சனி, 6 ஆகஸ்ட், 2016

ஜாக்கி வாசுதேவ் இஷா யோகா.... மலையாள படம் :"வசனம் " கதைக்கும் தொடர்புகள் அதிகம்? ஸ்ரீ வித்தியா, சாருகாசன்.சுரேஷ் கோபி...



ஜி.ராமக்கிருஷ்ணன்; கபாலி திரைப்படமும் இயக்குநர் மீதான விமர்சனமும்…

theekkathir.in :ஒரு திரைப்படத்தின் வெற்றியை பொதுவாக இரண்டு அளவுகோல்களில் பொருத்திப் பார்க்கின்றனர். முதலாவது அந்த
படத்தின் வசூல், இரண்டாவது அந்தப் படத்தின் கலை, இலக்கிய, அழகியல் அம்சங்களில் காணப்படும் நேர்த்தி. பெரும்பகுதி கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குள் சென்றுவிட்ட இன்றைய திரைப்படத் துறையில் – கதை முதல் வினியோகம் வரையில் கார்ப்பரேட் வியாபாரமே ஆதிக்கம் செய்கிறது. அது பல்வேறு அம்சங்களில், படைப்பாளனை பாதிக்கிறது. வாழ்க்கையின் யதார்த்தங்களை ஒருவர் திரைக்கதையாக வடித்தாலும் தயாரிப்பாளர்கள் கிடைக்கமாட்டார்கள். படமெடுக்கப்பட்டாலும் தியேட்டர்கள் கிடைக்காது. இப்படி எத்தனையோ பிரச்சனைகள். ஒரு படத்தைப் பற்றி விமர்சிக்கும்போது இந்தப் பின்னணியையும் இணைத்தே பார்க்க வேண்டும்.

சிறுவர்களை கூட கட்டாயப்படுத்தி பிரம்மசரியம் ஏற்க வைப்பதாக ஈஷா மைய முன்னாள் ஊழியர் புகார்


ஈஷா சம்கிருதி பள்ளியில் 14 வயது சிறுவர்களை கூட கட்டாயப்படுத்தி பிரம்மசரியம் ஏற்க வைப்பதாக ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய முன்னாள் நிர்வாகி ஒருவர் பல திடுக்கிடும் புகார்களை தெரிவித்துள்ளார்.>கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது மகள்களை மூளைச்சலவை செய்து துறவறம் மேற்கொள்ள வைத்திருப்பதாகவும், தனது மகள்களை மீட்டு தரும்படி  வடவள்ளி பகுதியை சேர்ந்த முன்னாள் பேராசிரியர் காமராஜ் என்பவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.இதை தொடர்ந்து ஈஷா யோகா மையம் விதிமுறைகளை மீறி கட்டிடம் எழுப்பியது, யானை வழித்தடங்களை மறித்தது, சட்ட விரோதமாக வெளிநாட்டினரை தங்க வைத்திருப்பது உள்ளிட்ட மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்து ஆன்மீக கண்காட்சியில் சிறுபான்மையினர் மீது அவதூறு”: நடவடிக்கை எடுக்க ஜவாஹிருல்லா கோரிக்கை


மத வெறுப்புணர்வைத் தூண்டும் இந்துத்துவ கண்காட்சி அமைப்பாளர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில்,
“மீனம்பாக்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் 8வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள சில அரங்குகள் முழுக்க முழுக்க மத வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்து மதத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறும் வகையில் மட்டும் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தால் அது பல்வேறு மத நம்பிக்கைக் கொண்ட மக்களிடையே அது சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி என்ற பெயரில் நடைபெறும் இந்தக் கண்காட்சி முழுக்க முழுக்க சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வெறுப்புணர்வைத் தூண்டும் தீய நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

சசிகலா புஷ்பா அடுத்தடுத்து தரப்போகும் பேட்டிகள் தரப்போகும் தலைவலிகள் ! முகநூல் முழக்கங்கள்.

சிம்மசொப்பனமாக விளங்கிய ‪#‎MGR‬ ஐ அவர் காலத்தில் இதே 40 வயதில் MP பதவியில் அமர்ந்து விலக மாட்டேன் என்று சொல்லி எதிர்த்து புகழ் பெற்ற ‪#‎JAYALALITHA‬ போலவே - இதே தலைமை எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் காரணத்தினால் 30% அதிமுகவினர் மனதிலே அதிர்வுகளை ஏற்படுத்தும் தற்கால புரட்சித்தலைவி ‪#‎SASIKALAPUSHPA‬ வுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவுட்டுள்ளதே ...
பதவி பறிக்க முடியாது என்பதே அதிமுக வினர் ஜீரணிக்க முடியாத உண்மை இப்போது மிரட்ட கூட முடியாது என்பது ஜெயலலிதா அவர் வாழ்நாளில் கண்டிராத SHOCK . COM ..
இப்போது நடைபெற்று கொண்டு இருப்பது வேற லெவல்... சசிகலா புஷுபாவுக்கு ஆதரவு அதிமுக தாண்டி சர்வதேச கார்பரேட்ஸ் மற்றும் தேசிய கட்சிகள் என்று நீண்டு உள்ளது ..
ஜெயலலிதாவால் தாங்கொண்ணா அவமானத்தால் கூனி குறுகிய OPS & CO மற்றும் தம்பிதுரைகள் ரூம் போட்டு கொண்டு விழுந்து புரண்டு சிரிப்பதாக தகவல்கள் வேறு கசிகிறது ..
சசிகலா புஷுபா அடுத்தடுத்து தர போகும் பேட்டிகள் புகழ் பாடும் மாலன் நாராயணன்,Sumanth Raman,Kumudam Varadarajan Dinamani & CO எதிர்பாரா சேதாரங்கள் பல பல தர காத்து இருக்கிறது .  முகநூல் பதிவு: வெங்கர் ராமானுஜம் .

ஜெ, மீது சசிகலா புஷ்பா டில்லி போலீசில் புகார்

புதுடில்லி : டில்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி., திருச்சி சிவாவை தாக்கிய விவகாரம் தொடர்பாக கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பாவை கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனவும், தன்னை ஜெயலலிதா அடித்ததாகவும் சசிகலா புஷ்பா பார்லி.,யில் தெரிவித்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், தனக்கும் தனது குடும்பத்திற்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனவும் டில்லி ஐகோர்ட்டில் சசிகலா புஷ்பா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த ஐகோர்ட், சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஆசிரியர்களின் கால்களை மாணவர்கள் கழுவுவதா? கனிமொழி மாநிலங்கள் அவையில் ! 1800 ஆசிரியர்களின் காட்டுமிராண்டித்தனம் ......

சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியில் தமிழ் ஆசிரியர்களுக்குப் பாத பூஜை செய்த நிகழ்வைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் குழுத் தலைவர் கனிமொழி பிரச்னை எழுப்பினார். இது தொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை காலையில் கேள்வி நேரம் தொடங்கியதும் மத்திய மனித வளத் துறை அமைச்சகம் தொடர்புடைய கேள்விகளுக்கு அத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பதிலளிப்பதாக இருந்தது. சென்னை நிகழ்வு: இந்நிலையில், கேள்வி நேரம் தொடங்கிய போது இடைமறித்த கனிமொழி, "தினமணி' நாளிதழில் "தமிழ் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை' என்ற தலைப்பில் வெளியான புகைப்படத்துடன் கூடிய செய்தியின் பக்கத்தை அவையில் காண்பித்து குரல் எழுப்பினார்.
இதையடுத்து, அவரிடம் "என்ன பிரச்னை?' என்று அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் கேட்டார். அப்போது கனிமொழி பேசியது வருமாறு:

ஒபாமாவின் மகள் உணவு விடுதியில் பகுதி வேலை... 15-year-old சாஷா Obama has taken a summer job serving food

Sasha Obama, daughter of US President Barack Obama, has swapped the comforts of the White House for the counter of a seafood restaurant, US media report. The 15-year-old has taken a summer job serving food at the business in Martha's Vineyard, Massachusetts.விருந்தினர் விடுதி (Hotel) வேலை பார்க்கும் ‪#‎ஒபாமா‬ மகள்எங்கட அரசியல் தலைவரின்ரை பிள்ளைகள் என்றால் இந்த இடதில நினைத்தே பார்க்கமுடியாது.  அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள் நடாஷா (வயது 15) மாசாசூஷெட்டில் உள்ள பிரபல கடல் உணவு விடுதியான நான்சியில் பகுதிநேர வேலை பார்க்கினறார். அங்கு பள்ளிகளுக்கு தற்போது சம்மர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் வேலை பார்க்கின்றார்  நன்றி ..முகநூல் பதிவு

உபி:ரூ.100 லஞ்சம் கொடுக்க மறுத்த 2 பேரை அடித்து கொன்ற போலீஸ்... சரமாரியாக தாக்கிய உறவினர்கள்


உத்திரப்பிரதேச மாநிலம், மெய்ன்புரியில் 100 ரூபாய் லஞ்சம் கொடுக்க மறுத்த இருவர் அடித்துக் கொல்லப்பட்டதால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் போலீசாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை ஒன்று செங்கல் கற்களை ஏற்றி வந்த டிராக்டர், போலீசாரின் செக் போஸ்ட் தடுப்பு பலகையின் மீது மோதியது. பின்னர் டிராக்டரில் இருந்த இருவர் தப்பித்து ஓடி அருகில் இருந்த குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினர். ஆனால் 100 ரூபாய் லஞ்சம் கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பானதாகவும், அதில் இருவரை போலீசார் அடித்து கொன்றதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உடலில் காயங்கள் இருப்பதால் அவர்கள் தாக்கப்பட்டு இறந்த பின்னரே குளத்தில் வீசப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சம்மந்தப்பட்ட போலீசாரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நக்கீரன்.இன்

பகத்சிங்... மகாத்மாவின் மௌனமும்..... !! ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறு.... பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு !

மூவரின் மரணமும்.... மகாத்மாவின் மௌனமும்..... !!
ஒரு மறைக்கப்பட்ட துரோக வரலாறு........ !!
பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் தூக்கிலடப்பட்டு இன்றோடு 85 ஆண்டுகள் 4மாதங்கள் 9 நாட்கள் ஆகிவிட்டன; என்றாலும் அதன் மறைக்கப்பட்ட வரல்லற்றுப் பின்னணி என்ன என்பதை வருங்கால சந்ததிக்கு சொல்வது நமது கடமையாகிறது...... !! அவர்கள் மார்ச் 23, 1931 அன்று லாகூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இரவு 7 மணிக்கு
தூக்கிலடப்பட்டு கொல்லப்பட்டனர் !!
எத்தனையோ பேர்கள் தங்களின் குடும்பங்களை இழந்துள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் மரணத்தை முத்தமிட்டுள்ளனர். பகத்சிங், உத்தம்சிங் போன்ற எண்ணற்ற போராளிகளின் புரட்சிப் போராட்டங்களால் நிறைந்ததுதான் இந்தியப் விடுதலைப் போராட்ட வரலாறு. சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் இந்திய சுதந்திரப் போர், சௌரிசௌரா உழவர்களின் பேரெழுச்சி, சிட்டகாங் ஆயுதக் கிடங்குச் சூறையாடல், பகத்சிங், குதிராம் போஸ், உத்தம்சிங் போன்றவர்களின் புரட்சிகர சாகசங்கள் முதல், தபால்- தந்தி ஊழியர்கள் மற்றும் மாபெரும் கடற்படை எழுச்சி என்று இலட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தால் சிவந்ததுதான் இந்திய விடுதலைப் போராட்டப் பாதை; ஆனால், அதையெல்லாம் பின்னிருத்தி விட்டு; மகாத்மா என்று சொல்லிக்குள்ளும் மிஸ்டர் காந்தி மட்டுமே வெற்றி வலம் வந்ததேன் என்று நம்மை நாமே ஒரு நாளாவது கேள்வியாக நம் மனதிற்குள் கேட்டிருப்போமா ?

வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்

Vietnam Veedu Sundaram passes awayசென்னை: பழம்பெரும் திரைப்பட இயக்குனர் வியட்நாம்வீடு சுந்தரம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 72.
1970 ஆண்டு வியட்நாம் வீடு படத்தின் மூலம் தமிழ்திரையுலகில் இயக்குனராக நுழைந்தார். அவருக்கு வயது 72. வியட்நாம் வீடு சுந்தரம், எம்.ஜி.ஆர்., சிவாஜி, மற்றும் முத்துராமன், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.

பழம்பெரும் திரைப்பட நடிகர் வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவால் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. 1970-ம் ஆண்டு வியட்நாம் வீடு என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் சுந்தரம் அறிமுகம் ஆனார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் உள்ளிட்ட பரிமாணங்களை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறுமையுடன் காட்சியளிக்கும் Torrentz.eu இணையதளம்


டைட்டிலில் இருக்கும் ‘இனியும் நெட் உலகத்தில் வாழ வேண்டுமா?’ என்ற புலம்பல் மன உணர்வை ஒவ்வொரு நெட்டிசன்களும் தங்கள் விரல்களால், கீபோர்ட் மூலம் டிஜிட்டல் உணர்வாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். ஏன் இந்த பதற்றம்?
ஒவ்வொரு வெப்சைட்டாக டோரண்ட்களைத் தேடிச் செல்ல கஷ்டப்படும் யூசர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மெட்டா-சர்ச் என்ஜின் Torrentz.eu. குறிப்பிட்ட டோரண்டை தேடும்போது இணையத்தில் கிடக்கும் எண்ணற்ற தகவல்கள் அனைத்தையும் கொண்டுவந்து திரையில் கொட்டாமல், நம்பகத்தன்மையான டோரண்ட்களை மட்டும் தனியாக பிரித்து யூசர்களுக்குக் கொடுக்கும் வேலையை, 2003இல் தொடங்கி, கடந்த 13 வருடங்களாக செய்துவந்த Torrentz.eu தற்போது விடை பெற்றுவிட்டது.

2 ஜி வழக்கில் பலிகடா ஆக்கப்பட்டேன்: ஆ. ராசா.. சிதம்பரம் பிரணாப் முகர்ஜியால் வடிவமைக்கப்பட்டு மன்மோகன் சிங்...



சென்னை.ஆக,4 – 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், தான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக, திமுக தலைவர்களில் ஒருவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஆ. ராசா கூறியுள்ளார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக ராசா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட னர். இம்முறைகேடு தொடர்பான வழக்கு, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது இந்நிலையில், ஆ. ராசா தனது தரப்பு நியாயங்கள் குறித்து “In My Defense” என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகம் வரும் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்த புத்தகத்தில், “ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு, மன்மோகனால் அங்கீகரிக்கப்பட்ட முடிவுக்கு, தான் பலிகடா ஆக்கப்பட்டேன்;

570 கோடி யாருக்கு சொந்தம்? சி.பி.ஐ.,யிடம் தி.மு.க., நேரில் மனு... அதிமுக பாஜக சிபி ஐ எல்லாம் ஒண்ணு.. புரியாதவன் வாயில...

தமிழக சட்டசபை தேர்தலின் போது, கன்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட, 570 கோடி ரூபாய் பணம் குறித்து, மேலும் சில சந்தேகங்களை எழுப்பி, அதுகுறித்து முழுமையாக விசாரிக்க உத்தரவிடும்படி, சி.பி.ஐ., இயக்குனரிடம், தி.மு.க., நேரில் மனு அளித்துள்ளது. தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,க்களான டி.கே. எஸ்.இளங்கோவனும், ஆர்.எஸ். பாரதியும், நேற்று டில்லியில், சி.பி.ஐ., அலுவலகத்திற்கு வந்தனர். சி.பி.ஐ., இயக்குனர் அனில்குமார் சின்காவை நேரில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.  
அன்பு - தஞ்சை,இந்தியா 570 கோடி ரூபாய் மகாராணிக்கு தான் சொந்தம். இதில் என்ன சந்தேகம் உள்ளது? பிடிபடும்போது இன்சூரன்ஸ் எடுக்கப்படவில்லை. ரெண்டு மணி நேரத்திற்குள், வங்கி மேலதிகாரிகள் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் ரெண்டு நாட்கள் கழித்து தொடர்பு கொண்டார்கள். கண்டிப்பாக பணத்துடன் போலீஸ் செல்ல வேண்டும். ஆனால், ஒரே ஒரு காவல் போலீஸ் கைலியில் போலீஸ் யூனிபோர்ம் இல்லாமல் இருந்தார். பணம் இரும்பு பெட்டியில் செல்லவேண்டிய விதியை மீறி மரப்பெட்டியில் பயணித்தது. மீறப்பட்ட வங்கி விதிகள் ஒன்றா ரெண்டா? எத்தனை எத்தனை. தனி நபரின் பணத்திற்கு, அவரின் விதிகள் மட்டுமே. இருந்தாலும், சிபிஐ கண்டுகொள்ளாது. இதனால் தான் ஒருநாளும் இந்தியா உருப்படாது

ஆர் எஸ் எஸ் ஆசிரியர்களின் கால்களை கழுவும் மாணவ மாணவியர் Child Abuse by (RSS) S.Gurumurthi, R.Rajalakshmi....

ஆர். எஸ். எஸ். அமைப்பின் முக்கியஸ்தரான எஸ்.குருமூர்த்தி, பாஜவைச் சேர்ந்த ஆர்.ராஜலட்சுமி ஆகியோர் ஏற்பாடு செய்துள்ள இந்து ஆன்மீக கண்காட்சி சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில்
நடைபெற்றுவருகிறது.
இதில் வியாழக்கிழமை ‘மாத்ரு – பித்ரு வந்தனம் – ஆச்சார்ய வந்தனம்’ என்று தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இந்து ஆன்மிகத்தில் புதைந்துள்ள 6 நற்பண்புகளில் ஒன்றான ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களை வணங்குதல் என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை செய்தனர். அமிர்தா, பத்மா சேஷாத்ரி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 1008 பேர் இதில் பங்கேற்றனர். c

சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரணம்: அமெரிக்கா செல்ல டெல்லி போலீஸ் முடிவு

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரணம் குறித்த கூடுதல் தகவல்களை பெற டெல்லி காவல் துறையினர் அமெரிக்கா செல்ல உள்ளனர்.கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் உள்பாகங்களை எஃப்.பி.ஐ. ஆய்வுக்கு டெல்லி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். அதனை ஆய்வு செய்த எஃப்.பி.ஐ. அதிகாரிகள் சுனந்தா புஷ்கரின் உடலில் விஷம் கலந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று அறிக்கை அளித்தனர். இதனையடுத்து சுனந்தா எவ்வாறு இறந்திருக்கலாம் என்று கூடுதல் தகவல்களை அறிய அமெரிக்கா செல்ல டெல்லி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
.nakkheeran.in/

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பா எப்போது சென்னைக்கு வந்தாலும் கைது செய்யப்படுவார்?

சசிகலா புஷ்பா அதிமுக தலைமைக்கு எதிராக காட்டமான குற்றச்சாட்டுகளைக் கூறினார். ஒரு கட்சியின் எம்பி அதன் தலைமைக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகள் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்க கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. டெல்லியில் தங்கியிருந்தாலும் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குப் பிறகு அவர் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை, மாநிலங்களவைக்கும் வரவில்லை. அவரை யாரும் தொடர்பு கொள்ளவும் முடியாத நிலையில் , இன்று நெல்லை மாநகர காவல் ஆணையர் சிவஞானத்திடம் சாந்தி நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் சசிகலா புஷ்பா மீது புகார் பண மோசடி புகார் ஒன்றை கொடுத்துள்ளார் “ நெடுஞ்சாலைத்துறையில் காண்ட்ராக்ட் பெற்றுத் தருவதாக கூறி ரூ. 20 லட்சம் பணம் பெற்று தன்னிடம் மோசடி செய்து விட்டதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார் ராஜேஷ். அது போல தமிழக முதல்வரை இழிவு செய்த சசிகலா புஷ்பா மீது அவதூறு வழக்கு பதிந்து அவரை கைது செய்ய வேண்டும் என்று திருச்சி காவல் ஆணையரிடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.  ஐ ஏ எஸ் அதிகாரி சந்திரலேகாவுக்கு அசிட் அடித்த ஜெயா இந்த சசிகலாவுக்கு என்ன எல்லாம் அடிக்க போகிறாரோ?

குஜராத் தலித்துகள் ஒன்றிணையும் விடுதலைக்கான பேரணி.. அடுத்த கட்ட போராட்டம்

குஜராத்தில் தொடரும் தங்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து, அகமதாபாத்திலிருந்து உனா வரையான 10 நாள் பேரணியை இன்று தலித் மக்கள் தொடங்கினர். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான தலித் மக்கள் பங்கேற்றனர்.
‘விடுதலைக்கான பேரணி’ என்ற பெயரிட்டுள்ள இந்தப் பேரணியை தலித்துகளை ஒருங்கிணைக்கும் வகையில் நடத்துவதாக ஜிக்னேஷ் மெவானி தெரிவித்தார். சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ஆம் நாள் முடியும் இந்தப் பேரணி மூலம், இனியும் தங்கள் மீதான தாக்குதல்களைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதை உணர்த்துவதற்காக ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார்.  /thetimestamil.com

மாநிலங்களை கையேந்தும் நிலைக்குத் தாழ்த்திவிடாதீர்”: நாடாளுமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படுகையில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கூறினார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதனன்று மாநிலங்களவையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு (ஜிஎஸ்டி) வகை செய்யும் விதத்தில் அரசமைப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியது:
இப்போது கொண்டுவந்திருக்கிற இந்தச் சட்டத்திருத்தம் அரசமைப்புச் சட்டத்தில் மிகவும் முக்கியமான திருத்தம். எனவே இதனை ஆழ்ந்த கவனத்துடன் பரிசீலித்திட வேண்டும். இதுதொடர்பாக ஐந்து அம்சங்களை உங்கள் முன் வைக்கிறேன்.

சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்பி சசிகலா புஷ்பா, நாடாளுமன்றம் சென்றுவர கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, எம்பி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனையடுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், தனக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்துள்ள உயிர் வாழும் உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.கே.பதக், மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா நாடாளுமன்றம் சென்றுவர வாகனப் பாதுகாப்பு உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தமிழ் முரசுக்கு எம்ஜியார் அளித்த பேட்டி : திருமதி ஜெயலலிதா ஓர் பச்சோந்தி (திருமதி?) யாரும் சொல்லவே இல்லையே?

ஜெயலலிதாவின் பிரச்னை வேறு ரூபத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது .. இங்கே சின்ன பசங்க ரேஞ்சில் சசி புஷ்பா லஞ்சம் கேட்டார் ., லாலிபாப் கேட்டார் என்று அதிமுகவினர் பரிதாப காமெடியில் இறங்கி உள்ளார்கள் ..
நெடுஞ்சாலைத்துறையில் காண்ட்ராக் பெறுவதற்காக முயற்சி செய்தேன். சசிகலா புஷ்பா எம்.பி. என்னுடைய சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரிடம் தகவலலை சொன்னேன். பிறகு தூத்துக்குடியில் உள்ள பி அண்ட் டி காலணியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றேன்.
நெடுஞ்சாலைத்துறையில் 2 கோடி காண்ட்ராக்ட் எடுப்பதற்காக 10 சதவிகிதம் பேசினார். அதற்குரிய 20 லட்சம் தொகையை 2015ல் மே மற்றும் அடுத்த 6 மாதற்குள்ளாக இரண்டு தவணையாக 20 லட்சம் கொடுத்தேன்.
செம்டம்பர் மாதத்திற்கு பின்னர் காண்ட்ராக் கிடைக்கும் என்று சொன்னவர், அதற்கு ஒருவாரத்திற்கு முன்மீதி பணத்தை கமிஷன் பணத்தை செட்டில் செய்ய வேண்டும் என்று சொன்னதால்தான் நான் இரண்டாவது தவணையை கொடுத்தேன். 

பிரான்ஸ் வீதிகளில் ஒயினை கொட்டி போராட்டம்

பாரிஸ்: உள்நாட்டு தேவைக்காக ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒயினை மலிவான விலையில் பிரான்ஸ் இறக்குமதி செய்து வருகிறது. இதனை உள்நாட்டு மது உற்பத்தியாளர்களும் சில போராட்டக்குழுவினரும் எதிர்த்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் ஸ்பெயின் நாட்டில் இருந்து சுமார் 4 ஆயிரம் கோடி லிட்டர் ஒயின் வகைகளை பிரான்ஸ் நாட்டு மது வியாபாரிகள் இறக்குமதி செய்துள்ளனர். இதனால், கொதிப்படைந்த போராட்டக்காரர்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஸ்பெயின் - பிரான்ஸ் எல்லைப்பகுதி வழியாக ஒயினை ஏற்றிவந்த 5 டேங்கர் லாரிகளை வழிமறித்து சிறைபிடித்தனர். அவற்றில் இருந்த சுமார் ஒரு லட்சம் பாட்டில் அளவிலான ஒயினை வீதியில் கொட்டி நாசப்படுத்தினர்.

ஜெயலலிதாவின் பாசிச அடக்கு முறைக்கு எதிராகத்தான் சசிகலா புஷ்பா போர்க்கொடி தூக்கினார் ! ஜனநாயக சக்திகள் துணை நிற்கவேண்டும் !

சசிகலா புஷ்பா இன்று ஒரு முக்கியமான வரலாற்று திருப்பத்தில் இருக்கிறார். பாசிச குணாம்சமும் பார்ப்பனீய பின்பலமும் உள்ள ஒருவர் தமிழகத்தின் முதல்வர் மட்டும் அல்ல மிகவும் பணபலம் செல்வாக்கு எல்லாம் பெற்று அசைக்க முடியாத ஒரு சர்வாதிகாரியாக இருக்கிறார். பெரும் தலைவர்களும் ஊடகங்களும் அவரின் காலடியில் விழுந்து வணங்கி அடிமைகளாகி விட்டனர்.
அப்படிப்பட்ட ஜெயலலிதாவை அவரது கட்சியிலேயே ஒரு பெண் பாராளுமன்ற உறுப்பினர் எதற்கும் துணிந்து எதிர்குரல் கொடுக்கிறார் என்றால் நிச்சயம் ஜனநாயக சக்திகள் எல்லாம் அவருக்கு உறுதுணையாக நிற்கவேண்டும்.
ஆனால் நடப்பது என்ன? சசிகலா புஷ்பாவின் அந்தரங்க படங்கள் என்று சிலவற்றை பிரசுரித்து அவரது காரக்டரை சிதைக்கும் முயற்சியில் ஜெயலலிதாவை குஷ்ப்படுத்துகின்றனர்
காரணம் எதுவாக இருந்தாலும் சசிகலா புஷ்பா ஜெயலலிதாவின் அடக்குமுறை பாசிசத்துக்கு எதிராகத்தான் போர்க்கொடி தூக்கி உள்ளார்.
அதற்காகவே அவரை பாராட்டவேண்டும்.

சசி புஷ்பாவை எதிர்ப்பவர்கள் அவரை பெண் என்ற ஒரு காரணத்துக்காகவும் எதிர்க்கிறார்கள் என்பதை இங்கு ஆணித்தரமாக கூறி வைக்க விரும்புகிறேன்.
ஜெயலலிதாவிடம் இல்லாத கவர்ச்சி படங்களா? வேறு தலைவர்களிடம் இல்லாத கிசு கிசு கதைகளா?
அப்படி என்ன தவறு சசிகலா புஷ்பாவிடம் கண்டு விட்டீர்கள்?
அடிமை மனிதர்களுக்கு ஒருவர் அடிமைத்தளையை உடைந்து கொண்டு வெளியேறுவதை காண்கையில் ஒரு பொறாமை ஏற்படும் சிலருக்கு ஏற்பட்டிருப்பது அதுதான்.

சசி புஷ்பாவின் உயிருக்கு நிச்சயம் ஆபத்து இருக்கிறது.... உறவினர்கள் மீதும் டார்ச்சர் தொடர்கிறது !

தூத்துக்குடி அருகே உள்ள அடையல் என்ற கிராமத்தைச் சேர்ந்த சசிகலா புஷ்பா அதிமுக-வின் தீவிர விசுவாசி. குறுகிய காலத்தில் அரசியலில் வேகமாக வளர்ந்தவர்களில் சசிகலா புஷ்பாவும் ஒருவர். தூத்துக்குடி மாநகராட்சி மேயர், அதிமுக-வின் மாநில மகளிரணி தலைவி, மாநிலங்களவை உறுப்பினர் என்று வளர்ந்து கொண்டே வந்தவர் சசிகலா புஷ்பா. டெல்லி விமான நிலையத்தில், திமுக எம்.பி. திருச்சி சிவாவை திடீரென கன்னத்தில் அறைந்தார் சசிகலா புஷ்பா. இதையடுத்து, போயஸ் கார்டனுக்கு விளக்கம் கேட்க அழைக்கப்பட்டார். திருச்சி சிவாவை அறைந்ததற்காகத்தான் தன்னைப் பாராட்ட முதல்வர் வரச் சொல்கிறார் என்ற சந்தோஷத்தில் போனவருக்கு, அங்கு நிலைமை தலைகீழாக இருந்தது. உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக தரப்பு வலியுறுத்த, டெல்லி மாநிலங்களவை வரை அமைதியாக போனவர், திடீரென புயல் அடிக்க ஆரம்பித்தார்.

ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் 32 தமிழர்கள் கைது.. செம்மரங்களை வெட்ட வந்தார்களாம்

ரேணிகுண்டா: ஆந்திரா மாநிலத்தில் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் 32 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செம்மரங்களை வெட்டசென்றதாக கூறி 32 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து ரேணிகுண்டா சென்ற 32 பேரும் கைது செய்யப்பட்டனர். ரேணி குண்டா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதான 32 பேரும் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கைதானவர்களை பத்து பேராக திருப்பதி, புத்தூர், ரேணிகுண்டா என 3 இடங்களில் தனித்தனியாக விசாரனை நடந்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது. 32 பேர் மீதும் 6 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளதுஆந்திர போலீசார்dinakaran.com

தமிழக காங்கிரஸ் குழப்பங்களுக்கு முகுல் வாஸ்னிக் காரணம் தொலைபேசியே எடுப்பதில்லை.. இளங்கோவன்

தமிழக காங்கிரஸ் தலைவர் நியமனம் செய்யப்படாததற்கு, மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தான் காரணம்,'' என, முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறினார். ஐம்பது நாட்களுக்கு முன், தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து, இளங்கோவன் விலகினார். அதன்பின் சென்னை, சத்திய மூர்த்தி பவன், தொண்டர்கள் வருகையில்லா மல் வெறிச்சோடிக் கிடந்தது. >ஆலோசனை:
இந்நிலையில், நேற்று காலை, இளங்கோவன், சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அது தெரிந்ததும், நிர்வாகிகளும், தொண்டர்களும் வந்தனர். அவர்களுடன், கட்சி நிலைமை குறித்துஆலோசித்தார்.பின், அவர் அளித்த பேட்டி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவில், காங்கிரஸ் மற்றும் தி.மு.க., முன்வைத்த சில திருத்தங்களை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. எனவே, அந்த மசோதாவை ஆதரித்தோம். சிதம்பரம் சாத்தான் சத்தம் போடாமல் வேலை பார்க்கிறது.

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

டயட் கோலா டயட் பெப்சி... மூளைக்கு தவறான உத்தரவுகளை கொடுத்து தவறான ஹார்மோன்களை சுரக்க செய்து...

நியாண்டர் செல்வம்நியாண்டர் செல்வம்: டயட் கோக், டயட் பெப்ஸி போன்றவற்றில் சர்க்கரை இல்லை, பூஜ்யம் கலோரி…ஆனால் அவற்றை குடித்தால் என்ன ஆகும்?
இப்படி செயற்கை சுவையூட்டிகள் (ஸ்ப்ளெண்டா, ஆஸ்பர்டாமி, ஸ்டீவியா) ஆகியவை சர்க்கரை உள்ள நார்மல் பானங்களை விட அதீத அளவில் ரத்த சர்க்கரை அளவுகளையும், எடையையும் ஏற்றுவதாக தெரியவந்துள்ளது. 90களில் இது குறித்த பெருத்த சர்ச்சை எழுந்தது. டயட் கோக், டயட் பெப்ஸி விற்பனை இம்மாதிரி சர்ச்சைகளால் பாதிப்படைவதை கண்ட கம்பனிகள் கோபமடைந்தன. செயற்கை சுவையூட்டிகளுக்கும், எடை அதிகரிப்புக்கும் இடையே உள்ள தொடர்பை சில ஆய்வுகள் ஆராய்ந்தன. சிலவற்றில் செயற்கை சுவையூட்டிகளால் எடை ஏறுகிறது எனவும், சிலவற்றில் இல்லை எனவும் வந்தன.

யூனியன் பிரதேசத்தில் அதிகாரம் பற்றி நீதிமன்றத்தின் தீர்ப்பு : அமைச்சரை விட கவர்னருக்கே அதிகாரம்!

The Delhi High Court on Thursday told the Aam Aadmi Party (AAP) ... The Delhi government has said it would appeal against the Delhi HC ruling in the Supreme Court. ... TOI Features · Opinion · Infographics · Cartoons · Polls · Campaigns .... that make the LG the administrative head of a Union Territory.
யூனியன் பிரதேசங்களில் யாருக்கு அதிக அதிகாரம் என்பது பற்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல என்று டெல்லி கவர்னர் நஜீப் ஜங் தெரிவித்துள்ளார்.  : யூனியன் பிரதேசம் என்பதால் முதல்-அமைச்சரை விட கவர்னருக்கு அதிக அதிகாரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில், டெல்லியில் முதல்-அமைச்சரை விட கவர்னருக்கே அதிக அதிகாரம் இருக்கிறது. அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

அங்கு போகாதே! அது அவர்களின் இடம்! பாண்டிச்சேரி பல்கலைகழகத்தின் சாதி ஒடுக்குமறை.. நேரடி அனுபவம்

thetimestamil.com ;அருணா ஸ்ரீ :இது தில்லி பெண்ணைப் பற்றியோ கேரளப் பெண்ணைப் பற்றியோ அல்ல. பொதுவெளியில் களையெடுக்க வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சனை. அதிலும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் கவனிக்க வேண்டிய விசயம்.
இன்று எங்கு பார்த்தாலும் தலித் மக்களின் வாழ்வு சார்ந்த பிரச்சனைகளையும் சவால்களையும் முன்னெடுத்து வலைத்தளங்களில் வாதிடுகிறோம். உயிர்களின் மதிப்பு கூட ஜாதி அடிப்படையில் தான் மதிப்பிடப்படுகிறது.
எங்கும் தலைவிரித்தாடும் இந்த பேயானது , கல்வி மையங்களிலும் ஆடும் ஆட்டம் ஆரம்பக் கட்டத்திலே தடுக்க வேண்டிய ஒன்று..
* சுருக்கமாக விவரிக்கிறேன்*
புதுவை பல்கலைக்கழத்தில் , ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்புக்கான பாடத்திட்டத்தில் ( course structure of 5 year integrated M .Sc) இந்த வருடம் ஒரு சிறிய புகுத்தல் . 5 வருடத்திற்குள் ஆங்கிலம் தவிர்த்து ஏதேனும் ஒரு மொழியைக் கட்டாயப் பாடமாக தேர்வு செய்து முடித்திருத்தல் வேண்டும் ( it is mandatory to finish any language course excluding english within 5 years )

ஆர்எஸ்எஸ் சதித்திட்டங்களை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில்... இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு !

theekkathir.in :புதுதில்லி, ஆக. 4 – ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகங்களில் நிகழ்த்தப்பட்ட ஜனநாயக படுகொலை போன்று பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை நடத்திட ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கையை அனுமதிக்கக்கூடாது என்று இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய நிர்வாகக்குழு வலியுறுத்தியுள்ளது.
பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை சார்பாக வைடர்ஸ்டேன்ட் என்ற ஆண்டு பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது. இப்பத்திரிகையில் சில கட்டுரைகள் மத்திய அரசாங்கத்தை விமர்சிக்கும் உள்ளடக்கம் இருப்பதாக கூறி பாஜக மற்றும் ஏவிபிவியினர் எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகை பிரதிகளை தீ வைத்து எரித்துள்ளனர்.

2006 இல் காங்கிரசுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதை வாசன்தான் தடுத்தார்.. கலைஞர் தயாராகத்தான் இருந்தார்!

பரபரப்பாக பேசப்பட்டுவந்த தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி காலியிடம் குறித்த செய்தி இன்று பத்தோடு பதினொன்று என்றாகிவிட்டது. ஒருவேளை, தலைவர் இல்லாத நேரங்களில்தான் தமிழகத்தில் காங்கிரஸ் நன்றாக செயல்படுகிறது என காங்கிரஸ் மேலிடம் கருதுகிறதோ என்னவோ, தலைவர் பதவிக்கு ஆளை நியமிக்கும் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸில் அடிக்கடி கலகக் குரல் எழுப்பி வரும் அதன் விவசாயப்பிரிவு மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜனை நாகர்கோவிலில் சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.
தொடர்ந்து காங்கிரஸில் குழப்பம் நீடிக்க என்ன காரணம்?
காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர்கள் தான் முழு குழப்பத்திற்கும் காரணமே. காமராஜர் காலத்துல அந்தப் பதவி கிடையாது, தலைவருக்குத் தான் முழு அதிகாரத்தையும் கொடுத்திருந்தாங்க. ஆனா இப்படி பொறுப்பாளர் நியமிக்கப்பட்டதனால், இவங்க தான் தமிழ்நாடு காங்கிரஸ்னு நினைச்சிக்கிட்டு இப்போ, இங்க உள்ள சிலர் இந்தியிலேயும், இங்கிலீஷ்லயும் பேசி அவங்கள்ட்ட நல்லபேரை எடுத்து வச்சிருக்காங்க.

சசிகலா புஷ்பா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.. உயர் பாதுகாப்பு கோரி..

டெல்லி: போலீஸ் பாதுகாப்பு கோரி எம்.பி.சசிகலா புஷ்பா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என தகவல் தெரியவந்துள்ளது.தினகரன்.காம்

கிரண் பேடியுடன், முதல்வர் மோதலா?

முன்னாள் குற்றப் பழங்குடிகள், கைதேர்ந்த கொலைக் குற்றவாளிகள்”:என்று திருவாய் மொழிந்த  கிரண் பேடி நிச்சயம் ஒரு இந்துத்வா மனுவாதிதன். புதுச்சேரிக்கு உள்ள  பிரெஞ்சு  மற்றும் பல கலாசார மாண்புகள் பற்றி எதுவம் தெரியாமலேயே வெண்கல கடை யானை போல செயல்படுகிரரா?

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருப்பவர் கிரண் பேடி. தனது பொறுப்பை ஏற்றவுடன் சுகாதாரம், சுற்றுச்சூழல் தூய்மை போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்தார். பல இடங்களில் நேரடி விசிட் செய்து, தானே முன்னின்றும் சுற்றுச்சூழல் மாசை குறைக்க முயற்சித்தார். போக்குவரத்து நெரிசல் குறைப்பு, நிர்வாகத்தில் தூய்மை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறார். இவரின் செயல்பாடுகள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுவர இது, முதல்வர் நாராயணசாமியின் செல்வாக்கைக் குறைக்கிறது என்ற பேச்சு பரவலாக புதுச்சேரியில் ஒலிக்கிறது. இதனால் துணைநிலை ஆளுநரிடம் மோதல்போக்கை முதல்வர் கடைப்பிடிப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுகின்றன. இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியுடன் பிரச்னையில்லை என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சாரு நிவேதா : தொலைகாட்சி விவாதங்கள்.. ஒரு காப்பி கூட இலவசமாக தரமாட்டார்கள்

பொதுவாக நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்புவதில்லை.  காரணம், நமக்கு ஹலோ சொல்வதற்குக் கூட தகுதி இல்லாத மொண்ணைகளோடு நாம் சரிக்கு சரியாக விவாதிப்பது பன்றிகளோடு மல்யுத்தம் செய்வதற்குச் சமம்.  இருந்தாலும் கலந்து கொள்வதற்குக் காரணம், நம்முடைய கருத்து லட்சக் கணக்கான பேரைச் சென்றடைய ஒரு வாய்ப்பு இருக்கிறதே என்பதுதான்.  புகழ் ஆசை கிடையாது.  எனக்குப் புகழ் பிடிக்காது.  புகழால் ஒரு காப்பி கூட இலவசமாகக் கிடைக்காது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பாததன் இன்னொரு முக்கிய காரணம், ஐந்து மணி நேரம் வெட்டியாகப் போய் விடும்.  அந்த ஐந்து மணி நேரத்தில் எவ்வளவோ படிக்கலாம்; எழுதலாம்.  நேற்று நியூஸ் 7 சேனலில் ஜக்கி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்த போது சம்மதம் தெரிவித்தேன். 

சுவாதி 14 சிம் கார்டுகள் வைத்திருந்தார்.... இஸ்லாம் மதம் மாறி நோன்பும் இருந்தார்.. மூடி மறைக்கும் அவாள் அதிகாரம்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராம்குமார் குற்றவாளி என ஆரம்பத்தில் இருந்தே கூறிவரும் ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் புதிதுபுதிதாக பல்வேறு குற்றாச்சாட்டுகளை வைத்து வருகிறார்.>தற்போது, சுவாதி 14 சிம்கார்டுகள் பயன்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் அவர் பயன்படுத்திய 14 சிம்கார்டுகள் மற்றும் லேப்டாப் குறித்த தகவல்கள் எங்கே என கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த கொலை வழக்கை விரைந்து முடிக்க நீதித் துறையும், காவல்துறையும் துணைக்கு அழைப்பதாக குற்றம்சாட்டிய அவர், ராம்குமார் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க தேவையான தகவல்களை தான் திரட்டி வருவதாக கூறினார். சுவாதி 14 சிம்கார்டுகள் பயன்படுத்தியதாக வழக்கறிஞர் ராமராஜ் கூறியது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வெப்துனியா.com

ஆடிப்பெருக்கு டாஸ்மாக் விற்பன 400 கோடி எகிறியது .. குரு பெயர்ச்சியினால் இந்த வருமானம் குறைவாம் ...

சேலம்:தமிழகத்தில் நேற்று முன்தினம், ஆடிப்பெருக்கு அன்று, ஒரே நாளில், 480 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. அதேவேளை, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், விற்பனை குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் தற்போது உள்ள, 6,323 டாஸ்மாக் கடைகளில், தினமும் மது விற்பனை, 62 கோடி ரூபாய்க்கும், ஞாயிற்றுக் கிழமைகளில், 90 முதல், 110 கோடி ரூபாய் வரையிலும் நடப்பது வழக்கம். அதுவே தீபாவளி, பொங்கல் பண்டிகை நாளில், 500 கோடி ரூபாயை தாண்டும்.
ஆடி 18ம் பெருக்கு நாளில், வழக்கமாக மது விற்பனை அதிகம் இருக்கும். ஆனால், நேற்று முன்தினம், அமாவாசை, குரு பெயர்ச்சியும் சேர்ந்து கொண்டாடப்பட்டதால், சைவ உணவுகளையே அதிகம் பேர் சாப்பிட்டனர்.இதன் காரணமாக, டாஸ்மாக்கில் எதிர்பார்த்த மது விற்பனை இல்லை. நேற்று முன்தினம் மட்டும், 480 கோடி ரூபாய்க்கு, தமிழகத்தில் மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டில், ஆடி 18ம் பெருக்கு பண்டிகை நாளில், 550 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை நடந்தது. நடப்பாண்டில், 70 கோடி ரூபாய் குறைந்துள்ளது.

சசிகலா புஷ்பா எம்பியின் கணவர், மகன் முன்ஜாமீன் கோரி மனு... கஞ்சா. ஹிரோயன் , கொலை. வழிப்பறி எல்லா கேசும் வரும்...

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்பியின் கணவர் மற்றும் மகன் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை வரும் 8-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. திமுக எம்பி திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்த பிரச்சனையில் அதிமுகவில் இருந்து எம்பி சசிகலா புஷ்பா சமீபத்தில் நீக்கப்பட்டார். இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் கணவர் டி.லிங்கேஸ்வர திலகன்(54), மகன் எல்.பிரதீப் ராஜா(27) ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சசிகலா புஷ்பா எம்பி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் அரசியல் ரீதியாக சிலருடன் பகை, விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாங்கள் யாரையோ அவதூறாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக எங்கள் மீது சென்னை அண்ணாநகர் போலீஸார் இதச 294(பி), 323, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சுவாதி.. நவீனா... இரண்டுமே ஆணவ கொலை? ஒரு காலும் ஒரு கையும் இல்லாத செந்தில் கொலை.....

தன்னை காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவளுடைய தம்பி தங்கையை ஒரு அறையில் தள்ளி கதவை பூட்டிவிட்டு தான் கொண்டு வந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டு தான் காதலித்த பெண்ணை பலாத்காரமாய் இறுக்கி பிடித்து அவள் மீதும் தீ வைத்த பலசாலி ஆண் யார் தெரியுமா?
ஒரு மாற்று திறனாளி. வலது கையும், வலது காலும் இல்லாத இளைஞன். அதுக்கூட இச்சம்பவம் தொட ர்பானதுதான். ஒரு வருடத்திற்கு முன்பு பஸ் டிரைவராக இருந்த அந்த இளைஞனின் வண்டியில் படிக்கச் செல்லும் மாணவியாக நவீனா இருந்திருக்கிறாள். அவளை ஒருதலைபட்சமாக காதலித்த செந்தில் மீது அப்பெண்ணின் தாய்மாமன் கண்டித்தும் அவன் தொடர்ந்து அப்பெண்ணை காதலித்தான் என்று அவனுடைய கை காலை வெட்டியதாக அவனே புகார் கொடுத்தான். ஆனால் குடிப்போதையில் தண்டவாளத்தில் கிடந்ததாகவும் அப்போது ட்ரைன் ஏறியதில் கை கால் போனதாகவும் கூறி செந்தில் புகார் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

உத்தர பிரதேஷ்: காங்கிரஸ் மீண்டும் அதிரடி ஆரம்பம் ... மோடியில் தொகுதியில் புயல் கிளப்பிய சோனியா!


Sonia takes battle to PM Modi's citadel: Benaras to Bulandshahr - battleground UP உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்குக் கைகொடுக்க, கடைசி பிரம்மாஸ்திரமாகக் களமிறக்கப்படுகிறார் பிரியங்கா காந்தி. உபி தேர்தல் பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டிருப்பது, காங்கிரஸ் கட்சியினருக்குப் புது உற்சாகத்தைத் தந்திருக்கிறது. ஆனால், இந்த வியூகம் எந்த அளவுக்கு எடுபடும்? உபியில் சுமார் 40 வருடங்கள் ஆட்சி செய்த காங்கிரஸ், இன்றைக்கு அம்மாநிலத்தில் ஆட்சியமைக்கும் அளவுக்குப் பலத்துடன் இல்லை. இதுபோன்ற சமயங்களில் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் களமிறக்குவது, காங்கிரஸுக்குப் புதிய விஷயமல்ல. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி வரிசையில் ராகுல் காந்தி திடீர் என நுழைந்தபோது எதிர்காலப் பிரதமராகப் பேசப்பட்டார். 2007-ல் தேசியப் பொதுச் செயலாளராகவும், 2013-ல் காங்கிரஸின் துணைத் தலைவர் பதவியிலும் அமர்த்தப்பட்டார். எனினும், எதிர்பார்த்ததுபோல் ராகுலின் மகிமை எடுபடவில்லை.

உ.பி: தாயும் மகளும் தந்தைக்கு முன்பே வன்புணர்வு ... தேசிய நெடுஞ்சாலையில்... மருத்துவ மனையில்

நடந்த சமபவத்தின் போது அந்த கொடூரர்கள், மருதுவர்கள், காவல்துறையினர் நடந்துகொண்டதை அந்த தனதி விவரித்துள்ளார். உத்திரபிரதேச தேசிய நெடுஞ்சாலை என்.ஹெச் 91-ல் சென்று கொண்டிருந்தபோது அந்த முகம் தெரியாத கும்பல் எதிரில் வந்தது.கையில் ஆய்தத்துடன் நின்று கொண்டிருந்தவர்கள் அவர்கள் எதிரி யாரையாவது தேடுகிறார்களா என நினைத்து காரின் வேகத்தை கூட்டாமல், அவர்களுக்கு இறங்கி பதில் செல்ல நினைத்தது தான் விபரீதமாக முடிந்து விட்டது.அடுத்த நிமிடமே அவர்கள் நடந்துகொண்டதை எதிர்பார்க்கவேயில்லை. காரை நிறுத்திய கொள்ளையர்கள் நகை, பணம், மனைவி, மகள் என எதையும் விட்டு வைக்கவில்லை.

புதன், 3 ஆகஸ்ட், 2016

சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் அதிமுக புகார்!

டெல்லி விமான நிலையத்தில்
திமுக., எம்.பி. திருச்சி சிவாவை, அதிமுக., எம்.பி. சசிகலா புஷ்பா தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு  மாநிலங்களவையில்  பேசிய  சசிகலா புஷ்பா, “எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது.  எனது பதவியை ராஜினாமா செய்யும்படி எனது கட்சித் தலைமையால் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். என்னை  எனது தலைவர் அறைந்தார்” என பேசியது அரசியல் அரங்கில் இன்னும் பரபரப்பை கூட்டியது. இதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம், தமிழக  அரசியலில் மட்டுமல்லாமல் இந்திய அரசியலிலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சசிகலா புஷ்பா எம்.பி., முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு கிளப்புவதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி,  பெரம்பலூர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த  பாண்டியன் சார்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்  கிருஷ்ணமூர்த்தி, பாண்டியன்  உள்ளிட்ட  வழக்கறிஞர்கள் இன்று திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனனை சந்தித்து மனுக்கொடுத்தனர்.
பூனைக்கு மணி கட்டுவது யாரு என்பதில் எல்லோரும் ஆர்வமாக இருந்தார்கள் அதிருப்தி admk ஆட்கள் , இப்போது மணி கட்டியாச்சு . இதில் எலி பெரிசா என்பது முக்கியமில்லை . count down ஸ்டார்ட்ஸ். அடக்குமுறை ஒரு உச்சத்தை எட்டிய பிறகு சரிவை சந்தித்து தான் ஆக வேண்டும். .

131 கொத்தடிமைகள் பேச்சுக்கு கொத்தடிமைகள் கொந்தளிப்பு

அதிமுக-வினர் முதல்வரைப் புகழ்ந்து பேசுவதும், ஒவ்வொரு அறிவிப்பின்போதும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடுவதும் தமிழக சட்டப்பேரவையில் தினசரி வாடிக்கையாகிவிட்டது. பேரவையில், இன்று எரிசக்தித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய அதிமுக உறுப்பினர் முத்தையா, 89 வயக்காட்டு பொம்மைகள் என்று திமுக-வினரைப் பார்த்து விமர்சனம் செய்து பேசினார்.
இதையடுத்து, அதிமுக உறுப்பினர் முத்தையாவின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து திமுக, காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவை அலுவல்கள் முடிந்துவிட்டன. மின்சார கோரிக்கைமீதான பதிலுரை நாளை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

பேரா. சுபவீ, ஊடகவியலாளர் குணா மற்றும் சிலருக்கு ஒரு திறந்த மடல்: கௌதம சன்னா...

கௌதம சன்னாகௌதம சன்னா பேராசிரியர் சுபவீ அவர்களுக்கு வணக்கம்.
இந்த கடிதம் உங்களுக்கும் உங்களைப் போலவே கருத்துத் தெரிவித்துள்ள ஊடகவியலாளர் குணா மற்றும் சூனியர் விகடன் இதழ் குழுமத்திற்குமானது. நீங்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதால் இதை எழுத வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. என்னை உங்களுக்கு யாரென தெரியாமல் இருக்கலாம். நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி பொருப்பாளராக இருந்தாலும் அந்த தகுதியில் இக்கடிதத்தை எழுதவில்லை. ஒரு சாமான்ய மனிதனாக எனக்கு எழுந்துள்ள கேள்விகளினால் உந்தப்பட்டு இக்கடிதத்தை எழுதுகிறேன். இதற்கு மற்ற பின்னணிகளை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

விழுப்புரம் நவீனா மரணம்: ஏன் இந்த இறுக்கமான மவுனம்?

அ.மார்க்ஸ்thetimestamil.com ; அ.மார்க்ஸ் விழுப்புரம் செந்திலின் நெருப்பு ஆலிங்கனத்தின் விளைவாக 70 சதத் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நவீனாவுக்கு நேர்ந்த கதி அடுத்த சில நிமிட ங்களில் எனக்கு வந்தது. நான் அப்போது NCHRO கருத்தரங்கில் இருந்தேன். பத்திரிகையாளர்களிடமிருந்து அந்தச் செய்தி கிடைத்தது. நவீனாவின் மாமா ஏழுமலையிடம் பேசி தகவலை உறுதி செய்து கொண்டேன். அவர் ஒருகாலத்தில் தமிழ்த் தேசிய இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர். நான் மிகவும் வேதனைப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளில் ஒன்று இது. அந்தப் பெண், பெண் எனச் சொல்வதைக் காட்டிலும் ஒரு சிறுமி. மிகவும் ஏழைக் குடும்பம். நாங்கள் உண்மை அறியச் சென்ற போது தயங்கித் தயங்கி அவளிடம் சிலவற்றைக் கேட்ட போது அவள் அழுதது நினைவுக்கு வந்தது.