சனி, 29 அக்டோபர், 2011

தூக்குத் தண்டனை விவகாரத்தில் ஜெ. தலைகீழ் ஸ்டான்ட்!

Viruvirupu சென்னை, இந்தியா: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் தூக்கில் போட மத்திய அரசு சதி செய்வதாக கூறியுள்ள ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, முதல்வர் ஜெயலலிதாவும் இவர்கள் விஷயத்தில் தமிழக மக்களை ஏமாற்றுவதாக குற்றம்சாட்டியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசும், மாநில அரசும் நடந்துகொண்ட முறை பற்றியே அவர் குறிப்பிடுகிறார்.
தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யுமாறு மூவரால் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த முவரும் செய்திருந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இந்த வழக்கில் எடுத்துள்ள நிலைப்பாடு, இந்த மூவரது கருணை மனுக்களையும் ஜனாதிபதி ஏற்கனவே நிராகரித்து விட்டதால், இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டணையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் உள்ளதும் அதுதான். இது எதிர்பார்க்கப்பட்ட ஸ்டான்ட்தான்.
ஆனால், தமிழக அரசு எடுத்துள்ள ஸ்டான்ட்தான், இவர்கள் தண்டனை தொடர்பாக குரல் எழுப்பியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் பிரச்சினைகளுக்கு கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பியினது கூட்டுச்சதியே காரணம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பியினது கூட்டுச்சதியே காரணம்-உயர்கல்வி அமைச்சர் திசாநாயக்க!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பியினது கூட்டுச்சதியே காரணம் என உயர்கல்வி அமைச்சர் திசாநாயக்க
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு கூட்டமைப்புஇ ஜே.வி.பி, மற்றும் புலிகளின் நிழலாகச் செயற்படும் புலம்பெயர் தமிழர்கள் ஆகியோர் பின்னின்று செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வேலாயுதம் - திரைப்பட விமர்சனம்


Velayutham Movie
மீண்டும் ஒரு விஜய் படம். காமெடி, காதல், தங்கச்சி பாசம், அவ்வப்போது சென்டிமெண்ட், கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் பஞ்ச் வசனங்கள், சுயபுராணம், லாஜிக்குக்கு சம்பந்தமே இல்லாத ஆக்ஷன் என பக்கா விஜய் படம்.
ஆனால் வேட்டைக்காரன், சுறா மாதிரி சோதிக்காமல் ரசிக்கும்படி காட்சிகளை அமைத்ததில், இயக்குநர் ஜெயம் ராஜா விஜய்யோடு சேர்ந்து ஜெயித்திருக்கிறார்!
கதை?பத்தாண்டுகளுக்கு முன்பு திருப்பதிசாமி எழுதி இயக்கிய ஆசாத் படத்தின் தழுவல் இந்தப் படம் (அதற்கும் முன்பு அமிதாப் நடித்த ஒரு இந்திப் படத்திலிருந்துதான் திருப்பதிசாமி உருவியிருந்தார்!).
ஒரு நிருபரின் கற்பனைப் பாத்திரம், தற்செயலாக உயிர்பெற்றால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்ய கேள்வியின் விளைவு, வேலாயுதம்!
ஜெனிலியா ஒரு சேனல் நிருபர். உயர்மட்ட ஊழல்களை அம்பலப்படுத்த முனைகிறார், தனது ஸ்டிங் ஆபரேஷன் மூலம். அமைச்சர் ஒருவர் தொடர்பான வெடிகுண்டு சதியை, அவரது தொடர்பு இருப்பது அறியாமல் நண்பர்களுடன் ஜெனிலியா ஆராய முனைய, அதில் நண்பர்கள் கொல்லப்படுகிறார்கள்.

வைகோ:ஜெயலலிதா தமிழக மக்களை ஏமாற்றிவிட்டார்

மூவரின் தூக்குத் தண்டனை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் போலவே, இந்நாள் முதல்வர் ஜெயலலிதாவும் தமிழக மக்களை ஏமாற்றிவிட்டார், என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்களே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூவர் தூக்கு தண்டனை ரத்து கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் ஆஜரான வைகோ, பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ள மனுவைத் தள்ளுபடி செய்யும்படி தமிழக அரசு கூறியுள்ளது; இதற்கு, மூவரையும் தூக்கில் போடுங்கள் என்பதுதானே பொருள்.
தூக்கு தண்டனையை எதிர்க்கும் பொதுமக்களின் கருத்து பற்றி எதுவும் சொல்வதற்கில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.
அப்படியானால் ஆகஸ்ட் 30-ம் தேதி சட்டப்பேரவையில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசைக் கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உலகத்தை ஏமாற்றத்தானே? இந்தப் பிரச்னையில் தமிழக மக்களை முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏமாற்றுவதைப் போலவே முதல்வர் ஜெயலலிதாவும் ஏமாற்றுகிறார்' என்றார் வைகோ.

தமிழக அரசு:ராஜீவ் கொலையாளிகள் மூவருக்கும் தண்டனை ரத்து கூடாது

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசும் கோரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனு 11 ஆண்டுகளுக்குப் பின் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவரும் தாக்கல் செய்த மனுவில், 11 ஆண்டுகள் காலதாமதமாக கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறோம். ஆயுள் தண்டனை காலத்தையும் தாண்டி சிறையில் இருப்பதால் எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனு கடந்த செப்டம்பர் மாதம் விசாரித்த நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், இவர்களின் மனுக்களுக்கு மத்திய அரசு, தமிழக அரசு 8 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் 2 மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

கலைஞரை நோக்கி கேப்டன் கறுப்பு செவப்பு தான் எனக்கு புடிச்ச கலரு

Viruvirupu
உள்ளாட்சித் தேர்தலின்பின் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் அரசியல் நிலைப்பாட்டில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. காலத்தின் கட்டாயம் அவரை தி.மு.க. பக்கமாக சாய வைக்கப் போகின்றது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
கட்சி ஆரம்பித்த நாளில் இருந்தே, தி.மு.க.வுக்கு எதிராக அரசியல் செய்தவர் விஜயகாந்த். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் இவரது பேச்சுக்கள் தி.மு.க.வை தாக்கும் வகையிலேயே அன்று முதல் இன்றுவரை இருந்தன. அப்படியான ஒருவரால், தி.மு.க. பக்கம் சாய முடியுமா?
“வேறு வழி?” என்று கேட்கிறார்கள் அரசியல் விவகாரங்களில் அவருடன் கூடவே இருப்பவர்கள்.

மனித வெடிகுண்டு மலிவு விற்பனை!!பகீர் தகவல்


உயிரை எடுக்க ஆள் வேண்டுமா? மனித வெடிகுண்டு மலிவு விற்பனை!!Viruvirupu.com

காபுல், ஆப்கானிஸ்தான்: உளவு வட்டாரங்களில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் ஒன்று பகீர் ரகமானது. “மனித வெடிகுண்டுகள் விற்பனைக்கு” என்பதே பகீர் தகவலின் சுருக்கம். விரிவாகச் சொன்னால், “தற்கொலைத் தாக்குதல்களை நடாத்துவதற்காக ஆட்கள் தேவையா? உயிரை விடுவதற்கு ஆட்களை விலைக்குத் தருகிறோம்” என்ற பிசினஸ், ஆப்கானில் தொடங்கியுள்ளது!

சி.பி.ஐ. சென்ற ரூட்டில் Dead End! வாய்விட்டு சிரிக்கிறார்.. ஆ.ராசா!!


Viruvirupu
சென்னை, இந்தியா: தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு அதிஷ்டம் அடிக்க தொடங்கும் காலம் போலிருக்கின்றது. அவரது நண்பர் சாதிக் பாட்சா விவகாரத்தில், சி.பி.ஐ. பின்வாங்கத் தொடங்கியுள்ளது. இறந்து போன சாதிக் பாட்சா கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வந்த சி.பி.ஐ, கிட்டத்தட்ட அந்தக் கோணத்தையே கைவிட்டு விட்டதாக சி.பி.ஐ. சென்னை அலுவலகத்தில் சொல்கிறார்கள்.
காரணம், சாதிக் பாட்சா கொல்லப்படிருக்கலாம் என்ற வியூவில் இவர்கள் பிடித்துச் சென்ற வழிகள் எல்லாமே, டெட்-என்டாக முடிந்து போயுள்ளன.
சி.பி.ஐ. சேகரித்துள்ள ஆதாரங்கள் அனைத்துமே ‘அசாதாரண மரணம்’ என்பதை நிரூபிக்க போதுமானவையாக உள்ளன. ஆனால், ‘அசாதாரண மரணம்’ கொலைதான் என்று கோர்ட்டில் நிரூபிக்க முடியாது. அது, தற்கொலையாகவும் இருக்கலாம்.
தற்போது சி.பி.ஐ. கையில் வைத்திருக்கும் ஆதாரங்களுடன் கொலை வழக்கு என்று கோர்ட்டுக்கு போனால், திறமைசாலியான வக்கீல் ஒருவரால், அனைத்தையுமே பூ என்று ஊதிவிட முடியும். அதனால், ஏற்கனவே இருந்த ரூட்டிலேயே கேஸை வைத்துக்கொள்ள சி.பி.ஐ. முடிவு செய்திருப்பதாக அவர்களது சென்னை அலுவலகத்திலிருந்து தெரிய வருகின்றது.
சாதிக் பாட்சா எழுதி வைத்திருந்த கடிதத்தில் இருப்பது, சாதிக்கின் கையெழுத்துதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கடிதத்தை அவர் தனது சொந்த விருப்பத்தில் எழுதினாரா? எழுதவேண்டிய கட்டாயத்தில் இருந்தாரா? வேறு ஏதாவது மிரட்டல்கள் இருந்தனவா?
இப்படி பல கோணங்களில் விசாரணை தொடங்கிய சி.பி.ஐ. விசாரணையும் எந்த முடிவையும் எட்ட முடியாமல் நிற்கிறது. இந்த கடிதம் பற்றிய விஷயம் விரைவில் கிடப்பில் போடப்படலாம்.

கேரளாவின் மாட்டிறைச்சி பிரியர்களால் தமிழக பசுக்களுக்கு ஆபத்து


தலையங்கம்:தடை விதித்தால்தான் என்ன?அண்மையில் கேரள அரசு வெளியிட்ட ஒரு புள்ளிவிவரம் அம்மாநில மக்களின் உணவுப்பழக்கம் தொடர்பானது. அம்மாநிலத்தில் 80 விழுக்காடு மக்கள் அசைவ உணவை விரும்பிச் சாப்பிடுகிறவர்கள் என்கிற புள்ளிவிவரம் நமக்குப் புதியதல்ல. ஆனால், அந்தப் புள்ளிவிவரம் தரும் தகவல்கள் தமிழர்களுக்கு மகிழ்ச்சி, அதிர்ச்சி இரண்டையும் சேர்த்துத் தருகின்றது. கேரள மாநில மக்களுக்கு ஒரு நாளைக்கு மொத்தம் 5,034 டன் இறைச்சி தேவைப்படுகிறது. இதில் 45 விழுக்காடு இறைச்சி கறிக்கோழி வகை. கறிக்கோழிக்காக மட்டும் கேரள மக்கள் 2009-10 நிதியாண்டில் ரூ. 2,844 கோடி செலவிட்டுள்ளார்கள். இதில் ரூ. 1,752 கோடி வெளிமாநில கறிக்கோழிகளுக்காகச் செலவிட்டது. அதாவது இதில் 90 விழுக்காடு கறிக்கோழி வணிகம் தமிழ்நாட்டுக்குரியது என்பதால், இவ்வளவு பெரிய வணிக வாய்ப்பை கேரளத்தின் மூலம் தமிழர்கள் பெறுகிறார்கள் என்கிற வகையில் மகிழ்ச்சி.அடுத்ததாக, அதிர்ச்சியைத் தரும் தகவல் இதுதான்:

ஆமிக்கும் உனக்கும் என்ன தொடர்படா?” எனக் கத்திக் கூச்சலிட்டான்.

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (20)
20. தென்னம்பாளை அடியுடன் தொடங்கிய முதல் விசாரணை!
LTTE torture camp281011இந்த ‘படப்பிடிப்பு’ நாடகம் பின்னரும் சில தடவைகள் நடந்தது. எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த கைதிகள் எல்லோருக்கும் நடந்தது. அவர்கள் எல்லோரையும் என்னை எடுத்தது போல இங்கு வந்தவுடனேயே படம் எடுத்திருந்தாலும், பின்னரும் எல்லோரையும் எடுத்துக் கொண்டார்கள்.

பின்னர் எடுத்த போது, ஒருமுறை தலையை மொட்டை அடித்துவிட்டு எடுத்தார்கள். இன்னொரு தடவை மீசையை எடுத்துவிட்டு படம் எடுத்தார்கள். (பிரபாகரனும் அவரது கூட்டத்தினரும் 2009 மே மாதம் இலங்கை இராணுவத்தால் முள்ளிவாய்க்காலில் வைத்து கொல்லப்பட்ட பின்னர், தமது ‘நேர்த்திக் கடனை’ நிறைவேற்றுவதற்காக சிலர் தமது தலையை மொட்டை அடித்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அண்மையில்கூட புலம்பெயர் நாடொன்றில்  வசிக்கும் ஒருவர், இந்தியாவுள்ள திருப்பதிக்குச் சென்று தனது ‘நேர்த்திக் கடனை’ நிறைவேற்ற தலையை மொட்டை அடித்துவிட்டு வந்ததை நான் அறிவேன். இந்த நேர்த்திக் கடன் என்னவென்பதை நான் சொல்லத் தேவையில்லை)
இந்தப் படப்பிடிப்புக்கான காரணங்களைப் பின்னர் எனது சிறை வாழ்க்கையின் போது, என்னுடன் ஒன்றாகத் தனது தண்டனையை அனுபவித்த புலி உறுப்பினர் ஒருவர் விளக்கிக் கூறினார். அவரது விளக்கத்தின்படி, புலிகள் தம்மிடம் இருக்கும் ஒரு கைதியின் தகவல் கோவையில் சேர்த்து வைப்பதற்காகவே எம்மைக் கைதுசெய்தவுடன் முதலில் எடுக்கும் படம் எடுக்கிறார்கள். பின்னர் தலையை மொட்டை அடித்துவிட்டு, மீசையை மழித்துவிட்டு எடுப்பது வேறு காரணங்களுக்காக.
அதாவது, கைதி ஒருவர் புலிகளின் பிடியில் இருந்து தப்பி ஓடி, தனது தோற்றத்தை மாற்றுவதற்காக தலையையும் மீசையையும் மழித்துவிட்டு நடமாடினால, அவரைச்; சுலபமாக அடையாளம் பிடிப்பதற்காகவே, பின்னைய வகை மாதிரிப் படங்கள் எடுக்கப்படுவதாக அந்தப் புலி உறுப்பினர் விளக்கிக் கூறினார்.

கடாபியின் நினைப்பே இறுதியில் அவர் முகத்தில் மண்ணை வாரிப் போட்டுவிட்டது.

ஒரு சகாப்தத்தின்  எழுச்சியும் வீழ்ச்சியும்
‘உலகம் தனக்கென ஒரு வரலாற்று ஒழுங்கையும் நியதியையும் கொண்டிருக்கிறது. அதனை இறைவனைத் தவிர வேறு எந்தப் படைப்புகளாலும் மாற்றியமைக்க முடியாது என்பதே யதார்த்தமாகும். அந்த யதார்த்தத்துக்கு விதிவிலக்காக இருக்க விரும்பும் எவரும்  வரலாற்றின் குப்பைத் தொட்டிகளுக்குள்ளேயே வீசப்படுவார்கள் என்பதற்கு சமகால அரபுலகின் மக்கள் புரட்சிகளே மகத்தான சான்றுகளாகும்’
‘ஒரு மனிதனின் வாழ் நாள் சாதனையின் அளவை அவனது  இறுதி ஊர்வலத்தின் நீளத்தைக் கொண்டு அளவிடலாம்’ என்பது ஒரு சீனப் பழமொழி.
அப்படியானால் லிபிய முன்னாள் அதிபர் கேர்ணல் முஅம்மர் கடாபி தனது வாழ் நாளில் எதையுமே சாதிக்கவில்லையா? என நீங்கள் கேட்கலாம். அதற்கான விடையைத் தருவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

பிரபாகரன் உட்பட பலருக்கு இலங்கை அரசு மன்னிப்பு வழங்கத் தயாராகவிருந்தது

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உள்ளிட்ட சகல விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தயாரானதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஒ பிளக்கிற்கும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பகிரங்கமாக அறிவித்தால் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.என்.பி. போன்ற சிங்கள தேசியவாத கட்சிகள் அதிருப்தி அடையக் கூடும் என கோதபாய தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமன்னிப்பு குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்படாவிட்டால் அந்த முயற்சியில் பயனிருக்காது என பிளக் தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.  யுத்த நிறுத்தம், பாதுகாப்பு வலயம் மற்றும் பொதுமக்களை மீட்டல் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் தகவல்களை வழங்கியுள்ளார்.
இதேவேளை, பிரபாகரன் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முற்பட்டால் அவரைக் கைது செய்வதற்கு உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா இலங்கைக்கு உறுதியளித்திருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி ரொபர்ட் ஓ பிளக்கினால் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. என கொழும்பு டெலிகிராப் தெரிவித்துள்ளது
தகவல்களை பார்வையிடுங்கள்
http://colombotelegraph.com/2011/10/28/wikileaks-american-assistance-to-track-prabakharan-2/

வசதியான வாழ்க்கையைத் தேடி ஓடிப்போன தமது வரலாறுகளை TNA திருத்திக்கொள்ள வேண்டும்.

இவர்கள் தங்களது சுயலாப அரசியல் காரணமாக மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார்கள் என்பதற்கு யாழ். முத்திரைச் சந்தியில் யாழ். மாநகர சபையால் புதிதாக நிறுவப்பட்டிருக்கும் சங்கிலியன் சிலை தொடர்பான விடயம் இதற்கு நல்லதொரு உதாரணம். கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் காலத்தில் சங்கிலியன் சிலையை உடைத்து புத்தர் சிலை நிறுவப்போவதாக சொன்னார்கள்.
இப்போது அதே இடத்தில் அந்த சங்கிலியன் சிலை புதுப்பொலிவோடு எழுந்து நிமிர்ந்திருப்பதே தமிழ்த் தேசியக் கூடடமைப்பின்போலி அரசியலுக்கு சிறந்த சாட்சியமாகும். சங்கிலியன் சிலையை கடந்து செல்லும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தலை குனிந்தே செல்கிறார்கள் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

வடக்கில் புலிகள் நடத்திய இனச்சுத்திகரிப்பு., 78,000 முஸ்லிம்கள் 72 மணித்தியாலங்களுக்குள் விரட்டப்பட்டனர்!

இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.
‘யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்’
இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.

சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து 10வது புத்த துறவி தீக்குளிப்பு திபெத்தியர்கள் ஆவேசம்!

பீஜிங்: சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து திபெத்தை சேர்ந்த புத்த மதத் துறவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுவரை 10 துறவிகள் இதுபோல் தற்கொலை செய்து கொண்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. திபெத்தை சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. சுதந்திரம் வேண்டி திபெத்தியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்தே தங்களுக்கு என தனி அரசை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சீனாவின் பல நகரங்களில் திபெத்தை சேர்ந்த புத்த துறவிகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் சீன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னொரு புத்த துறவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

செய்வினை மிரட்டல் விடுத்து மருமகளை கற்பழித்த பூசாரி மாமனார்!

கிருஷ்ணகிரி: உனக்கும், பேரக் குழந்தைகளுக்கு செய்வினை வைத்துவிடுவேன் என மிரட்டி, மருமகளுடன் பல நாட்களாக உல்லாசமாக இருந்த பூசாரி மீது கற்பழிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மந்தகிரி அடுத்த நாகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பைரப்பா(55). இவரது மனைவி ரத்தினம்மா(50), இவரது மகன் சுப்பிரமணி(28). சுப்பிரமணிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ராதிகா(22) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சுப்பிரமணி அதே பகுதியில் டீக்கடையும், பைரப்பா சின்ன பெளகொண்டப்பள்ளி சனீஸ்வரர் கோவிலில் பூசாரியாகவும் உள்ளனர். மாந்திரீகம், ஏவல், பில்லி, சூனியம், செய்வினை உள்ளிட்ட செய்வதில் பைரப்பா திறமையானவர் என கூறப்படுகிறது.

தோற்கடிக்கப்பட்டவர்களின் பிரசாரமே போர்க் குற்றச்சாட்டுகள் : இலங்கை அரசாங்கம்!

போர்க்குற்றச்சாட்டுகள், வெறும் பிரசார நடவடிக்கைகள் என இலங்கை தெரிவித்துள்ளது. பொதுநலவாய உச்சிமாநாட்டின் அதிகளவு அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கையானது போர்க்குற்றச்சாட்டுகள் தோற்கடிக்கப்பட்டவர்களின் பிரசாரங்கள் என தெரிவித்திருக்கிறது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பொதுநலவாயத்தின் 54 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஒன்றுகூட உள்ள நிலையில் இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கவனத்தைச் செலுத்துவது நியாயமற்றது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டிருக்கிறது.
புலிகளின் ஆதரவாளர்களினால் பிரசார இயந்திரம் சிறப்பான முறையில் செயற்படுத்தப்படுவதே இந்த விடயமாகும். ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர ஏ.பி.சி. செய்திக் கட்டமைப்புக்குக் கூறியுள்ளார். இதேவேளை, நேற்று முன்தினம் புதன்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது அவுஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்ட் இந்த விடயம் குறித்து கதைத்திருந்தார்.

வெள்ளி, 28 அக்டோபர், 2011

மகாராணி தலைமையில் மாநாடு கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது!

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இன்று அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில்
பிரிட்டிஷ் மகராணி இரண்டாவது எலிசபத் தலைமையில்கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

54 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கpன்ற இந்த மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் சார்பில் கலந்துகொள்கிறார்.
இம்மாநாட்டில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 3000 ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பதுடன் இன்றும் நாளையும் இருநாள் நிகழ்வாக இம்மாநாடு நடைபெறவுள்ளது.

மன்மோகன் சிங்கை அமெரிக்க டீலின் பக்கமாக ‘தள்ளிச் சென்றது’ நட்வர் சிங்தான்

இதோ மற்றொரு ‘உள்வீட்டு’ விவகாரம்! அடுத்த சிக்கலில் பிரதமர் சிங்!!

Viruvirupu
வாஷிங்டன், அமெரிக்கா: முன்னாள் அமெரிக்க உட்துறைச் செயலர் கண்டலீசா ரைஸ் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் உள்ள சில சம்பவங்களும், வர்ணனைகளும், பிரதமர் மன்மோகன் சிங்கை சங்கடப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. “இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தில், மன்மோகன் சிங் நிச்சயமாக வெற்றியாளர் கிடையாது” என்று எழுதியுள்ளார் ரைஸ்.
‘No Higher Honor’ என்ற பெயரில் இந்த வாரம் மார்க்கெட்டுக்கு வரும் இந்தப் புத்தகத்தில், 2005-2006 காலப்பகுதியில் நடைபெற்ற இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. கண்டலீசா ரைஸ் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதில் பெரும் பங்கு வகித்தவர் என்ற வகையில், பல ‘உள்வீட்டு விவகாரங்கள்’  பற்றி எழுதியுள்ளார்.
ஒருவகையில் பார்க்கப் போனால்,  இந்திய – அமெரிக்க டீல் பற்றிய உள்வீட்டு உண்மைகள் பலவற்றை முதன்முதலில் வெளியே கொண்டு வருவது இந்தப் புத்தகம்தான்.  2005-06-ல் இந்தியாவில் அரசியல் ரீதியாக பெரிய புயலையே இந்த அமெரிக்க டீல் ஏற்படுத்தியிருந்தது.
அமெரிக்க டீலினால், காங்கிரஸ் அரசு கவிழும் நிலைகூட ஒரு கட்டத்தில் ஏற்பட்டிருந்தது.

சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டதற்கு ஆதாரம் இல்லை: சி.பி.ஐ.,

புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் நண்பர் சாதிக் பாட்சா, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை உறுதிப்படுத்த எந்த ஆதாரங்களும் இல்லை என, சி.பி.ஐ., தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ., வட்டாரங்கள் கூறியதாவது: ராஜாவின் நண்பர் சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டாரா என்பதை கண்டறிய, டில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் தடயவியல் அறிஞர்களைக் கொண்டு, சி.பி.ஐ., ஆய்வு செய்தது. விரிவான அந்த ஆய்வில், பாட்சா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை உறுதி செய்ய, எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. பாட்சாவின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை, எய்ம்ஸ் நிறுவன டாக்டர்களைக் கொண்டு ஆய்வு செய்தும், எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிப்பதை சி.பி.ஐ., விட்டு விடவில்லை என்றாலும், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் தற்போது விசாரித்து வருகிறது. அவர் தற்கொலை குறிப்பை ஆய்வு செய்ததில், அது அவருடைய கையெழுத்து தான் என்பது தெரிய வந்துள்ளது.

விஜய்க்கு ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை : வேலாயுதம் விமர்சனம்





டகம் சம்பந்தப்பட்ட படம் என்பதால், டைட்டில் கார்டில் ஜெயா டிவிக்கு நன்றி என்பதில் தொடங்கி,  ஜெயா டிவி, ஜெயா நியூஸ் என்று படம் முழுக்க  ஜெயா மயம்தான்.
 என் கட்சி ஒரேகட்சி.....என்று சின்ன இடைவெளி விட்டு ’தங்கச்சி’ என்று அரசியல் வெடிக்கிறார் விஜய்.  இன்னும் நிறைய வெடிக்கின்றன.
இந்த மண்ணை ஆண்டாரு..மக்களை ஆண்டாரு...அடுத்து மாநிலத்தையே..... என்று கிரேன் மனோகர் சொல்லிக்கொண்டிருக்கும் போது, அதற்கு மேல் சொல்ல வேண்டாம் என்று விஜய் சைகை செய்ய, நீங்க வேண்டாம்னு சொல்லுறதால சொல்லல என்று நிறுத்திக்கொள்கிறார்.
’’சிரிப்பை நாமளே வெளிப்படுத்துறோம், அழுகையை நாமளே வெளிப்படுத்துறோம்,  ஆனா... கோபத்தை வெளிப்படுத்த மட்டும்  பொதுவா ஒருத்தன் வரணும் என்று எதிர்ப்பார்கிறோம்.   ஒவ்வொருத்தரும் கோபத்தை வெளிப்படுத்தணும்.   தேர்தலின் போது கோபத்தை வெளிப்படுத்துங்க.   ஆட்சி மாற்றம் வரும்’’ என்று க்ளைமாக்ஸில் சரவெடி கொளுத்துகிறார் விஜய்.
இது போதாது என்று க்ளைமாக்ஸ் காட்சியில் பல்லாயிரக்கணக்கான விஜய் மக்கள் இயக்க கொடிகள்.

யாழில் விடுதி உரிமையாளர் தாக்கப்பட்டார்

யாழில் விடுதிகளில் விபச்சாரமா? விடுதி உரிமையாளர் தாக்கப்பட்டார்


கொழும்புத்துறை பிரதேசத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் உரிமையாளர் இன்று இனந்தெரியாதோரின் சரமாரியாக கத்தி வெட்டுக்கு இலக்கானார்.
இதன் பின்னணியில் தொழில் போட்டியா அல்லது திருட்டு போன்ற காரனம என்று போலீசார் புலன் விசாரணை செய்து வருகின்றனர்

முஸ்லிம்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு 21 ஆண்டுகள்

putalam-muslim
வடமாகாண முஸ்லிம்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இந்த மாதத்துடன் 21 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது இதை நினைவு கூரும் முகமாக மூன்று கருப்பொருளை கொண்டு நிகழ்சிகளை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
1. முஸ்லிம் மீள்குடியேற்றத்தை ஊக்குவித்தல்.
2.தமிழ் , முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் மீண்டும் புரிந்துணர்வையும் , ஒருமைப்பாட்டையும் ஊக்குவித்தல்.
3..வடமாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் போது மிகப்பெரிய கொள்ளை சம்பவமொன்றும் இடம் பெற்றுள்ளது அது வரலாற்றில் சரிவர பதிவு செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்துதல்.
செய்தி :

காணிப் பிரச்சினை வவுனியாவில் உண்ணாவிரத நாடகம்

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி சம்பந்தமான பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. இந்தப் பிரச்சினையைப் பாவித்து குளிர்காய்வதற்கு வழக்கம் போல சில அரசியல் சக்திகளும் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளன. குறிப்பாக ‘வெறும் வாயை மென்றவனுக்கு அவல் கிடைத்தது போல’, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பிரச்சினையை வைத்து வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக் குதிக்கிறது. இந்தப் பிரச்சினையை வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வேறு சில தமிழ் கட்சிகளும் வவுனியாவில் உண்ணாவிரத நாடகமொன்றையும் அரங்கேற்றியுள்ளன்.

பாலியல் துஸ்பிரயோகம் - காவற்துறை பொறுப்பதிகாரி கைது!

 மஹியங்கனை காவற்துறை நிலையத்தில் கடமையாற்றும் பெண் காவற்துறை அதிகாரி ஒருவரை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதாக குற்றம்சுமத்தப்பட்டு அந்த நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை காவற்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பதுளை காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்தே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் அங்கு முன்னதாக சேவையாற்றிய காவற்துறை பொறுப்பதிகாரி பதவி விலக்கப்பட்டிருந்தார்.
இதனை அடுத்து நியமிக்கப்பட்டிருந்த பதில் காவற்துறை பொறுப்பதிகாரியே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதர்சன் நாச்சியப்பன் குழு யாழ் விஜயம்

சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை யாழப்பாணம் அழைத்து வந்துள்ளதாக தெரிவித்தார்!

இந்திய காங்கிரஸ் கட்சி பிரமுகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுதர்சன நாச்சியப்பன். மேற்குலக நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சகிதம் யாழ்ப்பாணம் வந்துள்ள அவர் பல இடங்களையும் சுற்றிப்பார்த்திருந்தார். யாழ்.செயலகத்திற்கும் குழுவினருடன் விஜயம் செய்த அவருக்கு வழமை போலவே அரச அதிபர் இமெல்டா சுகுமார் புள்ளி விபரங்கள் சகிதம் இலங்கையை அரசின் வடக்கிற்கான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கி கூறியிருந்தார்.

13ம் திருத்தச் சட்ட மூலம் அர்த்தமுல்ல வகையில் அமுல்படுத்தப்பட வேண்டும்-டக்ளஸ் தேவானந்தா!

13ம் திருத்தச் சட்ட மூலம் அர்த்தமுல்ல வகையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி. கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தற்போதைக்கு அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்ட மூலத்தினை அர்த்தமுல்ல வகையில் அமுல்படுத்துவதன் மூலம் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூடங்குளம் அணு உலையை சுற்றி மத்திய படை குவிப்பு: தமிழக அரசு ஒத்துழைப்பு இல்லாததால் பதட்டம்!

தமிழக அரசின் நிர்வாகத்துறை மற்றும் தமிழக போலீஸ் ஒத்துழைப்பில்லாததால், கூடங்குளம் அணுமின் நிலைய பணிகள் முற்றிலும் முடங்கி, பதட்டமான சூழல் உருவாகி உள்ளது. மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடாததால், அணுமின் நிலையத்தில் உள்ள யுரேனியம் கனிமத்தை பாதுகாக்க, மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வியாழன், 27 அக்டோபர், 2011

ஜெயலலிதாவை தூங்க விடாமல் செய்த ‘ஒற்றை வாக்கியம்’!

பெங்களூரு, இந்தியா: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏதோ சுமுகமாக நடந்து கொண்டிருப்பது போல தெரிந்தாலும், உண்மையில் அப்படியல்ல என்கிறார் எமது பெங்களூரு தொடர்பாளர். நீதிபதி கூறிய சில வார்த்தைகள் முதல்வரைத் தூக்கமில்லாமல் செய்யக் கூடியவை என்கிறார் அவர்.
முக்கியமாக கூறப்பட்ட ஒரு வாக்கியம், “அடுத்த தவணைக்கு நீங்களாகவே வந்து விடுவது நல்லது. தவறினால் உங்கள்மீது வாரண்ட் பிறப்பிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இந்த கோர்ட்டுக்கு ஏற்படும்” அடுத்த மாதம் முதல்வர் கோர்ட்டுக்கு வருவதை இழுத்தடிக்க முயற்சி செய்யலாம் என்று நீதிபதிக்கு சந்தேகம் உள்ளதையே இது காட்டுகின்றது என்கிறார்கள்.

இந்தியர்களுக்கு எச்1பி விசாக்களை அள்ளித் தரும் அமெரிக்கா- தூதரகத்திலும் தமிழிலும் நேர்காணல்!

வாஷிங்டன்: 2010-11ம் ஆண்டில் இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்1பி விசா வழங்குவது 24 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் இந்த அளவுக்கு எச்1பி விசாவை அள்ளித் தந்துள்ளது வரலாற்றிலேயே இதுவே முதன்முறையாகும்.

இந்த ஆண்டில் இதுவரை 67,195 பேருக்கு எச்1பி விசா வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது 54,111 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரிவோருக்கே இந்த விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்தியர்களுக்கு 65,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதைவிட அதிகமாக 2,195 விசாக்களை அள்ளித் தந்துள்ளது அமெரிக்கா.
இரு ஆண்டுகளுக்கு முன் இந்தியர்களுக்கான எச்1பி விசா ஒதுக்கீடு 1,95,000 ஆக இருந்தது. ஆனால், உள்நாட்டினருக்கு வேலைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்ததால் அது இரு ஆண்டுகளுக்கு முன் 65,000 ஆகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அமெரிக்க விசாவுக்காக அந் நாட்டுத் தூதரகங்களில் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நேர்காணல் நடத்தப்பட்டு வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நகர்களில் விசாவுக்கு விண்ணப்பிப்போர் சென்னையில் தமிழிலும் அல்லது இந்தியிலும், ஹைதராபாத்தில் தெலுங்கிலும், கொல்கத்தாவில் பெங்காலி மொழியிலும் நேர்காணலின்போது பதிலளிக்கலாம்

ராஜ் ராஜரத்தினத்துடன் இணைந்து நிதி மோசடியில் ஈடுபட்ட ரஜத் குப்தா சரண்!

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜ் ராஜரத்தினத்துடன் இணைந்து மாபெரும் நிதி மோசடியில் ஈடுபட்ட இந்தியரான ரஜத் குப்தா நேற்று அமெரிக்காவில் எப்பிஐ அதிகாரிகளிடம் சரணடைந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் நிதி விவரங்களை மூலம் 75 பில்லியன் டாலர்கள் மோசடி செய்தார் ராஜரத்தினம்.

கடாபியின் இறுதி தினங்களில், எங்கிருந்தார்? என்ன செய்தார்? என்ன சொன்னார்?

Viruvirupu
கொல்லப்பட்ட கடாபியின் இறுதி தினங்கள் எப்படி இருந்தன? அவர் என்னவெல்லாம் செய்தார்? என்ன பேசினார்? இந்த விபரங்கள் தற்போது விலாவாரியாக வெளியாகி உள்ளன.
தலைநகர் ட்ரிபோலியை போராளிப் படைகள் கைப்பற்றியபோது, ஆகஸ்ட் 21ம் தேதி அங்கிருந்து தப்பி ஓடினார் கடாபி. தனது நம்பிக்கைக்கு உரிய பாதுகாவலர்கள், நெருங்கிய உறவினர்கள், விசுவாசிகள், மற்றும் ஒரு சமையல்காரர் ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட குழு ஒன்றுடன் சிறிய வாகனத் தொடர் ஒன்றில் அவர் இரவோடு இரவாக ட்ரிபோலியை விட்டு தப்பிச் சென்றார்.
கடாபியுடன் சென்ற குழுவில் ஒருவர், தாவோ. இவர் கடாபியின் நெருங்கிய உறவினரும்கூட.
தற்போது கைது செய்யப்பட்டு, மத்திய உளவுத்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ள தாவோதான், கடாபியின் இறுதி நாட்கள் பற்றிய விபரங்களை வெளியுலகுக்கு முதன்முதலில் தெரிவித்துள்ளார்.  வெளிநாட்டு மீடியாக்கள் அடங்கிய பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் பேசுவதற்கு இவர் அனுமதிக்கப்பட்டார்.   அப்போது தாவோ கூறிய விபரங்கள்தான் கடாபியின் இறுதித் தினங்கள் பற்றி தற்போது உள்ள ஒரேயொரு பதிவு.

அண்ணாமலை பல்கலைகழக மாணவர் சக மாணவர்களால் அடித்துக் கொலை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்து வந்த மாணவரை சக மாணவர்கள் அடித்துக் கொலை செய்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் டுட்டா. அவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்து வந்தார். அவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை விடுதியில் தங்கியிருந்த 2 பீகார் மாநில மாணவர்கள் டுட்டாவை அடித்துக் கொலை செய்துள்ளனர்.
இந்த தகவல் காட்டுத் தீ போல பரவியதால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் போலீசார் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு விரைந்து சென்று மாணவர் டுட்டா உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

புலிகள் பிளவுபட்டபோது ஆயுதங்கள் வேறு அணிக்கு கைமாறின-கோதபாய ராஜபக்ஷ!

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்த ஆயுதங்களில் ஒரு தொகுதி வேறு நபர்களின் கையில் சிக்கியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுயாதீன தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கருணா அம்மானால் இரண்டாகப் பிரிவடையச் செய்யப்பட்ட போது புலிகளிடமிருந்த பொருந்தொகையான ஆயுதங்களை வேறொரு அணியினர் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையின் கீழ் இன்று நாடு முழுவதும் சட்ட விரோதமான முறையில் காணப்படும் ஆயுதங்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தனது செவ்வியில் தெரிவித்துள்ளார்.

தமிழீழ பிரகடனம் 50 ஆயிரம் பொது மக்களை கொன்றழித்தது - பிள்ளையான்

pillaiyan2010101923ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த தமிழீழ பிரகடனம் முள்ளியவாய்க்காலில் 50 ஆயிரம் மக்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், விதவைகள் பட்டினி கிடக்கின்றார்கள், கொட்டிலில் குழந்தைகள் பட்டினி கிடக்கின்றார்கள் அவர்களை அபிவிருத்தி செய்யாமல் இருந்துவிட்டு உரிமையினை பற்றி பேசுவதால் எதுவித பிரயோசனமும் இல்லையென தெரிவித்தார்.

லண்டன் அகிலன் பவுண்டேசன் அனுசரணையுடன் பட்டிருப்பு கல்வி வலயம் நடத்திய சாதனையாளர் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடாபி கடைசி நிமிடம் வரை தனது மக்களை நம்பினார்

அங்கும் கொம்பு சீவி சீவி உசுப்பேத்தி விடுபவர்கள் உண்டு 
லிபியாவில் அண்மையில் கொல்லப்பட்ட முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி, லிபியர்கள் தன்னை அதிகம் விரும்பியதாக கடைசி நிமிடம் வரை நம்பினார் என்று அவருடைய பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடைசி கட்ட யுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தது கடாபியின் மகன் முதஸ்ஸிம் என்று அந்த பாதுகாவலர் குறிப்பிட்டுள்ளார்.
சிர்த் நகரில் இடம்பெற்ற கடைசிக் கட்ட யுத்தத்தின் போது முஅம் மர் கடாபியுடன் இருந்த அவரது காவலர் மன்சூர் தாவ் என்பவரே இந்த தகவலை தெரிவித்துள்ளார். இவர் கடைசி கட்ட மோதலின் போது கிளர்ச்சியாளர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார். சிர்த் நகரில் இடம்பெற்ற கடைசி கட்ட மோதல் குறித்து அரபு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் திரிபோலி ஆக்கிரமிப்பாளர்களால் கைப் பற்றப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக் கப்பட்ட பின்னரும் லிபியர்கள் தன்னை அதிகம் விரும்புகிறார்கள் என்றே நம்பினார் கடாபி என்றார் அவர்.

பீர் குடிக்கும் பெண்களுக்கு எலும்பு ஸ்டிராங் ஆகும்!



மருத்துவ ஆய்வு தரும் மகிழ்ச்சி தகவல் பீர் குடிக்கும் பெண்களுக்கு எலும்பு ஸ்டிராங் ஆகும்! : தினமும் ஒரு டீஸ்பூன் போதும்!
லண்டன் : வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறதாம் பீர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போவெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு குறித்து ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத்தனால், எலும்புக்கு ஆரோக்கியமளிப்பதும், அதில் உள்ள சிலிகான் புதிய எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது.

புதன், 26 அக்டோபர், 2011

ஏழாம் அறிவு - கருத்துக்கள் நிறைய கமர்ஷியல் கலவையோடு



     படத்தின் நிறை குறைகளை அலசிப் பார்ப்பதற்கு முன்... ஏழாம் அறிவு படத்தில்... பக்கத்து நாட்டுல என்ன நடந்தது, வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்... கடைசியாக எல்லோரும் செத்தது தானே மிச்சம் என்று ஸ்ருதி சொல்ல... வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு... ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம்! என்று சூர்யா பேசும் வசனம் இதயத்தில் இடியாய் பாய்கிறது. இந்த வசனத்தை தைரியமாக உணர்வோடு படத்தில் வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஒரு சல்யூட்!
படத்திற்கு வருவோம்... தற்காப்புக் கலையான குங்ஃபூவில் சிறந்து விளங்குவது சீனா. இந்த கலையை சீன மக்களுக்கு கற்றுக் கொடுத்தவர் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர் என்பவர். இதில் ஆச்சரியம் என்ன என்றால் போதிதர்மர் ஒரு தமிழர்.
பாரம்பரிய கலைகளை நாம் மறந்துவிட்டோம்... ஆனால் ஒரு தமிழன் கற்றுக்கொடுத்த கலை அறிவை வைத்தே தமிழர்களுக்கு ஆப்பு வைக்க துணிந்து விட்டான் சீனாக்காரன்... இந்த சிக்கலை எப்படி சமாளிக்கபோகிறோம் என்ற கற்பனைக் கலவையே ஏழாம் அறிவு.

கி.பி 6ஆம் நூற்றாண்டில் துவங்குகிறது கதை. பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் தழைத்தோங்கியது. தென் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான பல்லவ வம்சத்தை சேர்ந்தவர் ‘போதி தர்மர்’ (போதிதர்மராக அறிமுகமாகிறார் சூர்யா). அச்சமயத்தில் புத்த மதத்தை தழுவிய போதி தர்மர், மகாயான புத்த மதத்தையும் கலை, மருத்துவம், எதிரில் இருப்பவரை தன் வயப்படுத்தும் வர்மக்கலை போன்ற கலைகளை பரப்புவதற்காக சீனாவிற்கு பயணம் மேற்கொள்கிறார் போதி தர்மர். 

Teacher arrested for punishing student in Horona

A Horana school teacher who had allegedly given 20 canings and slapped a Grade Nine schoolboy was taken into custody by the police and produced before Horana Chief Magistrate Mahinda Ranasinghe.
The female teacher was released on personal bail of Rs. 50,000 each with two sureties.
Horana police SI Wimalaratne who produced the suspect told court that the teacher had punished the student for allegedly bringing a present to be given to a schoolgirl. Police said the student had undergone treatment at the Kalubowila hospital for two days.
The teacher is a resident of Weligampitiya in Pokunuwita. (Bhouddhika Kumarasiri)
ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவனுக்கு இருபது தரம் பிரம்பால் அடித்து துன்புருத்திய பெண் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பின்பு 50 ஆயிரம் ரூபாய் பிணையில் விடப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் ஹொரோன பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு உட்படுத்துபவர் மீது சட்ட நடவடிக்கை

யாழ். குடாநாட்டில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்தினால் அந்தத் தொழில் நிலைய உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமாகாணப் பிரதித் தொழில் ஆணையாளர் கே. கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தெரிவிக்கையில், யாழ். குடாநாட்டில் சிறுவர்கள் வேலைக்காக சில வியாபார நிலையங்களில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றார்கள்.
இந்த நடைமுறை இன்னும் உள்ளதனால் இந்தச் செயல் சட்டத்திற்கு முரணானதாகக் கவனத்தில் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொழில் நிலைய உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இப்படியான ஒரு முறைப்பாடுகள் எமக்குக் கிடைக்கப்பெற்றால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் : முகாமைத்துவ பீடம் மூடப்பட்டது!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு மாணவர்களுக்குத் தற்காலிக வகுப்புத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் செனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பரீட்சை நடைபெற்ற சந்தர்ப்பத்தில் மோதல்கள் இடம்பெற்றது. மோதல் சம்பவத்தில் சில மாணவர்கள் காயமடைந்திருந்தனர். எவ்வாறெனினும், முகாமைத்துவ பீடத்தின் பரீட்சைகள் திட்டமிட்டவாறு நாளைய தினம் நடைபெறும். முகாமைத்துவ பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முதல் வருட மாணவர்களைத் தவிர்ந்த ஏனைய வருட முகாமைத்துவ மாணவர்களின் பீடம் இரு வாரங்கள் மூடப்பட்டுள்ளது.முகாமைத்துவ பீடத்தில் நீண்ட காலமாக இரு மாணவர் குழுக்களுக்கு இடையே மோதல் நிலவிவருகிறது. இன்றும் அவ்வாறே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுடன் தொடர்புடைய மாணவர் குழுக்களை பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது” என்றார்.

கலைஞர்: முதல்வராக இருந்துகொண்டு, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, நீதிமன்றத்தில்

சென்னை: ""எந்தச் செயலுக்கும், பின்னணி இல்லாமல் இருக்காது'' என,   கனிமொழியின் பிணை விவகாரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார். தி.மு.க., தலைமை நிலையத்தில், நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: திகார் சிறையில் கனிமொழியைச் சந்தித்தேன். உடல் இளைத்திருந்தாலும், மன உறுதியோடு இருக்கிறார். அவரது பிணை மனு, நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. பின்னணி இல்லாமல், எந்தச் செயலும் நடைபெறுவதில்லை. இது அரசியல் பின்னணியா, வேறு ஏதும் பின்னணியா என்பதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. நீதிமன்றத்துக்கு தீபாவளி விடுமுறை வருவதால், 3ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். நான் அவரின் தந்தை என்பதை விட்டுவிடுங்கள். இந்தப் பிரச்னையில் உள்ள நியாய, அநியாயங்களைப் பகுத்தறிந்து, உணர்வு தரவேண்டிய நிலையில் நான் இருக்கிறேன். 3ம் தேதி நல்லதே நடக்கும் என நினைப்போம்.

இந்திய மாணவர்கள் உட்பட 15 ஆயிரம் பேர் விசா ரத்து

மெல்போர்ன் : இந்தியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு மாணவர்கள் 15 ஆயிரத்து 66 பேரின் விசாக்களை, பல்வேறு காரணங்களுக்காக ஆஸ்திரேலியா ரத்து செய்துள்ளது. கடந்தாண்டில் ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை, மொத்தம் 15 ஆயிரத்து 66 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்துள்ளது. இவர்களில், 3,624 மாணவர்கள் தேர்வுகளில் தோல்வியுறுதல் அல்லது வகுப்புகளுக்குச் செல்லாதது போன்ற காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலையில் உள்ளனர். மேலும் 2,235 பேர், தாங்கள் உண்மையில் சேர்ந்த வகுப்புகளுக்குச் செல்லாமல், சட்ட விரோதமாக வேலை பார்த்து வந்தனர். பெண்கள் சிலர், மாணவர் விசாக்களைப் பயன்படுத்தி பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வந்தனர். அதனால், இவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விசா ரத்து செய்யப்பட்ட மாணவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், அதற்கடுத்த நிலையில் சீன மாணவர்கள் இருப்பதாகவும் ஆஸி., அதிகாரிகள் தெரிவித்தனர். ஆஸி.,யில் கடந்த ஜூன் மாதம் எடுக்கப்பட்ட கணக்குப்படி, மொத்தம் 3 லட்சத்து 32 ஆயிரத்து 709 வெளிநாட்டு மாணவர்கள் உள்ளனர். இவர்களில் பாதிக்கு மேல் பல்கலைக் கழகங்களில் படித்து வருகின்றனர்; பலர் தொழிற் பயிற்சி பட்டயப் படிப்பு படித்து வருகின்றனர். அங்குள்ள வெளிநாட்டு மாணவர்களில் ஐந்து பேரில் ஒருவர் சீனர் என்றும், ஆறு பேரில் ஒருவர் இந்தியர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். நியூசவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் தான் அதிகளவில் வெளிநாட்டு மாணவர்கள் உள்ளனர்.

ஓட்டு சதவீதம் அதிகரிக்க கூட்டணி இல்லை என்பது தான் காரணமா? கலைஞர்

தி.மு.க. தலைவர் கலைஞர் டெல்லி சென்று திரும்பிய பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
உள்ளாட்சி தேர்தல் முடிந்த சூழ்நிலையில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி எப்படி இருக்கிறது?

சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் மற்ற கட்சிகளோடு உடன்பாடு கொள்வதற்கும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடுகிற நோக்கத்திற்கும் உள்ள வேறுபாடுகளை ஏற்கனவே அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சி பெற்ற வாக்குகளை சதவிகித கணக்கில் பார்த்தால் அ.தி.மு.க. - 39.02, தி.மு.க. - 26.09, தே.மு.தி.க. - 10.11, காங்கிரஸ் - 5.71.

கலைஞர் வீட்டில் பூப்பறிக்காத மனுசன், போயஸ் கார்டனில் மாங்காய் பறிப்பாரா

விழுப்புரம், இந்தியா: உள்ளாட்சித் தேர்தலில் செம அடி வாங்கியதில் வாய் திறக்காமல் முடங்கியுள்ள டாக்டர் ராமதாஸ், சைலன்டாக மற்றொரு சிக்கலைச் சந்திக்க உள்ளார். இவரது கட்சி பா.ம.க., மற்றொரு உடைவுக்கு தயாராகின்றது என்கின்றன, உள்வீட்டுத் தகவல்கள்.
ஏற்கனவே சட்டசபைத் தேர்தலுக்குப்பின் ஒரு தடவை உடைந்த கட்சி பா.ம.க. என்பதை வெளியே தெரியாதபடி பூசி மூடுவதில் டாக்டர் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருந்தார். ஆனால், அந்த வெற்றியே, அவரது உள்ளாட்சித் தேர்தலில் தோல்விக்கு அடித்தளம் போட்டது என்பது, அவரது கட்சியினருக்கே தெரியும்.
சட்டசபைத் தேர்தலுக்கு பின் எழுந்த விமர்சனங்களை அடக்குவதற்காக, கட்சிக்குள் இருந்து சிலரை நீக்கினார் டாக்டர்.

செவ்வாய், 25 அக்டோபர், 2011

மனிதக் கேடயங்களாக பிடித்து வைக்கப்பட்டிருந்த நமது உறவுகள்.


சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 75) ‍ சித்திறெஜினா..! ஒரு 

ஆம்.. அன்று நடந்து முடிந்த அந்த கசப்பான யுத்தம் வேண்டுமென்றே தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு யுத்தம் அல்ல.. அது இலங்கைவாழ் தமிழர்.. சிங்களவர்.. முஸ்லீம்கள் என்ற இனப் பாகுபாடுகளின்றி அனைவரும் தனது துப்பாக்கிக்கு தலை வணங்கித்தான் ஆகவேண்டும் என்ற இறுமாப்பு எண்ணம் கொண்ட‌ ஒரு சர்வாதிகாரியையும் அவனது அறிவிலிக் கூட்டத்தினரையும் அழிப்பதற்காக தொடுக்கப்பட்ட‌ யுத்தம்இந்த நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட‌ அந்த‌ யுத்தத்தில் வேண்டுமென்றே பிரபாகரப் புலிப் பாசிசவாதிகளால் பலி கொடுக்கப்பட்டவர்கள்தான் இந்த அப்பாவிப் பொது மக்கள் என்பதை நடந்து முடிந்த இந்த யுத்தத்தின்போது நடைபெற்ற அனைத்து அசம்பாவிதங்களையும் நன்கு ஆராய்ந்து பார்த்தவர்கள் நிட்சயம் ஏற்றுக் கொள்ளவே செய்வார்கள்.
பிரச்சினை உனக்கு பிரச்சினை கொடுக்கும் வரை நீ அந்த பிரச்சினையை பிரச்சினைப் படுத்தாதே
ஆனால் வெளி உலகிற்கு தங்களை த‌மிழர்களின் ஏகபோக பிரதிநிதிகளாக‌ காட்டிக் கொண்டு புலிகளின் பாணியை பின்பற்றும் கூட்டமைப்போ இதுவரை காலமும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு நியாயமான ஒரு தீர்வை முன் வைக்காமல் வேண்டாத பிரச்சனைகளை உருவாக்கி அவற்றை ஊதிப் பெரிதாக்குவதன் மூலம் பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகளை மட்டுமே வழர்த்துக் கொண்டு வருகிறார்கள் என்பதுதான் இவர்களின் உண்மை நிலைஅப்படி இவர்கள் நியாயமான ஒரு கோரிக்கையை முன் வைத்து அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக இருந்தாலும் அதற்கு முன்னர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தொட்டதற்கெல்லாம் எதிலும் குறைபிடித்து குற்றப்படுத்தும் தங்கள் குரோத‌ மனப்பான்மையை தூக்கியெறிந்து விட்டு அவர்களுடன் ஒரு நெருக்கமான நட்புறவை வழர்த்துக் கொள்ள முன்வர வேண்டும் அதற்குப் பின்னர்தான் அந்த பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் அதுதான் உண்மையான ராஜ தந்திரம் அப்படி அந்த‌ பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்கும்போது அதற்கு தன் இலக்கை எட்டக் கூடிய சாத்தியக் கூறுகள் தானாகவே உருவாகிவிடும்
அதை விடுத்து அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் விழாக்களை வேண்டுமென்றே இடும்புத்தனமாக‌ பகிஸ்கரிப்பதும்
அவர்களால் நட்பு பூர்வமாக‌ விடுக்கப்படும் அழைப்புகளை அலட்சியமாக‌ உதாசீனம் செய்வதும்
அரசாங்கத்திற்கும் இவர்களுக்கும் இருக்கும் இடைவெளியை மேலும் அதிகரிக்குமே தவிர அரசாங்கத்துடன் நெருக்கிப் பழகும் சந்தர்ப்பங்களை ஒருபோதும் ஏற்படுத்தித் தராது என்பது யதார்த்தமான உண்மையாகும்

பார் லைசன் கேட்ட சம்பந்தன் இனி என்ன கேட்கப்போறாரோ…???

JR ரிடம் பார் லைசன் கேட்ட சம்பந்தன் கிலாரியிடம் என்ன கேட்கப்போறாரோ…??? S.S.கணேந்திரன்By athirady

அமெரிக்கா கனடா செல்லும் சம்பந்தன், சேனாதிராசா போண்றவர்கள் இன்னும் பல நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட வண்ணமே இருப்பார்கள். எமது பிரச்சனையும் தொடர்ந்துகொண்டே இருக்கும் பாராளுமண்ற ஆசனத்தினை மட்டுமே மையமாகக்கொண்டு செயற்படும் தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியகட்சிகள் ஆரம்பகாலம் தொட்டே பிரதேச வேறுபாடு, சாதிய வேறுபாடுகளுக்கு மிகமுக்கியம் கொடுத்து செயற்பட்டார்கள் சொல்லிலடங்காத இழப்புக்களை சந்தித்ததன் பின்னரும் அதனை தொடர்ந்துகொண்டே இருக்கிண்றார்கள் என்பதே மிகவும் வேதனையான விடயம்.
சில தினகளில் அமெரிக்கா மற்றும் கனடா போண்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் கூட்டமைப்பினர் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகளையோ அல்லது வன்னி மாவட்ட பிரதிநிதிகளையோ முற்றாகத்தவிர்த்திருப்பதன் மூலம் அவர்களின் பிரதேசவாத வெறியை மீண்டும் மக்கள் முன் தாமாகவே அம்பலப்ப்டுத்தியுள்ளனர்.
இவர்களின் விஜத்தினுடன் சம்பந்தமான எந்த விடயங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெறும் பாராளுமண்ற உறுப்பினர்களுக்குகூட தெரியாத பரிதாப நிலையில் சக பாராளுமண்ற உறுப்பினர்கள் இருக்கிண்றார்கள்.

தோழர் விஸ்வா என்றென்றும் நினைவு கொள்ளப்படுவார்!

தோழர் வி விஸ்வானந்ததேவன் நினைவு தினம்…!!! மோகனன்

தோழர் வி.விஸ்வானந்ததேவன் காணாமற் போய் இருபத்தியைந்து (oct 15) வருடங்களாகிறது. யாழ்ப்பாணம், குருநகரிலிருந்து நெடுந்தீவுக்கு சென்று பின்னர் அங்கிருந்து தமிழகம் செல்லும் நோக்கில் தோழர்கள் கண்ணன் (முருங்கன்- மன்னார்), விசு (காரைநகர்) புறப்பட்டவர், கடல் நடுவே காணாமல் போனார். இலங்கையில் 1970களின் பிற் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டுக் கொண்டிருந்த மாக்ஸிஸ- லெனினியச் சிந்தனையை தனியொரு மனிதனாக, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட சக்திகளிடம் கையளித்தவர் தோழர் விஸ்வானந்ததேவன்.
தோழர் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன் 29-11-1952ல் கரவெட்டியிலிருக்கும் கல்லுவத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவர்.

சன் டிவி மூலம் நாளை தமிழர்களைக் கலக்க வரும் வடிவேலு- அதிரடியான தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி!


சட்டசபைத் தேர்தல் முடிந்த கையோடு கூட்டுக்குள் போய் விட்ட காமெடிப் புயல் வடிவேலு, நாளை சன் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியின் மூலம் உலகத் தமிழர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்க வருகிறார். மகா அதிரடியாக உருவாகியுள்ள இந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் வடிவேலுவின் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பதுடன், அவரின் ஒட்டுமொத்த இமேஜையும் அப்படியே தூக்கி நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா கண்ட அதிரடி காமெடி சூப்பர் ஸ்டார்களில் வடிவேலுவுக்கு முக்கிய இடம் உண்டு. தமிழ்த் திரையுலகில் காமெடியில் அதகளம் செய்த முக்கிய ஸ்டார்களில் வடிவேலுவும் ஒருவர்.

தலைத் தீபாவளி பெண் உயிரோடு எரித்துக் கொலை


புதுப்பெண் உயிரோடு எரித்துக் கொலை
தலைத் தீபாவளிக்கு பெற்றோர் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று கூறிய புது பெண் அவரது தாய் கண் முன்னே உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.

கடையநல்லூர் புலவர் தெருவைச் சேர்ந்த மூக்கையா மகன் சண்முகவேல் (25). கூலி தொழி லாளி. இவருக்கும் சிவகிரி வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் முனீஸ்வரி (21) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இதற்கிடையில் கண வன், மனைவியி டையே கருத்து வேறுபாடு காரண மாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. திருமணத்தின் போது முனீஸ்வரிக்கு அவரது பெற்றோர் கொடுத்த சீர்வரிசை போதாது என்று சண்முகவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை கொடுமைப்படுத்தினர்.
இந்நிலையில் தலைத் தீபாவளிக்கு தனது மகள் மற்றும் மருமகனை வீட் டிற்கு அழைத்துச் செல்வதற்காக முனீஸ்வரியின் தாய் பாஞ்சாலி நேற்று கடையநல்லூர் வந்தார்.
அப்போது சண்முகவேல் அவருடன் செல்ல மறுத்ததுடன், மனைவியையும் போகக்கூடாது என்று கூறினார். ஆனால் அவர் தாயுடன் செல்வதாக கூறி னார். இதனால் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது.

கூடுதலாக வசூலித்த தொகையைக் கொடுத்துவிடுகிறேன்! - கிரண் பேடி

டெல்லி: நேர்மையற்ற முறையில் பணம் வசூலித்ததாக தன் மீது குவியும் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க, கூடுதலாக வசூலித்த பணம் முழுவதையும் சம்பந்தப்பட்ட தன்னார்வ அமைப்புகளுக்கே திருப்பித் தந்துவிடுவதாக கிரண் பேடி கூறியுள்ளார்.
கிரண் பேடி பணியில் இருந்தபோது சிறந்த சேவைக்காக விருது பெற்றார். இந்த விருது பெற்றவர்கள் ஏர் இந்தியா விமானத்தில் சலுகை கட்டணத்தில் பயணம் செய்யலாம். இந்த நிலையில் அவர் சமீப காலமாக பல்வேறு வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சலுகை கட்டணத்தில் விமானத்தில் சென்றார். ஆனால் முழு கட்டணத்தொகையை நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தீவிர புலி ஆதரவாளர்களே ஜனாதிபதி மீது வழக்குத் தொடர்கின்றனர் - பந்துல

மிகக் கொடூரமான புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கையை மீட்டெடுத்த ஒரே தலைவரான ஜனாதிபதி மீதே தீவிர புலி ஆதரவாளர்கள் போர் குற்ற வழக்குத் தாக்கல் செய்வதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் அவுஸ்திரேலியா சென்றுள்ள பந்துல ஜயசேகர அங்கிருந்து இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் பிறந்த அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்ற நபர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக மெல்பேர்ன் நீதிமன்றில் போர்குற்ற வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
பொது நலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பேர்த் சென்றுள்ள நிலையில் இவ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு எதிர்வரும் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிரான வழக்கு நிராகரிப்பு விசாரணை நடத்த முடியாது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக அவுஸ்திரேலிய மெல்பேர்னில் தாக்கல் செய்யப்பட்ட போர் குற்ற வழக்கை அவுஸ்திரேலியாவின் சட்டமா அதிபர் நிராகரித்துள்ளார்.இதன்படி குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாதென நிராகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பிறந்த பொறியியலாளரான 63 வயதுடைய அருணாசலம் ஜெகதீஸ்வரன் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பொதுமக்களின் வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், ஆலயங்கள், சமூகநிலையங்கள் அனைத்தின் மீதும் இலங்கையின் வான், தரை, கடற்படை தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்ததாக தெரிவித்திருக்கும் ஜெகதீஸ்வரன், தான் 2007ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டுவரை வடக்கில் ஒரு தொண்டர் உத்தியோகத்தராக பணியாற்றிய போது அவற்றை நேரில் பார்த்ததாக தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற இனப்படுகொலைகள், மற்றும் போர்க்குற்றங்களுக்கு தான் ஒரு கண்கண்ட சாட்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி குற்றவாளியா சுற்றவாளியாக என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் மனுவினூடாக நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபத்திக்கு எதிராக வழக்குத் தொடர சட்டமா அதிபரின் அனுமதி தேவை என அவுஸ்திரேலிய பிரதமர் கூறியிருந்த நிலையில் வழக்குத் தொடர சட்டமா அதிபர் ரொபட் மிக்லேன் அனுமதி மறுத்துள்ளார்.உள்நாட்டு சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியாவின் கடப்பாடுகள் மீறி வழக்குத் தாக்கல் செய்ய முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

5000 திரைகளில் நாளை ஷாருக்கானின் 'ரா ஒன்' திரையீடு


Ra One
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானின் ரா ஒன் திரைப்படம், வரலாறு காணாத வகையில் உலகம் முழுவதும் 5000 திரைகளில் நாளை திரைக்கு வருகிறது.
பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. மிகப் பெரிய அளவில் இப்படத்துக்கான புரமோஷன்களை ஷாருக் கான் மற்றும் அவரது அணியினர் முடுக்கி விட்டுள்ளனர். கடந்த ஆறு மாதமாகவே இந்த புரமோஷன் வேலைகள் நடந்து வந்தன. தீபாவளி தினமான நாளை இந்தப் படம் திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் 5000 திரைகளில் படத்தைத் திரையிடவுள்ளனர். இதுவரை எந்த இந்திப் படமும் இந்த அளவுக்கு அதிகமான திரைகளில் திரையிடப்படட்டதில்லையாம். இந்தியாவில் மட்டும் 3500 திரைகளில் படம் திரையிடப்படவுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு ரா ஒன்னுக்கு மிக்ப் பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஷாருக் கான் ரசிகர்கள் மட்டுமல்லாமல், பாலிவுட் பிரபலங்களும் எதிர்பார்க்கின்றனர். தீபாவளிக்கு முன்பு வரை டல்லடித்துக் கொண்டிருந்த பாலிவுட்டுக்கு ரா ஒன் எனர்ஜி பூஸ்டராக அமையும் என்று பிரபல விநியோகஸ்தர் ரமேஷ் சிப்பி தெரிவித்துள்ளார்.

அடுத்த வாய்தாவை எப்படித் தடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் ஜெ


எங்கே கால் வைக்க மாட்டேன் என்று இத்தனை ஆண்டுகளாக ஜெ பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தாரோ அங்கே அவரை நேரில் ஆஜராகச் செய்துவிட்டது உச்சநீதிமன்ற உத்தரவு.
இரண்டு நாட்கள் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் 313 ஸ்டேட்மெண்ட்டுக்காக ஆஜராகிவிட்டு, அடுத்த வாய்தாவை எப்படித் தடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் ஜெ.வால், அக்டோபர் 20, 21 இரண்டு நாட்களும் நடந்த விசாரணை யின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்கிறது போயஸ் கார்டன் வட்டாரம்.
அக்டோபர் 21-ந் தேதி வெளியான உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.வுக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்திருந்தபோதும், பெங்களூருவிலிருந்து திரும்பிய ஜெ,தன்னை வரவேற்ற வெற்றி வேட்பாளர்களிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. காரணம், சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.வைத் துளைத்தெடுத்த நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவின் கருத்துகளும், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவின் வாதங்களும்தான் என்கிறார்கள் பெங்களூரு நீதிமன்றத்தில் இருந்த அ.தி.மு.க அமைச் சர்களே.

கூட்டமைப்புக்குத் தெரிந்துள்ள போதிலும் எதிர்ப்பு பிர(விப)சாரம் செய்கிறார்கள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணிப்பதிவு நடை முறையைக் கூட்டமைப்பினர் எதிர்ப்பது அநீதியானதாகும்-பஷில் ராஜபக்ஷ!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணிப்பதிவு நடை முறையைக் கூட்டமைப்பினர் எதிர்ப்பது அநீதியானதாகும். வடக்கு, கிழக்கு மக்களின் நலன் கருதிய இந்த வேலைத்த்திட்டத்தை நாங்கள் முன்னெடுக்கின்றோம். காணிப் பதிவை முன்னெடுப்பதன் அவசியம் கூட்டமைப்புக்குத் தெரிந்துள்ள போதிலும், அவர்கள் அதனை எதிர்க்கின்றனர் என்று பொரு ளாதார அபிவிருத்தி அமைச்ர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்றத்தினால் உண்மையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்ப்பு விபசாரம் செய்கிறார்கள்.இலங்கையில் எவரும் எங்கும்வாழலாம் என்பதே எமது கொள்கையாகும்.

102 வயது பாட்டியிடமிருந்து சான்றிதழைப் பறித்து வேறொருவர் வென்றதாக அறிவித்த அதிகாரிகள்


Thadahathi
மதுரை: உளாட்சித் தேர்தலில் மதுரை அருகே உள்ள புதுக்குளம் 184வது வார்டில் 102 வயது மூதாட்டி ஒருவர் வென்றதாக அறிவித்த அதிகாரிகள், பின்னர் அவரை ஒரு காரில் ஏற்றிச் சென்று சான்றிதழை திரும்ப வாங்கிக் கொண்டு ஆட்டோவுக்கு ரூ. 100 காசு கொடுத்து அனுப்பி விட்டு, வேறு ஒருவர் வென்றதாக அறிவித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தி்ல் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்தது. கடந்த 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

குழந்தைகளை ஏமாற்ற முடியாது


குழந்தைகளுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது என்பார்கள். அதிகமாக கொடுத்தாலும் குறைவாக கொடுத்தாலும் குழந்தைகளுக்கு எந்த வித்தியாசமும் தெரியப்போவதில்லை என்பது அம்மாக்கள் அடிக்கடி சொல்லும் வாசகம்.இதில் உண்மை இல்லை என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று; 15மாத குழந்தைக்கு நல்லது எது, கெட்டது எது தனக்கு (உதாரணமாக பிஸ்கட்) குறைவாக கொடுத்து இருக்கிறார்களா? அதிகமாக கொடுத்து இருக்கிறார்களா? என்று ஒப்பிட்டு பார்த்து அறிந்து கொள்ளும் புத்திசாலித்தனம் உள்ளது என்கிறது இந்த ஆய்வு.
வொஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜெஸ்சிகா சோமர்ல்லி என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் இது தொடர்பாக ஆய்வு நடத்தினார்கள். இதன்படி குழந்தைகளை ஒரு குழுவாக வைத்து அவர்களில் சிலருக்கு அதிகமாக தின்பண்டங்களும், சிலருக்கு குறைவாகவும் கொடுத்தனர்.இதில் குறைவாக தின்பண்டம் பெற்ற குழந்தைகள் முரண்டு பிடித்தன. அதிகமாக தின்பண்டம் வைத்திருந்த குழந்தையின் கையில் இருந்து அதை பிடுங்க முயற்சி செய்தன.

லண்டனில் கத்திக்குத்து! புலத்துப் புலிகளின் ...ம்ம்ம் வீரர்கள் வேறு என்னதான் செய்யமுடியும்

லண்டனில் நடைபெற்ற பிறந்தநாள் விழா ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு லண்டன் குரொய்டன் பகுதியில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.ம்ம்ம் வீரர்கள் வேறு என்னதான் செய்யமுடியும்
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்  29 வயதான யாழ் ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இளம் குடும்பஸ்தரான அகிலகுமார்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இவருக்கு 9 மாதக் குழந்தை உண்டு. இந்தச் சம்பவம் தொடர்பாக பல தரப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. பிறந்தநாள் விழா மண்டபத்திற்கு வெளியே நின்றிருந்த ஆபிரிக்க நாட்டவர்கள் வெளியே சென்ற  அகிலகுமாரை கத்தியால் குத்தியதாக ஒரு தகவலும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களிடையே விடுதலைப் புலிகளின் மாவீரர் தின விழா தொடர்பான

Gokarella இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 50 பேர் வைத்தியசாலையில்

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 50 பேர் வைத்தியசாலையில்

கொக்கரெல்ல - குருநாகலை பிரதான வீதியில் கரங்கெவ நெஷனல்வத்த பகுதியில் இன்று பகல் 02.45 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து மெதிரிகிரிய நோக்கிச் சென்ற பஸ் ஒன்று கதுருவெலயிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் இரு பஸ்களிலும் பயணம் செய்த சுமார் 50 பயணிகள் காயமடைந்த நிலையில் குருநாகல் மற்றும் பொல்கொல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொக்கரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

யாழ் பல்கலை கல்வியைச் சீர்குலைக்க வெளிச்சக்திகள் முயற்சி – ஹத்துருசிங்க

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கு பல்வேறு வெளிச்சக்திகள் முயற்சித்து வருவதாக இராணுவத்தினருக்கும், யாழ் பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைக்கூலிகளைப் பயன்படுத்தி மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தச் சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டதாக பலாலி இராணுவத் தலைமையகம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது
யாழ். பல்கலைக்கழகப் பிரதிநிதிகளுக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும் இடையே யாழ் கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் தளத்தை தற்காலிகமாக மூட முடிவு: அசாஞ்சே

assange
லண்டன், அக்.24: விக்கிலீக்ஸ் இணைய தளத்தை முடக்க சிலர் சதி செய்வதாகக் கூறியுள்ள அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க தூதரகங்களுக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்களை விவரமாக வெளியிட்டு உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இணையதளம் விக்கிலீக்ஸ். இதன் தலைவர் ஜூலியன் அசாஞ்சே.

Chennai beach ஆணுறை பாக்கெட்கள் குவியல் குவியலாக கொட்டி வைக்கப்படுகின்றன!'

மீன்களுக்கு இரை போடுவதைப் போல், சென்னை, மெரீனா கடற்கரையின் 4 இடங்களில், ஆணுறை பாக்கெட்கள் குவியல் குவியலாக கொட்டி வைக்கப்படுகின்றன. வேண்டுமென நினைப்பவர்கள், வேண்டிய அளவு எடுத்துச் செல்லலாம். தயக்கம் தேவையில்லை; தடுப்பார் யாரும் இல்லை. இப்படி ஆணுறையைக் கொட்டி வைப்பது வேறு யாரும் அல்ல. தமிழக அரசின் நிறுவனமான எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் தான். ?

விசாரித்த போது, விளக்கம் வந்தது. "ஆம்! மெரீனா கடற்கரை மட்டுமல்ல, பெரும் கூட்டம் கூடும் இடத்தில் எல்லாம், இதுபோன்று ஆணுறைகளை நாங்கள் தான் கொட்டி வைக்கிறோம்' என, ஒப்புதல் வாக்குமூலம் தந்தனர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அதிகாரிகள்.
இதற்கு முன் பெட்ரோல் பங்குகள், முக்கிய ரயில் நிலையங்களில் ஆணுறைகள் வைக்கப்பட்டன. ஆனால்

திங்கள், 24 அக்டோபர், 2011

1.75 லட்சம் கோடி என்பதெல்லாம் வழக்குக்கு உதவாத விஷயங்கள், சிபிஐ நீதிபதி சாய்னி

2ஜி குற்றப்பத்திரிகை

ஆ.இராசா, சித்தார்த்த பெஹூரா, ஆர்.கே.சந்தோலியா என்ற மூன்று அமைச்சர், அரசு அலுவலர்கள், கனிமொழி, சரத்குமார், யூனிடெக், ஸ்வான், ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர்மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து 2ஜி வழக்கு நவம்பர் 11 முதல் நடைபெறும் என்று சிபிஐ நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனை அடுத்து, நாளை கனிமொழிக்கு பெயில் கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன். இராசாவுக்கு பெயில் கொடுப்பார்களா என்பது சந்தேகம். மற்ற அனைவருக்கும் கிடைத்துவிடலாம்.

கடைசியாக 1.75 லட்சம் கோடி என்பதெல்லாம் வழக்குக்கு உதவாத விஷயங்கள் என்பதை சிபிஐ நீதிமன்ற நீதிபதி சாய்னி ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பது கவனிக்கப்படவேண்டும். ஸ்வானின் ஷாஹித் பால்வா வழியாக கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த பணம் மட்டுமே இராசாமீதான லஞ்சக் குற்றச்சாட்டுக்கு வலுவாகத் துணைநிற்பது. இராசா வேறுவகையில் பணம் பெற்றாரா, கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் வழியாக இராசாவுக்குப் பணம் வந்ததா, சாதிக் பாட்சா விஷயம் என்ன, யூனிடெக், ஸ்வான் தவிர பிறர் இராசாவுக்கோ, அவருடைய உறவினர்களுக்கோ, பினாமிகளுக்கோ, திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தாருக்கோ பணம் கொடுத்தார்களா என்பது பற்றி சிபிஐ விசாரித்ததாகவே தெரியவில்லை.

இந்தக் காரணங்களுக்காகவே வழக்கு சரியாக விசாரிக்கப்படவில்லை என்று சொல்லவேண்டும். 1.75 லட்சம் கோடி என்ற ஹைப்பிலிருந்து சிபிஐயின் 30,000 கோடி ஊழல் என்பதற்குத் தாவி, இப்போது 200-250 கோடி என்ற அளவுக்கு வந்து சேர்ந்துள்ளது.

விஜயகாந்தின் வாந்தி: ஆளும் கட்சிதான் வெல்லும் என்பது நியதியாம்


விஜயகாந்துக்கு சொல்ல மறந்த (அல்லது மறந்தும் சொல்லாத) ட்ரிக்!சென்னை, இந்தியா: “உள்ளாட்சித் தேர்தல் என்றாலே ஆளும் கட்சி வெற்றி பெறுவது என்றுதானே அர்த்தம். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?”  என்று கேட்டிருக்கிறார், உள்ளாட்சித் தேர்தலுக்காக பம்பரமாகச் சுழன்று பிரச்சாரம் செய்த விஜயகாந்த். தேர்தல் முடிவுகள் வெளியானபோது, பம்பரம் சுற்றியது பெரிதாக எடுபடவில்லை என்று வெட்ட வெளிச்சமாகி விட்டதில் கேப்டன் இப்படிச் சொல்லி விட்டார்.
பாவம், “உள்ளாட்சித் தேர்தல் என்றாலே ஆளும் கட்சி வெற்றி பெறுவது என்றுதானே அர்த்தம்” என்ற விஷயத்தை யாராவது அவருக்கு முன்கூட்டியே தெரிவித்திருந்தால், அவருக்கு தொண்டை வலியாவது ஏற்படாமல் இருந்திருக்கும்.

தா.பாண்டியன் வாந்தி எடுக்கிறார் அதிமுகாவின் அதிகார மிரட்டலாம்


Tha Pandiyan
சென்னை: நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பணமும், அதிகார மிரட்டலும் பல இடங்களில் முடிவுகளை தீர்மானித்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
4 கோடியே 80 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட, உள்ளாட்சி நிர்வாக பொறுப்புகளுக்கு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு, நகர்ப்புற, கிராமப்புற மக்கள் 3 கோடியே 60 லட்சம் பேர் தேர்தலில் பங்கேற்று வாக்களித்தது ஜனநாயக அமைப்பில் பங்கேற்க மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.

எதற்கெல்லாம் கலைஞர் தலையாட்டினார் என்பது இப்போது தெரியாது.

கலைஞரின் ஒரு இனிய கார்கால கேள்விக்கு, டில்லி பூசியது தார்! புதுடில்லி, இந்தியா: காங்கிரஸ் தலைமையுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த இரு தினங்களுக்குள் செய்து கொண்ட ‘ஹாஷ்-ஹாஷ் டீல்’ ஒன்று என்ன என்பது காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளது. தி.மு.க. காலி செய்ய (காலி செய்ய வைக்கப்பட்ட) மத்திய அமைச்சர் பதவிகளை கோருவதில்லை என்று கருணாநிதி உறுதி அளித்திருக்கிறார்! 

மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. கொடுத்த ஆதரவுக்கு விலையாக அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. (ஆட்சியில் பங்கு என்று கௌரவமாகக் குறிப்பிடுவார்கள்)