இந்த 'நோட்டா' பட்டனை கண்டுபிடிச்சது யாருங்க?' -கொந்தளிக்கும் வீரலட்சுமி
மக்கள்
நலக் கூட்டணி சார்பில், ம.தி.மு.க சின்னத்தில் களமிறங்கிய தமிழர்
முன்னேற்றப்படையின் வீரலட்சுமிக்கு வெற்றி கைகூடவில்லை. அதே சமயம்
'அ.தி.மு.க வேட்பாளர் சி.ஆர்.சரஸ்வதியின் தோல்விக்குக் காரணமே வீரலட்சுமி
வாங்கிய ஓட்டுக்கள்தான்' என ஆதங்கப்படுகின்றனர் அ.தி.மு.கவினர்.
சட்டசபைத் தேர்தலின்போது பல்லாவரம் தொகுதி களைகட்டி காணப்பட்டது. அ.தி.மு.க
வேட்பாளர் சி.ஆர்.சரஸ்வதிக்கும் மக்கள் நலக் கூட்டணியின் வீரலட்சுமிக்கும்
முட்டல் மோதல்கள் அதிகரித்தபடியே இருந்தன. ' அதிக ஓட்டு வித்தியாசத்தில்
வெற்றி பெறுவேன். என்னைக் கண்காணிக்க தி.மு.க, அ.தி.மு.க ஆட்களை
நியமித்திருக்கிறது, என்னைப் பார்த்து பெரிய கட்சிகள் ஓடிப் போகின்றன'
என்றெல்லாம் கூறி தினம் தினம் தேர்தல் களத்தை அதிர வைத்தார் வீரலட்சுமி.
சனி, 21 மே, 2016
வாசன், ராமகிருஷன், விஜயகாந்த். வைகோ , திருமாவளவன். முத்தரசன் சந்தித்தனர் ... வைகோவின் தலைப்பாகையை காணல்ல
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. இணைந்து அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
மேலும் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களான வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரன், த.மா.கா. தலைவர் வாசன் ஆகியோரும் பிரச்சாரம் செய்தனர். வைகோவின் பச்சை தலைப்பாகையை விஜயகாந்த் உருவிட்டாரோ? அம்மாவின் புதன் கிரக தோஷத்துக்கு கட்டியது. வாங்கிய காசுக்குதான் வேலைபாத்தாச்சே... தெனாவட்ட பாருங்க.. இத்தனையும் பண்ணிபுட்டு போஸ் வேற..
ஜெயலலிதா வெற்றிக்கு விரலை வெட்டிகொண்ட ஒரு அடிமை.. இவனை என்ன செய்யலாம்?
ஜெயலலிதா வெற்றி பெற்றதற்காக, விரலை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய அ.தி.மு.க., தொண்டர்
கக்கூஸ் போயிட்டு கழுவ ஒரு விரல் கம்மியானதை தவிர்த்து...இது போன்ற அடிமை நாய்களுக்கு வேறு ஒன்றும் இழப்பு இல்லை இந்த ஒரு காரணத்துக்காகவே Anti Cult Law என்று மேலை நாடுகளில் உள்ள சட்டத்தை கொண்டுவந்து இது போன்ற சாமியாடி கட்சிகளை தடை செய்யவேண்டும். இந்த அடிமை மனோபாவம் இருக்கும் வரை ஒரு போதும் இந்தியா ஒரு வல்லரசாக போவதில்லை. அட வல்லரசாவது ஒரு புறம் இருக்கட்டும். இது போன்ற செய்திகள் மிகவும் வேகமாக மேலை நாடுகளில் பரவும் இந்தியா போன்ற நாடுகளில் நடக்கும் இதுபோன்ற பைத்தியகாரத்தனமான சம்பவங்களை அமெரிக்க ஐரோப்பிய டிவிக்கள் அடிக்கடி காட்டுவார்கள் . தங்கள் தவறுகளை மறைக்க அவர்கள் இந்தியா ஒரு மெண்டல் நாடு என்று தரம் தாழ்த்தி காட்டுவார்கள்
மதுவிலக்கு படிப்படியாக எப்படி? இப்படித்தான்.... .
டாஸ்மாக்' மூடல் படிப்படியாக எப்படி?
'டாஸ்மாக்' கடைகள் நேரம் குறைப்பு திட்டத்தை, வரும் காந்தி ஜெயந்தி நாள் முதல் அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக
அரசின் டாஸ்மாக் கடைகளில், போலி சரக்கு; மதுவில் கலப்படம் செய்தல்; 'குடி
'மகன்கள் விரும்பும் மது வகைகளை விற்காதது; அரசு நிர்ணயித்துள்ளதை விட,
அதிக விலைக்கு விற்பனை செய்தல் என, பல முறைகேடுகள் நடக்கின்றன. இதற்கு
அதிகாரி களும், அரசியல்வாதிகளும் உடந்தையாக உள்ளனர்.
அதிக
எண்ணிக்கையில் மதுக்கடைகள் இருப்ப தால், சிறுவர்கள், பெண்கள் என, பலரும்
மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். குடிமக்கள் அனைவரும் போதையில்லாமல் குடிக்காமல் சரியாக ஒட்டு போட்டுவிட்டார்கள்.. நிதானமானவர்கள் குடிக்காமலேயே அலட்சிய போதையில்
ஓட்டுக்களை அங்குமிங்கும் போட்டார்கள் விளைவு.. டாஸ்மாக் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது குடிச்சு குடிச்சு சீக்கிரம் மோடி சொன்ன சோமாலியா லெவலுக்கு
அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர வைத்த 24,383 ஓட்டு...அதுவும் திருட்டு ஓட்டுக்கள்
சென்னை: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு வெறும் 24,383 ஓட்டு
வித்தியாசத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் கூடுதலாக கிடைத்துள்ளனர். அக்கட்சி
ஆட்சி அமைக்க இதுவே முக்கிய காரணமாக இருந்துள்ளது. அந்த தொகுதிகள் இவை
தான்:
1) ராதாபுரம் - 49 ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி.
2) கோவில்பட்டி - 428
3) கரூர் - 441
4) தென்காசி - 462
5) ஒட்டப்பிடாரம் - 493
6) பெரம்பூர் - 579
7) திருப்போரூர் - 950
8) பர்கூர் - 963
9) பேராவூரணி - 964
10) கிணத்துக்கடவு - 1332
11) ஆவடி - 1395
12) அரியலூர் - 1753
13) சிதம்பரம் - 1945
14) மொடக்குறிச்சி - 2222
15) விருகம்பாக்கம் - 2333
16) ஊத்தாங்கரை - 2613
17) கெங்கவள்ளி - 2622
18) அறந்தாங்கி - 2837
தினமலர்.com
1) ராதாபுரம் - 49 ஓட்டு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி.
2) கோவில்பட்டி - 428
3) கரூர் - 441
4) தென்காசி - 462
5) ஒட்டப்பிடாரம் - 493
6) பெரம்பூர் - 579
7) திருப்போரூர் - 950
8) பர்கூர் - 963
9) பேராவூரணி - 964
10) கிணத்துக்கடவு - 1332
11) ஆவடி - 1395
12) அரியலூர் - 1753
13) சிதம்பரம் - 1945
14) மொடக்குறிச்சி - 2222
15) விருகம்பாக்கம் - 2333
16) ஊத்தாங்கரை - 2613
17) கெங்கவள்ளி - 2622
18) அறந்தாங்கி - 2837
தினமலர்.com
கலைஞர் சாட்டை : தேர்தல் கமிஷனா? தில்லுமுல்லு செய்யும் கமிஷனா?
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் பணிகள் தொடங்கிய
நாளிலிருந்து தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் பணிகள் எவ்வாறு இருந்தன
என்பது குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், மற்ற
கட்சிகளின் சார்பிலும் தொடர்ந்து முறையிட்டு வந்ததை அனைவரும் அறிவர்.
இதுபற்றி தனியாக ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரித்தால் கூட பல
உண்மைகளைத் தெரிந்து கொள்ள முடியும். தேர்தல் முடிந்த பிறகும், தமிழகத் தேர்தல் ஆணையத்தின்
செயல்பாடுகள் நின்றபாடில்லை. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமேயானால், தஞ்சை,
அரவக்குறிச்சியில் தேர்தலை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து அறிவித்தார்கள்.
காரணம் என்ன சொன்னார்கள் என்றால், “பணம் பட்டுவாடா” என்றார்கள். பணம்
பட்டுவாடா நடைபெற்றதற்காக தேர்தலை ஒத்திவைப்பது என்றால், தமிழ்நாட்டில் பல
தொகுதிகளிலும் ஒத்தி வைத்திருக்க வேண்டும்.
தஞ்சை, அரவக்குறிச்சி..27ம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணைத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
தஞ்சை, அரவக்குறிச்சி விவகாரம்: 27ம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணைத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் கருத்துக்களையும் கேட்டு, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.
வரும் 27ஆம் தேதிக்குள் தேதியை முடிவு செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. இதுகுறித்து திமுக வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தேர்தல் கடந்த 16ஆம் தேத நடைபெறுவதாக இருந்ததை தேர்தல் ஆணையம் வரும் 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
அதற்குப் பின்னர் இரண்டு, மூன்று வழக்குகள் தொடரப்பட்டதால் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய வழக்கறிஞர், இந்த தேர்தலை மீண்டும் தள்ளி வைப்பதாக தெரிவித்து, 13.06.2016 அன்று நடத்துவதாக புதியதாக ஒரு அறிவிப்பை கொடுத்திருக்கிறார். அந்த அறிவிப்பு தவறானது என்று இரண்டு காரணங்களை சுட்டிக்காட்டி இன்று வழக்கு தொடரப்பட்டது.
வரும் 27ஆம் தேதிக்குள் தேதியை முடிவு செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. இதுகுறித்து திமுக வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தேர்தல் கடந்த 16ஆம் தேத நடைபெறுவதாக இருந்ததை தேர்தல் ஆணையம் வரும் 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
அதற்குப் பின்னர் இரண்டு, மூன்று வழக்குகள் தொடரப்பட்டதால் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய வழக்கறிஞர், இந்த தேர்தலை மீண்டும் தள்ளி வைப்பதாக தெரிவித்து, 13.06.2016 அன்று நடத்துவதாக புதியதாக ஒரு அறிவிப்பை கொடுத்திருக்கிறார். அந்த அறிவிப்பு தவறானது என்று இரண்டு காரணங்களை சுட்டிக்காட்டி இன்று வழக்கு தொடரப்பட்டது.
கலைஞர் : மருத்துவ நுழைவு தேர்தல்... மாணவர்களை குழப்ப வேண்டாம்..
சென்னை: மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக மாணவர்களை குழப்ப வேண்டாம் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்திள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக்
கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு நுழைவுத் தேர்வை அனைத்து
மாநிலங்களிலும் 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தியே ஆக வேண்டுமென்று இந்திய
உச்ச நீதி மன்றம் 9-5-2016 உத்தரவிட்டது.
வசதிகள் குறைவான கிராமப் புற மாணவர்களுக்கும், நவீன
வசதிகள் மிகுந்த நகர்ப் புற மாணவர்களுக்குமிடையே நிலவி வரும் வேறுபாடுகளை
நீக்கவும், அனைவர்க்கும் தொழிற்கல்வியில் சமமான வாய்ப்புகளை உருவாக்கி
வழங்கிடவும், சமூக நீதியை நிலைநாட்டவும், திமுக ஆட்சியில் கடந்த 2006 ஆம்
ஆண்டு நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்து சட்டம் இயற்றப்பட்டது. அந்தச்
சட்டம் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று 7-3-2007 முதல்
நடைமுறைக்கு வந்தது. அதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்பதாண்டுகளாக
நுழைவுத் தேர்வு எதுவும் இல்லாமலேயே பிளஸ் 2 தேர்வில் பெறும் மதிப்பெண்கள்
அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தேமுதிக முரசு சின்னத்தையும் தேர்தல் அங்கீகாரத்தையும் இழக்கிறது.
சீமான் : வீரத்தமிழன் விலைபோய்விட்டான் ...2021-ம் தேர்தலை வலிமையோடு சந்திப்போம்.
விகடன்.காம் மானத் தமிழன், வீரத் தமிழன் விலை போய்விட்டான்' - கொந்தளித்த சீமான்
தேர்தல்
வெற்றி, தோல்விகளுக்கு தலைவர்கள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கும்
வேளையில், நாம் தமிழர் கட்சியின் சீமானிடம் இருந்து இதுவரையில் எந்தப்
பதிலும் வரவில்லை. 'அடுத்த தேர்தல் நமக்கானது' என ஆதரவாளர்களை தேற்றிக்
கொண்டிருக்கிறார் சீமான்.
சட்டசபை தேர்தல் முடிவுகளை, தனது ஆலப்பாக்கம் வீட்டில் இருந்தபடியே
பார்த்துக் கொண்டிருந்தார் சீமான். பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி
வேட்பாளர்கள் ஐந்தாவது இடம், ஆறாவது இடம் என நிலவரம் போய்க் கொண்டிருக்க,
கலவரத்தோடு கவனித்துக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில், ' பல தொகுதிகளில்
இரண்டாவது இடம் வருவோம் என எதிர்பார்த்தேன். மக்கள் ஏமாற்றிவிட்டார்கள்' என
நொந்து போனார்.
இதுபற்றி நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர், " தேர்தல்
முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றதும் கொந்தளிப்பின்
உச்சிக்கே போய்விட்டார் சீமான். ' மானத் தமிழன், வீரத்தமிழன் இப்படி
செய்துவிட்டான்' எனக் கோபப்பட்டார். நேரம் செல்லச் செல்ல, எங்களுக்கு அவர்
ஆறுதல் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
கலைஞர் : தொண்டர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவேண்டாம்.
தி.மு.க., சட்டசபை தலைவராக, தி.மு.க., தலைவர் கருணாநிதியும், துணை
தலைவராக பொருளாளர் ஸ்டாலினும், கொறடாவாக, முன்னாள் அமைச்சர்
துரைமுருகனும், தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதன்
மூலம், சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவி கருணாநிதிக்கும்,
துணைத் தலைவர் பதவி ஸ்டாலினுக்கும் கிடைக்கும் என, அக்கட்சி வட்டாரங்கள்
தெரிவித்தன.
அப்போது, மூத்த எம்.எல்.ஏ.,க்கள் சிலர்,
எதிர்க்கட்சி தலைவராக, நீங்கள் செயல்பட வேண்டும்' என,
கருணாநிதியிடம் வலியுறுத்தினர். அதை, அவர் ஏற்றுக் கொண்டதாகவும்
தெரிவித்தனர். ஜெயலலிதா,
முதல்வர் பதவி ஏற்கும், 23ம் தேதி, அறிவாலயத்தில், தி.மு.க., -
எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டு உள்ளது.
கலைஞர் : அரவக்குறிச்சி தஞ்சாவூர் சதி...நானே களத்தில் இறங்கி போராட்டம்!
அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் நடைபெற இருந்த தேர்தலை தள்ளிவைத்தது திமுகவுக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சி என்று கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது திட்டமிட்ட சதி. தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளது. தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவுக்கு அடிமை ஆணையமாக உள்ளது.
தேர்தலை தள்ளிவைத்தது திமுகவுக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சி. அறிவித்த தேதியில் தேர்தல் நடத்தாவிட்டால் களத்தில் இறங்கி திமுக போராட்டம் நடத்தும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.
டாக்டர்.கிருஷ்ணசாமி : ஜனநாயகத்துக்கு பேராபத்து ... அதிமுகவினர் பணம் கொடுத்து தொகுதிகளை பறிக்கிறார்கள்
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அதிமுக வென்றிருப்பது ஜனநாயகத்துக்கு
பேராபத்து என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி
தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம்
கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல்
சுற்றில் இருந்து தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.
கடைசி சுற்றில் அதிமுக வேட்பாளர் ஆர். சுந்தரராஜ் அதிக வாக்குகளை பெற்று,
493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தபால் வாக்குகளில் டாக்டர் கிருஷ்ணசாமி தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று முறை எண்ணப்பட்டது.
அதிமுகவின் தேர்தல் செயலராக ராஜேஷ் லக்கானி!. அரவக்குறிச்சி தஞ்சாவூர்... ராஜ்யசபா தேர்தல்.. இரண்டு வாக்குகள்
கலைஞர் முகநூல்: :தமிழகத்திலே உள்ள தேர்தல் ஆணையம்
ஜெயலலிதாவின் அடிமையாகச் செயல்படுகிறது....
செய்தியாளர் :- எதற்காக இது போன்று மூன்று வாரங்களுக்கு தேர்தல் தேதியை தள்ளி வைக்கிறார்கள்?
பதில் :- விரைவில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரவுள்ளது. அதனால் இந்த இரண்டு வாக்குகள் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிட்ட தேதியில் தேர்தல் நடக்காமல், அதை நிறுத்த வேண்டுமென்ற ஜெயலலிதாவின் விருப்பப்படி இந்த முயற்சிகள் நடைபெறுகின்றன என்று கருதுகிறேன். தமிழகத்திலே உள்ள தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவின் அடிமையாகச் செயல்படுகிறது என்று தான் எண்ண வேண்டியுள்ளது. மேலே உள்ள நாலு படங்களிலும் நாலு வித்தியாசங்கள் அல்லது நாலு ஒற்றுமைகள் உள்ளது ... கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
ஜெயலலிதாவின் அடிமையாகச் செயல்படுகிறது....
செய்தியாளர் :- எதற்காக இது போன்று மூன்று வாரங்களுக்கு தேர்தல் தேதியை தள்ளி வைக்கிறார்கள்?
பதில் :- விரைவில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரவுள்ளது. அதனால் இந்த இரண்டு வாக்குகள் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிட்ட தேதியில் தேர்தல் நடக்காமல், அதை நிறுத்த வேண்டுமென்ற ஜெயலலிதாவின் விருப்பப்படி இந்த முயற்சிகள் நடைபெறுகின்றன என்று கருதுகிறேன். தமிழகத்திலே உள்ள தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவின் அடிமையாகச் செயல்படுகிறது என்று தான் எண்ண வேண்டியுள்ளது. மேலே உள்ள நாலு படங்களிலும் நாலு வித்தியாசங்கள் அல்லது நாலு ஒற்றுமைகள் உள்ளது ... கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
வெள்ளி, 20 மே, 2016
பொது மருத்துவ நுழைவு தேர்வு ஓராண்டுக்கு ஒத்திவைப்பு .
புதுடெல்லி:
மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை ஒரு வருடம் தள்ளி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்க
உச்ச நீதிமன்றம் கடந்த 2013 ம் ஆண்டு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த
தடை உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் சார்பில் மறு
சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
வீரமணி :இது பெரியார் மண்... பாஜகவுக்கும் ஜாதி அரசியலுக்கும் தேர்தல் முடிவுகள் கூறும் பாடம்
தவறான திசையில் இழுத்துச் சென்றவர் வைகோ: கி.வீரமணி.மக்கள் நலக் கூட்டணியை தவறான திசையில் இழுத்துச் சென்றவர் வைகோ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாட்டின்
15ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. அ.இ.அ.தி.மு.க
மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான
எண்ணிக்கையில் திமுக எதிர்க்கட்சிப் பாத்திரத்தை வகிக்கிறது.நமது அன்பார்ந்த வாழ்த்துக்கள்!வெற்றி
பெற்றுள்ள அனைத்துக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் திராவிடர்
கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக
ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அஇஅதிமுகவுக்கு அதன் பொதுச்செயலாளருக்கு
அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பெரும்பான்மை இடத்தை
பெற்றவர் என்ற முறையில் மக்களுக்கு நன்றி தெரிவித்தும், தேர்தல்
வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்றும் முதல் அமைச்சர் அவர்கள் கூறி
இருப்பது வரவேற்கத்தக்கது.
பொது நுழைவுத் தேர்வு.. மாநிலமொழிகளுக்கு,மாநில உரிமைகளுக்கு, ஏழைகளுக்கு மரண அடி... உச்சநீதிமன்றம்
ஒரு வழக்கில் விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பே
தீர்ப்பைக் கூறும் விந்தையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது, உச்சநீதி
மன்றம். தரம், தகுதி என்ற மோசடியான வாதங்களுக்குப் பின்னே ஒளிந்துகொண்டும்,
தனியார் கல்வி முதலாளிகள் அடிக்கும் கொள்ளை குறித்து முதலைக் கண்ணீர்
வடித்தும் “விசாரணைக்கு முன்பே தீர்ப்பு” என்ற இந்த முறைகேடைத் தமது
கட்டளையில் புகுத்தியுள்ளனர்,உச்சநீதி மன்ற நீதிபதிகள்.
பொது நுழைவுத் தேர்வு குறித்த மறுசீராய்வு மனுவை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் முன்பாகவே, அத்தேர்வை உடனடியாக இந்த ஆண்டு தொடங்கியே நடத்துமாறு முறைகேடாக உத்தரவிட்ட அரசியல் சாசன அமர்வின் தலைமை நீதிபதி அனில் ஆர்.தவே
பொது நுழைவுத் தேர்வு குறித்த மறுசீராய்வு மனுவை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் முன்பாகவே, அத்தேர்வை உடனடியாக இந்த ஆண்டு தொடங்கியே நடத்துமாறு முறைகேடாக உத்தரவிட்ட அரசியல் சாசன அமர்வின் தலைமை நீதிபதி அனில் ஆர்.தவே
குயின் மேக்கர் வைகோ.. ம.ந. கூவை ஸ்டாலினுக்கு எதிரான ஆயுதமாகதான் யூஸ் பண்ணினார்...அவர் குத்தியது தமிழகத்தின் மீதுதான்
வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அதிமுக முன்னிலை பெறத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைகோ மீம்ஸ்கள் பின்னியெடுக்கத் தொடங்கிவிட்டன. மக்கள் நலக் கூட்டணியின் தோல்விக்கு அவர்தான் காரணம் என்றும், திமுகவின் வாக்குகள் சிதறி, அதன் பலன் அதிமுகவுக்குச் செல்லக் காரணமாக இருந்தார் என்றும் பொருள்படும் வகையில் அமைந்த மீம்ஸ்கள் அவை.
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று என்று ஒரு அணியைத் தொடங்கும்
முயற்சியில் இறங்கியபோதே, அதில் வைகோ கைகோத்ததைச் சங்கடமாகப் பார்த்தவர்கள்
உண்டு.
ராதாபுரம் அதிமுகவால் திருடப்பட்டது... தூக்கி வீசப்பட்ட தி.மு.க. அப்பாவு: அ.தி.மு.க.,49 ஓட்டில் வெற்றி என அறிவிப்பு
திருநெல்வேலி:திருநெல்வேலி ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க.,சார்பில்
இன்பதுரையும், தி.மு.க.,சார்பில் அப்பாவும் போட்டியிட்டனர்.அப்பாவு ஏற்கனவே
மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். ஓட்டு எண்ணும்போது தி.மு.க.,வும்
அ.தி.மு.க.,வும் முன்னும் பின்னுமாக வெற்றியை எட்டிக்கொண்டிருந்தனர்.
கடைசியில் இன்பதுரை, சுமார் 500 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில்
இருந்தார். மொத்தமுள்ள ஆயிரத்து 700 தபால் ஓட்டுக்களில் அப்பாவுவிற்கு
முன்னிலை கிடைக்கும் வாய்ப்பிருந்தது. ஆனால் 200க்கும் மேற்பட்ட
ஓட்டுக்களில் சிகப்பு குறி போடப்பட்டிருந்ததுஎன்றும், நடுநிலைப்பள்ளி
தலைமையாசிரியரிடம் ஒப்புகை கையொப்பம் பெற்றிருந்தால் செல்லாது எனவும்
தள்ளுபடிசெய்தனர்.இதனால் அப்பாவுவிற்கு வரவேண்டிய முறையான ஓட்டுகள் செல்லாத
ஓட்டுகள் என அறிவிக்கப்பட்டன.
17 இடங்களில் வெற்றி: புதுச்சேரியில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி
புதுவை சட்டமன்ற தேர்தலில் 17 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. வாக்கு எண்ணிக்கை புதுவை மாநிலத்தில் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. புதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமைத்து ஓரணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா, பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாவும் போட்டியிட்டன. மக்கள் நல கூட்டணியும் போட்டியிட்டது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 16-ந்தேதி நடந்தது. < வாக்குப்பதிவு முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்குகள் பாரதிதாசன் மகளிர் கல்லூரி, லாஸ்பேட்டை மகளிர் பாலிடெக் னிக் கல்லூரி மற்றும் காரைக் கால், மாகி, ஏனாம் ஆகிய 5 இடங்களில் எண்ணப்பட்டது.
சிறுதாவூரில் தொடங்கிய கண்டெய்னர் சர்ச்சை திருப்பூரில் சிக்கி, டெல்லி வரை விவகாரமாகியுள்ளது.
vikatan.com அந்த நாள் மே 13. மணி நள்ளிரவு 12:20.
கண்டெய்னர் லாரிகள். கோவையில் இருந்து கிளம்பிய அந்த லாரிகளுக்கு முன்னால்
ஒரு இன்னோவா கார். அதேபோல அந்த லாரிகளுக்குப் பின்னால் இரண்டு இன்னோவா
கார்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.அந்த
லாரிகள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர்-குன்னத்தூர் பைபாஸ்
சாலையில் படுவேகமாய் செல்கின்றன. அங்கே தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழு
அலுவலர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் அந்த
இன்னோவா காரை பரிசோதிக்க... தடுத்துப் பார்த்தனர். ஆனால் அவர்களின் தடுப்பை
மதிக்காமல் கார் விரைந்து செல்ல... கண்டெய்னர் லாரிகளும், பின்னால் வந்த
இரண்டு இன்னோவா கார்களும் அதேபோல் பறக்கின்றன.
ஒரு சதவீத வாக்குகளால் வெற்றியை இழந்த திமுக கூட்டணி ... வெறும் ஒரு சதவீத வாக்குகள் அதிமுகவை வெற்றி...
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியை விட வெறும் 1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துள்ளது அதிமுக. அதிமுக கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் 40.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. திமுக கூட்டணிக்கு 39.8 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இருவருக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 1 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கர பந்தாவுடன் வலம் வந்த தேமுதிக படு கேவலமான நிலைக்குப் போயுள்ளது. அக்கட்சிக்கு வெறும் 2.4 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. அக்கட்சியை விட பாஜக கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது.
இரவு 8 மணி நிலவரப்படி திமுக - அதிமுக கூட்டணிகள் பெற்ற வாக்கு சதவீத விவரம்: அதிமுக கூட்டணி - 40.8%
அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் - 1.75 கோடி.
திமுக கூட்டணி மொததமாக பெற்ற வாக்குகள் - 1.68 கோடி.
திமுக - 31.6% (வாக்குகள்- 1.35 கோடி)
காங்கிரஸ் - 6.5% (வாக்குகள் 27 லட்சம்)
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 0.7% ( வாக்குகள் 3 லட்சம்)
புதிய தமிழகம் - 0.5% (வாக்குகள் 2 லட்சம்)
மனிதநேய மக்கள் கட்சி - 0.5 சதவீதம் (வாக்குகள் 1.9 லட்சம்) திமுக கூட்டணியின் மொத்த வாக்கு சதவீதம் - 39.8%
வாக்கு சதவீத வித்தியாசம் - 1 சதவீதம்.
tamil.oneindia.com/
அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் - 1.75 கோடி.
திமுக கூட்டணி மொததமாக பெற்ற வாக்குகள் - 1.68 கோடி.
திமுக - 31.6% (வாக்குகள்- 1.35 கோடி)
காங்கிரஸ் - 6.5% (வாக்குகள் 27 லட்சம்)
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 0.7% ( வாக்குகள் 3 லட்சம்)
புதிய தமிழகம் - 0.5% (வாக்குகள் 2 லட்சம்)
மனிதநேய மக்கள் கட்சி - 0.5 சதவீதம் (வாக்குகள் 1.9 லட்சம்) திமுக கூட்டணியின் மொத்த வாக்கு சதவீதம் - 39.8%
வாக்கு சதவீத வித்தியாசம் - 1 சதவீதம்.
tamil.oneindia.com/
வியாழன், 19 மே, 2016
2016 தேர்தல் வைகோவின் சாணக்கிய வெற்றி ! பெற்றுக்கொண்ட காசுக்கு வேலைபார்த்த Political pimp ?
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி
என்பதை விட வைகோவை வைத்து ஆடிய சதுரங்கத்திற்குக் கிடைத்த வெற்றி என்றுதான்
சொல்ல முடியும்.
மூன்றாவது அணி அதாவது மக்கள் நலக் கூட்டணி உருவானதே, அதிமுகவுக்கு
சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றுதான் என்பதே ஆரம்பத்திலிருந்து
அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்த கூற்று. இதை வைகோ ஆரம்பத்திலிருந்தே
உறுதிபட மறுக்கவில்லை.
மாறாக, தான் அமைத்துள்ள கூட்டணியை மிகப் பெரிய மாற்று அணி என்பது
போன்ற அலிபியை அவர் சீரியஸாகவே உருவாக்கினார. மக்களும் அதை நம்பத்
தொடங்கினர்.
அவரது தலைமையில் உருவான நான்கு கட்சி மக்கள் நலக் கூட்டணி பின்னர்
விஜயகாந்த்தை இழுத்தபோதுதான் வைகோவை வைத்து ஜெயலலிதா போட்டுள்ள கேம் பிளான்
என்ற கூற்று வலுப்பட்டது.
இப்போதுதான் சற்று வெளிப்படையாக ஜெயலலிதாவை விமர்சிக்க ஆரம்பித்தார்
வைகோ. அப்படியும் கூட அவர் மீதான சந்தேகப் பார்வை போகவில்லை.
விலகவில்லை.இப்போது கிட்டத்தட்ட எல்லாமே தெளிவாகி விட்டது. சுப்ரமணியம் சுவாமிக்கு தமிழ்நாட்டில் இவர் ஒரு Sub Contractor அல்லது ஒரு பீ டீமாக வேலை பார்க்கிறார் என்பது ரொம்ப லேட்டாக தான் எனக்கே(?) தெரியவந்தது
சாராயம்: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ! அதை தலை வணங்கி மகிழ்வுடன் ஏற்றுகொள்கிறேன்
ஒன்றும் செய்ய முடியாது இப்படியே அடிமையாக இருந்து சாக வேண்டியதுதான் தமிழ் மக்கள்
அந்தம்மா தனி மனுஷியாக நின்னு ஜெயிக்கவில்லை.....
இது ஒரு குமாரசாமித்தனமான வெற்றி தான்....
அதிமுக + மதிமுக + தேமுதிக + விசிக + பாமக + பாஜக + நாம் தமிழர் + சில பல உதிரி கட்சிகள் + தேர்தல் கமிஷன் + மீடியா + மத்திய அரசு + பணபலம் துணை கொண்டு குறுக்கு வழியில் சேர்த்த வெற்றி இது....
மேலே இருக்கிற எந்த கட்சியும் ஆளும்கட்சியான அதிமுகவை விமர்சிக்கவில்லை..... மாறாக திமுக மேலேயே அர்த்தமில்லாத அவதூறுகளை சொல்லி வன்மத்தோடு பிரச்சாரம் செய்தது.....
கன்டைனர் கன்டைனரா பணத்தை வாரி இறைக்க
ஆளும் கட்சிக்கு துணை போனது தேர்தல்
கமிஷனும், மத்திய அரசும்....
இத்தனை கட்சிகளையும் தடைகளையும் தவிடு பொடியாக்கி அதிக பலத்தோடு, அசுர பலத்தோடு
எதிர்க்கட்சி ஆகி இருக்கிறது திமுக.... sumi b facebook
அந்தம்மா தனி மனுஷியாக நின்னு ஜெயிக்கவில்லை.....
இது ஒரு குமாரசாமித்தனமான வெற்றி தான்....
அதிமுக + மதிமுக + தேமுதிக + விசிக + பாமக + பாஜக + நாம் தமிழர் + சில பல உதிரி கட்சிகள் + தேர்தல் கமிஷன் + மீடியா + மத்திய அரசு + பணபலம் துணை கொண்டு குறுக்கு வழியில் சேர்த்த வெற்றி இது....
மேலே இருக்கிற எந்த கட்சியும் ஆளும்கட்சியான அதிமுகவை விமர்சிக்கவில்லை..... மாறாக திமுக மேலேயே அர்த்தமில்லாத அவதூறுகளை சொல்லி வன்மத்தோடு பிரச்சாரம் செய்தது.....
கன்டைனர் கன்டைனரா பணத்தை வாரி இறைக்க
ஆளும் கட்சிக்கு துணை போனது தேர்தல்
கமிஷனும், மத்திய அரசும்....
இத்தனை கட்சிகளையும் தடைகளையும் தவிடு பொடியாக்கி அதிக பலத்தோடு, அசுர பலத்தோடு
எதிர்க்கட்சி ஆகி இருக்கிறது திமுக.... sumi b facebook
மூன்றாவது அணியின் வாக்குகள் என்ன தாக்கத்தை கொடுத்தது ...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச்
சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைந்து கடந்த ஆண்டு ஜுலையில் மக்கள் நலக்
கூட்டியக்கத்தை உருவாக்கினர். இந்தக் கூட்டியக்கம், மக்கள் நலக் கூட்டணி
என்ற பெயரில் தேர்தல் கூட்டணியாக மாறியது. அதன்பிறகு இந்தக் கூட்டணியில்
தேமுதிக, தமாகா கட்சிகள் இணைந்தன. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 3-வது
அணியாக உருவானது. இந்தத் தேர்தலில் அந்தக் கூட்டணியின் நிலை சொல்லும் 10
தகவல்கள்:
* தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலுமே தோல்வியை தழுவியுள்ளது.
* தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் 3-வது இடத்துக்கு சென்றார்.
* காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறனிடம் விசிக
தலைவர் திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை
இழந்தார்.
திருமாவளவனை வீழ்த்திய தேர்தல் தந்திரங்கள்... வெறும் 87 வாக்குகள்..
மக்கள்
நலக் கூட்டணியில் இடம்பெற்ற திருமாவளவன் வெற்றியை இன்னொரு திருமாவளவன்
தடுத்து இருக்கிறார். ஆம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தோற்றிருப்பது 87 வாக்குகள்
வித்தியாசத்தில்.
ஆனால், அதே காட்டுமன்னார் கோவிலில் திருமாவளவன் என்கிற பெயரில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஒருவர் பெற்றிருப்பது 289 வாக்குகள். ஒரு வேளை இந்த வாக்குகள் விசிக வுக்கு கிடைத்து இருந்தால், மக்கள் நலக் கூட்டணிக்கு ஒரு ஆறுதல் இடமாவது கிடைத்திருக்கும். ஆனால், அதுவும் தேர்தல் தந்திரங்களால் வீழ்த்தப்பட்டு இருக்கிறது.
ஆனால், அதே காட்டுமன்னார் கோவிலில் திருமாவளவன் என்கிற பெயரில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஒருவர் பெற்றிருப்பது 289 வாக்குகள். ஒரு வேளை இந்த வாக்குகள் விசிக வுக்கு கிடைத்து இருந்தால், மக்கள் நலக் கூட்டணிக்கு ஒரு ஆறுதல் இடமாவது கிடைத்திருக்கும். ஆனால், அதுவும் தேர்தல் தந்திரங்களால் வீழ்த்தப்பட்டு இருக்கிறது.
ஜெயலலிதா to ஞானதேசிகன்: திருப்பூர் கண்டெய்னர் விவகாரத்தால் நமக்கு எதாவது மைனஸ் ஏற்படுமா?'
ஸ்டாலின் :வரலாற்றில் மிகபெரும் எதிர்கட்சியாக திமுகவை மக்கள் தெரிவு செய்துள்ளார்கள் ....மகிழ்ச்சியே
சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு சற்றேறக் குறைய 100 தொகுதிகள் கிடைத்துள்ளன.
திமுக 50 தொகுதிகளில் வெற்றி பெற்று 50 தொகுதிகளில்
முன்னிலையில் உள்ளது. எனவே, தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை
தொகுதிகளுடன் திமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த திமுக பொருளாளர்
மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவை வரலாற்றில் இவ்வளவு பெரும்பான்மையுடன் ஒரு
எதிர்க்கட்சியாக திமுகவை தமிழக மக்கள் அமர்த்தியிருக்கிறார்கள்.
திமுகவுக்கு இந்த ஒரு பெருமையை மக்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார் தினமணி.காம்
திமுகவுக்கு இந்த ஒரு பெருமையை மக்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார் தினமணி.காம்
அழகிரி :நான் யாருக்கும் ஆதரவளிக்கவில்லை... மீண்டும் இணைவது பின்பு முடிவு செய்வேன்
திமுக தோற்றதற்கு தென் மாவட்டங்களில் தாம் பொறுப்பில் இல்லாததே காரணம் என்று மு.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், "சட்டப்பேரவைத் தேர்தல்
முடிவுகள் குறித்து நான் எந்த ஒரு கருத்தும் சொல்ல விரும்பவில்லை. திமுக
தோற்றதற்கு தென் மாவட்டங்களில் நான் இல்லாதது காரணம்தான். நான்
இருந்திருந்தால் இந்தளவுக்கு பாதிப்பு இருக்காது.
ஒரு வலுவான கூட்டணி அமைக்காதது மற்றும் திமுக தலைமைதான் என்னை வேண்டாம் என்று ஒதுக்கியதால் இந்த மாபெரும் தோல்வியை சந்தித்தார்கள்.
திமுகவில் வேட்பாளர்கள் சரியில்லை மற்றும் உட்கட்சி பிரச்சினை இருக்கிறது.
திமுகவின் இந்தத் தோல்விக்கு யார் பொறுப்பு என்று அனைவருக்கும் தெரியும்.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை
என்பதுதான் என் நிலை" என்று தெரிவித்திருக்கிறார் அழகிரி
மீண்டும் திமுகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, "மீண்டும் இணைவது குறித்து
பின்னர் யோசித்து முடிவு செய்வேன்" என்று பதிலளித்துள்ளார். tamil.thehindu.com
25 தொகுதிகள் வாக்குகள் எண்ணிக்கை நிறுத்தம் திமுகவுக்கு சாதகமான தொகுதிகள் ....ராஜேஷ் லகனி +அதிகாரிகள் ந்தை
திமுக சொற்ப வாக்குகளில் முன்னணி வகிக்கும் 25 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையை அதிமுக பிரமுகர்களோடு அதிகாரிகளும் சேர்ந்து தடுத்து நிறுத்தி உள்ளார்கள். இதில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ,திமுக முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு போன்றோரின் தொகுகளும் அடக்கம்.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் தலைமை அலுவலரிடம் இது பற்றி முறையீடு செய்ய பட்டுள்ளது .
அதிமுகவும் மோடியின் அரசும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடு படுகிறார்கள்.
அந்த 25 தொகுதிகள் முடிவு திமுகவுக்கே சாதகம் . இது தேர்தல் அமைப்பையே கேள்வி குறியாக்கி உள்ளது.
டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் தலைமை அலுவலரிடம் இது பற்றி முறையீடு செய்ய பட்டுள்ளது .
அதிமுகவும் மோடியின் அரசும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடு படுகிறார்கள்.
அந்த 25 தொகுதிகள் முடிவு திமுகவுக்கே சாதகம் . இது தேர்தல் அமைப்பையே கேள்வி குறியாக்கி உள்ளது.
டாஸ்மாக் Factor.. ஒரு கோடி பேர்கள் டாஸ்மாக் பூட்டபடுவதை விரும்பவில்லை
சென்னை,மே 19 (டி.என்.எஸ்) தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி முடிவு
நெருங்கிவிட்ட நிலையில், அதிமுக மீண்டு ஆட்சியைப் பித்து ஜெயலலிதா
முதல்வராவது உறுதியாகிவிட்டது.
தேர்தலுக்கு முன்பும் சரி வாக்குப் பதிவுக்குப் பிறகும் எடுக்கப்பட்ட பல கருத்து கணிப்புகளில் திமுக-வே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய தேர்தல் முடிவுகள் எதிர்மறையாக அமைந்துள்ளது, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் புதுமை, இளைஞர்களை கவர்ந்த விளம்பரங்கள் என்று தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட திமுக-இப்படி தோல்வியை சந்தித்ததற்கான காரணங்களாக அரசியல் ஆர்வலர்கள் பலவற்றை கூறினாலும், அதில் முக்கியமான முழு மதுவிலக்கு அமல்படுத்துவது தான்.
நாட்டுக்கு நல்லது தானே முழு மதுவிலக்கு என்றால், நாட்டுக்கு நல்லதாக இருந்தாலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும், குடிமகன்களுக்கும் அது நல்லதாகவே படவில்லை என்று கூறுகிறார்கள்.
தேர்தலுக்கு முன்பும் சரி வாக்குப் பதிவுக்குப் பிறகும் எடுக்கப்பட்ட பல கருத்து கணிப்புகளில் திமுக-வே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய தேர்தல் முடிவுகள் எதிர்மறையாக அமைந்துள்ளது, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தேர்தல் அறிக்கையில் புதுமை, இளைஞர்களை கவர்ந்த விளம்பரங்கள் என்று தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட திமுக-இப்படி தோல்வியை சந்தித்ததற்கான காரணங்களாக அரசியல் ஆர்வலர்கள் பலவற்றை கூறினாலும், அதில் முக்கியமான முழு மதுவிலக்கு அமல்படுத்துவது தான்.
நாட்டுக்கு நல்லது தானே முழு மதுவிலக்கு என்றால், நாட்டுக்கு நல்லதாக இருந்தாலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும், குடிமகன்களுக்கும் அது நல்லதாகவே படவில்லை என்று கூறுகிறார்கள்.
87 வாக்குகள் வித்தியாசத்தில் தொல்.திருமாவளவன் தோல்வி.....விஜயகாந்த் டெபாசிட் போனது
விடுதலை சிறுத்தைகள தலைவர் தொல்.திருமாவளவன் 87
வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். அதிமுக வேட்பாளர்
முருகுமாறன் 48,450 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தனித் தொகுதிகளில்
காட்டுமன்னார்கோவில் தொகுதியும் ஒன்று. 1962-ஆம் ஆண்டு காட்டுமன்னார்கோவில்
தொகுதி உருவானது. பொதுத் தொகுதியாக இருந்த இந்த தொகுதி 1967-ஆம் ஆண்டு
தனித் தொகுதியானது.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்,
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் கடைசி வரை கடுமையாகப் போராடித் தோல்வியைத்
தழுவினார்.
இத்தொகுதியில் அவருக்கும், அதிமுக வேட்பாளர் முருகுமாறனுக்கும் இடையே கடும்
போட்டி நிலவியது. மிக மிக சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன்
இருந்ததால் எப்படியாவது வென்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்
கடைசியில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன்
வெற்றி பெற்றார்.
திருமாவளவன் தோல்வி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியனரை மட்டுமல்லாமல் பல்வேறு
தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தேர்தல் முடிவுகள்... – பணம்தான் ரிசல்ட்...தந்தி டி.வி யின் பங்குச் சந்தை கருத்துக் கணிப்பு மோசடி !
தேர்தல் முடிவில் பாசிச ஜெயாவின் கன்டெய்னர் வெற்றி குறித்து எழுதுவதற்கு நிறைய இருக்கின்றன. இங்கே அந்த வெற்றியை தந்தி டி.வி பாண்டே கொண்டாடுவதில் உள்ள அழுகுணி ஆட்டத்தை மட்டும் பார்ப்போம்.
சுற்றுச் சூழல் என்.ஜி.ஓ அருண் கிருஷ்ணமூர்த்தியை வைத்து தந்தி டி.வி எடுத்திருக்கும் கருத்துக் கணிப்பு கிட்டத்தட்ட அப்படியே பலித்திருப்பதாக பாண்டேயும், அருணும் குதூகலிக்கிறார்கள். அநேர்மைக்கு புகழ்பெற்ற பாண்டே இந்த கணிப்பு நேர்மையாகவும், நடுநிலைமையுடனும் எடுக்கப்பட்டதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
அதிமுகவை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு ஜெயலலிதா நன்றி
அதிமுக கூட்டணி
|
131
|
திமுக கூட்டணி
|
100
|
தேமுதிக - ம.ந.கூ
|
00
|
பாமக
|
01
|
பாஜக கூட்டணி
|
00
|
நாம் தமிழர்
|
00
|
தனியார் பள்ளிகள் பென்சில் படத்துக்கு எதிராக ஏன்...? குற்றங்கள் அம்பலமானால் கோபம் வரும்தானே?
ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில், மணி நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘பென்சில்’ திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.
தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில் இறந்துபோகிறான். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கும் நிர்வாகம், போலீஸுக்கு பணம் கொடுத்து மூடி மறைத்துவிடுகிறது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் ‘பென்சில்’.
இது மட்டுமல்லாது, நீச்சல் குளத்துக்குள் விழுந்து மாணவன் இறந்தது, பேருந்து ஓட்டைக்குள் தவறி விழுந்து மாணவி இறந்தது, பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கின்றனவாம். தனியார் பள்ளிகூடங்களை அரசே பொறுபேற்று நடத்த வேண்டும்.. கல்வி கொள்ளைக்கு ஒரு முடிவு கட்ட இதுதான் ஒரே வழி
இலங்கையில் கடும் மழை: நிலச்சரிவில் சிக்கி 40 பேர் பலி...150 பேரை காணவில்லை !
கொழும்பு: வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக
இலங்கையில் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் ஏற்பட்ட
நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 150 பேர் என்ன ஆனார்கள் என
தெரியவில்லை.
இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, 19 மாவட்டங்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 68 வீடுகள் முற்றிலும் இடிந்து
தரைமட்டமாகியுள்ளன.
sri Lanka landslides killed 40 people தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கெகல்லே மாவட்டத்தில்
வெள்ளத்தோடு சேர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
புதன், 18 மே, 2016
BBC : இந்தோனேஷியா: பரவலாய் நடக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு.. பல இஸ்லாமிய நாடுகளில் இந்த கொடுமை தொடர்கிறது
இந்தோனேஷியா: பரவலாய் நடக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு
20 நிமிடங்களுக்கு முன்னர்
இந்தோனேஷியாவில்
இருக்கும் பன்னிரெண்டு வயதுக்குக் குறைவான சிறுமிகளில் பாதிக்கும்
அதிகமானவர்களுக்கு ஏதோ ஒருவகையான பெண்ணுறுப்பு சிதைப்பு நடந்திருக்கிறது.
முன்பு கணித்திருந்ததைவிட இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம்.
பெண் பருவமடைவதை கொண்டாடும் மற்றும் ஒரு சடங்காகவே இந்த பழக்கம் அங்கு பலராலும் பார்க்கப்படுகிறது.
ஆனால் இது பெண்குழந்தைகள் மீதான வன்முறை என்று வர்ணித்துள்ள ஐநா, இது நிறுத்தப்படவேண்டும் என்று குரல்கொடுத்திருக்கிறது.
இது குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித் தொகுப்பு
முன்பு கணித்திருந்ததைவிட இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம்.
பெண் பருவமடைவதை கொண்டாடும் மற்றும் ஒரு சடங்காகவே இந்த பழக்கம் அங்கு பலராலும் பார்க்கப்படுகிறது.
ஆனால் இது பெண்குழந்தைகள் மீதான வன்முறை என்று வர்ணித்துள்ள ஐநா, இது நிறுத்தப்படவேண்டும் என்று குரல்கொடுத்திருக்கிறது.
இது குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித் தொகுப்பு
பெங்களூரு பி வி ஆர் திரையரங்கில் திருட்டு விசிடியாம்....விஷால் ரெட்டி குற்றச்சாட்டு
பெங்களூரு பிவிஆர் திரையரங்கில் தமிழ் திரைப்படங்களின் திருட்டு விசிடிகள்
தயாரிக்கப்படுவதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்கம்
தயங்குவதாகவும் நடிகர் விஷால் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், திரையரங்குகளில் தான்
புதிய திரைப்படங்கள் திருட்டுத்தனமாக படம் பிடிக்கப்படுவதாக
குற்றம்சாட்டினார். பல
திரையரங்குகளில் ஆப்பரேட்டர் அறைக்குள் இருந்து
ரகசியமாக படம் பிடிப்பதாக கூறினார்.நாட்டை குட்டி சுவராக்கும் பாலியல் ( Erotic Seducing , Violence Terror ), எரோடிக் காட்சிகள் மற்றும் வன்முறை காட்சிகளை காட்டி இளையதலைமுறையை கெடுக்கும் இந்த பெரிய பட்ஜெட் மாஸ் சினிமாக்களை திருட்டு விசிடியால்தான் ஒழித்து கட்ட முடியும். அத்தனை சினிமா கீரோக்களும் கருப்பு பண முதலைகள்தான் .சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு மட்டும்தான் ஆதரவு கொடுக்கவேண்டும்
மதிமுகவிலிருந்து விலகினார் மணிமாறன் .. தென் சென்னை மாவட்ட மதிமுக செயலாளர்...
வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரது தீவிர ஆதரவாளராக செயல்பட்ட மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுக பொதுச் செயலர் வைகோவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டவர் வேளச்சேரி மாவட்ட செயலாளர் மணிமாறன். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன், மக்கள் நலக் கூட்டணியை வைகோ உருவாக்கியதில், மணிமாறனுக்கு உடன்பாட்டில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுமாறு வைகோ உத்தரவிட்டும், அதனை ஏற்க மறுத்த மணிமாறன், தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், மணிமாறன் இன்று அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, மதிமுக பொருளாளர் மாசிலாமணி தொடங்கி, பாலவாக்கம் பாலு, தூத்துக்குடி ஜோயல் வரை முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மதிமுகவில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ns7.tv/ta
ரிசர்வ் வங்கி: 570 கோடி விவகாரம் தேர்தலால் பெரிதுபடுத்தப்படுகிறது .. So வங்கி கொள்ளையர்களுக்கு நல்ல வசதிகள் செய்து தரப்படும் ?
சென்னை: கோவை ஸ்டேட் வங்கியிலிருந்து ஆந்திர வங்கிக்கு கொண்டு
செல்லப்பட்டதாக கூறப்பட்டு, தேர்தல் அதிகாரிகளிடம் சிக்கிய ரூ.570 கோடி
தொடர்பாக, தொடர்ந்து மர்மம் நீடித்தது. இது பற்றி இன்று முதன்முதலாக
ரிசர்வ் வங்கி வாயை திறந்துள்ளதுவங்கிப் பணம் என்ற போதிலும் அது
கொண்டு சென்றப்பட்ட விதத்தில் ஏராளமான சந்தேகங்கள் எழுந்தன. தேர்தல் நேரம்
என்பதால், இந்தப் பணம் யாருடையது, யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என
ஏகப்பட்ட அனுமானங்கள் தோன்றின. பத்திரிகைகளிலும் பல்விதமாக இது
விவாதிக்கப்பட்டது.இந்நிலையில், ரூ.570 கோடி ரூபாய் விவகாரம் முடிவுக்கு
வரும் வரை தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கூறி
டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஏப்ரல் 18 ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. செய்தி . இத சொல்லவா இத்தன நாலு உங்களுக்கு ???? எங்கயோ படு ஸ்ட்ராங்கா இடிக்குது ??
இஷ்ரத் ஜஹான் வழக்கை சட்டப்படியே ஊத்தி மூடிவிட மோடி.கடும் முயற்சி !
குஜராத்திலுள்ள மிர்ஸாபூர் சி.பி.ஐ. சிறப்பு
நீதிமன்றத்தில் கரையான் தின்ன விடப்பட்டிருக்கும் இஷ்ரத் ஜஹான் போலி
மோதல்கொலை வழக்கை ஒரேயடியாக ஊத்தி மூடும் சதித்தனத்தில் இறங்கியிருக்கிறது,
மோடி அரசு. இதற்காக, மும்பய்த் தாக்குதல் வழக்கில் தொடர்புடைய டேவிட்
ஹெட்லி, மைய அரசின் முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை, அத்துறையின்
முன்னாள் கீழ்நிலைச் செயலர் மணி, இப்போலி மோதல்கொலை வழக்கில்
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மைய அரசின் உளவுத் துறையின் முன்னாள் சிறப்பு
இயக்குநர் ராஜேந்தர் குமார் ஆகியோரைத் துருப்புச் சீட்டுக்களாக
இறக்கிவிட்டிருக்கிறது, அவரது அரசு.<
இந்து மதவெறி மோடி அரசால் பொய்சாட்சியாக நிறுத்தப்பட்டுள்ள டேவிட் ஹெட்லி. (கோப்புப் படம்)
அமெரிக்கச் சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக உள்ள டேவிட் ஹெட்லி
மும்பய்த் தாக்குதல் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் இந்திய
நீதிமன்றத்திற்கு அளித்த வாக்குமூலத்தில், “இஷ்ரத் ஜஹான்
பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிற்காக வேலை
செய்தவர்” எனக் கூறியதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.மதுவிலக்கு...சிறையில் இருக்கும் மாணவர் மாரிமுத்து 12ம் வகுப்பில் 971
மதுவிலக்கு போராட்டத்தில் பங்கு பெற்று இரு முறை சிறைசென்ற மாரிமுத்து 12ம் வகுப்பில் 971 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
மாரிமுத்து +2 தேர்வில் எடுத்த மதிப்பெண்<
டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியதற்காக தற்போது சிறையில்
உள்ளார். இவரது தாய் சித்தாள் வேலை செய்கிறார். படிக்கும் போதே சிறு சிறு
வேலைகளுக்கு சென்று தனகு கல்விச் செலவையும் சுமந்துள்ள மாரிமுத்து எல்லா
போராட்டத்திலும் முன்னணியாக நிற்பவர்.
மதுரவாயில் அரசு பள்ளியில் +2 படிக்கும் மாணவர் மாரிமுத்து புரட்சிகர
மாணவர் இளைஞர் முன்னணியில் சேர்ந்து மாணவர் பிரச்சினைகளுக்காக போராடும்
அவர் ஏற்கனவே பச்சையப்பா மாணவர்களின் டாஸ்மாக் மூடும் போராட்டத்தில் சிறை
சென்றவர். பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைத்து மதுக்கடைகளை
மூடுவதற்கு போராடுகிறார். மே 5 மதுரவாயல் நொளம்பூர் டாஸ்மாக் கடையை மூடும்
போராட்டத்தில் இவரும் காவல் துறையால் கடுமையாக அடிக்கப்பட்டிருந்தார்.
ஜெ அரசை துணிச்சலாக எதிர்த்த கட்சி எது ?
அவர்கள் செய்யும் பரப்புரைகளுக்காக எந்த வாக்கும்
விழப்போவதில்லை. தேர்தல் களத்தில் வேட்பாளர்களாகவும் இல்லை.
கட்சி-சாதி-பணம் இவற்றின் அடிப்படையிலான தேர்தல் முறைகளையும் அவர்கள்
ஏற்பதில்லை. ஆனால், அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் பயந்து நடுங்கும் ஜெ
அரசுக்கு எதிராக துணிச்சலான பிரச்சாரத்தை மேற் கொண்டவர்கள் அவர்கள்தான்.
அவர்கள்… “மக்கள் அதிகாரம்’ அமைப்பின் தோழர்கள். ஆண்-பெண் பேதமின்றி இந்த அமைப்பில் உள்ள எல்லோருமே தோழர்களெனவே அழைக்கப்படுகிறார்கள்.
அவர்கள்… “மக்கள் அதிகாரம்’ அமைப்பின் தோழர்கள். ஆண்-பெண் பேதமின்றி இந்த அமைப்பில் உள்ள எல்லோருமே தோழர்களெனவே அழைக்கப்படுகிறார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)