்தத் தொகுதிக்கு கலைஞர் வந்தபோது, தி.மு.க.வினரிடம் உற்சாகம் கரைபுரண்டது. ரயிலடியில் பலத்த வரவேற்பு. வீல்சேரில் வராமல், இரண்டு பேர் தோளில் கைபோட்டபடி கலைஞர் மெதுவாக நடந்து வருவதைக் கண்ட தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக முழக்கங்களை எழுப்பினார்கள். தேர்தல் பிரச்சாரத்தின்போது, வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து, அதிக லீடிங்கில் வெற்றி பெற காரணமாக இருந்த தன் மகள் செல்வியையும் உடன் அழைத்து வந்திருந்தார் கலைஞர்.

தெற்குவீதியில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் விறுவிறுவென நடந்தன. திருக்குவளைக்கோ, தாயார் நினைவிடத்திற்கோ செல்லாமல் வீட்டிலேயே கட்சியினரை சந்தித்தபடி இருந்த கலைஞர், மாலையில் பொதுக்கூட்ட மேடை நோக்கிப் புறப்பட்டார் . திரண்டிருந்த கூட்டம் அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் கலந்துகொள்கிற முதல் பொதுக்கூட்டம் என்பதால், என்ன பேசப்போகிறார் என்பதை சென்னையிலிருந்த மீடியாவினரும், இந்திய அளவிலான மீடியாவினரும் எதிர்பார்த்திருந்தனர்.

50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்த திருவாரூர் மக்களுக்கு நன்றி சொல்லி பேச்சைத் தொடங்கிய கலைஞர், "தமிழகத்தின் பல தொகுதிகளிலும் தி.மு.க.வுக்கு வாக்களிக்காதவர்கள் எனக்கு எதிரிகள் அல்ல. பகைவர்கள் அல்ல. நான் வெற்றிபெறக்கூடாது என்று நினைத்தவர்களும் அல்ல' என்ற அரசியல் முதிர்ச்சியுடன் அவரது பேச்சு தொடர்ந்தது. "தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்துவிட்ட காரணத் தால் நீங்கள் (திருவாரூர்வாசிகள்) தூக்க முடியாத சுமையை என்னுடைய தலையிலே ஏற்றியிருக்கிறீர்கள். அந்த சுமையும்கூட சுவையாக இருக்கிறது' எனத் தன் பேச்சில் குறிப்பிட்டார்.

தி.மு.க. அணிக்கு ஏற்பட்ட தோல்வியை கலைஞர் எப்படிப் பார்க்கிறார் என்பதற்கான பதிலும் அவரது பேச்சில் இருந்தது. "தோற்றது திராவிட இயக்கம் அல்ல. திராவிட உணர்வு அல்ல. திராவிட இயக்கத்தினுடைய கொள்கைகள் அல்ல. அவைகளை மேலும் கூர்தீட்டி, வலிமைப்படுத்தி பயன்படுத்த இந்தத் தோல்வி எங்களுக்குப் பயன்பட்டிருக்கிறது' என்று கலைஞர் சொன்னதை தி.மு.க.வின் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் உன்னிப்பாகக் கவனித்தார்கள்.

நீதிக்கட்சி தோல்வியடைந்தபோது, ""இந்தத் தோல்வியை வரவேற்கிறேன்'' என பெரியார் அறிக்கை விடுத்தார். மக்களிடமிருந்து கட்சியின் தலைவர்கள் விலகியிருந்ததையும், கொள்கையிலிருந்து விலகி தங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் அவர்கள் செயல் பட்டதாலும்தான் இந்தத் தோல்வி ஏற்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்ட பெரியார், நீதிக்கட்சி மீண்டும் தனது கொள்கை வழியில் மக்களுடன் நிற்பதற்கு இந்தத் தோல்வி பயன்படும் என சுட்டிக்காட்டியிருந்தார். 2011 தேர்தலில் தி.மு.க பெற்ற தோல்வியையும் கலைஞர் அப்படித்தான் பார்க்கிறார். அதைத்தான் தன் பேச்சில் குறிப்பிட்டுள்ளார் என்கிறார்கள்.

மாற்றம் வேண்டும் என்பதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்ட ஜெ. ஆட்சியின் கடந்த 20 நாட்களில் புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் கைவிடப்பட்டது, செம்மொழி நூலகம் மூடப்பட்டது, பல திட்டங்கள் கை விடப்பட்டது, தொடர்ச்சியாக நடைபெறும் கொலை- கொள்ளை சம்பவங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இந்த மாற்றம்தான் தேவையா எனக் கேள்வி எழுப்பினார் கலைஞர். கனிமொழி கைது செய்யப்பட்டது பற்றி கலக்கத்துடன் பேசிய கலைஞர், சிறையில் அவர் தனக்கு தைரியம் சொன்னதை உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியபோது, கூட்டமும் கலங்கியது.

ஊடகங்கள், ஜெ.வின் ஆலோசகர்களாக உள்ள உயர்சாதியினர் எனப் பலரும் தி.மு.கவிற்கு எதிராக செய்யும் சதிகளைப் பற்றிப் பேசிய கலைஞர், தி.மு.க.வையும் அதன் இலட்சியங்களையும் கொள்கைகளையும் காத்திட என்ன காரியம் செய்யவேண்டுமோ, அந்த காரியத்தைச் செய்துவிட்டுத்தான் நான் மறைவேன் என்று சொன்னபோது, கூட்டம் உணர்ச்சிவயமானது.

"விடைபெறுகிறேன்' என்று சொன்ன கலைஞர், ""பொதுவாழ்க்கையிலிருந்து அல்ல.. இந்த இயக்கத்தைக் காப்பதற்கு, அதனை அழிக்க நினைப்பவர்களை வெற்றி கொள்வதற்கான விடையினை உங்களிடமிருந்து பெறவிரும்புகிறேன். அதனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்றார். எந்த நிலையிலும் மனஉறுதி தளராமல், ஓய்வை விரும்பாமல் உழைக்கக்கூடியவரான கலைஞர், இந்தத் தேர்தல் தோல்வியிலும் தி.மு.க.வின் செயல்பாடுகளை ஒத்திவைக்க வேண்டியதில்லை என்ற புதிய முடிவுடன்தான் திருவாரூரில் தனது செயல் திட்டத்தை தொடங்கியிருக்கிறார். "இனி, தி.மு.க.வின் செயல் திட்டங்கள் வேகமெடுக்கும்' என்கிறார்கள் கலைஞரின் மனதை அறிந்தவர்கள்.

அவுஸ்திரேலியக் குழு யாழ். விஜயம்


கடந்த 08.06.2011 ஆம் திகதி அவுஸ்திரேலியக் குழு ஒன்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டது.

இவ் விஜயத்தின்போது போருக்குப் பின்னரான அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பாகவும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் நேரில் சென்று பார்வையிட்டிருந்தது.

இக்குழுவில் உள்ளடங்கியுள்ள அவுஸ்திரேலிய செனற்டர்களான Stepan Hutchins, Tasmania மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான Don Randll , sharman Stone ஆகியோர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.



யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் யாழ்.மக்களுடைய மனநிலை போருக்குப் பின்னர் எவ்விதம் பிரதிபலிக்கின்றது அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நிலைமைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இதேவேளை இச் சந்திப்பின்போது யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி கத்துருசிங்க கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கனேடிய பொலிசார் முக்கியமாக தேடிவரும் தமிழ் இளைஞர்


கனேடிய பொலிஸாரால் அதிக முக்கியத்துவம் கொடுத்து தேடப்பட்டு வருகின்ற குற்றவாளிகளில் ஒருவராக இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவரும் இருந்து வருகின்றார்.

இவரின் பெயர் விஜயராஜா மாணிக்கவாசகர். 25 ஆம் திகதி ஜூன் மாதம் 1981 ஆம் ஆண்டு பிறந்தவர். அம்ரெத்தா சிங் என்கிற பெண்ணை 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி வீட்டுக்கு சென்று சுட்டுக் கொன்று இருக்கின்றார்.

அம்ரெத்தா சிங்கின் சகோதரர்கள் இருவருக்கும், இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இருவருக்கும் இடையில் கிளப் ஒன்றில் ஏற்பட்ட மோதலின் பின்னணியில் இக்கொலை இடம்பெற்று உள்ளது.

சகோதரர்களுடன் அம்ரெத்தா சிங் ரக்ஸி ஒன்றில் வீட்டுக்கு பூறப்பட்டு இருந்தார் சகபாடிகள் இருவர் சகிதம் மாணிக்கவாசகர் ரக்ஸியை பின்தொடர்ந்தார்.
அம்ரெத்தா சிங் ரக்ஸியில் இருந்து இறங்கியபோது துப்பாக்கியால் இரு தடவைகள் சுட்டார். இவருக்கு பிரபாகரன் என்று இன்னொரு பெயரும் உள்ளது. இவர் கனேடிய பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வருகின்றார்.

யாழில் பிள்ளைகளினால் கைவிடப்படும் முதுமையான பெற்றோர்கள் அதிகரிப்பு

யாழ். குடா நாட்டில் பிள்ளைகளினால் கைவிடப்படும் முதியவர்களின் தொகை யுத்ததிற்குப் பின்னரான காலப் பகுதியில் அதிகரித்தச் செல்வதாக கைதடி முதியோர் பாராமரிப்பு நிலைய நிருவாகம் தெரிவித்துள்ளது.

முதியவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், போசாக்கான உணவு என்பவற்றை அவர்களுக்கு கொடுப்பதற்கு அவர்களின் பிள்ளைகள் தவறியுள்ளனர் எனவும் முதுமையான காலத்தில் அவர்கள் முதியோர் இல்லங்களில் ஒப்படைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதிகரித்த வேலைப்பளு மற்றும் சுயகௌரவம் என்பவற்றை அடிப்படையாக வைத்து பிள்ளைகள் தமது முதுமையான பெற்றோர்களை பராமரிக்க தவறியுள்ளதாகவும் அதனால் அவர்களைப் பராமரிப்பதற்கு முதியோர் இல்லங்களை நாடுவதாகவும் கைதடி முதியோர் பராமரிப்பு நிலைய நிர்வாகத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்லர்.மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்லர்: நாடு திரும்பவும் அரசுடன் பேசவும் அவர்களுக்கு உரிமை உண்டு
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
புலம்பெயர்ந்து வாழ் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்ல. அவர்கள் இந்த நாட்டின் மக்கள், அவர்களை புலிகள் என்ற பார்வையில் நோக்கக் கூடாது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், புலம்பெயர்ந்து வாழ் எமது தமிழ் மக்கள் திரும்பி வருவதற்கு உரிமை இருக்கின்றது. அரசுடன் அவர்கள் பேசுவதற்கும் உரிமை இருக்கிறது. அவர்களை அழைத்து தெளிவுபடுத்த வேண்டிய கடமையும் எமக்கிருக்கிறது. அவர்கள் விடயத்தில் நாம் உணர்ச்சி வசப்படக் கூடாது. புலம்பெயர் வாழ். புலிகள் இருக்கிறார்கள். அவர்கள் வெளிநாட்டிலிருந்தவாறு நிதி சேகரித்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக புலம்பெயர் தமிழர்கள் அனைவரை யும் புலிகள் என நோக்கக் கூடாது. புலம் பெயர் தமிழ் மக்கள் நிறைந்த அறிவுடன், தொழில்நுட்பதுறை தகவல் தொழில்நுட்பம், டாக்டர்களாக, பொறியியலாளர்களாக வாழ்கிறார்கள். அவர்களது அறிவுத் திறன் எமது நாட்டுக்கு தேவையானது அவர்கள் இங்கு வரும்பட்சத்தில் அபிவிருத்தியின் பங்காளிகளாக மாற்ற முடியும் தமிழர் பகுதி மட்டுமல்ல இலங்கையையே ஒரு வளர்ச்சியடைந்த நிலைக்கு இவர்களால் கொண்டு வர முடியும். அவர்களை நாம் வரவேற்கிறோம் என்றும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்

பத்மநாபாவை கொலைசெய்த அதே புலிகள்தான் ராஜீவ் காந்தி அவர்களின் கொலையிலும்

மேமாதம் கொடுஞ்செயல் ஏற்புநாளும் கொடுமை ஒழிக்கப்பட்ட நாளும் (3)
ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையின் பின்னர் பிரபல ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான துக்ளக் ஆசிரியருமான சோ அவர்கள் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார் அதாவது  ஈ.பி.ஆர்;எல்.எப் தலைவர் பத்மநாபாவின் கொலையாளிகளை தமிழக பொலிசார் கைது செய்திருந்தால் ராஜீவ் காந்தி அவர்கள் கொல்லப்பட்டிருக்கமாட்டார் என எழுதி இருந்தார். அவர் அப்படி எழுதியதற்கு காரணம் என்னவென்றால் ஈ.பி.ஆர்;எல்.எப் தலைவர் பத்மநாபாவை கொலைசெய்த அதே புலிகள்தான் ராஜீவ் காந்தி அவர்களின் கொலையிலும் சம்பந்தப்பட்டுள்ளமை சி.பி.ஐ விசாரணை மூலம் தெரியவந்தது.
இந்தக்கொலைகள் பற்றி இலண்டன் பி.பி.சி தமிழோசைக்கு செவ்வி அளித்த தமிழக மாநில பொலிஸ் ரைடக்டர் ஜெனரல் துரை அவர்கள் இந்தக்கொலைகள் ஈ.பி.ஆர்;எல்.எப் அமைப்பில் இருந்து முன்னர் பிரிந்து சென்ற இராணுவப்பிரிவுத்தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்தான்; நடைபெற்றிருக்கின்றது என்றும் இந்த மாநிலத்தைவிட்டு கொலையாளிகள் தப்பிப்போகாமல் பொலிஸ் கண்காணிப்பு போடப்பட்டிருப்பதாகவும் இவர்களைத்தேடி விரைவில் கைதுசெய்துவிடுவோம் எனவும் தனது செவ்வியில் கூறினார். இலங்கைப்பத்திரிகைகளிலும் இந்தச்செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்தப்படுகொலைகளை இன்னொருவர் மீது பழியைப்போட்டு திசைதிருப்பும் நோக்கத்துடனும் கொலைசெய்த புலிகள் தப்பிச்செல்லும் வகையிலும் இவரது செவ்வி அமைந்திருந்தது. பின்னர் தேர்தலில் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியை கைப்பற்றியவுடன் கருணாநிதியின் அரசின் காலத்தில்  பலமோசடிகளில்; ஈடுபட்டிருந்த தமிழக மாநில பொலிஸ் ரைடக்டர் ஜெனரல் துரை அவர்கள் விசாரணைகளுக்கு பயந்து மதுவில் நஞ்சைக் கலந்து குடித்து தற்கொலை  செய்துகொண்டார். 
சி.பி.ஐயின் விசாரணையில் கைது செய்யப்பட்ட புலிகளின் உறுப்பினரான குண்டுசாந்தன் சின்னசாந்தன் கைதுசெய்யப்பட்டதை அடுத்து பலதகவல்கள் விசாரணையாளர்களுக்கு கிடைத்தது. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து தமிழக தி.மு.க அமைச்சர் சுப்புலக்சுமி ஜெகதீசன் அவரது கணவர் ஜெகதீசன் வை.கோவின் சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் ஈ.பி.ஆர்;எல்.எப் தலைவர்  பத்மநாபா கொலையில் தமிழக பொலிசாரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவேண்டாம் என்று ஆணையிட்ட தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் நாகராஐhவும் கைதுசெய்யப்பட்டார்.   
பத்மநாபாகொலையை வெற்றிகரமாக நடாத்தியதால் கொலையாளிகள் தழிழக அரசின் சிலரால் காப்பாற்றப்பட்டார்கள.;  அந்த துணிச்சலில்; பிரபாகரன் அதே தமிழகமண்ணில் வைத்து ராஜீவ் காந்தி அவர்களைப்  படுகொலை செய்தார். தமிழக அரசில் உள்ளவர்களின் ஆதரவு இருப்பதால் தமிழக மண்ணிலேயே வைத்து ராஜீவ் காந்தி அவர்களையும்  படுகொலை செய்துவிட்டு பத்மநாபாவின் கொலைiயில் தப்பியதுபோல இலகுவாகத் தப்பிவிடலாம் என்று பிரபாகரன் கனவு கண்டார். அந்த தற்கொலைத்தாக்குதல்தான் அவரது தலைவிதியை மட்டுமல்ல ஈழத்தமிழர்களின் தலைவிதியையும் மாற்றிவிட்டது.                                                     
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை புலிகள் இயக்கம் சிறிலங்கா அரசோடு கூட்டுச்சேர்ந்து தமிழர்களுக்கு என கிடைத்த மாகாண ஆட்சியை கலைக்கப்பண்ணி அதனைச்செயல் இழக்கவைத்தமைக்காக ஒட்டுமொத்த சிங்களமக்களும் புலிகளை அழித்த ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவுக்கு பாராட்டு தெரிவிப்பதைவிட  இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அழித்தொழித்த வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சிலை எழுப்பி சிங்களமக்களின் தேசியவீரனான வரலாற்றில்  போற்றிப்புகழப்படவேண்டும்.  

ஏன் என்றால் தமிழ்மக்களுக்கு இலங்கை-இந்திய ஒப்பந்தம் போன்ற ஒரு தீர்வு இனிமேல் கிடைக்கப்போவதில்லை. அந்த ஓப்பந்தத்தில் எழுதிய சட்டங்களைவிட எழுதாத சட்டங்களை பல எவருக்கும் பாதிப்பில்லாமல் மெதுவாக செயல்படுத்தப்பட்டுக்கொண்டு வந்தன. அதற்கு பக்கபலமாக இந்திய அரசின் நேரடிமேற்பார்வையும் இந்திய இராணுவம் தமிழர் பிரதேசத்தில் நிலைகொண்டதும் தமிழ் மக்ககளுக்கு கிடைத்த அசுர பலமாகும் அன்று அந்த ஒப்பந்தத்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் எதிர்க்காமல் அல்லது ஒதுங்கிக்கூட இருந்திருந்தால் இன்று தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடகிழக்கு மாகாணத்திற்குள் தமிழர்கள் ஒரு சுதந்திரமான வாழ்க்கையை அனுபவித்திருக்கலாம். இன்று இத்தனை அழிவுகளும் எம்மை நெருங்கியிருக்காது. பிரபாகரன் உட்பட புலிகள் இயக்கம் கூட உயிர் வாழ்ந்திருக்கும்.                                       

1987ம்ஆண்டு ஐனாதிபதி ஜே.ஆர் ஜேயவர்த்தனா அரசு வடமராட்சியில் இருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் இராணுவநடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சர் அத்துலக்முதலி ஒப்பரேசன் லிபரேசன் என்றுபெயரிட்டு மேற்குநாடுகளின்  பெரும்படைப்பலத்துடன் மேற்கொண்டார். அந்தநேரத்தில் அனைத்து தமிழ் இயக்களையும் புலிகள் அழித்தநிலையில் தாங்கள் தனியொரு இயக்கமாக இராணுவத்துடன் தாக்குப்பிடிக்க இயலாமல் தப்பிஒடினர் அச்சுவேலிவரை இராணுவம் முன்னேறிவிட்டது. வடமராட்சிமக்கள் இலட்சக்கணக்கில் அகதிகளாக வெளியேறினர்.   அந்தநேரத்தில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதையும் அவர்கள் இலட்சக்கணக்கில் அகதிகள் ஆக்கப்படுவதையும் பட்டினிபோட்டு பணியவைப்பதையும் மத்திய அரசு பார்த்துக்கொண்டிருக்காமல் செயலில் இறங்கவேண்டும் என தமிழகக்கட்சிகள் ஒற்றுமையாக குரல்கொடுத்தனர் பின்னர் புலிகள் சிங்கள அரசோடுசேர்ந்து தமிழர்களுக்கு கிடைக்க இருந்த உரிமையை செயல் இழக்கச் செய்தார்கள் என படுகொலைசெய்யப்பட்ட ஈ.பி.ஆர்;எல்.எப் தலைவர் பத்மநாபா அவர்களுக்கு செம்டம்பர்மாதம்- 1990ம் ஆண்டு தமிழகக்கட்சிகள் இணைந்து நடாத்திய அஞ்சலிக்கூட்டத்தில் இந்தியகம்யுனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன் அவர்கள் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையையும் ஏனைய தலைவர்கள் ஆற்றிய உரைகளும் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டியது ஒன்றாகும்;. இவர்களின் உரையை
(Commomeration meeting for Eprlf  Leader Pathmanabha  Part-11YOUTUBE  இல் பார்க்கலாம்                
இந்தநேரத்தில் முக்கியமாக புலிகள் இராணுவத்துடன் தாக்குப்பிடிக்க இயலாமல் தப்பிஒடிய விடயத்தையும் குறிப்பிட்டாகவேண்டும் அந்தநேரத்தில் புலிகளின் மேல்மட்ட உறுப்பினர்; ஒருவர் தனது யாழ்நகரில் உள்ள உறவினர்களிடம் வந்து  இராணுவம் முன்னேறிக்கொண்டு வருகிறார்கள் உடனடியாக எல்லோரும் ஆயத்தமாக இருங்கள் வள்ளத்தில் இந்தியாவிற்கு போகவேண்டும் என்று கூறிவிட்டு அவசரஅவசரமாக சென்றுவிட்டார். (பின்னர் கடைசிகாலங்களில் புலிகளுடன் உட்பிரச்சினை காரணமாக ஒதுங்கி இருந்து வன்னியில் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கின்றார் என்று அறியமுடிகின்றது.) நானும் அந்த இ;டத்தில் நின்றபடியால் அவரின் மனநிலையையும் தன்னையும் தனது உறவினர்களையும் காப்பாற்றிக்கொண்டு தமிழ்மக்களை நடுவீதியில் விட்டுவிட்டு ஓடப்போகிறார் என்ற ஆத்திரத்தையும் எனக்குள் வரவழைத்தது. அதேநேரம் பல உறுப்பினர்கள் வள்ளங்களில் தப்பி இந்தியாவிற்கு ஒடிவிட்னர். பின்னர் இந்தியாவின் தலையீட்டினால் இவரும் இவரது உறவினர்களும் பாதுகாப்பாக தப்பியோடும் தந்திரோபாயத்தை கைவிட்டனர் பின்னர் மீண்டும் அவரை சந்திக்கும் நிலைஏற்பட்டது. அப்போது இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் புலிகளுடன் உறவாக இருந்த காலகட்டம். அந்தபுலி இயக்க உறுப்பினரும் அடிக்கடி வந்துபோவார்.  தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருந்த காலமது. ஆப்போது இந்தபுலி உறுப்பினர் ஓரு குண்டைத்தூக்கிப்போட்டார் சனம் நினைக்குது பிரச்சினை முடிஞ்சுது எண்டு இனித்தான் பிரச்சினையே இருக்குது என்றாh.; நானும் இவர் உறவினர்களுக்கு விலாசக்கதை விடுகிறார் என்று மனதில் நினைத்து இனி என்ன பிரச்சினை வரப்போகுது என்று அப்படி ஒன்றும் நடக்க சந்தர்ப்பதே இல்லை என்று அடித்துக்கூறினேன். யாருக்கு தெரியும் தமிழ்மக்கள் ஒன்றை நினைக்க பிரபாகரன் வேறுஒன்றை நினைப்பார் என்று
 எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப்பார்க்கும்போது இலங்கையில் இந்தியாவினால் அமைதி ஏற்படுவதையும் இலங்கைத்தமிழர் பிரச்சினை தீர்ந்து யுத்தமற்ற அழகியநாடாக இலங்கை பிரகாசிப்பதையும் விரும்பாத தீயசக்திகள் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் மூலம் இந்திய அமைதிப்படையை ஆத்திரமூட்டி சண்டையைத்தொடங்கியிருக்கலாம். அன்ரன்பாலசிங்கம்தான் பலாலி இராணுவமுகாமில் உள்ள புலி உறுப்பினர்களான குமரப்பா புலேந்திரனுக்கு உணவுப்பார்சலுக்குள்  சயனைட்டை வைத்து கடத்தியவர் என்பதும் புலிகள்-இந்திய இராணுவகாலங்களில் கொழம்பில் உள்ள ஜந்துநட்சத்திர ஹோட்டலான கில்ட்டனில் உல்லாசமாக இருந்துகொண்டு புலிகள் சிறிலங்கா அரசின் இடைத்தரகராக செயல்பட்டவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

;இந்தியா அன்று உணவு அனுப்பி யுத்தத்தைநிறுத்தியபடியால்தான்; புலிகள் இயக்கமும் தமிழ்மக்களும் காப்பாற்றப்பட்டார்கள் இல்லாவிட்டால் இலட்சக்கணக்கான தமிழர்கள் உணவு இல்லாமலும் யுத்தத்தில் சிக்கியும் கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால் மேற்கத்தையநாடுகள் அன்று உரிமைக்காக போராடிய தமிழ்மக்களுக்கு ஆதரவளிக்காமல் இலங்கை அரசுக்கு உதவிசெய்தார்கள். உண்மையாகவே  அன்று  தமிழ்மக்கள்மேல் அக்கறை உடையவர்களாக இருந்திருந்தால் இந்தியாவுடன் இணைந்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழர்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்திருக்கலாம். யாழ்ப்பாணத்தில் தமிழ் எங்கள் மொழி இஸ்லாம் எங்கள் வழி என்று தமிழர்களுடன் ஒன்றாக வாழ்ந்த முஸ்லீம் மக்கள் புலிகளால் விரட்டியக்கப்பட்டபோது புலிகளுக்கு அழுத்தம் கொடுத்து நிறுத்தியிருக்கலாம்.   
    ;நூற்றுக்கணக்கான தமிழ்  விடுதலை இயக்க போராளிகளை, பொதுமக்களை படுகொலைசெய்து தமிழர்போராட்ட இயக்கங்களை அழித்து  அவர்களை டயர்போட்டுக்கொழுத்திய புலிகளின் தளபதி கிட்டுவிற்கு செங்கம்பள வரவேற்பு அளிப்பதுபோல பிரிட்டன் நாடு விசா கொடுத்து பிரிட்டனில் குடியேற்றினார்கள். ஆனால் அதே இயக்கத்தில் இருந்த தளபதி கருணா அம்மான் அகதி அந்தஸ்து கோரியபோது சிறையில் வைத்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்
வடமாகாணசபையை வழிநடத்திய ஈ.பி.ஆர்;எல்.எப் கட்சியையும் இந்தியஇராணுவத்தையும் பிரதமர் ராஜீவ்காந்தி்யையும் கொன்றுகுவித்த வேலுப்பிள்ளை பிரபாகரனை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. ஏனைய தமிழ்க்கட்சிகளோ அல்லது தமிழ்விடுதலை இயக்கங்களோ தவறுகள் செய்யாமல் இல்லை ஆனால் அந்தத்தவறுகளின் அடிப்படைகாரணம் கூட புலிகள் அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைகள்தான். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று கூறிய யேசுக்கிறிஸ்துநாதர் கூட தேவாலயம் ஒன்றிக்கு சென்று இருந்தவேளையில் அந்த தேவாலயத்திற்குள்வைத்து  வியாபாரிகள் வியாபாரம் செய்வதைக்கண்டு என் தேவனின் ஆலயத்தை வியாபாரதலமாக பாவிக்கின்றீர்களா? என கொதிப்படைந்து  அவர்களை சவுக்கினால் அடித்து விரட்டியடித்தார் என கிறிஸ்தவர்களின் பைபிள் கூறுகின்றது.                                                                              
கொடுஞ்செயல் புரிந்தவர்களிற்கும் கொடுமையை ஒழிக்க முனைந்தவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் அநியாயமாக பலஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கின்றார்கள். மேமாதம்-- 2009ம்ஆண்டுக்குப்  பின்னர் மேதகுவின் மறைவிற்கு பின்னர் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் யுவதிகள் தமிழ்மக்களின் உயிர்கள் உடமைகள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.                                                                                      
அரசியல் தீர்வுக்கான அவசியம் எழுந்துள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுவதுபோல புலிகளின் பிரச்சினை வேறு தமிழ்மக்களின் பிரச்சினை வேறு என்பதுபோல இப்போது புலிகளின் பிரச்சினை முடிந்துவிட்டது. தடைகள் அகற்றப்பட்டுவிட்டது. எனவே தமிழர்களின் பிரச்சினையை இனியும் தாமதப்படுத்தாமல் அரசாங்கம் தீர்க்கவேண்டும். புலிகளின் நிலைப்பாடு சம்பந்தமாக சரியான முடிவையும் புலிகள் ஒரு அழிவுசக்தி எனவும் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் எனவும்  கடந்த காலங்களில் துணிச்சலாக சொல்லிவந்த தமிழக முதல்வர் செல்வி nஐயலலிதாவும் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அன்னை சோனியாவும் மத்திய அரசும் ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பை விரைவில் நிறைவேற்ற ஆவணசெய்யவேண்டும்.

பிரித்தானிய விஸா விதிகளில் மாற்றம் வருகிறது


தற்காலிக விஸாவில் பிரிட்டனுக்கு வருபவர்கள் நிரந்தரமாக தங்குவதற்கு விண்ணப்பிக்க முடியாதவாறு குடிவரவு திருத்தங்களுக்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது. விஸா தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பதை வகைப்படுத்துவதற்கும் பிரிட்டனில் தங்க விரும்புவர்களுக்கு கடுமையான விதிகளை அறிமுகப்படுத்துவதற்குமான யோசனைகைள பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேமியன் கிறீன் முன்வைத்துள்ளார். குடியேறலுக்கு வழியமைக்கும் தொழில்வாய்ப்புகளின் மீளாய்வு தொடர்பான பொதுக் கலந்துரையாடலொன்றை ஆரம்பித்து வைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்காலிக மற்றும் நிரந்தர குடிவரவுக்கான தொடர்பை முறிப்பதை இந்த யோசனைகள் இலக்காக கொண்டிருப்பதாக அவர் கூறினார். தற்போதைய முறைகைளின் வீழ் பெரும்பாலான ஊழியர்கள் பிரிட்டனில் நிரந்தரமாக தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 2010 ஆம் ஆண்டில், தொழிலுக்காக பிரிட்டனுக்கு வந்தவர்களில் 84,000 பேர் நிரந்தரமாக தங்க அனுமதிக்கப்பட்டனர். 1997 ஆம் ஆண்டில் 10,000 இற்கு குறைவானோரே தொழில்வாய்ப்பு தொடர்பான குடியேற்றத்திறகு தகுதி பெற்றிருந்தனர்.

வெள்ளி, 10 ஜூன், 2011

பாரதிராஜா'தான் தலைவர்: அமீர் அதிரடி



தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தேர்தல் வருகிற 19ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு பாரதிராஜா மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. பாரதிராஜாவை எதிர்த்து தலைவர் பதவிக்கு அமீர் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர்கள் ஒற்றுமை தொடரும் என்றும், பாரதிராஜாவை தலைவராகக் கொண்டும், அமீரை செலாளராக் கொண்டும் மற்ற முன்னணி இயக்குநர்களோடு தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டோம். என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திரைப்பட இயக்குநர்களின் சங்கத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடக்கவிருப்பது அறிந்ததே. இதில் அமீர் ஆகிய என்னைத் தலைவராகக் கொண்டு சேரன், ஜனநாதன் மற்றும் 12க்கும் மேற்பட்ட முன்னணி இயக்குநர்களின் துணையோடும், புதிய சிந்தனைகளோடும் சங்கத்தின் தேர்தலைச் சந்திக்கத் தயாராகியிருந்தோம்.

இலவச கலர் டிவி திட்டம் ரத்து,மீதமுள்ள 1 லட்சத்து 27 ஆயிரம் டிவிகள் அனாதை இல்லங்களுக்கு அளிக்கப்படும்-ஜெ.

டிவி கிடைக்காத மக்கள் என்ன பாவம்செய்தார்கள் ? தான்தோன்றித்தனம்  சிறுமைத்தனம்  அடித்தட்டு மக்களை பற்றி கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத மேட்டுக்குடித்தனம்  கலைஞரை பார்த்து இன்னுமா பயம்? ஏனிந்த  வஞ்சம்?

திமுகவை வெகுவிரைவில் கரைசேர்த்து விடுவதில்  கழகத்தொண்டர்களையும் மிஞ்சி விடுவீர்கள் போலிருக்கிறதே?  என்னதான் இருந்தாலும் கலைஞர் மீது உங்களுக்கு ஒரு இனம் புரியாத பாசம் இருப்பது புரிகிறது. இல்லாவிடில் இவ்வளவு விரைவில் தங்கள் சுயரூபத்தை காட்டுவீர்களா?

சென்னை: தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தற்போது அரசின் வசம் மீதமுள்ள 1 லட்சத்து 27 ஆயிரம் கலர் டிவி பெட்டிகளையும் அனாதை இல்லங்கள், மருத்துவமனைகளுக்கு கொடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இன்று பதில் அளித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கடந்த ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. இந்தத் திட்டடத்தின் கீழ் அரசால் கொள்முதல் செய்யப்பட்ட 1 லட்சத்து 27 ஆயிரம் டிவி பெட்டிகள் அனாதை இல்லங்கள், மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்.

சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த அரசு முழுமையாக கைவிட்டு விடவில்லை. தரமான கல்வியைத் தருவதாக அந்தத் திட்டம் தற்போது இல்லை. எனவே அதை சீர்படுத்தி தரமான கல்வியுடன் கூடியதாக அதை அமல்படுத்தும் நோக்கில்தான் இந்த ஆண்டு அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சமூக விரோதிகள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும்.

தலைமைச் செயலகத்தை கோட்டைக்கு மாற்றியதில் எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நிர்வாக குளறுபடிகளைத் தவிர்க்கவே தலைமைச் செயலகத்தை கோட்டைக்கு மாற்றினோம்.

அதேசமயம், புதிய தலைமைச் செயலகம் உரிய முறையில் பயன்படுத்தப்படும் என்றார் ஜெயலலிதா.

மேலும், இனி நிலப்பட்டா மாற்றத்திற்காக மக்கள் தாசில்தார் அலுவலகங்களுக்குச் செல்லாமல் கிராம நிர்வாக அதிகாரிகளிடமே அதற்காக விண்ணப்பித்து நிலப்பட்டாக்களைப் பெறலாம் என்றும் முதல்வர் அறிவித்தார்.

மின்வெட்டு குறைக்கப்படும்:

முதல்வர் ஜெயலலிதா மேலும் கூறுகையில்,

அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டம் தீட்டப்படும். மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்.

தமிழகத்தில் (சென்னை தவிர) 3 மணி நேரமாக உள்ள மின்வெட்டு விரைவில் 2 மணி நேரமாக குறைக்கப்படும் என்றார் அவர்.

10 போலீசார் பலி.நக்ஸல்களின் கண்ணிவெடி தாக்குதலில்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் தண்டேவாடாவில் நக்ஸல்கள் நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் 10 காவல்துறை சிறப்புப் படை போலீசார் பலியாயினர்.

இன்று காலை தண்டேவாடா மாவட்டம் கதிகல்யான் என்ற இடத்தில் ஒரு பாலத்தில் இந்த போலீசார் பயணித்த வேன் நக்ஸல்கள் வைத்த கண்ணி வெடியில் சித்தியது. இதில் அந்த வேன் வெடித்துச் சிதறி தூக்கி எறியப்பட்டது.

இதையடுத்து அந்த வேனை நோக்கி நக்ஸல்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

அந்த வேனில் பயணித்த 7 அதிகாரிகள், 3 போலீசார் அந்த இடத்திலேயே பலியாயினர்.

வேன் பாலத்தை அடைந்தபோது மறைந்திருந்த நக்ஸல்கள் கண்ணி வெடியை வெடிக்க வைத்துவிட்டு, துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதே பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நக்ஸல்கள் நடத்திய பயங்கர தாக்குதலில் 76 மத்திய ரிசர்வ் படை போலீசார் பலியாயனதும், மே 17ம் தேதி இதே இடத்தில் நக்ஸல் தாக்குதலில் 40 போலீசார் பலியானதும் நினைவுகூறத்தக்கது.

English summary
Ten security personnel were killed on Friday when Naxals blew up an anti-land mine vehicle they were travelling, in Katikalyan area of Dantewada district. Seven special police officers and three police jawans were killed on the spot when their vehicle was tossed in the air by a powerful blast near Gatan village of the district, police said.

சமச்சீர் கல்வி,உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு சமச்சீர் கல்வித் திட்டம் சரியானதே

சமச்சீர் கல்வித் திட்டம்-தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
சென்னை: நடப்புக் கல்வியாண்டில் சமச்சீர்கல்வித் திட்டத்தை ரத்து செய்யும் தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போத நடைமுறையில் உள்ள மாநில அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே பாடத் திட்டமாக மாற்றி சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் இது அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் இது நீட்டிக்கப்படவிருந்தது. இந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்படவே, புதிதாக அமைந்துள்ள அதிமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

மேலும் பள்ளிகள் திறப்பை ஜூன் 15ம் தேதி தள்ளி வைத்த தமிழக அரசு, புதிய புத்தகங்களை அச்சடிக்கவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இன்று 2வது நாள் விசாரணை நடந்தது.

விசாரணைக்குப் பின்னர் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்ட திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இன்றைய விசாரணையின்போது தலைமை நீதிபதி இக்பால் தமிழக அரசுக்கு பலவேறு கேள்விகளை விடுத்தார். சமச்சீர் கல்வித் திட்டம் சரியானதே என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்படி இருக்கும்போது இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தது ஏன்?.

அவசரச் சட்டத் திருத்த மசோதாவை தாகக்கல் செய்ய அவசரம் காட்டியது ஏன்?. எதற்காக இந்த அவசரம்.?

சமச்சீர் கல்வித் திட்ட பாடப் புத்தகங்களில் சில குறிப்பிட்ட பகுதிகள் தேவையில்லை என்று கருதினால் அவற்றை மட்டும் ரத்து செய்து விட்டு புத்தகங்களை வெளியி்ட்டிருக்கலாமே? அதைச் செய்யாதது ஏன்?.

இந்த புத்தகங்களை ரத்து செய்வதால் ரூ. 200 கோடி இழப்பு ஏற்படுகிறதே. அது யாருக்கு இழப்பு?
சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு நிபுணர்களின் கருத்துக்கள் அறியப்பட்டதா?. பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதா?

இப்படி திடீரென திட்டத்தை ரத்து செய்வதால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் பாதிப்பை சந்திப்பார்கள்.

இந்தத் திட்டம் இந்த ஆண்டும் தொடர வேண்டும். சட்டத் திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
English summary
Madras HC has stayed TN govt's bill on Uniform Syllabus education. It condemned the govt for its hasty decision on USE. It has ordered to continue USE as per earlier plan in all over the state.
அதிரடி உத்தரவு

ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழி அப்பீல்

டெல்லி: ஜாமீன் வழங்கக் கோரி திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோர் சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி இருவரும் கடந்த மே 20ம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். கனிமொழி தனது மனுவில் தனக்கு சிறிய வயதில் மகன் உள்ளான். ஒரு தாயாக உடனிருந்து அவனைக் கவனிக்க வேண்டும். எனது கணவர் வெளிநாட்டில் தொழில் செய்வதால் அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டியுள்ளது. எனவே எனக்கு ஜாமீன் தர வேண்டும் என்று கோரியிருந்தார்.

இருப்பினும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் இருவரும் பலனடைந்திருக்கலாம் என்பதற்கான பூர்வாங்கம் இருப்பதாலும், இருவரையும் வெளியில் விட்டால் சாட்சிகளைக் கலைக்கலாம் என்ற வாய்ப்பு இருப்பதாலும் இருவருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறி விட்டது.

இதையடுத்து தற்போது இருவரும் இன்று உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

English summary
Kanimoahi and Kalaignar TV MD Sharad Kumar Reddy have approached SC to seek bail. Bail pleas of both Kanimozhi and Sharad Kumar have been rejected by Delhi HC recently. So they have moved an appeal in SC.

கூட்டணி தொடர்கிறது!சி பி ஐ மீது கண்டனம்.திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக்

சென்னை: சிபிஐ திமுகவினர் மீது தொடர்ந்துள்ள பொய் வழக்குகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வது என்று திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தின் இறுதியில் திமுக வெளியிட்ட அறிக்கையில், 2ஜி வழக்கு விவகாரத்தை சட்டப்படியாக எதிர்கொள்வோம் என்றும், கலைஞர் டிவிக்கு கடனாக தரப்பட்ட பணத்தை லஞ்சம் போல சிபிஐ காட்ட முயல்வதற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழக சட்டமேலவை ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதே நேரத்தில் மத்தியில் காங்கிரசுடனான கூட்டணி குறித்து திமுக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தங்களை காங்கிரஸ் கைவிட்டதோடு மட்டுமல்லாமல், குறி வைத்துத் தாக்கி வருவதாகவும் திமுக கருதுகிறது. இதையடுத்து கூட்டணியை மறுபரிசீலனை செய்ய இன்று மாலை உயர் மட்டக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது.

இந்தக் கூட்டத்தையொட்டி இன்று காலை முதல் மூத்த தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தி வந்தார். அதில், இனியும் காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கக் கூடாது என்று கருணாநிதி கூறியதாகவும் அதை அழகிரி உள்ளிட்டோர் எதிர்த்ததாகவும் கூறப்படுகிறது.

இப்போதைய நிலையில் கூட்டணியை விட்டு வெளியேறுவது நமக்கு மேலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று அழகிரி தரப்பு கூறுவதாகத் தெரிகிறது. அழகிரியின் கருத்தை மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், நெப்போலியன், பழனிமாணிக்கம் உள்ளிட்டோரும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இதனால் கூட்டணியை முறிக்காமல் மத்திய அமைச்சரவையிலிருந்து மட்டும் வெளியேறலாம் என்று சில தலைவர்கள் கருணாநிதியிடம் கூறியிருந்தனர்.

இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கலாம் என்பது குறித்து கனிமொழியிடமும் கருணாநிதி ஆலோசனை கேட்டிருந்தார். நேற்று டெல்லி திகார் சிறைக்குச் சென்ற திமுக மூத்த தலைவரான துரைமுருகன் இது குறித்து கனிமொழியுடன் பேசியுள்ளார்.

ஆனால், தன்னை மையமாக வைத்து எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும், கட்சியின் எதிர்காலம்-நலனுக்கு எது சரியான முடிவாக இருக்குமோ அந்த முடிவை எடுக்குமாறு துரைமுருகனிடம் கனிமொழி கூறிவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் இன்றைய கூட்டத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது, வெளியிலிருந்து ஆதரிப்பது என்ற முடிவையே திமுக எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வழக்கம் போல எந்த முக்கிய முடிவையும் எடுக்காமல் சப்பென்று முடிந்து விட்டது திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த இக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

- திமுகவினர் மீது சிபிஐ தொடர்ந்துள்ள பொய் வழக்குகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது.

- திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் மாற்றப்பட்டதற்கு கண்டனம்.

- தமிழகத்தில் சட்டமேலவை ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம்.

- சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்புக்கு வரவேற்பு. இந்தத் தீர்ப்பை ஏற்று நடப்பு ஆண்டே சமச்சீர் கல்வியைத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.

- ஜூன் 20 முதல் 30 வரை பொதுக் கூட்டங்கள் நடத்துவது.

- ஜூலையில் திமுக பொதுக் குழுவைக் கூட்டுவது.

- இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க்க கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வரவேற்பு.

- சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பிரதமருடன் டி.ஆர்.பாலு திடீர் சந்திப்பு:
முன்னதாக திமுக எம்பியும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு நேற்று மாலை திடீரென பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

சென்னையில் இன்று நடக்கும் திமுக உயர்நிலை குழுவின் அவசரக் கூட்டத்தின் பின்னணி குறித்து அவர் விவரித்ததாகத் தெரிகிறது.

மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என திமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று உளவுப் பிரிவினர் தனக்குத் தகவல் குறித்து டி.ஆர்.பாலுவிடம் அப்போது பிரதமர் விளக்கம் கேட்டதாகவும் தெரிகிறது.

இந் நிலையில் கூட்டணி குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்துவிட்டது இன்றைய திமுக கூட்டம். இதன்மூலம் இப்போதைக்கு கூட்டணியை விட்டு வெளியேறும் திட்டம் தன்னிடம் இல்லை என்று திமுக சுட்டிக் காட்டியுள்ளது. அதே நேரத்தில் சிபிஐ பொய் வழக்கு போட்டுள்ளதாக திமுக தனது தீர்மானத்தில் சுட்டிக் காட்டியுள்ளது, காங்கிரஸ் மீது திமுக மறைமுகமாக குற்றம் சாட்டுவதாகவே கருதப்படுகிறது.

இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி ஜூன் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் பொதுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது.

English summary
The high-level committee of the embattled DMK will meet for an emergency session here today. Party president Karunanidhi will chair the meeting that is expected to debate the alliance with the Congress at the Centre that has run into rough weather after sailing smoothly for over seven years.
 
சி பி ஐ மீது கண்டனம் 

மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் இலங்கை 22ம் இடம் ,இந்தியா55,பாகிஸ்தான் 24ம் இடத்தை பிடித்துள்ளமை

உலகில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 22 ஆம் இடம் கிடைக்கப் பெற்றுள்ளது.

அமெரிக்க பொருளாதார கூட்டுறவுத் திணைக்களம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வலிமை, மகிழ்ச்சியான வாழ்கைக்கான உத்தரவாதம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பட்டியலில் 35ம் இடத்தை இந்தியா பெற்றுள்ளதுடன் பாகிஸ்தான் 24ம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

839 புலி உறுப்பினர்கள் மாத்திரமே முகாம்களில்

ltte-508
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான தற்காலத்தில் 839 புலி உறுப்பினர்கள் மூன்று முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நேற்று சபையில் அறிவித்த அரசாங்கம் இவர்களில் இருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தது. இதேவேளை, மூன்று முகாம்களை மாத்திரமே குறிப்பிட்டு 839 புலி உறுப்பினர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என அரசாங்கம் கூறுமானால் திருகோணமலை, வெலிகந்தை ஆகிய முகாம்கள் தடுப்பு முகாம்கள் இல்லையா? 839 பேர் தான் எஞ்சியுள்ளனர் எனில் ஏனையோர் எங்கே? அரசாங்கம் இதனைப் பொறுப்புடன்தான் வெளிப்படுத்துகின்றதா என்று ஜே.வி.பி. கேள்வியெழுப்பியது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமர்வின் வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜே.வி.பி. எம்.பி. அனுரகுமார திசாநாயக்கவினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.
புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை குற்றப் பத்திரிகை தாக்கல், தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த முகாம்கள் என்றே கேள்வியெழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன,பூசா, வவுனியா மற்றும் கொழும்பு ஆகிய மூன்று தடுப்பு முகாம்களில் 839 விடுதலைப் புலி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதன்போது இடைக்கேள்வியொன்றைத் தொடுத்த அனுரகுமார எம்.பி., கடந்த காலங்களில் அரசாங்கம் மேற்படி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் புலி உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆயிரம் என்று கூறியது. பின்னர் 12,000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் பின்னர் 8000 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியது. ஆனாலும் இன்று இந்த சபையில் 839 பேரே மூன்று தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றது. அவ்வாறெனில் வெலிக்கந்தை திருகோணமலையில் அமைந்திருப்பவை தடுப்பு முகாம்கள் இல்லையா? எனக் கேட்கிறேன். இங்கு நான் தடுப்பு முகாம்கள் குறித்தே கேள்வியெழுப்பியிருக்கிறேன் என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகையில், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின்போது 2 இலட்சத்து 85 ஆயிரம் பேர் அரச தரப்பு பக்கத்திற்கு வந்தனர். இவர்களை நாம் முகாம்களில் வைத்தே பராமரித்தோம் என்றார்.
இதனையடுத்து குறுக்கிட்ட அனுரகுமார எம்.பி. தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்கள் தொடர்பிலேயே இங்கு கேள்வி எழுப்பப்பட்டிருக்கின்றது. அரசாங்கம் கூறுவது போல் 839 பேரே மேற்படி முகாம்களில் உள்ளனர் என்றால் இதுவரை காலமும் கூறி வந்த ஏனைய எண்ணிக்கையிலானோர் எங்கே? அரசாங்கம் கூறுவதில் எது உண்மை எனக் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையிலேயே இங்கு நான் பதிலளித்துள்ளேன். இது முற்றிலும் உண்மையானதாகும். கடந்த காலங்களில் இந்நாட்டுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள்தான் இன்று புலி உறுப்பினர்களுக்காக கேள்வி எழுப்புகின்றனர்.
புலிகளாக இனங்காணப்பட்டவர்களை தடுப்பு முகாம்களிலேயே வைத்திருப்பதற்கு எண்ணம் இல்லை. அவர்களில் பலர் விடுவிக்கப்பட்டு அவர்கள் தொழில் புரிகின்றனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றார். இதன்போது மேலுமொரு இடைக் கேள்வியைத் தொடுத்த அனுரகுமார எம்.பி., முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களுக்கு மொழிப் பிரச்சினை இருக்கின்றது. அவர்களுக்கு தமிழ் மொழியில் மாத்திரமே பரீச்சயம் இருக்கின்றது. இந்நிலையில் குறித்த புலி உறுப்பினர்கள் விசாரணைக்குட்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் நீதிமன்ற விசாரணை நடவடிக்கைகளின்போது சிங்கள மொழியே பெரிதும் பாவனையில் உள்ளது. அண்மையில் பொரளை சிறையில் தமிழ் இளைஞர் ஒருவரை சந்தித்தேன்.

அவரது பிரச்சினை என்னவெனில், அவர் நீதிமன்ற விசாரணைகளுக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் சிங்கள மொழியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து அவருக்கு 50 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும் அது குறித்து குறித்த அந்த தமிழ் இளைஞர் விளங்கிக் கொண்டிருக்கவில்லை. தான் விடுதலை செய்யப்பட்டதாகவே உணர்ந்த அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னரே தனக்கு 50 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. எனவே இவ்வாறான நிலைமைகளை மாற்றியமைப்பதை நோக்காகக் கொண்டு இவ்வாறானவர்களை விசாரணைக்குட்படுத்தும்போது நீதித்துறையில் தமிழ் மொழி மூலம் விசாரணைக்குட்படுத்துவதற்கான திட்டங்களை ஏற்படுத்த முடியுமா எனக் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன,நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் தீர்ப்பளிக்கப்படுகின்றவர் சார்பில் தெளிவுபடுத்தல்களை கோர முடியும். அத்துடன் அவரது சட்டத்தரணிகள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பர். இது நீதித்துறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.  எனவே அனுரகுமார எம்.பி. கூறுவதனை ஏற்க முடியாது என்றார். இதேவேளை, குறுக்கிட்ட அனுரகுமார எம்.பி. தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் தொடர்பில் அரசு கூறுவதில் நம்பிக்கையில்லை என்றார்.